• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
Purification of a house and a body

Purification of a house
and a body



Sivananda Lahari Verse 36 speaks about the purification of a house
and a body and it reads as under:

भक्तो भक्तिगुणवृते मुदमृतापूर्णे प्रसन्ने मन:
कुंभे सांब तवांघ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।
सत्वं मन्त्र-मुदीरय-न्निजशरीरागार-शुद्धिं वहन्
पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याण-मापादयन् ॥ ३६ ॥

Bakto BaktiguNavRRute mudamRutApUrNe prasan^ne mana:
kuMBe sAMba tavAMghripallavayugaM saMsthApya saMvitphalam |
satvaM mantra-mudIraya-n^nijaSarIrAgAra-SuddhiM vahan
puNyAhaM prakaTIkaromi ruchiraM kalyANa-mApAdayan || 36 ||

MEANING :

Oh God who is with Goddess Parvati, I am your devotee, bound by the thread of Bhakti, with the vessel of my mind full of water of happiness and brightness, with your two holy feet as the Mango leaves on the vessel, with the coconut of GyAna (the ultimate truth) placed over the leaves, meditating on the Panchakshari (five letter) mantra which grows the Satva Guna and thus I do the Punyahavachanam (purification) with a view to cleansing the house of my mind and yearning for all the good.

EXPLANATION :

He! SambO! as your bhaktha I wish to clean my body of impurities; I wish to get sukham to my frittering mind and I wish to prepare myself to enjoy mokshasukham so I am doing this karma called 'punyaaham' with due deligence. That is, Hey! Sarveswara! I have made my nirmala manas as a pot which I have filled with the water that is Aananda. The mango leaves that is half submerged in the water are your lotus feet along with the coconut called gnaanam sitting on it. I have tied it with the thread called bhakthi. I am doing this karma called 'punyaaham' chanting the panchaakshari manthra 'Aum Nama: Sivaaya'. Hey! PrabhO! I have no doubt that by doing this karma I will get nithyamoksham.

NOTE :

Punyahavachanam is a ceremony of purification, time at the time
of a new festival, for a new house, or for a mother and new born baby,
after a period of ten days from the baby's birth. The house is cleaned,
and a pot is kept with pure water, with rounds of threads around it,
with two mango leaves over water and a cocnonut at the top. Sri
Sankara says that the purification of mind is done, through devotion,
eating sattvic pure food, and chanting Panchakshara.


Sage of Kanchi

C V Sathya Narayan


Sivananda Lahari
 
"சப்தத்திற்கும், வேத சப்தத்திற்கும் உள்&#



"சப்தத்திற்கும், வேத சப்தத்திற்கும் உள்ள மதிப்பு"


நடமாடும் தெய்வம் பரமாசார்யாளின் எளிமையான விளக்கம்

(ஆங்கரை கல்யாணராம சாஸ்திரிகளின் ஸ்ரீமத் பாகவத காலக்ஷேபத்தின்போது)

நத்தத்தில் காஞ்சி பரமாசார்யாள் ஒரு சமயம் இருந்தபோது நடந்த சம்பவம். பெரியவாள் தங்கியிருந்த இடத்தில் ஒரு வேதபாராயண கோஷ்டி வேதத்தில் ஒரு அனுவாகம் கூறிக்கொண்டிருந்தார்கள்.அந்த இடத்திற்கு ஒர் ச்ரத்தையில்லாத பிராம்மணன் வந்திருந்தான்.

அவனுக்கு வேதம் தெரியாது. ’என்னவோ அர்த்தமில்லாமல் முணமுணக்கிறதே இந்த கோஷ்டி. இதனால் உலகத்திற்கு என்ன ப்ரயோஜனம்? ஏழை எளியவர்களுக்கு ஏதாவது திட்டமிட்டு செலவழித்தாலும் புண்யமாவது கிடைக்குமே’ என்று கூறினானாம்.

இது எப்படியோ பெரியவாள் காதுகளையும் எட்டிவிட்டது.

நமக்கும் பெரியவாளுக்கும் அதுதான் வித்யாசம். வால்மீகி மகரிஷி தனது ராமாயணத்தில் ராமரைப்பற்றிக் கூறும்போது, "நூறு குற்றங்கள் செய்தாலும் கொஞ்சம் கூட ஞாபகம் கொள்ள மாட்டார். ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்தாலும் அதைக்கொண்டே பூரண திருப்தி அடைந்து விடுவார்" என்று வர்ணித்திருப்பதை நடந்து காட்டியவர் நமது காஞ்சி பரமாச்சார்யாள்

அன்று மாலை பூஜாகாலத்திற்குப் பிறகு பெரியவாள் அருள்வாக்கு கூற அமர்ந்தார். காலையில் கம்ப்ளெய்ன்ட் செய்த ஆசாமியும் அங்கு, மாலை, கூட்டத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார். அவனருகில் சென்று மடத்து சமையல்காரனைக் கூப்பிட்டார்

. ’இந்த ப்ராம்மணனுக்குப் பகல் சாப்பாடு நன்றாக இல்லையாம். ராத்திரி கொஞ்சம் ஸ்பெஷலாக கவனித்துக்கொள்" என்று கூறினார். அந்த சமையல்காரன் இந்த ப்ராம்மணனைப் பார்த்து முணமுணத்துக் கொண்டே போனான்

. இந்த பிராம்மணனுக்கு படுகோபம் வந்து விட்டது. "ஸ்வாமி! பார்த்தேளா! என்னமோ முணமுணத்துக் கொண்டே போகிறானே பார்த்தேளா?" என்றான் அந்த பிராம்மணன்.

நம் நடமாடும் தெய்வம் புன்முறுவலுடன் கேட்கிறார். "அவன் என்ன முணமுணத்தான் என்று தெரியுமா?" என்று

. "அது காதில் விழவில்லை. ஆனால் முணமுணத்ததுகாதில் நன்றாக விழுந்தது" என்றான் பிராம்மணன்.

"அவன் என்ன சொன்னான் என்று புரியாத முணமுணப்புக்கு, அது என்ன வார்த்தை, யாரைப்பற்றி என்று தெரியாமல் இருக்கும்போது, அந்த முணமுணப்பு சப்தம் உன்னிடம் ஒரு ரியாக்ஷன் ஏற்படுத்துமானால், வழிவழியாக பரம்பரையாக வந்த வேத முணமுணப்பு, அந்த அட்மாஸ்ஃபியரில் எத்தகய உயர்ந்த ரியாக்ஷன் ஏற்படுத்தும் என்பது உனக்குக் காலையில் ஞாபகமில்லை போலிருக்கு" என்று சொன்னார்.

சப்தத்திற்கு, வேத சப்தத்திற்கு உள்ள மதிப்பை, ஆசார்யாள் சொல்லுகிறமாதிரி யார் நமக்கு மனதில் பதியும்படி சொல்லமுடியப்போகிறது!

அந்த ப்ராம்மணன் வேத அத்யயனகோஷ்டியை இகழ்ந்தற்கு ஆசார்யாள் அஸூயைப்படவில்லை. ஸ்ரீ மடத்தில் தனது சன்னிதானம் இருக்கும் இடத்தில், காலையில் காலை வைத்துவிட்ட அந்த ஒரு புண்ணியத்திற்காக (कृतेनैकेन तुष्यति) அவன் வேத கோஷ்டியை இகழ்ந்த பாபத்தை மறந்துவிட்டு, ஒரு சிறிதும் கோபமோ, வெறுப்போ கொள்ளாமல், அவனுக்கும், அவனை வ்யாஜமாக, லோகத்தினருக்கும் ஞானம் அனுக்ரஹம் பண்ணுவது இருக்கிறதே, அதுதான் "தெய்வீகம்" என்பதற்கு லக்ஷணம்.

Source: Sage of Kanchi

Varagooran Narayanab


 
ஓய்வை பயனுள்ளதாக்குங்கள்

ஓய்வை பயனுள்ளதாக்குங்கள்

* ஓய்வு பெற்றவர்கள் முழு நேரமும் சமூகத்தொண்டு செய்யும் பாக்கியம் பெற்றவர்கள். அலுவலகங்களுக்கு செல்லும் காலத்தில் குடும்ப பொறுப்பும் நிறைய இருந்திருக்கும். இப்போது அவற்றை கூடிய வரை குறைத்துக் கொண்டு, அதற்குப் பதில், ஜனங்களுக்கு தொண்டு செய்யும் பொறுப்பை எடுத்துக் கொண்டு புண்ணியம் சம்பாதிக்க வேண்டும்.

* இதுவரை தெரியாவிட்டாலும், இனியாவது வேத சாஸ்திரங்களை தெரிந்து கொண்டு அதன்படி நடந்து சமூக நன்மைக்காக பாடுபட வேண்டும். இருக்கிற ஓய்வை நன்றாக பயன்படுத்திக் கொண்டு நல்ல விஷயங்களை படித்தும் கேட்டும் தெரிந்து கொள்வதோடு மற்றவர்களுக்கும் அதை எடுத்துச் சொல்வது பெரிய உதவியாகும்.

* நீங்கள் எந்தத் தொழிலைச் செய்தீர்களோ, அதை நாலு ஏழை இளைஞர்களுக்கு இலவசமாக சொல்லிக் கொடுத்து உதவி செய்யலாம். அதிகமாக பென்ஷன் வாங்குபவர்கள், படிப்புச் செலவுக்கும் பணம் வழங்கலாம். ஒன்றிரண்டு பேருக்கு அன்னதானம் செய்யலாம்.


* வெளியுலக அறிவுக்கு துணை நிற்பது விஞ்ஞானம். உள் உலகமாகிய உண்மைக்கு வழிகாட்டுவது மெய்ஞானம்.

* திருமந்திரத்தில், அன்பே சிவம் என்கிறார் திருமூலர். அறிவான தெய்வமே என்று இறைவனைக் குறிப்பிடுகிறார் தாயுமானவர். அன்பையும், அறிவையும் நாம் ஒவ்வொருவரும் பெற முயற்சிக்க வேண்டும்.

* இந்த உலகை விட்டுச் செல்லும் முன் "என்னிடம் பாவமே இல்லை' என்று சொல்லும் நிலையை அடைய வேண்டும்.



காஞ்சிப்பெரியவர்



Sage of Kanchi
 
Last edited:
நாம மகிமை

நாம மகிமை




xUntitled_1957160h.jpg.pagespeed.ic.93RhLc3mdR.jpg



தியானம், ஜபம், பூஜை, யக்ஞம் க்ஷேத்திராடனம் ஆகியவற்றைப் போலவே நம் தேசத்தில் நீண்ட காலமாக பகவந்நாமாக்களைக் கோஷ்டியாகப் பாடி பஜனை செய்கிற பழக்கமும் இருந்து வந்திருக்கிறது. இந்த ஜீவாத்மானது பரமாத்மாவுடன் தொடர்பு கொள்வதற்கு ஒரு பெரிய உபாயமாக நாம பஜனை தொன்றுதொட்டு தேசத்தில் அநுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. அநேகமாக கிராமம், நகரம் எல்லாவற்றிலும் பஜனை மடம், அல்லது பஜனைக் கூடம் என்றே ஒன்று கணக்கிடப்படுவதிலிருந்து, பஜனை பத்ததி நம் நாட்டில் எவ்வளவு செழிப்பாக இருந்திருக்கிறது என்று ஊகிக்கலாம். இந்த பஜனை மடங்களில் சனிக்கிழமை தோறும், ஏகாதசி தோறும் ஜனங்கள் எல்லோரும் சேர்ந்து பஜனை செய்வார்கள்.



கோயில்களில் பூஜையைப் பார்க்கிறோம். தெய்வத்தைத் தியானிக்கிறோம். பஜனையிலோ நாமே வாய்விட்டுத் தெய்வத்தின் நாமங்களையும், குணங்களையும், லீலைகளையும், பாடி ஈஸ்வரபரமாக மனஸை ஈடுபடுத்துகிறோம். பலர் சேர்ந்து கொண்டு சமூதாய வாழ்க்கை அடிப்படையில் பக்தி செய்கிற சிறப்பு பஜனைகளும் உண்டு. அவரவரும் ஆத்ம க்ஷேமத்தை அடைந்து, அதனாலேயே ஜீவ கோடிகளுக்கு க்ஷேமத்தைத் தர வேண்டும் என்று, தனி மனிதர் அடிப்படையிலேயே (Individual basis ) ஹிந்து மதம் முக்கியமாக அமைந்திருந்தாலும், கோயில், உத்ஸவம், பஜனை இவற்றில் கூட்டு வழிபாட்டு முறையும் (Congregational worship)இருக்கிறது.



இன்னிசையுடனும், வாத்திய கோஷத்துடனும் செய்கிற பஜனை எல்லா உள்ளங்களையும் சுலபமாக இழுத்து பகவத் ஸ்மரணத்தில் செலுத்துகிறது. ரகுபதி ராகவ ராஜாராம், ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே என்பது போல் சுலபமான வார்த்தைகளை மதுரமான சங்கீதத்தோடு கலந்து செய்கிற பஜனையால் எளிதாகத் தெய்வத்தை நினைவுகொள்ள முடிகிறது.


பஜனைக் கூடம் என்ற ஒர் இடத்தில் அமர்ந்து பஜனை செய்வதோடு, நகர சங்கீர்த்தனம் செய்கிற பழக்கமும் உண்டு. வைகுண்ட ஏகாதசி போன்ற புண்ணிய காலங்களில் ஜனங்கள் எல்லோரும் பகவந்நாமாக்களை பஜனை செய்தபடி வீதி வீதியாகச் செல்வதுதான் நகர சங்கீர்த்தனம் எனப்படுவது.


விசேஷமாக மார்கழி மாதத்தில் தினந்தோறும் அதிகாலையில் இப்படி வீதி வீதியாக பஜனை செய்து ஊர் முழுவதும் திவ்விய நாமங்களைப் பரப்புவதுண்டு.


இந்த நல்ல பழக்கம் மறுபடியும் நன்றாக உயிர் பெற்று வளர வேண்டும். கிராமங்களில் உள்ள பஜனை மடங்களில் பகவந்நாமம் இல்லாமல் வெறுமையாகப் போகவிடக் கூடாது. சமீப காலத்தில் பஜனை முறை நன்றாக விருத்தியடைந்து வருவதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. நம் வேதம், ஆகமம், ஆசாரம் எல்லாம் ரொம்பவும் க்ஷீணமாகப் போயிருக்கிற இந்த நாளிலும் நம் மத அம்சமாக ஏதாவது ஒன்றாவது க்ஷீணிக்காமல், தினந்தினம் விருத்தியாகி வருகிறது என்றால் அது ராம பஜனைதான். இன்று நம் மதத்துக்காக ஒவ்வோர் ஊரிலும் இருக்கிற ஸத்சங்கமே பஜனைக் கோஷ்டிதான். அந்த மட்டும் சந்தோஷம்.



பகவானிடம் பக்தியை விருத்தி செய்வதினால் பகவானின் நாம் சங்கீர்த்தனமும், பகவத் குணங்களைப் பாடுவதும் முக்கியமான ஸ்தானம் பெற்றுள்ளது.  பகவத்நாம போதேந்திரர்கள், ஸனாதந்த ஸ்வரூபியான பரமாத்மா ஜகத்தின் க்ஷேமத்தைக் கருதித் தனிப்பெரும் கருணை கூர்ந்து  விஷ்ணு, பரமேஷ்வரன் முதலிய ரூபங்களை எடுத்துக் கொண்டான். உலகை உய்விக்க அந்த மூர்த்திகள் மட்டும் போதாது என்று கருதி, ஹரி சிவ, முதலிய நாமங்களாகவும் ஆகி, அவற்றில் எப்போதும் விழித்துக் கொண்டிருக்கிறான் என்கிறார். அதாவது, நாமங்கள் வெறும் பெயர் மட்டுமில்லை. மூர்த்தியைப் போல அவையும் ஸாஷாத் பகவானே. பகவானுக்கு உள்ள அத்தனை சக்தியும் நாமத்துக்கு உண்டு.



இவ்வாறு நாம சங்கீர்த்தத்தின் மூலம் பகவத் ஸ்வரூபத்தை சாஷாத்காரம் செய்த புண்ணிய புருஷர்களின் முகாரவிந்தத்திலிருந்து உற்பத்தி யான புனித கானங்களைப் பாடுவதால், பாபம் விலகி, புண்ணியம் கை கூடுகிறது. ஜயதேவர், தீர்த்த நாராயணர், ராமதாஸர், புரந்தர தாஸர், தியாகப்பிரம்மம், ஸதாசிவப் பிரம்மேந்திராள் ஆகியோரின் கீதங்கள், தமிழ்ப் பாடல்கள், ஹிந்தி, மகாராஷ்டிர பக்தி கீர்த்தனம் எல்லாம் மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள் வகுத்துத் தந்த பத்ததியான சம்பிரதாய பஜனையில் பாடப்படுகின்றன. டோலோத்ஸவம், கொட்டனோத்ஸவம், வஸந்த கேளி என்றெல்லாம் பஜனையைப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடுவார்கள். கஷ்டமான சாதனையாக இல்லாமல், ஆனந்தமாக ஆடிப் பாடிக்கொண்டு பகவதநுபவத்தில் இருப்பது இதெல்லாம் வழிகள். பாகவதாதி சாஸ்திரங்களிலேயே, எந்தச் சிரமமான சாதனையும் செய்யச் சக்தியும் சௌகரியமும் இல்லாத கலிகாலத்தில், நாம் ஸங்கீர்தனம்தான் மோக்ஷ உபாயம் என்று சொல்லியிருக்கிறது. கலௌ ஸங்கீர்த்ய கேசவம்.



பலர் சேர்ந்து பண்ணுகிற பஜனை ஒருபுறம் இருக்கட்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள அனைவரும் மாலை வேளைகளில் வீட்டிலேயே ஒரு பத்து நிமிஷமாவது பகவத் நாமங்களைப் பாடி பஜனை செய்ய வேண்டும். இதில் காரிய சாத்தியமில்லாத சிரமம் எதுவும் இல்லை. குடும்பத்தினர் எல்லோரும் பூஜை அறையில் - அல்லது பூஜைக்கென்று அறை இல்லாவிட்டால், ஒரு குத்து விளக்கை ஏற்றி வைத்து அதன் முன் உட்கார்ந்து கீர்த்தனங்களைப் பாட வேண்டும். நாமாவளிகளை கானம் செய்ய வேண்டும்.



அவரவர்களும் தங்களுக்குரிய நித்ய கர்மாநுஷ்டானங்களை விடாமல் செய்துவிட்டு, அதோடு பஜனையும் செய்ய வேண்டும். பகவானைப் பாடுவதற்கு வெட்கமே வேண்டாம். கருணையே உருவான கடவுளின் நாமத்தைச் சொல்வதில் வெட்கத்துக்கு ஏது இடம்? பெரிய சங்கீத ஞானம், ராக பாவம், சாரீர வசதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பக்தி பாவனைத்தான் முக்கியம்.



ஏதேதோ விளையாட்டுகளில் திரிந்துகொண்டிருக்கிற குழந்தை அம்மாவின் நினைப்பு வந்ததும், அவளிடம் வந்து, அம்மா அம்மா என்று கத்துகிறதல்லவா? அதில் வெட்கமோ, சங்கீத அழகோ இல்லை. லோக மாதாவான பரமாத்மாவை லௌகிக வியாபாரங்களிடையே சிறிது நேரமாவது நினைத்து இப்படியே ராமா, கிருஷ்ணா, சிவா, அம்பா என்று கத்த வேண்டும். இந்தப் பழக்கம் ரொம்பவும் நல்லது. நம் நித்திய க்ஷேமத்தையும், ஆனந்தத்தையும் பெருக்கவல்ல பெரிய Gift இது.


தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)


??? ????? - ?? ?????
 
ராமராஜ்யம்

ராமராஜ்யம்


1_1968825h.jpg



ராமராஜ்யம் ஏற்பட வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தவரின் வாரிசுகள் இப்போது ஜனநாயகம் சிருஷ்டி செய்துகொண்டிருக்கிறார்கள். ராமர் புதுசாக ராஜநீதி எதுவும் செய்து ராஜ்ய பாரம் நடத்தவில்லை. தன் அபிப்ராயம், தன் கார்யம் என்று சொந்தமாக எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க சாஸ்திரத்தைப் பார்த்து, பூர்விகர்களின் வழியைப் பார்த்து அந்தப்படியே பண்ணினவர் ஒருவருண்டு என்றால் அது ராமசந்திர மூர்த்திதான். மநு நாடாண்ட காலம் முதலாக தசரத சக்ரவர்த்தி வரை எந்த தர்மசாஸ்த்ர ஆட்சி முறை நடந்ததோ அதையேதான் ராமரும் பின்பற்றி நடத்திக் காட்டினார்.



தசரதர் அவருக்குப் பட்டாபிஷேகம் செய்ய உத்தேசித்தபோது தன் குமாரன் ஸர்வ ஜன அபிமானத்தையும் பரிபூர்ணமாகப் பெற்றவன், சகல யோக்யதாம்சங்களையும் சம்பூர்த்தியாகப் பெற்றவன் என்று தெரிந்திருந்த போதிலும், சபை கூட்டி ஜனங்களின் பல தரப்புக்களைச் சேர்ந்த எல்லாப் பிரதிநிதிகளின் அபிப்ராயத்தையும் கேட்டார் என்று சொல்லியிருக்கிறது. அதிலே வைதிக தர்மத்துக்கு வேறாக இருந்த மிலேச்சர்களுடைய பிரதிநிதிகளைக்கூட வரவழைத்து ஆலோசனை கேட்டாரென்று இருக்கிறது. அதுதான் நிஜமான ஜனநாயகம். அதாவது அபிப்ராயங்களைக் கேட்பதில் அவர் இவர் என்ற பேதமில்லாமல், யோக்யதாம்சம் பார்க்காமல் எல்லாருடைய பிரதிநிதிகளையும் கலந்து கொள்ளத்தான் வேண்டும். இங்கேயும்கூட referendum என்பதாக அத்தனை ஜனங்களையும் அபிப்ராயம் கேட்பது என்றில்லாமல் அவர்களுடைய பல பிரதிநிதிகளைத்தான் கேட்டிருக்கிறாரென்பது கவனத்துக்கு உரியது.


சகல ஜன பிரதிநிதிகளிடமும் அபிப்ராயம் கேட்ட பின், தசரதர், ராமர் முதலான அரசர்கள் எப்படி முடிவு எடுத்தார்கள் என்று பார்க்கவேண்டும். Policy making (கொள்கை வகுப்பது), அநேக திட்டங்களைப் போடுவது என்பதாக முடிவுகள் செய்யும்போது அங்கே ஜனநாயக சமத்வத்துக்கு இடம் தரவில்லை. ஞான, சீல, வயோவ்ருத்தர் என்று சொன்னேனே அப்படிப்பட்ட அநேக யோக்யதாம்சங்களைப் பெற்ற பரம தர்மிஷ்டர்களான மந்த்ரிகளையே மூலஸ்தம்பமாகக் கொண்டுதான் தசரதரும், அவருக்கு முன்னாலிருந்த ரகுவம்ச ராஜாக்களும், பின்னால் வந்த ரகுராமனும் முடிவுகள் எடுத்திருக்கிறார்கள்.


பலவகை ஜனங்களின் பலவித அபிப்ராயங்களையும், அவர்களில் யார் வாயையும் அடைக்காமல் உள்ளது உள்ளபடி கேட்டுத் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும். பொது ஜன அபிப்ராயத்தை ராமர் எப்படி வெகு முக்கியமான விஷயமாகக் கேட்டறிந்து வரச் செய்தார், அதற்காக எப்படித் தன்னுடைய பிரிய பத்தினியையே தியாகம் செய்தாரென்பது நமக்குத் தெரிந்ததுதானே? இப்போதுள்ள ஜனநாயகவாதிகளில் யாராவது அப்படி ஜன அபிப்ராயத்துக்கு மதிப்புத் தருவார்களா என்று தெரியவில்லை. இதிலிருந்து அக்காலத்தில் ஜனங்களுக்கு ராஜா - ராணியைப் பற்றிக்கூட எவ்வளவு ஸ்வதந்த்ரமாக வாய்விட்டு அபிப்ராயம் சொல்ல உரிமை இருந்திருக்கிறது என்பதும் தெரிகிறது. அதுதான் உண்மை ஜனநாயகம்.


ஒரு நாய்கூட ராமரிடம் நியாயம் கேட்க நேராகத் தானே வழக்குக் கொடுத்திருப்பதாக உத்தர காண்டத்தில் வருகிறது. மநு தர்மப்படி பரிபாலனம் செய்த மநுநீதிச் சோழன் திருவாரூரிலிருந்து கொண்டு ஆட்சி நடத்திய போது ஒரு மாடு ஆராய்ச்சி மணியை இழுத்துத் தன் கஷ்டத்தை விண்ணப்பித்துக்கொண்டது என்று கேட்டிருக்கிறோம். இப்படித் தங்கள் மனசிலிருப்பதை எவரும் ராஜாங்கத்தின் உச்ச ஸ்தானத்துக்குத் தெரிவிக்க இடம் தருவதுதான் ஜனநாயகம்.



ஆனால் இந்த அபிப்ராய சுதந்திரத்துக்கும், அதைச் சொல்லிக்கொள்ளும் சுதந்திரத்துக்கும் அதிகமாக ஜனங்களுக்கு உரிமை கொடுப்பது தேச நலமல்ல. ஆனபடியால் நிஜமான ஜனநாயகமும் அல்ல. ஜனங்களுக்கு வித்யாசம் பார்க்காமல் நல்லது செய்வதற்குத்தான் ஜனநாயகம். ஜனசமூஹம் முழுதும் சேர்ந்தே அமைந்த தேசத்துக்கு நன்மை செய்வதுதான் ஜனநாயகம் என்றால், அவர்கள் அபிப்ராயத்தை அறிவதோடு நிற்காமல், அந்த அபிப்ராயங்களின் மேல் முடிவு எடுக்கிற தகாத பாரத்தையும் விஷயம் தெரியாத அவர்கள் மேலோ அல்லது அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் விஷயம் தெரியாத பிரதிநிதிகளின்
மேலோ போடுவது ஜனநாயகமே ஆகாது. இதனால்தான் சகல ஜனங்களின் அபிப்ராயங்களையும் ஒரளவு மறைவில்லாமல் தெரிந்துகொண்ட பின், முடிவு எடுப்பது என்பதற்கு நிரம்பத் தகுதி வாய்ந்தவர்களை மட்டுமே ராம ராஜ்யத்துக்கு, தர்ம ராஜ்யத்துக்கு அடிகோலியவர்கள் துணை கொண்டார்கள்.



முடிவெடுக்கும் நிர்வாகிகள் உள்பட எவருக்கும் தகுதியே நிர்ணயிக்காமல் அரசியல் நிர்ணயச் சட்டம் என்று ஒன்றைச் செய்து அதில் ஒவ்வொரு விதியாக கான்ஸ்டிட்யுவென்ட் அஸெம்ப்ளியில் பாஸ் செய்துகொண்டிருக்கிற இப்போது நான் செய்யக்கூடியது பழைய முறையை எடுத்துக்காட்டுவதுதான்.



'ராமாயணமா? அந்த த்ரேதாயுகத்து சமாசாரம் இப்போது சரிப்படாது' என்று ஒதுக்கி விட்டுப் போகாமலிருக்கத்தான், 'இது த்ரேதா யுக சமாசாரம் மட்டுமில்லை. ஆயிரம் வருஷம் முந்திகூட சரித்திர ஆசிரியர்களெல்லாம் பாராட்டும்படி சிறந்த அரசியலறிவுடன் ஆட்சி நடத்திய சோழர் காலத்திலும் அந்த மாதிரியே ஜனநாயக தத்துவம், திறமையான தூய்மையான நிர்வாகம் என்ற இரண்டையும் எந்த அளவில், எந்த விதத்தில் இணைக்கலாமோ அப்படிச் செய்திருக்கிறார்கள்' என்று காட்ட ஆசைப்பட்டேன்.




வெள்ளைகாரர்கள் தங்களுடைய எழுதப்படாத சட்ட சாசனத்தைப் (unwritten constitution) பற்றி பெருமைப்படுகிறார்களென்றால், இந்தத் தமிழ் தேசத்தில் பிறந்த நமக்கோ ஆயிரம் வருஷத்துக்கு முன்பே உருவான எழுதப்பட்ட சட்ட சாசனம்) (written constitution) இருக்கிறது, நன்றாகக் கல்லிலேயே பொறிக்கப்பட்ட சிலா சாசனமாக இருக்கிறது என்று அதைவிடப் பெருமையாகக் காட்ட முடியும் என்பதற்காகக் கதை சொன்னேன்.



அது பழம் பெருமையாக மட்டும் நின்றுவிடாமல், ஆயிர வருஷத்துக்கு முந்திய சாசனமே இன்றைய சாசன கர்த்தர்களுக்கும் வழிகாட்டியாவதற்கு ராமசந்திர மூர்த்தி கிருபை செய்வாராக!



தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்)


??? ??????? - ?? ?????
 
இசை வழியே ஈஸ்வரானுபவம்

இசை வழியே ஈஸ்வரானுபவம்

795_1981246h.jpg



கல்வித் தெய்வமான சரஸ்வதி கையிலே வீணை வைத்திருப்பது எல்லோருக்கும் தெரியும். பரமேஸ்வரனின் பத்தினியான பராசக்தியும் கையிலே வீணை வைத்திருப்பதாக காளிதாசர் நவரத்தினமாலா தோத்திரத்தில் பாடுகிறார். அம்பாள் விரல் நுனியால் வீணையை மீட்டிக் கொண்டிருப்பதாகவும், ஸரிகமபதநி என்ற சப்த ஸ்வரங்களின் சாதுரியத்தில் திளைத்து ஆனந்தித்திருப்பதாகவும் பாடுகிறார்.



ஸரிகமமபதநி ரதாம் தாம்

வீணா ஸங்க்காந்த காந்த ஹஸ்தாந்தம் I


இப்படி சங்கீதத்தில் முழுகியுள்ள சிவாகாந்தா (சிவனின் பத்தினி) சாந்தமாகவும் (அமைதிமயமாகவும்) ம்ருதுள ஸ்வார்த்தாவாகவும் (மென்மையான திரு உள்ளம் படைத்தவளாகவும்) இருக்கிறாள் என்கிறார் காளிதாசர். அவளை நமஸ்கரிக்கிறேன் என்கிறார்.


சாந்தாம் ம்ருதுள ஸ்வார்த்தம்
குசபரதாந்தாம் நமாமி சிவகாந்ததம் II


அவர் ஸ்லோகத்தைச் செய்துகொண்டு போயிருக்கிற ரீதியைக் கவனித்தால், அம்பிகை ஸங்கீதத்தில் அமிழ்ந்திருப்பதாலேயே சாந்த ஸ்வரூபிணியாக ஆகியிருக்கிறாள் என்று தோன்றுகிறது. அதேபோல சங்கீத அநுபவத்தினால்தான் அவனுடைய உள்ளம் மிருதுளமாக, புஷ்பத்தைப்போல் மென்மையாக கருணாமயமாக ஆகியிருக்கிறது என்று தொனிக்கிறது.


பராசக்தியை இப்படி சங்கீத மூர்த்தியாகப் பாவிக்கும்போது அவளுக்கு சியாமளா என்று பெயர். சங்கீதத்தில் தோய்ந்து ஆனந்த மயமாகவும், சாந்த மயமாகவும், குழந்தை உள்ளத்தோடும் உள்ள சியாமளா தேவியைத் தியானித்தால், அவள் பக்தர்களுக்குக் கருணையைப் பொழிவாள். அவளது மிருதுவான இதயத்திலிருந்து கருணை பொங்கிக்கொண்டேயிருக்கும். தெய்வீகமான சங்கீதம் ததும்பும் சந்நிதியில், சாந்தமும் ஆனந்தமும் தாமாகவே பொங்கும். சிவகாந்தாவிடம் சரண் புகுந்தால் நமக்கு இந்தச் சாந்தமும் ஆனந்தமும் கைகூடும். இந்த சுலோகத்திலிருந்து சங்கீதமானது ஆனந்தம், சாந்தம், மிருதுவான உள்ளம், கருணை ஆகிய எல்லாவற்றையும் அளிக்கும் என்று தெரிகிறது.



வேத அத்யயனம், யோகம், தியானம், பூஜை இவற்றைக் கஷ்டப்பட்டு அப்பியசிப்பதால் கிடைக்கிற ஈஸ்வரானுபவத்தை தெய்வீகமான சங்கீதத்தின் மூலம், நல்ல ராக தாளத்தின் மூலம் சுலபமாகவும் சௌக்கியமாகவும் பெற்றுவிடலாம். இப்படி தர்ம சாஸ்திரம் எனப்படும் ஸ்மிருதியைத் தந்திருக்கும் யாக்ஞவல்கிய மகரிஷியே சொல்லியிருக்கிறார். வீணா கானத்தை அவர் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.
அப்ரயத்னேன - கடுமையான பிரயாசை இல்லாமலே சங்கீதத்தால் மோக் ஷ மார்க்கத்தில் போய்விடலாம் என்கிறார்.



நம் மனசை தெய்வீகமான சங்கீதத்தில் ஊறவைத்து அதிலேயே கரைந்து போகச் செய்தால் கபடமில்லாமல் ஈசுவரனை அநுபவிக்கலாம். நாம் பாடி அநுபவிக்கும் போதே, இந்த சங்கீதத்தைக் கேட்கிறவர்களுக்கும் இதே அநுபவத்தைத் தந்துவிடலாம். வேறு எந்த சாதனையிலும் பிறந்து யாருக்கும் இப்படி சமமான அநுபவ ஆனந்தம் தர முடியாது. சங்கீதம் என்ற மார்க்கத்தின் மூலம் தங்கள் இருதயங்களைப் பரமேசு வரனிடம் சமர்ப்பணம் செய்த தியாகராஜர் போன்ற பக்தர்கள், சங்கீதமே சாக் ஷாத்காரகத்தைத் தரும் என்பதற்குச் சாட்சியாக இருக்கிறார்கள்.



அம்பாள்தான் பிரம்மத்தின் சக்தி. நாதம் ஈசுவரன் அல்லது பிரம்மம். அம்பாள் சங்கீதத்தில் சொக்கி ஆனந்தமாயிருக்கிறாள் என்றால், பிரம்மமும் சக்தியும் வேறு வேறாக இல்லாமல் ஒன்றிய அத்வைத ஆனந்தத்தையே குறிக்கும். அம்பாள் தன் இயற்கையான கருணையைப் பொழிந்து, சங்கீதத்தின் மூலம் அவளை உபாசிப்பவர்களது ஆத்மா பரமாத்மாவிலேயே கரைந்திருக்குமாறு அருளுகிறாள்.


தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)



????? ???? - ?? ?????
 
அன்பு என்பது என்ன ?

அன்பு என்பது என்ன ?



அன்பு என்பது என்ன? ஒரே பரமாத்மாதான் எல்லா உயிர்களுமாக ஆகியிருக்கிறது. பல உயிர்களாகும்போது ஒன்றையன்று வேறுபடுத்தி வைத்து மாய ப்ரபஞ்ச நாடகம் நடக்கிறது. இதிலேயே எதிர் டைரக்ஷனில், ரொம்பவும் உத்தமமான அம்சமாக, வேறுபட்டவற்றை ஒன்றாக ஐக்யப்பட வைக்கவும் பரமாத்மா அநுக்ரஹித்திருக்கிற force தான் அன்பு.

பொதுவாக மற்றவரிடமிருந்து நமக்கு ஒன்றைப் பெற்று லாபமடைவதாகவே மநுஷ்ய மனப்பான்மை இருக்கும். அதற்கு எதிர் மருந்தாக நம்மை இன்னொருவருக்குக் கொடுத்து அதில் நிறைவு பெறச் செய்வது அன்பு. ஆசைக்கும் அன்புக்கும் இதுதான் வித்யாஸம்:நாம் ஒன்றிடம் ஆசையாயிருக்கிறோமென்றால் நமக்கு அதனிடமிருந்து ஸந்தோஷம் தேடிக் கொள்கிறோம்;அன்பாயிருக்கும்போது நம்மால் அதற்கு ஸந்தோஷம் உண்டாக்குகிறோம்.

ஆசை என்பது வாங்கல்;அன்பு - கொடுக்கல். 'நமக்கு'ஸந்தோஷம் என்பது அந்த உயிரிடம் ரூப ஸம்பத்து, குண ஸம்பத்து- திரவிய ஸம்பத்து கூடத்தான் - இவை அல்லது இந்த மாதிரி வேறு எதை நாம் அதனிடமிருந்து பெற்றால் நமக்கு ஸந்தோஷம் உண்டாகுமோ அவை இருந்தால்தான் ஏற்படும். இவற்றுக்காகவே அதனிடம் நமக்கு உண்டாகிற பற்றுதான் ஆசை. தப்பாக அதை அன்பு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.



அன்பு என்பது அந்தஃகரணம் உசந்த நிலையில் உள்ளபோது உண்டாவது. அப்போது மனஸும் புத்தியும் அஹங்காரத்திற்குள்ளே இழுக்கப்பட்டு, அந்தஃகரணம் ஹ்ருதயத்திற்கு இடம் மாறி அங்கேயிருந்து வேலை செய்யும். அம்பாள் அன்பு மயமானவளாகையால் அவளுடைய ஸ்ருஷ்டியிலே ரொம்பவும் க்ரூரமான ஜீவராசிகளுக்குங்கூட ஒவ்வொரு ஸமயத்திலாவது அன்பு உண்டாகுமாறு அநுக்ரஹித்திருக்கிறாள். ஸாதனையால் மனஸும் புத்தியும் பண்பட்டவர்களுக்கோ எப்போதுமே அன்பு சுரக்கக்கூடிய நிலை வாய்க்கிறது. அந்தஃகரணத்தின் பெர்பனென்ட் ஸ்தானமாகவே அப்போது ஹ்ருதயம் ஆகிவிடும்.


????? ?????? ???? ? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
மகாலட்சுமி உங்கள் இல்லத்துக்கு வருவாள் .

மகாலட்சுமி உங்கள் இல்லத்துக்கு வருவாள் ........




10301298_744816892222724_2662168804194318151_n.jpg




மனிதவாழ்க்கையில் தெய்வீகமும், ஆசார, அனுஷ்டானமும் சேர்ந்திருப்பது உத்தமம். ஆசார, அனுஷ்டானங்கள் முறையாக இருந்தாலே, அங்கு தெய்வீகமும் ஏற்பட்டு விடும்.

முன்னோரது ஆன்மிக வாழ்க்கை, ஆசார, அனுஷ்டானங்களுடன் கூடியது. காலையில் பல் தேய்த்து, குளித்து, நெற்றிக்கிட்டு தெய்வ வழிபாடு செய்த பிறகே உணவு எடுத்துக் கொள்வர்.

விவசாயம் மற்றும் வெளி வேலைகள் சம்பந்தமாக வெளியே போகிறவர்கள் கூட எவ்வளவு காலதாமதமாக வீடு திரும்பினாலும், குளித்து, நெற்றிக்கு வைத்துக் கொண்டு, சுவாமி படத்துக்கு பூ போட்டு விட்டுத்தான் உணவு எடுத்துக் கொள்வர். இதுவே, ஆசார, அனுஷ்டானமுள்ள குடும்பம். அப்படிப்பட்டவர்களையும், அந்த வீடுகளையும் பார்க்கும் போதே ஒரு தெய்வீக களை இருக்கும்.

பெண்கள் எழுந்ததும், குளியல், வாசல் தெளித்து கோலம் போடுதல், பூஜைக்கு வேண்டியவற்றை தயார் செய்தல் என, இவைகளையும் கவனித்த படியே சமையலையும் செய்து முடிப்பர். இவர்களும் இந்த ஆசார, அனுஷ்டான விஷயத்தில் சிரத்தையோடு இருப்பர். விடியற்காலையில் மகாலட்சுமி வந்து கொண்டே இருப்பாளாம்.

எந்த வீட்டு ...வாசலில் சாணம் தெளித்து, கோலம் போட்டு, தீபம் ஏற்றி வைக்கப்பட்டுள்ளதோ, அந்த வீட்டுக்குள் வந்து விடுவாள் என்பது ஐதீகம். இதுபோன்ற வீடுகளில் சுபிட்சத்துக்கும், ஷேமத்துக்கும் குறைவே இராது.

இப்போது எல்லாமே இயந்திர, நாகரிக வாழ்க்கையாகி விட்டது. காலையில் படுக்கையில் இருந்தபடியே காபி, பிறகு டிபன், காபி.பிறகு, எங்கேயாவது ஓடுவது, உழைப்பது; சினிமா, டிராமா, பொழுதுபோக்கு, இரவு வீடு திரும்பியதும் சாப்பாடு, தூக்கம். ஆண்கள் தான் இப்படியென்றால், பெண்கள் கூட ஆசார, அனுஷ்டானத்தில் சிரத்தை காட்டுவதில்லை.

ஒரு இடத்தில் குப்பை இருந்தால், அதே இடத்தில் மேலும், மேலும் குப்பையைக் கொண்டு வந்து கொட்டுவர். அந்த இடம் குப்பை மேடாகி விடும். ஆசார, அனுஷ்டானக் குறைவு குடும்பத்தில் யாரிடமாவது இருந்தாலும் போதும், மற்றவர்களுக்கு அதில் சிரத்தை இல்லாமல் போய் விடும். "தாத்தா குளிக்காமலே சாப்பிடுகிறாரே! நான் மட்டும் ஏன் குளிக்க வேண்டும்?' என்று பேரன் கேட்டால், ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அப்பாவோ, தாத்தாவோ, பூஜை செய்தால், பேரனும் பக்கத்தில் உட்கார்ந்து, மந்திரம் சொல்வான், மணியடிப்பான், ஊதுவத்தி ஏற்றி வைப்பான். இப்படி, புத்தி அவனுக்கும் செல்லும். நாம் தான் வழிகாட்ட வேண்டும். ஆசார, அனுஷ்டானத்தோடு இருப்பது கவுரவக் குறைச்சல் என்று எண்ணினால், அந்த வீட்டில் மகாலட்சுமி தங்க மாட்டாள்; அவளுடைய "அக்கா'தான் சந்தோஷமாக வாசம் செய்வாள்!



Source: C Chandra Sekar
 
சுயதேவைகளை தானே செய்து கொள்

சுயதேவைகளை தானே செய்து கொள்



* சுயதேவைகளை தானே செய்து கொள்வதில் தான் உண்மையான கவுரவமும், மனநிறைவும் உண்டாகும்.

* பெற்றோர், சகோதரருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து ஒருபோதும் தவறக்கூடாது.

* 'தன்னைப் பெற்ற தாயார் 'கிண்ணிப்பிச்சை எடுக்கிற போது கோதானம் பண்ணினானாம்' என ஒருவன் பெயரெடுப்பது நல்லதல்ல.

* குடும்பத்தோடு ஊராருக்கும் நம்மால் முடிந்த நன்மையைச் செய்வதில் ஆர்வம் கொள்ள வேண்டும்.

முதலில் அடக்கம் வெளியில் உண்டாக வேண்டும். அதுவே கொஞ்சம் கொஞ்சமாக மனதிற்குள்ளும் சித்திக்கத் தொடங்கும்.

* மனம் எதை தீவிரமாக இடைவிடாமல் சிந்திக்கிறதோ, அதுவாகவே மாறி விடும் தன்மை கொண்டது.

* கடவுளிடம் இருந்து பிரிந்து வந்துள்ள நாம், முடிவில் அவரிடமே ஒட்டிக் கொண்டு ஐக்கியமாக முயல வேண்டும்.

* பிறர் துன்பத்தைப் போக்க நம்மால் ஆன உதவியைச் செய்து வாழ்வது அவசியம்.

- காஞ்சிப்பெரியவா



Source: Balaji Iyer

Sage of Kanchi
 
Very good things told ..if we follow slowly it will be very helpful for everyone
 
பெண்களை மதிக்கவேண்டும்

பெண்களை மதிக்கவேண்டும்


“வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணம் பண்ணிப் பார் ” என்று ஹிமாலய சாதனையாக சொல்லுவதற்கு ஏற்றபடி தன் பெண்ணுக்கு ஒரு பணக்கார ஜமீன்தார் வீட்டுப் பையனை சம்பந்தம் பேசி கல்யாணமும் பண்ணிவைத்தார் ஒருத்தர்.


கல்யாண சமயத்தில் பெண்ணுக்கு தங்க நகைகள் வாங்க தோதுப்படவில்லை. எனவே கவரிங் நகைகளைப் போட்டு நடத்திவிட்டார். நாலைந்து மாதங்களில் திடீரென்று ஜமீந்தாருக்கு ஏதோ பண நெருக்கடி! எனவே நாட்டுப்பெண்ணின் கழுத்திலும்,கைகளிலும் இருந்த நகைகளை கழற்றித் தரச்சொல்லி மார்வாடி கடைக்கு கொண்டு போனார் மாமனார். போன இடத்தில் அத்தனையும் கவரிங் என்று போட்டு உடைத்தார் மார்வாடி!
“சேச்சே ! எத்தனை அவமானம்! இப்டி ஏமாத்திட்டானே சம்பந்தி ப்ராம்மணன்!”.கோபாக்னி தாண்டவமாட நேரே வீட்டுக்கு வந்தார்; வந்த வேகத்தில்,நாட்டுப் பெண்ணை பொட்டி படுக்கையோடு பிறந்த வீட்டுக்கு அனுப்பிவிட்டார்!



இதில் அழகு என்னவென்றால் இந்த ஜமீன்தார் அடிக்கடி மடத்துக்கு வருபவர்! ஒருநாள் எதேச்சையாக சில நண்பர்களுடன் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார் ஜமீன்தார். பெரியவா சிரித்துக்கொண்டே கூட வந்த நண்பர்கள் எல்லாரிடமும் க்ஷேமலாபங்கள் விஜாரித்தார்; ஜமீந்தாரைத் தவிர!


அதோடு நில்லாமல், மீதிப் பேரிடம் பேசிவிட்டு “படக்”கென்று எழுந்து உள்ளே போய்விட்டார். ஜமீந்தாருக்கோ “சுரீர்”ரென்றது! “என்ன அபச்சாரம் பண்ணினேனோ தெரியலியே! பெரியவா என் பக்கமே திரும்பலியே! ஒரு வார்த்தை கூட பேசலியே!” உள்ளுக்குள் மறுகினார். அங்கே இருந்த ஒரு வைதீகரை அணுகி ” என்னமோ தெரியலே, பெரியவா எம்மேல ஏன் பாராமுகமா இருக்கார்?ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு….நீங்க பெரியவாட்ட கொஞ்சம் எனக்காக சொல்லுவேளா?” ஏறக்குறைய அழுதே விட்டார்.



வைதீகரும் கொஞ்சம் ஸ்வாதீனமாக பெரியவாளிடம் பேசக்கூடியவராகையால் உள்ளே போய் பெரியவாளிடம் ஜமீன்தாரின் முறையீட்டை சொன்னார்.


“அவன் பண்ணியிருக்கறது ரொம்ப கேவலமான கார்யம்! தன்னோட ஆத்துக்கு வந்த மஹாலக்ஷ்மிய ஒதைச்சு அனுப்பினது ரொம்ப தப்பு! பொண்ணையும் நாட்டுப் பொண்ணையும் சமமா பாவிக்கணும். ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம்..ன்னு சாஸ்திரம் சொல்றது. இவனோட சம்பந்தி பாவம் ஏழை; தங்க நகை போடலே;போட முடியலே! ஏன்? இவன்தான் ஜமீந்தாராச்சே! நாட்டுப் பொண்ணுக்கு தங்கத்ல நகை பண்ணிப் போடறதுதானே? அதோட, நாட்டுப் பொண்ணோட நகையை மார்வாடிக் கடைல அடகு வெக்கறதுக்கு இவனுக்கு அதிகாரமில்லே!” எரிமலையென பொரிந்து தள்ளிவிட்டார்!


வெளியே வந்த வைதீகர் சொன்ன விஷயங்களைக் கேட்டதும் ஜமீன்தாரின் சப்தநாடியும் ஒடுங்கி விட்டது! பெரியவாளுக்கு அத்தனையும் தெரிந்திருக்கிறதே! ஓடிப் போய் பெரியவாளுடைய பாதங்களில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.


“என்னை மன்னிச்சிடுங்கோ பெரியவா.ரொம்ப தப்பு பண்ணிட்டேன்! நாளைக்கே போயி என் நாட்டுப் பொண்ணை அழைச்சிண்டு வந்துடறேன்” என்று ரொம்ப கெஞ்சினார்.

எரிமலையாக சீரிய பெரியவா, தப்பை உணர்ந்தவுடன் ஹிமயமலையாக குளிர்ந்து பேசினார். “பொண்களை மொதல்ல மதிக்கணும். பிரியமா நடத்தணும். ஆத்துல பொண்கள் கண் கலங்கக் கூடாது! நாளைக்கே போயி அழைச்சிண்டு வந்து சந்தோஷமா ஓன் பொண்ணாட்டம் நடத்து. க்ஷேமமா இருங்கோ!” ப்ரஸாதம் குடுத்து அனுப்பினார்.


2014 July 22 « Sage of Kanchi
 
பெரியவா சொன்னது:

பெரியவா சொன்னது:

கோயில்களும் அவற்றைச் சார்ந்த கலைகளும் ஓங்கி வளர்ந்திருந்த நாட்களில் நம் தேசம் எப்படி இருந்தது என்பதற்கு மெகஸ்தனிஸ் ஸர்டிபிகேட் கொடுத்து இருக்கிறான். இவை எல்லாம் மங்கிப் போயிருக்கிற இன்று தேசம் இப்படி இருக்கிறதென்பதையே கண்கூடாகவே பார்க்கிறொம். எங்கு பார்த்தாலும் பொய்யும், சஞ்சலமும், கலப்படமும், அதர்மமும் மிகுந்துவிட்டன. இவை நிவர்த்தியாக வழி ஒன்றுதான்; பழையகாலத்தைப்போல் கோயில்களை சமூக வாழ்க்கையின் மையமாக்கிவிட வேண்டும். அன்றுபோல் இன்றும் தெய்வ சம்பந்தமான பழமையான கலைகளை வளர்க்க வேண்டும்.

ஆபீஸ் கட்டிடங்கள், காட்டேஜ்கள் எல்லாம் இப்போது பல க்ஷேத்திரங்களில் ஏராளமாக முளைத்துவிட்டன. தெய்வ சம்பந்தமற்ற பல காரியங்கள் நடக்கின்றன. இது சாந்நியத்தைப் பாதிக்கிறது. ஏதோ எட்டாக் கையில் இருக்கிற கோயில்களில்தான் விச்ராத்தியான சூழ்நிலை நிலவுகிறது. காட்டேஜ்களும், சுற்றுலா கோஷ்டிகளும் பக்தியைவிட பொழுதுபோக்கை அதிகப்படுத்துகின்றன.


சின்னஞ்சிறிய சூஷ்மமான தர்மங்களை எல்லாம் மறந்துவிட்டோம். நமக்கு உணவு தருபவனுக்கு நல்லபடி நிவேதனம் நடக்கவேண்டும். நமக்கு உடை தருபவனுக்கு நல்ல வஸ்திரம் இருக்கவேண்டும். இப்போது ஓர் ஊரில் யார் அழுக்குத் துணிகட்டிக் கொண்டிருக்கிறான் என்றால் அது ஸ்வாமிதான். நம் ஊர் கோயில் ஸ்வாமியின் வஸ்திரம் சுத்தமாயிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்திவிட்டோமானால், நம்மனதின் அழுக்கு போய்விடும்.


இதோ நமக்கு முன் வாழைப்பழ சீப்பு வைத்திருக்கிறது. "இதைப்பார், இது மஞ்சளாக இருக்கிறது" என்று சொன்னால், இது மஞ்சளாகத்தான் இருக்கிறது என்று காண்கிறீர்கள். அதற்குமேல் மனதில் அதைப்பற்றி எந்தவித பிரதி சிந்தனையும் [ ] எழுவதில்லை. மாறாக, இந்த வாழைப்பழத்தைக் காட்டி, "இதோ பார், இது சிவப்பாக இருக்கிறது" என்று நான் சொல்லியிருந்தால் உடனே உங்கள் மனதில் ஒரு ஆட்சேப உணர்வு எற்பட்டிருக்கும். இது மஞ்சள் என்றோ, சிவப்பு என்றோ நான் சொல்லாமல் "இந்த வாழைப்பழம் சிவப்பாக இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள்' என்று சொன்னால் அப்போது உங்கள் மனதில் ஒரு பிரதி உணர்வு உண்டாகிறது. மஞ்சள் பழத்தையே சிவப்பாக இருப்பதுபோல் கற்பனை செய்து பார்க்கிறீர்கள். மனதை ஒருமுகப்படுத்தினால் அவ்வாறு பாவிக்கவும் முடிகிறது.

மூர்த்தி வழிபாடு என்பது இத்தகையதுதான். ஒரே மூர்த்தியைக் காட்டி, "இது பரமாத்மா" என்றால் யாரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஆனால் "இதை பரமாத்மாவாக பாவியுங்கள்" என்றால் அவ்வாறு பாவிக்க முடிவதாகத் தோன்றும் - வாழைப்பழத்தை சிவப்பாக கற்பனை செய்வதுபோல், ஆனால் சிவப்பு என்ன என்பது மனதுக்குத் தெரிவதுபோல், பரமாத்மா லக்ஷணம் தெரியாதே. தெரிந்த விஷயங்களில்தான் மனம் ஈடுபட்டு நிற்கும். எனவே, ஒரே காருண்யமும், சௌந்தர்யமும் வழிகிறது போன்றே ஸ்திரீ ரூபத்தில் விக்ரகம் செய்து "இதில் பரமாத்மா தாயாராக வந்திருக்கிறார் என்று பாவனை பண்ணு" என்றால், மனம் அதை நன்றாகக் கிரகித்துக் கொண்டு அப்படியே ஆழ்ந்து ஈடுபட முடிகிறது.
 
5 நிமிடமாவது பாடுங்களேன்!

5 நிமிடமாவது பாடுங்களேன்!




* பாடுவதற்கு பெரிய சங்கீத ஞானம், ராகபாவம், குரல் வளம் இல்லாவிட்டாலும், பக்தி பாவனை அவசியம்.



* தினமும் மாலை ஐந்து நிமிடமாவது, பகவான் நாமங்களைப் பாடிப் பஜனை செய்வது குடும்பத்திற்கு நல்லது.



* அனைத்து பொருட்களையும் கடவுளாக பார்த்தால், மனதில் சஞ்சலம், ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட கஷ்டங்கள் ஏற்படுவதில்லை.


* பரம்பொருளாகிய கடவுளே உண்மை. மற்றவை மாயையைத் தவிர வேறொன்றும் இல்லை.


* இன்பமும், துன்பமும் ஒன்றைவிட்டு ஒன்று விலகுவதில்லை. இன்பத்தையும், துன்பத்தையும் விட்டுவிட்டால் நிம்மதி கிடைக்கும்.


* முற்பிறவியில் போட்ட விதை நமக்கு துன்பத்தை தருகிறது. வாழ்வில் தவறான செயல்கள் செய்யாமல் இருக்க அம்பாளைப் பிரார்த்திப்பது நமக்கு விமோசனம் தரும்.


* தாய் அன்பை அறியாத குழந்தை, தாயை எதிரியாக தவறாக அர்த்தம் பண்ணிக் கொண்டு அழுகிறது. தனக்கு தானே விரோதியாக இருப்பதை குழந்தையால் உணர முடியவில்லை.


காஞ்சிப்பெரியவா





Sage of Kanchi

Hari Haran
 
"காக்காவுக்கு ஏன் சாப்பாடு போட வேண்டும்&q

"காக்காவுக்கு ஏன் சாப்பாடு போட வேண்டும்"



காக்கா பிதிரு சொருபம்ஆ இருக்கா என்று சொல்லுவா. அதனால சிரார்த்தம் அன்னிக்கு காக்காக்கு சாதம் போடறோம். எல்லா பிதிருக்களும் காக்காவா வந்திருக்கா என்று சொல்லுவா. பகவான் எல்லாத்திலுக்கும் இருக்கும் என்று சொல்லுவா. காக்காவிலும் பகவான் இருக்கான். சாதம் போடுவதால் நாம பித்ருக்களை பிரித்தி பண்றதா நினைக்கிறோம். பகவான் எல்லாதிலும் இருக்கா என காக்காவிலும் பகவான் இருக்கா. நாம சுவாமிக்கு நைவேத்தியம் பண்றோம். பகவான் சாப்பிடுகிறாரா? ஆனால் அந்த சாதத்தை காக்காவிற்கு போடும் போது அந்த காக்காவலுள்ள அந்தர்யாமியாக உள்ள பகவான் கொத்தி கொத்தி சாப்பிடுற நாம பார்க்கலாம இல்லையா. அங்கு இருந்த வித்வான்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டா ஏன்னா காக்காவிற்கு சாதம் போடறதா எப்படி வியாக்கனம் பண்றா என்று.

Source: Mahaperiyava Kanchi Community


Varagoran Narayanan
 
ஸத்யம் பூதஹிதம் ப்ரியம்

ஸத்யம் பூதஹிதம் ப்ரியம்


சகல மக்களும் அனுசரிக்க வேண்டிய சாமானிய தர்மங்களில் முதலாவது அன்பு; அடுத்தது சத்தியம்.
சத்தியம் என்றால், வாக்கும் மனசும் சுத்தமாக இருப்பதுதான்; மனசில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அதுவே அசத்தியம் என்று பெரியவர்கள் லட்சணம் சொல்லி இருக்கிறார்கள்.

சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றுபடுவது மட்டுமல்ல; நல்ல மனசிலே தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம். மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் பிரியமாகவும் எது இருக்கிறதோ அதுவே சத்தியம் என்பதாக, சத்தியத்துக்கு ஒரு லட்சணத்தை வகுத்திருக்கிறார்கள்.


ஸத்யம் பூதஹிதம் ப்ரியம்


பேச்சினாலும் காரியத்தினாலும் எண்ணத்தினாலும் பிராணிகளுக்கு நன்மையை உண்டாக்குவதே சத்தியம். கெடுதல் செய்வதெல்லாம் அசத்தியமே!


ஒருவனுக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது; அதை அவன் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக்கூட கடுமையாகச் சொன்னால், அதையாரும் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு நிஷ்பலனாகப்போகிற நல்ல வாக்கு சத்தியமாகாது! நல்லதாகவும் இருக்க வேண்டும்; அது யாரை உத்தேசித்துச் சொல்லப்படுகிறதோ, அவனுக்கு இன்பம் தரும் விதத்தில் இதமாகவும் சொல்லப்பட வேண்டும். இதுவே சத்தியம்.





மகா பெரியவா!



Source:sage of Kanchi

Mannargudi Sitaraman Srinivasan
 
நிரந்தர சுகம் எது

நிரந்தர சுகம் எது


[TABLE="width: 100%"]
[TR]
[TD][/TD]
[TD="align: right"][/TD]
[/TR]
[/TABLE]


* உலக வாழ்வில் சுகம் வருவது போலிருக்கிறது. ஆனால், அது நித்தியமாக நிலைத்து நிற்பதில்லை. வெளியில் இருந்து வருகிற சுகத்தை நம்மால் சொந்தமாக்கிக் கொள்ள முடியாது.

* அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகிறபோது, இடுக்கு வழியாகக் கொஞ்சம் வெளிச்சம் வந்து பாய்ந்துவிட்டு, அடுத்த நிமிஷமே நிழல் வந்து மூடிக்கொள்வது போல, உலகத்தில் துன்பத்துக்கு நடுவில் கொஞ்சம் கொஞ்சம் சுகம் தலையை எட்டிப் பார்த்து விட்டு ஓடிவிடுகிறது. நிரந்தர சுகம் என்பது உலகத்துக்குக் காரணமான ஒன்றை அறிவது தான்.

* கிணற்று ஜலத்திற்குள் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும்போது கனம் தெரிவதில்லை. ஆனால், தண்ணீர் மட்டத்துக்கு மேலே வந்தவுடன் கனக்க ஆரம்பித்து விடுகிறது. அதேமாதிரி நம் துக்கங்களை எல்லாம் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கி விட வேண்டும். அப்போதும் துக்கத்துக்கு காரணமான விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால்,ஜலத்துக்குள் இழுக்கிற குடம் மாதிரி பரம லேசாகி விடும்.





காஞ்சிப்பெரியவா



Sage of Kanchi- Hari Haran
 
Last edited:
அருள்வாக்கு - அந்தரங்க சுத்தம்

அருள்வாக்கு - அந்தரங்க சுத்தம்



அனைத்து அறன்’ அதாவது ஸர்வ தர்மமும் என்னவென்றால் அவரவரும் ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்.’ அதாவது, தங்கள் மனஸைத் தாங்களே துளிகூட அழுக்கில்லாமல் நிர்மலமாகச் சுத்தம் செய்து கொள்வதுதான் என்கிறார் திருவள்ளுவர்.

கர்மாநுஷ்டானத்தால் அவரவரும் சித்தசுத்தி ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற வைதிக ஸம்பிரதாயத்தைத்தான் இங்கே திருக்குறளும் சொல்கிறது. முதலில் இவன் தன்னைத்தானே சுத்தம் பண்ணிக்கொள்ள வேண்டும். இது இல்லாமல் பரோபகாரம், ஸோஷல் ஸர்வீஸ் என்று கிளம்பினால் அது வெற்றுக் காரியம்தான்.

தான் அடங்கியிருக்க வேண்டும்; பக்தியோடு ஈஸ்வர ஸேவை என்று நினைத்து ஸமூஹ ஸேவை செய்ய வேண்டும். அப்போதுதான் அது பலனளிக்கும். அந்தரங்கச் சுத்தமில்லாமல் செய்கிற காரியங்கள் வெறும் படாடோபமாகவும், ‘ஷோ’வாகவுமே முடிந்து போகும். இந்தப் படாடோபத்தால் ‘ஸேவை’ என்று செய்கிறவனுக்கு அஹங்காரம் மேலும் ஜாஸ்தியாகத்தான் செய்யும். அஹங்காரம் தொலைவதற்கு உதவவேண்டிய ஸேவையை அடக்கமும் பணிவும் பக்தியும் அன்பும் இல்லாமல் செய்தால் அஹங்காரத்தை அதிகமாக்கிவிடும். குளிக்க வேண்டும் என்று போய்ச் சேற்றை வாரிப் பூசிக் கொண்டதாகி விடும்.

‘தான் சுத்தமாவதுதான் ஸர்வ தர்மமும்’ என்றால் இது ஸ்வயநலம் மாதிரி அல்லவா இருக்கிறது என்று தோன்றலாம். ஆனால் இது நாம் லோக ரீதியில் நினைக்கிற மாதிரியான ஸ்வயநலம் இல்லை. பிறத்தியாரைக் கஷ்டப்படுத்தியாவது நம் இந்திரிய ஸுகங்களைப் பூர்த்தி பண்ணிக் கொள்வதுதான் தப்பான ஸ்வய நலம். மனஸை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் நாம் கஷ்டப்பட்டாவது நல்லதே பண்ண வேண்டியதாகிறது. இது இந்திரிய ஸௌக்கியங்களிலிருந்து நம் மனஸை மீட்டு சாச்வதமான பேரின்பத்தில் சேர்ப்பதற்கு உதவுகிறது.



Mannargudi Sitaraman Srinivasan


Sage of Kanchi
 
அருள்வாக்கு

அருள்வாக்கு -

தவறான நாகரிகப் பிரிவினை



இந்தக் காலத்தில் தமிழ்ப் பண்பாடு வேறே, வைதிக நாகரீகம் வேறே என்று தப்பாக அபிப்ராயப்பட்டுக் கொண்டு முடிந்த மட்டில் தமிழ் தேசத்தில், முன்காலத்தில் உசந்ததாக எந்த விஷயம் இருந்தாலும், அல்லது எந்த விஷயங்கள் இருந்தாலும், அந்த விஷயம் அல்லது மநுஷ்யர் வைதிக நாகரீகத்தில் வராமல், தமிழினம் என்று ஏதோ ஒன்றை இவர்கள் பிரித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அதில் வந்ததாகவே ஜோடனை பண்ணிக் காட்டுவதாக ஏற்பட்டிருக்கிறது.



நல்ல அறிவும் ஆராய்ச்சித் திறமையும் உள்ளவர்கள், நாவல் எழுதுகிறவர்கள் எல்லோருமே இப்படித்தான் தமிழ் நாகரீகமென்று ஏதோ ஒன்று தனியாக இந்தத் திராவிட தேசத்தில் வைதிகத்துக்கு வித்யாஸமாக, அதை அமுக்கிக் கொண்டு, பிரகாசமாக இருந்ததாக ஜோடித்து எழுதுகிறார்கள். ஆனால் அந்த அந்தக் காலத்துக் கல்வெட்டுகளைப் பார்த்தாலும் சரி, கவிகளும் புலவர்களும் பாடி விட்டுப் போயிருக்கும் தமிழ் நூல்களைப் பார்த்தாலும் சரி, இந்தப் புது அபிப்ராயத்துக்கு ஒரு ஆதாரமும் இல்லை.



இதிலே ஒரு பக்கம் வேடிக்கையாகவும் இருக்கிறது. (வேடிக்கைக் கஷ்டம்) என்னவென்றால், வைதிகம் வேறே, த்ராவிடம் வேறே என்ற தப்பான அபிப்ராயம் பொது ஜனங்கள் மனஸில் அசைக்க முடியாமல் வேரோடி விட்டதாக நினைத்துக் கொண்டு, அவர்களுடைய ஆதரவைத் தாங்கள் ஸம்பாதிக்க வேண்டுமென்று பிராம்மணர்களிடையே அறிவாளிகளாக இருக்கப்பட்ட சிலபேர் இந்த பேதத்துக்கு பலம் கொடுத்து எழுதியும் பேசியும் வருகிறார்கள்.


தமிழ் தேசத்தில் பூர்வத்தில் ஆட்சி செலுத்திவந்த மூவேந்தர்களும் ஸரி, பல்லவர்களும் ஸரி, வேத வித்யைகளுக்கும் வேத கர்மாக்களுக்கும் வேத ப்ராம்மணர்களுக்கும் பண்ணியிருக்கும் பெரிய தொண்டுகளை அடியோடு மறைத்துவிட்டு, அவர்கள் தமிழ் நாகரீகம் என்று ஏதோ தனியாக இருந்த ஒன்றைப் போஷித்த மாதிரியே எழுதுகிறார்கள். பேசுகிறார்கள்.


சரித்திரத்தை Base பண்ணிக் கதை எழுதுகிறவர்கள் மாத்திரமில்லாமல் சரித்திர புஸ்தகமே எழுதுகிறவர்கள், தமிழிலக்கிய வரலாறு எழுதுகிறவர்கள், பண்டைத் தமிழ் நூல்களுக்கு இப்போது உரை எழுதுகிறவர்கள் ஆகியவர்களிலும் ரொம்பப் பேர் இந்த ரீதியில் எழுதுவதுதான் மிகவும் கவலையாயிருக்கிறது. இதனால் இவர்கள் இதுவரை ஜனங்களுக்கு இல்லாமலிருந்த பேத எண்ணங்களை உண்டாக்கி, வலிவு கொடுத்து வருகிறார்கள். பொதுவான பாரத கலாச்சாரத்துக்குள்ளேயேதான் அங்கங்கே வித்தியாஸங்களிருப்பது.


இது ரீஜினல் (பிராந்திய) வித்யாஸம்தானே தவிர ரேஷியல் (இன) வித்யாஸம் இல்லவேயில்லை. தமிழ் ஜனங்களுக்குள்ளேயே பழக்க வழக்கங்களிலும் பேச்சிலும் தென்பாண்டி நாடு, கொங்குதேசம், சோழ தேசம், வடார்க்காடு - தென்னார்காடு - செங்கல்பட்டு சேர்ந்த பழைய நடுநாட்டு - தொண்டை நாட்டுப் பகுதிகள் ஆகியவற்றுக்குள் எத்தனை வித்தியாஸங்களிருக்கின்றன? அதிலும் சேராமல், அத்தனையையும் அவியலாக்கி, இன்னும் சிலதையும் சேர்த்ததாகப் சென்னப்பட்டினத்தில் இருக்கிறது. ஸ்மார்த்தப் பொம்மநாட்டிகள் (மடிசார்) கட்டிலேயே மூன்று நான்கு தினுஸு சொல்வார்கள்.



ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்



Source; Sage of Kanchi
 
ரிக் வேத ஆவணிஅவிட்டம் 07.09.14 என தீர்மானிக்கப&#3021

காஞ்சி மடத்தில் நடந்த ஸதஸில் ரிக் வேத ஆவணிஅவிட்டம் 07.09.14 என தீர்மானிக்கப்பட்டது.

10559790_10202689302336500_6889253924454439675_n.jpg




Source: Sage of Kanchi

Krishnamoorthy Balasubramanian
 
ஆன்மிக சிந்தனைகள் ? (காஞ்சி மகா பெரியவர்)

ஆன்மிக சிந்தனைகள் ? (காஞ்சி மகா பெரியவர்)

நம் கஷ்டங்களைச் சொல்வதாக இருந்தால் கடவுளிடம் மட்டும் உங்கள் கஷ்டங்களைச் சொல்லுங்கள் . கண்டஇடங்களிலும் கண்ணில் பட்ட மனிதர்களிடம் எல்லாம் நம் துன்பங்களைச் சொல்வதால் எப்பயனும் இல்லை .

* பாவங்களை எப்படி தீர்த்துக் கொள்வது என்றால் புண்ணியத்தால் தான் தீர்த்துக் கொள்ள முடியும் . போன பிறவியில்செய்த பாவங்களை இந்த பிறவியிலாவது தீர்க்கட்டும் என்ற கருணையினால் தான் இறைவன் நமக்கு பிறப்பினைத் தருகிறார்.

* மனம் இருக்கும்வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும் . அதனால் மனதை அடக்கி விட வேண்டும் . மனம் அடங்கக்கற்றுக் கொண்டால் மரணநிலையில் இருப்பதுபோல் , ஒரு சக்தியுமின்றி ஜடம் போல் ஆகிவிடுவோம் என்றுஎண்ணக்கூடாது . மாறாக , மனம் அடங்கும் போது , சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை உருவாகும் .

* சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இணைந்திருப்பது . மனதில் உள்ளதை மறைக்காமல் அப்படியேஉண்மையாக இருப்பது சத்தியம் . மனதில் ஒன்றும் , வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அது அசத்தியமாகும் .

* பேசும்போது வளவள என்று மிகையாகப் பேசாமல் நிதானமாக அளந்து பேச வேண்டும் . திருவள்ளுவரும் எதைக் காக்காவிட்டாலும் நாக்கைக் கட்டுப்படுத்திப் பழகவேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்


Sage of Kanchi

C V Sathya Narayan
 
இறைவனுக்கு மனசு கேட்காது


இறைவனுக்கு மனசு கேட்காது


* பக்தி செலுத்துவதால் முக்தி கிடைத்துவிடும் என்றால், நாம் செலுத்தும் பக்தியே நேராக முக்தியைக் கொடுத்து விடுகிறது என்று அர்த்தமில்லை
நாம் செய்யும் செயல் எதுவுமே தானாக எந்தப் பலனையும் தருவதில்லை.

பலன்களைத் தருபவர் ஈஸ்வரனாகவே இருக்கிறார்.

* பாவ புண்ணியம் பார்த்து அனைவருக்கும் அனைத்து பலன்களையும் ஈஸ்வரன் முறையாக வழங்குகிறார். நாம் செலுத்தும் பக்திக்குப் பலனாக அருளை வழங்குவதுடன், ஞானத்தின் பலனாக மோட்சத்தையும் வழங்குகிறார். பலன் தருவது நாம் செய்யும் பக்தியே அல்ல. அதற்குப் பதிலாக ஈஸ்வரன் அளிக்கும் அருள் தான் பலனைத் தருகிறது.

* பக்தி நிஜமானதாக இருந்தால் பக்தன் பலனை எதிர்பார்க்க மாட்டான். எதிர்பார்ப்பு இருந்தால் அது வியாபாரம் தானே தவிர பக்தியில்லை. இப்படி பலன் வேண்டாம் என்றால் நிஜமான பக்தியைப் பெற்றுக் கொண்ட இறைவனுக்கு மனசு கேட்காது. அதனால் அருளை அளிப்பதுடன், ஞானத்தையும் அருள்வான். பக்தனை உலக வாழ்விலிருந்து விடுவித்து வீடு பேறும் அருள்வான்.


காஞ்சிப்பெரியவா



Sage of Kanchi

Hari Haran
 
தெய்வங்களின் உதாரணம்

தெய்வங்களின் உதாரணம்

நம்முடைய தெய்வங்களைப் பார்த்தாலே பெண்களுக்கு எவ்வளவு உசந்த ஸ்தானம் தந்திருக்கிறதென்று தெரியும். ப்ரஹ்மா தன்னுடைய நாக்கிலேயே ஸரஸ்வதியை வைத்துக் கொண்டிருக்கிறார்,

மஹாவிஷ்ணு லக்ஷ்மியை வக்ஷஸ்தலத்தில் வைத்துக் கொண்டிருக்கிறார்;
பரமேச்வரன் அம்பாளுக்குப் பாதி சரீரத்தையே கொடுத்திருக்கிறார்.

நவயுகப் பெண்கள் தங்கள் பர்த்தாவின் பெயரைத் தங்கள் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்டிருக்கிறார்களென்றால் நம்முடைய புருஷ தெய்வங்களோ தங்கள் ஸதிகளின் பெயரைத் தங்கள் பெயருக்கு முன்னால் போட்டுக் கொண்டிருக் கிறார்கள் – உமாமஹேச்வரன், கெளரீசங்கரன், லக்ஷ்மீ நாராயணன், ஸீதாராமன், ராதாகிருஷ்ணன் என்றிப்படி. நம்முடைய ஸம்ப்ரதாயத்தில் பார்த்தால் ஸ்த்ரீகளுக்கே முழு முக்யத்துவம் கொடுத்து ஸுமங்களி ப்ரார்த்தனை என்று இருக்கிற மாதிரி புருஷர்களுக்கு இல்லை. ஸுவாஸினி பூஜை செய்கிற மாதிரி புருஷர்களை உட்கார்த்தி வைத்துப் பூஜை செய்வதில்லை. ஸ்த்ரீகளுக்குத் தான் ரவிக்கைத்துண்டு தாம்பூலம் உண்டே தவிரப் புருஷர்களுக்கு வஸ்த்ரம் வைத்துக் தருவதில்லை. நவராத்ரி-கொலு ஒன்பது நாள் ஸ்த்ரீகளின் கோலாஹலத்துக்கே இருக்கிற மாதிரிப் புருஷர்களுக்கு என்ன இருக்கிறது?

பானை பிடித்தவள் பாக்யம்

பாக்யத்துக்கெல்லாம் உறைவிடமாக ஸ்த்ரீயைத்தான் வைத்திருக்கிறது. புருஷனை நீண்ட ஆயுள் உடைய ‘சிரஞ்சஜீவி’ என்று சொல்வதோடு நிறுத்திவிடுகிறோம். அந்த சிர ஜீவனத்தில் (நீண்ட ஆயுள் காலத்தில்) எல்லாம் சுபமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஸ்த்ரீகளைத்தான் சொல்லும்போது நீண்ட ஆயுள் கொண்ட ‘சிராயுஷீ’ என்பதோடு விடமால் ‘ஸெளபாக்யவதி’, ஸெளபாக்யவதி’ என்றும் சேர்த்துச் சொல்கிறோம்.

‘ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்யம்’ என்பதாக, ஒரு க்ருஹத்தின் ஸுபிக்ஷத்துக்கு க்ருஹிணியையே மத்யமாக வைத்துப் பழமொழியும் ஏற்பட்டிருக்கிறது. க்ருஹம் என்பது அவளுடைய ராஜ்யம். ‘க்ருஹம்’ என்ற வார்த்தைக்கு ‘க்ருஹிணி’ என்றும் அர்த்தமுண்டு. அதனால்தான் க்ருஹப்ரவேசத்துக்கு நாள் பார்க்கும்போதுகூட க்ருஹிணியின் நக்ஷத்ரத்துக்கே முக்யமாகப் பார்ப்பது. ‘இல்லாள்’ என்று அவளுக்குப் பேர் இருக்கிற மாதிரி ‘இல்லான்’ என்று புருஷனக்குப் பேர் இல்லை. (சிரித்து) ‘இல்லான்’ என்றால் ஒன்றும் இல்லாதவன் என்றுதான் அர்த்தம். அவள்தான் இல்லத்தில் அரசு செய்கிறாள்; அதிகாரத்தினால் இல்லாமல் அடக்கத்தினாலேயே அப்படிச் செய்கிறாள்.

அவளாகவே அப்படி இருப்பதுதான் அழகு; உத்தமம்.
சாஸ்த்ரம் எதிர்பார்ப்பது, பெண்கள் தாங்களாகவே அடங்கியிருப்பதைத்தானே தவிர, மற்றவர்கள் அவர்களை அடக்கி வைக்கும்படி அது சொல்லவில்லை. அதையே இப்போதும் நான் அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வுரையின் ஸாராம்சம்

ஸ்த்ரீத்வம்-பெளருஷம் இரண்டும் அடங்குவதான மநஷ்யத்வம் என்று பொதுவாக இருக்கிறதே. அதற்கே அடக்க குணம் அவச்யந்தான். ஆனாலும் பெளருஷம் ஒரளவுக்கு மேல் அடங்காது. பராசக்தி விசித்ரமாகச் செய்திருக்கிற இந்த லோக நாடகத்தில் புருஷர்கள் அப்படி ஒரே அடக்கமாக இல்லாமல் காரியங்களைச் செய்வதும் அவசியமாயிருக்கிறது. அவர்கள் ஒரே அடக்கமாக இருக்க வேண்டியதில்லை என்பதால் ஒரேயடியாக அடங்காமல் வெறித்தனத்தில் போக வேண்டும் என்று ஆகாது. துரதிருஷ்டவசமாக இப்போது அப்படித்தான் ஆகிக்கொண்டு வருகிறது. இது, புருஷர்களைவிட அடங்கியிருக்க வேண்டிய ஸ்த்ரீகள் அப்படியில்லாமல் பெளருஷ வியாபாரங்களில் ஈடுபடுவதன் தொடர்ச்சியாக, அவர்களை மிஞ்ச வேண்டும் என்று புருஷ வர்க்கம் போகிற போக்கால்தான். அதன் நிகர விளைவாக, ஸாத்விகத்துகும் மனத்ருப்திக்கும் பெயரெடுத்த நம் தேசத்தில் ஒரே ஹிம்ஸையும் அதிருப்தியும் அசாந்தியும் போட்டியும் பூசலும் வலுத்து வருகிறது. இப்படியே போனால் தேசமே ரண பூமியாகி விடும்.

அப்படி ஆகாமல் காப்பாற்றுவது பெண்களின் கையில்தான் இருக்கிறது. அவர்கள் அடங்கியிருக்க ஆரம்பித்தால்போதும், அடுப்படியிலிருந்து விறகை இழுத்தால் மேலே பொங்க ஆரம்பிக்கிற பால் தானே தணிகிற மாதிரி புருஷர்களின் வெறித்தனமான அடங்காமை கட்டுப்படும். தேசம் ரண பூமியாகாமல், ஸ்வர்க்லோகமாக மாறும்.

அடக்க குணம் மட்டுமில்லை; ‘பெண்மை’ என்பதற்கே விசேஷமாக உரித்தானதாக நான் சொன்ன எல்லா குணங்களும் இன்றைக்கு விருத்தியாக வேண்டும். அப்படி ஆனால்தான் பல தினுஸான வனமுறைகளால் அஸுரலோகமாகிவரும் தேசத்துக்கு லகான் போட்டு, சாந்தியும் த்ருப்தியும் ஸெளக்யமும் goal – ஆக இருக்கிற பாதையில் திருப்பிவிட்டதாகும். நமக்கு தர்மங்களை வகுத்துக் கொடுத்திருப்பவர்கள், தர்மம் என்ற வ்ருக்ஷத்துக்கு ஸ்த்ரீகளே வேர் என்ற உயர்ந்த அபிப்ராயம் உடையவர்கள். ஸ்த்ரீ மூலம் ஸர்வ தர்மா: என்றே அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்றேன். ‘மூலம்’ என்றால் வேர். வேர் நன்றாக இருந்துவிட்டால் மரம் முழுசுமே நன்றாக இருந்து விடுமல்லவா? அப்படி, ஸ்த்ரீகள் தங்கள் தர்மத்தில் ஸரியாய் இருந்துவிட்டால் போதும், புருஷர்களும் அப்படி ஆகி, லோகமே தர்மத்தில் நிலைப் பட்டுவிடும். அதுதான் இப்போது கார்யம்.


இத்தனை ஆயிரம் வருஷங்களாக நம் தேசத்தில் பெண்மை என்று இருந்து வந்திருப்பதை எப்படியாவது நாம் ரக்ஷித்துத் தர வேண்டியதே கார்யம். அதை நாம் ரக்ஷித்துக் கொடுத்தால் அது நம்மை ரக்ஷிக்கும். தர்மோ ரக்ஷதி ரக்ஷித: – தர்மத்தை ஒருத்தன் ரக்ஷித்தால் அந்த தர்மம் அவனை ரக்ஷிக்கும் என்று மஹாபாரத வசனம். அப்படி தர்மம் என்று மநுஷ்ய ஜாதிக்குப் பொதுவாக இருப்பதில் குறிப்பாக ஸ்த்ரீ தர்மம் என்பதை இன்றைக்கு அந்த ஸ்த்ரீகள் ரக்ஷித்துக் கொடுத்தாலே புருஷ தர்மமும் தன்னாலேயே சீர்ப்பட ஆரம்பித்து எல்லா இடத்திலும் தர்மமும், அதோடு கைகோத்துக்கொண்டு வருகிற க்ஷேமமும் தழைக்கும்.

இதுதான் ஸமூஹம் முழுவதன் க்ஷேமத்தையும் உத்தேசித்து நான் பெண்களுக்குச் சொல்வது. ‘உங்களுக்கு இல்லாத எந்தப் பெருமையும் புருஷர்களுக்கு இல்லை. இன்னும் சொல்லப் போனால் உங்களுக்கே ஜாஸ்திப் பெருமை. அப்படி யிருக்கும்போது நீங்கள் ஏன் அவர்கள் மாதிரி ஆக வேண்டும்? அப்படி உங்களைக் குறைத்துக் கொள்ளாமல் நீங்கள் நீங்களாகவே உசந்து நில்லுங்கள்’ என்று சொல்கிறேன்.

இப்போது மற்ற விஷயங்கள் எப்படிப் போனாலும் அம்பாள் பக்திவளர்ந்து வருகிறது. இப்படி ஸ்த்ரீ ரூபமாகப் பரமாத்மாவை பக்தி பண்ணுவதில் ஸ்த்ரீகள் விசேஷமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த அம்பிகைதான் ஸ்த்ரீகளுக்குத் தாங்கள் ஸ்த்ரீகளாகவே இருக்கவேண்டும் என்ற ப்ரஜ் ஞையையும், அதிலேயே பெருமித உணர்ச்சியையும் ஊட்டி சாஸ்த்ர ஸம்ப்ரதாயங்களால் இத்தனை காலம் சோபையுடன் வாழ்ந்து வந்த ஸ்த்ரீத்வத்துக்கு – பெண்மைக்கு – இக்காலத்திலும் எக்காலத்திலும் ரக்ஷணம் தர வேண்டும்.




Source: Sage of Kanchi


Aarathi Balaji
 
வாஸ்தவத்தில் சும்மா இருப்பதுதான் ரெம்ப&#

சும்மா இரு''-ஆதி சங்கரர்.

விளக்கம்-ஸ்ரீகாஞ்சி மகா பெரியவா

உபகாரமோ, அபகாரமோ, நல்லதோ, பொல்லாததோ எப்படி எப்படி நடக்கின்றதோ அப்படியே நடக்கட்டும். நாம் சும்மா இருந்தால் போதும். அதுவே நாம் மற்றவர்களுக்கு செய்யும் மிகப் பெரிய உபகாரம். . ஆதி சங்கரர் சொன்னதாக மகா பெரியவர் சொல்லியிருக்கிறார். ஏன் அப்படி ஒரு முடிவுக்கு வந்தார் ? அதற்கான விளக்கத்தையும் பெரியவர் சொல்கிறார்.

சன்னியாசி என்றால் ஒரு இடத்தில் இருக்கக்கூடாது என்கிற நியதிப்படி சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தார் ஆச்சார்யர்.

காசிக்கும் சஞ்சாரம் மேற்கொண்டார்.காசி என்பது சப்த மோட்ச ஸ்தலங்களில் ஒன்று. காசி, காஞ்சி, அயோத்தியா, மதுரா, மாயா, அவந்திகா, துவாரகா என்கிற மோட்ச ஸ்தலங்களில் ஞானம் வருகிறதோ இல்லையோ, அங்கே மரணம் அடைந்தால் மோட்சம் என்பார்கள்.சன்னியாசிகள் கூட அங்கே எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வாசம் பண்ணலாம். அங்கே செத்தாலே மோட்சம் என்பதனால் அங்கே இருப்பதனால் எத்தனை அழுக்கு ஒட்டிக் கொண்டால்தான் என்ன ? ஆகையால் சப்த மோட்ச புரிகளில் மட்டும் சன்னியாசிகள் தங்கலாம் என்று விலக்கு கொடுத்திருக்கிறார்கள்
.
56 தேசங்களில் உள்ள ஜனங்களும் காசிக்கு வருவார்கள். எனவே ஆச்சார்யரின் கீர்த்தி லோகமெங்கும் பரவியது. ப்ரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதிக் கொண்டு வந்திருக்கிறார். அபார தேஜஸ்வியாக இருக்கிறார் என்று எல்லா இடங்களும் பரவ அனைவரும் வந்து ஆச்சார்யரின் சரணத்தில் வீழ்ந்து அவர் பாஷ்யாம்ருத ச்ரவணத்தைக் கேட்டு ஆனந்தப் பட்டார்கள். எல்லா தேசத்தில் உள்ளவர்களின் அன்பை கண்டு மகிழ்ந்த ஆச்சார்யர் இந்த லோகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். என்ன செய்யலாம் ?

ஒருவருக்கு உபகாரம் பண்ணுவது என்றால் இன்னொருவருக்கு அபகாரமாகப் போய்விடுகிறது. ஒரு தேச்துக்கு உபகாரம் செய்தால் மற்ற தேசத்துக்கு விரோதமாகப் போய்விடுகிறது. ஒரு ஜாதிக் காரனுக்கு உதவி செய்தால் அது இன்னொரு ஜாதிக் காரனுக்கு கஷ்டமாக இருக்கிறது. ஒரு மதத்தை சேர்ந்தவனுக்கு உபகாரம் செய்தால் அடுத்த மதத்தை சேர்ந்தவன் எதிரியாகி விடுகிறான். இது மட்டுமா ? ஒவருவன் கஷடப்படுகிறானே என்று அவனுக்கு 10 ரூபாய் கொடுத்து உதவினால், அவன்போய் சொல்லி இனிஒருவன் வந்து கேட்கிறான். நம்மிடம் இல்லை எனவே இல்லை என்று சொன்னால் , நமக்கு மட்டும் இல்லை என்று சொல்லிவிட்டானே என்று அவன் வருத்த மடைகிறான்

. ஆச்சாரியர் தங்கியிருந்த ஒரு பழைய காலத்து மடம் ஒன்றில் ஒரு உளுத்தப் போன உத்திரம் இருந்தது. ஒட்டுக் கட்டிடம், நடுவில் முற்றம். முற்றத்திலே செடிகள் வைப்பதற்காக தளம் போடாமல் மண்தரையாகவே பாதி இடம் இருந்தது. ரீங்காரம் பண்ணியபடி பறக்கின்ற பெரிய வண்டுகள் உத்திரத்தில் துளையிட்டு அந்தத் துளையில் வாசம் செய்தன. சில சமயம் அவை முற்றத்தில் வந்து புரளும். அங்கு கட்டை எறும்புகள் சாரிசாரியாய் போய்க் கொண்டிருக்கும். இந்த வண்டு வந்து தலை குப்பிற விழுந்து புரள முயற்சி செய்து கொண்டிருக்கும் போது 10, 15 எறும்புகள் இந்த வண்டைப் பிடித்து வெடுக் வெடுக் என்று அதன் காலைப் பிடித்து கடிக்கும். வண்டு துடிக்கும். ஐயோ பாவம் என்று எண்ணி வண்டை புரட்டிப் போட்டால் அது உடனே இந்த எறும்புகளைப் பிடித்து சாப்பிட ஆரம்பித்து விடுமாம். ஆச்சார்யர் பதறிவிடுவாராம். இது உபகாரமா, அபகாரமா ? அப்போதுதான் முடிவு செய்தாராம். ஒன்றுமே செய்யாமல் சும்மா இருப்பது என்று. ஆனால் உலகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டுமே ? என்ன செய்வது ?யாருக்கும் உபத்திரபம் இல்லாத ஒன்றைச் செய்ய வேண்டும் . என்ன செய்யலாம். யோசனை பண்ணினார் ஆச்சார்யர்.

ஒரு முடிவுக்கு வந்தார்.

இந்த சும்மா இருக்கும் விஷயத்தையே உலகுக்கு சொல்லிவிடுவோம். யாருக்கும் உபத்திரபம் இல்லாமல் போகும் என்று முடிவு செய்தார். அதையே சொன்னார்

உபகாரமோ, அபகாரமோ, நல்லதோ, பொல்லாததோ, எப்படி எப்படி நடக்கிறதோ அப்படியே நடக்கட்டும். நாம் சும்மா இருந்தால் போதும். சும்மா இருப்பதுதான் நாம் பிறருக்கு செய்யும் உபகாரம்
.
அவர் சொல்லிவிட்டார். வாஸ்தவத்தில் சும்மா இருப்பதுதான் ரெம்பக் கஷ்டம்.



Source: Sage of Kanchi

Varagooran Narayanan
 
Gems from Maha Periyava

Gems from Maha Periyava


நாம் இப்போது நான்கு விதங்களில் பாபம் செய்கிறோம்.

உடம்பால் பல கெட்ட காரியம். வாயால் புரளிப்பேசும் அசத்தியமும், மனத்தினால் கெட்ட நினைவுகள், பணத்தினால் செய்கிற பாபத்தைப் சொல்லவே வேண்டாம்.

எந்த நான்கால் பாபம் செய்தோமோ, அந்த நான்காலுமே புண்ணியம் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.

உடம்பைப் பரோபகாரம், பகவானைப் பிரதக்ஷிணம் செய்து நமஸ்கரிப்பது இவற்றில் ஈடுபடுத்திப் புண்ணியம் செய்ய வேண்டும்.

மனசு பகவானின் இடம். அதைக் குப்பைத் தொட்டியாக்கி இருக்கிறோம். அதைச் சுத்தப்படுத்தி மெழுகி, பகவானை அமரவைத்து, நாமும் அமைதியாக அமைந்துவிட வேண்டும்.

பணத்தைக் கொண்டு பகவானுக்காகவும் ஏழைகளுக்காகவும் பலவிதங்களில் தர்மம் செய்து புண்ணியம் சேர்க்க வேண்டும்.


பொறுமையாக பகவானை நம்பி நம் தர்மத்தைச் செய்தால் நிச்சயம் கைகொடுப்பான்.



Source; Sage of Kanchi


Sunderasan Subramanian
 
Adi Shankara Vigraha Gokarna- Karnataka

Adi Shankara Vigraha Gokarna- Karnataka


adi-sankara-at-Gokarna.jpg

[TD="bgcolor: #DAE5E7, colspan: 2"]
adi-sankara-gokarna-title.jpg
[/TD]

[TD="bgcolor: #E7ECD8, colspan: 2"]
adi-sankara-at-Gokarna2.jpg
[/TD]

[TD="width: 346, bgcolor: #E7ECD8"]With the blessings of Their Holinesses Pujyasri Shankaracharya Swamijis of Sri Kanchi Kamakoti Peetam, an Adi Sankara Mandir has been established at the holy town of Gokarna in Karnataka. The imposing statue of Sri Adi Sankara faces the sea at Gokarna and is located right behind the Mahabaladeva Temple.
[/TD]



: kamakoti.org
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top