• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
Runa_zps7eae0992.jpg
 
காஞ்சி மாமுனிவர்
(புதுவயல் செல்லப்பன்)
பூமலர்ந்த தெனவிளங்கும் வதனம்! எங்கும் புதியஒளி பாய்ச்சுகிற நயனம்! தெய்வநாமமதை ஜெபிக்கின்ற திருவாய்!- வைய நலம்நாடிக் கேட்டிருக்கும் செவிகள்! யோகநேமமதற் குதவுகிற நாசி!- மிக்க நேர்த்தியுடன் நீறோளிரும் மேனி! – மக்கள்சேமமுற ஆசிதரும் கைகள்!- காணும் சிறுமைகளைத் தேய்ப்பதற்கு நடக்கும் கால்கள்! (1)ஆன்மிகத்தைப் பரப்புகின்ற சிந்தை, மண்ணில் அறப்பயிரை வளர்க்கின்ற உழைப்பு- வாழ்வில்கூன்விழுந்தார் தமைநிமிர்த்தும் கொள்கை- சின்னக் குழந்தையென நகைஉதிர்க்கும் மென்மை, பொல்லா‘நான்’ வந்து நடம்புரியாப் பண்பு, கங்கை நதியாகப் பெருகிவரும் அன்பு, சொல்லில்தேன்சிந்தி இனிமைதரும் மாண்பு, – நம்மைத் தெய்வத்தின் சந்நிதியில் சேர்க்கும் நோன்பு (2)போற்றுகிற நான்மறையின் ஆழம்! முந்தைப் புராணங்கள் பதினெட்டின் நோக்கம், மிக்கஏற்றமுள்ள உபநிடத விளக்கம், காக்கும் இறையவனே வந்துரைத்த கீதை – கல்விஊற்றறெனவே உள்ளதமிழ் நூல்கள் – மேலோர் உவந்தளித்த தீம்பனுவல் அனைத்தும் கூடிமாற்றறியாய்த் தனிஉருவாய்த் திகழ்ந்தார் காஞ்சி மாமுனிவர் எனச்சொன்னால் மறுப்பார் உண்டோ? (3)விடிந்தொளிரும் செவ்வானக் கதிரும், உள்ள வித்தையெலாம் ஊறிவரும் சுனையும், அன்புநடந்தபெரு நதியான மனமும், யார்க்கும் நன்மைதரும் பேரருளின் திறனும், தூய்மைபடிந்தபல செய்கைகளின் பயனும், இந்தப் பாரனைத்தும் உயர்த்துகிற தவமும், அந்தஒடிந்துவிழும் உருவத்தில் எப்ப டித்தான் உள்ளடக்கம் கொண்டனவோ? தெரிய வில்லை! (4)காலடியே காஞ்சிக்கு வந்து தூய கடவுள்நெறி தனையுலகிற் கோதி னாற்போல்,சீலமிகும் ஆதிசங் கரரே மீண்டும் தெரி்சனத்தைக் கச்சியிலே நல்கி னாற்போல்ஓலமிடும் உயிர்க்கெல்லாம் அன்பு காட்டி உள்ளத்தின் துயர்நீக்கி அமைதி சேர்த்துஞாலத்தின் புகழ்கொண்ட பரம வள்ளல் நாம்கண்ட பரமேட்டி சுவாமி தானே! (5)எப்பெயரும் இல்லாத நம்ம தத்தை இந்துமதம் எனச்சொல்லி உலக ழைக்கும்!கப்புகிற துன்பத்தில் ஒருவன் வாடக் காணுகையில் வருந்துபவன் இந்து வென்னும்!எப்படியோ- அன்பொன்றே குறிக்கோ ளாக இந்துமதம் கொண்டிருந்த தென்றால் உண்மை!இப்புவியில் அன்புசொலும் அம்ம தத்தை இரவுபகல் காத்தவரும் அவரே அன்றோ? (6)மண்ணுலகில் கிறித்துமதம் சார்ந்தி ருக்கும் மனிதர்க்குக் காஞ்சிமுனி ஏசு வாவார்!உண்மையில் இஸ்லாத்தைத் தழுவு வோர்க்கோ உத்தமராம் நபிகள்நா யகமே யாவார்!கண்ணெதிரே காட்சிதரும் புத்த ரென்று கணிந்துருகிப் பௌத்தரெலாம் வணங்கி நிற்பார்!அண்ணலவர் நல்லமகா வீரர் என்றே அன்புடனே ஜைனரெலாம் போற்றி செய்வார்! (7)சீக்கியரின் பார்வையிலே மாந்தர் வாழச் சிறந்தநெறி புகன்றகுரு நானக் ஆவார்!வாக்கினிலும் வாழ்க்கையிலும் வண்ணம் காட்டி மாறாத நிம்மதியை மனத்தில் கூட்டிஆக்கங்கள் அத்தனையும் அளித்தி ருக்கும் அன்னைகா மாட்சியென நம்முன் நிற்பார்!சூக்குமமாய் நோக்குகையில் விரும்பு கின்ற தோற்றத்தில் உள்ளுக்குள் விரிந்தி ருப்பார்! (8)எங்கெங்கு பார்த்தாலும் மதத்தின் பேரால் இடிமுழக்கம் கேட்டுக்கொண் டிருந்த நாளில்மங்கலங்கள் நிறைந்திருக்கும் தமிழர் நாட்டில் மாமுனிவர் இவரிருந்த கார ணத்தால்பொங்கிவந்த போர்க்கொடுமை சிறிதும் இல்லை! பூந்தமிழர் நெஞ்சுகளில் வெறியும் இல்லை!தொங்கிநின்ற முகமொன்ரும் தெரிய வில்லை! துயரென்ற பெருநேருப்பும் எரிய வில்லை! (9)விலைதந்து வரன்வாங்கும் அவலம் மேலும் வேண்டமென் றெடுத்துரைத்து நாட்டில் பெண்கள்குலம்வாழ வகைசெய்த சான்றோர் காமக் கோட்டத்தில் வீற்றிருந்த குருவே அன்றோ?கலைகளுடன் ஆகமங்கள் மறைகள் முற்றும் காப்பாற்றப் பெறவேண்டும் என்பதொன்றைத்தலையாய் பணியாகக் கொண்டு முன்னம் ‘சதஸ்’ அமைத்த பெருமையினை என்ன சொல்ல? (10)பிடியரிசித் திட்டத்தைக் கொண்டு வந்து பேரிறையின் திருப்பணியில் பங்கு தந்தார்!துடித்துழன்ற மனங்களுக்குக் கருணை யோடு சொல்லென்னும் சக்திமிகும் மருந்து போட்டார்!படித்தறியாப் பாமரர்க்கும் புரியு மாறு பரமனவன் தத்துவத்தை விளக்கிச் சொன்னார் !உடுத்தியதோ காவியுடை ! எனினும் இந்த உலகத்தின் ஆண்டகையாய் உயர்ந்து நின்றார் ! (11)சித்துபல விளையாடி மக்கள் நெஞ்சில் சிறப்பான இடத்தையவர் பெறவே யில்லை !நித்தமொரு பொய்சொல்லி விளம்ப ரத்தால் நீணிலத்துப் பெரும்புகழைக் கொள்ள வில்லை !சத்தியத்தின் வழிநடந்து தளர்வில் லாமல் தாரணியின் உயர்வுக்குப் பாடு பட்டார் !அத்தனவன் திருவடியை யாரும் எய்த ஆனவழி அற்புதமாய்க் காட்டி நின்றார் ! (12)தயவென்ற பண்புக்கு வடிவ மாக தகைஎன்ற சொல்லுக்கு விளக்க மாக,உயர்வென்ற நிலைமைக்கோர்உவமை யாக, உலாவந்த நம்காஞ்சி முனிவர் இங்கேஉயிர்வாழச் சிறிதவலும் பாலும் உண்டே உறுதியுடன் நூறாண்டு வாழ்ந்த சீலர் !அயராமல் உலகத்தின் நன்மைக் காக அரியதவம் செய்திருந்த அருளின் செல்வர்! (13)மேதினியின் வேந்தரெலாம் போற்றி நிற்க, மிகப்பெரிய மாந்தரெலாம் புகழ்ந்து நிற்க,சாதனைகள் படைத்தோரும் தலைவ ணங்க, சாத்திரங்கள் தேர்ந்தோரும் கைகள் கூப்ப,நீதிநெறி உணர்ந்தோரும் சென்னி தாழ்த்த நிமலனவன் திருப்பணிக்குத் தன்னைத் தந்தஆதிகுரு இவரோஎன் றுளத்தில் எண்ணி அருந்தவர்கள் தொழுதேத்தும் ஐயன் ஆவார். (14)இந்நாளில் அந்தமகான் தூல மேனி எழில்காட்டி நம்முன்னம் இருக்க வில்லை !செந்நாவை அசைத்தபடி நேரில் வந்து திருவார்த்தை ஏதொன்றும் உரைக்க வில்லை !முன்னாலே அவருருவம் மனத்தில் உண்டு ! மொழிந்திட்ட தெய்வத்தின் குரலும் உண்டு !எந்நாளும் அம்முனிவர் அருளும் உண்டு ! இனியவழி அவைகாட்டும் ! நம்பி வாழ்வோம். (15)
 















sitting_padha_darshan.jpg
INNER IMPURITIES



All of us take care to keep our bodies and our clothes clean. But do we bestow any attention on our inner or mental cleanliness? Inner impurity is the result of desire, anger, and fear. It is common knowledge that when one is in the presence of one’s mother one keeps all evil thoughts under control. Similarly in the presence of the Divine mother we can control our evil thoughts. We can cleanse our hearts only by the Dhyana-thirtha (holy water of meditation) of the Divine Mother. When the heart is so cleansed, It will learn to distinguish the real from the unreal, which will result in the end of births. A day spent without a conscious attempt to clean one's heart, is a day wasted. Impurity of cloth or body will lead to disease which will last only for one life-time. But impurity of heart will lead to diseases which will afflict the soul for several births.
 
ஸ்ரீ கிருஷ்ண பகவான் கீதையில், அஞ்ஞான உலகத்தினருக்குத் தெரியாத ஞானப் பிரகாசத்திலேயே ஞானியானவன் எப்போதும் இருக்கிறான் என்கிற அர்த்தத்தில், “உலகம் முழுவதும் தூங்கும் காலத்தில் ஞானி விழித்துக் கொண்டிருக்கிறான்” என்கிறார். எங்கும் ஒரே இருட்டாக இருக்கும் காலத்தில் ஒரு வெளிச்சம் தோன்றினால் அதை வரவேற்கிறோம். ஒரு பாலைவனத்தின் நடுவில் கொஞ்சம் நீரும் நிழலும் தென்பட்டால் அளவிலா ஆனந்தத்தைத் தருகிறது. இருண்ட மேகங்களின் மத்தியில் தோன்றும் மின்னல் அதிகப் பிரகாசத்தோடு விளங்குகிறது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தக்ஷிணாயத்தில் ஆவணி மாதத்தில் ஸ்ரீ கிருஷ்ணபக்ஷ அஷ்டமியன்று நடுநிசியில் பிறந்தான். நமக்கு ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள். நம் உத்தராயணம் அவர்களுக்குப் பகல்; தக்ஷிணாயனம் அவர்களுக்கு இரவு. ஆகையால் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்களுக்கு இரவு ஆகிறது. இம்மாதிரியே நமக்கு ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாளாகும். நமது சுக்லபக்ஷம் அவர்களுக்குப் பகல்; கிருஷ்ணபக்ஷம் இரவு. ஆகையால் ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த கிருஷ்ண பட்சம் பித்ருக்களுக்கும் இரவாகிறது. அஷ்டமி பக்க்ஷத்தின் நடுவில் வருவதனால் அன்று பித்ருக்களுக்கு நடுநிசியாகும். ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்தது அஷ்டமியன்று நடுநிசி. இதனால் என்ன ஏற்படுகிறது? ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள் எல்லோருக்கும் நிசி. எல்லா தினுசிலும் இருட்டு அதிகமாக இருக்கும் சமயம். ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்ததும் இருள் நிறைந்த சிறைச்சாலை. இப்படி ஸ்ரீ கிருஷ்ணாவதார காலத்தில் எல்லாம் இருள் மயமான சூழ்நிலை.
அவனுடைய பெயரும் கிருஷ்ணன்; ‘கிருஷ்ண’ என்றால் ‘கறுப்பு’ என்று பொருள். அவனது மேனியும் கறுப்பு.
இப்படி ஒரே கறுப்பான சமயத்தில் தானும் கறுப்பாக ஆவிர்ப்பவித்தாலும் அவனே ஞான ஒளி. நல்ல காளமேகங்களிடையே மின்னல் மாதிரி இத்தனை இருட்டுக்கு நடுவே தோன்றிய ஞான ஒளி. ஞான ஒளியானதால்தான் மங்காத பிரகாசமுடையதாய் இன்றும் என்றும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறது. அஞ்ஞானத்தால் இருண்டிருக்கும் உலகத்தில்தான் ஞானத்தின் மகிமை அதிகமாக விளங்கும். அப்படியே கிருஷ்ணனின் பெருமை பிரகாசிக்கிறது. அவனுடைய கீதை உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவனுடைய லீலா விநோதங்கள் நிறைந்திருக்கும் ஸ்ரீமத் பாகவதம் புராண சிரேஷ்டமாக விளங்குகிறது.
உடலுக்கு ஒளியளிப்பது கண். உயிருக்கு ஒளி தருவது ஞானம். உலக உயிர்களுக்கெல்லாம் ஞான ஒளி தருகிற கண்ணாக இருப்பவனே கண்ணன். நம் தென்னாட்டில் அவன் கிருஷ்ணன் மாத்திரம் அல்லாமல் கண்ணனும் ஆகிவிட்டான். அகக்கண்ணையும் புறக்கண்ணையும் அம்ருதத்தில் மூழ்கடிக்கும் வடிவம் அவனுடையது. நம் காதின் வழியாக வேணுவினால் கீத அம்ருதத்தையும், உபதேச சாரமான கீதாம்ருதத்தையும் உட்செலுத்தி குளிர வைக்கும் அந்தக் கண்ணனே நம் உலகுக்குக் கண்; கறுப்பினிடையே விளங்கும் ஒளி காட்டும் கண்; அந்த ஒளியும் அவன்தான்.
ஸ்ரீ கிருஷ்ணன் ஒரே அவதாரத்தில் அநேக விதமான லீலைகளைச் செய்து நடித்திருக்கிறான். மிகவும் சேஷ்டை செய்யும் குழந்தை, பிறகு மாடு மேய்க்கும் பையன், குழலூதிக் கூத்தாடும் கலைஞன், இவற்றை அநுபவிக்கும் ரஸிகன், (சாணூரன், முஷ்டிகன் என்ற கம்ஸனைச் சேர்ந்த மகாமல்லர்களை ஜயித்தபோது) மல்யுத்தத்தில் தேர்ந்தவன், (நக்னஜித் என்ற ராஜாவின் பெண்ணான ஸத்யை என்பவளைக் கலியாணம் செய்துகொள்வதற்கு நிபந்தனையாக ஏழு காளைகளை அடக்க வேண்டும் என்ற போது) காளை மாடுகளை அடக்கிக் காட்டுபவன், ராஜதந்திர நிபுணன், தூது செல்பவன், சாரதி, துரௌபதி போல் தீர்க்க முடியாத கஷ்டத்தில் சிக்கிக் கொண்டவர்களைக் காக்கும் ஆபத்பாந்தவன், குசேலர் போன்ற அநாதர்களை ரக்ஷிக்கும் பக்த வத்ஸலன், பீஷ்மருக்கு முக்தியை அளித்தவன், பீஷ்மருக்கு மாத்திரமல்ல – தன்னையே கொல்லும்படியான அம்பைப் பிரயோகித்த வேடனுக்கும் முக்தி கொடுப்பவன் – இப்படியெல்லாம் லீலை செய்திருக்கிறான்.
உலகத்தில் நல்லதும் பொல்லாததுமாக அநேக விதமான மனப்போக்கை உடையவர்களாக ஜீவர்கள் அமைந்திருக்கிறார்கள். வீரனும் சூரனும், திருடனும் ஸ்திரீலோலனும், பேதையும் உழைப்பாளியும், கிழவனும் குழந்தையும், இறுமாப்புடையவனும் பரோபகாரியும், மனமுருகியவனும் கல்நெஞ்சனும், கஞ்சனும் ஊதாரியும், மூடனும் கல்விமானும், யோகியும் ஞானியுமாகப் பலவிதமான மன நிலையை உடையவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள். இவர்களில் தீய அம்சம் உள்ளவர்களை முற்றிலும் நல்ல அம்சங்களைக் கொண்ட ஒரு மகாத்மா அல்லது தெய்வ அவதாரத்தால் ஆகர்ஷிக்க முடியாமலே போகலாம். ஒரு திருடனுக்கு இன்னொரு திருடனைப் பற்றிய கதையே ரஸமாயிருக்கும். ஓர் உல்லாஸ புருஷனுக்கு இன்னோர் உல்லாஸ புருஷனின் கேளிக்கைளே சுவாரஸ்யமாக இருக்கும். ஸ்ரீ கிருஷ்ணன் நல்லவர்களை மட்டுமின்றி மற்றோரையும் கவரவேண்டுமென்றே ஜாரசோர சிகாமணியாக, கபடனாக, மாயனாக, தந்திரசாலியாக எல்லா வேஷமும் போட்டான். பற்பல போக்குக்கொண்ட மக்கள் எல்லோரையும் தனது வகை வகைகளான லீலைகளால் தனித்தனியே ஆகர்ஷித்துத் தன்னுடைய கருணைக்கும் அதன் மூலம் ஞானத்துக்கும் பாத்திரமாக்கிக் கடைத்தேற வைத்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரமே பரிபூரணவதாரம்.
சிவராத்திரிக்கும் கிருஷ்ணாஷ்டமிக்கும் இடையே சரியாக 180 நாள் இடைவெளி இருக்கும். ஒன்றிலே ஞான ஜோதியான லிங்கம் உதித்தது. அதுவேதான் இன்னொன்றில் வெளியிலே எல்லாம் கருமையாக வைத்துக்கொண்டாலும், உள்ள ஞானத்திலும் கருணையிலும் ஜோதியான கண்ணனாக வந்தது.
 
Samarpanam by a Devotee

குருஅருளாலே குருதாள் வணங்கி, இக்கவிதையைப் பெரியவாளுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.


கவிதை என்றால் (என்னைப் பொருத்தவரை) சப்தம், எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை,
அணி எல்லாம் இலக்கணத்துக்கு உட்பட்டோ படாமலோ இறைவனைப் போற்றி நல்வழி காட்டி அமைவனவாம். தமிழின் பல்வகைப்பட்ட பாடல்கள், அமைப்புகள், இவற்றை எல்லாம் தொடுத்து, குருவுக்கு அடியேன் சூட்டும் மாலை இது.

தமிழ்க் கவிதைகள் யாவும் எனக்குக் குருவாகவே தெரிகின்றன.
இறை/குரு வணக்கம்
சாதுவாம் காஞ்சித் தவகுருவின் சந்தமிகு
பாதம் பணிதல் பணி.

சந்தம் – அழகு. சந்தம் – வேதாங்கம்; வேதத்தின் யாப்பு. வேதத்தின் கால் என்று கருதப்படுகிறது.
அவைக்கு வணக்கம்
வாயில்லாப் பூச்சியெற்கும் வாய்ப்பளித்த வள்ளல்காள்!
நோயின்றி வாழ்கநீர் நூறு.

கவிதை எனக்குக் காஞ்சி மகான்
அருட்சிவ குருவே அருட்சிவ குருவே
இருள்தனை எரிக்கும் அருட்சிவ குருவே (2)

ஒலியில் ஓங்கா ரமதாய் விளங்கும்
கலியில் கலிதீர் அருட்சிவ குருவே (4) – ஓசை

விழுத்தவ முனிவன் வியாதன் தந்த
எழுத்தினும் இனிய அருட்சிவ குருவே (6) — எழுத்து

நசையில் வழியினில் நானிலம் புரக்கும்
அசையா மௌனி அருட்சிவ குருவே (8) — அசை

பேர்தனக் காகப் பீற்றும் உலகில்
சீர்கெடு சினம்தவிர் அருட்சிவ குருவே (10) — சீர்

பிறவித் தளையை அறுக்கும் பெரிய
துறவின் துரையாம் அருட்சிவ குருவே (12) — தளை

அடிபடு மண்ணில் அன்பை விளைத்துச்
செடிதனைத் தீர்க்கும் அருட்சிவ குருவே (14) — அடி

முதுமை என்னும் முருகு தன்னை
எதுகையாய் ஏற்கும் அருட்சிவ குருவே (16) — எதுகை

மோனை யென்னும் முதன்மைக் கிணையாம்
மோனத்தில் முகிழ்க்கும் அருட்சிவ குருவே (18) — மோனை

முரணே இல்லா முறுவல் தன்னை
அரணாய்க் கொண்ட அருட்சிவ குருவே (20) —- முரண்

தொடுக்கும் பாட்டில் தொக்கும் உயிராய்
மிடுக்கொடு விளங்கும் அருட்சிவ குருவே (22) —தொடை

பொருள்தனை இகத்தில் பொருப்பென வழங்கும்
அருளுனக் கணியாம் அருட்சிவ குருவே (24) — அணி

செப்பைந் தெழுத்தால் சேர்வார் குலத்தின்
வெப்பை விலக்கும் அருட்சிவ குருவே (26) – செப்பல் – வெண்பா

அகவும் மயிலின் ஆட்டம் போல
அகத்தில் அழகுடை அருட்சிவ குருவே (28) — அகவல் – ஆசிரியப்பா

துள்ளலும் துஞ்சலும் இல்லா நிலையை
உள்ளிலே உணர்ந்த அருட்சிவ குருவே (30) — வஞ்சிப்பா, கலிப்பா

கருநாள் தொடங்கிக் கருகிடு நாள்வரை
மருளை மாய்க்கும் அருட்சிவ குருவே (32) — மருட்பா

அரனின் புகழை அழகாய்ச் சொல்லும்
மரபில் மகிழும் அருட்சிவ குருவே (34) —- மரபுப்பா

வரம்பிலா வரிகளும் அரன்பெயர் சொல்லிடின்
சிரத்தினில் சூடும் அருட்சிவ குருவே (36) —- இலக்கணமில்லா வரிகள்

புன்மொழி தனையும் பொன்னெனக் கொள்ளும்
தன்மை தனையுடை அருட்சிவ குருவே (38) — வசை

கீழும் மேலும் காணக் கிடையான்
வாழ்ந்தென வந்த அருட்சிவ குருவே (40) —- 18 மேல் கணக்கு, 18 கீழ்க் கணக்கு

ஐந்தில் சுருங்கி ஐந்தாய் விரியும்
ஐந்திணை அண்ணலாம் அருட்சிவ குருவே (42)

(5 எழுத்து சிறுகாப்பியம், 5பூதம் – 5ம் பெருங்காப்பியம்,
ஐந்து + இணை = சிவன் + உமை + மால் + கங்கை + நிர்க்குணம்)

பன்னிரு மறையின் பண்ணில் மகிழும்
முன்னிய முனியாம் அருட்சிவ குருவே (44) —- திருமுறைகள்

நாலா யிரமும் நாடும் நடுவாம்
மாலான் வழிவரு அருட்சிவ குருவே (46) —- 4000 திவ்யப் பிரபந்தம்

கந்தன் கழலைப் பாடும் புகழில்
சந்தமாய்த் தவழும் அருட்சிவ குருவே (48) —- திருப்புகழ்

வள்ளல் வழங்கிய அருட்பா காட்டும்
தெள்ளத் தெளிந்த அருட்சிவ குருவே (50) —- திருஅருட்பா

அறியாக் கவிக்கும் எழுதா அடிக்கும்
நெறியாய் நிற்கும் அருட்சிவ குருவே (52) —- யாரும் அறியாத பாடல்கள்

அருட்சிவ குருவே அருட்சிவ குருவே
அருள்பொழி வாயே அருட்சிவ குருவே (54).

ஆதலால், கவிதை எனக்குக் காஞ்சிமகானே.
– சங்கர தாஸ்
 
A Devotee's experience of Maha Periyava

[h=5]ஸ்ரீமதி ஜெயலெஷ்மி அம்மாளின் அனுபவங்கள்….மஹா பெரியவாள் தரிசன அனுபவங்கள்
மஹாபெரியவாளிடம் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் உள்ள பக்தியை எழுத்துக்களால் எழுதிக் காட்ட முடியாது. நாங்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள். என்றாலும், பெரியவாளிடம் உரிமை கொண்டாடும் பக்தி இருக்கிறது.
நான் வாழ்க்கையைத் தொடங்கிய காலத்தில் ஏராளமான கஷ்டங்கள். திக்குத் திசை தெரியாமல் அல்லாடினேன். அந்தச் சமயத்தில் ஒரு தீட்சிதர், புராணப் பிரவசனம் செய்வதற்காக செங்கற்பட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் சென்று என் குடும்ப நிலையை எடுத்துச் சொல்லி பரிஹாரம் கேட்டேன்.
ஒரு வெள்ளிக் குத்துவிளக்கில் லட்சுமி-சரஸ்வதி-பார்வதி ஆகிய மூன்று அம்பிகைகளை ஆவாஹனம் செய்து, பூஜை செய்து வரும்படி அவர் ஆலோசனை கூறினார். அப்படியே செய்து வந்தேன்.
ஒருநாள், ஒரு பரதேசி என் வீட்டுக்கு வந்து பிச்சை கேட்டான். ஏதோ சில்லரைக் காசு கொடுத்தேன். அவன் என்னை மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு, குறி சொல்பவன் போல், “குத்துவிளக்குப் பூஜையெல்லாம் உபயோகப்படாது… காலின் கீழே இருக்கிற மூலிகை உன் கண்ணுக்குத் தெரியவில்லையே…” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
தெருவில் வேறு எந்த வீட்டிலும் சென்று யாசிக்காமல் தெருவைக் கடந்து போய்விட்டான்.
இது என்ன தெய்வ வாக்கா? இல்லை, வெறும் பிதற்றலா? அல்லது, இத்தனை நாட்களாகச் செய்த விளக்கு பூஜையின் பலனா?
[/h][h=5]மனம் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தது.‘காஞ்சிப் பெரியவாளை சேவித்துக் கேட்கலாமே’ என்று ஒரு யோசனை பளீரிட்டது. பெரியவாளை தரிசித்து, சேவித்து, என் கஷ்டங்களை திருச்செவி சாற்றினேன்.
‘கருந்துளசிச் செடி பூஜை செய்’ என்று அனுக்ரஹம் ஆயிற்று.
என் மனத்துக்குள் ஒரு சங்கல்பம். அந்தப் பரதேசி சொன்னபோது நான் தயங்கியதற்கும் காரணம் இருந்தது. துளசி மாடத்தில் துளசியை வைத்து நான் பூஜை செய்தால், அந்தச் செடி சில நாள்களிலேயே பட்டுப் போய்விடும். பெரியவாளிடம் என் சங்கடத்தை விண்ணப்பித்தேன்.
நான் கூறி முடித்தபிறகும், “நீ, கருந்துளசி பூஜையே செய்” என்றார்கள்.
கருந்துளசிச் செடி நட்டு, பூஜை செய்யத் தொடங்கினேன்.
ஆச்சரியம்! செடி கப்பும் கிளையுமாக, சிறு ஆலமரம் போல் செழித்து வளரத் தொடங்கியது.
துளசிச்செடி வளர வளர என் துன்பங்கள் குறைந்து கொண்டே வந்தன.
இன்றைக்கும் எங்கள் வீட்டில் கருந்துளசி நிறைய வளர்கிறது.
கருந்துளசிச் செடி பூஜை செய்தால் கஷ்டங்கள் விலகும் என்று சொல்லி, நானும் மற்றவர்களைத் தூண்டிவிடுகிறேன்.
பெரியவாள் காட்டிய வழியாதலால் எல்லோரும் நல்ல பலன்களையே பெற்று வருகிறார்கள்.
ஒரு சமயம் ஒரு பெரிய இலையில் நிறைய தும்பைப்பூ எடுத்துக்கொண்டு வந்து பெரியவாளிடம் சமர்ப்பித்தார் ஓர் அடியார். தும்பைப்பூவைப் பார்த்ததும் பெரியவாள் ரொம்பவும் சந்தோஷப்பட்டார்.
அங்கிருந்த பக்தர்களைப் பார்த்து, தும்பைப்பூ வைத்திருந்த இலையைக் காட்டி, “இது என்ன இலை தெரியுமா?” என்று கேட்டார்கள்.
[/h][h=5]பலரும் வெவ்வேறு விதமாகச் சொன்னார்கள்.“இதன் பேர் – பேத்தி இலை. இதில்தான் சந்நியாசிகள் பிக்ஷை செய்யணும். இது தங்கத்துக்கு சமானம். தினமும் இந்த இலை கிடைக்கலேன்னா, துவாதசியன்னிக்குப் பாரணையை இந்த இலையில் வைத்து பிக்ஷை செய்யணும். அவ்வளவு ஒசத்தி! அபூர்வம்! எனக்குக் கூட ஒரு பாட்டி தங்கத் தட்டு பண்ணிக் கொடுத்தாள். ஆனா, நான் அதில் ஒரு தடவைகூட பிக்ஷை பண்ணியதே இல்லை… இப்போ அது ஸ்டோர் ரூம்லே இருக்கு.”
இதைக் கேட்டுக் கொண்டிருந்த நான் ‘பேத்தி’ இலைக்காக பைத்தியமாக அலையத் தொடங்கினேன். கடைசியில் அதைக் கண்டுபிடித்து, மந்தார இலையை ஈர்க்குச்சியினால் தைத்து போஜனத்திற்காக உபயோகப் படுத்துவதைப் போல, சில இலைகளைத் தைத்துக் கொண்டு காஞ்சிபுரம் போனேன்.
பெரியவாளிடம், தொண்டர் பாலு என்பவர், பேத்தி இலையைப் பற்றித் தெரிவித்து, “செங்கல்பட்டு ஜெயலக்ஷ்மி; வைஷ்ணவா கொண்டு வந்திருக்கா” என்றார்.
உடனே பெரியவா, “இவாளை ஸ்ரீவைஷ்ணவான்னு கூப்பிடணும்” என்றார்கள். எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்தை எவ்வாறு சொல்வேன்!
அன்றுமுதல் ஸ்ரீமடம் சிப்பந்திகள் என்னை ‘ஸ்ரீவைஷ்ணவா’ என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.
வாழ்க்கையில் இதைவிட வேறு என்ன பட்டம் வேண்டும் எனக்கு?
[/h]
 
காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
ஓம் கலிதோஷ நிவ்ருத்யேக காரணாய நமோ நம:

1. உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம் சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும்.

2. இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம். விபூதி இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம் அணிதல், ச்ராத்தம் செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும் சௌக்யமாக இருப்பதற்கு உதவுங்காரியங்கள்.

3. நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம். பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை? மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதே என்று ஒரு சமயம் யோசித்துப் பார்த்தேன். அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்தது. பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது.

4. நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு பயமின்றி அன்புடன் சாமாண்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷதர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும். அதற்குரிய சக்தியைப் பகவான் அளிப்பாராக.

5. மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன் இருக்கிறார். அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார். காமேச்வரனாக அருள் புரிகிறார். பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார். நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார்.

6. வேதத்திலிருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பது பதினெட்டு புராணங்கள். பதினெட்டு உப புராணங்கள் வேறே இருக்கின்றன. பதினெட்டு புராணங்களும் சேர்ந்து நான்கு லட்சம் கிரந்தம். ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்ள் கொண்டது. பதினெழு புராணங்கள் மூன்று லட்சம் கொண்டவை மிகுதியுள்ள ஒரு லட்ச கிரந்தம் ஸ்காந்த புராணம். பரமசிவனைப் பற்றிச் சொல்பவை பத்து புராணங்கள், அவைகளுள் ஒன்றே லட்சம் கிரந்தம் உடையது.

7. பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது. வேதங்களின் ஜீவரத்னம் அதுவே. கோயிலில் மஹாலிங்கம் போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. (சிவ என்ற இரண்டு எழுத்துக்களே அது) அதை ஒருதரம் சொன்னால் போதும். வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே பாபத்தைப் போக்கிவிடும்.

8. வேதங்களுள் யஜுர் வேதம் முக்கியமானது. அதற்குள் அதன் மத்திய பாகமாகிய நாலாவது காண்டம் முக்கியமானது. அதற்குள்ளும் மத்திய பாகமான நாலாவது ப்ரச்னம் முக்கிய மானது. அதுதான் ஸ்ரீருத்ரம். அதற்குள்ளும் ‘நம: சிவாய’ என்ற பஞ்சாக்ஷர வாக்கியம் மத்தியில் இருக்கிறது. அதன் மத்தியில் ‘சிவ’ என்ற இரண்டு அக்ஷரங்கள் அடங்கியுள்ளன. இதையே ஜீவரத்னம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இந்த அபிப்பிராயத்தை அப்பய்ய தீக்ஷிதர் ப்ரம்மதர்க்க ஸ்தவத்தில் சொல்லியிருக்கிறார்கள். அந்த ப்ரம்மம் சிவஸ்வரூபம் என்று தெரிகிறது.

9. அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை ஆராதிப்பதற்கு அடையாளமாகச் சிவபக்தர்கள் எல்லோரும் ஐந்து வித காரியங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும். அவைகளாவன: (1) விபூதி தரித்தல், (2) ருத்ராக்ஷம் அணிதல், (3) பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபம் செய்தல், பஞ்சாக்ஷர மந்திரம் உபதேசமாகாதவர்கள் ‘சிவ’ என்ற பதத்தை ஜபம் செய்தல், (4) வில்வ தளத்தால் பரமேச்வரனைப் பூசித்தல், (5) இருதயத்தில் சதா சிவத்யானம் செய்தல் இவைகள் ஒவ்வொன்றும் ஈச்வரனுக்கு விசேஷப்ரீதியைக் கொடுக்கக் கூடியது.
(குறிப்பு: பஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேச பெற்று ஜபம் செய்தல் சிறப்பு. எனினும் உபதேசம் பெறாதவரும் இம்மந்திரத்தைத் தாராளம் சொல்லலாம். கொல்வாரேனும் குணம் பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே - சம்பந்தர்.)

10. பரமேச்வரனுடைய கீர்த்தியை நாம் வாக்கினால் சொல்லுவதனாலும் கேட்பதனாலும் பவித்திரர்களாக ஆகிறோம். அவருடைய ஆக்ஞையை யாரும் மீறமுடியா

 
தமிழ் மொழியிலே பெரியவாளுக்கு இருந்த பேரறிவு முத்தமிழ்க் காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது.
ஒரு முறை கி.வா.ஜ-விடம், “தமிழ் என்றால் என்ன?” என்று கேட்டார். மேலும் “சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது சொல்லுங்கள்!” என்கிறார்.
கி,வா.ஜ. அடக்கமாக,”பெரியவா சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!” என்றார்
“எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு,இனிமை அவற்றைக் குறிப்பதகாவே இருக்கும். மழலை, குழல், அழகு, குழந்தை, கழல், நிழல், பழம், யாழ் இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தம்மிடத்தில் உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்று சொல்லலாமா” என்கிறார்.
உடனே கி.வா.ஜ., “இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்!”என்றாராம்.
சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும் “யாமா மாநீ யாமா மா” என்ற மாற்றுமாலைப் பதிகம் மிகவும் கடினம். அவற்றுள் ஒன்றைப் பெரியவா எடுத்து, மிகவும் கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்துப் பிரித்து மிக எளிமைப்படுத்திப் பொருள் சொன்னார். பெரிய வித்வான்கள் பிரமித்துப் போனார்கள்.
அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடலில் ஒன்று, முக்கால்,அரை,கால், அரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா,கீழரை என்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்து எழுதுகிறார், தெரியுமா?” என்று கேட்டு,
முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்
விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்
கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது….

என்ற பாட்டை பெரியவா எடுத்துக் காட்டுகிறார்.
அதன் பொருளையும் தனக்கே உரிய முறையில், “முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டு காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவது காலாகப் பயன்படுத்துகிறோமே…..அந்த நிலை வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்…நரை வருவதற்கு முன்னாலே விக்கலும் இருமலும் வருவதற்கு முன்…. யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்…..ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப் போகும் முன்…காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ள ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!” என்று மிக அழகாக விளக்குகிறார்.
மேலும் “என்ன அழகு பார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக் கீழேயே கொண்டுவந்து கீழரை வரை எட்டு அளவுகளையும் கோத்துத் துதித்திருக்கிறாரே!” என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.
எதையுமே இப்படி விளக்கமாகப் பொழிந்து தள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள்!!
 
As narrated by a Bhakthai of Maha Periyavaa to one of her Confidents

[h=5]You must come to me!"
===============

Had an excellent darshan of Him today the Holy Anusham day at the Kanchi Matam. He performed a miracle yet again today. There was a bunch of photos of Him at His feet at the Adishtanam and were given away only to prominent people. I wanted one too but was hesitant to ask the Priest.

I prayed to Him that, "By the time I finish 25 pradakshinams and 25 namaskarams You must come to me!"

I completed 20 rounds passed and nothing happened yet. During the 21st round the Mama at the Adhishtanam called me and gave me One!

Tears started rolling down my eyes. He listens to each and everyone of us, either sooner or later.

While coming out we had buttermilk and were discussing if we should go to Orikkai. It was already 11.50 am and the Mani mandapam timings were written as closure at 12 noon. The old man who gave us buttermilk said, "even if the main Sannadhi is closed go to that place. Even going there is enough!".

By the time we got directions and went it was 12.25 pm and can you believe it, His Sannadhi was still open! It was such a divine sight and I could feel His vibrations there. What kind and powerful eyes!

There is a small Kamakshi Ambal also there and I performed 5 pradakshinams and 5 namaskarams.

Am feeling so happy and charged that this will take me through till the next Anusham!

*****
Narrated from her Heart by Smt Chithra Subramanian! This is the picture that was given to her and she did not waste any time in having it framed. It now adorns her wall at home, and in the wall here too!
[/h]
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top