• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
Sadhana :

SADHANA :

The effort has to start,at the same time what we learn from this is that to be the real Self instead of the false Self it is so difficult. The false self is the mind, a creation of MAyA.

The real Self is the Truth that is Brahman.

It may take many life-times; it may be very difficult and long. But the effort has to start right now.

The more you postpone it, the life-cycle will get more extended.

Suppose we do not start this ascent of the spiritual ladder now....

What do you think will happen? We will be continuing to commit further sinful activities and these will accumulate more and more dirt and trash in the mind.

More life-times have to be spent. That is why I said the effort has to start right away, in order to escape from this life-cycle.

I said just now escape from this life-cycle ; I also said efforts have to be done. These two together constitute the definition of SAdhanA.

Instead of doing certain things in a haphazard fashion as and when the mood or the occasion arises, those great ancestors of ours who have reached the goal have prescribed for us specific methodologies for us.

To walk that path is what is called SAdhanA.

Kanchi Sri Maha Periva


Sage of Kanchi

C V Sathya Narayan
 
எப்போதும் செல்லும் "நோட்டு'

எப்போதும் செல்லும் "நோட்டு''

* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் ஒருவன் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். இதற்கு நம்மிடம் இருக்கும் செல்வம் நம்முடையதல்ல என்ற எண்ணம் முதலில் இருக்க வேண்டும்.

* உடை, உடம்பு, இருக்கும் இடம் ஆகியவை தூய்மையுடன் இருந்தால் போதாது. கள்ளம், கபடம், வஞ்சனை போன்ற அழுக்குகள் மனதில் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* செய்யும் செயல் அனைத்தும் தர்ம சிந்தனையுடன் இருக்க வேண்டும். செல்வத்தை புண்ணிய காரியங்களுக்கு செலவழித்தால் பணம் அனைத்தும் தர்மம் என்னும் "நோட்டாக' மாறி விடும். அந்தப்பணம் எந்தக் காலத்திலும் செல்லுபடியாகும்.

* உயிர்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும். மனதில் அன்பு இருந்தால் ஆனந்தம் நிலைத்து இருக்கும். ஒருவர் தவறு செய்யும்போது அன்பால் திருத்துவது தான் பெருமை. அது தான் நிலைத்தும் நிற்கும்.

* ஆடம்பர பொருள்களைத் தேடிப் போவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது.


காஞ்சிப்பெரியவா



Sage of Kanchi

Hari Haran
 
கலியுகத்தின் மிகப் பெரிய நன்மை

கலியுகத்தின் மிகப் பெரிய நன்மை

பூமி தோன்றி எத்தனையோ லட்சம் ஆண்டுகள் உருண்டோடி விட்டன. கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம் என கடந்து இப்போது கலியுகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். தற்போது கலியுகம் நடந்துவருகிறது. கொடுமையான இந்த கலியுகத்தில் – கலிகாலத்தில் – வாழ்கிறோமே என்று வருத்தப்படுகிறோம்.

கலியுகத்தின் எண்ணற்ற தீமைகளை அசைபோடுகிறோம். ... குமுறுகிறோம். ...

இந்த ரீதியில் கலியுகத்தின் தீமைகளை பற்றியே மனம் சிந்திக்கிற படியால், கலியுகத்தின் மிகப் பெரிய நன்மை நம் கண்களுக்கு தெரியாமலே போய்விடுகிறது. ...

ஆம்.. பக்தி செய்வதற்கும், இறைவனின் அருளை சுலபமாக பெறுவதற்கும் ஏற்ற யுகம் கலியுகம் தான்!
முந்தைய யுகங்களில் இறைவனின் அருளை பெறுவது என்பது அத்தனை சுலபமல்ல !
கிருதயுகத்தில் கடுந்தவம் செய்து ...

திரேதாயுகத்தில் தானங்கள், மற்றும் யாகம் முதலான வேள்விகள் செய்து ....

துவாபர யுகத்தில் அர்ச்சனை, மந்திரம் ஜெபித்து .... எந்த உயர்நிலையை அடைந்தனரோ, அந்த உன்னத நிலையை இந்த கலியுகத்தில் இறைவனின் பெருமையை சொல்வதாலும் கேட்பதாலும் படிப்பதினாலுமே அடைந்து விடலாம்!

சுருங்கக் கூறின், நாம கடைத்தேற கலிகாலமே இலகு வழி!




Sage of Kanchi


Balaji Iyer
 
WHAT IS 'DHARMA PRAMAANAM'?

It is to do according to the dharma saasthraas.

The vEdhaas come as the first order; followed by the dharma shaasthraas; next comes the behavior of our rishis and contemporary saints. Only after all these four, the conscience should be considered.

But, nowadays, everything has become just the opposite!
'manasaatchi' [conscience] is just a witness only and cannot become the judge!

It can only state as to what has truly happened but cannot say that 'this is the judgement'!

It will only try to justify what IT thinks as right.

How can this be the 'ultimate judgement'?[dharmapramaaNam]
So, we should not give the 'manasaatchi' the status of a judge.
If there is no other way, we can just ask its opinion from what it has witnessed.

Mind belongs to an individual; hence it cannot be depended for an impartial decision.

In societal decisions, one should trust in the sayings of the Saints who have preached only for the welfare of the entire world, without any selfishness.



Sri mahA periyavAL



Sage of Kanchi

C Sathya Narayan
 
Kootruva (கூற்றுவ நாயனார்) Nayanar,

Kootruva (கூற்றுவ நாயனார்) Nayanar,

1174556_181667195347145_2035151672_n.jpg


Kootruva (கூற்றுவ நாயனார்) Nayanar, the King of “Kalandhai” had emerged victorious occupying most of the current Tamil Nadu. Having won, he wanted to be coronated at Chidambaram Temple crowned by the Chidambaram Dikshitars as the King. The Dikshitars refuse stating that they shall do so only for the kings of Chozha dynasty. Fearing for their general safety under the new king they leave a few Dikshitars in Chidambaram to look after the crown and to do poojas for Nataraja, the rest of them go to Kerala. Hurt by their refusal and their exodus, Kootruva Nayanar, a great Sivabhakta prays to Sri Nataraja thus “Let your grace be that I wear only your lotus feet as my crown. ” That night Sri Nataraja appeared to Nayanar in his dream and blessed him by placing his feet on his head. Having received Ambalavanar’s lotus feet on his head, Nayanar never wore a crown thereafter.



கூற்றுவ நாயனார் புராணம்
அற்றை நாளில் இரவின்கண்
அடியேன் தனக்கு முடியாகப்
பெற்ற பேறு மலர்ப்பாதம்
பெறவே வேண்டும் எனப்பரவும்
பற்று விடாது துயில்வோர்க்குக்
கனவிற் பாத மலரளிக்க
உற்ற வருளால் அவைதாங்கி யுலக
மெல்லாந் தனிப் புரந்தார்.


Unto him who ever prayed: “O Lord, I, Your serviteur,
Should be graced with the beatific crown
Of Your flower-feet,” during that night, in his dream
The Lord crowned him with His flower-feet; these
He bore by His grace and sole reigned the whole earth.


Translation: T.N. Ramachandran



Outstanding drawing ?.. « Sage of Kanchi
 
அறிவை விட உயர்ந்தது

அறிவை விட உயர்ந்தது

* அதுவேண்டும் இதுவேண்டும் என்று அனைவரும் ஆலாய்ப் பறக்கிறார்கள். மனதில் ஏதாவது ஆசை இருந்து கொண்டே இருக்கும் வரை அமைதி வருவதில்லை.

* வாழ்க்கைத் தரம் என்பது பொருளாதாரம் சார்ந்ததில்லை. மனநிறைவும், நிம்மதியும் நிறைந்திருப்பதே உயர்ந்த வாழ்க்கை.

* கோடீஸ்வரனாக இருப்பவன் கூட ஏதாவது மனக்குறையுடன் அலைந்து கொண்டிருக்கிறான் என்பதை ஏழைகள் உணர மறுக்கிறார்கள்.

* எதை நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதுவாக நாம் ஆகிறோம் என்று மனோதத்துவம் மனதின் வலிமையை எடுத்துக் கூறுகிறது.

* அழகு, கருணை, சக்தி, ஞானம் போன்ற கடவுளின் குணங்களை எப்போதும் மனதில் சிந்தித்து வந்தால் நாமும் நல்லவர்களாகி விடுவோம்.

* அறிவை விட ஒழுக்கம் ஒருவனுக்கு அவசியம். ஒழுக்கம் இல்லாத அறிவு தீமைக்கு வழிவகுக்கும்.

* குழந்தைப் பருவத்திலேயே ஒழுக்கத்தின் உயர்வை பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.

காஞ்சிப்பெரியவர்



Source: Sage of Kanchi

Hari Haran
 
சாஸ்திரம் தலைமுறைகளின் சொத்து

சாஸ்திரம் தலைமுறைகளின் சொத்து


swami_1895358h.jpg



நமது பழைய சாஸ்திரங்களில் இல்லாத கலைகளையோ ஸயன்ஸ்களோ மற்ற விஷயங்களோ இல்லவே இல்லை. போஜராஜன் செய்துள்ள ஸமராங்கண சூத்திரம் என்ற நூலில் பலவிதமான மிஷின்கள் செய்யும் முறைகள்கூட உள்ளன. அதில் ஆகாய விமானத்தைப் பற்றிக்கூட வருகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கும். போஜன் இந்த விமானத்தைப் பற்றிய சித்தாந்த முறையை (Theory) மட்டுமே சொல்லிவிட்டு, நடைமுறையில் (Practical) இதைப் பண்ணும் வழியை நான் சொல்லாததால் எனக்கு அது தெரியாது என்று நினைக்க வேண்டாம். நடைமுறையைப் பற்றி இந்த விமானம் செய்யப்பட்டால், ஜனங்களுக்கு சௌகரியத்தைவிட அசௌகரியமே அதிகமாகும் என்றே சொல்லவில்லை என்கிறார்.


ஆகாய விமானம், அணுசக்திக் குண்டு இவற்றை எல்லாம் நடைமுறைக்குக் கொண்டு வந்ததன் அனர்த்தத்தை நாம் உலக யுத்தத்தில் கண்கூடாகப் பார்த்து விட்டோம். அது ஒரு புறம் இருக்கட்டும். போஜன் சொல்லியிருக்கிற ஆகாய விமான தியரியைச் சில என்ஜினீயர்களுடன் சேர்த்து படித்துப் பார்த்ததில் பலூன், ஜோர்டான் என்ஜின் போன்ற ஒரு முறையை போஜன் சொல்கிறார் என்று தெரிய வந்தது.


பழைய காலத்தில் ஒவ்வொரு கலைக்கும் ஸயன்ஸுக்கும் தனித்தனி நூல்கள் இருந்தன. இந்த நூல்கள் ஒவ்வொன்றையும் டைஜஸ்ட் மாதிரி ஒரு அத்தியாயமாகச் சுருக்கி பிருஹத் ஸம்ஹிதை என்ற புஸ்தகத்தை வராஹமிஹிரர் எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட 1500 வருஷங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்தப் புஸ்தகத்தில் தாவர சாஸ்திரம், மிருக சாஸ்திரம், பட்சி சாஸ்திரம், தாது சாஸ்திரம் இப்படிப் பல விஷயங்களும் அடங்கியிருந்தன. பழைய காலத்தவரின் என்ஜினீயரிங் ஞானம் இன்றுள்ள நிபுணர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.


இவற்றுக்கெல்லாம் ஆதார நூல்கள், சாஸ்திரங்கள் உள்ளன. ஆயிரம், பதினாராயிரம் வருஷங்களாக தலைமுறை தலைமுறையாக ரக்ஷிக்கப்பட்டு நம் கைக்கு வந்துள்ளன. இந்த நாள்போல் அச்சுப் புஸ்தகங்கள் போடத் தெரியாத காலங்களிலும் இவற்றை நம் முன்னோர்கள் எப்படியோ காத்து நம் வரைக்கும் தந்துவிட்டார்கள். இப்படி யுகாந்திரமாக வந்த சாஸ்திரங்களை எல்லாம் நமக்குச் சகல வசதி இருந்தும், அடுத்த தலைமுறைக்குக் காத்துத் தராமல் இருக்கிறோம். ஆயிரம், பதினாராயிரம் வருஷங்களாகத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த இழையை அறுத்து விடுகிற பாக்கியம் நமக்கே ஏற்பட்டிருக்கிறது.


குருடன் ஒருவன் கையில் லாந்தருடன் போய்க்கொண்டிருந்தானாம். எதிரில் வந்த ஒருவன் உனக்குத்தான் கண் தெரியவில்லையே, லாந்தர் ஏன் எடுத்து வருகிறாய் என்று கேட்டான். அதற்குக் குருடன், எனக்கு கண் இல்லாவிட்டாலும் உனக்குக் கண் இருக்கிறதல்லவா. அதற்காகத்தான் இதை எடுத்து வருகிறேன்.

இல்லாவிட்டால் இந்த இருட்டில் நீ என்மேல் தடுக்கி விழுந்திருப்பாயே என்றானாம். அதுபோலவே பழைய சாஸ்திரகங்கள் நமக்குப் புரியாவிட்டாலும், எதிர்காலத்தில் யாருக்காவது புரியலாம். பயனாகலாம் என்பதனாலாவது அவற்றை நாம் ரக்ஷித்தாக வேண்டும். வசதியே இல்லாத காலங்களில் யுகாந்தரமாக ரக்ஷிக்கப்பட்ட சாஸ்திரங்களை நமக்கு முதல் தலைமுறையினர் எல்லா வசதியிருந்தும் காப்பாற்றாமல் அழித்து, நம்மை வஞ்சித்துவிட்டார்கள் என்று, வருங்காலத் தலைமுறையினர் நம்மைக் குற்றம் சொல்ல இடம் வைக்கலாமா.?


பழைய காலங்களில் சாஸ்திர ரக்ஷணம் அரசர்களின் பொறுப்பிலிருந்தது. இப்பொழுது ராஜாக்கள் இல்லை. ராஜ்ய, மத்ய சர்க்கார்கள்தாம் உள்ளன. அவற்றுக்கு நிம்மதியே இல்லை. ஒரு பக்கம் பாஷை சண்டை. ஒரு பக்கம் எல்லைச் சண்டை. ஏகப்பட்ட பாலிடிக்ஸ். ஊழல் இப்படிப் பல கஷ்டங்கள். அந்தக் காலத்தில் ஒரு ராஜாவுக்கும் இன்னொரு ராஜாவுக்கும் சண்டை நடந்தது என்றால், இப்பொழுது ஓரு ராஜ்ஜியத்துக்கும் இன்னொரு ராஜ்ஜியத்துக்கும் சண்டை. ஒரு வர்க்கத்துக்கும் இன்னொரு வர்க்கத்துக்கும் சண்டை. ஒரு கட்சிக்கும் இன்னொன்றுக்கும் மண்டை உடைகிறது. எனவே, சாஸ்திர ரக்ஷணத்திற்கு அரசாங்கத்தை எதிர்பார்த்துப் பிரயோஜனமில்லை.


சுற்றுப்புறத்திலெல்லாம் ஒரே பூசல், குடும்பத்திலும் தொல்லை என்று நாம் தட்டிக் கழிக்கக் கூடாது. வனவிலங்களுகளை பாருங்கள். சிங்கம் புலியை அடிக்கிறது. புலி மானை அடிக்கிறது. இருந்தாலும், காட்டிலே சிங்கக்குட்டியும், புலிக்குட்டியும், மான் குட்டியும் வளர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அப்படி இருக்க நாமும் பழக வேண்டும். எத்தனை இடையூறு இருப்பினும், நமக்கு எதிர்காலத்தினரிடம் உள்ள கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து பழைய சாஸ்திரங்களை ரக்ஷித்துத் தரவேண்டும்.



தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)



????? ???? - ?? ?????
 
காரிய சக்தியும் காப்புச் சக்தியும்

காரிய சக்தியும் காப்புச் சக்தியும்


காரிய சக்தியை நம்மிடமும், ரக்ஷண சக்தியை தேவர்களிடமும் பகவான் கொடுத்திருக்கிறார். லோகத்திலும் இப்படியே இரண்டு பிரிவுகள் இருக்கன்றன. வயல், ஃபாக்டரி இவை காரியம் பண்ணும் இடம். போலீஸ், கோர்ட், மற்ற ஆபீஸ்கள் எல்லாமே ஒருவிதத்தில் ரக்ஷணை (காப்பு) தருகிற இடங்கள்தான்.

வயலிலும் ஃபாக்டரியிலும் காரியம் பண்ணி உண்டாக்கினது வீட்டுக்கு நியாயமாக வந்து சேரும்படி செய்வதற்குத்தான் ஆபீஸ்கள் இருக்கின்றன. ஆபீஸில் பதார்த்தங்கள் (ப்ராட்யூஸ்) இல்லை ; சாகுபடியில்லை. மெஷின் சத்தமும், மாட்டுச் சாணியும், புழுதியும், இல்லை. நகத்தில் அழுக்குப் படாமல் பங்களா, ஃபான், நாற்காலி என்ற சௌகரியங்கள் ஆபீஸில் இருக்கின்றன. உடம்பால் உழைக்க வேண்டியதில்லை. எல்லாம் பேனா வேலைதான். தேவலோகம் இப்படித்தான் இருக்கிறது. அது ஸர்வலோகங்களுக்கும் ரக்ஷணைக்கான ஆபீஸ். ஆபீஸ்காரர்கள் உழவில்லை, மிஷினைப் பிடித்துச் சுற்றவில்லை என்று நாம் குற்றம் சொல்வோமா ? அவர்கள் இதைச் செய்ய ஆரம்பித்தாஸ், நம் ரக்ஷணை போய்விடுமே ! தேவர்கள் இப்படி அதிகாரிகளாக இருக்கிறார்கள்.



பூலோகம்தான் வயல், ஃபாக்டரி. ஒரே சேரும் சகதியும் ; இல்லாவிட்டால் கடாமுடா என்று சத்தம். எண்ணெய்ப் பிசுக்கு, தூசி, தும்பு எல்லாம். உடம்பு வருந்த உழைத்துக் கொட்டவேண்டும். இப்படித்தான் நாம் எல்லோரும் கர்மாநுஷ்டனும் பண்ணவேண்டும். ஹோமப்புகை, பசி, பட்டினி, எல்லாவற்றோடும் வேர்த்துக் கொட்டிக் கொண்டு பண்ணவேண்டும்.


இதனால் தேவர்கள் உசத்தி, நாம் தாழ்த்தி என்று பகவான் நினைக்கவில்லை. ஆபீஸில் ஜோராக உட்கார்ந்திருப்பவனுக்கு இந்த விவசாயியும், (ஃபாக்டரி) தொழிலாளியும்தான் சாப்பாடும், மற்ற ஸாமான்களும் உற்பத்தி பண்ணிக் கொடுக்கிறார்கள்.


இவர்கள் இல்லாவிட்டால் அவன் பட்டினிதான் ; அவனுக்கு ஒரு ஸாமானும் கிடைக்காது. அதே மாதிரி அவனுடைய ரக்ஷணையால்தான் இவன் உழவு பண்ணின தானியமும், உற்பத்தி பண்ணிய சரக்கும் இவன் வீட்டுக்கு வருகிறது ; சமூகத்திலும் எல்லாருக்கும் அவை கிடைக்கின்றன. ஆபீஸில் உட்கார்ந்திருக்கிற என்ஜினீயர் தான் வயலுக்கான கால்வாய் வெட்ட உத்தரவு போடுகிறார். விவசாய அதிகாரி பூச்சி மருந்து கொடுக்கிறார். ஒரு ஃபாக்டரி என்றால், லைசென்ஸ் தருவதிலிருந்து அதற்கான மூலச்சரக்குகளை வரவழைப்பது முதலான எல்லாம் ஆபீஸ் அனுமதியால்தான் நடக்கிறது. அப்புறம் சர்க்காரும், போலீஸும், கோர்ட்டும்தான் இவை நியாயமாக எல்லாருக்கும் விநியோகமாகும்படி சகாயம் பண்ணுகின்றன. (நடைமுறையில் எப்படியிருந்தாலும், ராஜாங்கம் என்பது இதற்காக இருப்பதாகத்தான் பேர்.) இப்படி ஒருத்தரை ஒருத்தர் நம்பி, இவனால் அவனுக்கு ஸுகம், அவனால் இவனுக்கு ஸுகம் என்றிருக்கிறது.

இதனாலெல்லாந்தாந் " பரஸ்பரம் பாவயந்த :" என்றார். ஆனாலும், தேவர்கள் நம்மை எதிர்ப்பார்ப்பவர்களாக இருந்தாலும், அவர்கள் நம்மைவிட உயர்ந்த உயிரினம் என்பதை நாம் மறக்கக்கூடாது. அவர்களிடம் மரியாதையுடன் இருக்கவேண்டும்.


பிற மதங்கள் எல்லாம், ஒரே ஸ்வாமியையத்தான் நேராக வழிபடும். ஒரே கடவுளிடத்தில் நேராகப் பிரார்த்தனை செய்யும். பல தேவசக்திகளைப் ப்ரீதி செய்கிற யாக யக்ஞங்கள் மற்ற மதங்களில் இல்லை.
நம்முடைய மதத்தில் சந்நியாசிகள்தாம் சாக்ஷ£த்பரமாத்மாவையே நேராக வழிபடலாம். மற்றவர்கள் தேவதைகளைப் ப்ரீதி பண்ணித்தான் பல ஹோமங்கள், யக்ஞங்கள் எல்லாம் பண்ணுகிறோம்.
ஒரு பெரிய ராஜா இருந்தால், எல்லாரும் ராஜாவிடமே நேரில் போக முடியுமா ? அந்த ராஜாவின் பரிபாலனத்திற்கு உட்பட்ட உத்யோகஸ்தர்களிடம் குடிமக்கள் நெருங்கித் தங்களுக்கு வேண்டிய அநுகூலங்களைப் பெறுகிறார்கள். உத்தியோகஸ்தர் தாங்களாகச் செய்வதில்லை ; அரசன் உத்தரவுப்படிதான் ஜனங்களுக்கு அநுகூலம் செய்கிறார்கள். ஆனாலும் அரசன்தானே செய்கிறான் ? என்று அரசனிடத்தில் குடிமக்கள் நேராக போகமுடியாது.


அப்படித்தான் நம் மதத்தில் சில வழக்கங்கள் இருக்கின்றன. பரமேச்வரன் மகாசக்ரவர்த்தி. ஸகல ஜனங்களும் குடமக்கள். வருணன், அக்கினி, வாயு போன்ற பல தேவதைகள் சக்ரவர்த்தியின் உத்தியோஸ்தர்கள். இவர்கள் மூலமாக நாம் பல நன்மைகளை அடையவேண்டும். அதற்காகவே, தேவர்களுக்குச் சக்தி அளிக்க யாகம் பண்ணுகிறோம். அக்னி முகமாக நாம் கொடுக்கிற ஹவிஸ்கள் தேவர்களுக்குச் சேர்ந்து ஆஹாரமாகின்றன : " அக்னிமுகா : தேவா :".


' நம்முடையது அன்று ' என்று நாம் கொடுக்கிற பொருள்கள் தேவதைகளுக்குப் போய்ச் சேருகின்றன. அக்கனியில் போடுவதுதான் நம்முடையது இல்லை என்றுது போகும். போடும்போது ' ந மம ' என்ரு சொல்லிப் போடுகிறோம். ' ந மம ' என்றால், என்னுடைய அல்ல என்று அர்த்தம். தேவர்களுக்கு ஆகாரம் போய்ச் சேருகிற வழிதான் அக்னி. இப்படியே நாம் எந்த வம்சத்தில் பிறந்தோமோ அந்த வம்சத்திலுள்ள பித்ருக்களைப் ப்ரீதி செய்யப் பல காரியங்களைச் செய்கிறோம். இதற்கும் வேதத்தில் வழி சொல்லியிருக்கிறது.



????? ????????? ???????? ????????? : ( ??????????? ????? - ???????? ????? ) : kamakoti.org:
 
ஆதிசங்கரர் சிந்தனைகள்

ஆதிசங்கரர் சிந்தனைகள்


6_2020021h.jpg




# பக்தி வேறு, கர்மம் வேறு அல்ல; கர்மம் வேறு, ஞானம் வேறு அல்ல. அனைத்தும் ஒரே குறிக்கோளான இறைவனை அடைவதற்கான வழிகளே ஆகும். அவரவர் தன்மைக்கு ஏற்ப எந்த வழியைப் பின்பற்றினாலும் இறுதியில் அடைய வேண்டிய லட்சியம் எல்லோருக்கும் ஒன்றுதான்.


# வாழ்வில் நாம் படும் துன்பங் களுக்கும், இன்னல் களுக்கும் அடிப்படைக் காரணம் நான் வேறு, நீ வேறு என்ற இரட்டை மனோபாவம்தான். மனதில் சுயநலம் இருக்கும் வரை துன்பத்திலிருந்து விலக முடியாது. சுயநலம் உள்ள இடத்தில் என்றும் அமைதி இருப்பதில்லை.


# குரு ஒருவரைத் தேடு. அவரது திருவடித் தாமரைகளில் திடமான பக்தி கொண்டவனாகிப் பிறவித் துன்பத்திலிருந்து விரைவில் விடுபடு. குருவருளில் நம்பிக்கை கொண்டு மனதை அடக்கப் பழகினால், உள்ளத்தில் உறைந்திருக்கும் தெய்வத்தைக் காணலாம்.


# செல்வத்தாலும், சுற்றத்தாலும், இளமையாலும் யாரும் கர்வம் கொள்ளாதீர்கள். என்றைக்காவது ஒருநாள் இவையெல்லாம் நம்மை விட்டு விலகிச் சென்றுவிடும். அதனால், வாழ்நாளுக்குள் கடவுளை அறிய முற்படுங்கள்.


# குழந்தைகள் விளையாடிக் களிக்கிறார்கள். வாலிபர்கள் பெண்ணின்பத்தை நாடுகிறார்கள். வயோதிகர்கள் கவலையில் கழிக் கிறார்கள். ஆனால், கடவுளின் மீது பற்றுவைக்க மறந்துவிடுகிறார்கள்.


# நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே. உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். மனதுடன் நடத்தும் போராட்டம் என்றும் ஓய்வதில்லை. விழிப்பு நிலையில் மட்டுமல்ல, உறக்க நிலையிலும்கூட மனதின் போராட்டம் நம்மை விட்டு ஒருபோதும் நீங்குவதில்லை.



# அனைத்து சாஸ்திரங்களும், வேத நூல்களும் மனதை அடக்கும் வழிமுறைகளையே நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. மனதை அடக்கும் தீயை ஆண்டவனிடம் கேட்டுப் பெற வேண்டும்.


# உடலுக்குக் கிடைக்கும் இன்பத்தை எவ்வளவுதான் அனுபவித்தாலும் ஒருவனுக்கு நிரந்தரமான திருப்தி கிடைக்கப் போவதில்லை. இருந்தாலும், மனம் அந்த ஆசையை விட்டுவிட இடம் தருவதில்லை.


# காய்ந்த எலும்புத் துண்டைக் கடித்த நாய், தன் வாயிலிருந்து வழிந்த ரத்தத்தை எலும்பிலிருந்து வருவதாக எண்ணி மேலும் அழுத்தமாகக் கடித்து துன்பத்தை அடையும். அதுபோல் மனிதனும் ஆசைகளைப் பெருக்கிக்கொண்டு துன்பத்தை அனுபவிக்கிறான்.


# பாலைவனத்தில் தூரத்தில் தெரியும் கானல் நீர் அருகில் சென்றதும் மறைவதுபோல, மனதில் வாழ்வில் உண்டாகும் இன்பங்களும் நம்மை ஏமாற்றக்கூடியவையே. அவை நிரந்தரமானதல்ல.


# சிரத்தையும், பக்தியும், தியான யோகமும் முக்திக்குக் காரணங்கள் என வேதம் கூறுகிறது. யார் இவைகளில் நிலைபெற்றிருக்கிறாரோ அவர் உலகத் தளைகளில் இருந்து விடுதலை பெறுகிறார்.


# உலகில் எங்கும் என்னைப் போல் பாவம் செய்தவரும் இல்லை. உன்னைப் போல் பாவத்தைப் போக்கும் சக்தி கொண்டவளும் இல்லை. தேவி! இந்த உண்மையை எண்ணிப் பார்த்து உன் இஷ்டம் போல செய்வாயாக.


# மனிதப் பிறவி, ஞானத்தில் நாட்டம், மகான்களின் தொடர்பு இவை மூன்றும் கிடைப்பது அரிது. தெய்வத்தின் அருள் காரணமாகவே இவை ஒருவனுக்கு கிடைக்கின்றன.


????? ???? - ?? ?????
 
பலனறிந்து பணியாற்றுங்கள்

பலனறிந்து பணியாற்றுங்கள்

* விருப்பு வெறுப்பின்றி செய்யும் செயலால் ஒழுக்கமும், மனத்தூய்மையும் உண்டாகும்.

* தன் தேவையைக் குறைத்து எளிமையாக வாழும் போது சேமிக்க இடமுண்டு. அதைப் புண்ணிய காரியத்துக்காக செலவழிப்பது தான் தர்மம்.

* விவசாயி பயிரிடுவதன் பலன் தானியத்தை அறுவடை செய்வது தான். அது போல செயலின் முடிவான பலனைத் தெரிந்து கொண்டால் ஆர்வத்துடன் பணியாற்றலாம்.

* எங்கு சென்றாலும் அங்கே சந்தோஷத்தை அழைத்துச் செல்ல வேண்டும்.

* துன்பம் நேர்ந்து விட்டால் வலிந்து சென்று நம்மால் ஆன உதவியைச் செய்யவேண்டும். இரக்க சிந்தனை இல்லாவிட்டால் மனிதனாகப் பிறந்ததில் அர்த்தம் இல்லை.




காஞ்சிப்பெரியவா



Source; Sage of Kanchi

Hari Haran
 
பக்தியின் லட்சணம் என்ன?

பக்தியின் லட்சணம் என்ன?


ஏறு அழிஞ்சல் என்று மரம் உண்டாம். அதன் காய் முற்றியவுடன் பூமியில் விழுந்து உடையும். உடன் உள் இருக்கிற விதைகள் ஏதோ ஒர் ஆகர்ஷண சக்தியால் நகர்ந்து நகர்ந்து வந்து மீண்டும் தாய் மரத்தோடேயே ஒட்டிக் கொள்ளும். ஒட்டிக் கொண்டபின் மூலமான மரத்துக்குள்ளேயே மறைந்துவிடும் என்கிறார்கள்.

பகவானிடமிருந்து பிரிந்து வந்திருக்கிற நாம் இப்படியே எப்போதும் அவன் பக்கமாக நகர்ந்து நகர்ந்து போய் முடிவில் அவனிடம் ஒட்டிக் கொண்டு ஒன்றாகிவிட வேண்டும்.

ஊசி காந்தத்தை நோக்கிப் பாய்ந்து ஒட்டிக் கொள்வது அடுத்த உதாரணம். காந்தத்தில் சேர்ந்த ஊசிக்கும் காந்த சக்தி உண்டாகி அது மற்ற இரும்புப் பொருட்களை இழுப்பதுபோல், பக்தனுக்கும் பகவானின் குணங்களும் சக்திகளும் உண்டாகும் என்று இந்த உதாரணத்தில் காட்டுகிறார்.

அடுத்தது பதிவிரதையின் உதாரணம். பதிவிரதையின் நினைவு, பேச்சு, காரியம் அனைத்தும் பதியைச் சுற்றிச் சுற்றியே இருப்பதுபோல நம் மனோ, வாக்கு, காரியங்கள் பகவானையே பற்றி இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது.

பதியை மூல சுலோகத்தில் விபு என்கிறார்.சர்வ வியாபகன் என்பது இதன் பொருள். இதனால் பகவானை ஏதோ ஓர் இடத்தில் மட்டும் இல்லாமல், எங்குமாக எல்லாமாக இருப்பதாக பாவிக்க வேண்டும் என்று உணர்த்துகிறார்.

அடுத்தபடியாக கொடியின் உதாரணம். கொழு கொம்பைச் சுற்றிக் கொள்கிற கொடியை நாம் சிறிது விலக்கிப் பிரித்துவிட்டால்கூட அது படாத பாடு பட்டுக் கொஞ்ச நேரத்திலேயே மறுபடியும் கொம்பை வளைத்துச் சுற்றிக் கொண்டு விடும். நம் மனஸை ஈசுவர ஸ்மரணையிலிருந்து அலைக்கழிக்கிற இடைஞ்சல்கள் எத்தனை வந்தாலும் நம் லக்ஷியத்தைப் பிடிவாதமாகப் பிடித்திருக்க வேண்டும் என்பதை இந்த திருஷ்டாந்தம் உணர்த்துகிறது.

கடைசியில் நதி - சமுத்திர உபமானம். இதுவே பரம அத்வைதம். கடல்தான் மழையாக விழுந்து பிறகு ஆறாகியிருக்கிறது. இரண்டும் வேறு வேறு அல்ல. ஒரு நதியானது எந்த மலை உச்சியில் பிறந்தாலும், அலுக்காமல் சளைக்காமல் ஓடி ஓடி வந்து கடைசியில் கடலில் கலந்து தன்னுடைய தனிப் பெயரையும் உருவத்தையும் இழந்து கடலாகவே ஆகிவிடுகிறது. கடல் அதை எதிர்கொண்டு அழைத்துக் கொள்கிறது. இதனால்தான் நதி சங்கமங்களுக்கு சிறிது தூரம் இப்பாலே அந்த ஆற்றின் ஜலம் உப்புக் கரிக்கிறது. இப்படியே நாமும் நிஜமான பக்தி செலுத்தினால் கருணாசமுத்திரமான பகவான் முன்னே வந்து நம்மை ஆட்கொண்டு தானாக்கிக் கொள்வான்.



முதலில் பொருள் வேண்டும். பவிஷு வேண்டும் என்று வியாபார ரீதியில் பக்தி செய்ய ஆரம்பித்தாலும், பகவானின் குணவிசேஷம் காரணமாக அவனுக்காகவே அவனிடம் அன்பு செலுத்துகிற பக்குவத்தைக் கொஞ்சமாகப் பெறுவோம். கடைசியில் குண விசேஷம் எதுவும் இல்லாத பரமாத்மா ஸ்வரூபமாகவே நாமும் அவனில் கரைந்து அவனாகவே ஆவோம்.



லோக ரீதியில் நன்றாக வாழ்க்கை நடத்துவதற்கும் சரி, த்வைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் முதலிய ஸித்தாந்தங்களின் அநுபவத்திற்கும் சரி, பக்தி என்பது இன்றியமையாததாகிறது. மோக்ஷம் அடையப் பின்பற்றும் உபாயங்களில் தலைசிறந்தது பக்தியே என்கிறார்  பகவத்பாதர். ஆத்ம ஸ்வரூபத்தை உணர்த்துவதுதான் பக்தி என்றும் அதையடுத்துச் சொல்கிறார்.



மோக்ஷஸா தன ஸாமகர்யாம் பக்திரேவ கரீசயஸீமி
ஸ்வஸ்வரூபா நுஸந்தானம் பக்திரித்யபிதீயதே


????? ???? - ?? ?????
 
மஹா பெரியவாளின் 3 கட்டளைகள்

மஹா பெரியவாளின் 3 கட்டளைகள்


தினமும் 3 வேளை சந்தியா வந்தனம் செய்.

சஹஸ்ர காயத்ரி ஜபம் செய்.

ஏகாதசி உபவாசம் இரு.

I. சந்தியா வந்தனம்:
images.jpg


தினமும் 3 வேளை கண்டிப்பாக சந்தியா வந்தனம் செய்யவேண்டும். விட்டுப்போனதை கணக்கில் வைத்துக்கொண்டு பிறகு செய்யவேண்டும். அடுத்த நாளோ அல்லது அதற்கு அடுத்த நாளோ விடாமல் செய்ய வேண்டும். (இது முசிறி பெரியவா சொன்னது). மஹா பெரியவா தன் வாயால் அவரை மகான் என்று சொல்லியிருக்கிறார்.

II. சஹஸ்ர காயத்ரி ஜபம்:
japa-yoga.jpg

மஹா பெரியவா காயத்ரி ஜப மகிமையைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். அதுவும் சஹஸ்ர காயத்ரி பண்ணச் சொல்லியிருக்கிறார். ரிடையர் ஆன ஒருவருக்கு இப்படி உபதேசம் செய்கிறார். “தினமும் சஹஸ்ர காயத்ரி செய்துகொண்டு வா. இது பரத்துக்கு. போஸ்ட் ஆபீசில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு உதவி செய். அவர்கள் கொடுக்கும் பணம் போதும் இகத்துக்கு.”

இந்த உபதேசம் அவருக்கு மட்டும் இல்லை. நம் எல்லோருக்கும் தான். ரிடையர் ஆவதற்கு முன் வாரம் ஒரு நாள் ஞாயிறு அன்றாவது சஹஸ்ர காயத்ரி பண்ணு என்று சொல்லியிருக்கிறார்கள். இதை முடிந்தவரையில் நாம் கடைபிடிப்போமே.

தினமும் 1 மணி நேரம் கிடைத்தால், டிவி பார்ப்பதை தவிர்த்து விட்டு இதை செய்தால் மஹா பெரியவா கட்டளைப்படி நடந்த புண்ணியம் நமக்கு கிடைக்கும். சொல்வது எளிது செய்வது கஷ்டம் என்றுதானே நினைக்கிறீர்கள்? நான் ஒரு வழி சொல்கிறேன்.

தினமும் காலையிலோ மாலையிலோ 1 மணி நேரம் கிடக்கும்போது, குளித்துவிட்டு சுத்தமான உடை (பஞ்சகச்சம்) அணிந்துகொண்டு, ஒரு அமைதியான இடத்தில் ஆசனம் போட்டு கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு நோக்கி நிமிர்ந்து அமர்ந்து கொண்டு ஆரம்பிக்கவும். நமது உள்ளங்கையை மேருவுக்கு ஒப்பாகச் சொல்வார்கள். ஒரொரு விரலிலும் 3 பாகங்கள் உண்டு. மோதிர விரல் நடு பாகம் 1 என்று கொண்டால் அடிப்பாகம் 2. சுண்டுவிரல் 3,4,5 (அடி, நடு, மேல் ), மோதிர விரல் நுனி 6, நடுவிரல் நுனி 7, ஆள்காட்டி விரல் 8,9,10 (மேல், நடு, அடி ). பிறகு 11 லிருந்து 20 வரை ஆள்காட்டி விரல் அடியிலிருந்து மோதிர விரல் நடு பாகம் வரை சென்று பூர்த்தி பண்ணவேண்டும். ஒரொரு எண்ணிக்கைக்கும் ஒரு காயத்ரி என்று சொன்னால் 20 எண்ணிக்கை வரும். இப்படி செய்தால் ஒரு முறை மேருவை (ஆதி பராசக்தி ஆட்சி செய்கிறாள் ) வலம் வந்ததிற்கு ஒப்பாகும்.


III. ஏகாதசி உபவாசம்:

மகான் சொல்லியது. “ஏகாதசி அன்று உபவாசம் இருங்கோ. மத்த நாள் அளவோடு சாப்பிடுங்கோ”. இதை கடைபிடித்தால் நம் மனமும் உடம்பும் ஆரோக்யமாக இருக்காமல் எப்படி இருக்கும்? ஏகாதசி அன்று ஒன்றும் சாபிடாமல் இருந்து பாருங்கள். அப்போதுதான் அதன் மகிமையை உணர முடியும். முதலில் நம் வயிறு குறைய ஆரம்பிக்கும். வயிறின் அளவு குறைவதால் மறுநாள் நாம் கொஞ்சமாக சாப்பிட்டாலும் நிறைவாக உணருவோம். அதன் பிறகு வயிற்றைப் பெருக்காமல் குறைவாக உண்ணக் கற்றுக்கொள்ள வேண்டும். முதல் ஏப்பம் வரும்போது நிறுத்திக்கொள்ளவேண்டும். பசித்து சாப்பிடவேண்டும். நிதானமாக ரசித்து ருசித்து அளவோடு சராசரி விகிதத்தில் ஆரோக்யமான உணவு உட்கொள்ளவேண்டும். இரண்டு உணவுக்கு நடுவில் எதுவும் சாப்பிடக்கூடாது. அளவோடு தாகத்துக்கு தண்ணி குடியுங்கள். இப்படி விரதம் இருந்து பழகினால், இதை திங்கலாம் அதை திங்கலாம் எண்று அலையும் மனம் அடங்கும். இது ஆத்ம விசாரத்துக்கு உதவும்.


நன்றி : டாக்டர் ஜி ரவிசந்திரன்.

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர


??? ??????????? 3 ?????????
 
ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு

ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு

உணர்ச்சிகளற்று சிலையாய் அமர்ந்திருப்பவர்களைப் 'பரப்பிரம்மம்' என்கிறோம். 'பிரம்மமாயிருக்கா' என்கிறோம். சிவனாயிருக்கான், விஷ்ணுவாயிருக்கான், முருகனாயிருக்கான், அம்பாளாயிருக்கான், காணபதியாயிருக்கான் என்றெல்லாம் சொல்றதில்லே. அந்த தெய்வங்களுக்கெல்லாம் கோயில் இருக்கு. திருவிழா இருக்கு. பண்டிகை இருக்கு. பிரம்மாவுக்கு அதெல்லாம் கிடையாது. ஆனாலும் அவர் பாட்டுக்கு கடமையைச் செய்துண்டு இருக்கார். கோபிச்சுண்டு படைப்புத் தொழிலை நிறுத்தலே. பரமசிவனையும், விஷ்ணுவையும் போல தபஸ் பண்ணினவாளுக்கு வரம் தரும் சக்தியும் அவர் கிட்டே இருக்கு. அவர் தலையை கிள்ளின சங்கரனையும் அவர் பழிவாங்கலே. சிவன் பிள்ளை முருகன் தலையில் குட்டிச் சிறையில் தள்ளினதற்காகவும் வன்மம் வெச்சுக்கலே. சிறையிலே இருந்து விடுதலை பண்ணி 'மறுபடியும் படைப்பு தொழிலை நடத்து' என்ற போதும் அதுக்கும் 'சரி' என்கிறார்.

அதனாலே கோபத்தையும், பழி வாங்கற குணத்தையும் விட்டவாளை 'பிரம்மம்' என்கிறார்கள்.



Sage of Kanchi

Ramachandran Venkatraman
 
நிம்மதிக்கு வழி":

நிம்மதிக்கு வழி":

* மனம் எதைத் தீவிரமாக நினைக்கிறதோ அதுவாகவே மாறிவிடும். அதனால், மனதில் தூய்மையான உயர்ந்த சிந்தனைகளை மட்டுமே நினைக்க வேண்டும்.

* தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே செல்வதால் திருப்தி பெற முடியாது. நமக்கு அவசியமான பொருள்களை மட்டுமே வாங்கிக் கொள்வது நல்லது. எளிமை தான் நிம்மதிக்கு வழிவகுக்கும் என்பதை உணருங்கள்.

* ஓடி ஓடி சம்பாதித்தாலும் மறுபிறவிக்கு அவை துணை வருவதில்லை. அதனால் நியாயமான வழியில் பொருள் தேடி, அதன் மூலம் தேவைகளை நிறைவேற்றி மகிழுங்கள்.

* பாவம் நீங்க ஒரே வழி தியானம் செய்வது தான். தியானத்திற்காக தினமும் சிறிது நேரமாவது ஒதுக்குங்கள். அதே நேரம் புதிதாகப் பாவம் செய்யாமல் இருப்பதும் அவசியம்.

* "ஹரஹர' என்று ஜெபிப்பதால் துன்பம் நீங்கும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நிம்மதி தேடி எங்கெங்கோ அலைகிறோம். இருக்குமிடத்தில் இதை செய்ய மனம் மட்டும் ஒத்துழைத்தால் போதும்.

மஹா பெரியவா


Sage of Kanchi

C V Sathya Narayan
 
அம்பாளின் அருளும் கண்கள்

அம்பாளின் அருளும் கண்கள்



maha_periyavaa_2044486h.jpg



நம் அவயங்களில் கண் மிகவும் முக்கியம். என் கண்ணே என்று பிரியமானவர்களைச் சொல்கிற மாதிரி காதே, மூக்கே என்பதில்லை அல்லவா? அம்பாள் என்பதாகப் பரமாத்மா மூர்த்திகரிக்கிறபோது அவளுடைய கண் அத்தனை முக்கியமாகும். காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி என்கிறபோது அக்ஷி என்பது கண் விசேஷத்தையே சொல்கிறது.



காமாக்ஷியின் கைகளில் மன்மதன் வில்லும் அம்பும் இருப்பதாகச் சொல்கிறோம். அவளுடைய கைகளில் மட்டுமில்லை, கண்களிலும்கூட இவையே இருக்கின்றன என்று ஆச்சாரியாள் ஸெளந்தரிய லஹரியில் கவித்துவ நயத்தோடு சொல்கிறார். (ப்ருவெளபுக்நே கிஞ்சித் என்கிற ஸ்லோகம்) என்ன சொல்கிறார்? அம்பாளுடைய புருவம் கொஞ்சம் நெரிந்திருக்கிறதாம். கவலை இருந்தால்தான் புருவம் நெரியும்.


லோக மாதாவுக்கு ஜனங்கள் எல்லோரும் கெட்டுப்போகிறார்களே, அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கவலை. அதனால் புருவம் வளைந்திருக்கிறது. அம்பாளுடைய பரம லக்ஷணமான புருவங்கள் வில் மாதிரி இருக்கின்றன. இரண்டு வளைந்த பாகங்களைக் கொண்ட தனுஸைப் போல் அவை உள்ளன.
ஆனால் புருவ மத்தியில், அதாவது நாசி தொடங்கும் இடத்துக்கு மேலே ரோமம் இல்லை. ரோமம் இருந்தால் அது உத்தமமல்ல. சாமுத்திரிகா லக்ஷணம் ஆகாது. கூடின புருவம் கெடுதல் உண்டாக்கும் என்பார்கள்.


அம்பாளுடைய புருவங்களின் மத்தியில் ரோமமில்லாதது உத்தம லக்ஷணம்தான். இது புருவங்களை வில்லுக்கு உவமிக்கும்போது அவ்வில்லுக்கு நடுவே ஊனம் செய்தாற்போல் தோன்றலாம். அப்படி ஊனம் தோன்றாமல் ஆசார்யார் ஒரு காரணம் சொல்கிறார். வில் என்று ஒன்று இருந்தால், அதை எய்கிறவன், அதன் மத்தியில் தன் முஷ்டியால் அதைப் பிடித்துக் கொண்டுதானே நாணில் அம்பு பூட்டி இழுப்பான்.


முஷ்டி பிடித்திருக்கிற இடம் வில்லின் இரண்டு பாகங்களுக்கு மத்தியில் அந்த வில்லை மறைக்கத்தானே செய்யும். இப்படித்தான் அம்பாளின் புருவ வில்லையும் எவனோ மத்தியில் பிடித்துக்கொண்டு அம்பைப் பூட்டுகிறான். அவனுடைய முஷ்டி உள்ள அந்த மத்ய பாகம்தான் ரோமம் இல்லாத இடைவெளி என்கிறார்.
இப்படி அம்பாளின் புருவத்தை வில்லாக வளைப்பவன் யார்? மன்மதன்தான். அவனுடைய கரும்பு வில் போலத்தான் கருணையால் வளைந்த லோக மாதாவின் புருவம் இருக்கிறது. மன்மதனுடைய வில்லுக்கு வண்டுகள் தானே நாண் கயிறு.


அதற்கேற்றாற்போல் இந்த புருவத்துக்குக் கீழே அம்பாளுடைய வண்டு விழிகள் இப்படியும் அப்படியும் ஒடிக்கொண்டே இருக்கின்றன. ஒருத்தரும் விட்டுப் போகாமல் ஸமஸ்த பக்தர்களுக்கும் அநுக்கிரஹம் செய்ய வேண்டுமென்பதால் அவை இப்படிச் சஞ்சரித்துக்கொண்டே இருக்கின்றன. இந்த நாணிலும், வில்லிலும் மன்மதன் தன்னுடைய சக்தியை வைத்து எய்கிறான்.


அதனால்தான் ஞான மூர்த்தியாயிருந்த பரமேசுவரன் அம்பாளிடம் பிரேமை கொண்டான். அதனால் ஜீவப் பிரபஞ்சமும் முழுதிடமும் அன்புகொண்டான். ஆசையில்லாத பிரம்மம் அசைந்துகொடுத்து, சகல ஜனங்களையும் ரக்ஷித்து, அம்பாளுடைய கவலையையும் தீர்த்தது.


வில்லைப் பிடித்த மன்மதன் முஷ்டி அம்பிகையின் புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளியாகவும், அவனுடைய மணிகட்டு நாண் கயிறான வண்டு விழிகளுக்கு நடுவில் நாசியின் அடிப்பாகமாகவும் ஆகிவிட்டது. இப்படி ஆசாரியாள் துதிக்கிறார்.


ஈசுவரனின் மீது காம பாணத்தை போடும் அந்தக் கண்களேதான் பக்தர்களைக் கடாக்ஷிக்கும்போது காமத்தைத் துவம்ஸம் செய்து ஞானத்தைப் பொழிகின்றன. மன்மத பாணங்கள் என்பவை என்ன? தாமரை, மல்லிகை, கருங்குவளை, மாம்பூ, அசோக புஷ்பம் ஆகியவைதான் அவனுடைய அம்புகள்.


ரூபம், ரஸம், கந்தம், ஸ்பரிசம் ஆகிய நான்கால் நம்முடைய நான்கு இந்திரியங்களை ஆகர்ஷிப்பது புஷ்பம். அதன் அழகு கண்ணுக்கும், அதில் சுரக்கிற தேனின் ரஸம் நாக்குக்கும், வாசனை மூக்கிற்கும், மென்மை தொடு உணர்ச்சிக்கும், இன்பம் தருகின்றன. பாக்கி இருக்கிற இந்திரியம் காது. அதற்குதான் வண்டு நாண், அது எப்போதும் ரீங்காரம் செய்வது, இந்த ஐந்துக்கும் மேலே கரும்பு வில், அதுதான் எல்லா இந்திரிய சேஷ்டைக்கும் காரணமான மனம்.


வெறும் பூவையும், கரும்பையும், வண்டையும் வைத்துக் கொண்டு மன்மதன் ஸமஸ்த ஜீவராசிகளையும் இந்திரிய வியாபாரத்தால் இழுத்துத் தள்ளுகிறான் என்றால் என்ன அர்த்தம்.? ஸாஷாத் பராசக்தியின் அநுக்கிரஹம் இருந்துவிட்டால், வல்லவனுக்குப் புல்லும் ஆயதமாகிவிடும் என்று அர்த்தம். உலக லீலை நடப்பதற்கு அவனுக்கு இந்தச் சக்தியை அநுக்கிரஹித்தாள்.


ஆகவே கவித்வ அம்புக்காக அவன் அவள் புருவத்தை வளைத்து அம்பு எய்வதாகச் சொன்னாலும் அவள்தான் அவனுக்கும் சக்தி தந்தவள். அவளுடைய சக்தியால்தான் அவன் நம் இந்திரியங்களை வசமாக்கி, ஒடாமல் நிறுத்த முடியும் என்றும் ஏற்படுகிறது.


தண்டிப்பது, காப்பாற்றுவது (சிக்ஷணை, ரக்ஷணை) இரண்டும் செய்கிறவன்தான் பிரபு. நம் கர்மத்துக்காக நம்மை ஆட்டிவைத்து சிக்ஷிக்கிறான். காமனை அதிகாரியாகக் கொண்டு அவனுக்கும் ஜயம் வாங்கித் தருகிறாள். அந்தக் காமன் நம்மிடம் வாலாட்ட முடியாதபடி நம் காம ஜயம் செய்யவும் அவளே கதி. அந்த ரக்ஷணையாச் செய்ய வேண்டுமென்றே லோகமாதாவான அவள் எப்போதும் கவலையோடு புருவ வில்லை வளைத்துக்கொண்டு அம்பு எய்கிற பாணத்தை வீசிப் பரமேசுவரனைக் கருணையில் திருப்பிக் கொண்டிருந்தாள்.


அம்பாளுடைய கண்களிலிருந்து பொங்குகிற கடாக்ஷம் ஸ்ரீ ஆச்சார்யாளிடம் பூரணமாகப் பொலிந்துகொண்டிருந்தபோது, அவரது வாக்கிலிருந்து ஒரு சுலோகம் வந்தது. இதுவும் ‘ஸெளந்தரிய லஹரி'யில் இருக்கிறது.


'த்ருசா த்ராகீயஸ் யாதரதளித நீலோத்பல ருசா' என்ற சுலோகம். அவளுடைய கடாக்ஷம் இல்லாமல் இப்படிப்பட்ட அமிருதம் போன்ற சுலோகம் பிறக்க முடியாது. ஆனால் இந்த சுலோகத்திலோ ஆசாரியாள் அம்பாளின் கடாக்ஷம் தமக்குக்கிட்ட வேண்டுமென்றே பிரார்த்திக்கிறார். தமக்குக்கிட்ட வேண்டும் என்கிறார். பக்தியிலும் ஞானத்திலும் சிகரமாக இருந்தும் துளிகூட அகம்பாவமே இல்லாத நம் ஆசாரியாள்.


காமாக்ஷியின் கடாக்ஷ வீக்ஷண்யத்தின் பெருமையை இந்த சுலோகத்தில் சொல்லுகிறார். அவளுடைய கண் பார்வை எத்தனை தூரமும் தாண்டி விழுமாம் - 'த்ருசா த்ரா கீயஸ்வா' என்கிறார். ஒரு தாயார்க்காரி பச்சைக் குழந்தைகளைத் தன் பார்வைக்குள்ளேதான் வைத்துக் கொள்வாள்.


பெரிய பெரிய காரியம் சாதித்தவர்கள், அகடவிகடம் செய்கிறவர்கள், எல்லோரும்கூட அவளுக்குப் பச்சைக் குழந்தைகள்தான். மிருகங்கள், பட்சிகள், புல்பூண்டு எல்லாவற்றுக்கும் தாயார்க்காரி அவள்.

எல்லையில்லாத பிரபஞ்சத்துக்கு அம்மா அவளே. இத்தனையும் அவர் பார்வைக்குத்தான் இருக்கின்றன. எனவே அவளுடைய கடாக்ஷத்திற்கும் எல்லையில்லை. அது நீண்டு நீண்டுபோய், தகுதியே இல்லை என்று எட்டாத் தொலைவில் நிற்கிறவர்கள் மீதும் விழுகிறது.


அந்தக் கண்கள் பாதி மூடி, பாதி விரிந்திருக்கிற “நீலோத்பல புஷ்பம்” மாதிரி பரம சீதளமாக இருக்கிறது. அவளுடைய திருஷ்டி, நீண்ட நேத்திரங்கள், குளிர்ந்த நேத்திரங்கள், இதனால் நீலோத்பலத்தை உவமிக்கிறார். இப்படி நீள நெடுக எங்குப் பார்த்தாலும் போய்க் கொண்டிருக்கும் உன் கடாக்ஷப் பிரவாகத்தில் என்னையும் முழுகும்படியாக செய்தருளேன் என்கிறார்.


‘மாம் அபி' என்னைக்கூட என்கிறார். எனக்கு உன் கடாக்ஷம் கிடைக்க நியாயமே இல்லை என்றாலும் தீனனான என்னையும் உன் பார்வையால் ஸ்நானம் பண்ணி வையம்மா என்கிறார். தீனம், மாமபி என்று மிகமிக விநயத்துடன் சொல்லுகிறார் பரமேசுவதாரமான ஆச்சாரியாள்.


எனக்கு யோக்கியதை இல்லாவிட்டாலும் ஏன் கேட்கிறேன் என்றால், இப்படிக் கடாக்ஷிப்பதால் உனக்கு ஒன்றும் நஷ்டம் வந்துவிடவில்லை என்பதாலேயே கேட்கிறேன் என்கிறார். தோஷமுள்ளவர்களைப் பார்த்தாலும்கூட அவளுடைய பார்வைக்குத் தோஷம் வராது. எந்த ஹானியும் வராது. ந ச தே ஹாநிரியதா, உனக்கு நஷ்டமில்லை என்பது மட்டுமில்லை. எனக்கோ இதனால் பரம லாபம் சித்திக்கிறது. நான் தன்யனாகிறேன் என்கிறார்.


‘அனேனாயம் தன்யோ பவதி’. தனத்தை உடையவன் தன்யன். அம்பாளின் கடாக்ஷத்தால் அருட்செல்வம் என்ற தானம் கிடைக்கிறது, அதற்கு மேல் பெரிய செல்வம் எதுவுமில்லை.


தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

????? ???? - ?? ?????
 
காமாக்ஷி

காமாக்ஷி

ஒரு காரியமும் இல்லாமல், தன்னைத்தானே அநுபவித்துக் கொண்டிருக்கிற பிரம்மத்தையே சிவன், சிவம் என்று சொல்கிறோம். காரியமில்லாமல், ரூபமில்லாமல், வருணமில்லாமல், குணமில்லாமல் இருக்கிற அந்த சாந்த மயமான பிரம்மத்திலிருந்தான் இத்தனை காரியங்கள், ரூபங்கள் வர்ணங்கள், குணங்கள் எல்லாம் உண்டாகியிருக்கின்றன. மாயா சக்தியினால் ஒரே பிரம்மம் இத்தனை உருவங்களும் குணங்களும் உள்ள பிரபஞ்சங்களாகவும், ஜீவராசிகளாகவும் தோன்றியிருக்கிறது.

ஒ ன்றான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகக் காட்டுகிற அந்த மாயாசக்திதான் அம்பாள். அம்பாள் என்று சொல்லுகிறோம். இந்தச் சக்தியால்தான், நாம் எல்லாம் தோன்றியிருக்கிறோம்.


உண்மையில் நாமும் பிரம்மத்தைத் தவிர வேறு இல்லை. ஆனால், வேறாக நினைக்கிறோம். இதற்குக் காரணம், பிரம்ம சக்தியான அம்பாளின் மாயைதான். இப்படி நம்மை மாயையில் போட்டு எடுப்பது அவளுடைய லீலை.


அவள் மாயையில் நம்மைக் கட்டிப்போடுகிறவள் மட்டும் அல்ல. மனமுருகி அவளை எந்நாளும் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தால், அவளே இந்த மாயை முழுவதையும் நீக்கி நமக்கு பிரம்ம ஞானத்தை அநுக்கிரகம் செய்வாள்.


ஞானம் பெறுவதற்கு சாக்ஷத் அம்பாளைத் தவிர வேறுகதி இல்லை. அவள்தான் மாயையால் ஒரே பிரம்மத்தை மறைத்துப் பல வேறான பிரபஞ்சமாகக் காட்டுகிறாள். இந்தபப் பிரபஞ்ச ஆட்டத்திலிருந்து விடுதலை பெற்று, ஸம்ஸாரத்திலிருந்து - ஜனன மரணச் சூழலிலிருந்து - விமோசனம் அடைந்து பிரம்மமாகவே நாம் ஆக வேண்டும் என்றால், எவள் இந்த மாயையைச் செய்தாளோ, அவனுடைய அநுக்கிரகம் ஒன்றில்தான் முடியும். மாயா சக்தியாக இருக்கிற அமம்பாளேதான் ஞானாம்பிகையாக வந்து நமக்கு மோக்ஷத்தையே அநுக்கிரகம் செய்கிறவளும் ஆவாள்.


மாயா என்றால் எது இல்லையோ அது என்று அர்த்தம். இல்லாத வஸ்து எப்படி இத்தனை ஆட்டம் ஆட்டி வைக்கிறது. அது எப்போதும் இல்லாதது அல்ல. எப்போதுமே இருக்கிறதும் அல்ல. ஞானம் வருகிற வரையில் மாயை இருக்கிறது. அதுவரையில் நானாவிதமான வஸ்துக்களைப் பார்த்து, எல்லாம் தனித்தானியாக உண்மையாக இருப்பதை நினைக்கிறோம். அவற்றிடம் ஆசை, துவேஷம் முதலியவற்றை உண்டாக்கிக்கொண்டு பல விதங்களில் கர்மம் செய்கிறோம். இந்தக் கர்மத்தை அநுபவிக்க மறுபடியும் மறுபடியும் செத்து செத்துப் பிறக்கிறோம். அம்பாளை உபாஸித்து ஞானம் வந்துவிட்டாலும் நானாவிதமான இத்தனையையும் ஒரே பேரறிவான அவளுடைய வேறு வேறு தோற்றங்கள்தான் என்று அபூர்வமாகத் தெரியும். நாமும் அப்படி ஒன்றே. தோற்றங்கள் (appearances) இத்தனை இருந்தாலும், இவ்வளவும் உள்ளே ஒன்றுதான் என்று தெரியும்.



உள்ளே ஒன்றாக இருப்பதைத் தெரிந்து கொண்டபின், வெளியே மாற்றிக் கொண்டும், அழித்துக் கொண்டும் இருக்கும் இந்தத் தோற்றங்களில் ஆசை, துவேஷம் எதுவும் ஏற்படாது. இதற்கெல்லாம் ஆதாரமாக எப்போதும் மாறாமலே இருக்கிற பேரறிவோடு அறிவாக நம் மனத்தைக் கரைத்து விடுவோம். அப்போது பிரபஞ்சமே நம் பார்வைக்கு இல்லாமல் போகும். அந்த ஞான தசையில் எது இல்லாமல் போகிறதோ அது - அதாவது மாயைதான். அதுவரை நம்மை ஆட்டி வைத்தது.



மாயைக்குக் காரணமாக பிரம்ம சக்தியான அம்பாள்தான் ஞானமும் தருகிறாள். அவளுடைய கருணையே இதற்குக் காரணம். இத்தனை மாயையைச் செய்தாலும், அதிலிருந்து விடுவிக்கிற கருணையும், அவளுக்கே பூரணமாக இருக்கிறது. மாயா லோகத்தில் நாம் உண்டாக்கிக் கொள்ளும் கஷ்டங்களுக்கும், துக்கங்கங்களும் காரணம் நம்முடைய இந்திரியங்களும், மனசும்தான். இந்திரிய சுகங்களின் வழியிலேயே மனத்தை செலுத்தி நம்முடைய ஸ்வபாவமான ஆத்ம சுகத்தை மறந்திருக்கிறோம். ஐம்புலன்களும் மனசும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. இவற்றைச் செய்தவள் மாயை. அவளே இவற்றைச் சுத்தப்படுத்தி, இந்திரிய விவகாரங்களிலிருந்தும், மனஸின் ஒயாத சஞ்ஜலங்களிலிருந்தும் ஜீவனை விடுவிப்பதற்காக சாக்ஷத் காமாக்ஷியாகவே வருகிறாள்.


காமாக்ஷியின் நாலு கைகளில் ஒன்றில் ஒரு வில்லும், இன்னொன்றில் ஐந்து அம்புகளும் இருக்கும். அந்த வில் கரும்பினால் ஆனது. அம்புகள் புஷ்பங்களால் ஆனவை. சாதாரணமாக கெட்டியான இரும்பினால் வில் அமைந்திருக்கும். இங்கோ மதுரமான கரும்பு அம்பாளுக்கு வில்லாக இருக்கிறது. கூரான அம்புகளுக்குப் பதில் மிகவும் மிருதுவான மலர்களைப் பாணங்களாக வைத்திருக்கிறார்கள். அந்தக் கரும்பு வில் மனஸ் என்ற தத்துவத்தைக் குறிக்கும்.

மதுரமான மனம் படைத்த அம்பாள் நம் மனங்களையெல்லாம் இந்த வில்லைக் காட்டி வஸப்படுத்திக்கொண்டு வருகிறாள். அவளுடைய ஐந்து புஷ்ப பாணங்களும் நம் ஐம்புலன்களை ஆகர்ஷித்துச் செயலாற்றுப் போகும்படி செய்வதற்காக ஏற்பட்டவை. மனோ ரூபேக்ஷ§ கோதண்டா - பஞ்ச தன்மாத்ர ஸாயகா என்று, இதையே லலிதா ஸஹஸ்ர நாமம் கூறுகிறது. நம்முடைய மனோவிருத்தியும், இந்திரிய விவகாரங்களும் அடங்குவதற்கே பராசக்தியானவள் காமாக்ஷியாகி கரும்பு வில்லும் மலர்ப் பாணமும் தாங்கிவந்திருக்கிறாள்.


இரண்டு கைகளில் பாசமும் அஹ்குசமும் வைத்திருக்கிறாள். பாசமானது நம் பாசங்களை, ஆசையை நீக்கி அவளோடு நம்மைக் கட்டிப்போடுகிற கயிறு. அங்குசம், நாம் துவேஷத்தில் கோபிக்கிறபோது, நம்மைக் குத்தி அடக்குவத்ற்காக, ஃபிஸிக்ஸில் பிரபஞ்ச இயக்கங்களின் அடிப்படைத் தத்துவங்களைச் சொல்கிற கவர்ச்சி, (attraction) , விலக்கல் (repulsion) என்பனதான், மநுஷ்ய வாழ்வில் முறையே ஆசையும் துவேஷமும் ஆகின்றன. அவற்றை அடக்கி ஸம்ஸாரத்திலிருந்து மீட்கவே, அம்பாள் காமாக்ஷியாக பாசாங்குசங்களைத் தரித்திருக்கிறாள். ராக ஸ்வரூப பாசட்யா க்ரோதாகாராங்குசோஜ்வலா என்பதாக லலிதா ஸகஸ்ரநாமத்தில், பாசத்தை ஆசையாகவும், (ராகம்) அங்குசத்தை துவேஷமாகவும் (க்ரோதம்) சொன்னபோது இவ்றைறை அவை அடக்கி அழிக்கின்றன என்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும்.



இப்படியாக, நாலு கைகளில் கரும்பு வில், புஷ்ப பாணம், பாசம், அங்குசம், இவற்றை தரித்துக்கொண்டு, நிறமே இல்லாத பிரம்மத்திலிருந்து செக்கச் செவேல் என்ற பரம கருணையின் நிறத்தோடு, உதய சூரியன் மாதிரி, மாதுளம்பூ மாதிரி, குங்கும்ப்பூ மாதிரி, செம்பருத்தி மாதிரி, காமேசுவரியான காமாக்ஷி அநுக்கிரக நிமித்தம் தோன்றியிருக்கிறாள்.


???????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
நம : பார்வதீ பதயே என்பது என்ன?

நம : பார்வதீ பதயே என்பது என்ன?

சிவன் கோயில்களில் நம:பார்வதீபதயே என ஒருவர் சொல்ல, ஹரஹர மகாதேவா என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதன் பொருள் என்ன?
பார்வதிதேவிக்கு பதியாக (கணவராக) இருப்பவர் பரமசிவன். பார்வதீபதி என்கிற அவரே உலகுக்கெல்லாம் தகப்பனார். பெரிய தெய்வமானதால் அவருக்கு மகாதேவன் என்றும் பெயர். பூலோகத்தில் ஒரு குழந்தை அவரை ஹர ஹர என்று சொல்லி ஓயாமல் வழிபட்டு வந்தது. அந்தக் குழந்தைக்கு ஞானசம்பந்தர் என்று பெயர். இந்தக் குழந்தை ஊர் ஊராக ஹர ஹர நாமத்தைச் சொல்லிக் கொண்டு போவதைப் பார்த்து, எல்லா ஜனங்களும் அரோஹரா என்று கோஷம் போட்டார்கள்.

அந்த கோஷம் கேட்டதும், உலகத்தில் இருந்த கெட்டதெல்லாம் உடனடியாகக் காணாமல் ஓடிப்போய் விட்டது. வையத்தில் அதாவது உலகத்தில் கஷ்டமே இல்லாமல் போனது. என்றைக்கும் இதே மாதிரி ஹர ஹர சப்தம் எழுப்பிக் கொண்டே இருக்கட்டும். அதனால், உலகத்தின் கஷ்டங்கள் எல்லாம் போகட்டும், என்று சம்பந்தக் குழந்தை தேவாரம் பாடிற்று. அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே அரன் என்றால் ஹரன். ஹரன் என்றால் சிவன். இப்போது நான் (பெரியவர்) நம: பார்வதீபதயே! என்று சொல்வேன். உடனே நீங்கள் அம்மையான பார்வதியையும் அவர் பதியான நம் அப்பா பரமசிவனையும் நினைத்துக் கொண்டு அன்றைக்கு அந்தக் குழந்தை சொன்ன மாதிரியே பக்தியோடுஹர ஹர மகாதேவா என்று சொல்ல வேண்டும்.


நம: பார்வதீ பதயே! ஹர ஹர மகாதேவா!!



-விளக்குகிறார் காஞ்சிப்பெரியவர்.
Temple News | News | Dinamalar Temple | ?? : ??????? ???? ?????? ?????


 
ராஜராஜன் செய்த யுக்தி!

[TABLE="width: 100%"]
[TR]
[TD][/TD]
[TD="align: right"][/TD]
[/TR]
[/TABLE]
ராஜராஜன் செய்த யுக்தி!




‘நம்பிக்குத் தும்பி சொன்னார்’ என்பார்கள். தும்பி என்றால் யானை. அதன் கைதான் தும்பிக்கை. ஸாக்ஷாத் கணபதியே சரித்திரம் சொன்ன பெரிய பெருமை நம்முடைய நாயன்மார்களுக்கு இருக்கிறது. அவர் சொன்னதை நம்பி பிற்பாடு ‘திருத்தொண்டர் திருவந்தாதி’ என்ற நூலாகப் பாடினார். நம்பி சொன்னபடியே ராஜராஜ சோழன் சிதம்பரத்துக்கு ஆசை ஆசையாக ஓடினான்.

ஆனால், அங்கேயுள்ள நிர்வாஹஸ்தர்களான தீக்ஷிதர்களோ, மூவர் கதவை மூடி ஸீல் வைத்தார்களே தவிர அதை எப்போது திறக்கணும் என்று ஏதொன்றும் சொன்னதாகத் தெரியாததாலே இப்போது தாங்கள் எப்படி அதைத் திறக்கப் பெர்மிஷன் தருவது என்று கேட்டார்கள்.

‘அந்த மூவரே திரும்பி வந்தாலொழிய நாங்களாக அப்படிச் செய்ய அதாரிட்டி இல்லையே!’ என்று கைவிரித்து விட்டார்கள்.

சோழ ராஜாவுக்குச் சொரேலென்றாகி விட்டது. ஆனால் ஒரு நிமிஷந்தான்! சட்டென்று அவனுக்கு ஒரு யுக்தி தோன்றிற்று. அவன் மஹாவீரனும், பக்திமானும் மட்டுமில்லை; புத்திமானும்.

என்ன யுக்தி என்றால், ஆலய விக்ரஹங்கள் என்கிறவை வெறும் பொம்மை இல்லை, சின்னமோ, ஸிம்பலோகூட இல்லை, அவை ப்ராண பிரதிஷ்டை ஆனவையாதலால் ப்ராணனுள்ள, உயிருள்ள மூர்த்திகளே என்பதுதான் ஆஸ்திகக் கொள்கை. மநுஷ ரூபத்தில் தெய்வம் வந்தால் அவதாரம் என்கிறாற்போல விக்ரஹங்களையும் ‘அர்ச்சாவதாரம்’ என்றே சொல்வது வழக்கு, முக்யமாக வைஷ்ணவ ஸித்தாந்தத்திலே அர்ச்சா என்றால் விக்ரஹம். இதை வைத்தே ராஜராஜ சோழன் யுக்தி பண்ணினான். என்ன யுக்தி என்றால், மூவர் விக்ரஹங்களுக்கு விமரிசையாகப் ‘புறப்பாடு’ செவித்து அந்தக் கனகஸபா மேலண்டை அறை வாசலில் கொண்டு வந்து நிறுத்தினான். தீக்ஷிதர்களிடம், ‘முத்ரை வைத்தவர்களே வந்து விட்டார்கள். கதவைத் திறக்கணும்’ என்று கேட்டுக் கொண்டான்.

எந்த மனஸையும் தொட்டுவிடும்படி இருந்தது, அவனுடைய பக்தியும், தேவாரஸொத்தை இந்தத் தமிழ் தேசத்துக்கு மீட்டுத் தருகிறதிலிருந்த ஆர்வமும்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.



Source: Sage of Kanchi

Varagooran Narayanan


 
Periva's discourse about Avani Avittam


[TD="class: content"] Periva's discourse about Avani Avittam


கல்வித் திட்டத்தில் ஒவ்வொரு வருஷத்தையும் இரண்டு டெர்ம்களாகப் பிரித்திருந்தார்கள். முதல் டெர்ம் சுமார் ஐந்து மாஸம் கொண்டது. இரண்டாவது டெர்ம் சுமார் ஏழு மாஸ காலம். முதல் டெர்முக்கு 'உபாகர்மம்' என்றும் இரண்டாவது டெர்முக்கு 'உத்ஸர்ஜனம்' அல்லது 'உத்ஸாகம்' என்றும் பெயர்.

உபாகர்மம் என்றவுடன் சில பேருக்காவது 'ஆவணியாவட்டம்' - அதவாது வருஷா வருஷம் புதுப்பூணூல் போட்டுக் கொள்ளும் நாள் - என்று நினைவுக்கு வரலாம்.

இது ரிக் வேதிகளுக்கு ச்ராவண மாஸத்தில் ச்ரவண நக்ஷத்ரம் வரும் நாள். ச்ராவண மாஸம் என்பது ஆடி அமாவாஸ்யையிலிருந்து ஆவணி அமாவாஸ்யை வரையுள்ள காலம். ச்ராவணி என்பதன் திரிபுதான் ஆவணி.

யஜுர் வேதிகளுக்கு உபாகர்மம் என்பது ச்ராவண மாஸப் பௌர்ணமியன்றாகும்

ரிக் வேதிகள் ச்ரவண நக்ஷத்ரத்தை வைத்து நாளை நிர்ணயிக்கிறார்கள். யஜுர் வேதிகள் பௌர்ணமித் திதியை வைத்து நிர்ணயம் செய்கிறார்கள்.

மிகவும் பூர்வ காலத்தில் ச்ராவண மாஸப் பூர்ணிமை தப்பாமல் ச்ரவண நக்ஷத்ரத்தன்றேதான் வந்து கொண்டிருந்தது, அதனால்தான் அந்த மாஸத்துக்கே அப்படிப் பேர். தப்பாமல் ச்ரவண நக்ஷத்ரமும் பௌர்ணமியும் ஒன்றாகவே இருந்த காலத்தில் அந்த நாளில்தான் ரிக் வேதிகள் யஜுர்வேதிகள் ஆகிய இருவரும் உபாகர்ம டெர்மை ஆரம்பித்தார்கள். அப்புறம் க்ரஹக் கோளாறில் அம்மாஸப் பௌர்ணமியன்று ச்ரவண நக்ஷத்ரத்துக்கு அடுத்ததான அவிட்டம் வந்தபோதும் யஜுர் வேதிகள் பெனர்ணமித் திதியிலேயே உபாகர்மாவை வைத்துக் கொண்டார்கள். தர்ம சாஸ்த்ரங்களில் குறிப்பாக 'ச்ராவண பூர்ணிமையில் உபாகர்மம் செய்யவேண்டும்' என்றே சொல்லியிருப்பதால் (பூர்ணிமைத்) திதியை யஜுர் வேதிகள் முக்யமாக எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அதனால் அவிட்டத்தில் அந்தப் பூர்ணிமை வந்தாலும் அன்றைக்கே உபாகர்மா செய்தார்கள்.

இதுதான் "ஆவணி அவிட்டம்" - அதாவது "ஆவணியாவட்டம்" என்று நாம் சொல்வது.

ரிக்வேதிகள் இப்போதும் திதியைப் பார்க்காமல் சரவண நக்ஷத்திரத்திலேயே உபாகர்மாவை "ச்ராவணம்" என்றே சொல்வது இதனால்தான். இப்படியாக, ரிக்வேதிகளுடைய உபாகர்மாவுக்கு அவிட்ட ஸம்பந்தமேயில்லை. ஆனாலும் தக்ஷிணத்தில் யஜுர்வேதிகளே பெரும்பாலாராயிருப்பதால் அவர்கள் கொடுத்த "ஆவணியாவட்ட"ப் பெயரையே ரிக் வேதிகளும் தங்களுடைய உபாகர்மாவுக்கும் சொல்கிறார்கள்.

இப்போதும் சில வருஷங்களில் ச்ராவண மாஸப் பௌர்ணமி ச்ரவண நக்ஷத்ரத்திலேயே வருகிறது. அப்போது ரிக் வேதிகள் யஜுர்வேதிகள் ஆகிய இரண்டு பேருக்கும் ஒரே நாளில் உபாகர்மா வருகிறது.

ஸாமவேதிகள் இதற்கு ஒரு மாஸம் தள்ளி (ஆவணி அமாவாஸ்யையிலிருந்து புரட்டாசி அமாவாஸ்யை வரையுள்ள ஒரு மாத காலமாகிய) பாத்ரபத மாஸத்தில் ஹஸ்த நக்ஷத்ரத்தில் உபாகர்மா செய்கிறார்கள். அநேகமாக அது பிள்ளையார் சதுர்ததியாகவோ அல்லது அதற்கு ஒரு நாள் முன்னே பின்னேயோ இருக்கும். ஹஸ்தமும் பஞ்சமியும் ஒன்று சேர்ந்திருந்தால் விசேஷமென்று சாஸ்த்ரங்களிலிருந்து தெரிகிறது. ச்ராவண மாஸ்ப்பூர்ணிமையும் ச்ரவணமும் தப்பாமல் சேர்ந்தே வந்த அக்காலத்து பாத்ரபதமாஸத்தில் ஹஸ்தம் பஞ்மியிலேயே வந்திருப்பதாகத் தோன்றுகிறது. தற்போது அது அநேகமாகப் பிள்ளையார் சதுர்த்தியன்றோ, அல்லது அதற்கு முதல் தினமான த்ரிதீயையாகவோ வருகிறது.

உபாகர்மம் என்பதே இப்போது பல பேருக்குத் தெரியாத வார்த்தை. (தாங்கள் என்ன வேதம் என்பதுகூட அநேகம் பேருக்குத் தெரியாமலிருக்கலாம்) தெரிந்தவர்களில் பெரும்பாலாரும் அது பழைய பூணூல் சிக்குப்பிடித்து அழுக்காவி விட்டதே என்று புதும் பூணூல் மாற்றிக் கொள்கிற ஒரு நாள் என்றுதான் நினைக்கிறார்கள். உண்மையில் பூணூல் மாற்றிக்கொள்வதென்பது உபாகர்மாவிலே ஒரு சின்ன அங்கம்தான்.

உபாகர்மா என்பது அந்த ஒரு நாளோடு போகாமல் அடுத்த ஐந்தாறு மாஸங்களான ஒரு டெர்முக்கு ஆரம்ப நாளாக இருப்பதாகும்.

இந்த முதல் டெர்மில் மூலமான வேதத்தை மட்டும ஆசார்யர் கற்றுக் கொடுத்துச் சிஷ்யர்கள் சொல்லிக் கொள்வார்கள். அதாவது 'ச்ருதி' என்றே சொல்லப்படுவனவான தேவதஸம்ஹிதை, ப்ராஹ்மணம், ஆரண்யகம், உபநிஷத்துக்கள் ஆகியவற்றில் பாடம் நடக்குமூ. புஷ்யமாஸம் என்கிற நம் தை பிறக்கும்வரையில் இந்தப் பாடம் தொடரும். (புஷ்யத்துக்குத் 'தைஷம்' என்றும் பெயர் உண்டு. 'தைஷம்'தான் 'தை' ஆயிற்று.)

அப்போது 'உத்ஸர்ஜனம்' என்கிற கர்மாவைச் செய்து ச்ருதி பாடத்தை முடிப்பார்கள். புஷ்யமாஸம் பூர்ணிமையிலாவது அதற்கு முன்வரும் ரோஹிணியிலாவது உத்ஸர்ஜனகர்மா செய்யவேண்டும். ஸாமகர்கள் (அதாவது ஸாமவேதிகள்) புரட்டாசியில்தான் உபாகர்மம் செய்வதால், அத்யயன டெர்ம் ஐந்து மாஸமோ அல்லது குறைந்த பக்ஷம் நாலரை மாஸமோ இருக்கவேண்டும் என்ற விதிப்படி, அவர்கள் மாக பூர்ணிமையில் உத்ஸர்ஜனம் செய்யவேண்டும். தை அமாவாஸ்யைக்குப் பதினைந்து நாட்கள் கழித்துவரும் பௌர்ணமியே மாக பூர்ணிமை.

உத்ஸர்ஜனம் என்றாலும் விஸர்ஜனம் என்றுதான் அர்த்தம் - அதாவது "விட்டு விடுவது". வேத அத்யயன - அத்யாபனங்களை ஒரு கட்டத்தில் விட்டுவிடுவதற்காகச் செய்யும் வைதிக கர்மா உத்ஸர்ஜனம். மறுபடி ஏழு மாஸம் கழித்து அடுத்த "ஆவணியாட்ட"த்தில், விட்ட கட்டத்திலிருந்து வேத பாடத்தைத் தொடங்கவேண்டும். 'உபக்ரமணம், என்றால் தொடங்குவது என்று அர்த்தம், அதனால்தான் அன்று செய்கிற கர்மாவுக்கு 'உபாகர்மா' என்று பெயர்.

வேதத்தில் புதுப்பாடங்கள் இல்லாத இந்த ஏழு மாஸந்தான் இரண்டாவது "டெர்ம்". இதில் வேதாங்கம் எனப்படும் வேதத்தின் ஆறு அங்கங்களான் சி¬க்ஷ, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியவற்றில் பாடம் நடத்துவார்கள். ஏனைய எல்லா வித்யைகளைக் கற்றுக் கொடுப்பதும் இந்த டெர்மில்தான். உபாகர்மாவுக்கான நாள் வந்தவுடன் இதை நிறுத்திவிட்டு, வேத பாடங்களுக்குப் போவார்கள். அதை உத்ஸர்ஜனம் பண்ணினவுடன் மறுபடி இந்த வேதாங்கங்களிலும் காவ்யம் முதலான இதர வித்யைகளிலும் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிப்பார்கள், இந்த உத்ஸர்ஜனம்தான் வடக்கே "ஸரஸ்வதி பூஜா" என்று சொல்லும் வஸந்த பஞ்சமி.

தற்போது "ஆவணியாவட்டம்" என்று பண்ணுவதில் போளியும் வடையும்தான் முக்யமாயிருக்கின்றன. ஒரு டெர்ம் முழுதும் கற்க வேண்டிய வேத பாடங்களில் ஆரம்ப ஸ¨க்தத்தை மட்டும் உபாகர்மாவன்று வாத்யார் சொல்ல, மற்றவர்கள் தப்பும் தவறுமாகத் திருப்பிச் சொல்லி விடுகிறார்கள். அதுமட்டுமில்லை. 'விட்டு விடும்' உத்ஸர்ஜன கர்மாவையும் அன்றே பண்ணி (இப்படி ஒன்று வாத்யார் பண்ணி வைப்பதாகக்கூடப் பல பேருக்குத் தெரிவதில்லை) , வேதாங்கங்களிலும் ஒவ்வொன்றில் ஒவ்வொரு ஸ¨த்ரத்தை மாத்ரம், வாத்யார் சொல்வதைத் திரும்பவும் உளறிக் கொட்டிவிட்டு முடிப்பதாக ஏற்பட்டிருக்கிறது. ஒரேயடியாக இந்த ஆவணியாவட்டத்துக்கே 'உத்ஸர்ஜனம்' செய்யாமல் எதனாலோ விட்டு வைத்திருக்கிறார்கள். வடை, போளிக்காக இருக்கலாம் இப்படி நாமே நம்மைப் பரிஹஸித்துக் கொள்ளும்படியான துர்த்திசையில் இருக்கிறோம்.

[/TD]

[TD="class: foot"]
Jaya Jaya Shankara, Hara Hara Shankara !
[/TD]

Periva's discourse about Avani Avittam - Tamil | Kanchi Periva Forum
 
நிம்மதி எங்கே இருக்கிறது

நிம்மதி எங்கே இருக்கிறது

* உண்ணும் உணவு உடம்பை வளர்த்துக் கொள்ள மட்டுமல்லாமல் உள்ளத்தையும் சீர்படுத்தும் விதத்தில் அமைய வேண்டும்.

* கடவுள் நமக்கு உள்ளம், உடல் இரண்டையும் கொடுத்ததோடு அதைச் சரியான வழியில் நடத்த புத்தியையும் கொடுத்திருக்கிறார்.

* எப்போதும் ஏதாவது ஒரு நல்ல செயலில் மனம் ஒன்றி ஈடுபடவேண்டும். அப்போது தான், அது அழுக்குப்படியாத கண்ணாடி போல தூய்மையுடன் இருக்கும்.

* பெரியவர்கள் வகுத்து வைத்திருக்கும் நியாய தர்மங்களைப் பின்பற்றவேண்டும். முறை தவறிச்செய்யும் செயல்களால் கஷ்டம் தான் உண்டாகும்.

* செய்யும் தொழிலைக் கடனே என்று செய்வதால் ஒரு பயனுமில்லை. ஆர்வத்தோடும், மனப்பூர்வமாகவும் செய்வது அவசியம்.

* மற்றவர்களோடு நம் வாழ்வை ஒப்பிட்டுப் பார்த்தால் போட்டி பொறாமை தான் உருவாகும். மனநிம்மதி உங்களுக்குள் தான் இருக்கிறது. காஞ்சிப்பெரியவா



காஞ்சிப்பெரியவா


Sage of Kanchi

Hari Haran
 
வேதங்களின் தாய் !


வேதங்களின் தாய் !



சந்தியா , சாவித்திரி , காயத்ரி , சரஸ்வதி இவர்கள் நான்கு பேரும் சந்தியாவந்தன வழிபாட்டில் சிறப்பிடம் பெறும் தெய்வங்கள் . வைதீக வழிபாட்டில் காயத்ரி தேவிக்கு அதிகமுக்கியத்துவம் உண்டு .


சூரியனுக்கு ஒளி தருமாறும் , உலகுக்கெல்லாம் ஞான ஒளி கொடுக்குமாறும் வேண்டும் மந்திரமே காயத்ரி மந்திரமாகும் .

காயத்ரி என்றால் எவரெல்லாம் தன்னை ஜெபிக்கிறார்களோ அவர்களைக் காப்பாற்றுவது என்று பொருள் .
' காயத்ரீம் சந்தஸாம் மர்தா ' என்பது ஒரு வாக்கியம் . இத்தொடரில் உள்ள சந்தஸ் என்பது வேதத்தைக் குறிக்கும் .வேத மந்திரங்களின் தாய் காயத்ரி மந்திரம் என்பது இந்தத் தொடரின் பொருள் .

காயத்ரி 24 எழுத்துக்களை கொண்டது . மூன்று பாதங்களை உடையது . எனவே , இம்மந்திரத்தைத் திரிபதா என்பார்கள் . ஒவ்வொரு பாதம் ஒரு வேதத்தின் சாரமாகும் . மூன்று பாதங்களும் ரிக் , யஜுர் ,
சாம வேதங்களின் சாரமாகக் கருதப்படுகின்றன . ( அதர்வண வேதத்துக்கு என்று தனி காயத்ரி மந்திரம் உண்டு . இரண்டாவது முறை உபநயனம் செய்து கொண்டு அதன் பின்புதான் அதர்வண காயத்ரி மந்திர ஜெபம் செய்வார்கள் .)

காலை , நண்பகல் மற்றும் மாலை வேளைகளில் காயத்ரி ஜெபம் செய்ய வேண்டும் . காயத்ரி , சாவித்திரி , சரஸ்வதி என்று மூன்றுவிதமாக தியானிக்கவேண்டும் . காலையில் பிரும்ம ரூபிணியாகவும் , மதியம் சிவரூபிணியாகவும் , மாலையில் விஷ்ணுரூபிணியாகவும் காயத்ரி தேவி இருக்கிறாள் .

மந்திர சக்தி என்பது அக்னியைப் போன்றது . நெருப்பு அணைந்து இருப்பது போல தெரிந்தாலும் அதற்குள் ஒரு பொறி நிச்சயம் இருக்கும் . அந்தப் பொறி தான் காயத்ரி மந்திரம் . அதை ஊதுவதால் பெரிதாக்கிவிட முடியாது . ஓதுவதால்தான் அதிகரிக்கச் செய்ய முடியும் .


ஜூரத்துக்கு மருந்து கொடுப்பது போல ஆத்மாவைப் பிடித்திருக்கக் கூடிய பந்தங்கள் என்னும் ஜூரத்தை நீக்கக் கூடிய மருந்துதான் காயத்ரி என்கிறார் காஞ்சி மாமுனிவர்



aanmigam: June 2013
 
offer grass to cows

offer grass to cows

A wealthy devotee once sent his friend by his car to attend to his work, on his behalf. Unfortunately, the man left for the further-most destination. The car, which met with an accident on the way, was damaged beyond repair. The friend departed to Sivaloka. There was no end to the devotee's sorrow. His remorse that a family was deprived of its head because of him did not leave him in peace at all. He helped the family with a large sum of money. But that hardly compensated for the irreversible loss. The devotee was now frightened and upset that he would have to bear the sin of the death of a brahmin.

There is no one that one can take into confidence in a situation like this and seek a solution that was sanctioned by the sastra. So, he sough guidance from the Supreme Authority. Periyaval listened to all that the devotee had to say, patiently.

"The car accident happened by the divine ordination. You are not guilty of any destructive thought. Somehow, your mind is now burdened with unease. Besides, you are also at the receiving end of the society's accusation. First of all, go and take a holy dip in the Sethu. Get up before sunrise and offer grass to cows that you may find strolling down the streets. Seek the darshan of Siva everyday and contain yourself to taking one meal a day. Circumambulate the Siva temple as many times as it is possible for you to. Do this and you will be rid of the charges of guilt".

The devotee was consoled and accepting the prasada, continued to stand in Periyaval's presence, hesitating to leave. Periyaval looked at him questioningly.

"I can do everything else. But I don't see how I can offer grass to cows. I live in the city and cows are not to be found in the streets in the morning".

The reply came at once. "So what? Surely there is a Gosala. You have a car. Get up at five. Go by car to the Gosala and offer grass to all the cows there".

The devotee was fully consoled, his remorse giving way to peace.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top