• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
மாமரம் சொல்லும் தத்துவம் - மஹாபெரியவா

மாமரம் சொல்லும் தத்துவம் - மஹாபெரியவா

* பல மாமரங்கள் இருக்கிறது. அவற்றில் நூற்றுக்கணக்கான கனிகள் விளைகிறது. ஒவ்வொரு கனியிலும் விதை (கொட்டை) இருக்கிறது. இவை மீண்டும் மாமரம் வளர வேண்டும் என்பதற்காக இயற்கை தந்த வரப்பிரசாதம். விளைந்த விதைகள் அனைத்தும் மாமரமாக உருவாகிவிடுவதில்லை. ஒரு சில விதைகள் மட்டுமே மரமாகிறது. இவ்விடத்தில் மற்ற விதைகள் எல்லாம் வீணாக போவதாக தெரிந்தாலும், மரமாகிய ஒரு விதையினால் மேலும் பல கனிகள் கிடைத்து அதன் மூலம் வழிவழியாக பல மரங்கள் வளரும்.

* இதைப்போலவே உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே நல்லவர்களாகவும், இறைபக்தி கொண்டு முழுமையடைந்தவர்களாகவும் இருப்பதில்லை. ஏதாவது, ஒருசிலர்தான் அத்தகைய மேன்மையான நிலையை அடைகிறார்கள். இதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு விதையால் பல மாமரங்கள் உருவாவதைப்போல, அந்த ஒருவரால், பல நல்ல ஆன்மா உடையவர்கள் உருவாவார்கள்.

* உறியடி உற்சவம் நடக்கும்போது பலர் கம்பத்தில் ஏறுவார்கள். பலர் வழுக்கி விழ, யாராவது ஒருவர் மட்டுமே உச்சியைத் தொடுகிறார். உச்சியை அடைந்ததால் ஏற்படும் மகிழ்ச்சி அவருக்கு மட்டுமின்றி, அவரை சுற்றியிருந்தவர்களுக்கும் ஏற்பட்டு விடுகிறது. அந்த ஒருவர் பெறும் வெற்றியை அனைவரும் தமக்கானதாக கருதி மகிழ்கிறார்கள். இதைப்போலவே, நம்மில் பூரணத்துவம் பெற்று சிறக்கும் ஒருவர் அடையும் நன்மையும் அனைவருக்கும் கிடைத்ததாகிறது.


Source: Sage of Kanchi

Halasya Sundaram Iyer
 
இளையாத்தங்குடியில்…

இளையாத்தங்குடியில்…

காஞ்சி மாமுனிவர் அப்போது இளையாத்தங்குடியில் தங்கியிருந்தார்.

சாவியும், மணியனும் திராவிடத் தந்தை பெரியார் அவர்களை பேட்டி கண்டு விகடனில் எழுதுவதற்காக திருச்சிக்குப் போயிருந்தார்கள். அங்கே பெரியார் மாளிகையில் பேட்டியை முடித்துக் கொண்டு அங்கிருந்து இளையாத்தங்குடிக்குப் போனார்கள். இவர்கள் போன போது ஸ்வாமிகள் ஒரு மரத்தடியில் அமர்ந்து பக்தர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.


சாவியைக் கண்டதும், ‘நேரே மெட்ராசிலிருந்து வரயா ? இல்ல வழில எங்கேயாவது தங்கிட்டு வரயா ?’ என்று கேட்டார்.


‘திருச்சியில் பெரியாரைச் சந்தித்து விட்டு வருகிறோம்’ என்ற உண்மையைச் சொல்ல அப்போது சாவிக்கு தைரியம் வரவில்லை. அதனால், ‘மெட்ராஸ்லேர்ந்து வரோம்’ என்று பொய்யும் சொல்லாமல் மெய்யும் சொல்லாமல் பொதுவாகச் சொல்லி விட்டார்.


ஸ்வாமிகள் அமர்ந்திருந்த அந்தச் சூழ்நிலையே வித்தியாசமாக இருந்தது. சற்று தூரத்தில் யாரோ ஒரு வயசான வெள்ளைக்கார பெண்மணி ஒருத்தி உட்கார்ந்திருந்தார். அந்தப் பெண்மணி அங்கிருந்தபடியே மஹா பெரியவரைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.


‘நீ என்ன சொன்னாலும் வாசன் கேப்பாராமே’ என்று திடீரென ஸ்வாமிகள் பேச்சை ஆரம்பித்தார்.


‘பெரியவா நினைக்கிற மாதிரி அப்படியெல்லாம் இல்லை. பெரியவா ஏதாவது சொல்லச் சொன்னா அதை அப்படியே வாசன் அவர்களிடம் சொல்லத் தயாராக இருக்கிறேன்’ என்றார் சாவி.


‘உங்க விகடன்ல கிறிஸ்துவ மதத்துல சேரச் சொல்லி வாரா வாரம் ஒரு விளம்பரம் வரதே, நீ அதை பாத்திருக்கியோ?’


‘பாத்திருக்கேன்’


‘அந்த விளம்பரத்தை நிறுத்திடணும்னு ஆனந்த விகடன்லேர்ந்து வரவா கிட்டேயெல்லாம் சொல்லிப் பார்த்துட்டேன். அவா எல்லாரும் உன் பேரைச் சொல்லி சாவி சொன்னா வாசன் கேட்பார்னு சொல்றா. அதனால நீ அதை வாசன் கிட்டச் சொல்லி உடனே நிறுத்திடு’ என்றார்.


‘சரி.. சொல்கிறேன்’ என்று சாவி உடனே பதில் சொல்லி விடவில்லை. பெரியவரிடம் கொஞ்சம் வாதாடிப் பார்த்தார்.


‘இந்து மதம் கடல் போன்றது. பெரும் சிறப்புகளை உள்ளடக்கியது. அது அவ்வளவு எளிதில் அழிந்து விடக் கூடியதல்ல. ஒரு வேளை இந்த விளம்பரத்தைப் பார்த்துக் கொஞ்சம் பேர் கிறிஸ்துவ மதத்துக்குப் போய் விடுகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அதனால் ஹிந்து மதத்துக்குப் பெரிய நஷ்டம் ஏற்பட்டு விடப் போவதில்லை.அது அத்தனை பலஹீனமான மதமும் அல்ல’ என்று ஒரு துணிச்சலோடு சொல்லி விட்டார் சாவி.

சாவி இப்படிப் பேசுவதைக் கேட்டு பெரியவர் கோபம் அடையவில்லை.


“அப்படியா சொல்கிறாய் நீ ? இத பார், 1920-லிருந்து எவ்வளவு பேர் இந்து மதத்திலிருந்து மற்ற மதங்களுக்கு மாறியிருக்கிறார்கள்’ என்ற புள்ளி விவரங்களை எடுத்துச் சொல்லி ‘வர வர இந்து மதத்திலிருந்து வேறு மதம் மாறுகிறவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது. இப்படியே போனால் ‘எறும்பு ஊறக் கல்லும் தேயும்‘ என்கிற மாதிரி ஆயிடும்” என்றார் மஹா பெரியவர்.


சிறிது நேரம் மௌனம்.


பிறகு தொடர்ந்தார் மஹா பெரியவர்…


“ஆர்தர் கொய்ஸ்ட்லர்னு ஒரு கம்யூனிஸ்ட் ரைட்டர் என்னை வந்து சந்திச்சான். பல கேள்விகள் கேட்டான். கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை செய்யும் சர்ச்சுகளில் எப்பவும் அமைதி நிலவுகிறது. ஆனா உங்க கோயில்களில் எப்பவும் வாத்தியங்களின் சத்தம், குழந்தைகளின் கூச்சல், மக்களின் இரைச்சல் என்று ஒரே சத்தமாயிருக்கிறதே. பிரார்த்தனை செய்யும் இடம் அமைதியா இருக்க வேண்டாமா ?” என்று என்னைக் கேட்டான்.


“சர்ச்சுகள் நீங்க பிரார்த்தனை செய்கிற இடமாக இருப்பதால் அங்கே அமைதி காக்கப்படுகிறது. இந்துக்கள் பிரார்த்தனை செய்வது கோயில்களில் அல்ல. ஆண்டவனுக்கு நன்றி செலுத்துகிற இடமாகத்தான் கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை என்று ஒரு அறை இருக்கும். அங்கேதான் பிரார்த்தனை பண்ணுவோம். அதை விட்டால் நதிக் கரையில் பிரார்த்தனை செய்வோம்.

கோயிலுக்குப் போய் நைவேத்தியங்கள் வைத்து ஆண்டவனுக்கு நன்றி செலுத்துவோம். விவசாயிகள் அறுவடை முடிந்ததும் பொங்கல் படைத்து ஆண்டவனுக்கு ‘நன்றி’ செலுத்துவதற்காகவே பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறோம். ராஜாக்களுக்குக் கப்பம் கட்டி நன்றி செலுத்துவது போல் ஆண்டவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.

அதனால் இந்துக்கள் நன்றி செலுத்துகிற இடம் சப்தமாகத்தான் இருக்கும். மேள தாளங்களுடன் மகிழ்ச்சி பொங்கும்” என்று நான் சொன்ன பதிலில் அவன் ரொம்ப ‘கன்வின்ஸ்’ ஆயிட்டான்.




“என்னைப் பார்க்கும் போது ஏசுநாதரைப் பார்ப்பது போல் இருப்பதாக (I saw Christ in him) அவன் எழுதிய ‘Lotus and Wheel‘ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளான். உனக்கு டாக்டர் ராகவன் தெரியுமோல்லியோ? மியூசிக் அகாடமி செக்ரட்டரி, அவனிடம் அந்தப் புத்தகத்தோட காப்பி இருக்கு. நீ மெட்ராஸ் போனதும் அதை வாங்கிப் படி” என்று கூறிய பெரியவர் அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. “அதோ அங்கே உட்கார்ந்திருக்கிறாளே அந்தப் பெண்மணி, அந்த ரைட்டர் – அவர்கள் இரண்டு பேருமே கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள். அந்தப் பெண்மணியும் என்னிடம் ஏசுநாதரைக் காண்பதாகச் சொல்கிறாள். ஆனா இந்து மதத்தைச் சேர்ந்த நாம் இந்துக்களை கிறிஸ்துவ மதத்தில் சேரச் சொல்லி விளம்பரப்படுத்தறோம், இது சரியா ?” என்று கேட்டார்.


இதையெல்லாம் கேட்கக் கேட்க சாவிக்குப் பெரியவர் பேச்சில் இருந்த நியாயம் விளங்கியது. அவரை வணங்கி ஆசி பெற்று, “நான் வாசன் அவர்களிடம் உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்” என்று மட்டும் சொல்லி விட்டு விடை பெற்றுக் கொண்டார்.


சாவி சென்னை திரும்பியதும் முதலில் இது பற்றி வாசன் அவர்களைப் பார்த்துப் பேசத் தான் எண்ணியிருந்தார். ஆனாலும் பாலு அவர்களிடமே முதலில் தெரிவித்து அவர் அபிப்பிராயம் அறிந்து கொள்வது தான் முறை என்று தீர்மானித்து பாலு அவர்களிடம் விஷயத்தை எடுத்துச் சொன்னார்.


“இது ஒரு விளம்பரம்தான். நம்ம கருத்து இல்லையே… இதெல்லாம் வியாபாரம்… இது காஞ்சிப் பெரியவருக்கு நன்றாக விளங்குமே!” என்றார் பாலு.


“அதென்னவோ, எப்படியானாலும் விளம்பரத்தை நிறுத்தி விடுங்கள். பெரியவர் வார்த்தைக்கு நாம் மதிப்புத் தர வேண்டியது அவசியம்” என்றார் சாவி.


சாவி நீண்ட நேரம் விவாதித்துப் பார்த்தார். பாலு அவர்கள் சம்மதிக்கவில்லை.


சாவியும் விடாக் கண்டனாயிருந்து மேலும் மேலும் வாதாடிக் கொண்டிருந்தார். கடைசியில் பாலு சற்று நேரம் யோசித்து விட்டு விளம்பரத்துறை மேலாளரை அழைத்து அந்த விளம்பரம் பற்றிய விவரங்களைத் தெளிவாக விசாரித்துத் தெரிந்து கொண்டார்.


‘ஒரு வருட ஒப்பந்தம். இன்னும் ஆறு வாரம் பாக்கியிருக்கிறது’ என்றார் மேலாளர்.


‘பரவாயில்லை. இந்த வாரமே அதை நிறுத்தி விடுங்கள். அந்த விளம்பரம் தந்தவர்களுக்கு கன்வின்சிங்கா ஒரு லெட்டர் எழுதி விடுங்கள்’ என்று சொல்லி அனுப்பி விட்டார். சாவி நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.


‘இப்போது திருப்திதானே ?’ என்று கேட்டார் பாலு.


‘ரொம்ப ரொம்ப…’ என்று சாவி நன்றி உணர்வோடு அவரைப் பார்த்தார். – ராணி மைந்தன் சாவி – 85
சாவி-85 நூலின் ஆசிரியர், திரு. ராணிமைந்தன், ஒரு கால் நூற்றாண்டு காலம், அமரர் சாவியோடு, நெருங்கிப் பழகி, பணியாற்றியவர்.


??????????????????? | Balhanuman's Blog
 
ஆனைமுகனுக்கு தந்தம் தந்த மகாபெரியவா!
வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமே தேவ சர்வ கார்யேஷு சர்வதா…


கோயில் நகரம் எனப்படும் திருக்குடந்தையை, காசி க்ஷேத்திரத்தைவிட வீசம் அதிகம் கொண்ட தலம் என்று போற்றுவர். அதற்குக் காரணம், இங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீபகவத் விநாயகர்! கும்பகோணம் மடத்துத் தெருவில், கிழக்கு நோக்கி கோயில் கொண்டிருக்கிறார் இந்தப் பிள்ளையார்.

பன்னெடுங்காலத்துக்கு முன்பு, இந்தத் தெருவில்தான் காவிரியின் கரைப் பகுதி இருந்ததாம். பிறகு அகண்ட காவிரி, தனது அகலத்தைக் குறைத்து ஓடத் துவங்கியதாகச் சொல்வர். தற்போது இங்கே கோயில் தனியாகவும், பகவத் படித்துறை என்பது தனியாகவும் அமைந்துள்ளது.

வேதாரண்யம் எனும் ஊரைச் சேர்ந்தவர் பகவர் முனிவர். இவரின் தாயார் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகக் கிடந்தார். ஒருநாள், தன் மகனிடம்… ‘நான் இறந்த பிறகு, என்னுடைய அஸ்தியை ஒவ்வொரு தலத் துக்கும் எடுத்துச் செல்வாயாக! எந்தத் தலத்தில் அஸ்தி புஷ்பமாக மாறு கிறதோ, அங்கே கரைத்துவிடு! இதுவே என் கடைசி விருப்பம்’ என்று சொல்லி மறைந்தார்.

பகவர் முனிவர், தாயாரின் இறுதிக் காரியங்களை முடித்தார். ‘இந்த அஸ்தி, காசியில்தான் பூக்களாக மாறும்’ என நினைத்தபடி, யாத்திரைக்கு ஆயத்த மானார். அஸ்தியை சிறிய பானை ஒன்றில் வைத்துக் கட்டிக் கொண்டு, சீடர்களுடன் புண்ணியத் தலங்கள் தோறும் சென்றார். திருக்குடந்தைக்கு வந்தவர், காவிரியில் நீராடினார். அப்போது அவரின் சீடர், கரையில் இருந்த விநாயகர் திருவிக்கிரகத்துக்கு எதிரில் வைக்கப்பட்டிருந்த அஸ்திப் பானையைத் திறந்து பார்த்தார். அதில் பூக்கள் நிரம்பியிருந்தன. ஆனால் அந்தச் சீடர், ‘பானையை ஏன் திறந்தாய்?’ என்று குருநாதர் திட்டுவாரோ என்று பயந்து, அமைதியாக இருந்துவிட்டார்.

பிறகு, குடந்தைத் தலத்தில் இருந்து வழியில் உள்ள தலங்களை தரிசித்தபடி, காசியம்பதிக்குச் சென்றார் முனிவர். அங்கே சென்று, பானையைத் திறந்தபோது, அதில் அஸ்தியே இருந்தது. அதைக் கண்டு சீடர் அதிர்ந்தார். ‘குருநாதா, என்னை மன்னியுங்கள். திருக்குடந்தையில், காவிரி ஆற்றில் நீங்கள் நீராடியபோது, அஸ்தி கலசத்தைத் திறந்து பார்த்தேன். பூக்களாக மாறியிருந்ததைக் கண்டேன்’ என்றார். அதைக் கேட்ட முனிவர், உடனே திருக்குடந்தைக்கு திரும்பினார். காவிரி ஆற்றங்கரையில் இருந்த ஸ்ரீவிநாயகரின் சந்நிதிக்கு முன்னே அஸ்தியை வைத்து, மனமுருக வேண்டினார். பிறகு அஸ்திப் பானையைத் திறந்து பார்க்க… உள்ளே பூக்கள் நிரம்பியிருந்தன. அதையடுத்து காவிரியில் நீராடி, உரிய கிரியைகளைச் செய்து முடித்தார்.இதனால், ‘காசியைவிட அதிகம் வீசம் கொண்ட க்ஷேத்திரம்’ என்பதை உணர்ந்து, சிலிர்ப்புடன் வழிபட்டாராம் முனிவர்.

அஸ்தியானது பூக்களாக மாறிய காவிரிக்கரையே பகவத் படித்துறை என்றும், பகவர் முனிவர் வழிபட்டதால் இந்தக் கணபதிக்கு ஸ்ரீபகவர் விநாயகர் என்றும் பெயர் அமைந்ததாம். இங்கே ஸ்ரீபகவர் முனிவருக்கும் அவரின் சீடருக்கும் விக்கிரகங்கள் உள்ளன.

காஞ்சிப் பெரியவர் கும்பகோணம் வரும்போதெல்லாம், இந்த விநாயகரை வணங்கிச் செல்வாராம். 1952-ஆம் வருடம், காஞ்சி சங்கர மடத்துக்குச் சொந்தமான சந்திரமௌலீஸ்வரன் எனும் யானை திருவிசநல்லூரில் இறந்தது. அப்போது காஞ்சி மகாபெரியவா, யானையின் இரண்டு தந்தங்களையும் ஸ்ரீபகவத் விநாயகருக்கு அளித்து வழி பட்டார். சங்கடஹர சதுர்த்தி, விநாயக சதுர்த்தி முதலான வைபவங்களில் ஸ்ரீபகவத் விநாயகருக்கு, அந்த தந்தங்களைக் கொண்டு அலங்கரித்து வழிபடுவது வழக்கமாம்!

மார்கழியில் சிறப்பு பஜனை, சங்கடஹர சதுர்த்தியில் தங்கக் காப்பு அலங்காரம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 நாட்கள் உத்ஸவம் என அமர்க்களப்படும் ஆலயம். அப்போது, ஸ்ரீபகவத் விநாயகருக்கு கொழுக்கட்டையும் அருகம்புல் மாலையும் சமர்ப்பித்து வழிபட, நன்மைகள் கைகூடும்!



Source:Sage of Kanchi

Krisnamoorthi Balasubramanian
 
கீதையில் ஒரு சந்தேகம் :

கீதையில் ஒரு சந்தேகம் :


காசியிலிருந்து ஒரு பண்டிதர் - மகா மகா பண்டிதர் - ஸ்ரீ மடத்துக்கு வந்தார். அவர் அணிந்திருந்த தோடா, மகரகண்டி, சால்வையைப் பார்த்தாலே பிரமிக்க வைப்பதாக இருந்தது. எத்தனையோ வித்வத் சதஸுகளில் பேரறிஞர்களின் விவாத அரங்குகளில் சம்மானமாகப் பெற்றவை அவை.

பெரியவாளை ஒரு கை பார்த்துவிட வேண்டுமென்று அவர் மனத்திற்குள் ரகசியத் திட்டம் போட்டுக் கொண்டே வந்தார்.

நமஸ்காரம் செய்துவிட்டு எழுந்த அவர், பெரியவா அருகில் சென்று, " பகவத் கீதையில், ஒரு சந்தேகம் ...." என்று இழுத்தார். (முடிந்தால், பெரியவா தீர்த்து வைக்கலாம் என்று சவால் விடும் தோரணையில்.)

பெரியவா, சைகை காட்டி, அவரை உட்காரச் சொன்னார்கள். அவர் உட்கார்ந்ததும் அருகிலிருந்த அணுக்கத் தொண்டர்களைப் பார்த்து, "எல்லோரும் இவரை மூணு பிரதக்ஷிணம் பண்ணுங்கோ" என்று உத்தரவிட்டார்கள்.

எதிர்பாராத உத்தரவு, பண்டிதருக்குக் குழப்பம். தொண்டர்களுக்குத் திகைப்பு !

" பெரியவா ... வந்து ... என்ன ... ஆக்ஞை ... இப்படி ? " என்று நாக்குழறினார் பண்டிதர்.

பெரியவாள் மெல்லச் சொன்னார்கள்:

" பகவத் கீதையில், பதத்துக்குப் பதம் ஆயிரம் சந்தேகம் எனக்கு. உங்களுக்கோ, பகவத் கீதையில் கேவலம் ஒரே ஒரு சந்தேகம் . உங்கள் பாண்டித்யம் என்ன ! ஞானம் என்ன ! அடடாடா !.... அதனால் தான் என் சிஷ்யர்களைப் பிரதக்ஷிணம் பண்ணச் சொன்னேன் ... "

பண்டிதருடைய கர்வத்துக்குப் பலமான சம்மட்டி அடி, தலையைத் தூக்கமுடியவில்லை. சிரம் தாழ்த்தி பெரியவாளிடம் ஒரு சந்தேக விளக்கம் கேட்டார்.

பெரியவா ரொம்பப் பொறுமையாக பகவத் பாதாள் பாஷ்யத்தைக் கூறி நீண்ட நேரம் விளக்கம் தந்தார்கள். பண்டிதர் அப்படியே சொக்கிப் போனார். கர்வம் காணாமற் போயிற்று.

"தன்யோஸ்மி" என்று, அஷ்டாங்க நமஸ்காரம் செய்த பண்டிதருக்கு உரிய மரியாதை செய்து கெளரவித்துப் பிரசாதம் வழங்கினார்கள் பெரியவாள்...



Source: Sage of Kanchi

Varagooran Narayanan
 
சின்ன தர்மம் பெரியவா வாக்கில் வந்து பெரி

சின்ன தர்மம் பெரியவா வாக்கில் வந்து பெரிய தர்மமாகிவிடுகிறது"

பெரியவாளை வந்து நமஸ்கரித்தாள் ஒரு வயஸான பாட்டி. அவள் கண்கள் மடையாக பெருக்கெடுத்தது. பெரியவா அவளுடைய மனஸின் வலியை உணர்ந்ததால், அவளாக அழுது ஓயட்டும் என்று பொறுமையாக இருந்தார்.

"இத்தனை வயசுக்கப்புறம், எனக்கு இப்பிடி ஒரு புத்ரசோகத்தை தாங்கிக்கணுமா? எனக்கு கொள்ளி போட வேண்டிய கொழந்தை அவசர அவசரமா போய்ச் சேந்துட்டானே!

எனக்கிருந்த ஒரே ஆதரவு அவன்தானே பெரியவா!...கொழந்தை மனசுல என்னென்ன ஆசைகளோட போனானோ தெரியலியே!....." கதறினாள்.

கலக்கம் என்பதே இல்லாத அந்த மஹா மனஸ் இப்போது கண்களில் துளிர்த்த கண்ணீரை அடக்க முடியாமல் வெளிவிட்டது.

சன்யாசிகளின் கண்ணீர் பூமியில் விழக்கூடாது என்று சாஸ்த்ரம் சொல்லுவதால், சட்டென்று குனிந்து கண்ணீரை தன் மடியில் விழுமாறு செய்தார்.

"எனக்கு இப்போ ஒண்ணே ஒண்ணுதான் பண்ணணும். அவனோட ஆத்ம சாந்திக்காக நா...ஏதாவது ஹோமம் பண்ணி அவனை த்ருப்திப் படுத்தணும். பெரியவாதான் எனக்கு கதி...

. நா என்ன பண்ணட்டும்? எனக்கு ஒரு வழி காட்டுங்கோ பெரியவா....."

அமைதியாக, ஆதரவாக அவளிடம் கூறினார்.....

"நீ எந்தக் கோவிலுக்கும் போவேணாம், எந்த ஹோமமும் பண்ணவேணாம். நீ கிராமத்துலேர்ந்துதானே வரே?

அங்க வயல்வெளிகள்ள ஏர் உழுது, நாத்து நடற
ஜனங்களை பாத்திருப்பியோன்னோ? பாவம். வேகாத வெய்யில்ல அவா படற ஸ்ரமத்தை நீ தீத்து வை!

என்ன பண்ணறேன்னா....பானை நெறைய மோரை எடுத்துண்டு போய், அவாளுக்கெல்லாம் வேணுங்கறமட்டும் குடுத்து, அவாளோட தாகத்தை தணி!

இது ஒண்ணுதான்...ஒம்பிள்ளையோட ஆத்மா சாந்தி அடையறதுக்கு ரொம்ப உத்தமமான
வழி!.." என்று வெகு சுலபமான ஆனால் உன்னதமான பரிஹாரத்தை சொல்லிவிட்டார்.

ஒரு சாதாரண நீர்மோர் எப்பேர்ப்பட்ட சாந்தியை குடிப்பவருக்கும், கொடுப்பவருக்கும் அளித்து விடுகிறது! இந்த சின்ன தர்மம் பெரியவா வாக்கில் வந்து பெரிய தர்மமாகிவிடுகிறது.


Source: Sage of Kanchi

Varagooran Narayanan
 
Experiences with Maha Periyava:

Experiences with Maha Periyava:

Sadasivam was a man who belonged to Salem. He was a bachelor. He spent his days, hiring a room in a hotel. He had immense bhakti on the Mahan.

A very large homam (fire sacrifice ritual) was conducted in the year 1990 at Kanchi Matham, Salem. Vedic experts and pundits from outstations had been invited for the occasion. Their count exceeded sixty. The homam was held continuously for eleven days. It was only Sadasivam who ensured that the flowers needed for the homam were supplied without any hitch.

The homam was completed auspiciously. The next thing that the organisers had to do was to start for Kanchi, along with the teertha pots and the maha raksha (the homam ashes that served as protection), submit them to the Mahan and get his blessings. Three notables accompanied the Vedic pundits in three vans to Kanchipuram. Sadasivam, who was responsible for the flower works, also went with them.

There were good rains en route to Kanchipuram. At length they all reached Kanchipuram with the articles of the homam. Everything including the kalasha neer (water in the pots) were kept before Periyava. His face showed immense happiness when he looked at them, being the one who was well familiar with the phala (fruits) and bala (strength) of this homam.

Asking for a kalasha neer to be brought to him, the Mahan went inside, chanted some mantras and sprinkled the water from the pot over his head.

As he came out and sat, he took the large garland brought for him and wore it over his neck. He took the flowery crown in his hands and had a look at it. It was made with a lot of decorations. The Mahan raised a question, "Who made this?" The people who came in the vans pointed Sadasivam to the Sage, who came out of the crowd wearing a lungi over his waist with a red shirt covering his upper part.

Maha Periyava covered his head with the crown. "Does it look good?" he asked, with a smile blossoming in his lips.

Unable to speak in words, the people around nodded their head in affirmation, expressing their happiness and bowing to the Mahan.

Meanwhile, Sadasivam removed his shirt and went and stood before the Mahan. He did not know what to say to the Mahan. His palms remained folded. Tears gushed from his eyes in streams. The Mahan took the flowery crown from his head. He smiled at Sadasivam. Then he asked the man to bow slightly and placed the crown on Sadasivam's head. What a great fortune!

The people around shivered with ecstasy. Until then the Mahan had only given this honour of placing a flowery crown with his own hands only to a well learned pundit.


Source: Sage of Kanchi

Rama Krishna
 
Gems from Maha Periyava

Gems from Maha Periyava

நைவேத்தியம் செய்தால் ஸ்வாமி எங்கே சாப்பிடுகிறார் என்று சிலர் கேலியாகக் கேட்கிறார்கள். நிவேதனம் என்றால் ஸ்வாமியைச் சாப்பிடவிடுவது என்று அர்த்தமேயில்லை. நிவேதயாமி என்றால் அறிவிக்கிறேன் என்று அர்த்தமே தவிர, உண்பிக்கிறேன் என்று அர்த்தமில்லை. அப்பனே, இந்த வேளைக்கு உன் கருணையில் இந்த அன்னத்தைக் கொடுத்திருக்கிறாய் என்று அவனுக்குத் தெரிவித்துவிட்டு அவனுடைய நினைவோடு உண்ண வேண்டும்.


Source:Sage of Kanchi


Sundaresan Subramanian
 
தட்சிணாமூர்த்தி பாதத்தில படுக்கப் போடு&#

தட்சிணாமூர்த்தி பாதத்தில படுக்கப் போடுங்கோ

As narrated by Shri தங்கமணி சுவாமிநாதன் …


எனது பாட்டி எனக்கு அறிவித்த ஒரு அதிசய சம்பவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒருசமயம், காஞ்சிப் பெரியவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்.
பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.


கூட்டத்தில் வந்த இளம் தம்பதியரின் கையில் ஒரு ஆண்குழந்தை இருந்தது. கொழு கொழுவென இருந்த குழந்தையை பெரியவரின் காலடியில் கிடத்தி விட்டு, அழத் தொடங்கினர்.

“”தங்க விக்ரகம் போல இருக்கும் அந்த குழந்தையின் உடம்பில் எந்த வித அசைவும் இல்லை. மலர் போன்ற அதன் கண்களில் பார்வையும் இல்லை” என்பதை அறிந்ததும் அனுதாபத்தில் ஆழ்ந்தனர்.

உற்றுப் பார்த்த பெரியவர், “அப்படியே தான் இருக்கு இன்னும் கொறயலையே” என்று மட்டும் சொல்லி விட்டு, சில நிமிடம் மவுனம் காத்தார்.


பெரியவர் என்ன சொல்கிறார் என்பது அப்போது யாருக்கும் புரியவில்லை. பின் மடத்து ஊழியரை அழைத்து, பாலும், நந்தியாவட்டைப் பூவும் கொண்டு வரும் படி பணித்தார். பூவினைப் பாலில் தோய்த்து குழந்தையின் தலை, கண்கள், வயிறு, பாதம் ஆகியவற்றில் தடவி விட்டு, கண்களை மூடி பிரார்த்தித்தார்.
பெற்றோரிடம், “”கொழந்தைய.. .. மாயவரம் (மயிலாடுதுறை) மாயூரநாதர்கோயிலுக்கு தூக்கிண்டு போயி தட்சிணாமூர்த்தி பாதத்தில படுக்கப் போடுங்கோ…. இப்பவே கிளம்புங்கோ…” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.


அந்த தம்பதியும் மயிலாடுதுறை புறப்பட்டனர்.


அவர்கள் வரும் முன்பே, மாயூரநாதர் கோயிலில் கூட்டம் சேர ஆரம்பித்தது. உணர்ச்சியற்ற அந்த குழந்தையைப் பற்றித் தான் ஒரே பேச்சாக இருந்தது.


குழந்தையுடன் வந்த பெற்றோர், மாயூரநாதர் கோயிலில் விநாயகரை தரிசித்து விட்டு, பிரகாரத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தி சந்நிதி முன், குழந்தையைப் படுக்க வைத்து வழிபட்டனர். ஒரு மணி நேரம் ஆன பின்பும், குழந்தையிடம் ஒரு அசைவும் தென்படவில்லை. மக்கள் சலசலக்க ஆரம்பித்தனர். சிலர், அந்த பெற்றோரின் தெய்வ நம்பிக்கையை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.


அப்போது, திடீரென ஒரு வெள்ளை பூனைக்குட்டி கூட்டத்திற்கு நடுவில் ஓடி வந்தது. குழந்தையின் அருகில் நெருங்கியது. பூனையால் ஆபத்து நேர்ந்திடாமல் தாய் கவனித்துக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பாராத விதத்தில், பூனை குழந்தையின் நெற்றியை நாவால் நக்கியது. தலை முதல் பாதம் வரை முகர்ந்து விட்டு ஓடி விட்டது.


பிறந்ததில் இருந்து அசையாத அக்குழந்தை, தட்சிணாமூர்த்தி சந்நிதியை நோக்கி திரும்பிப் படுத்தது. அதன் இதழில் புன்னகை அரும்பியது.

“க்ளுக்’ என்ற மழலை ஒலியும் எழுந்தது. இதைக் கண்ட பெற்றோர், “ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர’ என்றபடி குழந்தையை தூக்கினர். அவர்களைப் பார்த்துச் சிரித்தது.


இந்த அற்புதம் கண்டவர்கள் காஞ்சி மகானின் தெய்வீக தன்மையைக் கண்டு வியந்தனர்.


முற்பிறவியில் பூனையைக் கொன்றவர்களுக்கு, பூனை சாபத்தால் புத்திரபாக்கியம் இல்லாமல் போவது அல்லது ஊனமான குழந்தை பிறப்பது போன்ற தோஷம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். அதே பூனை இனத்தைக் கொண்டே, இந்த குழந்தையின் தோஷத்தைப் போக்கி, தலைவிதியை மாற்றி அமைத்த பெரியவரின் மகிமையை என்னவென்பது?



http://mahaperiyavaa.wordpress.com/2014/06/19/%
 
கனவில் வந்த மெய்யர்!

கனவில் வந்த மெய்யர்!

எழுதியவர் : ஜானா கண்ணன், மைலாப்பூர், சென்னை.

மூலம் : மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் – ஐந்தாம் பகுதி


கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நாட்கள். பெரியவாளைப் பற்றிப் பொதுவாகத் தெரிந்து கொண்டிருந்தேனே தவிர, விசேஷமான பக்தி என்று எதுவும் இல்லாத காலம்.
திடீரென்று தரிசனம் கொடுத்தார்கள் – கனவில்! ‘ஏதோ, பிரமை’ என்று ஒதுக்கித் தள்ள முடியவில்லை. அடிக்கடி வந்து தரிசனம் கொடுத்தார்கள்.

இந்தப் புனிதக் கனவுகளுக்கு ஒரு கௌரவம் கொடுக்க வேண்டாமா?


குருவார விரதம் மேற்கொண்டேன். அது முதல் ஒவ்வொரு வியாழனிலும் தரிசனம் கிடைக்க ஆரம்பித்தது. சந்தோஷமாக இருந்தது. ஆனால் அது நீடிக்கவில்லை.

பெரியவா வருவதை நிறுத்திக் கொண்டுவிட்டார்கள். நான் என்ன தவறு செய்தேன்?


அன்று வியாழக்கிழமை. படுக்கையில் உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டு பிரார்த்திக்கிறேன். ‘இன்றைக்காவது தரிசனம் கொடுக்கணும்’.

ஊஹூம்… பெரியவாள் வரவில்லை.


ரொம்பவும் ஏக்கமாகத்தான் இருந்தது. என் பிரார்த்தனையை ஏன் பெரியவாள் ஏற்றுக் கொள்ளவில்லை?
இரண்டு நாட்கள் கழித்து சொப்பனத்தில் காட்சி தந்தார்கள். “பெரியவாள் தரிசனம் முன்பெல்லாம் அடிக்கடி கிடைச்சுது. இப்போ பெரியவா வரதே இல்லை” என்று வருத்தத்துடன் கூறினேன்.


பெரியவாள் மெல்லச் சிரித்தார்கள். “எனக்கு வயசாயிடுத்தோன்னோ? நான் கிழவனாயிட்டேன். (தண்டத்தைக் காட்டி) இந்தக் குச்சியை எடுத்துண்டு அவ்வளவு தூரம் வரமுடியல்லே. நீ தான் என்னைப் பார்க்க வரணும்”.


“பெரியவா அனுக்ரஹம் இருந்தால் வருவேன்.”


“உத்ஸவத்துக்கு வரயா?”


“அனுக்ரஹம் செய்தால் வருவேன்”.


கனவு கலைந்தது. ஒன்றும் விளங்கவில்லை. எந்த உற்சவத்துக்கு வரவேண்டும்? அதற்கும் பெரியவாள் தரிசனத்துக்கும் என்ன சம்பந்தம்?


மறுநாளே அந்த ஆச்சரியம் நடந்தது.


சென்னையில் ஒரு கல்யாணத்துக்கு என் பெரியம்மா போக வேண்டியிருந்தது. “துணைக்கு நீ வாயேன். நீ வந்தால்,, போகிற வழியில், காஞ்சிபுரத்தில் பெரியவாளை தரிசனம் பண்ணிவிட்டுப் போகலாம்.”
அடுத்த நிமிடமே நான் தயாராகிவிட்டேன்!


மறுநாள் காலை நாங்கள் காஞ்சிபுரம் மடத்து வாசலுக்குச் சென்றபோது, அங்கே காமாக்ஷி வந்து நின்றுகொண்டிருந்தாள். ஏகக் கூட்டம். மூன்று பெரியவர்களும் வலம் வந்து கொண்டிருந்தார்கள்.
“என்ன விசேஷம் இன்னிக்கு” என்று உள்ளூர்ப் பெண்மணியைக் கேட்டேன்.


“தெரியாதா உனக்கு? காமாக்ஷி கோயில் உத்ஸவம் நடந்து கொண்டிருக்கு”.
எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. “உத்ஸ்வத்துக்கு வரயா?” – வெறும் கனவு அல்ல; தெய்வ சங்கல்பம்!


ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!



2014 June 19 « Sage of Kanchi
 
காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்



* உங்களுக்கு பிடித்தமான தெய்வத்தை வணங்கலாம். ஒரே தெய்வத்தை வணங்குவதால் மனம் ஒருமுகப்படும்.

* மற்றவர்கள் வணங்கும் தெய்வங்களை தாழ்வாக எண்ணுவது கூடாது.

* கீழே விழுந்து தெய்வத்தை வணங்கும் காரணம் தெரியுமா? உடல் கூட தெய்வத்திற்குரியது தான் என்பதை உணர. இந்த உடல் எனக்குரியது என்ற அகந்தையை விட்டொழிக்க.

* பெண்ணுக்கு சீதனமாக மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்கக்கூடாது. பெண்ணைப் பெற்றவர்கள் விரும்பிக் கொடுத்தாலும் வாங்கக் கூடாது.

- காஞ்சிப்பெரியவர்


source: Narayanan Dharmaraj

Sage of kanchi
 
உங்க மனஸுப்படியே ஆகட்டும்!

உங்க மனஸுப்படியே ஆகட்டும்!


1939 ஜூனில் காசி யாத்திரையின் முடிவாக ஸ்ரீசரணாள் வடபுலத்திலிருந்து திரும்பி தென்கோடியான ராமேஸ்வரம் சென்றுகொண்டிருக்கறார். ஏறக்குறைய இறுதிக்கட்டம். திருப்புனவாயிலைக் கடந்து தேவிபட்டணம் போகும் வழி..

சுக்ரவார பூஜை பொருத்தமாக தேவிபட்டணத்தில் ஏற்பாடாகியிருந்தத. அதற்குத்தான் விரைகிறார்..

ஆயின் தேவி அங்கே காளிரூபம் கொண்டிருப்பதாக அல்லவோ தோன்றுகிறது?

அங்கு ஊராட்சி முக்யஸ்தர் ஒரு முஸ்லீம் மரைக்காயர்.. வெளிப்படவே ஐக்கிய இந்தியக் கொள்கையிலும், ஹிந்து மதத்தாரிடமும் முஸ்லீம் லீக் பகமை பாராட்டி வந்த அந்நாளில் அவர் அங்கு ஒரு பெரிய கட்சிக்கூட்டத்திறகு ஏற்பாடு செய்திருந்தார். அதன் தொண்டர்கள் ஹிந்து சமுதாயத்தின் விஷயமாக குண்டர்களே ஆகித் தெருக்களில் ஆயுதமும் கையுமாக அன்று செய்த தர்பாரில் ஊரே கிடுகிடுத்துக் கொண்டிருந்தது. ஹிந்துக்கள் நடுநடுங்கிக்கொண்டருந்தனர்.

செல்லும் வழியில் ஸ்ரீசரணாளுக்குச் செய்தி வந்தது. பயணத்தைத் தொடராமல், இருந்த இடத்திலேயே அப்போதைக்கு நிப்பாட்டிவிடலாம்; தேவிபட்டணத்தில் கூட்டம் முடிந்து, ஊர் அமைதிக்குத் திரும்பியபின்னர் மீண்டும் பயணம் மேற்கொள்ளலாம்; வேறு வழியில்லை என்று அனைவரும் கருதினர்.

அந்த அனைவர் கருத்தும் எந்த ஒருவரின் அங்கீகாரத்தில்தான காரியமாகுமோ, அவர் ஏதும் சொல்லாமலே மோன சாந்த விக்ரஹமாக, ஆயினும் உத்ஸவ விக்ரஹமாக மேலே சென்று கொண்டேயிருந்தார்.

அதே வழியில் அந்த மரைக்காயரே எதிர்ப்படும்படி நேர்ந்தது! கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் சுற்றுப்பிரதேசங்கலும் செய்து விட்டு அவர் திரும்புகையில் ஸ்ரீசரணாரின் பரிவாரம் வருவதைக் கண்டார்!

பரிவாரத்திடை வந்த பரமரையும் கண்டார்.

எப்படிக் கண்டார்? மைத்ரீ தேவதையாகவேதான் கண்டிருக்கவேண்டும

பெரியவாளிடம் நெருங்கி வந்து பெரிதாகக் கும்பிட்டு நின்றார். அவர் நெஞ்சமெல்லாம் பக்தி பூரிக்க உருகியிருந்தது வெளிப்பார்வைக்கே தெரிந்தது.

முதல் தரிசன மாத்திரத்தில் முழு மனமாற்றம்! மாறு நினைத்த மனம் அன்பிலே கொண்ட அதிசய மாற்றம்!

தற்செயலாகக் கிடைத்த தரிசனம் தாம் எதிர்பார்க்காததோர& அமைதியையும், இன்பத்தையும் ஊட்டியதை அவருக்குத் தெரிந்த மொழிநடையில் உணர்ச்சியுடன் பெரியவாளிடம் தெரிவித்தார்.

நம்ம ஊர்ல சாமி வந்து பூசை பண்றது பாக்கியங்க! எங்களைச் சேர்ந்தவங்களுக்கு சொல்றேங்க! என்ன பணியானாலும் செஞ்சு குடுப்பாங்க. சாமி நல்லா நம்ம ஊர்ல இருந்து, எங்களுக்கெல்லாம் அருளு பண்ணிட்டுப் போகணுங்கâ€￾ என்று வேண்டிக் கொண்டார்.

உங்க மனஸுப்படியே ஆகட்டும்! என்று ஸ்ரீசரணர் நெகிழ்ந்து கூறி ஆசி வழங்கினார்.

பெரியவாள் புன்ணியத்தில் குண்டராட்சி பெரியவாளுக்கே தொண்டர் மாட்சியாக உருமாறிற்று.

ஒருபுறம் லீக் கூட்டம் அமைதியாகவே நடக்க, மறுபுறம் தேவியின்---காளி ரூபத்தில் அல்ல; ஸௌம்ய லலிதா ரூபத்திலேயே உள்ள தேவியின்------பூஜையும் கோலாஹலமாக நடந்தேறியது.

அன்னையன்பின் வடிவான அவதார அன்னைக்குச் செய்யும் பூஜை மணிக்கணக்கில் நீள்வதுண்டுதானே? அப்படித்தான் அன்றும் நடந்தது.

கூட்டம் முடிந்த பின்னும், பூஜை நடப்பதறிந்த மரைக்காயர் தம் முஸ்லீம் பரிவாரத்துடன் முகாமுக்கு வந்து, அவர்களோடு வெளியே காத்திருந்து, தாங்கள் கொண்டு வந்திருந்த ஏராளமான பழக்கூடைகள், பூக்கூடைகள், கட்டுக்கட்டாக ஊதுபத்தி, புட்டி புட்டியாக அத்தர், பன்னீர் முதலானவற்றை உள்ளே அனுப்பி வைத்தார்.

பூஜை முடிந்ததும் நேரே பெரியவாள் அவர்களுக்குத் தரிசனம் வழங்கத்தான் வந்தார். எப்போதுமே அன்னையன்புக்கு மூர்த்தமான அவரது திருவுருவம் இதுபோன்ற அன்னை வழிபாட்டிற்குப் பின்னோ முன்னிலும் அன்பு மெருகேறி ஜ்வலிப்பது வழக்கம். இன்றோ அந்த வழக்கத்திற்கும் அதிகமான அன்பொளி வீச வந்து நின்று, திருநயனத்தால் அதனை அவர்களுக்கு அள்ளித் தெளித்தார்.

அப்போதும், அன்னிய மதத்தினர், அன்று சில மணிகள் முன்பு கூட, என்ன அநியாயம் செய்வரோ என்று அஞ்ச வைத்தவர்கள், கனிந்த மனத்தோடு, கனியும் மலரும், மணமிகு மற்ற கையுறைகளும் கொண்டுவந்து கொட்டிப் பணிந்தவாறிருந்தனர

அன்னியோன்னியம்’ என்று ஒரு அழகான சொல். அன்னியம் என்பது அன்னியமாகிவிடும் ஆரன்பைக் காட்டும் சொல். அதற்கு அற்புதச் சான்றாயிருந்தது அந்த நிகழ்ச்சி.

இத்தனை அன்பா நீங்க செய்யறதை நான் ஸந்தோஷமா ஏத்துக்கத்தான் வேணும். ஆனாலும் இவ்வளவு தாங்குமான்னு இருக்கு!என்று உள்ளத்திலிருந்து கூறினார் ஸ்ரீசரணர்.

ஏங்க தாங்காம?￾ என்றார் மரைக்காயர், பரம பவ்யமாக. சாமியை செகத்து குரு”வுன்னு சொன்னாங்க. அப்ப எங்களுக்கும் குருதானுங்களே! நாங்க என்னதான் செய்யக் கூடாது? என்றார் அந்த முஸ்லீம் .


Quotes from Shankaracharya's
 
ஸ்வாமி எங்கே?

ஸ்வாமி எங்கே?



பஞ்சாங்கத்தில் ‘வபன பௌர்ணமி’ என்று சில பௌர்ணமி திதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஸ்ரீகாமகோடி பீடாதிபதிகள், அன்றைய தினம்தான் க்ஷவரம் (முடி மழித்தல்) செய்து கொள்வது சம்பிரதாயம்.

ஒரு வபன பௌர்ணமியன்று மஹாபெரியவாளுக்குக் கடுமையான காய்ச்சல். அதனால் வபனம் செய்து கொள்ளவில்லை. ஒரு வபன பௌர்ணமி தவறினால், அடுத்த வபன பௌர்ணமி வரை காத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். காய்ச்சல் காரணமாக முடி மழித்துக் கொள்ளாததால், பெரியவாளுக்குத் தலைமுடியும் தாடியும் மிகவும் வளர்ந்துவிட்டன.

அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு மரத்தடியில் அமர்ந்து பெரியவா ஜபம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது, ஒரு தம்பதிகள் அவசரமாகத் தரிசனத்துக்கு வந்தார்கள். ஏராளமான முடியுடனிருந்த பெரியவாளை அவர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. யாரோ ஒரு சந்நியாசி என்று நினைத்து, அவர்களைப் பார்த்தே, “ஸ்வாமிகள் எங்கே?” என்று கேட்டார்கள்.

பெரியவா கொஞ்சமும் பதற்றப்படாமல், “ஸ்வாமியைத்தான் தேடிக்கொண்டிருக்கேன். இருக்கும் இடம் தெரியவில்லை” என்று, இரு பொருள் தொனிக்கப் பதில் கூறினார்கள். வந்தவர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. ஸ்வாமிகளைத் தரிசிக்க வேண்டும் என்று ஆவலுடன் வந்தால், அவர் இருக்குமிடமே தெரியவில்லையாமே!

எதிரே வந்த ஒரு தொண்டரிடம் விசாரித்தார்கள்.

அவர் மரத்தடியிலிருந்த பெரியவாளை சுட்டிக்காட்டி, “அதோ இருக்காளே!” என்று கூறியதும், தம்பதிகளுக்கு உடல் வெலவெலத்துவிட்டது. ‘எவ்வளவு பெரிய அபசாரம் செய்துவிட்டோம்?’ என்று தவித்துக் கொண்டிருந்தபோது, பெரியவாளே அவர்களைக் கூப்பிட்டு, அருகில் உட்காரச் சொன்னார்கள்.

”தாடி ரொம்பவும் வளர்ந்துபோச்சு! அதனாலே என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் தான் உங்களை பயமுறுத்தியிருக்கேன்! பரவாயில்லை…” என்று அவர்களுக்கு மனத்திருப்தி ஏற்படும் வரை சமாதானமாகப் பேசி, பிரசாதம் கொடுத்தார்கள்.

பெரியவாளுக்கு இந்த மாதிரி விளையாட்டெல்லாம் ரொம்பப் பிடிக்கும்!

அவைகளைக் கண்டு ரசிக்க, அணுக்கத் தொண்டர்களுக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்! நமக்கும்தான்!


karaimodumalaigal: ?????? ??????
 
“அதுலே இருக்கிற சனீஸ்வர சிலை மட்டும் கொஞ&#3021

“அதுலே இருக்கிற சனீஸ்வர சிலை மட்டும் கொஞ்சம் உயரமா இருக்கு இல்லையா?



swami-1.jpg



நகரத்தார்கள் அதிகம் வசிக்கும் ஊர ராயவரம் . அங்கே செல்வந்தர்களும் இருந்தார்கள், நடுத்தர மக்களும் இருந்தார்கள். ஆலமரத்தை போன்று பரந்து விரிந்து கிடந்த குடும்பம். அவ்வளவு வசதி என்று சொல்ல முடியாவிட்டாலும், சுமாராக வாழ்ந்து கொண்டிருந்தனர்.


எதையும் பெரிதாக செய்து முன்னுக்கு வர முடியவில்லையே என்று அவர்கள் கவலைப்பட்டது நியாயமே! தங்கள் நம்பிக்கையை கடவுள் மீது வைத்தனர். ஒரு சிவன் கோயிலை கட்டுவது என்று தீர்மானித்து, அதற்காக நிதி திரட்டி, கோயிலையும் நல்ல விதமாக கட்டி முடித்துவிட்டார்கள்.

கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, அதற்கான பத்திரிகையை அடித்து எடுத்துக்கொண்டு முதல் அழைப்பை காஞ்சி மகானுக்கு கொடுக்க வேண்டும் என்று வந்தார்கள்.

சகல மரியாதைகளுடன் மகானிடம் அழைப்பிதழை கொடுத்தனர். அதை வாங்கி பார்த்தார் மகான்.

“கும்பாபிஷேகத்தை நடத்தணும்னா, அதுக்குள்ளே நீங்க ஒரு வேலை செஞ்சாகணும்”.

வந்திருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

மகான் அந்த ஊர பக்கம் வந்து வெகு நாட்கள் ஆயிற்று. மேலும் இப்பொது கட்டியுள்ள சிவன் கோயிலை அவர் பார்த்ததில்லை. என்ன வேலை செய்ய சொல்கிறார் ?

“நீங்க நவகிரக சந்நிதியில் எல்லா சிலைகளையும் வெச்சிருக்கீங்க, இல்லையா?

“ஆமா”

“அதுலே இருக்கிற சனீஸ்வர சிலை மட்டும் கொஞ்சம் உயரமா இருக்கு இல்லையா?

அதிர்ச்சியோடு “ஆமாம் ” என்றார்கள்.

“மகான் பார்காமலேயே இதை சொல்கிறாரே?!”, என்று அவர்களுக்கு வியப்பு.

“நவகிரங்கல்ல ஒரு கிரகம் மட்டும் உயரமாக இருக்க கூடாது. அதை அங்கிருந்து எடுத்து வேறு பக்கமா தனியா வெச்சிட்டு, மற்ற கிரகங்கள் உயரத்திலேயே ஒரு சனிபகவானை அங்கே ஸ்தாபிதம் பண்ணிடுங்கோ”, என்றார்.

கோயிலை பார்க்காமல், அதில் உள்ள குறையை மட்டும் சுட்டி காட்டிய மகானை மனதார வணங்கிவிட்டு, அவர் சொன்ன மாறுதலை செய்தனர்.

“சனீஸ்வரன் சிலை தனியாக கிடைப்பது கஷ்டம்”, என்று வேறு சொன்னார்கள் . செய்தால், ஒன்பது கிரகங்கள் தான் செய்ய வேண்டும்.

மகானின் அருளாசி இருக்க, இவர்களுக்கு என்ன குறை?

சனீஸ்வரன் சிலை கிடைத்தது. ஸ்தாபிதமானது. அந்த உயரமான சிலையை தனியே ஒரு இடத்தில வைத்தார்கள்.

பலரும் திருப்தியடையும்படி அங்கே கும்பாபிஷேகம் நடந்தது.

முன்பே குறுப்பிட்ட அந்த குடும்பம் அன்றிலிருந்து நன்றாக செழித்து பெருக தொடங்கியது.


nostalgia | Take off with Natarajan | Page 5
 
” அனுஷா ” என்று பெயர் வை என்கிறார் .

அனுஷா ” என்று பெயர் வை என்கிறார் .


மகான்கள் நம் கனவில் வருவதுற்கு மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் . அந்த கனவு நனவாகும் போது கிடைக்கும் மகிழ்சிக்கு அளவே கிடையாது .


இந்த கணவன் மனைவிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்த நேரத்தில், ஒரு நாள் அந்த மனைவியின் கனவில் பரமாச்சார்யார் வருகிறார். அவர்கள் வீட்டிற்குள் வந்து எல்ல இடத்தையும் பார்த்து விட்டு, பூஜை அறையும் பார்த்து விட்டு வெளியே செல்கிறார்.


அச்சமயம் , அந்த பெண் ஆசார்யரிடம், என் குழந்தையை பார்த்து ஆசீர்வாதம் பண்ணுங்கோ என்கிறார். அதற்கு, மகான், நீ குழந்தையை அங்கே கொண்டு வா என்கிறார் . அத்துடன் கனவு கலைகிறது..

அது முதல் , அந்த பெண்மணிக்கு காஞ்சிபுரம் சென்று ஆசார்யாராய் தரிசனம் செய்ய வேண்டும் என்று தவிப்பு.


தன கணவனுடன், குழந்தையை எடுத்து கொண்டு, காஞ்சிபுரம் சங்கர மடம் செல்கிறார். அங்கு ஆச்சர்யாளை பார்க்க காலையில் பெருங் கூட்டம். . கையிலோ மூன்று மாத குழந்தை. இருப்பினும் அந்த பெண்மணி மனம் தளரவில்லை . எவ்வளவு நேரமானாலும் பெரியவாளை தரிசனம் செய்யாமல் செல்வதில்லை என்ற முடிவோடு குழந்தையுடன் அங்கேயே அமர்கிறார். மாலை வருகிறது .. ஆசார்யாள் தரிசனம் ஆரம்பம்.


அப்பொழுது, ஒரு அணுக்க தொண்டர் ஒருவர், அந்த பெண்மணியிடம், குழந்தையை பெரியவாளிடம் கொடுக்க சொல்கிறார். பெரியவா அந்த மூன்று மாத குழந்தையை தன் மடியில் வைத்து கொண்டு வைத்து கொண்டு, கொழந்தைக்கு பெயர் வைச்சாச்சா என்று கேட்கிறார். இல்லை என்கிறார் அந்த தாய். அப்படி என்றால் இவளுக்கு காமாக்ஷி என்று பெயர் வை என்கிறார். அதற்கு அந்த பெண்மணி, என்னுடைய பெயர் காமாக்ஷி என்கிறார். பிறகு மகான், அப்படினா இவளுக்கு ” அனுஷா ” என்று பெயர் வை என்கிறார் . மகான் திரு வாயால் பெயர் பெற்ற குழந்தை . தன்னிடம் 20 -30 நிமிடங்கள் வைத்து கொண்டு பிறகு குழந்தையை தாயிடம் திரும்ப கொடுக்கிறார்.


மகான் தன மடியில் குழந்தையை வைத்து கொண்டு இருப்பதை பார்த்ததில் அங்கு கூடி இருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சர்யம். அப்பொழுது , அந்த பெண்மணிக்கு, மகான் கனவில் வந்து, ” கொழந்தையை அங்கே கொண்டு வா ” என்று சொன்னதின் அர்த்தம் விளங்கியது.


மஹா பெரியவரை தரிசனம் செய்வதற்கே ஒரு கொடுப்பினை வேண்டும். அவரிடம் ஆசி பெறுவதற்கு மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.


எங்கும் நிறைந்த அந்த பரப்ருமம் மடியில் இருக்க அந்த குழந்தை செய்த தவம் யாரறிவார் !! அந்த பரப்ருமமே அறியும் !!



nostalgia | Take off with Natarajan | Page 5
 
“இந்த பிரசாதத்தை கொண்டு போய் சுந்துவிடம்

“இந்த பிரசாதத்தை கொண்டு போய் சுந்துவிடம் கொடு”



தன்னிடம் அளவு கடந்த பக்தி கொண்டவர்களுக்கு மஹான் தேவையான போது ஆசிகளையும் பிரசாதங்களையும் வழங்குவது வழக்கம்.


நான் சொல்லும் இந்த நிகழ்ச்சி திருச்சி சுந்தரேசனைப் பற்றியது. அவருக்கு மஹானிடம் இருந்த ஈடுபாடு கொஞ்ச நஞ்சமல்ல. எல்லாமே தமக்கு மஹான் தான் என்று மனதார நம்பிய பக்தர்களில் அவரும் ஒருவர். சுந்தரேசன் தனது ரயில்வே பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னை நங்கநல்லூரில் தன் மகன் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு உடல்நிலை முற்றிலும் கெட்டுவிட படுத்த படுக்கையாக இருந்தார். இந்த நிலையில் காஞ்சி மஹானைப் பார்க்கப் போகவில்லையே என்கிற கவலை அவரை ஒரு பக்கம் வாட்டி எடுத்தது.


அந்த சமயம் மஹான் பிறந்த அனுஷ நட்சத்திரத்திற்கு மறுநாள் பெரியவா கிரஹ ராஜகோபாலும், பிரதோஷம் மாமாவின் நெருங்கிய சீடரான ஆடிட்டர் ரவியின் தந்தையும் அனுஷ பூஜை பிரசாதங்களை எடுத்துக் கொண்டு மஹானைப் பார்க்கப் போயிருந்தார்கள். மஹானிடம் பிரசாதத்தை சமர்ப்பித்த பிறகு, அங்கே வரும் பக்தர்களுக்கு வழி விட்டு ராஜகோபால் ஒரு பக்கமாகப் போய் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.


அந்த சமயத்தில் மஹான் அவரை அழைத்து, “இந்த பிரசாதத்தை கொண்டு போய் சுந்துவிடம் கொடு” என்று சொல்வது போன்ற நினைவு அவர் மனதில் ஓடியது.


திடீரென்று விழித்துப் பார்த்த அவர், தன் அருகில் யாரும் இல்லாததைக் கண்டு வியந்தார். தனக்கு மஹான் இட்ட உத்தரவு பிரமையா, மஹான் இட்ட கட்டளையா என்று தடுமாறிக் கொண்டு இருந்தபோது மஹான் அழைப்பதாக மடத்து ஊழியர் ராஜகோபாலை அழைத்தார்.


மஹானின் முன் பவ்யமாக அவர் நின்றபோது, மஹான் அவரிடம் பிரசாதத்தைக் கொடுத்து, “இதைக் கொண்டு போய் அவனண்டே உடனே கொடு” என்று மட்டும் சொன்னார். பொறிதட்டியது போல் ராஜகோபாலுக்கு உடனே அந்த சுந்து யார் என்று புரிந்து விட்டது. வேறு யார்? அவருடைய பெரியப்பாவும் மஹானின் தீவிர பக்தருமான சுந்தரேசன் தான்.


அவன் யார்? என்று சொல்லாமல், பிரசாதத்தைக் கொண்டு போய் கொடு என்றால் தியானத்தில் இருந்தபோது மஹான் சொன்னதும் உண்மையான கட்டளை தான்.
தன் மனதில் தோன்றியதற்கும் இப்போது மஹான் கட்டளை இடுவதற்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரிந்தது.


ராஜகோபாலும் “யாரண்டை” என்கிற கேள்வியை எழுப்பிக் கொண்டு நிற்கவில்லை.
பிரசாதத்தை எடுத்துக் கொண்டு போய், நங்கநல்லூரில் இருந்த தன் பெரியப்பாவிடம் சமர்ப்பித்தார் ராஜகோபால்.


“நான் பார்க்கவரலேயேன்னு நீயே எனக்குப் பிரசாதத்தை அனுப்பினியா மஹானே?” என்று கண்களில் நீர் வழிய கேட்டபின் அந்த முடியாத நிலையிலும் பிரசாதத்தை பயபக்தியோடு உட்கொண்டார். உடல்நிலை மோசமாகத்தான் இருந்தது.


இருந்தாலும் மஹானின் பிரசாதத்தை உட்கொண்ட பின்னர், மேலும் சில தினங்கள் அவர் உயிரோடு இருந்து பிறகு இறைவனடி சேர்ந்தார். மஹான், தன் பக்தர்களை எப்படி எல்லாம் ஆட்கொண்டார் என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.

nostalgia | Take off with Natarajan | Page 5
 
பரோபகாரம்

பரோபகாரம்


மெட்ராஸ் ராணிப்பேட்டையை சேர்ந்த பக்தர்களிடம்
, காமாக்ஷிக்கு பாச, அங்குசம் பண்ணித் தரும்படி பெரியவா சொன்னார். எத்தனை நல்ல தெய்வீக பணியானாலும், “நிதிஎன்று வரும்போதுதான் அதை திரட்டும் கஷ்டம் தெரியும்!

காஞ்சிபுரம் காமாக்ஷிக்கு..ன்னா அந்த ஊர்லேயே வசூல் பண்ணிக்கலாமே! இங்க வந்து யாசகம் கேக்கணுமா என்ன?”


அவனவன் சோத்துக்கு வழி இல்லாம திண்டாடிண்டுருக்கான்…….அம்பாளுக்கு பாசமாம், அங்குசமாம்மக்கள் சேவையே மகேசன் சேவை…ஆஸ்பத்திரி, பள்ளிக் கூடம், அனாதை ஆஸ்ரமம், முதியோர் இல்லம்…ன்னு செலவுக்கு குடுத்தா, மக்களுக்கு அது பிரயோஜனப்படும். அதை விட்டுட்டு,அம்பாளுக்கு பாசம், அங்குசம் இல்லேன்னா ஏதும் நஷ்டமா என்ன?”



இன்னும் இதைவிட மஹா மோசமான வார்த்தைகளை கேட்க வேண்டியிருந்தது. ஆனாலும், ஒன்றே ஒன்றுதான் மஹா பலத்தையும் குடுத்துக் கொண்டிருந்தது. அது, “பெரியவாளுக்காக பண்ணுகிறோம்என்ற சந்தோஷம்! பெரியவாளுடைய சங்கல்பம் நடக்காமல் போகுமா? பாசாங்குச கைங்கர்யம் நினைத்ததை விட மிகச் சிறப்பாக நடந்தது. அதை முக்கியமாக முன்னின்று நடத்திய ஒரு பக்தரிடம் பெரியவா சொன்னார்……பண வசூலுக்காக ரொம்ப பேர்கிட்ட போயிருப்பே. எல்லாரும் மனசார குடுத்திருப்பா…ன்னு சொல்ல முடியாது. சில பேர் ரொம்ப தாறுமாறாக் கூட பேசி ஒங்க மனஸை ரொம்ப ண்படுத்தியிருப்பா……ஏண்டாப்பா இந்த வேலைய ஏத்துண்டோம்? பேசாம ஆயிரமோ, ரெண்டாயிரமோ யதா சக்தி குடுத்துட்டு ஒதுங்கிண்டிருக்கலாமோ?” ன்னு கூட தோணியிருக்கும்……



ஆனா, இந்த மாதிரியான பொதுக் கார்யங்கள்ள ஈடுபடரப்போ, நாலு பேர் நாலு விதமா சொல்லத்தான் சொல்லுவா. அதையெல்லாம் லக்ஷியமே பண்ணப்டாது. அம்பாளுக்கு பண்ற கைங்கர்யம்..ன்னு மனஸ்ல உறுதி இருக்கணும். இந்த எண்ணம் வந்துடுத்துன்னா….மனஸ் சமாதானம் ஆய்டும்
எத்தனை சத்யமான உபதேசம்! இது பொது சேவையில் ஈடுபடும் [சுயநலமில்லாத சேவை] எல்லாருக்குமான உபதேசம்தான் இது!



தெய்வத்தின் குரல்……….

பரோபகாரம் பண்ணறவாளுக்கு ஊக்கமும், தைர்யமும் அத்யாவச்யம். மான அவமானத்தை பொருட்படுத்தாத குணம் வேணும்.பொழுதுபோக்குன்னு சொல்லி, வாய்க்கு ருசியா திங்கற எடத்லேயும், கண்ணை கவர்ற காட்சி சாலைகள்ள பொழுத வீணாக்கறது தப்பு. இந்த நேரத்த, பொறத்தியாருக்கு சேவை பண்ணறதில் கழிக்கணும்.லைப்…ல ஏகப்பட்ட அக்கப்போருக்கு நடுவுல கொஞ்சம் உல்லாசமா பொழுத கழிக்கறது ஒரு தப்பா?..ன்னு பலபேர் கேக்கலாம். அப்பிடி கேக்கறவாளுக்கு சொல்றேன்…..பரோபகாரமா சேவை பண்ணினாலே போறும், அதுவே பெரிய உல்லாசம் ன்னு தெரிய வரும். அதுதான் வெளையாட்டு. அதுதான் சந்தோஷம். ஈசாவாஸ்ய உபநிஷத் மொதல் மந்த்ரத்லேயேத்யாகம் பண்ணி அனுபவின்னு சொல்றது.

காந்தி கூட இதுலதான் தன்னோட பிலாசபி முழுக்க இருக்குன்னு அந்த உபநிஷத்தை தலைக்கு மேல வெச்சுண்டு ச்லாகிச்சுண்டு இருந்தார்.

தானம் பண்ணிட்டு நாம் நம்ம பேரை பேப்பர்ல போட்டுக்காம இருக்கலாம். ஆனாலும், “எப்டியாவது நாலு பேருக்கு நாம தானம் பண்ணினத நைஸா தெரியப்படுத்திடணும்“..ங்கற எண்ணம் உள்ளூர இருந்தா……….பேப்பர்ல போட்டுக்கறத விட மஹா தோஷமாயிடும்.


பண்ணின தானத்த வெளில சொல்லிக்காம இருக்காரே! எத்தன உத்தமமான குணம்ன்னு பத்து பேர் ஸ்தோத்ரம் பண்ணுவா. அந்த மாதிரி ஆசைகள் தலையை கூட தூக்க வொட்டாம அதை சம்ஹாரம் பண்ணனும்னா….என்ன பண்ணணும்?



தானம் வாங்கறவன், தனக்கு அந்நியன் இல்லே“..ங்கற ஞானத்த நன்னா ஸ்திரமாக்கிண்டுட்டா குடுத்தத வெளில சொல்லிக்கவே தோணாது. நம்ம பந்துக்களுக்கோ, நம்ம கொழந்தைகளுக்கோ ஏதாவது குடுத்தா, அத வெளில சொல்லி பெருமைப் பட்டுப்போமா? அதே மாதிரி லோகத்ல சகல ஜீவ ஜந்துக்களுக்கும் அப்பா அம்மா அந்த பார்வதி பரமேஸ்வராள்தான் ! தானம்ங்கற வார்த்தைகூட தப்புதான்.பகவான் நம்மளை கொடுக்க வெச்சான்ன்னு பவ்யமா இருக்கணும்.

????????? « Sage of Kanchi


 
சிந்தனைக்குச் சில.....

சிந்தனைக்குச் சில.....


ஆலயங்களுக்குச் செல்லும்போது......


உடலும் உள்ளமும் பரிசுத்தமாக இருக்கவேண்டும்
மங்கலப் பொருள் ஏதாவது ஒன்று உடன் கொண்டு
செல்லவேண்டும்.அதாவதுபழம், புஷ்பம் ,தெங்காய்
கற்பூரம், ஊதுவத்தி, நெய், எண்ணை, திரி இவை
அனைத்துமோ அன்றி ஏதாவது ஒன்றோ வசதிக்குத்
தகுந்தவாறு எடுத்துச் செல்லவேண்டும்.

ஆலயத்தில் பலி பீடத்திற்குமுன் நமஸ்காரம் செய்ய
வேண்டும்.

சிவனாலயமாகில் நந்திதேவரை வணங்கி அவரின்
உத்தரவு பெற்றுப் பின் வினாயக தேவரை வணங்கி
த்வார பாலகர்களை வணங்கிஅவர்களின் உத்தரவையும்
மானசீகமாகப் பெற்று, அதன் பின்பே ப்ரதான சிவனை
சிவனை வழிபடவேண்டும்.

நந்திக்கு முன் நந்திகேச மஹாபாகா சிவ த்யான பராயணா
உமா சங்கர சேவார்த்தம் அனுஞ்ஞாம் தாது மர்ஹசி என்ற
ஸ்லோகத்தைக் கூறவேண்டும்.

சிவனை தரிசித்துப்
பின் எல்லா கடவுளர்களையும் சேவித்தபின் நவக்ரஹ வழி
பாடு செய்து பின் சண்டிகேசரை வணங்கி நீலகண்ட பதாம்
போஜ பரிஸ்புரத மானச சம்போ சேவா பலம் தேஹி
சண்டேஸ்வர நமோஸ்துதே என்ற ஸ்லோகத்தை க் கூறி
விடை பெற வேண்டும்.

திரும்பவந்து கொடிமரத்தின் கீழ்
நமஸ்கரித்து, தரையில் உட்கார்ந்து மாதாச பார்வதிதேவி
பிதா தேவோ மஹேஸ்வர: பாந்தவ: சிவ பக்தாஸ்ச ஸ்வதேசோ
புவனத்ரயம் என்று கூறி ஆடையை லேசாக உதறி துளி மண்
கூட நம்முடன் வராமல் புறப்படவும்.

பெருமால் கோவிலில் முதலாவதாக கருடாழ்வரை வணங்கி,
த்வஜஸ்தம்ப நமஸ்காரம் செய்து த்வார பாலகர்களின்
உத்தரவுபெற்று பெருமாள் தரிசனம் முடிந்து கோஷ்ட
தேவதைகள் அனைவரையும் வணங்கி முடிவாக ஆஞ்சனேய
ஸ்வாமிகளுக்கு வந்தனம் செய்து கொடி மரத்தில் நமஸ்கரித்து
புறப்படவேண்டும்.

அரசமரம் இருந்தால் மூலதோ ப்ரம்ம ரூபாய ,மத்யதோ
விஷ்ணு ரூபிணே அக்ரத: சிவ ரூபாய வ்ருக்ஷ ராஜாயதே
நம: என்ற ஸ்லோகத்தைச் சொல்லி சாதாரண நாட்களில் ஏழு
ப்ரதக்ஷிணமும் சோம அமாவாஸ்யை அன்று 108 ப்ரதக்ஷிணமும்
செய்யவேண்டும்.

நாகருக்கு நாம் யாவரும் மஞ்சள் கலந்த
பால் அபிஷேகம் செய்தால் அனைத்துப் புண்ணியமும்
கிட்டுவதுடன், சந்தானப்ராப்தி வேண்டுவோர் ஆயில்ய நக்ஷத்திரத்தன்று
விடாது இவ்வாறு செய்து வந்தாலும் சுக்ல சதுர்தி அன்று செய்தாலும்
பலன் அடைவர் என்பது திண்ணம்.

நாகர்கோவிலில் இவ்வாறுதான்
மஞ்சல் கலந்த பால் அபிஷேகம் நாகருக்கு நடக்கிறது. சில காலம்
முன்வரை நாகம் வந்து மஞ்சள் பால் மேல் புரளும் என்று அங்குள்ள
ஜனங்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.

நமஸ்காரம் செய்யும்போது கால்கள் நீளும் பக்கத்தில்
பெரியவர்களோ ஸ்வாமி சன்னிதியோ இருக்காமல்
கவனம் வேண்டும்.

திரை போட்டபோது நமஸ்கரிக்கக்கூடாது.
குறைந்த பக்ஷம் நான்கு ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு ஸன்நிதியிலும் அந்தக் கடவுளின் நாமாவளியோ,
ஸ்லோகமோ சொல்லவேண்டும்.


ஆலயத்துள் நம் வீட்டு விவகாரம் ஊர் விவகாரம் எதுவும் பேசலாகாது.
உத்சவர் ஆலயத்துக்குள்ளேயே புறப்பாட்டிற்கு எழுந்தருளியுள்ளபோது
உத்சவரை மட்டும் வலம் வருதல் கூடாது.

ஆலயத்துக்குள் மனிதர் ஒருவரை ஒருவர் நமஸ்காரம் செய்யக்கூடாது.
ஸன்னிதியை மறைக்காமல் ஓரமாக நின்று மற்றவர் தரிசிக்க
வழி வகுக்கவேண்டும். கோவிலிலும் சுற்று வட்டாரத்திலும் எச்சில்
அசுத்தம் எதுவும் செய்யக்கூடாது.

மங்களகாரியங்களில் கணவன் முன்னதாகவும், பித்ரு கார்யங்களில்
மனைவி முன்னதாகவும் வலம் வர வேண்டும்.

தன்னைத்தானே சுற்றக்கூடாது.

வினாயகருக்கு ஒரு ப்ரதக்ஷிணம், சூர்யனுக்கு இரண்டு,
ஈஸ்வரனுக்கும் அம்பாளுக்கும் மூன்று, விஷ்ணு, மஹாலக்ஷ்மி
மஹான்கள் சமாதிக்கு நான்கு, அரச மரத்துக்கு ஏழு ப்ரதக்ஷிணங்கள்
இதுவே முறை. ப்ரதக்ஷிணம் செய்யும் போது ஓடவோ, கையை வீசியோ
நடக்கக்கூடாது.நிறை மாச கர்பிணி போன்று நிதானமாகச் செய்யவேண்டும்.



Source:
Saraswathi Thyagarajan

Sage of Kanchi
 
உபதேசத்தால் ஜனங்களை மாற்ற முடியுமா !

உபதேசத்தால் ஜனங்களை மாற்ற முடியுமா !



உபந்நியாசம் பண்ணுகிறோம். இன்னும் பல தினுசுகளில் தத்துவங்களை, தர்மங்களைப் பிரசாரம் பண்ணுகிறோம். ஆனால் இவற்றாலேல்லாம் தற்காலிகமான ஓர் உற்சாகம் தான் ஏற்படுமே ஒழிய, ஸ்திரமான மாறுபாடு நடக்காது என்பதுதான் என் அபிப்பிராயம். உபந்நியாசத்தினாலே ஏதோ கொஞ்சம் மாறுதல் சில ஜனங்களின் மனசில் ஏற்பட்டிருந்தால், அதுகூடப் போகப் போகத் தேய்ந்துதான் போகலாமேயொழிய வளருவதற்கில்லை.


வெறும் உபந்நியாசம் என்று வைத்து கொண்டால், உபந்நியாசம் முடிந்தவுடன், சாஸ்திர வழியில் அது உண்டாக்கின ஊக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக முடிந்துவிடும். ஆகையினாலே, உபந்நியாசம் பண்ணி உலகத்தை மாற்றி விடலாம் என்று நான் எதிர்பார்த்திருந்தால் அது தப்பு. இதுவரைக்கும் இந்த உபந்யாசங்களால் எதாவது துளி உங்களுக்கு என்னாலானது கூட, போகப் போகப் பிசுபிசுவென்று போய் விடுமோ என்கிற ஸ்திதி.


நல்லதற்கு இல்லாமல் இப்போது லோகத்தில் பல பழக்கங்கள் வந்துவிட்டன. தர்மத்துக்கு மாறுதலாக கெடுதலாக, அநேக சமாச்சாரங்கள் நமது தேசத்து ஜனங்களிடம் வந்து சேர்ந்து விட்டன. இந்த பழக்கங்களை மாற்றினால்தான் அவர்களுக்கே நல்லது. இதெல்லாம் வாஸ்தவம். ஆனால் எப்படி மாற்றுவது ? இந்த காரியம் ஒருநாளும் உபந்நியாசத்தினால் ஆகாது. பின், எதனால் ஆகும் ? ஆத்மா சக்தியினால்தான் ஆகும்.
சரி, அது என்ன சக்தி ? அது எப்படி வேலை செய்யும் ? ஏதாவது மந்திரம் போட்டு மனசை மாற்றுகிற காரியமா ? வசியம் பண்ணுவதா ? இதெல்லாமில்லை. வேறு என்ன என்றால், இதுவரையில் லோகத்தில் வந்த பெரியவர்களைப் பார்க்கலாம் – மத ஸ்தாபகர்களைத்தான் சொல்லுகிறேன் – உலகத்தில் ஒரு பகுதியில் அநேக மநுஷ்யர்களின் வாழ்க்கை முறையையே மாற்றி வேறு தினுசாகக் கொண்டு வந்த அந்தப் பெரியவர்கள் இதை எப்படிச் செய்தார்கள் ?


தங்களுடைய பழக்கங்களெல்லாம் நல்லபடி ஆக வேண்டும். அவர்கள் எல்லாம் நல்ல க்ஷேமத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குச் சதா இருந்தது. பூரணமாக இருந்தது. அந்த எண்ணத்துக்கே சக்தி உண்டுதான். ஆனாலும் அது போதாது. அவர்கள் எந்த நல்ல பழக்கங்கள் ஜனங்களுக்கு இருக்க வேண்டும் என்று நினைத்தார்களோ, அந்த பழக்கங்களைத் தாங்களே முழுக்க அனுஷ்டித்துக் காட்டினார்கள். இந்த அனுஷ்டான சக்தி – சொன்னதைத் தானே செய்கிற சக்திதான் ஜனங்களை மாற்றியதே தவிர, வெறும் வார்த்தையைச் சொல்லி உபந்நியாசம் பண்ணுவது அல்ல.


உபந்நியாசம் பண்ண வேண்டாம் ! தான் பெரிசாக நினைக்கிற தர்மங்களை ஒருத்தன் தானே காரியத்தில் பண்ணிக் காட்டி கொண்டு, ஒரு தர்மோபதேசமும் பண்ணாவிட்டால் கூடப் போதும். அவன் வாழ்ந்து காட்டுகிற அனுஷ்டான சக்தி, அதுவாகவே கொஞ்சம் பேரையாவது அந்த வழிக்கு மாற்றிக் கொண்டு வந்துவிடும். எங்கேயோ ஒரு காட்டில் ஒரு மகான் உட்கார்ந்திருந்தால் கூட, அவருக்கு ஓர் தத்துவத்தில் ஸ்வயமாக அநுபவம் வந்துவிட்டிருந்தால், அது தானாக வெளி உலகத்திலும் வேலை செய்து பல பேரை அந்தக் கொள்கையில், அநுபவத்தில் கொண்டு வந்து சேர்த்து விடும்.



இப்போது சமீப காலத்திலேயே ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இருந்தார். நம் நாளிலேயே ரமணர் இருந்தார், அரவிந்தகோஷ் இருந்தார். இவர்கள் எல்லாம் என் மாதிரி ஊர் ஊராக யாத்திரை பண்ணி உபந்நியாசம் செய்யவில்லை. அவர்கள் ஒரே இடத்தில இருந்தார்கள். ஆனாலும், அவர்கள் இருந்த இடத்தில ஜனங்கள் தாமாகப் போய்ச் சேர்ந்தார்கள். அவர்களால் நிறைய மனமாற்றமும் நடப்பதை நாம் பார்த்து கொண்டு இருக்கிறோம்.

2010 September 20 « Sage of Kanchi
 
Periyava Jayandra saraswati visited our village -

QUOTE=P.J.;250805


Our village is in Trichy-Karur Highway (ALLUR).Sri Jayendra Saraswathi swamigal visited our village and stayed during a chaturmasya vrata for one year and established pazhur (near by allur), navagraha sannadhi with their consorts.This is one of the rare one seeing Navagraha with their devis. He also visited each house in the agrahara individually.Sri Vijandra saraswathy studied in Allur Padasala.





 
ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு

ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு

'அநயத சரணம் நாஸ்தி; த்வமேவ சரணம் மம' என்ற வாசகப்படி எனக்கு வேறே ரக்ஷணம் இல்லை, நீயே காப்பாற்ற வேண்டும் என்று சிவபெருமானிடம் தஞ்சம் அடைந்துவிட்டால் அவர் நிச்சயமாக சம்சார உளைகளில் அகப்பட்டுக்கொண்டவனுக்கு கை கொடுப்பார்.

நாம் பேசற பேச்சிலேயே அவர் இருக்கிறார். 'அ' என்கிற எழுத்து சிவனோட சிரசு. 'ஆ' சிவனோட நெற்றி. 'இ' வலது கண். 'ஈ' இடது கண். 'உ' வலது காது. 'ஊ' இடது காது. 'ரு' வலது கன்னம். 'ரூ' இடது கன்னம். 'லு' வலது நாசி. 'லூ' இடது நாசி. 'ஏ' மேலுதடு. 'ஐ' கீழுதடு. 'ஓ' மேல் பல் வரிசை. 'ஒள' கீழ் பல்வரிசை. 'அம்' வலது தாடை. 'அ:' இடது தாடை. காதி பஞ்சாட்சரங்கள் வலது பக்கமுள்ள ஐந்து கரங்கள்.

சாதி பஞ்சாட்சரங்கள் இடது பக்கமுள்ள கைகள்.
தாதிபஞ்சாட்சரங்கள் கால்கள்.
'ப' என்ற எழுத்து வயிறு. 'ம' என்ற எழுத்து மனசு.
'ஹ' தொப்புள். இப்படி அக்ஷர வடிவமாயிருக்கிறார் சிவன்.
'ஏவம் சப்த மயம் ரூப மகுணஸ்ய குணாத்மன:' என்கிறது சிவ புராணம்.
நிர்குணனான சிவன் நாத சொரூபன்.


Source: Sage of Kanchi

Ramachandran Venkatraman
 
இறைவன் மட்டுமே கெட்டிக்காரன்

இறைவன் மட்டுமே கெட்டிக்காரன்

* உடம்புக்கு எந்த துன்பம் வந்தாலும் துவண்டுபோய் விடக்கூடாது. நோய்வந்தாலும், வறுமை வந்தாலும், வேறு எந்த விதமான துன்பங்கள் வந்தாலும் அவற்றை வைராக்கியத்தை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

* ஆடம்பரத்திற்காக பல மனிதர்கள் ஊதாரித் தனமாகச் செலவழிக்கிறார்கள். போலி கவுரவத்தைக் காப்பாற்ற பிறரிடம் கடன் வாங்கிச் செலவழிக்கும் குணம் நல்லதல்ல.

* உலகில் அமைதி தவழவேண்டுமானால் சாத்வீகமான மரக்கறி உணவுவகைகளையே சாப்பிட வேண்டும்.

* குறைவான வருமானம் இருந்தாலும் அதற்கேற்றபடி தர்மத்துக்காக செலவழிப்பது அவசியம். தர்மம் செய்வதை தள்ளிப்போடுவது கூடாது. மனம் மாறக்கூடியதாக இருப்பதால் நினைத்தவுடன் தர்மம் செய்துவிடுவதே நல்லது.

* கெட்டிக்காரன் என்று மனிதன் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறான். இத்தனை பெரிய உலகத்தையும், உயிர்களையும் படைத்த மகா கெட்டிக்காரன் ஒருவன் இருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவனே இறைவன்.

காஞ்சிப்பெரியவா



Source: Sage of Kanchi

Hari Haran
 
இதுதான் பக்தி

இதுதான் பக்தி

சாதாரணமான ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவன் அவன். வயது பன்னிரண்டு அல்லது பதிமூன்று இருக்கலாம். ஐந்தாவதோ ஆறாவதோ படித்துக் கொண்டிருக்கலாம்.

மாநிறம். எண்ணெய் அதிகம் கண்டிராத தலை. தடிமனான அரை டிராயர்; கசங்கிப் போன மேல்சட்டை… அரை டிராயரும் மேல்சட்டையும் என்ன நிறம் என்பதைப் பார்த்த மாத்திரத்தில் எவரும் சொல்லி விடமுடியாது. அழுக்கேறிப் போயிருந்தாலும் அந்த ஆடைகள் அவ்வப்போது துவைத்துத் தான் அணியப் படுகின்றன என்பதை அதைப் பார்க்கும் எவராலும் புரிந்து கொள்ள முடியும். நெற்றியில் ஒரு வளைந்த கீற்றாக – முறையே இல்லாமல் ஏனோ தானோ என்று விபூதி பூசப்பட்டிருந்தது. ஒருவேளை இங்கு கிளம்பி வருகிற அவசரத்தில் அவனது அம்மா இட்டு விட்டிருக்கலாம்.

தேர்வு காலங்களில் கிராமத்தில் இருப்பவர்கள் தெருமுனையில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் போய், ஒரு சின்ன கற்பூரத்தை ஏற்றி வைத்து, பேனாவை பிள்ளையார் பாதத்தில் வைத்து வழிபட்டு விட்டுப் பரிட்சை எழுதப் போவார்கள். இது ஒரு விதமான நம்பிக்கை. அதாவது இறைவன் அருளோடு தேர்வு எழுதப் போகிறோம் என்கிற ஒரு தைரியம் மாணவர்களுக்கு வரும்.

அது போல் இந்த சிறுவன் காஞ்சிபுரத்தில் வசிப்பவன் என்பதாலும், மஹா பெரியவாளின் சாந்நித்யம் பற்றி யாரோ சொல்ல – அவன் தகுதிக்கு ஏதோ கேள்விப்பட்டிருந்தாலும் இன்று தேர்வு எழுதப் போகும் முன் ஸ்ரீமடத்துக்கே வந்து விட்டான் போலிருக்கிறது.

விடிகாலை நேரத்தில் விஸ்வரூபதரிசனம் காண வந்திருந்த பக்தர்கள் பலரும் இன்னமும் நகராமல் அங்கேயே நின்றிருந்தபடி பெரியவா தரிசனத்தில் திளைத்திருந்தார்கள். இதைத் தவிர, காலை வேளையில் ஏராளமான பக்தர்கள் வேறு ஸ்ரீமடத்தில் குவிந்து விட்டிருந்தார்கள். நாம பஜனைகளும் சங்கர கோஷமுமாக ஸ்ரீமடமே பக்தி மணம் கமழ… அருள் நிரம்பிக் காணப்பட்டது.

இவ்வளவு கூட்டம் பெரியவா தரிசனத்திற்காகக் காத்து நின்றாலும், சிறுவனாகப் பட்டவன் வரிசையில் நின்று கொண்டிருக்கும் எந்த ஒரு பக்தரைப் பற்றியும் கவலைப் படாமல், ராஜபாட்டை போல் விறுவிறுவென்று நடந்து மஹா பெரியவாளின் சந்நிதியை நெருங்கினான்.

முகத்தில் உற்சாகம் கொப்பளிக்க, பெரியவாளைப் பார்த்தபடியே நின்றான். அவனை எவரும் தடுக்கவில்லை. ஏதும் கேள்வி கேட்கவில்லை. காரணம் – அந்தச் சிறுவனின் ஆர்வத்தையும் பரபரப்பையும் பார்த்த பின் இயல்பான அந்த பக்திக்குத் தடை போட எவருக்கும் விருப்பமில்லை.

“மடத்துக்குப் போய் சாமியைக் கும்பிடணும்னா, அவருக்குத் தோதா ஏதாவது எடுத்துட்டுப் போகணும்” என்று அவனுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்களோ…. தெரியவில்லை. தன் கையில் தொடுத்த ஒரு மாலையை வைத்திருந்தான். அந்த மாலையைப் பார்த்த பல பக்தர்களும் வெவ்வேறு விதமான உணர்ச்சிகளைத் தங்களுக்குள் வெளிப்படுத்திக்கொண்டு விமர்சித்துப் பேசினார்கள்.

சிலர் வியந்தார்கள்; சிலர் வெளியே ஏதும் பேச முடியாமல் தங்களுக்குள் கேலியாகச் சிரித்துக் கொண்டார்கள்.

பலரது விமரிசனத்துக்கும் கேலிச் சிரிப்புக்கும் உள்ளான அந்த மாலையில் அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா?

அது – துளசி மாலை!

அதுவும் துளசியை அடர்த்தியாக – கொத்துக் கொத்தாக வைத்துக் கட்டப்பட்ட மாலை இல்லை. தனித் தனி துளசி இலைகளைக் கோணாமாணா என்று – ஒரு முறை இல்லாமல் கோர்த்துத் தொடுக்கப்பட்டிருந்த மாலை.

ஒருவேளை அடுத்தடுத்து துளசி இலைகளை நெருக்கமாக வைத்துத் தொடுத்திருந்தால் அதில் இடைவெளி என்பதே தெரியாமல் போயிருக்கும். ஆனால் இந்தச் சிறுவன் தொடுத்துக் கொண்டு வந்திருந்த துளசி மாலையில் இடைவெளி அதிகம் தெரிந்தது. அதனால் பார்த்தவுடன் ’மாலை’ என்று சொல்வதற்கு எவருக்கும் வாய் வராது.

இதில் இன்னொரு அலங்கோலமும் வெளிப்பட்டது. அதாவது இறைவழிபாட்டிற்குக் கொண்டு செல்கிற துளசியைப் பெரும்பாலும் வாழைநாரில்தான் கட்டுவார்கள். ஆனால் இந்தச் சிறுவன் ஒரு சணலில் இந்த ’மாலை’யைக் கட்டி எடுத்து வந்திருந்தான். (வீட்டில் ஏதாவது பொருளைக் கட்டி வைத்திருந்த மூட்டையில் இருந்த சணலை மட்டும் பிரித்து எடுத்திருப்பான் போலிருக்கிறது). இது போன்ற காரணங்களால் சிறுவன் எடுத்து வந்திருந்த துளசி மாலையைப் பார்த்து சிலர் சிரித்தார்கள்.
ஆனால் பக்குவப்பட்ட சிலர், ”இந்த வயதில் இந்த அளவுக்கு பெரியவாளிடம் ஒரு பக்தி இருக்கிறதே… வெறுங்கையோடு வரக்கூடாது என்கிற நாசூக்கு தெரிந்திருக்கிறதே” என்று நெகிழ்ந்தார்கள்.

ஒரு கட்டத்தில் பெரியவாளின் திருப்பார்வை அவன் மேல் விழுந்தது. ஒரு புன்னகையை உதட்டோரம் தவழ விட்டு, ”அருகில் வா” என்பது போல் அவனுக்கு ஜாடை காட்டினார்.
விறுவிறுவென்று நடந்து முன்னுக்கு வந்தான்.

”என்ன?” என்பது போல் ஆச்சரியமான முகத்துடன் தலையை மேலும் கீழும் அசைத்து ரசனையாகக் கேட்டது அந்தப் பரப்ரம்மம்.

சிறுவன் சந்தோஷமானான். தனக்கு உரிய அங்கீகாரம் இந்த சந்நிதானத்தில் கிடைத்துவிட்டது என்பதாக மகிழ்ந்தான். கையில் துளசி மாலையோடு பெரியவாளை இன்னும் நெருங்கி, அவரின் திருவடி அருகே இதை சமர்ப்பித்தான். பெரியவாளின் கைங்கர்யப் பணிக்காக அங்கே இருந்த சீடர் ஒருவர் அந்த துளசி மாலையை அங்கிருந்து எடுத்து வேறு இடத்தில் சேர்ப்பிப்பதற்காகக் குனிந்தார்.

சற்றே நிமிர்ந்து அந்த சீடரைப் பார்த்த பெரியவா, ’வேண்டாம்’ என்பது போல் வலது ஆட்காட்டி விரலை இடப்புறமும் வலப்புறமும் அசைத்து சமிக்ஞை செய்தார். சீடரையும் தள்ளி நிற்கச் சொன்னார். அந்த மாலையைத் தான் அகற்றுவதைப் பெரியவா விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்ட சீடன், நின்ற வாக்கிலேயே அப்படியே ரிவர்ஸில் நகர்ந்து கொண்டான்.

”எக்ஸாம் இன்னிக்கு இருக்கோ?” – சிறுவனைப் பார்த்துப் பெரியவா கேட்டார்.

இவ்வளவு பேர் கூடி இருக்கும் இடத்தில் தன்னைப் பார்த்துப் பெரியவா ஒரு கேள்வி கேட்கிறார் என்பது அந்தச் சிறுவனின் முகத்தில் ஏராளமான சந்தோஷத்தைக் கொடுத்திருந்தது. தவிர, தனக்குத் தேர்வு இருப்பதைப் பெரியவா எப்படிக் கண்டு பிடித்தார் என்கிற ஆச்சரியமும் அவன் முகத்தில். பிரகாசமானவன், “ஆமா சாமி, இன்னைக்கு சயின்ஸ்” என்று கூடுதல் தகவலையும் சொன்னான்.

”தொளசி மாலையை எனக்காகக் கொண்டு வந்தியோ?” என்று அவனைப் பார்த்துக் கேட்டு, அந்த மாலையைக் கையில் எடுத்தார்.

இப்படியும் அப்படியும் அதை ஆராய்ந்தார். தான் காணிக்கையாக எடுத்து வந்திருந்த மாலையைப் பெரியவா தன் கையால் எடுத்து விட்டார் என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே அச்சிறுவனுக்குப் பெருமை பிடிபடவில்லை…”எங்க வீட்டுலேயே துளசிச் செடி இருக்கு… அதுலேர்ந்து நானே பறிச்சுக் கட்டினேன்.”
அந்தப் பரப்ரம்மம் அவனைப் பார்த்துச் சிரித்தது. கூடி இருந்த திரளான பக்தர்களும் அடுத்துப் பெரியவா என்ன செய்யப் போகிறார் என்பதைக் கவனிப்பதில் ஆர்வமானார்கள். ஒரு க்ஷண நேரத்தில் இந்தச் சிறுவன் பெரியவரின் கவனத்தை இப்படிக் கவர்ந்து விடுவான் என்று அங்கிருந்த எவரும் எதிர் பார்க்கவில்லை. சிறுவன் மேல் பெரியவா செலுத்தும் கரிசனத்தைக் கண்டு, சீடர்களும் மடத்துச் சிப்பந்திகளும் கூட அதிசயப் பட்டுப் போனார்கள்.

அந்தத் துளசி மாலையை தன் கையில் எடுத்துக் கொண்டார். வலக் கரத்தால் அந்த மாலையை எடுத்துத் தன் தலைக்கு மேல் வைத்தார். என்ன புண்ணியம் செய்ததோ அந்தத் துளசி மாலை! பெரியவாளின் தலையில் அமர்ந்து கொண்டது. துளசி மாலை பெரியவா சிரசில் அப்படியே நின்றது. சுற்றிலும் நின்றிருந்த தன் பக்தர்களை இப்படியும் அப்படியும் திரும்பிப் பார்த்தார் பெரியவர். எல்லாப் பக்கமும் திரும்பிப் பார்க்கிற வேளையில் அவர் முகத்தில் ஒரு புன்னகை ததும்பியது. ”இந்தக் கோலத்தில் நான் எப்படி இருக்கேன்? இந்த மாலை நன்னா இருக்கா?” என்று பெரியவா கேட்பதாக எல்லோருக்கும் பட்டது.

பெரியவாளுக்கு சமர்ப்பிக்க வேண்டி பக்தர்கள் வாங்கி வந்திருந்த எத்தனையோ மலர் மாலைகள் அவருக்கு முன்னால் – சற்றும் மணம் குறையாமல் – மலை போல் குவிந்திருந்தன. ரோஜா, மல்லிகை, சம்பங்கி என விதம் விதமான மலர்களைக் கொண்டு மிகவும் நேர்த்தியாகத் தொடுக்கப்பட்டிருந்த மாலைகள் அவை. ஆனால், அனைத்தையும் விட்டு விட்டு, ஒரு ஒழுங்குமுறையே இல்லாத, ஒரு மாலைக்கு உரிய எந்த விதமான இலக்கணத்திலும் சேராத, சாதாரண சிறுவன் கொண்டு வந்த துளசி மாலை ஏனோ பெரியவாளுக்குப் பிடித்து விட்டது. தானே அதை ஸ்வீகரித்துக் கொண்டார்.

’இதுதான் பக்தி’ என்பதை அங்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் உணர்த்தும் விதத்தில், ‘இந்த மாலையை அணிந்திருக்கிற நான் எப்படி இருக்கேன்?’ என்பதாக அனைவரையும் பார்த்தாரோ? எத்தனையோ மலர் மாலைகள் இருந்தும் அன்பின் மிகுதியால் – ஆர்வத்தின் வெளிப்பாடாகத் தொடுத்துக் கொண்டு வரப்பட்ட இந்தத் துளசி மாலை என் உள்ளத்தைக் கவர்ந்து விட்டது என்பதைப் பகட்டான பக்தர்களுக்கு உணர்த்துகிறாரோ?

பக்தி என்றால் என்ன என்பதைப் பற்றிப் பெரிதும் படிக்காத, கேட்காத இந்தச் சிறுவன் தன் செய்கையால் அங்கிருந்த அனைவருக்கும் பெரியவரின் அருட்செயலின் மூலம் உணரச் செய்து விட்டான். செல்வச் செழிப்பில் திளைக்கும் எத்தனையோ பக்தர்கள் குவிந்திருக்கும் இந்த சந்நிதானத்தில் தான் அன்புடன் எடுத்து வந்திருக்கும் ஒரு துளசி மாலைக்கு இவ்வளவு மரியாதையா என்று சிறுவன் திகைத்துப் போனான்.

அவன் விழிகளில் லேசாக ஈரம் ததும்பியது. சரேலென்று தரையில் விழுந்து பெரியவாளை நமஸ்கரித்தான். எழுந்து நின்றான். சுமார் பத்து நிமிடங்கள் கழித்துத் தான் அந்தத் துளசி மாலையைத் தன் தலையிலிருந்து எடுத்துக் கீழே வைத்தார் பெரியவா. புன்னகை அரும்ப அந்த சிறுவனை ஆசீர்வதித்தார். கல்கண்டும் குங்குமமும் கொடுத்தார்.

தன் தலையில் வைத்திருந்த மாலையை அருட் பிரசாதமாக அவனிடமே கொடுத்தார். அதன் அருமை தெரிந்தோ தெரியாமலோ பயபக்தியுடன் வாங்கிக் கொண்டான். எந்த ஒரு மாலையைப் பார்த்துப் பரிகசித்துத் தங்களுக்குள் விமர்சித்துக் கொண்டார்களோ, அந்த பக்தர்கள் இப்போது நெகிழ்ந்து போனார்கள். அவர்களின் பரிகசிப்புக்கு உள்ளான மாலை இப்போது புனிதம் பெற்று விட்டது.

மாலையைப் பெற்றுக்கொண்டு வெளியேறும் அந்தச் சிறுவனிடம் இருந்து, “குழந்தே, அதில் இருந்து ரெண்டு துளசி தளங்களைப் பிய்ச்சு எங்ககிட்ட தாயேன். அது பெரியவா பிரசாதம்” என்று கெஞ்சும் குரலில் கேட்டனர்.

அப்படிக் கேட்டவர்களுக்கெல்லாம் துளசி இலைகளைப் பிய்த்துக் கொடுத்துவிட்டு, “எக்ஸாமுக்கு டயமாச்சு. ஸ்கூல்ல பெல் அடிச்சுடுவாங்க..” என்று சொல்லி விட்டான் ஒரே ஓட்டம்! இன்று சயின்ஸ் தேர்வாயிற்றே!


ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.



Source:Sage of Kanchi

Surya Narayan
 
பெரியவா கிரஹம்!

பெரியவா கிரஹம்!


Article from Sakthi Vikatan….

காஞ்சி மகானின் அனுக்ரஹம்…
ரா.வேங்கடசாமி

தலைப்பைக் கண்டதும் வியப்பு மேலிடுகிறதா? ஆனால், இது உண்மை! சேலத்தில், தனக்கென ஒர் இடத்தைக் கேட்டு வாங்கி, அதில் பல ரூபங்களில் தோற்ற மளித்து, பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார், மகா பெரியவா!


சுவாரஸ்யமான அந்தப் புனித நிகழ்வைத் தெரிந்துகொள்வோமா?


பெரியவாளின் பரம பக்தரான ராஜகோபால், இந்தியன் காபி போர்டில் உத்தியோகம் பார்த்துக்கொண்டு இருந்த நேரம் அது. அப்போது அவரின் பெற்றோர் சென்னையில் இருந்தார்கள். அவர்களின் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு குடும்பத்தின் மாப்பிள்ளைதான், காஞ்சி மகானின் தீவிர பக்தரான பிரதோஷம் மாமா.
ராஜகோபால் தம்பதி, காஞ்சி மகானிடம் பக்தி கொண்டு இருந்தார் களே தவிர, அவ்வளவு நெருக்கம் இல்லை.

பிரதோஷம் மாமா ஒரு தடவை இவரைத் தன் வீட்டுக்கு அழைத்துப்போய், மகானைப் பற்றி விவரமாக உபதேசித்த பின்புதான், இவர் உள்ளத்தில் பெரியவா மீது அளவற்ற பக்தி தோன்றியது.


உத்தியோகம் நிமித்தமாக அடிக்கடி இடம் மாறிக்கொண்டு இருந்த ராஜகோபால், சேலத்துக்கும் மாறுதல் கிடைக்கப்பெற்றார். சேலத்துக்குத் தனக்கு மாற்றல் கிடைத்த விஷயத்தைப் பெரியவாளிடம் ராஜகோபால் சொன்னபோது, ”சேலத்தில் உனக்கு வீடு இல்லையா?” என்று ஒரு கேள்வியைக் கேட்டார் பெரியவா.



p84b.jpg





”சென்னையில் பூர்வீக சொத்து இருக்கிறது” என்று ராஜகோபால் சொல்ல… ”சேலத்தில் வீடு இருக்கிறதா என்றுதான் கேட்டேன்” என்றார் மகான் அழுத்தம்திருத்தமாக.


”இல்லை!” என்று மெல்லிய குரலில் பதில் சொன்ன ராஜகோபாலின் மனத்தில் அப்போதே ஓர் எண்ணம் ஓடியது… சேலத்தில் எப்படியாவது ஒரு வீட்டை வாங்கிவிட வேண்டும் என்று!


சேலத்தில், அவர் உமா நகரில் குடியிருந்தார். அதுவரை சேலத்தில் வீடு வாங்க நினைக்காதவர், மகானின் கேள்வியால் வீடு வாங்கும் உறுதிகொண்டார். எங்கெங்கோ தேடி, கடைசியில் ஒரு நண்பர் மூலமாக, ரகுராம் காலனியில் ஒரு வக்கீலின் வீட்டைப் பார்த்துப் பேசி முடித்தார். அதை வாங்கும்பொருட்டு சென்னை வீட்டை நல்ல விலைக்கு விற்றுவிட்டார்.


p84.jpg
அதன்பின், காரியங்கள் அசுர வேகத்தில் நடக்க, ஒரு நல்ல நாளில் வீட்டை வாங்கி, தன் மனைவி கீதாவின் பேரில் ரிஜிஸ்தரும் செய்துவிட்டார் ராஜகோபால்.


”சொந்த வீடு இருக்கிறதா?” என்று மகான் கேட்டதை நிறைவேற்றிவிட்ட திருப்தி அவருக்கு. வீட்டுப் பத்திரத்தை எடுத்துக்கொண்டு, தன் மனைவியுடன் காஞ்சிக்குச் சென்ற ராஜகோபால், மகானின் முன்னால் போய் நின்றார்.


இதற்கு முன் நடந்த சம்பவத்தை இங்கு சொல்லியாக வேண்டும்.
வீட்டைப் பார்த்துப் பேசி முடித்ததுமே, நேராக காஞ்சிக்குப் போன ராஜகோபால், மகானிடம் பவ்வியமாக, ”ஒரு வீட்டை சேலத்தில் பார்த்திருக்கிறேன்” என்றார்.
மகானின் அடுத்த கேள்வி, ராஜகோபாலை வியப்பில் ஆழ்த்தியது… ”வடக்குப் பார்த்த வீடுதானே? வாங்கிடு!”


வீடு எப்படி இருக்கிறது, எந்தத் திசையை நோக்கி இருக்கிறது என்கிற விவரம் எதையும் மகானிடம் சொல்லவே இல்லை ராஜகோபால். ஆனால், அந்த மகான் கேட்டார்…

”வடக்குப் பார்த்த வீடுதானே?”

அவரது அடுத்த கேள்வி: ”என்ன விலை சொல்றான்?”
ராஜகோபால் சொன்னார்.



”அவன் இன்னமும் குறைச்சுக் கொடுப்பான். வாங்கிடு!” என்று ஆசி வழங்கினார் மகான்.
மகான் சொன்னபடியே, வீட்டின் சொந்தக் காரர் அதன் விலையில் மேலும் 10 ஆயிரம் ரூபாய் குறைத்துத் தர முன்வந்தார். வீடும் கைமாறியது.


இதோ… ராஜகோபால் தம்பதி, மகானுக்கு முன்னே நிற்கிறார்கள். ஒரு தட்டில் பழம், தேங்காய், பூவுடன், பத்திரத்தை அவர் முன் வைக்கிறார்கள். தட்டைக் கையில் எடுத்து மகானிடம் நீட்டும்போது, தன்னை அறியாமல் ராஜகோபால் சொல்கிறார்…


”மகா பெரியவா அனுக்ரஹத்தில், மகா பெரியவா கிரஹம் வாங்கப்பட்டு இருக்கிறது!”
‘தங்கள் வீடு’ என்று அவர் சொல்ல வில்லை. ‘பெரியவா கிரஹம்’ என்று தன்னிச்சையாக அவர் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன.


மகான் ஒரு புன்சிரிப்போடு நிமிர்ந்து, ராஜகோபால் தம்பதியைப் பார்த்தார். பிறகு, சிறிய டார்ச் வெளிச்சத்தில் பத்திரம் பூராவையும் படித்தார். அதன்பின் கேட்டார்… ”எனக்கே எனக்கா?”


p84c.jpg




”பெரியவா அனுக்ரஹம்” என்றார் ராஜ கோபால். பத்திரத்தை மகான் உடனே திருப்பித் தரவில்லை. சற்றுநேரம் கழித்து, அந்தத் தம்பதியை தன் அருகில் அழைத்து, பத்திரத்தின் மீது தாமரை இதழும் வில்வமும் வைத்துத் தந்தார்.


வீட்டின் சாவியைக் கையில் எடுத்த மகா பெரியவா, சாவியை ராஜகோபாலின் கையில் தந்து, ”சாவியை அவகிட்டே கொடு! அவதானே வீட்டுக்காரி” என்றார் புன்னகை புரிந்தபடி.


உண்மைதான்! வீட்டுக்காரி என்னும் சொல் மனைவி என்கிற அர்த்தத்தில் மட்டுமல்ல… வீட்டைத் தன் மனைவியின் பேரில்தானே பதிவு செய்திருந்தார் ராஜகோபால்! எனவே, வீட்டுக்கு உரிமையாளர் என்கிற அர்த்தமும் அதில் உள்ளடங்கியிருந்தது.


அடுத்தபடியாக பெரியவா சொன்ன விஷயம் யாரும் எதிர்பார்க்காதது.


”உனக்கும் உன் குழந்தைகளுக்கும் சௌகர் யமாக மேலே வீட்டைக் கட்டிக் கொள்; கீழே நான் இருக்கேன்!”
இவை எப்படிப்பட்ட வார்த்தைகள்! ராஜ கோபால் கொஞ்சம் ஆடித்தான் போனார். ‘பெரியவாளை கீழே விட்டுவிட்டு, மேலே போய் எப்படிக் குடித்தனம் பண்ணுவது!’ என்று கவலை வந்தது.


மகானுக்கு அவரது எண்ண ஓட்டம் புரியாதா?


”நான் எல்லா இடத்திலும் இருப்பேன்” என்பதைப்போல கையைத் தூக்கி ஆசி வழங்கினார்.


”எத்தனையோ பேர் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்கக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். பெரியவா உன் வீட்டை எடுத்துக்கொண்டது, உன் மீது அவர் வைத்துள்ள அபிமானத்தையே காட்டுகிறது!” என்ற பிரதோஷம் மாமா, அந்தத் தம்பதிக்கு தன் வீட்டில் தடபுடலாக விருந்து வைத்து அனுப்பினார்.
p84a.jpg
இதுதான் சேலம் காந்தி ரோடு, ரகுராம் காலனியில் உள்ள மகா பெரியவா கிரஹத்தின் வரலாறு.


இந்தக் கிரஹம் இப்போது ஏராளமான பக்தர்கள் ஒரே சமயம் வந்து தரிசனம் செய்யவும், உணவருந்தவும் வசதியாக, மிகவும் விசாலமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


புனிதமான கோயிலாகக் கருதப்படும் இந்தக் கிரஹத்தில், பிரதோஷ நாள்களில் வரும் கூட்டத்தைச் சமாளிக்கமுடியாமல் திணறிப் போகிறார்களாம்!


மகா பெரியவா இங்கே பல உருவங்களில் காட்சி தருகிறார். ஸ்ரீவிநாயகரும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியும் விக்கிரக வடிவில் இருக்க, கயிலாசபதியும் நந்தியும் இங்கே கொலுவிருக்கிறார்கள்.
புதிதாக 4 அடி உயரமுள்ள ஆஞ்சநேயரும் இங்கு காட்சி தருகிறார். சுமங்கலி பூஜையும் இங்கே நடைபெறுகிறது. அவ்வப்போது ராமபக்த ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்படுகிறது.
மகானின் பல்வேறு உருவப் படங்கள் இங்கே ஒரே இடத்தில் காணக் கிடைப்பது மிகவும் சிறப்பு! காலையும் மாலையும் கற்பூர தீபாராதனை நடக்கும்.


சேலத்தில் உள்ள மகா பெரியவா கிரஹம் ஒரு புண்ணிய ஸ்தலம். அவசியம் ஒருமுறை அந்த கிரஹத்துக்கு விஜயம் செய்து, காஞ்சி மகானின் பேரருளைப் பெறுங்கள்!


??????? ??????! « Sage of Kanchi
 
சிந்திக்கச் சில...

சிந்திக்கச் சில.....

தெய்வத்தின் அபிஷேகப் பொருள்களும்,
அதன் பலனகளும்......


திருமஞ்சனம்................நோய், கடன் தீரும்

சந்தனாதி முதலிய வாசனை திரவியனகள்..........சுகவாழ்வு.

புனுகு, அத்தர்,பஞ்சாசாமிர்தம்.....................சொத்து சுகம், உடல் வலிமை.

பால்.... ஆயுள் விருத்தி

தயிர்..... நன் மக்கட் செல்வம்

தேன்...சுகவாழ்வு, குரல் இனிமை, உடல் நலம்

நெய்... மோட்சம் தரும்.

கரும்புச்சாறு, இளனீர்.....உடல்வளம், சுகபோகவாழ்வு.

எலுமிச்சம்பழச் சாறு .....த்ருஷ்டி விலகும்.பகை ஒழியும்,

பகைவரை வெல்லும், உடல் நலன் காக்கும்.

விபூதி...மோட்சமும், சுகபோகமும்

சந்தனம், பன்னீர் ......மஹாலக்ஷ்மி கடாக்ஷம்

வலம்புரி சங்குத்தீர்த்தம்....பாவங்கள், தீவினை நீங்கும்

நல்வினை உண்டாகும்.

கலச அபிஷேகம்.......நினைத்த காரியம் ஜயம்

சொர்ணாபிஷேகம்..... செய்தொழில் வெற்றி,லாபம்

குங்குமச்சாந்து.....மாங்கல்ய பாக்யம்,மங்களவாழ்வு,

கணவன் மனைவி நல்லுறவு.

நம் இல்லங்களில் பூஜைகளில் உபயோகிக்கப்படாத
ஸ்வாமி படங்கள்


கோவணம் அணிந்த மொட்டை தண்டாயுதபாணி

முருகன் படத்திற்கு மேல் வேல் உயர்ந்திருந்தால்,

பயங்கரமான காளி, கால கண்டன் படம்

சனீஸ்வர பகவான் ,நவக்ரஹப் படம்,

ருத்ர தாண்டவமாடும் காளி கோபாவேசமாக

உள்ள அம்மன் படம்

சக்தி உருவம் உடன் இல்லாத நடராஜர் திரு உருவம்

எந்த ஸ்வாமியின் படமும் அமைதியுடையதாக
இருக்கவேண்டும்.

த்யானத்தில், யோகத்தில் உள்ள படங்களும்
வீட்டின் பூஜைக்கு ஆகாது.

1 நல்லெண்ணை விளக்கு 1கோடி தேங்காய் எண்ணை
விளக்கு ஏற்றிய பலன்.

1நெய் தீபம் 1 கோடி நல்லெண்ணை தீபத்துக்கு சமம்

1000 இலுப்ப எண்ணை தீபம் ஏற்றிவைப்பதன் பலன்

கற்பூர ஹாரத்தி. இதனைகாட்டிலும் மேலானது
வேறெதுவும் இல்லை.




Source: Sage of Kanchi

Saraswathi Thyagarajan
 
இறந்த உடலுக்கு ஏன் காரியம் செய்ய வேண்டும

இறந்த உடலுக்கு ஏன் காரியம் செய்ய வேண்டும்? ப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு- மஹா பெரியவா



இறந்த உடலுக்கு ஏன் காரியம் செய்ய வேண்டும்? இப்படி ஒரு கேள்வி தோன்றும், உடம்பை விட்டுப் போன ஜீவனின் த்ருப்திக்காக ச்ராத்தம் முதலானவை செய்வது பரோபகாரம் என்றால் ஸரிதான். ஆனால் ஜீவன் (உயிர்) போன இந்த வெறும் உடம்புக்கு எதற்கு ஸம்ஸ்காரம் என்று தோன்றலாம்.

''உயிரோடு இருக்கிறவர்களுக்கே உபகாரம் பண்ணமுடியாமலிருக்கிறது. செத்துப்போனபின் பிணத்துக்கு என்ன ஸேவை வேண்டிக் கிடக்கிறது? ஏதோ ஸம்பிரதாயம் என்று வந்தவிட்டதால், அதை விடுவதற்கு பயமாயிருப்பதால் அவாளவாள் வீட்டில் மரணம் நடந்தால் ப்ரேத ஸம்ஸ்காரம் பண்ணத்தான் வேண்டியிருக்கிறது. இது போதாதென்று, யாரோ அநாதை போய்விட்டானென்றால், அவன் உடம்பை முனிஸிபாலிடிக்காரர்கள் அடக்கம் செய்யப் போகும்போது, நாமெதற்கு வலுவிலே தடுத்து, 'ஸம்ஸ்காரம்'பண்ணுகிறேன் என்று இழுத்து விட்டுக்கொள்ள வேண்டும்? பிரேதமென்றாலே ஒரு பயம், கூச்சம் இருக்கிறது. இதில் ஸம்பந்தமில்லாததை எதற்காக நாமாக எடுத்துப்போட்டுக் கொள்ளவேண்டும்? உயிர்போன வெறும் கட்டையான உடம்புக்கு என்ன பரோபகாரம் வேண்டியிருக்கிறது?'' என்று கேட்கலாம்.

சாஸ்திரங்களைக் கூர்ந்து பார்த்தால் ஒரு ஜீவன் சரீரத்தை விட்டுப் போய்விட்டாலும், அதன் அங்கங்களில் கண்ணில் ஸூர்யன், வாயில் அக்னி, கையில் இந்திரன் என்றெல்லாம்மிருக்கும் தேவாம்சங்கள் உடனே அதனதன் மூலஸ்தானத்துக்குப் போய்விடவில்லை என்று தெரிகிறது. பிரேத ஸம்ஸ்காரத்தின் மூலம்தான் அவற்றை அதனதன் ஸ்தானத்துக்கு அனுப்பி வைக்கிறோம். அபர மந்த்ரங்களைப் பார்த்தால் தெரியும்.

ஜீவாத்மா என்கிற புருஷன் பதினாறு கலை உள்ளவன் என்பார்கள். இதில் பதினைந்து கலைகள் மட்டுமே உயிராக இருப்பது என்றும், உடம்பும் ஒரு கலை என்றும், எனவே உயிர் போன பின்னும் ஒரு கலை உள்ள அந்த உடலை ஈஸ்வரார்ப்பணமாக்கவே பிரேத ஸம்ஸ்காரம் தேவைப்படுகிறது என்றும் ஒரு அபிப்ராயம் உண்டு.

சாஸ்த்ரங்களில் தஹனம் பண்ணுவதை 'அந்த்யேஷ்டி'- அந்திய இஷ்டி - அதாவது 'இறுதியான வேள்வி' என்றே ரொம்பவும் உயர்த்திச் சொல்லியிருக்கிறது. கர்ப்பம் தரிப்பிலிருந்து ஒரு ஜீவனை ஒவ்வொரு பருவத்திலும் எப்படி சுத்தி பண்ண வேண்டும் என்பதற்காக சாஸ்த்ரங்களில் நாற்பது ஸம்ஸ்காரங்களைச் சொல்லியிருக்கிறது.

'ஸம்ஸ்காரம்'என்றால் 'நன்றாக ஆக்குவது' என்று அர்த்தம். ('நன்றாக ஆக்கப்பட்ட'பாஷைதான் 'ஸம்ஸ்க்ருதம்'.) உபநயனம், விவாஹம் ஆகிய எல்லாமே ஜீவனை அந்தந்த நிலையில் பக்குவப்படுத்துவதற்காக ஏற்பட்ட ஸம்ஸ்காரங்கள்தான். வாழ்நாள் கர்மா முழுவதையும் வேள்வியாக ஈஸ்வரனிடம் ஆஹ§தி செய்துகொண்டே இருக்கிற ரீதியில் இந்த நாற்பது ஸம்ஸ்காரங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

இப்படி வாழ்க்கையையே யாகமாகச் செய்த ஒருத்தனுக்கு, வாழ்க்கை முடிந்தபிறகு கடைசியில் மற்றவர்கள் செய்கிற யாகம்தான் - அதாவது அந்திய இஷ்டியே ப்ரேத ஸம்ஸ்காரமாகும். எந்த உடம்பை வைத்துக்கொண்டு பாக்கி யஜ்ஞங்களை ஒருத்தன் பண்ணினானோ, அந்த உடம்பையே சிதாக்னி (சிதை) யில் ஹோமம் பண்ணிவிடுவதுதான் இது. ப்ரேத ஸம்ஸ்கார மந்த்ரங்களில் அப்படித்தான் சொல்லியிருக்கிறது. ஹோமத்துக்குரிய மற்ற வஸ்துக்களை நெய்யினால் சுத்தி செய்து அக்னியில் போடுகிற மாதிரித்தான் ப்ரேதத்தையும் சுத்தம் பண்ணி, தஹனம் செய்யச் சொல்லியிருக்கிறது. உடம்பு ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. மண்ணில் அடக்கம் பண்ணுவதானாலும் ஈஸ்வரார்ப்பணமே ஆகிறது.

இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் சொல்கிறேன்.

'தேஹம் ரொம்ப இழிவானது. இதிலிருந்து விடுபடவேண்டும்' என்று பெரியவர்கள் பாடி வைத்திருப்பதெல்லாம் உண்மைதான். ஆனால் இன்னொரு நிலையில் பார்த்தால் இந்த தேஹம் என்பது ஒரு மஹா அத்புதமான மெஷினாக இருக்கிறது. ஒரே மெஷினில் ஒவ்வொரு பாகம் ஒவ்வொரு தினுஸான கார்யத்தைச் செய்கிறது. கண் என்று ஒன்று வெளிச்சத்தையும், வர்ணங்களையும் பார்க்கிறது. காது என்று ஒன்று சப்தங்களைக் கேட்கிறது. இருக்கிறதெல்லாம் ஒரே ஆத்மா- இத்தனை அவயவங்களுக்குள்ளேயும் ஒரே ஜீவன்தான் இருக்கிறது என்றாலும், கண்ணும், காதும் கிட்டக்கிட்ட இருந்துங்கூட கண்ணால் கேட்க முடிவதில்லை; காதால் பார்க்க முடிவதில்லை! பக்கத்திலேயே வாய் என்று ஒன்று அதற்குத்தான் ருசி தெரிகிறது. பேசுகிற சக்தியும் அதற்கே இருக்கிறது. தொண்டையில் பல தினுஸாகக் காற்றைப் புரட்டி அழகாக கானம் செய்ய முடிகிறது.

பல வஸ்துக்களைப் பிடிப்பதற்கு ஏற்றமாதிரி கையும் விரல்களும் அமைந்திருக்கின்றன. இந்த அமைப்பு கொஞ்சம் வேறுவிதமாக இருந்தாலும் இப்போது நாம் பண்ணுகிற கார்யங்களைப் பண்ண முடியாது. அடி எடுத்து வைத்து மேலே போவதற்கு வசதியாகக் காலின் அமைப்பு இருக்கிறது. நடக்கிறபோது கூடியமட்டும் ஜீவராசிகள் நசுங்காதபடி, பூரான் மாதிரியானவற்றின் மேலேயே நாம் பாதத்தை வைத்தால்கூட அவை நெளிந்துகொண்டு ஓட வசதியாக உள்ளங்கால்களில் குழித்தாற்போன்ற ஏற்பாடு, சப்பணம் கூட்டி உட்கார வசதியாக முழங்காலில் எலும்பு நரம்புகளின் அமைப்பு - என்று இப்படி ஒவ்வொன்றைப் பார்த்தாலும் பராசக்தி எத்தனை ஸூ¨க்ஷ்மமான கல்பனையோடு ஒரு சரீரத்தைப் பண்ணியிருக்கிறாள் என்று ஆச்சரியமாக இருக்கிறது!

ஆஹாரத்தை ஜெரிக்க ஒரு அங்கம், ஜெரித்ததை ரத்தமாக்க ஒரு அங்கம். மூச்சுவிட ஒன்று, ரத்தத்தை 'பம்ப்' பண்ண ஒன்று- எல்லாவற்றுக்கும் மேலே ஸகல கார்யங்களையும் டைரக்ட் பண்ணி கன்ட்ரோல் பண்ணும் மூளை - என்றெல்லாம் விசித்ர விசித்ரமாக பகவான் சரீரத்தைக் கல்பித்திருக்கிறான். சதை, ரத்தம், மஸில்ஸ், நரம்பு, எலும்பு என்ற ஒவ்வொன்றுக்கும் ஒரு 'பர்பஸ்' இருக்கிறது. எலும்புக்குள்ளேகூட மஜ்ஜை என்ற ஜீவஸத்து ஓடுவது ஒரு அதிசயம். மனித சரீரத்தில் இருக்கும் கோடிக்கணக்கான ஸெல்களில் ஒவ்வொன்றும் ஒரு அத்புத லோகம்.

இப்படித் தனித்தனியாக ஒவ்வொரு பாகமும் ஒரு அத்புதமான மெஷினாக இருப்பதோடு மட்டுமல்லாமல், எல்லாமாக ஒன்றுக்கொன்று இசைவாக ஸஹாயம் செய்து போஷித்துக் கொள்வதும் மஹா அதிசயமாக இருக்கிறது. ஆனபடியால், எவனோ லக்ஷத்தில் ஒருவன் தேஹம் பொய், மனஸ் பொய் என்று புரிந்துகொள்ளும் ஞானியாக ஆனாலும், பாக்கி எல்லாரும் பகவான் தந்திருக்கிற இந்த அத்புதமான மெஷினை வைத்துக்கொண்டு தர்மமாக வாழத்தான் முயற்சி பண்ண வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்த தர்ம வாழ்க்கையிலிருந்துதான் அப்புறம் ஞானத்துக்குப்போக வேண்டியவர்களாயிருக்கிறோம்.

யோசித்துப்பார்த்தால், சரீரத்தை ஏன் மட்டம் என்று திட்டவேண்டும்? அது என்ன பண்ணுகிறது? அது மனஸின் கருவி மட்டும்தானே? கையையும் காலையும் கண்ணையும் வாயையும் மனஸ் நல்லபடி ஏவினால் சரீரம் நல்லதே செய்யும். கை பரோபகாரம் பண்ணும்; அல்லது அர்ச்சனை பண்ணும். கால் கோயிலுக்குப் போகும். கண் ஸ்வாமி தர்சனம் பண்ணும், வாய் ஸ்தோத்ரம் சொல்லும், அல்லது எல்லோருக்கும் ப்ரிய வசனம் சொல்லும். ஆனதால் 'நிஷித்தம்' என்று சரீரத்தைக் திட்டுவதுகூட தப்புத்தான். ''தர்மத்தைச் செய்ய சரீரம்தானே ஸாதனமாயிருக்கிறது?''- சரீரம் ஆத்யம் கலு தர்ம ஸாதனம் - என்று வசனமே இருக்கிறது. '' தேஹோ தேவாலய : ப்ரோக்தா '' - உள்ளே இருக்கிற பரமாத்மாவுக்கு இந்த உடம்பே ஆலயம் என்கிறோம். ' காயமே கோயிலாக ' என்று அப்பரும் சொன்னார். திருமூலரும் இப்படியே, ''முன்னே உடம்பு ரொம்ப நிஷித்தம் என்று மட்டமாக நினைத்தேன். அப்புறம் அதற்குள்தான் ஈஸ்வரன் குடிகொண்டிருக்கிறான் என்று தெரிந்துகொண்டதும், உடம்பை ஓம்பலானேன்'' என்று திருமந்திரத்தில் சொல்கிறார்.

ஆனாதல், இப்படிப்பட்ட அத்பதமான, பகவான் கொடுத்த மெஷினை விட்டு உயிர் போனதும் அதைக் கன்னாபின்னா என்று 'டிஸ்போஸ்' பண்ணக்கூடாதுதான். மஹா ச்மாசானவாஸியான பரமேஸ்வரனுக்குத்தான் அதை ஆஹூதி பண்ண வேண்டும். எவன் இந்த உடம்பைக் கொடுத்தானோ அவனுக்கே அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். உலகத்தில் எந்த தேசத்திலுமுள்ள காட்டுக்குடிகள் உள்பட எல்லோரும் ஏதோ ஒரு தினுஸில் இதைத்தெரிந்து கொண்டிருப்பதால்தான் எங்கே பார்த்தாலும் ப்ரேத ஸம்ஸ்காரம் என்பது ஒரு பெரிய ஸமயச் சடங்காக இருக்கிறது.

செத்துப்போனபின் ஒரு உடம்புக்குள் தேவதாம்சங்கள் ஒட்டிக்கொண்டிருப்பதாக நம்பாவிட்டாலுங்கூட ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். இத்தனை நாள் அதற்குள் இருந்த ஜீவன் ஈஸ்வர சைதன்யத்தின் ஒரு திவலையல்லவா? எப்போதோ ஸ்வாமி விக்ரஹம் வைத்த புறை என்றால்கூட, இப்போதும் அதில் கண்ட கண்டதுகளை வைக்காமல் ஒரு அகலை ஏற்றிவைக்க வேண்டும் என்று தானே தோன்றுகிறது? அப்படியிருக்க ஈஸ்வர சைதன்யத்தின் அம்சம் இருந்த body -ஐ மரியாதை தந்து மந்த்ரபூர்வமாகதானே dispose செய்ய வேண்டும்?

ஒருத்தன் தன்னுடைய சரீரத்தால் அநேக நன்மைகளைச் செய்தானென்றால், உயிர்போன பின்னும் அந்த சரீரத்துக்கு மரியாதை பண்ணத்தான் வேண்டும். நாஸ்திகர்கள்கூடத் தங்கள் தலைவர்களின் ம்ருத சரீரத்துக்கு மலர்வளையம் வைக்கிறார்களே! ஒருவன் சரீரத்தைக் கெட்டத்திற்கே பயன்படுத்தினான் என்றாலும்கூட, அவனுக்கு அந்த சரீரத்தை இயக்கியது ஈஸ்வர சக்தி என்று தெரியாவிட்டாலும் நமக்குத் தெரிவதால் அதற்குரிய ஸம்ஸ்கார மரியாதையைப் பண்ணத்தான் வேண்டும். ''அவனாக இந்த சரீரத்தைக் கொண்டு ஈஸ்வரார்ப்பணமாக எந்த நல்லதும் செய்யாமல் போய்விட்டாலும், அதற்கும் ஈடாக, ப்ராயச்சித்தமாக இப்போது நாமாவது இதையே ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்வோம்'' என்ற எண்ணத்துடன் ஸம்ஸ்காரம் பண்ணவேண்டும்.

சைவ ஸித்தாந்தத்தில் ஈஸ்வரன்தான் ஜீவனுக்குத் தநு, கரண, புவன, போகங்களைத் தருகிறான் என்பார்கள். லோகத்தை (புவனத்தை) படைத்து, அதிலுள்ள போகங்களை அநுபவிப்பதற்காகவே மநுஷ்ய சரீரத்தை (தநுவை) ஸ்ருஷ்டி செய்து அதில் கரணங்கள் என்ற இந்திரியங்களை அவன் வைத்திருக்கிறான். கர்மாவைத் தீர்த்துக்கொள்ளும்வரை போகங்களை அநுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று இப்படி வைத்திருக்கிறான். எனவே அவனுடைய பிரஸாதமான தநுவைக் கரணங்கள் ஓய்ந்த பிற்பாடும் அதற்குரிய கௌரவத்தைக் கொடுத்து ஸம்ஸ்கரித்துத்தான் அவனிடம் வேள்விப்பொருளாகத் திரும்பக்கொடுக்க வேண்டும்.

இதிலே ஒரு வித்யாஸம். மற்ற வேள்விகளை, இஷ்டிகளை ஒரு ஜீவன், தானே பண்ணுகிறான். ஆனால் செத்துப்போன பிறகு உடம்பை பகவானுக்குக் கொடுக்கிற இந்த அந்திய 'இஷ்டி'யை அவன் பண்ணமுடியாது. மற்ற ஸம்ஸ்காரங்களைப் பண்ணுவதும், பண்ணாததும், அதனால் புண்ய பாபங்களை ஸம்பாதிப்பதும் அந்தந்த ஜீவனுடைய கார்யந்தான். இவற்றில் மற்றவர்களுக்கு பொறுப்பு இல்லை. ஆனால் ப்ரேத ஸம்ஸ்காரம் மற்றவர்களே செய்ய வேண்டியது அல்லவா? அதனால் அதில் பொறுப்பு மற்றவர்களுக்குத்தான். எனவே இதை ஸரியாகச் செய்யாவிட்டால் நமக்குத்தான் பாபம்.

'உயிரோடு இருக்கிறவரையில் உபகாரம் பண்ண வேண்டியதுதான்; போன உயிரும் வேறு எங்கோ இருக்குமாதலால் அதற்கு ச்ராத்தாதிகள் பண்ண வேண்டியதுதான்; ஆனால் உயிர்போன உடலுக்கு எதற்கு ஸம்ஸ்காரம்?' என்று முதலில் கேட்டுக்கொண்டோம். இப்போது அலசிப் பார்த்துக் கொண்டதிலோ பகவானின் பராமத்புத ஸ்ருஷ்டியான சரீரம் உயிரற்ற பிறகுங்கூட அதற்கான மரியாதையைப் பெற்று பகவானிடமே சேர்பிப்பிக்ப்பட வேண்டும்; உடம்புக்குச் செய்கிற இந்த ஸம்ஸ்காரந்தான் முழுக்க நம் பொறுப்பில் இருப்பது; அதனால் இதைச் செய்யாவிட்டாலே நமக்குப் பெரிய தோஷம் என்று தெரிகிறது!


KANCHI MAHA SWAMIGAL ARULURAI


https://groups.yahoo.com/neo/groups/kalpoonditemple/conversations/topics/2874
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top