• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
Hrudhayavasa.

HRUDHAYAVASA.


In the court of the Kauravas was brought in Draupati, the wife of the Pandavas. The Pandavas have gambled and lost their wife Draupati to the Kauravas. Duryodhana, the king of the Kauravas ordered his brother Duchadhana to remove Draupati’s cloth . Duchadhana proceeded as per the order and started to remove the clothing off poor helpless Draupati, as the elders of the court and her five husbands, the pancha pandavas were witnessing the horror committed.

In complete despair, she finally called out Lord Krishna for help. In her shrill voice as the entire courtroom vibrated she screamed out for Krishna with all His glorious sobriquets, “Oh dear Kanna.., Madhusudhana.., Trivikrama.., Padmanabha.., Govindha.., Pundarikasha.., Krishna.., Kesava.., Sankarshana.., Vasudeva…, Purushottama.., Atchudha.., Vaamana.., Damodharaa.., Sridhara…“.

But there was no response from Krishna immediately as one would expect to happen. Only after a while when Draupati chanted another one of Krishna’s name, namely “Dwaraka vasa., come save me”, Lord Krishna immediately appeared in the courtroom and catered her with more robes, covering her over while Duchadhana kept de-robing her, thus saving her from the predicament.

On a later day, a curious Draupati questioned Lord Krishna on why he took so long to come save her while the Kauravas were harassing her. The mischievous Lord Krishna gave a loud laugh and exclaimed, “Oh dear sister Draupati, you called out for me with all my different names (namas), and finally called out for me with the name ‘Dvaraka vasa’ (one who dwells in the city of Dwaraka). Don’t I have to travel from Dvaraka to reach you? And that is why it took me a while to reach you! If only you had used my namah ‘Hrudhaya vasa’ (one who dwells in the heart) and called out for me the first time, I would have appeared instantly out of your heart and saved you without any delay!“


Lord Sri Krishna insists on his followers to keep Him closer to their hearts if they would want Him to always be with them and guide them through all the mayas (illusions) of worldly miseries.



Source: Sage of Kanchi

Gayathri Rao
 
ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர பலன்!

ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர பலன்!


SO_162726000000.jpg


ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம் இந்த ஸ்லோகத்தை அவரவர் நக்ஷத்திரத்திற்கு கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திர திருநாட்கள், மாத சிவராத்திரி தினங்கள், பிரதோஷ காலம், சோமாவாரம் (திங்கட்கிழமை) ஆகிய புண்ணிய தினங்களில், உடல் உள்ள சுத்தியுடன் இந்த ஸ்லோகங்களைப் பாடி, வில்வம் சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட கஷ்டங்கள் விலகும்; எண்ணியது ஈடேறும்.

ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்

please read from this link

???????????, ??????????, ??????????, ????????????
 
Imparting vedic mantras to children is a true honour to mahaperiyava


IMPARTING VEDIC MANTRAS TO CHILDREN IS A TRUE HONOUR TO MAHAPERIYAVA



10646863_786777391344174_6943678345025978837_n.jpg
 


I would like to share the following email received from a friend of mine:

பெரியவா ஸர்வக்ஞர் அவருக்கு தெரியும்ன்னு தோணாம போச்சே


சதாராவில் முகாம். ஒரு அரச மரத்தின் கீழ் இருப்பு. அதன் வேரில் தலையை வைத்து படுத்துக்கொள்வார் பெரியவா. முன்னால் ஒரு திரை இருக்கும். தரிசனம் கொடுக்கும் நேரம் அதை திறப்பார்கள். மற்ற நேரம் மூடி இருக்கும்.

பிரபல வீணை வித்வான் ஒருவர். பெரியவாளை தரிசித்து தன் திறமையையும் காட்ட விருப்பம் கொண்டார். சென்னையில் இருந்த குலபதி ஜோஷி என்பவரை பிடித்தார். இருவரும் சதாரா சென்றனர்.

பெரியவா வழக்கம்போல தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார். இவர்கள் கொஞ்சம் தாமதித்து நமஸ்காரம் செய்து விட்டு உத்தரவு பெற்று வீணையை உறையில் இருந்து வெளியே எடுத்தார். வந்திருந்த பொதுமக்களும் பிரபல வீணை வித்வானின் கச்சேரியை கேட்க ஆர்வத்துடன் தயாரானார்கள்.

வித்வான் வாசிக்கஆரம்பித்தார். சுமார் 15 நிமிஷங்கள் வாசித்தார். கேட்டவர்களும் ஆஹா அருமையாக வாசிக்கிறார் என்று ரசித்தனர். வாசித்து முடித்ததும் வீணையை உறையில் இட்டார். திடீரென்று பெரியவா அதை மீண்டும் வெளியே எடுக்கச் சொனார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

அப்புறம் நான்அதை வாசிக்கலாமா என்று பெரியவா கேட்டார். எல்லாருக்கும் திகைப்பு! பெரியவாக்கு வீணை வாசிக்கத்தெரியுமா என்ன?

வீணையில் ஸ்ருதி கூட்டி பின்மீண்டும் வித்வானிடம் காட்டினார். இன்ன ராகத்துக்கு (எனக்குத்தான்அது மறந்துபோய்விட்டது. அந்த பெரியவர் என்னவென்று சொன்னார்) ஸ்ருதி கூட்டி இருக்கேன், சரியா இருக்கான்னு பாரு.

சரியா இருக்கு!

பின் பெரியவா வீணை வாசிக்கஆரம்பித்தார். சில நிமிடங்கள் போனதும் வீணை வித்வான் முகம் மாறியது. வீணை வித்வான் அழ ஆரம்பித்தார். கன்னத்தில் பட பட என்று போட்டுக்கொண்டார். விழுந்து விழுந்து நமஸ்கரித்தார். க்ஷமிக்கணும் க்ஷமிக்கணும் என்று கதறினார்.

அடுத்த பத்து நிமிடங்களில் ஒரு ஐம்பது முறையாவது நமஸ்காரம் செய்திருப்பார். கண்ணீரோ ஆறாக ஓடியது. " தப்பு பண்ணிட்டேன் க்ஷமிக்கணும்" என்பதையே திருப்பி திருப்பிச் சொல்லிகொண்டு இருந்தார்.

வாசித்து முடித்தபின் பெரியவா வீணையை திருப்பிக் கொடுத்தார். "வித்யாகர்வம் ஏற்படக்கூடாது கவனமாக இரு" என்று சொல்லி ஆசீர்வாதம் செய்துவிட்டு திரையை போட்டுக்கொண்டார்.

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. வித்வான் அழுது கொண்டே வெளியேறினார். கூட வந்த குலபதிக்கு ஒன்றும் புரியவில்லை.

என்னடா ஆச்சு? ஏன் இப்படி அழறே? ஏதோ பெரிய தப்பு செஞ்சா மாதிரி விழுந்து விழுந்து நமஸ்காரம் செஞ்சியே? என்ன ஆச்சு?

ராவணன் சிவபெருமானை சந்தித்து வரங்கள் வாங்கி வருகிறான்.

எதிரில் நாரதர் வந்தார்.

என்னப்பா ரொம்ப சந்தோஷமா வரியே என்ன விஷயம்?

நான் சிவபெருமான்கிட்டே நிறைய வரங்கள் வாங்கி வந்துட்டேன்!

அட அசடே!அவர் பாட்டுக்கு ஏதாவது கொடுத்துட்டேன்னு சொல்லுவார். எதுக்கும் அது வேலை செய்யறதான்னு பாத்துக்க!

என்ன சொல்லறீங்க?வேலை செய்யாமலும் இருக்குமான்னா?

எதுக்கு சந்தேகம்? செஞ்சு பாத்துடு.உனக்கு நிறைய பலம் இருக்கும்ன்னு சொன்னாரா?

ஆமா. சரி,இந்த கைலாசத்தையே தூக்கி பாத்துடலாம்!

கைலாசத்தை ஒன்பது தலை, 18 கைகள் கொண்டு தூக்க அது கொஞ்சம் அசைஞ்சதாம். பார்வதி திடுக்கிட்டுப் போய் சிவனை கட்டிண்டாளாம்!சிவன் சிரிச்சாராம்.

பார்வதி கோபிச்சுக்கொண்டு,ஓய் உமக்குஸ்த்ரீயின் குணம் எப்படி தெரிய போறது? ஒரு பெண்ணா பிறந்து அதை அனுபவியும் ன்னு சொல்ல சிவனும் சரின்னுட்டார். அதனால அவரே சீதையாக பிறந்தார். அதனால்தான் ராவணனுக்கு சீதை மேலே ஒரு ஈர்ப்பு வந்தது. இல்லைன்னா ஜகன்மாதா மீது கவர்ந்து போகணும்ன்னு அப்படி ஒரு எண்ணம் வருமோ?

(
இங்கே பெரியவரை திருப்பி கதைக்கு இழுக்க வேண்டி இருந்தது!)

மலை கொஞ்சம்அசைஞ்சதும் பெருமான கால் கட்டை விரலால கொஞ்சம் அழுத்தினார். மலை கீழே உக்கார்ந்து கொண்டது. ஒன்பது தலை 18 கைகள் கீழே மாட்டிக்கொண்டன.

ராவணன் செய்வதுஅறியாமல் திகைச்சு போனான்.

நாரதர் "அட அசடே! சோதனை பண்ணுன்னா இப்படியா கைலாசத்து மேலேயே சோதனை செய்வாய்? " என்றார்.

நாரதரே! தப்பிக்க ஏதாவது வழிசொல்லும்.

அட உனக்குத்தெரியாததா? சிவன் ஆசுதோஷி. சாம கானம் இசைச்சா உனக்கு வேண்டியதை செய்வார்.

நான்தான் மாட்டிக் கொண்டேனே?

பரவாயில்லை, இன்னும் ஒரு தலை இரண்டு கைகள் வெளியேதானே இருக்கு. வீணை இல்லையே?

இதோ நான்தரேன் என்று தன் வீணையை நாரதர் கொடுக்கிறார்.

ராவணனும் ஸாமகானம் இசைத்து சிவ பெருமானை சந்தோஷப் படுத்த அவரும் அவனை விடுவிக்கிறார்.

அது சரி,இந்தக்கதை இங்கே ஏன் வந்தது???

வீணை வித்வான் வாசித்த பாட்டு இந்த கதையைதான் சொன்னது.
இதில் ராவணனின் ஸாமகானம் வந்தபோது அவருக்கு அந்தவரிகள் நினைவுக்கு வரவில்லை. யோசித்து யாருக்கு இது தெரியப்போகிறது என்று நினைத்து வேறு எதையோ அதன் இடத்தில் வாசித்து நிறைவு செய்துவிட்டார்.

பெரியவா வீணையைவாங்கி வாசித்ததுஅதே பாடலைத்தான். மாற்றிய வரிகளின்இடத்தில் எவை வர வேண்டுமோ அவற்றையே சரியாக வாசித்துக் காட்டினார். இதை புரிந்து கொண்டார் என்று அறிந்த வீணை வித்வான் வேறு என்ன செய்வார்?

"
யாருக்குத்தெரிய போறதுன்னு நினைச்சேனே! பெரியவா ஸர்வக்ஞர் அவருக்கு தெரியும்ன்னு தோணாம போச்சே! பெரிய அபசாரம் செய்துவிட்டேன்" என்று நண்பரிடம் சொல்லி அழுதார் வித்வான்.



உபயம் திருமதி
Geetha Veeraraghavan Srirangam

email source: Srirangachari Ji
 
Mahaperiyava ‘s Grandfather Ganapathi Shastrigal.


Ganapathi Shastrigal was well versed in Shastras and trained in Rig Veda at an early age. He was fluent in Tamil, Telugu, Kannada Maharashtram as well as being an able administrator. The 64th Acharya Swamy of Kamakoti Peetam, Sri Chandrashekarendra Saraswathi Swamigal, discovering his efficiency, appointed him as the Chief Executive Officer of the mutt in 1835. He occupied this post for more than 50 years during the tenure of 64th and 65th Peetathipathi.

The 64th Acharya Swamiji performed the kumbabhishekam of the Kancheepuram Kamakshi Amman temple in 1840 and the Thatanga prathishtai of Sri Akhilandeswari Amman in 1848.

Ganapathi Shastrigal helped to conduct these two events successfully and obtained Swamiji’s blessings. Moreover, he was instrumental in effecting important events that were beneficial to the mutt in the long term. Let’s take a look at one of the key events here: The 64th Acharya Swamy, Srimad Chandrashekarendra Saraswathi Swamigal camped in Thiruvanakaval between 1844 and 1848 at Kanchi Sankara mutt in North Sri Maha Devendra Saraswathi Swamigal, 65th Peetathipathi, in his purvashrama was Ganapathy Shastrigal’s brother’s son.

The ear rings of Sri Akhilandeswari, the residing deity of Thiruvanakaval, had to be repaired and prathishta of the ear rings had to be performed again. The temple officials and authorities requested Swamigal’s to accomplish these events and he accepted their invitation.

At that time, officials of Sringeri mutt filed a case at Tiruchirapalli Sathar Ameen court claiming that the right to perform Thatanga Prathishta to Ambal rested with their Acharya only. The judge presiding at that court rejected their claim on 17th October,

1846. The officials of Sringeri mutt filed an appeal at Tiruchi civil court. The civil court judge upheld the lower court's decision and rejected the appeal on January 12th 1848.

Sesha Josyar, the Agent of Sringeri mutt, then filed special appeal with Chennai Sadar Adalat court (then High Court) on 11-9-1848. The High court also rejected the case. But a petition was filed to review the decision and the petition was duly rejected. It is to be noted that all judges who ruled against the Sringeri Mutt were not Hindus.

After the conclusion of the above said event, the 64th Acharya conducted the Thatanga Prathishta of Ambal’s ear rings in the proper way after repairing the same, during the later part of the year 1848.

The Sri Mutt was facing difficult times financially after bearing the expenses of a long legal battle, the Thatanga Prathishta and also because the Acharya was stationed in one place. During that time, Acharya was said to have told Ganapathy Shastrigal, “I am getting old and the debts of the mutt are increasing. Taking these into consideration, I feel I should have let Sringeri Swamigal perform the Thatanga Prathishtai”.
Immediately following this event, Ganapathy Shastrigal was not found anywhere around the mutt for few days. When he returned, he was asked about his sudden trip.

Ganapathy Shastrigal had gone to visit Tanjore palace to find out about the feasibility of the Acharya's visit to the palace on the way from Thiruvanakaval to Kumbakonam. He was informed by the King and his officials that the visit was not possible.

It was decided that Swamigal and his followers would leave for Kumbakonam via Thiruvaiyar in a couple of days. On the appointed day, the caravan including carts belonging to Sri Mutt, elephants, horses, etc were traveling on the way to Thiruvaiyar. At the cross roads to go to Thiruvaiyar, the officials from Tanjore palace waylaid the mutt caravan and ordered them to turn towards Tanjore. Carts belonging to Sri Mutt were forced to travel towards Tanjore. After some time, when Acharya Swamy reached the Thiruvaiyar / Tanjore crossroads, he was received and welcomed with great respect by the Diwan, palace officials and Vedic scholars and taken to Tanjore.

Acharya Swamy was camped at Tanjore for more than a week. Special food was provided to everyone belonging to Sri Mutt as well as the general public at Shreyas Chathiram, Vennathangarai Chathiram and Rathri Chathiram.

On the night before His departure, Sri Swamy was taken on a procession on an elephant with the king’s son-in-law seated behind His Holiness. On another elephant, the king followed along with Ganapathy Shastrigal and the procession continued around all the four streets and thousands of people gathered to watch the glorious sight.

Next morning, when Sri Swamigal was about to leave the palace, He was requested to sit in an Asana under a tree. The king Shivaji Raja howered Sri Swamigal with small gold flowers which covered up to His Holiness’ neck. The sudden change in the king’s attitude that had previously rejected Ganapathi Shastrigal’s proposal of Sri Acharya’s Tanjore visit was revealed at that time.

Two days before Sri Swamiji left Thiruvanaikaval, the king had a dream where someone kept asking him how he could not do aradhana for Sri Acharyal and Chandramouliswarar Swamy when they were passing by to go to Thiruvaiyar that is so close to Tanjore. Immediately Shivajiraja made all arrangements including the stay and Kanagabhishekham.


Even though,Sri Swamigal was not keen on Keeping the gold from kanagabhishekham, Ganapathi Shastrigal wanted to use the money to obtain revenue yielding land for the mutt. After finally obtaining the consent of Sri Swamy, Ganapathy Shastrigal consulted Perunilakizhar Moopanar from Kapisthalam. He purchased 250 acres of fertile lands belonging to Anaikudi Ramaswamy Pillai at Karuppur, which is situated two miles from Tanjore.

The lands in this village are the most extensive and most profitable of all of the mutt’s properties. It is believed that the lands in Karuppur were purchased within a few years of the session of monastery by 65th Peetathipathi of Kanchi Kamakoti Peetam, Sri Maha Devendra Saraswathi Swamigal.

Source : Pujya Sri Mahaswamy Divya Charitram -Sri Sambamoorthi Shastrigal, Sri Kuppuswamy Iyer, “Sollin Selvan” P.N.Parasuraman



Source: Sage of Kanchi

Jambunathan Iyer

By reading the details of lineage in your narrative, it appears that in those days the Swamiji's of the Kanchi ( Kumbhakonam ) Mutt were chosen mainly from one or two families - and not otherwise. It seems even the Managers of the Mutt seemed to be from related families.

I had heard or read this earlier but not believed it.
 
பசுபதி

பசுபதி


பாசம் என்பது தான் அஞ்ஞானம். பாசத்தினால் கட்டப்பட்டிருக்கிற நாம் பசு. ஆண்டவன் பதி.பாசத்தை அறுப்பவன். அஞ்ஞானத்தை நிவர்த்தி செய்பவன் ஆண்டவன். அதனால் தான் அவனுக்கு பசுபதி என்று நாமம் ஏற்பட்டது. பாசத்தினால் கட்டப்பட்டு இருக்கிறவரைக்கும் நமக்கு பசு என்று தான் பெயர். பாசத்தை அறுத்துவிட்டால் நாம் பதியோடு சேர்ந்துவிடுவோம்.


- ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்


?????: ??????????? ?????, ??????????, ??? ???? ??????? ??????? ??? ???????????, ??????????, ???????, ... : kamakoti.org:
 
Jagathguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal A documentary - 7 parts

Jagathguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
A documentary - 7 parts


Part 1 of 7) Life of Paramacharya http://www.youtube.com/watch?v=s5oeSl3Yv7s

(Part 2 of 7) Life of Paramacharya
http://www.youtube.com/watch?v=eHcwfD8TKv4

(Part 3 of 7) Life of Paramacharya
http://www.youtube.com/watch?v=R6FbwCh648I

(Part 4 of 7) Life of Paramacharya
http://www.youtube.com/watch?v=EvJbloXA2eU

(Part 5 of 7) Life of Paramacharya
http://www.youtube.com/watch?v=G7eAWFqtqtU

(Part 6 of 7) Life of Paramacharya
http://www.youtube.com/watch?v=3lEHb5fff4g

(Part 7 of 7) Life of Paramacharya ~ Concluding Part
http://www.youtube.com/watch?v=4XiWdjSlNOQ
 
மஹா பெரியவாளின் 3 கட்டளைகள்

மஹா பெரியவாளின் 3 கட்டளைகள்


தினமும் 3 வேளை சந்தியா வந்தனம் செய்.

சஹஸ்ர காயத்ரி ஜபம் செய்.
ஏகாதசி உபவாசம் இரு.

I. சந்தியா வந்தனம்:
images.jpg



தினமும் 3 வேளை கண்டிப்பாக சந்தியா வந்தனம் செய்யவேண்டும். விட்டுப்போனதை கணக்கில் வைத்துக்கொண்டு பிறகு செய்யவேண்டும். அடுத்த நாளோ அல்லது அதற்கு அடுத்த நாளோ விடாமல் செய்ய வேண்டும். (இது முசிறி பெரியவா சொன்னது). மஹா பெரியவா தன் வாயால் அவரை மகான் என்று சொல்லியிருக்கிறார்.

II. சஹஸ்ர காயத்ரி ஜபம்:


japa-yoga.jpg



மஹா பெரியவா காயத்ரி ஜப மகிமையைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். அதுவும் சஹஸ்ர காயத்ரி பண்ணச் சொல்லியிருக்கிறார். ரிடையர் ஆன ஒருவருக்கு இப்படி உபதேசம் செய்கிறார். “தினமும் சஹஸ்ர காயத்ரி செய்துகொண்டு வா. இது பரத்துக்கு. போஸ்ட் ஆபீசில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு உதவி செய். அவர்கள் கொடுக்கும் பணம் போதும் இகத்துக்கு.”

இந்த உபதேசம் அவருக்கு மட்டும் இல்லை. நம் எல்லோருக்கும் தான். ரிடையர் ஆவதற்கு முன் வாரம் ஒரு நாள் ஞாயிறு அன்றாவது சஹஸ்ர காயத்ரி பண்ணு என்று சொல்லியிருக்கிறார்கள். இதை முடிந்தவரையில் நாம் கடைபிடிப்போமே.

தினமும் 1 மணி நேரம் கிடைத்தால், டிவி பார்ப்பதை தவிர்த்து விட்டு இதை செய்தால் மஹா பெரியவா கட்டளைப்படி நடந்த புண்ணியம் நமக்கு கிடைக்கும். சொல்வது எளிது செய்வது கஷ்டம் என்றுதானே நினைக்கிறீர்கள்? நான் ஒரு வழி சொல்கிறேன்.

தினமும் காலையிலோ மாலையிலோ 1 மணி நேரம் கிடக்கும்போது, குளித்துவிட்டு சுத்தமான உடை (பஞ்சகச்சம்) அணிந்துகொண்டு, ஒரு அமைதியான இடத்தில் ஆசனம் போட்டு கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு நோக்கி நிமிர்ந்து அமர்ந்து கொண்டு ஆரம்பிக்கவும். நமது உள்ளங்கையை மேருவுக்கு ஒப்பாகச் சொல்வார்கள். ஒரொரு விரலிலும் 3 பாகங்கள் உண்டு. மோதிர விரல் நடு பாகம் 1 என்று கொண்டால் அடிப்பாகம் 2. சுண்டுவிரல் 3,4,5 (அடி, நடு, மேல் ), மோதிர விரல் நுனி 6, நடுவிரல் நுனி 7, ஆள்காட்டி விரல் 8,9,10 (மேல், நடு, அடி ). பிறகு 11 லிருந்து 20 வரை ஆள்காட்டி விரல் அடியிலிருந்து மோதிர விரல் நடு பாகம் வரை சென்று பூர்த்தி பண்ணவேண்டும். ஒரொரு எண்ணிக்கைக்கும் ஒரு காயத்ரி என்று சொன்னால் 20 எண்ணிக்கை வரும். இப்படி செய்தால் ஒரு முறை மேருவை (ஆதி பராசக்தி ஆட்சி செய்கிறாள் ) வலம் வந்ததிற்கு ஒப்பாகும்.

நாம் மேருவைப் பார்த்ததில்லை. அதனால் நான் ஒரு வழி வைத்திருக்கிறேன். திருவண்ணாமலையை மேருவாக உருவகம் செய்துகொண்டு செய்யலாம்.

1. கோவில் வாசலில் நமஸ்காரம் செய்தல். ( கிழக்கு கோபுர வாசல் )
2. தெற்கு வாசலில் பிள்ளையார் தரிசனம்.
3. சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமத்தில் நமஸ்காரம்.
4. ரமண மகரிஷி தரிசனம்.
5. யமலிங்க தரிசனம்.
6. நந்திஎம்பெருமான் தரிசனம்.
7. மகாவிஷ்ணு தரிசனம்.
8. ஆஞ்சநேய சுவாமி தரிசனம்.
9. கிரிவலம் செல்லும் பாதை.
10. ஆதி அண்ணாமலையார் சன்னதி. (ப்ரம்மா ஆதியில் வழிபட்ட லிங்கம்)
11. ஆதி அண்ணாமலையாருக்கு நமஸ்காரம்.
12. வடக்கு கிரிவலப் பாதை. ஒரு மொட்டை கோபுரம் வரும்.
13. குபேர லிங்க தரிசனம்.
14. இடுக்கு பிள்ளையார்.
15. பஞ்சமுக தரிசனம்.
16. ஈசான்ய மூலை.
17. கிழக்கு கிரிவல பாதை.
18. கிழக்கு கிரிவல பாதை.
19. கோபுர வாசலை நெருங்குகிறோம்.
20. கிழக்கு கோபுர வாசலை அடைகிறோம்.

மேற்க்கண்டவை கிரிவலம் செய்தவர்க்கு புரியும்.

இப்பொழுது மூச்சுப் பயிற்சியைப் பார்ப்போமா?

நாம் சாதாரணமாக மூச்சு விடுவது வயிற்றிலிருந்து இருக்கவேண்டும். (அப்டாமினால் பிரீதிங் ). ஒரு கையை வயிற்றிலும் ஒரு கையை நெஞ்சிலும் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது மூச்சை வெளியே விடும்போது கீழ் கை உள்ளே போகவேண்டும். மூச்சு உள்ளே இழுக்கும்போது கீழ் கை வெளியே போகவேண்டும். பிறகு மேலும் மூச்சு இழுக்கும்போது, மேல் கை ( நெஞ்சில் இருக்கும் கை) வெளியே வரவேண்டும். மூச்சு வெளியே விடும்போது முதலில் மேல் கை உள்ளேயும் பிறகு வயிற்றில் இருக்கும் கை உள்ளேயும் போகவேண்டும். இதுதான் ஆழ்நிலை மூச்சு (டீப் பிரீதிங் ). புரிந்ததா? இதை விடாமல் பயிற்சி செய்யவும். இதுதான் மனதையும், உடலையும் மூளையையும் ஆரோக்யமாக வைத்துக்கொள்ளும் ஒரே வழி. கை வைத்துக்கொள்வது பயிற்சிக்காக மட்டுமே. நாளடைவில் உங்களை அறியாமலே அப்டாமினால் பிரீதிங் கைகூடும்.

நாம் மறுபடியும் கிரி வலத்துக்கு வருவோம்.

1 – 20 காயத்ரி. மூச்சை உள்ளே இழுத்து விட்டு ஆரம்பிக்கவும். முடியும் வரை இழுத்துப் பிடிக்கவும். 7 அல்லது 8 க்குப் பிறகு காயத்ரி சொன்னவாறே மெதுவாக மூச்சை வெளியே விடவும். மீண்டும் 11 லிருந்து 20 வரை ஒருமுறை இழுத்து அடக்கி விடவும். இது ஒரு கணக்கு. ஆரம்பத்தில் 3 அல்லது 4 முறை ஆழ் மூச்சு விடவேண்டியிருக்கும். பழக்கத்தில் சரியாக வந்துவிடும். எதையுமே 21 நாட்கள் தொடர்ந்து செய்தால் பழக்கமாகிவிடும் என்று சொல்வார்கள். (ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள் )


எதிரே ஒரு ஆசனம் போட்டு 10 நெல் அல்லது மணி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இப்படி 1 முறை (1-20) செய்தால் இடது கையில் ஒரு விரலை மடக்கிக் கொள்ளுங்கள். இப்படியாக 5 முறை செய்தால் 100 எண்ணிக்கை வரும். ஒரு நெல் வைக்கவும். இடது பக்கம் 3, மேலே 3, வலது பக்கம் 3 வைத்தால் ஒரு சிவ லிங்கம் வரும். 10 ஆவது நெல்லை கீழே ஆவுடையாக வைத்துவிடுங்கள் . இப்பொழுது 1000 காயத்ரி முடிந்தது. மேலும் ஒரு 8 சொல்லி, நைவேத்யம் செய்து ருத்ரம் சொல்லி பூர்த்தி பண்ணிவிடுங்கள்.

இப்படி கிரிவலம் செல்லும்போது நாம் மட்டும் செல்லாமல் மானசீகமாக நம் குடும்பத்தினரையும் அழைத்துச் செல்லவும்.

மேற்கண்ட முறையில் பல நன்மைகள் உள்ளன. அவை என்னெவென்று பார்ப்போமா?

திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்று சொல்வார்கள். நாம் இப்போது 50 தடவை கிரிவலம் செய்திருக்கிறோம்.


நம் குடும்பத்தினரையும் அழைத்து சென்றிருக்கிறோம்.
100 தடவை ஆழ் மூச்சு எடுத்திருக்கிறோம். அதனால் உள்ள பலன்கள் அநேகம்.
இதனால் வாயிற்று தசைகள் பலப்படிருக்கின்றன.


தொப்பை குறையும்.
நிமிர்ந்து உட்காருவதனால் முதுகுத் தசைகள் பலப்படிருக்கின்றன.
50 தடவை மகான்கள், தெய்வ சந்நிதிகள் தரிசனம்.
மனதை ஒருநிலைப் படுத்தும் பயிற்சி.
விரல்களின் ஒவ்வொரு இடமும் மலையின் ஒவ்வொரு இடத்தை நினைவுப்படுதுவதால் நம் கவனம் சிதறும்போதேல்லாம் வந்து சேர்ந்து கொள்ளலாம். ( நம் எண்ணம் நடுவில் எங்கெல்லாமோ செல்லும். நமக்கு பிடிக்கதவனை நினைத்து அவனுக்கு சாபம் கொடுக்கும் அளவிற்கெல்லாம் சென்றுவிடும்! ). கவலை கொள்ள வேண்டாம். மனதை ஒருநிலைப் படுத்துவதற்கு இந்த பயிற்சி கைகொடுக்கும்.
இது 1 மணி ஜபம். அந்த சமயித்திலாவது கெட்ட சிந்தனைகள் இல்லாமல் சத்சங்கத்தில் இருப்போம்.
இப்படி அதன் பலன்களை சொல்லிக்கொண்டே போகலாம். திருவண்ணாமலை ஒரு உதாரணத்துக்காகத்தான் சொன்னேன். எனக்கு நன்கு பரிச்சயம் உள்ளதால் அதை வைத்துக்கொண்டிருக்கிறேன். சிறு வயது முதல் அங்கு செல்வதுண்டு. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் சென்றுவிடுவேன். அதுபற்றி பிறிதொருமுறை சொல்கிறேன்.

உங்களுக்கு நன்கு பரிச்சயமான நன்கு மனதிற்கு இதமான ஒரு கோவிலோ அல்லது ஒரு க்ஷேத்ரமோ, மலையோ சிவா விஷ்ணு பேதமில்லாமல் எது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமானது சஹச்ர காயத்ரி. அதை ஆரம்பித்து வைராக்யமாய் விடாமல் லோகக்ஷேமத்துக்கு செய்துவருவது ரொம்ப முக்கியம்.

III. ஏகாதசி உபவாசம்:






மகான் சொல்லியது. “ஏகாதசி அன்று உபவாசம் இருங்கோ. மத்த நாள் அளவோடு சாப்பிடுங்கோ”. இதை கடைபிடித்தால் நம் மனமும் உடம்பும் ஆரோக்யமாக இருக்காமல் எப்படி இருக்கும்? ஏகாதசி அன்று ஒன்றும் சாபிடாமல் இருந்து பாருங்கள். அப்போதுதான் அதன் மகிமையை உணர முடியும். முதலில் நம் வயிறு குறைய ஆரம்பிக்கும். வயிறின் அளவு குறைவதால் மறுநாள் நாம் கொஞ்சமாக சாப்பிட்டாலும் நிறைவாக உணருவோம். அதன் பிறகு வயிற்றைப் பெருக்காமல் குறைவாக உண்ணக் கற்றுக்கொள்ள வேண்டும். முதல் ஏப்பம் வரும்போது நிறுத்திக்கொள்ளவேண்டும். பசித்து சாப்பிடவேண்டும். நிதானமாக ரசித்து ருசித்து அளவோடு சராசரி விகிதத்தில் ஆரோக்யமான உணவு உட்கொள்ளவேண்டும். இரண்டு உணவுக்கு நடுவில் எதுவும் சாப்பிடக்கூடாது. அளவோடு தாகத்துக்கு தண்ணி குடியுங்கள். இப்படி விரதம் இருந்து பழகினால், இதை திங்கலாம் அதை திங்கலாம் எண்று அலையும் மனம் அடங்கும். இது ஆத்ம விசாரத்துக்கு உதவும்.



நன்றி : டாக்டர் ஜி ரவிசந்திரன்.

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர


??? ??????????? 3 ?????????
 
மூன்று குணங்களும் உணவும்


மூன்று குணங்களும் உணவும்



3_2102266h.jpg



சாத்விகம் என்று ஒரு வார்த்தை சொன்னேன். போஜனம் என்பது உடம்பை வளர்ப்பதற்கு மட்டுமல்ல. உள்ளத்தை வளர்த்துக்கொள்வதற்கும் உதவும்படியாக அதைப் பண்ணிக்கொள்ள வேண்டும் என்பதாலேயே சாஸ்திரங்களில் ஆகாரத்தைப் பற்றி அநேக நியமங்கள் சொல்லியிருக்கிறது.

ஆசாரங்களில் மிகவும் முக்கியமானவையாக ஆகாரத்தைப் பற்றிய விஷயங்களே வைக்கப்பட்டிருக்கின்றன. இதிலே சாரமான தாத்பர்யம் சத்வ குணத்தை விருத்தி செய்யும்படியாக ஆகாரம் இருக்க வேண்டும் என்பதுதான்.


கோபதாபமில்லாமல், காம மோகங்களில்லாமல், பதற்றப்படாமல், அதற்காக ஒரேயடியாக மந்தமாகிச் சோம்பியும் வழியாமல், சாந்தமாகவும் பிரியமாகவும் இருந்துகொண்டே நல்ல சிந்தனா சக்தியுடனும் க்ரியா சக்தியுடனும் இருப்பதுதான் சத்வ குணம், சாத்விகம் என்பது.


ஒரே பதற்றம், காம க்ரோதாதி உணர்ச்சி வசப்படுவது இவை எல்லாம் ரஜஸ் - ரஜோ குணம் அல்லது ராஜஸ குணம் என்பது. ஒரே சோம்பல், தாமஸ குணம். இப்படி மூன்று குணங்கள்.


உணர்ச்சியமயமாக, ஓவர் எமோஷனலாக, தடாபுடா என்று தாறுமாறாகக் காரியம் பண்ணுவது ரஜஸ். அது ஒரு ‘எக்ஸ்ட்ரீம்' (கோடி) .



ஒரே ‘டல்'லாக, எதற்கும் பிரயோஜனமில்லாமல் புத்தியில்லாமல் கார்ய சக்தியுமில்லாமலிருப்பது தமஸ் இன்னொரு ‘எக்ஸ்ட்ரீம்'. இரண்டுக்கும் நடுவே சமநிலையில் ‘பாலன்ஸ்டாக' இருப்பது சத்வம். மனசின் எழுச்சி ரஜஸ்; தாழ்ச்சி தமஸ்; ஸம நிலை ஸத்வம்.


எண்ணம் காரியம் இதுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற ஸத்வத்தையும்விட உசந்த ஒரு நிலை உண்டு. அங்கே மனஸ் (எண்ணம்), சரீரம் (காரியம்) இதுகளை ஒருத்தன் அடியோடு கடந்துவிடுவான். தமஸ் மனஸின் தாழ்ச்சி என்றால், இது மனஸின் வீழ்ச்சி! தமஸிலே தூங்குவான்.


இதிலே சமாதி நிலைமை அநுபவிப்பான்! என்ன வித்யாசமென்றால், தூங்குகிறவனுக்குத் தன்னைத் தெரியாது. சமாதியிலிருக்கிறவனும் வெளியில் பார்த்தால் தூங்குகிறாற் போலத்தானிருந்தாலும் அவனுக்குத் தன்னை நன்றாகத் தெரியும்.


தான் ஒன்றுதான் இருக்கிற எல்லாமும் என்று தெரியும். இப்படியிருக்கிறவன், நாமெல்லாம் சின்னதாக 'நான்', 'நான்' என்று எதையோ சொல்லிக்கொண்டு அதற்காக இத்தனை ஹிம்ஸையும் பட்டுக்கொண்டிருக்கிறோமே, அந்த ‘நானை'ப் பற்றின நினைப்போ, அரிப்போ கொஞ்சங்கூட இல்லாமல், ஈஸ்வரன் கைக்கருவியாக, லோக கல்யாணத்துக்காக ரஜோகுணக்காரனைவிட நிறையச் சிந்தித்து, நிறையக் காரியமும் பண்ணுவான்.


நாம் பட்டுக்கொண்டு, அடிபட்டுக்கொண்டு பண்ணுவதைவிட ஜாஸ்தியாகவும் சவரணையாகவும் இவன் பட்டுக்கொள்ளாமலே பண்ணிவிடுவான். ஸத்வ, ரஜஸ், தமஸ்களை முக்குணமென்றும், இப்போது சொன்ன மூன்றும் கடந்த நிலையை குணாதீத என்றும் சொல்லியிருக்கிறது.


கீதையில் பகவானும் த்ரிகுணங்களைப் பற்றி விஸ்தாரமாகச் சொல்லி அர்ஜுனனிடம் “நிஸ்த்ரைகுண்யோ பவ”,



“மூன்று குணங்களும் இல்லாதவனாக, அவற்றுக்கும் மேலே போ” என்கிறார் (2.45) . “குண த்ரய விபாக யோகம்”என்றே (கீதையில்) ஒரு அத்யாயம். அதிலே ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் ஆகிய ஒவ்வொன்றின் நேச்சரும் என்ன என்று சொல்கிறார்.


அப்புறம் “தைவாஸுர ஸம்பத் விபாக யோகம்” என்று வருகிற அத்யாயத்தில் தெய்வ குணம் என்பதற்கு விளக்கமாக அவர் சொல்வதெல்லாம் ஸத்வமாயும் குணாதீதமாயும், அஸுர குணம் என்பது ரஜோ, தமோ குண இயற்கைகளாகவுந்தான் இருக்கிறது.


இதற்கப்புறம் சிரத்தையிலும் மூன்று தினுசு உண்டு என்று விஸ்தரிக்கிற “ச்ரத்தா த்ரய விபாக யோக”த்திலும் ச்ரத்தையில் மநுஷ்யர்கள் மூன்று விதமாகப் பிரிந்திருப்பது முக்குணங்களில் அவர்களிடம் எது தூக்கலாக இருக்கிறது என்பதைப் பொருத்ததுதான் என்கிறார்.


அவர்கள் பண்ணும் பூஜை, யஜ்ஞம், தபஸ், தானம் எல்லாவற்றிலுமே இதிது ஸத்வம், இதிது ரஜஸ், இதிது தமஸ் என்று சொல்லிக் கொண்டு வரும்போது நடுவில் அவர்கள் போஜனம் பண்ணும் ஆகாரத்துக்கும் வருகிறார்.


இங்கே ஸத்வ குணத்தவரால் ஸத்வகுண அபிவிருத்திக்காகச் சாப்பிடப்படும் ஆகாரம் எப்படியிருக்கும்,
இதே மாதிரி ரஜோ, தமோ ஆகாராதிகளின் லக்ஷணமென்ன என்றெல்லாம் சொல்கிறார். பகவான் கீதையில் சொல்கிறதில் போஜனத்தின் இரண்டாவது அம்சமான,


அதில் சம்பந்தப்பட்ட மநுஷ்யர்களைப் பற்றிய பேச்சு இல்லை. போஜன வஸ்துவின் லக்ஷணத்தை, அது எப்படிப்பட்ட பதார்த்தமாயிருக்க வேண்டுமென்பதைத்தான் சொல்கிறார்.


‘ஸாத்விகம்' என்றதை உங்களுக்குப் புரிய வைப்பதற்காக த்ரிகுணங்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன். அவற்றிலே உசந்தது ஸத்வம்.


மனசு கொந்தளிக்காமல் கட்டுப்பட்டு, அமைதியாகவும் அன்பாயும் இருக்கிற உசந்த நிலை. இதைவிட உசந்தது குணாதீத, மனோதீத என்றாலும் அது நமக்கு எட்டாக்கை. நாம் முதலில் ஸத்வ குணிகளாக ஆகித்தான், அப்புறம் அது பழுத்து குணாதீத நிலைக்குப் போகணும்.


‘ஸத்வ'த்தைக் குறித்த எல்லாவற்றுக்கும் ‘ஸாத்விகம்' என்று பெயர். சுத்த ஆகாரம், சுத்த ஆகாரம் என்று பல தடவை சொன்னேனே, அது ‘ஹைஜீன்'படி சுகாதாரமாகப் பண்ணி, க்ளீனான கப், சாசரில் பரிமாறுவது மட்டுமில்லை, சுத்த ஆகாரமென்றால் ஸத்வ ஆகாரம் என்றே அர்த்தம். சத்வ குணத்தைத் தரும்படியான சாத்விக ஆகாரமாக அது இருக்க வேண்டும்.


தெய்வத்தின் குரல்
(மூன்றாம் பாகம்)

?????? ?????????? ?????? - ?? ?????
 
மஹாவிஷ்ணு மாதிரி மஹாசிவன் இல்லை; ஸதாசிவன

மஹாவிஷ்ணு மாதிரி மஹாசிவன் இல்லை; ஸதாசிவன் தான்.

’மஹாசிவன்’ இல்லை என்று குறைப்பட்டுக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் ‘ஸதா’சிவனுக்கு அப்படிப்பட்ட ஒரு ஸ்பெஷாலிடி இருக்கிறது; uniqueness என்கிறார்களே, அப்படிப்பட்ட தனித் தன்மை! ‘மஹா’வுக்கு இல்லாததாக, ‘ஸதா’வுக்கு மட்டுமே உள்ள யுனீக்னெஸ்!

விஷ்ணுவுக்கு மாத்திரம் என்றில்லாமல் இன்னும் அநேக தெய்வங்களுக்கும் ‘மஹா’ அடைமொழி உண்டு. தாயார் லக்ஷ்மியையே மஹாலக்ஷ்மி, மஹாலக்ஷ்மி என்றுதானே சொல்கிறோம்? துர்கா தேவி, சண்டிகை என்றிருக்கிற அம்பாளுக்கும் ஒரு மஹாலக்ஷ்மி ஸ்வரூபம் உண்டு. மஹிஷாஸுர வதம் செய்தது அந்த மஹாலக்ஷ்மி துர்கை தான். மஹாகாளி, மஹாஸரஸ்வதி என்ற இன்னும் இரு ‘மஹா’ பட்டம் பெற்ற தேவிகளாகவும் அவளுக்கு ரூபமுண்டு. மஹாகணபதி இருக்கிறார். மஹா சாஸ்தா இருக்கிறார். ‘மாசாத்தான்’ என்பார்கள். ஸுப்ரம்மண்ய ஸ்வாமிக்கும் மஹாஸேனன் என்று ஒரு ‘மஹா’ பெயர் இருக்கிறது. ‘மஹாசிவன்’ இல்லாவிட்டாலும் சிவமூர்த்திகள் ஸம்பந்தமாகவே மஹாதேவன், மஹாலிங்கம், மஹேச்வரன் இத்யாதி இருப்பதையும் சொன்னேன்.

ஆனால் ‘ஸதா’ மட்டும் ‘யுனீக்’காக சிவநாமா ஒன்றோடுதான் சேர்ந்து ‘ஸதாசிவன்’ என்று இருக்கிறது. வேறே எந்த ஸ்வாமி பேருக்காவது ஸதா அடைமொழி இருக்கிறதா? ‘ஸதாவிஷ்ணு’ உண்டா? ‘ஸதாராமன்’?

ராமன் பேர் இத்தனை அடைமொழிகளுடன் தான் சேர்கிறது என்று கணக்கு வழக்கு சொல்ல முடியாமல் எத்தனையோ ‘ராம’ப் பெயர்கள் இருக்கின்றன. கணபதிராமன், ராம ஸுப்ரம்மண்யன், சிவராமன், வேதராமன், கேவல்ராம், ஆனந்த்ராம், சாந்தாராம்.. ராமலக்ஷ்மி என்றே கூட… (சிரித்து) ஆயாராம், கயாராம்**வரை ஏகப்பட்ட ஒட்டுப் போட்டுக் கொண்டு அந்த ராமசந்திரமூர்த்திக்குப் பெயர்கள் இருக்கின்றன. ஆனாலும் ’ஸதாராமன்’ என்று பேர் காணோம்!

**அரசியலில் ஒரு கட்சியிலிருந்து இன்னொன்றுக்கு வந்தவர் ‘ஆயாராம்’. ஒரு கட்சியிலிருந்து இன்னொன்றுக்குப் போனவர் ‘கயாராம்’.

எந்தப் புருஷ தெய்வப் பேருடனோ, ஸ்திரீ தெய்வப் பேருடனோ ‘ஸதா’ ஒட்டுப் போட்டுக் கொள்ளவில்லை. சிவன் ஒரு பெயருக்கே அந்த அடைமொழி சேர்ந்து ஸதாசிவ நாமா உண்டாயிருக்கிறது.

சிவன், சிவன் என்று ஸ்வாமி பெயரைத் தனியாகச் சொல்லிக் கொண்டு போவது எனக்கே ’என்னவோ மாதிரி’ இருக்கிறது! ஸாதாரணமாக அந்த நாமாவை அப்படிச் சொல்கிற வழக்கமில்லை. தமிழில் ’சிவபெருமான்’ என்று ‘பெருமான்’ சேர்த்தே சொல்வார்கள். ஸம்ஸ்கிருதத்தில் எதனாலோ அந்த ஸ்வாமியைப் பரம உத்க்ருஷ்டமான (உயர்வு மிக்க) சிவ சப்தத்தால் சொல்லாமல் ‘ஈச்வரன்’ ‘பரமேச்வரன்’ என்றே அதிகம் குறிப்பிடுவதாக ஏற்பட்டிருக்கிறது. அப்படித்தான் நானும் சொல்வது. ஆனால் இன்றைக்கு ஸதாசிவனைச் சொல்ல நினைத்ததால் சிவ நாமாவாகவே லோகமங்களமான அந்த இரட்டை அக்ஷரத்தை நிறையச் சொல்லணுமென்று தோன்றி மெனக்கிட்டு அப்படிச் சொல்லிக் கொண்டு போகிறேன்…
 
கண்ணப்ப நாயனார் பக்தி

கண்ணப்ப நாயனார் பக்தி

கண்ணப்ப நாயனார் பக்தி
தவம் செய்யும் ஒருவன் அசைவ உணவும் சாப்பிட்டுகொண்டு இறைவனை காண முடியும் கன்னப்ப நாயனார் போல என்று சில யோக நிறுவனத்தை சேர்ந்த அன்பர்களால் சொல்ல படுகிறது. மேலும் கண்ணப்ப நாயனாரின் பக்தி உயர்ந்ததா என்று தனிப்பட்ட முறையில் கேட்கபடும் அன்பர்களுக்காக இந்த பதிவு.

கண்ணப்ப நாயனார் அவர் இறைவன் என்று நம்பிய.. சிவலிங்க கண்ணிலிருந்து வழிந்த இரத்திற்க்காக தன் கண்ணை பிடுங்கி வைத்தார்….. எத்தனை மனிதர்கள் இப்படி கண்ணை பிடுங்கி வைப்பார்கள் என்பது என் கேள்வி? ஆனால் எத்தனை பேருக்கு இந்த கேள்வியின் முழு அர்த்தம் புரியும் என்பதால் சிறிது விரிவாக பதிய விரும்புகிறேன்.


இப்பொழுது நம்மை போன்று இறைவனே யார் என்று தெரியாதவ்ர்கள்…இறைவனை எப்படி அடைவது என்ற எந்த Basic informationum அறியாதவர்கள் யாரேனும் எந்த ஆசிரமத்திற்க்குள் சென்று… அசைவம் சாப்பிட்டு இறைவனை அடைய முடியுமா என்று கேட்டால்??? அவர்கள் எடுத்து காட்டாக வைப்பது…. “கண்ணப்ப நாயனாரைத்தான்”. இப்படி மேம்போக்கான எடுத்து காட்டை எடுத்து வைப்பவர்கள் “கண்ணப்ப நாயனாரின்” நிலை என்ன??? மற்றும் கேள்வி கேட்பவர்களின் நிலை என்று கூட அறிய கூட முடியாத மனநிலையிலே இருப்பார்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன்.


கண்ணப்ப நாயனாரின்… கதை படிக்காதவர்களுக்காக அவரின் கதையை “கண்ணப்ப நாயனார் கதை என்ற பெயரில் இங்கு பதிவு செய்து உள்ளேன். இந்த விடயம் தெரிந்திருந்தால்தான்… நான் என்ன சொல்ல வருகிறேன் என்று படிப்பவர்களுக்கு புரியும் என்பது என் கருத்து…… ஆகையால் கதை தெரியாதவர்கள் (அ) கதையை படித்து மறந்தவர்கள் தயவு செய்து படித்து விட்டு தொடர்ந்து படிக்கவும்.



கண்ணப்ப நாயனாரின் நிலை[ Kannappa Nayanar ]



அவர் அசைவம் சாப்பிட்டும் இறைவனை அடைந்தார் என்று மட்டும்தான் பரவியிருகிறதே தவிர…. இந்த விடயங்கள் பற்றி பல பேருக்கு தெரியாது!!! அல்லது இது சமயோசிதமாக மறைக்கப்படுகிறது!!!!
கண்ணப்ப நாயனார் ஒரு காலமும் இறைவனை அடைய வேண்டும் என்றும் எண்ணம் எல்லாம் இல்லை…. தீடிரென வழி தவறி அந்த கோவிலுக்கு செல்கிறார்…. மேலும் அவரின் உள்ளுனர்வு அவரை இழுக்கிறது….


1. லிங்கத்தை கண்டவுடன்… அவர் லிங்கத்தின் வரலாறு எல்லாம் அறிய வில்லை….. அவரை அது ஈர்த்தது… கும்பிட்டார் அவ்வளவுதான்!!! இந்த லிங்கம் எப்படி இங்கு வந்தது என்று எல்லாம் அவர் சிந்திக்கவேயில்லை…. எடுத்த எடுப்பிலே யார் இதை தனியாக இங்கு வைத்தது… மேலும் இதற்க்கு கறி உணவு படைக்கபடவில்லையே என்றுதான் அவர் எண்ணினார்…. just love in first sight


2. மேலும் கோவிலில் யார் இருக்கிறார்கள்… அவர்களிடம் அதை எப்படி வழிபட வேண்டும் என்று எல்லாம் அவர் எதிர்பார்க்கவில்லை….


3. மேலும் தான் சுவைத்த கறி துண்டையே படைக்கிறார். அப்படி எனில் எப்படி படைக்க வேண்டும் என்று கூட அவர் அறியாதவராக இருந்தார். ஆம், அவர் தன் வாயில் நீர் எடுத்து சென்று… அந்த லிங்கத்தை கழுவுகிறார்… என்பதில் இருந்தே அவர் நிலை என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.


அவர் லிங்கத்திற்காக உணவு எடுக்க செல்லும் போது கூட தனியாக அந்த லிங்கத்தை விட்டு செல்லமுடியவில்லை நாம் செல்லும் சமயத்தில் காட்டு விலங்குகளால் ஏதேனும் ஆபத்து வருமா என்று அஞ்சினார்!!! ஆம் , அவர் லிங்கத்தை கடவுளாக எல்லாம் கருதவில்லை… அந்த லிங்கதிற்க்கே எல்லாம் நாம்தான் என்று அதை குழந்தை போல பாவித்தார்… எத்தனை பேரால் இது முடியும்.


ஆம், நமக்கு இதை (சிவலிங்கம் – இறைவனை) பிடித்திருக்கிறது மேலும் இதை(இறைவனை) அடைய ஒரு குரு வேண்டும் என்று எல்லாம் அவர் பார்க்கவில்லை. இந்த இடத்தில் சிதறி போகிறது…. “குருட்டினை நீக்கா குருவினை கொள்ளார்” மற்றும் “தெளிவு குருவின் திருமேனி” போன்ற திருமந்திர பாடல்களும் மேலும் “குருவில்லா வித்தை பாழ்” போன்ற விடயங்கள் அனைத்தும் தூள் தூளாகிறது!!!!
உணவு பழக்கமும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று சொல்லும் ஆசிரமங்களோ அல்லது குருமார்களோ இப்படி “கண்ணப்ப நாயனார்” போன்று இருப்பவர்களுக்கு குருவே தேவை இல்லை என்பதை சொல்வதேயில்லை (அ) அதை மட்டும் மறந்து விடுவார்கள். இங்கு இருக்கிறது சூட்சுமம். ஆம், கண்ணப்ப நாயனார் போன்று இருப்பவர்கள் எவர் முன் அமர்ந்தும் பாடம் கேட்க மாட்டார்கள்.

படிப்பவர்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்…..


முதலில் “கண்ணப்ப நாயனார்” போன்று இருப்பவ்ர்கள் ஒரு காலும் குருவை தேட மாட்டார்கள்!!!!
குருவை தேட மாட்டார்கள் எனில், ஒரு பொழுதும் ஆசிரம வாசலுக்கோ (அ) யோக நிறுவனங்களுக்குள்ளோ…. நுழையவோ மாட்டார்கள்!!!! அப்படி எவனாவது எந்த ஆசிரமதிலாவது நுழைந்து எனக்கு இறைவனை அடைய வேண்டும் வழி காட்டுங்கள் என்று கேட்டால்… அவன் நிச்சயமாக “கண்ணப்ப நாயனாராக” இருக்க முடியாது…. ஆம், ஒரு காலும் இருக்க முடியாது.
அது மட்டுமில்லாமல், கண்ணப்ப நாயனார் போன்று இருப்பவர்கள் Facebook, Orkut மற்றும் Blog க்குள் எல்லாம் வந்து படிக்கவும் மாட்டார்கள் அல்லது எப்படி இருந்த்தாலும் இறைவனை அடைய முடியும் என்ற தகுதி உடையவர்கள் இணையதளத்திலோ அல்லது நேரிலோ வந்து யாருக்கும் போதிக்கவும் மாட்டார்கள். ஏன் எனில் இறைவன் மீது அவர்களின் பக்தி காட்டாறு போல இருக்கும் அப்படிபட்ட காட்டாறு எங்கும் நின்று யாரிடமும் உபதேசமும் கேட்காது… யாருக்கும் உபதேசமும் வழங்காது என்பதை கண்ணப்ப நாயனாரின் பாதம் பதிந்து சொல்கிறேன்.



உண்மை நிலை இப்படி இருக்க ஆசிரமத்திற்கு வந்திருக்கும் சாதாரன மனிதர்களிடம் இப்படி எது வேண்டுமானலும் சாப்பிட்டு இறைவனை அடைய முடியும் என்று சொல்வது… சரியா??? தவறா??? என்பதை படிப்பவர்களின் மனசாட்சிக்கும் புரியும் என்று நம்புகிறேன்!


கண்டார் லிங்கத்தை…… அது முதல் ஆறு நாட்கள் ஊன், உறக்கம் மறந்தார்…….ஆறே நாட்கள்தான்… இறைவனுடன் கலக்கிறார். வரலாற்றிலே வெறும் ஆறே நாட்களில் இறைவனுடன் கலந்ததில் ”கண்ணப்ப நாயனாரை” தவிர யாரும் எங்கும் இல்லை!!!! அப்படி பட்ட “கண்ணப்ப நாயனாரைத்தான்” இன்று இருக்கும் சில போலிகள் நம்மை போன்ற சாதரன மனிதர்களுடன் சேர்த்து வைத்து உதாரணம் காட்டி கொண்டிருக்கின்றன. என்பதை தாழ்மையுடன் சுட்டி காட்ட விரும்புகிறேன்.


மேலும் கண்ணப்ப நாயனார் அசைவம் உண்டு இறைவனை அடைந்தார் என்று சொல்பவர்கள் கடைசியாக நினைவில் நிறுத்தி கொள்ள வேண்டியது ஒன்றுதான். அவரை சிவலிங்கம் ஈர்த்தவுடன் அவர் தனது தூக்கத்தை தொலைத்தார், வேட தலைவன் என்பதை மறந்தார், தன் நாக்கின் சுவையை தனக்கு பயன்படுத்தாமல் இறைவனுக்கு படைக்க போகும் உணவு ருசியாக இருக்கிறதா என்பதை சோதிக்க மாற்றி கொண்டார். தன் வேட்டை தொழிலையே சிவலிங்கத்திற்க்கு உணவு படைப்பதற்க்காக மாற்றி கொண்டார். இறைவனுக்காக இவ்வளவு விடயம் மாற்றி கொண்டவரை போய் வெறுமனே அசைவ உணவை கூட இறைவனை அடையும் தியானத்தில் மறுக்க இயலாதவர்கள் தங்களுக்கு உதாரணமாக சொல்லி கொள்வதை விட மிக பெரிய அறியாமை இருக்க முடியாது! ஆம், நிச்சயமாக இருக்க முடியாது.


இப்படி பட்ட பக்தியை எல்லாம் பழக்கத்தில் எல்லாம் கொண்டு வர முடியாது… திருமூலரை போன்ற 100 மடங்கு சக்தி வாய்ந்த குருவாக இருந்தால் கூட இப்படி பட்ட பக்த்தியை சீடனுக்கு ஊட்ட முடியாது!!!! அது தானே வர வேண்டும்….ஒரு கண்ணை தோண்டி எடுத்தவுடன்… மறு கண்ணையும் தோண்டி எடுக்க வேண்டிய நிலை வரும் போது ஒரு சின்ன சலனம் ஏற்பட்டால் கூட இறைவனை காண முடியாது…. இப்படிபட்ட கண்ணப்ப நாயனாரை… சிறு குரு காணிக்கை குடுத்து இறைவனை அடைய என்னும் என்னை போன்ற சாதாரன பாமரர்களுடன் ஒப்பிட்டு சொல்லும் ஆசிரம நிறவனங்கள் மற்றும் யோக நிறுவனங்களின் ஞான நிலை எந்த அளவில் இருக்கிறது என்று நினைக்கும் போதே புல்லரிக்கிறது.
இப்படி பட்ட அப்பழுக்கில்லாத கண்ணப்ப நாயனாரின் பக்தி கதையை புரிந்து கொள்ள வேண்டும் என்றாலே…. சிறிது சிந்திக்க வேண்டும். இப்பொழுது புரிகிறதா வள்ளல் பெருமான் நம்மை ஏன் ஞானப்பாதைக்கு அழைக்கிரார் என்று!!! ஏன் எனில் அவருக்கு நன்கு தெரியும் பக்தி மார்க்கம் எவ்வளவு கடினம் என்று… மேலும் அவருக்கு புரியும் நாமெல்லாம் கண்ணை அல்ல சிறு தலை முடியை கூட பிடுங்க மாட்டோம் என்பது. உள் நெஞ்சில் கை வைத்து பார்ப்பவர்களுக்கு தெரியும் “கண்ணை பிடுங்குவோமோ” (அ) மாட்டோமா என்று!!


வள்ளல் பெருமான் வியந்து போற்றிய ஞானி “மாணிக்க வாசகர்”… ஆம்
“வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை,நான்கலந்து பாடுங்கால்,
நற்கருப்பஞ்சற்றினிலேதேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,
என்ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!”
நமக்கெல்லாம் இறைவன் எட்ட வேண்டும் என்று எட்டாம் திருமறை(8) தந்த அய்யா மாணிக்க வாசகர்... கண்ணப்ப நாயனாரை பற்றி சொன்னார்?

என்ன சொன்னார்……


“கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்”



கண்ணப்பனுக்கு ஈடான அன்பு என்னிடம் இல்லை என தெறித்து சொல்கிறார்………
இனியும் கண்ணப்ப நாயனாரின் பக்தியை பற்றி சொல்ல என்ன இருக்கிறது!!!!
சிவலிங்கத்தில் ஏன் இரத்தம் வழிந்தது மேலும் ஏன் சிவன் நாயனாரை ( Kannapa Nayanar ) வலகண்ணை நில் (அ) வலகண்ணை தோண்டியதே போதும் என்று சொன்னார் என்று சிந்தித்தால்… அது ஞான பாதைக்கு நம்மை நகர்த்தும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!



??????? ??????? ????? « tamil.vallalyaar.com
 
சைவ உணவே மனிதகுல சன்மார்க்க உணவு

சைவ உணவே மனிதகுல சன்மார்க்க உணவு

இரையை மட்டும் தேடுதல் விலங்கியல். இரையோடு இறையையும் தேடுவதே மானிடவியல்.
சுத்த சைவ உணவினை உட்கொள்ளுதலே இறையை தேட நாம் மேற்கொள்ளும் முதல் படி.
சைவ உணவு தான் இறை அருளை பெற்று தரும். சைவ உணவே சன்மார்க்க உணவு.
இக்கட்டுரையின் நோக்கம் : இன்று பொதுவாக அசைவம் சாப்பிடுபவர் எழுப்பும் கேள்விகளுக்கு வள்ளலார் , ஞானிகள் வழி நின்று தெளிவு படுத்துவதே
கீழ்காணும் கேள்விகளுக்கான பதில்களை பதிந்துள்ளோம்.

1. சைவ உணவே மனித குல உணவு என்பது ஏன்?

2. மரத்திற்கும்/தவரத்திற்கும் உயிர் உள்ளதே? அவைகளை உண்பது மட்டும் பாவம் இல்லையா?

3. முட்டை ஏன் அசைவம்?

4. சில சித்தர்கள் அசைவ உணவு சாபிட்டாத சொல்வது உண்மையா?

5. சைவ உணவின் மூலம் எல்லா சக்திகளையும் பெற முடியுமா?

6. சைவ உணவு உட்கொண்டால் தான் இறைவனை அடைய முடியும் என்றால் பின் எப்படி “கண்ணப்பநாயனார்” முக்தி பெற்றார்?


1. சைவ உணவே மனித குல உணவு என்பது ஏன்?

மனிதர்களின் உடல் அமைப்பு சைவ உணவினை உட்கொள்ள தகுந்தாற்போல் தான் அமைந்து உள்ளது. அதாவது குடலின் நீளம், பற்களின் அமைப்பு, செரிமானத்திற்கு உதவும் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அமில தன்மை ஆகிய அனைத்தும் காய், கனி, கிழங்குகளை உட்கொள்ளும் தன்மைக்கு ஏற்ப அமைந்துள்ளது. இதன் மூலம் இறைவன் நமக்கு விதித்த உணவு சைவ உணவே என்று அறிதல் வேண்டும்.




மேலும் வள்ளல் பெருமான் அவர்கள் புலால் உண்பவர்கள் புறவினத்தார் என்றும் அவர்களுக்கு இறைஅருள் சிறிதும் கிட்டாது என்று தெளிவாக கூறி அசைவ உணவினை விட்டு , சுத்த சைவ உணவினை உட்கொள்ளுமாறு வழியுறுத்தி உள்ளார்கள்.


`அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு “ஜீவகாருண்யமே ” உண்மையான கடவுள் வழிபாடு என்று அருளுகிறார் திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான்.


நோன்பு என்பது யாதெனின் “கொன்று திண்ணாமை” என்று அருளுகிறார் அவ்வை பிராட்டி.

“புலால் உண்ணாமை” என்று 10 அதிகாரங்கள் படைத்தது வாழும் நெறியினை நமக்கு அருளுகிறார் வள்ளுவர் பெரும்தகை.


புலால் உண்பவர்கள் புலையர்கள் என்று சாடுகிறார் திருமூலர் பெருமானார்.
அதனால் அரிதான மனித தேகத்தினை பெற்ற நாம் மற்ற உயிரின் மீது பரிவு காட்ட வேண்டுமே தவிர கொன்று தின்ன கூடாது.


“முற்பகல் செய்யின் பிற்பகல் தமக்கு தாமே யாம்” – அதாவது நாம் செய்த வினைகள் நமக்கு தான் திரும்ப வரும்.


உடலை விட்டு உயிர் பிரிவதே ஆன்மாவிற்கு ஏற்படும் மிக பெரிய வலி/ துன்பம் என்பதால் தான் கொலை என்பதை மிக பெரிய ஜீவஹிம்சை என்கிறார்கள் ஞானிகள். கர்ம விதிக்கு ஏற்ப உணவிற்காக கொல்லப்படும் விலங்குகளின் வலியினை உண்பவர்கள் அனுபவித்தே ஆகா வேண்டும் என்பது இறை நியதி. சற்று சிந்தியுங்கள் ஒருவர் வாழ்வில் அசைவத்தினை வாரம் ஒருமுறை மட்டுமே உண்டாலும் தனது வாழ்நாளில் எத்தினை உயிர் கொலை புரிகிறார். அத்தனை உயிர்கள் பட்ட வலியினை இவன் பல பிறவிகள் பட்டால் தான் தீரும்.


இதன் பொருட்டே எல்லா சித்தர்களும், ஞானிகளும் புலால் உண்பதை கண்டிக்கிறார்கள்.
இதனை உணர்ந்து உடனே அசைவம் உண்பதினை கைவிடுங்கள்.
2. மரத்திற்கும்/தவரத்திற்கும் உயிர் உள்ளதே? அவைகளை உண்பது மட்டும் பாவம் இல்லையா?

ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் வள்ளல் பெருமான் இதற்கான பதிலை கூறி உள்ளார்.


1. மரம் புல் நெல் முதலான சீவர்கள் பரிசமென்கிற ஓரறிவையுடைய சீவர்கள். அவ்வுடம்பில் சீவவிளக்கம் ஒருசார் மட்டுமே விளங்குகிறது.


2. தாவரங்களுக்கு மனம் முதலான அந்தக் கரணங்கள் விருத்தி இல்லை. ஆன்மாவானது மனம் முதலான கரணங்களால் சுக துக்கங்களை அனுபவிக்கின்றது. தாவரங்களில் இவைகள் விருத்தி ஆகாததால் வித்து, காய் , கனி, பூ இவைகளை எடுக்கும் சமயம் தாவரத்தில் உள்ள ஆன்மாவிற்கு துன்பம் உண்டாவதில்லை. அது உயிர்க்கொலையுமல்ல;


3. தாவரங்களின் வித்து, காய், கனி,பூ முதலியவைகளை கொள்ளும்போது சுக்கிலம் நகம் ரோமம் முதலிய வைகளை வாங்கும் போது இம்சை உண்டாகாதது போல் தாவரங்களுக்கும் இம்சை உண்டாவது இல்லை.


4. மரம், நெல், புல் போன்ற தாவரங்களின் வித்துக்களை கொண்டு நாமே உயிர் விளைவு செய்ய கூடும். வித்துக்களிடத்து ஆன்மாக்கள் ஏறுவது எப்படி யென்னில்:- நிலத்திற் கலந்த வித்திற்கு நீர்விடில் அந்த நீரின் வழியாகக் கடவுள் அருள் நியதியின்படி ஆன்மாக்கள் அணுத் தேகத்தோடு கூடி நிலத்திற் சென்று அந்நிலத்தின் பக்குவ சத்தியோடு கலந்து வித்துக்களினிடமாகச் செல்கின்றன வென்று அறிய வேண்டும்.
ஆகலில் மரம் புல் நெல் முதலியவைகளின் வித்து, காய், கனி, தழை முதலியவற்றைப் புசிப்பது சீவகாருணிய விரோதமல்ல என்றறிய வேண்டும்.

3. முட்டை சைவ உணவா , அசைவ உணவா?

முட்டை அசைவமே.


கோழி முட்டை இடுவதின் நோக்கம் வேறு ஒரு கோழி தோன்றவே. ஒரு தாய் தன் சேயினை காப்பது போல முட்டையினை கோழி அடைகாக்கிறது. முட்டையினை பெறுதல் கோழிக்கும் நாம் செய்யும் ஜீவ இம்சை ஆகும்.


முற்று பெற்ற மனித தாயின் கருவினை கலைப்பது போல தான் முட்டையினை உட்கொளுதல் என்று அறிய வேண்டும்..


மேலும் இன்று முட்டை இடுவதற்காக சிறு கூண்டில் கோழியை அடைத்து வைத்து துன்புறுத்துகிறார்கள் . இதன் மூலம் பெரும் முட்டையை உட்கொள்ளுதல் பாவமே. மணமுறை கண்ட வாசகத்தில் வள்ளல் பெருமான் செய்ய கூடாத பாவங்களாக கூறும் ஒன்று : “பட்சியை கூண்டில் அடைத்து வைத்தல்”.



மேலும் முட்டை கோழியின் உடலில் இருந்து வெளி வந்தவுடனே அதற்குள் உயிர் புகுந்துள்ளது என்று அறிய வேண்டும். அதனால் முட்டையினை உண்பதும் உயிர் கொலையே.

கோழியை அடைத்து வைத்து செய்யும் இம்சைகளும் முட்டையின் மூலம் உண்பவர்களுகே சென்று சேர்க்கிறது என்றும் அறிக.


முட்டையினை சாப்பிடுவது கோழியை உண்பதற்கு சமம். தான். அதனால் முட்டை அசைவமே.
அதனால் முட்டை உண்பதும் ஜீவ காருண்யத்திற்கு விரோதமானது தான் .
4. சில சித்தர்கள் அசைவ உணவு சாபிட்டாத சொல்வது உண்மையா?

இறைவனை உணர்ந்த எந்த ஞானியும் , சித்தரும் அசைவம் உண்ண வில்லை. பரிபாசையாக கூறி உள்ள விசயங்களை சரியாக தெரிந்து கொள்ளாததனால் தான் இவ்வாறு தவறான கருத்துக்கள் தோன்றி உள்ளது .
அசைவம் உண்பவன் ஞானி அல்ல. கீழ் கண்ட வள்ளலாரின் பாடல் இதற்கு சான்று :


”மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில் கண்விழித்துவயங்கும் அப்பெண்
உருவாணை உருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவனேனும்
கருவாணை யற இரங்கா துயிருடம்பைக் கடிந்துண்ணுங் கருத்தனேல்
எங் குருவாணை எமதுசிவக் கொழுந்தாணை ஞானிஎனக் கூறொ ணாதே”
2-ம் திருமுறை -திருவருட்பா
ஒருவன் ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் ,இறந்தவரை எழுப்பவும் வல்லவனாயினும் அவன் புலால் உண்ணும் கருத்துடையவனாயின் அவன் ஞானியல்ல !? புலால் உண்பவனல்ல அந்த கருத்துடையவானாயினும் அவன்ஞானியல்ல கேவலம் மனித மிருகமே!? இது என் குரு மீது ஆணை சிவத்தின் மீதும் ஆணை என்று அறுதியிட்டு கூறுகிறார் வள்ளலார்!
மேலும்

‘உயிர்கொலையும் புலைப்புசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர், அவர் புறினத்தார்!” என்று இறைவனே தனக்கு அருளியாதாக இயம்புகிறார்.

5. சைவ உணவின் மூலம் எல்லா சக்திகளையும் பெற முடியுமா?

சைவ உணவின் மூலம் எல்லா சக்திகளையும் பெற முடியும். மரணமில்லா பெருவாழ்வு பெற்ற எல்லா ஞானிகளும் இதற்கு சாட்சி.


??? ???? ??????? ?????????? ???? « tamil.vallalyaar.com
 
அநுமார் அநுக்கிரஹிப்பார்

அநுமார் அநுக்கிரஹிப்பார்



ஆஞ்சநேய ஸ்வாமியின் விசேஷமே அலாதியானது. அவர் பக்தர்களுக்கு என்னென்ன அநுக்கிரஹம் செய்கிறார் என்பதைப் பார்த்தால், அவருக்கு என்ன விசேஷம் என்று தெரியும்.


புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |

அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹநுமாத் ஸ்மரணாபவேத் ||



ஆஞ்சநேயரை ஸ்மரிப்பவர்களுக்கு அவர் என்னென்ன அநுக்கிரஹிக்கிறார் என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது. புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம் விழிப்பு, வாக்குவன்மை இத்தனையும் தருகிறார் அவர்.


சாதாரணமாக இவையெல்லாம் ஒரே இடத்தில் அமையவே அமையாது. நல்ல புத்திமான் ஆரோக்கியம் இல்லாமல் சோனியாக இருப்பான். பெரிய பலசாலி மண்டுவாக இருப்பான். இரண்டும் இருந்தாலும் கோழையாக, பயந்தாங்கொள்ளியாக இருப்பான். எத்தனை திறமை இருந்தாலும், அவற்றைப் பிரயோகிக்கிற சுறுசுறுப்பு, விழிப்பு இல்லாமல் சோம்பேறியாக இருப்பான். பெரிய அறிவாளியாக இருந்தாலும் தனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொல்கிற வாக்கு வன்மையில்லாமல் இருப்பான். இந்த மாதிரி ஏறுமாறான குணங்கள் இல்லாமல் எல்லா சிரேயஸ்களையும் ஒரே இடத்தில் பொழிகிறார், ஆஞ்சநேயர்.


இதற்குக் காரணம், சாதாரணமாக நாம் ஒரே இடத்தில் சேர்ந்து பார்க்காத குணங்கள், சக்திகள் அத்தனையும் அவரிடமே பூரணமாக ஒன்று சேர்ந்திருக்கின்றன. நாம் எதிரெதிர் குணங்கள் என்று நினைப்பவைக்கூட, அவரிடம் ஸ்வபாவமாகச் சேர்ந்திருக்கின்றன. உதாரணமாகப் பெரிய பலசாலிக்கு விநயம் இருக்காது. பெரிய புத்திசாலிக்கு அகங்காரமில்லாத பக்தி இராது. ஆஞ்ஜநேயரோ தேக பலம், புத்தி பலம் இவற்றைப் போலவே விநயம், பக்தி இவற்றிலும் முதலாக நிற்கிறார். மகா சக்திமானாக இருந்தும், அத்தனை சக்தியும் ராமன் போட்ட பிச்சை என்ற அடக்கத்தோடு தனக்கு ஒரு பதவியும் கேளாமல் ராமதாஸனாகவே இருந்தார். அப்படி அடிமையாக இருந்ததாலேயே நிறைந்து இருந்தார். பக்தி இருக்கிறவர்களுக்கேகூட அதில் ஞானத்தில் தெளிவு இல்லாமல் மூடபக்தியாகவோ, முரட்டுபக்தியாகவோ இருப்பதுண்டு. ஞானமும் பக்தியும் வேறு வேறு என்றே அவர்கள் சண்டைகூடப் போட்டுக் கொள்வார்கள். ஆஞ்சநேயரோ ராமச்சந்திர மூர்த்தியின் பரமபக்தராக இருக்கும்போதே, பரமஞானியாகவும் இருந்தார்.

எப்படி தக்ஷிணாமூர்த்தி ஸநகாதி முனிவர்களை முன்னிட்டு உபதேசம் செய்கிறாரோ, அப்படியே ஸ்ரீ ராமன் ஆஞ்சநேய ஸ்வாமியை முன்னால் வைத்துக் கொண்டு ஞானோபதேசம் செய்கிறார் என்று 'வைதேஹீ ஸஹிதம்' சுலோகம் சொல்கிறது. அர்ஜுனனின் தேர்க்கொடியில் இருந்துகொண்டு கீதோபதேசத்தை நேரிலேயே கேட்டவர் அவர். பைசாச பாஷையில் கீதைக்குத் தத்துவமயமான ஒரு பாஷ்யம் இருப்பதாகவும், அது ஆஞ்சநேயர் செய்தது என்றும் சொல்வார்கள். ஒன்பது வியாகரணமும் தெரிந்த 'நவ வ்யாகரண வேத்தா' என்று ராமரே அவரைப் புகழ்கிற அளவுக்குப் பெரிய கல்விமான். ஆனாலும் புத்திப் பிரகாசம், சக்திப் பிரபாவம் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு பக்தியிலேயே பரமானந்தம் அநுபவிக்கிறார்.


பக்தி என்பதால் லோக காரியத்தைக் கவனிக்காதவர் அல்ல. மகாபௌருஷத்தோடு போராடி அபலைகளை ரக்ஷித்தவர்களில் அவருக்கு இணை இல்லை. லோக சேவைக்கு அவரே உதாரணம். (ideal)
ஞானத்தில் உச்சநிலை, பலத்தில் உச்சநிலை, பக்தியில் உச்சநிலை, வீரத்தில் உச்சநிலை, கீர்த்தியில் உச்சநிலை, சேவையில் உச்சநிலை, விநயத்தில் உச்ச நிலை இப்படியெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிற ஸ்வரூபம் ஒன்று உண்டு என்றால் அது ஆஞ்சநேய ஸ்வாமிதான்.


இதெல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய பிரம்மச்சரியத்தைச் சொல்ல வேண்டும். ஒரு க்ஷணம்கூடக் காமம் என்கிற நினைப்பே வராத மகா பரிசுத்த மூர்த்தி அவர். தனக்கென்று எதுவுமே நினைக்காதவர். ஒரு காமனையும் இல்லாமல் ராமனுக்கு சேவை செய்தே நிறைந்துவிட்டார்.


அவரை நம் சீமையில் பொதுவாக 'ஹநுமார்' என்போம். கன்னடச் சீமையில் அவரே 'ஹநுமந்தையா'. சித்தூருக்கு வடக்கே போய்விட்டாலல் ஆந்திரா முழுவதும் 'ஆஞ்சநேயலு' என்பார்கள். மகாராஷ்டிரம் முழுக்க 'மாருதி, மாருதி' என்று கொண்டாடுவார்கள். அதற்கும் வடக்கில் 'மஹாவீர்' என்றே சொல்வார்கள்.


ஆஞ்சநேயருக்கு ஈடு கிடையாது. அவரை ஸ்மரித்த மாத்திரத்தில் தைரியம் வரும். ஞானம் வரும். காமம் நசிந்துவிடும். பரம விநயத்தோடு பகவத் கைங்கரியம் செய்துகொண்டு எல்லோருக்கும் நல்லது செய்வோம்.


'ராம், ராம்' என்று எங்கெங்கே சொல்லிக் கொண்டிருந்தாலும், ரகுநாத கீர்த்தனம் எங்கே நடந்தாலும், அங்கெல்லாம் நம் கண்ணுக்குத் தெரியாமல் ஆஞ்சநேயர் தாரை தாரையாக ஆனந்த பாஷ்பம் கொட்டிக்கொண்டு நின்று கேட்கிறார்.


இந்தக் காலத்தில் நமக்கு மற்ற எல்லா அநுக்கிரஹங்களோடு, முக்கியமாக அடக்கமாக இருக்கற பண்பு ரொம்பவும் அவசியப்படுகிறது. எத்தனை வந்தாலும் போதாமல் இப்போது, நாம் உயர உயரத் துள்ளிக்கொண்டேயிருக்கிறோம். இதனால் புதுப்புது அதிருப்திகளை, குறைகளைத்தான் உண்டாக்கிக் கொள்கிறோம். துள்ளாமல் அடங்கிக் கிடந்தால்தான் ஈசுவரப் பிரஸாதம் கிடைக்கும். அதுதான் நிறைந்த நிறைவு. நமக்கு ஆச்சநேயர் அநுக்கிரகம் பண்ண வேண்டும்.


அவரைப் பிரார்த்திப்பவர்களுக்கு ஒரு குறையும் இல்லை. லோகம் முழுவதும் தர்மம் பரவியிருக்க அவரையே பிரார்த்தனை பண்ணுவோம். அவருடைய சகாயத்திலேயே ராவணாதிகள் தோற்று ராமராஜ்யம் ஏற்பட்டது. அர்ஜுனனின் தேர்க்கொடியில் அவர் இருந்த விசேஷத்தால் பிறகு தர்மராஜ்யம் ஏற்பட்டது. பிற்காலத்தில் நம் தர்மம், பக்தி எல்லாம் நசிந்தபோது ஆஞ்சநேய அவதாரமாக ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமி தோன்றித்தான் சிவாஜி மூலம் மறுபடி தர்ம ஸம்ஸ்தாபனம் செய்தார். இன்னும் சகல தேசங்களிலும் தர்மமும் பக்தியும் ஏற்பட அவர் அநுக்கிரஹம் வேணும். நாம் மனமுருகிப் பிரார்த்தித்தால் இந்த அநுக்கிரஹத்தைச் செய்வார்.
ஆஞ்ஜநேய ஸ்வாமின: ஜெய் ||


??????? ???????????????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு

ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு

உயிரினங்கள் பலவற்றைக் நாம் நேருக்கு நேர் கண்ணால் பார்க்கிறோம். நாம் மனித இனம். இன்னும் விலங்கினம், புள்ளினம், தாவர இனம் என்று பலவற்றைப் பார்க்கிறோம். சிருஷ்டியில் கீழே போகப் போகக் கிரியா சக்தி அதிகம். யானை, சிங்கம் போன்ற பலம் மனிதனுக்கு இல்லை. ஒரு குருவியை போலவோ, தேனியைப் போலவோ, கூடுகட்ட இவனுக்கு தெரியவில்லை. ஆயினும் அவற்றைவிட மனிதனுக்கு ஞான சக்தி அதிகம். கிரியா சக்தி, ஞான சக்தி இரண்டுமே மிக அதிகமாகப் படைத்த உயிரினங்களுக்குத் தேவர்கள் என்றும் பெயர். மனிதர்களுக்கு உள்ளேயே race இனம் இருப்பது போல்

தேவர்களுக்கும் கின்னரர், கிம்புருஷர், யக்ஷர், சித்தர், சாரணர், கந்தர்வர் என்று பல வகைகள் உண்டு. தேவர்களை ஊனக் கண்களால் பார்க்க முடியவில்லை. அதனால் இல்லை என்று சொல்லிவிடக்கூடாது. காற்று கண்ணுக்குத் தெரியாதது போல், அவர்கள் தெரியாமல் இருக்கிறார்கள். ஆனால் விசிறிக் கொண்டால் காற்றை நாம் அனுபவிப்பது போல, கர்மானுஷ்டங்களைச் செய்தால் தேவர்களின் அநுக்கிரகத்தை அனுபவத்தில் நிச்சயமாகப் பெறலாம்.



Source; Sage of Kanchi

Ramachandran Ventraman
 
காமாட்சியின் ஆட்சி!

காமாட்சியின் ஆட்சி!


''மாயைக்குக் காரணமானபிரம்ம சக்தி காமாட்சி அம்பாள். ஞானம்தருபவளும் அவளே! இவை அனைத்துக்கும்அவளின் கருணையேகாரணம். மாயைகள் பலவற்றைச்செய்தாலும்அதிலிருந்து விடுவிக்கிற கருணையும் பூரணமாகக் கொண்டிருக்கிறாள். மாயா லோகத்தில் நாம் உண்டாக்கிக் கொள்கிற கஷ்டங்களுக்கும்துக்கங்களுக்கும் காரணம், நம்முடைய இந்திரியங்களும் மனசும்தான்! இந்திரிய சுகங்களின் வழியே மனதைச் செலுத்தி, நம்முடைய ஸ்வபாவமானஆத்ம சுகத்தை மறந்திருக்கிறோம். ஐம்புலன்களும் மனமும்நம்மை ஆட்டிப்படைக்கின்றன. இவற்றைச் செய்தவள் மாயை. அவளே இவற்றைச் சுத்தப்படுத்தி, இந்திரிய விகாரங்களில்இருந்தும்மனசின் ஓயாத சஞ்சலங்களில்இருந்தும்ஜீவனை விடுவிப்பதற்காக சாக்ஷாத் காமாக்ஷியாக வருகிறாள்'' என அருளியுள்ளார்.

துக்கம், துரோகம், தோல்வி, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், கவலை, மனஅழுத்தம், மன விகாரம், மனக் கிலேசம், பொறாமை, கர்வம், அலட்சியம்எனமனிதவாழ்வில் எத்தனையோ இறுக்கங்கள்... இன்னல்கள்.... இடைஞ்சல்கள்.

துக்கத்துடனும்தூக்கமில்லாத துயரத்துடனும் கலங்கித்தவிப்பவர்கள், காமாட்சி அம்பாள் கோலோச்சும் காஞ்சிபுரத்துக்கு வாருங்கள். அவள் குடியிருக்கும் கோயிலுக்குச் செல்லுங்கள். ஒரு குழந்தையைப் போலான உங்களை அப்படியே வாரியணைத்துக் கொள்வாள்... அந்தத் தாய்!

காமாட்சியின் கடைக்கண் பட்டால் போதும்... கவலைகள் எல்லாம் பறந்தோடும் உணர்வீர்கள்.
அவள், மாயையில் நம்மைக் கட்டிப்போடுகிறவள் மட்டும்அல்ல. மனமுருகி அவளை எந்நாளும் பிரார்த்தித்துக்கொண்டே இருந்தால், அவளேஇந்தமாயை முழுவதையும் நீக்கி, நமக்கு பிரம்ம ஞானத்தை அனுக்கிரகம் செய்வாள்''என்று காஞ்சி மகாபெரியவா, அம்பாளின் அருளை, காமாட்சித் தாயின்கருணையைப் போற்றிச்சொல்லியிருக்கிறார்.


Sage of Kanchi

Janarthanan Narayanan
 
Mahaperiyavaa speaks about True Education ..

Mahaperiyavaa speaks about True Education ..

Right education should make us know that God is the Truth. Knowledge must fill one with good qualities, through which alone one can realise the Truth, that is God. Therefore, the goal of knowledge is the understanding of the Ultimate Truth. The first fruit of education must be humility and self- control.

Education that does not produce these qualities is useless.

Source: Sage of Kanchi

Anand Parameshwaran
 
Pithru pooja & kanya pooja

PITHRU POOJA & KANYA POOJA




The following auspicious days fall in the month of KANYA known as Purattasi in Tamil and Bhadrapada in Sanskrit.

1. Parivartana Ekadashi 2. Shravana Dwadashi 3. Vishwaroopa Yatra 4. Mahalayam 5. Beginning of Navaratri .
In this month the Sun enters in to Kanya Rasi.

अस्मै हि पितरौ पुत्रान् बिभर्तः (Yajur Veda 6.1.6). That is why parents beget children.

The above sentence is told by Suparna to her sons. Kadru made Suparna her slave. To redeem her from the slavery is the duty of her sons. Even though not able to protect themselves during difficulty, parents protect their children. When the parents are not in a position to protect themselves, is it not the duty of the children to protect their parents?

Jagati and Trishtup the two sons of Suparna went to Swarga to bring Soma to redeem their mother from slavery. But they could not win in their attempts and came back losing all their strength. Gayathri the other son then went to heaven. He was successful in his attempt. He not only brought Soma but also the things that his brothers lost in the heaven. He redeemed his mother from slavery.

The same story is told by Vyasa who had given to the world the eighteen Puranas. Kadru the mother of snakes made Suparna, the mother of Garuda her slave. Kadru told Garuda that the slavery of Suparna can be redeemed only if nectar from Swarga was brought and given to her. Garuda took the blessings of his parents and elders and went to Swarga, fought there, won the battle, brought the nectar and saved his mother. This is the story as told by Vyasa as per the Vedic principle.

Our parents leave the world leaving behind the body which is made of five elements. They obtain a watery body and become PITRUS and also become the citizens of the kingdom Vaivasvata Aadi. There they will not be in a position to get the things they need for their very existence. Only under such circumstances they expect the assistance of their children. Yamadharma out of compassion for the PITRU DEVATAS, sends them to earth with an instruction to take food from their children. The period when Yamadharma allows them to this world is called MAHALAYA PAKSHA. Either to cleanse the place where PITRUS lived once or to consume the food offered by the children, PITRUS are sent to this world. The PITRUS fond of getting the six type of food eagerly come down. During the sixteen days the children would perform MAHALAYA SHRADDHA ceremony. The PITRUS feel as if they are part of a festival with their children. That is why this period is called MAHA AALAYAM i.e. Meaning great temple. If the children do not celebrate all the days, and if not even for a day, the PITRUS return to their abode, disappointed, cursing their children. Their curse will be as follows. “ Since you have not done the SHRADDHAM to us, you will not beget children to do this to you and you will suffer in the world without food to eat”.

Let us not become eligible for the curse of the PITRUS.

प्रेतपक्षं प्रतीक्षन्ते गुरुवच्च समन्विताः।
कन्यागते सवितरि पितरो यन्ति वै सुतान्।।
ततो वृश्चिकसम्प्राप्तौ नीरसा पितरो गताः।
पुनः स्वभवने यान्ति शापं दत्वा सुदारुणम्॥ (माधवीयम्)

Maharishis say that even those who live through begging should give at least give some amount of food to their departed parents. During `the MAHALAYA PAKSHA Shraddha shall be performed if not on all the fifteen days, at least on the following days: MAHABHARANI, VYATIPATA, MADHYASHTAMI, TRAYODASHI. Performance of Shraddha on those days will give greater results (Phalan). Even in the day to day life we say thanks to those who help us. Parents who had given us life, protected us, brought up to a good position, visit us during the MAHALAYA PAKSHA. Is it not our duty to extend welcome to them and feed and keep them comfortable? At least the day on which they passed away (TITHI) one should perform Shraddha. As children enjoy the assets left behind by the parents and it is their duty to repay them.


The DHARMA SHASTRAS order as follows:



  1. Do Shraddham on all fifteen days of MAHALAYA PAKSHA
  2. If you do not have facilities to do so, do atleast on PANCHAMI OR ASHTAMI up to AMAVASYA
  3. Do Shraddham as ordained to be done
  4. If it is not practicable to do so do as HIRANYA Shraddha
  5. Even if this is not practicable do TARPANAM with sesame (TILA) with water



By doing with all sincerity the PITRUS feel happy, hence bless and
return. In the olden days people were doing on all the sixteen days during MAHALAYA PAKSHA every year. There are specific results for the performance on each TITHI says Rishi Apastamba. Failure to perform will result in not begetting children because of the curse of the PITRU DEVATAS.


पुत्रान् आयुः तथा आरोग्यं ऐश्वर्यमतुलं तथा।
प्राप्नोति पञ्चमे दत्वा श्राद्धं कामान् तथा परान्॥

Panchami according to Jabali is the duration from Panchami to Ashtami. For those who had taken SANYASA in the family DWADASHI is the apt TITHI and for those who died by weapons CHATURDASHI is the apt day for performing the rites. Those who perform Shraddha for the entire Paksha should do two TARPANAS on the Amavasya day. One should not do two Shraddhms in a day. But on the day of AMAVASYA, TARPANA shall be done for two sides of the family (ie) PITRUS from the father’s side and PITRUS from the mother’s side. During the MAHALAYA PAKSHA TARPANA ought to be done to KARUNIKA PITRUS too.

KARUNIKA PITRU DEVATAS

The following are called KARUKINA PITRU DEVATAS:



  1. Younger brother of the father
  2. Elder brother of the father
  3. Elder brother
  4. Younger brother
  5. Sisters
  6. Ones own sons
  7. Aunt (Sisters of father)
  8. Aunt’s son (Amman)
  9. Wife of father’s elder brother
  10. Wife of father’s younger brother
  11. Daughters and sons of father’s brothers
  12. Wife
  13. Father in law
  14. Mother in law
  15. Daughter in law
  16. Wife’s brothers
  17. Guru
  18. Master under whom one serves
  19. Friends


For all the mentioned TARPANS are to be performed during the MAHALAYA PAKSA. Should we not do ANNA MAHALAYA Shraddha at least once in our lifetime?


: kamakoti.org
 
மகா பெரியவா ஏன் மூலா நக்ஷத்ரத்தில் காஷ்ட

மகா பெரியவா ஏன் மூலா நக்ஷத்ரத்தில் காஷ்ட மௌனம் அனுஷ்டிக்கிறா?


மகா பெரியவா ஏன் மூலா நக்ஷத்ரத்தில் காஷ்ட மௌனம் அனுஷ்டிக்கிறா?

ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலமா?மகா பெரியவா பதில் சொன்னார்..."மூலா நக்ஷத்ரம் சரஸ்வதியோட நக்ஷத்ரம். சரஸ்வதி வாக்குக்கு தெய்வம். அன்னிக்கு காஷ்ட மௌனம் இருந்து அவளை பிரார்த்தனை பண்ணிண்டு இருந்தா வாக் விரயம் ஆகாமலும் இருக்கும். அவளை பிரார்த்தனை பண்ணிண்டு இருந்த மாதிரியும் இருக்கும். அதனால, மூலா நக்ஷத்ரம் அன்னிக்கு எதுவும் பேசாம இப்படி காஷ்ட மௌனம் இருக்கறது.

"ஆண்டாண்டு காலமாக மக்கள் மத்தியில் நிலவிவரும் தவறான நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. 'மூல நட்சத்திரப் பெண்ணா? வேண்டவே வேண்டாம்!’ என்று நட்சத்திரத்தைப் பார்த்ததுமே அவர்களின் ஜாதகத்தை ஒதுக்கித் தள்ளும் வேதனையான வழக்கம் இன்றும் தொடர்கிறது.அந்த குழந்தைகளும் கல்யாணம் ஆறதுக்கு ரொம்ப சிரமப் பட்டுண்டு இருக்கா. இன்னொரு சிஷ்யர். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மூலா நக்ஷத்ரம். மகா பெரியவா அவரிடம் 'ஏண்டா, பொம்மனாட்டி கொழந்தை, அதுவும் மூலா நக்ஷத்ரம். ஒனக்கு கவலையா இல்லியோ?' என்றாராம். அடியாருக்குத் தெரியாதா என்ன? ஐயனின் திருவிளையாடல்கள்...'பெரியவா இருக்கா. அதெல்லாம் பெரியவா பாத்துப்பா. அப்புறம் அவள் க்ஷேமத்துக்கு என்ன குறை இருக்கப் போறது?' என்ற ரீதியில் சொல்லிவிட்டாராம். மகா பெரியவா அவரை நிரம்ப ஆசிர்வாதம் பண்ணி, 'மூலா நக்ஷத்ரம் சரஸ்வதி அம்பாளோட நக்ஷத்ரம். குழந்தைக்கு சரஸ்வதி ன்னு பேரு வை. க்ஷேமமா இருப்பா' என்று ஆசி சொன்னாராம். இன்று அந்த பெண் குழந்தை நல்ல இடத்தில் மணமாகி குழந்தைகளுடம் பரம க்ஷேமமாக இருக்கிறார்.ஆம். அதெல்லாம் மகா பெரியவா பாத்துப்பா

Source: Periyava Devotees

Surya Narayanan
 
பேச்சைக் குறைத்தால் போதும்


பேச்சைக் குறைத்தால் போதும்




திங்கள், வியாழன், ஏகாதசி முதலிய நாட்களில் ஒன்றில் மவுனம் அனுஷ்டிக்கலாம். சோமவாரம், குருவாரம் ஆபீஸ் செல்பவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மவுனமிருக்கலாம். பாதி நாளாவது இருக்கலாம்.


நாம் பலவிதமான பேச்சுக்களைப் பேசி, கெட்ட விஷயங்களை விஸ்தாரம் பண்ணியும், பல பேரைத் திட்டியும், வாக்குதேவியான சரஸ்வதிக்கு அபசாரம் பண்ணுகிறோம். இதற்குப் பிராயச்சித்தமாக சரஸ்வதியின் நட்சத்திரமான மூலத்தில் மவுனம் இருப்பதுண்டு. தினமும் அரைமணியாவது மவுனமாக தியானம் செய்ய வேண்டும்.


தெய்வத்தின் கருணை நமக்கு தெரியாது. நமக்கு நல்லது வந்தாலும் கெட்டது வந்தாலும் இரண்டுக்கும் மூலம் அம்பாளுடைய அருள்தான். நல்லது காரணம் இல்லாத அருள். கஷ்டம் ஒரு காரணத்துக்காக ஏற்படுகிற அருள். நல்லது வந்தாலும் கெட்டது வந்தாலும் அவளுடைய அருள் என்று கொள்ள வேண்டும்.
நாம் எல்லோரும் ஏதாவது ஒரு திருப்பணியில் ஈடுபட்டுத் தர்மம் செய்ய வேண்டும். சேதுவில் அணைக்கட்டும் ராமனுக்கு அணில் செய்த உதவிபோல,
மனிதனாகும் போது கடவுள் மனம் என்ற ஒன்றைக் கொடுத்து அதைப் பாவ புண்ணியங்களில் ஈடுபடுத்திப் பலனை அனுபவிக்க வைக்கிறார். கஷ்டங்களைக் கண்ட இடத்தில் போய்ச் சொல்வதற்குப் பதிலாக பகவானிடம் சொல்லிக் கொள்ளலாம்.


ஜகன்மாதாவைத் தெரிந்து கொள்கிறவரைத்தான் துவேஷம், விரோதம், வெறுப்பு எல்லாம் இருக்கும். அவளைத் தெரிந்து கொண்டபின் இவை எல்லாம் மறைந்து எல்லோரும் சகோதரர்கள் என்ற அன்பு வந்துவிடும்.

Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy


 
The Paramacharya of Kanchi Kamakoti Peetham

It was Albert Franklin, the Consul General for the United States at Madras decades ago, who said, after personally meeting Jagadguru Sri Sankaracharya Swami of Kanchi Kamakoti Peetham, His Holiness Sri Chandrasekharendra Saraswati, that "he saw Lord Christ in the Swami".



Writing in the Tamil weekly Kalki in May 1977 in an article entitled "The Spring of Compassion" Hon, justice M.M.Ismail, former chief Justice of Madras High Court, hailed the Mahaswami as "Jagadguru'(World-Teacher). Annotating his view of the Jagadguru, Mr. Ismail said that He is the one who always dreams of a world bound by moral law.


Sri Agnihotram Ramanuja Thatachariar would call the Mahaswami the "Ideal Prophet of our times". Dr. Paul Brunton who was a disciple of Ramana Maharishi had on occasion to visit the Mahaswami in 1931. He records in his famous book A Search in Sacred India, his first impression of the Mahaswami as follows:


"His noble face, pictured in grey and brown, takes an honoured place in the long portrait gallery of my memory. That elusive element which the French aptly term "spiritual", is present in the face. His expression is modest and mild, the large dark eyes being extraordinarily tranquil and beautiful. The nose is short, straight and classically regular. There is a rugged little beard on his chin, and the gravity of his mouth is most noticeable. Such a face might have belonged to one of the saints who graced the Christian Church during the Middle Ages, except that this one possesses the added quality of intellectuality. I suppose we of the practical West would say he has the eyes of a dreamer. Somehow, I feel in an inexplicable way that there is something more than mere dreams behind those heavy lids".


After the glorious meeting at Chengleput which left an indelible impression on Paul Brunton, he narrates a strange experience at his home far away from Chengleput when he was fast asleep.


"The next thing of which I am aware is sudden awakening. The room is totally dark. I feel my nerves strangely tense. The atmosphere around me seems like electrified air. I pull my watch from under the pillow and by the glow of its radium-lit dial, discover the time to be a quarter to three. It is then that I become conscious of some bright object at the foot of the bed. I immediately sit up and look straight at it.


My astounded gaze meets the face and form of His Holiness Shri Sankaracharya. It is clearly and unmistakably visible. He does not appear to be some ethereal ghost, but rather a solid human being. There is a mysterious luminosity around the figure which separates it from surrounding darkness.


Surely the vision is an impossible one. Have I not left him at Kancheepuram? I close my eyes tightly in an effort to test the matter. There is no difference and I still see him quite plainly!


Let it suffice that I receive the sense of a benign and friendly presence. I open my eye and regard the kindly figure in the loose yellow robe.


The face alters, for the lips smile and seem to say:
Be humble and then you shall find what you seek.
Why do I feel that a living human being is thus addressing me?
Why do I not regard it as a ghost, at least?
The vision disappears as mysteriously as it has come. It leaves me feeling exalted, happy and unperturbed by its supernormal nature. Shall I dismiss it as a dream? What matters it?
There is no more sleep for me this night. I lie awake pondering over the day's meeting, over the memorable interview with His Holiness Shri Sankaracharya of Kancheepuram, the "Hierarchy of God" to the people of South India."


The philosophy of Adi Sankara that bears the name 'Advaita' has come to be regarded not only in India but even abroad as one of the most valued products of the genius of mankind in its researches of the eternal truth.


Of the monastic institutions installed by the great saint in charge of his immediate disciples to propagate the ideal of Advaita, the one at Kanchi came to be known as Sri Kanchi Kamakoti Peetham. The 68th Pontiff in the hallowed line of succession of spiritual heads of the Peetha is His Holiness, Jagadguru Sri Chandrasekharendra Sarasvathi Swamigal.


It is our great good fortune that we have in our midst today, three great Acharyas in the venerable lineage of Adi Sankara, and belonging to three successive generations, a unique blessing no other Peetham can claim presently. In fact, the Kanchi Kamakoti Peetham is the only Sankara Peetham in the country which has been blessed with an unbroken line of succession of Acharyas right from its inception around fifth century B.C. more than 2400 years ago.


If Adi Sankara is worshipped as the very incarnation of lord Sankara(Siva) then our Kanchi Paramacharya can be deemed to be the incarnation of Adi Sankara Bhagavatpada himself. Sri R. Venkatraman, former President of India, spoke about the Mahaswami thus:


'A living example of Lord Krishna's definition of the devotee most dear to me' (Yo madbaktas sa me priyah'; Gita:XII:verses 13-14), the Kanchi Maha Swamigal 'hates no being' ('adveshtaa'), is friendly and compassionate to all, ('nirmamo nirahankaara') has no conceit of 'I' and 'mine', balanced in pleasure and pain ('samadukhasukha') steady in meditation, and self controlled ('satatam yogee yataatmaa'), possessed of firm conviction ('dhritaniscaya'), mind and intellect dedicated to the Lord ever ('mayyarpitamano-buddhi'). His Holiness, therefore, is nearest and dearest to the lord, nay, one with Lord himself ('atmaiva me matam')
Adi Sankara had to contend within his life-span of just 32 years, two different and conflicting schools of thought. His philosophy alone emerged as indestructible in the ultimate analysis.


The Mahaswami at Kanchi who has completed a century is the incarnation of Adi Sankara who is an Avatar of Ishwara Himself. The Mahaswami is an unparalleled "ball of fire", to destroy all the ills of society.
The ten Commandments of the great Paramacharya culled out from his various utterances is given below. These extracts from his speeches mark him as a great savant in the history of mankind.



  1. One of our duties as human beings is to avail ourselves of every opportunity to do good to others. The poor can serve others by their loyal work to the country and the rich by their wealth to help these poor. Those who are influential can use the influence to better the condition of the lowly. That way we can keep alive in our hearts a sense of social service.
  2. Man by himself cannot create even a blade of grass. We will be guilty of gross ingratitude if we do not offer first to God what we eat or wear. Only the best and choicest should be offered to him.
  3. Life without love is a waste. Everyone of us should cultivate prema or love towards all beings, man, bird and beast.
  4. Wealth amassed by a person whose heart is closed to charity is generally dissipated by the inheritors; but the family of philanthropists will always be blessed with happiness.
  5. A person who has done a meritorious deed will lose the resulting merit if he listens to others praising him, or himself boasts of his deeds.
  6. It will do no good to grieve over what has happened. If we learn to discriminate between good and evil, that will guard us from falling into the evil again.
  7. We should utilise to good purpose the days of our lifetime. We should engage ourselves in acts which will contribute to the welfare of others and to our own up-liftment.
  8. We should perform our duties that have been prescribed for our daily life and also shall be filled with devotion to God.
  9. One attains one's goal by performance of one's duties.
  10. Obtaining Jnanam is the only solvent for our troubles and sufferings.

Pandit Jawaharlal Nehru has written in his 'Discovery of India' about Sankara as follows:
"Sankara was a man of amazing energy and vast activity. He was no escapist, escaping into his shell or into a corner of the forest seeking his own individual perfection, oblivious of what happened to others. In a brief life of thirty two years, he did the work of many long lives and left such an impress of his powerful mind and rich personality on India that is very evident today."


The above description of the Great Master can be equally applied to the Mahaswami whom we all see as the Adi Sankara of the 20th century, in the unbroken line of pontiffs from 482 B.C. (2620 of the Kali Era) till today.


The Paramacharya of Kanchi Kamakoti Peetham : Experiences with His Holiness Sri Chandrasekharendra Saraswathi MahaSwamiji : kamakoti.org
 
"Nivedayaami"

"Nivedayaami"


" Nivedana " does not mean making the Lord really "eat " what is offered. He does not have to eat. Puja is meant to make us inwardly pure and the Lord does not have to gain from it.

"Nivedayaami" means " i am making it known to you ( informing you )" and does not mean " I am feeding you ".

You must speak thus to Ishwara, " O Lord, in your compassion you have given us this food ". Thus, after offering the food to the Lord , thinking of Him we must eat the food.
Without His grace how does the rice grow?
Experts may conduct research and write big tomes of rice. But are they capable of making one grain of rice?

What is called synthetic rice is made of materials already created by Ishwara. So all that seems to be made of man must be finally traced to God's creation. To enjoy what he has given us without first presenting it to Him would be tantamount to thieving.



Sage of Kanchi


Jambunathan Iyer
 
ஆத்மாதான் எல்லாவற்றுக்கும் ஆதாரம்.

ஆத்மாதான் எல்லாவற்றுக்கும் ஆதாரம்.


ஆத்மாதான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். ஆனால் அதுவே அவற்றைக் கடந்திருக்கிறது என்றால், அதெப்படி என்று தோன்றுகிறது; குழப்பமாயிருக்கிறது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கீதையில் இம்மாதிரி பல தினுசாகக் குழப்பிக் குழப்பி, பிறகு ஒரேயடியாகத் தெள்ளத் தெளிவாகப் பண்ணிவிடுவார்.


'நான் எல்லாப் பொருட்களிலும் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் இருக்கின்றன' என்று கீதையில் ஓரிடத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார். (யோமாம் பச்யதி ஸர்வத்ர, ஸர்வம் ச மயி பச்யதி) எல்லாப் பொருட்களும் இவரிடம் இருக்கின்றன என்றால், இவர்தான் அவற்றுக்கெல்லாம் ஆதாரமான ஆத்மா என்றாகும். ஆனால் எல்லாப் பொருட்களிலும் இவர் இருக்கிறார் என்றால் அவைதான் இவருக்கு ஆதாரம் என்று ஆகுமே? இதில் எது சரி என்ற குழப்பம் ஏற்படலாம்.


ஸ்வாமி அல்லது ஆத்மாவே எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்பதுதான் சரி. அவர் எல்லாவற்றுள்ளும் இருக்கிறார் என்பதால் அவை இவரைத் தாங்குகின்றன என்று ஆகாது. இவரால் தான் அவற்றுக்கு உருவமும் உயிரும். இவர் இல்லாமல் அவை இல்லை. எனவே, அவை இவருக்கு ஆதாரமல்ல. இவர்தான் சகலத்தையும் ஆட்டிப் படைப்பவர், இதை ஸ்ரீ கிருஷ்ணனே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

'பொம்மலாட்டப் பொம்மை மாதிரித்தான் சகல பிராணிகளும்; உள்ளே இருந்து ஈச்வரனே அவற்றை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான்.' [ஈச்வர; ஸர்வ பூதானாம் ஹருத் தேசே (அ) ர்ஜுன திஷ்டதி ப்ராமயன் ஸர்வ பூதானி யந்த்ரா ரூடானி மாயயா] என்கிறார்.


இப்படிக் குழப்பத்தைத் தெளிவு செய்கிற பகவான் அதே கீதையில் மறுபடியும் குழப்பம் செய்கிறார். 'எல்லாப் பொருட்களிலும் நான் இருக்கிறேன்; எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் உள்ளன' என்று கூறுவபரே, 'என்னிடத்தில் ஒரு பொருளும் இல்லை; நானும் ஒரு பொருளும் இல்லை' என்கிறார். (ந ச மத் ஸ்தானி பூதானி, ந சாஹம் தேஷு அவஸ்தித:). இங்கே ஆத்மா எல்லாலற்றையும் கடந்தது என்று தத்துவம் பேசப்படுகிறது.


'இது என்ன குழப்புகிறாயே' என்றால், 'நான் எல்லாருக்கும் விளங்குவதில்லை ( ந அஹம் ப்ரகாச: ஸர்வஸ்ய:) அதுதான் என் யோகமாயை (யோக மாயா ஸமாவ்ருத:)' என்று ஒரு போடு போடுகிறார்.
'இது என்ன உபதேசம் வேண்டிக்கிடக்கிறது? ஒன்றும் புரியவில்லையே!' என்று தோன்றுகிறதா?
நன்கு ஆலோசித்துப் பார்த்தால் குழப்பத்துக்குத் தெளிவு காணலாம். 'நான் ஒருவருக்கும் விளங்க மாட்டேன்' என்று பகவான் சொல்லியிருந்தால், 'ஆயிரம்பேர் இருந்தால், ஆயிரம்பேருக்கும் விளக்க மாட்டேன்' என்று அர்த்தமாகும். ஆனால் அப்படியின்றி, 'நான் எல்லோருக்கும் விளங்க மாட்டேன்' என்றால், 'ஆயிரம் பேரில் 999 பேருக்கும் விளங்காமல் இருந்தாலும் இருக்கலாம்; ஒருவனுக்காவது விளங்குவேன்' என்றுதான் பொருள். பகவான் 'எல்லாருக்கும் (ஸர்வஸ்ய) விளங்க மாட்டேன்' என்றாரேயன்றி ஒருவருக்கும் (கஸ்யாபி) விளங்க மாட்டேன்' என்று சொல்லவில்லை. அப்படியானால் அவரும் சிலருக்கு விளங்குகிறார் என்றாகிறது.


அந்தச் சிலர் யார்? இவர் சொன்ன யோக மாயையால் பாதிக்கப்படாத ஞானிகள். 'நான் எல்லாப் பொருளிலும் இருக்கிறேன்: ஒரு பொருளும் என்னிடம் இல்லை' என்று பகவான் முரண்பாடாகப் பேசியது போலத் தோன்றுவதற்கு இத்தகைய ஞானிகளே விளக்கம் தந்து தெளிவு செய்வார்கள்.


தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. அரை இருட்டு. எவனோ அந்தப் பக்கம் வந்தவன் அதை மிதித்துவிட்டு, "ஐயோ, பாம்பு, பாம்பு!" என்று பயத்தால் கத்துகிறான். மாலையாக இருப்பதும் பாம்பாக இருப்பதும் ஒன்றுதான். இது மாலைதான் என்று தெரிந்தவுடன், அவனுக்குப் பாம்பு இல்லை என்று தெரிந்து விடுகிறது. அதனால் முதலில் பாம்புக்கு ஆதாரமாக இருந்தது என்ன? மாலைதான்.


மாலையைப் பாம்பு என எண்ணுவதுபோல், அஞ்ஞானிகள் ஒன்றேயான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பார்த்து மயங்குகிறார்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரம் பிரம்மம்தான்.
"இந்தப் பிரபஞ்சத்துக்குள் நான் இருக்கிறேன்; பிரபஞ்சம் என்னிடத்தில் இருக்கிறது" என்று சொன்னால் என்ன அர்த்தம்? மாலைக்குள் தான் பாம்பு இருக்கிறது; பாம்புக்குள்தான் மாலை இருக்கிறது என்பது எப்படியோ அப்படிதான். இரண்டும் உண்மைதானே?


பாம்பு என்று அலறுபவனுக்குப் பாம்பு மாலையைத் தனக்குள் 'விழுங்கி' விட்டது. அவன் பார்வையில் ஆதாரமாக இருப்பது பாம்பு. அஞ்ஞானம் நீங்கி 'இது மாலைதான்' என்று உணர்ந்து கொண்டவனுக்கு மாலை பாம்பை தன்னுள் மறைத்து விடுகிறது. மாலைதான் ஆதாரமாகத் தெரிகிறது.
மாயையினால் மூடப்பட்டவன் பிரபஞ்சத்தை சத்தியம் என்று பார்த்தாலும், வாஸ்தவத்தில் பிரபஞ்சத்துக்கு ஆதரமாக இருந்து தாங்குபவன் ஈசுவரன்தான்.


பிரபஞ்சத் தோற்றத்தை ஞானத்தினால் விளக்கியவனுக்கு ஈசுவரனே எல்லாமாய், தானுமாய்த் தோன்றுகிறான். ஈஸ்வரனைத் தவிர வெறும் தோற்றமாகக்கூடப் பிரபஞ்சம் என்று எதுவுமே ஞானியின் நிர்விகல்ப ஸமாதியில் தெரியாது. ப்ரபஞ்சம் என்றே ஒன்று இல்லாதபோது அது ஈசுவரனிடத்தில் இருப்பதாகவோ, அல்லது ஈசுவரன் அதனுள் இருப்பதாகவோ சொல்வதும் அபத்தம்தானே? அஞ்ஞான தசையில் உடம்பு, பிராணன், மனசு, அறிவு என்றெல்லாம் தெரிகின்றன. ஞானம் வந்தால் ஆத்மானந்தம் ஸ்புரிக்கிறபோது இது எல்லாவற்றையும் கடந்துதான் அந்த நிலை வருகிறது. இதனால்தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் முடிந்த முடிவான ஞான நிலையில் நின்று, 'என்னிடத்திலும் பொருட்கள் இல்லை; நானும் பொருட்களிடத்தில் இல்லை' என்று கூறிவிட்டார். எவனோ அஞ்ஞானி மாலையைப் பாம்பாக நினைத்தான் என்பதால், உண்மையிலேயே ஒரு பாம்பு மாலைக்குள் இருந்ததாகவோ அல்லது பாம்புக்குள் மாலை இருந்ததாகவோ சொல்லலாமா?


கம்பர் சுந்தர காண்டத்தில் இதைத்தான் சொல்லுகிறார்:


'அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவுஎனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறு பாடுற்ற வீக்கம்
கலங்குவ தெவரைக் கண்டால்
அவர் என்பர் கைவி லேந்தி
இலங்கையில் பொருதா ரன்றே

மறைகளுக் கிறுதி யாவார்.'



அலங்கல் என்றால் மாலை. அரவு என்றால் பாம்பு. 'அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு' - மாலையில் தோன்றும் பாம்பு என்ற பொய்யான எண்ணம். இதுபோலப் பஞ்ச பூதங்கள் ஒன்று சேர்ந்து பொய்யான பிரபஞ்சம் என்ற வீக்கமாகி மயக்குகிறதே. அது யாரைக் கண்டால் விலகிப்போய் மாலையான ஈசுவரன் மட்டும் தெரியுமோ, அந்த மாயா நாசகனான பரமாத்மாதான் ராமசந்திர மூர்த்தி என்றார்.
நம்மாழ்வாரைப் பற்றி சடகோபரந்தாதி பாடின பரம வைஷ்ணவரான கம்பர், பரமாத்ம ஸ்வரூபத்தை இப்படி ஸ்வச்சமான அத்வைத பாஷையில் சொல்கிறார்.


?????? ????????, ???????? ???????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
From the Book "Kanchi Mutt for Everyone"

From the Book "Kanchi Mutt for Everyone"

10710985_1538204026411826_5665731545302923170_n.jpg






Source: Shri Kanchi Kamakoti Peetam, Kanchipuram
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top