• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
எளிய வாழ்வுக்கு திரும்புவோம்

எளிய வாழ்வுக்கு திரும்புவோம்

* வாழ்க்கையில் நாம் அனுபவிப்பது அனைத்தையும் இறைவனுக்குச் சமர்ப்பித்த பிறகே பயன்படுத்த வேண்டும்.

* மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு, அனைத்து பாக்கியங்களிலும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே.

* அன்பாக இருப்பது தான் தர்மம் என்பதால் "அன்பே சிவம்' என்கின்றனர். எனவே, அனைவரும் அன்புடன் செயல்பட ஆசைப்பட வேண்டும்.

* புத்தியைச் சுத்தப்படுத்த கல்வி, மனதைச் சுத்தப்படுத்த தியானம், வாக்கைச் சுத்தப்படுத்த ஸ்லோகம் போன்றவை உள்ளன. அவற்றை முறையாக பயன்படுத்தி இந்த நன்மைகளைப் பெற வேண்டும்.

* பழைய எளிய வாழ்க்கை முறைக்குத் திரும்ப அனைவரும் ஆசைப்பட வேண்டும். நிறைவு மனதில் தான் இருக்கிறது என்று உணர்ந்து எளிமையாக வாழ வேண்டும்.

* கடவுள் உண்டு, அவரைக் காண வேண்டும் என்று தாகத்துடன் வேண்டுபவர்களிடம் கருணை கொண்டு உருவத்துடன் காட்சி தருவார். அருவமாயினும் உருவம் கொள்வார்.


காஞ்சிப்பெரியவா


Sage of Kanchi

Hari Haran
 
தவறுக்கு மனப்பூர்வமாக வருந்தி கடவுளிடம&#

தவறுக்கு மனப்பூர்வமாக வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.



அறிந்தும் அறியாமலும் சில நேரங்களில் பிறர் மீது வீண் பழி சுமத்துவதற்கு நாம் காரணமாகி விடுகிறோம். பின்பு அதற்கு என்ன பிராயச்சித்தம் செய்யலாம் என்ற வருத்தம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு மகான் ஒருவர் எளிய வழி ஒன்றைக் கூறுகிறார்...

தலைசிறந்த மகான் ஒருவரிடம் வந்த ஒருவன், சுவாமி! நான் ஒருவர் மீது வீணாக பழி சுமத்திவிட்டேன். என் மனசாட்சி இப்போது உறுத்துகிறது. நான் செய்த தவறுக்கு ஏதாவது பிராயச்சித்தம் இருந்தால் கூறுங்கள் சுவாமி என்று கூறினான். அவனையே சிறிது நிமிடங்கள் உற்றுப் பார்த்த சுவாமி, ஒரு காகிதத்தை எடுத்து பல துண்டுகளாக கிழித்தார். அதை அவனிடம் கொடுத்து, நாளை காலை இது ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரது வீட்டு வாசலிலும் வைத்து விட்டு வா என்று கூறினார். அவ்வாறே செய்து விட்டு வந்தவன், இப்போது என் பாவம் தொலைந்திருக்கும் அல்லவா? என்று வினவினான். சிறிது நேரம் கழித்து, நீ இன்னொரு வேலை செய்! ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வைத்த காகித துண்டுகளை மீண்டும் எடுத்து வா என்று கூறினார்.

இதைக் கேட்டு திகைத்த அவன், என்ன சுவாமி கூறுகிறீர்கள் காற்றில் அவையெல்லாம் பறந்து போயிருக்குமே என்றான். மகனே! இப்படித்தான் ஒருவர் மீது சுமத்திய பழியும்; காகிதத்துண்டு போல் உன் வாயிலிருந்து வந்த வார்த்தையும் திரும்ப வராது. அதற்காக கவலைப்படாதே! நீ மனப்பூர்வமாக வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேள். அவர் எல்லையற்ற கருணை கொண்டவர். நீ செய்த பாவத்தையும் அவர் பறந்தோடச் செய்வார். எனவே செய்த தவறுக்கு மனப்பூர்வமாக வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.


Source: Sage of Kanchi


Kumar Ramanathan
 
நான் கடவுள்! - மகா பெரியவா சொன்ன கதை!!

நான் கடவுள்! - மகா பெரியவா சொன்ன கதை!!

இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைவோர்தான் நம்மில் பலர். கல்யாண விஷயமானாலும், கடவுள் விஷயமானாலும் அவர்கள் அப்படித்தான்! இன்று மாப்பிள்ளைக்குப் பெண் தேடும் படலம் மிக நீளமானது. ஒரு வருடம், இரண்டு வருடம் என வருடக்கணக்கில் பெண் தேடி, கடைசியில் எதிர்வீட்டுப் பெண்ணைப் பேசி, மணம் முடிப்பார்கள். வெண்ணெயைக் கையில் வைத்துக்கொண்டு, நெய் தேடி அலைந்த கதைதான்!

இந்த விஷயத்தை மகா பெரியவா கதையோடு சொல்லும் விதம் அழகானது; அற்புதமானது! இதோ, அவர் வாய்மொழியாகவே கேட்போமே!

'கல்யாணம் ஆகவேண்டிய பெண் ஒருத்தி இருந்தாள். அவளின் பெற்றோர், பந்துக்களுக்குள்ளேயே ஒரு முறைப் பையனைப் பார்த்து, அவனுக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கத் தீர்மானித்தனர். ஆனால், அந்தப் பெண்ணோ, ''புருஷர்களில் எல்லாம் உயர்ந்தவன் எவனோ, அவனைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்'' என்று பிடிவாதம் பண்ணினாள். அவர்களும், ''உன் இஷ்டப்படியே செய்!'' என்று விட்டுவிட்டார்கள்.

அந்தப் பெண், 'புருஷர்களுக்குள்ளேயே உயர்ந்தவன் ராஜாதான். எனவே, அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்’ என்று தீர்மானம் பண்ணிக்கொண்டு, அவ்வூர் ராஜா பின்னாலேயே போய்க்கொண்டிருந்தாள்.

ஒருநாள், ராஜா பல்லக்கில் போய்க்கொண்டு இருந்தபோது, ஒரு சாமியார் எதிரே வந்தார். ராஜா பல்லக்கை விட்டுக் கீழே இறங்கி, அந்தச் சாமியாருக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டுத் திரும்பவும் பல்லக்கில் ஏறிப் போனான். இதை அந்தப் பெண் பார்த்தாள். 'அடடா! ராஜாதான் புருஷர்களுக்குள் உயர்ந்தவன் என்று எண்ணி இத்தனை நாளும் ஏமாந்துவிட்டேனே! ராஜாவைக் காட்டிலும் உயர்ந்தவர் சாமியார் போல் இருக்கிறதே! கல்யாணம் பண்ணினால் இந்தச் சாமியாரைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும்’ என்று தீர்மானித்து, அந்தச் சாமியார் பின்னாலேயே சுற்ற ஆரம்பித்துவிட்டாள்.

ஒருநாள், சாமியார் தெருக் கோடியில் ஓர் ஆலமரத்தடியில் இருந்த பிள்ளையார் முன் நின்று நெற்றியில் குட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் போடுவதைப் பார்த்தாள். 'சரி சரி, சாமியாரைவிடப் பெரியவர், உயர்ந்தவர் இந்தப் பிள்ளையார்தான். அதனால் பிள்ளையாரைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும்’ என்று தீர்மானம் பண்ணிக்கொண்டாள். சாமியாரோடு போகாமல், அந்தப் பிள்ளையாருக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்துவிட்டாள்.

அவளைத் தவிர, அந்தப் பிள்ளையாரிடம் வேறு யாரும் அடிக்கடி வருகிற இடமாக அது இல்லை. அது கோயில்கூட இல்லை; வெறும் மரத்தடிதான். அதனால், தெருவோடு போகிற நாய் ஒன்று அந்தப் பிள்ளையார் மேலே காலைத் தூக்கிக்கொண்டு 'ஒன்றுக்கு’ப் போயிற்று. அதைப் பார்த்தவுடன், 'அடடா, இந்தப் பிள்ளையாரையும்விட உயர்ந்தது இந்த நாய்தான் போலிருக்கிறதே!’ என்று, அந்த நாயைத் துரத்திக்கொண்டு போக ஆரம்பித்துவிட்டாள்.

வழியில், அந்த நாய் மீது ஒரு பையன் கல்லை விட்டெறிந்தான். அது 'வள்... வள்’ என்று குரைத்துக்கொண்டு முன்னிலும் வேகமாக ஓடியது. ''ஏண்டா அந்த நாயை அடித்தாய்?'' என்று அந்தப் பையனை ஒருவன் பிடித்துக்கொண்டு அதட்டினான்; முதுகில் ஒன்று வைத்தான். 'நாயைக் காட்டிலும் நாயை அடித்தவன் பெரியவன் என்று எண்ணினேன்; அவனையே அதட்டி அடிக்கிற இவன்தான் எல்லாரைக் காட்டிலும் உயர்ந்தவன்’ என்று தீர்மானம் பண்ணிவிட்டாளாம் அந்தப் பெண்.

இப்படிக் கடைசியில் அவள் கண்டுபிடித்த அந்த ஆசாமி வேறு யாருமல்ல; அவளுடைய அப்பா- அம்மா பார்த்து, முதலில் அவளுக்குத் தீர்மானம் பண்ணியிருந்த பிள்ளைதான்!

'வெகு தூரத்தில் யாரோ இருக்கிறான், இருக்கிறான்’ என்று எண்ணிக்கொண்டே சுற்றினாள். கடைசியில், அவன் அவளுக்கு அருகிலேயே இருந்தவனாகப் போய்விட்டான். இப்படி, லௌகிகமாக ஒரு கதை சொல்வர்.
''எங்கோ தூரத்தில் இருக்கிறான் ஸ்வாமி என்று ஊரெல்லாம் சுற்றுகிறாயே! தெரியாத வரையில் அவன் தூரத்தில் இருப்பவன்தான். ஊரெல்லாம் சுற்றினாலும் அவனைப் பார்க்க முடியாது. அவன் உன்கிட்டேயே இருப்பவன்தான். 'தத்தூரே தத்வந்திகே’ - தூரத்திற்கெல்லாம் தூரம், சமீபத்திற்கெல்லாம் சமீபம் என்று ஸ்ருதி சொல்கிறது.

ஹொரைஸன் என்பார்களே, தொடுவானம்; இங்கிருந்து பார்த்தால் ஆகாசமும் பூமியும் அந்த இடத்தில் சேருவதுபோல இருக்கும். அங்கே ஒரு பனை மரம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். 'அந்தப் பனை மரத்தடிக்குப் போனால் பூமியும் வானமும் சேருகிற இடத்தைப் பிடித்துவிடலாம்’ என்று இங்கே இருந்து பார்க்கிறபோது நமக்குத் தோன்றும். ஆனால், அங்கே போனால், தொடுவானமும் அங்கிருந்து வெகு தூரத்திற்கு அப்பால் போய்விட்டது போலத் தெரியும். நாம் போகப்போக அதுவும் போய்க்கொண்டே இருக்கும். 'இந்தப் பனை மரத்தின் கீழ் வந்து நின்றால் தொடுவானம் வெகுதூரத்திற்குப் போய்விட்டதே, அதைப் பிடிக்க இன்னும் நாமும் போக வேண்டும்’ என்று போய்க்கொண்டிருந்தால், அதைப் பிடிக்க முடியுமா? இந்தப் பனை மரத்துக்கு வெகு தூரத்தில் இருந்து பார்க்கும்போது இந்த இடத்தில்தான் தொடுவானம் இருப்பதுபோல இருந்தது. இந்த இடத்திற்கு வந்தவுடன், அது நம்மைவிட்டு இன்னும் வெகு தூரம் போய்விட்டது. ஆகவே, அது எங்கே இருக்கிறது? நீ இருக்கிற இடத்தில்தான் இருக்கிறது. நீ இருக்கிற இடம்தான் அது. அப்படி 'அது’, 'அது’ என்று சொல்லப்படுகிற, வெகு தூரத்தில் இருக்கிற ஸ்வாமி, உன் கிட்டேயே- உன் உள்ளேயே இருக்கிறார்; நீயே அதுதான் என வேதம் உணர்த்துகிறது.


'நீயே அது’ என்பதை 'தத்-த்வமஸி’ என்ற மஹாவாக்கியமாக வேதம் சொல்கிறது. 'தத்வம்’ என்றால் இங்கே தத்தின் தன்மை என்று அர்த்தமில்லை. 'த்வம்’ என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு. 'தன்மை’ என்பது ஒன்று. 'நீ’ என்பது இன்னொரு அர்த்தம். தத்-த்வம் அஸி என்னும்போது 'தத்-அது, த்வம்-நீ(யாக), அஸி-இருக்கிறாய்’ என்று அர்த்தம்.

நான்... நான் என்று எதை நினைத்துக்கொண்டிருக்கிறாயோ, அதுதான்- அந்த அறிவுதான் ஸ்வாமி. அந்தப் பிரகாசம் உன்னிடத்தில் இல்லையென்றால், உன்னால் ஸ்வாமி என்றே ஒன்றை நினைக்க முடியாது. 'நான் என்று அறிகிறேன், நான் என்று நினைக்கிறேன், அப்படி நினைக்கிற அறிவுக்கு மூல வஸ்து வெகுதூரத்தில் இருந்து கொண்டிருக்கிற 'தத்’ என்று நினைக்கிறாயே, அந்த 'தத்’தும் நீயும் ஒன்றுதானப்பா!’ இதுதான் வேதத்தின் முடிவில் சொல்வது.'

என்ன அருமையாகச் சொல்லியிருக்கிறார், மகா பெரியவா! நாம்தான் உண்மையை அறிந்து தெளிய வேண்டும்


Source; Sage of Kanchi

Balaji Iyer
 
"ஆவணி அவிட்டம்"- தெய்வத்தின் குரல்.

"ஆவணி அவிட்டம்"- தெய்வத்தின் குரல்.

ஆவணி அவிட்டம்


அந்தணர்களாக பிறந்த ஒவ்வொருவரும் எட்டு வயதில் உபநயனம் பூணூல்

சடங்கை நடத்திக் கொள்ள வேண்டும். அதிபுத்திசாலியாக, மஹா மேதாவியாக

இருந்தால் ஐந்து வயதில் கூட பூணூல் போட்டு விடலாம். பதினாறு வயதிற்கு மேல்

உபநயனம் செய்வது என்பது பேரளவுக்கு மாத்திரமே என்று சாஸ்திரங்கள்

கூறுகின்றன.

உபநயனம் என்பதில் இரண்டு காரியங்கள் இருக்கின்றன. ஒன்று பூணூல்

போட்டது முதல் ஆசாரங்கள், ஒழுக்கங்கள் இன்றியமையாதது. ஆகவே பூணூல்

சமஸ்காரம் என்பது மனிதனை மனித வாழ்க்கையில் ஆன்மிக உயர்நிலை

அடைவதற்காக ஏற்பட்டது. இரண்டாவது, உபநயனத்தில் பூணூல் போட்டுக்

கொள்வது என்பது பிரதானமாக பேசப்படுகிறது. ஆனால் உபநயனத்தின் முக்கிய

அம்சம் ஒரு பெரியோரின் மூலம், ஒரு குருவின் மூலம், அல்லது தகப்பனாரின்

மூலம் வேதோக்தமான காயத்ரீ மந்திரத்தை ஏற்றுக்கொள்வதே முக்கிய

நோக்கமாகும். அதற்கு அங்கமாகத்தான் சுத்தமாயும், பவித்ரமாயும் பூணூல்

போட்டுக் கொள்வது. இதை வைத்துத்தான் உபநயனம், ப்ரம்மோபதேசம் என்று

சொல்லுகிறோம்.

உப நயனம் என்ற இரண்டு சொற்களின் அர்த்தம் காயத்ரீ மந்திரத்தைக்

கற்றுக் கொள்வதற்கு குருவின் சமீபம் அழைத்துச் செல்லுதல் என்று பொருள்.

இந்த வேதம் படிப்பதற்கு காலங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. தக்ஷிணாயனம்

என்று சொல்லக்கூடிய ஆறு மாதங்கள், வேதம் சொல்லக் கூடிய காலங்கள்.

உத்ராயணத்தில் அந்த வேதத்திற்கு அர்த்தம் தெரிந்து கொள்வதற்கு

சம்ஸ்க்ருதத்தையும், உப அங்கங்களையும், தர்ம சாஸ்திரத்தையும்

தெரிந்துகொள்ளவேண்டும். தை,மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி இந்த

ஆறு மாதங்களும் உத்தராயணம். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை,

மார்கழி இந்த ஆறுமாதங்கள் தக்ஷிணாயனம். ஆவணி மாதத்தில் அவிட்ட

நட்சத்திரத்தில் வரக்கூடியது ஆவணி அவிட்டம். இதையே எல்லோரும்

பொதுவாக ஆவணி அவிட்டம் என்பார்கள். ஆடிமாத அமாவாசைக்கு பிறகு

ச்ராவண மாசம் என்பத சாந்திரமான கணக்குப்படி வரும். ச்ராவண மாசத்தில்

ச்ரவண நட்சத்திரத்தன்று ஒரு தோஷமும் இல்லாமல் இருந்தால் யஜுர் வேதிகள்

ஆவணி அவிட்டம், உபாகர்மா செய்து கொள்வார்கள்.

சாம வேதத்திற்கு ஆவணி ஹஸ்தம் எடுத்து இருக்கிறது. இப்படி ஒவ்வொரு

வேதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் மாறி வந்தாலும் ருக் வேதம்தான்

முதன்மையாக இருப்பதினால் அந்த ஆவணி அவிட்டத்தையே எல்லோரும்

உபாகர்மா என்று பெயர் வைத்து விட்டார்கள். இந்த உபாகர்மா அன்று

தக்ஷிணாயத்தில் ஆறுமாதத்திற்கான வேதபாடங்களை படித்து முடித்து உத்தராயண

ஆரம்பத்தில் அந்த வேதத்திற்கான அர்த்தங்களையும், தர்ம சாஸ்திரத்தையும்

தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி முடியாதவர்கள் ஆவணி அவிட்டத்தில்

தாங்கள் படித்த வேத பாகத்தை பூர்த்தி செய்து கொண்டு, ஆவணி அவிட்ட

உபாகர்மாக்களைச் செய்து கொண்டு திரும்பவும் அன்று வேத பாடங்களை

ஆரம்பம் செய்ய வேண்டும்.

இதுவரை வேத பாடங்களைப் படித்து வந்ததில் உள்ள குறைகளை

நீக்குவதற்கும், மேலும் நல்ல பலத்துடன் படிப்பதற்கு காயத்ரீ ஜபம் செய்ய

வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

வேத சாஸ்திர பாடங்களை அந்தந்த காலத்தில் ஆரம்பித்து

முடிக்காததற்காகத்தான் பரிகாரமாக "காமோகார்ஷீத்" ஜபம் சொல்லப்பட்டு

இருக்கிறது. ஆனால் எப்படியோ ஒரு அறியாமை இந்த விஷயத்தில் புகுந்து

விட்டது. 'காமோ கார்ஷீத்' ஜபம் செய்த பிறகு இட்லி, பலகாரம் சாப்பிடுவது என்று

ஒரு பழக்கம். இந்தப் பழக்கம் சரியல்ல.

அதேபோல் பலரும் வீட்டிலேயே வாத்தியாரை வரவழைத்து பூணூலை

மட்டும் புதிதாக மாற்றிக் கொள்கிறார்கள். மற்ற எந்த ஒரு வித வேத கர்மாவுக்கும்

அங்கு இடமில்லாமல் போய் விடுகிறது. ஆவணி அவிட்டத்தில் பூணூல் மாற்றிக்

கொள்வது முக்கியமாக இருந்தாலும், பூணூலை மாற்றிக் கொள்வது

எதற்காகவென்றால் வேதம் படிப்பதற்கு முன்பு புனிதமாக ஆகவேண்டும் என்பதே

முக்கியம். பூணூலை மாற்றிக் கொள்வதற்கு மட்டும் இல்லை. பூணூலை மாற்றிக்

கொண்ட பிறகு சிறிது அளவாவது வேதாரம்பத்தை செய்த கொள்ள வேண்டும்.

ஆகவே அவணி அவிட்டத்தில் வேதாரம்பம் செய்வது முக்கியம். அதை

ஒட்டித்தான் பூணூல் போட்டுக் கொண்டு "காமோர்கார்ஷீத்" ஜபம் செய்வது

போன்றவைகள். அதேபோல் பூணூல் போட்டுக் கொண்ட மறுநாள் காயத்ரீ ஜபம்

வரும். ஆவணி அவிட்டத்தில் வேத மந்திர ஜப சித்தி இருந்தால்தான் வேதாரம்பம்

ஸ்திரமாக இருக்கும். அதற்காகத்தான் காயத்ரீ ஜபத்தை மறுநாள் வைத்து

இருக்கிறார்கள். பலரும் அறியாமையால் பூணூல் போட்ட முதல் வருஷத்தில்தான்

காயத்ரீ ஜபம், காயத்ரீ ஹோமம் முதலியவைகள் என்று எண்ணிக் கொண்டு

இருக்கிறார்கள். தம்முடைய வாழ்க்கையிலேயே தினந்தோறம் சந்தியாவந்தனம்,

காயத்ரி ஜபம் செய்து விட்டுத்தான் வேதத்தை பாராயணம் செய்யச் சொல்லி

இருக்கிறது. ஆகவே ஒவ்வொரவரும் காய்த்ரீ ஜபத்தன்று ஆயிரம் தடவை காயத்ரீ

மந்திரத்தையும் அல்லது ஹோமத்தையும் செய்ய வேண்டும்.

பஞ்சாக்ஷரீ ஜபம், அஷ்டாக்ஷரீ ஜபம் போன்ற பல மந்திர ஜபங்கள் எல்லாம்

இருக்கின்றன. இந்த ஈஸ்வரானுக்ரஹம் சித்திக்க வேண்டும் என்றால் கூட காயத்ரீ

ஜபத்தை அதிக அளவில் செய்தால்தான் சித்திக்கும் என்றும், மற்ற ஜபங்கள் பலன்

அளிக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. காயத்ரீ மந்திரம் ஒன்றுதான்

வேதத்திலிருந்து வந்தது. மற்ற எல்லா மந்திரங்களும் அதிகமாக

புராணத்திலிருந்துதான் வந்தவை. பஞ்சாக்ஷரம் போன்ற மந்திரங்களை

ஜபிப்பவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசேஷ பலன் சொல்லப்பட்டு

இருக்கிறது. ஆனால் காயத்ரீ மந்திரம் ஜபித்த எல்லோருக்கும் ஒரே பலன்

மனத்தூய்மைதான். மனோபலம்தான். மனோபலத்தையும், மனத் தூய்மையும்

வைத்துக் கொண்டு உலகத்தில் எல்லா காரியங்களையும் சாதிக்க முடியும்.

இன்றைக்கு மனோபலமும், மனோ தைரியமும் குறைந்திருப்பதற்கு காரணமே

காயத்ரீ அனுஷ்டாணம் குறைந்து இருப்பதுதான்.

சில சமயம் ஆவணி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருவதினால்

தோஷமாதலால் அந்த மாதத்தில் உபநயனம், கல்யாணம் போன்ற சடங்குகள்

செய்ய மாட்டார்கள். ஆகையினால்தான் ஆவணி அவிட்டம் ஆடி மாதத்திலேயே

வந்து விடுகிறது. ச்ராவண சுத்தத்தில் முடிவான பௌர்ணமி அன்று வந்து

விடுகிறது.



Sage of Kanchi

Varagooran Narayanan
 
"மூலா நக்ஷத்ரம் சரஸ்வதியோட நக்ஷத்ரம்.

ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலமா?
மகா பெரியவா பதில் சொன்னார்...



"மூலா நக்ஷத்ரம் சரஸ்வதியோட நக்ஷத்ரம்.
சரஸ்வதி வாக்குக்கு தெய்வம்.

அன்னிக்கு காஷ்ட மௌனம் இருந்து அவளை
பிரார்த்தனை பண்ணிண்டு இருந்தா
வாக் விரயம் ஆகாமலும் இருக்கும்.
அவளை பிரார்த்தனை பண்ணிண்டு இருந்த மாதிரியும் இருக்கும்
.
அதனால, மூலா நக்ஷத்ரம் அன்னிக்கு எதுவும் பேசாம
இப்படி காஷ்ட மௌனம் இருக்கறது.




Sage of Kanchi

Varagooran Narayanan
 
வாழ்க்கைக்கும் சாப்பாட்டுக்கும் சம்பந&#3

வாழ்க்கைக்கும் சாப்பாட்டுக்கும் சம்பந்தம்

மஹான் சாப்பிடுவது என்னவோ அவல்பொரிதான். எப்போதாவது கீரையை தமது மதிய உணவில் சேர்த்துக் கொள்வார் என்று மடத்து ஊழியர்கள் சொன்னது உண்டு. இருந்தாலும் சமையல் பக்குவத்தைப் பற்றி அவர் சொல்வதைக் கேட்டு பிரபல சமையல்காரர்களே மூக்கில் விரல் வைத்திருக்கிறார்கள்.


அவ்வப்போது மடத்திற்கு அரிசி, பருப்பு, உளுந்து என்று பக்தர்கள் மூட்டை மூட்டையாகக் கொண்டுவந்து கொடுப்பார்கள். ஒரு தடவை பக்தர் ஒருவர் தன் தோட்டத்தில் பயிரான கருணைக்கிழங்கை மூட்டையாகக் கொண்டு வந்து கொடுத்தார். மடத்தில் சிப்பந்திகள் மிகவும் திருப்தியாக அதை மசியல் செய்து எல்லோருக்கும் பரிமாறினார்கள். சாப்பிட்டவர்கள், முதலில் அதை எடுத்து வாயில் போட்ட பிறகு அதைத் தொடவே இல்லை. இலையில் மூலையில் அதை ஒதுக்கி வைத்து விட்டனர். ஏனெனில் கிழங்கு மசியல் நாக்கில் பட்டவுடன் அரிப்பு ஏற்பட்டு விட்டது. அதனால்தான் ஒதுக்கிவிட்டார்கள்.

இந்த ’மசியல் பகிஷ்காரம்’ மஹானின் காதுக்குப் போகாமல் இருக்குமா?

சமையல் செய்தவர்கள் மஹானின் முன்னால் கையைக் கட்டிக் கொண்டு விசாரணையை எதிர்பார்க்கும் குற்றவாளிகளைப் போல் நின்றுகொண்டு இருந்தார்கள்.

அவர்கள் எல்லோரும் பயந்தபடி ஏதும் நடக்கவில்லை. அமைதியான குரலில் மஹான் கேட்டார்:

“எப்படிச் சமையல் செய்தாய்?”

“கழுநீரில் நன்றாக அலசியபிறகு புளிவிட்டுக் கொதிக்க வைத்தேன்… இந்தக் கிழங்கு அதற்கெல்லாம் மசியவில்லை… அதனுடைய குணம் மாறவில்லை..” என்று பிரதம சமையல்காரர் குறைப்பட்டுக் கொண்டார்.

பெரியவா சிரித்தபடியே சொன்னார்:


“கருணைக்கிழங்கை வெந்நீரில் வேகவைக்கும்போது அதோடு வாழைத்தண்டை சிறிதாக நறுக்கிப் போட வேண்டும். இரண்டும் நன்றாக வேகும்போது, கருணையின் குணம் மாறிவிடும்” என்றார்.

மறுநாள் இந்த முறைப்படி சமைத்தபோது எல்லோரும் விரும்பி, கேட்டுச் சாப்பிட்டார்கள்.

சமையல் விஷயத்தில் மஹானின் இன்னொரு அனுபவம்.

பண்டிதர் ஒருவர் மஹானிடம் பேச வந்தார். அவரிடம் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்து விட்டு, மஹான் ’‘இட்லி’ என்று ஏன் பெயர் வந்தது?’ என்று கேட்டார்.

ஏதோ புதிய விளக்கம் தருவதாக நினைத்த அந்தப் பண்டிதர் சொன்னார்:

“இலையில் இட்லியைப் போட்டவுடன் அது காலியாகி விடுகிறது. இட்டு+இல்லை=இட்டிலை-இட்லி” என்றார்.

மஹான் சிரித்துக்கொண்டே அவரிடம் கேட்டார்:


"இலையில் இட்லி விழுந்ததும் எல்லோரும் அதை இல்லையின்னு ஆக்கிடும் சாத்தியம் நம்பும்படியாக இல்லையே. என்னை மாதிரி எத்தனையோ பேர் அதை இலையிலேயே வச்சிண்டு உட்கார்ந்து இருக்காளே, அதனால் நீங்கள் சொல்ற விளக்கம் சரியில்லை.”

”பெரியவா சொன்னா கேட்டுக்கிறேன்….”

“ஏதாவது நாம் சமைக்கிறோமுன்னா, அதுக்குக் கொஞ்சம் சிரமம் எடுத்துக்கணும் இல்லையா?”

“அடுப்புப் பக்கத்துலேயே நிக்கணும். கருகிப் போகாமப் பாத்துக்கணும். இல்லேன்னா பக்குவம் கெட்டுப் போகும் இல்லையா? இட்லியை எடுத்துக்கோங்கோ. அதை ஊத்தி வச்சுட்டு பத்து நிமிஷம் அதை மறந்து அந்தண்டை போய் வேறு வேலையைக் கவனிக்கலாம். தானாக வெந்து, பக்குவமாக இருக்கும். ஒன்றை வைத்துவிட்டுத் திரும்பிப் பாராமல் வருவதை இடுதல் என்கிறார்கள். ‘இடுகாடு, இடுமருந்து’ என்பது போல் இட்லி என்று பெயர் வந்திருக்கலாம்” என்று முடித்தார் எல்லாம் தெரிந்த ஞானியான மஹான்.

மிகப்பெரிய விஷயங்கள் மட்டுமல்லாமல் சிறு சிறு விஷயங்களுக்கும் அவர் அளிக்கும் விளக்கங்கள் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டன. சமையல் விஷயமாக அவர் சொன்ன கருத்துக்கள் காஞ்சிமடத்தில் இன்றும் உலா வருகின்றன.

ஒருநாள் மடத்து சமையல்காரர் ஒருவர், மடத்திற்கு சமையல் செய்ய பெருங்காயம் அதிகமாகத் தேவை என்று விண்ணப்பம் கொடுக்க, “சாம்பார், ரசம் வைக்கும்போது தனித்தனியாக பெருங்காயத்தை போடக்கூடாது. நீ பருப்பை சாம்பாருக்காக வேக வைக்கும்போது அதில் பெருங்காயத்தைப் போட்டுடு. அதே பருப்பு தானே சாம்பார், ரசம் வைக்க உதவுகிறது. அதில் பெருங்காய வாசனை இல்லாமலா போகும்? இப்படி செய்து பார். அதிகப் பெருங்காயம் தேவைப்படாது…” என்று மஹான் விளக்கமாகச் சொன்னார். இத்தனை நாள் சமையல் செய்யும் தனக்கு இந்த உத்தி தெரியவில்லையே என்று புலம்பினார் சமையல்காரர்.

இன்னொரு சம்பவம் - ‘ரசமான விவாதம்’ :

அதாவது குழம்புக்கும் ரசத்துக்கும் என்ன வித்தியாசம்?

“இரண்டிலுமே பருப்பு, புளி, உப்பு, சாம்பார்பொடி பெருங்காயம் தானே இருக்கு?”

அங்கிருந்த பக்தர்கள் “சாம்பாரை முதலிலும் ரசத்தை பின்னாலும் சாப்பிடுகிறோம், அதுதான் வித்தியாசம்” என்றார்கள்.

மஹா் பெரிதாகச் சிரித்தார்.

“குழம்பில் காய்கறி உண்டு. ரசத்தில் இல்லை. இதுதான் வித்தியாசம்” என்றார்.

இந்தக் குழம்பையும் ரசத்தையும் வைத்து அன்று ஒரு சிறிய பிரசங்கத்தையே எல்லோருக்கும் விளக்கமாகச் சொன்னாராம்.
அவர் சொன்னதன் கருத்து என்ன?

“தான் என்னும் அகங்காரம் மனதில் இடம் பெற்று விட்டதால், நாம் குழம்பிப் போகிறோம். அதாவது சாம்பார் போல்… ஆனால் இது இல்லையென்றால் மனம் தெளிவாக இருக்கும் ரசம் போல. இவைகளை மறக்கக் கூடாதுங்கிறதுக்காகத்தான் தினமும் குழம்பு ரசம் வைக்கிறோம். நீங்கள் விருந்துக்குச் சென்றால் குழம்பு, ரசம், பாயசம், மோர் என்று வரிசைப்படி சாப்பிடுகிறோம் இல்லையா? இந்த உணவுக்கலாசாரம் வேறு எங்கேயும் இல்லை. மனிதன் பிறக்கும் போதே அவன் மனதில் ‘தான்’ என்னும் அகங்காரம் இடம் பிடித்து வருகிறது. அவன் பலவிதமான குழப்பத்தில் ஆள்வதால் அவன் மனம் குழம்புகிறது. இதைத்தான் முதலில் நாம் சாப்பிடும் ‘குழம்பு’ எடுத்துக் காட்டுகிறது. அது தெளிந்துவிட்டால் ரசம் போல் ஆகிவிடுகிறது. இவற்றை தொடர்வது இனிமை, ஆனந்தம் அவைதான் பாயசம் – மோர் – பட்சணம் – இதைப் போல் மனிதனின் வாழ்க்கைக்கும் சாப்பிடும் சாப்பாட்டுக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு.

மோர் தனித்தன்மை வாய்ந்தது. பிரம்மானந்தத்துடன் நம் மனம் லயிக்க இது உதவுகிறது. பாலிலிருந்து தயிர், வெண்ணை, நெய் மோர் என்று தொடராகப் பொருட்கள் நமக்குக் கிடைக்கின்றன. மோர்தான் கடைசி நிலை. அதிலிருந்து நீங்கள் எதையுமே எடுக்க முடியாது.


அதனால் தான் பரமாத்மாவைக் கலந்தபின், மேலே தொட ஏதும் இல்லை என்பதை மோர் தெளிவாக்குகிறது. அதாவது மோர் சாதம் முடிந்தால் இலையை விட்டு எழுந்திருக்க வேண்டாமா?”என்று அன்றைய தினம் நீண்ட பிரசங்கமே செய்து விட்டார் மஹான்.

நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டைப் பற்றிய விளக்கத்தை இதுவரை, இதைப்போல் யாரும் சொன்னதே இல்லை எனலாம்.




Source: Sage of Kanchi


Geeta Sami
 
சடங்கின் போது, ஏன் பூணூலை இடம், வலம் தோள்க&#29

சடங்கின் போது, ஏன் பூணூலை இடம், வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்? -

மஹா பெரியவா

தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம் ; சிரத்தையோடு செய்வது சிராத்தம். தெய்வகாரியங்களைப் பண்ணும்போது சிகையை நன்றாக முடிந்து கொண்டு, யக்ஞோபவீதம் (பூணூல்) இடது தோளில் இருக்கும்படியாக, சிரத்தையோடு செய்ய வேண்டும்.

இதற்காகத்தான் சிகை, யக்ஞோபவீதம் இரண்டும் இருக்கின்றன. சந்நியாசிகளுக்கு இவை இரண்டும் இல்லை. பித்ரு காரியத்தையும், பல தேவதைகளின் உபாஸனையையும் விட்டுவிட்டு, நேரே பரமாத்ம உபாஸனையை எந்தவிதமான லௌகிக அபேக்ஷையும் இன்றிச் செய்பவர்கள் அவர்கள். நேராகவே கடவுளிடம் போகிற பிற மதஸ்தர்களுக்கும் சிகை, யக்ஞோபவீதம் இல்லை.

ஏன் இப்படித் தேவர்களுக்கு இடது தோளில் பூணூலோடும், பித்ருக்களுக்கு வலது தோளில் பூணூலோடும் காரியம் பண்ணி வேண்டும் என்று சொல்கிறேன்:

கிழக்கு முகமாக இருந்து கொண்டே காரியங்களைச் செய்ய வேண்டும். வடக்கு தேவர்களிடம் போகிற திசை, உத்தராயனம் என்பது அதுதான். உத்தரம் என்றால் வடக்கு. தெற்குதான் பித்ருக்கள் இருக்கும் பக்கம். ' தென்புலத்தார் ' என்று திருவள்ளுவர்கூடச் சொல்கிறாரல்லவா ? தக்ஷிணம் என்றால் தெற்கு. தக்ஷிணாயனம் என்பது பித்ரு லோக மார்க்கம்..... ' உத்தராயணம் ' என்பதில் மூன்று சுழி ' ண ' போட்டும், ' தக்ஷிணாயனம் ' என்னும்போது இரண்டு சுழி ' ன ' என்பது ' ண ' வாக மாறிவிடும். இது வியாகரண விதி. தற்காலத்தில் மனம் போனபடி பத்திரிகைகளில் எழுதுவதால் இதைச் சொல்ல நேர்ந்தது.

உத்தராயண தேவ மார்க்கத்தையும், தக்ஷிணாயன பித்ரு மார்க்கத்தையும் பற்றிப் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார். நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு பித்ரு காரியம் பண்ணும்போது, எந்தத் தோள் தெற்குப் பக்கமாக இருக்கிறது? வலது தோள்தான். அதனால்தான் பித்ரு காரியத்தில் யக்ஞோபவீதம் அந்தத் தோளின்மேல் இருக்கும்படியாகப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது.

" பிரதக்ஷணம் பண்ணுவது " என்கிறோமே, இதற்குக் கூட தக்ஷிண (தெற்கு) திசையை நோக்கி என்றுதான் அர்த்தம். முக்காலே மூன்றுவாசிக் கோயில்களில் ராஜகோபுரம் கிழக்குப் பார்த்தான் இருக்கும். அதற்குள் நுழைந்து நாம் பிரதக்ஷிணம் ஆரம்பிக்கும்போது, முதலில் தெற்குப் பார்க்கத்தான் போவோம்.

இதே மாதிரி, நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு தேவகாரியம் பண்ணும்போது, தேவர்களின் திசையான வடக்கு திசையைப் பார்க்க இருப்பது நம்முடைய இடது தோள்தான்.

அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்மேல் இருக்க வேண்டும் என்பது.



Source:Sage of Kanchi

Varagooran Narayanan
 
Gems from Maha Periyava

"கணக்காயிருக்கணும்"

ஓரொரு பணக்காரனுக்கும் தன்னைவிடப் பணம் படைத்த ஒருத்தனைப்போல் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

ஆடம்பரத்துக்கும் டாம்பீகத்துக்கும் ஊதாரித்தனமாகச் செலவழித்துக் கடன்படுகிறான். பணக்காரனுக்குத்தான் ஜாஸ்திக் கடன் இருக்கிறது. இது விசித்திரமாக, வேடிக்கையாகத் தோன்றினாலும், வாஸ்தவ நிலை இதுதான்.

பண விஷயமே நமக்கு முக்கியமாக இருப்பதால், அதில் ஆரம்பித்து ஒவ்வொன்றாக எல்லா விஷயங்களிலும் பேச்சு, காரியம், நினைப்பு எல்லாவற்றிலும் கணக்காயிருக்கணும். படிப்படியாக நம் சொற்கள், செயல்கள், சிந்தனைகள் - word, deed and thought - எல்லாவற்றிலும் ஒரு வரையறை, கணக்கு வேண்டும். முடிவில், மனோ, வாக்கு, காயங்களில் கட்டுப்பாடு வேண்டும். மனசு சிந்திப்பது, வாக்கு பேசுவது, காயம்தான் காரியம் செய்வது. இவை எல்லாம் கட்டுப்பாட்டின் கீழ் வந்தாலே ஆத்ம க்ஷேமகரமாகும். இவற்றோடு பணத்தைச் செலவு செய்வதை முதலில் சொன்னன். கட்டுப்பாடுதான் யோகம்.



Source; Sage of Kanchi

Sunderasan Subramanian
 
ராம நாமத்தின் மகிமை!

ராம நாமத்தின் மகிமை!

இவ்வுலகத்தில் தோன்றியுள்ள பொருள்கள் ;அனைத்திற்கும் ஒரு நாள் அழிவு உண்டு. அழிவே இல்லாதது ஆன்மா மட்டும்தான்.

இவ்வுலகில் பிறக்கும் புழு, பூச்சி பயிர், செடி, மரம், மிருகம், மனிதன்ஆகிய அனைத்தும் பிறப்பு, வளர்ச்சி, நோய், மூப்பு, இறப்பு என்ற ஐந்து (Birth, Growth, Disease, Decay & Death) கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது;

அதனால் பிறக்கும் எந்தப் பொருளும் இறக்கத்தான் செய்யும். இறவாதது ஆத்மா ஒன்றுதான். ஆத்மாவானது பரமாத்மா என்பதனின்று வரும் (Subtle) சூக்ஷம வடிவம். உடல் என்பது ஆத்மாவினைத் தாங்கி நிற்கும் வடிவம்-பாத்திரம். உடல் அழிவு பெறும்போது ஆத்மாவானது பரமாத்மாவிடம் சென்று ஐக்கியமாகின்றது, எங்கிருந்து வருகின்றதோ அங்கேயே அது சென்று அடைகின்றது.

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி, கல்லாய் மனிதராய்ப், பேயாய்க் கணங்களாய் வல்அசுரராகி முனிவராய், தேவராய்ச் செல்லாது நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்தினைத்தேன் எம்பெருமானே” என்று சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் கூறுகின்றரர். புல்லினின்று படிப்படியாக மனிதராய்ப் பிறக்கின்றது ஆன்மா. “அரிது அரிது மானிடராய்ப் பிறப்பதரிது” என்கின்றார் ஒளவையார். காரணம் மனித உடலில் ஆன்மா இடம் பெற்றால் பரமாத்மாவுடன் ஐக்கியமாக வாய்ப்புகள் அதிகமாகின்றன. பக்தியால், பரவசத்தால், ஆழ்ந்த சிந்தனையால், ஈடுபாட்டினால், விரதங்களால் இன்னும் பல வழிகளினால் ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணையத்துடித்து இணைகின்றது.

கிருத யுகம், திரேதாயுகம், துவாபரயுகங்களில் கடும் தவம், யாகம் போன்றவையால் ரிஷிகளும்,முனிகளும் பரமாத்மாவினை அடைந்தனர். இவர்கள் பெற்ற பலனைக் கலியுகத்தில் பெறுவது எப்படி? இது விண்வெளியுகம். கணினி யுகம். அணுகுண்டு யுகம். முந்தைய யுகங்களில் இருந்த அமைதி இல்லை. முந்தைய யுகங்களில் இருந்த சாவகாசம் இப்போது இல்லை. எதிலும் ஒரு வேகம் இருக்கின்றது. உட்கார்ந்து இலைபோட்டுப் பரிமாரி உண்பதற்கெல்லாம் ஏது நேரம்? மாத்திரை வடிவில் உணவை உண்டு பள்ளிக்கு,கல்லுரிக்கு.வேலைக்கு என்று பறக்கின்றார்கள் அனைவரும். பல திரவியங்களை ஒன்று திரட்டி யாகம் வளர்த்து. விரதமிருந்து இறைவனை வழிபாடு செய்ய ஏது நேரம்? ஆகையால் தான் இக்கலியுகத்திலும் முந்தைய யுகங்களில் பக்தர்கள் பெற்ற பலனை மிக எளிதாகப் பெறுவதற்கு நாம ஜபம், அதாவது இறைவனின் பெயரை ஓயாது கூறுவது சிறந்த முறையாகின்றது. என்ன காரியம் செய்து கொண்டிருந்தாலும் நா மட்டும் நாம ஜபம செய்தால் அதுவே ஜீவாத்மா பரமாத்மாவிடம் சென்று ஐக்கியமாகச் சிறந்த உபாயமாக அமையும். இதற்காகக் கடினமான பெயர்களையோ, நாமங்களையோ ஜபிக்க வேண்டும் என்பதில்லை.


குழந்தைகளும் எளிதாகக் கூறவல்ல நாமம் "ராம"எனும் நாமம். "ராம" நாமத்தை ஒரு நாளில் 108 முறை ஜபித்தால் கூடப்போதும். இதில் இருக்கும் "ரா" எனும் அக்ஷரம் “ஓம் நமோ நாராயணாய நமஉற” என்பதின் நடுவாக அமைந்திருக்கின்றது. “ம” எனும் அக்ஷரமோ ‘ஓம் நம சிவாய’ என்பதின் நடுவாக அமைந்திருக்கின்றது. வைணவத்தையும் சைவத்தையும் இணைக்கும் பாலம் தான் “ராம” எனும் நாமம்.

ராம பக்தர்களில் தலைசிறந்தவர் உறனுமன் என்பதனை நாம் அறிவோம். சீதையைத் தேடிச் செல்ல ராமன் உறனுமனுக்குப் பணித்திட கடலைத் தாண்டிச் செல்ல உறனுமன் “ராம ராம” என்று அவனது நாமத்தைத்தான் ஜபித்தான். “ராம” நாமமே உறனுமனுக்கு அளவிட இயலாத பலத்தினைத் தந்தது.

ராம நாமத்தை உயிர் மூச்சாகக் கொண்ட மற்றொரு பக்தர் மகாத்மா காந்தி ஆவார். அவருடைய ரத்தத்தில் அந்த ராம நாமம் எந்த அளவிற்கு ஊறியிருந்தது என்பதை, கோட்சே, காந்தியைத் துப்பாக்கியால் சுட்டவுடன் காந்தியின் உயிர் பிரியும் தருணத்திலும் கூட “ராம் ராம்” என்னும் ஜபத்தினை உச்சரித்தவாறு அவரது உயிர் பிரிந்ததின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

“ராம” நாமத்தை ஜபித்தால் நாமும் அதிக வரம் பெறலாம். லட்சம் ராம நாமம் எழுதுவதற்கென்று சங்கர மடத்தில் ராம நாம புத்தகங்கள் கிடைக்கின்றன. இவற்றில் சிறிய கட்டங்கள லட்சம் உள்ளன. அவற்றில் “ராம” எனும் நாமத்தை எழுதி அனுப்பினால் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் கருணைக்குப் பாத்திரமாகலாம்.

ஆசாரிய சுவாமிகளின் அனுக்கிரஹப் . பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இப்புத்தகங்களை ஆலயப் பிரதிஷ்டைக்குப் பயன்படுத்துகின்றனர். சங்கராச்சாரியார் சுவாமி ஸ்ரீபோதேந்திராவின் அதிஷ்டானம் கும்பகோணத்திற்கு அருகேயுஙள்ள கோவிந்தபுரம் எனும் இடத்தில் இருக்கின்றது. இங்கு லட்சம் ராம நாமம் கொண்ட பல புத்தகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன என்றும், அந்த அதிஷ்டானச் சுவற்றில் காதை வைத்துக் கேட்டால் “ராம” எனும் நாமம் காதுகளில் ஒலிக்கும் என்றும் கூறுகின்றனர்!!






“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும பாவமும் சிதைந்து தேயுமே
ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே
“ராம” என்றிரண்டெழுத்தினால்”
நல்லன எல்லாம் தரும் “ராம” நாமத்தை நாளும் நாம் ஜபிப்போமாக!



Source: Sage of Kanchi


Raman Kinetic Honda
 
காயத்ரி மந்த்ரம்

காயத்ரி மந்த்ரம்


Maha Periyavaa, Spiritual November 15, 2012

ஒரு வேளாள பக்தர் பெரியவாளிடம் கேட்டார்…..”நான்…..காயத்ரி மந்த்ரம் சொல்லலாமா?..” என்று.


ரொம்பவே தர்மசங்கடமான கேள்வி! “சொல்லலாம் அல்லது கூடாது” என்று எந்த பதிலை சொன்னாலும் எதிர்ப்பு வரும். சனாதன தர்மத்தின் ஆணிவேர் பாரதம் என்றாலும், அது கப்பும் கிளையுமாக உலகம் பூரா பரவி, இப்போது கிளைகள் சின்னதானாலும், வேரின் இடம் மாராமல்தானே இருக்கிறது! ஸ்ரீமடம் எப்போதும் சாஸ்திர விரோதமான கார்யத்துக்கு துணை போகாது! ஆனால், எதிர்ப்பு எல்லா இடத்திலும் எல்லாக் காலத்திலும் இருக்கும்தானே! ஆனால், என்ன தர்மசங்கடமான நிலைமையும், தர்மதேவதையான பெரியவாளிடம் தன் வாலை சுருட்டிக் கொண்டுவிடுமே!

பக்தரின் கேள்விக்கு நேரடியாக எந்த பதிலும் வரவில்லை. “ஒனக்கு எத்தனை கொழந்தேள்?…”

சளைத்தவரில்லை அந்த உண்மையான பக்தர்…”பெரியவங்க க்ருபையால, மூணு பொண்ணுங்களை பெத்திருக்கேன்….மூணும் சின்னக் கொழந்தைங்க…..அஞ்சு வயசு, மூணு வயசு, கடேசி ஆறு மாசம்……”

“ரொம்ப சரி. ஒரு பொண்ணுக்கு காயத்ரீ…ன்னு பேர் வை! இன்னொண்ணுக்கு சந்த்யா; மூணாவது ஸாவித்ரி! முக்யமா ஒண்ணு கேட்டுக்கோ! மூணு பொண்களையும் அழகா அந்தந்த முழுப்பேரையுமே சொல்லிக் கூப்டு! பேபி…லில்லி….பில்லி…ன்னெல்லாம் கூப்டாதே!……புரிஞ்சுதா? இப்டி, காயத்ரீ, சந்த்யா, ஸாவித்ரீ….ன்னு சொல்லிண்டிருந்தாலே, காயத்ரி ஜபம் பண்ணின புண்யம் ஒனக்கு கெடைச்சுடும்! க்ஷேமமா இருங்கோ!”

பக்தரின் உள்ளும்,புறமும் ஆனந்தம் பொங்கியது. சம்பிரதாய விரோதமானது என்றாலும், அவருக்கு ஆசை. அதை பெரியவா வெகு அழகாக தீர்த்து வைத்துவிட்டார்!
—————————

குழந்தைகளுக்கு பகவானின் நாமங்களை வைப்பதே அவர்களை கூப்பிடும் சாக்கில் நம் நாக்கிலும், வீட்டிலும் பகவானின் நாமம் ஒலிக்கும் என்பதால்தான். நாராயணன் என்பதை நாணா, நாணு…என்றோ, லக்ஷ்மி என்பதை லக்கு என்றோ, தண்டபாணி என்பதை தண்டு அல்லது பாணி என்றோ நம் பக்கத்தில் வழக்கத்தில் உள்ள ஒன்று. இனியாவது திருத்திக்கொள்ளுவோம்.
 
மதுரம்... மதுரம்!

மதுரம்... மதுரம்!

ஒரு மரத்திலே புஷ்பத்திலிருந்துதான் காயும், பழமும் உண்டாகின்றன. புஷ்பமாக இருக்கும் போது நறுமணத்தையும் பழமாக இருக்கும் போது மதுரமான சுவையையும் நமக்குத் தருக்கின்றன. இந்த பழம் மதுரம் ஆவதற்கு முன்பு எப்படி இருந்தது? பூவில் கசப்பாகவும், பிஞ்சில் துவர்ப்பாகவும், காயில் புளிப்பாகவும் இருந்து அதன் பின்னரே மதுரமாகிறது. மதுரம் என்பது தான் சாந்தம். சாந்தம் வந்தால் எல்லாப் பற்றும் போய்விடுகிறது. பழத்தில் மதுரம் நிரம்பிய உடனே கீழே விழுந்து விடுகிறது. அது போல் இதயத்தில் மதுரம் வந்துவிட்டால் தானாகவே எல்லாப் பற்றும் போய்விடும். புளிப்பு இருக்கும் வரை பற்றும் இருக்கும். அப்போது காயைப் பறித்தால் காம்பிலும் காயிலும் ஜலம் வரும். அதாவது மரமும் காயும் மரத்திலிருந்து விடுபட விரும்பவில்லை. ஆனால் நிறைந்த மதுரமாக ஆகிவிட்டால் தானாகவே பற்றுப் போய்விடும். பழம் தானே விழுந்து விடும்.

படிப்படியாக வளர்ந்து மனம் முழுவதும் மதுரமான ஒவ்வொருவரும் இப்படியே ஆனந்தமாக சம்சார விருட்சத்திலிருந்து விடுபட்டு இருப்பார்கள். பழமாக ஆவதற்கு முன் எப்படிப் புளிப்பும் துவர்ப்பும் வேண்டியிருக்கின்றதோ, அது போல் காமம், வேகம், துடிப்பு எல்லாமும் வேண்டியவைதான் போலிருக்கிறது. புளிப்பு இருக்க வேண்டிய சமயத்தில் புளிக்க வேண்டும். துவர்ப்பு இருக்க வேண்டிய சமயத்தில் துவர்க்க வேண்டும். ஆனாலும், அந்தந்த நிலையோடு நிற்காமல், பிஞ்சு அனவரதமும் பழமாகிக் கொண்டே இருப்பது போல் நாமும் மதுரமான அன்பை நினைத்துக் கொண்டே இருந்தால், மோக்ஷத்தை வெளியில் தேட வேண்டாம். எந்தக் காலத்தில் எப்படி இருக்க வேண்டுமோ -அப்படி இருந்தால் தானாக மோக்ஷம் என்கிற மதுரநிலை வந்து விடும்.



Source:Sage of Kanchi

Mannargudi Sitaraman Srinivasan
 
" ஒருவன் சண்டை போட்டு மதம்


" ஒருவன் சண்டை போட்டு மதம்


" ஒருவன் சண்டை போட்டு மதம் மாற்றுகிறேன் என்றால் எதிர்த்துப் படை திரட்டிச் சண்டை போட என்னால் ஆகாது; அல்லது கோடி கோடியாய் செலவழித்து 'ஆஸ்பத்திரி, ஸ்கூல்' வைத்து ஒருவன் மத மாற்றம் செய்கிறான் என்றால், அதைப் போலக் கோடிக்கணக்கில் செலவழிக்க எனக்கு 'ஐவேஜு' இல்லை. இது இரண்டும் இருப்பதாகவே வைத்துக் கொண்டாலும்கூட, இதனால் செய்யும் மாறுதல் உண்மையானதும் இல்லை. அது நிலைத்தும் நிற்காது. ஏனென்றால், நம்மை விடவும் பலிஷ்டர்களாகவோ, நம்மை விடவும் பணவசதி உள்ளவர்களாகவோ இன்னொரு கூட்டம் வந்தால், அது, நாம் பலத்தாலும், பணத்தாலும் செய்ததை எல்லாம் அழித்துவிட்டு, தானே ஜயித்துவிடும். ஆனபடியால், இந்த வெளிச் சக்திகளை நம்பிக் கொண்டிராமல், நம் ஆத்ம சக்தியை நம்பி உள்ளுக்குள்ளே நம்மை உயர்த்திக் கொள்வதே நாம் செய்ய வேண்டியது.


அவர்கள்[பொதுஜனங்கள்] பிடித்துக் கொள்ள ஒரு உத்தம ஜீவன் தான் வேண்டும். இப்படி ஒருத்தன் சாந்தமும், கருணையும், ஞானமும், தியாகமும் நிரம்பியவனாக நம்மிடையில் வரவேண்டும் என்பதற்காகவே இத்தனை உபன்யாசங்களும் பண்ணுகிறேன். உங்களிலேயே ஒருவர் அப்படித் தோன்றிவிட்டால் அதைவிடப் பெரிய பயன் எதுவும் இல்லை. "

மஹா பெரியவாள்.



Sage of Kanchi

C Sathya Narayan.
 
Lion, lion kid, goats... Story

LION, LION KID, GOATS... STORY


Once there was a kid of lion mixed in the group of goats in a jungle, the keepers have also noticed it and think itself is also a goat. The kid lion grown in to adult in the habits of goats sounds and eating grass food. One day the father of lion saw the kid eating grass and ssurprised and get back the kid lion and asked and expalined what is Lion in habits of loud sound in a roaring to prctice and given a fresh flood meat to a taste to it`s kid., the kid tasted it attached with it. One as like a teacher the father lion took her kid to a well and helped her to found to see it`s own face in the water of well. Then the kid lion was attained it`s real taste of it`s family origine in to oneness of one love.

Please read below the inner meaning of this story of one spiritual journey in oneness of universal-love of a meditation.

The relationship between the kid lion and goats group is... Here goat's group and habits were our life in day to day livelihood, thinking that we are only with ' body's ' as a reality like goats without knowledge eating grass (foolishness) and doing mistakes in selfishness, egos, and many by eating grass instead of real food a taste (don`t take the lion or characters here).

When we grown-up, then we recognised one reality through a teacher (Guru, here a father of kid lion) that we are not timid animals like goats! If we chant the one ' mantram ' in a name of Divine or 'Onkaram' as a soul ('jeeva' - Athma' by roaring inside like a big Lion), and we can taste the `oneness` of `one love of God` in to a taste of like for example a fresh flavour like to a non-vigiterian only for example., that we forgotten `IT` in our life-cycles, it is all our one BIRTH PLACE in a love! if we recognised this truth! it is a real day of one " HAPPY-BIRTH DAY " to all human.

When we we attached this path of `ONE` Guru, he will show a path of ONENESS to find out, because one Guru is great as God to render teachings in one spirituality. Then only we should find our own image in a mirror like well water in a reflection of an ultimate real bliss GOD is nothing but an inner `CONSCIOUSNESS TRAVEL IN TO ONE UNIVERSAL LOVE OF MOTHER` is all around in to ONENESS ONLY, AS 'NIRAKARI' OR SHAPELESS ONE ONLY SUPERPOWER, IT WAS ALSO DEPENDENT ON ONE LOVE OF `MOTHER`.

THE SHAPELESS SUPERPOWER WANTS OUR BODY'S AS INSTRUMENTS IN TRANSMITTING IT'S POWER IN A CREATIVITY & CONSUMING THROUGH NATURE' MOTHER FOR OUR ACTIVITY WITH OUT HURDLES TO REACH EVERY PARTICLE OF NATURE ALONG WITH ONE MOTHER'S LOVE - COORDINATION OF PLUS & NEGATIVE POWERS LIKE IN SCIENCE IS ALSO PROVED AS ' TRUTH '.




Sage of Kanchi

Vallampati Swarup Saroja
 
ப்ராம்மணன், ப்ராம்மணனாக இருக்கிறவரைதான&#

ப்ராம்மணன், ப்ராம்மணனாக இருக்கிறவரைதான் அவனுக்கு மதிப்பு, மரியாதை- ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள்.


எந்த ஒன்றுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. பெரும்பாலும், அனைவருமே ஒரு பக்கத்தையே பார்ப்போம். மறுபக்கத்தைப் பார்க்கமாட்டோம். நமக்கு நன்றாகவே தெரிந்த துரோணர், குசேலர் என்னும் இருவரின் கதைகளையும் இங்கே தன் பாணியில் சொல்லி, அவற்றின் மறுபக்கத்தை அலசி ஆராய்ந்து அறிவுறுத்துகிறார் ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள்.


துரோணரும், இளவரசனான துருபதணும் ஒன்றாகப் படித்தவர்கள். அப்போது துருபதன் தன் நண்பனான த்ரோணரிடம், “நான் அரசனானால் உனக்குப் பாதி ராஜ்ஜியம் தருவேன்” எனச் சொல்லியிருந்தான்.எங்கே… சொன்னபடி நடந்துகொண்டானா துருபதன்? அதுபற்றி காஞ்சி ஸ்ரீ மஹா ஸ்வாமிகளே இங்கே மனம் திறக்கிறார்.

“பிற்காலத்தில் த்ரோணருக்கு தரித்ர காலம் ஸம்பவித்தது. அவர் அப்போது அரசாட்சிக்கு வந்துவிட்ட துருபதனிடம், ‘ நம் பழைய கிளாஸ்-மேட் ஆச்சே!’ என்ற நினைப்பில், உரிமையுடன் உதவி கேட்டுப் போகிறார். அவன் அதிகார போதையில், ‘இந்தப் பஞ்சாங்கக்காரப் பிச்சு நம்மோடு friend-ship கொண்டாடவா?’ என்று நினைத்து, அவரை அவமரியாதை பண்ணிவிடுகிறான்.


இதிலே, அவனுக்கு எதிரடி தரவேண்டுமென்று த்ரோணருக்குத் தோன்றி, அவர் பிற்காலத்தில் அர்ஜுனனைக் கொண்டு துருபதனைச் சிறைப் பிடிக்கிறார். அப்புறம், போனால் போகிறதென்று பாதி ராஜ்ஜியத்தைக் கொடுத்து அனுப்பி விடுகிறார். இந்த மானபங்கத்தில் அவனுக்கு வர்மம் வளர்ந்து, த்ரோணரை வதம் பண்ணுவதற்கென்றே ஒரு பிள்ளையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று யாகம் பண்ணுகிறான். யாகாக்னியிலிருந்து த்ருஷ்டத்யும்னன் உண்டாகிறான். திரௌபதியும் அப்போது உத்பவித்தவள்தான்.

பிற்காலத்தில் அர்ஜுனன் ஸ்வயம்வரப் போட்டியில் ஜயித்து இவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வரும்போது, ‘நம்மைப் பூர்வத்தில் ஜயித்துச் சிறைப் பிடித்தவனாச்சே இந்த அர்ஜுனன்?’ என்று துருபதன் நினைக்காமல், ஸந்தோஷமாகவே கன்யாதானம் பண்ணுகிறான். காரணம், முன்னே தன்னோடு சண்டை போட்டு அவன் ஜயித்தபோது அவன் காட்டிய வீரபௌருஷத்தில், இவனுக்கு அவனைப் பற்றி உயர்ந்த அபிப்ராயமே உண்டாயிருந்தது. அதனால் இவன் அவனிடம் ஆத்திரப்படாமல், அவனைத் தூண்டிவிட்டுத் தம்முடைய க்ஷாத்ரத்தைத் தீர்த்துக்கொண்ட த்ரோணரிடம் வன்மம் கொண்டான்.

கடைசியில் பாரத யுத்தத்தில், இதே அர்ஜுனன் ஆசார்யரான அந்த த்ரோணரோடேயே சண்டை போட வேண்டியதாகிறது. அவருடைய யுத்த ஸாமர்த்யத்துக்கு ஈடுகொடுப்பது ரொம்பக் கஷ்டமானபோது, பொறுப்பை பகவான் (க்ருஷ்ணர்) தன் தலையில் போட்டுக் கொண்டு, அவருக்கு ரொம்பவும் ப்ரியமான ஏக புத்ரன் அச்வத்தாமன் செத்துப் போய்விட்டான் என்று, ஸத்ய ஸந்தரான தர்மபுத்ரரைச் சொல்ல வைத்தது எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.

அச்வத்தாமன் என்ற யானையை நிஜமாகவே அப்போது ஹதம் பண்ணி, “அச்வத்தாம: ஹத: குஞ்ஜர:” என்று தர்மபுத்ரரைச் சொல்ல வைத்து, “குஞ்ஜர” (யானை) என்று அவர் முடிக்கிற ஸமயத்தில், பாஞ்ச ஜன்யத்தைப் பெரிசாக ஊதி, அந்த வார்த்தை த்ரோணர் காதில் விழாதபடி அமுக்கிவிட்டாரென்று கேள்விப்பட்டிருப்பீர்கள். உடனே, த்ரோணர் மனச் உடைந்து போய் அப்படியே ஆயுதங்களைப் போட்டு உட்கார்ந்து விட்டார். அந்த ஸமயம் பார்த்து த்ருஷ்டத்யும்னன் பாய்ந்து வந்து அவரை கொன்றுவிடுகிறான். அவன் பண்ணியதை பார்த்துப் பாண்டவ சைன்யத்தினர் உள்பட எல்லாரும் ‘தகாத கார்யம் நடக்கிறதே’ என்று விக்கித்துப்போய் அருவருப்பு அடைந்ததாக பாரதம் சொல்கிறது.

இன்னொரு கதையோ இதற்கு நேர்மாறாக, மனசுக்கு ரொம்பவும் ஹிதமாகப் போகிறது. க்ருஷ்ண பரமாத்மாவின் ஸஹபாடியான குசேலர், த்ரோணர் மாதிரியே தாரித்ரிய ஸ்திதியில் க்ருஷ்ணரிடம் போகிறார். பகவான் அவரை உதாஸீனப் படுத்தாதது மட்டுமில்லை; அவருக்குப் பரம பிரியத்தோடு ராஜோபசாரம் பண்ணி, தன்னுடைய பர்யங்கத்திலேயே (கட்டிலிலேயே) அவரை உட்கார்த்தி வைத்து, அவருக்குப் பாதபூஜை செய்து, ருக்மிணியைக் கொண்டு அவருக்குச் சாமரம்போட வைத்து ரொம்பவும் மரியாதை பண்ணுகிறார்.

தன் மாயாவித்தனத்தின்படியே அவரை தாரித்ரிய நிவ்ருத்து பற்றி எதுவும் சொல்லவொட்டாமல் பண்ணி, ஊருக்குத் திரும்ப அனுப்பிவிடுகிறார். அங்கே அவர் போய்ச் சேர்வதற்குள் கனகவர்ஷமாகப் பெய்து, ‘இது நம் அகந்தானா?’ என்று அவர் ஆச்சர்யப்படுமாறு செய்கிறார்.

இந்த வ்ருத்தாந்தம் இவ்வளவு நன்றாகப் போக, த்ரோணர் ஸமாசாரம் ஏன் அப்படி ஒன்றுக்கு மேல் ஒன்று த்வேஷமாகவும், அநீதியாகவும், அஸத்யமாகவும், மனஸை உறுத்துகிறார் போல போகிறது என்று யோசிக்கும்போது ஒன்று தோன்றுகிறது….
குசேலர் எத்தனை தாரித்ரியமாகட்டும், ப்ராம்மண தர்மத்தை விடப்படாது என்று வாழ்ந்து, எளிமையுடன் நல்ல அன்புள்ளத்துடனும் ஸாது ச்ரேஷ்டராக இருந்திருக்கிறார். அதுவே அவருக்கு இத்தனை மரியாதையை வாங்கிக் கொடுத்திருக்கிறது.

த்ரோணரும் மஹா பெரியவர்தான் என்றாலும் ப்ராம்மண தர்மப்படி தநுர்வேதம் சொல்லிக் கொடுப்பதோடு நிற்காமல், அதை மீறி இவரே கையிலே ஆயுதத்தை எடுத்து யுத்தம் செய்ததால்தான் எல்லாம் கோளாறாகப் போயிருந்திருக்கிறது.

த்ருபதனோடு இவரே சண்டையில் இறங்காமல் அர்ஜுனனைத்தான் தூண்டிவிட்டார் என்றாலும்கூட, தன்னை த்ருபதன் எதோ சொல்லிவிட்டானென்று ப்ராம்மணராகப்பட்ட அவர் இத்தனை மானாவமானமும் க்ஷாத்ரமும் பாராட்டிப் பழிவாங்க நினைத்ததே ஸரியில்லைதான்.

ஆரம்பத்திலிருந்தே அவர் ஆயுத அப்யாஸத்தில் அளவுக்கு மீறி மனசைச் செலுத்தி அப்பாவிடம் மாத்திரமில்லாமல், பரசுராமரிடம் அஸ்த்ர சிக்ஷை கற்றுக் கொண்டதிலிருந்தே கொஞ்சங் கொஞ்சமாக ஸ்வதர்மத்துக்கு ஹானி ஏற்பட்டிருக்கிறது. இப்படி செய்தால் தனக்கும் கஷ்டம், பிறத்தியாருக்கும் கஷ்டம் என்கிற மாதிரியே பிற்பாடு அவர் கதை போயிருக்கிறது. நியாயமில்லாத துர்யோதனன் கட்சியில் அவர் யுத்தம் பண்ணும்படி ஏற்பட்டது. இது அவருக்கு எத்தனை வேதனையாயிருந்திருக்கும்?

யுத்த பூமியிலானால், அர்ஜுனன் போடுகிற அம்பை விடக் கூராகத் துளைக்கும் வார்த்தயம்புகளை பீமசேனன் அவர்மேல் வீசி, அவர் பிராம்மண தர்மத்தை முறைப்படி நடத்தாதற்காகப் ரொம்பவும் நிந்தித்திருக்கிறான். வாயைத் திறக்காமல் அவர் அதையும் வாங்கிக்கட்டிக் கொள்ளும்படியாக இருந்திருக்கிறது.


ப்ராம்மணன், ப்ராம்மணனாக இருக்கிறவரைதான் அவனுக்கு மதிப்பு, மரியாதை; இதிலே அவன் தப்பிவிட்டால், மாளாத அகௌரவம்தான் என்ற இரண்டு உண்மைகளையே குசேலர், த்ரோணர் கதைகள் பளிச்சென்று எடுத்துக் காட்டுகின்றன.


aanmigam: ??? ??????? ????? ??????! ??????????... ??????!
 
பெண்கள் ஏன் அடக்கமாக இருக்க வேண்டும்?

பெண்கள் ஏன் அடக்கமாக இருக்க வேண்டும்?

radha_krishna.jpg




பராசக்தி என்று அத்தனை ஆற்றல்களுக்கும் பிறப்பிடமாக ஒருத்தியைச் சொல்கிறோமே! அவளுக்கே “ஹ்ரீமதி” – “வெட்க குணம் படைத்தவள்” – என்று சஹஸ்ரநாமத்தில் பெயர் இருக்கிறது!


இதிலே ஒரு பெரியவ தத்துவமே உள்ளடங்கியிருக்கிறது. “பெண்கள் அடக்கமாக இருக்க வேண்டும்” என்று நாங்கள் சொல்கிறபோது சில பேர் எங்களை ஆக்ஷேபித்து கேட்பார்கள். “நீங்கள் சொல்வது உங்கள் சாஸ்திரதுக்கே விரோதமாக இருக்கிறது.

சக்தி என்ற வார்த்தையே பெண்பாலாக இருக்கிறது, ஜகத் வியாபாரம் செய்கிற மஹாசக்தியையும் நீங்கள் ஸ்த்ரீ தெய்வமாகத்தான் சொல்கிறீர்கள். ஸ்திரீகள் எல்லாரும் அவளுடைய ஸ்வரூபங்களேதான். தவ தேவீ பேதா: ஸ்த்ரிய: ஸமஸ்தா: ஸகல ஜகத்ஸு என்கிறீர்கள். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்தவர்களை அடங்கி இருக்கச் சொன்னால் எப்படி?” என்று கேட்பார்கள்.


பதில் என்னவென்றால்: பராசக்தியிடம் அத்தனைசக்தி இருந்தாலும் அணுவுக்குள் உள்ள சக்தியிலிருந்து ஆரம்பித்து எல்லாவற்றின் சக்தியையும் வெளியில் தெரியாமல் உள்ளே அடைத்து அடக்கிதானே வைத்திருக்கிறாள்? அது மாத்ரமில்லை. இத்தனை ஜகத் வியாபாரமும் பண்ணுகிற தன்னையும் வெளியே காட்டிக் கொள்ளமால் ஒளிந்துகொண்டுதானே இருக்கிறாள்? அதோடு, அவள் மஹாசக்தியாயிருந்த போதிலும், தன சக்தி சக்தி அத்தனையும் அடக்கி ஒடுக்கிக்கொண்டு, ‘ஸதி’ என்றே பெயர் பெற்ற மஹாபதிவிரதையாகவே பரமேஸ்வரனின் சாந்ததில்தான் தன்னுடைய நிறைவைக் கண்டு அப்படியே ‘சிவசத்யைக்ய ரூபிணியாக’ ஒன்றிக் கிடக்கிறாள். தான் செய்யும் ஜகத்-வியாபாரம் முழுவதையும் ‘பஞ்ச க்ருத்ய பரமானந்த தாண்டவம்’ என்ற பெயரில் ஈஸ்வரனே நடராஜனாகி ஆடிக்காட்டுவதைத்தான் அவள் சிதம்பரத்தில் காட்டி, தான் வெறுமனே பார்த்துக் கொண்டு மாத்திரம் இருக்கிற ‘சிவ நடன சாக்ஷி’ யாக இருக்கிறாள். அதே மாதிரி ஸ்த்ரீகளும் தங்களுடைய சக்தியைத் தாங்களே வெளிக்காட்டாமல், வெளியிலே கொட்டாமல் அதை அடக்கி கொண்டு விட்டால் அது வீணாகப் போகாமல் புருஷ ஜாதியின் மூலம் இன்னும் சோபிதமாக ‘ரேடியட்’ ஆகும். அதில் சந்தேஹமில்லை. நான் ஏதோ அர்த்தமில்லாமல் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.

வைஷ்ணவத்தில் ஜகத்வியாபாரம் முழுவதும் செய்கிற சக்தியாக மகாவிஷ்ணுவைச் சொல்லியிருக்கிறது. சாக்தத்தில் ‘சக்தி’ என்று ஸ்த்ரீயாகச் சொல்லியிருக்கிறதென்றால் வைஷ்ணவத்தில் மகாவிஷ்ணுவை ‘புருஷன்’ என்றே சொல்லியிருக்கிறது. ‘புருஷ ஸூக்தம்’ என்றே சொல்கிறது அவரை குறித்துதானே? அதிலே இரண்டாவது அநுவாகதிலே அவருடைய சக்தியை இரண்டு விதமாகப் பிரித்து, இரண்டும் அவருடைய இரண்டு பத்னிகள் என்று சொல்லியிருக்கிறது.

ஒரு பத்னி நமக்கெல்லாம் தெரிந்த மஹாலக்ஷ்மி. சாதாராணமாக ஸ்ரீதேவி-பூதேவி என்று சொல்வதில் “ஸ்ரீ” அவள்தான். வெளியிலே பொங்கிக்கொண்டு தெரிகிற அழகும் அன்புமே “ஸ்ரீ” அல்லது “லக்ஷ்மி”. அவளை புருஷ ஸூக்தத்தில் இரண்டாவதாகச் சொல்லியிருக்கிறது. அப்படியானால் முதல் பத்னி என்ற பிரதம ஸ்தானம் அந்த ஸுக்தத்தில் – நமது மத மூலமான வேதத்திலேயே வருகிற ‘அதாரிட்டி’ வாய்ந்த ஸூக்தத்தில் – எவளுக்குக் கொடுத்திருக்கிறது என்று பார்த்தால், “ஹ்ரீ” என்ற லஜ்ஜா ஸ்வரூபிணிக்கே (வெட்க உருவினளுக்கே”) கொடுத்திருக்கிறது!

வெளியிலே தெரிவதைவிட சக்தி வாய்ந்ததான உள்ளடங்கிய அழகையும் அன்பையும்தான் அந்த உள்ளடக்கத்தாலேயே இங்கே “ஹ்ரீ” என்ற வெட்கமாகச் சொல்லியிருக்கிறது! சக்தி இருக்கிறது என்பதற்காக அதை ஸ்த்ரீ தெய்வமான ஹ்ரீ, தானே வெளியிலே அவிழ்த்துக் கொட்டவில்லை. ‘புருஷன்’ என்றே சொல்லப்படும் தன புருஷ தெய்வத்துக்கு அடங்கிய பத்னியாகத் தான் இருந்து கொண்டு அவரே ஜகத் வியாபாரம் செய்யும்படி விட்டிருக்கிறாள்.

பரப்பிரமத்துக்கு வாசகமாக ஒரு மந்த்ரம் இருக்கிறது. “சக்தி பீஜம்” என்றே அதைச் சொல்வார்கள். ஆனால் அதுவே “வெட்கம்” என்பதன் அடியாகப் பிறந்ததாகத்தான் இருக்கிறது! ஹ்ரீ என்றால் “வெட்கம்” என்று சொன்னேனல்லவா? அந்த அக்ஷரதைக் கொண்டேதான் பராசக்தியின் மந்த்ர ஸ்வரூபம் இருக்கிறது. இதை ஸ்பஷ்டமாகத் தெரிவிற்கிராற்போல் சஹஸ்ரநாமத்தில் அந்த சக்தி பீஜாக்ஷரதைச் சொல்கிற நாமாவுக்கு அடுத்ததாகவே அவளுக்கு “ஹ்ரீமதி” என்ற நாமாவைக் கொடுத்திருக்கிறது.


ஆகையினால் ஸ்திரீகளிடம் சக்தி இருப்பது வாஸ்தவந்தான் என்றாலும் அதை அவர்கள் தாங்களே வெளிக்காட்ட வெட்கப்பட்டு, அடங்கி உள்ளே வைத்துக்கொண்டு, அதுவாக புருஷஜாதி மூலம் ரேடியேட் ஆக விடவேண்டும் என்பதுதான் தாத்பர்யம்.


பெண்களுக்கு வெட்கம் முதலான மேன்மைக் குணங்கள் ஜாஸ்தியாக இருக்கின்றன என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அவர்கள் புருஷர்களைவிட சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள். பயப்பட்டு விலவிலத்துப் போவது, துக்க உணர்ச்சியில் குபுகுபுவென்று அழுவது இப்படியெல்லாம் அவர்களுடைய “நேச்சர்” இருக்கிறது.


இதெல்லாம் சின்ன அம்சங்கள். பெரிய அம்சங்கள் பரமோத்தமானவை.


HH Vaariyaar Swamigal says in the Ramayana lecture that had Mother Sita wanted to destroy Lanka, she would have done that within no time. When Lord Anjaneya wanted to destroy, she stops Him also by advising that it would not be a right thing to do as it would reflect bad on Lord Rama.



https://mahaperiyavaa.wordpress.com/2013/10/31/
 
அவிழ்த்துப் போட்ட கேசம் அத்தனை அமங்களமா&

அவிழ்த்துப் போட்ட கேசம் அத்தனை அமங்களமானது




குடுமி, கொண்டை, பின்னல் என்றிப்படிக் கேசத்தை விரிக்காமல் ஒரு கட்டுக்குள் வைத்திருந்தால்தான் மங்களம். ஸ்திரீகள்-புருஷர்கள் யாரானாலும் பிரேத கார்யத்தில்தான் கேசத்தை அவிழ்த்து விடுவது. மற்ற சமயங்களிலும் அப்படி இருந்தால் அதைப்போல ஒரு க்ஷாமம் கிடையாது. எப்போதும் அப்படி என்றால் லோகத்தில் பிரேதம், ஆவி சூழ்ந்திருக்கிற மாதிரியான நிலவரம்தான் இருக்கும். மனசின் அடக்கம், கட்டுப்பாடு என்பதில்தானே உத்தமமான வாழ்க்கையே இருக்கிறது? அதற்கு வெளிச் சின்னமாகத்தான் அடங்காமல் பறக்கிற கேசத்தை ஸ்திரீ-புருஷர் இருவருமே முடிந்து கொண்டு அதனாலேயே துர்மங்கள சக்திகள் சேராமலும் ரக்ஷித்தார்கள்.


கேசத்தின் ஒவ்வொரு இழையையும் அப்படியே விரித்து விட்டு விட்டால் துஷ்ட சக்திகளைப் பிடித்து இழுத்து வருகிற ஒவ்வொரு ‘எரியல்’ மாதிரி. அதனால்தான் அதை அப்படி விடாமலே முடிவது. அடியிலிருந்து நுனிவரை பின்னி, நுனியில்கூட ஒரு பிச்சாளமும் வெளியே பார்க்க இல்லாமல் நாரோ, குஞ்சலமோ வைத்துத் தற்காப்புப் பண்ணுவார்கள். பின்னலையே கொண்டையாகப் பிச்சோடா என்றும் முடிந்து போட்டுக் கொள்வார்கள்.


நம் மாதிரி ‘லோல்’ படாமல் பாரமார்த்திகமாகப் போன யோகசித்தர்கள் விஷயம் வேற. அவர்கள் நீண்ட ஜடையை அப்படியே தொங்க விட்டாலும் பீடைகள் நெருங்காது. அவர்களுடைய அவிழ்ந்த கேசமும் திவ்ய சக்திகளையே க்ரகுஇத்துக் கொடுக்கும். மகான்களான ரிஷிகளும் ‘ஜடாமுடி’ என்றே சொல்கிற மாதிரி ஜடையைத் தூக்கி கட்டி நன்றாக முடிந்து கொண்டுதான் இருந்திருக்கிறார்கள்.


பொதுவாக, கேசத்தை வளர்ப்பது சக்திகளைச் சேகரித்துக் கொள்பவர்களுக்கு ஆனதுதான். பைபிளில் கூட ஸாம்சன் என்கிறவனின் சக்தி அவனுடைய கேசத்திலேயே இருந்ததாகக் கதை வருகிறது. மகான்களிடம் அதீத சக்தி இருந்தாலும் அது நல்லதற்கே ப்ரயோஜனமாகும். நம்மிடம் சக்தி ஒரு அளவுக்கு மேல சேர்வது ஆபத்துதான். கிருஹஸ்தரானால் அப்படி சக்தியைச் சேர்த்துத் தருகிற கேசத்தை நன்றாக கட்டி முடிந்து அடக்க வேண்டும். சக்திகளை தள்ளி சாந்தத்திலேயே போக வேண்டுமேன்பதால் தான் அவன் கேச விசர்ஜனம் பண்ணி மொட்டையடித்துக்கொண்டது.

வபனம் என்று அப்படி ‘பீரியாடிக’லாக அவன் சாஸ்திரம் சொல்கிறபடி நாள் பார்த்து கேச விசர்ஜனம் செய்வதற்கு முன் கேசம் வளரத்தானே செய்யும்? அது சக்தியை இழுத்துக் கொள்ளமலிருப் பதற்காகவும் அவன் முட்டாக்குப் போட்டுக் கொள்வது. முண்டனம் செய்த மண்டையை வெளியே காட்டக்கூடாது என்பதும் ஒரு காரணம். தபோ சக்தியை க்ரஹித்து தாரணம் பண்ணும்படியாக நேரும் தீக்ஷ காலம் முதலியவற்றில் க்ஷவரம் கூடாது என்று சாஸ்திரம் கூறியிருக்கிறது. அதே சாஸ்த்ரம் அந்தக் காலம் ஆனவுடன் க்ஷவரம் செய்து கொள்வதையும் ஒரு முக்கியமான ஸம்ஸ்காரமாகவே சொல்லியிருக்கிறது.


மொத்தத்தில் விஷயம், நம்மைப் போன்ற சாமான்யப்பட்டவர்கள் கேசத்தை அவிழ்த்துப் போட்டுக் கொண்டிருந்தால் அது கேட்ட சக்திகளை, பீடைகளை ஆகர்ஷிக்கும் என்பதுதான்.


துர்மாந்த்ரீகம் பண்ணும்போது, நாசகாரமான ஆபிசாரம் செய்வதென்றால், அப்போது அதற்கான யந்த்ரத்தில் ஒருவருடைய நகத்தை வைத்தும், கேசத்தைச் சுற்றியுந்தான் பூமியிலே புதைப்பார்கள். இதிலிருந்தே கேசம் என்று சர்வ சாதாராணமாக இருப்பதை அதற்கேற்ற முறையில் ஜாக்ரதையாக ரக்ஷிக்காவிட்டால் எத்தனை ஆபத்து, அனர்த்தம் என்று தெரிந்து கொள்ளலாம்.


கேசத்தில் இப்படி ஆபத்துக்கு இடமிருக்கிறது என்பதால் அதை வெட்டிக் குறைத்து புருஷர்களானால் ‘க்ராப்’ வைத்துக் கொள்வது , ஸ்திரீகளானால் ‘பாப்’ வைத்துக் கொள்வது என்பதும் சுத்தத் தப்பு. இப்படிப்பட்ட எல்ல விஷயங்களிலும் சாஸ்திரம்தான் பிராமாணம்.

எது எவருக்கு, எந்த அளவுக்கு என்று அது நிர்ணயம் செய்து கொடுத்திருக்கிறபடிதான் செய்ய வேண்டும். புருஷர்களானால் க்ருஹஸ்தரும் ப்ரம்மசாரியும் கேசத்தில் ஒரு பாகத்தை மட்டும் க்ஷவரம் செய்துகொண்டு மற்றதை ‘சிகை’ என்ற குடுமியாக முடிந்து கொள்ள வேண்டும். சந்நியாசி முழு மொட்டை.

ஸ்த்ரீ சந்நியாசியின் உசந்த ஸ்தானத்திலேயே ஞான-வைராக்யாதிகளுக்கு இருப்பிடமாக வைக்கப்பட்ட விதந்துக்களுக்கும் (விதவைகளுக்கும்) அப்படியே பூர்ண கேச விசர்ஜனம். இங்கேயும் சாஸ்திரமே அங்கீகரிக்கிற குலாசாரத்தின் படி அந்தக் குலங்களைச் சேர்ந்தவர்கள் விசர்ஜனம் செய்யாமலும் இருக்கலாம்.

விதந்துக்கள் விஷயம் இப்படி இரண்டு விதமாயிலிருந்தாலும், ஸ்த்ரீகளில் பாக்கி அதிகம் பேராக இருக்கிற கன்னிகைகளும் சுமங்கலிகளும் ‘பாப்’ செய்து கொள்வது மாதிரியாகக் கேசத்தை வெட்டிக் கொள்கிற எந்த பேஷனையும் ஸ்வப்னத்தில்கூட நினைக்கக் கூடாது.

ஸ்த்ரீகள் விஷயத்தில் விரித்த கேசம் எத்தனை அலக்ஷ்மியோ (மூதேவித்தனமோ) அத்தனை அலக்ஷ்மி கேசததைக் கொஞ்சமோநஞ்சமோ வெட்டிக் கொள்வதும்.

இதனாலெல்லாம் ஊரிலும் க்ஷாமம் ஜாஸ்தியாகும்.


https://mahaperiyavaa.wordpress.com/2013/09/25/
 
திருஆனைக்கா செல்லப்பிள்ளை!

திருஆனைக்கா செல்லப்பிள்ளை!


akilandeswari.jpg



பிள்ளையாருடைய மனஸ் எத்தனை நல்லது என்பதற்கு ஒன்று சொல்லிவிட்டால் போதும். ஒருத்தரின்கிட்டேயே கோபம் நெருங்க முடியாது; மகா கோபிஷ்டர் கூட அவருக்கு முன்னால் தானாகவே சாந்தமாகி விடுவார் என்றால், அப்படிப்பட்டவர் வெகு நல்ல மனம், உயர்ந்த அன்புள்ளம் படைத்தவ ராகத்தானே இருக்க வேண்டும். இப்படி ஒரு உதாஹரணம் பிள்ளையார் விஷயமாக இருக்கிறது.

நம் எல்லோரிடமும், ஈ எறும்பில் இருந்து ஆரம்பித்து அனைத்து ஜீவராசிகளிடமும் பரம கிருபையோடு இருக்கக்கூடியவர் யார்? ஸாக்ஷ£த் அம்பாள்தான். இத்தனை ஜீவராசி களுக்கும் தாயாக இருக்கப்பட்ட அகிலாண்ட ஜனனி அவள்தானே? அப்படிப்பட்ட அந்த அகிலாண்டேச்வரியே ஒரு ஸமயம் உக்ர ரூபம் கொண்டிருந்தாள். ஜம்புகேச்வரத்தில் (திருவானைக்காவில்) இருக்கப்பட்ட அகிலாண்டேச்வரி, கலிகாலத்தில் ஜனங்கள் போகிற போக்கைப் பார்த்து இப்படி உக்கிர கோலமாக ஆகிவிட்டாள். ஸகல சக்தியும் அவள்தான் ஆகையால் அன்பில் பரம ஸெளம்யமான லலிதாம்பாளாக இருக்கப்பட்ட அவளே கோபம் வந்தால் அதன் உச்சியில் காளியாயிருப்பாள். இப்போது அப்படித்தான் ஆகியிருந்தாள்.

கலியைக் கட்டுப்படுத்தி வைப்பதற்காக அவதாரம் செய்திருந்த நம்முடைய ஆச்சார்யாள் அங்கே வந்தார். பரமேச்வர அவதாரம் ஆனதால், அவரால் உக்ர கோலத்திலிருக்கிற அம்பாளிடமும் போக முடியும்.

ஆனாலும் அவர் இந்த ஸந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பிள்ளையாரின் அன்பு மனப் பெருமையை உலகத்துக்குத் தெரிவிக்க நினைத்தார். அதனால் அம்பாளுக்கு நேர் எதிரே, கோயில் முடிந்து மதில் வந்துவிடுகிற அவ்வளவு தூரத்திலே, பெரிசாக ஒரு பிள்ளையாரை பிரதிஷ்டை பண்ணிவிட்டார்.



அவ்வளவுதான் செல்லப்பிள்ளை எதிரே இருக்கிறான் என்றதும் அம்பாளுடைய அத்தனை உக்கிரமும் போன இடம் தெரியாமல் போய் விட்டது! அப்போது அம்பாளைவிட்டு போயிருந்த கோபம் மறுபடியும் ஒருபோதும் அவளிடம் திரும்பிவிடக் கூடாதென்று, நினைத்தார் ஆச்சார்யாள். அதனால் அந்த உக்ர கலைகளை இரண்டு தாடங்கங்களில் ஆகர்ஷித்து சமனம் செய்தார் (அடக்கினார்). அந்த தாடங்கங்களை அம்பாளின் காதுகளிலேயே அணிவித்தார்.

ஜம்புகேஸ்வரம், திரு ஆனைக்கா இரண்டு பெயர்களிலுமே பிள்ளையார் சம்பந்தமிருக்கிறது. ஜம்பு என்பது நாவல் மரம். பிள்ளையாருக்கு ரொம்பப் பிடித்தது நாவல் பழம். திருஆனைக்கா என்றபோதும் அதில் ஆனை வந்து உட்கார்ந்து கொண்டு கஜானன மூர்த்தியை ஞாபகப்படுத்துகிறது.



- மகா பெரியவா (தெய்வத்தின் குரலிலிருந்து)



https://mahaperiyavaa.wordpress.com/2013/10/20/
 
ஞான மார்கம்

ஞான மார்கம்
—————————-
முருகன் என்றால் ஞான பண்டிதன், ஞானோபதேசம் என்பது நினைவுக்கு வந்துவிடுகிறது. அத்வைத ஞான ஸ்வரூபமாகவே, அவரைத் திருப்புகழிலும் கந்தரபூதியிலும் அருணகிரிநாதர் சொல்லிருக்கிறார்.


நான் வேறு எனாதிருக்க, நீ வேறு எனாதிருக்க
ஏகபோகமாய் நீயு நானுமாய்
இறுகு வகை பரம் சுகமருள்
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலை நின்றது தற்பரமே


பக்தி மார்கம்
—————————-
பக்தி மார்க்கத்தில் முருகன் முடிவாக இருப்பதைச் சொல்லவே வேண்டாம். அடியார்களின் பக்தியையும் அவர்களிடம் கருணையையும்தான் புராணக்கதைகள்.

ஸம்ஸ்கிருத ஸ்தோத்திரங்கள், தமிழ்த் துதி நூல்கள் எல்லாம் விஸ்தாரமாகச் சொல்கின்றன. இவற்றில் எல்லோருக்கும் ஒரு சில திருப்புகழ்கள், திருமுருகாற்றுப்படை, ஸுப்ரஹ்மணிய புஜங்கம் ஆகியனவாவது மனப்பாடமாகத் தெரிந்திருக்க வேண்டும்.


கர்ம மார்கம்

—————————
கர்மா என்று எடுத்துக் கொண்டாலும், குமரிலப்பட்டராகவும் ஞானசம்பந்தராகவும் அவதரித்து அவரே, இந்த மார்க்கத்தை ஸ்தாபித்திருக்கிறார். அப்பர் ஸ்வாமிகள் தாஸமார்க்கம் என்ற வழியில் எப்போதும் லோக க்ஷேமத்துக்காக ஊழியம் செய்துகொண்டே இருந்தவர். அவர் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று



சொன்னவர். இந்த வரி வருகிற செய்யுளின் ஆரம்பம் நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன் என்பது. கடம்ப மாலையை விரும்பி அணிகின்ற முருகன்தான் கடம்பன். முருகனைப் பெற்ற அம்பாளைத் தன் பாகத்தில் கொண்ட பரமேசுவரன் என்ற ஸோமாஸ்கந்த மூர்த்தமாக இங்கே அப்பர் சொல்கிறார். நிஷ்காம்யமாகப் பணி செய்து கிடக்கிற பான்மையை முருகன் விசேஷமாக அருள்வான் என்கிற மாதிரி நம் கடம்பன் என்று ஆரம்பத்திலிருக்கிறது.

arunagiri_murugan.jpg




யோகமார்கம்
——————–
கடைசியில் யோகம் எனறு சொன்னேன். இது பிராண மூலத்தைக் கண்டுபிடித்து, அதோடு சேர்கிற வழி, பிராண சக்தி என்பது சரீரத்தில் மூலாதாரம் என்கிற இடத்தில், குண்டலினீ என்கிற ஸர்ப்ப ரூபத்திலேயே இருக்கிறது. நமக்கெல்லாம் அதன் மகாசக்தி தெரியவேயில்லை. அது குண்டலாகாரமாகச் சுருட்டிக் கொண்டு தூங்குகிற பாம்பாகவே இருக்கிறது. தூங்கும் பாம்பைத் தட்டி எழுப்புவதற்குத்தான் யோக சாதனைகள் இருக்கின்றன. சுப்ரம்மணியர் யோக விஸ்வரூபம். அதனால்தான் அவரை எப்போதும் பாம்போடேயே சேர்த்துச் சேர்த்துச் பேசுகிறோம்.

வீஸுகி தக்ஷகாதி ஸர்ப்ப ஸ்வரூப தரணாய என்று முத்துஸ்வாமி தீக்ஷிதர்கூட ஸ்ரீ ஸுப்ரஹ்யமண்யாய நமஸ்தே கிருதியில் சொல்கிறார். ஆசார்யாளும் புஜங்கம் (புஜங்கம் என்றாலே பாம்பு) என்ற விருத்தத்தில்தான் ஸ்தோத்திரம் செய்கிறார்.

நாகர் பிரதிஷ்டை, ஷஷ்டியில் நாகராஜா பூஜை எல்லாம் சுப்ரம்மணியரை உத்தேசித்தே செய்கிறோம்.



(தெய்வத்தின் குரல்)


https://mahaperiyavaa.wordpress.com/2013/11/08/

 
Gems from Maha Periyava

Gems from Maha Periyava

நவீன ஸயன்ஸின் அபிவிருத்தியினால் எல்லா சௌகரியங்களையும் செய்து கொண்டு ஆனந்தமாக வாழலாம்.

மதமும். அநுஷ்டானமும் எதற்கு வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள். ஸயன்ஸினால் பல சாதனங்களை உண்டாக்க முடிவது உண்மையே. ஆனால் இதனால் ஆனந்தம் என்பது மனத்திருப்தியை, உள்ள நிறைவைக் குறித்த விஷயம். சௌகரிய வாழ்வுக்கு இதெல்லாம் தேவை. இன்னமும் தேவைகள் இருக்கின்றன என்ற அடிப்படையில் ஒயாமல் திரவியங்களைச் சேகரித்துக் கொண்டிருப்பதில் மக்கள் திருப்தியா அடைந்து வருகிறார்கள்.

ஏற்கெனவே இருந்த திருப்தியும் போய்விட்டதைப் பார்ப்போம். அதோடு இதில் போட்டாபோட்டி, வர்க்க பேதம், துவேஷம் எல்லாமும் வளர்ந்து விட்டன. மநுஷ்யனின் ஆசையைப் பூர்த்தி செய்வது முடியாத காரியம். ஆசைகளைக் குறைத்துக் கொண்டாலே உண்மையான ஆனந்தம் காணமுடியும். இதற்கு வழி காட்டுவது மதம்தான்.

லௌகிக விஞ்ஞான அபிவிருத்தியால் ஆத்ம சாந்தி காண முடியவில்லை என்று அமெரிக்கா, ரஷியா ஆகிய இரு தேசங்களும் நிதரிசனமாகக் காட்டுகின்றன. முதலில் ஸ்புட்னிக் செய்து உலகைக் சுற்றவிட்ட நாடு ருஷ்யா. அது கம்யூனிஸ நாடு. அங்கு மத போதனை கிடையாது. இருந்தாலும் டெக்னாலஜி அபிவிருத்தி மட்டும் அந்த நாட்டுக்கு உள்ள நிறைவை அளிக்கவில்லை. அதனால்தான் நமது மகாபாரதத்தை ரஷிய மொழியில் மொழி பெயர்த்துத் தங்கள் பள்ளிகளில் போதிக்க அவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

அமெரிக்க மக்களுக்கு ஆத்ம சந்துஷ்டி இல்லாததாலேயே அவர்கள் யோகம், வேதாந்ததம், சங்கீர்த்தனம் இவற்றில் திரும்பியிருக்கிறார்கள். ஸயன்ஸில் மிக முன்னேறிய தேசங்கள் நம் பாரத தேசத்தின் பக்கம் திரும்பிப் பயனடைய முயலும்போது, நாமே நமது புராதன தர்மத்தை மறந்து வெறும் இந்திரிய சௌக்கியத்தில் இறங்கினால் அது ரொம்பவும் பரிதாபமாகும்.



Source: Sage of Kanchi

Sunderasan Subramanian
 
Vedic language is the oldest and time honoured

Vedic language is the oldest and time honoured


Once four foreigners visited Kanchi Mutt to have dharshan of Maha Periyavaa. They were an Israeli, an Italian, a German and a British. They had come to do their Ph.D., in Philology on the topic of 'the most ancient languages in the Occidental and the Oriental world'. They were studying Latin, Hebrew and Greek languages in the Occidental part and Sanskrit and Tamil in the Oriental part.


Periyava was in his private quarters, performing his nithya karma and anushtanas and elaborate poojas ; they had waited and desired to take a photo of Him but His kaingaryams refused permission to photograph the Periyavaa. They were heartbroken that they could not take a picture. All the four of them were standing near a tree since morning waiting for the Periyava to finish his poojas and give dharshan. Many were already waiting like them


Some one asked them '' how come you all have been standing for the past 6 hours? One of them looked at his watch and exclaimed, 'oh my God, has it been 6 hours? He is a Man of Certainty and is Beyond Time!'


Periyavaa came in after 10 minutes. All went and prostrated to Him. Looking at the man (who had the camera hanging on his neck) who had wanted to take the photos, Periyavaa gestured with His hands indicating that he can take pictures now. He posed for three photos and stopped him before the fourth.


''Whey have you all come here and with what purpose? " asked Periyavaa.


''We have visited many places regarding our research on the most ancient language''


"Oh I see. Did you arrive at any conclusion as to which is the most ancient language?"


The Israeli replied, "Hebrew is the most ancient in the Occident; but in the Oriental, people say that both Sanskrit and Tamil are the oldest, we are confused and that is why we are here for Your opinion".


Periyavaa added "There is another language which is the most ancient than all these, it is the Vedic Language. It is the Source of even Sanskrit and Hebrew.'' Periyavaa thought for a while and then added


"There is a verse about Rebirth in Hebrew, can you recite it completely?" HE asked the Israeli by giving the man the first two words.


The Israeli recited it for 3 to 4 minutes. Swamigal looked around and asked some Mutt student boys, and addressed them


" You have all learnt Rig Veda, can you recite this particular verse? he suggested certain manthras to the boys."


Those boys recited the vedha manthra for about 5 minutes.


Periyavaa then addressed the Israeli ''Did you understand what these boys recited now?"


The four men remain quiet.


Maha Periyava smiled and turned to the boys and said "you all will definitely not understand what this man had recited in Hebrew!"


He then turned to the Israeli and said, " what you have chanted before is the same as what these boys chanted!"


The 4 foreigners were stunned and did not know what to respond. Periyavaa told them that he will prove it and asked for a paper and a pen.


"In Vedas it is mentioned that the world has been classified into 32 portions/regions. And in each of the 32 geographic regions, Vedas say how the Veda Aksharas have changed/pronounced in those places!"


He asked each of them which region they came from and then explained how a particular Veda Aksharam has been changed in the individual places! He asked the boys to recite the particular verse from Rig Veda again and told the men how each Aksharam in Rig Veda in that verse
will sound in their Regions!


"I will now say this verse with some difficulty as it has been a long time since I had Abhyasam. and the Mahan started to chant the manthra slowly, slightly differing from the basic sloka aksharam so that it matched how it will sound in Hebrew. After he recited the aksharams he asked the Israeli if he understood the recital of the manthra and aksharam and observed any familiarity.


To the Vedic boys He said, "I said the slokas in a slightly different form based on how each Aksharam will sound in Hebrew. Please do not think it is wrong; there is this injunction in the Vedas that it can be recited this way also."


To everybody's astonishment and surprise, the Israeli started to recite in Hebrew what exactly Periyavaa chanted the aksharas in a modified form, as it resembled Hebrew language. The Israeli therefore chanted it together with Him!!!


After this demonstration Periyavaa addressed all assembled there "I told you earlier, the same verse in Rig Veda is present ditto in Hebrew, but the Aksharas have changed slightly. (like we say "Yamuna" but in the North it is "Jamuna", "Va" in the south is "Ba" in West Bengal, "Paa" in Tamil is "Haa" in Kannada etc)


Therefore, the most ancient language in the world is the Vedic language!" Swamigal asked the the paper and pen to be supplied to the four men to prepare a table and fill it with how the Rig Veda Aksharams sounded in their language. This was completed in 15 minutes.


The Israeli was shocked and exclaimed, "this is something unimaginable!"


He asked him, "what do you think now? Do you now agree that everything has sprung from Vedas?"


The look on the Israeli was not convincing.


Periyavaa interpolated ''what are you thinking. May be the Vedas could have originated from Hebrew?"


The man nodded his head "yes, it could have been the other way also, may be the Vedas could have come from Hebrew".


Periyavaa replied smilingly "you have only the lock, whereas we have both the key and the lock! It is even mentioned in the Vedas as to which Maharishi from here in India went to your region and spread/taught Vedas in Israel!"


The man seemed to be convinced in the end that the Vedic language is the oldest and time honoured''

Scorpion Wings,: THE OLDEST LANGUAGE
 
Miracles of kanchi mahaperiyava

MIRACLES OF KANCHI MAHAPERIYAVA


1963 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சிஅம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காஞ்சி பரமாச்சாரிய சுவாமிகளின் முன்னிலையில் முக்கிய நிகழ்ச்சிகள் நடத்தி வைக்கப்பட்டன. அப்போது அங்கே வந்திருந்த முன்னாள் அமெரிக்க தூதர் டாக்டர் ஆல்பர்ட்ஃபிராங்க்ளின் தனது அநுபவத்தை விவரிக்கிறார்;


“மீனாட்சி அம்மன் ஆலயத்தின் விமான மண்டபத்தில் கூடி இருந்த முக்கியப் பிரமுகர்கள் மரியாதையுடன் விலகி வழிவிட்டார்கள். ஒரு முதியவர் மெல்ல நடந்து வருவதை கண்டேன். அவர்தான் காஞ்சி பரமாச்சாரியசுவாமிகள் என்று புரிந்து கொண்டேன். அவர் எளிமையே உருவானவர். அவர் தனது ஆன்மீக சக்தியைத் தவிர வேறு எதையும் தனக்கென்று வைத்துக் கொள்ளவில்லை. முழுமையான துறவு மிக உயர்ந்த நிலை என்பதை எல்லா மதங்களும் கூறுகின்றன. ஏசு கிறிஸ்து அதைத்தான் தன்னிடம் “நான் காப்பாற்றப் படுவதற்கு எது தேவை?” என்று கேட்ட பணக்காரரிடம் கூறினார்.



Miracles%20of%20Kanchi%20mahaperiyava%2002.jpg

இங்கே தமிழ்நாட்டின் கலாசாரம் மிகுந்த நகரில் முக்கியமான ஆலய கும்பாபிஷேக விழாவில் கூடி இருந்த பிரமுகர்கள், செல்வந்தர்கள், முதலாளிகள் அனைவரும் அந்த எளிமையே உருவானவரிடம் கைகட்டி நிற்பதைக் கண்டேன்.

அந்த முதுமையான உடலுக்குள் அதிசயக்கத்தக்க பலமும் மனோதிடமும் இருந்தன. இரும்புக்கம்பிகளைப் பிடித்துக்கொண்டு அவர் மளமளவென்று கோபுரத்தின் உச்சிக்குச் செல்லும் படிகளில் ஏறினார். கைத்தடியை ஊன்றிக்கொண்டு பிராதன வாயிலின் மையப் பகுதியில் அமர்ந்து கொண்டார். அனைவரின் கரங்களும் அவரை நோக்கிக் குவிந்தன. கும்பாபிஷேக விழா முடியும் வரை அவருடைய பக்தர்கள் கட்டுப்பாடுடன் அமர்ந்திருப்பதைக் கண்டேன்!”


ஆல்பர்ட் ஃபிராங்க்ளின் ஆச்சாரிய சுவாமிகளின் அறுபதாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். மத எல்லைகளைக் கடந்து அங்கே வந்து பெரியவர்களின் ஆசிகளைப் பெறும் தகுதி கிடைத்ததற்குப் பெருமை கொள்வதாகக் கூறினார்.அவர் பட்டம், பதவி, பணம் எதையும் பொருட்படுத்தாவிட்டாலும் பாரத மக்களின் பெருமையை உலகெங்கும் பரப்பும் ஒளிவிளக்காகத் திகழ்வதாகக் கூறினார்.

இருபத்தோரு வயது நிறைவதற்குள் பாரத தேசம் முழுவதையும், கால்நடையாகவும் பல்லக்கிலும் சென்று மக்கள் அனைவரையும் ஆசிர்வதித்து, கலாச்சாரப் பெருமையையும் ஆன்மீக உணர்வுகளையும் தூண்டி ஒளிபெறச் செய்த பெருமை மகா சுவாமிகளுக்கு உரியது. இந்த வகையில் அவரை பாலகனாக இருந்து பாரததேசத்தின் பெருமை ஒளிவீசிட திக்விஜயங்களின் மூலம் நிகழ்த்திய ஆதிசங்கர பகவத்பாதருக்கு நிகரானவராகவே நான் கருதுகிறேன் என கூறினார்


http://swasthiktv.com/index.php/mahaan/item/104-miracles-of-kanchi-mahaperiyava
 
எலுமிச்சை மாலையைக் கொண்டு என்ன செய்யலாம&

எலுமிச்சை மாலையைக் கொண்டு என்ன செய்யலாம்?
– மகா பெரியவா காட்டிய வழி!

சொன்னவர்-ஜி.நீலா, சென்னை

நன்றி-தீபம் – கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்

(குறிப்பு: நீங்கள் கீழே காணும் எலுமிச்சை மாலையுடன் கூடிய பெரியவாளுடைய இந்த உயிரோவியத்தை தீட்டியவர் நம்முடைய மதிப்பிற்குரிய Forum Moderator திரு anusham163 அவர்கள்)

சமீபத்தில் ஒரு பத்திரிகையில், ‘கோயிலில் பிரசாதமாக கொடுக்கும் எலுமிச்சம் பழ மாலையை என்ன செய்வது? வீட்டில் உபயோகிக்கலாமா?’ என்ற கேள்விக்கு, ‘கோயிலில் பிரசாதமாக கொடுக்கும் எலுமிச்சம் பழ மாலையை பூஜையறையில் வைக்க வேண்டும். பழங்கள் கெட்டுவிட்டால், ஏதாவது மரத்தினடியிலோ ஆறு, குளம், கிணறு போன்ற நீர்நிலைகளிலோ போட்டுவிட வேண்டும். ஜூஸ் செய்தோ, ஊறுகாய் செய்தோ சாப்பிடக்கூடாது’ என்று பதிலளித்திருக்கிறார்.

இந்தப் பதிலை படித்ததும், எனக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

என் தந்தைக்கு, ஸ்ரீகாஞ்சி மஹா ஸ்வாமிகள்தான் குலதெய்வமே. அவர் எங்கு முகாமிட்டிருந்தாலும், மாதம் ஒருமுறையாவது தரிசிக்காமல் இருக்கமாட்டார். (1952ஆம் ஆண்டு ‘வியாஸ பூஜை’ ஆடுதுறைக்கு அருகிலுள்ள சாத்தனூர் என்ற கிராமத்தில் (‘திருமூலர்’ சாத்தனூர் என்பார்கள்) எங்கள் கிரஹத்தில்தான் நடைபெற்றது!

அநேக தடவைகள் எங்கள் கிராமத்தில் மகா பெரியவர் முகாமிட்டிருந்தாலும், அந்த முறை மூன்று மாதங்கள் இங்கு தங்கியிருந்தார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வழக்கம்போல் பெரியவாளை தரிசனம் செய்ய நினைத்தபோது, அவர் ஆந்திர மாநிலம் ‘ரேப்பள்ளி’யில் முகாமிட்டிருந்தார்.

‘ரேப்பள்ளி’க்கு நானும் என் தந்தையுடன் சென்று ஸ்ரீபெரியவரையும், ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் பூஜையையும் இரண்டு நாள் தங்கி தரிசனம் செய்தோம்.

மூன்றாவது நாள் என் தந்தை வந்தனம் செய்து, ‘அப்ப நான் உத்தரவு வாங்கிக்கொள்ளட்டுமா…” என்று பெரியவாளிடம் உத்தரவுக்காக பணிந்து நின்றார்.

உடன் அவர், “ஊருக்குத்தானே நேரே போகிறாய்…” என்றார். “ஆமாம்” என்று என் தந்தை கூறவும், தன் கழுத்திலிருந்த எலுமிச்சம் பழ மாலையை கழட்டி என் தந்தையிடம் கொடுத்து, இன்னும் ஒரு மாலையையும் கொடுத்து, “இதை எடுத்துண்டு போய் ஆத்துல ஊறுகாய் போட்டு, திருவிடைமருதூர் பாடசாலை குழந்தைகளுக்கு கொண்டு போய் கொடுத்துடறியா…” என்றார்.

என் தந்தை உடனே “பெரியவா உத்தரவு” என்றபடி மாலைகளை பெற்றுக்கொண்டு, சென்னையில் கூட தங்காமல் சாத்தனூர் வந்து ஊறுகாய் போட்டு, திருவிடைமருதூர் பாடசாலை குழந்தைகளுக்கு கொண்டு கொடுத்தார்!


Source:Sage of Kanchi

Varagooran Narayanan
 
காமாட்சி என்று ஒரு பூக்காரி

காமாட்சி என்று ஒரு பூக்காரி

காஞ்சி மடத்தருகில், காமாட்சி என்று ஒரு பூக்காரி இருந்தாள். அவள் பெரியவாளை "அப்பா" என்றுதான் அழைப்பாள். தினமும் ஒரு கூடை பூவினால் பெரியவாளை அர்ச்சிப்பாள்.பெரியவா ... "ஏன் இப்படி பூவை வீணாக்கறே? இதை வித்தா உனக்கு காசு கிடைக்குமே!" என்பார். "காசு பெரிசா சாமி! உன் தலையில் அர்ச்சித்தால் அதற்கு மேலேயே எல்லாம் கிடைக்கும்"என்பாள். பூக்காரி.


மடத்தில் ஒரு நியதி உண்டு. பெரியவா படுத்துக்கப் போய்விட்டால் யாரும் எழுப்பக் கூடாது.ஆனால், இந்தக் காமாட்சி மட்டும் விதிவிலக்கு. எத்தனை நேரமானாலும் வரலாம்.ஏனெனில், பெரியவாளே அவளிடம், " நீ உன் வியாபாரத்தை முடித்துக் கொண்ட பிறகுதான் என்னிடம் வரணும். பாதியில் விட்டு வரக்கூடாது!" என்று கட்டளை இட்டிருந்தார்.அவளது பிழைப்பை தனக்காக விடுவதற்கு அந்தக் கருணாமூர்த்தி சம்மதிப்பாரா?



ஒரு நாள் பெரியவா, நாகராஜன் என்பவரை 9 மணி நியூஸ் கேட்டுச் சொல்லச் சொல்லி, கேட்டுக்கொண்டிருந்தார். வேதாந்த தத்துவங்கள் ஒரு புறம் இருந்தாலும்,உலக நடப்பையும் தெரிந்து கொள்ளாமல் விடமாட்டார். அந்தச் செய்திகளை அலசி ஆராய்ந்த பிறகு படுக்கப் போக நாழி ஆகிவிடும். அன்று, புதுக்கோட்டையிலிருந்து "ஜானா" என்ற ஒரு பெண் பெரியவாளுக்கு வெல்வெட்டில் பாதுகை செய்து கொண்டு வந்திருந்தாள்.. அதைக் காலை முதல் பெரியவா கழற்றவேயில்லை.

படுக்கைக்குப் போகு முன் கொட்டகை சென்று, தேகசுத்தி பண்ணிக் கொண்டு வரச் சென்றார்.அப்போது நியூஸ்படிக்கும் நாகராஜன்,"இன்று பெரியவா பாதுகையைக் கழட்டினதும் நான்தான் எடுத்துக்கொள்வேன், என்னிடம் பெரியவர் பாதுகையே இல்லை!" என்று கழட்டுவதற்குக் காத்திருந்தார்.

பெரியவா பாதுகையைக் கழட்டாமலேயே உட்கார்ந்திருந்தார். பூக்காரியும் நானும் அங்கு போய் நமஸ்காரம் பண்ணினோம். பாதுகையைக் கழற்றி பூக்காரியிடம், "இது உனக்குத்தான், எடுத்துக்கோ!" என்றார்.


"நாமொன்று நினைத்தால் தெய்வமொன்று நினைக்கிறது!" என்று நாகராஜன் குறையோடு திரும்பினார். அப்படிப்பட்ட அன்புக்கு அந்த ஏழைப்பூக்காரி பாத்திரமாயிருந்தாள். எத்தனையோ பேர் அவளிடம் லட்ச ரூபாய் தரோம்,இந்தப் பாதுகையைக் கொடு என்றனர்.அவள் அசையவேயில்லை. பெரியவா அவளுக்கு இந்த உலக வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளெல்லாம் கிடைக்கச் செய்தார்.அவள் வீட்டுத் திருமணங்களுக்கு வண்டி,வண்டியாக கல்யாண சாமான்கள் அனுப்பினார்.


பெரியவா ஸித்தியான பிறகும், சமாதிக்கு இரவில் பூக்களால் அர்ச்சிப்பதை காமாட்சி விடவில்லை. ஆனால், பெரியவா இருக்கும்போது பூக்கூடையை வெறுமனே திருப்பாமல் ஏதாவது பழம் முதலியன போட்டுத்தான் அனுப்புவார்.அவர் மறைவுக்குப் பின் வெறுங்கூடையைப் பார்க்கவே வருத்தமாக இருந்தது. "அப்பா, நீ இருந்தா இப்படி என்னை வெறுங்கூடையுடன் அனுப்புவாயா!" என்று புலம்பினாள்.கூடையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திவளுக்கு, தூக்கிவாரிப்போடும்படி அதிஷ்டானத்திலிருந்து ஒரு சம்பரத்தைப் பூ யாரோ வீசி எறிந்தது போல் வந்து அவள் கூடையில் விழுந்தது. சமாதிக்கு நேரே முறையிட்டால்கூட பதில் சொல்லக்கூடிய சாமியை, "போயிடுத்து,போயிடுத்து"னு யாரும் சொல்லக்கூடாது என்று அவள் எல்லோரிடமும் சொல்லுவாள்.


Source: Sage of Kanchi

Surya Narayan
 
மாத்ரு தேவோ பவ….

மாத்ரு தேவோ பவ….

மனுஷ்யராகப் பிறந்த எல்லோரும் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ரு கடன், தேவ காரியம் என்பவை. நம்முடைய சக ஜீவர்களுக்கும் நம்மாலானதை நாம் செய்ய வேண்டும்.

பித்ருக்களான தாய் – தந்தையருக்கும் மூதாதையர்களுக்கும் நமது கடமைகளை எல்லோரும் அவசியம் செய்தாக வேண்டும். ‘மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ‘ என்று வேத மாத சொல்கிறாள். நம் எல்லோருக்கும் வேதத்தின் சாரமான விஷயங்களை இலகுவாகப் பிழிந்து கொடுத்த ஔவை மூதாட்டியும் இதே விஷயத்தை, ‘அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று சொல்கிறார்.

தாய் – தந்தையரிடம் பணிவுடன் நடந்து கொண்டு, அவர்களுக்கு நம்மால் இயன்ற சௌக்கியமெல்லாம் செய்து தரவேண்டும். தாய் – தந்தையர் நமக்காக ஆதியில் செய்துள்ள தியாகங்களுக்கு, நாம் பிரதியே செய்ய முடியாது. அவர்களது மனம் கோணாமல் அவர்களை வைத்துக் காக்க வேண்டும்.

அவர்கள் இந்த உலகத்தை விட்டுப் போன பிற்பாடும், அவர்களுக்காக சாஸ்திரப் பிரகாரம் தர்ப்பணம், சிராத்தம் (திதி) இவற்றை அனைவரும் தவறாமல் செய்ய வேண்டும்.

– மஹா பெரியவர் அருளிய ‘தெய்வத்தின் குரல்’ தொகுப்பில் இருந்து….



Source: Sage of Kanchi

Halasya Sundaram Iyer
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top