• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
Dharma for Brahmanas and Others

Dharma for Brahmanas and Others


(This articles is derived from ideas in Kanchi Paramacharya’s Deivattin Kural and from Sringeri Acharya’s teachings. Kindly excuse any mistakes or inaccuracies by me.)


Some persons get offended by the very word Sudra. They feel that it is a bad word. In Smrutis-Sastras, the Sudra varna is supposed to be a working class, mostly doing physical work like farming, agriculture, house building etc. It is not an inferior caste but a varna having different type of works. A large number of castes are grouped under Sudra Varna. They are not called as Sudras but by their caste names like Mudaliars, Pillai, Gounders etc. Similarly for Vaisyas and Kshatrias. Even Brahmins have a large number of sub castes but they are generally called as Brahmins and not by their particular caste name.


Some 300 or more years back, the Brahmins led a highly disciplined life and they were like fire compared to other castes. If we see from that context, we can see how the Sastra witer Rishis were fully justified in all their rules. But from today’s perspective when Brahmins have given up their disciplined life and started living like Sudras, the Sastra rules appear discriminatory and not just. But even today nothing prevents any Brahmin from living a highly disciplined life as ordained by Sastras. The administrative rules in Sastras do not hold today as laws have changed and to that extend the Brahmins will have to adopt while still leading a Brahmana type of life.


To illustrate the above, I give some basic Sastra rules, (B) for Brahmins and (S) for Sudras.



  1. WORK: B – Veda chanting, Veda preservation, Scriptural studies, studying other disciplines and teaching to other castes. Performing Yagas (sacrifices) for individual and common good.
    1. S – Doing all types of physical work with dignity.Helping other caste in their efforts. Offering services.
  2. EARNING: B – By Daana (donations) from other castes or other Brahmins, by endowments and charities by Kings and landlords and other rich persons. As Veda chanting is done for common good, they do not get individual salaries from any one except Dakshina for some performances on one off basis.
    1. S – They are paid for the services done. They are employed under other castes and get periodic salaries in cash or kind.
  3. LIFE STYLE: B- get up before 5 AM. Bath. Morning Sandya etc. Pujas, Bramha Yagya, Veda chanting, teaching others, conducting Sacrifices. Noon Bath, Madyanikam, Veda chanting, teaching, evening bath, Sandya etc. No after noon sleep is allowed. Strict rules in dressing and hair arrangement apply.
    1. S – No rigid rules apply. But the whole day they do work for others for salary. No rules of bathing, no rituals prescribed.
  4. FOOD: B – strict restrictions apply. Vegetarian food avoiding Onion, Garlic, hot spices, some vegetables like drumstick, radish etc. Food to be prepared under pure conditions, offered to God and then only taken. Only two meals allowed in a day. No breakfast or evening tiffin etc. No food older than 6 hours or so. No fermented drinks. No eating with holding food in hand or while standing. No outside food allowed. Strict fasting on Ekadasi and other Vrata days.
    1. S – very few restrictions apply. Beef and pork not allowed. No timing or frequency. Purity not specified. Any food any where any time is allowed. No need for in-house food.
  5. WORSHIP: B – generally worshipped Vedic Gods through various rituals and sacrifices. Temple worship also was there but in-house rituals were given priority. Vedanta studies and Spiritual aspiration encouraged.
    1. S – Mostly worshipped various village gods and Temple worship of Siva, Visnu, Durga, Pillayar, Murugan, Kali etc. More involvement with Bhakti. No one prevented them from Vedanta studies or Yoga, Siddha etc. The large number of books in Tamil, Kannada, Telugu etc on these subjects written several centuries back is a proof of this.
  6. COMMON DHARMAS: Be good, do good, do not kill or steal or rape or have other’s wife etc. No falsehood, no cheating, no harming other beings excepts as part of food or sacrifice. Marriages to be in-same-caste only. ALL THESE ARE DHARMAS COMMON TO ALL CASTES.

iF YOU SCAN THE ABOVE RULES, THEN WE EASILY SEE THAT TODAY, BRAHMINS HAVE ADOPTED MOST OF THE S rules as their own and forgotten their B rules! No wonder we see Sastras as being distorted and not just!
If you want to live more like a Brahmin, then be ready to change your job to satisfy the living conditions and timings, be ready for lesser salary and be ready for simple living, and take guidance from Sat sangh. Give up material life full of sense pleasures and come to spiritual living.


Paramacharya of Kanchi says that in olden days more Sudras got attracted with Brahmin ways of living and started adopting Brahmin styles. But today the situation is exactly reverse.
Regards,
V.Muralidharan.




Source:

Dharma for Brahmanas and Others | My blog- K. Hariharan
 
Sri Vinayaka Chaturthi Vrata Puja Vidhanam

Sri Vinayaka Chaturthi Vrata Puja Vidhanam

Sri Ganesha or Sri Ganapati is an extremely popular and powerful God. He is called Vighneshvara or Vighnaharta, the Lord of and destroyer of obstacles. People mostly worship Him asking for siddhi, success in undertakings, and buddhi, intelligence. He is worshipped before any venture is started. He is also the God of education, knowledge and wisdom, literature, and the fine arts.

Sri Ganesha Chaturthi is the Hindu festival celebrated in honour of the god Ganesha, the elephant-headed remover of obstacles and the god of beginnings and wisdom.


The festival, also known as Sri Vinayaka Chaturthi, is observed in the Hindu calendar month of Bhaadrapada, shukla chaturthi.


Audio Recording by : Sri V. Sriram Ghanapatigal


In case of difficulty or break ups in audio streaming, please download the entire mp3 to your local drive and play.



Audio Files :

  1. Introduction: | Download MP3
  2. I -Vigneswara Puja: | Download MP3
  3. II- Siddhi Vinayaka Puja : | Download MP3
  4. III- Ekavimshati Patra, Pushpa, Ashtotra Puja : | Download MP3
  5. IV- Uttaranga Puja: | Download MP3
 
Sri Maha Periva's discourse about Vinaayakar

Sri Maha Periva's discourse about Vinaayakar


https://www.youtube.com/watch?v=gW4P1nfEs_8


Compiled and presented by Welcome to Periva.Org - a website dedicated to Sri Maha Periva and the Kanchi Periva Forum - Home | Kanchi Periva Forum

A beautiful discourse of Sri Maha Periva - running almost 19 minutes, added with wonderful images of Periva and Pillaiyar (alternating nicely) - sure to provide a complete visual treat for any Periva devotee.

special greetings to one and all on the occasion of Vinayaka Chaturthi
 
இவை மனதார சொல்லி விநாயகனின் அருளை பெருக

இவை மனதார சொல்லி விநாயகனின் அருளை பெருக

ஆதிசங்கரர், இந்த தோத்திரத்தை மதுரையில் பாடியதாகச் சொல்லப்படுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அம்மன் சன்னிதியிலிருந்து உள்ளே போனால் பொற்றாமரைக் குளத்துக்குச் செல்லும் வழியில் கோபுர வாசல் ஒன்று இருக்கும். அதில் சில அற்புதமான சிறபங்கள் உண்டு. அந்தக் கோபுர வாசலின் இடப்பக்கத்தில் 'நர்த்தன கணபதி' மூர்த்தி இருக்கிறார்.




அவருடைய நர்த்தனத்துக்கேற்ற வகையில் ஆதிசங்கரர் இந்தத் தோத்திரத்தைத் தாளக்கட்டுடன் அமைத்திருப்பதாகச் சொல்வார்கள். இந்தத் தோத்திரத்துக்கேற்றவகையில் விநாயகரும் ஆடியதாகச் சொல்வார்கள்.


ஸ்ரீசங்கரபகவத்பாதர் இயற்றிய
கணேச பஞ்சரத்னம்



முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்திஸாதகம்
கலாதராவதம்ஸகம் விலஸிலோகரக்ஷகம்
அநாயகைகநாயகம் விநாசிதே பதைத்யகம்
நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்


முதாகராத்த மோதகம் - மகிழ்ச்சியுடன் கரத்தில் மோதகத்தைக்
கொண்டுள்ளவர்


ஸதாவிமுக்திஸாதகம் - தம்மை வாழ்த்துபவர்களுக்கு எப்போதும்
முக்தியைக் கொடுப்பவர்


கலாதராவதம்ஸகம் - கலா என்பது சந்திரனின் கலை - பிறைச்சந்திரன்.
பிறையணிந்தவர் சிவனென்பது மட்டுமே மக்கள் சாதாரணமாக
அறிந்திருப்பது.

ராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி, பாலா திரிபுரசுந்தரி, ஆத்யகாளி
எனப்படும் மகாகாளி தசமுகி ஆகிய அம்பிகை வடிவங்களும்
பிறையணிந்திருப்பார்கள்.

மகாகணபதி, வல்லபகணபதி, உச்சிஷ்டகணபதி என்னும் வடிவங்களுக்கும்
முக்கண்களும் பிறைச்சந்திரனும் உண்டு.

விநாயகர் அகவல் :

சீதக்களபச்சுஎந்தாமரைப்பூம்
பாதச்சிலம்பு பல்லிசை பாட
பொன்னரைஞாணும் பூந்துகிலாடையும்
வண்ணமருங்கில் வளர்ந்தழகெறிப்ப
பேழைவயிறும் பெரும்பாரக்கோடும்
வேழமுகத்தில் விளங்கு சிந்தூரமும்
அஞ்சுகரமும் அங்குசபாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீலமேனியும்
நான்றவாயும் நாலிருபுயமும்
மூன்று கண்ணும் மும்மதச்சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்பரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞான
அற்புதம் திகழும் கற்பகக் களிறே!


முருகனுடைய திருவுருக்களில் மகாசுப்பிரமணியர் என்னும் வடிவம் உண்டு.
மீனாட்சியம்மன் கோயிலின் சில கோபுரங்களில் இந்த வடிவின்
சிலைகளைக் காணலாம். இவ்வடிவிலும் ஒவ்வொரு முகமும் முக்கண்கள்
பெற்று, பிறைகள் அணிந்தவாறு காட்சியளிக்கும்.


இந்த வரியின் பொருள் - சந்திர கலையைத் தலைல் தரித்திருப்பவர்.
விலஸிலோகரக்ஷகம் - தம்முடைய பக்தியில் திளைத்து மகிழ்ச்சியாக
இருக்கும் பக்தர்களைக் காப்பவர்


அநாயகைகநாயகம் - அநாயக ஏகநாயகம் - தங்களைப் பாதுகாக்கக்கூடிய
தலைவனில்லாதவர்களுக்குத் தாமே ஒரே தலைவராக விளங்குபவர்

விநாசிதே பதைத்யகம் - இபதைத்ய என்னும் சொல் கஜாசுரனைக்
குறிக்கும். இபம் - யானை.

காசியப முனிவருக்கு திதி என்னும் மனைவி உண்டு. அவர்களுக்குப்
பிறந்தவர்கள் அசுரர்கள். திதியின் புத்திரர்கள் என்பதால் தைத்யர்
என்று பெயர்.

கஜாசுரனைக் கொன்றவர்.


நதாசுபாசுநாசகம் - தம்மை வணங்குபவர்களின் பாவங்களை எப்போதும்
நாசம் செய்பவர்


நமாமிதம் விநாயகம் - அப்படிப்பட்ட விநாயகரை வணங்குகிறேன்.
நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்




Source: Sage of Kanchi

Hindukkalin Prasad
 
விநாயகர் தகவல்

விநாயகர் தகவல்


ganesh01.jpg


மெகா கணபதிகள்



1. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்.
2. திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார்.
3. திருவலஞ்சுழி வெள்ளைப் பிள்ளையார்.
4. திருச்செட்டாங்குடி வாதாபி கணபதி.
5. செதலபதி ஆதி விநாயகர்.



1 . பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்



பிள்ளையார் என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பிள்ளையார்பட்டிதான். மருதங்குடி, திருவீங்கைக்குடி, ஈக்காட்டூர் என்றெல்லாம் அழைக்கப் பட்ட ஊர், பிள்ளையார் என்று 'ஜீங்'கென்று அமர்ந்தாரோ அன்று முதல் 'பிள்ளையார்- பட்டி' ஆகிவிட்டது. 'வாதாபி கணபதி'நம் ஊருக்கு வந்த கதை ஞாபகம் இருக்கிறதா? அதன் பிறகு நரசிம்ம வர்ம பல்லவன், தென்னாட்டை ஒரு சுற்றுலா அடித்தபோது, காரைக்குடி பக்கத்தில் இருந்த அழகானமலை கண்ணில் பட்டது. அவனால் அந்த மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டவர்தான் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர். இவரிடம் எதுவும் வேண்டிக் கொள்ளக்கூட வேண்டாம். அவரைச் சும்மா பார்த்தாலே போதும், உடம்பெல்லாம் சிலிர்த்துப் போகும்.

எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார் என்ற மனத் தெளிவு தானாய் வந்துவிடும்.இவர் வலம்புரி விநாயகர் எல்லா இடத்திலும் நான்கு கரங்களால் நான்கு திக்கையும் ஆட்சி செய்பவர், இங்கே இரண்டே திருக்கரங்களால் விண்ணையும், மண்ணையும் தன் ஆட்சிக்குள் கொண்டு வந்துவிடுகிறார். ஆயுதங்கள் எதுவும் இல்லாமல், அர்த்தபத்ம ஆசனத்தில் வலக்கரத்தில் கொழுக்கட்டையோடு, இடக்கையை இடையில் தாங்கி, பெருமிதமாய் பக்தர்களுக்கு அபயமளிக்கிறார். காரைக்குடி-திருப்பத்தூர் சாலையில் உள்ளது. பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோவில்.


2. திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார்



பிள்ளையார் அன்பே உருவானவர், கருணைக் கடல், கேட்டதைத் தருபவர் என்பதெல்லாம் நமக்குத் தெரியும். ஆனால், இது என்ன பொல்லாப் பிள்ளையார்? நம் வீட்டுக் குழந்தை அதிசயமாக எதையாவது செய்துவிட்டால், "பொல்லாத பிள்ளையப்பா"என்று கொஞ்சுவதில்லையா?அதுபோல் குழந்தை ஒருவனுடன் இந்தப் பிள்ளையார் சரிசமமாய் நின்று, குழந்தை சொன்னதையெல்லாம் கேட்டதால் 'பொல்லாத பிள்ளையார்'என்று அழைக்கப்படுகிறார். தவிர, பொல்லாத - பொள்ளாத - என்றால் உளியால் செதுக்கப்படாத என்று அர்த்தம் இந்தப் பிள்ளையார் உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாக தானே தோன்றியவர், ஆதலாலும் பொல்லாத பிள்ளையார் என்று அழைக்கலாம். எல்லா ஊரிலும் பெரும் தொப்பையுடன் இருக்கும் பிள்ளையார், இங்கே ஒட்டிய வயிறுடன் காட்சியளிப்பது அதிசயமான ஒன்று. தமிழுக்காகவும், பக்தர்களுக்காகவும் ஒடியாடி உழைத்ததால் இப்படி ஆகிவிட்டாரோ என்னவோ?


அது என்ன ஊரின் பெயர் திருநாரையூர்?



மிருகண்டு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தபோது காந்தவர்மன் என்பவன் அதற்கு இடையூறு செய்தான். கோபம் கொண்ட முனிவர், அவனை 'நாரை'யாக மாறுமாறு சாபமிட்டுவிட்டார். அவன் சாப விமோசனம் கேட்டு கதறியழுதபோது, சௌந்தரேஸ்வரரை தினமும் காசி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யுமாறு முனிவர் கூறினார். அதுபோலவே செய்தது நாரை, ஒரு நாள், இறைவனின் சோதனையால் காசியிலிருந்து நீர் கொண்டு வரும்போது பெரும் மழை ஏற்பட்டது. அதனால், பறக்க முடியாமல் நாரை தவித்தது. அதன் சிறகுகள் ஒவ்வொன்றாக விழுந்தன. (அந்த இடம் சிறகிழந்த நல்லூர்) . சிறகுகள் இல்லாத நிலையில் நாரை தவழ்ந்து வந்து, சிவனை வழிபட்டு மோட்சம் பெற்றது. அதனால் அந்த ஊர் 'திருநாரையூர்'என்று அழைக்கப்படுகிறது. சிதம்பரத்திற்குத் தென்மேற்கே 20 A.e. தொலைவில், காட்டுமன்னார்குடி பாதையில் உள்ளது. பொல்லாப் பிள்ளையார் கோயில்.





3.திருவலஞ்சுழி வெள்ளைப் பிள்ளையார்



தேவேந்திரனால் பாற்கடல் நுரையால் செய்யப்பட்ட வெள்ளைப் பிள்ளையாரை நீங்கள் பார்க்க வேண்டுமா?
அந்த வெள்ளைப் பிள்ளையாரைத் தரிசிக்க திருவலஞ்சுழி சுவேத விநாயகர் ஆலயத்திற்கு போவோமா?
பிள்ளையார் வெள்ளையாக இருப்பதால், நானும் அப்படியிருக்கிறேன் என்று சொல்லுவது போல் வெள்ளைக் கோபுரம் நம்மை வரவேற்கிறது. உள்ளே சென்றால், சுவேத விக்னேஸ்வரர் எனப்படும் வெள்ளைப் பிள்ளையாரைச் சந்திக்கலாம். சிறிய வடிவம்தான் என்றாலும், தேவேந்திரனால் பூஜிக்கப்பட்டவராயிற்றே!தேவர்களுக்கு அமுதம் கிடைக்க வழிதந்தவர் ஆயிற்றே!வெள்ளைப் பிள்ளையாரைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல் தோன்றும். அத்தனை தெய்வீகம்!கடல் நுரையால் செய்யப்பட்டதால், பிள்ளையார் தீண்டாத திருமேனி யாரும் தொடுவதில்லை, பச்சை கற்பூரம் மட்டும் சாத்துவார்கள்.

அதைத் தாண்டிச் சென்றால், பெரிய நாயகி அம்மன் சன்னதியையும், அஷ்டபுஜ மகாகாளியையும் தரிசிக்கலாம். பெரிய கோவில், அமைதியுடனும், அழகாகவும் காட்சியளிப்பதைக் காண கண்கோடி வேண்டும். பிள்ளையார் சதுர்த்தி அன்று, அல்லது எப்போது முடிகிறதோ அப்போது திருவலஞ்சுழி வெள்ளைப் பிள்ளையாரைத் தரிசித்து விட்டு வாருங்கள்!அமிர்தமாக இருக்கும்.
தஞ்சை மாவட்டம் சுவாமி மலையிலிருந்து 2 A.e. தொலைவில் அமைந்துள்ளது. திருவலஞ்சுழி திருத்தலம்.








4.திருச்செங்காட்டங்குடி வாதாபி பிள்ளையார்.


முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான், கஜமுகாசுரனை அழித்த ஊர் இது. அந்த அசுரனின் ரத்தம் படிந்து, இந்த ஊரே செங்காடாக மாறியதால் செங்காட்டாங்குடி என்ற பெயர் உருவானது. A.H. ஆறாம் நூற்றாண்டுக்க முன்பிருந்தே இந்தக் கோயில் வழிபடப் பட்டிருக்கிறது. முதலாம் ராஜராஜன் காலத்துக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. சிறுத் தொண்டரான பரஞ்ஜோதி, பல்லவ மன்னனின் சேனாதிபதியாக வாதாபி சென்று சாளுக்கியரோடு போர் புரிந்து, வெற்றி வாகை சூடியபோது கொண்டு வந்த வாதாபி கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது இங்கேதான். பல்லவர் கால தெய்வீகக் கலைச் செல்வங்களான நவதாண்டவ மூர்த்திகளையும், துவார பாலகர்களையும் நீங்கள் காணவேண்டுமென்றால் இந்த ஊருக்குத்தான் வரவேண்டும். இறைவன் உத்திராபதீஸ்வரர், சிறுத் தொண்டருக்கு அருள் புரிந்த பைரவ வேடத்திலேயே காட்சி தருகிறார். அந்த சிலையைப் பார்க்கவே வித்தியாசமாயிருக்கும்.

வாதாபி கணபதியும் அவரது தந்தையும் அருள்புரியும் திருச் செங்காட்டங்குடிக்கு நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்?

நாகை மாவட்டம் நன்னிலத்திருந்து 9 A.e. தொலைவில் உள்ளது. சிருச்செங்காட்டாங்குடி திருத்தலம்.

5.செதலபதி ஆதி விநாயகர்



இத்தலத்து நாயகனின் பெயர் முக்தீஸ்வரர். இவரை வழிபட்டால் முக்தி நிச்சயம் என்கிறார்கள். செதலபதி ஆலயத்தின் மற்றொரு சிறப்பு. கோயில் வாசலில் வீற்றிருக்கும் ஆதி விநாயகர் என்பதால் மனித உருவத்தில் காட்சியளிக்கிறார். முருகப் பெருமானுக்கு அவரைப் போன்றே ஒரு அண்ணா இருந்தால் எத்தனை அழகாக இருப்பாரோ, அத்தனை அழகாக இருப்பாரோ. அத்தனை அழகாகக் காட்சியளிக்கிறார் ஆதி விநாயகர். குரு பகவான் தட்சணாமூர்த்தியும் இங்கே வித்தியாசமாக இருக்கிறார். காலால் அசுரனை மிதித்தபடி, தன் இரண்டு பக்கம் அணில்கள் இருக்க, சனகாதி முனிவர்கள் நால்வரும் அருகில் தவம் செய்யக் காட்சியளிக்கிறார் குரு. இன்றும் திலரைப்படி பாவங்களை நீக்கிச் சித்திகளை அளிக்கும் தலமாக விளங்கி வருகிறது. மயிலாடுதுறை - திருவாரூர் பாதையில், பூந்தோட்டத்தில் இருந்து 2 A.e. தொலைவில் உள்ளது.

கணபதி ஹோமம்



முழு முதற்கடவுளான கணபதி தெய்வங்களிலேயே சிறந்தவர். எதிலும் முதலில் பூஜிக்க வேண்டியவர். வழிபாட்டு முறையில், கணபதி ஹோமம் மிகச் சிறந்தது. இது, கணபதி ஹோமம் மிகச்சிறந்தது. இது, கணபதி உபநிஷத்தில் விரிவாய் சொல்லப்பட்டிருக்கிறது. யோ மோதக ஸஹஸ்ரேண யஜதே, ஸவாஞ்சித பலவமாப் நோதி ஆயிரம் கொழுக்கட்டைகள் ஹோமம் செய்தால் நினைத்ததை எல்லாம் அடையலாம். நெல் பொரியால் ஹோமம் செய்தால் புகழ் பெறுவான். எளிதில் கிடைக்கும் அருகம்புல்லால் ஹோமம் செய்தால் துயரங்களிலிருந்து விடுபடுவான்.

கணபதி ஹோமத்திற்குரிய திரவியங்கள் எட்டு அவை : மோதகம் என்னும் கொழுக்கட்டை, அவல், நெல்பொரி, சத்துமா, கரும்பு, கொப்பரைத்தேங்காய், சுத்தமான எள், வாழைப்பழம், இவை தவிர அருகம்புல், நெய், விளாம்பழம், நாவல்பழம், மாதுளம்பழம், இவைகளையும் ஹோம நிவேதனமாகச் செய்யலாம்.

எட்டுப் பேரைக் கொண்டு ஹோமம் செய்தால் சூரியனுக்கு ஒப்பான ஒளியைப் பெறுவான். சந்திரனில் நான்காம் பிறையை பார்க்கக் கூடாது, பழிகள் ஏற்படும். கிருஷ்ணன் ஒருமுறை நான்காம் பிறையைப் பார்த்துவிட்டதாலேயே ஸ்யமந்தக மணியை அபகரித்துக் கொண்ட பழி ஏற்பட்டது. அதை போக்கிக் கொள்ள கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் பகலில் ஒன்றும் சாப்பிடாமலிருந்து மாலையில் விநாயகரை பூஜித்து பழிநீங்கப் பெற்றார் என்று பாகவதம் கூறுகிறது. பிரும்மாண்ட புராணம்.

லலிதோபாக்யானம் என்னும் நாலில், தடை செய்யும் யந்திரத்தை சக்தி ஸைன்யங்கள் நடுவில் அரக்கர்கள் போட்டுவிட்டனர். அம்பிகையின் படையினர் செயலற்றுவிட்டனர். உடன் அம்பிகை, முக்கண்ணனைப் பார்த்த மாத்திரத்தில், யானைமுகத்தோன் தோன்றி தடையந்திரத்தை முறித்தெறிந்து அம்மாள் படைகளுக்கு வெற்றி வாங்கிக் கொடுத்தார் என்றிருக்கிறது. கணபதி ஹோமம், மிகச் சிறிய முறையிலும் பெரிய அளவிலும் செய்யலாம்.

அவரவர் சக்திக்கேற்றபடி செய்வதை கணபதி அன்புடன் ஏற்றுக்கொண்டு அருள் புரிகிறார். அவருக்கு "த்வைமாதுரர்"என்ற பெயர் உண்டு. உமாதேவியும், முக்கண்ணனின் முடியிலுள்ள கங்கையும் ஆக இரண்டு பேருமே அவர் தாயார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. கணபதி ஹோம முறை, கணபதி உபநிஷத்திலும் மற்றும் "வாஞ்சாகல்பதா"என்ற ஒரு பெரிய ஹோம முறையிலும் விரிவாய் சொல்லப்பட்டிருக்கிறது. கணபதி ஹோமம் செய்வதால், தடைகள் நீங்கி மேன்மை பெறலாம்.


மகாராஷ்ட்ராவில் மகா கணபதி




இந்தியாவில் விநாயகர் வழிபாட்டில் முதலிடம் வகிப்பது மகாராஷ்ட்ரம். பிற மாநிலங்களை விட விநாயகர் அங்கு வெகுசிறப்பாக வழிபடப் பெறுகிறார். 'கணபதியப்பா'என்னும் பெயரில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அம்மாநிலத்தில் முன்பு அரசு செலுத்திய பேஷ்வாக்கள் விநாயகரைத் தம் குலதெய்வமாகும், போரில் வெற்றியைத் தரும் கடவுளாகவும் கருதி வழிபட்டு வந்தனர்.

'தானே'மாவட்டத்தில் 'தித்துவானா'என்னும் நகரிலும், 'கொலபா'மாவட்டத்தில் உள்ள 'மாத்துபாலி' என்னும் நகரிலும் விநாயகருக்கு பெரிய கோவில்கள் உள்ளன. மகாராஷ்ட்ர மக்கள் கல்விக்குரிய தெய்வமாய் விநாயகரை வழிபடுகின்றனர். அவர்கள் செவ்வாய்கிழமையை கணபதிக்கு உகந்த நாளாக எண்ணி அந்நாளில்கோவில்களுக்குத் திரளாகச் சென்று வழிபடுகின்றனர். விநாயகர் சதுர்த்தி அன்று, அவரது திருவுருவச் சிலையை மண்ணால் செய்து, ஒவ்வொரு வீதியிலும் 11 நாட்கள் வரை விநாயகர் வைக்கப்பட்டிருப்பார். விதவிதமான பிள்ளையார்களைத் தெருவில் வைத்து ஆடல், பாடலுடன் 'கணபதியப்பா மோரியா'என்று பக்தர்கள் கூவுவர். அவர்கள் சிவப்பு வர்ண உடையை உடுத்திக் கொள்வர். பிள்ளையாரை மேளதாளங்களுடன் வழியே எடுத்துச் சென்று கடல், ஆறு, குளம் போன்றவற்றில் கரைத்து விடுவர். இவ்விழா மிக விமரிசையாக இப்போதும் நடைபெற்று வருகிறது.

சிற்பிக் கலையில் உலகப் புகழ் பெற்ற எல்லோரா குன்று, மஹாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ளது. அக்குன்றில், பற்பல அரசர்கள் பல்வேறு காலங்களில் உருவாக்கிய குடைவரைக் கோவில்கள் மிகுதியாய்க் காணப்படுகின்றன. அவற்றுள், ராஷ்சிரகூட அரசனான முதலாம் கிருஷ்ணன் என்பவர் கயிலாச நாதருக்கு எடுத்த கோவில், பிரசித்தமானது. அக்கோவிலின் சுற்று மண்டபத்தில் உமை, முருகன் போன்ற தெய்வங்களோடு பிள்ளையாருக்கும் சந்நதி உள்ளது. இப்பிள்ளையார் திருஉருவம் யானை முகத்துடன் குள்ளமான உருவில் அமைந்துள்ளது. வெளிநாட்டினர் இவரை மிகவும் வியப்போடும் பக்தியோடும் நோக்குகின்றனர்.




விநாயகரை வழிபட பதினாறு மந்திரங்கள்



ஒம் என்ற சிறப்பான பிரணவத்திற்கு கணபதியே தலைவர். விநாயகரை குறிப்பாக பதினாறு மந்திரங்களைச் சொல்லி வழிபடுதல் சிறப்பு. அவை:



ஒம் சுமுகாய நம:
ஒம் ஏக தந்தாய நம:
ஒம் கபிலாய நம:
ஒம் கஜகர்ணிகாய நம:
ஒம் விகடாய நம:
ஒம் விக்னராஜாய நம:
ஒம் கணாதிபாய நம:
ஒம் தூமகேதுவே நம:
ஒம் கணாத்யக்ஷ£ய நம:
ஒம் பாலசந்த்ராய நம:
ஒம் கஜாநநாய நம:
ஒம் வக்ரதுண்டாய நம:
ஒம் சூர்ப்பகர்ணாய நம:
ஒம் ஹேரம்பாய நம:
ஒம் ஸ்கந்த பூர்வஜாய நம:



விநாயகப் பெருமானை இந்தப் பதினாறு மந்திரங்களால் வழிபட்டால் பெருமானது அருள் பூர்ணமாகக் கிடைக்கும்.



அபீஷ்ட வரத கணபதி



ஸ்ரீ அபீஷ்ட வரத மஹாகணபதி திருவையாறு மேட்டுத் தெருவில் கோவில் கொண்டுள்ளார். திருவையாறு வழியாக வந்த காவேரி அவ்வூரின் அழகு கண்டு அங்கேயே தங்கிவிட, அபீஷ்ட வரத மஹாகணபதியை பூஜித்தே சமுத்திரராஜன் திருமணத்தை நடத்தி வைத்தவர் என்பதால், இக் கணபதியை தரிசித்தால் திருமணத் தடை நீங்கி விடும் என்பது நம்பிக்கை. இத்திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ள திருக்குளத்தில் மூழ்கி எழுந்த பின்தான் அப்பர் சுவாமிகளுக்கு சிவபெருமான் திருகைலாயக் காட்சி கொடுத்தார் என்று தலபுராணம் கூறுகிறது.


கச்சேரி விநாயகர்



காஞ்சிபுரம் மாவட்டம்,மதுராந்தகத்திலிருந்து 26 A.e. தொலைவில் உள்ளது சேயூர். இங்கே, பேருந்து நிலையத்தின் அருகே அமைந்துள்ள விநாயகர், கச்சேரி விநாயகர் எனும் வித்தியாசமான பெயர் கொண்டவர். அருகே காவல் நிலையம் இருப்பதும் (காவல் நிலையத்தை கச்சேரி என்பது பழைய வழக்கம்) ஒரு புறமாக சற்றே சாய்ந்து தாளம் போடுவது போன்ற பாவனையுடன் இவர் காணப்படுவதும், இவரது பெயருக்குக் காரணமாய்க் கூறப்படுகிறது. கோடை அபிஷேகம் என்ற பெயரில் சித்திரை மாதம் முழுவதும், தினசரி இளநீர் அபிஷேகமும் தயிர்க்காப்பும் சாத்தப் பெற்று குளுகுளுவென்று காட்சியளிப்பார் இவ்விநாயகர்.


சிலம்பணி விநாயகர்



தேவகோட்டையில் உள்ள ஆலயம் ஒன்றில் விநாயகர் காலில் சிலம்புடன் காட்சி தருகிறார். இவரைச் சிலம்பணி விநாயகர் என்றழைக்கின்றனர்.



சர்ப்ப விநாயகர்



சர்ப்ப விநாயகர், பாப நாசம் திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இவரது உடல் முழுவதும் சர்ப்பங்கள் அணி செய்கின்றன. இராகு, கேது தோஷங்களிலிருந்து விடுபட இவரை வணங்கி அருள் பெறலாம் என்று கூறப்படுகிறது.


அவரவர் நட்சத்திரத்திற்கேற்ப ஆனைமுகனை அலங்கரிக்க
அஸ்வினி - வெள்ளிக்கலசம், தங்கக் கிரீடம் அறுகம்புல் மாலை.
பரணி - சந்தன அலங்காரம், தங்கக் கிரீடம்.
கிருத்திகை - வெள்ளிக் கவசம், தங்கக் கிரீடம்.
ரோகினி - சந்தன அலங்காரம், தங்கக் கிரீடம்.
மிருகசீரிஷம் - கஸ்தூரி மஞ்சள் அலங்காரம், அறுகம்புல் மாலை.



திருவாதிரை - தங்கக் கிரீடம், அறுகம்புல் மாலை.
புனர்பூசம் - சந்தன அலங்காரம், அறுகம்புல் மாலை.
பூசம் - கஸ்தூரி மஞ்சள், தங்கக் கிரீடம், அன்னம்.
உத்திரம் - திருநீறு அலங்காரம், அருகம்புல் மாலை.
ஹஸ்தம் - சந்தன அலங்காரம், அருகம்புல் மாலை.
சித்திரை - வெள்ளி கவசம், அறுகம்புல் மாலை.

சுவாதி - தங்கக் கிரீடம், அருகம்புல் மாலை.



விசாகம்- திருநீறு அலங்காரம்.
அனுஷம்- கஸ்தூரி மஞ்சள் அலங்காரம், தங்கக் கிரீடம், அறுகம்புல் மாலை, ரோஜா மாலை.
கேட்டை - தங்கக் கிரீடம், திருநீறு அலங்காரம், அறுகம்புல் மாலை.
மூலம் - சந்தன அலங்காரம், அறுகம்புல் மாலை.
பூராடம்- தங்கக் கிரீடம், திருநீறு அலங்காரம், அறுகம்புல் மாலை.
உத்திராடம்- அறுகம்புல் மாலை.
திருவோணம்- சுவர்ணம், அறுகம்புல் மாலை.

அவிட்டம் - மலர் அலங்காரம், வெள்ளிக் கவசம்.



சதயம் - குங்கும அலங்காரம், வெள்ளிக் கவசம்.
பூரட்டாதி- தங்கக் கிரீடம், அன்னம், அருகம்புல் மாலை.
உத்திரட்டாதி- ரோஜா மாலை அலங்காரம்.
ரேவதி- வெள்ளிக் கவசம், மலர் அலங்காரம், அருகம்புல் மாலை.







விநாயகரின் வினோதப் பெயர்கள்
திருக்கச்சூர் - கருக்கடி விநாயகர்
திருமுருகன்பூண்டி - கூப்பிடுபிள்ளையார்
கொட்டையூர் - கோடி விநாயகர்
திருப்பனையூர் - துணையிருந்த பிள்ளையார்
திருவிழிமலை - படிக்காசு விநாயகர்
நாகப்பட்டினம் - மாவடிப் பிள்ளையார்
திருநெல்வேலி - சந்திப்பிள்ளையார்
ஸ்ரீவைகுண்டம் - தூண்டில் விநாயகர்
குன்றக்குடி - தோகையடி விநாயகர்



ஸ்ரீ பெரும்புதூர் - வழித்துணை விநாயகர்
பழநி - கோசல விநாயகர்
சிவகங்கை - கௌரி விநாயகர்
மயிலாடுதுறை - அகத்திய விநாயகர்
தென்காசி - அணுக்கை பிள்ளையார்
செங்கோட்டை - ஆதிசூர விநாயகர்



திருவிதாங்கோடு - உமை அர்தபாக விநாயகர்
திருவாதவூர் - கபில விநாயகர்
வயலூர் - கீழைப் பிள்ளையார்
சுசீந்திரம் - உதயமார்த்தாண்ட விநாயகர்
வடசேரி - ஆகசாலை விநாயகர்

பயபத்திடேட்டா
திருநாமம் : பிள்ளையார் (நிரந்தர முதல்வர்)



பிறந்தநாள் : ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தி,
பெற்றோர் : பரமசிவன், பார்வதி
(மூலப் பொருளின் மூலமானவர்கள்)
சகோதரர்கள் : முருகன், ஐயப்பன்
( இருவரும் அப்பா பிள்ளைகள், விநாயகர் அம்மா பையன்)



மனைவியர் : கிரியாசக்தியான சித்தி, இச்சா சக்தியான புத்தி, ஞான சக்தியான வல்லபை (இவர்கள் தவிர மஹாவிஷ்ணுவின் புதல்வியரான, மோதை, பிரமோதை, சுமநசை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசினி, காந்தை, சாருஹாசை, சுமத்யமை, நந்தினி, சாமதை எனும் பன்னிருவரும் கூட கணபதியின் மனைவியரே ! )


மகன்கள் : க்ஷேமம், லாபம் (சித்ராங்கதன், புத்திராங்கதன் என்ற பெயர்களும் உண்டு)

மாமன் : மஹாவிஷ்ணு !
இருப்பிடம் : கரும்புச்சாறால் சூழப்பட்டதும், கயிலாயத்தின் ஒரு பகுதியுமான ஆனந்த புவனம் (குளக்கரை, மரத்தடி, முச்சந்தியும் கூட உறைவிடங்களே ! )

வாகனம் : கிருதயுகத்தில் சிங்கம், திரேதாயுகத்தில் மயில், துவாபர யுகத்தில் மூஞ்சூறு, கலியுகத்தில் குதிரை)

பிடித்த கனி : மாம்பழம் (அன்னையும் தந்தையும் உலகத்திற்கு சமமானவர்கள் என உணர்த்திப் பெற்றது.
பிடித்த பலகாரம் : கொழுக்கட்டை (பிடித்து வைக்கப்படுபவர்க்குப் பிடித்த பலகாரமும் பிடித்து வைக்கப்படுவது)
ஒடித்தது : தந்தம் (பாரதம் எழுதவும், கஜமுகனை அழிக்கவும் )
கொடுத்தது : காவேரி (தமிழகத்திற்காக அன்றே திறந்துவிடப்பட்ட ஆறு)
அருளியது : ஒளவைக்கு, அகத்தியருக்கு, அடியார்களுக்கு.
அழித்தது : ஆணவம், கன்மம், மாயை நிறைந்த அசுரர்களை.
அவதார நோக்கம் : தன்னை நினைத்து தொடங்கும் செயல்களில் குறுக்கிடும் தடைகளைத் தகர்த்து எண்ணிய எண்ணம் ஈடேற அருளுதல்.



* சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் கணேசரின் முன் காளை வாகனம் காணப்படுகிறது.
* திருமாலின் உறைவிடம் பாற்கடல் ! கணபதியின் உறைவிடத்தைச் சுற்றியிருப்பது கருப்பஞ்சாறு கடல்.
* ஆதிசங்கரர் கணேச பஞ்சரத்நத்தை எழுதியது திருவானைக்காவில் உள்ள விநாயகர் சன்னதியில்.
* கோவையிலுள்ள ஒரு விநாயகரின் பெயர் டிரான்ஸ்பர் விநாயகர்.
* சிவசக்தியருக்கு இடையே அமைந்த சோமகணபதி மூர்த்தம் தேனம்பாக்கத்தில் உள்ளது.


* மீனாட்சியம்மன் ஆலயத்தில் 108 விநாயகர் திருவுருவங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
* மங்கோலியர்கள் விநாயகரை தோத்கார் அவுன்காரகன் என்றழைக்கின்றனர்.
* ஆனைமுகனின் உறைவிடம் கயிலையின் ஒரு பகுதியான ஆனந்தபுவனம்.

* கணபதிக்கு திபத்தியர்கள் வைத்துள்ள பெயர் ட்ஸோக்ப்டாக்.
* திருவண்ணாமலை ஆலய நுழைவாயிலில் உள்ள விநாயகரின் பெயர் அல்லல் தீர்க்கும் பிள்ளையார்.


* சதுர்த்தியன்று மட்டுமே விநாயகரை துளசியால் பூஜிக்கலாம்.
* உத்திராட நட்சத்திரத்தின் அதிதேவதை கணபதி.
* ஜாவா தீவில் விநாயகர் கபால மாலையணிந்து காணப்படுகிறார்.
* பர்மாவில் கணபதி மகாபைனி என்றழைக்கப்படுகிறார்.
* அருணகிரிநாதர் விநாயகரை ஐந்துகரப் பண்டிதன் எனக் குறிப்பிட்டுள்ளார்.


* திருச்சி உச்சிப்பிள்ளையார் தலையில் விபீஷணன் குட்டிய வடு இன்னும் காணப்படுகிறதாம்.
* முக்குறுணி விநாயகருக்குரிய மோதகம் செய்யப்படுவது 24 படி அரிசியால்.
* ஆந்திரா ஸ்ரீ சைலத்தில் கணபதி கையில் புல்லாங்குழலுடன் காணப்படுகிறார்.
* திருப்பரங்குன்க்குறத்தில் கரும்பு வில் தாங்கிய கற்பக விநாயகர் காட்சியளிக்கின்றார்.
* ப்ராஹ்கெனேஸ் என்பது, கம்போடியாவில் கணேசருக்கு வழங்கும் பெயர்.



: ( ) : kamakoti.org:
 
பிள்ளையார் கண் திறந்தாரா, இல்லையா?

பிள்ளையார் கண் திறந்தாரா,
இல்லையா?


(29-08-2014 பிள்ளையார் சதுர்த்தி)

[எஸ்.ரமணி அண்ணா எழுதிய புத்தகத்தில் இருந்து
வரகூரான் நாராயணனால் தமிழில் டைப் செய்யப்பட்டது]
2012 பதிவு

பல வருடங்களுக்கு முன் காஞ்சி மகா பெரியவர் தமிழகத்தின்
தென்பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பம்.....
தஞ்சாவூர்,திருச்சி, திருவானைக்காவல், ஸ்ரீரங்கம்,திண்டுக்கல்,
சோழவந்தான் ஆகிய ஊர்களுக்கு விஜயம் செய்துவிட்டு,
மதுரையை நோக்கித் தன் பரிவாரங்களுடன் வந்துகொண்டிருந்தார்.
ஸ்வாமிகள். வழி நெடுகிலும் உள்ள கிராம மக்கள் தங்கள்
குழந்தை குட்டிகளுடன் திரளாக வந்து ஸ்வாமிகளை தரிசித்து
ஆசிபெற்றுச் சென்றனர். அவர்களுக்கெல்லாம் இன்முகத்தோடு
அருளாசி வழங்கினார். பழம்,கல்கண்டு ஆகியவற்றைப்
பிரசாதமாக கொடுத்துக்கொண்டே நடந்தார் ஸ்வாமிகள்.

மதுரை மாநகரை நெருங்கும் நேரம். அங்கிருந்த ஒரு கிராமத்து
ஜனங்கள் அனைவரும் ஒன்றுகூடி "பூர்ணகும்ப" மரியாதையுடன்
ஸ்வாமிகளை வரவேற்றார்கள்.அந்த ஜனங்களின் பக்தியையும்
ஆர்வத்தையும் பார்த்த ஸ்வாமிகளுக்கு ஏக சந்தோஷம்.
சாலையோரம் இருந்த ஓர் அரசுமரத்து வேரில் வந்து அவராகவே
அமர்ந்துகொண்டார். அனைவரும் கீழே விழுந்து நமஸ்கரித்தனர்.

அந்த ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் மிகுந்த பக்தியுடன் ஸ்வாமிகளை
நமஸ்கரித்தார். பிறகு, "பெரியவங்ககிட்ட ஒண்ணு
பிரார்த்திக்கிறோம். நாங்க ஏழை சனங்கல்லாம் ஒண்ணா சேந்து,
பக்கத்துல ஒரு புள்ளயார் கோயிலை புதுசா கட்டி முடிச்சிருக்கோம்.
சாமி பாதம் அங்க படணும்னு வேண்டிக்கிறோம்....கருண பண்ணணும்!"
என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்

குதூகலத்தோடு எழுந்த ஆச்சார்யாள், "கோயில் எங்கே இருக்கு?"
என வினவினார்.

பஞ்சாயத்துத் தலைவர், "இதோ கூப்பிடு தூரத்திலதான் சாமி இருக்கு.
வந்து அருள் பண்ணணும்!" என்றார்.

ஸ்வாமிகள் மிக வேகமாக பிள்ளையார் கோயிலை நோக்கி நடந்தார்.
மேளதாள-பூரணகும்ப மரியாதையுடன் ஆச்சார்யாள் கோயிலுக்குள்
பிரவேசித்தார். கர்ப்பக்கிருகத்துள் ஆறடி உயர சிலா ரூபமாக
விநாயகர் வீற்றிருந்தார். விக்கிரகம் கம்பீரமாக பளிச்சென்று
இருந்தது. வைத்த கண் வாங்காமல் சற்று நேரம் விநாயகரையே
பார்த்த பெரியவா,பஞ்சாயத்துத் தலைவரிடம்,

"கோயிலுக்கு கும்பாபிஷேகம் ஆயிடுத்தோ?" என்று கேட்டார்.

"இன்னும் ஆகலீங்க சாமி" என்றார் தலைவர்.

"அதான் எல்லாமே பூர்த்தியாகி இருக்கே...ஏன் இன்னும்
கும்பாபிஷேகம் நடத்தலே?" என்று கேட்டார் ஸ்வாமிகள்.

பஞ்சாயத்துத் தலைவர் பவ்வியமாக பதில் சொன்னார்.;
"எல்லாமே பூர்த்தி ஆயிடுச்சு சாமி. இன்னும் ஒரு மாசத்துக்குள்ளாற
மகாத்மா காந்தி இந்த வழியா மதுரைக்கு வாராறாம்.அவுரு
வர்றன்னிக்கு, 'அவருக்கு முன்னால வெச்சே கும்பாபிஷேகத்த
நடத்த ஏற்பாடு பண்ணித் தர்றோம்'னு மதுரையைச் சேர்ந்த சில
பெரிய மனுஷங்க உறுதி கொடுத்திருக்காங்க! அதனாலதான்
காந்தீஜீக்காகக் காத்துக்கிட்ருக்கோம்!"

ஆச்சார்யாள் தனக்குள் சிரித்துக்கொண்டார். இரண்டு நிமிஷம்
கண்ணிமைக்காமல் விநாயகரையே பார்த்துவிட்டுச் சொன்னார்.

"அதுக்கு அவசியம் இருக்காது போலத் தோண்றதே!
கணபதி கண்ணத் திறந்து நன்னா பாத்துண்ருக்காரே...இனிமே
கும்பாபிஷேகத்த தாமசப்படுத்தப்படாது. ஒடனேயே நல்ல நாள்
பார்த்து பண்ணிடுங்கோ."

உடனே பஞ்சாயத்துத் தலைவர், "இல்லீங்க சாமி! கண் தொறக்கிற
சடங்கு விநாயகருக்கு இன்னும் நடக்கலீங்க சாமி! நீங்க இப்படி
சொல்றத பாத்தா ஒண்ணும் புரியலீங்களே.." என்று குழம்பினார்.

ஸ்வாமிகள் மீண்டும் சிரித்துக்கொண்டே, "இது நானா சொல்லலே!
கணபதி கண்ணைத் திறந்து நன்னா "ஸ்பஷ்டமா" பார்த்துண்ருக்கார்.
சீக்கிரமே கும்பாபிஷேகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் பண்ணுங்கோ!
காந்தி வந்தா நன்னா தரிசனம் பண்ணிட்டுப் போகட்டுமே" என்று
கூறினார். குழுமியிருந்த ஜனங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
அமைதியோடு காத்திருந்தனர்.

பஞ்சாயத்துத் தலைவருக்கும் குழப்பம் தீரவில்லை. உடனே
ஆளனுப்பி விநாயகர் சிலையை வடிவமைத்த ஸ்தபதியை
வரவழைத்தனர்.அவரிடம் ஆச்சார்யாள் சொன்ன விஷயம்
தெரிவிக்கப்பட்டது.

சிற்பியும் அடித்துச் சொன்னார்; "இல்லீங்க ஸ்வாமி..இன்னும்
விநாயகருக்கு கண் தொறக்கலீங்க. தொறந்தா விக்கிரகத்தச்
செதுக்கின நான்தானே தொறக்கணும்..இன்னும் அது ஆவுலீங்க.."

மூன்று தடவை ஆச்சார்யாள் காலில் விழுந்து
கை கட்டி நின்றார் சிற்பி.

மீண்டும் ஒருமுறை விக்கிரகத்தையே உற்று நோக்கிய ஸ்வாமிகள்
"மகா கணபதிக்கு நன்னா கண் தெறந்தாச்சு! அவர் சந்தோஷமா
பாத்துண்டிருக்கார். இனிமேலும் தாமதிக்கிறது நல்லதில்லே.
சீக்கிரமா ஒரு நல்ல நாள் பாத்து கும்பாபிஷேகத்த நடத்துங்கோ..
க்ஷேமம் உண்டாகும்" என்று சொல்லிவிட்டு வேகவேகமாகப்
புறப்பட்டுவிட்டார் ஆச்சார்யாள். பரிவாரம் பின்தொடர்ந்தது.
ஆச்சார்யாளை அந்த ஊர் எல்லை வரை சென்று வழி அனுப்பி
வைத்துவிட்டுத் திரும்பினர்,அத்தனை பேரும்.

சற்று நேரத்துக்கெல்லாம் அந்த ஊர் கிராமப் பஞ்சாயத்து சபை'
கூடியது. ஆச்சார்யாள் கூறிவிட்டுப் போன விஷயம் குறித்து
அலசி ஆராயப்பட்டது. விநாயகர் விக்கிரகத்தைச் செதுக்கிய
சற்று வயதான ஸ்தபதி அடித்துச் சொன்னார்.
"ஆச்சார்ய ஸ்வாமிங்களுக்கு ஞான திருஷ்டில எல்லா
விஷயங்களும் தெரிஞ்சுடும்.இருந்தாலும் எங்கையால் நான்
இன்னும் கண்ண தொறக்கலே.சாமி எப்டி சொல்றாங்கனு
தெரியலே.நானும்கூட விக்கிரகத்துகிட்ட போயி உன்னிப்பா
கவனிச்சுப் பாத்துட்டேன்.அப்டி ஆனதா தெரியலீங்க....
இப்ப என்ன பண்றது?"

அங்கே மௌனம் நிலவியது. ஒருவரும் வாய் திறக்கவில்லை.
திடீரென்று பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க உள்ளூர்ப் பையன்
ஒருவன் அந்த இடத்துக்கு ஓடி வந்தான்.கை கட்டி நின்றான்.

அவனைப் பார்த்த தலைவர், "தம்பி! ஏன் இப்படி ஓடி வர்றே?
என்ன விஷயம்?" என்று கேட்டார்.

உடனே அந்தப் பையன் "தலைவரே! கோயில் விநாயகர் சிலை
பத்தி எனக்கு ஒரு விஷயம் தெரியும்..சொல்லலாங்களா?"
என்று கேட்டான் பவ்யமாக.

"ஒனக்கு என்ன தெரியும்..சொல்லு தம்பி!" என்று மிக ஆர்வம்
காட்டினார் தலைவர். கூட்டமும் அந்தப் பையனையே
பார்த்துக் கொண்டிருந்தது.

பையன் பேச ஆரம்பித்தான்; "ஐயா தலைவரே! எனக்கு தெரிஞ்ச
உண்மையை சத்தியமா சொல்றேங்க. அந்த சாமியார் சாமி
[ஆச்சார்யாள்] 'புள்ளையாருக்கு கண் தொறந்தாச்சு'னு
சொல்லிட்டுப் போனது மெய்தாங்க! எப்படீன்னா ஒரு பத்து
நாளுக்கு முந்தி ஒரு நாள் உச்சி வெயில் நேரமுங்க.இதோ
ஒக்காந்துருக்காரே..புள்ளையார் விக்கிரகத்தைச் செஞ்ச தாத்தா..
இவரோட பேரப் பையன்..என் சிநேகிதன். என்ன வேலை
பண்ணான் தெரியுமா? இவங்க தாத்தா சிலைகளின் கண்ண
தொறக்கறத்துக்கு வெச்சிருக்கிற சின்ன உளியையும்,சுத்தியையும்
எடுத்துக்கிட்டு,எங்களையும் கூட்டிக்கிட்டு கோயிலுக்குப் போனான்.

"இதோ பாருங்கடா! எங்க தாத்தா இப்புடித்தான் சிலைங்க கண்ணைத்
தொறப்பாருன்'ன்னு சொல்லிகிட்டே,'புள்ளையாரே,கண்ணத்தொற...
புள்ளையாரே,கண்ணத் தொற!'னு அவனும் சொல்லி, எங்களையும்
ஒரக்க சொல்லச் சொல்லி, "டொக்கு..டொக்குனு" உளிய புள்ளயாரின்
ரண்டு கண்ணுலயும் வச்சு தட்டினான்.."புள்ளையாருக்கு கண்
தொறந்தாச்சு"னு எல்லாப் பசங்களும் குதிச்சு ஆடினோம்.இந்த
விஷயம் ஊர்ல ஒருத்தவங்களுக்கும் தெரியாது. நாங்களும் வெளியிலே
மூச்சு வுடலே! இது தாங்க நடந்துச்சு....எங்களை மன்னிச்சுருங்க."

பிரமிப்போடு அமர்ந்திருந்தது கூட்டம். பஞ்சாயத்துத் தலைவர்கண்களில்
நீர் சுரந்தது.ஆச்சார்யாளின் மகிமையைப் பார்த்து அந்த ஊரே வியப்பில்
ஆழ்ந்தது. சிற்பியின் பேரனுக்கு எட்டு வயதிருக்கும். பஞ்சாயத்து அந்தச்
அழைத்து விசாரித்தது. விநாயகருக்கு, தான் கண்களைத் திறந்துவிட்டதை
ஒப்புக் கொண்டான். எல்லோரும் கோயிலுக்கு ஓடிச் சென்று விநாயகரை
விழுந்து வணங்கினர். சிற்பி, ஒரு பூதக் கண்ணாடியின் உதவியோடு
கணபதியின் கண்களை நன்கு பரிசீலித்தார்.

மிக அழகாக "நேத்ரோன் மீலனம்" [கண் திறப்பு] செய்யப்பட்டிருந்ததைப்
பார்த்து ஆச்சர்யப்பட்டார்.

ஊரே திரண்டு ஆச்சார்யாள் சென்ற திசையை நோக்கி ஓடியது. அடுத்த
கிராமத்தில் சாலை ஓரமிருந்த ஒரு பெரிய ஆலமர நிழலில்
பரிவாரங்களுடன் இளைப்பாறிக்கொண்டு இருந்தார் ஸ்வாமிகள்.

அனைவரும் ஓடிப் போய் ஸ்வாமிகள் காலில் விழுந்து எழுந்தனர்.
அந்தப் பஞ்சாயத்துத் தலைவரும்,சிற்பியும் கேவிக்கேவி
அழ ஆரம்பித்துவிட்டனர்.

இவர்களைப் பார்த்த அந்த பரப்பிரம்மம் சிரித்துக்கொண்டே கேட்டது;
"புள்ளையாருக்குக் கண் தெறந்தாச்சுங்கறத பிரத்தியட்சமா
தெரிஞ்சுண்டுட்டேளோல்லியோ? போங்கோ....போய் சீக்கிரமா
கும்பாபிஷேகத்த நடத்தி முடியுங்கோ. அந்த பிராந்தியத்துக்கே
க்ஷேமம் உண்டாகும்."


Source: Sage of Kanchi

Siva Kumae
 
Incarnations & names of Ganesha

Incarnations & names of Ganesha



The four Ganesh incarnations during the Yuga
According to the Ganesha Purâna, four Ganesh incarnations came on earth during the different periods (yuga), in order to fight the devils. They are :


1.Mahotkata with ten arms, seated on a lion, shining like the sun, came during the Krita Yuga to kill the demons Narântak and Devântak



2.Wite-colored Shri Mayureshvar with six arms, riding the peacock, faced the demon Sindhu during the Treta Yuga



3.Red-colored Shri Gajânana with four arms, mounted on his rat, destroyed the demon Sindur during the Dwapara Yuga


4.Dhûmraketu is the form of Ganesh who will come in the future; we are now living in the Kali Yuga. Two-arms and smoke-colored Dhûmraketu will ride on a blue horse; he will fight all the devils to restore peace and harmony in the world.



The eight incarnations of Ganesh



The Mudgala Purâna, is an eminent scripture dated of the 16 th century. It tells the story of the eight incarnations of Ganesh. Let us describe them in brief :



1. Vakratunda, "the Lord with the curved trunk". He is represented seated on a lion. He came to struggle against the devil Matsara, who is the symbol of jealousy.



2. Ekadanta, "the Lord who has only one tusk". exterminated Mada, the demon of drunkeness.



3. Mahodara, "the Lord who has a big belly", gives battle to Moha, the demon of illusion.



4. Gajânana, "the Lord with an elephant face", put Lobha, the demon of greed, to death .



5. Lambodara, "the Lord with a protuberant belly", masters Krodha, the demon of anger.



6. Vikata, "the misshapen", subdued Kâma, the demon of desire Ekadanta, Mahodara, Gajânana, Lambodara and Vikata are represented mounted on a rat.


7. Under the form of Vighnarâja, "the Lord King of obstacles", lying on Shasha, the Snake of Eternity, Ganesh destroyed Mama, the demon of ego.



8. Finally, the last Ganesh incarnation is Dhûmravarna, "the Lord with a tawny color", riding a mouse, who got victory over Ahamkâra, the demon of self-infatuation.

These mythic forms demonstrate that Ganesh has the capacity to reduce all the human weaknesses, such as jealousy, drunkeness, illusion, greed, anger, desire, egotism, self-infatuation (arrogance), which send the devotee away from his path to god.






The twenty one names of Ganesh



During a pûjâ, offerings of flowers and rice accompany the 21 Ganesh names (eka vishanti nama) as follow :
1. Vighnarâja : "The King of obstacles"
2. Gajânana : "The Lord who has an elephant face"
3. Lambodara : "The Lord with a prominent belly"
4. Shivatmaja (son of Shiva)
5. Vakratunda : "The Lord with a twisted trunk"
6. Supakarna
7. Ganeshvara : "The Lord of the Gana"
8. Vighnanashin : "The Destroyer of Obstacles"
9. Vikata : "The Misshapen"
10. Vamana : "The Dwarf"
11. Sarvadeva
12. Sarvadukhavinâshi
13. Vighnarhartr : "The Lord who cancels the obstacles"
14. Dhûmrâja
15. Sarvadevâdhideva
16. Ekadanta : "The Lord who has only one tusk"
17. Krishnapingala : "The blue and dark Lord"
18. Bhâlachandra : "The Lord who carries the crescent of moon on his head"
19. Gananâtha : "The supreme Chief of the Gana"
20. Shankarasunav : "The son of Shankara"
21. Anangapujita : "The formless Lord"



The thirty two names of Ganesh
The Srîtattvanidhi is a document written in the 19 th century in Karnataka, under the guidance of the Mysore Mahârâja. It compiles and describes in detail the thirty two main forms of Ganesh.

1. Bâla Ganapati : "Ganapati the Child". He has four arms. His hands bear a mango, a small branch of a mango-tree, a stem of sugar-cane and a cake.

2. Taruna Ganapati : "Ganapati the Teenager". Her has eight arms. His hands expose the single tusk, the elephant goad, the kapittha fruit, the sugar-cane, the noose, the paddy ear, the apûpa cake.

3. Bhakta Ganapati : "Ganapati, the Perfect Worshippert". He has four arms. His hands show a banana, the small branch of a mango-tree, the bowl of sugared rice (payâsapâtra).

4. Vîra Ganapati : "Ganapati the Hero". He has sixteen arms. He wears the trident, the vampire, the two-head club, the axe, the arrow, the elephant goad, the sword, the disc, the pestle, the club, the snake, the spear, the banner, the bow, the noose and the small damaru drum.

5. Shakti Ganapati : "Ganesh embracing the goddess Success; – Pushti". He has four arms. His low right hand shows the movement of lack of fear (abhaya); the two others wear the elephant goad and the noose; the last hand, who holds a lemon, embraces the goddess. With the top of his trunk, Shakti Ganapati holds a cake.

6. Ucchista Ganapati : "Ganapati devouring the remnants of the meal". He has six arms. His hands show the rosary, the pomegranate, the paddy ear (shalyagra), the nocturnal lotus, the lute (vîna) ; his sixth hand sometimes bears a guñja berry, embraces the goddess. The Ucchista Ganapati trunk is placed on the goddesse's thigh.

7. Siddhi Ganapati : "Ganapati bestowing success", fond of the sesame cake. He has four arms. His hands hold the axe, the noose, the sugar-cane stem and the mango.

8. Dvija Ganapati : "Ganapati the Twice-Born". He has four heads and four arms. His hands hold the rosary, the washing pot (kamandalu), the walking-stick of an ascetic or the ritual spoon (sruk) and the manuscript on palm-leaves (pustaka).

9. Vighna Ganapati : "Ganapati removing the obstacles". He has eight arms. His hands hold the single tusk, the disc, the arrow-flowers, the hatchet, the conch, the sugar-cane stem, the noose, the elephant goad. With the tip of his trunk, he carries a bunch of flowers (pushapamañjari).

10. Kshipra Ganapati : "Ganapati the Speedyle". He has four arms. His hands show the single tusk, the elephant goad, the creeper of the votive tree (kalpalatâ), the noose. With the end of his trunk, he carries the stone cup full of precious stones (ratnakumbha).

11. Heramba Ganapati : "The five-heads Ganapati riding the lion". He has ten arms. His first hand shows the movement of lack of fear(abhaya), the others hold the rosary, the citron, the club, the elephant goad, the noose, the axe, the kadabu cake, the single tusk; his tenth hand shows the movement which bestows boons (varada).

12. Lakshmî Ganapati : "Ganapati the Fortunate" embracing his wives Siddhi and Buddhi. He has eight arms. His hands hold a pomegranate, a sword, the the creeper of the votive tree, the elephant goad, the parrot, the noose, the jewels pot; his eighth hand bestows boons (varada).

13. Mahâganapati : "The Great Ganapati" with the goddess Wealth – Pushti. He has ten hands. His hands hold the single tusk, the pomegranate, the club, the sugar-cane bow, the disc, the conch, the noose, the nocturnal lotus, the paddy ear, the jewels pot.

14. Vijaya Ganapati : "Ganapati the Victorious", riding a rat which trots at a smart pace. He has four arms. His hands hold the single tusk, the elephant goad, the noose and the mango.

15. Nrtya Ganapati : "The Dancing Ganapati" under the boon-tree. He has four arms. His hands hold the single tusk, the elephant goad, the noose, the axe (parashu) or the hatchet (kuthâra). The dhyâna sloka specifies that one of the four hands can show a cake apûpa.

16. Ûrdhva Ganapati : "The Rising Ganapati", seated with his Shakti on his left thigh. He has eight arms. His hands hold the single tusk, the arrow-flower, the daylight lotus, the blue lily (kalhara), the sugar-cane bow, the paddy ear, the club; his last hand claps the goddess. The extremity of his trunk is rolled around the right breast of the goddess.

17. Vara Ganapati : "The Delightful Ganapati" with the goddess Wealth – Pushti, seated on his left thigh. He has four arms. His first three hands hold the elephant goad, the skull filled with liquor (madhumatkapâla) and the noose. The fourth hand creeps between the thighs of the goddess who holds a lotus and a banner.

18. Ekâkshara Ganapati : "Ganapati identified with the word OM". He has four arms. His hands hold the single tusk, the elephant goad, the noose and the cake modaka. Somtimes, he wears, with the extremity of his trunk (bîjapûra).

19. Tryakshara Ganapati : "The Three-letters A+U+M Ganapati". He has four ars. His hands hold the single tusk, the elephant goad, the noose and the mango. He holds the cake modaka with the trunk end.

20. Kshipraprasâda Ganapati : "Ganapati bestowing quickly his mercy". He has six arms. His hands hold the single tusk, the elephant goad, the lotus, the creeper of the votive tree (kalpalatâ), the noose, the lemon.

21. Haridrâ Ganapati : "The curcuma-colored Ganapati". He has four arms. His hands hold the single tusk, the elephant goad, the noose and the cake modaka.

22. Ekadanta Ganapati : "The Single Tusk Ganapati". He has four arms. His hands hold a large tusk, a rosary, a hatchet (kuthâra) and the small ball of sweets (laddu).

23. Shristi Ganapati : "Ganapati the Creator", riding a big rat. His has four arms. His hands hold the single tusk, the elephant goad, the noose and the mango.

24. Uddanda Ganapati : "Ganapati the Unchained", with his Shakti seated on his left thigh. He has twelve arms. His hands hold the single tusk, the club, the nocturnal lotus, the noose, the paddy ear, the elephant goad, the washing pot (kamandalu), the sugar-cane bow, the disc, the daylight lotus, the conch and the pomegranate. His trunk is placed on the top of the goddesse's breast or, sometimes, maintains a jewels pot (manikumbha).

25. Sankatahara Ganapati : "Ganapati seated on a large lotus with his Shakti "; he removes the impediments. He has four arms. His first hand show the movement to bestow boons (varada) ; the three others hold the elephant goad, the noose and the bowl of sugared rice (pâyasapâtra).

26. Dundhi Ganapati : "The Ganapati which we have to look for". He has four arms. His hands hold the single tusk, the rosary, the hatchet (kuthâra) and the pot of jewels (ratnapâtra).

27. Trimukha Ganapati : "The Tree-Head Ganapati". He has six arms. His first hand shows the movement which gives boons (varada), the four others hols a very sharp elephant goad, a rudrâksha grain of the rosary, the noose and the ambrosia pot (amritakumbha) ; the sixth hand removes the fear (abhaya).

28. Simha Ganapati : "The Lion-face Ganapati". He has eight arms. His first hand shows the movement which bestow boons (varada). The following hold the disc, the bunch of flowers, the lute (vîna), thez daylight lotus, the jewels pot, the creeper of the votive tree; the last hand shows the movement which removes fear (abhaya).

29. Yoga Ganapati : "Ganapati the Ascetic". He has four arms. His legs are surrounded with the meditation girdle (yogapatta). His hands hold the rosary, the elbow-rest or the walking-stick, the noose and the sugar-cane.
30. Durgâ Ganapati : "Ganapati similar the the Goddess Durgâ". He has eight arms. His hands hold the single tusk, the elephant goad, the arrow, the rosary, the noose, the bow, the creeper of the votive tree (kalpalatâ) and the rose-apple fruit.

31. Rnamocaka Ganapati : "Ganapati who discharges from debts". He has four arms. His hands hold the single tusk, the elephant goad, the noose and the rose-apple fruit.



The fifty one names of Ganesh

South India is the main region where 108 names are given to Ganesh, as many as letters of the sanskrit alphabet.


1 Akhurath One who has Mouse as His Charioteer
2 Alampata Ever Eternal Lord
3 Amit Incomparable Lord
4 Anantachidrupamayam Infinite and Consciousness Personified
5 Avaneesh Lord of the whole World



6 Avighna Remover of Obstacles
7 Balaganapati Beloved and Lovable Child
8 Bhalchandra Moon-Crested Lord
9 Bheema Huge and Gigantic
10 Bhupati Lord of the Gods



11 Bhuvanpati God of the Gods

12 Buddhinath God of Wisdom
13 Buddhipriya Knowledge Bestower
14 Buddhividhata God of Knowledge
15 Chaturbhuj One who has Four Arms



16 Devadeva Lord of All Lords
17 Devantakanashakarin Destroyer of Evils and Asuras
18 Devavrata One who accepts all Penances
19 Devendrashika Protector of All Gods
20 Dharmik One who gives Charity


21 Dhoomravarna Smoke-Hued Lord
22 Durja Invincible Lord
23 Dvaimatura One who has two Mothers
24 Ekaakshara He of the Single Syllable

25 Ekadanta Single-Tusked Lord



26 Ekadrishta Single-Tusked Lord
27 Eshanputra Lord Shiva's Son
28 Gadadhara One who has The Mace as His Weapon
29 Gajakarna One who has Eyes like an Elephant
30 Gajanana Elephant-Faced Lord



31 Gajananeti Elephant-Faced Lord
32 Gajavakra Trunk of The Elephant
33 Gajavaktra One who has Mouth like an Elephant
34 Ganadhakshya Lord of All Ganas (Gods)
35 Ganadhyakshina Leader of All The Celestial Bodies


36 Ganapati Lord of All Ganas (Gods)
37 Gaurisuta The Son of Gauri (Parvati)
38 Gunina One who is The Master of All Virtues
39 Haridra One who is Golden Coloured
40 Heramba Mother's Beloved Son



41 Kapila Yellowish-Brown Coloured
42 Kaveesha Master of Poets
43 Krti Lord of Music
44 Kripalu Merciful Lord
45 Krishapingaksha Yellowish-Brown Eyed



46 Kshamakaram The Place of Forgiveness
47 Kshipra One who is easy to Appease
48 Lambakarna Large-Eared Lord
49 Lambodara The Huge Bellied Lord
50 Mahabala Enormously Strong Lord



51 Mahaganapati Omnipotent and Supreme Lord
52 Maheshwaram Lord of The Universe
53 Mangalamurti All Auspicious Lord
54 Manomay Winner of Hearts
55 Mrityuanjaya Conqueror of Death


56 Mundakarama Abode of Happiness
57 Muktidaya Bestower of Eternal Bliss
58 Musikvahana One who has mouse as charioteer
59 Nadapratithishta One who Appreciates and Loves Music
60 Namasthetu Vanquisher of All Evils & Vices & Sins



61 Nandana Lord Shiva's Son
62 Nideeshwaram Giver of Wealth and Treasures
63 Omkara One who has the Form Of OM
64 Pitambara One who has Yellow-Coloured Body
65 Pramoda Lord of All Abodes



66 Prathameshwara First Among All
67 Purush The Omnipotent Personality
68 Rakta One who has Red-Coloured Body
69 Rudrapriya Beloved Of Lord Shiva
70 Sarvadevatman Acceptor of All Celestial Offerings



71 Sarvasiddhanta Bestower of Skills and Wisdom
72 Sarvatman Protector of The Universe
73 Shambhavi The Son of Parvati
74 Shashivarnam One who has a Moon like Complexion
75 Shoorpakarna Large-Eared Lord



76 Shuban All Auspicious Lord
77 Shubhagunakanan One who is The Master of All Virtues
78 Shweta One who is as Pure as the White Colour
79 Siddhidhata Bestower of Success & Accomplishments
80 Siddhipriya Bestower of Wishes and Boons



81 Siddhivinayaka Bestower of Success

82 Skandapurvaja Elder Brother of Skand (Lord Kartik)
83 Sumukha Auspicious Face
84 Sureshwaram Lord of All Lords
85 Swaroop Lover of Beauty



86 Tarun Ageless
87 Uddanda Nemesis of Evils and Vices
88 Umaputra The Son of Goddess Uma (Parvati)
89 Vakratunda Curved Trunk Lord
90 Varaganapati Bestower of Boons



91 Varaprada Granter of Wishes and Boons
92 Varadavinayaka Bestower of Success
93 Veeraganapati Heroic Lord
94 Vidyavaridhi God of Wisdom
95 Vighnahara Remover of Obstacles



96 Vignaharta Demolisher of Obstacles
97 Vighnaraja Lord of All Hindrances
98 Vighnarajendra Lord of All Obstacles
99 Vighnavinashanaya Destroyer of All Obstacles & Impediments
100 Vigneshwara Lord of All Obstacles



101 Vikat Huge and Gigantic
102 Vinayaka Lord of All
103 Vishwamukha Master of The Universe
104 Vishwaraja King of The World
105 Yagnakaya Acceptor of All Sacred & Sacrficial Offerings
106 Yashaskaram Bestower of Fame and Fortune
107 Yashvasin Beloved and Ever Popular Lord
108 Yogadhipa The Lord of Meditation






Source: Sage of Kanchi

Jambunatha Iyer
 
பிள்ளையாரை முதல் வழிபாடு ஏன்?

வராக புராணத்தில் இதற்கொரு கதை சொல்லப்பட்டுள்ளது.

ஒரு சமயத்தில் சௌனகாதி முனிவர்கள் ஒன்று கூடி தாங்கள் செய்கிற எல்லா நற்செயல்களும் சரிவர நடக்காமலும் பூர்த்தி அடையாமலும் போய் விடுவதாகவும் எண்ணிக் குழப் பம் அடைந்தனர்.

இதற்குத் தீர்வு காண பரமேஸ்வரனிடம் சென்று முறையிட்டனர்.

பரமன் தனது தர்ம பத்தினியாம் பார்வதி தேவியை
ஞானக் கண்ணால் உற்று நோக்கினார்.

அந்த சமயத்தில் அதிசயிக்கும் வகையில், மோகன வடிவத்தில், எல்லோரையும் கவர்ந் திழுக்கும் அழகோடு பிள்ளை ஒருவன் தோன்றினான்.


Source: Sage of Kanchi

Rama Kuppuswamy
 
பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற&#

பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக?

மகா பெரியவா-தெய்வத்தின் குரல்

‘விநாயக மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன. பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக? விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து “உன் சிரசையே எனக்குப் பலி கொடு” என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் ப்ரியம் ஏற்படுகிறது.

அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈசுவரனைப்போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார்.

சிதறு தேங்காய் என்ற உடைக்கிற வழக்கம் தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது. இப்படிச் சிதறிய துண்டங்கள் யாருக்கு உரிமை என்றால் குழந்தைகளுக்குத்தான். இந்த உண்மை ஒரு குழந்தை மூலமாகத்தான் எனக்கே தெரிந்தது. அப்போது (1941) நான் நாகைப்பட்டினத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அநுஷ்டித்து வந்தேன். அங்கே கோயிலில் பிள்ளையாருக்கு நிறையச் சிதறுகாய் போடுவது வழக்கம். காயை உடைக்கவே இடம் கொடுக்காத அளவுக்குக் குழந்தைகள் ஒரே நெரிசலாகச் சேர்ந்துவிடும். திபுதிபு என்று அவை ஓடி வருவதில் என்மேல் விழுந்துவிடுப் போகின்றனவே என்று என்கூட வந்தவர்களுக்குப் பயம். அவர்கள் குழந்தைகளிடம் “இப்படிக் கூட்டம் போடாதீர்கள், விலகிப் போங்கள்” என்று கண்டித்தார்கள். அப்போது ஒரு பையன் ‘டாண்’ என்று, “பிள்ளையாருக்குத் தேங்காய் போட்டுவிட்டு, அப்புறம் எங்களை இங்கே வராதீர்கள் என்று சொல்ல

உங்களுக்கு என்ன பாத்தியதையும்’ என்று தெரிந்தது.

அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அமிருத் ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது. கணபதியைக் காட்டிலும் சரீரத்தில் பருமனான ஸ்வாமி வேறு யாரும் இல்லை. சிரசு யானையின் தலை. பெரிய வயிறு. பெரிய உடம்பு. அவருக்கு ‘ஸ்தூல காயர்’ என்றே ஒரு பெயர். மலைபோல் இருக்கிறார். ஆனாலும் அவர் சின்னக் குழந்தை சரி, குழந்தைக்கு எது அழகு? குழந்தை என்றால் அந்தப் பருவத்தில் நிறையச் சாப்பிட வேண்டும். உடம்பு கொஞ்சம்கூட இளைக்கக்கூடாது. ஒரு சந்நியாசி நிறையச் சாப்பிட்டுக் கொண்டு பெரிய சரீரியாக இருந்தால் அது அவருக்கு அழகல்ல. வயசாகிவிட்டால் ராத்திரி உபவாசம் இருப்பார்கள். குழந்தை அப்படி இருப்பது அழகா? குழந்தை என்றால் தொந்தியும் தொப்பையுமாகக் கொழு கொழுவென்று இருந்தால்தான் அழகு. நிறையச் சாப்பிடுவதுதான் அழகு. குழந்தைகள் நல்ல புஷ்டியாக இருக்க வேண்டும் என்பதை இந்தக் குழந்தைச்சாமியே காட்டிக் கொண்டிருக்கிறார், கையில் மோதகத்தை வைத்துக்கொண்டு.

இவரோ யானை மாதிரி இருக்கிறார். அதற்கு நேர் விரோதமான சின்னஞ்சிறு ஆகிருதி உடையது மூஞ்சூறு. இதை அவர் தம் வாகனமாக வைத்துக் கொண்டிருக்கிறார். மற்ற ஸ்வாமிகளுக்காவது ஒரு மாடு, ஒரு குதிரை, ஒரு பட்சி, என்று வாகனம் இருக்கிறது. இவரோ தாம் எத்தனைக்கு எத்தனை பெரிய ஸ்வாமியாக இருக்கிறாரோ, அத்தனைக்கு அத்தனை சின்ன வாகனமாக வைத்துக் கொண்டாலும் வாகனத்தினால் சுவாமிக்குக் கௌரவம் இல்லை. சுவாமியால்தான் வாகனத்துக்கு கௌரவம். வாகனத்துக்குக் கௌரவம் கொடுக்க, அதனுடைய சக்திக்கு ஏற்றபடி நெட்டிப் பிள்ளை யார் மாதிரியாகக் கனம் இல்லாமல் இருக்கிறார். அதற்குச் சிரமம் இல்லாமல், ஆனால் அதற்கு மரியாதை, கௌரவம் எல்லாம் உண்டாக்கும்படியாகத் தம் உடம்பை வைத்துக் கொண்டிருக்கிறார். ஸ்தூலகாயரான போதிலும், ‘பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்’ என்று காட்டுகிறார்.

ஒவ்வொரு பிராணிக்கும் ஒவ்வோர் அங்கத்தில் அதிகக் கௌரவம் இருக்கும். சவுரிமான் (கவுரிமான்) என்று உண்டு. அதன் கௌரவம் வாலில். மயில் என்றால் அதற்குத் தோகை விசேஷம். தோகையை மயில் ஜாக்கிரதையாக ரட்சிக்கும். யானை எதை ரட்சிக்கும்? தன் தந்தத்தைத் தீட்டி வெள்ளை வெளேர் என்று பண்ணுகிறது என்றால், அந்தக் கொம்பில் ஒன்றையே ஒடித்து, அதனால் மகாபாரதத்தை எழுதிற்று. தன் அழகு, கௌரவம், கர்வம் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிற ஒன்றைக் காட்டிலும், தர்மத்தைச் சொல்கிற ஒன்று நியாயத்துக்காக, தர்மத்துக்காக, விந்தைக்காக எதையும் தியாகம் பண்ண வேண்டும் என்பதைத்தானே தந்தத்தைத் தியாகம் பண்ணிக் காட்டியிருக்கிறது. ஸ்வாமிக்குக் கருவி என்று தனியாக ஒன்றும் வேண்டியதில்லை. எதையும் கருவியாக அவர் நினைத்தால் உபயோகித்துக் கொள்வார் என்பதற்கும் இது உதாரணம். ஒரு சமயம் தந்தத்தாலேயே அசுரனைக் கொன்றார். அப்போது அது ஆயுதம். பாரதம் எழுதும் இப்போது அதுவே பேனா.

நமக்குப் பார்க்கப் பார்க்க அலுக்காத வஸ்துக்கள் சந்திரன், சமுத்திரம்,

யானை ஆகியன. இவற்றையெல்லாம் எத்தனை தடவை, எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும், அலுப்புச் சலிப்பில்லாத ஆனந்தம் பொங்கும். அதனால்தான் குழந்தைஸ்வாமி தன்னைப் பார்க்கிற ஜனங்களுக்கு எல்லாம், பார்க்கப் பார்க்க ஆனந்தம் எப்போதும் பொங்கிக் கொண்டிருக்கும்படியாக யானை உருவத்தோடு இருக்கிறார். அது ஆனந்த தத்துவம்: ஆராத ஆசையின் தத்துவம், அவர் பிறந்ததே ஆனந்தத்தில். பண்டாசுரன் விக்ன மந்திரங்களைப் போட்டு அம்பாளின் படை தன்னை நோக்கி வரமுடியாதபடி செய்தபோது, பரமேசுவரன் அவளை ஆனந்தமாகப் பார்த்தப்போது , அவளும் ஆனந்தமாக இந்தப் பிள்ளையைப் பெற்றாள். அவர் விக்னயந்திரங்களை உடைத்து அம்மாவுக்கு சகாயம் செய்தார்.

அவர் பார்வதி பரமேஸ்வரர்களுக்குப் பிள்ளை .இந்த உலகத்துக்கே மூலத்திலிருந்து ஆவிர்ப்பவித்ததனால், அவரை நாம் “பிள்ளையார்” , “பிள்ளையார்” என்றே விசேஷித்து அழைக்கிறோம்.

எந்த ஸ்வாமியை உபாஸிப்பதானாலும் முதலில் விநாயகருடைய அநுக்கிரகத்தைப் பெற்றுக் கொண்டால்தான் அந்தக் காரியம் விக்கினம் இல்லாமல் நடைபெறும். அவரையே முழுமுதற் கடவுளாக, பிரதான மூர்த்தியாக வைத்து உபாசிக்கிற மதத்துக்கு காணபத்தியம் என்று பெயர்.

பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான் என்று ஒரு கதை இருக்கிறது. ஒரு சமயம் மஹாவிஷ்ணுவினுடைய சக்கரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக் கொண்டு தம் வாயில் போட்டுக்கொண்டு விட்டாராம். பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பிடுங்குவது முடியாது. அவர் மிகவும் பலம் உடையவர். அதட்டி மிரட்டி வாங்கவும் முடியாது. ஆனால், அவரைச் சிரிக்க வைத்துச் சந்தோஷத்தில் அவர் வாயிலிருந்து சக்கரம் கீழே விழுந்தால் எடுத்துக்கொண்டு விடலாம் என்று மஹாவிஷ்ணுவுக்குத் தோன்றியதாம். உடனே நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினாராம். விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக் கொண்டு விட்டார்.

“தோர்பி: கர்ணம்” என்பேத தோப்புக்கரணம் என்று மாறியது. “தோர்பி” என்றால் “கைகளினால்” என்று அர்த்தம். ‘கர்ணம்’ என்றால் காது. “தோர்பி கர்ணம்” என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது.

விக்நேசுவரருடைய அநுக்கிரகம் இருந்தால்தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கிப் பூரண அநுக்கிரகம் செய்கிற அழகான குழந்தைத் தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து, நாம் விக்கினங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக





Source: Sage of Kanchi

Varagooran Narayanan




 
பிள்ளையார், ஸுப்ரஹ்மண்யர் இரண்டு பேரையு&

பிள்ளையார், ஸுப்ரஹ்மண்யர் இரண்டு பேரையுமே தமிழ்த் தெய்வங்கள்


தெய்வம் என்று ஒன்று இருந்தால் அது லோகம் பூராவுக்குந்தான். ஆனாலும் அதை நம்முடையது என்று விசேஷமாகப் பிரித்து வைத்து ப்ரியம் காட்டி உறவு கொண்டாடணும் என்று பக்த மனஸுக்குத் தோன்றுகிறதுண்டு. ஒவ்வொரு தெய்வத்திடம் இப்படி ஒவ்வொரு ஜனஸமூஹத்திற்கு ஒரு அலாதி பந்துத்வம் இருப்பதில் தமிழ் மக்களுக்கு ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி என்றால் தனியான ஒரு ப்ரியம். முருகன், முருகன் என்று சொல்லி, தமிழ்த் தெய்வம் என்று அவரை இந்த நாட்டுக்கே, பாஷைக்கே உரித்தானவராக முத்ரை குத்தி வைத்துக் கொண்டாடுகிறோம்.


எனக்கென்னவோ அவரை மட்டும் அப்படிச் சொல்லாமல் அவருடைய அண்ணாக்காரரையும் தமிழ்த் தெய்வம் என்று சொல்லணும் என்று (இருக்கிறது) !இளையவரைத் தமிழ்த் தெய்வம் என்று குறிப்பாகச் சொல்ல எவ்வளவு காரணமுண்டோ அவ்வளவு - ஒரு வேளை, அதைவிடக்கூட ஜாஸ்தியாகவே - அண்ணாக்காரரையும் சொல்வதற்கு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அதனால் - அந்த அண்ணா - தம்பிகளைப் பிரிக்கவேபடாது, சேர்த்துச் சேர்த்தே சொல்லணும், நினைக்கணும், பூஜை பண்ணணும் என்பதாலேயும் - பிள்ளையார், ஸுப்ரஹ்மண்யர் இரண்டு பேரையுமே தமிழ்த் தெய்வங்கள் என்று வைத்துவிட வேண்டுமென்று தோன்றுகிறது.


. இங்கே வேறே எந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்குப் பிள்ளையாருக்குத்தான் மூலைக்கு மூலை கோவில்!தமிழ் நாட்டில் இருக்கிற அளவுக்கு இந்த பாரத தேசத்தில் பாக்கி அத்தனை மாகாணங்களிலுள்ள பிள்ளையார் கோவில்களைக் கூட்டினாலும் கணக்கு வராது!பிள்ளையாரையே முழுமுதற் தெய்வமாகக் கொண்ட காணபத்யத்துக்கு மஹாரஷ்டிரந்தான் ராஜதானி என்று சொல்வது. ஆனால் கோவில் கணக்குப் பார்த்தால் அதுவும் தமிழ் நாட்டுக்கு ரொம்பவும் பின்தங்கி எங்கேயோதான் நிற்கும்.


- ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்


Sage of Kanchi

Kabilan Kaliaperumal
 
யார் நல்ல வாய் உடையவர்?

யார் நல்ல வாய் உடையவர்?
(‘வித்யா கணபதி’ )
ஜூன் மாத கல்கி

முகம் என்பது முழு மூஞ்சிக்கு மட்டுமில்லாமல் அதிலே உள்ள வாய்க்கும் பேர். ஸம்ஸ்கிருதத்தில் வாய்க்குத் தனியாக பேர் கிடையாது. அத்தனை பேர்களையும் சொல்கிறதாகவும், பேச்சுக்கே கருவியாகவும் இருக்கிற வாய்க்குத் தனிப்பேர் இல்லாமல் முகம் என்றேதான் அதையும் சொல்ல வேண்டியிருக்கிறது.

வேடிக்கையாக, தமிழிலே வாய்க்கு வாய் என்று பேர் இருந்தாலும் முகத்துக்குப் பேரே இல்லை. முகம் என்பது ஸமஸ்கிருத வார்த்தை. மூஞ்சி என்பது பேச்சு வழக்கிலே மட்டுமுள்ள கொச்சைதான். இலக்கண - இலக்கிய வார்த்தை இல்லை. அதனாலே, அந்தக் காலத்தில் ஸம்ஸ்க்ருத கடிகையில் படிக்கும் வித்தியார்த்திகளும், தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பரஸ்பரம் பரிஹாஸம் பண்ணிக் கொள்வார்களாம். இவன் அவனை முகம் இல்லாதவன் என்பானாம். அவன் இவனை வாய் இல்லாதவன் என்று திருப்புவானாம்.

பரிஹாஸமென்றாலும் இந்த நாள் மாதிரி ஒருத்தருக்கொருத்தர் பாஷா த்வேஷத்தில் ஏசிக்கொண்டார்களென்று அர்த்தமில்லை. Good & humoured banter என்கிறார்களே, அப்படி நல்லெண்ணத்தோடு சேர்ந்த ஹாஸ்ய உணர்ச்சியில் ஸ்வாதீன மாகக் கேலி பண்ணிக் கொள்வார்கள்.

முகம் என்றாலே வாய் என்று சொல்ல வந்தேன். ஸுமுகம், நல்ல வாய் என்றால் எது நல்ல வாய்? நல்ல விஷயங்களை, ஸத் வித்யைகளைச் சொல்கிற வாய்தான் நல்ல வாய். அதனால் நல்ல வித்வானுக்கு ஸுமுகர் என்று பேர் உண்டு. ஸுமுகர் என்றால் கற்றறிந்தவர். இந்த அர்த்தத்திலேயும் பிள்ளையார் ஸுமூகர். அவர் நல்ல வாயை உடைய மஹா வித்வான். ப்ரஹ்மணஸ்பதி, ப்ருஹஸ்பதி என்று வேதங்களில் சொல்லப்படும் மஹா மேதாவிக்கும் அவருக்கும் பேதம் கிடையாது. அவருடைய அநேக ரூப பேதங்களில் ‘வித்யா கணபதி’ என்றே ஒருத்தருண்டு.

21 கணபதி பேதங்களைச் சொல்லி, ஒவ்வொருத்தனுக்கும் ஒரு புஷ்பமாக 21 தினுஸு புஷ்பங்களை அர்ச்சனை பண்ணும்படியாக சதுர்த்தி பூஜா கல்பத்தில் விதித்திருக்கிறது. அதிலே வித்யா கணபதி என்ற பேரைச் சொல்லி அவருக்கு ரஸாள புஷ்பம் போடணும் என்று இருக்கிறது. ரஸாளம் (ரஸாளு என்று பொதுவாகச் சொல்கிறது) தான் மாம்பழங்களுக்குள்ளேயே பரம மதுரமாக இருக்கப்பட்ட தினுஸு வித்யை என்பது அப்படிப்பட்ட ஆத்ம மாம்பழம். யார் லோகத்தை முதலில் சுற்றிக்கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு என்று நாரதர் கொடுத்த பழத்தை வைத்துப் பரமசிவன் பந்தயம் நடத்தி அதிலே விக்நேச்வரர் ஜயித்துப் பெற்றுக்கொண்ட ஞானப்பழம் அந்த மாம்பழம்தான்!

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Sage of Kanchi

Varagooran Narayanan
 
பெற்றோர் செய்யும் ஸம்ஸ்காரங்கள்:

பெற்றோர் செய்யும் ஸம்ஸ்காரங்கள்:



கர்ப்பாதானம் முதற்கொண்டு ஸம்ஸ்காரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. தாயார் வயிற்றில் தேஹம் ஏற்படுகிற க்ஷணம் முதல் ஸம்ஸ்காரங்கள் ஆரம்பமாகின்றன. சரீர பிண்டமானது மந்திர பூர்வமாக உற்பத்தியாக வேண்டும். கர்ப்பாதானம், பும்ஸ்வனம், ஸீமந்தம் என்பவை தாயார் தேஹத்துக்கு ஏற்பட்ட ஸம்ஸ்காரமென்று நினைக்கிறார்கள். அது தப்பு. அவை உள்ளே உண்டாகிற ஜீவனைக் குறித்தவை. அந்த ஜீவனுடைய பரிசுத்திக்காக ஏற்பட்டவை.

கர்ப்பத்திலுள்ள வேறொரு ஜீவனை உத்தேசித்துப் பண்ணப்படுபவைகளாதலினால் அந்த ஸம்ஸ்காரங்களின் விஷயத்தில் பெரியவர்களுக்குப் பொறுப்பு அதிகம். தங்களுக்காக என்றால் வேண்டாம் என்று எண்ணலாம்.

வேறொரு ஜீவனுக்காக இருப்பதால் இவர்கள் அதை அநாதரவு பண்ணித் தடுப்பது பெரிய பாபமாகிறது. இக்காலத்தில் சாந்தி கல்யாணம் (கர்ப்பாதானம்) , ஸீமந்தம் முதலியவை ஃபாஷனாக இல்லை என்று அநேகர் விட்டு வருவது பெரிய பாபமாகும். ஸ்திரீ-புருஷ உறவிலே நிஜமாக வெட்கப்பட வேண்டிய விஷயங்களில் லஜ்ஜை இல்லாமல் வெள்ளைக்கார ஃபாஷனில் விவஸ்தை கெட்டு நடந்துகொண்டே, இதைப் பரிசுத்தி பண்ணி நல்லதாக ஒரு புது ஜீவனை உண்டாக்குவதற்காக ஏற்பட்ட வைதிக கர்மாக்களை லஜ்ஜைக்குரியவை என்று விட்டுவிடுவது கிரமமே இல்லை.



தேஹம் வெளியில் வருவதற்கு முன்பு பண்ணப் படுபவை கர்ப்பாதானம், பும்ஸுவனம், ஸீமந்தம் என்னும் மூன்று ஸம்ஸ்காரங்களும். மந்திர பூர்வமாக ஸ்திரீ-புருஷ ஸங்கம் ஏற்பட வேண்டும். மிருகப் பிராயமான வேகமாக இல்லாமல் இதையும் ஒரு ஸம்ஸ்காரமாக மந்திரத்தின் மூலம் உயர்த்தி கருவாக உண்டாகக் கூடிய ஜீவனுக்கும் அதனால் க்ஷேமத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த உயர்ந்த தத்துவத்தை விட்டு விட்டு, இதனால் நாம் ஏதோ ஒரு அநாகரிகமான சடங்கை விட்டுவிட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்வது பைத்தியக்காரத்தனம்தான். லஜ்ஜை இருந்தால், சாந்தி கல்யாணத்துக்கு ஊர் கூட்ட வேண்டாம். ஆனால் அகத்து மட்டோடாவது அவசியம் இந்த கர்மா பண்ணத்தான் வேண்டும்.

நித்ய ஒளபாஸனம், நாலு நாள் கலியாணம் என்பவையெல்லாம் போய், கல்யாணத்துக்கு மறுநாள் சேஷஹோமம் கூட இல்லாமல், (கல்யாணம் நடக்கும்) அன்றே ஒரு விதமான மந்திர பூர்வ ஸம்ஸ்காரமும் இல்லாமல் இப்போது இதை (ஸ்திரீ-புருஷ ஸங்கத்தை) செய்து வருவது ரொம்பவும் துராசாரம்; ரொம்பவும் பாபமும் ஆகும். மிருகப் பிராயமாகப் பண்ணுவதால் ஸந்ததியும் அப்படியே (மிருகம் மாதிரியே) அமைகிறது. பும்ஸுவனம் கர்ப்பத்தின் மூன்றாவது மாதம் செய்ய வேண்டும். ஆறு அல்லது எட்டாவது மாதத்தில் ஸீமந்தம் பண்ணவேண்டும். இப்போது இரண்டையும் சேர்த்து ஏதோ பண்ணுகிறார்கள்.



குழந்தை பிறந்தவுடன் ஜாதகர்மா என்ற ஸம்ஸ்காரம் செய்யவேண்டும். தானங்கள் கொடுக்கவேண்டும். பதினோராவது நாள் நாமகரணம். பெயர் வைப்பதுகூட ஜீவனைப் பரிசுத்தி பண்ணுகிற ஸம்ஸ்காரமாகத்தான் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இன்ன நக்ஷத்திரத்தில் பிறந்தால் இன்ன மாதிரிப் பெயர் வைக்க வேண்டும் என்று இருக்கிறது. பகவந் நாமாக்களாகப் பேர் வைக்க வேண்டும் என்று இருக்கிறது.

பகவந் நாமாக்களாகப் பேர் வைக்க வேண்டும். அந்தப் பேரைச் சொல்லிக் கூப்பிடுவதே நம்மையும் சுத்தப்படுத்தும் ஸம்ஸ்காரமாகிறது!லாங்ஃபெல்லோ (நீள ஆள்) , ஸ்டோன் (கல்) என்றெல்லாம் கண்ட பெயர்களை வைத்துக் கொள்கிற மாதிரி நம் மதத்தில் இல்லை. இப்போது இப்படிப்பட்ட அசட்டுப் பெயர்கள் இங்கேயும் வந்து விட்டன. ஸ்வாமி பெயராகவே வைத்தாலும் அதைக் கன்னாபின்னா என்று சிதைத்துக் கூப்பிடும் வழக்கமும் நீண்டகாலமாக இருந்திருக்கிறது. இதெல்லாம் ரொம்பத் தப்பு. வைதிக ஸம்ஸ்காரமாக வைத்த பெயர் என்பதற்கான கௌரவத்தை அதற்குக் கொடுக்கவேண்டும்.



குழந்தையின் ஆறாம் மாஸம் உணவூட்டுவதான 'அன்னப்ராசன'ஸம்ஸ்காரம்.

கர்ப்பாதானம் முதல் நாமகரணம் வரை குழந்தையை முன்னிட்டு (on behalf ) பெற்றோரே பண்ணுவது. அன்ன ப்ராசனத்தில் தகப்பன் மந்திரம் சொன்னாலும் குழந்தையே சாப்பிடுகிறது.



தாயார் மருந்து சாப்பிட்டால் பால் குடிக்கிற குழந்தைக்கு தேஹபுஷ்டி ஏற்படுகிறதோ இல்லையோ?அதைப்போலவே மாதா பிதாக்களுடைய சித்தவிருத்தி எப்படி இருக்கிறதோ அப்படியே உள்ளே இருக்கும் ஜீவனும் ஸாத்விக ஸ்வபாவமோ, பாப பிரவிருத்தியோ உண்டாகும். மனது சாந்தமாக இருந்து ஒரு ஸமாசாரம் எழுதி அதைப் படித்துப் பார்த்தால் நன்றாயிருக்கும். கோபமாக இருக்கும் பொழுது எழுதி அப்புறம் பார்த்தால் நன்றாக இருப்பதில்லை.

சரீரத்திலும் அப்படியே குணதோஷங்கள் ஏற்படுகின்றன. ஒரு தம்பதி உத்தம குணங்களோடு ஸங்கமித்தால் தான் நல்ல பிண்டம் ஏற்பட்டு உள்ளே இருக்கும் ஜீவனுக்கும் நல்ல சுபாவம் உண்டாகும். மந்திர பூர்வமாகப் பண்ணுவது இதற்காகத்தான்.



இத்தகைய கர்மாக்களை அடியோடு தள்ளாதவர்களும் உரிய காலத்தில் பண்ணாமல் சேர்த்துப் பண்ணி விடுகிறார்கள். இப்படியன்றி, அந்த அந்தக் காலத்தில் அந்த அந்த மந்திரத்தைச் சொல்லி அந்த அந்த மந்திரத்தைச் சொல்லி அந்த அந்த திரவியங்களைக் கொண்டு அந்த அந்த ஸம்ஸ்காரத்தைச் செய்யவேண்டும்.



அன்னப் பிராசனத்துக்கப்புறம் 'சௌளம்' செய்ய வேண்டும். அதாவது சிகை (குடுமி) வைக்கிறது. ஸத் கர்மாவுக்கு உபயோகமாக இருக்க அது பண்ணவேண்டும். ஸந்நியாஸிக்கு சிகை இல்லை. மொட்டைத் தலையாக இருக்க வேண்டும். ஸந்நியாஸிகள் மந்திரபூர்வமாகத்தான் சிகையை எடுத்துக் கொள்ளவேண்டும். மந்திரபூர்வமாக வைத்துக் கொண்ட சிகையைப் பரமேச்வரனுக்கு முன்பு பண்ணின பிரதிக்ஞைக்கு விரோதமாக இஷ்டப்படி எடுத்து விடுவது தப்பு.

சிகையை எடுப்பது ஒரு பெரிதா என்று கேட்கலாம். பொய் சொல்லுகிறது தப்பு அல்லவா?அது எவ்வளவு தப்போ அவ்வளவு தப்பு இதுவும். 'பரமேசவர ப்ரீதியாக'என்று ஸங்கல்பம் பண்ணியே, சௌள ஸம்ஸ்காரத்தில் சிகை வைக்கப்படுகிறது. அப்படி வைத்துக் கொண்டதைக் கிள்ளுக்கீரையாக எண்ணி மனம் போனபடி எடுத்தால் அந்தப் பரமேச்வரனிடமே பொய் சொன்னதாக ஆகவில்லையா? சிவலிங்கப் பிரதிஷ்டை செய்கிறார்கள்.

வேல், ஸாளக்கிராமம் வைத்து பூஜை செய்கிறார்கள். பின்பு, கோபித்துக் கொண்டு எடுத்து எறிந்து விடலாமா?அகஸ்மாத்தாகப் போனால் - திருடன் கொண்டு போனால் பாதகம் இல்லை. நாமாக வைத்ததை நாமாக வேண்டுமென்று மாற்றுவது பெரிய தப்பு.


சௌளத்தை மட்டும் ஸங்கல்பத்தோடு பண்ணிக் கொண்டு அப்புறம் இஷ்டப்படி அதை எடுத்து விட்டு 'க்ராப்'பண்ணிக் கொள்வது தப்பு.



'.......ஏ போச்சு'என்று பேச்சு வழக்கிலே ரொம்ப அலக்ஷ்யமான ஸமாசாரமாகச் சொன்னாலும், வாஸ்தவத்தில் இது பெரிய ஸமாச்சாரம்தான். வேத அத்யயனம், வைதிக கர்மாநுஷ்டானம், தர்மப்படி இல்லறத்திலிருந்து கொண்டு பண்ணும் தாம்பத்தியம் இவற்றிலே சரீரத்துக்கும், சரீரத்தின் நாடி சலனங்கள் மூலம் சித்தத்துக்கும் ஏற்படவேண்டிய பலத்துக்குத் தலையில் பிரம்மரந்திரத்தில் சிகை என்ற ர¬க்ஷ இருப்பது பெரிய காப்பாகும்.

கூரைக்கு ஒடு போடுகிற மாதிரி அது!வேத கர்மாவும், தாம்பத்தியமும் நின்றுபோன ஸந்நியாஸ ஆச்ரமத்தில் தான் இந்த ர¬க்ஷ தேவையில்லாமல் போகிறது. ஆகையால் கிருஹஸ்தன் ஸந்நியாஸியாக ஆனாலன்றிக் குடுமியை எடுக்கக் கூடாது. தற்காலத்தில் பிரம்மச்சரிய, கிருஹஸ்தாச்ரம காலங்களிலும் வேத ஸம்பந்ததத்துக்கு முழுக்குப் போட்டு விட்டதால், சிகையும் இல்லாமலிருக்கிறோம்!



பாபம் பண்ணி நரகவாஸம் பண்ணுகிற ஜீவர்களின் பிரீதிக்காக, ஒரு கிருஹஸ்தன் ஸ்நானம் செய்யும்போது மந்திர பூர்வாக சிகோதகம் தரவேண்டும் ( குடுமியிலிருந்து ஜலத்தைப் பிழிந்து கொடுக்க வேண்டும்) என்று இருக்கிறது. சிகை இல்லாவிட்டால் இதை எப்படிப் பண்ணுவது?



சௌளத்துக்கு அப்புறம் வருவது உபநயனம். பிரம்மோபதேசம், பூணூல் கல்யாணம் என்பதெல்லாம் இதுவே.



உபநயனம் முதல் பண்ணப்படும் ஸம்ஸ்காரங்கள் ஒரு ஜீவனுக்கு அறிவு வந்த பின்பு ஏற்படுபவை. குழந்தையாக இருந்த ஜீவன் அறிவுடன் மந்திரம் சொல்லிப் பண்ணத் தொடங்கும் முதல் ஸம்ஸ்காரம் உபநயனமே.



மாதா பிதாக்களிடத்தில் ஏதாவது பாப தோஷங்களிருந்தால் அவை அவர்களிடத்திலுண்டாகிற ஜீவன் எந்த மாதாவுடைய கர்ப்பத்தில் வாஸம் பண்ணுகிறதோ, எந்தப் பிதாவால் உண்டாகிறதோ அவர்களுடைய தோஷங்கள் அந்த ஜீவனுக்கு ஏற்படாமலிருப்பதற்காக ஸம்ஸ்காரங்கள் செய்யவேண்டும்.

மாதா பிதாக்களிடம் துர்க்குணங்கள் உண்டு. அவை அவர்களால் ஏற்படும் ஜீவன்களுக்கு உண்டாகாமலிருக்க ஸம்ஸ்காரங்கள் செய்ய வேண்டும். அந்த தோஷங்கள் (கர்ப்ப சம்பந்தமான) கார்ப்பிகம் என்றும் (பீஜ சம்பந்தமான) பைஜிகம் என்றும் இரண்டு தந்தையால் உண்டாவது. இந்த தோஷங்களின் நிவாரணத்திற்காக உபநயனம் வரையில் உள்ள சம்ஸ்காரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவைகளைச் செய்ய வேண்டியவர்கள் மாதா பிதாக்கள். உபநயனம் வரையில் உள்ள ஸம்ஸ்காரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவைகளைச் செய்ய வேண்டியவர்கள் மாதா பிதாக்கள். உபநயனம் வரைக்கும் ஸம்ஸ்காரங்களைத் தானே செய்து கொள்ளப் புத்திரனுக்கு அர்ஹமான (தகுதியான) வயது வரவில்லை.



எந்த ஸம்ஸ்காரத்தையும் உரிய காலத்தில் பண்ண வேண்டும். அதனால் பாப பரிகாரம் ஏற்படுகிறது. பூர்வத்தில் வேறொரு காரியம் பண்ணிப் பாபம் ஸம்பாதித்திருக்கிறோம். அதை நீக்க மனம்-வாக்கு-காயங்களால் ஸம்ஸ்காரம் பண்ணவேண்டும்.



நாம், பாபம் அந்த மூன்று கரணங்களாலேயும் பண்ணியிருக்கிறோம். மனதால் கெட்ட எண்ணம் நினைத்திருக்கிறோம். வாக்கால் பொய் பேசியிருக்கிறோம்.தேஹத்தால் பொய் பண்ணியிருக்கிறோம். அதாவது பல தினுசாகப் பொய் பண்ணியிருக்கிறோம். அதாவது பல தினுஸாகப் பாசாங்கு பண்ணியிருக்கிறோம். மனோ-வாக்-காயங்களால் பண்ணிய பாபங்களை அவைகளாலேயே ஸத் காரியங்களைப் பண்ணிப் போக்கிக் கொள்ள வேண்டும்.

மனத்தினால் பரமேச்வரத் தியானம் பண்ணவேண்டும்;வாக்கினால் மந்திரம் சொல்ல வேண்டும்;காயத்தால் ஸத்காரியம் பண்ண வேண்டும். மனோ -வாக் - காயங்களால் தானாக ஒரு ஸம்ஸ்காரத்தைப் பண்ணும் பக்குவம் ஜீவனுக்கு உபநயனத்திலிருந்து ஏற்படுகிறது. இதுவரை தகப்பனார்தான் இவனுக்காக மந்திரம் சொல்லிப் பண்ணினார்.



இங்கே இன்னொரு விஷயமும் சொல்லவேண்டும். ஒரு ஜீவனை direct -ஆக (நேராக) உத்தேசித்தே அதன் பிதா பண்ணும் (கர்ப்பாதானம் முதற்கொண்டு சௌளம் வரையிலான) கர்மாக்கள் மட்டுமின்றி, அந்தப் பிதாவாகப்பட்டவன் மற்ற எல்லா ஸம்ஸ்காரங்களையும் பண்ணி நல்ல அநுஷ்டாதாவாக இருப்பதும் indirect -ஆக (மறைமுகமாக) அவனுடைய புத்திரர்களுக்கு நல்லதை செய்கிறது. 'மாதா பிதா பண்ணுவது மக்களைக் காக்கும்'என்ற வார்த்தைப்படி இது மாதிரி நடக்கிறது.

வைதிக பிராமண ஸந்ததிக்குஸமீப காலம் வரையில் புத்திப் பிரகாசம் அதிகம் இருந்து வந்ததற்கு ஒரு முக்ய காரணம், முன்னோர்கள் பண்ணிய ஸம்ஸ்காரங்களின் சக்திதான். முன்பு இருந்தவர்கள் செய்தது இரண்டு அல்லது மூன்று தலைமுறைக்கு அஸ்திவாரமாக இருக்கிறது. அந்த எல்லை தாண்டிப் போனால் அப்புறம் கஷ்டந்தான்.

இந்த ஸந்ததியில் பிறந்த குழந்தைகளே லௌகிகத்தில் பிரவேசித்தபின் அதிகமாகக் கீழே போய் விட்டார்கள். ரொம்பவும் கெட்டுப் போனார்கள். மடை அடைத்து வைத்ததைத் திறந்துவிட்டால் வெகு வேகமாக ஜலம் போகிற மாதிரி இவர்கள்தாம் கடுமையாக லௌகிகத்தில் இறங்கி விட்டார்கள்.



நம்முடைய பெற்றோர்கள் ஸம்ஸ்காரம் பண்ணவில்லை;அதனால் நமக்கு நன்மை உண்டாகவில்லை என்ற குறை நமக்கு இருக்கலாம். அதைப்போல நம்முடைய குழந்தைகள் குறை கூறாமல் நாம் நல்ல ஸம்ஸ்காரங்களைப் பண்ணவேண்டும். அவர்களுக்கும் பண்ணி வைக்க வேண்டும்.


source;buminathan - vazkhai pathivugal
 
ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு

ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு

"ஸ்வாமி ஒருவர் தானே! உங்களுக்கு மட்டும் என்ன முப்பது முக்கோடி தேவதைகள்?" என்று மற்ற மதஸ்தர்கள் நம்மைப் பரிகாசம் செய்கிறார்கள். ஸ்வாமி ஒருவர் தான். அவரைத் தான் நாம் பேச்சு வழக்கில் 'தெய்வம்', 'தெய்வம்' என்கிறோம். தெய்வம் என்றால் விதி என்றே அர்த்தம். நாம் சுவாமி என்ற அர்த்தத்தில் அந்த பதத்தை உபயோகிக்கிறோம். தெய்வமும் தேவர்களும் ஒன்றுயென்று நினைத்துக்கொண்டு 'முப்பது மூன்று கோடி தெய்வமாவது?' என்று நாமும் மற்ற மதஸ்தர்களோடு சேர்ந்து கொண்டு கேலியாக எண்ணுகிறோம். "தெய்வம் வேறு, தேவர்கள் வேறு, ஸ்வாமி ஒருவர் தான்!" என்பதே நமது மதம். அவரே மூன்று ரூபங்களை எடுத்துக்கொண்டு பிரம்மாவாகச் சிருஷ்டிக்கிறார்; விஷ்ணுவாகப் பரிபாலிக்கிறார்; ருத்திரனாக சம்ஹாரம் செய்கிறார். உண்மையில் இவர்களும் வேறு வேறு இல்லை.

கோர்ட்டுக்கு போகும்போது தாசில்தார் சூட்டுப் போட்டுக்கொண்டு இருக்கிறார். பூஜை செய்யும் போது அவரே பஞ்சகச்சம் கட்டிக் கொள்கிறார். பத்தினி அகத்தில் இல்லாமால் அவரே சமையல் செய்யும்போது துண்டை மட்டும் இடுப்பில் சுற்றிக் கொள்கிறார். நாம் சாமானிய ஜீவர்கள் - வேலைக்கு தகுந்தபடி உடுப்பை மட்டும் மாற்றிக்கொள்கிறோம். சர்வ சக்தனனான ஸ்வாமி வேலைக்கு ஏற்ப ரூபத்தையும் மாற்றிக்கொள்வார்.


Source: Ramachandran Venkataraman

Sage of Kanchi
 
Kamakshi Stotram - பரமாசார்ய க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம

Kamakshi Stotram - பரமாசார்ய க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம


கல்யாணம் ஆகாதவர்களுக்கு வழி பிறக்க என்று ஜகத்குரு காஞ்சி மஹா பெரியவாள் இயற்றி அநுக்கிரஹித்த காமாக்ஷி ஸ்தோத்திரம் இது!


ஜகந் மாதாவை நினைத்து, தை செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் காமாக்ஷி விளக்கு ஏற்றி வைத்து, 7 முறை தீப பிரதக்ஷணம் செய்து, பக்தியுடன் இதைச் சொன்னால் மங்களக் காரியங்கள் தடையின்றி நடந்தேறும்.


பரமாசார்ய க்ருத காமாக்ஷி ஸ்தோத்திரம்



* மங்கள சரணே மங்கள வதனே மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி


* கஷ்ட நிவாரிணி இஷ்ட விதாயினி துஷ்ட விநாசினி காமாக்ஷி.
குரு குஹ ஜனனி..
.

*ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே ஸஜ்ஜன ஸதயே காமாக்ஷி.
குரு குஹ ஜனனி..
.

* க்ரஹநுத சரணே, க்ருஹ சூத தாயினி நவ நவ பவதே காமாக்ஷி
குரு குஹ ஜனனி...


* சிவமுக விநுதே பவசூக தாயினி நவ நவ பவதே காமாக்ஷி
குரு குஹ ஜனனி...


* பக்த சூமானஸ தாப விநாசினி மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி...


* கேனோ பனிஷத் வாக்ய வினோதினி தேவி பராசக்தி காமாக்ஷி
குரு குஹ ஜனனி...


* பரசிவ ஜாயே வர முனி பாவ்யே அகிலாண்டேஸ்வரி காமாக்ஷி
குரு குஹ ஜனனி...


* ஹரித்ரா மண்டல வாளினி நித்யே மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி...

http://www.penmai.com/forums/mantras-devotional-songs/11426-kamakshi-stotram-30-a.html

 
மஹா அமிர்தம்: அருளும் தெய்வம் அனுமார்

மஹா அமிர்தம்: அருளும் தெய்வம் அனுமார்



5_2091247h.jpg



ஆஞ்சநேய ஸ்வாமியின் விசேஷமே அலாதியானது. அவர் பக்தர்களுக்கு என்னென்ன அநுக்கிரஹம் செய்கிறார் என்பதைப் பார்த்தால், அவருக்கு என்ன விசேஷம் என்று தெரியும்.


புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |

அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹநுமாத் ஸ்மரணாத்பவேத் ||


ஆஞ்சநேயரை ஸ்மரிப்பவர்களுக்கு அவர் என்னென்ன அநுக்கிரஹிக்கிறார் என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது. புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம் விழிப்பு, வாக்கு வன்மை இத்தனையும் தருகிறார் அவர்.


சாதாரணமாக இவையெல்லாம் ஒரே இடத்தில் அமையவே அமையாது. நல்ல புத்திமான் ஆரோக்கியம் இல்லாமல் சோனியாக இருப்பான். பெரிய பலசாலி மண்டுவாக இருப்பான். இரண்டும் இருந்தாலும் கோழையாக, பயந்தாங்கொள்ளியாக இருப்பான். எத்தனை திறமை இருந்தாலும், அவற்றைப் பிரயோகிக்கிற சுறுசுறுப்பு, விழிப்பு இல்லாமல் சோம்பேறியாக இருப்பான்.


பெரிய அறிவாளியாக இருந்தாலும் தனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொல்கிற வாக்கு வன்மையில்லாமல் இருப்பான். இந்த மாதிரி ஏறுமாறான குணங்கள் இல்லாமல் எல்லா சிரேயஸ்களையும் ஒரே இடத்தில் பொழிகிறார் ஆஞ்சநேயர்.


இதற்குக் காரணம், சாதாரணமாக நாம் ஒரே இடத்தில் சேர்ந்து பார்க்காத குணங்கள், சக்திகள் அத்தனையும் அவரிடமே பூரணமாக ஒன்று சேர்ந்திருக்கின்றன. நாம் எதிரெதிர் குணங்கள் என்று நினைப்பவைகூட, அவரிடம் சுபாவமாகச் சேர்ந்திருக்கின்றன. உதாரணமாகப் பெரிய பலசாலிக்கு விநயம் இருக்காது. பெரிய புத்திசாலிக்கு அகங்காரமில்லாத பக்தி இராது. ஆஞ்சநேயரோ தேக பலம், புத்தி பலம் இவற்றைப் போலவே விநயம், பக்தி இவற்றிலும் முதலாக நிற்கிறார்.


மகா சக்திமானாக இருந்தும், அத்தனை சக்தியும் ராமன் போட்ட பிச்சை என்ற அடக்கத்தோடு தனக்கு ஒரு பதவியும் கேளாமல் ராமதாசனாகவே இருந்தார். அப்படி அடிமையாக இருந்ததாலேயே நிறைந்து இருந்தார். பக்தி இருக்கிறவர்களுக்கேகூட அதில் ஞானத்தில் தெளிவு இல்லாமல் மூட பக்தியாகவோ, முரட்டு பக்தியாகவோ இருப்பதுண்டு. ஞானமும் பக்தியும் வேறு வேறு என்றே அவர்கள் சண்டைகூடப் போட்டுக்கொள்வார்கள்.


ஆஞ்சநேயரோ ராமச்சந்திர மூர்த்தியின் பரமபக்தராக இருக்கும்போதே, பரம ஞானியாகவும் இருந்தார். எப்படி தக்ஷிணாமூர்த்தி சனகாதி முனிவர்களை முன்னிட்டு உபதேசம் செய்கிறாரோ, அப்படியே ஸ்ரீராமன் ஆஞ்சநேய ஸ்வாமியை முன்னால் வைத்துக்கொண்டு ஞானோபதேசம் செய்கிறார் என்று ‘வைதேஹீ ஸஹிதம்' சுலோகம் சொல்கிறது. அர்ஜுனனின் தேர்க்கொடியில் இருந்துகொண்டு கீதோபதேசத்தை நேரிலேயே கேட்டவர் அவர்.


பைசாச பாஷையில் கீதைக்குத் தத்துவமயமான ஒரு பாஷ்யம் இருப்பதாகவும், அது ஆஞ்சநேயர் செய்தது என்றும் சொல்வார்கள். ஒன்பது வியாகரணமும் தெரிந்த ‘நவ வ்யாகரண வேத்தா' என்று ராமரே அவரைப் புகழ்கிற அளவுக்குப் பெரிய கல்விமான். ஆனாலும் புத்திப் பிரகாசம், சக்திப் பிரபாவம் எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு பக்தியிலேயே பரமானந்தம் அனுபவிக்கிறார்.


பக்தி என்பதால் லோக காரியத்தைக் கவனிக்காதவர் அல்ல. மகாபௌருஷத்தோடு போராடி அபலைகளை ரக்ஷித்தவர்களில் அவருக்கு இணை இல்லை. லோக சேவைக்கு அவரே உதாரணம் (ideal).


ஞானத்தில் உச்ச நிலை, பலத்தில் உச்ச நிலை, பக்தியில் உச்ச நிலை, வீரத்தில் உச்ச நிலை, கீர்த்தியில் உச்ச நிலை, சேவையில் உச்ச நிலை, விநயத்தில் உச்ச நிலை இப்படியெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிற ஸ்வரூபம் ஒன்று உண்டு என்றால் அது ஆஞ்சநேய ஸ்வாமிதான்.


இதெல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய பிரம்மச்சரியத்தைச் சொல்ல வேண்டும். ஒரு க்ஷணம்கூடக் காமம் என்கிற நினைப்பே வராத மகா பரிசுத்த மூர்த்தி அவர். தனக்கென்று எதுவுமே நினைக்காதவர். ஒரு காமனையும் இல்லாமல் ராமனுக்குச் சேவை செய்தே நிறைந்துவிட்டார்.


அவரை நம் சீமையில் பொதுவாக ‘ஹநுமார்' என்போம். கன்னடச் சீமையில் அவரே 'ஹநுமந்தையா'. சித்தூருக்கு வடக்கே போய்விட்டால் ஆந்திரா முழுவதும் ‘ஆஞ்சநேயலு' என்பார்கள். மகாராஷ்டிரம் முழுக்க ‘மாருதி, மாருதி' என்று கொண்டாடுவார்கள். அதற்கும் வடக்கில் ‘மஹாவீர்' என்றே சொல்வார்கள்.
ஆஞ்சநேயருக்கு ஈடு கிடையாது. அவரை ஸ்மரித்த மாத்திரத்தில் தைரியம் வரும். ஞானம் வரும். காமம் நசிந்துவிடும். பரம விநயத்தோடு பகவத் கைங்கரியம் செய்துகொண்டு எல்லோருக்கும் நல்லது செய்வோம்.


‘ராம், ராம்' என்று எங்கெங்கே சொல்லிக்கொண்டிருந்தாலும், ரகுநாத கீர்த்தனம் எங்கே நடந்தாலும், அங்கெல்லாம் நம் கண்ணுக்குத் தெரியாமல் ஆஞ்சநேயர் தாரை தாரையாக ஆனந்த பாஷ்பம் கொட்டிக்கொண்டு நின்று கேட்கிறார்.


இந்தக் காலத்தில் நமக்கு மற்ற எல்லா அநுக்கிரஹங்களோடு, முக்கியமாக அடக்கமாக இருக்கிற பண்பு ரொம்பவும் அவசியப்படுகிறது. எத்தனை வந்தாலும் போதாமல் இப்போது, நாம் உயர உயரத் துள்ளிக்கொண்டேயிருக்கிறோம். இதனால் புதுப்புது அதிருப்திகளை, குறைகளைத்தான் உண்டாக்கிக்கொள்கிறோம். துள்ளாமல் அடங்கிக் கிடந்தால்தான் ஈசுவரப் பிரசாதம் கிடைக்கும். அதுதான் நிறைந்த நிறைவு. நமக்கு ஆஞ்சநேயர் அநுக்கிரகம் பண்ண வேண்டும்.


அவரைப் பிரார்த்திப்பவர்களுக்கு ஒரு குறையும் இல்லை. லோகம் முழுவதும் தர்மம் பரவியிருக்க அவரையே பிரார்த்தனை பண்ணுவோம். அவருடைய சகாயத்திலேயே ராவணாதிகள் தோற்று ராமராஜ்யம் ஏற்பட்டது. அர்ஜுனனின் தேர்க்கொடியில் அவர் இருந்த விசேஷத்தால் பிறகு தர்ம ராஜ்யம் ஏற்பட்டது.
பிற்காலத்தில் நம் தர்மம், பக்தி எல்லாம் நசிந்தபோது ஆஞ்சநேய அவதாரமாக சமர்த்த ராமதாஸ் ஸ்வாமி தோன்றித்தான் சிவாஜி மூலம் மறுபடி தர்ம சம்ஸ்தாபனம் செய்தார். இன்னும் சகல தேசங்களிலும் தர்மமும் பக்தியும் ஏற்பட அவர் அநுக்கிரஹம் வேணும். நாம் மனமுருகிப் பிரார்த்தித்தால் இந்த அநுக்கிரஹத்தைச் செய்வார்.

ஆஞ்ஜநேய ஸ்வாமின: ஜெய் ||

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

??????????? ????? | ??? ????????: ??????? ??????? ??????? - ?? ?????
 
Sri Maha Periva's Advice to Teachers -

Sri Maha Periva's Advice to Teachers -



Source: Deivathin Kural Vol 7 (English translation from advaitham.blogspot.in)

In the present day, especially since our Independence from the British rule, stuffing the brains has come to mean education while completely ignoring the soul / character / heart of the student! Before independence, much before that, they introduced the educational system in this country with the immediate aim of inserting English and making us all clerks in their reign, business and bureaucratic organizations, as an avenue for local employment.

The long term goals were to keep us subjugated and destroy the educational systems existing in this country and keep us as slaves and bonded labour forever! But it was done so intelligently like baiting the fish to take a bite and get hooked! After independence we wished to change the system and it did change, but for the worse! There is neither education nor a system. I am not talking about the syllabus only, but that also! Further complication has crept in, in the name of secularism. Secularism in India is a multi-headed Hydra! Blatant corruption and vote-bank politics has entered every walk of life in India, further complicated by all varieties of casteism and the quota system!

The academic qualification and merit is not the basis of selection as student but graded quota for various castes is the criteria! So you can be less qualified and may find being selected if your caste is one of the Backward Classes or the so called minorities. So every family claims itself to be a minority on the basis of the Grand-Father's name! Thus intrinsically divided in to many groups which do not see eye to eye on any issue, we are bracketed together as one huge behemoth as 'the Hindu' and suffer in the bargain!

The trend is to claim oneself to be a non-Hindu for one's share of the pie! So then, it is a huge muddle' wherein power of physical threat, bargaining power of money and readiness to give and take bribe in the name of donation and pure bribe have a field-day! Such threat is not only for admission for enrolments only but for passing examinations too! When the students are behaving like this, the management and the teacher's community are also interested in their individual pecuniary benefits, whatever the means!

This is further complicated by the State and Central Governments not knowing as to where to draw the line between integration and differentiation and favouritism based on vote-bank politics, go in for more and more reservations for various minorities that the end result is one of 'confusion confounded'!

What has suffered in the bargain is that the equation between Guru and Sishya has gone from the ideal to doldrums! What was the cause of a golden culture for the world to look at with awe and admire, has been so eroded that one is afraid of thinking as to what the future holds! Then it is sad to think of the fact that the present day governments in India are not even aware of the need to correct the erosion. It is true that there are problems galore in all directions.

Still it is education where we need to bring in discipline, morality, good attitude and behaviour if it is to make some difference in the minds of future generations, isn't it? I do not know if my talk now is going to make any dent on the situation, I do not know! The only thing we can do is to go back to the stories of the past, if only as a temporary relief!

Though I am saying that we have to go back to the old stories of the past, I wish to say a few things to the present day teachers as an appeal from my side. Since it is they who have come to this profession of teachers, first of all they should realise that even if they have become teachers as a means of earning a living, they should be first of all happy that they have landed in a very noble profession. If they take this job as an opportunity that they have been blessed with to contribute positively for the future of this Nation, my talk so far will not be a waste. Yes they are not having all the time as the Guru in the olden times when they lived together in the same Guru Kulam.

So they should not come to the conclusion that they are to strictly stick to the lesson plan and that they cannot make an impression on the attitude and behaviour of the student at all. As the student is hearing what the teacher says, he is also watching how the teacher behaves on various occasions. The students are at an impressionable age and so what you say and how you say it is also going to make an impression. Even in a not so very bright student, the teacher's behaviour is going to leave an impression. So, if the teacher is going to be just paying attention to the lesson plan and ignore student behaviour, he will be doing a disservice to his calling.

To be an epitome of what we teach in terms of one's own behaviour and basic attitudes is one important aspect. The other part is to be sincere and serious in preparation, delivery and ensuring that the subject taught is well received. To teach distractedly in the class and then arrange to conduct special classes as private tuition for some remuneration, is basically wrong and Adharma! That will be amounting to a sin that having come to a noble profession you manipulate it for some pecuniary advantage to oneself, which will prove to be a 'one way ticket to Hell and damnation'!

They should be afraid of even thinking on such lines. People in other professions make use of their subject of education only partially. Think of a B.Sc. Chemistry as an officer in the Army or a Head Clerk in an office! Their knowledge in Chemistry will be an utter waste. But teaching is one line wherein we make full use of what we have learnt as its capital! While being a teacher one can continue to be a student and keep enhancing one's knowledge base.

Since he is teaching the same subject repeatedly, he is also reading it again and again and it is likely that some grey areas earlier are likely to become clearer, especially in higher studies. Also if one were to refer to ever new books of reference, especially in subjects which are continuing to expand; one is likely to keep gaining greater insights. The questions asked by intelligent students will also further enhance and enlarge the knowledge base of the teacher to his and the student's advantage! They can thus deserve to be known as Masters by their acumen, teaching ability and in their ability to instil the subject deeply in the minds of the students.

There was this PouraNik who used to give lectures on PurãNãs. He went to a King to tell him about Bhagawatam as he was keen on the awards and presents the King is likely to give. After some time, the King was intelligent enough to notice that PouraNik had not imbibed any of the qualities of Bhakti or Gnãna or Vairãgyam. So he gave him some gifts and told him to come back after reading the Bhagawatam once again. PouraNik did that. This time he got some more awards and was once again told to read the PurãNa once again.

This happened 21 times! After the 21st time the PouraNik did not return to the King's court for many days. The King sent his men to investigate. They reported that the PouraNik had given up this worldly life and gone to the forest for deep meditation so as to get Bhagawat Anubhava, forsaking all his worldly interests. Now the King decided that now is the time to go to the PouraNik as a Guru! He went and located this Guru, surrendered to him and requested him to now tell him about the Bhagawatam. The PouraNik was deeply merged in his self that he did not even notice the presence of the King.

But eventually he did recognise the presence of the King and was grateful to the King for opening his mind and eyes to the deeper meanings of what one has to learn from study of the Bhagawatam! So, he did lecture the King on the PurãNa and all the subtle points of the PurãNa in a way that will make a deep impression on the King! So goes the story. I am not suggesting by any chance that the teachers should study their subject matter so deeply that they should give up teaching as a profession! (Saying this PeriyavãL laughs deeply!)

I told you the story of the PouraNik and the King to underline the idea that when the speaker fully understands the inner meaning of his talk, then the audience will also be enabled to absorb the teaching better. Isn't there a vast difference between chanting without understanding and doing so with understanding the meaning of the mantra being chanted? That is why MaNikka Vãsagar differentiates between these two when he says, 'solliya pãttin poruL uNarndu solluvãr', as compared to 'mumbo-jumbo' by others! That PouraNik had repeatedly iterated study of Bhagawatam 21 times and was motivated to give up worldly involvement!

Other subjects are not like that and so nobody will be suddenly urged to give up their teaching profession! Even if we were teaching religious books, we who are so rooted in normal life, involved in all these pulls and pressures, will not be suddenly impelled to abdicate and resign! When we fully comprehend what we are talking about, it will enhance our instructional abilities and our students will be benefitted. That is what is expected of us and that will suffice. It is not only that the students should be studying with absolute concentration and sincerity, so also the teacher should be whatever the number of iteration. In higher studies of abstruse and nebulous subjects, iteration may also lead to greater understanding!

One more thing. While the teacher should be keen on complete transfer of what he knows to the student, one word of caution. First of all the teacher should have patience and not be in a hurry. If you try to impress the student with the vastness of your knowledge or try to stuff all that in to the student, nothing may get in! Here we should remember the example of the Hundi (aka the piggy-bank) which has a small hole for the coin to be inserted! You may have a bag full of coins. You cannot put them all in one go in to the Hundi, but only one by one! You have to check if the coin you inserted earlier has gone in or stuck at the entrance may be by touching it or by shaking up the Hundi.

Similarly the level of the student's absorption should be checked by way of question and answers. Then go for the next item. As a teacher you have to be balanced, patient, not easily provoked to anger and be encouraging. I do agree that it is difficult to teach some students who are slow on the up-take. But you will agree that it is more difficult to teach a student who is a little too smart! Even in the example I have quoted about Hundi and student's in-take, I know that the problem is more as the teacher is not dealing with one but many students.

But still, the teachers should realise that they are working in a noble profession of preparing the young to take over the responsibilities as future members of the society and citizens of the Nation! I said all this because of the important fact that the teachers are shaping those who are going to shape the future! It is teachers who should be insisting that the syllabus and subject content should be aimed at enhancing both knowledge and character of the student! In the olden times, the system catered for it and presently it does not.

Jaya Jaya Shankara, Hara Hara Shankara!


Source: Sage of Kanchi

Jambunathan Iyer
 
Some religious beliefs to know

SOME RELIGIOUS BELIEFS TO KNOW

Religious Facts

If you ...sit facing east and have your food it increases your life span.
If you sit facing west and have your food it brings you wealth.
If you sit facing south and have your food it brings you fame.
You should never sit facing north when having food.

It is always good to keep a handful of food to the crows before eating in the noon. The crow is considered as Lord Shani and by feeding him we try to appease him from his anger. It is also believed that feeding of crows is as good as feeding our deceased.

In the pooja room do not place pictures of Gods along with pictures of departed souls like grandfathers, great grandfathers etc. You can place them in the pooja room on a different side. For eg., if Gods are placed Facing east you can place the pictures of the deceased facing south or north etc., If you worship this way then the blessings you will receive will be several fold.

Lighting Lamps & Poojas at Home

You should always begin a Hanuman Pooja on a day when the star is Moolam and you should offer pooja only in the mornings.

Lighting of Burnt Red Sand lamps (Agal Vilaku) will give you more power.

Lighting of lamps with Gingelly Oil removes fear of death.

Lighting of lamps with Coconut oil or Ilupai oil brings you health and wealth.

Lighting of lamps with Castor Oil brings you all kinds of wealth.

Lighting of Bronze lamps will relieve you from your sins.

Lighting of lamps with threads made from the lotus plant will relieve you from sins committed in the previous birth (Purva Janma Pavam) and bring wealth.

Lighting of lamps with threads made from cotton will maintain harmony in the family.

When praying to the family deity(Kula Dievam) you should light lamps with a mixture of Neem & Ilupai Oils along with Pure Cow Ghee.

When lighting a lamp in the pooja room make sure that the lamp is not facing south.

You should never put out a burning lamp, camphor or incense sticks by blowing with your mouth.

General Belifs

It is believed that Parvati resides at the base, Saraswati at the centre of the palm of your hand and Laksmi at the upper portion of the hand ie., fingertips. It is therefore advised that the first thing you see after you wake up in the morning is your right hand palm.

Brahma Muhurtam is between 3:00 am and 6:00 am in the early morning.

You should never bathe in the sea when your wife is pregnant.

You should never have a oil head bath on Amavasai, Pournami, Janma Nakshatram also on your birthday and wedding day.

You should never do auspicious things wearing wet clothes. Only inauspicious things are performed wearing wet clothes.

You should always donate food or money to beggars while going into the temple and not when returning from the temple.

When you are leaving the town from home, you should leave from the front entrance of your home and not from the rear side.

When you are returning from the burial ground after attending someone's funeral you should not have head bath with oil on that day.

You should never sleep in a room that is completely dark. There should be at least some light in the room.

Avoid buying dress materials, gold and property on Tuesdays and Saturdays.

On Wednesdays and Saturdays never give or lend Gold or Silver Items.

Fasting (Vratha)

Fasting (Vratha) on Shivarathri makes your wishes come true.

Fasting (Vratha) on Chadurthi makes your life happier and increases the chances of attaining more benefits at work.

Fasting (Vratha) on Sashti, Kirthigai protects you from evil forces and from health problems.

Fasting (Vratha) on Ekadesi brings you peace of mind and happiness.

Fasting (Vratha) on Sankadahara Chadurthi protects you from sudden death and accidents.

If you start repaying the first installment or payback regularly on Tuesdays your loan will be settled quickly.

After a hair cut you should not have head bath with oil on that day.

Having a haircut on a Sashti (except if it falls on Sundays or Thursdays) is not good for ones brother.

Having a haircut on a Pournami (except if it falls on Sundays or Thursdays) is not good for ones father.

Having a haircut on a Navami (except if it falls on Sundays or Thursdays) will lead to wealth losses.

Visting Temple & Worship

One should worship Lord Narayanan by lighting lamps with Gingelly Oil.

In a temple one can light a burnt out lamp, but should never put out a burning or lit lamp.

One should worship Godess Mahalakshmi by lighting lamps with Pure Cow Ghee.

One should never go to the temple empty handed. You should take some offerings like Coconut, Fruits, Flowers or Camphor.

When a person prays or performs a pooja for himself ie., for his benefit it is called as Suvartha Pooja.

When a person prays or performs a pooja for the benefit of others it is called as Paarartha Pooja.

One should not carry the items for Pooja/Archana using the left hand.

When carrying items for a Pooja in a bag, basket make sure the bag is not left hanging below your hip level.

You should never bring home any item that is considered as property of the temple.

Always enter a temple or a house by placing your right feet first.

Never enter a temple wearing wet clothes.

One should always enter the temple through the main entrance.

One should go to the temple only during the temple visiting hours. You should never sleep inside the temple.

When a temple is closed one should never worship/pray from outside.

Inside a temple never pray at a place/sannadhi where there is no lamp lit.

One should never light camphor on the step of the main entrance of the temple.

One should never fall down and pray (namaskaram) Lord Shani (Saturn).

One should never pray Lord Shani (Saturn) by standing right in front of the deity. One should always stand by the side when worshipping Lord Shani.

One should never have a bath immediately after returning from the temple.

You should never sleep with your head placed in the North Direction.

After returning home from the temple you should give some time before you wash your hands and legs.

When adjusting the thread in lamps in a temple, your fingers will come in to contact with the oil of the lamp. One should never rub that oil on the head.

Amla Tree (Nelli Maram) represents Water among the Pancha Boodhas. If you worship Lord Ganesh who is set up at the base of the Nelli Maram your wealth and income will be very satisfactory.

Arasa Maram (Tree) represents Sky among the Pancha Boodhas. If you worship Lord Ganesh who is set up at the base of the Arasa Maram you will be blessed with children.

Vadha Narayana Maram (Tree) represents Air among the Pancha Boodhas. If you worship Lord Ganesh who is set up at the base of such trees your growth will increase.

SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM - Jaya Jaya Shankara, Hara Hara Shankara !



Sage of Kanchi

Jambunatha Iyer
 
நம் மதத்தைப்பற்றி

நம் மதத்தைப்பற்றி



நம் மதத்தைப்பற்றிய சுவாரஸ்யம் என்னவென்றால், பெயரற்ற மதமே நம் மதம். மதமே அல்லாத மதமே நம் மதம். வெள்ளையன் அளித்த பெயரே "ஹிந்து" என்பதே தவிர அது நம் மதத்தின் பெயர் அன்று.

உண்மையில் நாம் கடைபிடிப்பது மதம் அன்று. நம் முன்னோர்கள் நமக்கு அளித்தது சனாதன அல்லது மிக தொன்மையான தர்மம்(நெறி) ஆகும். ஒருவன் தன் வாழ்வினை எவ்வண்ணம் வாழ்ந்தால் அவனுக்கு இன்பம் என்று பல வழிகளைக் கூறுவதே நம் சனாதன தர்மம். நீ இவ்வாறுதான் வாழவேண்டும் என்று சொல்லும். ஆனால் வாழ்ந்தே தீரவேண்டும் என்று தன் என்னத்தை திணிக்காது. நல்லதை சொல்லிவிட்டேன் இனி கேட்பது கேளாததும் உன் விருப்பம் என்று பக்குவ மனப்பான்மையுடன் நம்மை வழிநடத்துவதே சனாதன தர்மமாகும். இந்த சனாதன தர்மத்தில் இன்னாருக்குத்தான் இடம் இன்னார்கு இடம் இல்லை என்ற பாகுபாடே கிடையாது. சனாதன தர்மத்தில் ஆத்திகனுக்கு அளிக்கப்படும் அதே அந்தஸ்து நாத்திகனுக்கும் அளிக்கப்படும்.

சனாதன தர்மத்தை போற்றுபவரை நோக்கும் அதே கண்ணோட்டத்தில் தான் சனாதன தர்மத்தை இழிவுபடுத்துபவரையும் நோக்கும். இதுவே நம் சனாதன தர்மத்தின் மேன்மை. சனாதன தர்மத்தை பின்பற்ற நாம் பெருமிதம் கொள்ளவேண்டும்.



Source: Sage of Kanchi

Venkata Kailasam
 
அற்புதம் நிறைந்த பெண்மையும், பெருமையும்!

அற்புதம் நிறைந்த பெண்மையும், பெருமையும்!



ஹிந்து மதத்திலும் வேதங்களிலும் புராணங்களிலும் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிக கௌரவம் தரப்பட்டிருக்கிறது, பெண்களை சாதாரண மனிதரைப்போல் பாவிக்காமல் தெய்வமாகவே கருதி கௌரவம் தரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது, வயதான பெண்களை மட்டுமல்லாமல் சிறுவயது பெண் குழந்தையைக் கூட “பாலா த்ரிபுரசுந்தரியாக – கன்னிகையாக” பூஜிக்கிறோம், வயதான பெண்களை “ஸுவாஸினிகளாக – அம்பாளாக” பாவித்து பூஜிக்கிறோம்.

ஒரு பெண் (மனைவி) அனுமதியின்றி ஆண் (கணவன்) செய்யும் தானம் தர்மம் போன்றவைகள் பலனைத்தராது, தனது பெற்றோருக்கு செய்யும் ச்ராத்தம் கூட பெண் (மனைவி) கூட இருந்தால்தான் (ஔபாஸன அக்னியில்) நடத்தமுடியும்.

“யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா:” என்பதாக எந்தக் குடும்பத்தில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, அங்குதான் அனைத்து தெய்வ பூஜைகளும் விரதங்களும் பலனைத்தரும் என்கிறார் மனு, ஆகவே ஆண்களைவிட பெண்களுக்குத்தான் சுலபமாக அனைத்து உரிமைகளும் நமது சாஸ்திரங்களில் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் சுவபாவமாகவே அபலைகள் (உடல் வலிமை குன்றியவர்கள்) என்பதால் அவர்களுக்கு அடிக்கடி ஓய்வு தரப்படுகிறது.

“அர்த்தானாம் ஆர்ஜநே சைவ வ்யயே சைவ நியோஜயேத்” என்று, சம்பாதிக்கும் பணத்தை சொத்தை பொருளை வீட்டுப் பெண்களிடம் மனைவியிடம் ஒப்படைத்து, அவர்கள் மூலமாக அவற்றை சிலவு ‘செய்ய’ச் செய்யவேண்டும் என்கிறது நீதி சாஸ்திரம். இப்படி பெண்களுக்கு அதிகமாக கௌரவம் தரக்காரணம் அவர்களுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும் தபஸ் (கற்பு) சக்திதான், ஆம்!

ஆண்கள் பலவிதமாக கஷ்டப்பட்டு பல சாதனைகள் செய்து சம்பாதிக்கும் “தபஸ்” சக்தியை இறைவன் பெண்களுக்கு இயற்கையாவே அமைத்திருக்கிறார், இந்த சக்திக்குத்தான் பதிவ்ரதா சக்தி எனப்பெயர், தனது நடவடிக்கையின் மூலமும் தனது ஆசாரத்தாலும், அன்பாலும் சிற்சில கட்டுப்பாடுகளாலும் இந்த சக்தியை அனைத்துப் பெண்களும் முன் காலத்தில் பாதுகாத்து வளர்த்து வந்தார்கள், அத்துடன் தேவையான நேரத்தில் அத்தகைய தனது பதிவ்ரதா சக்தியை உபயோகித்தும் வந்தார்கள்.

தனது கணவனை, கணவன் ஆசைபட்ட தாஸியின் வீட்டுக்கு கூடையில் சுமந்து சென்றாள் நளாயினீ என்னும் பதிவிரதை, ஆணி மாண்டவ்யர் சாபமிட்டார், விடிந்தால் உன் கணவனுக்கு மரணம் என்று, கணவனின் மரணத்தைத் தடுக்க வேறு வழி தெரியாத கற்புக்கரசி நளாயினி, சூர்யனே உதிக்கக் கூடாது என்று ஆணையிட்டாள், சூர்யனும் உதிக்கவில்லை, பிறகு தேவர்களின் ப்ரார்தனைக்கிணங்க மறுபடி சூர்யனை உதிக்கச்செய்தாள், ஸ்ரீமத் ராமாயணத்தில் ஓர் சம்பவம் ஸ்ரீ ராமரின் தர்மபத்னி சீதாதேவி ராவணணிடம் தனது கற்பின் பெருமைகளைக் கூறுகிறாள்.

|| அஸந்தேசாத் து ராமஸ்ய தபஸசாநு பாலநாத்
ந த்வாம் குர்மி தக்ரீவ பஸ்ம பஸ்மார்ஹ! தேஜஸா ||

ராவணா!, நீ செய்யும் கொடுமைகளுக்கு நான் நினைத்தால் உன்னை எனது கற்புக்கனலால் எரித்து சாம்பலாக்கிவிடுவேன், ஆனால் நான் செய்யமாட்டேன், ஏன் தெரியுமா!, எனது கணவர் எனக்கு (ஆபத்காலத்தில் உனது பதிவ்ரதா சக்தியை உபயோகித்திக்கொள் என்று) ஆணையிடவில்லை, அவர் சம்மதமின்றி நான் செய்ய மாட்டேன், ஆகவே நான் உன்னை விட்டுவிடுகிறேன் என்கிறாள், இதுதான் பதிவ்ரதா சக்தி.

கற்புத் தவறாத மங்கையர்க்கோர் மழை: பதிவ்ரதா சக்தியுடன் திகழும் மாதர்க்காக மாதம் ஒருமுறை மழை பெய்யும் என்கிறாள் ஔவை பிராட்டி, கண்ணகி என்னும் கற்புக்கரசி தனது பதிவ்ரதா சக்தியால் மதுரை மாநகரையே எரித்தாள் என்பதை இலக்கியம் நமக்கு எடுத்துரைக்கிறது, இதைப்போல் நமது தேசப்பெண்கள் தனது பதிவ்ரதா சக்தியின் மூலம் மிகப்பெரும் காரியங்களையும் சாதித்துள்ளனர், ஆனால் இன்றைய பெண்களிடமும் அத்தகைய சக்தி இருக்கிறதா? என்று கேட்டால், ஆம் இன்றளவும் அனைத்து பெண்களிடமும் இத்தகைய சக்தி இருக்கத்தான் செய்கிறது என்பதுதான் பதில்.

ஆனால் இன்றைய பெண்கள் இத்தகைய சக்தியை வெளிப்படுத்துவதில்லை, ஏன் என்றால் பெண்கள் பலர் தன்னிடம் இத்தகைய பதிவ்ரதா சக்தி இருப்பதையே தெரிந்து கொள்ளவில்லை, மேலும் பலர் சுவபாவமாக (இயற்கையாக) அமைந்த இந்த தனது சக்தியை பாதுகாக்கத் தெரியாமல் வழி தவறி இழந்து விட்டார்கள், பலர் இழந்து கொண்டிருக்கிறார்கள், இதற்குக்காரணம் பதிவ்ரதா சக்தியை சரியாக பாதுகாக்காததுதான், இதை பாதுகாக்கும் வழிமுறைகளாக பெண்கள் சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.

எப்போதும் தந்தை கணவர் மகன் என்னும் பாதுகாப்பு வட்டத்தில் வாழ வேண்டும், குல சம்ப்ரதாயங்களை அனுசரித்து, செய்ய வேண்டிய (குலதைவ ப்ரார்த்தனை சமராதனை போன்றவற்றை) செய்யச் செய்ய வேண்டும், செய்யக்கூடாத செயல்களிலிருந்து குழந்தைகளை கணவனை தடுக்க வேண்டும், தானும் தவிர்க்க வேண்டும், குழந்தைகளுக்கு நல்ல போதனைகளை அளிக்க வேண்டும்.

வேத சாஸ்திரத்தை அனுசரித்து பற்பல கர்மாக்களை சொல்லி வந்த ‘ஆபஸ்தம்ப மஹர்ஷி’, தனது “ஆபஸ்தம்ப க்ருஹ்யஸூத்ர” புஸ்தகத்தில் “அட்ஞீபீஙஹட்க்ஷீணூஜ்சூ: ஙணூசூணிச்ஙூயு ஆவ்ருத சாஸ்த்ரீப்ய: ப்ரதீயேரன்” நான் கூறாத பல குடும்ப சம்ப்ரதாயங்களையும் சாஸ்திரங்களையும் குடும்பத்திலுள்ள பெண்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார்.

ஏனென்றால் இன்றும் கூட பல குடும்பங்களிலும் நடைபெறும் தெய்வ பித்ரு காரியங்கள் பெண்களின் தூண்டுதலாலேயே பெண்களின் ஒத்துழைப்பாலேயே நடைபெறுகின்றன, ஆகவே குடும்பத்தில் தனக்குள்ள பொறுப்பை உணர்ந்து கொண்டு பெண்கள் செயல்பட வேண்டும், அவரவர்கள் தாயார் மாமியார் போன்ற பெரியோர்களிடமிருந்து குடும்பப் பழக்க வழக்கங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதன்படி நடக்க முயற்சிக்க வேண்டும்.

பெரியோர்களைக் காணச் செல்லும் போதும் ஆலயங்களுக்குச் செல்லும் போதும் ஆடை அணிவதிலும் மற்றும் சில விஷயங்களிலும் (தலையை விரித்துப் போட்டுக் கொள்ளாமல் இருத்தல், ஆசாரமாக ஆடை அணிதல்) சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், முன்னோர் ஆசாரப்படி சாஸ்திரப்படி தனது கணவனையும் தனது குழந்தைகளையும் அழைத்துச் செல்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஒரு வாஸுகி தேவி ‘பதிவ்ரத’த்துடன் கணவருக்குப் பணிவிடை செய்ததால்தான் இன்றையதினம் நமக்கு ஐயன் வள்ளுவன் மூலம் திருக்குறள் என்னும் பொக்கிஷம் கிடைத்துள்ளது, ஒரு சாரதாதேவியின் அனுகூலத்தால்தான் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் உலகம் போற்றும் உத்தம ஞானியானார், குடும்பத்தைத் துறந்து விட்டு தபஸ் செய்யக் கிளம்பிய யாக்ஞவல்க்ய மஹர்ஷியை தடுத்து நிறுத்தி தாங்கள் எதை (மரணமற்ற தன்மையை) நோக்கிச் செல்லுகிறீர்களோ எனக்கும் அந்த வழியை காட்டிவிட்டு, என்னையும் அந்த வழியிலேயே அழைத்துச் செல்லுங்கள் ,என்று தைரியமாகக் கூறினாள் மைத்ரேயி.

ஆகவே வயதானவர்கள் வயதான காலத்தில் பொருப்புகளை தனது நாட்டுப்பெண், பெண், முதலானவர்களிடம் ஒப்படைத்து ஆத்யாத்மிக விஷயத்தில் ஈடுபட முயற்சிக்க வேண்டும். நமது பாரததேசப் பெண்களுக்குத்தான் இத்தகைய பதிவ்ரதா சக்தி அதிகமாக இயற்கையாகவே இறைவனால் அளிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு பெண்களும் தனக்குள்ள சக்தியை உணர்ந்து கொண்டு அதன்படி நடந்து கொண்டு தனது தபஸ் (கற்பு) சக்தியை பாதுகாத்து வளர்த்து இந்த தேசத்திற்கும் தனக்கும் நன்மையை செய்ய இறைவன் அனுக்ரஹிக்கட்டும்.
 

I would like to share the following mail received from one of my friends:

மஹா பெரியாவா ஸ்ரீ வினாயகர் பற்றி சொன்னது

விநாயகர் லீலையின் மெய்ம்மையும் பொருத்தமும்

ஸ்ரீரங்கத்தைப் பற்றி ஸ்தல புராணத்தில் எப்படி இருக்கிறதோ, ஞாபகமில்லை. ஆதியிலிருந்தே அந்த மூர்த்திக்கு ரங்கராஜப் பேர் உண்டு என்றும், அவர் இருக்கும் விமானத்துக்கு ஸ்ரீரங்கம் என்று பேர் உண்டு என்றும் இருக்கிறதோ என்னவோ? வைஷ்ணவர்களுடைய ஸ்தல புராணமானதால் விக்நேச்வரர் ஸமாசாரம் அதில் இல்லை என்று மட்டும் ஞாபகம் இருக்கிறது. ராமர் காலத்திலே இருந்த சோழ ராஜா.... தர்மவர்மா என்று அவனுக்குப் பேர், ஸ்ரீரங்கம் மூல ஸ்தானத்தைச் சுற்றியுள்ள ப்ராகாரத்துக்கு 'தர்மவர்மன் சுற்று' என்றே பேர், அந்த ராஜா, ரொம்ப காலமாகவே இந்த இக்ஷ்வாகு வம்ச குலதேவதை தன்னுடைய ராஜ்யத்தில் எழுந்தருளணும் என்று தபஸ் இருந்ததால், விபீஷணர் கொண்டு வந்த விக்ரஹம் இங்கே அவர் சிரம பரிஹாரத்திற்காக இறக்கிவைத்தபோது இந்த இடத்திலேயே நிலைக்குத்திட்டுவிட்டது என்றுதான் அதில் சொல்லி அதோடு விட்டிருக்கிறது என்று ஞாபகம் .

ஆனால் லோகத்தில் பிரஸித்தமாயிருப்பது விக்நேச்வரரின் லீலையால் விக்ரஹம் ப்ரதிஷ்டை ஆனதாகத்தான். நம்முடைய மதத்தில் இரண்டு பெரிய பிரிவுகளாக இருக்கும் சைவ - வைஷ்ணவர்களை. ஸமரஸப்படுத்துவதாக இந்தக் கதை இருப்பதால் மனஸுக்கு ஹிதமாயிருக்கிறது. மேலே கதை போயிருக்கிற போக்கு அதற்கு இருக்கும் ஸத்யத்வத்தையும் காட்டுவதாக இருக்கிறது.

கதை எப்படிப் போனதாகப் பார்த்தோம்? பிள்ளையார் ஓடு ஓடு என்று ஓடி மலைக்கோட்டை உச்சிக்குப் போனார், விபீஷணர் துரத்து துரத்து என்று துரத்திக்கொண்டே போய் சிரஸிலே குட்டினார் என்று (பார்த்தோம்) . அதற்கேற்க, உச்சிப் பிள்ளையார் பிம்பத்தின் சிரஸில் இன்றைக்கும் குட்டுப் பட்டதில் உண்டான வடு இருக்கிறது. பிள்ளையார் மலை உச்சியில் இருப்பதே அபூர்வம். விபீஷணரிடம் அகப்படாமலிருக்கத்தான் அவர் மலை ஏறி வந்து அங்கே அப்படியே ஸ்திரவாஸம் கொண்டுவிட்டார் என்பது பொருத்தமாக இருக்கிறது.

இதிலேயே பெரிய யோக சாஸ்திர தத்வார்த்தமும் இருக்கிறது. அடி மூலாதாரத்தையும் உச்சி ஸஹஸ்ராரத்தையும் சேர்த்து வைக்கிற தத்வம். அந்த விஸ்தாரம் இப்போது வேண்டாம்.

ஸ்ரீரங்கநாதருக்கு விக்நேச்வர ஸம்பந்தம் இருப்பதில் இன்னொரு பொருத்தமும் உண்டு. அகஸ்தியர் கமண்டலுவுக்குள் அடைத்து வைத்திருந்த காவேரியை வெளியிலே ஆறாகப் பிரவஹிக்கப் பண்ணினவரே விக்நேச்ரவர்தான். காக்காய் ரூபத்திலே போய்க் கமண்டலுவைக் கவிழ்த்து ஓடவிட்டார் என்று கதை. காக்காயை அக்ஸ்த்யர் துரத்திக்கொண்டு போனார். அப்போது காக்காய் பிரம்மசாரியாக மாறிற்று. விபீஷணர் கதையிலும் பிரம்மசாரியாக அவர் ஆனதைப் பார்க்கிறோம்!இப்போது விபீஷணர் அவரைக்குட்டப் போனார் என்று பார்த்தோம். பூர்வத்திலும் அவரைக் குட்டத்தான் அகஸ்தியர் கையை முஷ்டியாக மடக்கி கொண்டு துரத்தினார்.

இப்போது குட்டுப்பட்ட அப்புறம் ஸ்வய ரூபம் காட்டிய விக்நேச்வரர் அப்போது குட்டுப் படுகிறதற்கு முந்தியே மஹர்ஷிக்கு திவ்ய ரூபத்தில் தர்சனம் கொடுத்துவிட்டார். "ஐயோ!உன்னையா குட்டப் போனேன்? இந்த அபசாரத்துக்காக

என்னையேதான் குட்டிக்கணும்" என்று அகஸ்தியர் இரண்டு கையாலும் இரண்டு பொட்டிலும் குட்டிக்கொண்டார். அவருக்கு நிரம்ப அநுக்ரஹம் செய்த பிள்ளையார் அப்போதுதான் அவர் குட்டிக் கொண்டதை தம்முடைய வழிபாட்டிலேயே ஒரு முக்யமான அம்சமாகப் பண்ணி ஸகல ஜனங்களும் அப்படிப் பண்ணணும் என்று வைத்தார் என்று ஒரு கதை.

இந்த இரண்டு கதைகளிலும் இருக்கிற ஒற்றுமை ஒன்றை மற்றது 'காம்ப்ளிமென்ட்' பண்ணுவது ஆகியவற்றுக்குச் சிகரமாக, மஹாவிஷ்ணு, காவேரி, விக்நேச்வரர் மூவரையும் ஸம்பந்தப்படுத்துவதாக ஒன்று வருகிறது. ஆதியில் விக்நேச்வரர் கமண்டலுவைக் கவிழ்த்துக் காவேரியாக ஓட வைத்தது எங்கே என்றால் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஸஹ்யாத்ரி என்று இருக்கிற இடத்தில் ஒரு நெல்லி மரத்தின் அடியிலிருந்துதான், நெல்லி மரத்தடிதான் காவேரிக்கு உத்பத்தி (உற்பத்தி) ஸ்தானம். அந்த நெல்லி மரம் ஸாக்ஷ£த் மஹாவிஷ்ணுதான். பெருமாள்தான் அப்படி விருக்ஷரூபத்தில் நின்றார். விஷ்ணு மாயையின் ஒரு அம்சமே லோபாமுத்ரை என்ற ஸ்த்ரீயாகி அந்த லோபாமுத்ரை அகஸ்த்யருக்குப் பத்னியாகி அப்புறம் அவருடைய கமண்டலு தீர்த்தமாக ஆனது.

அவள் காவேரியாக பகவானின் பாதத்திலிருந்து பிரவஹித்தபோது அவர் அவளிடம் பரமப்பிரியத்துடன் "கங்கையும் என்னுடைய பாத தீர்த்தத்திலிருந்துதான் பெருக்கெடுத்து ஓடினாள். அவளைக் காட்டிலும் c எனக்கு ப்ரியம். ஆகையினோலே, அவளுக்கு என் பாத ஸ்பரிசம் மாத்திரம் கிடைத்ததென்றால் உனக்கோ என் ஸர்வாங்க ஸ்பர்சமும் கிடைக்க அநுக்ரஹிக்கிறேன். இப்போது மரத்தடி வேரிலிருந்து புறப்பட்ட உனக்கு என் பாத ஸபர்சம் கிடைத்திருக்கிறது. அப்புறம் c மஹாநதியாக ஓடி வரும்போது இரண்டாகப் பிரிந்து அப்புறம் ஒன்று சேர்கிற தீவில் இரண்டு ஹஸ்தத்தாலும் என்னை அப்படியே முழுசாக இரண்டு பக்கமும் அணைத்துக் கொள்வாய்" என்றார்.

அவர் அன்றைக்கு அப்படி வரம் தருவதற்குப் 'பிள்ளையார் சுழி' போட்டவர் அவருடைய பாத ரூபமான நெல்லி மரவேரில் கமண்டலுவைக் கொட்டிக் கவிழ்த்த பிள்ளையார் தான். ஆகையினாலே அவரேதான் உபய காவேரியாக இரட்டைப் பெருக்காக்கி அவள் ஓடிய இடத்தில், அவள் இரண்டு ஹஸ்தத்தாலும் ஆலிங்கனம் செய்து கொள்ளும்படியாக ராமர் விபீஷணனக்குக் கொடுத்த ஜீவ சைதன்யமுள்ள பெருமாள் விக்ரஹத்தை ஸ்தாபித்தார் என்பது, (சிரித்து) புலவர்கள் பாஷையில், 'சாலப் பொருத்தம்' தானே?

கலாசார வளர்ச்சி கணேசராலேயே

தேவார ஸ்தலங்களைப் பற்றியும், திவ்ய ப்ரபந்த ஸ்தலங்களைப் பற்றியும் காவேரி ஸம்பந்தமாகச் சொன்னேன். இது தவிர, மூவர் பாடலோ, ஆழ்வார் பாடலோ இல்லாமல் காவேரி தீர ஊர்களில் எழும்பியிருக்கிற கோவில்களோ ஆயிரம் பதினாயிரம் என்று போகும். இம்மாதிரி, 'தெய்வத் தமிழ் நாடு' என்கிறபடி இதைக் கோவில் மயமாக்கி, பக்திக்கு த்ராவிடம்தான் தாய்நாடு என்று பாகவதாதி புராணங்களும் ஸ்தோத்ரிக்கும்படியான ப்ரேமை ஏற்பட்டிருக்கிறதென்றால், அதற்கு ஒரு முக்யமான காரணம் இந்த நாட்டுக்குக் காவேரியை அநுக்ரஹித்த விக்நேச்ரவரர்தான்.

தெயவத்தைத் தொட்டுக் கொண்டே மற்ற Fine arts (ஸங்கீதம், நாட்டியம், சித்ரம்) , Plastic arts (சில்பம்) , Literature (இலக்கியம்) எல்லாமும் அந்தப் பிராந்தியத்தில் விசேஷமாக உண்டாகி லோகத்திலேயே பெருமைப்படும்படியான நம்முடைய கலாசாரம் உருவாகியிருப்பது முடிவாக அவரால்தான்.

இப்படி ஒரு பெரிய உபகாரம் பண்ணியிருப்பவர் பிள்ளையார்.
June



UGeetha Veeraraghavan Srirangam


https://www.facebook.com/geetha.veeraraghavansrirangamSource: Srirangachari Ji

 
Last edited by a moderator:
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top