• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
படிப்புடன் பக்தியும் வளரட்டும்

படிப்புடன் பக்தியும் வளரட்டும்

*குருகுல கல்வி முறையில் தெய்வ பக்திக்கும், குருபக்திக்கும் மிகுந்த முக்கியத்துவம் இருந்தது.

* வீட்டில் பெற்றோருக்கும், பள்ளியில் ஆசிரியருக்கும் கட்டுப்பட்டு மரியாதையாக நடந்து கொள்வது பிள்ளைகளின் கடமை. இதையும்விட, இஷ்டதெய்வத்திடம் பக்தி செலுத்துவதும் அவசியம்.

*மாணவர்கள் தினமும் படிப்புக்காக நேரத்தைச் செலவிடுவதோடு, கால்மணி, அரைமணி நேரமாவது பக்தியிலும் ஈடுபடுதல் நல்லது.

* மாணவப் பருவத்தில் தெய்வ விஷயமாகக் கூட ரொம்பவும் போய்விடக் கூடாது என்று ஒருபக்கம் சொல்லும்போதே, இன்னொரு பக்கம் பக்தி இல்லாதவர்கள் மனதளவில் நல்ல வளர்ச்சி இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் மறக்கக்கூடாது.

* சிறுவயதில் இருந்தே தெய்வசிந்தனையோடு ஒழுக்கம், தர்மம் போன்ற உயர்ந்த குணங்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மனிதப்பிறப்பே பயனற்றதாகி விடும்.


- காஞ்சிப்பெரியவா



Source; Sage of Kanchi

Hari Haran
 
‘தாயாரை விற்கலாமா?

‘தாயாரை விற்கலாமா?

ஒரு நாள், தரிசனத்துக்கு வந்தவர்களிடமெல்லாம் ‘தாயாரை விற்கலாமா? வயதாகிவிட்டால், தாயாரை விற்கலாமா?‘ என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள் பெரியவாள்.

தொண்டர்களுக்கு புரியவேயில்லை.




தாயாரை-வயதான தாயாரை-ஏன் விற்கணும்? விற்றாலும் யார் வாங்குவார்கள்? தாயாரை விற்றதாக கேள்விப்பட்டதில்லையே?’தாயாரை விற்க கூடாது‘ என்று எல்லோரும் ஒருமுகமாக கூறினார்கள்.’அப்படி ஓர் அநியாயம் நம்ம தேசத்திலே நடந்துண்டு இருக்கு.எந்த மாநிலத்தில்? ஹிமாச்சல் பிரதேசத்திலா? அருணாச்சல் பிரதேசத்திலா? நம்ம தமிழ் நாட்டில் தான்…தினமும் நூற்றுக்கணக்கில் விற்பனை ஆகிறது. வாங்குகிறவன் எங்கோ கொண்டு போய் விடுகிறான்…’


பெரியவாள் இவ்வளவு வருத்தப்பட்டு பேசியதை, ஆண்டாண்டு காலமாக உடனிருந்து பணி செய்யும் சீடர்கள் கேட்டதில்லை.


‘கோமாதா, கோமாதான்னு பூஜை செய்யறோம். குளிப்பாட்டறோம். குங்குமம் வெக்கறோம். பால் கறந்து காப்பி சாப்பிடறோம் (ஈஸ்வரன் கோவிலுக்கு கொடுக்கறதில்லே), ஆனா, வயசாகி போய் பால் மரத்து போச்சுன்னா, வீட்டில் வெச்சுக்கறதில்லே. கசாப்பு கடைக்காரன் கிட்டே வித்துடறோம்…அநியாயம்…சகல தேவதா ஸ்வரூபமான பசுவை இப்படி கொன்றால், பகவான் எப்படி நம்மை ரட்சிப்பார்? வசதிப்பட்டவர்கள் கோசாலை வைத்து வயதான பசுக்களை சம்ரக்ஷிக்கணும்.’


பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருள்கள் – பஞ்சகவ்யம் ஈஸ்வர பூஜைக்கு தேவையானவை.
பசுக்களிடம் எல்லை இல்லாத பாசம் பெரியவாளுக்கு… அவற்றை கண்டால், கோகுலத்து கண்ணனாகவே மாறி விடுவார்கள்.


நன்றி: ஸ்ரீமடம் ஸ்ரீ பாலு மாமா அவர்கள், கச்சிமூதூர் கருணாமூர்த்தி புத்தகத்தில்…


2013 May 19 « Sage of Kanchi
 
எச்சில் தோஷம்

எச்சில் தோஷம்


இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள காலஹச்தியை அறியாதவர்கள் இருக்க முடியாது பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான வாயு ஸ்தலமான இங்கு மலையடிவாரத்தில் ஈஸ்வரன் காலஹஸ்தீஸ்வரராக கோயில் கொண்டுள்ளார் சிலந்தி சர்ப்பம் யானை மூன்றும் இங்கு முக்தி பெற்றதால் இத்தளம் திருகாளஹஸ்தி என்று அழைக்க படுகின்றது .

இவ்வளவு சிறப்பு மிக்க காளஹஸ்திக்கு மகா... பெரியவா ஒருமுறை சென்றபோது அங்கிருந்த ஒரு பக்தர் பெரியவாளிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார் அவருடைய வீடிற்கு வரவேண்டும் என்று .
ஒருநாள் அந்த பக்தர் பூஜை அறையில் தனது பூஜையை முடித்துவிட்டு நெய்வேதியதுக்காக வைத்திருந்த கல்கண்டில் ஒரு பிடி எடுத்து வாயில் அள்ளி போட்டதுதான் தாமதம் வெளியே யாரோ வரும் சத்தம் கேட்டது வெளியே வந்து எட்டி பார்த்தவர் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடி போனார் வெளியே வந்தது சாக்க்ஷாத் மகா பெரியவாள் .

வாய் நிறைய கற்கண்டை குதப்பிக் கொண்டிருந்ததால் அவரால் வாய் திறந்து பெரியவாளை வரவேற்க முடியவில்லை .பெரியவாளை பலமுறை வீட்டிற்கு வாருங்கள் என்று தாம் அழைத்தும் வீட்டின் முன்னே வந்து நிற்கும் அவரை வாருங்கள் வாருங்கள் என்று அழைக்க முடியவில்லையே என்ற தவிப்பில் தத்தளித்தார் .

அப்போது மகான் நான் வந்த நாள் முதல் ஆத்துக்கு வாங்கோன்னு நீ கூப்டாத நாளில்லை , இப்போ உங்காத்துக்கு வந்து வாசல்லையே நினுண்டிருக்கேன் உள்ள வாங்கன்னு சொல்லாம மச மசன்னு நிக்கறியே என்று கட்டளயிட்டார்

பக்தருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பெரியவா அருகில் இருக்க வாயில் இருந்த கற்கண்டை கீழே உமிழ்ந்துவிட்டார் எங்கே தான் உமிழ்ந்த எச்சில் மகான் மீது பட்டிருக்குமோ என்று பதட்டமடைந்து அபசாரம் பண்ணிட்டேன் , அபசாரம் பண்ணிட்டேன் என்று கூறி வாயில் போட்டுகொண்டார் .

இதை புரிந்துகொண்ட மகான் இப்ப என்ன அயிடுத்து ஏன் பதற்ற இக்காலஹச்தியில் கண்ணப்பநாயனார் சிவபெருமானுக்கு எப்படி பூஜை பண்ணினான்னு தெரியுமா வாயில் ஜலதைக் கொண்டுவந்து சிவ லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தான் , மாமிசத்தை வாயில் சுவைத்து நெய்வேத்தியம் பண்ணினான் அவன் செய்த செயல் நமக்கு தவறாக தோன்றினாலும் பகவானுக்கு அது தவறாக தெரியவில்லை .

ஆசார்யாள் (ஆதிசங்கரர்) சிவானந்த லஹரியில் ஆனானபட்டவன் பூஜையெல்லாம் பாராட்டாமல் காட்டில் வாழ்ந்த கண்ணப்பன் பக்தியைத்தான் பெரிசா சொல்லறார் . அப்பேற்பட்ட கண்ணப்பன் வாழ்ந்த திருத்தலம் இது இங்க நமக்கு எச்சில் தோஷம் வராது என்றார் மகா பெரியவா இதற்க்கு பிறகுதான் அந்த பக்தன் சமாதானம் அடைந்தார்



SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
Read more: SRI KANCHI MAHA PERIVA ARUL VAKKU--??????? ????? | Kanchi Periva Forum
 
Maha Periyava Sayings

Maha Periyava Sayings



** நாம் இந்த உலகத்தை விட்டுப் போவதற்குள், "என்னிடம் பாவமூட்டை இல்லை' என்று சொல்லும்படி செய்து கொண்டு விட வேண்டும். அந்த நிலையை அடைந்துவிட்டால் எப்போதும் ஆனந்தமாக இருக்கலாம்.

* நம் துக்கங்களை எல்லாம் ஞானம் என்னும் தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது தண்ணீருக்குள் மூழ்கிய குடம்போல மனம் லேசாகி விடும்.

* எமன் ஒரு நொடிப்பொழுதைக் கூட வீணாக்குவதுஇல்லை. தினமும் நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கிறான். எப்போது நம்மைப் பிடித்துக் கொள்வான் என்று தெரியாது. கோவிந்தனின் காலைக் கட்டிக் கொண்டால் என்றும் பயமில்லை.

* குழந்தையும் தெய்வமும் ஒன்று தான். குழந்தைகளிடம் காமகுரோத சிந்தனைகள் உண்டாவது இல்லை. "குழந்தையாக இரு' என்ற உபநிடதம் நமக்கு உபதேசிக்கிறது.

** துன்பத்தை மற்றவர்களிடம் எல்லாம் சொல்லிப் பயனில்லை. அவர்கள், அதை எப்படி எடுத்துக்கொள்வார்களோ தெரியாது. கடவுளிடம் சொல்லி முறையிட்டால் நிச்சயம் அது தீர்ந்து விடும்.

- காஞ்சிப்பெரியவர்



Source: Sage of Kanchi

Mannargudi Sitaraman Srinivasan
 
“எந்திரு..சீதே…ஒன்னோட ராமன் எங்க?

“எந்திரு..சீதே…ஒன்னோட ராமன் எங்க?


திருவையாறு க்ஷேத்ரத்தில் காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு என்ற ஐந்து நதிகள் பாய்வதால், திருவையாறு என்று பெயர் பெற்றது. 1942 ல் நடுக்காவேரியில் வசித்து வந்தது சின்னஸ்வாமி ஐயரின் குடும்பம். இறை பக்தி, ஆசார அனுஷ்டானங்கள், எல்லாவற்றுக்கும் மேலே பெரியவாளிடம் அப்படி ஒரு ஆத்மார்த்தமான பக்தி! திருவையாறு வரும்போதெல்லாம் பெரியவா இவருடைய க்ருஹத்துக்கு கட்டாயம் வருவார்.

சின்னஸ்வாமி ஐயர் நித்யம் வீட்டில் சிவபூஜை, அப்புறம் உள்ளூரில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று பரமேஸ்வரனை மனமுருகி வழிபடுவார். சாயங்கால வேளைகளில் இராமாயண உபன்யாசம் செய்வார். இவருடைய பிள்ளை நாட்டுப்பெண் பெயர் பொருத்தம் வெகு அழகாக ராமச்சந்திரன்,ஸீதாலக்ஷ்மி என்று அமைந்தது. மனமொத்த குடும்பமாக இருந்தாலும், கல்யாணமாகி 13 வர்ஷங்கள் ஆகியும் ஸந்தானப்ராப்தி இல்லையே என்ற குறை எல்லார் மனசையும் அரித்துக்கொண்டிருந்தது. முதலில் பிறந்த குழந்தை தங்கவில்லை. நிச்சயம் பெரியவா அனுக்ரகத்தால் தங்களுக்கு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மட்டும் அவர்களுக்கு துளியும் குறையவில்லை.





அப்போது பெரியவா நடுக்காவேரிக்கு விஜயம் செய்தார். அங்கு வேறொரு பக்தர் க்ருஹத்தில் பெரியவா தங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வேதகோஷம் முழங்க பூர்ணகும்பங்கள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வைக்கப்பட்டு பெரியவா ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று ஆசிர்வாதம் பண்ணிக்கொண்டிருந்தார். ஸீதாலக்ஷ்மி வீட்டு வாசலில் அழகாக கோலமிட்டுக் கொண்டிருந்தாள். இவர்கள் வீட்டைத் தாண்டித்தான் பெரியவா தங்கப்போகும் வீட்டுக்கு செல்ல வேண்டும். ஸீதாலக்ஷ்மியை பார்த்ததும், ஊர்வலத்திலிருந்து விலகி விறுவிறுவென்று அவள் போட்டிருந்த மாக் கோலத்தின் மேல் திருப்பாதங்கள் பதிந்தும் பதியாமலும் நின்றார்.



திடீரென்று தன் எதிரில் வந்து நின்ற கண்கண்ட தெய்வத்தை கண்டதும், சந்தோஷம், பக்தி, குழந்தை இல்லா ஏக்கம் எல்லாம் சேர்ந்து அப்படியே அவர் பாதங்களில் விழுந்து கேவிக்கேவி அழ ஆரம்பித்தாள்.



“எந்திரு..சீதே…ஒன்னோட ராமன் எங்க? கூப்டு அவனை..” என்றவர் யாரும் எதிர்பாராத நேரத்தில், சின்னஸ்வாமி ஐயரின் க்ருஹத்துக்குள் ப்ரவேசித்தார். ஸீதாலக்ஷ்மி தன் அகத்துக்காரர் ராமச்சந்த்ரனை தேடிக்கொண்டு ஓடினாள். முன்னறிவிப்பு ஏதுமின்றி தனது வீட்டுக்குள் சாக்ஷாத் பரமேஸ்வரனே வந்து நின்றதைக்கண்டு சின்னஸ்வாமி ஐயர் ப்ரமித்தார்! அவ்வளவுதான்! தெருவே அவர் க்ருஹத்துக்குள் கூடிவிட்டது!






பெரியவா தனக்கு ரொம்ப ஸ்வாதீனமான இடம்போல விறுவிறுவென்று நுழைந்து அங்குமிங்கும் பார்வையால் துழாவினார். பிறகு தாழ்ப்பாள் போட்டிருந்த ஒரு அறையை தானே திறந்து அதற்குள் சென்றார். அது ஜாஸ்தி பயன்படுத்தாததால், தட்டுமுட்டு சாமான்கள் நிறைய காணப்பட்டது. அதோடு ஒரு வண்டி தூசி! பெரியவா கதவைத் திறந்ததும் ஒரே புழுதிப்படலம் மேலே கிளம்பியது! தன்னுடைய ஒத்தை வஸ்த்ரத்தின் ஒரு முனையால் கீழே தூசியைத் தட்டிவிட்டு, அதையே லேசாக விரித்துக்கொண்டு தரையிலேயே அமர்ந்துவிட்டார் கருணைவள்ளல் !



“பெரியவா……இந்த ரூம் ஒரே புழுதியா இருக்கு…..கூடத்ல ஒக்காந்துக்கோங்கோளேன்!” என்றார் ஐயர். இதற்குள் ஸீதாலக்ஷ்மி கணவனுடன் வந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினாள்.


“ராமா!…..ஒடனே போயி ஒங்காத்து பசுமாட்டுலேர்ந்து பால் கறந்து ஒரு சொம்புல எடுத்துண்டு வா…போ!”





“உத்தரவு பெரியவா……” அடுத்த க்ஷணம் ஒரு சொம்பு பசும்பாலோடு பெரியவா முன் நின்றார். பெரியவா கண்களை மூடிக்கொண்டு சற்றுநேரம் அமர்ந்திருந்தார். பிறகு, “ராமா…..இந்தப்பாலை கொண்டுபோயி கொடமுருட்டி ஆத்துல ஊத்திடு! அப்றம் சொச்சம் இருக்கற கொஞ்சூண்டு பாலை அந்த ஆத்தோட கரைல ஊத்திடு! அந்த ஊத்தின எடத்ல இருக்கற மணலை கொஞ்சம் தோண்டு……அதுல ஒரு அஸ்திவாரம் தெரியும்…..அதுக்கு மேல பிள்ளையாருக்கு ஒரு கோவில் கட்டு. க்ஷேமமா இருப்பேள்” என்று சொல்லிவிட்டு, வஸ்த்ரத்தை எடுத்து உதறிவிட்டு வெளியே வந்து, தான் தங்க வேண்டிய க்ருஹத்தை நோக்கி நடந்தார்.



பெரியவா சொன்னபடி உடனே குடமுருட்டி ஆற்றுக்கு சென்று பாலை விட்டுவிட்டு, அதன் கரையில் மீதிப்பாலை ஊற்றி மண்ணை தோண்டினால்…..அஸ்திவாரம் தெரிந்தது! உடனேயே விநாயகருக்கு ஒரு அழகான சிறிய ஆலயம் எழும்பியது! அதற்கு அடுத்த வருஷமே ஸீதாலக்ஷ்மி ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானாள்! “கணேசன்” என்ற நாமகரணம் சூட்டப்பட்டான் அந்தக் குழந்தை.
இப்போதும் நடுக்காவிரியில் “காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி” கோவிலில் உள்ள விநாயகப் பெருமான் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.




*****


????????..??????????? ????? ????? ?????? ????..? « Sage of Kanchi


 
“எள்ளுப் புண்ணாக்கும், தையல் இலையும் வாங&#3021

“எள்ளுப் புண்ணாக்கும், தையல் இலையும் வாங்கித் தரச்சொன்னேன்”


பிராம்மணன் கடல் கடந்து போகக்கூடாது என்பது சாஸ்த்ரம். ஆனால், தற்போதைய சூழ்நிலை தாய்நாட்டில் சொந்த மண்ணில் அவனை ஸ்வதர்மத்தில் பிழைக்க விடாமல் பண்ணியதோடு பிறரோடும் அவன் சேர்ந்து முன்னேறி வரக்கூடாது என்ற “நல்லெண்ணவாதிகளின்” சட்டத்தால் இன்று பல பிராம்மணர்கள் தூரதேசங்களில் நல்ல முறையில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களால் அந்த தேசங்கள் மிகுந்த பயனை அடைகின்றன. இப்படித்தான் ஒரு பிராம்மணர் குடும்ப சூழ்நிலையால் வெளிநாடு போய் சம்பாதிக்க வேண்டி இருந்தது. பெரியவாளுடைய அத்யந்த பக்தராகையால், சாஸ்த்ரத்தை மீறுகிறோமே, பெரியவாளுக்கு ஒப்பாததை செய்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி அவரை வாட்டி எடுத்தது.



ஒருமுறை இந்தியாவுக்கு வர வேண்டியிருந்தது. இந்தியாவுக்கு வருகிறோம் என்பதை விட, தன்னுடைய அன்பான பெரியவாளை தர்சனம் பண்ணப்போகிறோம் என்ற எண்ணமே அவருக்கு அம்ருதமாக இருந்தது. சென்னை வந்து இறங்கியதும் நேராக காஞ்சிபுரத்துக்கு விரைந்தார். அதேநாள் காலை பெரியவா சமையல் பண்ணும் பாரிஷதர்களை கூப்பிட்டார்….


“இன்னிக்கி சமையல் என்னென்ன பண்ணப் போறேள்?…”


அவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது! பெரியவா இதுவரைக்கும் பொது சமையல் என்று அத்தனை விஜாரித்ததில்லை. மெனுவை சொன்னார்கள். அதில் சிலவற்றை மாற்றி வேறு ஏதோ பண்ணும்படி கூறினார். கொஞ்ச நேரத்தில் இந்த வெளிநாட்டு இந்திய பக்தர் வந்து [ஓடிவந்து] பெரியவா திருவடியில் நமஸ்கரித்தார்.


“க்ஷேமமா இரு! மொதல்ல போயி சாப்டு…அப்றம் வா……” எல்லாருக்கும் ஆச்சர்யம்! வந்த பக்தரை ஏன் முதலில் சாப்பிடச் சொல்கிறார்? அவர் சாப்பிடப் போனதும் அருகிலிருந்த பாரிஷதர்களிடம் “ஏண்டா…..அவன் எனக்கு எதாவுது குடுக்கனும்ன்னா….எதை குடுக்கச் சொல்லி கேக்கறது?” என்று சந்தேஹம் வேறு கேட்டார். அசந்து போனார்கள்! “அதைக் குடு, இதைக் குடு” என்று கேட்டறியாத பரப்ரம்மம் “எதைக் கேக்கலாம்?” என்று கேட்டால், என்ன பதில் சொல்வது?


அதற்குள் அவர் சாப்பிட்டு விட்டு வந்ததும், சிரித்துக்கொண்டே “என்ன? ஒன்னோட வ்ரதம் பூர்த்தியாச்சா?” என்றார். பக்தரின் கண்களோ கரகரவென்று கண்ணீரை பொழிந்தன. புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தை பார்த்து பெரியவா சொன்னார்….


“இவன், சீமைலேர்ந்து பொறப்பட்டதுலேர்ந்து பச்சை தண்ணி கூட குடிக்கலை….என்னைப் பாக்காம எதுவும் சாப்டக் கூடாது..ங்கற ஸங்கல்பத்தோட கெளம்பி வந்திருக்கான்…..என்ன நான் சொல்றது செரியா?..” அவருடைய புன்னகையில் எல்லாரும் மெய்மறந்தனர்.


இதோ! அடுத்த ப்ரேமாஸ்த்ரம்…..”இந்தா…..இவனை அழைச்சிண்டு போயி, எள்ளுப் புண்ணாக்கும், தையல் இலையும் எனக்காக வாங்கித் தரச்சொல்லி, வாங்கி வெச்சுக்கோங்கோ!”……பக்தரின் கண்ணீர் நிற்கவேயில்லை. “அல்பமான எங்கிட்டேர்ந்தா பெரியவா தனக்குன்னு கேட்டு வாங்கிக்கறார்!”


அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும், சுற்றி இருந்தவர்களிடம் தன் அருள் லீலையில் காரணத்தை சொன்னார்…..


“இவனுக்கு எம்மேல ரொம்…ப ப்ரியம். எனக்கு எதாவுது பண்ணனும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கான்….ஆனா, சீமைக்குப் போனவாட்டேர்ந்து நான் எதுவும் வாங்கிக்க சாஸ்த்ரம் எடம் குடுக்கலை…..அதுக்காக எம்மேல பக்தியா இருக்கறவாளை விட்டுட முடியுமா? அதான் எள்ளுப் புண்ணாக்கும், தையல் இலையும் வாங்கித் தரச்சொன்னேன். எள்ளுப் புண்ணாக்கை நம்ம மடத்துப் பசுமாட்டுக்கு போடுங்கோ! அது குடுக்கற பாலை நேக்குக் குடுங்கோ! ஏன்னா…பசுமாட்டுக்கு எதைக் குடுத்தாலும், அதுல இருக்கற தோஷம் நிவர்த்தி ஆய்டும்…பசுமாடு மூலம் எது வந்தாலும் அதுக்கு தோஷமே கெடையாதோன்னோ? அதான். என்னோட பக்தாளோட மனஸை நோக அடிக்கப்டாது “


தர்மமும், காருண்யமும், பக்த வாத்ஸல்யமும் சேர்ந்த “கலவை”யில் உதித்த ஞான சூரியனை சரணடைவோம் !
*****
Thanks a ton to Shri Varagooran Narayanan who had posted this in Sage of Kanchi group in Facebook.


2012 October 27 « Sage of Kanchi
 
Are we worthy of being Angry ?

Are we worthy of being Angry ?



Often we find ourselves angry with some person or other. Anger is provoked in two ways. When we see a man guilty of an offence we lose our temper. But we do not pause to think whether we too are not like him. Even if we have not been guilty of sinful deeds we must have had sinful thoughts. Perhaps we have reason to think that we have sinned less than others.

This must be because we are a little more mature. Even so, how difficult do we find it to correct ourselves. Would it not be more difficult for a habitual sinner to retrieve himself? We need not associate ourselves with him. The sastras proclaim that the first step towards Atmic improvement is to sever ourselves from evil people and to seek the company of virtuous men. But there is no point in looking upon sinners with hatred or anger. All we can and must do is to pray that they turn to the path of virtue. If, by the grace of the Lord, we acquire a little grace ourselves we must use it to take them to the right path.

Our opponent is not likely to change his attitude towards us simply because we are angry with him. Instead, he might turn against us with greater venom. Hatred thus will be kept fuelled on either side. One must realise one's mistakes and try to reform oneself. We cannot congratulate ourselves if a person corrects himself fearing our anger. Also the change thus brought about in him will not be enduring. If we think that there is something wrong with a man we must try to correct him with love.

Why do people sin? The reason must be their mental condition and the circumstances in which they are placed. If we happen to be free from any guilt, it must be because we are more favoured by circumstances. When you see a sinner you must pray: "O Ambika, I too might have sinned like him. But in your mercy you do not give me the occasion to do so. Be merciful to him in the same way."

We must not be angry with a man even if he bears ill-will against us. Our innermost mind knows how far we deserve to be spoken ill of. It may be Hindu Dharma that the man who nurses bad feelings against us is doing so not because of any wrong done by us. We know, however, in our heart of hearts that the sins we have committed are indeed great. Such is our predicament that we must shed tears before Amba, atone for our sins and pray that they are washed away. In that way are we qualified to point accusing finger at others?

The question arises: may we direct our anger against others when we are free from all sin? Were we truly sinless, we would be all love and affection. Where is then the question of our being angry with anyone?

Even towards a sinner we should have then no feeling other than that of love. On the other hand, if we are guilty of wrongs ourselves we have no right to be angry with those we think are sinners. In the state of utter sinlessness we realise it all to be the sport of Amba. In her sport who merits praise, who deserves blame? Anger, in any case has no place in our life.

As I said earlier, according to Krsna Paramatman the two great forces inciting man to sin are desire and anger. In other words we hurt ourselves with our anger. Our opponent may ignore our anger but then we hurt ourselves with it-both our body and mind suffer. The natural dharma of man is to be loving and affectionate. And to be loving and affectionate is to be ever in bliss. Love is Sivam, it is said. We must always learn to attain the condition of love that is Sivam.

Read more: Are We Worthy of Being Angry? | Kanchi Periva Forum
 
வேத ரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலலாக வேண்

வேத ரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலலாக வேண்டும்.


பாரம்பரியமாகத் தொழிலைப்பிரித்துக் கொண்டு செய்வதில் சமுதாயம் முழுவதற்கும் ரொம்பவும் அநுகூலம் இருப்பதாகவே தெரிகிறது. ஆனால். பிராமணன் என்று இருக்கிறவன் செய்ய வேண்டிய தொழில் வேத ரக்ஷணமென்ரால் இதனால் சமூகத்துக்கு என்ன க்ஷேமம். என்ற கேள்வி எழுகிறது.


குயவன் பானை செய்கிறான். வண்ணான் துணி தோய்க்கிறான். நெசவாளன் துணி நெய்கிறான். இடயன் பால் கொடுக்கிறான். குடியானவன் உழுகிறான். இப்படி ஒவ்வொருத்தர் ஒவ்வொன்ரு செய்கின்றனர். இந்தக் காரியங்கள் எல்லாம் ஜனங்களின் அன்றான காரியத்துக்கு அவசியமாகின்றன. இவற்றின் பலனை அவர்கள் பிரத்தியக்ஷமாக அனுபவிக்கிறார்கள்.

உழுத நெல்லைச் சாப்பிடுகிறார்கள்.


பசி தீருவதற்கு அது அவசியமாக இருக்கிறது. நெய்த துணியை உடுத்திக் கொள்கிறார்கள். மானத்தைக் காப்பாற்ற, குளிர், வெயிலிருந்து சரீரத்தைக் காப்பாற்ற அது தேவையாக இருக்கிறது. பால் குடிக்கிறார்கள். மோராக்கிச் சேர்த்துக் கொள்கிறார்கள். பானையை அடுப்பில் ஏற்றிச் சமைக்கிறார்கள். இப்படியெல்லாம் நடைமுறைக்குப் பிரயோஜனமாகிற வஸ்துக்களை மற்ற ஜாதிக்காரர்கள் தருகிறார்கள்.


பிராம்மணன் என்ன தருகிறான். வர்ண தர்மத்தை நிலைப்படுத்தியிருக்கிற சாஸ்திரங்கள் அவனுக்கு எந்தத் தொழிலைத் தந்திருக்கிறது.


பிராமண்ன் வேதத்தைக் காதால் கேட்டுப் பாடம் பண்ண வேண்டும். அதாவது அத்யயனம் பண்ண வேண்டும். அதே மாதிரி இன்னொருத்தனுக்கு அதை வாயால் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதாவது அத்யாபனம் செய்ய வேண்டும். அத்யயனம். தான் வேதம் ஒதுவது. அத்யாபனம். இன்னொருத்தனுக்கு வேதத்தை ஒதுவது. அத்யாபனம். இன்னொருவனுக்கு வேதத்தை ஒதுவிப்பது. இதோடு பிராமணன் வேதத்தில் சொல்லியிருக்கிற நித்ய கர்மாநுஷ்டானங்களையும் யாக யக்ஞாதிகளையும் செய்ய வேண்டும் என்று சாஸ்திரத்தில் இவனுக்குரிய தொழிலை வகுத்துக் கொடுத்திருக்கிறது.


வேதத்தின் அர்த்தம் ரொம்ப உயர்வானது. அதைக் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னாலாவது நவீன காலத்தவர்களுக்கு ஒப்புக் கொள்ளலாம் என்று தோன்றும். ஜன சமூகத்துக்கு அறிவு, கலை எல்லாம் வேண்டும். வேதம் நிறைய அறிவைத் தருகிற வஸ்து என்பதால், அதன் அர்த்தத்தைச் சிலர் சமூகம் முழுவதற்கும் பிரசாரம் பண்ணிக் கொண்டிருந்துவிட்டுப் போகட்டும் என்று சொல்லத் தோன்றும். ஆனால், சாஸ்திரம் இப்படிச் சொல்லாமல் பிராமணனாககப்பட்டவன், வேதத்தின் சப்தத்தைப் காப்பாற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஜன சமூகம் முழுவதற்கும் அதைக் கொடுத்து ரக்ஷிக்க வேண்டும் என்கிறது. அர்த்தத்தை எல்லோரும் அறியப் பண்ண வேண்டும் என்றால் அதில் சிலர் மட்டும் வைத்துக் கொள்வதால் லோகக்ஷேமம் என்றால் நம்பிக்கை வரமாட்டேன் என்கிறது.


மற்ற தொழில்கள் நின்று போனால் சமூகம் பாதிக்கப் படுவதுபோல், வேத அத்யயனம் நின்றால் எப்படிப் பாதிக்கப்படும் என்று தெரியவில்லை.


இது புரிய வேண்டுமென்றால் வேதம் என்பது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். இவிவிஷயத்தை முழுக்க அறிவினால் ஆராய்ந்து மட்டும் பிரயோஜனம் இல்லை. அநுபவஸ்தர்கள் சொல்வதை நம்பினால்தான் உண்டு.


??? ??????? ??? ?????????? ???????? ???????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
கொடுக்க வேண்டும். அதுதான் தியாகம்.

கொடுக்க வேண்டும். அதுதான் தியாகம்.

கொடுக்க வேண்டும். அதுதான் தியாகம். அதைத்தான் வேதம் எங்கே பார்த்தாலும் வற்புறுத்துகிறது. எந்தக் கர்மாவாக இருந்தாலும் அதைச் செய்து முடிக்கும்போது, ''நான்தான் கர்த்தா என்பதால் இதன் பிரயோஜனம் முழுதும் எனக்கே வந்துவிடப் போகிறதே! அப்படி என் ஒருத்தனுக்கு மட்டும் பலன் கிடைத்துவிடக் கூடாது'' என்கிற பரம தியாக புத்தியில்...


'ந மம’ - 'எனதில்லை; எனக்கில்லை’ என்று, அதன் பலனை லோக க்ஷேமார்த்தம் தியாகம் பண்ணச் சொல்கிறது நம்முடைய மதம்.


மற்ற வஸ்துக்களைக் கொடுத்துவிட்டு, ''நான் கொடுத்தேன்'' என்ற எண்ணத்தை மட்டும் வைத்துக்கொண்டே இருந்தால், இந்த அகங்கார மானது தியாகத்தாலும் தானத்தாலும் கிடைக்கிற ஆத்மாபி விருத்தியை அப்படியே ஏப்பம் விட்டுவிடும். தியாகம் பண்ண வேண்டும்; அதைவிட முக்கியமாக, தியாகம் பண்ணினேன் என்கிற எண்ணத்தையும் தியாகம் பண்ணிவிட வேண்டும். 'ஸோஷியல் ஸர்வீஸ் பண்ணுகிறேன்'' என்று சொல்லிக்கொண்டு, வெளியில் ஏதேதோ பண்ணிக் கொண்டு அகங்காரத்தைக் கரைக்காமல் இருந்தால், இவனுக்கும் பிரயோஜனமில்லை; இவனுடைய ஸர்வீஸால் லோகத்துக்கும் பிரயோஜனமிராது. தற்காலிகமாக ஏதோ நன்மை நடந்ததுபோல் படாடோபமாகத் தெரியலாம்; ஆனால், அது நின்று நிலைத்து விளங்காது.


சிபியின் கதை எல்லோருக்கும் தெரியும். ஒரு புறாவுக்காகத் தன் சரீரத்தையே, பிராணனையே தியாகம் செய்ய முற்பட்ட மஹாபுருஷன் அவன். நம் மதத்தில் ஜீவகாருண்யத்துக்குத் தந்திருக்கிற முக்கிய மான ஸ்தானத்துக்கு சிபி கதை ஒன்றே போதும்.


வேத பூமியான இந்த பாரதபூமியின் விசேஷம் மனுஷ்யனுக்காக மட்டுமில்லாமல், மற்ற ஜீவராசி களுக்கும், பூச்சி பொட்டுகளுக்கும்கூட க்ஷேமத்தைக் கோரி தியாகம் பண்ணச் சொல்வது. இதில், இன்னொரு பக்கம், இந்த மண்ணின் விசேஷத்தால் மற்ற ஜீவராசிகளுக்கும்கூட இப்படிப்பட்ட பரோபகார சிந்தனையும், தியாக புத்தியும் இருப்பதாகச் சொல்கிற புராண விருத்தாந்தங்களைப் பார்க்கிறோம்.


புறாவுக்காகத் தியாகம் செய்த சிபியைப் பற்றிச் சொன்னேன். புறாக்களே செய்த பரம தியாகத்தை 'கபோத உபாக்யானம்’ சொல்லுகிறது. 'கபோதம்’ என்றால் புறா என்று அர்த்தம். 'உபாக்யானம்’ என்றால், சின்ன கதை என்று அர்த்தம். இந்தப் புறாக்களின் கதை மனசை ரொம்பவும் உருக்குவது.


வேடன் ஒருத்தன் இருந்தான். அவன் காட்டிலே வலை வீசி, ஒரு பெண் புறாவைப் பிடித்தான். அப்போது ஒரே இடியும் மழையுமாக வந்தது. இந்தப் புறாவும், அதன் ஜோடியான ஆண் புறாவும் வசித்த மரத்தடியிலேயே அவன் ஒண்டிக்கொண்டான். மழை நின்றபோது, நல்ல இருட்டாகிவிட்டது. ஒரே குளிர்! வேடனால் அங்கிருந்து புறப்பட முடியவில்லை. குளிரில் உடம்பெல்லாம் நடுங்க, அங்கேயே ஒடுங்கி உட்கார்ந்து விட்டான்.இதைப் பார்த்த மரத்தின் மேல் இருந்த ஆண் புறா தன்னுடைய ப்ரிய பத்தினியைப் பிடித்த பாபி நன்றாக அவஸ்தைப் படட்டும் என்று நினைக்கவில்லை. நேர்மாறாக, நம் தேசத்தின் விருந்தோம்பல் பண்பு முழுதும் அந்தச் சின்ன பட்சியிடம் திரண்டு வந்துவிட்டது.

''நாம் வசிக்கிற மரத்தின் கீழ் இவன் வந்துவிட்டான். அதனால் இவன் நம் வீட்டுக்கு வந்துவிட்ட மாதிரி. 'அதிதி தேவோ பவ’ - 'விருந்தாளியை தெய்வமாக நினை’ என்பது வேதை ஆக்ஞை. எனவே, இந்த அதிதிக்குத் தன்னாலான ஒத்தாசையைச் செய்ய வேண்டும்'' என்று நினைத்தது.முதலில், குளிரில் நடுங்குகிறவனுக்குக் கணப்பு மூட்டவேண்டும் என்று நினைத்தது. தன் கூட்டையே பிரித்து, அதிலிருந்த காய்ந்த குச்சிகளை வேடனுக்கு முன்னால் கொண்டு வந்து போட்டது. தன் வீடு போனாலும் சரி, அவனுக்கு சௌகர்யம் பண்ணித் தர வேண்டும் என்ற உத்தமமான எண்ணம்.'சிகிமுகி’ கல் என்று ஒன்று உண்டு.


'சிக்கிமுக்கி’ என்று பேச்சு வழக்கில் சொல்லு கிறார்கள். 'சிகி’ என்றால் நெருப்பு என்று அர்த்தம். 'சிகை’ உள்ளதெல்லாம் 'சிகி’தான். சிகையை விரித்துக்கொண்டு ஆடுகிற மாதிரிதானே நெருப்பு ஜ்வாலை நாக்குகளை நீட்டிக்கொண்டு கொழுந்துவிட்டு எரிகிறது? 'முகம்’ என்றால் வாய். வாயில் நெருப்பை உடைய கல்தான், அதாவது தேய்த்தால் நெருப்பை உமிழ்கிற கல்தான் 'சிகிமுகி’.


இப்படிப்பட்ட சிகிமுகி கற்களைப் புறா தேடிக்கொண்டு வந்து போட்டது. வேடன் அவற்றை ஒன்றோடொன்று தட்டி நெருப்பு உண்டாக்கி, அந்த நெருப்பில் சுள்ளிகளைப் பற்றவைத்துக் குளிர் காய்ந்தான்.தனக்குப் புறா இத்தனை உபகாரம் செய்ததும், வேடனுடைய குரூர சுபாவம் கூட மாறி, மனசு இளகிவிட்டது.

தான் பிடித்திருந்த அதனுடைய பேடையை விட்டுவிட்டான்.'விருந்தோம்பல் என்றால், முக்கியமாக அதிதிக்குச் சாப்பாடு போடுவதுதான். இந்த வேடன் இங்கே நம் விருந்தாளியாக வந்துவிட்டுப் பட்டினி கிடந்தால், அதனால் நமக்கு மஹாபாபம் ஏற்படும். இவனுடைய பசியை ஆற்றுவதே நம் முதல் தர்மம்’ என்று பெண் புறா நினைத்தது.அவனுடைய ஆகாரத்துக்காக அது வேறு எங்கேயோ போய்த் தேடவில்லை. தானே இருக்கும்போது வேறு ஆகாரம் தேடுவானேன் என்று நினைத்தது. உடனேயே, கொஞ்சங்கூட யோசிக்காமல், பரம சந்தோஷத்தோடு அந்த அக்னியில் தானே விழுந்து பிராண தியாகம் பண்ணி விட்டது.


நெருப்பில் வெந்து பக்வமான தன்னை அவன் புசிக்கட்டும் என்ற உத்தம சிந்தை.இதைப் பார்த்துக்கொண்டிருந்த அதனுடைய ஜோடிப் பட்சியும் அந்த நெருப்பிலேயே விழுந்து தன்னை வதக்கிக் கொண்டது. 'என்பும் உரியர் பிறர்க்கு’ என்கிற மாதிரி, இப்படி உயிரையே தந்தாவது இன்னொருத்தருக்கு உபசரிக்க வேண்டும் என்ற தத்துவத்தை நம் மத க்ரந்தங்களில் எல்லாம் நிறையச் சொல்லியிருக்கிறது.'



????????????: ?????????? ????? ?????? - ??????? ??? !
 
நம்பித் தான் ஆக வேண்டும்

நம்பித் தான் ஆக வேண்டும்

* ஒரு வண்டியைப் பார்த்தால் அதை வடிவமைத்தவன் ஒருவன் என்று நம்புகிறோம். ஆகவே, அவை தாமாகவே உண்டாகவில்லை. ஒரு உத்தேசத்தோடு ஒரு அறிவுஜீவி அதை உண்டாக்கி இருக்கிறான் என்று அறிகிறோம்.

* எதைப்பார்த்தாலும் அதைச் செய்தவன் ஒருவன் இருக்க வேண்டும். அதேபோல் தான் இந்த பிரபஞ்சத்தை செய்த ஒருவன் இருக்கிறான் என்பதை நம்பித் தான் ஆக வேண்டும். எத்தனையோ விதமான பொருட்களை ஒன்று சேர்த்து உருவாக்கி, பயனும் தருகின்ற இயற்கையை, அதற்கேற்ப அமைப்பாகச் செய்து வைத்த ஒரு மகாசக்தி அல்லது பேரறிவு இருக்கத்தானே வேண்டும்.

* வானமண்டல நட்சத்திரங்களையும், கோள்களையும், அவற்றின் சுழற்சியையும் ஏற்படுத்தியது யார்? இவை எல்லாவற்றையும் ஒரே மகாசக்தி தான் இயக்கி கொண்டிருக்க வேண்டும். ஒரே காரண காரிய விதியில் இயற்கை முழுவதும் கட்டுப்பட்டு இருப்பதால், இதை செய்தது ஒரே பேரறிவு தான் என்பதும் புரியும்.


காஞ்சிப்பெரியவா



Source: Sage of Kanchi

Hari Haran
 
காலத்தை வென்றவர்

காலத்தை வென்றவர்



ஒரு சமயம் சிவாரத்திரி வேளை. மகாபெரியவர் காஞ்சி மடத்தில் இருந்தார். அங்கே பெண், மாப்பிள்ளைகளுக்கு இலவசமாகப் பொருத்தம் பார்த்து தரும் ஜோதிடர் ஒருவர் வந்தார்.

வந்தவர், மடத்து ஏஜன்டையும், ஊழியர்களையும் அழைத்தார்.

""உங்களுக்கெல்லாம் வருத்தமான ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறேன். நமது மகாபெரியவரின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தேன். அவருக்கு மிகப்பெரிய கண்டம் ஒன்று வந்துள்ளது. நேரம் சரியில்லை. சிவராத்திரியைத் தாண்டுவதே பெரிய விஷயம்,'' என்று சொல்லி விட்டார்.

எல்லாருமே வருத்தத்தில் ஆழ்ந்துவிட்டனர்.

அவர்களின் முகக்குறிப்பைக் கொண்டே மகாபெரியவர் என்ன ஏதென்று விசாரித்தார். எல்லாருமே சமாளித்து விட்டார்கள். பெரியவரிடம் ஏதும் சொல்லவில்லை.

சிவராத்திரி நாளும் வந்து விட்டது. எல்லாரும் பதைபதைப்பாக இருந்தார்கள். "சிவராத்திரி கழிந்து விட்டால், ஜோசியர் சொன்னது பலிக்காமல் போய்விடும். சீக்கிரமாக இந்தநாள் கழியட்டும்' என்று எல்லார் மனதிலும் ஏக்கம்.

அன்று பெரியவர் எல்லாரையும் அழைத்து, ""ஏன் எல்லாரும் அமைதியாக இருக்கிறீர்கள். இன்று சிவராத்திரி. சிவநாம கீர்த்தனை, சிவஸ்துதிகள், ராமநாம பஜனை செய்யுங்கள்,'' என்று சொன்னார்.

பெரியவருக்கு ஜோசியர் சொன்ன விஷயம் தெரிந்து விட்டதா? தெரியாதா? என்ற சந்தேகத்துடன், அவர் இட்ட கட்டளைப்படி எல்லாரும் வழிபாட்டைத் துவங்கினர். பஜனை பாடியபடியே, பெரியவரை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஒருவழியாக இரவு கழிந்தது. மடத்து ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

காலையில், எல்லாரையும் அழைத்த பெரியவர்,""என் வாழ்நாள் முடியப்போகிறது என்று கவலையுடன் இருந்தீர்களா? என்னை காலன் இப்போது அணுகமாட்டான். நான் சித்தியாவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும். ஆகவே, நீங்கள் எல்லாரும் அதைப் பற்றிய சிந்தனையை விட்டுவிடுங்கள். சித்தத்தை சிவன்பால் செலுத்துங்கள்'' என்று அனுக்கிரகம் செய்தார். அது மட்டுமல்ல! நூறாண்டு காலம் நம்மிடையே வாழ்ந்தார், காலத்தை வென்று காவியமானார். இன்றும் வாழும் தெய்வமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
 
படிப்பும் குற்றமும்!

படிப்பும் குற்றமும்!


பொதுவாக லோகம் முழுக்கப் படிப்புமுறை இருக்கும் நிலையில் எங்கே படிப்பு ஜாஸ்தியோ அந்த ஊரில், அந்த நாட்டில்தான் குற்றமும் ஜாஸ்தி நடக்கிறதென்று தெரியும். ஹைஸ்கூல், டிகிரி தரும் காலேஜ், டாக்டரேட் தருகிற உயர்ந்த ஸென்டர்கள் என்று ஒன்றுக்குமேல் ஒன்றாக வளர்ந்து கொண்டிருக்கிற நாடுகளில்தான் குற்றங்களும் வளர்ந்து கொண்டிருப்பது தெரியும். எழுத்தறிவில்லாத காட்டுக்குடிகளும் மலைவாஸிகளும் உள்ள இடங்களில்தான் போலீஸுக்கு ரொம்பவும் வேலை குறைச்சல், வக்கீல்களுக்குத் தேவை இல்லை என்று தெரியும்.


படிப்பு ஜாஸ்தியாக ஆக நூதன நூதனமாக ஏமாற்று வித்தைகள் செய்கிற ஸாமர்த்யங்களும் வளர்கின்றன. தொழில்கள் நடத்துகிறவர்களும் அரசியல்வாதிகளும் செய்கிற பேற்று மாற்று, எங்கே போனாலும் ரஹஸ்யத்தில் நடக்கும் லஞ்சம் முதலான அநேகக் குற்றங்கள் இந்த ஸாமர்த்தியத்தில் கோர்ட் வரை வராமலே போகின்றன. அதனால் போர்டு போட்டாலும்கூட அதில் கால்வாசிக் குற்றங்களைத்தான் காட்ட முடியும்! முக்கால்வாசிக் குற்றங்கள் நீதி ஸ்தலத்துக்கும், போலீஸுக்கும் வராமலே போயிருக்கும். படிப்பினால் புத்தி ஸாமர்த்யம் அதிகரிப்பதில் ஸிவில் குற்றங்கள் மாத்ரம்தான் அதிகரித்திருக்கின்றன என்றில்லை. பெரிதான பாங்குக் கொள்ளை, ஒரு மந்த்ரி ஸபையையே சுட்டுக் கொன்றுவிடுவது, கோஷ்டி கோஷ்டியாகத் தகாத கார்யத்துக்காகப் பெண்களைக் கடத்திப் போவது மாதிரி க்ரிமினல் குற்றங்களும், ராஜாங்கத்தையே வெறும் பௌதிக பலத்தால் புரட்டிவிடும் ‘கூ’(Coup) முதலியனவும், படிப்பு ஸாமர்த்யத்தாலேயே நன்றாக ஜோடித்துத் திட்டம் போட்டு நடத்தப்படுகின்றன. இதெல்லாம் போக நேராகவே அடிதடி, பிஸ்டலைக் காட்டுவது, சுடுவது முதலானவையும் படிப்பாளிகள் உள்ள நாடுகளில் ஏறிக்கொண்டே போகின்றன. யூனிவர்ஸிட்டி லெக்சரர்கள்கூட ஸெனட்டில் நடக்கும் மீட்டிங்குகளில் கல்லெறிவது, நாற்காலிகளைத் தூக்கி அடித்துக் கொள்வது என்று போகிற அளவுக்கு நிலைமை முற்றியிருக்கிறது.

படிக்கத் தெரியாத ஆதிவாஸிகள் குடும்பச் சண்டை, கோஷ்டிச் சண்டை என்று எப்போதாவது ஒருத்தர் தலையை ஒருத்தர் சீவிக்கொள்வதாயிருக்கலாம். அது ஏதோ ஆத்திர, க்ஷாத்திரத்தில் ஒரு வேகம் வந்த ஸமயத்தில் செய்வதாகத்தான் இருக்கும். மற்றபடி இத்தனை தினுஸு தினுஸான குற்றங்கள் அவர்களுக்குத் தெரியாது. ஃபோர்ஜரியில் ஆரம்பித்து ப்ளான் போட்டு செய்யப்படும் ஏமாற்றுக் குற்றங்களும், Organised- ஆகச் செய்யப்படும் திருட்டுப் புரட்டுகளும் படிக்கத் தெரியாத பழங்குடி மக்களுக்குத் தெரியாது.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்


????????????: ??????????? - ????????? ?????????!
 
பொதுவான தர்மங்கள்

சாமானிய தர்மங்கள் அனைவருக்கும் பொதுவானவை




தியானத்தில் ஒரு முகப்படுத்துவதற்கு பெரிய இடைஞ்சல் என்ன?இந்த மனசு ஒயாமல் ஆடிக் கொண்டிருப்பதுதான். மனத்தினால்தான் எல்லா விதமான கஷ்டங்களும் உண்டாகின்றன. மனத்தில் ஏற்படும் ஆசையே அத்தனை கஷ்டங்களுக்கும் காரணம். ஆசைப்படாதே என்று இந்த மனசை இழுத்துப் பிடித்து நிற்க வைக்க முடியவில்லை.


நாம் ஒரு வஸ்துவை நினை என்று இந்த மனசிடம் சொன்னால், அது ஏதோ சொற்ப காலம் அதை நினைப்பது போல இருந்து, வேறு எங்கோ பாய்ந்து விடுகிறது. தியானம், சாந்தி என்றெல்லாம் நான் உபந்நியாசத்தில் சொல்லுகிறபோது ஒரு க்ஷணம் உங்கள் மனம் அடங்கினாற்போல் தோன்றும், ஆனந்தமாய் இருக்கும். ஆனால் அடுத்த க்ஷணமே மனம் எங்கோ ஒடி, சாந்தி குலைந்து போகிறது.
பேசாமல் இரு என்று கட்டளை போட்டு வாயை மூடிக் கொண்டுவிட்டால், அது ஒரளவுக்காவது பேசாதிருக்கிறது. பார்க்காதே என்று உத்தரவு போட்டுக் கண்ணை முடிக்கொண்டுவிட்டால், கண் ஒரளவாவது பார்க்காமல் இருக்கிறது. ஆனால் இந்த மனத்திடம் மட்டும் நினைக்காமல் இரு என்று எவ்வளவுதான் மூடிக்கொண்டாலும் அது கேட்பதில்லை. நாம் நினை என்றால் மனம் நினைக்க வேண்டும். நினைக்காதே என்றால் நினைக்காமலிருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு மனம் ஸ்வாதீனமாயிற்று. நமக்குச் சித்த ய்வாதீனம் இருக்கிறது என்று அர்த்தம்.


இப்போது பைத்தியங்கள் என்று சிலரைக் குறிப்பிட்டு அவர்கள் சித்த ஸ்வாதீனம் இல்லாதவர்கள் என்கிறோமே. உண்மையில் நமக்கு எவருக்குமே சித்த ஸ்வாதீனம் இல்லைதான். பைத்தியம் வாயை அடைக்காமல் பிதற்றிக் கொண்டே இருக்கிறது என்றால், நாமும் மனத்தை அடைக்காமல் அது பிதற்றல் வழியில் போகத்தான் விட்டிருக்கின்றோம்.


நமக்குச் சித்த ஸ்வாதீனம் வந்துவிட்டால் எப்படி இருக்கும் தெரியுமா. எத்தனை வலி ஏற்பட்டாலும், வலி என்று நினைக்காதே என்றால் மனம் வலியைப் பொருட்படுத்தாமல் இருந்துவிடும். எதிரிலே புலி வந்து உறுமினால்கூட மனத்திட்டம் பயப்படாதே என்றால் அது பயப்படாமலே இருக்கும். இப்போது நாம் காரணமில்லாமல் அழுது கொண்டிருக்கிறோம். மனசு வசப்பட்டுவிட்டாலோ அழுகைக்குக் காரணமாக எத்தனை துக்கம் வந்தாலும்கூட அது சிரித்துக் கொண்டிருக்கும். ஆத்திரமூட்டும்படி என்ன
நடந்தாலும் அது கோபமே இல்லாமல் சாந்தமாயிருக்கும்.


முதலில் மனசை இப்படி அப்படிப் போகாமல், நல்ல விஷயத்தில் நினைவைச் செலுத்தும்படி செய்ய வேண்டும். எண்ணெயை விட்டால் அது எப்படிப் பிசிர் இல்லாமல் ஒரே இழையாக விழுகிறதோ (இதைத் தைலதரை என்பார்கள்) அது மாதிரி மனம் நல்ல நிலையில் ஒரு முகப்பட்டுச் சொல்ல வேண்டும். ஸ்வாமி, ஸ்வாமி என்ற நல்ல வஸ்துவை அப்படியே நினைத்துக் கொண்டிருக்கும்படி மனத்தை அப்பியாசப்படுத்த வேண்டும். அதன்பிறகு நினைக்கிறோம் என்பதும்போய், ஸ்வாமியிலேயே கலந்து ஸ்வாமியாகவே ஆகிவிடுவோம்.


இப்படி மனசை அடக்குவதுதான் யோகம் என்பது. சாவதற்குள் இந்த மனசை அடக்க ஒருவழி தேடியே ஆகவேண்டும். இல்லாவிட்டால் மறுபடி பிறப்புதான். மறுபடி மனசின் ஒயாத ஒட்டம்தான். எனவே, இந்த ஜன்மாவிலேயே காமமும் குரோதமும் ஏற்படுவதற்கு எவ்வளவோ ஹேதுக்கள் இருக்கும்போதே இவற்றின் நடுவே மனசை அடக்க முழுப் பிரயத்தனம் பண்ண வேண்டும். அப்படிப் பண்ணி ஜெயித்தவன்தான் யுக்தன் என்கிற யோகி. அவன்தான் ஹ§கி உண்மையான ஆனந்த ஆத்மா என்கிறார்.



யோகமெல்லாம் ரிஷிகள் சமாச்சாரம், நமக்கு வருமா. என்று விட்டு விடலாகாது. மருந்து யாருக்கு வேண்டும். வியாதி உள்ளவனுக்குத்தானே. நமக்குத்தான் மனோவியாதி. அதாவது, மனம் என்ற வியாதி - இருக்கிறது. எனவே நாம்தான் அதை அடக்குகிற மருந்தைச் சாப்பிட வேண்டும்.



மனசை அடக்க இரண்டு சாதனங்கள் உண்டு. ஒன்று பகிரங்க சாதனம். மற்றது அந்தரங்க சாதனம். வெளிமுகமாகச் செய்வது பகிரங்க சாதனம். உள்ளுக்குள்ளேயே செய்து கொள்வது அந்தரங்க சாதனம். இரண்டும் வேண்டும். இந்த மட்டத்தில் வண்டிக்காரண், சமையல்காரன் இவர்கள் வெளியிலும், தீபத்தில் திரிபோட்டுத் தருகிறவன், புஷ்பம் எடுத்துக் கொடுப்பவன் இவர்கள் பூஜைக்குப் பக்கத்திலேயே அந்தரங்கமாக இருப்பவர்கள். இரண்டு வகையினரும் இருந்தால்தான் மடம் நடக்கும். அப்படியே பகிரங்க சாதனம் அந்தரங்க சாதனம் இரண்டையும் கொண்டு மனத்தை முதலில் நல்லதில் ஒருமுகப்படுத்தி, பிறகு ஒன்றையுமே நினைக்காத நிலைக்கு வரவேண்டும்.


தான தருமம் செய்து, சந்தியாவந்தனம், யாகம், பூஜை பரோபகாரம் எல்லாம் நல்லதில் மனசைச் செலுத்தும் பகிரங்க சாதனங்கள். தியானம் என்பதே மிகச் சிறந்த அந்தரங்க நிலை. அதற்கு அநுகூலமாக இருக்கிற மற்ற அந்தரங்க சாதனங்கள் ஐந்து. அவை. அஹிம்சை, சத்தியம், அஸ்தேயம், செனசம், இந்திரி ¤ய நிக்ரஹம் என்பவை. எவருக்கும், எவற்றுக்கும் கெடுதலே எண்ணாதபடி மனசை அன்புமயமாகச் செய்து கொள்வது அஹிம்சை. மனம் வாக்கு, காயம் மூன்றையும் உண்மையிலே ஈடுபடுத்துவது சத்தியம். அஸ்தேயம் என்றால் திருடாமல் இருப்பது என்று அர்த்தம். அதாவது பிறர் பொருட்களில் ஆசையே எழாதபடி .


வைராக்கியமாக இருப்பது. செனசம் என்றால் தூய்மைப்படுத்திக் கொள்வது. ஸ்நானம், மடி, ஆச்சாரம், ஆகாராதிகளின் சுத்தி எல்லாம் செனசத்தில் அடங்கும். இந்திரிய நிக்ரஹம் என்பது புலன்களை அவற்றின் போக்கில் விடாமல் ஒவ்வொர் இந்திரியத்துக்கும் இவ்வளவுதான் ஆகாரம் கொடுப்பது என்றுநிர்ணயமாக வைத்துக் கொள்வது. கண் இதைப் பார்க்கக்கூடாது. வாய் இதைத் தின்னக்கூடாது. இதைப் பேசக்கூடாது.


வாய் தின்னக்கூடாது. இதைப் பேசக்கூடாது. உடம்பு இந்தப் பாவத்தை செய்யக்கூடாது என்று தடுத்து நிறுத்துவதே இந்திரிய நிக்ரஹம். சாதனை செய்வதற்காக மட்டுமே சரீரம் வேண்டும். சரீரம் உயிர் வாழ்வதற்காக இந்திரியங்களுக்கு எவ்வளவு அதம பட்சம் தீனி கொடுக்க வேண்டுமோ அவ்வளவே கொடுக்க வேண்டும். அந்த ஐந்தும் சாமானிய தர்மங்கள் எனப்படும் அதாவது நமது மத்த்தைச் சேர்ந்த சகல பிரிவினரும் இவற்றை அநுஷ்டிக்க வேண்டும் என்பது மநுஷ்யதர்மம்.



??????? ????????? ???????????? ????????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்

காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்


சிறிது நன்மையாவது செய்!!!


* பலனை எதிர்பார்க்காமல் உங்களால் முடிந்த நல்லதைச் செய்து கொண்டிருங்கள். பலன் கொடுக்க வேண்டியது கடவுளின் வேலை.

* நம்முடைய துன்பத்தை மலை போல நாம் பெரிதாக எண்ணிக் கொண்டிருப்பது கூடாது. நம்மால் உலகம் சிறிது நன்மை பெறும் என்று தெரிந்தாலும் கூட, அதற்காக நாம் கடுமையாகப் பாடுபட வேண்டும்.

* கருணையில் கடவுள் கடலுக்குச் சமமானவர். நதிகளைப் போல தன்னை நாடி வரும் பக்தர்களை ஏற்றுக் கொண்டு அவர் அருள்புரிகிறார்.


Source: Sage of Kanchi
 
Why is Swamigal saying thus about Lord Anjaneya in மங்களாரத்தி

Why is Swamigal saying thus about Lord Anjaneya in மங்களாரத்தி



ராமர் ஞானம் உபதேசித்தார். ஸீதை என்ன உபதேசித்தாள்? ஸீதையென்றால் யார்? ஸாக்ஷாத் தாயார்.

அதனால் ப்ரேமையை உபதேசித்தாள்! ராவண வதமானதும், ஸீதையிடம் ஸந்தோஷ ஸமாசாரம் தெரிவிப்பதற்காக ஆஞ்ஜநேயர் அசோக வனத்துக்குக் குதித்துக்கொண்டு வந்தார். ராக்ஷஸிகளைப் பார்த்ததும், ‘இத்தனை நாளாகத் தாயாரை என்ன பாடுபடுத்திக் கொண்டிருந்தார்கள்? இன்றைக்குத் தொலைத்துவிடலாம் அத்தனை பேரையும்’ என்று புறப்பட்டார். அப்போது ஸீதை அந்த ராக்ஷஸிகளுக்கும் தாயாராக உபதேசம் பண்ணினாள். “அப்பா, உசந்தவர்களின் லக்ஷணம் கருணைதான். லோகத்திலே தப்புப் பண்ணாதவர்கள் யார்? இவர்களைத் தொடாதே! இவர்கள் என்ன பண்ணுவார்கள்? ராஜ ஸேவகிகள் ராஜாக்ஞைப்படிதானே பண்ணணும்? அதனால் ராவணன் சொற்படி ஹிம்ஸித்தார்கள். இப்போது விபீஷணன் ராஜாவானால் அவன் சொற்படி நமஸ்காரம் பண்ணுவார்கள்” என்றாள்.



அன்றிலிருந்து ஆஞ்ஜநேய ஸ்வாமி ஒரே கருணையாக, அன்பாக ஆகிவிட்டார். அதற்காக, தப்பு நடந்தால் சும்மாயிருப்பாரென்று அர்த்தமில்லை, அத்யாவச்யத்திலே தண்டிக்கவும் தண்டிப்பார், ‘கோவிச்சுக்கவும் கோவிச்சுப்பார்’. இப்படி வெளியிலே இருந்தாலும் உள்ளே யாரானாலும் அவர்களிடம் பூர்ணமான அன்பு, ‘இவா நல்லவாளாகணுமே!’ என்ற கவலைதான் இருக்கும்.



ஆகையினால் நான் நிஜமாகவே உங்களைக் கோபித்துக் கொள்கிறேனென்றால் எனக்கு அவரைப் பற்றி லெகசர் அடிக்கவே அர்ஹதை (அருகதை) இல்லை என்று அர்த்தம். இப்படிச் சொன்னால்தான் தூண்டிவிடும் என்பதற்காகவே… ‘ஷாக் ட்ரீட்மென்ட்’ என்கிற மாதிரி… கொஞ்சம் ‘புஸ்’, ‘புஸ்’ என்கிறது!
கோபமே இல்லை! எங்கேயும் யாருக்கும் யாரிடமும் கோபம் வேண்டாம். சாந்தி, அன்புதான் ஸமஸ்த ப்ராணிகளிடமும் இருக்கணும். அதுதான் அவருக்குப் பிடிக்கும். ஆனால் அப்படிச் சொல்லிக் கொண்டு நல்லதெல்லாம் அழிந்து போவதைப் பார்த்துக்கொண்டு சும்மா உட்கார்ந்திருந்தால் அவர் ஸரியென்று சொல்ல மாட்டார். மனஸில் எவரிடமும் அன்பு குறையாமலே, கார்யத்தில் பண்ண வேண்டியதை முழு விழிப்போடு சுருசுரு என்று பண்ணிக் கொண்டிருந்தால்தான் ஸந்தோஷப்பட்டு எல்லா அநுக்ரஹமும் பண்ணுவார்.



முதலில் அவர்தான் இந்த அநுக்ரஹமே… நம்மைச் சுறுசுறுப்பாக்குகிற அநுக்ரஹமே… அஜாட்ய அநுக்ரஹமே பண்ணவேண்டும். அதற்கு எல்லாரும் ப்ரார்த்தனை செய்து கொள்வோம்!



மங்களம்


ஜெய் சீதாராம்

2013 January 10 « Sage of Kanchi
 
காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்

காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
Divine Thoughts


“If we walk facing the sun, shadow will follow you without you even knowing about it.
We should have a goal that is prescribed by the shasthras. If we follow the goal (you walk towards the sun), money & status will follow you (like shadow without leaving you even if you donot want it).


Instead if you turnaround and follow the shadow, you are walking against the sun .You will never be able to catch the shadow and the shadow will eventually leave you, just like money and status will leave you after some time.
What is the point of turning away from Sun, (the noble goals prescribed by Shasthras) and going behind shadow (money & status) “


Source: Sage of Kanchi

Narayanan Dharmaraj
 
சத்தியம்


சத்தியம்




சகல மக்களுக்கும் அநுசரிக்க வேண்டிய சாமானிய தர்மங்களில் முதலாவது அன்பு (அஹிம்ஸை) அடுத்தது உண்மை (சத்தியம்)


சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இருப்பதுதான். மனசில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அதுவே அசத்தியம் என்று பெரியவர்கள் லட்சணம் சொல்லியிருக்கிறார்கள்.


வாங்மனஸயோ. ஐக ரூப்யம் ஸத்யம்


மனத்தில் உள்ளதை வெளியிட்டுச் சொல்வதற்கென்றே பகவான் மனிதனுக்குப் பேசும் சக்தியைத் தந்திருக்கிறார். மனத்தில் ஒன்றும் வாக்கில்


வேறொன்றுமாக நாம் நடந்து கொண்டோமானால் அடுத்த ஜன்மத்தில் நமக்குக் கொடுத்த பேச்சுத் சக்தியைப் பறித்துக் கொண்டு விடுவார். அதாவது மிருக ஜன்மத்தையே நமக்குத் தருவார்.


பூரண அஹிம்சைக்கு நமது சாஸ்திரத்திலேயே சில விலங்குகள் இருக்கின்றன. தர்மத்துக்காக யுத்தம் செய்யும் போதும், யாகயக்ஞங்களில் பலி தருகிற போதும் அஹிம்ஸைக்கு விலக்குத் தரப்பட்டிருக்கிறது. சத்தியத்துக்கு இவ்விதமாக விலக்கே இருக்க முடியாது என்று நினைப்பீர்கள். ஆனால் சத்தியத்துக்கும் வேறொரு விதத்தில் விலக்கு இருக்கிறது. அதைக் கொஞ்சம் விளக்குகிறேன்.


ஊரிலே பலவிதமான அயோக்கியர்கள் இருக்கிறார்கள். அதைப் பார்த்து வாஸ்தவமாகவே ஒருவருடைய மனது கொதிக்கிறது. அவன் இந்தத் தப்பையெல்லாம் ஒயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறான். அவன் அந்த அயோக்கியத்தைச் செய்தான். இவன் இந்த அயோக்கியத்தனத்தைச் செய்தான் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறான். ஆனால் இவன் அப்படிச் செய்வதான் இவனுக்கும் பிரயோஜனமில்லை. ஜனங்களுக்கும் பிரயோஜனமில்லை. இப்படி வியர்த்தமாக வாக்கும் மனசும் ஒன்றுபட்டிருப்பதை சத்தியம் என்று சொல்வதற்கில்லை.


ஒருவன் மனசில் கெட்ட எண்ணங்கள் எழுகின்றன. அதை அவன் அப்படியே வாக்கிலே வெளியிடுகிறான். அது சாத்தியமாகிவிடுமா. ஆகாது.


ஆகவே சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றுபடுவது மட்டுமில்ல. நல்ல மனசிலே தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம்.


மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் பிரியமாகவும் எது இருக்கிறதோ அதுவே சத்தியம் என்பதாக சத்தியத்துக்கு ஒரு லட்சணத்தை வகுத்திருக்கிறார்கள்.



ஸத்யம் பூதஹிதம் ப்ரியம்


பேச்சினாலும் காரியத்தினாலும் எண்ணத்தினாலும் பிராணிகளுக்கு நன்மையை உண்டாக்குவதே சத்தியம். கெடுதல் செய்வதெல்லாம் அசத்தியமே.


ஒருவனுக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது. அதை அவன் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக் கடுமையாகச் சொன்னால் அதை யாறும் ஏற்கமாட்டார்கள். இவ்வாறு நிஷ்பலனாகப்போகிற நல்ல வாக்கு சத்தியமாகாது. நல்லதாகாவும் இருக்க வேண்டும். அது யாரை உத்தேசித்துச் சொல்லப்படுகிறதோ அவனுக்கு இன்பம் தரும் விதத்தில் ஹிதமாகவும் சொல்லப்பட வேண்டும். இதுவே சத்தியம்.



சத்தியத்தைச் சொல், பிரியமானதைச் சொல். சத்தியத்தைப் பிரியமாக சொல்ல முடியவில்லை என்றால், அப்போது அப்படிப்பட்ட சத்தியத்தையும் சொல்லாதே. கேட்கப் பிரியமானாலும், அசத்தியத்தைச் சொல்லாதே. என்பது பெரியவாளின் வாக்கு.


ஸ்த்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத்

ந ப்ரூயாத் ஸத்யம் அப்ரியம்
ப்ரியம் ச ந அந்ருதம் ப்ரூயாத்




காமமும் குரோதமும் உள்ள மனசிலிருந்து இப்படிப்பட்ட பிரியமான, நன்மையான வாக்கு வராது. க்ஷேமத்தையே உண்டாக்கும் சத்திய வாக்கு வரவேண்டுமானால், அதற்கு அடிப்படையாக காம, குரோதங்களற்ற நல்ல மனம் வேண்டும்.


ஆக சத்தியத்தின் லட்சணம், மனமும் வாக்கும் ஒன்று பட்டிருப்பது. மனம் சுத்தமாக இருப்பது. வாக்கு சாந்தமாக, ஹிதமாக இருப்பது. மொத்தத்தில் தனக்குச் சித்த சுத்தியையும் பிறருக்கு க்ஷேமத்தையும் உண்டு பண்ணுவது.


சத்தியத்திலேயே ஒருவன் நிலைத்து நின்று விட்டால் அதற்கு ஒர் அவாந்தரப் பிரயோஜனமும் உண்டு. அதாவது அந்த சத்தியசந்தன் உத்தேசிக்காமலே ஒரு பிரயோசனம் சித்திக்கும். அது என்னவெனில், ஒருவன் சத்தியமே பேசிப் பேசி பழகிவிட்டால் கடைசியில் அவன் எது சொன்னாலும் அது சத்தியமாகிவிடும்.

இப்படிப்பட்டவன் மனமறிந்து பொய் சொல்லவே மாட்டான். ஆனால், அறியாமையினாலோ தவறிப்போயோ அவன் ஒரு விஷடத்தைத் தப்பாகச் சொல்லி விட்டாலும், அந்தத் தப்பே கார்த்தத்தில் சத்தியமாக நடந்துவிடும். இதற்குத் திருஷ்டாந்தாரமாக ஒரு கதை சொல்கிறேன்.


திருக்கடவூரில் அபிராமி பட்டர் என்று அம்பாளின் பரம பக்தர் இருந்தார். அவர் அம்பாளையே நினைத்து பரவசமாகும்போது உன்மத்தரைப் போன்று பிதற்றுவார். இதைப் பற்றி சரபோஜி ராஜாவிடம் யாரோ துஷ்பிரயோகம் செய்தார்கள். அபிராமிபட்டர் ஒரு குடிகாரர், பக்தர் என்று வேஷம் போடுகிறார் என்று ராஜாவிடம் கோள் சொல்லிவிட்டனர். சரபோஜிக்கு இதைப் பரிசோதித்துப் பார்க்கத் தோன்றியது. ஒரு நாள் சரபோஜி திருக்கடவூரில் அம்பாளை தரிசிக்க வரும்போது, அங்கே தன்வசமிழந்திருந்த பட்டரிடம், இன்றைக்கு என்ன FF, என்று கேட்டான். அன்றைக்கு அம்மாவாஸை. பட்டரோ அம்பாளின் பூரண சந்திர முகத்தையே தியானம் செய்து பரவசமாக இருந்தார். எனவே அரசரிடம் இன்று பெனர்ணமி என்று சொல்லிவிட்டார். அரசன் தன்னிடம் மற்றவர்கள் பட்டரைப் பற்றிச் சொன்னது உண்மை என்றே நினைத்தான். பட்டரிடம் கேலியாக, அப்படியா சந்திரன் உதயமாகிவிட்டானா என்று ஆகாயத்தைப் பார்ப்போம் என்று தலையைத் தூக்கினான்.



அப்போது வாஸ்தவமாகவே ஆகாயத்தில் பூரண சந்திரன் வந்து நின்றது, அபிராமி பட்டர் சத்தியத்திலேயே ஊறியிருந்ததால், தவறிப்போய் அவர் அசத்தியத்தைச் சொன்னபோது, அம்பாளே தன் தடாங்கத்தைக் கழற்றி ஆகாயத்தில் iC, பூரண சந்திரனாக ஜொலிக்கச் செய்தாள்.



மகான்கள் செய்கிற ஆசீர்வாதம் அவர்கள் கொடுக்கிற சாபம் எல்லாம் அப்படியே பலித்து விடுவதற்குக் காரணம் அவர்களுடைய சத்தியத்தின் சக்திதான். அவர்கள் எது சொன்னாலும் நடந்துவிடும். இது சத்தியமாக
இருப்பதின் அவாந்தரப் பிரயோஜனம். ஆனால், தான் சொல்வதெல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசை கொண்டு அதன் பொருட்டாக ஒருவரும் சத்தியத்தை அநுஷ்டிக்கக்கூடாது. உத்தேசமில்லாவிட்டால்தான் இந்தச் சக்தி தானாக வருமே ஒழிய உத்தேசித்துவிட்டால் அப்புறம் அது அவாந்தரமே இல்லை.



கர்ப்பமாக நாம் தாயாரிடம் வைக்கப்படுவதிலிருந்து, கடைசீயில் தகனமாகிற வரையில் நம்மை சுத்தப்படுத்த சாஸ்திரங்களில் நாற்பது ஸம்ஸ்காரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றது. அவற்றோடு, அஹிம்ஸை, சத்தியம், அஸ்தேயம், செனசம், இந்திரிய நிக்ரஹம் இவையும் நம்மால் அநுஷ்டிக்கப்பட்டால், நம் அழுக்குகள் எல்லாம்போய் நாம் உண்மையில் யார்?, ஸ்வாமி என்பவர் யார்?, பரம சத்தியம் என்பது என்ன?என்பதை எல்லாம் அறிகிற பக்குவம் உண்டாகும். பிறர் பொருள் மீது ஆசைப்படாமலிருப்பதே அஸ்தேயம். செனசம் என்பது சுசி என்பதிலிருந்து வந்தது.

சுசி என்றால் சுத்தம். வெளியே சுத்தமாக தூய்மையாக, ஆச்சாரமாக இருந்தால் அதுவே உள்தூய்மைக்கு உபகாரம் செய்யும். நீராடுவது மற்றபடி ஆச்சாரங்கள் செனசத்தின் கீழ் வரும். இந்திரிய நிக்ரஹம் என்பது ரொம்பவும் முக்கியம். சரீர சந்தோஷத்துக்காக எதையும் செய்வது, எதை வேண்டுமானாலும் பார்ப்பது, எதை வேண்டுமானாலும் கேட்பது, எதை வேண்டுமானாலும் தின்னுவது, எதை வேண்டுமானாலும் பேசுவது என்றில்லாமல், இவற்றையெல்லாம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது இந்திரிய நிக்ரஹம் - புலனடக்கம் அதாவது யாராக இருந்தாலும் ஆசையைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆசை போகாமல் எந்த ஆத்ம சம்பத்தும் உண்டாகாது. இங்கே சொன்னதெல்லாம் சகல ஜனங்களுக்குமான சாமானிய தர்மங்கள்.

???????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
கோலம் அரிசி மாவாலே தான் போடணும்

கோலம் அரிசி மாவாலே தான் போடணும்


சின்ன காஞ்சீபுரத்தில் இருக்கும் போதெல்லாம் வரதராஜபெருமாள் கோவிலில் பிரதஷணம் செய்வது, தவறாத கடமை, பெரியவாளுக்கு.

ஒரு விடியற்காலை பொழுதில், கோவிலில் பிரதஷணம் செய்துவிட்டு, பக்தர்கள் எல்லாம் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்து கொண்டு உடன் வர, தெருவில் நடந்து வந்தார்கள், பெரியவா.

ஒரு வீட்டின் வாசலில், ஒரு பெண் குழந்தை கோலம் போட்டு கொண்டிருந்தது.

பெரியவா நின்றார்கள்.

' கோலம் நன்னாப் போடறியே ! பேஷ் ! ஆனா, கோலம் அரிசி மாவாலே தான் போடணும். அப்போ தான் ஈ, எறும்பு, பட்சியெல்லாம் அரிசி மாவை சாப்பிடும்; கோலம் போட்ட உன்னை சந்தோஷமா பார்க்கும். மொக்குமாவாலே போட்டால் அது எந்த ஜந்துவுக்கும் உபயோகபடாது இல்லையா?'

பெண் குழந்தை அழகாக தலையை ஆட்டிவிட்டு நமஸ்காரம் செய்தது.

பெரியவாளின் இந்த அறிவுரை, அந்த குழந்தைக்கு மட்டும் தானா? இல்லை, எல்லா குழந்தைகளுக்குமா?

தாயார்கள் யோசிக்கட்டும்...
 
யார் துறவி? எது துறவு?

யார் துறவி? எது துறவு?



‘யார் துறவி? எது துறவு?’ என்கிற கேள்விக்கு இலக்கணமாக, பெரியவர் திகழ்ந்த ஒரு அரிய சம்பவம் …

பெரியவர் அறுபது வயதை தொட்டிருந்த சமயம். பக்தர்கள் அவருக்கு தங்க கிரீடம் சூட்டி கௌரவிக்க எண்ணினார்கள்.


ஆந்திர மாநிலம், விஜய வாடாவில் பெரியவரின் இந்த வைபவத்தை ஒட்டி ஒரு தங்க கீரீடமும், இரண்டு லட்ச ரூபாய் காணிக்கையும் வழங்க தீர்மானித்திருந்தனர்.

இதுபற்றிய தகவல் பெரியவரை அணுகவுமே, அதற்கான வசூலை தடுத்துவிட்டார் பெரியவர். அவ்வேளையில் அவர் சொன்னதுதான் “யார் துறவி – எது துறவு” என்பதற்கு இலக்கணம்!



ஸ்தாபன பலம் என்று ஒன்று மிதமிஞ்சி ஏற்பட்டுவிட்டாலே, அதன் அதிபதியனாவன் ஆத்ம பலம் சம்பாதிக்க சிரமப்பட வேண்டியதில்லை என்னும் ஆபத்து ஏற்பட்டுவிடுகிறது. சன்னியாசி என்பவனை, ஒரு உடைமையுமில்லாத ஏகாங்கியாக, அவன் தன் ஊர் என்று சொல்லிக்கொள்வதற்குக்கூட, ஒரு இடம் இருக்க வேண்டாமென்று, சதா ஊர்ஊராக சஞ்சாரம் பண்ணும்படிதான் சாஸ்திரம் கூறியுள்ளது.



இருந்தும், சமூகத்துக்கு வழிகாட்ட ஒரு அமைப்பு தேவைப்பட்டு அதுதான் மடம் என்றானது. இதை ஒரு தவிர்க்க முடியாத தீமை (Necessary evil) என்றுதான் கூற வேண்டும்.தவிர்க்க முடியாத இந்தத் தீமையை நன்மையாக மாற்றிக்காட்டும் கடமையே சன்னியாசியின் கடமை. இந்தக் கடமையின் போது, அவனது ஆன்ம தபோ பலத்தைவிட, பணத்தின் பலம் பெரிதாகி விடாமல் அவன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

காஞ்சிமடம் அவசியச் செலவுக்கே கஷ்டப்பட்ட காலம் உண்டு. ஆனால் சந்திரமௌலீஸ்வரர் கருணையாலே அந்த கஷ்டம் நீங்கியது. இந்த மாதிரி கஷ்டங்களை ஈஸ்வர சோதனையாகவே கருதினேன். உத்தமமா பார்த்துக்கொள்வது அவன்தான்; பணமல்ல.எனவே, எப்போதும் Nil Balanceலேயே மடம் இருக்கும்படி ஜாக்ரதையாக நிர்வகித்து வருகிறேன். இன்று இரண்டு லட்சம் என்று சர்ப்ளஸ்ஸில் போகப் பார்த்தது. இதற்கு ‘ப்ளஸ்’ கூடாது என்று கருதுகிறேன். ஸ்வாமிவாரு தடுத்து விட்டாரே என வருத்தப்படவேண்டாம். பணத்தை வாங்கிக்கொண்டு, நான் பண்ணுவது ஆசீர்வாதமாக இருக்காது. அதற்காக பணமே வேண்டாம் என்று கூறவில்லை. நெருக்கடி ஏற்படும்போது, உங்களிடம்தான் பிட்சை கேட்டு நிற்பேன். தேவைக்குத்தான் பணம். சன்னியாசிக்கு பணத்தைவிட ஆத்மபலம்தான் பெரும் பணம்…!’



….. இந்திரா-செளந்தர்ராஜன்

நன்றி: “தீபம்” (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

Thanks Shri Harekrishna
 
ஆடை விஷயம்…

ஆடை விஷயம்…



பெண்மையை ரக்ஷிப்பதில் ஒரு முக்யமான அம்சத்தைச் சொல்ல வேண்டும். இது என் மனஸை ரொம்பவும் ஸங்கடப்படுத்தி வருகிற விஷயம். இப்படியொரு விஷயம் நான் வாய்விட்டுச் சொல்லும்படி ஆகியிருப்பதே அவமானமாக இருக்கிறது. ஆனாலும், ஜன ஸமூஹம் கொஞ்சங்கூட ஆக்ஷேபிக்காமல் –

ஆக்ஷேபிக்காததோடு ஆதரவு கொடுத்தும் – ஒரு பரம தோஷமான விஷயம் நடக்கிறபோது, அது தோஷமானது என்று எனக்குத் தெரிந்தும், என்னால் முடிந்தது, அதை எடுத்துக்காட்டும் கார்யம்; அதைக் கூட நான் பண்ணவில்லை என்றால் அதுவே மஹா பெரிய தோஷம் என்பதால்தான் சொல்கிறேன்.



நடை, உடை, பாவனை ஆகிய எல்லாவற்றிலும் ஸ்த்ரீகளும் பெளருஷக் கோலம் போட்டுக் கொள்வதில் உடை என்கிற மையமான விஷயைந்தான். ‘ஆள்பாதி, ஆடை பாதி’ என்று வசனம் சொல்கிற அளவுக்கு அது முக்யமான விஷயம்.


பெண் குழந்தைகள் வயஸுக்கு வருகிறதற்கு முந்தியே, பெண்மையின் ஒரு முக்ய அங்கமான லஜ்ஜை (வெட்கம்) என்பதைக் கட்டிக் காப்பாற்றுவதற்காக அவர்களுக்குப் பாவாடைக்கு மேலே சட்டை மட்டுமில்லாமல் தாவணி என்று ஒரு மேலாக்குப் போட்டுக் கொள்ளக் கற்றுக் கொடுத்து அப்படியேதான் தலைமுறை, தலைமுறையாக நடந்து வைந்திருக்கிறது. அப்புறம் இரண்டொரு வருஷத்திலேயே முழுப் புடைவையாக உடுத்துவது வழக்கமாக இருந்து வைந்திருக்கிறது. பெண்மைக்கு ப்ரதானமான லஜ்ஜைக்குப் பரம ரக்ஷையாக இருந்து வந்திருக்கிற அந்த உடைக்கு இப்போது ஆபத்து வந்திருக்கிறது.



எனக்குத்தான் சொல்ல லஜ்ஜையாக இருக்கிறதே தவிர, அப்படித்தான் பண்ண வேண்டுமென்றே இப்போது ஸ்த்ரீகள் ஆரம்பித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.


கொஞ்ச நாள் முன்னாடி என்னைப் பார்க்க இரண்டு காலேஜ் பெண்கள் வந்திருந்தார்கள். பவ்யமாகத்தான் வந்து நமஸ்காரம் பண்ணிவிட்டுப் போனார்கள். ஆனால் அவர்கள் புடைவை கட்டிக் கொள்ளாமல் புருஷர்களின் பைஜாமா-ஜிப்பா மாதிரியே போட்டுக்கொண்டிருந்ததுதான் எனக்கு என்னவோ போல் இருந்தது.

N.C.C மாதிரி ஏதாவது பயிற்சி முகாமுக்காக இங்கே (காஞ்சீபுரத்துக்கு) வந்துவிட்டு, அப்படியே அந்த ட்ரெஸ்ஸிலேயே என்னைப் பார்க்க வந்திருப்பார்கள் போலிருக்கிறது என்றுதான் நினைத்தேன். அப்புறந்தான் தெரிந்தது – N.C.C யும் இல்லை, ஒன்றும் இல்லை; இப்போது இந்த ட்ரெஸ்தான் கல்யாணம் ஆகிற வரையில் இளம் பெண்களின் ட் ரெஸ்ஸாக ஆகிக்கொண்டு வருகிறது என்று, தாவணி வழக்கமும் போய்க் கொண்டிருக்கிறது என்றும் தெரிந்தது, எனக்குப் பெரிய ‘ஷாக்’.







ஏன் ‘ஷாக்’ என்றால், இந்த ஆடை விஷயத்தில் நம்முடைய தேசத்துக்கு என்று
ஏற்பட்ட நாகரிக முறையை, ‘ட்ரெடிஷ’னை ஸ்த்ரீகள்தான் இதுவரை விடாமல் காப்பாற்றிக் கொடுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். நாலு தலைமுறைக்கு முன்னாலிருந்தே புருஷர்கள் வெள்ளைக்கார உடுப்புப் போட்டுக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் ஸ்த்ரீகள் அப்படிப் போகவில்லை, ஃபோட்டோக்களில் புருஷன் ஸூட்-கோட் போட்டுக் கொண்டிருந்தபோதிலும், பக்கத்தில் நிற்கிற பெண்டாட்டி கொசுவன் புடவை, அல்லது தங்கள் ஜாதிக்கான புடவைதான் கட்டிக்கொண்டு நிற்பதாகப் பார்த்திருக்கிறேன்.



இப்போது நடக்கிற அளவுக்கு இல்லாவிட்டாலும் ஸ்த்ரீகள் காலேஜ் படிப்பது, உத்யோகம் பார்ப்பது, வேறே பல துறைகளில் ஈடுபடுவது, அன்நிய தேசங்களுக்குப் போய்வருவது ஆகியன எல்லாம் முன்னேயும்தான் இருந்திருக்கிறது. கார் ட்ரைவ் பண்ணுவது, ஸைக்கிள் ஒட்டுவது எல்லாமும் கூட ரொம்ப நாளாகவே – அபூர்வமாகத்தான் என்றாலும் – ஸ்த்ரீகளும் பண்ணிக் கொண்டுதான் வந்திருக்கிறார்கள். இப்படிப் பல தினுஸில் வியாபகமாகப் போனாலும் அப்போதும் புடைவை கட்டிக் கொள்கிற பழக்கத்தை விடவில்லை. நர்ஸ்கள்தான் விதிவிலக்கு. அதுவும் ஆஸ்பத்திச் சட்டத்துக்காகவே தவிர அவர்களாகப் ப்ரியப்பட்டுச் செய்ததில்லை.



புருஷர்கள் விஷயம் தேசத்துக்கு ஸ்வதந்தரம் வந்த பிற்பாடு, நாளாக ஆக, முன்னைவிட வெள்ளைக்கார மோஸ்தரில் போவதாக ஆகிவந்திருக்கிறது. வெள்ளைக்காரன் ஆட்சியில் வேஷ்டி கட்டிக் கொண்டிருந்தவர்கள்கூட, அவனிடமிருந்து விடுதலை பெற்றபின் அவனுடைய ட்ரெஸ்ஸை மாட்டிக்கொள்ள ஆரம்பித்து அப்படியே போய்ப் போய், வெளி அலுவலின்போது மட்டுமே இங்க்லீஷ் ட்ரெஸ் என்பதுபோய் வீட்டிலுமே கூட அதுதான்; இல்லாவிட்டால் துருக்கன் பாணியில் கைலி-லுங்கி என்று ஆகியிருக்கிறது.


இத்தனை பெரிய புராதனமான நாகரிக தேசத்துக்கு, அதற்கென ஒரு தேசிய உடை – National Dress – இல்லாமல், பிறத்தியான் உடுப்பே நமக்கு உடுப்பாயிருப்பது நமக்கு மானக் குறைவு. ஸ்த்ரீகள்தான் இந்த குறைக்கு இடம் தராமல், ஸ்வதந்திரம் வந்து பல வருஷமாகிற மட்டும் பழைய முறையிலேயே உடுத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள். அது பெரிய ஆறுதலாகவும் நம்பிக்கையாகவும் இருந்தது. இப்போது அதற்கும் உலை வைத்தாகிவிட்டது என்கிறபோதுதான் பெரிய ஷாக்காக அடித்துவிட்டது.



நான் ஸ்வாமிகளானதிலிருந்து எத்தனையோ தடவை ஷாக்கிங் ஸமாசாரங்கள் கேட்டிருக்கிறேன். அந்த எல்லாவற்றையும் சேர்த்து வைத்து இந்த ‘ஷாக்’.



நான் ப்ரமாதமாக தர்மோத்தாரணம் பண்ணுவதாகப் பத்ரிகைகளெல்லாம் எழுதுகின்றன. வருஷா வருஷம் ஜயந்தி என்று அங்கங்கே உத்ஸவம் பண்ணி நான் எப்படி தர்மத்துக்கு மறுமலர்ச்சி உண்டாக்கியிருக்கிறேன் என்று ஸ்தோத்ரிக்கிறார்கள். எனக்கானால் இதெல்லாம் நான் செய்யத் தவறியதைக் குத்திக் காட்டுவதாகவே தோன்றுகிறது. ‘கிழக் கோட்டான் மாதிரி தொண்ணூறாவது ஜயந்தி வரை கொண்டாட்டம் அடிக்கிறாயே!


ஜயந்தி கொண்டாடிக் கொள்ள உனக்கு என்ன ‘ரைட்’? மேலே மேலே ஒவ்வொரு வருஷமும் தர்மங்களை வாரி விட்டுக் கொண்டிருக்கிறாயே! நீ பட்டத்துக்கு வந்ததிலிருந்து ஸநாதன தர்மம் மேலும் மேலும் எவ்வளவு பங்கப்பட்டுக் கொண்டு வந்திருக்கிறது? ஜகத்குரு பட்டம் பெரிதாக சூட்டிக் கொண்டிருக்கிற உனக்கு ஜகத்தை தர்மத்தில் நிலை நிறுத்துகிற சக்தி – தபோ சக்தி, பக்தி சக்தி எதுவோ ஒன்று – கொஞ்சமாவது இருந்தால் இப்படி ஆகிக்கொண்டு வந்திருக்குமா? இருப்பதைக் காப்பாற்றிக் கொடுக்கக்கூடத் துப்பு இல்லாமல் வருஷா வருஷம், நாளுக்கு நாள் தர்மங்களை வாரிக் கொடுத்துக் கொண்டுதானே இருக்கிறாய்?’ என்பதை எனக்கு சவுக்கடியாக ஞாபக மூட்டுவதாகத்தான் இந்த ஜயந்தி விழாக்கள், புகழ் மாலைகள் எல்லாம் இருக்கின்றன. (I think only our Periyava in this world would do a self-criticism like this!)



இப்படி நான் கண்ணெதிரில் கொள்ளை கொடுத்த தர்மங்களில் நம்முடைய ஸ்த்ரீகள் புடைவை வேண்டாமென்று தள்ளி, ஆண்பிள்ளை ட்ரெஸ் மாதிரி ஒன்றை மாட்டிக்கொள்ள ஆரம்பித்திருப்பதுதான் பெரிய கொள்ளையாக ‘ஷாக்’ அடித்தது.

2014 July 05 « Sage of Kanchi
 
"என்கிட்ட கன்சல்டேஷனுக்கு வந்திருக்கி&#29

"என்கிட்ட கன்சல்டேஷனுக்கு வந்திருக்கியா? இல்லை, பர்மிஷியன் கேட்க வந்திருக்கியா?"


"பக்கத்துக்கு வீட்டுக்காரர் ரொம்பவும் தொல்லை கொடுக்கிறார். போலீஸில் புகார் கொடுக்க போகிறேன்.."

ஸ்ரீமடத்தின் நீண்டகால பக்தர் அவர்.

பெரியவாள் அவரை உற்று பார்த்தார்கள்.

"என்கிட்ட கன்சல்டேஷனுக்கு வந்திருக்கியா? இல்லை, பர்மிஷியன் கேட்க வந்திருக்கியா?"


பக்தர் கலங்கி போய்விட்டார். பெரியவாள் இப்படி பளிச்சென்று கேட்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

"ஹி ... வந்து...எப்படி உத்திரவாகிறதோ அப்படி..." என்று இழுத்தார்.

"உலகத்தில் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனால், எல்லோரிடமும் விரோதம் கொள்ள முடியுமா? விரோதத்தை வளர்த்து கொண்டால் கொஞ்சநஞ்சம் சாந்தியும் போயிடும்.. பக்கத்துக்கு வீட்டுக்காரனை எதிர்த்து இரைச்சல் போடாதே. கஷ்டத்தை பொறுத்துண்டு பேசாமல் இரு. தோற்று போயிட்டோமோ என்ற எண்ணம் வரும். தோற்று போனால் தான் என்ன..? அவன் நாளைடைவில் அடங்கி போயிடுவான். இவன் கையாலாகாதவன் என்று விட்டுவிடுவான்... தேவைபட்டால் அவனுக்கு உதவி செய். தானாகவே திருந்திடுவான்..."

பக்தர் "உத்திரவு" என்று சொல்லி, பெரியவாள் அறிவுரையை ஏற்றுக்கொண்டு போனார்.

பகைமையை - அண்டை அயலாருடன் விரோதத்தை - வளரவிடகூடாது. இது, பெரியவாளின் தீர்மானமான கொள்கை .
 
தூங்கும் முன் சிந்தனைசெய்

* சேதுவில் அணை கட்டிய ராமனுக்கு அணில் செய்த உதவிபோல், நாமும் ஏதாவது ஒரு திருப்பணியில் ஈடுபட்டுத் தர்மம் செய்ய வேண்டும்.

* ஆசிரியர் கடமைக்கு கல்வி கற்று தராமல், மாணவனை சோதித்து சுத்தம் செய்து, நற்குணம் உள்ளவனாக, புத்தியுள்ளவனாக மாற்ற வேண்டும்.

* அரசை எதிர்பார்த்து குறை கூறி கொண்டு இருக்காமல், நாட்டின் மீது பற்றுள்ள மக்கள் சமுதாயத்திற்கு தங்களால் முடிந்த நன்மைகளில் ஈடுபட வேண்டும்.

* ஆனந்தமாக இருப்பதற்கு எப்போதும் உண்மையாக இருக்கும் கடவுளை பிடித்துக் கொள்ள வேண்டும். உலகத்துக்குச் சேவை செய்தால் சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி ஏற்படும்.

* வாழ்க்கையில் நம்முடைய துன்பத்தையே நாம் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது, நம்மால் உலகம் மேம்படும் என்று தெரிந்தால் அதற்காக நாம் பாடுபட வேண்டும்.

* தினமும் தூங்கச் செல்லும் முன் அன்றைய நாளில் நீ செய்த நல்லவை, கெட்டவைகளை எண்ணிப்பார்த்துவிட்டு, இறைவனின் நாமத்தை 108 முறை உச்சரித்துவிட்டு பின்பு தூங்க வேண்டும்.

* எந்த பணியில் இருந்து கொண்டிருந்தாலும் சரி, மனதில் இறைச் சிந்தனை மட்டுமே இருப்பது அவசியம்.


* மனிதன் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே போவது நல்லதல்ல. அது பேராசையில் நம்மைத் தள்ளி விடும்.



-காஞ்சி பெரியவா


Source: Sage of Kanchi
 
Last edited:
அம்பாளின் ஸ்வரூபம்

அம்பாளின் ஸ்வரூபம்


நீதான் பரமேசுவரன் சரீரம் என்று ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் அம்பிகையைப் பார்த்துச் சொல்கிறார். சரீரத்திற்குள் உயிர் இருக்கிறது. பல சரீரத்துக்குள் பல சரீரங்கள் இருக்கின்றன. இத்தனை உயிர்களுக்கெல்லாமும் உயிராக ஒரே மூல வஸ்துதான் இருக்கிறது. அந்த மூல வஸ்துவான பிரம்மம்தான் பரமேசுவரன் என்றால், அதன் இத்தனை தோற்றங்களுமே பராசக்தி. இது அவ்வளவும் அதற்குச் சரீரமாகவும், அது இவற்றுக்குப் பிராண வாயுவாகவும் இருக்கிறது. பிரபஞ்சம், அதிலுள்ள ஜீவராசிகள் அவற்றின் மனசு, புத்தி, சித்தம், அகங்காரம் எல்லாம் பரமேசுவரன் என்ற உயிருக்குச் சரீரம் மாதிரி. இது அத்தனைம் சாக்ஷ£த் அம்பாள்தான். உடலும் உயிரும் மாதிரி பிரம்மமும் பிரம்ம சக்தியும் பிரியாமல் இருக்கின்றன.

உடலில் எல்லா இடங்களிலும் உயிர் ஒடுகிற மாதிரி பராசக்திக்குள் முழுக்க பிரம்ம தத்வமேதான் நிறைந்திருக்கிறது. அந்த பிரம்மத்துக்கே ஒர் உடம்பு கொடுத்துப் பரமேசுவரன் என்று வைத்தால், அந்த உடம்புக்குச் சாத்திய கவசமாக இருக்கிறவள் அம்பாள். கர்ணகவசம் மாதிரி, பிரிக்கவே முடியாத கவசம்.



அம்பாள் பரமேசுவரனோடு பிரிக்க முடியாமல் கலந்திருப்பதைத்தான் ஒரு மாதிரியாக, இவள் பாதி - அவர் பாதியாக ஒன்று சேர்ந்ததுபோல் அர்த்தநாரீசுவர ஸ்வரூபத்தில் பார்க்கிறோம். சொல்லும் பொருளும் போல் ஈசுவரனும் அம்பிகையும் பிரிக்க முடியாமல் ஐக்கியமாயிருக்கிறார்கள் வாக் அர்த்தாவிவ என்று மகாகவி காளிதாஸர் சொல்கிறார். நான் பசு என்று சொன்னால் அது 'ப' என்கிற ஒரு சப்தமும் 'சு' என்கிற ஒரு சத்தமும்தான். சொல்லின் சத்தத்திலோ எழுத்திலோ அந்த மிருகம் எங்கே இருக்கிறது என்று கேட்டால் எப்படிச் சொல்வது? எப்படியிருக்கிறது, என்று கேட்டால் எப்படிச் சொல்வது? எப்படியிருக்கிறது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனாலும் இந்த வார்த்தையைச் சொன்னவுடன் பசுவின் நினைப்பு உண்டாகிறது.

வாக்கும், அர்த்தமும் பிரிக்க முடியாதபடி இருக்கின்றன. இப்படித்தான் பிரபஞ்சத்தில் ஜீவராசிகளில் அவற்றின் எண்ணங்கள் காரியங்கள் ஆகியவற்றில் பிரம்மம் எங்கே எப்படி இருக்கிறது என்று தெரியாவிட்டாலும் இவை எல்லாம் சொல் என்றால் பொருளாக அந்த மூலப்பொருள் இருக்கிறது.



அம்பாளுடைய ஸ்வரூபம் என்ன என்றால் நாம் பார்க்கிற அத்தனை உருவங்களும்தான். உருவங்கள் மட்டுமில்லை. எண்ணங்கள், காரியங்கள் எல்லாமும் அவள்தான். அவளின்றி நம் சரீரம், மனசு, உயிர் எதுவுமில்லை. சரீரம் த்வம் சம்போ. c பரமேசுவரனின் சரீரமாயிருக்கிறாய் என்று சௌந்தரிய லஹரியில் சொல்கிற ஆசாரியாள் அடுத்த ஸ்லோகத்தில் நீதான் சூக்ஷ்மமான மனதாய் இருக்கிறாய் என்கிறார். அந்த மூலமான மனஸிலிருந்து, சூக்ஷ்மமான ஆகாசம் உண்டாகிறது. அது மேலும் மேலும் ஸ்தூலமாகி, காற்று, அக்னி, ஜலம், மண் எல்லாம் வந்தன. இதெல்லாமும் நீதான் என்கிறார். c இல்லாமல் வேறு வஸ்து எதுவுமே இல்லை என்கிறார். த்வயி பரிணதாயாம் நஹி பரம்.



சம்பு என்ற உயிருக்கு சரீரம் என்று சொன்னாலும், உயிர், உடல் என்ற பேதமில்லாமல் ஒன்றாக இருந்ததும் நீதான். நீயேதான் விசுவம் என்கிற சரீரமாகப் பரிணமித்தாய் என்கிறார். த்வம் ஏவ ஸ்வாத்மானம் பரிணமயிதும் விச்வ வபுஷா.



இங்கே நம் சங்கராச்சாரியார் சொல்வது, உலகம் எல்லாம் பரமாத்மாவுக்கு சரீரம். உள்ளேயிருக்கிற உயிர், அந்தர்யாமி அவரே என்கிற ராமாநுஜ சித்தாந்தம் மாதிரி இருக்கிறது. ஆனால் அப்போதுகூட உடம்பு, உயிர் என்ற வித்தியாசம் துவைதம் மாதிரி சொன்னவர் தொடர்ந்து அத்வைதத்தையே சொல்கிறார். எங்களிடம் இருக்கிற துளித் துளி ஞானத்துக்கும் ஆனந்தத்துக்கும் மூலமான பரம ஞானமும், பரமானந்தமும் நீதான்.


இந்த ஞானத்தையும் ஆனந்தத்தையும் அநுபவிப்பதற்கே ஒன்றாக இருந்தவள், இரண்டு மாதிரி ஆகி சிவயுக்தி என்ற பாவத்தைத் தாங்கியிருக்கிறாய் என்கிறார். இது பாவம்தான். வாஸ்தவத்தில் விச்வ சரீரமும் அதன் உயிரான அம்பாளும் ஒன்றுதான். அந்த அம்பாளும் யாருக்கு சரீரம் மாதிரி இருக்கிறாளோ அந்த சம்புவும் அவளும்கூட ஒனறுதான். அத்வைதம்தான்.



ஒன்று எங்கேயும் இருக்கிறது என்றால், அதற்குத் தனி உருவம் எப்படி இருக்க முடியும்? காற்று அநேகமாக எங்கேயும் செல்ல முடிகிறது. அதற்கு ரூபம் இருக்கிறதோ? அம்பாளோ அதைவிட சூக்ஷ்மம். காற்று இல்லாத சூனியத்தை (vaccum) கூட உண்டாக்குகிறார்கள். ஆனால் அவள் இல்லாத இடம் இல்லை. மனசு, எண்ணம் இதற்குள்ளும் இருக்கிறாள். அப்படியானால் அவளுக்கு எப்படி உருவம் இருக்க முடியும்? ஆனால் இது நம் சாமானிய நிலையில் மனசுக்கு ஹிதமாக இல்லை. அவளிடமிருந்து நாம் வந்தோம் என்பதால் அவள் அம்மாவும் நாம் குழந்தைகளும் மாதிரி. அம்மா ஒருத்தி இருக்கிறாள் என்று குழந்தைக்குத் தெரிந்து விட்டால் மட்டும் சந்தோஷப்படுமா? அவள் இருந்தால் மட்டும் போதாது. அவளைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும் என்று ஆசைப்படும்.



எவள் எல்லா ரூபமாகவும் இருக்கிறாள் என்று நம்மால் உணர் முடியவில்லை. அருவமாகவே நாம் அவளைத் தியானிக்க நமக்குப் பக்குவம் இல்லை. இப்படிப்பட்ட நமக்காகவே, நாம் அன்பு செய்வதற்காகவே, அவள் இப்போது காருண்யமும் லாவண்யமும் ஒரு ரூபமாகித் திவ்விய மங்கள விக்கிரகமாக வருகிறாள். ரூபமில்லாத நெய்யை நன்றாகக் குளிர வைத்தால் பாளம் பாளமாகப் பெயர்த்து எடுக்கிற மாதிரி கெட்டிப்பட்டுப் போகிறது அல்லவா? இப்படித்தான் க்ருத காடின்யவத் என்கிற நியாயப்படி, பக்தர்களுடைய நெஞ்சின் குளிர்ச்சியில் பரம சூக்ஷ்மமான அம்பிகை உறைந்து போய், ஸ்தூலமான பல திவ்விய ரூபங்களை எடுத்துக் கொள்கிறாள்.



அம்பாளுடைய அப்படிப்பட்ட ரூபம் எப்படி இருக்கும். சாதாரணமாக, பத்துப் பேருக்கு, நூறு பேருக்கு அன்னதானம் செய்கிற ஒரு நல்ல ஜீவனின் முகத்தைப் பார்த்தால், அதில் எத்தனை அன்பு சொட்டுகிறது? அன்னதானம் செய்து, பலர் வயிறாரச் சாப்பிட்டு சந்தோஷப்படுகிறபோது, அந்த அன்னதாதாவின் சந்தோஷத்தைப் பாருங்கள். அந்த சந்தோஷத்தில் அவன் முகத்தில் எவ்வளவு அன்பு சொட்டுகிறது. சாப்பிடுகிறவனைவிட சாப்பாடு போட்டவனுக்குத்தான் ஆனந்தம் அதிகம் இருக்கிறது. ஒரு பத்து பேர் அல்லது நூறு பேருக்கு மட்டும் ஒரே ஒரு வேளை சோறு போடுகிறவனுடமே இத்தனை அன்பும் ஆனந்தமும் இருக்கின்றன.

மகா பாபங்களைச் செய்து, காரியத்தில் செய்யாவிட்டாலும், மனஸினால் மகா பாபங்களை நினைத்து, ஒரு வேளை சோறு கிடைக்கக்கூட யோக்கியதை இல்லாத நம் இத்தனை பேருக்கும் கோடாநு கோடி ஜீவன்களுக்கும், கல்பகோடி காலமாக சோறு போட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தி அன்ன பூரணேசுவரியான அம்பாள்தான். அவளுடைய அன்பையும், அதனால் உண்டான ஆனந்த ஸ்வரூபத்தையும் நம்மால் கற்பனை செய்கூடப் பார்க்க முடியாது. அம்பாள் ஸெளந்தரியஸ்வரூபம் என்கிறார்கள். அவளைப் பற்றி ஸெளந்தரிய லஹரி என்றே ஆச்சாரியாள் ஸ்தோத்திரம் செய்திருக்கிறார். இத்தனை ஸெளந்தரியம், லாவண்யம் அவளுக்கு எப்படி வந்தது என்றால் அன்புதான் அழகாகிறது.

காருண்யம்தான் லாவண்யம். பாக்கி சரீர அழகு ஒர் அழகல்ல. கொஞ்சம் கோபம் வந்தால், துளி ஜுரம் வந்தால், சரீர அழகு போய்விடுகிறது. அம்பாளோ நிரந்தரமான கருணாமூர்த்தியாக எப்போதும் லாவண்யமாக இருக்கிறாள். எந்த பக்தருக்கு அந்த ரூபத்தில் மனசு ஈடுபடுமோ, அந்த ரூபத்தில் வந்து அருள் செய்வதற்காகப் பல ரூபங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாள். ராஜராஜேசுவரி, புவனேசுவரி, துர்க்கை, காளி என்று இப்படி ஸெளம்யமாகவும் உக்ரமாகவும் பல தினுசில் அவளை ஆராதிக்க வேறு வேறு ரூபம் கொள்கிறாள்.



ஒவ்வொரு ரூபத்தையும் பிரத்யக்ஷமாகத் தரிசனம் செய்ய வேண்டுமானால், அதற்கு உபயமாக ஒவ்வொரு மந்திரம் இருக்கிறது. மந்திரம் என்பது ஒரு சப்தக் கோவை அக்ஷரங்களின் கூட்டம். பல வடிவங்களில் இருக்கிற அம்பாளே பல சப்தங்களாகவும், அக்ஷரங்களாகவும் இருக்கிறாள். அவளுடைய அநுக்கிரகத்தால் மகா கவியாகப் பரிணமித்த காளிதாஸர் அவளை ஸர்வ வர்ணாத்மிகே, ஸர்வ மந்த்ராத்மிகே என்று 'சியாமளா தண்டகத்தில்'ஸ்துதி செய்கிறார். வர்ணம் என்றால் நிறம் என்று நினைப்பீர்கள்.

வர்ணம் என்றால் அக்ஷரம் என்று அர்த்தம். ஒலி வடிவான அக்ஷரங்களும், ஒளி வடிவமான ரூபங்களும் ஒரே மூலத்திலிருந்து வந்தவைதான். அவை ஒன்றுக்கொன்று நிரம்ப நெருக்கமான சம்பந்தம் உடையவை. ஸயன்ஸ் நிபுணர்கள்கூட இந்த ஒற்றுமையைச் சொல்கிறார்கள். ஜலக்கரையில் பலவிதமான சப்தங்களை எழுப்பிப் பார்த்தார்கள். அப்போது அவற்றின் அதிர்வுகளைப் (vibration) பொறுத்து ஜலத்தின் மேலே மிதக்கிற லேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்தன. நாதத்துக்கே ரூபம் கொடுக்கற சக்தி இருக்கிறது என்று இதனால் தெரிகிறது.



ஒரு பெரிய அலை மடிந்து மடிந்து சிறு சிறு அலைகளாகி அடங்குகிற மாதிரிச் சில சப்தங்கள் இருக்கின்றன. இதை வீசிதரங்கம் என்பார்கள். ஒரே கொப்புளிப்பில் பலவாகத் தெறிப்பதுபோல் விழுகிற சப்தங்களை முகுளம் என்பார்கள். இப்படிப் பலவகைப்பட்ட சப்தங்களையெல்லாம் ஐம்பத்தொரு அக்ஷரங்களாகப் பிரித்திருக்கிறார்கள். இவற்றுக்குப் பெயர் மாத்ருகா என்பது .


மாத்ரு என்றால் தாயார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சப்தமாகவும், எழுத்தாகவும் அம்பாள் இருக்கிறாள். இவற்றில் சில சப்தக் கோவைகளை விடாமல் ஜபிக்கும்போது, அவற்றுக்குறிய ரூபங்களும் பிரத்யக்ஷமாகின்றன. இப்படிப்பட்ட சப்தக் கோவைகளைத்தான் மந்திரம் என்கிறோம். மந்திரமே அம்பாளின் ஸ்வரூபம்தான். கை கால் முதலான அவயங்களோடு ஆயுதங்களைத் தரித்த வடிவங்களைப் போலவே எல்லா மந்திரங்களும் அவள் வடிவம்தான். அதோடுகூட, இந்த மந்திரங்களை ஒருமுகப்பட்ட சித்தத்தோடு தீவிரமாக ஜபம் செய்தால், அவளே அந்தந்த மந்திரத்துக்குரிய ரூபத்தில், சரணாகதி அவயவங்களுடனும் ஆயுதங்களுடனும் முத்திரைகள் முதலியவற்றுடனும் தரிசனம் தருவாள்.

இந்த மந்திரங்கள் எல்லாவற்றுக்கும் மூலமாக இருப்பது பிரணவம். அதிலிருந்து இந்த நாம, ரூபப் பிரபஞ்ஜம் முழுக்க வந்தது. நாத ஸ்வரூபிணியான அம்பாளே ஒங்காரமாகிய அந்தப் பிரணவமும் ஆவாள். அ,உ,ம மூன்றும் சேர்ந்து ஒம் என்று ஆகிறது. அ - சிருஷ்டி; உ - பரிபாலனம்; ம - சம்ஹாரம் என்பார்கள். அதனால் முத்தொழிலும் செய்யும் மூல சக்தியே பிரணவம். இதையே அம்பாளின் தொழில்களில் விசேஷமான கருணையைக்காட்டும் பரிபாலனத்தில் தொடங்கினால், உ - ம - அ - என்றாகும். அதுதான் உமா என்பது. உபநிஷதமும் அவளை உமாஹைமவதி என்றே சொல்கிறது.



????????? ???????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
"Dasopadesam"

"Dasopadesam"


a.k.a. "The Ten Commandments"
Paramacharya Maha Swamigal
JagadGuru Shri Chandrasekarendra Saraswati
  1. One of our duties as human beings is to avail ourselves of every opportunity to do good to others. The poor can serve others by their loyal work to the country and the rich by their wealth to help the poor. Those who are influential can use their influence to better the condition of the lowly. That way we can keep alive in our hearts a sense of social service
  2. Man by himself cannot create even a blade of grass. We will be guilty of gross ingratitude if we do not offer first to God what we eat or wear - only the best and choicest should be offered to Him.
  3. Life without love is a waste. Everyone should cultivate "Prema" or love towards all human beings, bird and beast.
  4. Wealth amassed by a person whose heart is closed to charity, is generally dissipated by the inheritors: but the family of philanthropists will always be blessed with happiness.
  5. A person who has done a meritorious deed will lose the resulting merit if he listens to the praise of others or himself boasts of his deeds.
  6. It will do not good to grieve over what has happened. If we learn to discriminate between good and evil, that will guard us from falling into the evil again.
  7. We should utilise to good purpose, the days of our life-time. We should engage ourselves in acts which will contribute to the welfare of others rather than to our selfish desires.
  8. We should perform duties that have been prescribed for our daily life and also be filled with devotion to God.
  9. One attains one's goal by performance of one's duties.
  10. Jnana is the only solvent of our troubles and sufferings.



: kamakoti.org
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top