• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
மகா பெரியவா சொன்ன கதை

மகா பெரியவா சொன்ன கதை

‘ராகவா… நீ எந்த தர்மத்தை தைரியத்தோடு, நியமத்தோடு அனுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும்)

நன்றி-சக்தி விகடன் & பால ஹனுமான்.

அனைவருக்கும் தெரிந்த ராமாயணத்தை உதாரணக் கதையோடு சொல்லி, ஸ்ரீராமரை நம் நெஞ்சில் அமர்த்தி, ஒரு தர்மபட்டாபிஷேகமே நடத்துகிறார் ஸ்ரீமஹா ஸ்வாமிகள்
. எங்கே… மகா பெரியவா சொல்வதைக் கேட்போமா?

‘ராமன்‘ என்றாலே, ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும், அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அனுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீராமன்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளே ஆனந்தமாகவே இருந்தான்.

சுக- துக்கங்களில் சலனமடையாமல், தான் ஆனந்தமாக இருந்துகொண்டு, மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவதுதான் யோகம். அப்படியிருப்பவனே யோகி. இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப்போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி, வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு பின்பற்றி வாழ்வதுதான்.

ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அனுசரித்து வாழ்ந்து காட்டுவதற்காக ஸ்ரீமந்நாராயணனே ஸ்ரீராமனாக வந்தார். ராம வாக்கியத்தை எங்கே பார்த்தாலும், ‘இது என் அபிப்பிராயம்’ என்று சொல்லவே மாட்டார். ‘ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள்; சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது’ என்றே அடக்கமாகச் சொல்வார். சகல வேதங்களின் பயனாக அறியப்பட வேண்டிய பரமபுருஷன் எவனோ, அவனே அந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்கக் கட்டுப்பட்டு, அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக்கொண்டு, ஸ்ரீராமனாக வேஷம் போட்டுக்கொண்டு வாழ்ந்தான்.

‘ராவணன் சீதையைத் தூக்கிக்கொண்டு போனபோது, ஒரே மைல் தூரத்திலிருந்த ஸ்ரீராமனுக்கு சீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம். அப்படிப்பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம்?’ என்று கேலி செய்து கேட்டவர் களும், எழுதியவர்களும் இருக்கிறார்கள். இவர்கள், ஸ்ரீராமன் இந்த லோகத்தில் வாழ்ந்தபோது மனுஷ்ய வேஷத்தில் இருந்தான்; மனுஷ்யர்களைப் போலவே வாழ்ந்தான் என்பதை மறந்து பேசுகிறார்கள்.

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்…

ஒரு நாடகம் நடக்கிறது. அதில் லவ- குசர்களை வால்மீகி, ராமனிடம் அழைத்து வருகிறார். ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்கார் ஸ்ரீராமராக வேஷம் போட்டிருக்கிறார். அவருடைய சொந்தப் பிள்ளைகளே நாடகத்தில் லவ- குசர்களாக நடிக்கிறார்கள். நாடக ராமன் வால்மீகியைப் பார்த்து, ‘இந்தக் குழந்தைகள் யார்?’ என்று கேட்கிறார். ராமஸ்வாமி அய்யங்காருக்குத் தம்முடைய பிள்ளைகளையே தெரியவில்லை என்று நாடகம் பார்க்கிறவர்கள் கேலி செய்யலாமா? நாடக வால்மீகி, ‘இவர்கள் ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள்; நீங்கள்தானே அந்த ராமஸ்வாமி அய்யங்கார்!’ என்று பதில் சொன்னால் எத்தனை ரஸாபாஸமாக இருக்கும்?

வாஸ்தவத்தில் இருப்பதை, வாஸ்தவத்தில் தெரிந்ததை, நாடகத்தில் இல்லாததாக, தெரியாததாகத்தான் நடிக்கவேண்டும். ஸ்ரீராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது இப்படித்தான் மனுஷ்ய வேஷம் போட்டுக்கொண்டு, தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக்கொண்டு வாழ்ந்தார்.

வேதப் பொருளான பரமாத்மா, தசரதனின் குழந்தையாக வேஷம் போட்டுக்கொண்டவுடன், வேதமும் வால்மீகியின் குழந்தையாக, ராமாயணமாக வந்துவிட்டது. அந்த ராமாயணம் முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லி இருக்கிறது.

ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பட்சணம் செய்து தருகிற வழக்கப்படி, கௌசல்யாதேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களும் கெட்டுப்போகாத பட்சணமாக இந்தத் தர்மத்தைத்தான் கட்டிக்கொடுத்தாள். ‘ராகவா… நீ எந்த தர்மத்தை தைரியத்தோடு, நியமத்தோடு அனுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும்’ என ஆசீர்வாத பட்சணம் கொடுத்தாள். தனது என்ற விருப்பு- வெறுப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது முக்கியம். அதேபோல் தைரியம் முக்கியம். ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது. ஸ்ரீராமனை சாக்ஷாத் லக்ஷ்மணனே பரிகசித்தான்.

‘அண்ணா! நீ தர்மம், தர்மம் என்று எதையோ கட்டிக்கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத் தள்ளு. தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்யத்தை உனக்கு நான் ஸ்வீகரித்துத் தர அனுமதி தா’ என்று அன்பு மிகுதியால் சொன்னான்

. ஆனால் ராமனோ, யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான். கடைசியில் அது அவனைக் காத்தது. தர்மம் தலை காத்தது. ராவணனுக்குப் பத்து தலை இருந்தும், அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன. ஸ்ரீராமன் இன்றும், ‘ராமோ விக்ரஹவான் தர்ம:’ என்றபடி தர்மத்தில் தலைசிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரகம் செய்து வருகிறான்.

சாக்ஷாத் ஸ்ரீராமனை லட்சியமாகக் கொண்டு ‘ராம ராம’ என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்குச் ஸித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.’


Sage of Kanchi

Surya Narayan
 
Rare photo of young Mahaperiyava

Rare photo of young Mahaperiyava




Thanks to Shri Nagi Narayanan for posting this rare photo in FB….Wish this were a color picture to see the shining vastram etc.


So majestic He is!


Description of the picture detailed by Vanjiyur Shri Siva::



This Gold shawl was offered by the Tanjore King Sivaji Raja II, when he performed Kanakabhisekam to the Acharya of the Peetam soon after the Tatanka Pratishta at Tiruvanaikaval… The Gowri Shankar Rudraksha with Diamond pendant, a rare jewel, was offered to the Acharya by the Great Maratta King Nana Saheb (Hero of the 1857 rebellion) during his brief soujorn in Nepal, immediately after the Indian Mutiny..! Nana Saheb’s letter to the Acharya evidencing his acknowledgement of the receipt of Mantrakshata and Blessings from the Acharya and despatch of Nana’s Offerings such as Rudraksha, Kasthuri Chamara etc.,was later published under the Divine orders of Sri Perivaa…






Rare photo of young Mahaperiyava « Sage of Kanchi
 
தொலைந்துபோன தங்க உத்தரணி! (ஒரு பழைய சக்தி &#29

தொலைந்துபோன தங்க உத்தரணி! (ஒரு பழைய சக்தி விகடன்)


பல வருஷங்களுக்கு முன், காஞ்சி மகா ஸ்வாமிகள் தன் பரிவாரங்களுடன் திருவிடைமருதூர் மகாதான தெருவிலுள்ள ‘ஆர்.எம்.எம். சத்திரம்’ என்கிற பழைய சத்திரத்தில் முகாமிட்டிருந்தார். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஸ்வாமிகளைத் தரிசிக்க தினமும் வந்து சென்றனர்.

அடியேன் அப்போது பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். என் தகப்பனார் உள்ளூர் காஞ்சி மடத்தின் பொறுப்பில் இருந்ததால், அடிக்கடி திருவிடைமருதூர் சென்று ஆச்சார்யாளை தரிசித்து வருவார். பள்ளி விடுமுறை நாட்களில், என்னையும் அழைத்துச் செல்வார். அப்போதெல்லாம் ஸ்வாமிகளை பயபக்தியோடு தரிசித்துப் பிரசாதம் பெறுவது ஒரு சுகானுபவம்!

ஒரு ஞாயிற்றுக்கிழமை, காலை 8 மணி இருக்கும். தகப்பனாரோடு ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தேன். அவ்வளவாகக் கூட்டமில்லை. தகப்பனாரை அருகில் அழைத்த ஸ்வாமிகள், ”சந்தானம், ஒங்க கிராமத்தச் சேர்ந்தவாள்ளாம் இங்க வந்துண்டிருக்காளோன்னோ? எல்லாரையும் வரச் சொல்லு! ஒத்தரும் வெறுமனே திரும்பிப் போகப்படாது. இங்கேயே சந்திர மௌலீஸ்வர பிரசாதமா ‘வைஸ்வதேவம்’ (போஜனம்) பண்ணிட்டுப் போகணும். என்ன புரிஞ்சுதா?” எனச் சிரித்துக்கொண்டே, தாயின் கருணையோடு உத்தரவிட்டார்.

என் தகப்பனார் மிகவும் பவ்யமாக, ”பெரியவா உத்தரவு!” என்று சொல்லிவிட்டு நமஸ்கரித்தார். அடியேனும் நமஸ்கரித்தேன். பெரியவா விடவில்லை. என் தகப்பனாரைப் பார்த்து, ”இன்னிக்கு நீ சந்திரமௌலீஸ்வர பூஜையை தரிசனம் செஞ்சுட்டு இங்கயே ‘வைஸ்வதேவம்’ பண்ணிட்டுப் போ!” என்று பணித்தார்.


நானும் தகப்பனாரும் மதிய போஜனத்தை முடித்துக்கொண்டு சத்திரத் திண்ணையில் சற்றுச் சிரம பரிகாரம் பண்ணினோம். மதியம் 3 மணி இருக்கும். திடீரென்று சத்திரத்தினுள் ஒரே ஆரவாரம். மடத்தைச் சேர்ந்தவர்கள் அங்குமிங்குமாக ஓடி, எதையோ பரபரப்பாகத் தேடினர். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. விசாரித்தோம்.

மடத்தைச் சேர்ந்த ஒருவர், ”வேற ஒண்ணுமில்லே… பெரியவா சந்திரமௌலீஸ்வர பூஜை பண்றச்சே அர்க்ய பாத்யம் விடறத்துக்காக கும்மோணத்தைச் சேர்ந்த பெரிய மனுஷர் ஒருத்தர் தங்கத்துல உத்தரணி ஒண்ணு பண்ணிக் குடுத்துருந்தார். சுமார் மூணு பவுன் இருக்கும்! நேத்தி வரைக்கும் பெரியவா பூஜைல அது இருந்துது. இன்னிக்கு அதக் காணலே. இண்டு இடுக்கெல்லாம் தேடிண்டிருக்கோம். இன்னும் பெரியவாகிட்ட சொல்லலே. அவாளுக்குத் தெரியாது!” என்று கூறிவிட்டுத் தேடுவதில் முனைந்தார்.


ஸ்ரீமடத்து காரியஸ்தர், ‘இது பெரியவா காதை எட்றதுக்குள்ள எப்டியும் கண்டுபிடிச்சு வெச்சாகணும்!’ என்று கவலையோடு சொன்னார். சிப்பந்திகளை ஒவ்வொருவராக அழைத்து விசாரணை பண்ணினார். அனைவருமே தங்களுக்குத் தெரியாது என்று கூறிவிட்டனர்.

”எல்லாரையும் விசாரணை பண்ணியாச்சு. ஒருத்தன்தான் பாக்கி!” என்று சொன்ன காரியஸ்தர், ”உக்கிராண கைங்கர்யம் பண்ற ராமநாதனைக் கூப்பிடு!” என்றார்.

சமையல்கட்டுக்குப் போய்ப் பார்த்துவிட்டு வந்த ஒருவர், ”சமையல்கார ராமநாதன் அங்கே இல்லே. அவன் அம்மாவுக்கு ஒடம்பு சரியில்லேனு பாத்துட்டு வரதுக்காக தேப்பெருமாநல்லூர் வரைக்கும் போயிருக்கானாம். சாயங்காலம்தான் அவனை எதிர்பார்க்கலாம்!” என்று கூறிவிட்டு நகர்ந்தார்.


மாலை மணி 5. மகா ஸ்வாமிகள் தமது ஏகாந்த அறையை விட்டு வெளியே வந்தார். தம் பார்வையை நாலாபுறமும் சுழலவிட்டுச் சற்று நின்றார். பிறகு, தமது அறை வாயிலில் சுவரோரம் போடப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தார். சற்று நேரத்தில், கூடத்துப் பக்கம் பூஜா கைங்கர்யம் பண்ணும் இளைஞன் ஒருவன் வந்தான். அவனை அருகில் அழைத்த ஆச்சார்யாள், ”ஏண்டாப்பா… நானும் மத்யானத்லேர்ந்து பாக்கறேன்… சத்ரம் அல்லோலகல்லோலப் பட்டுண்டிருக்கே, என்ன சமாசாரம்? ரொம்பப் பெரிய மனுஷா யாராவது இன்னிக்கு வரப்போறாளோ?” என்று ஒன்றும் தெரியாதது மாதிரி, சிரித்தபடி கேட்டார்.

அந்த இளைஞன் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணிவிட்டு, ”அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே, பெரியவா!” என மென்று விழுங்கினான்.

ஸ்வாமிகள் விடவில்லை. ”ஒண்ணுமில்லேனு சொல்லிப்டா எப்டிடாப்பா! சத்ரமே அமக்களப்பட்டுண்டிருக்கே! வேறென்னதான் விஷயம்?” என்று சிரித்தபடி வினவினார் ஆச்சார்யாள்.


அந்த இளைஞன் மிகவும் தயங்கியபடி, ”நீங்க சந்த்ரமௌலீஸ்வர பூஜை பண்றச்சே அர்க்ய பாத்யம் விடறத்துக்காக வெச்சுண்டிருப் பேளோன்னோ… பவுன் உத்தரணி, அதக் காணலே பெரியவா! அதத்தான் சத்ரம் முழுக்க இண்டு இடுக்கெல்லாம் தேடிண்டிருக்கா” என்றான் வருத்தத்துடன்.

அடுத்து பெரியவா ஒரு கொக்கி போட்டார்…

”ஏண்டாப்பா! நம்ம மனுஷ்யா யார் பேர்லயா வது சந்தேகம் இருக்கோ… அப்டி ஏதாவது பேசிக்கறாளோ?”

அந்த இளைஞன், ”தெரியலியே பெரியவா! காரியஸ்தர் மாமாதான் என்னென்னமோ சொல்லிண்டிருக்கார். அவரைக் கேட்டா தெரியும்!” என்று சொன்னான்.

”சரி… நீ போய் கார்யஸ்த மாமாவை இங்க வரச் சொல்!” என்று அவனுக்கு உத்தரவிட்டார் பெரியவா.

அங்கே ஒரு மூலையில் கை கட்டியபடி நின்று, தகப்பனாரும் நானும் நடப்பதைக் கவனித்துக்கொண்டு இருந்தோம்.

கூடத்துக்கு வந்த காரியஸ்தர், பெரியவாளை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தார். பெரியவா சிரித்துக் கொண்டே, ”ஏண்டாப்பா! பூஜைலேர்ந்த பவுன் உத்தரணி காணலியாமே?” என்று கேட்டார்.

”ஆமாம், பெரியவா!”

”என்னிலேர்ந்து காணம்னு ஏதாவது தெரியுமோ?”

காரியஸ்தர் தயங்கியபடியே, ”ரண்டு நாளா சந்திரமௌலீஸ்வர பூஜையின் உபயோகத்துக்கு உத்தரணியை எடுக்கலே, பெரியவா! இன்னிக்கு பாக்கறச்சே அதக் காணம்!” என்று மென்று விழுங்கினார்.

”சரி… நீ என்ன நெனைக்கறே?”

”எனக்கு என்ன படறதுன்னா, யாரோ அத எடுத்திருக்கணும்!”

”சரி, யார்னு ஒன்னால அனுமானிக்க முடியறதா?”

”அப்படி தீர்க்கமா சொல்ல முடியலே, பெரியவா. இருந்தாலும், ஒரு பேர்வழி மேல சந்தேகம் இருக்கு!”

”யார் அந்தப் பேர்வழி?”

காரியஸ்தர் தயங்கித் தயங்கி, ”பெரியவாளுக்குத் தெரியாம ஒண்ணுமே இருக்க முடியாது. இருந்தாலும், என் மனசுல பட்டதைச் சொல்லிடறேன்!” என்று இழுத்தார்.

”சொல்லு… நானும் தெரிஞ்சுக்கறேன்.”

”நம்ம சமையல் வேலை ராமநாதன்தான்கறது என் தீர்மானம்!” என்று காரியஸ்தர் பூர்த்தி செய்வதற்குள்… ”அதெப்படி சொல்றே நீ?” என்று மடக்கினார் ஸ்வாமிகள்.

அதற்கு காரியஸ்தர், ”கடந்த பத்துநாளா அந்த ராமநாதன், ‘எங்கம்மாவுக்கு ஒடம்பு சரியில்லே. கும்மோணம் முனிசிபல் ஆஸ்பத்ரில சேத்து வைத்தியம் பாக்கணும். முந்நூறு ரூவா அட்வான்ஸ் வேணும்’னு நச்சரிச்சுண்டே இருந்தான். அது மட்டுமில்லே பெரியவா, சம்பளத்துல ‘இன்க்ரிமென்ட்’ வேற போட்டுக் கொடுங்கோனு நித்தம் தொளச்சுண்டிருந்தான். அதனால…”

இடைமறித்த ஆச்சார்யாள், ”அவனுக்குப் பணமுடை இருக்கற காரணத்தால, அவன்தான் இந்த கார்யத்தப் பண்ணி இருக்கணும்னு முடிவு கட்டிட்டியாக்கும்!” என்று சொல்லிச் சிரித்தார்.

தொடர்ந்து ஸ்வாமிகள், ”சரி சரி… இப்போ அந்த ராமநாதன் எங்கே இருக்கான்? நான் கூப்டேன்னு அவன இங்க அழச்சுண்டு வா!” என்றார்.

உடனே காரியஸ்தர், ”அம்மாவுக்கு ரொம்ப ஒடம்பு சரியில்லேனு பாத்துட்டு வரதுக்காக தேப்பெருமாநல்லூர் வரைக்கும் போயிருக்கான் பெரியவா!” என்று பணிவுடன் சொன்னார்.

”போகட்டும்… அட்வான்ஸும், இன்க்ரிமென்ட்டும் கேட்டான்னியே, அதைப் போட்டுக் குடுத்துட்டியோ?”

”இல்லே பெரியவா…”

”பின்ன என்ன பண்ணினே?”

”அவன் கேட்ட அந்த ரெண்டு விஷயத்துக்குமே மடத்துல இப்போ சௌகர்யப்படாதுனு சொல்லிப்டேன், பெரியவா!”

இதைக் கேட்டு ஸ்வாமிகள் சிறிது நேரம் கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்துவிட்டார்.

சற்றுப் பொறுத்து காரியஸ்தரைப் பார்த்து, ”சரி, நீ ஒரு கார்யம் பண்ணு! அந்த ராமநாதன் தேப்பெருமா நல்லூர்லேர்ந்து வந்த ஒடனே, அவனையும் அழச்சிண்டு எங்கிட்ட வா! புரியறதா?” என்று உத்தரவளித்துவிட்டு, தனது ஏகாந்த அறைக்குப் போனார். நாங்கள் அனைவரும் மெய்ம்மறந்து அப்படியே கை கட்டி நின்றிருந்தோம். நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

இரவு மணி 8. தேப்பெருமாநல்லூரிலிருந்து ராமநாதன் வந்து சேர்ந்தார். அவரை அழைத்துக்கொண்டு கூடத்துக்கு வந்தார் காரியஸ்தர். சொல்லி வைத்தாற்போல் பெரியவாளும் கதவைத் திறந்துகொண்டு வந்து அமர்ந்தார். ஸ்வாமிகளை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார் ராமநாதன்.

உடனே பெரியவா வாத்சல்யத்துடன், ”ராமநாதா! உன் தாயாருக்கு ஒடம்பு சரியில்லேனு கேள்விப்பட்டேனே, இப்போ எப்டி இருக்கா?” என்று விசாரித்தார்.

ராமநாதன் கண்கலங்கியபடி, ”வயத்துல ஏதோ கட்டி வந்திருக்காம், பெரியவா! கும்மோணம் பெரியாஸ்பத்ரில சேத்துதான் ஆபரேஷன் பண்ணணுமாம்…” என்று முடிப்பதற்குள் ஸ்வாமிகள், ”அதுக்குத்தான் காரியஸ்தர்ட்ட அட்வான்ஸ் கேட்டயா?” என்று வினவினார்.

”ஆமாம், பெரியவா!”

”இன்க்ரிமென்ட்டும் வேணும்னியாமே..?”

இதற்கு ராமநாதன் பதில் பேசவில்லை.

”ஏன் பதில் சொல்லமாட்டேங்கறே? இப்ப மாசம் என்ன சம்பளம் வாங்கறே?”

”அறுபது ரூவா, பெரியவா…”

”என்ன இன்க்ரிமென்ட் எதிர்பார்க்கறே?”

பதிலில்லை. பெரியவாளும் விடவில்லை.

ராமநாதன் தயங்கியபடியே சன்னமான குரலில், ”மாசம் ஒரு பத்து ரூவா பெரியவா…” என்று குழைந்தார்.

”மாசா மாசம் எழுபது ரூவா சம்பளம் வேணுங்கறே நீ. அப்டித்தானே?” – இது ஸ்வாமிகள்.

இதற்கும் பதிலில்லை. உடனே காரியஸ்த ரைப் பார்த்த ஸ்வாமிகள், ”இவன் 10 ரூவா இன்க்ரிமென்ட் கேக்கறான். நீ என்ன பண்றே, இந்த மாசத்துலேர்ந்து இவனுக்கு 15 ரூவா இன்க்ரிமென்ட் போட்டு, எழுவத்தஞ்சு ரூவாயா சம்பளத்தக் குடு. அதுக்கு முன்னே, இப்பவே இவன் கேட்ட அட்வான்ஸ் ரூவாயக் குடுத்துடு. என்ன, புரியறதா?” என்று உத்தரவு போட்டார்.

”அப்டியே பண்றேன் பெரியவா!” என்றார் காரியஸ்தர்.

”என்ன ராமநாதா, இப்ப ஒனக்கு சந்தோஷம் தானே?” என்று கேட்டார் ஸ்வாமிகள்.

வாய் பொத்தி, தலையாட்டினார் அவர்.

திடீரென்று பெரியவா, கூடத்திலிருந்த அனைவரையும் பார்த்து, ”ஏண்டாப்பா… தொலஞ்சு போன பவுன் உத்தரணியை இண்டு இடுக்கெலெல்லாம் தேடிப்டதா சொன்னேளே… இப்போ நா சொல்லப்போற எடத்ல தேடிப் பாத்தேளானு சொல்லுங்கோ, பார்ப்போம்…” என்று சஸ்பென்ஸோடு நிறுத்தினார்.

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ‘புரியலியே, பெரியவா?’ என்பதுபோல் ஆவலுடன் ஸ்வாமிகளையே பார்த்தனர்.

ஸ்வாமிகள் சிரித்தபடி தொடர்ந்தார்… ”ஒரு முக்கியமான எடத்ல நீங்க தேடாம விட்டுட்டேள். இப்ப சொல்றேன், கேளுங்கோ… நித்யம் சந்திரமௌலீஸ்வர பூஜைல உபயோகப்படுத்தற நிர்மால்ய புஷ்பங்களைக் கொல்லைல கால் படாத எடத்ல கொண்டு போய் கொட்றேளோன்னோ… அதுல போய்த் தேட வேண்டாமோ பவுன் உத்தரணியை! அதுக்காக இப்பவே ராத்ரில தேடப்போயிடாதீங்கோ… பூச்சி பொட்டு இருக்கும். கார்த்தால போய்ப் பாருங்கோ. சந்திரமௌலீஸ்வரர் கிருபையால அது அங்க கெடச்சுடும்.”

யாருக்காகவோ இதைச் சூசகமாகச் சொல்வதுபோல் சொல்லிவிட்டு, விருட் டென்று எழுந்தார் ஸ்வாமிகள். அனைவரும் விழுந்து நமஸ்கரித்து விடைபெற்றோம்.


அடுத்த நாள் காலை. ஆவலுடன் மகாதானத் தெரு சத்திரத்துள் தகப்பனாருடன் நுழைந்தேன். தங்க உத்தரணி குறித்து மடத்து காரியஸ்தரிடம் என் தகப்பனார் விசாரித்தார்.

அவர் சிரித்தபடியே சொன்னார்… ”பெரியவா சொன்னபடியே கார்த்தால கொல்லைல போய் நிர்மால்ய புஷ்பங்களைக் கிளறிப் பார்த்தோம். பளபளனு அதுல கிடந்தது தங்க உத்தரணி. ஆனா, அது எப்டி அங்க வந்ததுங்கறது, சந்திரமௌலீஸ்வரருக்கும் பெரியவாளுக்கும் மட்டுமே தெரிஞ்ச ரகசியம்…”



Source; Sage of Kanchi

சங்கர்நகர் சங்கரன்
 
“இந்தப் பையனை நான் அழைத்துக்கொண்டு போகவா

“இந்தப் பையனை நான் அழைத்துக்கொண்டு போகவா?”


பெரியவா மஹாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த நேரம். ஒரு ஜமீன்தார் மஹானுக்கு சகலவிதமான உபசாரங்களையும் குறைவில்லாமல் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார். தனது ஊழியன் ஒருவனை பெரியவாளின் அருகிலேயே இருந்து பார்த்துக்கொள்ளும்படி பணித்தார். அந்த இளைஞன் பெயர் பவார் என்பதாகும். பணிவிடை என்றால் அப்படி ஒரு பணிவிடை.பெரியவாளுக்கு பரம திருப்தி. முகாமை முடித்துக்கொண்டு புறப்படும்போதுஜமீன்தாரிடம் கேட்டார்.



“இந்தப் பையனை நான் அழைத்துக்கொண்டு போகவா?”
ஜமீன்தாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தன ஊழியன் ஒருவன் மஹானுக்கு சேவை செய்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம்?


“தாராளமாக அழைத்துப் போங்கள், அவனது குடும்பத்தை நான் பார்த்துக்கொள்கிறேன், அவர்களுக்கு வேண்டிய எல்லா சௌகர்யங்களையும் நான் செய்து கொடுத்துவிடுகிறேன். அவர் குடும்பத்தைப் பற்றி கவலைப்படவே தேவை இல்லை அல்லவா?” என்றார் ஜமீன்தார். அன்றிலிருந்து அந்த வடநாட்டுஇளைஞன் பவார் மடத்து சிப்பந்திகளில் ஒருவனானான்.


அடுத்த முகாம் எங்கோ ஒரு வசதியில்லாத பிரதேசத்தில். இரவு நேரம், மடத்து ஊழியர்கள் யாவரும் இரவு உணவை தயாரித்து உண்டு முடித்துவிட்டனர். சாப்பாடு விஷயத்தில் மட்டும் யாருக்கும், எந்த விதத்திலும் குறை வைக்கக்கூடாது எனபது மஹாபெரியவாளின் கடுமையான கட்டளை.


எல்லோரும் சாப்பிட்டு முடித்தபின், உள்ளே வந்த மஹான், ஒவ்வருவரிடமும்“சாப்பிட்டாயிற்றா?” என்கிற கேள்வியை கேட்டு பதிலையும் பெற்றுக்கொண்டு இருந்தார். கடைசியாக வெளியே வந்தார். பவார் முகாமின் காவலாளியாகவெளியே நின்றுகொண்டு இருந்தான். அவனுக்குத் தமிழ் தெரியாதில்லையா?
“சாப்பாடு ஆயிற்றா?” என்று மஹான் சைகையினாலே கேட்க, “இல்லை” என்று சோகத்தோடு சைகை காட்டினான். மடத்து நிர்வாகியை அழைத்தார்.


“நம்மை நம்பி வந்திருக்கும் இவனுக்கு வேளா வேலைக்கு சோறு போடவேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏன் இல்லாமல் போனது? அவனாக கேட்காவிட்டாலும் நீங்கள் சைகை மூலமாக அவனிடம் கேட்டிருக்கக் கூடாதா?நீங்கள் சாப்பிட்டுவிட்டு சாப்பாட்டுக்கடையை மூடிவிட்டீர்கள். இந்தப் பொட்டல் காட்டில் அவன் எங்கே போய் உணவைத் தேடுவான்…? என்று சரமாரியாக பொரிந்து தள்ளிவிட்டார். நிர்வாகி உடனே பவாருக்கு இரவு உணவை ஏற்பாடு செய்வதாக பெரியவாளிடம் சொல்லிவிட்டுப் போனார்.
சில நிமிடங்களில் முகாமுக்கு அருகே சைக்கிளில் வந்த ஒரு நபர், முகாமில் வெளிச்சம் தெரிவதைக் கவனித்து உள்ளே வந்துவிட்டார். அவர் கையில் ஒருசிறிய தூக்கு.


விசாரித்ததில் அருகில் இருக்கும் ஓரிடத்திற்கு உணவு கொண்டு போவதாகவும்,வழியில் அப்படியே மஹானைப் பார்க்க வந்ததாகவும் சொல்கிறார் அவர். காஞ்சி மஹான் அவரிடம் கேட்கிறார் “இதோ இருக்கும் நபருக்கு, ஏதாவது சாப்பிடக்கொடுக்க முடியுமா?” ஒரு ஊழியனுக்கு கருணை வள்ளல் புதியவனிடம் விண்ணப்பம் போடுகிறார்.


“இதோ இந்தத் தூக்கில் இரவு உணவு இருக்கிறது, சாப்பிடச் சொல்லுங்கள். நான் வேறு ஏற்பாடு செய்துகொள்கிறேன்” என்று தான் கொண்டு வந்த தூக்கைஅங்கேயே வைத்துவிட்டு போய்விடுகிறார். தூக்கைத் திறந்து பார்த்தால் வட இந்தியர் சாப்பிடும் சப்பாத்தி, சப்ஜி எல்லாம் அதில் சுடச்சுட இருக்கிறது. புன்னகையோடு பவாரை சாப்பிடச் சொல்கிறார் அந்த கருணை வள்ளல்.


தனக்காக யாரோ ஒரு வழிப்போக்கனிடம் உணவைப் பெற்றுத்தருகிறாரே இந்த மஹான் என்று நெகிழ்ந்து போனான் பவார்.


அதற்குப்பிறகு அந்த வழிப்போக்கன் முகாமின் பக்கமே வரவில்லை. தூக்கையும் கேட்டு வாங்கிக்கொண்டு போகவில்லை.


பவார் மடத்தில் நிரந்தர ஊழியன் ஆனபிறகு, அவனுக்கு மஹான்தான் எல்லாம். மஹான் தனது மேனாவிற்குள் சென்று உறங்கும்வரை, பவார்தான் உடனிருந்து கவனித்துக்கொள்வது வழக்கமாகிவிட்டது. பல வருடங்களுக்குப்பிறகு ஒரு தடவை பவாரின் குடும்பம் அவரைப்பார்க்க காஞ்சிக்கு வந்திருந்தார்கள். இரண்டொரு தினங்கள் மடத்தில் தங்கி காஞ்சி மஹானை ஆசைதீர தரிசனம்செய்தபிறகு, அவர்கள் திருப்பதிக்குச் சென்று வரவேண்டும் என்கிற ஆசை. பவார் இதை மஹானிடம் சொன்னபோது….
“தாராளமாக போய்வரட்டும்” என்று உத்தரவு கொடுத்தார். அவர்களுடன் தானும் போகவேண்டும் என்று பவாருக்கு ஆசை.


ஆனால் மஹானின் உத்தரவு வேண்டும். இவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளை யார் பார்த்துக்கொள்வார்கள்? ஒரு நாளில் குடும்பத்தோடு போய்விட்டு திரும்பி வந்துவிடலாம் என்கிற நப்பாசை. மனதில் தயங்கித் தயங்கி மஹானிடம் தனது கோரிக்கையை சமர்ப்பித்தான்.


“பாலாஜியைத்தானே பார்க்கணும், நீயும் போய்வா” என்று வாய் மொழியாக மஹான் சொல்லிவிடவே, பவாருக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. மஹானின் “மேனா”வை இரவில் இழுத்து மூடுவதும், காலையில் அதை முதலில் திறப்பதும் பவாரின் வேலைதான். அன்று காலை எல்லோரும் திருப்பதிக்குப் போக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.


வழக்கம்போல் மஹானின் “மேனா” வில் திரைச்சீலையை விலக்கிவிட்டு காலையில் ஆற்றவேண்டிய சில கடைமைகளை செய்வதற்கு பவார் தன்னை தயார் செய்துகொண்டான்.


விடியற்காலை மஹானின் “மேனா” வின் திரையை விலக்கிப் பார்த்த பவார் அதிர்சியுடன் கூட பக்திப் பரவசமானான். உள்ளே சாக்ஷாத் பாலாஜியாக மஹான் அவன் கண்களுக்கு காட்சியளித்தார். தன கண்களையே அவனால்நம்பமுடியவில்லை.


“பாலாஜி இங்கேயே இருப்பது உனக்குத் தெரியாதா?” பவார் சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கி எழுந்தபோது மஹான் அவனைப் பார்த்து கேட்ட கேள்வி இது.


பேசமுடியாமல் இரண்டொரு நிமிடங்கள் கலவரத்தோடு நின்ற பவார் மெதுவாக மஹானை நோக்கி தன இரு கரங்களைக் கூப்பியவாறு “நான் திருப்பதிக்குஅவர்களுடன் போகவில்லை” என்றான். சர்வ வல்லமை படைத்த மஹான் இங்கேயே இருக்கும்போது, நான் ஏன் வேறு இடத்திற்கு கடவுளைத் தேடித் போகவேண்டும் என்று பவார் தனக்குதானே கேள்வியை எழுப்பிகொண்டான்,என்பது உண்மை.


இதே பவாருக்கு மஹான் வேறொரு தெய்வத்தின் தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார். வட இந்திய முகாமின்போது நடந்த சம்பவம் இது. இடம் கிடைகாத பட்சத்தில் ஏதாவதொரு பகுதியில் நகரைவிட்டு சற்று தள்ளி மஹான் முகாமை அமைப்பது வழக்கம் என்று சொன்னார்கள். அப்படிப்பட்ட இடம்…


ஒரு நாள் மாலை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மஹான் நடக்கஆரம்பித்துவிட்டார். பவார் மட்டும் அவருக்கு வழித்துணை. வேறு யாரும் உடன்வரக்கூடாது என்று உத்தரவு.


ஒற்றையடிப்பாதை வழியாக மழையின் அடிவாரத்தை அடைந்த மஹான், சற்றே மேலே ஏறத் தொடங்கினார். சற்று தூரம் போனவுடன் சுற்றிலும் இருந்த செடி கொடிகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தபோது அந்த மலையில் ஒரு சிறிய குகைவாயில் தெரிந்தது. ஒருவர் தாராளமாகப் போய்வரலாம்.
“உள்ளே போய் பார்த்துவிட்டு வரியா?” என்று மஹான் பவாரிடம் கேட்க, தான் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு… “எனக்கு பயமாக இருக்கிறது, நான் போகவில்லை” என்று சொல்லிவிடவே, மஹான் அவனைப் பார்த்து புன்னகை செய்தபின் குகைக்குள் நுழைந்தார்.


என்னவோ ஏதோ என்று கைகளைப் பிசைந்தவாறு பவார் குகைக்கு வெளியே நின்றுகொண்டு இருந்தான். முகம், மனம் கவலையினால் நிரம்பி வழிந்தது. சில நிமிடங்களுக்குப் பின் மஹான் சிரித்த முகத்துடன் வெளியே வந்தார்.



“இப்போ நீ போயிட்டு வரலாமே” என்றார். மஹாபெரியவாளே போய்விட்டு வந்தபின்னர் இனி தான் பயப்படுவது நன்றாக இருக்காது என்று பவார் குகைக்குள் போனான்.


உள்ளே போனபிறகு, இருண்ட குகையில் திடீரென வெளிச்சம். அவன் கண் எதிரே ஒரு மேடை. மேடையில் ஆஞ்சநேயர் விஸ்வரூபத்துடன், கை கூப்பியவாறு நிஷ்டையில் இருந்தார். பவாருக்கு கண்கள் கூசின. தன்னையே நம்பாதவனாக,வாயுபுத்திரனை வணங்கிவிட்டு, பரவசத்தோடு வெளியே வந்து சேர்ந்தான்.


வெளியே வந்தபின் எல்லாம் வல்ல சர்வேஸ்வரனான உம்மாச்சி தாத்தா, “பாத்துட்டியா?” என்ற கேள்வியை மட்டும் அவனிடம் கேட்டார். கை கூப்பியவாறு அவன் தலையை ஆட்டவே, இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.


இந்த பவார்தான் எவ்வளவு பாக்கியம் செய்தவர்.




Source; Sri Sri Sri Maha Periyava
 
இறைவனின் நாடகமும் மனிதரின் நாடகமும்!

இறைவனின் நாடகமும் மனிதரின் நாடகமும்!
(இந்த வார கல்கி)

லோகம் முழுக்க ஒரு நாடகம்; பகவான் கபட நாடக சூத்திரதாரி என்று மகான்கள் சொல்கிறார்கள். சர்வ தேசத்திலும் மகாகீர்த்தி வாய்ந்த நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர். அவர்கூட ஓர் இடத்தில், ‘லோகம் முழுதுமே ஒரு நாடக மேடைதான்; எல்லா ஸ்த்ரீ - புருஷர்களும் அதிலே வரும் நடிகர்கள்தான்’ என்று சொல்கிறார்.

ஸ்வாமி நடத்துகிற இந்தப் பெரிய நாடகத்தில் மநுஷ்யனும் ‘நாடகம்’ என்று ஒரு கலையை உண்டாக்கியிருக்கிறான். அநாதி காலமாக இலக்கியத்தில் இது ஒரு முக்கியமான அங்கமாக இருந்து வந்திருக்கிறது. வேதங்களிலே ஆங்காங்கே சம்பாஷணை ரூபத்தில் இரண்டு பேர் பேசிக் கொள்கிற மாதிரியான மந்திரங்கள் இருக்கின்றன. ஆராய்ச்சிக்காரர்கள் இதுதான் நாடகக் கலையின் தோற்றுவாய் (Origin) என்று சொல்கிறார்கள். தமிழிலும் இயல், இசை, நாடகம் என்று சொல்கிறார்கள். ‘கத்யம்’ (Prose) என்பதை ‘இயல்’, ‘பத்யம்’(Poetry) என்பதை ‘இசை’ என்று சொல்லி, ‘நாடகம்’ என்பதற்கு மட்டும் அதே வார்த்தையையே தமிழிலும் வைத்துக் கொண்டிருக்கிறோம். ‘கூத்து’ என்பதே நாடகத்திற்கான தமிழ் வார்த்தை.

ஸம்ஸ்கிருதத்தில் கவி சிரேஷ்டர்கள் என்று தலை மேல் வைத்துக் கொண்டு கொண்டாடக்கூடிய காளிதாஸன், பவபூதி காலத்திலிருந்து நாடக இலக்கியம் மகோன்னதமாக வளர்ந்திருக்கிறது. காளிதாஸன், பவபூதி இருவருமே கவிகள் (Poets) என்பதைவிடப் பெரிய நாடகாசிரியர்களாக ( Dramatist) இருந்திருக்கிறார்கள். இன்னும் பாஸன், விசாகதத்தன் முதலான பல பேரும் நாடகாசிரியர்களாக இருந்திருக்கிறார்கள்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்


Sage of Kanchi


Varagooran Narayanan
 
உண்மையான வைஷ்ணவன்

உண்மையான வைஷ்ணவன்

சில வைஷ்ணவர்கள் , ஒரு கோஷ்டியாக, சில திவ்ய தேசங்களைத் தரிசனம் செய்துவிட்டுக் காஞ்சிபுரம் வந்தார்கள். வரதராஜப் பெருமாள், யதோக்தகாரி, பாண்டவ தூத கிருஷ்ணன், உலகளந்த பெருமாள், வைகுண்டப் பெருமாள் - கோயில்களில் தரிசனம் செய்து விட்டு ஸ்ரீ மடத்துக்கு வந்தார்கள்.

அந்த கோஷ்டியில் ஒரு தீவிர வைஷ்ணவர். மற்ற பக்தர்கள் பெரியவாளைச் சேவிக்க வந்தபோது, அவர் மட்டும் தொலைவிலேயே கொஞ்சம் அலட்சியமாக நின்றுவிட்டார்.

அதே சமயம் பெரியவாள், தன் அணுக்கத் தொண்டர்களை விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லும்படி உத்திரவிட்டார். (பெரியவா விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லச் சொல்வது வழக்கம் தான். அந்தப் பாராயணத்தில் அசைக்க முடியாத பற்றுதல் பெரியவாளுக்கு. ஆனால், இப்போது விஷ்ணு சஹஸ்ரநாமம் ஏன் என்பது சீடர்களுக்கு விளங்கவில்லை.)

தொலைவில் நின்று கொண்டிருந்த ஸ்ரீ வைஷ்ணவர் செவிகளில் விஷ்ணு சஹஸ்ரநாமம் விழுந்தது. ' அட, இதென்ன, விபூதிச் சாமியாரைச் சுற்றி விஷ்ணு சஹஸ்ரநாமம் ?' என்று திகைத்தார் போலும்.

அடுத்த நிமிஷம் அவர் திகைப்பு இன்னும் அதிகமாயிற்று.

தன்னைச் சேவித்துக் கொண்டிருந்த திருமால் அடியார்களைப் பார்த்து, "நாராயண! நாராயண!" என்று கூறி ஆசி வழங்கிக் கொண்டிருந்தார் பெரியவாள்.

பெரியவாளை மறுபடியும் பார்த்தார் ஸ்ரீ வைஷ்ணவர். அங்கே உடையவர் (ராமானுஜர்) நின்று கொண்டிருப்பது போலவே தோன்றிற்று, அவருக்கு. பெரியவா அருகில் வந்து, விழுந்து விழுந்து சேவித்தார். பிறகு, "அபசாரம் பண்ணிட்டேன்.. மன்னிக்கணும்" என்று நாத்தழுதழுக்க வேண்டிக் கொண்டார்.

"நீ ஓர் உண்மையான வைஷ்ணவன்" என்று சொல்லி, கல்கண்டு பழங்கள் கொடுத்து அவருக்கு அனுக்ரஹம் செய்தார்கள் பெரியவா.


Source: Sage of Kanchi

Surya Narayan
 
நாம மகிமை

நாம மகிமை





தியானம், ஜபம், பூஜை, யக்ஞம் க்ஷேத்திராடனம் ஆகியவற்றைப் போலவே நம் தேசத்தில் நீண்ட காலமாக பகவந்நாமாக்களைக் கோஷ்டியாகப் பாடி பஜனை செய்கிற பழக்கமும் இருந்து வந்திருக்கிறது. இந்த ஜீவாத்மானது பரமாத்மாவுடன் தொடர்பு கொள்வதற்கு ஒரு பெரிய உபாயமாக நாம பஜனை தொன்றுதொட்டு தேசத்தில் அநுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. அநேகமாக கிராமம், நகரம் எல்லாவற்றிலும் பஜனை மடம், அல்லது பஜனைக் கூடம் என்றே ஒன்று கணக்கிடப்படுவதிலிருந்து, பஜனை பத்ததி நம் நாட்டில் எவ்வளவு செழிப்பாக இருந்திருக்கிறது என்று ஊகிக்கலாம். இந்த பஜனை மடங்களில் சனிக்கிழமை தோறும், ஏகாதசி தோறும் ஜனங்கள் எல்லோரும் சேர்ந்து பஜனை செய்வார்கள்.



கோயில்களில் பூஜையைப் பார்க்கிறோம். தெய்வத்தைத் தியானிக்கிறோம். பஜனையிலோ நாமே வாய்விட்டுத் தெய்வத்தின் நாமங்களையும், குணங்களையும், லீலைகளையும், பாடி ஈஸ்வரபரமாக மனஸை ஈடுபடுத்துகிறோம். பலர் சேர்ந்து கொண்டு சமூதாய வாழ்க்கை அடிப்படையில் பக்தி செய்கிற சிறப்பு பஜனைகளும் உண்டு. அவரவரும் ஆத்ம க்ஷேமத்தை அடைந்து, அதனாலேயே ஜீவ கோடிகளுக்கு க்ஷேமத்தைத் தர வேண்டும் என்று, தனி மனிதர் அடிப்படையிலேயே (Individual basis ) ஹிந்து மதம் முக்கியமாக அமைந்திருந்தாலும், கோயில், உத்ஸவம், பஜனை இவற்றில் கூட்டு வழிபாட்டு முறையும் (Congregational worship)இருக்கிறது.


இன்னிசையுடனும், வாத்திய கோஷத்துடனும் செய்கிற பஜனை எல்லா உள்ளங்களையும் சுலபமாக இழுத்து பகவத் ஸ்மரணத்தில் செலுத்துகிறது. ரகுபதி ராகவ ராஜாராம், ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே என்பது போல் சுலபமான வார்த்தைகளை மதுரமான சங்கீதத்தோடு கலந்து செய்கிற பஜனையால் எளிதாகத் தெய்வத்தை நினைவுகொள்ள முடிகிறது.


பஜனைக் கூடம் என்ற ஒர் இடத்தில் அமர்ந்து பஜனை செய்வதோடு, நகர சங்கீர்த்தனம் செய்கிற பழக்கமும் உண்டு. வைகுண்ட ஏகாதசி போன்ற புண்ணிய காலங்களில் ஜனங்கள் எல்லோரும் பகவந்நாமாக்களை பஜனை செய்தபடி வீதி வீதியாகச் செல்வதுதான் நகர சங்கீர்த்தனம் எனப்படுவது.

விசேஷமாக மார்கழி மாதத்தில் தினந்தோறும் அதிகாலையில் இப்படி வீதி வீதியாக பஜனை செய்து ஊர் முழுவதும் திவ்விய நாமங்களைப் பரப்புவதுண்டு.



இந்த நல்ல பழக்கம் மறுபடியும் நன்றாக உயிர் பெற்று வளர வேண்டும். கிராமங்களில் உள்ள பஜனை மடங்களில் பகவந்நாமம் இல்லாமல் வெறுமையாகப் போகவிடக் கூடாது. சமீப காலத்தில் பஜனை முறை நன்றாக விருத்தியடைந்து வருவதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. நம் வேதம், ஆகமம், ஆசாரம் எல்லாம் ரொம்பவும் க்ஷீணமாகப் போயிருக்கிற இந்த நாளிலும் நம் மத அம்சமாக ஏதாவது ஒன்றாவது க்ஷீணிக்காமல், தினந்தினம் விருத்தியாகி வருகிறது என்றால் அது ராம பஜனைதான். இன்று நம் மதத்துக்காக ஒவ்வோர் ஊரிலும் இருக்கிற ஸத்சங்கமே பஜனைக் கோஷ்டிதான். அந்த மட்டும் சந்தோஷம்.


பகவானிடம் பக்தியை விருத்தி செய்வதினால் பகவானின் நாம் சங்கீர்த்தனமும், பகவத் குணங்களைப் பாடுவதும் முக்கியமான ஸ்தானம் பெற்றுள்ளது.

பகவத்நாம போதேந்திரர்கள், ஸனாதந்த ஸ்வரூபியான பரமாத்மா ஜகத்தின் க்ஷேமத்தைக் கருதித் தனிப்பெரும் கருணை கூர்ந்து விஷ்ணு, பரமேஷ்வரன் முதலிய ரூபங்களை எடுத்துக் கொண்டான். உலகை உய்விக்க அந்த மூர்த்திகள் மட்டும் போதாது என்று கருதி, ஹரி சிவ, முதலிய நாமங்களாகவும் ஆகி, அவற்றில் எப்போதும் விழித்துக் கொண்டிருக்கிறான் என்கிறார். அதாவது, நாமங்கள் வெறும் பெயர் மட்டுமில்லை. மூர்த்தியைப் போல அவையும் ஸாஷாத் பகவானே. பகவானுக்கு உள்ள அத்தனை சக்தியும் நாமத்துக்கு உண்டு.


இவ்வாறு நாம சங்கீர்த்தத்தின் மூலம் பகவத் ஸ்வரூபத்தை சாஷாத்காரம் செய்த புண்ணிய புருஷர்களின் முகாரவிந்தத்திலிருந்து உற்பத்தி யான புனித கானங்களைப் பாடுவதால், பாபம் விலகி, புண்ணியம் கை கூடுகிறது. ஜயதேவர், தீர்த்த நாராயணர், ராமதாஸர், புரந்தர தாஸர், தியாகப்பிரம்மம், ஸதாசிவப் பிரம்மேந்திராள் ஆகியோரின் கீதங்கள், தமிழ்ப் பாடல்கள், ஹிந்தி, மகாராஷ்டிர பக்தி கீர்த்தனம் எல்லாம் மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள் வகுத்துத் தந்த பத்ததியான சம்பிரதாய பஜனையில் பாடப்படுகின்றன.

டோலோத்ஸவம், கொட்டனோத்ஸவம், வஸந்த கேளி என்றெல்லாம் பஜனையைப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடுவார்கள். கஷ்டமான சாதனையாக இல்லாமல், ஆனந்தமாக ஆடிப் பாடிக்கொண்டு பகவதநுபவத்தில் இருப்பது இதெல்லாம் வழிகள். பாகவதாதி சாஸ்திரங்களிலேயே, எந்தச் சிரமமான சாதனையும் செய்யச் சக்தியும் சௌகரியமும் இல்லாத கலிகாலத்தில், நாம் ஸங்கீர்தனம்தான் மோக்ஷ உபாயம் என்று சொல்லியிருக்கிறது. கலௌ ஸங்கீர்த்ய கேசவம்.


பலர் சேர்ந்து பண்ணுகிற பஜனை ஒருபுறம் இருக்கட்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள அனைவரும் மாலை வேளைகளில் வீட்டிலேயே ஒரு பத்து நிமிஷமாவது பகவத் நாமங்களைப் பாடி பஜனை செய்ய வேண்டும். இதில் காரிய சாத்தியமில்லாத சிரமம் எதுவும் இல்லை. குடும்பத்தினர் எல்லோரும் பூஜை அறையில் - அல்லது பூஜைக்கென்று அறை இல்லாவிட்டால், ஒரு குத்து விளக்கை ஏற்றி வைத்து அதன் முன் உட்கார்ந்து கீர்த்தனங்களைப் பாட வேண்டும். நாமாவளிகளை கானம் செய்ய வேண்டும்.



அவரவர்களும் தங்களுக்குரிய நித்ய கர்மாநுஷ்டானங்களை விடாமல் செய்துவிட்டு, அதோடு பஜனையும் செய்ய வேண்டும். பகவானைப் பாடுவதற்கு வெட்கமே வேண்டாம். கருணையே உருவான கடவுளின் நாமத்தைச் சொல்வதில் வெட்கத்துக்கு ஏது இடம்? பெரிய சங்கீத ஞானம், ராக பாவம், சாரீர வசதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பக்தி பாவனைத்தான் முக்கியம்.


ஏதேதோ விளையாட்டுகளில் திரிந்துகொண்டிருக்கிற குழந்தை அம்மாவின் நினைப்பு வந்ததும், அவளிடம் வந்து, அம்மா அம்மா என்று கத்துகிறதல்லவா? அதில் வெட்கமோ, சங்கீத அழகோ இல்லை. லோக மாதாவான பரமாத்மாவை லௌகிக வியாபாரங்களிடையே சிறிது நேரமாவது நினைத்து இப்படியே ராமா, கிருஷ்ணா, சிவா, அம்பா என்று கத்த வேண்டும். இந்தப் பழக்கம் ரொம்பவும் நல்லது. நம் நித்திய க்ஷேமத்தையும், ஆனந்தத்தையும் பெருக்கவல்ல பெரிய Gift இது.

??? ????? - ?? ?????
 
ஸ்ரீகாஞ்சிகாமகோடிபீடம் ஸ்ரீமடம் கும்ப&am

ஸ்ரீகாஞ்சிகாமகோடிபீடம் ஸ்ரீமடம் கும்பகோணம்
கிளை மடத்தின் வரலாற்றுச் சுருக்கம்.

இன்னும் பல அரிய தகவல்கள் அடங்கிய பொக்கிஷம் இந்த வலைத்தளம்.

http://sankaramathas.blogspot.in/
 
காஞ்சி சங்கர மடம்-காசி

காஞ்சி சங்கர மடம்-காசி

அனுமான் காட் பகுதியில் காஞ்சி சங்கர மடம் உள்ளது. தமிழ்ர்கள் நிறைந்த பகுதி. தமிழ் அய்யர் அதிகம் வசிக்கும் பகுதி காசி யாத்திரை வருபவர்கள் தங்குவதற்க்காக மடத்தில் அறைகள் கட்டியுள்ளார்கள் குடும்பத்தாரோடு தங்குவதற்கு செளகர்யமாக கட்டப்பட்டுள்ளது. காசி ரயில் நிலையத்திலிருந்து நேராக சங்கர மடம் சென்று தங்கினோம் அணைத்து வசதிகளுடன் ஆச்சர்யாள் மடத்திலேயே தங்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ஸ்ரீ சங்கர மடத்தின் முகவரி

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சர்யா சுவாமிகளின் மடம் மேனேஜர் V S சுப்ரமணியம் B.4/7 New #4/22 ஹனுமான் காட் வாரனாசி 221001

போன் 0542-2277915-2276932-2277758-09335960320-09415228721

E mail [email protected] & [email protected]

நமது பரமாச்சரியார் பரிவாரங்களுடன் ஊர் ஊராகச் சென்ற வண்ணம் 1922-ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தை அடைந்து வழிபாடுசெய்து அங்கிருந்து கடல் மணலை எடுத்துக்கொண்டார். இம்மணலை அவர்செல்லுமிடமெல்லாம் கொண்டு சென்று பூஜையில் வைத்திருந்து பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து 1934-ஆம் ஆண்டு பிரயாகையில் கங்கையில் கரைத்துவிட்டார்.


Source: Sage of Kanchi

Varagooran Nrayanan
 
வேதம் பிரும்ம வித்தை!

வேதம் பிரும்ம வித்தை!



ramar_periyava.jpg




ரிக்வேத கனபாடிகள் ஒருவர் தன்னுடைய ஐந்து மாணவர்களுடன் பெரியவாளிடம் வந்தார். கற்றுக்கொண்ட பாடத்தில் ஒரு பகுதியைப் பெரியவா முன்னிலையில் சொல்லிகாட்டச் சொன்னார்.


ஸ்வரம், அபஸ்வரமாக இருந்தது. அத்துடன் மாணவர்களுக்கு சம்ஸ்க்ருத ஞானம் குறைவாக இருந்தது..
“குழந்தைகளுக்கு வேதம் கற்றுக் கொடுப்பது ரொம்பச் சிரமம். இங்கிலீஷ் படிப்புக்கு அனுப்பிவிடலாம்” என்றார் கனபாடிகள்.


பெரியவா அவரை உட்காரச் சொன்னார்கள்.


“கனபாடிகளே, உலகத்திலே எல்லாக் காரியங்களும் சிரமம் தான்! ..சமையல் செய்வது சிரமம். அடுப்பு மூட்டணும் . உலை வைக்கணும். கஞ்சி வடிககணும் . கறிகாய் நறுக்கணும். வேக வைக்கணும்..
“துணி தோய்ப்பது சிரமம் – தோய்த்து, அலசி , பிழிந்து, உதறி உலர்த்தணும் . எல்லாமே சிரமம்.
“வரகூர் உறியடி உற்சவம்னு கேள்விப் பட்டிருப்பேளே ? சறுக்கு மரம் ஏறி மேலே கட்டியிருக்கும் மூட்டையை எடுக்கணும். சறுக்கு மரத்திலே கத்தாழை- விளக்கெண்ணை பூசியிருப்பா. ஒரே வழவழப்பா ஏறவே முடியாது.. அது தவிர , பீச்சாங்குழல் மூலம் தண்ணீர் அடிப்பார்கள் ! ரொம்பச் சிரமம்.
“ஆனாலும் வழுக்கு மரத்தில் ஏறி வெற்றி பெறணும்னு எக்கச்சக்கமா போட்டா போட்டி! கடைசியிலே யாரோ ஒருவர் உறியடி செய்து ஜெயிப்பார்.


“கொஞ்சம் பிரயாசை எடுத்து முயற்சி பண்ணினால் குழந்தைகள் நன்றாக வேதம் கற்றுக் கொள்வார்கள். வேதம் பிரும்ம வித்தை. வேதம் படிக்கக் குழந்தைகள் வருவதே அபூர்வம். இருக்கிற குழந்தைகளையும் போகச் சொல்லிட்டா, எப்படி ?”


ரிக்வேத வாத்தியாருக்குப் பெரியவாளுடைய அறிவுரை உயர்ந்ததாகப் பட்டாசு. தன் சிரமத்தைப் பாராட்டாமல் முழு ஆர்வத்துடன் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்.
ஐந்து ஆண்டுகள் கழிந்தன. வேத ரக்ஷண நிதி டிரஸ்ட் நடத்தும் பரீட்சைக்கு ஐந்து மாணவர்களும் வந்து பரீக்ஷை கொடுத்தார்கள்.


ரிக்வேத பரீட்சையில் ஐந்து பேருமே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்கள். அதற்கான கணிசமான சம்பாவனையையும் பெற்றார்கள்.


ஆசிரியரின் முயற்சி வீண் போகவில்லை என்பதை சிஷ்யர்கள் நிரூபித்தார்கள்.
பெரியவாளுடைய வாக்குப் பலிதமாகாமல் போகுமா ?

????? ??????? ??????! «
 
நந்தி

நந்தி





தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும். `நந்தி’ என்ற சொல்லுக்கு ஆனந்தமாக இருப்பவன் என்று பொருள். பிறரை ஆனந்தப்படுத்துபவன் என்றும் பொருள் கொள்ளலாம். `நந்தி’ என்ற வார்த்தையுடன் `ஆ’ சேரும்போது `ஆநந்தி’ என்ற பொருள் தருகிறது.



`நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு! என்று சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் அது. ஆக, நந்தியம் பெருமான் தன்னை வணங்குபவர்க்கு ஆனந்தத்தைத் தருபவர் ஆவார். நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பி விட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும்.


சிவபெருமான் இடத்தில் இருந்து சிவாகமங்களைத் தெளிந்து நமக்கு அருளினார் நந்திதேவர். ஆதலால் சைவ சமயத்திற்கு முதல் குருவாக விளங்குகிறார். நந்திக்கு `அதிகாரநந்தி’ என்ற பெயரும் உண்டு. இந்த பிரபஞ்சத்தின் நாயகனான சிவபெருமான் நந்திக்கு அத்தனை அதிகாரங்களையும் வழங்கியுள்ளார்.


ஆலயங்களை காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது. இதன் அடையாளமாகத்தான் கோவில்களில் சுற்று சுவர்களில் நந்தியின் உருவை அமைத்துள்ளார். நந்திதேவர் சித்தர்கள், முனிவர்க்கெல்லாம் முதல் குருவாக விளங்குகிறார். சிவ, சக்தி இருவர் முன்னிலையிலும் இருப்பவர் நந்திதேவர், சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறு யாராலும் இயலாது.


இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும். நந்திதேவரின் உத்தரவு பெற்ற பின்பே, சிவபெருமானின் ஆலயத்தினுள் நாம் பிரவேசிக்க வேண்டும் என்கிறது வேதம். இதன் காரணத்தை பசவ புராணம் கூறுகிறது. சிவபெருமான் ஒரு தடவை நாரதரிடம் நான் விரைவில் பூலோகம் செல்வேன்.


தர்மத்தைக் காத்து மீண்டும் சைவம் தழைக்கச் செய்வேன். நான் வரும் வரையில் கயிலாயத்தில் நந்தி தேவன் எனது இடத்தில் இருப்பான் என்றார். அனைவரின் முகத்திலும் ஆச்சரியம் விரிந்தது. அதைப் புரிந்து கொண்ட சிவபெருமான், நந்திதேவன் பக்தியில் என்னைப் போன்றவன். ஆதியில் அவதரித்தவன்.


நானே நந்திதேவன். நந்தி தர்மமே வடிவானவன். சிவாய நம என்ற பஞ்சாட்ச மந்திரத்தின் உருவகம் நந்தி தேவனே. எப்போதும் என்னைச் சுமந்து நிற்கும் நந்திதேவன் எனக்கு ஈடாகத் திகழ்பவன்.


நந்திதேவனை வழிபடுபவர்களுக்குச் சிறந்த பக்தியும், நற்குணங்களுடைய குழந்தைச், செல்வங்களும், சகல காரிய சித்தியும் உயர்ந்த பதவிகளும், நல்ல எண்ணங்களும், நல்லொழுக்கமும் கிடைக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக முக்தியெனும் வீடுபேற்றையும் அவர்கள் அடைவர் என்று நந்திதேவரின் பெருமைகளை எடுத்துக் கூறினார்சிவபெருமான்

தனக்கு இணையாக நந்திதேவரைக் கூறி உள்ளதால் சிவபெருமானை வழிபடுவதற்கு முன் நந்தி தேவரை வணங்க வேண்டும். அதனால், தன்னை வணங்குபவருக்கு மட்டுமல்ல, நந்திதேவரை வணங்கியவருக்கும் மோட்ச சுகத்தையும் மக்கட் பேற்றையும், பக்தியையும், ஊக்கத்தையும், காரிய சித்தியையும், எல்லா வரங்களையும் அளித்து வருகிறார் சிவபெருமான். *






????? «
 
பிள்ளையார் சுழி!

மகாபாரதம் முழுக்கதையையும் வியாசரின் மனதில் தோன்றி நிலைத்துவிட்டது!

லட்சத்துக்கும் மேல் ஸ்லோகங்களைக் கொண்ட அந்தக் காவியத்தை எப்படி எழுதுவது?

அவ்வளவையும் எழுதுவது என்பது மிகவும் சிரமமான காரியம்!
தேவலோகத்திலும் அதை எழுத யாரும் முன்வரவில்லை!
செழுமையான கற்பனையோடு கூடிய அக்கதையை யார் எழுதுவது?

மிகவும் கடினமான அக்காரியத்தை தான் முடித்துத் தருவதாக விநாயகர் ஒப்புக்கொண்டார், ஒரு நிபந்தனையுடன்!

""என்ன அது?'' என்று வியாசர் கேட்டார்.

""நடுவில் நிறுத்தக்கூடாது... அப்படி நிறுத்தினால் நான் எழுந்து போய்விடுவேன்'' என்றார் விநாயகர்.

வியாசரும் ஒரு நிபந்தனை விதித்தார். ஸ்லோகங்களைப் புரிந்துகொண்டு எழுதவேண்டும் என்பதே அது!

இந்தப் பெரிய காரியத்திற்காக, தியாக உணர்வுடன் தனது தந்தத்தையே உடைத்து எழுதத் தயாராகி விட்டார் விநாயகர்! (யானைக்குத் தந்தம் அழகல்லவா?)

புரிந்துகொள்ள சிக்கலாக உள்ள இடங்களில் விநாயகர் சற்று யோசிக்க, வியாசர் பல ஸ்லோகங்களை மனனம் செய்து தயாராகி விடுவார்!

இப்படித்தான் முழு மகாபாரதமும் வெற்றிகரமாக எழுதப்பட்டது!

எனவேதான் இப்பொழுதும் எதை எழுதுவதென்றாலும் தாளின் உச்சியில் "பிள்ளையார் சுழி' போடுகிறோம்!




Source: Sage of Kanchi

Varagooran Narayanab
 
அம்பாள் பற்றி ருசிகர தகவல் - மஹா பெரியவா

அம்பாள் பற்றி ருசிகர தகவல் - மஹா பெரியவா

நாம் யாருமே அம்பாளை பார்த்ததில்லை. அம்பாளின் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருமாதிரி இருக்கிறதே? எல்லாமே அழகாகத்தான் இருக்கிறது. வைரத்தை எந்த பக்கம் பார்த்தாலும் ''டால்'' அடிக்கிறமாதிரி.

மஹா பெரியவா சில அற்புதமான சேதிகளை சொல்லியிருக்கிறதிலே கொஞ்சம் சுருக்கி, சுலபமா விண்டு தருகிறேன்.

''அம்பாளுடைய ரூபம் எப்படி இருக்கும்னு உருவகப்படுத்த ஒரு ஐடியா. ஒரு நூறு பேருக்கு அன்னதானம் செய்கிற ஒரு நல்ல ஜீவனின் முகத்தைப் பார்த்தால், அதில் எத்தனை அன்பு சொட்டுகிறது? அன்னதானம் செய்து, பலர் வயிறாரச் சாப்பிட்டு சந்தோஷப்படுகிறபோது, அந்த அன்னதாதாவின் சந்தோஷத்தைப் பார்க்காதவா யோசனை பண்ணிப்பாருங்கோ அந்த சந்தோஷத்தில்அவன் முகத்தில் எவ்வளவு அன்பு சொட்டுகிறது. சாப்பிடுகிறவனைவிட சாப்பாடு போட்டவனுக்குத்தான் ஆனந்தம் அதிகம் இருக்கிறது.


நூறு பேர் வேண்டாம். முடியாது நம்மால். ஒரு பத்துபேருக்காவது போடறமா? ஒரே ஒரு வேளை சோறு போடுகிறவன் கிட்டே யே இத்தனை அன்பும் ஆனந்தமும் இருக்கிறதே. மகா பாபங்களைச் செய்து, காரியத்தில் செய்யாவிட்டாலும் மனஸினால் மகாபாபங்களை , விடாமல் நினைத்து, ஒரு வேளை சோறு கிடைக்கக்கூட யோக்கியதை இல்லாத நம் இத்தனை பேருக்கும் கோடாநு கோடி ஜீவன்களுக்கும், கல்பகோடி காலமாக சோறு போட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தி அன்ன பூரணேசுவரியான அம்பாள்தான். அவள் முகம் எப்படி ஜீவனோட சந்தோஷத்தில் கொப்புளிக்கும்?


அவளுடைய அன்பையும், அதில் உருவாகும் ஆனந்த ஸ்வரூபத்தையும் நம்மால் கற்பனை பண்ணக்கூட முடியாது எங்கே நான் எழுதறது? அம்பாள் ஸெளந்தரியஸ்வரூபம் ஆச்சே. அதால் தானே ஸெளந்தரிய லஹரி என்றே ஆச்சாரியாள் ஸ்தோத்திரம்பாடியிருக்கிறார்.. இத்தனை ஸெளந்தரியம், லாவண்யம் அவளுக்கு எப்படி வந்தது? அன்புதான் அழகாகிறது. காருண்யம்தான் லாவண்யம். பாக்கி சரீர அழகு ஒர் அழகல்ல. கொஞ்சம் கோபம் வந்தால், துளி ஜுரம் வந்தால், சரீர அழகு தங்குமா?, தாங்குமா?


அம்பாளோ நிரந்தரமான கருணாமூர்த்தியாக எப்போதும் லாவண்யமாக இருக்கிறாள். எந்த பக்தருக்கு எந்த ரூபத்தில்மனசு ஈடுபடுமோ, அந்த ரூபத்தில் வந்து அருள் புரிய பல ரூபங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாள். ராஜராஜேசுவரி, புவனேசுவரி, துர்க்கை, காளி என்று இப்படி ஸெளம்யமாகவும் உக்ரமாகவும் பல தினுசு. வேறு வேறு ரூபம்.


ஒவ்வொரு ரூபத்தையும் பிரத்யக்ஷமாகத் தரிசனம் செய்ய ஒவ்வொரு மந்திரம் இருக்கிறது.

மந்திரம் என்பது ஒரு சப்தக் கோவை. அக்ஷரங்களின் கூட்டம். பல வடிவங்களில் இருக்கிற அம்பாளே பல சப்தங்களாகவும், அக்ஷரங்களாகவும் இருக்கிறாள். காளிதாஸர் அவளை ''ஸர்வ வாணாத்மிகே, ஸர்வ மந்த்ராத்மிகே'' என்று 'சியாமளா தண்டகத்தில்'ஸ்துதி செய்கிறார். வர்ணம் = நிறம் மட்டும் அல்ல. ''அக்ஷரம்'' என்றும் அர்த்தம். ஒலி வடிவான அக்ஷரங்களும், ஒளி வடிவமான ரூபங்களும் ஒரே மூலத்திலிருந்து வந்தவைதான். அவை ஒன்றுக்கொன்று நிரம்ப நெருக்கமான சம்பந்தம் உடையவை. ஸயன்ஸ் நிபுணர்கள்கூட இந்த ஒற்றுமையைச் சொல்கிறார்கள். ஜலக்கரையில் பலவிதமான சப்தங்களை எழுப்பிப் பார்த்தார்கள். அப்போது அவற்றின் அதிர்வுகளைப் (vibration) பொறுத்து ஜலத்தின் மேலே மிதக்கிற லேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்தன. நாதத்துக்கே ரூபம் கொடுக்கற சக்தி இருக்கிறது என்று இதனால் தெரிகிறது.

ஒரு பெரிய அலை மடிந்து மடிந்து சிறு சிறு அலைகளாகி அடங்குகிற மாதிரிச் சில சப்தங்கள் இருக்கின்றன. இதை வீசிதரங்கம் என்பார்கள். ஒரே கொப்புளிப்பில் பலவாகத் தெறிப்பதுபோல் விழுகிற சப்தங்களை முகுளம் என்பார்கள். இப்படிப் பலவகைப்பட்ட சப்தங்களையெல்லாம் ஐம்பத்தொரு அக்ஷரங்களாகப் பிரித்திருக்கிறார்கள். இவற்றுக்குப் பெயர் மாத்ருகா என்பது .மாத்ரு என்றால் தாயார் என்பது தெரியுமே. சப்தமாகவும், எழுத்தாகவும் அம்பாள் இருக்கிறாள். இவற்றில் சில சப்தக் கோவைகளை விடாமல் ஜபிக்கும்போது, அவற்றுக்குறிய ரூபங்களும் பிரத்யக்ஷமாகின்றன. இப்படிப்பட்ட சப்தக் கோவைகளைத்தான் மந்திரம் என்கிறோம்.

மந்திரமே அம்பாளின் ஸ்வரூபம்தான். கை கால் முதலான அவயங்களோடு ஆயுதங்களைத் தரித்த வடிவங்களைப் போலவே எல்லா மந்திரங்களும் அவள் வடிவம்தான். அதோடுகூட, இந்த மந்திரங்களை ஒருமுகப்பட்ட சித்தத்தோடு தீவிரமாக ஜபம் செய்தால், அவளே அந்தந்த மந்திரத்துக்குரிய ரூபத்தில், சரணாகதி அவயவங்களுடனும் ஆயுதங்களுடனும் முத்திரைகள் முதலியவற்றுடனும் தரிசனம் தருவாள். இந்த மந்திரங்கள் எல்லாவற்றுக்கும் மூலம் பிரணவம்.(''ஓம்'') அதிலிருந்து இந்த நாம, ரூபப் பிரபஞ்ஜம் முழுக்க வந்தது. நாத ஸ்வரூபிணியான அம்பாளே ஒங்காரமாகிய அந்தப் பிரணவமும் ஆவாள். அ,உ,ம மூன்றும் சேர்ந்து ஒம் என்று ஆகிறது.


அ - சிருஷ்டி; உ - பரிபாலனம்; ம - சம்ஹாரம் என்பார்கள். அதனால் முத்தொழிலும் செய்யும் மூல சக்தியே பிரணவம். இதையே அம்பாளின் தொழில்களில் விசேஷமான கருணையைக்காட்டும் பரிபாலனத்தில் தொடங்கினால், உ - ம - அ - என்றாகும். அதுதான் உமா என்பது. உபநிஷதமும் அவளை உமாஹைமவதி என்றே சொல்கிறது.

Source: Sage of Kanchi

Surya Narayan
 
கஞ்சி குடிக்காத காமாக்ஷி

கஞ்சி குடிக்காத காமாக்ஷி




காஞ்சீபுர மத்தியில் ராணியாக இருக்கிற அம்பாளையும் கஞ்சியையும் சம்பந்தப்படுத்தி இரு சொல் அலங்காரக் கவிதை ஒன்று இருக்கிறது.



மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அதற்கு அர்த்தம் என்னவென்றால், காமாக்ஷியம்பிகை கஞ்சி குடிக்க மாட்டாள். ஏதோ கம்பைப் பொங்கிச் சோறாகப் போட்டாலும் சாப்பிட மாட்டாள். காய்கறி, அவியல், கூட்டு, ஊறுகாய் என்று ஏதாவது வியஞ்ஜனங்களையாவது இஷ்டப்பட்டு சாப்பிடுவாளா என்றால் அதுவும் மாட்டாள்.


அஞ்சு தலைப் பாம்புக்கு (பாம்புக்கு மரியாதை கொடுத்து ‘பாம்பார்'என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் செய்யுளில் ‘அரவம்' என்றில்லாமல் 'அரவார்'என்று வருகிறது. இப்படிப்பட்ட ஐந்துதலைப் பாம்புக்கு அம்பாள்) ஆறாவது தலையாக மானஸிகமாக ஆகிறாளாம்!


கஞ்சி குடியாளே கம்பஞ்சோ றுண்ணாளே
வெஞ்சினங்களன்றும் விரும்பாளே - நெஞ்சுதனில்
அஞ்சுதலை யரவாருக் (கு) ஆறுதலை யாவாளே

கஞ்சமுகக் காமாட்சி காண்


கஞ்ச முகம் என்றால் தாமரைப் பூப்போலவுள்ள முகம். அம்பாள் முகம் அப்படி இருக்கிறது. கஞ்சி குடிக்காதவள், எதுவும் சாப்பிடாமல் கஞ்சத்தனமாயிருக்கிறாள் என்கிற மாதிரியும் த்வனிக்கிறது!
சரி, அம்பாளைப் பற்றி இப்படி ஏதோ அல்ப விஷயங்களைச் சொல்லி அப்புறம் ஆறுதலைப் பாம்பு என்று விஷமமாக முடித்தால் என்ன அர்த்தம்? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே புரிந்துவிடும் -

அதாவது.


‘கஞ்சி குடியாள்'என்றால் காஞ்சீபுரத்தில் குடி கொண்டிருப்பவள் என்று அர்த்தம். ‘கம்பஞ்சோறு உண்ணாள்'என்றால் ஏகம்பன் என்றும் கம்பன் என்றும் சொல்லப்படும் ஏகாம்ப ரநாதனுக்கு நைவேத்யமாகிற சோற்றை உண்ணாதவள் என்று அர்த்தம்.


சிவாலயங்களில் முதலில் ஈஸ்வரனுக்கு நைவேத்யம் பண்ணிவிட்டு அப்புறம் அதையேதான் அவன் பிரஸாதமாக அம்பாள் முதலான மற்ற எல்லா தெய்வங்களுக்கும் நைவேத்யம் செய்வார்கள்.


மதுரையிலே மட்டும் மீனாக்ஷிக்கு முதலில் செய்துவிட்டு அப்புறந்தான் ஸுந்தரேஸ்வரர் உள்பட மற்ற எல்லோருக்கும். காஞ்சிபுரத்திலே நூற்றெட்டு சிவாலயங்கள் இருந்தபோதிலும் ஒன்றிலாவது அம்பாள் ஸந்நதியில்லாமல் இல்லை.


அந்தப் பராசக்தி எல்லா மூர்த்திகளுக்கும் மேற்பட்ட பரப்ரஹ்ம ஸ்வரூபிணியாக காமாக்ஷி என்று தனிக்கோயிலில் வாஸம் செய்கிறாள். அங்கே அவளுக்கென்றே தயார் செய்கிற நைவேத்யம்தான் அவளுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. ஏகாம்பரேச்வரர் நைவேத்யம் அவளுக்கு வருவதில்லை. இதனாலே அவள் “கம்பஞ்சோறுண்ணாளே”


அவள் பரம ப்ரேமையே ஒரு ரூபமாக ஆனவள். நாம் பண்ணுகின்ற தப்புகளுக்கு, அபசாரங்களுக்கு நம் மேல் அவளுக்கு எத்தனையோ கோபம் கோபமாக வர வேண்டும். ஆனால் அவளுக்குக் கோபித்துக்கொள்வது என்றால் கொஞ்சங்கூடப் பிடிப்பதில்லை.


'வெஞ்சினங்கள் ஒன்றும் விரும்பாளே' என்றது இப்படி வெம்மையாக, அதாவது ரொம்ப உஷ்ணமாக, சினம் கொள்வதில் அவளுக்கு இஷ்டமே இல்லை என்று, அவளுடைய தயையை, க்ஷமையை (மன்னித்தருளும் மனப்பான்மையை) தெரிவிக்கிற வாசகமாக ஆகிறது. ‘வ்யஞ்ஜனம் 'என்பதை தமிழ்ப் பாட்டில் 'வெஞ்சினம்' என்று சொல்லலாம்.


அப்படிச் சொல்லும்போது, கஞ்சி காமாக்ஷிக்கு வியஞ்ஜனமில்லாமல் சுத்தான்னம் மட்டும் நிவேதிக்க வேண்டுமென்று இருக்கிற அபிப்பிராயத்தை இந்தப் பாட்டு சொல்லுவதாகவும் ஆகும். அரவார் என்றால் ஹரனான சிவனைச் சேர்ந்த அடியார் என்று அர்த்தம். சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டு.
அதனால் அவர் ‘அஞ்சுதலை அரன்' ஆகிறார். அவரை மனஸிலே வைத்து உபாஸிக்கிறவர்கள் ‘நெஞ்சுதனில் அஞ்சுதலை யரவார்'. ‘ஆறுதலையாவாள்' என்றால் 'ஆறுதலை அளிக்கிறவள்', “ஆறுதலாக இருப்பவள்”என்று அர்த்தம். நெஞ்சத்தில் ஈஸ்வரனை உபாசிக்கிறவர்களுக்கு சம்ஸாரக் கஷ்டம் தெரியாமல் ஆறுதலாக இருப்பவள் அம்பாள்.


‘நெஞ்சுதனில் அஞ்சுதலை அறிவார்க்கு' என்கிற பாடத்தை வைத்துக்கொண்டால் மனசிலே பயத்தை உடையவருக்கு அம்பாள் அதைப் போக்கி ஆறுதல் தருகிறாள் என்று ஆகும்.


தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)


????? ????????? ????????? - ?? ?????
 
மிகச் சிறந்த பரிகாரம்/ஆசீர்வாதம்

மிகச் சிறந்த பரிகாரம்/ஆசீர்வாதம்

ஒரு நாள் ஒரு வயதான பெண்மணி பெரியவாளிடம் வந்து, " என் பையன் காலேஜுக்குப் போய் விட்டு திரும்பும் போது, மின் ரயிலில் அடிபட்டு இறந்து விட்டான். என்ன பாபம் பண்ணினானோ தெரியலை! அவன் அல்பாயுசுல போய்விட்டதனால பேயா, பிசாசா அவன் அலையக் கூடாது.அதற்கு ஏதாவது ஹோமம், பரிகாரம் செய்ய வேண்டுமென எல்லோரும் சொல்றாங்க. பெரியவா என்ன சொல்றாரோ அதன்படிதான் செய்யணும்னு நான் ஆசைப்படறேன். பெரியவா ஏதாவது சொல்லணும்"னு சொல்லிவிட்டு அழுதாள்.

பெரியவர் சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு, "அழாதே அம்மா !

உங்க கிராமத்துல வயல்ல வேலை செய்யற குடியானவ ஜனங்களுக்கு வெயிலில் குடிக்க மோர் குடு, உன் பிள்ளை நல்ல கதிக்குப் போயிடுவான்,ஹோமம், பரிகாரம் அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்" என்றார். இதமான அறிவுரை இது என்று கூடியிருந்தவர்கள் பிரமித்துப் போயினர். வயிறு குளிர்ந்து வாழ்த்துவது ஒன்றுதான் மிகப் பெரிய ஆசீர்வாதம் என்பது புரிந்தது



Sage of Kanchi

Raghunathan Chandrasekaran
 
Kamakoti Mutt Heads from Originator :

Kamakoti Mutt Heads from Originator : -
Chronological list of Heads of the Matam, according to the mutt official account.

1. Sri Adi Sankara Bhagavatpada
2. Sri Suresvaracharya
3. Sri Sarvajnatman
4. Sri Sathyabodhendra Saraswati
5. Sri Jnanandendra Saraswati

6. Sri Suddhanandendra Saraswati
7. Sri Aanandaghanendra Saraswati
8. Sri Kaivalyanandayogendra Saraswati
9. Sri Krpa Sankarendra Saraswati
10. Sri Sureswara

11. Sri Sivananda Chidghanendra Saraswati
12. Sri Chandrasekharendra Saraswati
13. Sri Satchidghanendra Saraswati
14. Sri Vidyaghanendra Saraswati
15. Sri Gangadharendra Saraswati

16. Sri Ujjvala Sankarendra Saraswati
17. Sri Sadasivendra Saraswati
18. Sri Shankarananda Saraswati
19. Sri Martanda Vidyaghanendra Saraswati
20. Sri Muka Sankarendra Saraswati

21. Sri Chandrasekharendra Saraswati II
22. Sri Bodhendra Saraswati
23. Sri Satchisukhendra Saraswati
24. Sri Chitsukhendra Saraswati
25. Sri Satchidanandaghanendra Saraswati

26. Sri Prajnaghanendra Saraswati
27. Sri Chidvilasendra Saraswati
28. Sri Mahadeve11dra Saraswati I
29. Sri Purnabhodhendra Saraswati
30. Sri Bhodhendra Saraswati II

31. Sri Brahmanandaghanendra Saraswati
32. Sri Chidanandaghanendra Saraswati
33. Sri Satchidananda Saraswati
34. Sri Chandrasekharendra Saraswati III
35. Sri Chitsukhendra Saraswati

36. Sri Chitsukhanandendra Saraswati
37. Sri Vidyaghanendra Saraswati III
38. Sri Abhinava Sankarendra Saraswati
39. Sri Satchidvilaasendra Saraswati
40. Sri Mahadevendra Saraswati II

41. Sri Gangadharendra Saraswati II
42. Sri Brahmanandaghanendra Saraswati
43. Sri Anandaghanendra Saraswati
44. Sri Purnabhodhendra Saraswati II
45. Sri Paramasivendra Saraswati I

46. Sri Sandranandabhodhendra Saraswati
47. Sri Chandrasekharendra Saraswati IV
48. Sri Advaitanandabodhendra Saraswati
49. Sri Mahadevendra Saraswati III
50. Sri Chandrachudendra Saraswati I

51. Sri Kamachandrendra Saraswati
52. Sri Vidyateerthendra Saraswati (1297–1370)
53. Sri Sankaranandendra Saraswati (1370–1417)
54. Sri Purnananda Sadasivendra Saraswati (1417–1498)
55. Sri Vyasachala Mahadevendra Saraswati (1498–1507)

56. Sri Chandrachudhendra Saraswati II (1507–1524)
57. Sri Sarvajna Sadasiva Bhodhendra Saraswati (1524–1539)
58. Sri Paramasivendra Saraswati II (1539–1586)
59. Sri Atma Bodhendra Saraswati (1586–1638)
60. Sri Bodhendra Saraswathi (1638–1692)

61. Sri Advaitatma Prakasendra Saraswati (1692–1704)
62. Sri Mahadevendra Saraswati IV (1704–1746)
63. Sri ChandrasekharendraSaraswati V (1746–1783)
64. Sri Mahadevendra Saraswati V (1783–1813)
65. Sri Chandrasekharendra Saraswati VI (1813–1851)

66. Sri Sudarsana Mahadevendra Saraswati (1851–1891)
67. Sri Sri Chandrasekharendra Saraswati VII (1891 - February 7, 1907)
68. Sri Sri Mahadevendra Saraswathi V (February 7, 1907 - February 13, 1907)
69. Sri Chandrasekharendra Saraswati Swamigal
(February 13, 1907 - January 3,1994)
70. Sri Jayendra Saraswati Swamigal ( January 3 1994 to till date)

71. Sri Vijayendra Saraswati Swamigal ( Uttara Peethadhipati )




Source:Sage of Kanchi


Krishnamoorthi Balasubramanian
 
Mahaperiyava ‘s Grandfather Ganapathi Shastrigal.

Mahaperiyava ‘s Grandfather Ganapathi Shastrigal.


Ganapathi Shastrigal was well versed in Shastras and trained in Rig Veda at an early age. He was fluent in Tamil, Telugu, Kannada Maharashtram as well as being an able administrator. The 64th Acharya Swamy of Kamakoti Peetam, Sri Chandrashekarendra Saraswathi Swamigal, discovering his efficiency, appointed him as the Chief Executive Officer of the mutt in 1835. He occupied this post for more than 50 years during the tenure of 64th and 65th Peetathipathi.

The 64th Acharya Swamiji performed the kumbabhishekam of the Kancheepuram Kamakshi Amman temple in 1840 and the Thatanga prathishtai of Sri Akhilandeswari Amman in 1848.

Ganapathi Shastrigal helped to conduct these two events successfully and obtained Swamiji’s blessings. Moreover, he was instrumental in effecting important events that were beneficial to the mutt in the long term. Let’s take a look at one of the key events here: The 64th Acharya Swamy, Srimad Chandrashekarendra Saraswathi Swamigal camped in Thiruvanakaval between 1844 and 1848 at Kanchi Sankara mutt in North Sri Maha Devendra Saraswathi Swamigal, 65th Peetathipathi, in his purvashrama was Ganapathy Shastrigal’s brother’s son.

The ear rings of Sri Akhilandeswari, the residing deity of Thiruvanakaval, had to be repaired and prathishta of the ear rings had to be performed again. The temple officials and authorities requested Swamigal’s to accomplish these events and he accepted their invitation.

At that time, officials of Sringeri mutt filed a case at Tiruchirapalli Sathar Ameen court claiming that the right to perform Thatanga Prathishta to Ambal rested with their Acharya only. The judge presiding at that court rejected their claim on 17th October,

1846. The officials of Sringeri mutt filed an appeal at Tiruchi civil court. The civil court judge upheld the lower court's decision and rejected the appeal on January 12th 1848.

Sesha Josyar, the Agent of Sringeri mutt, then filed special appeal with Chennai Sadar Adalat court (then High Court) on 11-9-1848. The High court also rejected the case. But a petition was filed to review the decision and the petition was duly rejected. It is to be noted that all judges who ruled against the Sringeri Mutt were not Hindus.

After the conclusion of the above said event, the 64th Acharya conducted the Thatanga Prathishta of Ambal’s ear rings in the proper way after repairing the same, during the later part of the year 1848.

The Sri Mutt was facing difficult times financially after bearing the expenses of a long legal battle, the Thatanga Prathishta and also because the Acharya was stationed in one place. During that time, Acharya was said to have told Ganapathy Shastrigal, “I am getting old and the debts of the mutt are increasing. Taking these into consideration, I feel I should have let Sringeri Swamigal perform the Thatanga Prathishtai”.
Immediately following this event, Ganapathy Shastrigal was not found anywhere around the mutt for few days. When he returned, he was asked about his sudden trip.

Ganapathy Shastrigal had gone to visit Tanjore palace to find out about the feasibility of the Acharya's visit to the palace on the way from Thiruvanakaval to Kumbakonam. He was informed by the King and his officials that the visit was not possible.

It was decided that Swamigal and his followers would leave for Kumbakonam via Thiruvaiyar in a couple of days. On the appointed day, the caravan including carts belonging to Sri Mutt, elephants, horses, etc were traveling on the way to Thiruvaiyar. At the cross roads to go to Thiruvaiyar, the officials from Tanjore palace waylaid the mutt caravan and ordered them to turn towards Tanjore. Carts belonging to Sri Mutt were forced to travel towards Tanjore. After some time, when Acharya Swamy reached the Thiruvaiyar / Tanjore crossroads, he was received and welcomed with great respect by the Diwan, palace officials and Vedic scholars and taken to Tanjore.

Acharya Swamy was camped at Tanjore for more than a week. Special food was provided to everyone belonging to Sri Mutt as well as the general public at Shreyas Chathiram, Vennathangarai Chathiram and Rathri Chathiram.

On the night before His departure, Sri Swamy was taken on a procession on an elephant with the king’s son-in-law seated behind His Holiness. On another elephant, the king followed along with Ganapathy Shastrigal and the procession continued around all the four streets and thousands of people gathered to watch the glorious sight.

Next morning, when Sri Swamigal was about to leave the palace, He was requested to sit in an Asana under a tree. The king Shivaji Raja howered Sri Swamigal with small gold flowers which covered up to His Holiness’ neck. The sudden change in the king’s attitude that had previously rejected Ganapathi Shastrigal’s proposal of Sri Acharya’s Tanjore visit was revealed at that time.

Two days before Sri Swamiji left Thiruvanaikaval, the king had a dream where someone kept asking him how he could not do aradhana for Sri Acharyal and Chandramouliswarar Swamy when they were passing by to go to Thiruvaiyar that is so close to Tanjore. Immediately Shivajiraja made all arrangements including the stay and Kanagabhishekham.


Even though,Sri Swamigal was not keen on Keeping the gold from kanagabhishekham, Ganapathi Shastrigal wanted to use the money to obtain revenue yielding land for the mutt. After finally obtaining the consent of Sri Swamy, Ganapathy Shastrigal consulted Perunilakizhar Moopanar from Kapisthalam. He purchased 250 acres of fertile lands belonging to Anaikudi Ramaswamy Pillai at Karuppur, which is situated two miles from Tanjore.

The lands in this village are the most extensive and most profitable of all of the mutt’s properties. It is believed that the lands in Karuppur were purchased within a few years of the session of monastery by 65th Peetathipathi of Kanchi Kamakoti Peetam, Sri Maha Devendra Saraswathi Swamigal.

Source : Pujya Sri Mahaswamy Divya Charitram -Sri Sambamoorthi Shastrigal, Sri Kuppuswamy Iyer, “Sollin Selvan” P.N.Parasuraman



Source: Sage of Kanchi

Jambunathan Iyer
 
மகாபெரியவா சொல்லிக்கொடுக்கும் பஞ்சாயத&am

மகாபெரியவா சொல்லிக்கொடுக்கும் பஞ்சாயதன பூஜை


“”தென்புலத்தார், தெய்வம்..." என்று குறள் சொல்வதில் இரண்டாவதான தேவ காரியத்துக்கு வருகிறேன்.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஈசுவர பூஜை நடக்க வேண்டும்.சௌகரியப்பட்டவர்கள் விஸ்தாரமான பூஜைகளை எடுத்துக் கொண்டு செய்யலாம். சௌகரியமில்லாவிடில் சுருக்கமாக செய்தாலும் போதும். பத்தே நிமிஷம் போதும்.

ஆபீஸ்க்குப் போகிறவர்களும்
இப்படிச் சுருக்கமாகவாவது பூஜை என்ற ஒன்றை செய்ய
வேண்டும். எல்லாக் குடும்பத்திலும் ஒரு மணிச் சத்தம் கேட்க வேண்டும்.

ஈசுவரன், அம்பாள், விஷ்ணு, விநாயகர், சூரியன் இந்த ஐந்து பேருக்கும் மூர்த்தி வைத்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குப் பஞ்சாயதன பூஜை என்று பெயர்.

அங்கங்களோடு விக்கிரகங்களாக இல்லாமல் இந்த ஐந்தையும் இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து வஸ்துக்களில் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது சம்பிரதாயம். இவற்றில் ஈசுவரனுக்குரிய பாண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது. அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்வர்ணமுகி சிலா என்ற கல் ஆந்திராவில் ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது. அது தங்க ரேக் ஓடிய கல். விஷ்ணுவின் வடிவமான ஸாலக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் அகப்படுகிறது. சூரியனுக்குறிய ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது. விநாயகருக்கு உருவான சோணபத்ரக் கல், கங்கையிலே கலக்கிற சோணா (ஸோன் என்பார்கள்) நதியில் அகப்படுகிறது. ஆக, இந்த ஐந்தையும் ஒரிடத்தில் வைத்தால் இந்தத் தேசம் முழுவதையுமே ஒன்று சேர்த்து வைத்தது போல் ஆகும்.

இந்த ஐந்தில் ஒன்றுக்காவது கண், மூக்கு, காது இல்லை. எனவே, இடுக்குகளில் அழுக்கேறுவது கிடையாது. அபிஷேகம் செய்து துடைக்க நாழியே ஆகாது. எல்லாம் சின்னச் சின்ன கற்கள்.எல்லாமாகச் சேர்ந்தாலும் கொஞ்சம் இடத்தைத்தான் அடைத்துக் கொள்ளும். பெரிய பூஜா மண்டபம் கூடத் தேவையில்லை. ஒரு சின்ன சம்புடத்தில் போட்டு வைத்து விடலாம். ஆவாஹனம் பண்ணி, சந்தனம், குங்குமம் அக்ஷதை வைத்து, அர்ச்சனை செய்து நைவேத்தியம் காட்டலாம்.

வெளியூருக்குப் போதும்போதுகூடப் பத்து நிமிஷம் இப்படிப் பூஜை செய்வதில் சிரமமில்லை. வெளியூரில் அர்சனைக்குப் பூ கிடைக்குமா என்று கவலைப்பட வேண்டாம். வில்வத்தையும் துளசியையும் உலர்த்தி வைத்துக் கையில் எடுத்துப் போனால் ஈசுவரனையும் விஷ்ணுவையும் அதனாலேயே அர்ச்சிக்கலாம். மற்றவர்களுக்கு அக்ஷதையால் அர்ச்சனை செய்யலாம். நைவேத்தியத்துக்கு
சுத்தமான அன்னம் வெளியூர்களில் கிடைக்குமா என அலட்டிக்கொள்ள வேண்டாம். காய்ந்த திராட்சைப்பழத்தைக் கையோடு வைத்திருந்து நிவேதித்து விடலாம்.

ஐந்து மூர்த்திகள், துளஸி - வில்வ பத்திரங்கள், திராட்சை, அக்ஷதை இந்த எல்லாவற்றையுமே கையடக்கமாக ஒரே சம்புடத்தில் போட்டு வைத்துக் கொண்டு விடலாம்.

இந்த ஐந்து மூர்த்திகளுக்குச் செய்வது பஞ்சாயதன பூஜை எனப்படும். பிராசீனமாக

நம் தேசத்தில் இருந்து வந்த இந்தப் பத்ததியை சங்கர பகவதி பாதாள் புது ஜீவனோடு பிரகாசிக்கும் படியாகச் செய்தார். ஷண்மத ஸ்தாபனம் என்று வருகிறபோது இவற்றோடு சுப்பிரமணிய உபாஸனையையும் நிலை நாட்டினார். எனவே, மேலே சொன்ன ஐந்தோடு நாமும் ஒரு வேளை வைத்து வேலாயுதனை பூஜிக்கலாம். பூஜை என்பதற்காக பெரிய சிரமம் எதுவும் தேவையில்லை. மனசு இருந்தால் வெகு சுலபத்தில் எல்லோரும் எங்கேயிருந்தாலும் பூஜை செய்யலாம் என்பதற்காக இவ்வளவு சொன்னேன்.

வீட்டிலே இருந்தால் மகா நைவேத்தியம் எனப்படும் அன்னத்தை ஸ்வாமிக்குக் காட்ட வேண்டியது அவசியம். நாம் அநுபவிப்பதற்காகப் பிரபஞ்சம் முழுவதையும் ஈசுவரன் நமக்கென விட்டிருக்கிறார். பலவிதமான போக்கிய வஸ்துக்களை வெளியிலே உண்டாக்கி, அவற்றை அநுபவிக்கிற இந்திரியங்களை நம்மிடம் வைத்திருக்கிறார். எனவே, நாம் அநுபவிப்பதையெல்லாம் அவருக்குச் சமர்ப்பித்துவிட்டே உபயோகித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் அவருக்கே என்றா அன்னத்தைக் கொடுத்து விடுகின்றோம்?. வெறுமே அவரிடம் காட்டுகிறோம்!. பிறகு நாம்தான் புசிக்கிறோம்.

நைவேத்தியம் செய்தால் ஸ்வாமி எங்கே சாப்பிடுகிறார் என்று சிலர் கேலியாகக் கேட்கிறார்கள். நிவேதனம் என்றால் ஸ்வாமியைச் சாப்பிடவிடுவது என்று அர்த்தமேயில்லை. அவருக்கு சாப்பிட்டு ஒன்றும் ஆக வேண்டாம். நம் நினைவினை சுத்தமாக்கிக் கொள்ளத்தான் பூஜை முழுவதுமே தவிர, அவருக்கு இதனால் ஆவது ஒன்றுமில்லை. நிவேதயாமி என்றால் அறிவிக்கிறேன் என்று அர்த்தமே தவிர, உண்பிக்கிறேன் என்று அர்த்தமில்லை. அப்பனே, இந்த வேளைக்கு உன் கருணையில் இந்த அன்னத்தைக் கொடுத்திருக்கிறாய் என்று அவனுக்குத் தெரிவித்துவிட்டு அவனுடைய நினைவோடு உண்ண வேண்டும்.

அவன் அருள் இல்லாவிட்டால் இந்த அரிசி எப்படி விளையும். ஸயன்ஸ் நிபுணர் அரிசி வகைகளை ஆராய்ந்து பெரிய பெரிய புஸ்தகங்கள் எழுதலாம். ஆனால் அவரால் ஒரு மணி அரிசியைச் செய்யமுடியுமா???. செய்ற்கை அரிசி (Synthetic rice) என்று ஒன்றைச் செய்ய முடிந்தால்கூட இதற்கு மூலமாக கெமிகல்ஸ் ஏற்கனவே பகவத் சிருஷ்டியில் இருந்துதானே வந்தாக வேண்டும். எனவே மனிதன் செய்ததாகத் தோன்றும் எல்லாமும் கூட முடிவிலே ஈஸ்வரன் சிருஷ்டித்ததுதான். பரமேஸ்வரனால் கொடுக்கப்பட்டதை அவனுக்குக் காட்டாமலே நாம் அநுபவித்தால் திருடர்களாகின்றோம்.

எங்கும் இருக்கும் அவன், நாம் இருக்கச் சொல்லும் இடத்தில், நாம் கிரகிக்கும்படி நிற்பான். கல், மண், செம்பு முதலிய எந்த பிம்பத்தில் வைத்துக் கூப்பிட்டாலும் வருவான். அப்படிப்பட்ட யோக்கியதையும், கருணையும் அவனுக்கு நிச்சமாக இருக்கிறது. இல்லை என்றால் அப்படிப்பட்ட ஸ்வாமி நமக்கு வேண்டவே வேண்டாம்.
அவனைப் பூஜை என்று வைத்து ஒவ்வொரு குடும்பத்திலும் கூப்பிட்டு, அவனால் கொடுக்கப்பட்டதை உபயோகிக்கிறோம் என்று அன்றாடம் அறிவிக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால் ஈஸ்வரனுக்கு நிவேதனமாக அர்ப்பிக்கத்தக்கதைத்தவிர வேறெதையுமே நாம் உபயோகிக்கக்கூடாது என்ற பக்குவம் நாளடைவில் உண்டாகும். நல்லவர்களாவோம்





Source:Sage of Kanchi
Varagooran Narayanan

Guru's Blog: ?????????? ?????????????????? ???????? ????
 
அற்புதம் நிறைந்த பெண்மை

[h=3]அற்புதம் நிறைந்த பெண்மை[/h]


ஹிந்து மதத்திலும் வேதங்களிலும் புராணங்களிலும் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிக கௌரவம் தரப்பட்டிருக்கிறது, பெண்களை சாதாரண மனிதரைப்போல் பாவிக்காமல் தெய்வமாகவே கருதி கௌரவம் தரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது, வயதான பெண்களை மட்டுமல்லாமல் சிறுவயது பெண் குழந்தையைக் கூட “பாலா த்ரிபுரசுந்தரியாக – கன்னிகையாக” பூஜிக்கிறோம், வயதான பெண்களை “ஸுவாஸினிகளாக – அம்பாளாக” பாவித்து பூஜிக்கிறோம்,

ஒரு பெண் (மனைவி) அனுமதியின்றி ஆண் (கணவன்) செய்யும் தானம் தர்மம் போன்றவைகள் பலனைத்தராது, தனது பெற்றோருக்கு செய்யும் ச்ராத்தம் கூட பெண் (மனைவி) கூட இருந்தால்தான் (ஔபாஸன அக்னியில்) நடத்தமுடியும்.

“யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா:” என்பதாக எந்தக் குடும்பத்தில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, அங்குதான் அனைத்து தெய்வ பூஜைகளும் விரதங்களும் பலனைத்தரும் என்கிறார் மனு, ஆகவே ஆண்களைவிட பெண்களுக்குத்தான் சுலபமாக அனைத்து உரிமைகளும் நமது சாஸ்திரங்களில் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் சுவபாவமாகவே அபலைகள் (உடல் வலிமை குன்றியவர்கள்) என்பதால் அவர்களுக்கு அடிக்கடி ஓய்வு தரப்படுகிறது,

“அர்த்தானாம் ஆர்ஜநே சைவ வ்யயே சைவ நியோஜயேத்” என்று, சம்பாதிக்கும் பணத்தை சொத்தை பொருளை வீட்டுப் பெண்களிடம் மனைவியிடம் ஒப்படைத்து, அவர்கள் மூலமாக அவற்றை சிலவு ‘செய்ய’ச் செய்யவேண்டும் என்கிறது நீதி சாஸ்திரம். இப்படி பெண்களுக்கு அதிகமாக கௌரவம் தரக்காரணம் அவர்களுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும் தபஸ் (கற்பு) சக்திதான், ஆம்!

ஆண்கள் பலவிதமாக கஷ்டப்பட்டு பல சாதனைகள் செய்து சம்பாதிக்கும் “தபஸ்” சக்தியை இறைவன் பெண்களுக்கு இயற்கையாவே அமைத்திருக்கிறார், இந்த சக்திக்குத்தான் பதிவ்ரதா சக்தி எனப்பெயர், தனது நடவடிக்கையின் மூலமும் தனது ஆசாரத்தாலும், அன்பாலும் சிற்சில கட்டுப்பாடுகளாலும் இந்த சக்தியை அனைத்துப் பெண்களும் முன் காலத்தில் பாதுகாத்து வளர்த்து வந்தார்கள், அத்துடன் தேவையான நேரத்தில் அத்தகைய தனது பதிவ்ரதா சக்தியை உபயோகித்தும் வந்தார்கள்.

தனது கணவனை, கணவன் ஆசைபட்ட தாஸியின் வீட்டுக்கு கூடையில் சுமந்து சென்றாள் நளாயினீ என்னும் பதிவிரதை, ஆணி மாண்டவ்யர் சாபமிட்டார், விடிந்தால் உன் கணவனுக்கு மரணம் என்று, கணவனின் மரணத்தைத் தடுக்க வேறு வழி தெரியாத கற்புக்கரசி நளாயினி, சூர்யனே உதிக்கக் கூடாது என்று ஆணையிட்டாள், சூர்யனும் உதிக்கவில்லை, பிறகு தேவர்களின் ப்ரார்தனைக்கிணங்க மறுபடி சூர்யனை உதிக்கச்செய்தாள், ஸ்ரீமத் ராமாயணத்தில் ஓர் சம்பவம் ஸ்ரீ ராமரின் தர்மபத்னி சீதாதேவி ராவணணிடம் தனது கற்பின் பெருமைகளைக் கூறுகிறாள்.

|| அஸந்தேசாத் து ராமஸ்ய தபஸசாநு பாலநாத்
ந த்வாம் குர்மி தக்ரீவ பஸ்ம பஸ்மார்ஹ! தேஜஸா ||

ராவணா!, நீ செய்யும் கொடுமைகளுக்கு நான் நினைத்தால் உன்னை எனது கற்புக்கனலால் எரித்து சாம்பலாக்கிவிடுவேன், ஆனால் நான் செய்யமாட்டேன், ஏன் தெரியுமா!, எனது கணவர் எனக்கு (ஆபத்காலத்தில் உனது பதிவ்ரதா சக்தியை உபயோகித்திக்கொள் என்று) ஆணையிடவில்லை, அவர் சம்மதமின்றி நான் செய்ய மாட்டேன், ஆகவே நான் உன்னை விட்டுவிடுகிறேன் என்கிறாள், இதுதான் பதிவ்ரதா சக்தி.

கற்புத் தவறாத மங்கையர்க்கோர் மழை: பதிவ்ரதா சக்தியுடன் திகழும் மாதர்க்காக மாதம் ஒருமுறை மழை பெய்யும் என்கிறாள் ஔவை பிராட்டி, கண்ணகி என்னும் கற்புக்கரசி தனது பதிவ்ரதா சக்தியால் மதுரை மாநகரையே எரித்தாள் என்பதை இலக்கியம் நமக்கு எடுத்துரைக்கிறது, இதைப்போல் நமது தேசப்பெண்கள் தனது பதிவ்ரதா சக்தியின் மூலம் மிகப்பெரும் காரியங்களையும் சாதித்துள்ளனர், ஆனால் இன்றைய பெண்களிடமும் அத்தகைய சக்தி இருக்கிறதா? என்று கேட்டால், ஆம் இன்றளவும் அனைத்து பெண்களிடமும் இத்தகைய சக்தி இருக்கத்தான் செய்கிறது என்பதுதான் பதில்.

ஆனால் இன்றைய பெண்கள் இத்தகைய சக்தியை வெளிப்படுத்துவதில்லை, ஏன் என்றால் பெண்கள் பலர் தன்னிடம் இத்தகைய பதிவ்ரதா சக்தி இருப்பதையே தெரிந்து கொள்ளவில்லை, மேலும் பலர் சுவபாவமாக (இயற்கையாக) அமைந்த இந்த தனது சக்தியை பாதுகாக்கத் தெரியாமல் வழி தவறி இழந்து விட்டார்கள், பலர் இழந்து கொண்டிருக்கிறார்கள், இதற்குக்காரணம் பதிவ்ரதா சக்தியை சரியாக பாதுகாக்காததுதான், இதை பாதுகாக்கும் வழிமுறைகளாக பெண்கள் சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.

எப்போதும் தந்தை கணவர் மகன் என்னும் பாதுகாப்பு வட்டத்தில் வாழ வேண்டும், குல சம்ப்ரதாயங்களை அனுசரித்து, செய்ய வேண்டிய (குலதைவ ப்ரார்த்தனை சமராதனை போன்றவற்றை) செய்யச் செய்ய வேண்டும், செய்யக்கூடாத செயல்களிலிருந்து குழந்தைகளை கணவனை தடுக்க வேண்டும், தானும் தவிர்க்க வேண்டும், குழந்தைகளுக்கு நல்ல போதனைகளை அளிக்க வேண்டும்.

வேத சாஸ்திரத்தை அனுசரித்து பற்பல கர்மாக்களை சொல்லி வந்த ‘ஆபஸ்தம்ப மஹர்ஷி’, தனது “ஆபஸ்தம்ப க்ருஹ்யஸூத்ர” புஸ்தகத்தில் “அட்ஞீபீஙஹட்க்ஷீணூஜ்சூ: ஙணூசூணிச்ஙூயு ஆவ்ருத சாஸ்த்ரீப்ய: ப்ரதீயேரன்” நான் கூறாத பல குடும்ப சம்ப்ரதாயங்களையும் சாஸ்திரங்களையும் குடும்பத்திலுள்ள பெண்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார்

ஏனென்றால் இன்றும் கூட பல குடும்பங்களிலும் நடைபெறும் தெய்வ பித்ரு காரியங்கள் பெண்களின் தூண்டுதலாலேயே பெண்களின் ஒத்துழைப்பாலேயே நடைபெறுகின்றன, ஆகவே குடும்பத்தில் தனக்குள்ள பொறுப்பை உணர்ந்து கொண்டு பெண்கள் செயல்பட வேண்டும், அவரவர்கள் தாயார் மாமியார் போன்ற பெரியோர்களிடமிருந்து குடும்பப் பழக்க வழக்கங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதன்படி நடக்க முயற்சிக்க வேண்டும்.

பெரியோர்களைக் காணச் செல்லும் போதும் ஆலயங்களுக்குச் செல்லும் போதும் ஆடை அணிவதிலும் மற்றும் சில விஷயங்களிலும் (தலையை விரித்துப் போட்டுக் கொள்ளாமல் இருத்தல், ஆசாரமாக ஆடை அணிதல்) சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், முன்னோர் ஆசாரப்படி சாஸ்திரப்படி தனது கணவனையும் தனது குழந்தைகளையும் அழைத்துச் செல்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஒரு வாஸுகி தேவி ‘பதிவ்ரத’த்துடன் கணவருக்குப் பணிவிடை செய்ததால்தான் இன்றையதினம் நமக்கு ஐயன் வள்ளுவன் மூலம் திருக்குறள் என்னும் பொக்கிஷம் கிடைத்துள்ளது, ஒரு சாரதாதேவியின் அனுகூலத்தால்தான் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் உலகம் போற்றும் உத்தம ஞானியானார், குடும்பத்தைத் துறந்து விட்டு தபஸ் செய்யக் கிளம்பிய யாக்ஞவல்க்ய மஹர்ஷியை தடுத்து நிறுத்தி தாங்கள் எதை (மரணமற்ற தன்மையை) நோக்கிச் செல்லுகிறீர்களோ எனக்கும் அந்த வழியை காட்டிவிட்டு, என்னையும் அந்த வழியிலேயே அழைத்துச் செல்லுங்கள் ,என்று தைரியமாகக் கூறினாள் மைத்ரேயி.

ஆகவே வயதானவர்கள் வயதான காலத்தில் பொருப்புகளை தனது நாட்டுப்பெண், பெண், முதலானவர்களிடம் ஒப்படைத்து ஆத்யாத்மிக விஷயத்தில் ஈடுபட முயற்சிக்க வேண்டும். நமது பாரததேசப் பெண்களுக்குத்தான் இத்தகைய பதிவ்ரதா சக்தி அதிகமாக இயற்கையாகவே இறைவனால் அளிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு பெண்களும் தனக்குள்ள சக்தியை உணர்ந்து கொண்டு அதன்படி நடந்து கொண்டு தனது தபஸ் (கற்பு) சக்தியை பாதுகாத்து வளர்த்து இந்த தேசத்திற்கும் தனக்கும் நன்மையை செய்ய இறைவன் அனுக்ரஹிக்கட்டும்.





Source:Sage of Kanchi


Krishnamoorthy Balasubramanian
 
Why Is Sri Krishna Blue?

Why Is Sri Krishna Blue?



Blue is one aspect of the legend of Sri Krishna that has remain unchanged in time and geography. Why is Krishna blue? Sadhguru looks at what the “blue magic” is all about, and how it worked even on Krishna’s sworn enemies who were bent on his death and destruction.

Sadhguru: Blue is the color of all-inclusiveness. You will see in the existence, anything that is vast and beyond your perception generally tends to be blue, whether it is the ocean or the sky. Anything which is larger than your perception tends to be blue because blue is the basis of all-inclusiveness. It is based on this that so many gods in India are shown as blue-skinned. Shiva has a blue skin, Krishna has a blue skin, Rama has a blue skin. It is not that their skin was blue. They were referred to as blue gods because they had a blue aura.

What is aura?

An aura is a certain field of energy that is around every substance. It is a scientific fact that the whole existence is energy. One part of the energy has manifested itself into a physical form. Another part of the energy does not manifest itself into a physical form, but it still has a form. That form which is not yet physical, or refuses to become physical but still maintains a form, is called aura.

Sri Krishna being blue-bodied need not necessarily mean his skin color was blue. Maybe he was dark-skinned, but people who were aware saw the blueness of his energy, so they described him as blue. There are many disputes about who Krishna is and what he is but his all-inclusiveness is one thing that no one can deny. So the theme of blue remained common, and in every corner of the country, Krishna is seen as blue.
Irresistible blue

Because his energy or the outermost ring of his aura was blue, he was simply irresistibly attractive – not because of the shape of the nose or the eyes or whatever. There are any number of people with good noses, good eyes, and good bodies but they do not exude the same level of attraction. It is the blueness of one’s aura which suddenly makes a person irresistibly attractive.

This blueness, this sense of all-inclusiveness in him was such that even people who were sworn enemies of his sat with him and unwittingly gave in to him. He was able to effortlessly turn around even people who abused and plotted to kill him any number of times. There are various other aspects to him but this blue nature constantly assisted him in everything that he did. He was so irresistible that even Poothana, the assassin who came to kill him when he was just a baby, fell in love with him. She was with him for just a few minutes but she became completely entangled in his blue magic.

Electrifying blue


There is another aspect to this. In terms of one’s evolution, there are various hues that one’s aura can take. If we make the agna very important in our sadhana, then orange will be the dominant color. That is the color of renunciation, austerity, asceticism and kriya. If someone has a pure white aura, that means this is a pure being. Such a person’s presence will be fantastic, but he will not be so action-oriented. When someone attains to their highest but chooses to be active in the world, his aura will always be electric blue. Anyone who was dynamic was blue. It is this type of aura which allows you to function in the world in a way that other people think is superhuman.

So instead of putting blue paint around Sri Krishna, people said he was blue-skinned because when those who were aware looked at him, he looked blue and that’s all that’s important. When those who were unaware looked at him, they saw his skin, but that’s not important. The truth about his life is more important for us than the facts about his life because the facts will not make any difference in our lives, but the truth makes a difference in our life.



Source: Sage of Kanchi

Raman Kuppuswamy
 
மஹா பெரியவா அருள்வாக்கு :

மஹா பெரியவா அருள்வாக்கு : -

நன்றி=பால ஹனுமான்.

'தெய்வம் சில இடங்களில் பிரத்யட்சமாகத் தெரிவதாக மக்கள் நினைக்கிறார்கள். அதேபோல், என்னிடமும் தெய்வம் பிரத்யட்சமாக இருப்பதாக நினைத்து, எனக்கு தியான மரியாதை கொடுத்து, என்னிடம் தங்கள் குறைகளைச் சொல்வது தெய்வத்திடம் சொல்வது போலாகும் என்ற எண்ணத்தில், தங்கள் குறைகளை என்னிடம் கூறுகிறார்கள். அதனாலேயே அவர்கள் ஆறுதலும் அடைகிறார்கள். அவர்களின் அந்த நம்பிக்கையையும், அதனால் அவர்கள் ஆறுதல் பெறுவதையும் நான் எப்படித் தடை செய்ய முடியும்? பகலோ இரவோ ஆனால்தான் என்ன... என்னிடம் வருபவர்களின் குறைகளைக் கேட்டு அவர்களுக்கு ஆறுதல் சொல்லவே இந்தச் சரீரம் ஏற்பட்டிருக்கிறது. பக்தர்களுக்கு தரிசனம் தருவதிலும், அவர்களுக்கு இதம் தரும் விதமாகப் பேசுவதிலும் சரீர பலம் குறைந்தாலும் பரவாயில்லை; என் உள்ளத்துக்கு இதுவே பலம்.


பக்தர்கள் என்னை தெய்வமாக எண்ணி வணங்குவதில் எனக்குக் கொஞ்சமும் உடன்பாடோ பெருமையோ இல்லை. ஆனால், தெய்வத்திடம் முறையிடுவதுபோல் ஒளிவு மறைவின்றி உள்ளதை உள்ளபடி முறையிடுவது சந்தோஷமாக இருக்கிறது. நான் தெய்வமாக இல்லாவிட்டாலும், என்னை முன்னிட்டு மக்கள் பெறும் தெய்வீ க உணர்ச்சி என்னைப் பரவசப்படுத்துகிறது. அந்த தெய்வீ க உணர்ச்சியுடன் அவர்கள் செய்யும் எந்தக் காரியமும் எனக்கு சந்தோஷம் தருவதாகவே இருக்கும்



Source: harikrishnamurthy
 
பிள்ளையார் சுழி

பிள்ளையார் சுழி



தை எழுத ஆரம்பித்தாலும் முதலிலே பிள்ளையார் சுழி போட்டுவிட்டுத்தான் ஆரம்பிக்கிறோம். பெரிய காவியமாகத்தான் இருக்கவேணும் என்றில்லை; ஒரு போஸ்ட் கார்டானாலும் ஸரி, கடை ஸாமான் லிஸ்டானாலும் ஸரி, முதலில் பிள்ளையார் சுழி போட்டு விட்டுத்தான் எழுத ஆரம்பிக்கிறோம். எழுதுவது மட்டுமில்லாமல் எந்தக் காரியமானாலும் ஆரம்பிக்கிற போது அது விக்நமில்லாமல் பூர்த்தியாவதற்கு மஹாகணபதியைக் கொண்டு வந்துதான் ஆகணும். அவரைக் ஸ்மரிக்காமல் எந்தக் காரியமுமே இல்லையானாலும், இந்த எழுத்துக் காரியத்தில் அவரை ஸ்மரிக்கிறோம் என்பது Written proof -ஆகவே (எழுத்து மூல நிரூபணமாகவே) பிள்ளையார் சுழியில் தெரிகிறது.


பின்னாடி நாம் எழுதுகிற விஷயம் ‘சுழித்து’ப் போகாமலிருப்பதற்காக முன்னாடி பிள்ளையார் சுழி போட்டு விடுகிறோம்.


பிள்ளையார் சுழி போடாமல் ‘ஓம்’போடுகிறவர்களும் கிரந்தம், தமிழ் இரண்டிலுமே அந்த ஓமுக்கும் சுழித்தே ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமில்லை, இந்த ப்ரணவ ஸ்வரூபமும் பிள்ளையார்தானே?
சுழி என்பது வளைசல்; ‘வக்ரம்’ என்பார்கள். பிள்ளையாரின் தும்பிக்கை நுனி வளைந்து சுருட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் ‘வக்ரதுண்டர்’என்றே அவருக்கு ஒரு பேர். பிள்ளையார் சுழி போடுவதில் பாதியாக இருக்கிற வளைசல் பூர்ணமாகிவிட்டால் முழு வட்டம். பூலோகமும், பல லோகங்களும், நக்ஷத்ர மண்டலங்கள் அடங்கியுள்ள பிரம்மாண்டமும் எல்லாமே வட்டமானவைதான். ‘அண்டம்’என்றாலே முட்டை என்றுதான் அர்த்தம். முட்டை வட்ட வடிவந்தானே?


இந்தப் பூர்ணரூபத்தையே ஸைஃபருக்கும் சொல்வதுதான் ஆச்சரியம்! ‘பரீ¬க்ஷயில் கோழி முட்டை’என்கிறோம். ‘பூர்ணமும் பிள்ளையார்தான், சூன்யமும் பிள்ளையார்தான். உள்ளது அல்லது எல்லாம் பரமாத்மாதான்’என்கிற மஹா தத்துவத்தையே சுழி காட்டுகிறது. காரியத்தை ஸஃபைர் பண்ணிக்கொண்டு வருகிறவனை, ”என்னடா சுழி!”என்று ப்ரக்ருதத்திலும் (நடைமுறையிலும்) சொல்கிறோம். கையிலிருக்கிற மோதகத்தில் தித்திப்புப் பூர்ணத்தை வைத்துக்கொண்டு தன்னுடைய பூர்ணத்வத்தை ‘டெமான்ஸ்ட்ரேட்’பண்ணும் பிள்ளையாருக்கே சுழி போடுகிறோம். இந்தச் சுழி மற்றச் சுழியையெல்லாம் முழுசாகப் பண்ணிவிடுவது.


வளைசலான கொம்போடு ஆரம்பிக்கிற பிள்ளையார் சுழி, கொஞ்சம்கூட வளையாத நேர்கோட்டோடு முடிகிறது. பிள்ளையார் பூர்ணம், சூன்யம் இரண்மாக ஆனாற்போலவே வக்ரமானதும் அவர்தான், ஆர்ஜவமானதும் (நேரானதும்) அவர்தான் என்பது தாத்பரியம். வக்ர குணத்துக்கு நேரெதிரானதை ஆர்ஜவம் என்பார்கள். தமிழில் இதைத்தான் நேர்மை என்பது. இங்கிலீஷிலும் straightness, straight- forward என்கிறார்கள்.

குணம் குணஹீனம் எல்லாம் ஒரே நிர்குண பரமாத்மாவின் வேஷங்கள்தான்.

‘உ’என்பது ப்ரணவத்தின் இரண்டாவதான நடு அக்ஷரம். அ-உ-ம என்ற மூன்றும் சேர்ந்தே ‘ஓம்’காரமான ப்ரணவம். விஷயம் தெரிந்தவர்கள் இதை இங்கிலீஷில் Om என்று எழுதாமல் Aum என்றே எழுதுவார்கள். ‘அ’என்பது ஸ்ருஷ்டி;பிரம்மா. உ என்பது பரிபாலனம்; விஷ்ணு. ம ஸம்ஹாரம்;ஈஸ்வரன்.

த்ரிமூர்த்திகளும் தோன்றியது ஏக பராசக்தியால்தான். அதனால் அவள் ப்ரணவ ஸ்வரூபிணி. ஆனாலும் ஓமை தேவீ ப்ரணவம் என்று சொல்வதில்லை. ‘உமா’ என்பதே தேவீ ப்ரணவம் என்பார்கள். அ-உ-ம என்ற சப்தங்களே மாறி ‘உமா’ வில் உ-ம-அ எனற இருக்கின்றன அல்லவா?ஓமில் ஸ்ருஷ்டி பீஜமான ‘அ’ முதல் எழத்தாயிருக்க, ‘உமா’ விலோ ஸ்திதி (பரிபாலன) பீஜமான ‘உ’என்பது முதல் எழுத்தாயிருப்பதால்தான், அன்போடு ரக்ஷித்து, காத்து, பரிபாலனம் பண்ணும் அம்பாளின் ப்ரணவம் ‘உ’ வில்தான் ஆரம்பிக்க வேண்டுமென்று காரணம் சொல்லி, இதனாலேயே ‘உமா’என்பதை அம்பாளுடைய ப்ரணவமாகக் கூறுகிறார்கள்.



அ-உ-மவில் ஹ்ருதயம் மாதிரி நடுவேயிருப்பது ‘உ’அதுவே கருணாமயமாகக் காப்பாற்றுகிற தேவீ ப்ரணவத்தில் ப்ரதம ஸ்தானத்திலிருக்கிறது. ப்ரணவ ஸ்வரூபப் பிள்ளையார் ‘அ’வும் ‘ம’வும் சேராமல் இந்த ‘உ’காரமாக மட்டுமே பிள்ளையார் சுழியில் இருப்பதைப் பார்க்கும்போது ஒன்று தோன்றுகிறது. அதாவது அவர் ”தாயைப் போலப் பிள்ளை”மட்டுமில்லை;தாயாருக்கும் ஒரு படி மேலே என்று தோன்றுகிறது. எப்படி?அவளும் ரக்ஷிக்கிற ‘உ’வுக்குப் பின்னாடியாவது ஸம்ஹார ‘ம’ஸ்ருஷ்டி ‘அ’ இவற்றையும் வைத்தக் கொண்டிருக்கிறாள். ஆனால் பிள்ளையோ எப்போது பார்த்தாலும் எல்லாரையும் ரக்ஷிப்பது தவிர வேறு ஜோலியே வைத்துக்கொள்ளாத பூர்ண கருணாமூர்த்தியாக இருந்துகொண்டு ‘உ’ ஒன்றோடேயே நின்றுவிடுகிறார்.



ப்ரணவத்தில் ‘உ’ விஷ்ணுவின் ரூபம். உமாவும் விஷ்ணு ரூபிணியாக, நாராயண ஸஹோதரியாக, ‘விஷ்ணு மாயா விலாஸினி’யாக, ‘நாராயணி’ என்றே பெயர் படைத்தவளாயிருக்கிறாள். பிள்ளையாரைப்பற்றி ஸகலரும், ஸகல கார்ய ஆரம்பத்திலும் சொல்லும் ஸ்லோகத்திலும் ”சுக்லாம்பரதரம் விஷ்ணும்” என்றே வருகிறது. (இங்கே விஷ்ணு என்றால் ஸர்வ வியாபகமானவர் என்று அர்த்தம்) ‘உ’ என்பது சிவ-சக்தி புத்ரனை விஷ்ணுவோடும் ஸம்பந்தப்படுத்தி, சைவ வைஷ்ணவத்தை ஸமரஸம் பண்ணி விடுகிறது!


வளைசலும் நேர்கோடுமாக இருக்கிற பிள்ளையார் சுழியில் நிறையத் தத்வார்த்தம் இருக்கிறது. சக்ராகாரமாக எந்த ஒன்று சுற்றினாலும் அதற்கு மத்தியில் அதற்கு ஆதாரமாக, அச்சாக ( axis- ஆக) நேரான ( straight- ஆன) ஒன்று இருந்தாக வேண்டும். விஷ்ணு தன் விரலையே நேராக நிமிர்த்திக்கொண்டு அதிலேதான் சக்ராயுதத்தைக் கோத்துக் கொண்டு சுற்றுகிறதாகவே விக்ரஹங்களில் காட்டியிருக்கும். சுற்றச் சுற்றப் பொறிப் பொறியாகக் கொட்டுகிற கார்த்திகை வாணமானாலும் ஸரி (இது ஒளி) – விரலிலே மாட்டிக்கொண்டு சுற்றிச் சுற்றி டபடபவென்று அடிக்கிற கிரிச்சட்டியானாலும் ஸரி (இது ஒலி) – இதுகளின் வட்டமான சுழற்சிகளுக்கு ஆதாரமாகக் கையோ, குச்சியோ எதுவோ ஒன்று நேர்கோடாக இருக்க வேண்டியிருக்கிறது. யுனிவர்ஸில் லோகங்களெல்லாம் ஸர்குலராகத்தான் சுற்றிக்கொண்டிருக்கின்றன என்கிறபோது இவற்றுக்கும்கூட straight line-ஆக ஒரு ஆதார axis நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் energy (சக்தி) ரூபத்தில் இருக்கத்தான் வேண்டும். வட்டமாகச் சுற்றுகிற ஸகலப் பிரபஞ்சத்தையும் அதற்கு ஆதார சக்தியான கோட்டையும் சேர்த்துத்தான் பிள்ளையார் சுழியில் வட்டமாகவும் நேர்கோட்டு பாகமாகவும் போடுகிறோம்.


எங்கேயோ படித்த, அல்லது கேட்ட, ஞாபகம், எனர்ஜி உண்டாகிறதே பிள்ளையார் சுழி ரூபத்தில்தான் என்று. தாரை கொட்டி அதிலிருந்து எலெக்ட்ரிஸிடி எடுக்கிறபோது ரொடேஷனிலிருந்து (வட்டத்திலிருந்து) நேர்கோடாகத்தான் மின்ஸாரம் புறப்படுகிறதென்று எடுத்துக்காட்டியிருந்தது. பிள்ளையார் சுழியில் கொம்பு தான் ரொடேஷன்;கோடு அதிலிருந்து சக்தி உத்பவம். இந்த இரண்டையும் சிவ-சக்தி ஸ்வரூபமான நாத-பிந்துக்களாகக்கூடச் சொல்லிக்கொண்டு போகலாம். அதெல்லாம் ஸ¨க்ஷ்மமான விஷயம்.


ஆரம்பித்த இடத்துக்கே வந்து முடிந்துவிடுகிற வட்டம் ஏகமான பிரம்மத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். வட்டத்தில் ஆரம்பித்து அரை வட்டத்துக்கு அப்புறம் நேர்கோடாகிற பிள்ளையார் சுழி, ஏகமான பிரம்மத்தை ஸங்கேதமாகக் காட்டிவிட்டு அதிலிருந்து அநேகமான ஸ்ருஷ்டி தோன்றினதையும் சேர்த்துத் தெரிவிக்கிறது என்று சொல்லலாம். பிரம்மமும் பூர்ணம். பிரபஞ்சமும் பூர்ணம். பிரம்ம பூர்ணத்திலிருந்து பிரபஞ்ச பூர்ணம் உண்டாயிற்று என்று உபநிஷத்தில் சாந்தி மந்திரம் சொல்கிறோம். ஆரம்ப ஸ்வாமியின் அடையாளமாக எதன் ஆரம்பத்திலும் போடும் பிள்ளையார் சுழி, பிரம்ம பூர்ணத்தை வளைசல் கொம்பாலும், பிரபஞ்ச பூர்ணத்தை நேர் கோட்டாலும் காட்டி, முதலில் கொம்பு அப்புறம் கோடு என்பதால் பிரம்மத்திலிருந்துதான் பிரபஞ்சம் உண்டாச்சு என்றும் தெரிவிக்கிறது.



கொம்பு, கோடு என்று இரண்டு வார்த்தைகள் சொன்னேன். வேடிக்கையாக இரண்டுமே பிள்ளையாரின் தந்தத்துக்குப் பேராயிருக்கின்றன. ‘ஏக தந்தர்’ என்பதை ‘ஒற்றைக் கொம்பன்’ என்பார்கள்.

”பெரும்பாரக்கோடும்”, ”கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே” என்றெல்லாம் அவ்வைப் பாட்டி சொல்லும்போது ‘கோடு’ என்றாலும் தந்தந்தான். எப்பொழுதும் குழந்தையாயிருக்கிற ஸ்வாமியை வேண்டிக்கொண்டதாலேயே குழந்தைப் பிராயத்தில் கிழவியாகிவிட்ட அவ்வை சொன்ன ‘கொடுவினை’என்பதுதான் ஜன்மாந்தர பாபங்களான பிராரப்த கர்மா. அந்தக் கர்மா எப்படியெப்படி நம்மைப் பழிவாங்க வேண்டும் என்று பிரம்மா நம் தலையில் எழுதியிருக்கிறாரென்று, சொல்லி, இதை பிரம்மலிபி என்பார்கள். ‘தலைச்சுழி’ என்பதும் இதைத்தான். இந்த தலைச் சுழியையும் கழித்து விடுவது பிள்ளையார் சுழி. ”கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே!”



?????????? ???? «
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top