• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
I thought that this post is apt to appear here! :)

[FONT=SHREE_TAM_OTF_0802]நடமாடும் தெய்வமென உலக மக்களால் போற்றப்படும் காஞ்சி மகாபெரியவர் தனது சிறுவயதில், பெற்றோருடன் திண்டிவனத்தில்

தங்கியிருந்தார். அவரது அன்றையப் பெயர் "சுவாமிநாதன்'. தந்தை சுப்பிரமணிய சாஸ்திரிகள், தாயார் மகாலட்சுமி.[/FONT]

[FONT=SHREE_TAM_OTF_0802]
சுவாமிகள், திண்டிவனத்திலுள்ள அமெரிக்க மிஷனரி பள்ளியில் படித்து வந்தார். அவர் பள்ளிக்குச் செல்லும் போதும், திரும்பும்போதும்,

தெரு முனையில் பட்சணம் விற்கும் ஒரு பிராமண மூதாட்டியிடம் அவற்றை வாங்கி [/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]உண்பார். சில நேரம் காசு கொடுப்பார். சில

சமயங்களில், பிறகு தருவதாக சொல்லி விடுவார். [/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]ஒருமுறை, பட்சணம் சாப்பிட்ட போது காசு கொடுக்கவில்லை. பாட்டி கேட்டதற்கு,

"அப்பா தருவார்' என்றார். உடனே பாட்டி, "இன்று உனக்கு பட்சணம் தரமாட்டேன், போ' என சொல்லிவிட்டார். [/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]பெரியவர் அந்த

மூதாட்டியிடம், "பாட்டி! இப்போது நீங்கள் எனக்கு பட்சணம் இல்லை என சொல்லி விட்டீர்கள். இதே பட்சணங்களை தட்டு நிறைய

வைத்துக்கொண்டு, நீங்கள் எனக்காக காத்துக்கிடக்கும் நாள் வரும்,'' என்று சிரித்துக்கொண்டே சொல்லி விட்டு போய்விட்டார்.[/FONT]

[FONT=SHREE_TAM_OTF_0802]
இந்த சம்பவத்துக்குப் பின் பல காலம் கடந்து விட்டது. காஞ்சி மடத்தின் பீடாதிபதியான பிறகு சுவாமிகள் திண்டிவனம் சென்றார். தான்

படித்த பள்ளி வழியாக தாங்கள் வசித்த வீட்டிற்கு சென்றார். வழியில், பட்சணப்பாட்டியும் தட்டு நிறைய பலகாரங்களுடன் சென்று

சுவாமியை நமஸ்கரித்தார். பரவசத்தில் கண்ணீர் பொங்கியது. [/FONT]
[FONT=SHREE_TAM_OTF_0802]சுவாமி பாட்டியை ஆசிர்வதித்து பட்சணத் தட்டைப் பெற்று சீடர்களிடம்

ஒப்படைத்தார். பெரியவரின் சொல்படி அவரைத் தேடி வந்த பாட்டியும், பட்சணத்தட்டும் பாக்கியம் செய்தவர்கள் தானோ!


[/FONT]
நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள்[FONT=SHREE_TAM_OTF_0802]
[/FONT]
 
அருகம்புல் மாலை
==============

மகாபெரியவா எப்போது எந்த பக்தனுக்கு எந்த பக்தைக்கு அருள் பாலிப்பார் என்று யாருக்குமே தெரியாது தம் முன் நிற்கும் பக்தர்களின் மன ஓட்டம் எப்படி இருக்கும் என்பதைத் துல்லியமாக அறிந்த மகா பிரபு அவர் .

புதுக்கோட்டை ராதா ராமமூர்த்தி எனும் பக்தையின் அனுபவம் இதற்கு ஒரு சான்று

தொடர்ச்சியாக ஸ்ரீமடத்திற்கு வந்து மகானை தரிசித்து மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு இருப்பவர் . மகானை தரிசிக்க செல்லும் போதெல்லாம் அவருக்கு முன் எதையாவது சமர்ப்பிக்க வேண்டும் என்று காணிக்கையை எடுத்துப் போவதில் அந்த பக்தைக்கு அதீத மகிழ்ச்சி.

ஒரு முறை தரிசனத்திற்குப் போகும் போது தன் மனதில் தோன்றியபடி, சிறிய அருகம்புல் மாலையைத் தொடுத்து ஓரத்தில் அரளிப் பூவை பார்டர் ஆக அமைத்து அழகிய மாலையாக தொடுத்தார், மாலையோடு கொஞ்சம் கல்கன்ன்டும் எடுத்துக் கொண்ட அந்த பக்தை, இரண்டையும் தனித்தனி பொட்டலங்களாக கட்டி தரிசனத்திற்கு சென்றபோது மகானின் முன் வைத்து சமர்பித்தார் எட்ட நின்று தரிசித்தார் .

அதை எப்போது எடுத்துக் கொள்ளப் போகிறாரோ என்று கத்துக் கிடந்த பக்தைக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது, இரண்டு பொட்டலங்களையும் சற்று தூரம் தள்ளி வைத்து விட்டார் , மகான் அதில் என்ன இருகின்றது என்றும் பார்க்கவில்லை, அது யாருடைய கண்களுக்கும் புலப்படவில்லை.

அதற்குள் இருப்பதை மகான் அறிவார் என்பதை நினைத்துகொண்டு பக்தை ஓரமாக நின்றுகொண்டிருந்தார், எட்டு மணிக்கு வந்த பக்தை மணி பத்து ஆகியும் அப்படியே நின்று மகான் அவர் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் வரை அங்கிருந்து நகருவதில்லை என்ற உறுதியோடு இருந்தார் என்றே சொல்லலாம்.

சுமா பத்து மணிக்கு ஒரு பெண் மகானை தரிசிக்க வந்தார் அந்த பெண்மணி கையில் ஒரு வெள்ளிக் கவசம், பிள்ளையாருக்கு போட்ட வேண்டிய கவசம் மகானின் உத்திரவுப்படி அந்தபெண்ணின் ஊர்கோவிலில் பிள்ளையாருக்கு மிகவும் நேர்த்தியான வேலைப்பாட்டுடன் செய்யப்பட்டு இருந்தது , மகா பெரியவர் அனுக்கிரகத்திற்காக அதை கொண்டு வந்து இருந்தார் .

அந்தக் கவசத்தை தன் கையில் வாங்கிய மகான் தன் மடியில் வைத்துக் கொண்டார் , பிறகு மடத்து சிப்பந்தியை அழைத்து எட்ட இருந்த இரு பொட்டலங்களைக் காட்டி “அதை எடு ” என்றார் .

ராதா ராமமூர்த்தியை தவிர அந்த பொட்டலத்தில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது அல்லவா

அதில் ஒரு பொட்டலத்தை பிரிக்கச் சொன்னபோதுதான் வெள்ளிப் பிள்ளையார் கவசத்திற்கே சொல்லி வைத்தாற்போல் ஒரு அருகம்புல் மாலை அதிலிருந்ததை எல்லாரும் கண்டனர்

இதில் அதிசயம் என்னவென்றால் ”பொட்டலத்தில் என்ன இருக்கிறது?” மகான் கேட்கவும் இல்லை பார்க்கவும் இல்லை ஆனால் அது பிள்ளையாருக்கு உரிய மாலை என்று எப்படி தீர்மானித்தார்? அதுதான் மகாபெரியவாளின் அருட்பார்வை

மாலையை அந்த வெள்ளிக் கவசத்திற்கு மகான் சாத்தியபோது கச்சிதமாக அந்த பிள்ளையாருக்கே அளவெடுத்து தொடுத்தது போல் அமைந்திருந்தது. மாலையுடன் அந்த வெள்ளிக் கவசத்தை தமது திரு மார்பில் பொருத்தி வைத்துக் கொண்டு நாலா புறமும் திரும்பி திரும்பி ஸ்ரீபெரியவா தரிசனம் கொடுத்தபோது எல்லா பக்தர்களுக்கும் அது ஆனந்தமாக இருந்தது

ஆனால் ராதா ராமமூர்த்தி என்ற பக்தைக்கு அந்த ஆனந்தம் பன்மடங்கு அதிகமாக இருந்தது .
 
குழந்தை வரம் தந்த கொய்யாப்பழம்

(பலமுறை முன்பே படித்திருந்தாலும் இதில் விரிவாகவும்
சுவாரஸ்யமாகவும் இருக்கிறது)


சென்னையில் தற்போது வசித்து வருபவர் சூரியகுமார். மகா பெரியவாளின் தீவிர பக்தர்.

சூரியகுமாரின் மனைவி விஜயலட்சுமி, மயிலாப்பூரில் ஒரு பள்ளியில் ஆசிரியையாக இருந்தார். இல்லறம் இனிமையாகப் போய்க்கொண்டிருந்தாலும், இந்தத் தம்பதியருக்குக் குழந்தைப் பேறு அமையவில்லை. நாட்கள் தள்ளிக் கொண்டே போயின.

சூரியகுமாருக்கு மிகவும் பழக்கமான ஆன்மிக அன்பர் ஒருவர், ‘‘மனதில் ஒரு குருவை நினைத்துக் கொள். அவரையே சரண் அடைந்து விடு. அவரிடம் உன் பிரார்த்தனையை வை. நிச்சயம் உனக்கு என்ன தேவையோ, அதை அருளுவார்’’ என்று சொல்லி இருந்தார்.

அதன்படி தன் குடும்பத்துக்கு மிகவும் இஷ்டமான காஞ்சி மகா ஸ்வாமிகளையே குருவாக மனதில் வரித்துக்கொண்டு, அவரிடம் தன் பிரார்த்தனையை வைத்தார். தினமும் மகா ஸ்வாமிகளை வணங்கினார். நாட்கள் இப்படிப் போய்க்கொண்டிருந்தன.

அன்றைய தினம் மகர சங்கராந்தி. இரவு சூரியகுமாரின் கனவில் மகா பெரியவா வந்தார். சூரியகுமாரிடம், ‘எனக்குக் கொய்யாப்பழம் வேண்டும்’ என்று கேட்டார் பெரியவா. சிலிர்ப்புடன் துணுக்குற்று எழுந்தார் சூரியகுமார். ‘பெரியவா கனவில் வந்து கொய்யாப்பழம் கேட்கிறாரே… எப்படியாவது காஞ்சிபுரம் சென்று அவரிடம் சேர்ப்பித்தாக வேண்டும்’ என்று அந்த நள்ளிரவிலேயே மனதுக்குள் சங்கல்பம் எடுத்துக் கொண்டார். அதற்கேற்றாற்போல் அப்போது மகா பெரியவா காஞ்சிபுரத்தில்தான் இருந்தார்.

அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். அன்றைய தினம் சென்னை நகர் முழுதும் கொய்யாப்பழத்தைத் தேடி அலைந்தார் சூரியகுமார். அது சீஸன் இல்லாததால், எங்கேயும் கொய்யாப்பழம் கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு வழியாக சூரியகுமாரின் அண்ணன் ரவிகுமார் பாரிமுனையில் ஒரு கடையில் இருந்து கொய்யாப்பழங்களை எப்படியோ தேடி வாங்கி வந்து விட்டார்.

மாட்டுப் பொங்கல் அன்று காலை ரவிகுமார், சூரியகுமார் & இருவரும் தம்பதி சமேதராக காஞ்சி ஸ்ரீமடத்துக்குப் புறப்பட்டனர். பெரியவா கேட்ட கொய்யாப்பழத்தோடு வேறு சில பழங்களும் வாங்கி வைத்திருந்தனர்.

விடுமுறை தினம் என்பதால் அன்றைய தினம் காஞ்சி ஸ்ரீமடத்தில் தாங்க முடியாத கூட்டம். பெரியவாளின் சந்நிதிக்குச் சென்று திரும்புவதே சிரமம் என்பதால், சென்னையில் இருந்து வந்திருந்த பல பக்தர்களும் தொலைவில் இருந்தே மகா பெரியவாளை தரிசனம் செய்துவிட்டுத் திரும்பினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

இத்தனை கூட்டத்தில் நீந்திப் போய் எப்படிப் பெரியவாளிடம் சென்று, கொய்யாப்பழங்களைக் கொடுப்பது என்று சகோதரர்கள் இருவரும் யோசித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஸ்ரீமடத்தில் பணி புரியும் & தங்களுக்குப் பரிச்சயமான ஒரு நண்பரைப் பார்த்தார்கள். இருவரும் முகம் பிரகாசிக்க, அந்த நண்பரை நோக்கி ஒருவாறு கூட்டத்தில் புகுந்து சென்றார்கள்.

அந்த நண்பரும், இவர்களை முகம் மலரப் பார்த்துவிட்டு, ‘என்ன?’ என்பதுபோல் கேட்டார்.

அதற்கு சூரியகுமார், ‘‘பெரியவா நேத்து என் கனவில் வந்து கொய்யாப்பழம் கேட்டார். அதான் வாங்கிண்டு வந்திருக்கோம். பெரியவாகிட்ட அதைக் கொடுத்துட்டு ஆசிர்வாதம் வாங்கணும்’’ என்றார்.

அந்த நண்பரின் முகம் மாறியதே பார்க்கணும். ‘‘தோ பாருப்பா… நீ என் ஃப்ரெண்டுதான். அதுக்காக, பெரியவாளை உடனே பாக்கணும்கறதுக்காக ‘என்கிட்ட கொய்யாப்பழம் வாங்கித் தரச் சொன்னார். மெட்ராஸ்லேர்ந்து வாங்கிண்டு வந்திருக்கேன்’னு பொய்யெல்லாம் சொல்லாதே’’ என்று படபடவென்று பேச… ரவிகுமாரும் சூரியகுமாரும் அதிர்ந்தார்கள்.

கேட்டவருக்குத் தெரியாதா, இதை எப்படி வாங்கிக்கொள்ள வேண்டும் என்று?!

ஸ்ரீமடத்து அன்பரின் முகம் போன விதத்தைப் பார்த்தால் இவர்கள் இருவரும் சொன்ன விஷயத்தை நம்பியதாகத் தெரியவில்லை. தன் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டினார். பிறகு, ‘‘பெரியவாளை உடனே தரிசனம் பண்ணிட்டுப் போகணும்கறதுக்காக அவர் என் கனவில் வந்தார்… கொய்யாப்பழம் கேட்டார்… அப்படி இப்படின்னு எல்லாம் பொய் சொல்றேளா? மகா பெரியவாளே உங்க கனவில் வந்து கொய்யாப்பழம் கொண்டு வான்னு சொன்னாரா?’’ என்று கிண்டலும் கேலியுமாகக் கேட்டார். அப்போது மகா பெரியவாளின் கைங்கர்யத்தில் இருக்கும் ஆசாமி ஒருவர், இந்த அன்பரைப் பார்த்துக் கை நீட்டி அவசரமாக அழைக்க… இவர்களிடம் எதுவும் சொல்லாமலே பொசுக்கென நகர்ந்து போய்விட்டார்.

கனவில் பெரியவாளின் அருட்காட்சி கிடைக்கப் பெற்ற சூரியகுமார், அதிர்ந்து போனார். “இன்னிக்கு எத்தனை நேரமானாலும் பரவால்லை. வரிசையில் நின்னு, இந்தக் கொய்யாவை பெரியவாகிட்ட சமர்ப்பிச்சுட்டுத்தான் மெட்ராஸ் கௌம்பப் போறோம்’’ என்று தன் அண்ணன் ரவிகுமாரைப் பார்த்துச் சொல்லிவிட்டு, பெரியவா தரிசனத்துக்காகக் காத்திருக்கும் நீண்ட வரிசையில் தன்னை இணைத்துக்கொண்டார் சூரியகுமார். அவரைத் தொடர்ந்து அவருடன் வந்த குடும்பத்தினர் அனைவரும் அதே வரிசையில் இணைந்தனர்.

பெரியவா கேட்ட கொய்யாப்பழங்களை மட்டும் பயபக்தியுடன் தன்வசம் ஒரு பையில் வைத்துக்கொண்ட சூரியகுமார், அவர் சந்நிதானத்தில் சமர்ப்பிக்கவேண்டிய மற்ற பழங்களைத் தன் அண்ணன் ரவிகுமாரிடம் கொடுத்தார்.

வரிசையில் திரளான பக்தர்கள் நின்றிருந்தாலும், அனுபவம் வாய்ந்த ஸ்ரீமடத்து அன்பர்கள் கூட்டத்தை வெகு நேர்த்தியாகக் கட்டுப்படுத்திக்கொண்டு வந்ததால், சற்று விரைவாகவே வரிசை நகர்ந்து போய்க்கொண்டிருந்தது.

மதியம் ஒண்ணரை மணி வாக்கில் பெரியவா திருச்சந்நிதி அருகே வந்துவிட்டனர் சூரியகுமாரும் ரவிகுமாரும். இருவர் முகங்களிலும் பெரியவாளை தரிசிக்கப் போகிற பரவசம். அந்த மகானின் அருகே நெருங்கிவிட்டோம் என்கிற ஆனந்தம். ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ கோஷம் எங்கும் முழங்கியபடி இருந்தது.

சர்வேஸ்வரனாக அந்த பரப்பிரம்மம் கொஞ்சமும் களைப்பே இல்லாமல் கன ஜோராகக் காட்சி தந்துகொண்டிருந்தது.

களைப்பும் கவலையும் இந்த மனித குலத்துக்குத்தானே?! மகான்களுக்கு ஏது!

பெரியவா தன் வலக் கையை உயர்த்தி, தன் முன்னால் நின்று கொண்டிருக்கும் சகோதரர்கள் இருவரையும் பார்த்து ஆசிர்வதித்தார். கனிவும் புன்னகையும் மாறா முகத்துடன் இருவரையும் தன் பார்வையால் ஏறிட்டார் பெரியவா.

கொய்யாப்பழங்கள் இருந்த பையைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு மகா ஸ்வாமிகளின் அருகே கைகட்டி, வாய் பொத்தி பவ்யமாக அவரது திருமுகத்தையே ஏக்கமாகப் பார்த்தபடி நின்றிருந்தார் சூரியகுமார். பக்திப் பரவசத்தின் வெளிப்பாடாக அவரது கண்கள் கலங்கிக் காணப்பட்டன.

‘‘பெரியவாளை எப்படியும் இன்னிக்கு தரிசனம் பண்ணியே ஆகணும்னு ஒரு சங்கல்பம்.. அதான் குடும்பத்தோட புறப்பட்டு வந்துட்டோம்’’ & சூரியகுமார் நா தழுதழுத்தபடி சொன்னார்.

‘‘கொய்யாப்பழம் கேட்டேனே… கொண்டுவந்தியோ?’’ பெரியவா கேட்டதும், சூரியகுமாரும் ரவிகுமாரும் ஆடிப் போனார்கள். இருவரின் மனைவிகளும் விதிர்விதிர்த்துப் போனார்கள். இத்தனைக்கும் சூரியகுமாரின் கையில் இருக்கும் துணிப்பைக்குள் இருப்பது கொய்யா என்பதை எவராலும் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியாது.

‘‘கொய்யாப்பழம் கேட்டேனே… கொண்டுவந்தியோ?’’ பெரியவா கேட்டதும், சூரியகுமாரும் ரவிகுமாரும் ஆடிப் போனார்கள். இருவரின் மனைவிகளும் விதிர்விதிர்த்துப் போனார்கள். இத்தனைக்கும் சூரியகுமாரின் கையில் இருக்கும் துணிப்பைக்குள் இருப்பது கொய்யா என்பதை எவராலும் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியாது.

கூடவே, பெரியவாளுக்கு அருகே கைங்கர்யத்துக்காக நின்று கொண்டிருந்த இவர்களின் நண்பரும் (‘பெரியவா தரிசனத்துக்காகப் பொய் சொல்லாதே’ என்று சொல்லி விட்டுச் சென்றாரே, அவர்தான்!) அதிர்ந்து போனார். ‘இதைத்தானே முதலில் என்னிடம் சொன்னார். பெரியவா கனவில் வந்து கொய்யாப்பழம் கேட்டார். அதை அவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்’ என்றல்லவா சொன்னார்?! நான் அதைக் கிண்டலும் கேலியுமாக பரிகசித்துவிட்டு வந்தேனே’ என்று தனக்குள் மருகினார். ‘என்னை மன்னிச்சிடுப்பா’ என்று சூரியகுமாரைப் பார்த்துச் சொல்லாத குறையாகக் கையெடுத்துக் கும்பிட்டார், மன்னிப்புக் கோரும் தொனியில்!

பெரியவாளே வாய் திறந்து கேட்டதும், துணிப்பையில் இருந்து கொய்யாப்பழங்களை பரபரப்புடன் வெளியில் எடுத்தார் சூரியகுமார். பெரியவாளின் சந்நிதிக்கு முன்னால் இருக்கிற ஒரு காலி மூங்கில் தட்டில் அவற்றை வைத்தார்.

‘‘இதை அலம்பிட்டியோ?’’ – கொய்யாவைக் காட்டி சூரியகுமாரிடம் கேட்டார் பெரியவா.

சூரியகுமார் தன் அண்ணன் ரவிகுமாரின் முகத்தைப் பார்க்க… அவரோ உடன் இருந்த தன் துணைவியார் மற்றும் சூரியகுமாரின் மனைவியைப் பார்க்க… அனைவருமே உதடு பிதுக்கினார்கள்.

சட்டென்று சுதாரித்துக்கொண்ட சூரியகுமார், ‘‘கௌம்பற அவசரத்துல கொய்யாவை அலம்பறதுக்கு மறந்துட்டோம் பெரியவா. இதோ, இப்ப… இப்பவே அலம்பிடறோம்’’ என்று கொய்யாப்பழங்களைக் கையில் எடுத்துக்கொண்டு சுற்றும்முற்றும் பார்த்தார்.

அதற்குள், பெரியவாளின் கைங்கர்யத்துக்காக நின்றிருந்த சீடன் ஒருவன் பித்தளைச் சொம்பில் தண்ணீர் எடுத்து வந்தான். அங்கேயே ஒரு ஓரமாகப் போய் கொய்யாப்பழங்களைத் தண்ணீர் விட்டு அலம்பினார் சூரியகுமார். ஈரம் சொட்டச் சொட்ட அந்தப் பழங்களை உதறியபடி எடுத்து வந்து, பழையபடி மூங்கில் தட்டில் வைத்தார்.

பெரியவாளின் திருமுகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர் அனைவரும்.

அந்தப் பரப்பிரம்ம சொரூபி மூங்கில் தட்டைப் பார்த்தார். பிறகு, அதில் இருந்து ஒரு கொய்யாவைத் தன் கையில் எடுத்தார். பச்சை நிறமும் மஞ்சள் நிறமும் கலந்து நல்ல பழுத்த பழமாகக் காட்சி அளித்தது பெரியவாளின் திருக்கரத்தில் இருந்த கொய்யா. தன் வலது உள்ளங்கையில் அதை வைத்துக்கொண்டு இடது உள்ளங்கையால் அதன் மேல் ஒரு அழுத்து அழுத்தினார். அவ்வளவுதான். கொய்யாப்பழம் ‘பொளக்’கென இரண்டு சரி பாதியாக உடைந்தது.

க்ஷண நேரத்துக்குள் ஒரு பாதியைத் தன் வாய்க்குள் போட்டுக் கொண்டார் மகா பெரியவா. மற்றொரு பாதியை சூரியகுமாரிடம் கொடுத்து அவரையும் அவருடைய மனைவியையும் சாப்பிடச் சொன்னார்.

மிகுந்த பவ்யத்துடன் பெரியவா தந்த பிரசாதமான பாதி கொய்யாவை வாங்கிக்கொண்டார் சூரியகுமார். பெரியவாளின் சந்நிதியிலேயே சாப்பிடும்படி உத்தரவானது. எனவே, பாதி கொய்யாவில் ஒரு பகுதியை எடுத்துத் தன் மனைவியிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். மறு பாதியைத் தான் சாப்பிட்டார்.

அங்கு கூடி இருந்த அனைவரும் இந்த நிகழ்வுகள் அனைத்தையும் வேடிக்கை பார்த்து மெய்சிலிர்த்துப் போனார்கள். ‘இந்தத் தம்பதிக்கு எப்பேர்ப்பட்ட ஆசி கிடைத்திருக்கிறது’ என்று நெகிழ்ந்து போனார்கள்.

அதன்பிறகு கொய்யாப்பழத்தின் சிறப்பு, அதன் மருத்துவ குணம், என்னென்ன நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தலாம் என்றெல்லாம் ஒரு நீண்ட உரையாற்றினார் மகா பெரியவா. சூரியகுமார் குடும்பம் உட்பட வந்திருந்த அனைவரும் இமை கொட்டாமல் இந்த உரையைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

‘கொய்யாப்பழ படலம்’ முடிந்தது. மகா பெரியவா எழுந்து தன் ஜாகைக்குச் சென்றார். பக்தர்கள் கன்னத்தில் போட்டு தரிசித்துவிட்டு, அங்கிருந்து நகர ஆரம்பித்தனர்.

மதியம் ஸ்ரீமடத்திலேயே போஜனத்தை முடித்துவிட்டு சென்னைக்குத் திரும்பினர் சூரியகுமார் குடும்பத்தினர்.

அடுத்து வந்த ஒரு சில நாட்களிலேயே கர்ப்பம் தரித்தார் சூரியகுமாரின் மனைவி.

பெரியவா தந்த பிரசாதத்தின் மகிமை அதுதான்.

அதுவும் பெரியவாளே விருப்பப்பட்டுக் கனவில் கேட்டு வாங்கி, திரும்பித் தந்த பிரசாதம் ஆயிற்றே!

பெரியவாளின் பரிபூரண அனுக்ரஹத்தோடு சூரியகுமார் தம்பதிக்குத் தாமதமாகப் பிறந்த ஒரே மகளான மதுராம்பிகா, தற்போது பொறியியல் படித்து வருகிறாள்.
 
பெரியவா திருவிசநல்லூர் என்ற இடத்தில் இருந்தபோது
இரண்டு கண்ணும் தெரியாத ஸ்ரீவித்யா உபாசகி ஒருவர்
வந்தார். அது தெரிந்த பெரியவா தன்னிடம் கைங்கரியம்
செய்து வந்த கண்ணனை அழைத்து, அவருக்கு தங்க இடம்
முதலிய ஏற்பாடுகளைச் செய்யும்படிச் சொன்னார். மேலும்
அவர் மிகுந்த ஆசாரமுடையவர். ஆதலால்,"நீயே ஒரு
பலகாரம் செய்து கொடுத்துவிடு" என்றும் கூறினார்.

"நானாகவே அவர் இருக்குமிடம் சென்று தரிசனம்
தருகிறேன்.கண்தெரியாமல் அவர் என்னைத் தேடி
வர வேண்டாம்"என்றும் தெரிவிக்கச் சொன்னார்.
கண்ணன் அவ்வாறே செய்தார். சிறிது உப்புமாவைக் கிண்டி
அவளெதிரே வைத்து "சாப்பிடுங்கள்..." என்று உபசரித்த
கண்ணனுக்கு அதிசயம் ஒன்று காத்திருந்தது.

அதை நைவேத்தியம் செய்வது போல் சுற்றிவிட்டு
அந்த அம்மாள் தன் மார்பிலே கையை வைத்தார்.
உடனே அவள் கையில் ஒரு ஸ்ரீசக்கரம் வந்துசேர்ந்தது.
மறுபடியும் ஏதோ செய்தார். அது மறைந்துவிட்டது.
அதைப் பார்த்த கண்ணன், பெரியவாளை அவர்
தரிசனம் செய்யும்போது தானும் கூட இருப்பதென்று
முடிவு செய்தார்.

"இவர் என்ன மாய மந்திரங்கள் செய்யப் போகிறாரோ!
இவருக்கு சுவாமிகளிடமிருந்து என்ன கிடைக்கப்
போகிறதோ?" என்ற கேள்விக்குறிகளால் ஆவலுடன்
காத்திருந்தார். பெரியவாளிடம் போய் அவர் தரிசனத்துக்குக்
காத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லி, தான் எதிர்பார்க்கும்
சந்தர்ப்பம் சீக்கிரம் வராதா என்று ஏங்கினார்.

"ராத்திரி வரேன்னு சொல்லிவிடு" என்று அவரைப் பெரியவா
அனுப்பப் பார்த்தார். கண்ணனுக்கு ஒவ்வொரு விநாடியும்
யுகமாகக் கழிந்தது.எதிர்பார்த்திருந்த நேரமும் வந்தது.
இரவு. எலெக்ட்ரிக் விளக்குகள் இல்லாத காலம்.அங்கொன்றும்
இங்கொன்றும் முணுக்முணுக் என்று எரியும் கைவிளக்குகள்
ஒளியில் பெரியவா நடந்து வந்து அந்த அம்மாவின் எதிரில்
அமருகிறார்.

"நான் வந்துவிட்டேன்!" என்று குரல் கொடுக்கிறார்.அவளும்
நமஸ்கரித்து விட்டு உட்காருகிறாள். "எதற்கு வந்திருக்கிறாய்?"
என்று வினவுகிறார் எல்லாம் தெரிந்த சுவாமிகள்.
"உங்களுக்குத் தெரியாதா சுவாமி! எனக்கு இன்னும்
சஹஸ்ரகாரத்தில் ஜோதி தரிசனம் கிடைக்கவில்லையே!
எனக்கு அதுதான் வேணும்.அதற்காகத்தான் வந்தேன்!"என்கிறாள்.

"என்ன நடக்கப் போகிறதோ?" என்று கண்ணன் ஆவலுடன்
காத்திருக்க...பரமாச்சார்யாளோ, நிதானமாக,
"அப்படியா! நீ சிறுது நேரம் தியானம் பண்ணு!" என்றார்.

கண்ணனிடம், "நான் ஜாடை காட்டுவேன்.அப்போது எல்லா
விளக்குகளையும் அணைத்துவிடு" என்று கட்டளை இடுகிறார்.
காலை முதல் அந்த நொடிக்குக் காத்திருந்த கண்ணனுக்குப்
பெருத்த ஏமாற்றம்.கும்மிருட்டில் நடப்பது ஒன்றுமே தெரியாதே..
என்ன செய்வது? என்று ஏதுவுமே செய்ய முடியாதே!

பெரியவா சொன்னவுடன் விளக்குகள் அணைக்கப்பட்டன.
அடுத்த இரண்டாவது நிமிடம் அம்மையாரிடமிருந்து
பெரிய கூக்குரல் எழுந்தது.

"நான் ஜோதி தரிசனம் கண்டேன்;கன்டேன்!" என்று கூத்தாடினார்.
"போதும்!போதும்!காமாட்சி!நிறுத்திவிடு!நிறுத்திவிடு!"
என்று அலறினாள்.உடனே பெரியவா விளக்கையெல்லாம்
ஏத்தச் சொல்லிவிட்டு விடுவிடுவென்று நடந்து மறைந்துவிட்டார்.
போவதற்கு முன் கண்ணனிடம், "அந்த அம்மாவை ஊருக்கு
அனுப்பி விடு!" என்று சொன்னார்.

அந்த அம்மாள் கிளம்புமுன், கண்ணன் அவரிடம், "என்ன நடந்தது?
ஏன் கத்தினீர்கள்? நீன்ங்களாவது சொல்லி விட்டுப்போவீர்களா!"
என்று கெஞ்சினார்.அவரும், "நான் கேட்ட ஜோதி தரிசனம்
சஹஸ்ராரத்தில் கிடைத்துவிட்டது. அதை இரண்டு நிமிடத்துக்கு
மேல் என்னால் பார்க்க முடியாததால் நிறுத்தச் சொல்லி
அலறினேன்!" என்றார்.

எப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்தவராக இருந்தால் இத்தனை எளிதில்
ஒருவருக்கு ஜோதி தரிசனம் காணும்படிச் செய்ய முடியும்?
பெரியவா இறைவன்தான் என்று நினைத்தால் மட்டுமே புரியும்!
தவிர, மனிதர்களால் இப்படி ஒரு சாதனையைச் செய்ய முடியாது.
எத்தனை பாடுபட்டாலும் பெற முடியாத ஒரு தரிசனத்தை,
ஒரு ரயிலில் வந்து பார்த்துவிட்டு, அடுத்த ரயிலில் ஊருக்குப்
புறப்படுகிறார் ஒரு பெண். அந்த அதிசயத்துக்கு வேறு எப்படி
விளக்கம் தர முடியும்.?.

அவரது அனுக்கிரகத்தால் உயர்ந்த ஒன்றக் கேட்டுப் பெறுபவர்களே
பாக்கியசாலிகள்.அந்த அம்மா பேறு பெற்றவள்.
 
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாள் கராவலம்பம் ஸ்தோத்ரம்
(அர்தத்துடன்)


ப்ராதஸ்மராமி பவதீய முகார விந்தம்

மந்தஸ்மிதம் ச ஜனிதா பஹாரம் ஜனனாம்

சம்பத்கரீம் ச பவதோத்ர கடாக்ஷ லக்ஷ்மீம்

காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

(திருமுகத்தின் அழகு பவத்தை நீக்கும். குறுநகை பிறந்திட மக்களின் பிறவிப் பிணி தீர்ந்துவிடும்
அருள்விழிப் பார்வையாலே பவவினை ஒழிந்து செல்வத்தை அருளும். இந்தக் குணாதிசயங்கள் நிறைந்த காஞ்சி மடத்தின் அதிபதியைக் காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன், என்னைக் கைத்தூக்கி அருளுமாறு வேண்டுகிறேன்.!)

ப்ராதஸ்மராமி கலிதோஷ ஹராணி யாணி

ஹ்ருத்யானி த்வய மதுராணி மனோஹராணி

வாக்யானி தேத்ய வதனாம் புஜ நிர்கதானி

காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

(கலிதோஷத்தை நீக்குபவரே! அருளிதயம் கொண்டு, அங்கிருந்து பிறக்கும் தங்கள் தேமதுரமான வாக்கின் மூலம் எங்கள் இதயத்தை மலரச் செய்பவரே! கதியற்றவரை தாமரை போன்ற அருள் விழிகளால் கடைத்தேற்றுபவரே! காஞ்சி மடத்தின் அதிபதியே! காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன். கை தூக்கி எனக்கருளுங்கள்.)

வக்ஷஸ்தலம் விமலஹேம சமான வர்ணம்

பஸ்மாங்கிதம் ஜனமனோஹர குங்குமார்தம்

ப்ராதஸ்மராமி பவதோத்ர சிரம் மஹாத்மன்

காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

(க‌ல‌ப்ப‌ட‌ம‌ற்ற‌த் த‌ங்க‌த்தைப் போன்றப் பொன்னிறமானத் திருமார்பு முழுவதும் திருவெண்ணீற்றாலும், குங்குமத்தாலும் பூசி [பார்க்கின்ற‌] ஜ‌னங்க‌ளின் ம‌ன‌தை இனிமையாக்குப‌வ‌ரே! எனது ப‌வ‌வினை தீர்ந்து என்னை மேலுய‌ர்த்திச் செல்ல‌க் காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன். காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே! கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌)

மத்தேவ துல்ய கமனம் ச நிரீஷ்ய தேத்ய

யாத்வா வனாந்தர மனந்த கஜாச்சலீன:

ப்ராதஸ்மராமி கஜராஜ கதிம் தவேதம்

காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

(ந‌டையிலும், கூரிய‌ பார்வையிலும், வ‌ன‌ங்க‌ளில் திரிவ‌திலும் ம‌த்த‌க‌ஜ‌த்தை ஒத்த‌வ‌ரே!
க‌ஜ‌ராஜ‌னுக்கு ந‌ற்க‌தி அளித்த‌துபோல‌ என‌க்கும் ந‌ல்கிட, காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன்.
காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே! கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌ )

தக்க்ஷேண தண்ட மவலப்ய ஸதைத்ய ரேண:

ஹஸ்தேன சாரு கலசம் ச விராஜ மானாம்

ரக்தாம்பரம் ச தவசாரு கடீஸ்மராமி

காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

(வ‌ல‌க் க‌ர‌த்தில் த‌ண்ட‌மும், இட‌க் க‌ர‌த்தில் கமண்டலத்தையும் தாங்கி, ஒளிர்கின்ற‌ ர‌க்த‌ வ‌ர்ண‌ மேலாடையை அணிந்து நிற்கும் திருக்கோல‌த்தை நினைத்துத் துதிக்கின்றேன். காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே! கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌ .)

விஸ்ம்ருத்ய தோஷமகிலம் ச ஸமமாப்ராதும்

த்ராதும் ச யாத்ய பகவன் க்ருதபக்த தீக்ஷா:

ப்ராதஸ்மராமி யதிபுங்கவ தேனுகம்பாம்

காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

(குறைக‌ளை, தோஷ‌ங்க‌ளை எல்லாம் ம‌ற‌ப்ப‌வ‌ரே! குற்ற‌‌ங்க‌ளை எல்லாம் ம‌ன்னிப்ப‌வ‌ரே!
அனைத்தையும் பொறுத்து ப‌க்த‌ர்க‌ளுக்கு அருட்பார்வை அளிக்கின்ற‌ ப‌க‌வானே!
அருட்பாலைப் பொழிகின்ற‌ உத்த‌ம‌மான‌ ப‌சுவைப் போன்ற‌வ‌ரே! காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே!
கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌ )

ப்ராதஸ்மராமி பவதீய பதாரவிந்தம்

யஸ்மாத் ப்ராயந்தி துரிதாணி மஹாந்திதாணி

ஆயாந்தி தாணி முஹருத்ய சுமங்களானி

காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

(எந்த மஹானுடைய திவ்ய சரணார விந்தங்களைத் துதித்தால், அனைத்துவிதமான மஹா துன்பங்களும் ஓடிவிடுமோ, ஸர்வ மங்களங்களும் தேடி ஓடிவருமோ,[அத்தகையப் பெருமை வாய்ந்த] காஞ்சி மடத்தின் அதிபதியே! கைதூக்கி எனக்கு அ‌ருளுங்கள்.)

ஸ்னானாச்ச பானாச்ச நிஷேவனாச்ச

த்யானாச்ச பாபநிலயம் ப்ராயாந்தி

ஹேதீர்த்த பாதானு சர்வ பதம்தே

தீர்த்தம் ச தீர்த்தி சரணம் பஜாமி

காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

(குளிக்கும்போதும், உண்ணும்[குடிக்கும்]போதும், தனியே] துதிக்கும்போதும், தியானம் புரியும்போதும், [எந்த] தீர்த்தபாதரை நினைத்துத் துதித்தால் ஸர்வ பாபங்களும் விலகி ஓடிவிடுமோ, [அவரை நினைந்து]ஸர்வ பதம் தந்தருள்க என வேண்டி, நல்வழி காட்டுக என இந்தத் தீர்த்தத்தால் துதிக்கிறேன். காஞ்சி மடத்தின் அதிபதியே! கைதூக்கி எனக்கு அ‌ருளுங்கள்.)
 
Maha Periyavaa Ashtakam. If one gets time, read it in the morning daily.

viewer
 
[h=5]1935 அக்டோபர் 27 ஆம் தேதி அமாவசை, கல்கத்தாவுக்கு தென்மேற்கில் சுமார் அறுபது மைல் தூரத்தில் உள்ள மிட்னாபூருக்கு விஜயமானார்கள். அப்போது அவ்வூரில் பயங்கர இயக்கங்கள் தோன்றி வந்தன. மிட்னாபூர் மக்கள் எவ்வகையிலும் தங்கள் ஊருக்கும் சுவாமிகளை அழைத்து வர வேண்டும் என்று தீர்மானித்தார்கள். ஒரு வரவேற்பு கமிட்டி நியமிக்க பட்டது. அப்போது அவ்வூரில் கடும் ஊரடங்கு உத்தரவு, இரவு ஒன்பது மணிக்கு மேல் வீதிகளில் எவரும் நடமாடக்கூடாது என்பது சர்க்கார் உத்தரவு.
சுவாமிகள் அவ்வூர் சென்று அம்மக்களை ஆசீர்வதிக்க, அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள். சுவாமிகள் அவ்வூருக்கு விஜயம் செய்த அன்றைய தினம் மட்டும் ஊரடங்கு சட்டத்தின் சில ஷரத்துகளை ஜில்லா அதிகாரிகள் தளர்த்தி மக்களை மகிழ்விக்க செய்தனர். பல நாட்களாய் கிடைக்காத சுதந்திரம், ஒரு சுதந்திர திருநாளாகவே கொண்டாடினர், அவ்வூர் மக்கள்.
ஊரெங்கும் ஒரே தோரணம், பந்தல் மயம், புஷ்பாலங்காரம்.
1935 அக்டோபர் 27 காலை, சுவாமிகள் அவ்வூர் விஜயம், முக்கிய வீதிகளில் பட்டண பிரவேசம், பன்னிரண்டு இடங்களில் கோலாஹலமான வரவேற்பு. சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி யில் பதிலளித்து சுவாமிகள் தர்மம், பக்தி பற்றி உபதேசம் செய்தார்கள். அதன் பின், பூஜை, தீர்த்த பிரசாத விநியோகம்.
அவ்வூரில் சிறைக்கும் செய்தி பரவியது. நாட்டின் சுதந்திரத்திற்கு தங்கள் வாழ்வையே அர்ப்பணம் செய்த தேச பக்தர்கள் பலர் அச்சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் அப்போது. கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், இப்படி பற்பல தொழில் புரிவோர். அவர்கள் அனைவரும் தேச விடுதலைக்கு தங்களை ஈடுபடுத்திக்கொண்டவர்கள். அவர்களில் சிலருக்கு சுவாமிகளை தரிசிக்க வேண்டும் என்னும் பேரவா.
சிறை அதிகாரி ஓர் ஆங்கிலேயர். அவரிடம் தங்கள் எண்ணத்தை விண்ணப்பித்தனர். அவருக்கும் தெரிந்திருந்தது, மதத்தலைவர் ஒருவர் அவ்வூர் விஜயம் செய்திருந்தது. அக்கைதிகளின் மத உணர்ச்சியை மதித்து சில நிபந்தனைகள் பேரில், அவர்களை அவ்வதிகாரி வெளியில் சென்று வர அனுமதித்தார். கூட்டு கிளிகள் வெளியேறியவுடன் பறந்து விடாமால் இருக்க, அவர்களை கண்காணிக்க கையில் துப்பாக்கி ஏந்திய காவல் வீரர்கள் அவர்களை தொடர்ந்து வந்தனர். மாலை ஆறு மணிக்குள் சிறைக்குள் திரும்ப வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு இளைஞர்களான சில காவல் கைதிகள் சுவாமிகள் முகாம் வந்து சேர்ந்தனர்.
மாலை மணி ஐந்தரை, சிறிது போதுக்கு முன் தான், சுவாமிகள் ஒரு தனிமையான இடத்துக்கு நித்திய பூஜை முடிந்து சற்றே ஓய்வெடுக்க சென்றிந்தார்கள். அச்சமயம் சுவாமிகளுக்கு சிரமம் கொடுக்க மடத்தின் அதிகாரிகள் விரும்பவில்லை. ஆயினும் எதிர்பார்த்திருந்தனர். அதுவரை காத்திருக்கும் படி, கைதிகளிடம் காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆறுமணிக்குள் சிறை திரும்ப வேண்டும், இல்லையெனில் பிரத்யேக தண்டனை கிடைக்கும் என்று கூறி, மிகுந்த ஏமாற்றத்துடன் சிறை நோக்கி திரும்பினர்.
சில நிமிடங்களில் சுவாமிகள் தாமாகவே, வெளியில் வந்தார். மடத்தின் அதிகாரி, சற்று முன் கைதிகள் தரிசனத்துக்கு வந்த விஷயமும், சற்று முன் தான் திரும்பினர் என்றும், சிறிது தூரம் தான் சென்றிருப்பார்கள் என்றும் தெரிவித்தார். சுவாமிகள் உடனே அவர்களை திரும்ப அழைத்து வரும்படி ஆள் அனுப்பினார்.
அவர்கள் வந்தவுடன்,சுவாமிகளை வணங்கி, நாடு சுதந்திரம் அடைந்து மக்கள் யாவரும் துன்பம் நீங்கியவர்களாகி இன்பமுற வாழ வேண்டும் என சுவாமிகள் அனுக்கிரகம் புரிய வேண்டும் எனவும் அதுவே அவர்கள் கோரிக்கை என்று கூறி சுவாமிகளை வணங்கி விரைவில் சிறை திரும்பினர், சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்ற மகிழ்ச்சியுடன்.
சுவாமிகள் அந்த கைதிகளின் தேச பக்தியை கண்டு மிகவும் மகிழ்ச்சியுற்றார்கள்.
இப்போது சொல்லுங்கள் பக்த அன்பர்களே -
நமஸ்காரங்கள் யாருக்கெல்லாம்?
ஐயனுக்கு, தன்னலம் கருதா அந்த தியாகிகளுக்கு, அந்த ஆங்கிலேயே அதிகாரிக்கு, அவ்வூர் மக்களுக்கு, இன்றும் இச்சரிதம் பரப்பி கம்பீரமாய் நிற்கும் அந்த சிறைக்கு…
இல்லையா?
இன்னொரு சம்பவம். ஓரிரு நாட்கள் முன்னர் ஸ்ரீ கணேச சர்மா அவர்கள் சங்கரா தொலைகாட்சியில் அருளிய உரை…
மிட்னாப்பூர் பெரியவா
மிட்னாப்பூரில் ஒரு துறவி பெரியவாளை தரிசித்தார். மறு தரிசனம் எப்போது என்று அந்த துறவி உள்ளம் உருகி கேட்ட பொழுது, தக்ஷண தேசத்தில் இன்னும் பதினைந்து வருஷங்கள் கழித்து வந்து என்னைப் பார் என்றது அந்த பரம்பொருள்.
அந்த துறவியும் ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டே இருந்தார்…எப்பொழுது பதினைந்து வருஷங்கள் முடியும் என்று…
அந்த நாளும் வந்தது…
விழுப்புரம் அருகில், முகாம். அன்று ஐயன் வடவாம்பலம் சென்றிருந்தார். இந்த துறவி வந்து ஐயனைக் காணாது தாம் தூம் என்று குதித்து, என்னை வரச் சொல்லிவிட்டு இங்கே இல்லை என்றால் எப்படி…நான் போகிறேன்…என்று குதி குதி என்று குதித்தார்.
ஐயனுக்கு பணிவிடை செய்யும் அன்பர் ஒருவர், நீங்கள் துறவி, சற்று காத்திருங்கள். இதோ, இப்போது வந்து விடுவார். நீங்கள் கோபம் காட்டலாமா என்று கூறி இருக்கிறார். நீங்கள் என்ன கொக்கா? என்றும் விசனப் பட்டிருக்கிறார்.
இதற்கு இடையே, ஐயன் வெகு வேகமாக வேகு வேகு என்று வயல் வரப்புகள், கரும்புக் காடுகள் வழியாக மிக வேகமாக நடந்து வந்து முகாம் அடைந்தார்.
அந்த துறவிக்கு அத்தனை சந்தோஷம். எங்கேயோ, எப்போதோ, கொடுத்த வாக்கை காப்பாற்ற இன்று இத்தனை சிரமப்பட்டுக் கொண்டு வந்து தனக்கு தரிசனம் கொடுக்கும் மஹா பிரபுவிடம் தர்சனம் பெற்று திரும்பப் போகிறார்.
எந்த அடியார் சற்று முன் இந்த மிட்னாப்பூர் துறவியிடம் கோபம் கொண்டாரோ, அவரையே அழைத்து, ஐயன், ‘நீ இவருக்கு வழியிலே ஏதாவது வயித்துக்கு வாங்கிக் கொடுத்து, சேந்தனூர் ரயிலடியிலே வண்டி ஏத்தி விட்டுடு’ என்று கூறி அனுப்பி வைத்தார்.
வழியில் அந்த மிட்னாப்பூர் துறவி கேட்டார், நம் அடியாரிடம்…
‘நீ யாருக்கு கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கே தெரியுமா? மத்தவாளுக்கு எல்லாம் அவ்வளவு சுலபமா கிடைக்காத பாக்கியம். நீ பக்கத்தில் இருந்து கைங்கர்யம் பண்றே. நான் பதினைந்து வருஷம் கழிச்சு இந்த தர்சனதுக்கு ஏங்கி இன்னிக்கு கிடைச்சுது.
நீ கைங்கர்யம் பண்றது அந்த பரமேஸ்வரனுக்கே தான்.’

Source : Magazine



[/h]
 
ஸ்ரார்த்தம்:- ஸ்ரீகாஞ்சிகாமகோடி ஜகத் குரு
=============================<wbr>===

பெரியவா, இந்த காலத்திலேயும் இந்த திதி, ஸ்ரார்த்தம் இதெல்லாம் சரியா வருமா? – என்றார் அன்பர்.

ஒன் புள்ளே வெளியூர்ல ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறானே, அவனுக்கு மாசாமாசம் அரிசி, மளிகை எல்லாம் நீ கொண்டுபோய் கொடுத்துட்டு வரியோ? என்றது 'அது'.

இல்லே பெரியவா.

அப்போ, நேரா போய், பணத்தை கொடுத்துட்டு வந்திடுவியோ?

இல்லே பெரியவா, இப்போ மணி ஆர்டர்ன்னு ஒன்னு வந்திருக்கே அதிலே அனுப்பிச்சிடுவேன்.

ஓ, அப்டியா, அப்டினா என்ன?

அதுக்கு போஸ்ட் ஆபிஸ்ல ஒரு பாரம் கொஞ்சம் காசு கொடுத்து வாங்கி, விவரங்கள் எல்லாம் பூர்த்தி பண்ணி, கொஞ்சம் கமிஷனோட கொடுத்தா, எம் புள்ளை படிக்கிற ஹாஸ்டல்ல அவாளே கொண்டு கொடுத்திடுவா.

ஒ, அப்டி எல்லாம் வந்துடுத்தா என்ன? எப்படி? நீ கொடுக்கற அதே ரூபா நோட்டை அவா அங்கே கொண்டு கொடுப்பாளா என்ன?

இதெல்லாம் இன்னும் தெரியாமல் இருக்காளே பெரியவா என்று நினைத்து தொடர்ந்தார் அவ்வன்பர்.

இல்லே பெரியவா, நாம்ப என்ன இங்கே கொடுக்கறமோ, அதே மதிப்புக்கு பணம் அங்கே கொடுப்பா.

சில சமயம் 100 ரூபாயா 5 கொடுப்பேன், சில சமயம் 50 ரூபாயா 10 கொடுப்பேன். அங்கே 500 ரூபா கொடுத்திடுவா.

அப்டியா? ஏண்டா? ஒரு போஸ்ட் ஆபிஸ்ல, முகம் தெரியாத ஒத்தர் கிட்ட நம்பிக்கை வெச்சு ஒரு பாரம் பூர்த்தி பண்ணி நீ கொடுக்கற பணம், தூர தேசத்திலே இருக்கற ஒன் புள்ளை கிட்ட போறதே,

அதே மாதிரி, விச்வே தேவன் உள்பட்ட அதிகாரிகள் வழியா நம் ரிஷிகள் வகுத்து கொடுத்த மந்திரங்கள் மூலமா நாம்ப ஸ்ரத்தையா கொடுக்கற இந்த வஸ்துக்களும் ஏன் பித்ரு லோகத்திலே இருக்கற உன் பித்ருக்களுக்கு போக கூடாது?

நிச்சயமா போகும்டா, ஸ்ரத்தையா பண்றது தான் ஸ்ரார்த்தம்.

நம்பிக்கை, நம்பிக்கை தாண்டா பிரதானம்.

ஒங்க பித்ருக்கள் ஆசிர்வாதம், க்ஷேமமா இருப்பே நீ என்று விடை கொடுத்தது அந்த புனிதம்.
 
Excerpts from Maha Periyavaa's Baashaanam

தபஸ் என்பது ஆழ்ந்த தியானம். ''நான் யார்'' புரிந்துகொள்கிற விஷயம். இதற்கு டிவிஇருக்கும் ஹால், விடியோ இருக்கும் படுக்கைஅறை, நாலுபேர் கூடிப்பேசும் இடம் ஒத்துவராது. தனிமை வேண்டும். தனிமை என்றபோது உடல் மட்டும் தனித்து ஒருஇடத்தில் பொருந்திஇருப்பதல்ல. மனமும் கூடவே சேர்ந்து தனியாக இருக்கவேண்டும். தனியாக என்றால், வேறுஎந்த எண்ணத்தின்சேர்க்கையும்இன்றி எனபுரிந்துகொள்ளவேண்டும்.உள்ளே சூடு தஹிக்கவேண்டும். வெயில்மழை,காற்று,பனி,குளிர் எதுவும் உன்னைபாதிக்காத மனோநிலை. மனசு உள்ளுக்குள்ளே புகுந்து அலசுவது.எண்ணங்களை தொலைப்பது. ஒன்றையே பற்றிக்கொண்டு அதையே திரும்ப திரும்ப மனதில்நிறுத்திமனத்தின்நாட்டம் அங்கேஇங்கே நகராமல்ஏகாக்ரமாகஒன்றிலேயே நிலைத்துஇருக்க செய்யும்படிபழக்கப்படுத்துவதுதான் தபஸ்.அது கடும் வலி, துன்பம் (ரிக் வேதத்தில் அப்படித்தான்சொல்லியிருக்கிறது) என்று எண்ணாமல் அதைபொறுத்து ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கிட்டவேண்டும். பஞ்ச இந்திரியங்களையும் ஆளுமைக்குகொண்டுவரவேண்டும். அதுசொல்லி நாம் கேட்பதல்ல. நாம் சொல்லி அது கேட்பது.



ஓஜஸ் என்பது உள்ளொளி. பிராணனை பலப்படுத்துவது. தேஜஸ் என்பது அதனால் விகசிக்கும் வெளிப்பாடு.வெளியே பிரகாசிக்கும் ஒளி. பிராணன், ஓஜஸ், தேஜஸ் மூன்றுமே பித்த,வாத, கபகட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது. அதை அடைந்தவன்தபஸ்வி , பெண்ணாயிருந்தால் தபஸ்வினி.



மகாயோகிகள்,ரிஷிகள், முனிபுங்கவர்கள், மகான்கள், அன்றும் இன்றும் மேலேசொன்னதெல்லாம் அடைந்த பரமபுருஷர்கள்.



நீ ஏதோ ரொம்ப அப்படிதபஸ்நிலையை அடைந்துவிட்டாயாஎன்றால் இல்லைஎன்றுநீங்கள் கேள்விகேட்குமுன்பே சொல்லக்கடமைப்பட்டிருக்கிறேன். இது ஷாக் அடிக்கும் தொடாதேஎன்று ஒரு எலெக்ட்ரிக்கம்பியைப்பற்றிசொல்லும்போது நீதொட்டிருக்கிறாயா, ஷாக் வாங்கினாயா என்றுகேட்பதுபோல் இது ஆகும். அவ்வளவு அதிக பட்சஷாக் வாங்கியிருந்தால் அடுத்தவனுக்குச்சொல்லநான் இருந்திருப்பேனா? தபஸ் பண்ணி மனதை நிலைநிறுத்த நினைத்தநேரத்தில் மனத்தை அடக்கி ஆளக்கூடிய சக்தி அடைந்திருந்தால் உங்களுக்கு மெயில் அனுப்பிக்கொண்டிருப்பேனா? பின் எதற்காக இதெல்லாம் என்றால், தொடர்ந்து அதைப்பழகவேண்டும்என்ற ஈர்ப்புஇருக்கவேண்டும் உங்களுக்குமட்டும் அல்ல எனக்கும் என்ற ஒட்டுமொத்த ஆசையினாலேயே.நாம் என்ன செய்யலாம். பேச்சை குறைக்கலாம். நான் நாங்கள்,என்னுடையது,எங்களது, -- இதைகொஞ்சம்கொஞ்சமாக குறைக்கலாம்.எதை உண்டாலும்குடித்தாலும் மனத்திற்குல்லேயாவது கிருஷ்ணா, ராமா, கணேசா, முருகா........ இது உன்னாலே கிடைத்தது,உனக்கே அர்ப்பணம்என்றுஒருசெகண்ட்நினைத்துவிட்டு சாப்பிடலாம். உணவில்ருசியில்,கேளிக்கையில் பிறருடன் வம்புபேச்சில், மற்றவரைப்பற்றிபேசவோ,கேட்பதையோ, குறைக்கலாம். நல்ல விஷயங்களில் நாட்டம்.புறசுத்தத்தோடு அகம் சுத்தமாக கொஞ்சம்கொஞ்சமாக பழகுவது. தூக்கத்தைகுறைத்து கொள்வது.எப்பவும் சொல்கிற பொய்களில் சிலவற்றை வெட்டிவிடுவது.விடியற்காலை எழுந்துவெளியே வந்து இயற்கையை ரசித்து, அதைஎல்லாம் அற்புதமாகநமக்கு ஆனந்திக்க அளித்த கண்ணில் படாத அந்த இறைவனை மனதார வாழ்த்துவது , சத்சங்கத்தில் ஈடுபடுவது இதையெல்லாம் ஆரம்பித்து எல்கேஜீ யிலிருந்துபுறப்படுவோமே. மேலே என்னசெய்யலாம்என்பதை அப்புறம்சொல்கிறேன்.



படத்தில் காஞ்சி தெய்வம் தவம் செய்வதையாரோபடமெடுத்து அனுப்பியிருக்கிறார்கள். இந்த தவக்கோலஅபூர்வ படத்தை நான் இதுவரை கண்டு கழித்ததில்லை.அந்த பாக்கியம் ரெண்டுநாள் முன்பு தான் கிடைத்தது. அதைப்பார்த்ததும் உங்களுக்கும்அதைஅனுப்பி அந்த பேரின்ப அனுபவம் நீங்களும் பெறவேண்டும் என்றஆசை உந்தித்தள்ளஇதைஅனுப்புகிறேன்








[TABLE="align: center"]
[TR]
[TD][/TD]
[/TR]
[/TABLE]
 
Maha Periava:::::: வேதங்களின் முக்கிய தாத்பர்யம்

[SIZE=+0] [/SIZE]
[SIZE=+0]சர்க்காரில் அநேக சட்டம் பண்ணுகிறார்கள். ஆனால் அந்தச் சட்டங்களின் அபிப்ராயங்களைப் பற்றியே சில சமயங்களில் சிக்கல்கள் வந்து விடுகின்றன. அப்போது சட்டத்துக்கு வியாக்கியானம் இப்படித்தான் என்று இன்னொரு சட்டம் வகுத்து, அதன் மூலம் நிர்ணயம் செய்கிறார்கள். இதை Law of interpretation என்கிறார்கள். இப்படியே ஈச்வரனின் நிரந்தரச் சட்டமான (Eternal Law - ஆன) வேதங்களின் தாத்பர்யத்தை நிர்ணயம் செய்ய, மீமாம்ஸை என்ற சாஸ்திரம் வியாக்கியான சட்டமாக ( Law of Interpretation -ஆக) இருக்கிறது. பதினான்கு வித்யாஸ்தானங்களில் ஒன்றான மீமாம்ஸையைப் பற்றி மற்ற விஷயங்கள் பின்னால் சொல்லுகிறேன். இப்போது ஒரு ஸமாசாரத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். [/SIZE]

[SIZE=+0]வேத வாக்கியம் ஒன்றுக்கு இன்னதுதான் அர்த்தம் என்று நிர்ணயம் பண்ணுவதற்கு, மீமாம்ஸா சாஸ்திரத்தில் ஆறு வழிகள் சொல்லியிருக்கின்றன. அந்த ஆறு, உபக்ரம- உபஸம்ஹாரௌ அப்யாஸ: அபூர்வதா பலம்| [/SIZE]
[SIZE=+0]அர்த்தவாத உபபத்தீ ச லிங்கம் தாத்பர்ய நிர்ணயே|| [/SIZE]
[SIZE=+0]என்று சொல்லியிருக்கிறது. [/SIZE]
[SIZE=+0]உபக்ரம - உபஸம்ஹாரம், அப்யாஸம், அபூர்வதா, பலம், அர்த்தவாதம், உபபத்தி என்பனவே இந்த ஆறு. வேதம் மட்டுமின்றி, எந்த ஒரு கட்டுரை அல்லது பிரவசனத்துக்கும் உத்தேசம் என்ன என்று கண்டுபிடிக்க இந்த ஆறும் உதவி செய்கின்றன. [/SIZE]
[SIZE=+0]உபக்ரமம் என்றால் ஆரம்பம். உபஸம்ஹாரம் என்றால் முடிவு. ஆரம்பத்தையும் முடிவையும் சேர்த்து ஒன்றாகப் பார்ப்பது உபக்ரம-உபஸம்ஹாரம் என்ற முதல் வழி. இரண்டும் ஒன்றையே சொல்வதாக இருந்தால், அதுவே தாத்பர்யம் என்று நிர்ணயம் பண்ணி விடலாம். அப்யாஸம் என்றால் திரும்பத் திரும்பச் சொல்லப்படுவது. திரும்பத் திரும்பத் தண்டால் போடுவதால் அதை தேகாப்யாஸம் என்கிறோம். ஒரு பிரஸங்கத்தில் அல்லது வியாஸத்தில் ஒரு விஷயம் பலமுறை திருப்பிச் சொல்லப்பட்டால் அதுதான் அதற்கு விஷயம் என்று தெரிகிறது. அபூர்வதா என்றால், பூர்வத்த்தில் சொல்லாமல் புதிதாகச் சொல்வது. ஏற்கெனவே சொன்னதை அல்லது எழுதினதைக் காட்டிலும், புதிதாக ஒரு விஷயத்தைக் கொடுத்தால், இதுவே தாத்பர்யம் என்று தெரிகிறது. இப்படிச் செய்தால் இந்தப் பலன் கிடைக்கும் என்று சொன்னால், இப்படிச் செய்து இந்தப் பலனை அடை என்று சொல்வதாகவே ஆகும். அதாவது இந்தப் பலனை அடைவிப்பதுதான் உத்தேசம் என்று தெரிகிறது. பலம் என்பது இதுவே. அநேக ஸமாசாரங்களைச் சொல்லி, அவற்றைத் தழுவியதாக ஒரு கதை சொல்லி, அதன் மூலம் ஒரு விஷயத்தை பெருமைப்படுத்தினால், பெருமைப்படுத்தப் படுகிற விஷயமே நமக்கு தாத்பரியம் என்று தெரிகிறது. இதுதான் 'அர்த்தவாதம்' என்பது. ஒன்றைச் சொல்லி அதற்குக் காரண நிரூபணம், பொருத்தம் முதலியன விளக்கப்பட்டிருந்தால், அந்த விஷயந்தான் முக்யமான கருத்து என்று ஏற்படுகிறது. இந்த முறைக்கு 'உபபத்தி' என்று பெயர். [/SIZE]
[SIZE=+0]இப்படித்தான், வேதத்தின் ஆரம்பத்தையும் முடிவையும் பார்த்துவிட்டுவந்த ஒருத்தர். என்னிடம் சொன்னார்:'வேதம் சொல்லவந்த முக்ய ஸமாசாரம் என்னவென்றால் Fire Worship (அக்னி உபாஸனை) தான். வேதம் உபக்ரமத்தில், அதாவது ஆரம்பிக்கும்போது 'அக்னிமீளே' என்று சொல்கிறது. கடைசியில் உபஸம்ஹாரம் பண்ணி முடிக்கிறபோது அக்னி என்றே முடிகிறது. கடைசியில் உபஸம்ஹாரம் பண்ணி முடிக்கிறபோது அக்னி என்றே முடிகிறது. ஆரம்பம், முடிவு இரண்டும் அக்னிதான். ஆனபடியால், வேதத்தின் தாத்பர்யம், gist (ஸாரம்) fire worship தான் என்று அவர் சொன்னார். [/SIZE]
[SIZE=+0]இதிலேயும் ஒரு உண்மை இருக்கிறது. அக்னி இருப்பது ஆத்ம சைதன்யம்தான்; அறிவொளிதான். அறிகிறவனாகவும் அறியப்படுவதாகவும், அறிவாகவும் இருக்கிற ஒரே ஆத்ம சைதன்யம்தான் வேதத்தின் பரம தாத்பரியம். [/SIZE]
[SIZE=+0]ஆனால் வார்த்தைப்படி (literal -ஆக) எடுத்துக் கொண்டு, அக்னி உபாஸனைதான் தாத்பர்யம் என்றால் சரியில்லை. ஏதோ ஒரு தேவதா உபாஸனைதான் பெரிசு என்று சொல்லாததுதான் வேதத்தின் பெருமை. எல்லா தேவதைகளாகவும் இருக்கிற ஆத்மாவையே பிரியமானதாக உபாஸிக்க வேண்டும் என்றுதான் வேதம் (பிருஹதாரண்யகம் 1.4.8.) சொல்கிறது. "ஆத்மாவே பார்க்கப்பட வேண்டும். ஆத்மாவே கேட்கப்படவேண்டும். ஆத்மாவே மனனம் செய்யப்பட்ட வேண்டும். ஆத்மாவே அநுபவித்து அறியப்பட வேணடும். அதனாலேயே எல்லாம் அறியப்பட்டதாகும்"என்றுதான் யாக்ஞவல்கியர் மைத்ரேயிக்குச் செய்கிற உபதேச வாயிலாக, நம் எல்லாருக்கும் வேதமானது முடிவான goal -ஐ (லக்ஷ்யத்தை) ச் சொல்கிறது. [/SIZE]

[SIZE=+0][/SIZE]
[SIZE=+0][/SIZE]


 
The Essence of Hindu Tradition & Culture and other related articles can be perused
through the website www.periva.org which has a rich treasure of information, articles
and a large collection of direct audio files of Periva's Upanyasams.

Link to download the ebook: drive.google.com/file/d/0BwuDCferB6sJb1M4ZVRQeUUtd0k/edit?usp=sharing

Part 1 of the ebook is available at:periva.proboards.com/thread/4144/ebook-supreme-scientific-secrets-ancient
Part 2 of the ebook is available at:periva.proboards.com/thread/4317/ebook-supreme-scientific-secrets-ancient
Part 3 of the ebook is available at:periva.proboards.com/thread/4619/ebook-supreme-scientific-secrets-ancient
Part 4 of the ebook is available at:periva.proboards.com/thread/4785/ebook-supreme-scientific-secrets-ancient
Part 5 of the ebook is available at:periva.proboards.com/thread/4988/ebook-supreme-scientific-secrets-ancient

One can also visit the website for further information.
Ebook # 19: Supreme Scientific Secrets from Ancient India-6 | Kanchi Periva Forum
 



பரமேஸ்வரனும் நாராயணனும் மற்றும்அந்தணனின் சிறப்பும் அவர் கடைமையும். [எஸ்.கணேச சர்மா புத்தகத்தில் இருந்து வரகூரான் நாராயணனால் தட்டச்சு செய்தது] அந்தணனுக்குத் தனிச் சிறப்பும்,முதன்மையும் எதனால் என்றால்,அவன் செய்வன எல்லாம் அவனுக்காக மட்டும் செய்யவில்லை.அவன் எல்லாக் காரியங்களுக்கும் சங்கல்பம் பண்ணும்போதே "ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்" என்றுதான் சொல்கிறான்.மனை,மக்களுக்காக நினைப்பதில்லை அது போலவே,இத்தனை கஷ்டப்பட்டு,பணம் காசு,தேகசுகம், பிரச்னைகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செய்கிறானே அதன் பலனையாவது தனக்கென்று எடுத்துக் கொள்கிறானா என்றால் அதுவுமில்லை.எல்லாவற்றையும் "நாராயணாயேதி சமர்ப்பயாமி" என்று அவன் காலடியில் போட்டு விடுகிறான். நம் முன்னோர் சொல்லி வைத்திருக்கும் இந்த ஏற்பாடே,மிக அழகு. பரமேஸ்வரப் ப்ரீத்தியாகத் தொடங்கியதை அவரிடமே கொடுக்காமல் நாராயணனுக்கு சமர்ப்பிப்பதிலேயே ஹரியும்,சிவனும் ஒன்றே என்று ஆகிவிடுகிறதில்லையா? ஒரே ஆளை, ஒருவர் அண்ணா என்றும்,வேறொருவர் அப்பா என்றும்,ஒருவர் சித்தப்பா என்றும்,ஒருவர் அத்திம்பேர் என்றும் கூப்பிடுவது போலத்தான் இதுவும். இத்தனையும் நாராயணன் காலடியில் கொண்டு கொட்டினால் அவ்வளவு பலனையும் வைத்துக்கொண்டு அவர்தான் என்ன செய்வார் என்று யோசிக்கிறீர்களா..? இந்த உலகையே பரிபாலனம் பண்ணுபவர் அவரல்லவா? ஒவ்வொருவர் வேண்டுவது அனைத்தையும் கொடுப்பதற்கு நிதி வேண்டாமா? அதனால்தான் இந்த ஏற்பாடு.எனவே,என் குடும்பம்,எனது படிப்பு,எனது வசதிகள்,என் வாழ்க்கை என்று மட்டும் எண்ணிக் கொண்டிராமல், உலக நன்மைக்காக அந்தணர் செய்வதே வேள்வி என்பதை உணர வேண்டும். அதனை ஒழுங்காகச் செய்யாவிடில்,மழை வளம் குன்றும்; எல்லாமே அழியும்.அந்தணனுக்கு வரும் சிறப்பு,அவன் உழைப்பால் வருவது.அவன் எதுவும் செய்யாமல் வேள்விப் பயனை அனுபவிப்பது என்பது ஒருவகைத் திருட்டு என்றே கொள்ள வேண்டும்.வங்கியில் எதுவும் போடாமல்,யாரோ போட்டதை எடுத்து அனுபவிப்பதுபோல்
 
[h=5]தெய்வத்தின் குரல் 19 (முதல் பாகம்)

அத்வைதம்

ஆசார்யர்களின் ஆக்ஞை

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்காதர்களின் பெயரில் வந்துள்ள பீடங்களில் இருக்கிற எங்களுக்கு, அவர் இட்டுள்ள முக்கியமான ஆக்ஞை என்னவெனில், நாங்கள் எப்பொழுதும் ஈசுவர தியானம் செய்ய வேண்டும். மற்றவர்களையும் தியானம் செய்யுமாறு பண்ண வேண்டும் என்பதே. ஈசுவர தியானம் என்பது எதற்கு. அந்த ஈசுவரன்தான் நாமாக ஆகியிருக்கிறார். அதாவது நம்முடைய நிஜ ஸ்வரூபம் அவரேதானென்று கண்டுபிடித்துக் கொள்வது. தெரியவில்லை என்றால், ஈசுவரன் என்று சகல கல்யாண குணநிலையனாக ஒருத்தனைச் சொல்கிறோமே அவனைத் தியானித்துக் கொண்டிருந்தாலே போதும். அவனும் நாமும் ஒன்று என்பதால், அவனே, நமக்கு நம்முடைய - அவனுடைய - நிஜ ஸ்வரூபத்தை அநுக்கிரகித்து விடுவான். அப்படி நாமும் அவனும் ஒன்றாகிறபோது ஸகல குணங்களும் போய் நிற்குணமாகிவிடும்.

குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புகிறோம். அவர்கள் சரியாக நடக்காவிட்டால் உபாத்தியாயர் உபயோகமில்லை என்கிறோம். அப்படியே நீங்கள் சரியாக நடக்காவிட்டால் உங்களுக்கு குரு என்று சொல்லப்படும் நான் உபயோகமில்லை என்று அர்த்தம்.

ஒருவனைக் கவனித்து நல்வழிப்படுத்துகிற பொறுப்பு இன்னொருத்தனுக்கு இருக்கும்போது, அந்த ஒருவன் தப்புச் செய்தால், அந்தத் தப்பு அவனை நல்வழுப்படுத்தாதவரையே சேறும். குடிகள் செய்யும் பாபம் அரசனைச் சேரும். மனைவியின் பாபம் கணவனைச் சேரும் என்று cF சாஸ்திரம் சொல்கிறது. சாதாரணமாக குரு என்றால் ஒரு சில சிஷ்யர்கள் இருப்பார்கள். அவர்கள் செய்கிற சிறிதளவு பாபம் குருவிடம் சேரும். ஒருவர் ஜகத்குரு என்றால் அவரிடம் எத்தனை பாபம் வந்து சேரும். உலகின் அத்தனை பாபமும் வந்து சேரும்.

பாபம் நீங்க ஒரே வழி பகவத் தியானம்தான். இதனால்தான் பகவத்பாதாள் ஜனங்களைத் தியானத்தில் ஈடுபடுத்துங்கள். அவர்கள் தியானம் செய்யாவிட்டால் அவர்களுக்காகவும் நீங்கள் சேர்த்து தியானம் பண்ணுங்கள் என்று ஆக்ஞை செய்திருக்கிறார். அந்தக் கடமையை செய்ய என்னால் முடிந்த மட்டும் பிரயத்தனம் செய்து வருகிறேன். உங்கள் எல்லோருக்காகவும் தியானம் செய்ய முயலுகிறேன். ஆனால் நீங்களும், அவரவர்களே எவ்வளவுக்கெவ்வளவு தியானம் செய்கிறீர்களோ அவ்வளவுக் கவ்வளவு என் பாரம் குறையும்.

மனசு சுத்தமாவதற்காக, பழைய பாப கர்மப் பலனைத் தாங்கிக் கொள்வதற்காக, புதிய பாபம் செய்யாமலிருப்பதற்காக, எல்லோரும் முடிந்த மட்டும் தியானம் செய்ய வேண்டும். உறுதியாக சங்கற்பம் இருந்தால் காலம் கிடைக்காமல் போகாது. அநாவஸ்ய வம்பிலும், நியூஸ் பேப்பர் விமர்ஸனத்திலும்

செலவாகிற காலத்தை மட்டுப் படுத்தினால் நித்திய சிரேசினைத் தருகிற தியானத்திற்கு வேண்டிய அவகாசம் நிச்சயம் கிடைக்கும். தியானம் செய்வதே வாழ்க்கையின் முதலான காரியம் என்று கருத வேண்டும். ஜசுவரியம் இருந்தாலும், தாரித்திரம் வந்தாலும் கஷ்டம் வந்தாலும், சுகம் ஏற்பட்டாலும், ஆரோக்யம் ஏற்பட்டாலும், வியாதி வந்தாலும் - எப்போதும் எத்தனை நாழிகை முடியுமோ அவ்வளவுக்கு தியானம் செய்ய வேண்டும்.

நாம் செய்வதோடு நம் பழக்கத்துக்கு உட்பட்டவர்களையும் தியானம் செய்யும்படி சொல்ல வேண்டும். செய்யவில்லை என்று கோபித்துக் கொள்ளக்கூடாது. அன்போடு அவர்களுக்குப் படும்படி சொல்ல வேண்டும். அன்போடு சொன்னால் எப்படிப்பட்ட மனமும் கரையும்.

தியானம் செய்யுங்கள் மற்றவர்களைச் செய்யச் சொல்லுங்கள் என்று பகவத்பாதாள் எங்களுக்கு இட்ட ஆக்ஞையைத் தெரிவித்தேன். உங்களை தியானம் பண்ணுமாறு செய்கிறோனோ இல்லையோ, தியானம் செய்யுங்கள் என்ற ஆதி ஆச்சாரியாளின் ஆக்ஞையைத் தெரிவித்த அளவுக்காவது என் கடமையைச் செய்தவனாகிறேன். அதைச் சொல்லும் பாக்கியம் எனக்கு உங்களால் கிடைத்தது. ஸ்ரீ ஆச்சாரியாள் எதைச் சொல்ல ஆக்ஞைச் செய்தாரோ அதைக் கேட்கும் பாக்கியம் உங்களுக்குக் கிடைக்கிறது. உங்களால் என் கடமையில் ஒரு பங்கேனும் செய்த லாபத்தை அடைந்தேன். நீங்களும் ஆத்ம லாபத்துக்காக உபாயத்தைக் கேட்டுக் கொண்டீர்கள்.நமக்குள் பரஸ்பர லாபம் உண்டாயிற்று.

இதை நன்றாக மனஸில் வாங்கிக் கொண்டு பூரண லாபத்தைப் பெறுங்கள். இந்த ஜன்மா முடிகிறபோது, அப்பாடா, பிறவி எடுத்ததின் பலனை அடைந்து விட்டோம். இனி பயமில்லாமல் போய்ச் சேரலாம் என்று உறுதியும் திருப்தியும் பெறுகிற அளவுக்கு நல்ல மார்க்கத்தில் நாம் செல்லப் பரமேசுவரனின் எல்லோருக்கும் பூரண அனுக்கிரஹம் புரிவானாக.

மனம் கெட்டுப்போய் எவ்வளவோ பாபம் செய்திருக்கிறோம். குழந்தையாக இருந்ததிலிருந்து ஈசுவர தியானம் செய்திருந்தால் இவ்வளவு நாள் எவ்வளவோ பாபம் போயிருக்கும். இப்பொழுதோ மேலேயும் பாபத்தைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம். எத்தனை நாட்கள் ஈசுவர சரணாரவிந்த தியானம் செய்கிறோமோ அவ்வளவு நாட்களும் நம்முடைய பிறவிப் பயனை நாம் அனுபவித்தவர்களாகின்றோம். இந்த ஜன்மத்தை எடுத்ததற்குப் பலன் அதுதான். நாம் எவ்வளவு நாழிகை தியானம் பண்ணுகிறோம் என்று அவரவரும் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். தினந்தோறும் பல காரியங்களைச் செய்து வருகிறோம். ஆனாலும் ஈசுவரத் தியானம் மிகவும் கொஞ்சந்தான் செய்திருப்போம். வம்பு, வீணில் செலவான காலமெல்லாம் ஈசுவரத் தியானத்தில் செலவழித்திருப்போமானால் இப்பொழுது மூட்டை வரவர ஏறிக்கொண்டே இருக்கிறது. நாம் பூலோகத்தில் வந்துவிட்டோம். இனி யாராக இருந்தாலும் போயாக வேண்டும். இதுவரை இந்த லோகமானது அழுக்கை ஏற்றிக் கொள்வதற்கே இடமாக இந்த லோகமானது அழுக்கை ஏற்றிக் கொள்வதற்கே இடமாக இருந்துவிட்டது. இப்படியிருந்தது போதும். இனிமேல் இது அழுக்கை அலம்புகிற இடம் என்று ஆக்கிக் கொள்வோம். தேஹம், மனசு, சாஸ்திரம்,

க்ஷேத்திரம், தீர்த்தம் முதலிய பல சௌகரியங்கள் இந்த உலகில்தான் இருக்கின்றன. நாம் வாக்கினாலும் மனத்தினாலும் கைகால் முதலியவற்றாலும் பாபம் செய்து இருக்கிறோம். அந்தப் பாபங்களையெல்லாம் வாக்கையும், மனசையும், அவயங்களையும் கொண்டே புண்ணியம் செய்து கரைத்துவிட்ட வேண்டும். நாம் இந்த உலகை விட்டுப் போவதற்குப் பாப மூட்டை இல்லை என்று சொல்லும்படி செய்து கொண்டால், அப்புறம் பஞ்சைப்போல் ஆனந்தமாகப் பறந்து போகலாம். எங்கிருந்து புறப்பட்டோமா அங்கேயே போய்ச் சேர்த்துவிடலாம். அப்புறம் மாறாத ஆனந்தமாகவே இருக்கலாம். பாபிகளையும் பரமாத்மாவாக்குகிறவர் என்று கன்னட பாஷையில் நம் ஆசார்யார்களைப் பற்றி ஒரு வசனம் இருக்கிறது. துராத்மா என்று நாம் சொல்கிறவனும் அந்தப் பரமாத்மாவைப் தவிர வேறில்லை என்று சொல்லி அந்த நிலையை இவன் அடைவதற்கு ஆசார்யாள் படிகட்டுப் போட்டுக் கொடுத்திருக்கிறார். இது கர்மத்தில் ஆரம்பித்து பக்தி வழியாகச் சென்று ஞானத்தில் முடிகிறது.
[/h]
 
Pranams

Would like to share this mail received from one of my friends :

Courtesy: Sri.Mayavaram guru

சீர்திருத்தத்தலைவர்களுக்கு பெப்பே காட்டும் அதை பின்பற்றும் ஃபாலோயர்கள் - மஹா பெரியவா


ரிஃபார்ம், ரிஃபார்ம் என்று சொல்வதெல்லாம் கடைசியில் அவரவரும் மனஸ் போனபடி, ஒரு டிஸிப்ளினும் இல்லாமலிருக்கலாம் என்று அவிழ்த்து விடுவதில்தான் முடிந்திருக்கிறது. ரிஃபார்ம்களை ஆரம்பித்துவைத்திருக்கிற எல்லா லீடர்களையும் ஒழுங்கு தப்பினவர்கள் என்று சொல்வதற்கில்லைதான். சாஸ்த்ர, ஸம்ப்ரதாய விதிகளாகிற ஒழுங்குகளில் பலதை இவர்களும் விட்டவர்கள்தான் என்பதால் இவர்களை ஸநாதன தர்ம பீடங்களான மட ஸ்தாபனங்களிலிருக்கிற நாங்கள் ஒப்புக் கொள்ளத்தான் இல்லை. என்றாலும் இவர்கள் personal life -ல் (தனி வாழ்க்கையில்) ஸத்யம், நேர்மை, ஒழுக்கம், த்யாகம், அன்பு போன்ற பலவற்றைக் கடைப்பிடித்தவர்கள் என்பதை ஆக்ஷேபிப்பதற்கில்லை.

ஓரளவுக்குப் படிப்பு, விஷயஞானம் எல்லாம் உள்ளவர்களாகவும், ஜனங்களை நல்லதில் கொண்டு போகவேண்டும் என்பதில் நிஜமான அக்கரை கொண்டவர்களாகவுமே இந்தச் சீர்திருத்தத் தலைவர்களில் பலர் இருந்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். ஆனாலும் இவர்கள் பண்ணுகிற பெரிய தப்பு என்னவென்றால் தங்கள் புத்திக்கு ஸரியாகத் தோன்றுவது தான் ஸரி, பாக்கி எல்லாம் தப்பு என்று நினைப்பதுதான். தாங்கள் சுத்தர்கள்தான், விஷயம் தெரியாதவர்கள்தான் என்றாலும் தர்ம சாஸ்திரங்களை வேத வழிப்பிரகாரம் பணணிவைத்த ரிஷிகளும், மநு முதலிய பெரியவர்களும் தங்களைவிடவும் எவ்வளவோ சுத்தர்கள், எவ்வளவோ விஷயம் தெரிந்தவர்கள் என்று உணர்கிற மரியாதை இவர்களுக்கு இல்லை.

இன்னொன்று, 'அத்ருஷ்ட பலன்' என்பதாக சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறதை நம்பாமல் வெள்ளைக்காரர்கள் எண்ணப்போக்குப்படி இவர்களும் practial result என்று உடனுக்குடனே லோகத்தில் வெளிப்படையாகத் தெரியும் பலன்களை மட்டுமே கருதிக் கார்யம் செய்வதுதான். யதார்த்தத்துக்கு மேல், யதார்த்தத்துக்குப் பிடிபடாத தெய்வ சக்தி ஒன்று இருக்கிறது. அது அப்போதைக்கப்போது கண்ணுக்குத் தெரியும்படியாக மட்டும் ரிஸல்டைக் காட்டிவிடுவதில்லை. நம் கார்யங்கள், எண்ணங்கள் இவற்றின் பலன் உடனே இங்கேயே தெரியாமல், ஏதோ காலத்தில், ஏதோ ஜன்மாந்தரத்தில், ஏதோ லோகாந்தரத்தில்கூட விளையும் படியாகத்தான் விஸ்தாரமான அளவிலே லீலை பண்ணிக் கொண்சிருக்கிறது. இப்படி உடனுக்குடனே பலன் தெரியாமல் எப்போதோ விளைய இருப்பதைத்தான் 'அத்ருஷ்ட பலன்' என்பது. இதிலே இந்த ரிஃபார்மர்களுக்கு அநேகமாக நம்பிக்கையே கிடையாது.

அவர்களுடைய படிப்பு, பார்வை எல்லாம் வெள்ளைக்காரர்களின் வழியிலேதான் இருக்கிறது. அதனால்தான் லோகத்தில் அநேக வித்யாஸங்கள் இருப்பதெல்லாம் ஜன்மாந்த்ர கர்மாப்படி அவரவரும் ஆத்மாபிவிருத்தி அடைவதற்காக எற்பட்டது என்பதை ஒப்புக்கொள்ளாமல், ஸமத்வம், அபேதவாதம் என்று எதையோ சொல்லிக்கொண்டு எல்லாவற்றையும் பலபட்டையாகப் போட்டுக் குழப்ப வேண்டும் என்கிறார்கள்.

இப்படியே லோகாந்தரங்களிலும் அத்ருஷ்ட பலன்ஏற்படுவதைப் புரிந்து கொள்ளாததால்ஸ தேவதைகளுக்கான யஜ்ஞாதி கர்மாக்கள், பித்ருக்களுக்கான திவஸ தர்ப்பணாதிகள் ஆகியவற்றை வீண்கார்யம், ஸ¨பர்ஸ்டிஷன் என்று கேலி செய்கிறார்கள். லோகந்த்ர, ஜன்மாந்தரங்களில் பலனைத் தருபவனாக ஈஸ்வரனொருவன் இருக்கிறானென்பதை மறந்து, தாங்களே அதிகாரி, தாங்களே கர்த்தா என்று நினைத்துக்கொண்டு, இவர்கள் விரும்புகிற சீர்திருத்தம் முன்னேற்றம் எல்லாம் தங்கள் வாழ்நாளிலேயே நடந்து பார்த்தாக வேண்டும் - ''In my life time '' - என்கிறார்கள்.

இவர்களில் சிலர் கொஞ்சம்கூட அடக்கமில்லாமலிருக்கும்போது '' தம்ப-மான-மதான்விதா :'' என்று (கீதையில்) சொல்லியிருப்பதுபோலத் தாங்களே எதையும் ஸாதித்துவிட முடியும் என்று தற்பெருமையில் மதம்பிடித்து டம்பபாகத் திட்டங்களை போட்டு, 'லோகத்தையே மாற்றிவிடப் போகிறேனாக்கும்'என்று கிளம்புகிறார்கள். இவர்களைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல பகவான்.

'' இதமத்ய மயா லப்தம் இமம் ப்ராப்ஸ்யே மநோரத ம் '' -

''இன்றைக்கு இதை ஸாதித்து விட்டேனாக்கும். இன்னமும் பெரிசாக நாளைக்கு ஸாதிப்பேன்'' என்று வெறும் லௌகிகமாகவே எதெதையோ பண்ணிப் பூரித்துப் போகிறார்கள் என்கிறார். இப்படியெல்லாம் செய்கிறவர்களிடத்தில் சாஸ்திரப்படி சொல்லப்படும் சௌசம் (தூய்மை, மடி-விழுப்பு பார்ப்பது) இருக்காது, எந்த ஆசாரமுமே இருக்காது:'' ந சௌசம் ந அபி ச (ஆ) சார :''என்கிறார்.

உபநிஷத்திலும், '' ஸ்வயம் தீரா : பண்டிதம் மன்ய மானா :''என்று ''நானே மஹா புத்திசாலி, மஹா பண்டிதன்'' என்று பரலோக விஷயங்களைப் புரிந்து கொள்ளாமல் கிளம்புகிறவர்களையும், அவர்களை வழிகாட்டியாகக் கொண்டு பின்னே போகிறவர்களையும் சொல்லி, இவர்கள் எல்லாரும் குருடர்களால் வழிகாட்டப்பட்ட குருடர்கள் மாதிரி சுற்றிச் சுற்றித் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறது.

ரிஃபார்ம் லீடர்களுக்கும் ஃபாலோயர்களுக்கும் (அவர்களைப் பின்பற்றுவோருக்கும்) இடையே ஒரு வித்யாஸம். இதைக் கொஞ்சம் பார்க்கலாம்.

இந்த நாளில் மதம் விதிக்கிற சீலங்கள் (religious virutes) மத ஸம்பந்தமில்லாத வெறும் ethical excellences (நன்னெறிப் பண்புகள்) என்று ஒரு விசித்ரமான பாகுபாடு பண்ணுவது வழக்கமாயிருக்கிறது. மத ஸம்பந்தம் அதாவது ஈஸ்வரப் பிரேரணையான (மத) சாஸ்திர ஸம்பந்தம் என்பது இல்லாமல் நன்னெறி, ethics,morality என்று எதுவுமே இல்லை. ஆனாலும் இப்படி 'சாஸ்திரம்' என்று பூர்விகக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்கிறோம் என்றால் அது இந்தக் காலத்தவருக்கு அவமானமாக, தங்கள் கௌரவத்தைக் குறைத்துக் கொள்வதாக இருக்கிறது. சாஸ்திரங்களில் கண்ணுக்குத் தெரியாத 'அத்ருஷ்ட'தத்வங்களை base பண்ணியே அநேக தர்மங்களையும், அந்த தர்மங்களை நடைமுறையில் காட்டுவதற்கான கர்மங்களையும் சொல்லியிருப்பதெல்லாம் 'ஸுபர்ஸ்டிஷன்' என்று மேல்நாட்டுக்காரர்கள் சொல்வதால் இதையெல்லாம் நாம் ஏன் அநுஸரிக்க வேண்டும் என்று அவமானமாயிருக்கிறது. நம் சாஸ்திரத்தை நாம் ஸரியாகப் புரிந்துகொண்டு அவர்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் என்றில்லாமல், அவர்கள் தங்களுடைய பார்வையில் பட்டபடி இதைப்பற்றிச் தப்பாகச் சொல்வதையெல்லாம் நம்மவர்களே எடுத்துக்கொண்டு ஃபாஷனாக ரிஃபார்ம் பண்ணிவிட வேண்டுமென்று ஆரம்பிக்கிறார்கள்.

கொஞ்ச காலமாக, நாம் எடுத்துச் சொல்லாமலே, வெள்ளைக்காரர்கள் தாங்களாக ஆராய்ச்சிகளும் பரிசோதனைகளும் பண்ணி ஏற்கனவே தாங்கள் பரிஹாஸம் பண்ணின அநேக ஸமாசாரங்களைப் பெரிசாகக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். ஹோமம் பண்ணுவதில் பலன் இருக்கிறது. மந்திரத்தில் பலன் இருக்கிறது, லோகாந்தரங்கள் இருக்கின்றன என்றெல்லாம் அவர்களே ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் ஸர்ட்டிஃபிகேட்டின் மீது நம்மவர்களும் இவற்றைக் கொஞ்சம் ஒப்புக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.


To be continued.....

 
Last edited by a moderator:

Continuation of previous page..

ரிஃபார்ம் லீடர்கள் மதசீலம், நெறிக் கோட்பாடு என்று இரண்டாகப் பிரித்ததில் முதலாவதில் பலவற்றை ஆக்ஷேபித்தாலும், பின்னதில் (நெறிகளில்) பலவற்றைப் பின்பற்றுவதால் தங்களைப் பொறுத்தமட்டில் ஏதோ ஒர ஒழுங்குக்குக் கட்டுப்பட்டவர்களாயிருக்கிறார்கள். இந்த ஒழுங்குகளையும், பழைய ஆசாரங்களை மாற்றிச் சீர்திருத்தம் என்ற பெயரில் இவர்கள் செய்கிற புது விதிகளையும் சேர்த்து இவர்களே புது மதங்களை (அப்படிச் சொல்லிக் கொள்ளாவிட்டாலும்) ஸ்ருஷ்டிக்கிறார்கள்.
Leader -கள் விஷயம் இப்படியிருக்கட்டும். இவர்களுடைய follower -கள் விஷயம் என்ன? பழைய கட்டுப்பாடிலிருந்து அவிழ்த்து விடுகிறார்களே, இப்போதே லௌகிகமாக நமக்குப் பலன் தருகிற ஏற்பாடுகளைச் சொல்கிறார்களே என்றுதான் இவர்களை follow பண்ண ஆள் செல்கிறது. ஸ்வாதந்திரியமாக இஷ்டப்படிப் பண்ணலாம் என்பதற்காகத்தான் பிராசீனமான ஏதோ ஒரு பக்வம், படிப்பு, அநுபவம், கொள்கைப் பிடிமானம் எல்லாம் இருப்பதால் இவர்கள் மதாசாரங்களை விட்டாலும் தாங்களாகச் சில ஒழுக்க நெறிகளுக்காவது கட்டுப்பட்டிருக்கிறார்களென்றால் ஃபாலோ பண்ணும் பொது ஜனங்களுக்கு இந்த யோக்யதாம்சங்கள் எப்படி விசேஷமாக இருக்க முடியும்? அதனால், இவர்கள் (வீடர்கள்) religious virtues -ஐ (மதசீலங்களை) மட்டும் விட்டார்களென்றால் தாங்களோ எந்தக் கட்டுப்பாடுமே வேண்டாம் என்று ethical virtues -ஐயும் (நன்னெறிகளையும்) விட்டுவிட ஆரம்பிக்கிறார்கள்.
''ஸமயாசார வேலியை நீ உடைக்கலாம்'' என்று சீர்திருத்தத் தலைவர் முதலில் சொல்லிக் கொடுத்தால் அப்படி உடைத்து ஸ்வதந்த்ரத்தில் ருசி கண்ட ஜனங்கள் ''நீ போட்டிருக்கும் 'மாரல்' வேலியையும் உடைப்பேன்'' என்று பிற்பாடு அவரிடமே திருப்பிக் கொள்கிறார்கள்! பார்க்கவில்லையா - சடங்கும் ஆலய பூஜையும் ஸம்ஸ்கிருதத்தில் மட்டும் ஏன் பண்ண வேண்டும் என்று கேட்பதற்கு தேசத் தலைவர்கள் முதலில் ஜனங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்; அப்புறம் ஜனங்கள் அவர்களிடமே திருப்பிக்கொண்டு ஹிந்தி மாத்திரம் ஏன் நேஷனல் லாங்க்வேஜாக இருக்க வேண்டும் என்று கேட்டுப் பெரிய கலஹமாகவே ரயிலைக் கவிழ்த்தும் பஸ்ஸைக் கொளுத்தியும் எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஸத்யாக்ரஹம், 'ஸிவில்டிஸ்-ஓபீடியன்ஸ்', மறியல் என்று எதையெல்லாம் அந்நிய ராஜாங்கத்தை எதிர்த்து ரொம்பஸ முக்யமான விஷயங்களுக்காக ஆதியில் சொல்லிக் கொடுத்தார்களோ, அவற்றையே இப்போது உப்புப் போதாத விஷயங்களுக்காக இவர்களை எதிர்த்தே ஜனங்கள் செய்கிறார்கள்.
ஸாதாரண ஜனங்களைக் கிளப்பி விடும்போது எத்தனை முன்யோசனை வேண்டும் என்று நினைக்காததன் பலனை அநுபவிக்கிறோம்.

கதை சொல்வார்கள். பிரதிவாதி கடனைத் திருப்பித் தரவில்லை என்று வாதி பிராது போட்டானாம். பிரதிவாதியின் வக்கீல் தன் கட்சிக்காரர்களிடம், ''நீ கோர்ட்டில் பைத்தியக்காரன் மாதிரி நடி; என்ன கேள்வி கேட்டாலும் 'பெப்பே''பெப்பே' என்று பேத்திக் கொண்டிரு. 'சித்தப்பிரமம் பிடித்தவன்; இவன் மேல் கேஸ் போட்டது தப்பு' என்று ஜட்ஜ் தள்ளுபடி பண்ணி விடுவார்'' என்று சொல்லிக் கொடுத்தாரம். பிரதிவாதியும் அதே மாதரிப் பண்ணி வியாஜம் தோற்றுப் போகும்படிச் செய்துவிட்டானாம். கோர்ட்டுக்கு வெளியிலே வந்தவுடன் வக்கீல் அவனிடம் ஃபீஸ் கேட்டாராம். உடனே அவன் அவரிடமும் அவர் சொல்லிக் கொடுத்த தந்த்ரத்தையே திருப்பினானாம். ''பெப்பே''''பெப்பே'' என்றானாம்!'' என்ன? என்கிட்டேயுமா இப்படிப் பண்ணுகிறாய்?'' என்று வக்கீல் கேட்க, ''உன்கிட்டே மட்டுமென்ன? உன் அப்பன், பாட்டன் வந்தாலும் இதேதான் நடக்கும்'' என்று அர்த்தம் தொனிக்க ''உனக்கும் பெப்பே! உங்க அப்பனுக்கும் பெப்பே!'' என்றானாம்.

இப்படித்தான் ரிஃபார்மர்கள் ''சாஸ்திரம் சொல்கிற ஒழுங்குகள் வேண்டாம். நாங்கள் சொல்கிற ஒழுங்குகளைக் கடைபிடியுங்கள்''என்றால், ஃபாலோயர்கள் முதலில் பிரதிவாதி வக்கீல் துணையில் கேஸை ஸாதகமாக்கிக் கொண்டதுபோல, இந்த லீடர்களின் ஸஹாயத்தில் தங்களுக்கு ஸமூஹத்தில் அநேக ஆதாயங்களை அடைந்துவிட்டு, கொஞ்ச நாள் ஆன அப்புறம், ''சாஸ்த்ர ரூலுக்கும் பெப்பே; உன ரூலுக்கும் பெப்பே'' என்று, எந்த ஒழுங்குமில்லாமல் போக ஆரம்பிக்கின்றார்கள்.

இம்மாதிரி ஸந்தர்ப்பதில் தன்னளவில் ஓரளவு நன்றாகவே சுத்தராகவுள்ள லீடர்கள் தங்களைச் சேர்ந்தவர்களையே கண்டித்துவிட்டுத் தாங்களும் பட்டினி கிடப்பது போல ஏதாவது பிராயச்சித்தம் பண்ணிக் கொள்கிறார்கள் மற்ற தலைவர்களுக்குத் தங்களைச் சேர்ந்தவர்கள் விட்டு விட்டுப் போகிறார்கள் என்றால் அவமானயிருக்கிறது. அதனால் கண்டும் காணாமலும் ஏதோ தட்டிக் கொடுத்துக் கொண்டு போகிறார்கள். ரொம்பவும் மிஞ்சிப் போனால்தான் 'எக்ஸ்பெல்' பண்ணுகிறார்கள் (ஸ்தாபனத்திலிருந்து வெளியேற்றி விடுகிறார்கள்) அநேகமாக அந்தத் துணிச்சல் இவர்களுக்கு வருவதற்குள், இவர்களிடம் அபிப்பிராய பேதப்பட்டவர்களே பலமடைந்து தாங்கள் மட்டும் சேர்ந்து இன்னொரு சீர்திருத்த இயக்கம் ஆரம்பிக்கிற ஸ்திதிக்கு வந்துவிடுகிறார்கள். அதனால், ''நீங்கள் என்ன 'எக்ஸ்பெல்' பண்ணுவது? நாங்களே முழுக்குப் போட்டுவிட்டு வெளியில் வந்துவிட்டோம்'' என்கிறார்கள்


With regards


 
Last edited by a moderator:
Pranams

Would like to share this mail received from one of my friends :

[h=1]காஞ்சி மகானும் ஸ்ரீரமண பகவானும் நம் தேசத்துக்குக் கிடைச்சது மாபெரும் பாக்கியம்!
[/h]Courtesy: Sri.Mannargudi Sitaraman Srinivasan

காஞ்சி சங்கரமடத்துடனும் மகா பெரியவருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பட்டாபி சார், பெரியவர் பற்றிய மெய்சிலிர்க்கும் விஷயங்களைத் தொடர்ந்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

பெரியவா மடத்துக்கு வந்து பீடாரோகணம் பண்ணின காலத்துல, கஷ்டமான நிலைல இருந்தது மடம். பாங்க்ல கடன் வாங்கித்தான் நித்தியப்படி செலவுகளையே செய்யவேண்டியிருந்தது.

எங்க தாத்தா மகாலிங்கய்யர்கிட்ட பெரியவா இதையெல்லாம் சொல்லியிருக்கார். அபர காரியத்துக்குதான் காய்கறி இல்லாம சமைப்பா. ஆனா இங்கே, நித்தியப்படி சமையலுக்கே காய் வாங்க வழியில்லாததால, ஆரஞ்சுப் பழத் தோலை எங்கேருந்தாவது தேடிக் கொண்டு வந்து, சாம்பார்ல போட்டுச் சமைக்கற நிலை இருந்துதாம்.


அப்பல்லாம் விவசாயிகள் ல், வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூன்னு தங்களால் முடிஞ்சதைக் கொண்டு வந்து கொடுப்பா.

மத்தபடி காசா- பணமா கொடுக்கமுடியாது அவங்களால. ‘நாமளும் அதை எதிர்பார்க்கக்கூடாதும்பார் பெரியவா!


டீன் பருவத்துல பட்டத்துக்கு வந்தார் பெரியவா. கலவையில சேர்ந்தப்ப, அவருக்கு முன்னால பீடாதிபதியா இருந்த ஸ்ரீமகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தி அடைஞ்சுட்டார்.

அதனால, ஆச்சார்யாள்கிட்டேருந்து படிக்கறதுக்கும் தெரிஞ்சுக்கறதுக்கும் வழியில்லாம போயிடுத்து. வைஷ்ணவ சம்பிரதாயத்துலசுயம் ஆச்சார்ய புருஷன்னு சொல்வாளே, அப்படித்தான் பெரியவாளும் வளர்ந்தார்.

முதல் நாள் காயத்ரி உபாசனை பண்ணிட்டு, மறுநாள் குருவுக்குப் பண்ணவேண்டிய காரியங்களைச் செஞ்சார் பெரியவா.

அந்தக் காலத்துல அந்தணக் குடும்பங்கள்ல, ‘நாடு பாதி, நங்கவரம் பாதின்னு ஒரு வசனம் உண்டு. என்ன அர்த்தம் தெரியுமா இதுக்கு?
நங்கவரம் ஜமீன் ராஜப்ப ஐயர்னு ஒருத்தர்; அவருக்குக் காவிரிக்கரையில பதினஞ்சாயிரம் ஏக்கர் நிலம் இருந்துது.

அடுத்தடுத்த காலங்கள்ல அதெல்லாம் போயிட்டுது. ஜமீனோட குடும்பத்தார், மகேந்திரமங்கலம்ங்கிற இடத்துல பாடசாலை ஒண்ணை ஏற்படுத்தி, வித்வான்கள்லாம் வர்றதுக்கு ஏற்பாடு பண்ணி, எல்லா கிரந்தங்களையும் படிச்சுத் தெரிஞ்சுக்கறதுக்கு வசதி பண்ணிக் கொடுத்தா.

பெரியவா அதையெல்லாம்மாஸ்டர்பண்ணிட்டார். அதாவது, நங்கவரம் ஜமீனும் உடையார்பாளையம் ஜமீனும்தான் மகாபெரியவாளோட வித்யாப்பியாசத்துக்கு ஏற்பாடு பண்ணினாங்கன்னு சொல்லுவா!

பெரியவாளோட தபஸ், யாத்திரை, பிரசங்கம், அவரோட புகழ்னு ஜனங்களுக்குத் தெரிய ஆரம்பிச்சப்பமடமும் செழித்து வளர ஆரம்பிச்சுது.

அவரோட மகிமையைத் தெரிஞ்சுண்டு மடத்துக்கு உதவின மக்கள் ஏராளம். ஆனாலும், பண விஷயத்துல பெரியவா ரொம்பக் கவனமா, ஜாக்கிரதையா இருப்பா.

எத்தனையோ பெரிய மனுஷங்க எல்லாம் பணத்தைக் கட்டி எடுத்துண்டு வந்து பெரியவா காலடியில கொட்டினாலும், எல்லாத்தையும் ஏத்துக்கமாட்டார்.

யார்கிட்டேருந்து வாங்கலாம்; யார்கிட்டே வாங்கக் கூடாதுன்னு அவருக்குத் தெரியும்.

அந்தக் காலத்துலேயே ஒரு பெரும் பணக்காரர் கோடி ரூபாயைக் கொடுக்க முன்வந்தப்பகூட, வேண்டாம்னு மறுத்த மகான் அவர்!

பழங்கள், அரிசி- பருப்புன்னு கொடுத்தா, வாங்கிப்பார். பணமா கொடுத்தா, தொடக்கூட மாட்டார். கிராமம் கிராமமா நடந்து போயிருக்கார்.

பஸ் ஸ்டாண்ட், ஸ்கூல், மரத்தடி, ஆத்தங்கரையோரம்னு, வசதி வாய்ப்புகளையெல்லாம் பார்க்காம, எங்கே இடம் கிடைக்கறதோ அந்த இடத்துல தங்கிப்பார், பெரியவா!


அவரோடயே நாங்களும் தங்குவோம்; சமைக்கிறதுக்கு அரிசி, பருப்பெல்லாம் கையோடு எடுத்துண்டு போயிடுவோம்.

ஒரு தடவை, சித்தூர் செக்போஸ்ட்ல இருந்த அதிகாரிகள் எங்ககிட்ட இருந்த ஒரேயரு அரிசி மூட்டையையும் பறிமுதல் பண்ணிட்டா.

அரசாங்கம் கேக்கறது; கொடுத்துடுன்னு சொல்லிட்டார் பெரியவா. ‘அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு என்ன பண்றது?’ன்னு எங்களுக்கெல்லாம் ஒரே கவலையா போச்சு! இந்த விஷயம் தெரிஞ்சதும், அப்ப ஆந்திர மாநில சீஃப் மினிஸ்டரா இருந்த என்.டி. ராமராவ் பதறிப்போயிட்டார்.

அரிசியைத் திருப்பிக் கொடுக்க உத்தரவு போட்டதோடு, ஓடி வந்து பெரியவாகிட்டே நேரில் மன்னிப்பும் கேட்டுண்டார். பெரியவா மேல அவருக்கு அபரிமித மரியாதை!

உடனே பெரியவா, ‘இதுல மன்னிப்புக் கேக்க என்ன இருக்கு? அரசாங்க சிப்பந்திகள், அவாளோட கடமையைத்தானே செஞ்சா! அதுல குத்தம் சொல்லப்படாது.

காஞ்சி மடத்துமேல நீங்க வைச்சிருக்கற அன்பும் மரியாதையும் என்னிக்கும் மாறாம இருக்கணும்னு ஆசீர்வதிச்சார் கருணையுடன்!
என்.டி.ஆர், சென்னாரெட்டி, எம்.ஜி.ஆர்-னு எல்லாருமே பெரியவா மேல பெரிய பக்தியோடு இருந்தா.

அவா நம்ம மடத்துமேல மரியாதை வெச்சிருக்கிறது பெரிசில்லே; அந்த மரியாதையை நாம காப்பாத்திக்கணும். அதான் பெரிசுன்னு அடிக்கடி சொல்வார் பெரியவா!” என்று சிலிர்த்தபடி சொன்ன பட்டாபி சார்,

காஞ்சி மகானுக்கும் மற்ற மகான்களுக்குமான தொடர்புகளையும் விவரித்தார்.

திருக்கோவிலூர் ஞானானந்தகிரி சுவாமிகள்னு பெரிய மகான் இருந்தார். அவர் வாழ்ந்த இடத்தைத்தபோவனம்னு சொல்வா. முக்காலமும் உணர்ந்த மகான் அவர்; உட்கார்ந்த இடத்துலேருந்தே எத்தனையோ பக்தர்களைக் காப்பாத்தி அருள்பாலிச்சிருக்கார்! எப்பவும் சிரிச்ச முகத்தோடு இருப்பார்;

தெய்வாம்சம் உள்ள ஞானி. இன்னிக்குப் பிரபலமா இருக்கிற நாமசங்கீர்த்தனத்துக்கு மூல காரணம், அவர்தான்!
ஒருமுறை, அவரைத் தரிசனம் பண்ண வந்த ஜனங்களும், அங்கேயே இருக்கிறவங்களும் கவலைப்பட ஆரம்பிச்சுட்டா.

ஏன்னாசுவாமிகள் ஒரே இடத்துல உக்கார்ந்துண்டு, ஆடாம அசையாம அப்படியே ஸ்தம்பிச்சு இருந்தார். அதைப் பார்த்து என்னமோ, ஏதோன்னு பதறிப்போயிட்டா. அதுவும், சிலை மாதிரி அஞ்சாறு நாள் அசைவில்லாம உட்கார்ந்திருந்தா, பார்க்கிறவாளுக்குப் பதற்றம் வரத்தானே செய்யும்?!


யார்கிட்ட போய், என்னன்னு கேக்கறதுன்னு தெரியலை பக்தர்களுக்கு! அதே நேரம், சுவாமிகளை அந்த நிலையில் பார்க்கிறதுக்கும் மனசு சங்கடப்பட்டுது. அப்ப யாரோ சிலர், ‘எல்லாரும் உடனே காஞ்சிபுரம் போய், பெரியவாகிட்ட விஷயத்தைச் சொல்லி, என்ன பண்றதுன்னு கேளுங்கோன்னு யோசனை சொல்லபக்தர்கள் சில பேர் கிளம்பி, பெரியவாகிட்ட வந்து, ஞானானந்தகிரி சுவாமிகள் பத்தி விவரம் சொன்னா.
எல்லாத்தையும் கேட்டுண்ட பெரியவா, ‘கவலைப்படாதீங்கோ! அவருக்கு ஒண்ணும் ஆகலை. அவர் சமாதி நிலைல இருக்கார்; சாம்பிராணிப் புகை போடுங்கோ. அது ஒருவித ஆராதனை; சமாதி நிலையிலேர்ந்து எழுந்துடுவார்னு சொன்னார். பக்தர்களுக்கு எல்லையில்லாத சந்தோஷம்.

சுவாமிக்கு ஒண்ணும் ஆகலேங்கிற மகிழ்ச்சியோடு திருக்கோவிலூருக்கு ஓடினா. பெரியவா சொன்னபடி, சாம்பிராணி புகை காட்டி, ஆராதனை பண்ணினா. அதன் பிறகு, ஞானானந்தகிரி சுவாமிகள் சமாதி நிலைலேருந்து மீண்டு வந்தார்.

ஒருமுறை, பெரியவா திருவண்ணாமலை போயிருந்தப்போ, கிரிப் பிரதட்சிணம் பண்ணினார். அவரோடு இன்னும் நாலஞ்சு பேர் போனா. கொஞ்ச நேரத்துல, பகவான் ரமணரோட சீடர்கள் சில பேர், கையில் பிட்சைப் பாத்திரத்தோடு எதிரே வந்துண்டிருந்தா.

பெரியவாளைப் பார்த்ததும் நமஸ்காரம் பண்ணிட்டு, ‘நாங்க பகவான் ரமணரோட சீடர்கள். பகவான் அங்கே ஆஸ்ரமத்துல இருக்கார்னு சொன்னா.

உடனே பெரியவா, ‘அப்படியாங்கிறாப்பல தலை அசைச்சுக் கேட்டுண்டுட்டு, புன்னகையோடு அவங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டு, மேலே நடக்க ஆரம்பிச்சார்.


ரமண பக்தர்கள் கொஞ்சம் தயங்கி நின்னுட்டுக் கிளம்பிப் போனாங்க. அவாளுக்கு வருத்தம்ரமணரைப் பத்தி, அவரோட சௌக்கியம் பத்தி, பெரியவா ஒண்ணுமே விசாரிக்கலையே; தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலையேன்னு!

அந்த பக்தர்கள் மலையேறிப் போய், ஸ்ரீரமண பகவான்கிட்ட பிட்சையைக் கொடுத்துட்டு, வழியில காஞ்சிப் பெரியவாளைத் தரிசித்ததைச் சொல்லி, தங்களது வருத்தத்தையும் தெரிவிச்சாங்க.

அதைக் கேட்டதும் வாய் விட்டுச் சிரிச்சாராம், ரமண பகவான்! ‘அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா; இதுக்கா வருத்தமா இருக்கேள்?!’ன்னாராம். திகைச்சுப் போய் நின்னாளாம், பக்தர்கள்!

இதையெல்லாம் அப்போ நேர்ல இருந்து பார்த்த 87, 88 வயசு தாண்டின சுமங்கலி மாமி, எங்கிட்ட இதைச் சொன்னப்போ, அப்படியே நெகிழ்ந்துபோயிட்டேன்.

காஞ்சிப் பெரியவரும் ஸ்ரீரமணரும் மகா ஞானிகள்; தபஸ்விகள். அவங்களுக்குள்ளே எப்பவும் சம்பாஷணை
நடந்துண்டிருக்குன்னு தெரிஞ்சபோது ஏற்பட்ட நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை!

பால் பிரன்ட்டன் என்பவர் ஆன்மிக விஷயமா பேசறதுக்கு மகா பெரியவாகிட்ட வந்தார். அப்ப பெரியவா, ‘அவர் ஞான மார்க்கத்துல போயிண்டிருக்கார். நான் கர்ம மார்க்கத்துலே போயிண்டிருக்கேன். உன்னோட கேள்விகளுக்கெல்லாம் பதில் தரக்கூடியவர்,

திருவண்ணாமலையில இருக்கார். உன் சந்தேகங்களையெல்லாம் அவராலதான் தீர்த்துவைக்க முடியும்னு சொல்லி, பால் பிரன்ட்டனை ரமணர்கிட்டே அனுப்பி வைச்சார். பால் பிரன்ட்டனும் அதன்படியே ரமணரை வந்து சந்திச்சு, தன்னோட சந்தேகங்கள் எல்லாம் விலகி, அவரோட பக்தர் ஆகி, புஸ்தகமே எழுதினாரே!

பெரியவாளுக்கும் பகவான் ரமணருக்கும் பரஸ்பரம் அன்பு இல்லேன்னா இது நடந்திருக்குமா? மொத்தத்துல, காஞ்சி மகானும் ஸ்ரீரமண பகவானும் நம் தேசத்துக்குக் கிடைச்சது மாபெரும் பாக்கியம்!

[TABLE="width: 542"]
[TR]
[TD][/TD]
[TD][/TD]
[/TR]
[/TABLE]
With regards
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top