• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
[h=1]சிவ நாம மஹிமை – from Deivathin Kural[/h]


shivarathiri_wishes.jpg



சிவ நாமாவைச் சிறப்பித்து சைவமான புராண ஆகமங்களிலோ, தேவார திருவாசகங்களிலோ சொல்லியிருந்தால் அதில் பெரிய விசேஷமில்லை. வைஷ்ணவ நூலில் சொல்லியிருந்தாலே விசேஷம். சிவ மஹிமையைத் தீவ்ர வைஷ்ணவர் சொல்லியிருந்தால்தான் விசேஷம்.


இந்த இரண்டு விசேஷங்களும் சிவனுக்கும் சிவ நாமத்துக்கும் இருக்கின்றன.


விஷ்ணுவின் மஹிமைகளை, சரித்ரங்களை எல்லாவற்றுக்கும் மேலானவை என்று ஸ்தாபிக்க ஏற்பட்டது பாகவதம். அதில் நடுவிலே தாக்ஷ£யணியின் கதை வருகிறது. அந்தக் கதைக்கு நடுவிலேதான் தாக்ஷ£யணியின் வாக்கிலேயே சிவ நாமாவின் மஹிமையைச் சொல்லியிருக்கிறார், பாகவதத்தை அநுக்ரஹித்துள்ள சுகாசார்யாள். அவர் ப்ரஹ்ம ஸ்வரூபம். சுகப்ரஹ்மம் எனப்படுபவர். அவர் சொல்வதற்கு தனி மதிப்பு உண்டு. அவர் இப்படி எடுத்துச் சொல்வதற்கு மூலமாக இந்த மஹிமையைச் சொன்னவளோதாக்ஷ£யணியாகவந்தஸாக்ஷ£த்பராசக்தி!
அதுவும் எப்படிப்பட்ட ஸந்தர்பத்தில் சொன்னாள்?


தகப்பனார் தக்ஷன் யஜ்ஞம் செய்கிறான் என்ற அபிமானத்தால் அவன் அழைக்காமலே அதற்கு வந்தாள், அவனுடைய புத்ரியானதால் தாக்ஷ£யணி என்று அழைக்கப்பட்ட தேவி. ஸதி என்பதுதான் அவளுடைய (இயற்) பெயர். ஹிமவானின் புத்ரியான பார்வதியாக வருவதற்கு முன்னால் அம்பாள் எடுத்த அவதாரம் இது.

பரமேஸ்வரன், “அழையா விருந்தாளியாகப் போக வேண்டாம்”என்று நல்ல வார்த்தை சொல்லியும் கேட்காமல் தாக்ஷ£யணி தகப்பனாரின் யாகத்துக்கு வந்தாள்.


பரமேஸ்வரன் யாரையும் மதிப்பதுமில்லை, அவமதிப்பதுமில்லை என்று தன்பாட்டில் ஞானியாக விலகியிருந்தவர். ‘ப்ரஜாபதி’என்று ஜனங்களுக்கு நாயகர்களாக ப்ரம்மா ஸ்ருஷ்டித்த ப்ரம்ம புத்ரர்களில் தக்ஷன் ஒருவன். அவனுக்கு எப்போதும் தன் ஆஃபீஸ், அதாரிடிகளைப் பற்றிய கர்வமுண்டு. எல்லோரும் தனக்கு நமஸ்காரம் பண்ணவேண்டும் என்று எதிர்பார்ப்பான். மற்றவர்கள் பண்ணவும் பண்ணினார்கள் ஈஸ்வரன் பண்ணவில்லை. அதனால் அவரை இவனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் ப்ரம்மாவின் வாக்குக்குக் கட்டுப்பட்டு ஸதியை அவருக்குக் கல்யாணம் செய்து கொடுத்து அவளைக் கைலாஸத்துக்கு அனுப்பி வைத்தான். அதோடு பெண்-மாப்பிள்ளை உறவைக் கத்தரித்து விட்டான். பெரிய யாகம் செய்தபோதுகூட ஒரு தேவர் பாக்கியில்லாமல் முப்பத்து முக்கோடி பேரையும் கூப்பிட்டவன் பெண்ணையும் மாப்பிள்ளையையும் இன்வைட் பண்ணவில்லை.



யஜ்ஞவாடத்தில் ஈஸ்வரனைத் தவிர அத்தனை பேரையும் கூப்பிட்டு உட்கார்த்தி வைத்திருப்பதைப் பார்த்தவுடனேயே மஹா பதிவ்ரதையான தாக்ஷ£யணிக்கு “ஏண்டா வந்தோம்?”என்று பொங்கிப் பொங்கிக் கொண்டு வந்தது. அதற்கப்புறம் தக்ஷன் அவளை ப்ரியமாய் வரவேற்காததோடு, சிவ த்வேஷமாகவே நிந்தை பண்ணிப் பேச ஆரம்பித்தவுடன் அவளால் துக்கத்தையும் கோபத்தையும் தாங்கவே முடியவில்லை.



இங்கேயிருந்து போய்விடலாமா?போவது என்றால் எங்கே?பதியின் க்ருஹத்தைத் தவிர பத்னிக்கு வேறே இடம் ஏது?அங்கே போகலாமா?ஏன், என்ன யோசனை?போகவேண்டியதுதானே?போனால், ‘நான் சொல்லச் சொல்லப் போய் உனக்கும் அவமானத்தை தேடிக் கொண்டு எனக்கும் அவமானம் வாங்கி வைத்து விட்டு இங்கே ஏன் திரும்பி வந்தாய்?’என்று பரமேஸ்வரர் கோபிப்பாரோ என்பதால் யோசனையா?இல்லை. அவர் அன்பே ஒரு ஸ்வரூபமாக வந்திருப்பவர். என்னிடம் பரிவு தவிர எந்த உணர்ச்சியும் காட்டத் தெரியாதவர். அவர் இப்படிக் கேட்கமாட்டார்.

ஆனால் என் மனஸே கேட்கும்;குத்திக் குத்திக் கேட்கும். இன்னொன்று:அவர் எதுவும் நடக்காதது போல ஹாஸ்யமாக, பரிஹாஸமாக, என்னிடம் ஸல்லாபம் செய்யும் போதே நடுவில் ‘தாக்ஷ£யணி’என்று என்னைக் கூப்பிட்டுவிட்டால்?அதைவிட ஒரு தண்டனை வேண்டுமா?சிவநிந்தை செய்யும் பாபியின் பெண்ணாயிருப்பதால் ஏற்பட்ட பேரல்லவா அது?அவருடைய நாமம் எத்தனை உத்க்ருஷ்டமானதோ அத்தனை நிக்ருஷடமான இவனுடைய பேரைச் சொல்லி, இவனுக்குப் பெண்ணாய் நான் பிறந்தேனென்பதை ஞாபகப்படுத்தும் இந்தப் பேரை நான் வைத்துக் கொள்ள வேண்டியிருப்பதை விடப் பெரிய தண்டனை இல்லை.

அதைவிட, இவனால் ஏற்பட்ட இந்த சரீரமே போய்விடட்டும்!எங்கே போவது என்று யோசித்தோமே!இந்த சரீரத்தையே விட்டுவிட்டுப் போய் ஆத்மாவாகிய அவரிடம் கலந்து விடுவோம்!’என்று தியாக ஸங்கல்பம் பண்ணிக் கொண்டு விட்டாள்.


யஜ்ஞ குண்டத்துக்குப் பக்கத்திலேயே அம்பாள் ஈஸ்வர த்யானம் பண்ணிக்கொண்டு யோகாக்னியில் சரீரத்தை அர்ப்பணம் செய்து முடிந்து போய்விட்டாள் என்பது பாகவதக் கதை. சைவ புராணங்களில் யஜ்ஞ குண்டத்திலே விழுந்து பஸ்மீகரமாக்கிக்கொண்டு விட்டாளென்று இருக்கிறது.


இப்படி பாதிவ்ரத்யத்துக்காக, அம்பாள் ப்ராணத் தியாகம் செய்கிறதற்கு முந்தி கோபாக்னி கொழுந்து விட்டெரிய தக்ஷனைப் பார்த்துக் கொஞ்சம் பேசினதாக பாகவதத்தில் வருகிறது. அதன் நடுவில்தான், ‘சிவன் என்றாலே இவன் கரிக்கிறானே!’என்று நினைத்து அவனிடம் அந்த நாம மஹிமையை அம்பாள் சொல்வது வருகிறது.


அம்பாள் வாக்கு என்பதாலேயே அதற்கு மிகுந்த ஏற்றம் உண்டு. அதுவும் இந்த ஸந்தர்ப்பத்திலே சொன்னது என்பதால் இன்னமும் மேலே, இதற்குமேல் ஒன்றில்லை என்ற உச்சிக்கு அந்த வாக்கு போய்விடுகிறது.

முன்காலத்தில் யாராவது உடன்கட்டை ஏறினால் அவளுடைய வஸ்த்ரம் எரியாமலே இருக்கும். ப்ரத்யக்ஷத்தில் பார்த்துப் பலபேர் சொல்லியிருக்கிறார்கள். அந்த வஸ்த்ரத்தை வைத்து ஆராதனை செய்வார்கள்.

இப்படிப் பல வீடுகளில் தலைமுறைகளாக அந்த வஸ்த்ரம் வந்திருக்கிறது. தன்னையே த்யாகம் பண்ணிக் கொள்வதால் அந்த ஸ்திரீகள் ஆத்ம ஞானியின் நிலையிலிருப்பவர்கள், அம்பாளின் அம்சம் பெற்றவர்கள் என்று பூஜிக்கப்படுகிறார்கள். அப்படியானால் அந்த அம்சங்களுக்கெல்லாம் மூலமான அம்பிகையே பதியை நிந்தை செய்தவனுடைய புத்ரியாக ஏற்பட்ட பெயரும் தேஹமும் இருக்கப்படாது என்ற தீவ்ரமான பதிவ்ரதா பாவத்தில் தன் தேஹத்தை பரித்யாகம் பண்ணிக் கொள்கிற நிலையில் சொன்ன வாக்கு ஸஹகமனம் செய்கிறவர்களின் வஸ்திரத்தைவிட எத்தனை மேலானது?


அம்பாள் இங்கே ஸஹகமனம் செய்யாவிட்டாலும் அப்படிச் செய்வதற்கே ‘ஸதி’- இங்கிலீஷிலே suttee – என்றுதான் அவள் பேரை வைத்திருக்கிறது. ‘பாதிவ்ரத்யத்துக்காக சரீரத்தைப் பொசுக்கிக் கொண்டு விடுவது’என்ற கொள்கை இரண்டுக்கும் பொதுவாயிருப்பதால் இவ்வாறு பேர் ஏற்பட்டிருக்கிறது.


ஸதி-பதி என்பதாகவே தம்பதியைச் சொல்வதும் ‘ஸதி’என்றாலே ஐடியல் பத்னி என்ற அபிப்ராயத்தில் தான். ஆசார்யாள் ” ஸதிஸதீநாம்அசரமே” என்கிறார்1. “பதிவ்ரதைகளுக்குள் முதன்மை ஸ்தானம் கொண்ட ஸதியே!”என்று அர்த்தம்.


அப்படிப்பட்டவள் ப்ரணாத்யாகம் பண்ணுகிற ஸந்தர்ப்பத்தில் சொன்னதைவிடப் பெரிய ஸத்யமில்லை. அந்த ஸத்யத்துக்கு விலையே இல்லை என்ன சொன்னாள்?


யத்
-த்வயக்ஷரம்நாமகிரேரிதம்ந்ருணாம்
ஸக்ருத்
ப்ரஸங்காத்அகம்ஆகஹந்திதத்*

பவித்ர
கீர்த்திம்தம்அலங்க்ய-சாஸநம்
பாவந்
-அஹோத்வேஷ்டிசிவம்சிவேதர:**2


கடைசி வார்த்தை ‘ சிவேதர:’- ‘சிவனுக்கு இதரமானவர்’. அதாவது சிவனாக இல்லாமல் அதற்கு மாறுபட்டவராக இருக்கிறவர். இப்படி ‘சிவேதரன்’என்று அம்பாள் சொல்வது தக்ஷனைத்தான். ‘ பவாந்‘ – ‘தாங்கள்’என்று ரொம்ப மரியாதை த்வனிக்கிறாற்போலவே அவனைக் கூப்பிடுகிறாள். ஈஸ்வரனே தனக்கு மரியாதை பண்ணவேண்டுமென்று எதிர்பார்ப்பவனாதலால் பரிஹாஸமாக ‘பவாந்’என்று சொல்லி அவனை ‘சிவேதரன்’என்கிறாள். இதில் நிரம்ப அர்த்த புஷ்டியிருக்கிறது.


சிவ என்பதற்கு மங்களமாக, சுபமாக இருக்கிற அத்தனையையும் அர்த்தமாக, synonym -ளாக (ஸம்ஸ்க்ருத நிகண்டுவான) அமர (கோச) த்தில் சொல்லியிருக்கிறது ” ச்வ: ச்ரேயஸம், சிவம், பத்ரம், கல்யாணம், மங்களம், சுபம்.”அந்த சிவத்துக்கு இதரனாக ஒருத்தன் இருக்கிறானென்றால் அவன் ஒரு ச்ரேயஸுமில்லாதவன், அமங்கள, அசுப ஸ்வரூபம் என்றுதானே அர்த்தம்?


அப்பைய தீக்ஷிதர் எழுதியுள்ள அத்வைத க்ரந்தமொன்றுக்குப் ‘பரிமளம்’என்று பேர். அத்வைதத்தை ஆக்ஷேபிக்கிற ஒருவர் இதற்குக் கண்டனம் பண்ணி எழுதினார். இந்த விஷயத்தை அப்பைய தீக்ஷிதர் கேட்டவுடன் மூக்கைப் பிடித்துக் கொண்டாராம். பரிமளம் என்றால் அதற்கு மூக்கைப் பிடித்துக் கொள்ளத்தானே வேண்டும்?

சிவம் – அதாவது பரம மங்களம் – பிடிக்காது என்று தக்ஷன் பெருமைப்பட்டுக் கொண்டால் அவன் ஒரே அமங்களன், அகல்யாணன், அசுபமானவன் என்றுதானே அர்த்தம்?தாக்ஷ£யணி என்ற பேரே தண்டனை என்று நினைத்தவள் தக்ஷனுக்கு ‘சிவேதரன்’என்று பேர் வைத்தே தண்டிக்கிறாள்!

“ஐயையோ (‘அஹோ’) !இப்படி சிவனை த்வேஷிக்கிற சிவேதரனாயிருக்கிறாயே!ஒரு தப்புக் கண்டுபிடிக்க முடியாமல் பரம பவித்ரமாயுள்ள கீர்த்தி பொருந்தியவரல்லவா அவர் ( பவித்ரகீர்த்திம்) ?அவருடைய கட்டளையாலல்லவா ஸகல தேவதைகளும் தங்கள் தங்கள் காரியத்தைச் செய்கிறார்கள்?யாரும் அவர் கட்டளையை மீறினதில்லையே ( அலங்க்யசாஸனம்) !நீதான் அதிசயமாக அவரை மீறிப் போகப் பார்க்கிறவன்”இப்படியெல்லாம் அம்பாள் சொல்கிறாள். இது ஸ்லோகத்தின் பின்பாதி. முன்பாதியில்தான் சிவ நாமாவின் பெரிய பெருமையைச் சொல்கிறாள்


யத்
-த்வயக்ஷரம்நாமகிரேரிதம்த்ருணாம்
ஸக்ருத்
ப்ரஸங்காத்அகம்ஆகஹந்தி


த்வயக்ஷரம்நாம‘- ‘இரண்டே இரண்டு அக்ஷரம் உள்ள சிவ நாமா’. பஞ்சாக்ஷரமாக அதற்கு முன்னாடிப் ப்ரணவம், பின்னாடி ‘நம’:சொல்லணுமென்றுகூட இல்லை. அவ்வளவு ச்ரமம் வேண்டாம். இரண்டெழுத்தைச் சொன்னாலே போதும். ‘ சிவசிவஎனகிலர் தீவினையாளர்‘என்றுதான் ‘திருமந்திர’த்தில் கூட இருக்கிறது;பஞ்சாக்ஷரமாகச் சொல்லவில்லை. “த்வயக்ஷரம் நாம கிரா”என்றால் ‘இரண்டே அக்ஷரமுள்ள நாமமான வார்த்தை’.

இந்த வார்த்தையானது மனிதர்களால் சொல்லப்பட்டால் (‘ந்ருணாம் ஈரிதம்’- மநுஷ்யர்களால் சொல்லப்பட்டால்) .

எப்படிச் சொல்ல வேண்டும்?ஸ்நானம் பண்ணி, மடி பண்ணிக் கொண்டு, மூச்சை கீச்சை அடக்கி ரொம்பவும் நியமமாகச் சொல்ல வேண்டுமா?
ஊஹ¨ம், அதெல்லாம் வேண்டியதில்லை. ‘ ஸக்ருத்ப்ரஸங்காத்‘- ஏதோ ஒரு தடவை பேச்சுக்கு நடுப்பற, எத்தனையோ அரட்டை அடிக்கிறபோது சிவனை நினைத்து, மனஸைச் செலுத்தி புத்தி பூர்வமாக, ‘அவன் பேர்’என்று சொல்ல வேண்டியதுகூட இல்லை. அகஸ்மாத்தாக ஏதோ பேச்சுக்கு நடுப்பற அந்த இரண்டெழுத்து வந்துவிட்டால்கூடப் போதும்!’சிவப்பு”அரிசி வடாம்’என்கிற மாதிரி எதையோ சொல்லிக் கொண்டு போகும்போது இந்த இரண்டெழுத்து வந்து விட்டால் கூடப் போதும் …

இவ்வாறு அது அகஸ்மாத்தாக ஒருதரம் சொல்லப்பட்டால்கூட என்ன பண்ணிவிடுகிறது?


அகம்
ஆசுஹந்தி


அகம்‘ – பாபத்தை;’ ஆசு‘- உடனே, தத்க்ஷணமே;’ ஹந்தி‘- அழித்துவிடுகிறது.


பேச்சுக்கிடையே ஏதோ ஒரு தரம் ‘சிவ’என்ற இரண்டு அக்ஷரத்தை அகஸ்மாத்தாகச் சொல்லிவிட்டாலும் அதுவே ஸமஸ்த பாபத்தையும் போக்கிவிடும்.


ஸத்தியங்களுக்கெல்லாம் மேலான ஸத்யமாக, ப்ராண த்யாக ஸமயத்திலே ஸாக்ஷ£த் பரதேவதை சொன்னதாக சுகாசார்யாள் வாயினால் வந்திருக்கிற வாக்யம் இது.


‘சிவசிவ என்று சொல்லாதவன் தீவினையாளன்’என்றால் துஷ்கர்மா பண்ணினவன், அதாவது பாபி என்று அர்த்தம். அப்படியானால், சிவ நாமா சொல்லிவிட்டால் பாபம் போய்விடும் என்றுதானே அர்த்தம்?


தெரிந்தும் தெரியாமலும் எவ்வளவோ பாபம் பண்ணி விட்டோம். அதுதான் மேலே போக முடியாதபடி பெரிசாகத் தடை செய்கிறது. சிவநாமா சொல்லி விட்டால் அந்தத் தடை போய்விடும் அப்புறம் மோக்ஷ பர்யந்தம் எல்லாம் ஸித்தியாகிவிடும்.


மற்ற மதஸ்தர்களில் சிலர், “உங்கள் மதத்தில் பாபத்தைப் பரிஹரிக்க வழி இல்லை. எங்களிடம் இருக்கிறது. கொஞ்சம் தீர்த்தம் தெளிக்கிறோம். பாபமெல்லாம் போய்விடும். ஆகையால் எங்களிடம் வாருங்கள்”என்கிறார்கள்.


நம் மதத்தில் பாப பரிஹாரத்துக்கு வழி சொல்லாதது மாதிரி இவர்கள் கூப்பிடுகிறார்கள். நமக்கும் ஒன்றும் மத விஷயம் தெரியாததால் இங்கேயிருந்து அங்கே போகிறவர்களும் இருக்கிறார்கள். வாஸ்தவத்திலோ, நம்முடைய மதத்தில் இத்தனை கர்மாநுஷ்டானம் விதித்திருப்பது பாபம் போகத்தான். ”

மமோபாத்தஸமஸ்ததுரிதக்ஷயத்வாரா” என்றுதான் எந்தக் கர்மாவுக்கும் முதலில் ஸங்கல்பம் பண்ணுகிறோம். ‘துரிதம்’என்றால் பாபம்தான். பக்தி மார்க்கம் பாபத்தைப் போக்கத்தான். பக்தி முதிர்ந்து ப்ரபத்தி (சரணாகதி) ஆகும். பகவான் கீதையைப் பூர்த்தி பண்ணும்போது, “சரணாகதி பண்ணு. உன்னை ஸகல பாபங்களிலிருந்து விடுவித்து விடுகிறேன்.

ஸர்வபாபேப்யோமோக்ஷயிஷ்யாமி“என்று ஸத்யம் பண்ணித் தந்திருக்கிறார். அவரை நம்பாமல் நாம் இன்னொருத்தரிடம் போக வேண்டியதில்லை.


தர்மம், ஞானம் எதுவானாலும் பாபத்தைப் போக்குவதே.

தர்மேணபாபம்அபநுததிஎன்று (மஹா நாராயண) உபநிஷத்தே சொல்கிறது (79.7) . அந்த உபநிஷத்திலுள்ள ஸ¨க்தங்களில் அநேகம் பாப நிவிருத்தியைத்தான் திருமபத் திரும்ப ப்ரார்த்திக்கின்றன. “பாபிகளில் c மஹா பாபியானாலும் ஞான ஓடத்தினால் அந்தப் பாபத்தைக் கடந்து விடுவாய்”என்று கீதையில் (4.36) பகவான் சொல்கிறார்.


கர்மாநுஷ்டானம், தர்மாநுஷ்டானம் ப்ரபத்தி, ஞான ஸாதனை எல்லாவற்றையும்விடப் பரம ஸுலபமாக, நாம் தெரிந்தும் தெரியாமலும் ஜனமாந்தரங்களாகப் பண்ணியுள்ள பாபத்தைப் போக்கிக் கொள்ள இங்கே பாகவதம் வழி சொல்லிவிட்டது. சிவ நாமோச்சாரணம்தான் அது.



அதனால் இனிமேல் “உங்கள் பாபத்தைக் கழுவி விடுகிறோம்”என்று நம்மைக் கூப்பிடுபவர்களிடம் “எங்களிடம் பாப பரிஹாரத்துக்கு இருக்கிறது போன்ற ஸுலபமான உபாயம் யாரிடமுமே இல்லை. அதனால் முதலில் நீங்கள் எங்களைக் கூப்பிடும் பாபத்தைப் பரிஹாரம் பண்ணிக்கொண்டுவிட்டு அப்புறம் வாருங்கள்”என்று சொல்லுவோம்!


1. ‘ஸெளந்தர்ய லஹரி’ஸ்லோ 96

2. பாகவதம் 4.4.14

2014 February 24 « Sage of Kanchi
 
ஸமயாசாரம், மதாசாரம்

ஸமயாசாரம், மதாசாரம் என்று சொல்லும்போது ஒரு மதத்தின் நெறி முழுவதையும் “ஆசாரம்” என்பது குறிப்பிடுகிறது. ஆனால் பொதுவிலே ஒருத்தர் ஆசாரமாயிருக்கிறார். என்றால், மடி-விழுப்பு என்று இரண்டு சொல்லிக் கொண்டிருக்கிறோமே (வார்த்தையிலாவது இன்றைக்கு வரையில் இருக்கிற ‘மடி’ அடியோடு மறந்து போய்விடக் கூடாதென்றுதான் இந்த உபந்நியாஸமெல்லாம் பண்ணுவது) அதிலே மடியாயிருப்பது என்றுதான் வைத்துக் கொண்டிருக்கிறோம்.

மடி, விழுப்பு பார்க்கிறதுதான் ஆசாரம்; சாஸ்திரத்தில் சொன்ன பிரகாரம் ஒருத்தர் சிகை வைத்துக் கொண்டிருக்கிறார். கச்சம் போட்டு வேஷ்டி கட்டிக் கொண்டிருக்கிறார். புண்ட்ர தாரணம் [நெற்றிக்கிடுதல்] பண்ணிக் கொண்டிருக்கிறார், நாள் நக்ஷத்ரம் பார்த்துக் காரியம் பண்ணுகிறார், க்ளப்புக்கு [ஹோட்டலுக்கு]ப் போவதில்லை, எவர்ஸில்வரில் சாப்பிடுவதில்லை என்றால் அவரை ஆசாரமாயிருக்கிறார், orthodox என்கிறோம்.


இப்படியாக ஒரு மதத்தின் எல்லா நெறிகளுமே அதன் ஆசாரந்தானென்றாலும், வெளி வாழ்க்கையில் அதன் கட்டுப்பாட்டுபடி நடந்து கொண்டு, அதில் சொல்லியிருக்கிற வெளியடையாளங்களான சின்னங்கள் முதலியவற்றை மேற்கொண்டு நடந்து காட்டுவதே குறிப்பாக ஆசாரம், ஆசாரம் என்று வழங்குகிறது.


ஆனால் ஆசாரம் என்பது முழுக்க வெளி விஷயந்தான் என்று நினைத்து விட்டால் அது தப்பு. வெளி ஸமாசாரங்களாலேயே உள் ஸமாசாரங்களை, உள்ளத்தை உயர்த்திக் கொள்ள உதவுகிறதுதான் ஆசாரம்[SUP]*[/SUP]. அதோடுகூட நேராக உள்ளத்தின் ஸமாசாரங்களையும், வாழ்க்கை நெறிகளையுங்கூட ஆசார சாஸ்திரங்களிலே சொல்லியிருக்கிறது.


‘ஆசாரம்’ என்பதைத் தமிழிலே நேராக ‘ஒழுக்கம்’ என்று சொல்லிவிடலாம். “உயிரினும் ஓம்பப்படும்” என்று திருவள்ளுவர் எதைச் சொல்லியிருக்கிறாரோ, அப்படி நம் பிராணனைவிட உசந்ததாகக் கருதி எதை ரக்ஷிக்க வேண்டுமோ அந்த தர்ம வழியே ஆசாரம். தர்மம் என்கிறது அகம், புறம் எல்லாவற்றிலும் எல்லா அம்சங்களையும் தழுவுகிற விஷயமல்லவா?


இங்கிலீஷில் ‘ character’ என்பதாக ஒருத்தனின் உள் ஸமாசாரமான குணத்தையும், ‘conduct’ என்று அவனுடைய வெளி ஸமாசாரமான நடத்தையையும் சொல்கிறார்கள். ஆசாரம் என்பதும் ஒழுக்கம் என்பதும் காரெக்டர், கான்டக்ட் ஆகிய இரண்டையும் ஒன்றாக்கிச் சேர்த்துக் கொடுப்பது. இது வெறுமனே morality,ethics என்று சொல்கிற இஹ வாழ்க்கைக்கான நன்னெறிகளாக மட்டுமில்லாமல் பர லோகத்துக்கும் உதவுவதான காரியங்களை ஸம்ஸ்காரங்களை, சினனங்களை, விதி நிஷேதங்களை (இன்ன செய்யலாம், இன்ன செய்யக்கூடாது என்பவற்றை) யும் சொல்கிறது.


புற விஷயம் மாதிரியிருந்தாலும் அக விஷயத்துக்கும் உபகாரம் பண்ணும்படியாகவும், இம்மைக்கு மட்டுமில்லாமல் மறுமைக்கும் உதவுவதாகவும் நம்முடைய ஆன்றோர்கள் வகுத்துத் தந்திருக்கிற முறையே ‘ஆசாரம்’.


2014 January 05 « Sage of Kanchi
 
குரு கோவிந்தபாதர்

TN_110909145053000000.jpg


காலடியிலிருந்து சன்னியாசிகளுக்கு உரித்தான காவி உடையில் இருந்த சங்கரர் ஒரு குருவைத் தேடிப் பாதயாத்திரை சென்றார். பல மாதங்களுக்குப் பின்னர் சங்கரர் நர்மதைக் நதிக் கரைக்கு வந்தார். அங்கிருந்த ஒரு குகையில் மிகப்பெரிய ஞானியான கோவிந்தபாதர் வசித்து வந்தார்.

ஆதிசேஷனின் அவதாரமாகிய அவரை சங்கரர் வணங்கி, தம்மை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். கற்று உணர்ந்ததை எல்லாம், அனைவரும் ஏற்கும் அளவுக்கு, எளிமையாக எடுத்துக் கூறும் திறனைப் பெற்றதோடு, மாற்றுக் கருத்துக்களுக்கும், முழுமையடையாத சித்தாந்தங்களுக்கும், முதிர்ச்சி பெறாத போதகர்களுக்கும் எதிராக வாதமிட்டு அத்வைத தத்துவத்தை நிலைப்பிக்கும் திறமையையும், குருவருளால் ஆதிசங்கரர் விரைவிலேயே பெற்றார்.

முதல் சீடர் பத்மபாதர்:
குருவின் விருப்பபப்படி சங்கரர் காசிக்குச் சென்று கங்கையின் புனித நதிக்கரையில் தங்கினார். வேதங்களையும், உபநிடதங்களையும் கற்க எத்தனையோ சீடர்கள் இவரை வந்தடைந்தனர். சில காலம் காசியில் தங்கியிருந்து விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்குவதும், சீடர்களுக்கு வேதபாடம் சொல்லிக் கொடுப்பதுமாக இருந்தார்.

இவரை அடைந்த சீடர்களில் சனந்தனன் என்ற ஒரு சீடரும் இருந்தார். மிகச் சிறந்த அறிவாளி. ஒருநாள் இவர் கங்கையின் எதிர்க்கரையில் இருந்தார். வகுப்பு நேரம் நெருங்கி விட்டது, ஆற்றைக் கடக்க எண்ணிக்கொண்டிருக்கையில் கங்கையில் திடீரென்று வெள்ளம் ஏற்பட்டது. வகுப்பைத் தவறவிட்டு விடுவோமோ என்று கவலைப்பட்ட அவர், தன் குருவை மனதில் நினைத்துக் கொண்டு ஆற்றில் இறங்கினார். இவரின் குருபக்தியைப் பார்த்த கங்காதேவி, இவரின் பாதஅடிகளை தாமரை மலரால்(பத்மத்தால்) தாங்கிக் கொள்கிறது.

அன்று முதல் இவர் பத்மபாதர் ஆனார். இவர் தான் சங்கரரின் முதல் சீடர். காசியில் இருந்தபோது சங்கரர் முக்கிய இறைநூல்களான பகவத்கீதை, பிரம்மசூத்ரம், உபநிடதங்கள் போன்றவற்றுக்கு பாஷ்யங்கள் (விளக்கவுரை) எழுதினார்.

அன்று முதல் இவர் பத்மபாதர் ஆனார். இவர் தான் சங்கரரின் முதல் சீடர். காசியில் இருந்தபோது சங்கரர் முக்கிய இறைநூல்களான பகவத்கீதை, பிரம்மசூத்ரம், உபநிடதங்கள் போன்றவற்றுக்கு பாஷ்யங்கள் (விளக்கவுரை) எழுதினார்.

Adi Sankarar | ???? ????????????
 
The Ultimate Purpose of Varna Dharma


95.jpg



When factories took the place of handicrafts and cottage industries, the small village communities became urbanised. The needs of people multiplied, so too the number of occupations. Today when the old way of life is gone, it seems impossible to revive the system of hereditary vocations. Is it any longer practicable how to insist that only Ksatriyas ought to man the defence services, that only Vaisyas can transact trade and business, that the members of the fourth varna must continue to remain labourers? Is it at all possible to revive the old system? I am not unaware of the state of affairs now prevailing. If so why do I keep extolling varna dharma? There are two reasons.

Whatever be the situation today - and whether or not we can return to the old order - it is not right to claim as people nowadays do that the old order was utterly unjust, that it was created by the vested interests for their own good and convenience. We must be able to convince the critics that the old order was not unjust at all and that there is nothing like varna dharma to help people to attain inner purity. They must also be made to realise that this dharma, apart from helping society to function in a disciplined and harmonious manner, will bring well-being to all and give an impetus to culture.



There is even more important reason. Today the functions of Ksatriyas, Vaisyas and Sudras have changed and become mixed Even so the work of the government goes on somehow. Defence, the manufacture of various articles, trade, labour - all these go on somehow. But, unlike in the past, there is jealousy as well as rivalry in all fields. Even so, the duties of the three castes are carried out despite the fact that varna dharma has broken up. They are a practical necessity for day-to-day life as well as for the functioning of the government. So they are performed, albeit unsatisfactorily.



There is, however, a function higher than all these. It is that of taking all of them - all these functions - to their ultimate point. And this function belongs to the Brahminic way of life and it has become almost extinct. To teach dharma by precept and practise, the dharma that is the foundation of all activities, to invoke the divine powers through the vedic chant for the good of all mankind, to create high ideals through their own austere life, to nurture the Atmic strength of the community, to promote the arts, to nourish culture- these embrace the dharma of Brahmins and it is now on the verge of extinction.



The need for the Brahminic dharma is not widely recognised because of its subtle and intangible character. There is no realisation of the other three varnas. Indeed, it is this dharma that gives meaning to life and creates a path for the fulfilment of life. We ignore it and devote ourselves solely to the functions of the varnas. If any improvement is made in them we are happy. But what use is material prosperity without Atmic and cultural advancement? Material progress is no progress at all. Americans have realised this truth - we ought also to realise the same. So however confusedly the functions of other castes are carried out, the Brahmin must function in the right manner as a pathfinder for others by living a life of simplicity and sacrifice, performing Vedic rites and creating worldly and Atmic well-being for mankind. In this way the soul of India will be kept alive.



If the Brahmin caste is restored to order, it might well be the beginning of the end of confused state of the other castes. In this land alone has there existed - and existed for ages-a jati for the protection of dharma and the Atmic uplift of all. If this jati becomes extinct there will be all-round decay. If I have spoken at length I have this purpose in view, that this jati must be revived in its true form so as to prevent the general decline of the nation. The Brahmin jati must not live a life of self-indulgence. On the contrary it must perform rites all through the day for the welfare of society. Brahmins must live austerely, with love for all in their hearts. If they are restored to their dharma our society in its entirety will be brought to the path of dharma and will be saved.



The Ultimate Purpose of Varna Dharma from the Chapter "Varna Dharma For Universal Well-Being", in Hindu Dharma : kamakoti.org:
 
தெய்வம் என்றால் என்ன?


* மனதால் கடவுளை நினை. வாக்கால் அவன் திருநாமங்களைக் கூறு. உடம்பால் வழிபாட்டைச் செய்.

* சரியான தர்மநெறியைப் பின்பற்றி வாழ்வை உயர்த்திக் கொள்ள வேண்டும். தப்பு விஷயங்களில் ஈடுபட்டால் துன்பத்தில் சிக்கிக் கொள்ள நேரிடும்.

* உழவுத் தொழிலால் வயிறு நிரம்புகிறது. நாடகம், நாட்டியம் போன்ற கலைகளால் வயிற்றுக்கு பலனில்லா விட்டாலும், மனதிற்கு நல்ல உணர்வை ஊட்டுவதாக அமைய வேண்டும்.

* உலகிலுள்ள அத்தனை பொருட்களையும் படைத்து ஒழுங்குடன் நடத்தி வருகின்ற பெரிய அறிவு ஒன்று இருக்கிறது. அதையே தெய்வம் என்று நம் அழைக்கிறோம்.

* கடவுளை முழுமையாக அறிந்து விட்டால், மனதில் இருக்கும் பேராசை, கோபம், வெறுப்பு போன்ற தீய குணங்கள் அடியோடு அகன்று விடும்.

- காஞ்சிப்பெரியவர்

Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy
 
Consolidated Discourses of Maha Periyavaa - Source of Sage of Kanchi on 01 Mar 2014

1) Mahaperiyava Kural Audio CD release at Shankara Nethralaya on Jan 8th 2013
'Periyava Kural' Audio Release At Sankara Nethralaya On 8th Jan 2013 - YouTube
2) Mahaperiyava singing Thevaram: Periyava Kural CD 1 - Track7
Maasil Veenaiyum Maalai Madhiyamum Veesu thendralum veengila veynilum ...Translation:
The shelter under the parallel feet of the God, my boss, is like the nice melody of Veena (Musical Instrument), the early evening moon, pleasant breeze, the Spring, a pond where bees are in making sound.
Periyava Kural : Maha Periyava Singing Thevaram - YouTube
3) Devi Stuthi : Periyava Kural CD 3 - Track 2
Devi Stuthi : Periyava Kural - YouTube
4) Arudhra Darshanam --- Part 1
Mahaperiyava singing Appayya Dikshithar's composition "Moulau ganga shashAnkau!'
Moulau Ganga shashankau, kara caraNa talE shitalanga bhujangaha,Vame bhaghe dayadra , himagiri tanaya candanam sarvagAtre, Ittam shitam pabhutam, tava kanakasabha natha sodum kvashaktihi citte nirvida tapte, yadi bhavati na te nitya vaso madlyE.
mahA periyavA upanyAsam - ArudhrA dharshan 1 - YouTube
5) Arudhra Darshanam --- Part 2 Jyothir Lingams
mahA periyavA upanyAsam - ArudhrA dharshan 2 - YouTube
6) Arudhra Darshanam --- Part 3
mahA periyavA upanyAsam - ArudhrA dharshan 3 - YouTube
7) Song on Periyava: Parthukitte Irukka Thonuthu Part 1
Periyava Song Parthukitu Iruka Thonuthu 1 - YouTube
8) Song on Periyava: Parthukitte Irukka Thonuthu Part 2
Periyava Song Parthukitu Iruka Thonuthu 2 - YouTube
9) Deivathin Kural: Posted by Shankara TV on June 25th, 2012
Woes of Dowry
??????????? ????? 25.6.2012 - YouTube
10) Deivathin Kural: Posted by Shankara TV on July 16th, 2012
Difficulties in life and how to deal with them.
??????????? ????? 16.7.2012 - YouTube
11) Deivathin Kural: Posted by Shankara TV on July 17th, 2012
Vishnu Sahasranamam and Shiva Sahasranamam
??????????? ????? 17.7.2012 - YouTube
12) Deivathin Kural: Posted by Shankara TV on July 18th, 2012
??????????? ????? 18.7.2012 - YouTube
13) Deivathin Kural: Posted by Shankara TV on July 23rd, 2012
Expounding on Adi Shankara's Soundarya Lahari, stanza 69
Verse 69: Ambal's three Rehkas on Her throatgale rekhAs-tisro gati-gamaka-gItaika-nipuNe vivAha-vyAnaddha-praguNa-guNa-sankhyA-pratibhuvaH / virAjante nAnAvidha-madhura-rAgAkara-bhuvAM trayANAM grAmANAM sthiti-niyama-sImAna iva te // 69 //
??????????? ????? 23.7.2012 - YouTube
14) Deivathin Kural: Posted by Shankara TV on Aug 9th, 2012
Thiruppavai, Thiruvembavai
??????????? ????? 9.8.2012 - YouTube
15) Deivathin Kural: Posted by Shankara TV on Sep 6th, 2012
Dowry, Devi (Mooka pancha sati)
??????????? ????? 6.9.2012 - YouTube
16) Deivathin Kural: Posted by Shankara TV on Sep 28th, 2012
Manickavachagar
??????????? ????? 28.9.2012 - YouTube
17) Mahaperiyava Speech --- Vol 1
Avvaiyar, Pillaiyar, Vinayakar Agaval
MAHAPERIYAVAA SPEECH - VOL 1 - YouTube
18) Mahaperiyava Speech --- Vol 2
Pillaiyar, Lord Ganesh
MAHAPERIYAVAA SPEECH - V0L 2 - YouTube
19) Mahaperiyava Speech --- Vol 3
Bhagavad Gita Chapter 18, Stanza 55
bhaktya mam abhijanati yavan yas casmi tattvatah
tato mam tattvato jnatva visate tad-anantaram
Meaning
bhaktya--by pure devotional service; mam--Me; abhijanati--one can know; yavan--as much as; yah ca asmi--as I am; tattvatah--in truth; tatah--thereafter; mam--Me; tattvatah--by truth; jnatva--knowing; visate--enters; tat-anantaram--thereafter.
Translation
One can understand the Supreme Personality as He is only by devotional service. And when one is in full consciousness of the Supreme Lord by such devotion, he can enter into the kingdom of God.
MAHAPERIYAVAA SPEECH - VOL 3 - YouTube
20) Mahaperiyava Speech --- Vol 4 Part 1
maya hy esha maya shrishta yan mam pashyasi narada
sarva-bhuta-gunair yuktam naiva tvam jnatum arhasiMeaning
O Narada! What you see of Me is just an appearance that I have
created. This form of Me, as endowed with the various gunas, is not to be known as the Truth.

MAHAPERIYAVAA SPEECH - VOL 4 - YouTube
21) Mahaperiyava Speech --- Vol 4 Part 2
maya hyesha maya shrishta yan mam pashyasi narada
sarva-bhuta-gunair yuktam naiva tvam jnatum arhasi
continued from #20
MAHAPERIYAVAA SPEECH - VOL 5 - YouTube
22) Mahaperiyava Speech --- Vol 6
Developing and sustaining children for Vaideega activities
MAHAPERIYAVAA SPEECH - VOL 6 - YouTube
23) Mahaperiyava Speech --- Vol 7
Developing and sustaining children for Vaideega activities --- continued from above
MAHAPERIYAVAA SPEECH - VOL 7 - YouTube
24) Mahaperiyava Speech --- Vol 8 - Woes of Dowry-
MAHAPERIYAVAA SPEECH - VOL 8 - YouTube
25) Mahaperiyava Speech
The currency of Dharma is the only one we can take with us when we go to the other world.
Periyava speech - YouTube
26) Bhagavath Karunyam
Never complain about our diffculties for we do not know the sins we have committed in this and the previous lives. Just pray to Ambal by surrendering to Her.
Bhagavath Kaarunyam by mahesh | Mixcloud
27) Story of Deepavali - Part 1 Upanayanam, Vaidheegam
Story behind Deepawali - Part 1 by mahesh | Mixcloud
28) Story of Deepavali --- Part 2
Story behind Deepawali - Part 2 by mahesh | Mixcloud
29) Religion conversion
periyava_ambal_dhyanam by mahesh | Mixcloud
30) Basic Education for the young and the old!
periyava_aadharakkalvi by mahesh | Mixcloud
31) Dislike for another Language
Periyava_Bhaasha_Dwesham by mahesh | Mixcloud
32) Sanskrit as National Language --- continued from above
Periyava_Samskrutam by mahesh | Mixcloud
33) Kaapalikan --- Part 1 (from Adi Shankara's time)
Adi Shankara's teachings
Periyava_Kaapaalikan by mahesh | Mixcloud
34) Kaapalikan --- Part 2 (from Adi Shankara's time)
Adi Shankara's teachings
Periyava_Kaapaalikan2 by mahesh | Mixcloud
35) Padmapaadhar (Adi Shankara's Sishya)
Periyava_Padmapaadar by mahesh | Mixcloud
36) Shaivam/Vaishanavam
Periyava_Saivam_Vaishnavam by mahesh | Mixcloud
37) Thirukkural
Periyava_Thirukkural by mahesh | Mixcloud
38) Karthigai Deepam
Karthigai Deepam by mahesh | Mixcloud
39) Sustenance of Vedas
Veda Revival by mahesh | Mixcloud
40) Sivananda Lahari
Verse 61
ankOlaM nija bIja santatir-ayaskAntOpalaM sUcikA
sAdhvI naija vibhuM latA kshiti-ruhaM sindhuh-sarid-vallabham
prApnOtIha yathA tathA paSu-patEH pAdAravinda-dvayaM
cEtOvRttir-upEtya tishThati sadA sA bhaktir-iti-ucyatE 61
Meaning: Like the real seed progeny reaches for the mother ankola tree, Like the iron needle reaches for the load stone. Like the chaste woman reaches for her lord, Like the tender creeper reaches for near by trees, Like the river reaches for the sea, If the spirit of the mind, Reaches for the lotus feet of Pasupathi, And stays there always, Then that state is called devotion. (Thanks to Shaivam.org for the above meaning) He also speaks about Vedas, Upanayanam, Marriages here.
Sivananda Lahari Slokam by mahesh | Mixcloud
 

Pranams,

I would like to share the following mail received from one of my friends:-

மன சித்த சுத்திக்கு "ஆசாரம்" தேவை - ஸ்ரீ மஹா பெரியவா

இன்றைய நாளில் fashion என்ற பெயரில் , கை, கால் முதலான கர்மேந்திரியங்களுக்கு வேலை கொடுக்காமல் சோம்பேறியாய் கடுமையான ஆசாரங்களை விட்டொழித்தன விளைவு, மனம் சித்த சுத்தி அடைய மாட்டேங்கிறது என்பதையும், "ஆசாரம்" ஏன் தேவை? அது மன சித்த சுத்திக்கு எவ்வாறு முக்கியம் எனபதை ஸ்ரீ பெரியவா மிக அழகாக கூறும் விளக்கம்.

ரிஃபார்ம் ரிலிஜன் என்று தனியாகப் போகாமல் நம்முடைய மதத்துடைய 'நிஜ ஸ்பரூப'த்தின் custodians (காவலர்) தாங்கள்தான் என்கிறவர்களில் இன்னொரு வகையினர் வேதாந்தா, வேதாந்தா என்று சொல்லிக் கொண்டு, ஃபிலாஸபியைத் தவிர கர்மாக்களாக இருக்கிற எல்லாமே நம் மதத்தின் சக்கைதான் என்று தூக்கிப்போடச் சொல்கிறார்கள். வாஸ்தவத்தில் ஸாமானிய மநுஷ்யனின் தரத்தை உயர்த்தக் கர்மா இல்லாமல் முடியவே முடியாது. அதனால்தான் வைதிகாநுஷ்டானங்களை விலக்கி விட்டவர்களும் ராட்டையைச் சுற்ற வேண்டும், handicrafts செய்ய வேண்டும் என்று ஓயாமல் ஏதாவது வேலை வாங்கினார்கள். திருப்பத் திருப்பிச் சொன்னதையே, எத்தனை தரம் சொன்னாலும் போதாது என்று, மறுபடியும் சொல்கிறேன் :

காரியம், ஓயாத உழைப்பு இல்லாமல் சித்த சுத்தி ஸாத்யமேயில்லை.
சாஸ்திரத்தில் முதலில் இவன் மனஸை அநுஸரித்து இஹ லோக, ஸ்வர்க்க லோக லாபங்களுக்காகவே, அதாவது இந்திரிய ஸெளக்யங்களுக்காகவே கர்மாவைக் கொடுத்திருக்கிறது. ஆனால் இந்தக் கர்மாக்காளைச் செய்வதாலேயே இந்திரியங்களின் இழுப்பு கொஞ்சங் கொஞ்சமாகக் குறைகிறது. சித்தம் சுத்தமாகி மனஸ்னாது (கார்யமில்லாமலே) தியானம் செய்யப் பழக்கப் படுத்தப்படுகிறது. கார்யமே வேண்டாம், "வேதாந்தா","த்யானா" என்றால் என்ன ஆகிறது? இதை நான் சொல்வதைவிடக் கிருஷ்ண பரமாத்மாவின் வாக்கில் சொல்கிறேன்:

கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந் I
இந்த்ரியார்தான் விமூடாத்மா மித்யாசார : ஸ உச்யதே II
(கீதை : 3.6)

அதாவது :"காரியத்திலா ஞானம் இருக்கிறது? அதெல்லாம் வேண்டாம்" என்று கை, கால் முதலான கர்மேந்திரியங்களுக்கு வேலை கொடுக்காமல் நிறுத்திவிட்டு நேராக மனஸை சுத்தமான தியானத்தில் நிறுத்துவதற்கு ஆரம்பித்தால் என்ன ஆகிறது ? அந்த மனஸ் பரமாத்மாவையா நினைக்கிறது? இல்லை.

இந்த்ரியார்தான் மநஸா ஸ்மரந் -

இந்திரியங்களுக்கு வேண்டிய அல்ப ஸுகங்களைத்தான் மனஸு நினைக்கிறது. கர்மாவால் கர்மேந்த்ரியங்களை அழுக்கெடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளாதபோது மனஸும் அழுக்கைவிட்டு மேலே போகாதுதான். வெளியிலே இவன் பெரிய ஃபிலாஸபர், தத்வஞானி, ரிஷி என்றேகூட (இப்போது பத்திரிகைகள் நிறைய ஏற்பட்டபின் எல்லாவற்றுக்கும் அதிசயோக்தி தான்!) பெத்தப் பெயர் இருந்தாலும், லெக்சரிலும் புஸ்தகத்திலும் இவன் எவ்வளவு சோபித்தாலும், இப்படி மனஸிலே அழுக்கை வைத்துக் கொண்டிருப்பவனை பகவான் விமூடாத்மா - 'மஹா மூடன்' என்றுதான் சொல்கிறார். 'மூளையில்லாமல் காரியங்களைக் கட்டிக் கொண்டு அழச் சொல்கிறவர்களிடமிருந்து நம்மையும் நம் மதத்தையுமே ரக்ஷிக்கிற இவர்தான் மஹா புத்திமான்' என்று லோகத்தார் எவரைக் கொண்டாடுகிறார்களோ, அவரையே பகவான் "விமூடாத்மா" என்கிறார். அதற்கும் மேலே இன்னொரு வார்த்தை சொல்கிறார்.

மித்யாசார :

மித்யா என்றால் நிஜம் போல இருந்து கொண்டே பொய்யாகப் போகிற வேஷம் என்று அர்த்தம். ஆசாரமே வேண்டாமென்று இருக்கிற வாய் வேதாந்தியை 'மித்யாசாரன்' என்கிறார். இவன் கர்மாவை விட்டு விட்டான். 'மனஸ் சுத்தம்தானே எல்லாம்?' என்கிறான். ஆனாலும் இவன் மனஸ் அழுக்கிலேயே கிடக்கிறது. வெளியே வேதாந்தி போல வேஷம் போடுகிறான். இப்படி வெளியே ஒன்றாகவும் உள்ளே வேறாகவும், உயர்ந்த லக்ஷ்யத்தைப் பேசிக்கொண்டும் கீழான ஒழக்கத்தில் போய்க்கொண்டும் இருப்பதால் 'மித்யாசாரன்' என்கிறார். 'மித்யாசாரன்' என்பதற்கு ஸரியான வார்த்தை hypocrite.

காரியம் பண்ணப் பிடிக்காத சோம்பேறித்தனம், ஒரு ஒழுக்கத்தில் கட்டுப்பட்டிருக்கப் பிரியமில்லாமை - இதற்காகவேதான் "Vedanta, Vedanta" என்று சாஸ்திர கர்மாவிலிருந்து பிரித்துப் பேசுகிறார்கள். உள்ளே பார்த்தால் - இதைச் சொல்ல ரொம்ப வருத்தமாயிருக்கிறது - எந்தக் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் இவர்கள் போயிருப்பதால் அநேக lapses* (*தமிழில் சொன்னால் கடுமையாய் தொனிக்குமென்றே, ஸ்ரீ பெரியவா "lapses " என்று சொன்னதாக சொல்கிறார்கள்.) இருப்பது தெரிகிறது. ஆசாரக்காரர்கள் மூடர்களாயிருக்கட்டும், ஸ்வயநலக் கும்பலாயிருக்கட்டும், இரக்கமேயில்லாத துஷ்டர்களாகத்தான் இருக்கட்டும். ஆனால் அவர்களிடம் இப்படிப்பட்ட lapses இருப்பதில்லையல்லவா? அதுதான் discipline (நெறி) என்பதன் சக்தி.

ஆகக்கூடி பலவிதமான ஆசாரச் சீர்திருத்தங்களைப் பற்றிச் சுருக்கமாகப் பார்த்தோமேயானால், பழைய ஒழுக்கத்தையும் காரியங்களையும் எடுத்துவிட்டுப் புதியதை வைத்தால், பழசை மீறிய பழக்கத்தில் புதிசையும் மீறிக் கட்டுப்பாடில்லாமல் போகிறார்கள். இவர்கள் காரியம் என்று பண்ணுவதெல்லாம், ஸ்வயலாபம், 'தான்' என்கிறதை வளர்த்துக்கொள்வது என்பதற்காகத்தான் ஆகிறது.

ஆசாரங்கள் கடுமையாக இருக்கிறதென்று இளக்கி, ஃபாஷன் பண்ணினால் பலனும் இளகி ஓடியே விடுகிறது. சித்த சுத்தி ஏறப்பட மாட்டேன் என்கிறது. "கார்யத்தில் ஒன்றுமில்லை; வேதாந்தா" என்றால் வெறும் சோம்பேறியாகப் போகிறான்; அப்போது மனஸ் சுத்தமாகாமல் போகிறது என்பது மட்டுமின்றி, இருக்கிற சுத்தமும் போய் அழுக்கைச் சேர்த்துக் கொள்கிறது. ஆசாரமில்லாமலிருக்கிற அநாசாரம்;ஆசாரக் கட்டுப்பாடு போனதால் கண்டதைத் தின்பது, குடிப்பது, கலஹம் செய்வது, இன்னும் மஹாபாபங்களைப் பண்ணுவது என்கிற துராசாரம்;உள்ளன்றும் புறமொன்றுமாக ஹிபாக்ரிஸி செய்யும் மித்யாசாரம் என்பவைதான் மொத்தத்தில் விருத்தியாகின்றன


Regards

Courtesy: Sri.Mayavaram Guru
 
தனக்கு மிஞ்சிதான் தான தர்மம் - உண்மையன பொருளை மஹாஸ்வாமி விளக்குகிறார்....

தனக்கு மிஞ்சி தர்மம் என்றுதானே சொல்லியிருக்கு? நீயே ச்ரம தசையில் இருக்கிறபோது மற்றவர்களுக்காக வேறு ஏன் சிரமப் படுகிறாய்? என்று கேட்கத்தான் கேட்பார்கள். அப்போது "நான் சிரம தசையில் இருக்கிறேன் என்றால் பூர்வ ஜன்மாவில் ஈஸ்வராக்ஞைகளை சரியாகப் பண்ணாததற்கு இது தண்டனை என்றே அர்த்தம்.

போன ஜன்மத்தில் நான் பிறத்தியாருக்கு எந்த உபகாரமும் தொண்டும் பண்ணாததால் தான் இப்போது கஷ்டப்படுகிறேன். அதனாலேயே இப்போது தான் நிச்சயமாக நான் பரோபகாரம் செய்தாகவேண்டும். தனக்கு மிஞ்சிப் போன ஜன்மாவின் பாக்கியாக, அப்போதைய உடம்பு போன பிறகும் மிஞ்சி, இப்போது வந்து சேர்ந்திருக்கும் இந்த கஷ்டம் தான் "தனக்கு மிஞ்சி". இது தீருவதற்காகவே தர்மம் செய்தாக வேண்டும். அதுதான் "தனக்கு மிஞ்சி தர்மம்!"

நீர் அதற்கு வேறேதோ தப்பர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கிறீர். இப்போது தான் தன்னையும் மிஞ்சி, அதாவது என் சொந்த கஷ்டத்தையும் மிஞ்சி, தர்மம் பண்ணினால் தான் வருங்காலத்திலாவது நன்றாயிருப்பேன்" என்று பதில் சொல்லவேண்டும்.


Source: Sage of Kanchi-Suresh Krishnaurthy
 
நீ தீர்க்க ஸுமங்கலியா இருப்பே!.

காஞ்சிபுரத்தில் பெரியவா தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு

ஸுமங்கலி பெரியவாளை நமஸ்காரம் பண்ணிவிட்டு, அவரிடம் ஏதோ விண்ணப்பம் குடுக்க
நினைத்தவள் போல அவருக்கு அருகிலேயே ஒதுங்கி நின்றாள். பெரியவா, என்ன வேணும்?
என்பது போல் அவளைப் பார்த்தார். நிஜமாகவே மனஸ் உருகி ஒரு ப்ரார்த்தனையை அவரிடம்
வேண்டினாள்......

"பெரியவா.......நா, தீர்க்க ஸுமங்கலியா இருக்கணும்......... பெரியவாதான்
அநுக்ரஹம் பண்ணணும் "

சுற்றி இருந்தவர்களும் மனஸை கூராக்கிக் கொண்டு பெரியவாளின் திருவாக்கை
எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

"ஒங்காத்துக்கு யார் வந்து கேட்டாலும், வயறு நெறைய்..ய சாப்பாடு போடு!
தீர்த்தம் குடு! பிச்சைக்காரா வந்து கேட்டா......கட்டாயமா அவாளுக்கு தர்மம்
பண்ணு!......... நீ தீர்க்க ஸுமங்கலியா இருப்பே!.."

திருக்கரத்தை தூக்கி ஆசிர்வாதம் பண்ணிவிட்டு, குங்குமப்ரஸாதம் குடுத்து
அனுப்பினார். அந்த அம்மாவுக்கோ பரம ஸந்தோஷம்!

"கட்டாயம்.....அப்டியே பண்றேன் பெரியவா......." சொன்னவாறு செய்யவும் செய்தாள்.
தன்னுடைய எண்பத்தாறாவது வயஸில் ஸுமங்கலியாக சிவலோக ப்ராப்தி அடைந்தாள்.

"நம்ம வீடுகளுக்கு யார் வந்தாலும், அவாளுக்கு வயறு நன்னா நெறையற மாதிரி, முகம்
சுளிக்காம, சந்தோஷமா சாப்பாடு போட்டாலும், தர்மம்ன்னு யார் வந்தாலும் நம்மால
முடிஞ்சதை தாராளமா குடுத்தாலும்....இகலோ 65; சௌக்யமும், பரலோக சௌக்யமும் நிச்சயமா
கெடைக்கும்!.." இது பெரியவாளுடைய அருள்வாக்கு. தன்னுடைய பக்தர்களிடமும்
அடிக்கடி இதை வலியுறுத்துவார்.

https://groups.google.com/forum/#!topic/amrithavahini/mThrJH78hSM
 

அவதார புருஷர்களிடம் உண்மையான பக்தி கொண்டவர்கள், எங்கிருந்தாலும் எந்த ஆபத்திலிருந்தும் நிச்சயம் காப்பாற்றப் படுவார்கள்.



காஞ்சியில் ஒரு கோவிலில் பெரியவா எல்லாருக்கும் தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார். அப்போது உணர்ச்சிப் பெருக்கை உடலால் சமாளிக்க முடியாமல் ஒரு தம்பதி தங்கள் பெண் குழந்தையுடன் வந்து பெரியவாளை நமஸ்கரித்தனர்.








”ஆந்த்ரப்ரபா” பத்திரிகையின் ஆசிரியரும், காந்திஜியின் நெருக்கமான தோழருமான நீலம் ராஜு வேங்கடஸேஷைய்யாவின; புதல்விதான் அந்த அம்மா. பெரியவா அவர்களுடைய க்ஷேம லாபங்களை விஜாரித்தார். அவர்கள் கண்களில் கண்ணீர் வழிந்தோட கூறியதை கேட்டு, சுற்றி நின்று கொண்டிருந்த அத்தனை பேருக்கும் மயிர்க்கூச்சல் எடுத்தது..

“இன்னிக்கு பெரியவாளோட க்ருபையாலதான் இங்க வந்திருக்கோம்…நாஙக லண்டன்ல இருக்கோம். கொஞ்ச நாளைக்கு முன்னால [ஏதோ ஒரு தேசத்தின் பெயரைக் கூறி] அந்த country க்கு flight ல போய்ண்டிருந்தோம். திடீர்னு இஞ்சின்ல ஏதோ பெரிய கோளாறு. அதுனால safe landing கூட முடியாது..ங்கற மாதிரி பைலட் எல்லாருக்கும் ரெட் சிக்னல் குடுத்தார். விமானத்துக்குள்ள இருந்த அத்தனை பேரோட மனநிலையும் சொல்லக் கூட முடியாது!


ஆனா, உயிரே போகப்போறது..ங்கற நிலைமைல எங்களால பெரியவாளைத் தவிர வேற எதையுமே நினைக்கத் தோணலை! பெரியவாளோட சரணங்களை மானசீகமா கெட்டியா பிடிச்சிண்டோம்! எங்களோட பயம் பயமாத் தெரியலை! எங்களோட டிராவல் பண்ணிக் கொண்டிருந்த அத்தனை வெளிநாட்டுக்காராளயும் தைரியமா இருக்கச் சொல்லி, “Sage of Kanchi ” ன்னு பெரியவாளை நாங்க தெய்வமாவே வர்ணிச்சு, ஆபத்பாந்தவர் அவரை வேண்டிண்டா, எந்த பெரிய விபத்தும் ஓடிப் போய்டும்ன்னு சொன்னதும், ப்ராணாபத்து வந்தா, பொழைக்கறதுக்கு எதைத்தான் பிடிச்சுக்க மாட்டா?

அன்னிக்கி அந்த முழு விமானமும் பெரியவாளை த்யானிக்கற, பெரியவாளோட திருவடில தஞ்சமடையற த்யானகூடமாயிடுத்த

கொஞ்ச நேரத்துல பைலட்டுகளுக்கு cooperate பண்ணாத முக்யமான இஞ்சின்கள், கருவிகள் எல்லாமே ஏதோ அதிசயமா “miracle “ன்னு அத்தனை பேரும் [பைலட்டுகள் உட்பட] ஆச்சர்யப்படும்படி ரொம்ப லகுவா வேலை செய்ய ஆரம்பிச்சுடுத்து! சாவோட விளிம்புலேர்ந்து எங்க எல்லாரையும் பெரியவா காப்பாத்திட்டா! விமானம் கீழ இறங்கினதும், பைலட்டுலேர்ந்து அத்தனை பேரும் எங்களை சூழ்ந்துண்டு, Kanchi Sage க்கு லெட்டர் எழுதினாலோ, அவரை பார்த்தாலோ, எங்க எல்லாரோட இதயபூர்வமான நன்றியையும், நமஸ்காரத்தையும் கட்டாயம் அவருக்கு தெரிவிக்கணும்ன்னு ரொம்ப கேட்டுண்டா….எங்களு கோ ஒடனே இந்தியாவுக்கு வந்து பெரியவாளை தர்சனம் பண்ணி, அவருக்கு பாதபூஜை பண்ணனும்னு ரொம்ப தவியா தவிச்சு, நேரே இங்க வந்துட்டோம்…” என்று விம்மல்களுக்கிடைய சொல்லி முடித்தனர்.

ஆனால் பெரியவாளோ எப்போதும்போல் தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி, தனக்கு அவர்கள் சொல்லித்தான் எதுவுமே தெரிந்தா மாதிரி மலர்ந்து சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார். பாரிஷதரிடம் பாதுகைகளை கொண்டு வரச் சொல்லிவிட்டு, அவர்களுடைய சின்னப் பெண் குழந்தையை அருகில் அழைத்து, பெற்றோர் கொண்டுவந்திருந்த ஸ்வர்ணபுஷ்பங்கள், வாஸனை புஷ்பங்கள் எல்லாவற்றையும் அதன் குட்டி பூ போன்ற கைகளால் அள்ளி அள்ளி போடச் சொன்னார். அதுவும் அழகாக அர்ச்சனையாகவே பாதுகைக்கு புஷ்பங்களைப் போட்டது.

பெரியவா அந்த தம்பதியிடம் “நீங்க ரெண்டு பேரும் சேந்துதான் இந்தக் கொழந்தை. இது பண்ற பூஜை, நீங்களே பண்ணறதுதான்! அதோட ஒங்க கையால பண்றதை விட, இது குட்டிக் கையால பண்ணறச்சே நெறைய அர்ச்சனை, நெறைய நாழி நடக்கும்!” என்று தெலுங்கில் கூறினார். அன்று அங்கு எல்லோருமே அந்த ஆனந்தத்தை அனுபவித்தனர்.


அவதார புருஷர்களிடம் உண்மையான பக்தி கொண்டவர்கள், எங்கிருந்தாலும் எந்த ஆபத்திலிருந்தும் நிச்சயம் காப்பாற்றப் படுவார்கள்.


29 | April | 2013 | PARAMACHARIAR - SPIRITUAL JOURNEY
 
என்ன வரம் வேண்டும் கேள் ?


ப்ரஹலாதன் பற்றிச் சொல்வதுண்டு. பகவான் அவன் முன் தோன்றி, “என்ன வரம் வேண்டும் கேள் ?” என்றார். ப்ரஹலாதன், “எனக்கு எந்த வரமும் வேண்டாம். உங்களைத் தரிசித்ததே போதும். அதற்கு மேலான வரம் எது ?” என்றான்.

-
ஆனால் பகவான், “என்னை உபாசித்ததினால் உனக்குக் கிடைத்த பலன் என் தரிசனம். என்னை தரிசனம் செய்ததற்கு பலன் உண்டு. ஆகவே, என்ன விருப்பமோ அதை வரமாகக் கேள்” என்றார். அப்போது ப்ரஹலாதன் “எந்த விதமான விருப்பமும் என் மனதில் தோன்றாமல் இருக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை வரமாக அருள வேண்டும்” என்றான்.
-
எம்.எஸ்.அம்மாவின் பக்தியும் மஹா பெரியவர்களிடத்தில்அப்படித்தான். மஹா பெரியவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது (அஜித:). ஆனால் பக்தர்களுக்குக் கட்டுப்படுவார். (பக்தஜித:). அந்த பக்திக்குக் கட்டுப்பட்டுத்தான் அவர் எம்.எஸ்.அம்மா ஐ.நா. சபையில் பாடுவதற்கு ‘மைத்ரீம் பஜத‘ பாடலை இயற்றித் தந்தார்.
-
அந்தப் பாடலில் கடைசி இரண்டு வரிகள் என்ன சொல்கின்றன….?
-
தாம்யத தந்த தயத்வம் ஜனதா;
ச்ரேயோ பூயாத் சகல ஜனானாம்.
-
இதற்கு என்ன அர்த்தம்…? ‘புலனடக்கம், ஈகை, தயை ஆகிய குணங்கள் பூவுலக மக்களிடையே பரவட்டும்; பூமியில் உள்ள சகல ஜனங்களும் ஸ்ரேயசுடன் (சுபிட்சமுடன்) விளங்கட்டும்’ என்று அர்த்தம்.
-
இந்தப் பிரார்த்தனையை எத்தனை தடவை உள்ளமுருகிப் பாடியிருப்பார் எம்.எஸ்.அம்மா ! இன்று அணு ஆயுதமும், பயங்கரவாதமும் வலிமை பொருந்திய தேசங்களின் அராஜகமும் ஓங்குகிறபோதும் கூட உலகில் மனிதம் வாழ்கிறது என்றால், அதற்கு இது போன்ற பிரார்த்தனைகள் அன்றி வேறு என்ன காரணமாக இருக்க முடியும்?


10-??? ??????? ? ?????????? ?????? | Balhanuman's Blog
 
கடன் வாங்கின பாவத்துக்கு பரிகாரமே இல்லை



பெரியவாளிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒரு முதியவர், காலகதி அடையும் தறுவாயில் தன் மகனை அழைத்து சில விஷயங்களை சொல்லும் போது, தான் ஒருவரிடம் நூறு ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதை அவன் திருப்பித் தரவேண்டும் என்று சொல்லிவிட்டு இறந்தார். அப்போது மகனுக்கே 62 வயது. கிராமத்தில் கர்ணம் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். சம்பளமோ 15 ரூபாய்தான். அப்பாவின் கடைசி வாக்கை காப்பாற்ற கஷ்டப்பட்டு மூன்று வர்ஷங்களில் எப்படியோ 100 ரூபாய் சேர்த்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், அப்பாவுக்கு கடன் குடுத்தவர் யாரென்றே தெரியாது! சேமித்த பணத்தை யாரிடம் கொடுப்பது?

மஹாபெரியவா - திக்கற்றவருக்கு தெய்வமே துணை! ஓடினார் பெரியவாளிடம்! விவரத்தை சொன்னார்.

“மடத்ல ஒரு நாள் தங்கு” உத்தரவானது. மறுநாள் காலை பெரியவா அவரிடம் “இங்கேர்ந்து நேரா நீ ஆலத்தம்பாடி கிராமத்துக்கு போ! அங்க இருக்கும் அக்ரஹாரத்ல கடைசியா இருக்கும் வீட்ல இருக்கறவர்கிட்டதான் ஒங்கப்பா கடன் வாங்கினார்”.

ஆலத்தம்பாடி அக்ரஹாரத்தில் பெரியவா சொன்ன வீட்டுக்கு சென்றால் ஆச்சர்யம்! அந்த வீட்டுப் பெரியவர் காலகதி அடைந்துவிட்டார். அவருடைய மகனிடம் விஷயத்தை சொன்னதும், அவருக்கு ஒரே வியப்பு! “எங்கப்பாவும் செத்துப் போகும்போது சில விஷயங்கள்லாம் சொன்னார். ஆனா, உங்கப்பாவுக்கு குடுத்த கடன் பத்தின விஷயத்தை சொல்லவேயில்லையே! அதுனால, இந்த பணத்தை நான் வாங்கிக்க மாட்டேன்” திட்டவட்டமாக சொல்லிவிட்டார். அவரையும் அழைத்துக் கொண்டு பெரியவாளிடம் வந்தார். ரெண்டுபக்கத்து ஞாயத்தை கேட்டதும், பெரியவா முகத்தில் புன்னகை.

“இங்கதான் தர்மம் இருக்கு. இன்னொர்த்தர் சாமானை வாங்கறப்போ நமக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஆனா, அதை திருப்பித் தரணும்னா யோசிப்போம்! அதுனால, கடன் வாங்கின பாவத்துக்கு பரிகாரமே இல்லை. இங்க, ஒங்க ரெண்டு பேரோட விவகாரம் எப்டி? வாங்கினவர் திருப்பித் தரணும்ன்னு நெனைக்கிறார குடுத்தவரோட பிள்ளையோ, அப்பா தங்கிட்ட அதைப் பத்தி சொல்லாததால, வாங்கிக்க மாட்டேங்கறார்.

ஆனா, தர்மம் ஒங்களுக்கு தெரியாது இல்லியா? அடுத்தவா பொருளுக்கு ஆசைப்படாதவன் தர்மத்தை காப்பாத்தறான். ரெண்டு பேரும் காமாக்ஷி கோவிலுக்கு போய், இந்த பணத்தை அங்க உண்டியல்ல போட்டுடுங்கோ! அது அவளோட பணம்” ஆசீர்வாதம் பண்ணினார்.



Source: Sage of Kanchi

S Chandra Sekhar
 
குல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும் !!!!


பெரியவா ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்து வந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது. இருந்தும் அந்த விவசாயி, "சாமி… ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாமான்னு கூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.

பெரியவா அவரிடம், "குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார்.

"குலதெய்வமா… அப்படின்னா?” – திருப்பிக் கேட்டார் அவர்.

"சரிதான்… உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?”

"ஆமாம் சாமி… வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பி வந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.

:உன் முன்னோர்கள் யாராவது இப்ப உயிரோட இருக்காங்களா?”

"ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழி பாட்டனார் அவர்.”

"அவர்கிட்ட போய் உங்க குலதெய்வத்தைப் பத்தி கொஞ்சம் கேட்டுண்டு வா.”

"ஏன் சாமி… அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாதான் என் பிரச்னை தீருமா?”

"அப்படித்தான் வெச்சுக்கோயேன்…”

"என்ன சாமி நீங்க… ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?”


"நான் அப்படிச் சொல்லவே இல்லையே!”

"அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம, குலதெய்வத்த தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்றீங்களே!”

"காரணமாத்தான் சொல்றேன். ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது. நீ, என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை. வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான். எனக்கு, பாத்திரமே கூட தேவையில்லை. ஆனா, உனக்கு பாத்திரம்தான் பிரதான தேவை. பாத்திரம் இருந்தாத் தானே எதையும் அதுல போட்டு வெக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளிய போகுமா போகாதா?”

"அப்ப குலதெய்வம் தான் பாத்திரமா… அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?”

"நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரைலபட நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்” என்று அவரை அனுப்பி வைத்தார்.

அவரும் ஒரு பத்து நாள் கழித்து, "சாமி! நீங்க சொன்னதைச் செய்துட்டேன். எங்க குலதெய்வம் பேச்சாயிங்கற ஒரு அம்மன். அதோட கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சுபோய் கிடந்துச்சு. யாருமே போகாம விட்டதால, கோயிலை புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க, ஒரு நடு கல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி கும்பிட்டுட்டு வரேன்” என்றார்.



"சபாஷ்… அந்தக் கோயிலை நல்லபடியா எடுத்துக்கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்” என்றார் பெரியவா!

"சாமி! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே… எதுவுமே சொல்லலியே?”

"அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன். நான் சொன்னதை மறந்துடாதே… பேச்சாயியை விட்டுடாதே!”


அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவாளைக் காண திரும்ப வந்தார். இந்த முறை அவரிடம் ஒரு செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவாளை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்று தான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.


"சாமி… நான் இப்ப நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! ஆனா, எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க… இந்த அதிசயம் எப்படி நடந்தது?” – என்று திரும்ப அவர் கேட்டார். பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார். அது…? ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ என்பது குறித்து பெரியவா சொன்னது மிகவும் கவனமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.


"நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம் தான் குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால், நமக்கு முன் பிறந்த எல்லோருமே முன்னோர்கள் தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப் பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.



பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம் வேறாக, உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும். அதுதான் இயற்கையும்கூட! ஆனால், கோத்திர வழி மாறாதபடி இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள். காது குத்துவது போன்ற வழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும்.



இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்; போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?”

- பெரியவா சொல்லச் சொல்ல, பர்மாக்காரரிடம் பரவசம்!

"அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது? ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வதுகூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப்பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்… நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.



இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமேகூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?”

- பெரியவா விளக்கி முடிக்க, வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப் போனது.

"இந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப் பெரிய நல்ல சமாச்சாரம் ஒன்றும் அடங்கியுள்ளது. சந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வ கர்மத்தால், அதுவுமல்லாது பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகிறது என்று வையுங்கள். அதாவது, கண்ணுக்குப் புலப்படாத இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை. நான் ஒன்றும் முட்டாளில்லை என்று அவர் வீராப்பா பேசி, நாத்திகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும் நிலை வந்தாலும் பெரிதாய் தோஷமில்லை. ஏனென்றால், அவர் இவ்வாறு ஒரு நாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே, இந்தப் பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால், அவர் ஒருநாள் நிச்சயம் மனம் மாறி அருள் தொடர்புக்கு ஆட்படுவார் என்பது தான் இதிலுள்ள மிகச்சிறந்த ஒரு விஷயமாகும்.



இப்படி நம்பிக்கையற்றுப் போனவர், தன் பிள்ளைகளை அழைத்து வர மாட்டாரே! அவர்கள், இதனால் இந்தப் பரம்பரை தொடர்புக்கு ஆட்படாமல் போய் விடுவார்களே என்று ஒரு கேள்வி எழலாம். பெரும்பாலும் ஒரு வழியில், ஒரே கோத்திரத்தில் திருமணங்கள் புரிந்து கொள்ளாமல், முன்னோர் காட்டிய வழியில் போகும் பட்சத்தில், வாழ்வில் நமக்கு பெரிய கஷ்டங்கள் வருவது இல்லை என்பது தான் இம்மட்டில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். உடம்புக்கு உணவுப் பொருளால் சக்தி ஏற்படுவது போல், மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது."

ஒரு குலதெய்வத்தின் பின்னால், இப்படியான பிரத்யேக சிறப்புகள் நிறையவே உள்ளது. குல தெய்வத்தைப் பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல் போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது. பர்மாக்காரர் வரையிலும் அதுதான் நிகழ்ந்தது. எனக்கும் இந்தக் குலதெய்வ விஷயம் மனசுக்குள் பெரும் உற்சாகத்தைத் தந்தது. நான் எங்கள் குலதெய்வக் கோயிலுக்குப் போன போது என் பார்வையே மாறிப்போனது. அந்தக் கோயிலில் உள்ள ஒவ்வொரு தூண்களையும் தொடும்போது, என் தாத்தன் தொட்ட தூண்.. என் தாத்தன் நின்று மூச்சுவிட்ட இடம்.. என் முப்பாட்டன், அதற்கும் முற்பட்ட பாட்டன் நடந்து திரிந்த தரைப் பரப்பு.. அவர்களைப் பார்த்த பெருமாள் என்னையும் பார்க்கிறார் என்பதா? இல்லை, அவர்கள் பார்த்த பெருமாளை நான் பார்க்கிறேன் என்பதா? ஒன்று உறுதி. அந்தப் பெருமாளை வணங்கிய வம்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவே எத்தனை பெரிய அனுக்ரகம்! இந்தக் குலதெய்வ விளக்கமும், இதன் பின்புலமும் எனக்குள் நம் முன்னோர்கள் மேல் பெரும் மரியாதையை ஏற்படுத்திற்று.



(நன்றி : தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

Natesan Swaminathan
 
Last year I visited MahaPeriyava's Manimandabam and Siruvachoor Madurakaliamman temple, very beautiful and divine.
 
Kanchiyin Karunai Kadal

Podhigai Tamil channel is telecasting “Kanchiyin Karunai Kadal” by Shri Indira Soundararajan from March 17th from 7.00 to 7.30 pm on Monday to Friday.


Please check your local listings too to confirm the time.


Chennai Doordarshan Director has requested to inform the Devotees of Sri Mahaperiyaval and the Kanchi Matam.

Thanks a bunch to Smt Kala Subramanyam and Shri Krishnamurthy Guruvayurappan for running this by me.

?Kanchiyin Karunai Kadal? in Podhigai TV! « Sage of Kanchi
 
முடிந்த உதவி செய்யுங்கள்

* தினமும் அரைமணி நேரமாவது மவுனமாக இருக்கப் பழக வேண்டும். ஜாடை காட்டுவது கூட கூடாது.

* விரதம் மேற்கொள்ளும் நாளில் மவுனத்தையும் கடைபிடித்தால் வாய், வயிற்றுக்கு வேலை இல்லாமல் போய்விடும். அதனால் அன்று நாள் முழுதும் கடவுள் பக்தியில் ஒன்றுவதற்கு ஏதுவாகும்.

* சிக்கனத்தை ஒருவன் கடைபிடித்தால் கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. மற்றவர்களுக்கு இயன்ற உதவிகளையும் செய்ய முடியும்.

* திருமணத்தை பொருளாதாரப் பிரச்னையாக மாற்றியிருப்பது அநியாயம். வரதட்சணை வாங்குவது திருடுவதற்குச் சமம்.

* உலகத்தைப் படைத்து ஒரு கட்டுப்பாட்டில் நிலைநிறுத்தி வைத்திருக்கும் பெரிய அறிவு ஒன்று இருக்கிறது. எங்கும் நிறைந்திருந்திருக்கும் அந்த அறிவாற்றலையே கடவுள் என்று குறிப்பிடுகிறோம்.

* தன் கையே தனக்கு உதவி என்று மட்டும் எண்ணாமல் அந்தக் கையால் மற்றவருக்கும் முடிந்த உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும்.

காஞ்சிப்பெரியவா


Source:Hari Haran
 
Kanchiyin Karunai Kadal

Podhigai Tamil channel is telecasting “Kanchiyin Karunai Kadal” by Shri Indira Soundararajan from March 17th from 7.00 to 7.30 pm on Monday to Friday.


Please check your local listings too to confirm the time.


Chennai Doordarshan Director has requested to inform the Devotees of Sri Mahaperiyaval and the Kanchi Matam.

Thanks a bunch to Smt Kala Subramanyam and Shri Krishnamurthy Guruvayurappan for running this by me.

?Kanchiyin Karunai Kadal? in Podhigai TV! « Sage of Kanchi

hi


i got it from some other forum.....




Namaskarams,

Chennai Doordharsan has informed me that a Programme on Mahaswamigal titled " Kanchian Karunai Kadal " by Sri Indira Soundararajan is being Telecast from starting from Monday to Friday starting from 17th March 2014 in the evening between 07.00 to 07.30 PM.in Podhugai Tamil Channel.

Chennai Doordharsan Director has requested to inform the Devotees of Sri Mahaperyawal and the Kanchi Mutt.




Prayers to Sri Acharyals for your welfare.

Regards,

S..Sundresan
Trustee - Sri Devi Kamakshi Mandir, New Delhi


Ex - Hudco / MTNL / Prachar Bharathi
 
Respected Sundaresan Sir,
Thank you very much for this service. I pray God that all the interested people should be able to reach home by that time from office. If something can be done to alter the time to 8.30 or 9.00 p.m. I feel it will be beter so that many more can be benefitted.
 
நான் சடார்ன்னு மஹா பெரியவா காலைப் பிடிச்சிட்டேன்’

நாற்பது வருஷத்துக்கு முன்னாடி காஞ்சிபுரத்தில் ஒரு அக்ரஹாரத்தின் வழியாய் காமாட்சியம்மன் கோயிலுக்குப் போய்க்கிட்டிருந்தேன். திடீரென பெரியவர் வர்றார்ன்னு குரல் கேட்டது. பரபரப்பாய் மக்கள் இங்கேயும், அங்கேயும் போய்க்கிட்டிருந்தாங்க. நானும் ஏதோ வயசான பெரியவர் வர்றார்ன்னு திரும்பிப் பார்த்தா, மஹா பெரியவா.
நான் சடார்ன்னு அந்த ஞானியின் காலைப் பிடிச்சிட்டேன். அப்புறம் அவர் அந்த இடத்தை விட்டுப் போயிட்டார். நான் ஒரு மணி நேரம் அந்த இடத்திலேயே நின்னேன். அக்ரஹாரத்து அய்யர்களெல்லாம், ‘நாங்க கூட-இவரைத் தொட்டது கிடையாது. நீ காலையே பிடிச்சுட்டியே’ன்னாங்க. நான் ரொம்பப் பயந்து போயி, கோயிலுக்குள் நுழைந்தேன்.

கோயிலுக்குள் மஹா பெரியவர் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் பண்ணிக்கிட்டிருந்தார். தூரத்தில் நின்ன என்னை ‘வா’ன்னு சைகையால கூப்பிட்டார்.

‘சாமி தெரியாமல் காலைப் பிடிச்சுட்டேன்’னேன்.

அதற்குப் பெரியவர் ‘ஏதோ பூர்வஜென்ம வாசம், என் காலைப் பிடிச்சுட்ட. பரவாயில்லை, என்ன பண்றே’ன்னு கேட்டார்.
‘சினிமாவுல இருக்கேன்’ என்றேன்.
‘அதனால என்ன? எங்க இருந்தாலும் ஒழுக்கமாக இரு’ என்று சொல்லி தமது கைகளை எனது கைகள் மீது வைத்து ஆசீர்வாதம் பண்ணினார்.

அன்றிலிருந்து இன்று வரை காமாட்சின்னு சொல்லும்போது, அந்த மஹா பெரியவர் என்னை ஆசீர்வதிக்கிறதா உணர்றேன்.“

~ குணச்சித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி


Source:Subramanian Thyagarajan
 
Former US Ambassador to India narrates Periyava

Former US Ambassador to India narrates Periyava


1963 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சிஅம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காஞ்சி பரமாச்சாரிய சுவாமிகளின் முன்னிலையில் முக்கிய நிகழ்ச்சிகள் நடத்தி வைக்கப்பட்டன. அப்போது அங்கே வந்திருந்த முன்னாள் அமெரிக்க தூதர் டாக்டர் ஆல்பர்ட்ஃபிராங்க்ளின் தனது அநுபவத்தை விவரிக்கிறார்;

“ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் விமான மண்டபத்தில் கூடி இருந்த முக்கியப் பிரமுகர்கள் மரியாதையுடன் விலகி வழிவிட்டார்கள். ஒரு முதியவர் மெல்ல நடந்து வருவதை கண்டேன். அவர்தான் காஞ்சி பரமாச்சாரியசுவாமிகள் என்று புரிந்து கொண்டேன். அவர் எளிமையே உருவானவர். அவர் தனது ஆன்மீக சக்தியைத் தவிர வேறு எதையும் தனக்கென்று வைத்துக் கொள்ளவில்லை. முழுமையான துறவு மிக உயர்ந்த நிலை என்பதை எல்லா மதங்களும் கூறுகின்றன. ஏசு கிறிஸ்து அதைத்தான் தன்னிடம் “நான் காப்பாற்றப் படுவதற்கு எது தேவை?” என்று கேட்ட பணக்காரரிடம் கூறினார்.

இங்கே தமிழ்நாட்டின் கலாசாரம் மிகுந்த நகரில் முக்கியமான ஆலய கும்பாபிஷேக விழாவில் கூடி இருந்த பிரமுகர்கள், செல்வந்தர்கள், முதலாளிகள் அனைவரும் அந்த எளிமையே உருவானவரிடம் கைகட்டி நிற்பதைக் கண்டேன்.
அந்த முதுமையான உடலுக்குள் அதிசயக்கத்தக்க பலமும் மனோதிடமும் இருந்தன. இரும்புக்கம்பிகளைப் பிடித்துக்கொண்டு அவர் மளமளவென்று கோபுரத்தின் உச்சிக்குச் செல்லும் படிகளில் ஏறினார். கைத்தடியை ஊன்றிக்கொண்டு பிராதன வாயிலின் மையப் பகுதியில் அமர்ந்து கொண்டார். அனைவரின் கரங்களும் அவரை நோக்கிக் குவிந்தன. கும்பாபிஷேக விழா முடியும் வரை அவருடைய பக்தர்கள் கட்டுப்பாடுடன் அமர்ந்திருப்பதைக் கண்டேன்!”


ஆல்பர்ட் ஃபிராங்க்ளின் ஆச்சாரிய சுவாமிகளின் அறுபதாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். மத எல்லைகளைக் கடந்து அங்கே வந்து பெரியவர்களின் ஆசிகளைப் பெறும் தகுதி கிடைத்ததற்குப் பெருமை கொள்வதாகக் கூறினார். அவர் பட்டம், பதவி, பணம் எதையும் பொருட்படுத்தாவிட்டாலும் பாரத மக்களின் பெருமையை உலகெங்கும் பரப்பும் ஒளிவிளக்காகத் திகழ்வதாகக் கூறினார்.


இருபத்தோரு வயது நிறைவதற்குள் பாரத தேசம் முழுவதையும், கால்நடையாகவும் பல்லக்கிலும் சென்று மக்கள் அனைவரையும் ஆசிர்வதித்து, கலாச்சாரப் பெருமையையும் ஆன்மீக உணர்வுகளையும் தூண்டி ஒளிபெறச் செய்த பெருமை மகா சுவாமிகளுக்கு உரியது. இந்த வகையில் அவரை பாலகனாக இருந்து பாரததேசத்தின் பெருமை ஒளிவீசிட திக்விஜயங்களின் மூலம் நிகழ்த்திய ஆதிசங்கர பகவத்பாதருக்கு நிகரானவராகவே நான் கருதுகிறேன் என கூறினார்

Former US Ambassador to India narrates Periyava « Sage of Kanchi
 
General Kariappa & Periyava

General Kariappa & Periyava

முன்னாள் இந்திய ராணுவத் தலைவர் கரியப்பா மகாபெரியவர்களைத் தரிசிக்கக் கலவைக்கு வந்தார். இருவரும் கன்னட மொழியில் கீதையைப் பற்றிப் பேசிக்கொண்டே வந்தார்கள். கடைசியில் கரியப்பா எழுந்து இரு கைகளையும் கூப்பியபடி சொல்லுகிறார்;

“சுவாமிஜி! நான் பல யுத்தங்களைப் பார்த்திருக்கிறேன். யுத்த பூமியில் இறந்த உடல்கள் பலவற்றையும் கண்டு நடந்திருக்கிறேன். இரவு பகல் என்று பாராமல் தனியாகப் போய் வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் பயந்த்தே கிடையாது. ஆனால் தங்கள் சந்நதியில் நிற்கும் போது, பயத்தினாலும், மரியாதையினாலும் என்னால் வாய் திறந்து பேச முடியவில்லை!”

இப்படிக் கூறிக் கண்களில் நீர் மல்க, மெய் சிலிர்க்க, கூப்பிய கைவிரல்கள் நடுங்க, நிற்கிறார் கரியப்பா. சுவாமிகள் அவரை அன்புடன் ஆசிர்வதித்து அனுப்பி வைக்கிறார்கள்!

General Kariappa & Periyava « Sage of Kanchi
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top