• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
Namasankeerthan Mela & Sahasra Suwasini Puja in Va, USA — Aug 30 to Sep 1, 2014

Namasankeerthan Mela & Sahasra Suwasini Puja in Va, USA — Aug 30 to Sep 1, 2014 Namasankeerthan Mela & Sahasra Suwasini Puja First time in USA is going to be held during Labor Day weekend from Aug 30th to Sep 1st, 2014 at Chinmaya Somnath in Chantilly, VA by Gnanananda Seva Samajam. Please contact Smt Daya Ravi https://www.facebook.com/daya.ravi.1 and Shri Ravi Radhakrishnan https://www.facebook.com/ravi.radha for further details. Many organizations like Kanchi Kamakoti Seva Foundation, Chinmya Mission, Sai Group & many others including Sri Siva Vishnu Temple, MD & Sri Durga Temple, VA are participating in this Megha event. Please register & attend the Holy Event. For the benefit of out of towners, the organizers have blocked rooms in two nice hotels less than 5 miles from the facility. Please join in large numbers. Namasankeerthan Mela & Sahasra Suwasini Puja in Va, USA ? Aug 30 to Sep 1, 2014 « Sage of Kanchi
 
Dear Naina Sir,

Thanks for posting the links to view '
Mahaangalum Adhisayangalum'.

It is a favorite program for many of my friends and relatives! :)
 
History of Maha Periyavaa - Shri Chandrashekarendra Saraswati
received through an email extracted from Net.
[TABLE="width: 1"]
[TR]
[TD="align: center"][/TD]
[TD][/TD]
[/TR]
[/TABLE]
[TABLE="width: 22"]
[TR]
[TH="colspan: 2, align: center"]Shri Chandrasekharendra Saraswati Swamigal
[/TH]
[/TR]
[TR]
[TD="colspan: 2, align: center"]Kanchi Kamoti Peetam[/TD]
[/TR]
[TR]
[TD="colspan: 2, align: center"]
A 1933 photograph of Chandrasekharendra Saraswati Swamigal[/TD]
[/TR]
[TR]
[TH="bgcolor: #F7D79C, colspan: 2, align: center"] Personal[/TH]
[/TR]
[TR]
[TH]Nationality[/TH]
[TD]Indian[/TD]
[/TR]
[TR]
[TH]Born[/TH]
[TD]Swaminathan
20 May 1894
Villupuram
[/TD]
[/TR]
[TR]
[TH]Died[/TH]
[TD]8 January 1994 (aged 99)
Kanchi mutt
[/TD]
[/TR]
[TR]
[TH]Resting place[/TH]
[TD]Kanchi Mutt[/TD]
[/TR]
[TR]
[TH="bgcolor: #F7D79C, colspan: 2, align: center"]Senior posting[/TH]
[/TR]
[TR]
[TH]Title[/TH]
[TD]Jagadguru[/TD]
[/TR]
[TR]
[TH]Period in office[/TH]
[TD]May 9, 1907 – January 3, 1994[/TD]
[/TR]
[TR]
[TH]Consecration[/TH]
[TD] February 13, 1907[/TD]
[/TR]
[TR]
[TH]Predecessor[/TH]
[TD]Sri Sri Mahadevendra Saraswathi VI[/TD]
[/TR]
[TR]
[TH]Successor[/TH]
[TD]Sri Jayendra Saraswathi[/TD]
[/TR]
[TR]
[TH="bgcolor: #F7D79C, colspan: 2, align: center"]Religious career[/TH]
[/TR]
[TR]
[TH]Ordination[/TH]
[TD]May 9, 1907[/TD]
[/TR]
[/TABLE]
Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal (Tamil: சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்) (May 20, 1894 – January 3, 1994) or the Sage of Kanchi was the 68th Jagadguru in the Kanchi Kamakoti Peetham. He is usually referred to as Paramacharya, Mahaswami or Maha Periyavaal.


Maha Periyavaa was born on 20 May 1894, under Anuradha star according to the Hindu calendar, into a Kannadiga Smartha Hoysala Karnataka Brahmin family in Viluppuram, South Arcot District, Tamil Nadu as Swaminatha. He was the second son of Subramanya Sastri, a District Education Officer. The child was named Swaminatha, after the family deity, Lord Swaminatha of Swamimalai, near Kumbakonam. Swaminatha began his early education at the Arcot American Mission High School at Tindivanam, where his father was working. He was an exceptional student and excelled in several subjects.[SUP][[/SUP] In 1905, his parents performed his Upanayanam, a Vedic ceremony which qualifies a Brahmin boy to begin his Vedic studies under an accomplished teacher. His brother was Sadasiva shastrigal, popularly known as Sivan Sir.

Incidents leading to Sainthood

During the childhood of the Acharya, his father consulted an astrologer who, upon studying the boy's horoscope, is said to have been so stunned that he prostrated himself before the boy exclaiming that "One day the whole world will fall at his feet".In 1906, the 66th Acharya of Sri Kanchi Kamakoti Peetam performed the annual Chaturmasyam (a four-month annual ritual performed by Hindu ascetics while remaining in one place), in a village near Tindivanam in Tamil Nadu. This was Swaminathan’s first exposure to the Math and its Acharya. Later, Swaminathan accompanied his father whenever he visited the Math where the Acharya was deeply impressed by the young boy. In the first week of February 1907, the Kanchi Kamakoti Math had informed Subramanya Sastrigal that Swaminathan's first cousin (son of his mother's sister) was to be installed as the 67th Peetathipathi. The presiding Acharya was then suffering from smallpox and had the premonition that he might not live long. He had, therefore, administered upadesa to his disciple Lakshminathan before he died. Sastrigal being away in Trichinapally on duty arranged for the departure of Swaminathan with his mother to Kanchipuram. The boy and his mother started for Kalavai (where Lakshminathan was camping) to console his aunt who, while also being a widow, had just given up her only son to be an ascetic. They traveled by train to Kanchipuram and halted at the Sankara Math. By then, Lakshminathan had fallen ill: - extracted from Sage of Kanchi

The 67th Acharya also died, after reigning for a brief seven days as the head of the Math. Swaminathan was immediately installed as the 68th head of the Kanchi Kamakoti Peetam on February 13, 1907, the second day of the Tamil month of Masi, Prabhava year. He was given Sanyasa Asramam at the early age of 13 and was named Chandrasekharendra Saraswati. On May 9, 1907 his "Pattabishekam" as the 68th Peetathipathi of Kanchi Kamakoti Peetam was performed at the Kumbakonam Math. Devotees including Shivaji Maharaja of Tanjhavur, government officials and pundits participated in the event.

Even though there was not enough property in the mutt to be administered, the court considering the benefit of the mutt, ordered the mutt to be administered under the “Guardian and Wards Act”. Sri C.H.Venkataramana Iyer, an illustrious personality from Kolinjivadi (Colinjivadi) village near Coimbatore was appointed as guardian by the court. The administration of the mutt was under guardianship from 1911 to May,1915. On the day of Sankara Jayanthi in the year 1915, Swamigal took over the administration of the mutt on the completion of his 21 st year. The administration of the mutt was taken over in name, but the actual work was taken care of by an agent, one Sri Pasupathi Iyer. He was an able administrator who volunteered to do the job without compensation and hailed from Thirupathiripuliyur. Sri Swamigal does not sign any document, instead Sri Mukham stamp is placed on documents

Mahaswami had vedic studies at Kumbakonam Mutt oppostie the Mahamaham tank. In 1915, Sri Anantharama Srowthigal was his prathama adhyayana tutor. As a little girl, his grand daughter Nagam used to carry milk in a pot to the pontiff next door. She said the acharya was sharp in memory and divinely blessed with prediction. Avidly she recalled how the acharya directed her father Narayana Iyer (S/o Anantharama Srowthigal) to vacate the place and go to his house next door. Narayana came home and died within minutes. Thus was his spiritual darshan.When her family visited the Kanchi Mutt in 1991, the aged acharya blessed the family members and enquired if they were Nagam's children. It is understood that the house was later donated to Mutt by the family.

Maha Periyavaal spent several years in the study of the scriptures and Dharma Shastras and acquainted himself with his role as the Head of the Math. He soon gained the reverence and respect of the devotees and people around him. To millions of devotees he was simply "Periyavar"—the revered one or Maha-Periyavar or Periya-Periyavar. "Periyavar" in Tamil means a great person, and conveys endearment, reverence, and devotion. "Mahaswami" and "Paramacharya" are his other well-known appellations.

Maha Periyavaal was the head of the Mutt for eighty-seven years. During this period, the Sri Kanchi Kamakoti Peetam acquired new strength as an institution that propagated Śankara's teachings. The devotion, fervour, and intensity with which the Paramacharya practiced what Śankara had taught are considered to be unparalleled by his devotees. Throughout his life, the focus of his concern and activities was rejuvenating Veda adhyayana, the Dharma Sasthras, and the age-old tradition, which had suffered decline. "Veda rakshanam" was his very life breath, and he referred to this in most of his talks.

Remaining active throughout his life, the sage of Kanchi twice undertook pilgrimages on foot from Rameshwaram in the far south of the Indian peninsula to Banaras in the North.

Providing support through Veda Patashalas (schools teaching Vedic lore) through the Veda Rakshana Nidhi which he founded and honouring Vedic scholars, he reinvigorated Vedic studies in India. He organised regular sadhas ('conferences') which included discussions on arts and culture—these led to a renewed interest in Vedic religion, Dharma sasthras, and the Sanskrit language. His long tenure as Pitadhipathi is considered by many to have been the Golden Era of the Kanchi Kamakoti Peetham. He attained Mukti on January 8, 1994 at the age of 99 and was succeeded by Shri Jayendra Saraswati Swamigal (Pudhu Periyavaa)
Spiritual leadership

Periyava stressed the importance of a Guru in one's life. He repeatedly preached about the importance of following the Dharmic path. His various discourses are available in a volume of books called 'Deivathin Kural' (Voice of the Divine) which have been compiled by R. Ganapathi, a devotee of Periyava, and published by vaanathi publications. These books are available both in Tamil and English. A condensed form of these books is also available in English. These are available in any branch of the Kanchi math.He was a pure Gnani - (Sanskrit - he knew every thing happening in the world). He had proved this several times. So many devotee's mentioning this in there experience accounts for this. His advice to Paul Brunton is a classic example. He treated all religions equally and with respect. He guided the devotees by spiritual means.

Periyava and the Indian Freedom Movement

Though Periyavaa did not get directly into politics, he was interested in the happenings. At Nellichery in Palakkad (Present Day Kerala), Rajaji and Mahatma Gandhi met the Acharya in a cow shed. It was a practice in the mutt to wear silk clothes. But Acharya was the first one to do away with them and shifted to Khadi robes at Rameshwaram. He requested his devotees to do away with foreign/ non natural clothes some time earlier at Trichy.

Periyavaa is credited with reforming the noted Indian National Congress leader during the Indian independence movement,from Tiruchirappalli, F. G. Natesa Iyer. Periyavaa is recorded to have reconverted F.G.Natesa Iyer from the Christian religion back to Hinduism. It is recorded that,F.G. Natesa Iyer, as a young boy of ten years, "took shelter with Englishmen who brought him up and converted him to Christianity. Twenty years later, dissatisfied with the ability of the priests to clarify his doubts, he met the Great Kanchi Sankaracharya and, getting satisfactory answers from him, reconverted to Hinduism.""
The Indian National Congress, in the decade of the 1920s, started organising the Non-Cooperation Movement, which involved getting many people to protest on the streets. F.G.Natesa Iyer, the leading Congress activist of Tiruchirappalli then, as also the elected Mayor, took this opportunity to convert the movement to also show support for the Periyavaa. He described the occasion, thus: "I was nominated by the public as the chairman of the Reception committee for arranging a reception for the Achaarya of Sri Kanchi Kamakoti Peetam. As the municipal chairman , it was my duty to provide a proper welcome and respect to Swamigal who was visiting after a long time. The opportunity to welcome His Holiness in a manner that was exponentially greater than receptions given to kings and viceroys, was accorded to me, along my with supporters Sri MKandaswamy Servai, lawyer Sri. R.Srinivasa Iyengar and the larger public. The procession that was seven miles long, was preceded by seven groups of nadaswaram players, three band groups, four elephants, many horses and camels, instrumental players, Bhajan singers, Seva Samitis. I had the blessing to hold the front side of the ivory palanquin where our guru for the whole world , Sri Sankaracharya Swamigal was seated. He gave darshan to numerous people lined on both sides of the roads, in every floor, irrespective of their religion, caste or creed. There was no count of arathis, Poorna kumbams, garlands, asthika goshams. The procession that started at 6 pm ended at 10 pm in front of the mutt at Thiruvanaikaval. I was enthralled in my service to Swamigal as service to Lord Shiva himself". The day India became free, Periyavaa gave the Maithreem Bhajata song, which was later to be sung at the UN by M S Subbulakshmi. He gave a speech on the significance of the flag and the Dharma chakra in it on that day.

Devotees

Periyava's charm invited the rich and the poor, the old and the young alike to be his devotees.Some of his famous devotees include, their highness the King and Queen of Nepal, theQueen Mother of Greece, the Dalai Lama, Subramanian Swamy, M. S. Subbulakshmi, Indira Gandhi, R. Venkatraman, Shankar Dayal Sharma and Atal Bihari Vajpayee among others. To the Acharya, the VIPs and the common man were one and the same. There were thousands of personal experiences to lakhs of his devotees, who still revere him, and pray to him as a messenger of the Supreme or an ultimate Guru
.
In Kali Yuga, the last yuga in this cycle, Mahaa Periyavaa is THE incarnation. Om Namo Narayanaha Om Namasivaya
Maha Periyava Padam Charanam
Jaya Jaya Shankara Hara Hara Shankara
Above contents received through a mail

I was studying in Thiruvidaimarudur and I was residing in my Grand Father's
place just opposite to Bhajanai Madam.
 
Last edited:
பொன் மழை

பொன் மழை

காமாட்சி அம்மனுக்கு மேலே

ஒரு காலத்தில் பொன்மயமாக இருந்த விமானம், தங்க

ரேக்கெல்லாம் அழிந்து வெறும் செம்பாக இருந்தது.

அந்த கால கட்டத்தில் மடத்துக்கு வசதி போதாது.

அன்பர்களும்,பக்தர்களும் கொடுப்பதைவைத்து மடம்

நடந்து கொண்டிருந்தது.பல நாட்கள் பிட்சா வந்தனத்துக்கு

யார் வரப் போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பது

கூட உண்டு.சந்நியாச தர்மப்படி அந்த பிட்சாவந்தனத்தை

வைத்துத்தான் பெரியவாளுக்கு பிட்சையே நடக்கும்.எனவே

"விமானத்துக்கு தங்கரேக்கைப் பயன்படுத்தாமல் ஏன் வெறும்

செம்பாக வைத்திருக்கிறீர்கள்?" என்று பெரியவா மானேஜரைக்

கேட்ட போது, "பண வசதி போதாது" என்று அவர் தெரிவித்து

விட்டார்.

பெரியவா ஆசாரியை வரவழைத்து எவ்வளவு பவுன் ஆகுமென்று

கேட்டார். விமானமெல்லாம் கழற்றிக் கீழே வைக்கப்பட்டது.

பார்த்துவிட்டு,ஆசாரி பல பவுன்கள் வேண்டும் என்றார்.

"அதற்கு எங்கே போவது?" என்ற கேள்விக்குறி பெரியவா முகத்தில்

பெரியவாளோ,"பண்ண ஆசையிருக்கு,எப்படி என்றுதான்

தெரியலை?" என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.அந்த சமயம்

மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், பெரியவாளை தரிசனம் பண்ண

உள்ளே வந்தார்.பெரியவா கட்டளைப்படி தேவகானம் பொழிந்தார்

பெரியவா அவரிடம், "எனக்கு காமாட்சி அம்மனின் விமானத்தை

தங்க ரேக்கால் ஒளி வீசச் செய்யணும்னு மிகவும் ஆசையாக

இருக்கிறது.இவர்களெல்லாம் அது முடியாத காரியம்......பவுனுக்கு

எங்கே போவது என்கிறார்கள். பெரிய குறையாக இருக்கிறது.

ஆனால்,உன் பாட்டைக் கேட்டதும் அந்தக் குறை தணிந்துவிட்டது.

உனக்குக் கனகதாரா தோத்திரம் தெரியுமோ?" என்று கேட்டார்.

"சுமாராகத் தெரியும்" என்றார் விஸ்வநாதய்யர். அங்கே

வந்திருந்த பெண்மணிகளில் சிலர்,"எனக்குத் தெரியும்" என்று

முன் வந்தனர்.எல்லோரும் சேர்ந்து கனகதாரா தோத்திரத்தை

முழக்கினார்கள்.அதைச் சொல்லி முடித்தார்களோ இல்லையோ

ஒரு அதிசயம் நடந்தது.


அங்கேயிருந்த ஒரு தட்டில் அத்தனை பெண்களும் தங்கள்


நகைநட்டுகளைக் கழட்டிப் போட்டனர்.

"ஆசார்யரது ஸ்லோகத்தை இன்றைக்குச் சொன்னாலும் பொன்மாரி

பொழிகிறதே" என்று பெரியவர் புளகாங்கிதம் அடைந்தார்.அதை

அப்படியே ஆசாரியிடம் அள்ளிக் கொடுத்து ஐந்து நாட்களுக்குள்

தங்க விமானம் பண்ணி எடுத்து வா என்றார்.

அந்த பவுனை எடை போட்டுப் பார்த்தபோது ஆசாரி கேட்ட பவுனுக்கு

ஒரு குந்துமணி கூடவுமில்லை,குறையவுமில்லை என்று

அதிசயப்பட்டார் ஆசாரி.

சர்வ வல்லமை படைத்த மகானான பெரியவா ஒன்று நினைத்தால்

அது நடக்காமல் போய்விடுமா என்ன? ஆறே நாளில் தங்க விமானம்

வந்து,கும்பாபிஷேகமும் அமோகமாக நடந்தேறியது.

ஒரு ஏழைப் பெண்ணுக்காக அம்பாள்,அன்று பொன்மழை பொழிந்தாள்

இன்று பல ஏழைப் பெண்மணிகள் மனதால் ஒன்றுபட்டு,அம்பாளுக்கு

நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பியது போல் அந்த

நிகழ்ச்சி அமைந்தது.

https://groups.google.com/forum/#!topic/tamilamutham/AEiigk28_Uw
 
பஞ்சமுக லிங்கங்கள்

பஞ்சமுக லிங்கங்கள்



ஸ்ரீ ருத்ர மஹாமந்திரத்தில் பரமசிவனுக்கு ஐந்து மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன.

கிழக்குப் பாத்திருக்கும் முகம் தத்புருஷம். இது ரிக் வேதத்திற்குரியது.


தெற்குப் பாத்திருக்கும் முகம் அகோரம். யஜூர் வேதத்திற்குறியது.


மேற்குப் பாத்திருக்கும் முகம் ஸத்யோஜாதம். ஸாம வேதத்திற்கு உரியது.


வடக்கு பாத்திருக்கும் முகம் வாமதேவம். அதர்வண வேதத்திற்குரியது.


ஐந்தாவது ஈசானம் ஆகாயத்தை நோக்கி ஜோதிர்மயமாக உருவமில்லாமல் காணப்படுவது.


ஸ்ரீகாளகஸ்தீஸ்வரர் ஆலயத்திற்கு அடுத்தாற்போல் உள்ள பரமக்குடி என்ற குன்றின் மேல் பஞ்சமுக லிங்கம் இருக்கிறது. ஸ்ரீ பரமாசாரியாள் 1932இலும் பிறகு 1939இலும் அப்பஞ்சமுக லிங்கத்தை தர்சனம் செய்து கொண்டார்கள். 1966ஆம் வருடம் ஸ்ரீ பரமாசாரியாளும் ஸ்ரீ ஜெயேந்திர பெரியவாளும் சாதுர்மாஸிய காலத்தில் இந்தப் பஞ்ச முக லிங்கத்தை தர்சனம் செய்துள்ளார்கள்.


இது போன்ற பஞ்சமுக லிங்கம் திரு ஆனைக்காவல் வடக்கு வீதி ஸ்ரீகாமகோடி பீட்த்தின் சங்கரமடத்தின் பின்புறம் – ராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் உள்ளது. 1943இல் ஸ்ரீ பரமாச்சாரியாள் அங்கு விஜயம் செய்தபொழுது முன்பு பரமக்குடி பஞ்சலிங் கத்தைக் கண்டுபிடித்துச் சொன்னது போல் இந்த லிங்கத்தையும் கண்டுபிடித்துச் சொல்லி நித்ய பூஜை நடத்த ஏற்பாடு செய்தார்கள்.


வாதாபியில் “ஐகோளை” என்னுமிடத்தில் இம்மாதிரி பஞ்சமுக லிங்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
நேபாளத்திலுள்ள பஞ்சமுக பசுபதீஸ்வரர் லிங்கம் ஜகத் பிரசித்தம். அர்ஜுனன் பரமசிவனைக் குறித்துக் கடும் தவம் செய்து பாசுபதாஸ்திரம் பெற்ற ஸ்தலம்.


ஸ்ரீ காஞ்சிபுரத்தில் ஸ்ரீ கச்சபேசுவரர் ஆலயத்தில் நுழைந்தவுடன் வலப்புறமாக உள்ள சந்நிதியில் பஞ்சமுக லிங்கம் இருக்கிறது. இருந்தாலும் நான்கு முக லிங்கம் என்று எழுதியிருக்கிறது. (அவருக்கு ஊர்த்வ முகமும் இருக்கத்தான் வேண்டும்.)


ஞாயிற்றுகிழமைகளில், அதுவும் கார்த்தி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில் குளத்தில் நீராடி கச்சபேசுவரரை தர்சனம் செய்துகொள்வது ரொம்ப விசேஷம்.


தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்திற்கு வேண்டி திருபாற்கடலைக் கடையும்பொழுது ஆமை வடிவம் எடுத்து பகவான் விஷ்ணு சஹாயம் செய்தார். அப்பொழுது அநேக ஜந்துக்களுக்கு ஹிம்சை ஏற்பட்டுவிட்டதற்குப் பிராயச்சித்தமாக இந்த ஈஸ்வரனை வழி பட்டதால் ஈஸ்வரனின் நாமம் கச்சபேசுவரனாகி விட்டது. சூரிய பகவானுக்கு வெளிப்புறம் தனி சந்நிதி இருக்கிறது. வியாதிகளை யெல்லாம் குணப்படுத்தும் ஈஸன் கச்ச பேசுவரன். காஞ்சி செல்பவர்கள் அவசியம் இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டும். காஞ்சிபுர பஸ் நிலையத்திலிருந்து மிக அருகில் இருக்கிறது.


ஐந்து முகங்களுக்கும் உள்ள வேத மந்திரங்கள் ‘தைத்ரிய” உபநிஷதின் ஒரு பகுதியான நாராயணவல்லியில் இருக்கின்றன. நாராயணவல்லி என்று கூறப்படும் இப்பாகம் மஹா நாராயாண உபநிஷத் என்றும் வழங்கப்படும். (ப்ரம்மஸ்ரீ ஸாம்பமூர்த்தி சாஸ்திரிகள் தொகுத்த ஜகத்குரு திவ்ய சரித்திரம்.)

2013 January 01 « Sage of Kanchi
 
ராமநவமியன்று நாம் செய்ய வேண்டியது என்ன? &#2997

ராமநவமியன்று நாம் செய்ய வேண்டியது என்ன? வழிகாட்டும் மஹா பெரியவா! |

ராமநவமியன்று நாம் செய்ய வேண்டியது என்ன? வழிகாட்டும் மஹா பெரியவா! |ரும் ஏப்ரல் 8, செவ்வாய்க்கிழமை அன்று ஸ்ரீ ராமநவமி. இராமபிரான் அவதரித்த திருநாள். பரமேஸ்வரனே ராம, ராம, ராம என்று மூன்று முறை மனமொன்றி சொன்னால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை சொல்லிய பலன் கிடைக்கும் என்று கூறுகிறார் என்றால், இராம நாமத்தின் மகிமையை எப்படி அறுதியிட்டு சொல்வது?


Read more from here:

???????????? ???? ????? ????????? ????? ??????????? ??? ???????! | RightMantra.com
 
மனஸை நெகிழவைக்கும் பெரியவா பேரருள்…

மனஸை நெகிழவைக்கும் பெரியவா பேரருள்…


983617_441681772632775_2574647619912047551_n.png




பெரியவா சாதாரணமாக ரொம்ப கூட்டம் இல்லாவிட்டால் கூட, இரவு பத்து மணியானாலும் பக்தர்களின் குறைகளை கேட்டு உபாயமோ ஆறுதலோ சொல்லுவது வழக்கம். ஒருநாள் எல்லாரும் போனதும், பெரியவா ஸயனிக்க உள்ளே போனார். எனவே சிப்பந்திகள் தாழ்ந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டிருந்தபோது…….
"நான் பெரியவாளை தர்சனம் பண்ணனும்" குரல் கேட்டு யாரென்று பார்த்தால், ஒரு 12 வயஸ் பையன் மிகவும் பரிதாபமான கோலத்தில் நின்று கொண்டிருந்தான்.

"இப்போல்லாம் பெரியவாளை பாக்க முடியாது……..சாப்டுட்டு ஒரு பக்கமா இங்கியே படுத்துக்கோ….காலேல தர்சனம் பண்ணு" பாரிஷதர் சொன்னார். இப்படி ஒரு பரிதாபமான கோலத்தில் ஒரு பையன் வந்திருக்கிறான் என்று பெரியவாளை எழுப்ப முடியாது. சிறுவன் விடுவதாயில்லை.

"எனக்கு இப்போ பசிக்கலை…பெரியவாளை மட்டும் எப்பிடியாவது தர்சனம் பண்ணனும் அண்ணா…" என்று சொல்லிவிட்டு, மிகவும் களைத்துப்போய் இருந்ததால், ஒரு பக்கமாக படுத்துக் கொண்டுவிட்டான். மறுநாள் காலை பெரியவா சிறுவனை தன்னிடம் அழைத்தார்.

"ஏம்பா….எங்கேர்ந்து வரே? ஓம்பேரென்ன? ஒங்கப்பா அம்மா யாரு? எங்கேயிருக்கா?…….." ஸ்ரீ மாதாவின் குரலை அந்த கன்று இனம் கண்டுகொண்டது. கண்களில் நீர் பெருக அந்த குழந்தைப் பையன் சொன்னான்……….

"பெரியவா…..நான் மெட்ராஸ்ல ஒரு ஸ்கூல்ல படிச்சிண்டிருக்கேன்..எங்கப்பா, அம்மா, தங்கை மூணுபேரும் வெளியூர்ல இருந்தா. அப்பா திடீர்னு செத்துப் போய்ட்டார். அம்மாவும் தங்கையும் ரொம்ப கஷ்டப்பட்டா…பாவம்! அப்புறம் பம்பாய்ல ஒரு பெரிய பணக்கார மாமாவாத்ல சமையல் வேலை பண்ணிண்டு இருந்தா…..[சிறுவன் மேலே பேச முடியாமல் விம்மினான்]

…….திடீர்னு எங்கம்மாவும் செத்துப் போய்ட்டா பெரியவா…….." இதற்கு மேல் குழந்தையால் தொடர முடியாமால், விக்கி விக்கி அழ ஆரம்பித்தான்.

"……அப்பா அம்மா ரெண்டுபேரையுமே என்னால கடைசி வரைக்கும் பாக்க முடியலை பெரியவா. அவாளுக்கு கார்யம் பண்ணக்கூட என்னால முடியாது. நேக்கு இன்னும் பூணூல் போடலை..ங்கறதால பண்ண முடியாதுன்னு சொல்லிட்டா…எனக்கு ரொம்ப அழுகையா வருது பெரியவா…..இப்போ அந்த பம்பாய்ல இருக்கற மாமா வேற, "ஒன்னோட தங்கையை வந்து அழைச்சிண்டு போ!" ன்னு எப்போப்பாத்தாலும் ஆள் விட்டுண்டே இருக்கார்……பெரியவா. நானே கவர்ன்மென்ட் ஸ்கூல் ஹாஸ்டல்ல இருக்கேன். என் அப்பா அம்மாக்கு கர்மாக்களைப் பண்ணனும், என் தங்கையை நன்னா வெச்சுக்கணும்..ன்னு நேக்கும் ரொம்ப ஆசையாத்தான் இருக்கும் பெரியவா. ஆனா, நானே சோத்துக்கு வழி இல்லாம இருக்கேனே! அதான்…..ஒங்களை தர்சனம் பண்ணினா எனக்கு வழி சொல்லுவேள்னு மடத்துக்கு வந்தேன்….." அழுகையோடு தட்டுத் தடுமாறி சொன்னான். அவனையே சிலவினாடிகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் சொல்லித்தானா அவருக்கு தெரியவேண்டும்? அவனைக் காப்பாற்றத்தானே இங்கே வரவழைத்திருக்கிறார்!

"சரி. கொழந்தே! நீ கொஞ்ச நாள் இங்கியே இரு. என்ன?"

"சரி" என்று சந்தோஷமாக தலையாட்டியது அந்த குழந்தை. நாலைந்து நாட்களுக்குப் பிறகு, நெய்வேலியிலிருந்து சில உயர் அதிகாரிகள் பெரியவா தர்சனத்துக்கு வந்தார்கள். அவர்கள் கிளம்பும்போது, எதேச்சையாக அந்த பையன் அந்தப் பக்கம் வர, பெரியவா அவனிடம் " சட்னு போய், அந்த நெய்வேலிலேர்ந்து வந்தவா போய்ட்டாளான்னு பாரு! போகலைனா, நான் கூப்டேன்னு சொல்லு"……….அவருடைய திருவிளையாடலை யாரறிவார்?


அவர்கள் கிளம்பவில்லை. ஒவ்வொருவராக பெரியவா முன்னால் வர வர, "நீ இல்லை, நீ இல்லை" என்று திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார். கடைசியாக வந்தவரைப் பார்த்ததும் பெரியவா முகத்தில் ஒரு புன்சிரிப்பு. "ம்ம்ம்ம்..இவரைத்தான் கூப்ட்டேன். இந்தாடா! கொழந்தே! ஒன்னோட கதையை இவர்கிட்ட சொல்லு" என்று சொன்னார். பையன் சொல்ல சொல்ல அதிகாரியின் முகத்தில் ஒரே ப்ரகாசம்!

"பெரியவா……..என்னோட அக்கா பம்பாய்ல இருக்கா.அவாத்துலதான் இந்த பையனோட அம்மா சமையல் வேலை பாத்துண்டு இருந்தா. அந்த அம்மா செத்துப் போனதும், என் மூலமாத்தான் இந்த பையனுக்கு தகவல் போச்சு! இவன் தங்கையை அழைச்சிண்டு போகணும்..ன்னு என் மூலமாத்தான் அவா சொல்லிண்டு இருந்தா……." என்று மனஸார ஒப்புக்கொண்டார்.

"ரொம்ப நல்லதாப் போச்சு! இங்க பாரு. இந்த கொழந்தை பெத்தவாளை பறிகுடுத்துட்டு தவிக்கறான்…..இவனோட, இவன் தங்கையையும் ஒன்னோட அழைச்சிண்டு போய், அவாளை படிக்கவெச்சு, ஆளாக்கறது ஒன்னோட பொறுப்பு! மொதல்ல இவனுக்கு உபநயனம் பண்ணி வை. அவனைப் பெத்தவாளுக்கு கர்மாக்களை அவன் கையால பண்ண வை. ஆகக்கூடி, இவா ரெண்டு பேரோட எதிர்காலத்துக்கு நீதான் எல்லாம் பண்ணனும். என்ன செய்வியா?"

அதிகாரிக்கோ சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை! பிரமிப்போ அதை விட பன்மடங்கு ! என்ன ஒரு லீலை! எப்படி கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்! எல்லாரையும் விட்டுவிட்டு தன்னிடம் அவர் கட்டளை இட்டது, தனக்கு கிடைத்த பெரும் பாக்யம் என்று பூரித்துப் போனார்.

அக்ஷணமே பெரியவா பாதத்தில் விழுந்து அந்த பையனையும், அவன் தங்கையையும் தன் சொந்தக் குழந்தைகள் போல் பாதுகாப்பதாக உறுதி மொழி குடுத்தார். பெரியவாளை நம்பினார் கெடுவதில்லை என்று அந்த குட்டிப் பையனுக்குக் கூட தெரிந்திருக்கிறது.

Source:HARI KRISHNAMURTHY
 
ஸ்ரீ ராம நவமி

ஸ்ரீகாமகோடி ப்ரதீபம்
ஸ்ரீ ராம நவமி
10157256_748980555154341_1922449466_n.jpg


அஷ்டாக்ஷர மந்திரத்தில் "ரா"என்னும் எழுத்து ஜீவாக்ஷரம். சிவமந்திரத்திற்கு "ம"எனும் எழுத்து ஜீவாக்ஷரம். இவ்விருமந்திரங்களுடைய ஜீவாக்ஷரங்கள் சேர்க்கையே ராம என்னும் மந்திரம். இதுவே பராசக்தியின் உருவமே திருமால், பராசக்தியை விட்டுப் பிரிக்க முடியாத பொருளே சிவம்.





ராமநாம ஜபமானது சிவன், திருமால், பராசக்தி இம் மூவரையும் குறிக்கும் ஜபங்களுக்கு சமானமானது. ஜபம் செய்யவும் மிகவும் சுலபமானது.


ஸ்ரீ ராமன் அவதரித்து சைத்ர சுக்ல நவமியன்று நடுப்பகல் (பங்குனி மாதம் அமாவாஸைக் கடுத்த நவிமி) . உமாதேவியின் ஆவிர்பாவமும் சைத்ரசுக்ல நவமி நடுப்பகலில் என்று தேவீ பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீராமனும் தேவியும் ஒன்றுக்கொன்று, "ஸ்ரீதியாகய்யரவர்கள் கருணஜூடவம்மாகமலநவரி கலா தருணிகொம்மா"என்னும் கீர்த்தனத்தில் சொல்லியிருக்கிறார்.


சைத்ர சுத்த பிரதமை முதல் நவமிவரை வஸந்த நவராத்ரி புண்யகால (அதுவேதான் ஸ்ரீராம நவமி புண்ணியகாலமும்) மென்று மந்திர சாஸ்திரத்தில் கூரப்பட்டிருக்கிறது. இச் சந்தர்பத்தில் உபிஷத்தை அனுசரித்து, தேவீபாகவதத்தில் காணப்படும் உமாதேவியின் ஆவிர்பாவ சரித்திரம் கூறுவது.


ஒரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் யுத்தம் ஏர்பட்ட சமயம். தேவர்களிடத்தில் ஸ்ரீ பராசக்தியின் கிருபையாகும் பலம் பிரவேசித்தால், தேவர்கள் அசுரர்களை வென்றார்கள். அசுரர்கள் பயந்து பாதாளலோகத்திற்கு சென்று ஒளிந்து கொண்டுவிட்டார்கள். தேவர்கள் அதனால் அதிக கர்வமடைந்து, பரதேவதையின் கிருபையால்தான் தங்களுக்கு வெற்றி கிடைத்ததென்பதை மறந்து, தங்களின் வல்லமையைப் பற்றி மிகவும் பெருமையடித்துக் கொண்டிருந்தார்கள். இப்படி மோஹம் கொண்ட தேவர்களின் கர்வத்தை ஒழித்து அவர்களை அனுக்கிரஹிக்க எண்ணின ஜகதம்பிகை ஒரு யக்ஷ ஸ்வரூபத்தோடு அவர்கள் முன் தோன்றினாள். அந்த உருவமானது கோடி சூர்யர்கள் பிரகாசத்தையும், கோடி சந்திரர்களையும், கோடி மின்னல்களின் சக்தியையும் உடையதாகவிருந்தது.

இதற்குமுன் பார்க்கப்படாததும் அதிக அழகுள்ளதுமான அந்த தேஜோரூபத்தைத் தேவர்கள் மிகவும் ஆச்சர்யமடைந்தார்கள். அப்போது அவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி யோசித்தார்கள். நம்மில் ஒருவர் இந்த யக்ஷனின் சமீபத்தில் செனறு, c யார் என்று கேட்க வேண்டும். அதன் பலத்தைத் தெரிந்து கொண்டு பின்பு சமயோஜிதம்போல் செய்யவேண்டும். அது சத்ருவாகவும், அதிக பலவானாகவும் இருந்தால் நாம் இவ்விடத்தைவிட்டு ஒடிப்போக வேண்டும். சம பலமுள்ளதாகவிருந்தால் யுத்தம் செய்யவேண்டும்.

ஈச்வரனாயிருந்தால் பக்தியுடன் ஆராதிக்க வேண்டும். அது சத்ருவாகவும் அதிக பலவானாகவும் இருந்தால் நாம் இவ்விடத்தைவிட்டு ஓடிப் போகவேண்டும். இவ்விதம் தீர்மானித்த பிறகு தேவர்களின் அரசனான இந்திரன் அக்னியைப் பார்த்து, c தான் தேவர்கள் முகமாய்யிருக்கிறாய். ஆகையால் c போய் இந்த யக்ஷஸ் யார் என்று அறிந்து வா என்றான். அவ்விதமே அக்னி யக்ஷஸிடம் போய், யார்?. உன்னுடைய வீர்யமென்ன?இவையெல்லாம் எனக்குத் தெரிவி என்றது. அதற்கு அக்னி. இவ்வுலகம் முழுவதாயும் எரிக்கும் சக்தி எனக்கிருக்கிறது!என்றான். உடனே யக்ஷஸ் ஒரு துரரும்பை அக்கினியின் எதிரிலே போட்டு இதை எரித்துவிடு என்றது. அக்கினி தன்னாலியயன்ற மட்டும் பிரயத்தினம் செய்தும் அந்தத் துரும்பை எரிக்க முடியவில்லை. வெட்கத்துடன் இந்திரனுடன் திரும்பிவந்து நடந்ததைச் சொன்னான்.



பிறகு இந்திரன் வாயுவை நோக்கி, நீயே எல்லோர்க்கும் பிராணணாக இருக்கிறாய் ஆகையால் போய் விசாரித்து வா!என்று அனுப்பினான். வாயுவும் அவ்விதமே சென்று அந்த யக்ஷசை யார் என்று வினவினான் அதற்கு யக்ஷஸ் இனிமையான குரலில் c யீர் உனக்கு என்ன சக்தி உண்டு இவைகளை விவரமாக எனக்குச் சொல் என்றது. அதற்கு வாயு என் பெயர் வாயு என்றது. இவ்வுலகிலுள்ள ஸகல பொருட்களையும் அசைப்பதற்கும் எனக்கு சக்தி உண்டு என்றது. என்னுடைய சேஷ்டையினால்தான் இவ்வுலகில் சகல கார்யங்களும் நடைபெருகின்றன என்றான். அதற்கு யக்ஷஸ் அப்படியானால் இதோ உன் எதிரே கிடக்கும் இந்தத் துரும்பை அசைத்துவிட்டுப் போ பார்ப்போம் என்றது. வாயு தன் முழுபலத்தையும் கொண்டு பிரயத்தனம் செய்தும் துரும்பை அசைக்க முடியவில்லை. அவனும் வெட்கி இந்திரனிடம் சென்று நடந்ததைச் சொன்னான்.



பிறகு தேவர்கள் இந்திரனை நோக்கி நீரே எங்களுக்கெல்லாம் அரசன். ஆகையால் நீங்களே நேரே போய் அந்த யக்ஷஸ் யார் என்று தெரிந்து கொண்டு வாருங்கள் என்றார்கள். இந்திரனும் அதற்குச் சம்மதித்து அதிக கர்வத்துடனும் இருமாப்புடனும் அந்த யக்ஷஸ் இருக்குமிடத்தை அடைந்தான். ஆனால் அந்த யக்ஷஸ் அவன் கண் முன்னேயே மறைந்து விட்டது. இந்திரன் மிகவும் வறுத்தமடைந்து நாம் தேவர்களுக்கெல்லாம் அரசனாக இருந்தும் நமக்கு யக்ஷஸிடம் பேசும் பாக்கியம்கூடக் கிடைக்கவில்லையே. தேவர்களிடம் நமக்கு நடந்த அவமானத்தைப் பற்றி எப்படிச் சொல்வது. அதைக் காட்டிலும் நம் சரீரத்தை விடுவதே மேல்.


பெரியோர்களுக்கு மானமே தானம். மானம்போய் உயிர் வாழ்வது மரித்தருக்குச் சமானமே என்று எண்ணி அவ்விடத்திலேயே அவ்விடத்திலேயே தங்கி ஆகாரமில்லாமல் கண்மூடி லக்ஷ வர்ஷகாலம், எந்த வஸ்து எல்லாவற்றிர்கும் காரணமானதோ, அதைக் குறித்துத் தவமிருந்தான். அப்படித் தவமிருக்கும் போது சைத்த சுக்ல நவமியன்று நடுப்பகலில் அதேயிட்தில் மறுபடியும் அந்த தேஜஸ் ஆவிர்பவித்து. அதன் நடுவில் குமரியாகவும் அப்பொழுதுதான் அடைந்த யௌவன பருவத்தையுடையவளாகவும் இளஞ் சந்திரப்பிரபையுடன் கூடிய கிரீடம் அணிவித்தவளாகவும், புன்சிரிப்புடன் கூடிய முகத்தையுடையவளாயும்,


கருணையே உருவெடுத்து போலவும் சர்வ காரணங்களுக்கும் காரணமாகவும் ஸர்வ மங்கள ஸ்வரூபினியாகவும் ஆவிர்பவித்த உமாதேவியை இந்திரன் தரிசித்தான். உடனே இந்திரன் உள்ளம் பூரித்துக் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகக் மயிர்கூச்சலடைந்து தணாடாகாரமாக விழுந்து நமஸ்கரித்து, துதித்து, தாயே. இந்த யக்ஷஸ் யார் என்பதையும் எதற்காக இவ்விடம் தோன்றியது என்பதையும் சொல்லியருள வேண்டும் என்று பிரார்த்தித்தான். கருணைக்கடலான அம்பிகை அதற்கு, அதுவே என் ஸ்வரூபம் நானே எல்லாக் காரணங்களுக்கும் ஆதிகரணம் ப்ரம்ம ஸ்வரூபம் ஸர்வ ஸாக்ஷி, என்றும் குலையாத பொருள்.

நானே பிரம்மா, விஷ்ணு, உருத்திரர்களாக பரிணமிக்கிறேன். என் கிருபையினாலே உங்களுக்கு ஜெயம் கிடைத்தது. ஆனால் நீங்கள் அகம்பாவமும் கர்வமும் கொண்டீர்கள். அக் கர்வத்தை சிதைத்து உங்களை அனுகரிக்கவே நான் அவ்விதம் தோன்றினேன். நீங்கள் உங்கள் கர்வத்தை விட்டோழிந்து, சச்சிதானந்த ரூபியான என்னையே எவ்விதத்தாலும் சரணமடையுங்கள். உங்களுக்கு ஒரு குறையும் வராது என்று சொல்லி மறைந்தாள். தேவர்களும் தங்கள் கர்வத்தைவிட்டுத் தேவியின் பாதாரவிந்தங்களை நன்கு ஆராதித்து வந்தார்கள்.


இவ்வளவு மஹிமையையுடைய தேவியின் ஸ்வரூபமான ஸ்ரீ ராமனை ஸ்ரீ ராம நவமியன்று ஒவ்வொரு கிராமத்திலும், நகரங்களில் ஒவ்வொரு தெருவிலும் அகண்ட ராம நாம பஜனை செய்வது நலம். அகண்ட பஜனையென்றால் ஊரில் உள்ள எல்லோரும் ஒன்று சேர்ந்து 24-மணி நேரமும் அவ்வப்போது மனிதர் மாறி மாறி இடைவிடாது ராம பஜனை செய்ய வேண்டும். ஸ்ரீ ராம நவமியன்று மத்தியானம் ஸ்ரீ ராமன் அவதரித்த ஸர்கத்தைப் படிக்க வேண்டும். ஸ்ரீ ராமனுக்குப் பூஜை செய்யவேண்டும்.

: ( ) : kamakoti.org:

Picture source:Jeyanathan Durai
 
Sri Rama Navami

Sri Rama Navami


shri-lsvs-rama-original.jpg



Thanks to Shri Sai Srinivasan for sending me this article.
Periyava has done namaskarams to this painting done by a devotee.



வைகுண்ட ஏகாதசி, மஹா சிவராத்ரி, கோகுலாஷ்டமி, ஸ்ரீ ராமநவமி முதலிய விசேஷ நாட்களில் கூட நாம் வாயைக் கட்டாமல், வயிற்றைச் கட்டாமலிருந்தால் அது இந்த தேசத்தில் பிறந்த நமக்கு ரொம்பக் குறைவாகும். வயிறு குறைந்தாலும் மனஸ் நிறையும்படிப் பண்ணிக் கொள்வதே நமக்கு நிறைவு. அப்படிப் பண்ணிக் கொள்வதற்கான ஸங்கல்ப பலத்தை பகவான் எல்லாருக்கும் அநுக்ரஹிக்க வேண்டும்.



ராமன் என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம். மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்ற அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும் அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அநுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீ ராமன்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளேயே ஆன்ந்தமாகவே இருந்தான்.



சுக துக்கங்களில் சலனமில்லாமல், தான் ஆனந்தமாக இருந்துகொண்டு, மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவதுதான் யோகம். அப்படியிருப்பவனே யோகி. இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப்போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு, பின்பற்றி வாழ்வதுதான். சொந்த விருப்பு வெறுப்புக்கு இலக்காகாமல் வேதம் விதிக்கிற தர்மப்படி வாழ ஆரம்பித்துவிட்டால், தானாகவே மனஸின் சஞ்சலம் குறைந்து, அது தெளிய ஆரம்பிக்கும். இந்தத் தெளிவால் மனசு எப்போதும் ஆனந்தமாக, லேசாக இருக்கும். இந்த சித்த சுத்தி மோக்ஷத்திலேயே கொண்டு சேர்த்துவிடும்.



ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அநுசரித்து ஆனந்தமாக வாழ்ந்து காட்டுவதற்கான ஸ்ரீமத் நாராயணனே ராமனாக வந்தார். ராம வாக்கியத்தை எங்கு பார்த்தாலும், இது என் அபிப்பிராயம் என்று சொல்லவே மாட்டார். ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள். சாஸ்திரம் இப்படிச் சொல்லுகிறது என்றே அடக்கமாகச் சொல்வார். சகல வேதங்களின் பயனாக அறியப்படவேண்டிய பரம புருஷன் எவனோ, அவனே அந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்க கட்டுப்பட்டு, அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக் கொண்டு, ராமனாக வேஷம் போட்டுக் கொண்டு வாழ்ந்தான்.



ராவணன் ஸீதையைத் துரத்திக் கொண்டு போனபோது, ஒரே மயில் தூரத்திலிருந்தே ராமனுக்கு ஸீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம். அப்படிப்பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம். என்று கேலி செய்து கேட்டவர்கள். எழுதியவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ராமனாக இந்த லோகத்தில் வாழ்ந்தபோது மனுஷ்ய வேஷத்தில் இருந்தான். மநுஷ்ய ரூபத்திலேயே இருந்தான் என்பதை மறந்து பேசுகிறார்கள்.



ஒரு நாடகம் நடக்கிறது. ராமாயண நாடகம்தான். அதில் லவ குசர்களை வால்மீகி ராமனிடம் அழைத்து வருகிறார். ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்கார் ராமராக வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய சொந்தப் பிள்ளைகளே நாடகத்தில் லவ குசர்களாக நடிக்கிறார்கள். நாடக ராமன் வால்மீகியைப் பார்த்து இந்தக் குழந்தைகள் யார். என்று கேட்கிறார். ராமஸ்வாமி அய்யங்காருக்குத் தம்முடைய பிள்ளைகளையே அடையாளம் தெரியவில்லை என்று கேலி செய்யலாமா. நாடக வால்மீகி, இவர்கள் ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள். நீங்கள் தானே அந்த ராமஸ்வாமி அய்யங்கார். என்று பதில் சொன்னால் எத்தனை ரஸாபாஸமாக இருக்கும். வாஸ்தவத்தில் இருப்பதை, வாஸ்தவத்தில் தெரிந்ததை, நாடகத்தில் இல்லாதாக, தெரியாததாகத்தான் நடிக்க வேண்டும்.

ஸ்ரீ ராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது, இப்படித்தான் மநுஷ்ய வேஷம் போட்டுக் கொண்டு தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக் கொண்டு வாழ்ந்தார்.


வேதப் பொருளான பரமாத்மா தசரதனின் குழந்தையாக வேஷம் போட்டுக் கொண்டவுடன், வேதமும் வால்மீகியின் குழந்தையாக, ராமாயணமாக வந்துவிட்டது. அந்த ராமாயணம் முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லி இருக்கிறது. ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பட்சணம் செய்து

தருகிற வழக்கப்படி கௌசல்யா தேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களும் கெட்டுப்போகாத பட்சணமாக இந்தத் தர்மத்தைதான் கட்டிக் கொடுத்தாள். ராகவா, c எந்த தர்மத்தை த்ருதியோடு, அதாவது தைரியத்தோடு, நியமத்தோடு அநுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும் என் ஆசீர்வாத பட்சணம் கொடுத்தாள்.



நியமம், அதாவது தனது என்ற வெறுப்பு விருப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது முக்கியம். அதே போல் தைரியமும் முக்கியம். ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விட்டுவிடக்கூடாது. ராமனை சாக்ஷ£த் லக்ஷ்மணனே பரிகசித்தான். அண்ணா. c தர்மம் தர்மம் எதையோ கட்டிக் கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத் தள்ளு. தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்ஜியத்தை நான் ஸ்வீகரித்துத் தர ஆனுமதி தா என்று அன்பு மிகுதியால் சொன்னான். ஆனால் ராமன், யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான்.


கடைசியில் அது அவனைக் காத்தது. தர்மம் தலை காத்தது. ராவணனுக்குப் பத்து தலை இருந்தும் அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன. ஸ்ரீராமன் இன்றும், “ராமோ விக்ரஹவான் தர்ம”. என்றபடி தர்மத்தில் தலைசிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரகம் செய்து வருகிறான். சாக்ஷ£த் ஸ்ரீ ராமனை லட்சியமாகக் கொண்டு ராம என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்குச் சித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.


Sri Rama Navami « Sage of Kanchi
 
ஸ்ரீராமன் என்றால் ஆனந்தம்


[TD="class: content"] ஸ்ரீராமன் என்றால் ஆனந்தம்

ராமன் என்றாலே ஆனந்தமாக இருப்ப வன் என்று அர்த்தம். மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்ற அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும் அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அநுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ராமன் தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக் குள்ளே ஆனந்தமாகவே இருந்தான்.

சுக துக்கங்களில் சலனமில்லாமல், தான் ஆனந்தமாக இருந்துகொண்டு, மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவதுதான் யோகம். அப்படியிருப்பவனே யோகி. இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப்போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு, பின்பற்றி வாழ்வதுதான். சொந்த விருப்பு வெறுப்புக்கு இலக்காகா மல் வேதம் விதிக்கிற தர்மப்படி வாழ ஆரம்பித்துவிட்டால், தானாகவே மனஸின் சஞ்சலம் குறைந்து, அது தெளிய ஆரம்பிக் கும். இந்தத் தெளிவால் மனசு எப்போதும் ஆனந்தமாக, லேசாக இருக்கும். இந்த சித்த சுத்தி மோக்ஷத்திலேயே கொண்டு சேர்த்துவிடும்.

ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அநுசரித்து ஆனந்தமாக வாழ்ந்து காட்டுவதற்கான மத் நாராயணனே ராமனாக வந்தார். ராம வாக்கியத்தை எங்கு பார்த்தாலும், இது என் அபிப்பிராயம் என்று சொல்லவே மாட்டார். ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள். சாஸ்திரம் இப்படிச் சொல்லுகிறது என்றே அடக்கமாகச் சொல்வார். சகல வேதங்களின் பயனாக அறியப்படவேண்டிய பரம புருஷன் எவனோ, அவனே அந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்க கட்டுப்பட்டு, அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக்கொண்டு, ராமனாக வேஷம் போட்டுக்கொண்டு வாழ்ந்தான்.



ராவணன் ஸீதையைத் துரத்திக் கொண்டு போனபோது, ஒரே மைல் தூரத்திலிருந்தே ராமனுக்கு ஸீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம். அப்படிப்பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம். என்று கேலி செய்து கேட்டவர்கள். எழுதியவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ராமனாக இந்த லோகத்தில் வாழ்ந்தபோது மனுஷ்ய வேஷத்தில் இருந்தான். மநுஷ்ய ரூபத்திலேயே இருந்தான் என்பதை மறந்து பேசுகிறார்கள்.

ஒரு நாடகம் நடக்கிறது. ராமாயண நாடகம்தான். அதில் லவ குசர்களை வால்மீகி ராமனிடம் அழைத்து வருகிறார். ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்கார் ராமராக வேஷம் போட்டுக்கொண்டிருக்கிறார். அவருடைய சொந்தப் பிள்ளைகளே நாடகத்தில் லவ குசர்களாக நடிக்கிறார்கள். நாடக ராமன் வால்மீகியைப் பார்த்து இந்தக் குழந்தைகள் யார் என்று கேட்கிறார். ராமஸ்வாமி அய்யங்காருக்குத் தம்முடைய பிள்ளைகளையே அடையாளம் தெரியவில்லை என்று கேலி செய்யலாமா? நாடக வால்மீகி, இவர்கள் ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள். நீங்கள்தானே அந்த ராமஸ்வாமி அய்யங்கார் என்று பதில் சொன்னால் எத்தனை ரஸாபாஸமாக இருக்கும். வாஸ்தவத்தில் இருப்பதை, வாஸ்தவத்தில் தெரிந்ததை, நாடகத்தில் இல்லாதாக, தெரியாததாகத்தான் நடிக்க வேண்டும். ஸ்ரீராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது, இப்படித்தான் மநுஷ்ய வேஷம் போட்டுக்கொண்டு தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக்கொண்டு வாழ்ந்தார்.

வேதப் பொருளான பரமாத்மா தசரதனின் குழந்தையாக வேஷம் போட்டுக்கொண்டவுடன், வேதமும் வால்மீகியின் குழந்தையாக, ராமாயணமாக வந்துவிட்டது. அந்த ராமாயணம் முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லி இருக்கிறது. ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பட்சணம் செய்து தருகிற வழக்கப்படி கௌசல்யா தேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களும் கெட்டுப்போகாத பட்சணமாக இந்தத் தர்மத்தைதான் கட்டிக் கொடுத்தாள். ராகவா, எந்த தர்மத்தை த்ருதியோடு, அதாவது தைரியத்தோடு, நியமத்தோடு அநுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும் என ஆசீர்வாத பட்சணம் கொடுத்தாள்.

நியமம், அதாவது தனது என்ற வெறுப்பு விருப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது முக்கியம். அதே போல் தைரியமும் முக்கியம். ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விட்டுவிடக் கூடாது. ராமனை சாக்ஷாத் லக்ஷ்மணனே பரிகசித்தான். அண்ணா. தர்மம் தர்மம் எதையோ கட்டிக்கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத் தள்ளு. தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்ஜியத்தை நான் ஸ்வீகரித்துத் தர அனுமதி தா என்று அன்பு மிகுதியால் சொன்னான். ஆனால் ராமன், யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான். கடைசியில் அது அவனைக் காத்தது. தர்மம் தலை காத்தது. ராவணனுக்குப் பத்து தலை இருந்தும் அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன. ஸ்ரீராமன் இன்றும், “ராமோ விக்ரஹவான் தர்ம” என்றபடி தர்மத்தில் தலைசிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரகம் செய்துவருகிறான். சாக்ஷாத் ஸ்ரீராமனை லட்சியமாகக் கொண்டு ராம என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர் களுக்குச் சித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.

தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM

[/TD]

[TD="class: foot"]
[/TD]
SRI RAMA RAKSHA MANTRAM (NAMAM) | Kanchi Periva Forum
 
Reduce your Wants

By multiplying wants, we only increase poverty. What is essential for life and honour should be made available to all the people of the country. It is for this we want plans. Men of means should live like the poor and should not increase their wants beyond necessities. The rich should share their prosperity with the poor. This is punya, leading to salvation. The more we increase our wants, to that extent, there will be no peace or comfort and it will only produce poverty and sorrow.

Maha Periyava
 
Periyava’s view on conversion to Christianity – English translation

Periyava’s view on conversion to Christianity – English translation




“In your Vikatan magazine, have you seen the weekly advertisement that coaxes people to convert to Christianity ?”
Kanchi MahaPeriyava was camping in Ilayathangudi then.


Chavi and Maniyan had go to Tiruchi to interview Periyar for an article that was to appear in Vikatan. After meeting with Periyar, they proceeded to Ilayathangudi. When they reached the place, Periyava was resting under a tree, interacting with His devotees.


On seeing Chavi, Periyava asked “Are you coming directly from Chennai or did you go elsewhere before coming here ?”

Chavi could not muster enough courage to say they were coming after meeting with Periyar in Trichy. So he said they were coming from Madras, which was neither the truth nor was it a blatant lie.


The circumstances in which Periyava was sitting there were a little different. At a considerable distance, a white elderly lady was sitting. She was keenly looking at Periyava from where she was sitting.


“I hear Vasan does whatever you ask him to”, Periyava said abruptly.

“Not really. If Periyava wants me to convey something, I’m ready to convey the same to him verbatim”, said Chavi.


“IN your Vikatan magazine, have you seen the weekly advertisement that coaxes people to convert to Christianity ?”

“Yes, I have”

“To whoever comes to Me from Vikatan, I have tried telling them that we need to stop that advertisement.

Everybody says Vasan will stop it if Chavi requests him to. So you talk to Vasan and get him to stop it”, said Periyava.


Chavi did not immediately say Ok. Instead he started debating with Periyava.


“Hinduism is like an ocean. It is special in many respects. It is not a religion which will disappear easily. For the sake of this argument, let us assume that few Hindus do convert to Christianity after seeing this advert. It is not going to be a big loss for Hinduism. It is not such a weak religion”, said Chavi a little aggressively.


Periyava did not lose his temper after hearing Chavi speak in this fashion.


“Is that so ?” Giving statistics on how many Hindus had actually converted to other religions since 1920, Periyava said “The number of people converting from Hinduism is increasing day by day. At this rate, the adage ‘even ants can cause a stone to erode’ will come true”


Silence for some time.


MahaPeriyava again resumed “A communist writer Arthur Koestler by name came to see Me. He asked Me several questions. Silence prevails in the Church were Christians go to pray. But in your temples, there is the cacophony of musical instruments, children shouting, people conversing loudly; there is noise all the time. Should there not be silence in the place meant for praying ?”


“Since you people pray in Churches, silence is maintained there. As far as Hindus are concerned, it is not in the temples where they pray. Temples are places where Hindus express their gratitude to the Lord. There exists a ‘Puja room’ in every house. That’s where we pray. We also pray near river banks. We place ‘Naivedyams’ in temples and thank the Lord. We celebrate Pongal festival wherein farmers prepare Pongal after their harvest and express their gratitude. Just as people pay taxes to Kings as a note of appreciation, we express our gratitude to God. So the place where Hindus express their gratitude will definitely be noisy. Musical instruments play amidst joy overflowing”. This answer of Mine deeply convinced him.


“In the book that he wrote ‘Lotus and the Robot’, he has recorded that he saw Christ in Me’. Do you know Dr. Raghavan, secretary at the Music Academy ? He has a copy of the book. Once you go back to Madras, borrow it from him and read it”.

He continued, “Do you see that lady sitting there ? Both she and the writer are Christians. She also says that she sees Christ in Me. But we as Hindus advocate conversion of Hindus to Christianity. Is this right ?”


Hearing all this, Chavi began to see the truth in all this. He bowed to Periyava, took his blessings and left saying “I will convey Your wish to vasan”


Chavi wanted to meet with Vasan and discuss all this with him. However having felt that he should check Balu’s opinion first, he told all this to Balu


“This is just an advertisement, this is not our opinion. This is purely business. Kanchi Periya should realize this”, said Balu.


“Whatever it is, please stop the adverts. We should respect Periyava’s wish”, said Chavi.

Chavi tried persuade Balu for a long time but Balu did not agree.


Chavi did not give up and continued to debate. Finally after giving it some thought, Balu summoned the concerned editor and got the full details around the advertisement.

“It is a one year agreement. We still have 6 weeks left”, said the editor.


“That’s ok. Stop the adverts immediately. Dispatch a convincing letter to the party paying for the adverts”, Balu sent the editor away


“Are you happy now ?”, asked Balu

“Very much”, replied Chavi gratefully

Periyava?s view on conversion to Christianity ? English translation « Sage of Kanchi
 
It is very true that organised conversion is going on everywhere except Hinduism..which is a very weak link in terms of followers who follow blindly without realizing the truths..so conversion is very easy..here people are very poor...therefore money is a great motivator for conversion

r.vaithehi
 
சமஷ்டி சமிதாதானத்தில் உபநயனம் ஆன உங்களது குழந்தைகளையும், உங்களுக்கு பரிச்சயமான ப்ரஹ்மசாரிகளையும் கலந்து கொள்ள செய்யுங்கள்.

சற்று யோசித்து பாருங்கோ; மனக்கண் முன் கொண்டு வந்தால் உங்களுக்கே புரியும்: கற்பனை செய்து பாருங்கள்:

நூற்று கணக்காணவர்கள் மத்தியில் ஒரு பிரஹ்மசாரி தானும் சமிதாதானம் செய்யும்போது அவனுக்கு ஏற்படுகின்ற அனுபவமும், உற்சாகமும் விசேஷமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சூழ்நிலை மனிதனை மாற்றும் சக்தியுடையது.

பெரியவா அருளால் வாய்ப்பை நன்கு உபயோகப்படுத்திக் கொள்ளுவோம்.
மே மாதம் 4-ந் தேதி (ஞாயிறு) சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெறப் போகும் சமஷ்டி சமிதாதானத்தில் உபநயனம் ஆன உங்களது குழந்தைகளையும், உங்களுக்கு பரிச்சயமான ப்ரஹ்மசாரிகளையும் கலந்து கொள்ள செய்யுங்கள்.
அன்று கை வீசிக் கொண்டு வந்தால் போதும்; சமிதாதானம் செய்யலாம். அனைத்து ஏற்பாடுகளும் திட்டமிடப்பட்டுள்ளது.
முன் பதிவு துவங்கியாச்சு.
முன் பதிவு செய்ய ஃபோன் : 8754481488, 9952968604.


Source:Hari Krishnamurthy
 
ரவாதோசையும் மகா பெரியவாளும்…

ரவாதோசையும் மகா பெரியவாளும்

ஒரு நாள் இரவு பதினோரு மணி இருக்கும்.பொள்ளாச்சி ஜெயம் என்ற அம்மா அவரிடம் வந்தார்.உடனே பெரியவா மடத்தில் கைங்கர்யம் பண்ணிக்கொண்டு வந்த ராமமூர்த்தி என்பவரைக் கூப்பிட்டு,”எனக்கு ரவாதோசை வேண்டும் போல் இருக்கு; செய்து தர்றயா?”என்றார்.எல்லோரும் காரியங்களை முடித்துக் கொண்டு படுக்கப் போகும் நேரம்.

பொதுவாக பிட்சை பண்ணுவதற்கு கெஞ்சினாலும் மசியாத பெரியவா,விபரீதமாக இப்படி ஓர் ஆசையை வெளியிடுகிறாரே! என்ன செய்வது?” என்று யோசித்துக் கொண்டே சமையலறையில் ரவா இருக்கிறதா! என்று நோட்டம் விடுகிறார்.துளியும்இல்லை. பெரியவாளைப் பார்க்க வந்த அம்மாவுக்கு நிலைமை தெரிந்ததும் ”கவலைப்படாதீர்கள்; நான் போய் ஏதாவது கடை திறந்திருந்தால் ரவை வாங்கி வருகிறேன்!” என்று கிளம்பினார்.

எல்லா கடையும் மூடியிருந்தது.ஒரே ஒரு கடை மட்டும் மூடப் போகிற தருணம். ஓடிப் போய் ரவையும் வாங்கி வந்துவிட்டார். பெரியவா பிரியப்பட்டுக் கேட்டால் செய்துதராமல் இருக்க முடியுமா?

ரவாதோசை தயாரானது. பெரியவாளிடம் கொண்டு வைத்தார்கள். அதில் ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். “நன்னாயிருக்கு…ரொம்ப திருப்தியாச்சு. போய்ப் படுத்துக்கோ…” என்றார்,

ஒரு விள்ளல் வாயில் போட்டுக் கொள்ளவா இந்தக் கூத்து!” என்று எதுவும் புரியாமல் படுத்துக் கொண்டனர்.

அப்போது ஆந்திராவிலிருந்து ஆறு வைதீகர்கள் வந்து இறங்கினார்கள். மற்றவர்கள் பெரியவாளிடம் போய் வைதீகர்கள் வந்திருக்கும் விவரத்தைச் சொன்னார்கள்.பெரியவா சிரித்தபடியே “அவாள்ளாம் வருவான்னு தெரிஞ்சதால்தான் ரவா தோசையே வாக்கச் சொன்னேன்!” என்றார்.

“அப்படியானால் ஏன் எனக்கு வேணும் என்று கேட்டீர்கள்? அவர்களுக்கு என்றால் பண்ணிப்போடமாட்டோமா?’ என்று ராமமூர்த்தி நினைத்திருப்பார் போலும்.அதை உணர்ந்தவர் போல் பெரியவா,”வேளை கெட்ட வேளையில் ஆகாரம் செய்து தரச் சொன்னால் சிரமமாகத்தான் இருக்கும். எனக்குன்னு கேட்டா ஆசையா செய்வீர்களில்லையா” என்று சொன்னாராம்.

Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam
 
Smt Shrimathy Kadambam narrates two incidents

Smt Shrimathy Kadambam narrates two incidents
====================================

I live in Kanchipuram now. In my childhood we used to live in Triplicane. I met Him in my childhood with my father in Kanchipuram. I will narrate these two miracles.


In 1975 when I was studying SSLC my mother had severe stomach ache. We showed her to Dr Lakshmi Kumari who said there was a cancerous tumour in the uterus. We had her admitted in Gosha Hospital and the operation was scheduled. I was the eldest child in our family and had three siblings. The Doctor said that she had only opened and then stitched back the area as the situation was quite grave with the cancer having spread all over the body and said that my mother will pass away before 10.30 in the morning the next day. And asked us to inform all of our relatives and friends.


My father wanted to have darshan of Periyava immediately and left for Kanchipuram/Thenambakkam. He met Him and told Him how the Doctor had no hopes for my mother and that he will struggle to take care of us four young children without his wife. The Sarveshwaran took an apple in His hand and went into Meditation. He put some Kungumam (vermillion powder) on the Apple and gave it to my father and told him, “make sure your wife consumes this at the earliest, before 10.30 am tomorrow”.


We rushed back to Madras. Since the Doctor had removed all my mother’s teeth we boiled the apple, added sugar, mashed the pulp and gave the juice to my mother. The doctor came at 10.30 am to check my mother and was stunned to see the progress made by my mother. We just told the Doctor that Periyavaa gave an apple for her. She remarked, “only He has saved her life, nothing was in my hands!”


Two days later my Mother told us, “on the day of the operation Periava was sitting cross legged on her chest and asked her,


“Whom do you want, Dr Lakshmi Kumari or Dr Indra Ramaswamy or Me? I know that you will not be satisfied with them and will want only Me!” And He was there with my Amma during the entire duration of the operation!
My mother lived for two more years. The prolem recurred in 1977. My father went to Kanchi to meet Him. He said, “you all say that I had given her life, but that is not correct. It is not in not in My Hands. As a Guru I can only postpone the inevitable. It is only due to the Grace of God that your wife lived for two years!”


My mother wanted the Sacred thread ceremony for my brothers to be conducted at the same time my wedding was performed. My father told Him that my mother was anxious that my marriage be performed as soon as possible before she passed away. He told him, “ you first arrange for the Sacred Thread ceremony for your sons immediately, I will take care of the marriage of your daughter!”


There was a lady by name Sumathi in Murugan Sangam. She had lot of Bhakthi towards Periyava. During her daughter’s marriage she saw that someone had gifted Periyava’s picture as a wedding present. Since it was meant for the groom’s family she handed it over to them. Two years had passed and she was returning to Madras from Bangalore after visiting her daughter. Periyava came in Her dreams in the train and told her, “ I wanted to come to your home, but you gave Me to the groom’s family! Why did you do that? Take Me from them into your home!”


She was stunned! She did not know how to approach the Groom’s family. The next day, He appeared in the dreams of the Groom’s family member and told them, “ I was with you during the Chaturmaasya period. Now hand Me over to them!”


When she reached their home, they told her of Periyava’s instructions to them and duly handed over His picture to her!”

https://mahaperiyavaa.wordpress.com/2012/04/13/smt-srimathy-kadamba-shares-two-short-incidents/
 
Values of Punyam & Paapam

Values of Punyam & Paapam

Once a foreigner interested in the philosophy of Hinduism was waiting for Darshan of Mahaperiva ( Most revered Mahaswami) at Kanchi Mutt to clarify his doubt. Shortly, he got his appointment and without wasting time, he put forth his question.

Swamiji, I understand all your concepts, value them but for one particular faith (i.e.) same soul taking various births, papa, punya being carried forward to the next births etc. Can you please make me comfortable on this aspect? Because, in all our religions, we get the reward for what we do in this birth only. (i.e.) if we are honest, God is pleased and blesses us with benefits and we are dishonest, we get punished by Him.

At this point, Periva asked him, whether he owns a car and if he could do a favour of collecting some statistical information within Kancheepuram using his vehicle. The guest readily agreed, at the same time wondering why his question was not answered spontaneously.

Please, Swamiji, go ahead, What is the service you expect me to do now?

Periva said, Please go around 10 maternity centres within Kancheepuram and collect the data of children born within the last 2 days - Child's gender, health condition, parents name, status, educational qualification, time of birth.

The man said - Fine, this is nothing, - immediately rushed in his car like Lord Muruga goes in Thiruvilayadal and within a day he was back in the matam with exact statistics in front of Mahaperiva. He went through the statistics, about 15 children were born in 10 hospitals, 8 female and 7 male infants, out of which 3 children had malnutrition defects, 2 children were the first child of highly rich parents born in luxury hospitals, while 4 were children of coolie labourers who already had few children.

Maha Periva now looked at the gentleman and started asking few questions:

Do you think any of these children have been honest / dishonest within 2 days of their birth? Probably they could not even recognize their own mother. So, they have neither earned papa or punya in this birth.

According to your concepts, all these children should be living exactly identical to each other, but not so practically, some are ill, some are healthy, some are born to rich parents, some are born to poor parents. Remember all children born in the same day, same longitude, latitude, you can't blame their horoscope which is going to be almost identical.

The gentleman was dumbfounded!

It is here the concept of previous birth erupts! All these children have taken their present birth according to their deeds (karma) and the resultant papa, punya which they have assimilated in their previous births.

Kanchi Paramacharya
 
காமாட்சி பார்த்துக்கொள்வாள் கவலையை விட&#

காமாட்சி பார்த்துக்கொள்வாள் கவலையை விடு


ஒரு கிராமத்தில் பெரியவர் முகாமிட்டிருந்த சமயம். துடைத்துப் போட்ட மாதிரி, எல்லா உணவுப் பொருட்களும் தீர்ந்துவிட்டிருந்தன. காரியதரிசியும், பரிசாரகரும் (சமையல் செய்பவர்) பெரியவரிடம் வந்து தெரிவித்தனர்.

இன்று இரவுப் பொழுதை எப்படியாவது கடத்திவிடலாம். நாளைக்கு மடத்தில் தம்பிடிகூட அரிசி பருப்பில்லை” என்ற அவர்கள் குரலில் பெரும் வருத்தம்.

ஆனால், பெரியவர் அதைக்கேட்டு வருத்தப்படவில்லை.

‘அப்படியா?’ என்று, மற்ற விஷயங்களைச் சொல்லும்போது கேட்டுக் கொள்வது போலதான் கேட்டுக்கொண்டாராம்!

அவர்களுக்கோ, ‘என்ன இப்படி இருக்கிறார். காஞ்சிபுரத்துக்கோ, இல்லை பெரியவர் சொன்னால், செய்ய தயாராக உள்ள தனவான்களுக்கோ, தகவல் அனுப்பினால் அல்லவா, இந்த சிக்கலில் இருந்து மீள முடியும்’ என்று கவலை.

நன்றாகக் கவனியுங்கள். இவர்களும் அம்பாள் பார்த்துக்கொள்வாள் என்று நினைக்கவில்லை. நினைக்கவும் முடியாது. ஏனென்றால், இது விஞ்ஞான காலம். அற்புதங்கள் எல்லாம் கதை கட்டுரைகளில்தான் சாத்தியம் என்கிற அளவுக்கே நம் நம்பிக்கையின் வீர்யம் உள்ளது.

ஆனால், பெரியவரோ, “காமாட்சி பார்த்துக்கொள்வாள் கவலையை விடு” என்று கூறிவிட்டு, தியானத்தில் உட்கார்ந்து விட்டாராம்.

அவர்களால் பெரியவரிடம் போய் மல்லுக்கு நிற்க முடியவில்லை. பதட்டத்தோடு பொழுதும் விடிந்தது. அதிசயம் போல, ஒரு வண்டி நிறைய அரிசி, பருப்பு, காகறிகள், பழம் என்று வந்து இறங்கியது. ‘யார் அனுப்பினார்கள் இதை?’ என்ற கேள்விக்குக் கிடைத்த விடையில்தான், அற்புதங்கள் இந்த நாளிலும் நடக்க முடியும் என்பதற்கான விஷயம் உள்ளது.

பக்கத்து கிராமத்தில் ஒரு திருமணம் நடக்க இருந்தது. அந்த திருமண விருந்துக்கான உணவுப் பொருட்கள்தான் அவை எல்லாம். ஆனால், கடைசி நிமிடத்தில் மாப்பிள்ளைப் பையனுக்கு அம்மை போட்டதில் கல்யாணம் செய்ய முடியாத நிலை.

வாங்கிவிட்ட அவ்வளவையும் என்ன செய்வது? என்று யோசித்தபோது, மடம் வந்து முகாமிட்டிருப்பது, அந்தத் திருமண வீட்டைச் சேர்ந்த பெரியவருக்கு தெரிய வந்தது. மடத்தில் தினமும் அன்னபோஷணம் நடப்பதை தெரிந்து வைத்திருந்த அவர், இதை மடத்துக்கு கொடுத்துவிடுவோம். வீணாகாமல் நல்ல விதமாய் பயன்படும் என்று கருதி, வண்டியோடு அவ்வளவு சரக்கையும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டார்.

மூட்டையில் அரிசி, கூடைகூடையாக காய்கறி, பழங்கள், பருப்பு, எண்ணெய் என்று சகலமும் வந்து இறங்கியதைப் பார்த்த காரியதரிசியும் பரிசாரகரும் திகைத்துப்போய், பெரியவரிடம் கூறவும் சிரித்த பெரியவர், காமாட்சி பாத்துப்பானப்போ உனக்கு என் மேல கோபம் கூட வந்துருக்கும். ஆனால், இப்ப என்ன சொல்றே?” என்று கேட்டாராம். அவர்களால் பதிலுக்கு என்ன சொல்ல முடியும், சிலிர்ப்பதைத் தவிர…!

ஒரு விஷயத்தில் குழப்பமே இல்லாமல், நூறு சதவிகிதம் நம்புவது என்பதில் தான் அற்புதங்கள் நிகழ்கின்றன.

இந்த வகை நம்பிக்கையைத்தான், ‘நம்பினார் கெடுவதில்லை. நான்கு மறைதீர்ப்பு’ என்றனர் சான்றோர்.



மஹா பெரியவா அருள்வாக்கு : -

ஜகன்மாதாவைத் தெரிந்து கொள்கிற வரைதான் துவேஷம், விரோதம், வெறுப்பு எல்லாம் இருக்கும். அவளைத் தெரிந்து கொண்டபின், இவை எல்லாம் மறைந்து எல்லோரும் சகோதரர்கள் என்ற அன்பு வந்து விடும்.
 
sincere apologies..

i just said A U M, DOTT category 3 for the om. i experienced DEVOTION after touchiing this thread.
 
உபநயனம் -காஞ்சி மகா பெரியவா

உபநயனம் -காஞ்சி மகா பெரியவா

"இன்றைய பிராமண சங்கம், எனக்கு கொஞ்சமும் திருப்தியளிக்காததாக உள்ளது. உபநயனம் போன்ற எளிமையான, ஆனால் அதிமுக்கியமான சமஸ்காரங்களைக் கூட ஆடம்பர விழாவாக்கி விடுகிறார்கள். பட்டுப்புடவைகள், விருந்து, செலவு என்று பணத்தை வாரி வீணாக இறைக்கிறார்கள். இதனால் சம்ஸ்காரத்தின் முக்கிய அம்சத்தையே மறந்து விடுகிறார்கள். எனக்குச் சம்மதமே இல்லாவிட்டாலும் சரி, பணக்காரன் வேண்டுமானால் தன் அந்தஸ்தைக் காட்டிக் கொள்ளல் இஷ்டத்திற்கு செலவு செய்யட்டும் .

ஏழை ஜனங்கள் இதை பார்த்து 'காப்பி' அடிக்கும்போது தான் கஷ்டம் வருகிறது. 'உபநயனம்' போன்ற சிறு விழாக்களுக்குக் கூட தங்களது சக்திக்கு மீறி கடன் வாங்குகிறார்கள். இந்தச் சிறுவிழா நடத்த சிறு தொகையே போதும். . திருமணம் நிச்சயமாகும்வரை கூட பிள்ளைகளுக்குப் பூணூல் போடுவதில்லை. கல்யாண சுப முகூர்த்தங்களோ இன்னும் மோசம் . ஆயிரமாயிரமாக செலவுகள் செய்து ஆடம்பர விழாக்களாகச் செய்து வருகிறார்கள். வரதட்சணை கொடுமை பல பெண்களின் வாழ்க்கையே பாதித்துள்ளது. என்னுடைய உபதேசங்கள் எதுவுமே இந்த சமூகக் கொடுமைகளை கொஞ்சமும் மாற்றியதாகவே தெரியவில்லை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்று சொல்லிவிட்டு மகான் சில நிமிடங்கள் மௌனத்தில் ஆழ்ந்தார்.

பிறகு தொடர்ந்தார்:

"மற்றவர்களைப் பற்றி நான் ஏன் பேசவேண்டும்? நீ ஏன் என் எதிரில் திறந்த மார்புடன் நிற்கிறாய்? இதை எப்படி நான் கவனிக்காமல் போனேன்?" சுந்தரராமனிடம் அடுத்த கட்டளையைப் பிறப்பித்தார், "உடனே போய் பஞ்சாங்கத்தை எடுத்துவா?, அதோடு உன் தோப்பனாரையும் இங்கே அழைச்சுண்டு வா."

பஞ்சாங்கம் அவர் கையில் தரப்பட்டது சுந்தரராமன் தந்தையும் அங்கே வந்தார்

பஞ்சாங்கத்தை மிகவும் கவனித்த பெரியவா " அடுத்த வியாழக்கிழமை நாள் மிகவும் நன்றாக இருக்கிறது அன்றே உன் பையனின் உபனயனத்தை நடத்திவிடு என்று பணித்துவிட்டார்

தந்தை எதோ சொல்ல வாயெடுக்க

"பணம் இல்லை பந்துக்களை அழைக்க அவகாசம் இல்லை என்றெல்லாம் சொல்லாதே, மடத்து சாஸ்திரிகளுக்கு உன் சக்திக்கேற்றவாறு பணம் கொடுத்தால் உபனயனத்தை நடத்திவிடுவார் , மடத்து உக்ராணத்தில் தேவையான சாமான்கள் இருக்கின்றன நீ பய்யன் அவன் தாயார் தவிர வேறு யாரும் இந்த சுபகாரியத்திர்க்கு அவசியம் இல்லை" என்று மகான் தீர்க்கமாகச் சொல்லிவிட்டார்


ஆனால் சுந்தரராமனின் தந்தை விடாப்பிடியாக "அடுத்த வியாழனன்று பெரியவா உத்திரவுப்படி நான் நைவேத்யம் தயாரிக்கும் கைங்கர்யம் செய்யவேண்டியுள்ளதே" என்று கூற, மகான் "அன்று நீ தவறாமல் நைவேத்திய கைங்கர்யம் செய்யப்போகிறாய் அதே தினம் உன் குமாரனுக்கும் உபநயனம் செய்யப்போகிறாய்" என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

அவர் மேலும் தொடர்ந்து சொன்னார்:

"உபநயனம் இதே இடத்தில் கோசாலையில் நடக்க வேண்டும் ஆனால் பசுக்களுக்கு எந்த இடைஞ்சலும் இருக்கக் கூடாது நீ பூர்வாங்க வேலைகளை விடியற்காலையிலேயே ஆரமிச்சுடு , பிறகு சந்திரமௌலீஸ்வரருக்கு நைவேத்யமும் தயார் செய்துவிடு. நான் பூஜையை ஆரம்பிக்கும் நேரத்தில் இங்கே நடக்கும் வைதீக கர்மாக்களிலும் வந்து கலந்து கொள். நான் சந்திரமௌலீஸ்வரருக்கு சந்தனாபிஷேகம் செய்யும் அதே நேரத்தில் அங்கே உபநயன முகூர்த்தம் நடைபெறவேண்டும். இப்போது உன் வேலையைப்பார்", என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டார்

மகான் ஒரு விஷயத்தில் முடிவு எடுத்த பின் அதை மாற்ற யாரால் இயலும்? மேலும் சுந்தரராமனின் தந்தை மடத்து ஊழியர் அவரால் எப்படி மறுப்பு சொல்லமுடியும்

சுந்தரராமன் தான் தாயிடம் சென்று இந்த விஷயத்தைச் சொன்னபோது, அந்த மாதரசி மகிழ்ச்சியடைந்தாலும் உறவினர்களை அழைக்க அவகாசம் இல்லையே , கையில் பணமில்லையே என்கிற மனக்கவலை எழுந்தது.

ஒரு காலத்தில் பணத்தின் அருமை தெரியாமல் வாரி இறைத்ததின் விளைவாகத்தான் அக்குடும்பத்திற்கு வறுமை நிலை வந்தது

அழைப்பிதழ்கள், உறவினர் கூட்டம், புத்தாடைகள் இவை ஏதுமின்றி உபநயனம் நன்றாகவே நடந்து கொண்டிருந்தது. சந்திரமௌலீஸ்வரருக்கு சந்தன அபிஷேகம் நடந்து கொண்டிருந்தத நேரம் ஒரு கணவன் மனைவி கையில் பெரிய மூங்கில் தட்டுடன் அங்கே வந்தார்கள். இருவர் கையிலும் இரண்டு தட்டுகள்.மடத்து நாதஸ்வர வித்வான்கள் இனிமையான கல்யாணி ராக கீர்த்தனையை வாசித்துக் கொண்டு இருந்தனர் . வந்தவர்கள் நங்கவரம் சுந்தராம அய்யரும் அவரது பத்னியும் என்று இவர்களை அடையாளம் கண்டுகொண்டனர் , அவர்கள் இருவரையும் அங்கு பார்த்ததில் எல்லோருக்கும் வியப்பு , சாஸ்த்ரிகளும் மேற்கொண்டு மந்திரம் சொல்வதை அப்படியே நிறுத்திவிட்டார் .



Moments and Memories: ??? ??????? -2
 
பெரியவா சொன்ன பதில்...


ஒரு பக்தரின் குடும்பத்தில் கஷ்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தன. குடும்ப தலைவர், ஒரு ஜோசியரிடம் தன் ஜாதகத்தை கொடுத்து விவரம் கேட்டார். 'எக்கச்சக்கமா கிரக தோஷம், நவக்ரக ஹோமம்.

பெரிய அளவிலே செய்வது தான் பரிஹாரம்'. பெரியவாளுடைய அனுமதியை பெற வந்தார் பக்தர். 'ஜோசியர் சொன்ன படி நவக்ரக ஹோமம் செய்தால், நல்லது ஏற்படா விட்டாலும், நிச்சயம் கெடுதல் ஏற்படாது' என்று சிந்தனைக்குரிய ஒரு பதிலை கூறி விட்டார்கள் பெரியவாள். பக்தருக்கு குழப்பம். ஹோமம் செய்வதா? வேண்டாமா? பெரியவாளை மறுபடி கேட்கலாம் என்றால், பெரியவா அங்கே இருந்தால் தானே? பதில் சொன்ன உடனேயே, சடக்கென்று புறப்பட்டு அந்த இடத்தை விட்டு போய்விட்டார்கள். பக்தர், பெரியவாளின் கைங்கர்யபரர்களிடம் 'பெரியவா சரியான முடிவு சொல்லலையே?' என்று புலம்பி நச்சரித்தார்.அவருடைய தொல்லை தாங்காமல், ஒரு சிஷ்யர் பெரியவாளிடம் போய் பக்தரின் ஆதங்கத்தை சொன்னார்.

பெரியவா சொன்ன பதில்....

1. எல்லோருக்கும் அவரவர்களுக்கான கடமைகள் உண்டு. இவன் வீட்டில் தாத்தா, பாட்டி, இருக்கிறார்கள். அவர்களை சரிவர கவனித்து போஷிக்க வேண்டும். அது முக்கியமான தர்மம்.

2. வீட்டு வாசலுக்கு வந்து பிச்சை கேட்பவர்களுக்கு கூடுமானவரையில் தர்மம் செய்யணும்.

3. தாகத்துடன் வருபவர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்.

4. ஏழைகளையும், சமையற்காரர்களையும், தொழிலாளிகளையும் நிந்தனை செய்யகூடாது, பிரியமாக நடத்த வேண்டும். -

இதில் இருந்து, அக்குடும்ப தலைவர் இந்த நற்செயல்களை செய்யவில்லை என்பதை ஊகித்து அறிய முடிகிறது. அந்த சீடர், பக்தரிடம் போய், 'உங்கள் கடைமைகளை எல்லாம் தவறாமல் செய்து வந்தாலே போதும். குடும்ப கஷ்டம் எல்லாம் போய்விடும். ஹோமம் செய்ய வேண்டிய தேவையே இருக்காது' என்று பக்குவமாக சொன்னார்.

பக்தருக்கு நெஞ்சில் முள் குத்திற்று. பெரியவாளிடம் மறுபடியும் வந்தார். தன் துஷ்டத்தனங்களை ஒப்பு கொண்டார். 'பரம்பரையா வந்தது.

பெரியவா அனுகிரகத்தாலே, நல்ல வழிக்கு திரும்பணும். சரணாகதி பண்றேன்'. பெரியவாள் மனம் உருகி போய்விட்டது. 'க்ஷேமமா இரு'. அது சரி, அந்த குடும்பத்தின் பரம்பரை இழிகுணங்கள் பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது? ஸ்வாமியே சரணம்.
 
சதப்ராம்ஹண போஜனம்

சதப்ராம்ஹண போஜனம்

தரணிபுகழ் தஞ்சையில் தனிகர் ஒருவரிருந்தார். அவருக்கு ஸ்ரீபெரியவாளிடம் அபார பக்தி. மிகுந்தஆச்சார சீலர்.ஒருமுறை காஞ்சியில் பெரியவாளைத் தரிசித்து சதப்ராம்ஹண போஜனம் செய்யவேண்டும், பெரியவா ஆசீர்வாதம் செய்யணுமென்றார்.



பெரியவா “சதப்ராம்ஹண போஜனம்னா பூணல் போட்டுண்டிருந்தா போறுமோன்னோ?” என்றார்.

வந்தவரோ அப்படியில்லை அத்யயனம் செய்தவர்கள் கிடைத்தால் உத்தமமாயிருக்குமேன்னு.என இழுத்தார்.பெரியவா, “அதான் அதான்சரி. எல்லாரும் போடறா!அதுக்குபேர் அன்னதானம்.

ப்ராம்ஹணபோஜனம்னாலே வைதீகாளுக்குத்தான் போடணும். வேதம் தெரிஞ்சுண்டவாதான் ப்ராம்ஹணா! பூணல் மட்டும் போட்டுண்டா போறாது,ஒரு ருத்ரம், சமகம், புருஷஸுக்தமாவது தெரிஞ்சுக்கணும் என்றார்.

சரி! நன்னா போடு! வேதப்ராம்ஹணா குக்ஷில விழற ஒவ்வொரு அன்னமும் உனக்கு ச்ரேயஸை கொடுக்கும், பக்ஷணங்களெல்லாம் போடு! என்றதும் தனிகருக்கு சந்தோஷம்.பெரியவா ஆக்ஞைபடி அப்படியே செய்றேனென்றார்.உங்க ஊர்லயே பண்ணப்போறயோ!என்றார் பெரியவா.பெரியவா எங்க உத்தரவு பண்றாளோ அங்கயே செய்ய சித்தமாயிருக்கேனென்றார்.திருவிடமருதூர்ல பண்ணு! முடிஞ்சா வர பாக்கறேன்!என்றதும் வந்தவருக்கோ பூமி நழுவிற்று. இப்படியொரு பாக்யமா!என கண்ணீர் மல்கியபடியே ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு போய்விட்டார்.


பெரியவா சொன்ன திருநாளும் வந்தது.


ஏற்பாடுகள் மிகச்சிறப்பான முறையில் நடைப்பெற்றது. பெரியவா இங்கு வரப்போவதின் அறிகுறியும் தெரிந்தது. அனைவரும் வெகு உற்சாகமாய் பணி செய்தனர்.100 வேதப்ராம்ஹணர்கள் வந்தனர்.அவர்களுக்கு உயரிய முறையில் உபசாரம் செய்யப்பட்டது. பெரியவா வருகை! வேத கோஷம் விண்ணைப்பிளந்தது.


அவாளுக்கு இலை போடு என்றார். தஞ்சை மாவட்டமாச்சே, தாட்டு இலை போடப்பட்டது. பரிமாறினர். ராஜபோஜனமாகயிருந்தது. 5 வகை ஸ்வீட்.பேணி,லட்டு,அல்வா,போளி,மைசூர்பாக். இதை தவிர நெய் மிதக்கும் சர்க்கரைப் பொங்கல். இதேபோல் எல்லாமும்.தனிகரின் கையோ முறம் போலுள்ளது.ரசம் போட்டு ஸ்வீட் போட்டு, சர்க்கரைப் பொங்கலிட்டு அதன் மேல் உருக்கிய நெய் வார்க்கப்பட்டது. அனைவருக்கும் திணறியது.சாப்பிடவே முடியவில்லை.பின் வேண்டியவர்களுக்கு அன்னமிடப்பட்டு சந்திரன்போன்ற வெளுத்த தயிர் விடப்பட்டது.


இப்போது பெரியவா சாப்பிடுமிடத்திற்கு வந்தார். எங்கும் பரபரப்பு. பரிமாறும் அன்பர்களை விளித்து ஏதோ பேசினார்.


ஒருபெரிய சாட்டாங்கூடை நிறைய லட்டு கொண்டு வரப்பட்டது. அங்கே முன்னின்று, “எல்லார் எலேலயும் நவ்வாலு லட்டு போடு” என்றார்.


அனைவரும் முழித்தனர்.இலையிலேயே அதிகமாகயிருக்கிறது உபரியாக நாலு லட்டு வேற எப்படி சாப்பிடுவது.பெரியவா போடச் சொல்லி போட்டார்கள், எறிந்தால் பெரியவாளுக்கு மரியாதைகுறைச்சலாகிவிடும், சாப்பிடவோ வயிற்றில் இடமில்லை. செய்வதறியாது திகைத்தனர்.
இதை காண சகியாத கருணைக்கடல், ”முடிஞ்சா சாப்பிடுங்கோ முடியலைன்னா எறிஞ்சுடலாம் தோஷமில்லை என்றார்.


அப்பாடா! பெரியவாளே சொல்லிட்டா எறிஞ்சா தப்பில்லேன்னு!என்று சமாதானம் செய்து கொண்டு கொஞ்சம் போல எடுத்துக்கொண்டு எழுந்து விட்டனர்.


தனிகருக்கோ மிகுத்த வருத்தம் உபரியாக போடச்சொல்லி,அதை எறியவும் சொல்லிவிட்டாரே என.
பெரியவா தக்ஷிணை கொடுத்தபின் இலையெடுக்கலாமென உத்தரவிட்டார்.அதேபோல் சதப்ராம்ஹணர்களுக்கும் தக்ஷிணையளிக்கப்பட்டு, வாசனை தாம்பூலமும் கொடுத்து கௌரவமாக வழியனுபப்பட்டது.


பெரியவா தனிகரை விளித்தார்
எனக்கு 2 சாட்டாங்கூடை வேணும். ஒரு மொழுகினகூடை, ஒருமொழுகாத கூடையும் வேணுமென்றார்.
சடுதியில் கொண்டு வரப்பட்டது.


இப்போ ஒரு ஒத்தாச பண்ணுங்கோ எனக்கு,இந்த மொழுகின கூடைல லட்ட தவிர எறிஞ்சமீதியெல்லாம் ரெண்டு கையால வழிச்சுப்போடணும்.மொழுகாத கூடைல எச்ச எலல இருக்கற லட்டோட போடணும் சித்த பண்ணுங்கோ? என இறைஞ்சினார்.


அப்படியே செய்யப்பட்டது.மொழுகின கூடைய குப்பதொட்டில போடுங்கோ என்றார். அதுவும் செய்யப்பட்டது.
இந்த மொழுகாத கூடைய எடுத்துண்டு என்னோட வாங்கோ! நாலுபேர் போறும் கூட்டம் வேண்டாம்,அப்பா!நீ வா என தனிகரை அழைத்துக்கொண்டு தண்டத்தோடு புறப்பட்டார்.


விறு விறுவென உச்சி வெயிலில் காவேரிப்பக்கம் ஒடினார்.பெரியவா நடந்தால் நாம் ஒடணும், அவர் ஒடினால் நாம்? ஒருவாறு போய்ச் சேர்ந்தபின் தீர்த்தவாரி மண்டபத்தில் நின்றார்.


ஓ!ஷாமி ஷாமீ எங்கிருந்தோ குறவர்களின்கூட்டம் நம் சமயக்குரவரை மொய்த்துக்கொண்டது.
சாட்டாங்கூடையை மண் இல்லாத புல் தரயா பாத்து போடுங்கோ! என்றார்.


அருகிலிருந்த தனிகரை அழைத்து என்ன பாக்கற!சதப்ராம்ஹண போஜனம் குறவா போஜனமா முடிஞ்சுடுத்தேன்னா?ப்ராம்ஹணா குக்ஷிய ரொப்புன்னு உன்கிட்ட சொன்னேன், ஆனா குறவா குக்ஷியும் என் கண்ணுல பட்டுடுத்து! என்ன பண்றது,நானோ சந்யாசி!எனக்கு எல்லாரும் சமம். நீயோ ரொம்ப ஆச்சாரம்,இவாளுக்கு கொடுன்னா சேஷமாயிடுமேன்னு தோணும்.இவாளுக்கு லட்டு வேணும்னா தனியா செஞ்சுருக்கலாமேன்னு படறதா?படும்!படும்!! ஆனா இவ்வளவு தரமும் ருசியும் வேண்டாமேன்னும் படும் சரிதானே? எச்சல்இலைல இருக்கற பதார்த்ததுக்கு சேஷம்கற தோஷம் போயிடறதோன்னோ! யார் கொடுக்கப்போறா இவாளுக்கு ஸ்வீட்டெல்லாம்,பரிஜாரகாள கேட்டேன் எது உபரியாயிருக்குன்னு,அவா லட்டு தான் மிஞ்சிப்போச்சுன்னா,அதான் ப்ராம்ஹணா எலல போடச்சொல்லி இவாளுக்கு கொடுத்தேன் உன் ஆச்சாரத்துக்கும் குந்தகமில்லாம! இப்படி செய்யலாமோன்னோ!


என்றதும் தனிகர் தடாலென வீழ்ந்தார்.
அங்கே மறைமுகமான அத்வைத பாடம் நடத்தபட்டதே என.

2014 April 13 « Sage of Kanchi

 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top