• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
The wealth that Guru gives and other types of wealth.

Mahaaperiyavaa speaks about …. The wealth that Guru gives and other types of wealth.

A house that is bequeathed by a father will become old in course of time and becomes dilapidated. It has to be constantly maintained by doing repairs. In the land bequeathed by father every year expense has to be incurred for sowing the seeds and growing the crop for which a lot of effort is also required. There are also lands which loose their fertility in spite of good manure. There is also a possibility that it may not rain or water may not become available from a dam or crops may be damaged by pests or heavy rain etc. More than all these, there is the Land Ceiling Law ! Even if the father leaves behind considerable cash it will get devalued. There are also several taxes to be paid. There is the anxiety about new taxes, robbery etc.

Thus, whatever may be the type of wealth, there is a room for its decay and it is not permanent. This is one side of the picture. The other side is the son who gets the property indulges in several wrongs to save the property by violating laws, creating loss and difficulty for others, bribery, wrong accounting and benami transactions. By all these means he goes in the wrong way and if the property is just " this much " ( Periyavaa shows by his hand that it is very little ) the sin that is accumulated on account of the property is " this big " ( Periyavaa opens the hands widely ).

Even assuming that due to the punya earned in previous lives or due to some luck the property grows even without indulging in any wrong ways, one day the person has to go leaving all these behind. Whether it is a palatial house or thousands of acres of land or crores of cash, nothing of these can be taken along with him.

Therefore, the wealth left by the father is not permanent. So also the wealth earned by us is also not permanent.

There is a property which is permanent which cannot be lost, does not need any repairs, does not give rise to any fears about robbery, does not require adoption of wrong means to save it and which we cannot earn by ourselves.

It is the Guru who can give that permanent property. This is not a property which does not come with us when we leave this world. On the other hand, it is what ensures that we do not return to this world. It unites us inseparably with Paramaathmaa who is permanent.

Guru bestows us with the property called Jnaanam. It is a property gained through upadesham ( spiritual teaching ) and for developing which there is no need to indulge in sinful ways.

The pleasure that we derive from all other properties is only temporary. Only Jnaana which we gain through Guru's blessings gives us the permanent happiness - " Nithyaanandham "


Source; Sage of Kanchi


Anand Parameswaran
 
காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும&

காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்?



Maha-periyava-1967.jpg




கா
சி ஷேத்ரத்தில் ருத்ரைகாதசீ ஜப-ஹோமம் செய்து, ஒரு குடம் கங்கா ஜலம் கொணர்ந்து பெரியவாளுக்கு பெரியவாளுக்கு சமர்பித்தார், ஒரு பக்தர்.



ருத்ரைகாதசிக்கு எங்கேயிருந்து ஜலம் எடுத்தே?” என்று கேட்டார்கள் பெரியவா.
காசி கேதார்காட் கங்கையில இருந்துதான் ஜலம் எடுத்து வந்தார்கள் வைதீகர்கள்.”
காசி பரமேஸ்வரனின் இடம். அங்கிருந்து கங்கை நீர் கங்கை மண் முதலானவைகளை எடுத்து வரக்கூடாது. நீ கொண்டு வந்திருக்கும் தீர்த்தத்தை ஏதாவது ஒரு வில்வமரத்துக்கு அடியே சேர்த்துவிடு….”


கங்கை, சுத்த கங்கையாக இருக்குமிடத்திலிருந்து தான் கங்காஜலம் கொண்டு வரவேண்டும். கங்கையில் யமுனை கலப்பதற்கு முன் அது சுத்த கங்கை” – என்று பெரியவா விளக்கினார்கள்.


நன்றி : ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்


???????? ????? ???? ????? ??????????????? ? ???? ??????? (11) | RightMantra.com

 
guru’s anugraham

guru’s anugraham


Though we know that God is within us, we need guru’s anugraham to realize that. Hence wise men have said that without guru kripai, we can’t achieve anything!



Divine_Thoughts-23.jpg
 
ஜகத்குரு ஸ்ரீமகாஸ்வாமிகள் அருளுரை அமுத&#

ஜகத்குரு ஸ்ரீமகாஸ்வாமிகள் அருளுரை அமுதம்

மனிதர்களுக்கு ஆறுதல் கிடைக்கும்படி செய்வது, நோயை குணப்படுத்துவது, கல்வி அறிவு தருவது எல்லாமே பரம உத்தமமான பணிதான், அதில் பகவான் நிச்சயமாகப் HgF அடைகிறான் என்பதும் உண்மைதான், ஆனால்யோசித்துப் பார்க்கும்போது, *மனித சேவை, பகவத்சேவை* என்பதையே திருப்பி வைத்துச் சொல்வதும் ரொம்ப உண்மை என்று தெரிகிறது, அதாவது பகவத் சேவை செய்வதும் மனிதர்களின் நன்மைக்காகத்தான் என்று தெரிகிறது, அதுவே மற்ற சேவைகளைக் காட்டிலும் மனிதனுக்கு நிரந்தரமான நலனைத் தருவதாகும்.


ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளைச் சொஸ்தம் செய்து அனுப்புகிறோம் அவர்கள் அப்புறம் நல்லவர்களாக வாழ வேண்டாமா? லோகத்துக்குக் கெடுதல் செய்கிறவர்களாகவும், தங்களுக்கே அனர்த்தம் செய்து கொள்பவர்களாகவும் இருப்பவர்கள் சொஸ்தமடைந்து, திரும்பி வந்து அக்கிரமமான காரியங்களைத் தொடர்வதால் லோகத்துக்கு என்ன பயன்? அந்த வியாதி அனுபவம் அவர்களுக்குத் தெய்வ சோதனையாக வந்து அவர்களைப் புனிதப்படுத்துவது என்ற பலன் கிடைக்க வேண்டாமா? அதற்கு ஆலயம் உதவும் அல்லவா? ஆஸ்பத்திரி வைத்து நோயாளியின் உடல் வியாதியைத் தீர்ப்பது போதாது, நோயாளிகளது மனத்தில் கெட்ட எண்ணங்கள் என்ற வியாதி இல்லாமல் செய்வதே அதைவிட முக்கியம்.


இவ்வாறேதான் பள்ளிக் கூடத்தை வைத்துப் படிப்பை விருத்தி செய்வதும் ஆகும். படித்து வெளியே வந்தவர்கள் யோக்கியர்களாக இல்லாவிட்டால் பள்ளிக்கூடம் வைத்த பயன்நமக்கு ஏது? பக்தி, கட்டுப்பாடு, தியாகம் முதலானவை இல்லாமல், படிப்பில் வெறும் புத்தியை மட்டும் வளர்த்துக் கொண்டால், சாதுரியமாக அயோக்கியத்தனங்கள் செய்தும் தப்பித்துக் கொள்வதற்குத் தான் வழியாகிறது. வித்யா சாலையோடும் மனிதனின் வாழ்வு முடிந்து விடுவதில்லை, அவன் நல்லவனாகவும் இருக்க வேண்டியது முக்கியம், இப்படி நல்லவனாக்கும் நிலையங்களாக ஆலயங்கள் விளங்குகின்றன.


ஓரு மரத்தை நிழல் தழைக்காமற் செய்யவேண்டுமானால் முடியாது, அடி மரத்தையே வெட்ட வேண்டும், வீட்டுக் கூரையிலே திரும்பத் திரும்பக் கரையான் புற்று உண்டாகிறது என்றால் மேலெழுந்தவாரியாக அந்தக் கூட்டைப் பெயர்த்தால் முடியுமா? அதற்கு மூலகாரணமான தாய்பூய்ச்சியை அகற்றினால் தான் மீண்டும் புற்று எழும்பாமல் இருக்கும். அதுபோல பாபத்துக்கு மூலகாரணத்தை அறிந்து அதையே அழிக்க வேண்டும். பாபத்துக்கு மூலம் என்ன? கெட்ட காரியத்தினுடைய பலன்தான் பாபம். கெட்ட காரியம்தான் பாப மூலம்.


துவேஷமும் ஆசையும் நமக்கு அந்நியமாக, நம்மைவிட வேறாக, இரண்டாவதாக இருக்கும் வஸ்துகளிடத்தில்தான் உண்டாகின்றன. நம்மிடத்தியலேயே நமக்கு ஆசையும் உண்டாவதில்லை வெறுப்பும் உண்டாவதில்லை. இப்போது வேறு என்று இருக்கும் பொருட்களிடத்தில் ஆசை
உண்டாவதால், அவற்றையும் நாமாகவே பண்ணி விட்டால் ஆசை உண்டாகாது அல்லவா...? ஆசை இல்லாவிட்டால் கெட்டப் பிரயத்தனம் இல்லை. அதனால் பாபம் இல்லை. அது இல்லாவிட்டால்... துக்கம், கவலைகள் எதுவும் இல்லை ,வாழ்நாள் முழுவதும் எவ்வளவு பிரயத்தனம் பண்ணினாலும் கிடைக்காத மன அமைதி இப்படி நமக்கு வேறாக - இரண்டாவது இல்லை என்று ஆக்கிக் கொள்ளும்போது, நமக்குக் கிடைத்து விடுகிறது. இதுவே இரண்டாவது இல்லை என்றுநாம் உறுதிப்டுத்திக் கொள்ளும் அத்வைதம்.


ஜுரம் வந்தால் நம்முடைய சரீரத்தால் நிற்கவும், நடக்கவும் முடிவதில்லை. இந்த ஜன்மாவே பெரிய ஜீரமாக வந்திருக்கிறது. இதிலிருந்து நம்மைக் கடைத்தேற்றுவதற்காக, நமக்கு வந்திருக்கிற சம்சார ஜீரத்தைப் புரிந்து கொண்டு, அதற்கு அடையாளமாக சுவாமியின் முன் தண்டாகாரமாக விழுந்து நமஸ்கரிக நாம் செய்கிறோம், என்கிற எண்ணம் போய்விட்டால், அதுவே சதாகால நமஸ்காரம். அந்த அனுபவம் நமக்குச் சித்திக்காத போதிலும் ஈசுவர சந்நிதியிலாவது அப்படிப் பாவித்து வணங்கித் தரையோடு தரையாக, எளிமையாகக் கிடக்க வேண்டும். இங்கே வணங்கி விட்டால் அப்புறம் வெளியே எங்கேயும் வணங்காமல் இருக்கலாம்.



மனப்பூர்வமாக ஈசுவரனை நமஸ்காரம் செய்துவிட்டால் போதும். அவர் ஜனன, மரண சக்கரத்திலிருந்து நம்மை விடுவித்து விடுவார். நம்முடைய பாவங்களை எல்லாம் போக்கி முக்தியை அளித்து விடுவார்,
தமிழ்நாட்டைத் தெலுங்கர்கள் அரவநாடு என்று சொல்வார்கள். ஆந்திரப்பிரதேசத்தின் கீழே உள்ள சிறிய பகுதிக்கு அரவதேசம் எள்று பெயர். அப்புறம் வரும் பகுதிகளுக்கும் அதே பெயரை வைத்து விட்டார்கள். இதே ரீதியில்தான் சிந்துப்பிரதேசத்தைக் கண்ட அந்நியர்களும், அதை அடுத்து வந்த பாரத தேசத்தை ஹிந்து தேசமாக்கி விட்டார்கள். அங்கே உள்ள மக்களின் மதமும் இந்து மதம் என்று பெயர் பெற்று விட்டது.


ஆனால் ஹிந்து என்பது நம்முடைய பூர்விகப் பெயர் அல்ல. வைதிக மதம், சனாதன தர்மம் என்றெல்லாம் சொல்லுகிறோமே, அவைதான் பெயரா என்றால், அதுவும் இல்லை. நம்முடைய ஆதார நூல்களைப் பார்க்கும்போது இந்து மதத்துக்கு எந்தப் பெயருமே குறிப்பிடப் படவில்லை நம் மதத்துக்கு ஏன் பெயர் இல்லை?


பல்வேறு மதங்கள் இருக்கிற போதுதான், ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு வித்தியாசம் தெரிவதற்காகப் பெயர் கொடுக்க வேண்டும், ஒரே மதம் தான் இருந்தது என்றால் அதற்குப் பெயர் எதற்கு? மற்ற மதங்கள் உண்டாவதற்கு முன்பே நமது மதம் இருந்திருக்கிறது. இந்த ஒரு மதமே உலகமெல்லாம் பரவி இருந்திருக்கிறது. இதைத் தவிர வேறு மதம் இல்லாததால், இதற்குப் பெயர் குறிப்பிட வேண்டிய அவசியமே இருக்கவில்லை.


அநேகமாக எல்லாச் சிவாலயங்களிலும் லிங்கத்துக்குப் பின்புறம் லிங்கோத்பவமூர்த்தி சுவரில் காணப்படுவார். இவர் யார்? பார்த்தால் மூர்த்தியின் ஜடாமகுடம் லிங்க வட்டத்துக்குள் முடியாமலே இருக்கும், அதன் பாதமும் லிங்கத்தின் அடியில் முடிகிற வரைக்கும் தெரியாது. இந்த மூர்த்திக்குக் கீழே ஒருவராக மூர்த்தியைப் பார்க்கலாம், மேலே ஹம்ஸருபத்தில் ஒரு மூர்த்தி காணப்படுவார்
இவர் தான் லிங்கோத்பவமூர்த்தி, அடிமுடி எல்லை இல்லாமல் அவர் ஜோதி சொரூபமாக அங்கே நிற்கிறார். இப்படி ஜோதிர்லிங்கமாக ஆகாயத்துக்கும் பூமிக்குமாகப் பரமசிவன் உத்பவித்த இரவே சிவராத்திரியாகும்.


சகல பிரபஞ்சமும் அடங்கி இருக்கிற லிங்க ரூபமானது ஆவிர்பவித்த சிவராத்திரி மகாசதுர்த்தி இரவில், நாம் அவரை அப்படியே ஸ்மரித்து ஸ்மரித்து அவருக்குள் அடங்கி இருக்க வேண்டும். அதைவிட ஆனந்தம் வேறெதுவும் இல்லை.


சிஷ்யன் சுயேச்சைப்படிப் போகவிடாமல், ஆசாரியனிடம் கேட்டு அவருடைய வார்த்தைப்படியேதான் நடக்க வேண்டும் என்று சாத்திரம் சொல்லுகிறது. இதற்காக எப்போதும் உர்ரென்று உருட்டி மிரட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லவில்லை, பிரியத்தோடு நடத்தும்படியும், அதேசமயம் சுவாதீனமாகப் போய்விடாமல் பார்த்துக் கொள்ளும்படியும் சொல்லி இருக்கிறது. அப்படித்தான் ஒழுங்குபடுத்த வேண்டும். உபநிஷத்துக்களில் ஆரம்பித்துப் புராண இதிகாசங்களைப் பார்த்தால், குருவும் சிஷ்யனும் ஒருவருக்கொருவர் பிரியத்திலேயே கட்டுப்பட்டிருந்ததற்கு நிறைய திருஷ்டாந்தங்கள் கிடைக்கின்றன.


ஒவ்வொரு பிராணிக்கும் ஒவ்வொரு அங்கத்தில் அதிகக் கௌரவம் இருக்கும் சவுரிமான் என்று ஒரு மான் இருக்கிறது, அதன் கௌரவம் அழகான வாலில் உள்ளது. மயில் என்றால் அதற்குத் தோகை விசேஷம். தோகையை அதனால் மயில் ஜாக்கிரதையாக ரட்சிக்கும். யானை எதை ரட்சிக்கும்? தனது தந்தத்தைத் தீட்டி வெள்ளை வெளேர் என்று வைத்துக் கொண்டிருக்கும். இந்தப் பிள்ளையார் என்ன செய்கிறார்? யானைத் தலையில் உள்ள தந்தங்களில் (கொம்புகளில்) ஒன்றையே ஒடித்து, அதனால் மகாபாரதம் எழுதுகிறார். தர்மத்தைச் சொல்லுகிற ஒன்று தான் பெரிது என்பதை இவ்வாறு காட்டுகிறார். நியாயத்துக்காக, தர்மத்துக்காக, வித்தைக்காக எதையும் தியாகம் பன்ன வேண்டும். என்பதைத்தானே தந்தத்தைத் தியாகம் பண்ணிக் காட்டி இருக்கிறார்.


விட்டகுறை தொட்டகுறை என்று சொல்லுவார்கள் அதாவது, பூர்வ ஜென்மத்தில் விட்ட இடத்தில், இந்த ஜென்மத்தின் அனுபவங்கள் ஆரம்பிக்கின்றன என்று அதற்குப் பொருள். அவர்கள் முன் ஜென்மத்திலேயே, அதற்கு முற்பிறவிகளிலேயே கர்மா, பக்தி நிறையப் பண்ணி இருப்பார்கள். அதனால் சித்தசுத்தியும், அருட்பேறும் பெற்றிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களிலும் கூட சிலருக்கு அப்போது இருந்த லௌகீக ஆசைகள் கொஞ்சம் மிச்சம் இருந்திருக்க வேண்டும். அவை ஒன்றுதிரண்டு தான் இந்த ஜன்மாவில் ஒரு குறிப்பிட்ட வயது வரை, அதன் பலனாக அவர்கள் லொகீக ஆசைகளை அனுபவித்துத் தீர்க்கும்படியாக இருந்திருக்கும். அப்புறம் கெட்ட வாசனை தீர்ந்தவுடன், மேகம் விலகிச் சூரியன் பிரகாசிப்பதைப் போல, சட்டென்று ஞானப் பிரகாசம் ஏற்பட்டிருக்கும்.


திருமாலுக்கு மூன்று புதல்வர்கள் உண்டு. நாபிக்கமலத்திலிருந்து தோன்றியவர் பிரம்மா, அவருக்குக் கமலஜர் என்றும் பெயருண்டு. மனத்திலிருந்து தோன்றியவன் மன்மதன், அதனால் மானஸீஜர் என்றும் அவனுக்குப் பெயர் இருக்கிறது. திருமால் மோகினி அவதாரம் எடுத்தபோது, சிவபெருமானுக்கும் அவருக்கும் பிறந்தவர் சாஸ்தா. அவருக்கு இன்று நாடெங்கும் வழிபாடு நடக்கிறது. ஆனால் பிரம்மாவுக்கோ, மன்மதனுக்கோ வழிபாடு ஏதும் இல்லை, கோயிலும் கிடையாது.


மன்மதன் ஒரு சிசு உற்பத்தியாவதற்குத் தேவையான காமத்தைத் தூண்டுபவன், பிரம்மாவோ ஜீவன் எந்தப் பிண்டத்தில் பிறக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்து பிறவியை அளிப்பவர். மாயப் பிறப்புக்கும் தெய்வம் என்று இறைவனை வழிபடுவதே நம்முடைய சம்பிரதாயம். பிறப்புக்குக் காரணமான இந்த இருவருக்கும் அதனால் கோயில் இல்லை


சரசுவதி அறிவை அருளுபவள் அல்லவா? அவளை வழிபடத்தானே வேண்டும்? அது நியாயம்தான். அதனால் சரஸ்வதி பூஜை என்றே ஒரு நாளைக்கொண்டாடுகிறோம். சிறு குழந்தையிலிருந்து பெரியோர்வரை சரசுவதி தேவியைத் துதிபாடுகிறார்கள். ஆனால் ஏன் கோயில் இல்லை? பதிவிரதையாக இருப்பது தான் பெண்களுக்குச் சிறப்பு. மானுடர்களாகிய நமக்கே முக்கியம் என்று கருதப்படும் இந்தப் பண்பை நாம் தேவியிடம் எதிர்பார்க்க வேண்டாமா? பிரம்மனின் நாவில் உறையும் நாமகள் அவள், பிரம்மனுக்குக் கோயில் இல்லை என்றதும், கணவனுக்கு இல்லை யென்றால் எனக்கும் வேண்டாம்! அவருடைய நாவிலேயே நான் குடியிருக்கிறேனே, அது போதும்!என்று ஒதுங்கி விட்டாள். அதனால் தான் சரசுவதி தேவிக்குத் தனிக்கோயில் இல்லை.


மாந்திரிகத்தில், கேட்டலே பயப்படுகிற மாதிரி விளைவுகளை உண்டாக்குகிறார்கள், கெட்டதைச் செய்ய ஒரு சில சப்தக் கூடங்களுக்கு சக்தி இருக்குமானால், நல்லதைச் செய்யவும் ஏன் ஒரு சில சப்தக் கூட்டங்களுக்கு உண்டான மந்திரங்கள் இருக்கக் கூடாது. வருணஜபம் செய்தால் மழை வரும் என்ற தத்துவத்தின் அடிப்படை இதுதான்.


நம் ஊரில் வருணஜபம் செய்து, மழை வருவதைப் பார்த்திருக்கிறோம். இன்னோர் இடத்தில் அப்படிச் செய்தும் மழைவராமல் போயிருக்கிலாம். அதனால் மந்திரத்தையே சக்தி இல்லாதது என்று தள்ளி விடக்கூடாது. மருந்துகளைச் சாப்பிட்டு உடல்நலம் பெறுகிறவர்களும் இருக்கிறார்கள்!குணமடையாதவர்களும் இருக்கிறார்கள். அதனால் மருந்தே தப்பு என்று சொல்லலாமா?

மருந்து பலிக்காவிட்டால் வியாதி ரொம்ப முற்றி இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். அதைப்போல கர்மா ரொம்ப பலமாக இருந்தால், எந்த மந்திரமும் பலன் தராமல் போகலாம். இன்னொரு காரணமும் உண்டு. பத்தியம் தப்பினால் மருந்து பலன் தராது. அதைப்போல, மந்திரசக்தி சித்திப்பதற்குச் சில நியமங்களைப் பத்தியம் போல வைத்திருக்கிறார்கள். இந்த நியமங்களில் தப்பு வந்தால், மந்திரங்களிலிருந்து உத்தேச பலன் கிடைக்காது.


யோக சாஸ்திரம் ஒரு சயன்ஸ். சயன்ஸ் பரிசோதனை விதிகளைச் சோதனைச் சாலையில் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அதை மீறினால் கோளாறுகள் வரும். மின்சாரத்தில் வேலை செய்யும்போது, ரப்பரில் கையுறையைப் போட்டுக் கொள்ள மாட்டேன், மரத்தில் நிற்கமாட்டேன், என்றெல்லாம் சொன்னால், என்ன ஆவது. அதைப் போல யோகசாஸ்திரத்தைப் பயன்படுத்தினால், அதன் விதிகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.


பரமாத்மா பலவாகத் தோன்றி இருக்கிறார் தோன்றிய பின்னும் சமுத்திரம் மாதிரி கூடாமல், குறையாமல் இருக்கிறார். நமக்குக் கூடுதல், குறைவு எல்லாம் உண்டாவதாகத் தோன்றுகிறது. ஆனால் உள்ளது ஒன்றேதான் என்ற ஞானம் வந்தால் எங்குமே கூடுதல் இல்லை குறைவு இல்லை

நாம் செய்கிறோம், என்கிற எண்ணம் போய்விட்டால், அதுவே சதாகால நமஸ்காரம். அந்த அனுபவம் நமக்குச் சித்திக்காத போதிலும் ஈசுவர சந்நிதியிலாவது அப்படிப் பாவித்து வணங்கித் தரையோடு தரையாக, எளிமையாகக் கிடக்க வேண்டும். இங்கே வணங்கி விட்டால் அப்புறம் வெளியே எங்கேயும் வணங்காமல் இருக்கலாம்.

: ( ) : kamakoti.org:
 
ஜகத்குரு ஸ்ரீமகாஸ்வாமிகள் அருளுரை

ஜகத்குரு ஸ்ரீமகாஸ்வாமிகள் அருளுரை




ஜலத்தை திருஷ்டாந்தமாக வைத்துப் பரமாத்ம, ஜீவாத்ம சம்பந்தத்தைச் சொல்லும் போது, நதிகளைப் பற்றி விசேஷமாகச் சொல்ல வேண்டும். சமுத்திர ஜலம் மழையாகி அதிலிருந்து ஏரியும், குளமும், குட்டையும் கிணறும் உண்டாகின்றன. இவை மறுபடியும் சமுத்திரத்தில் கலப்பதில்லை, ஆனால் எல்லா நதிகளும் மீண்டும் சமுத்திரத்தையே தேடி வந்து கலந்து விடுகின்றன.


வடக்கே ஸோன், என்று ஒரு நதிக்குப் பெயர். சோணம் என்றால் சிவப்பு என்று அர்த்தம். இந்த நதி சிவப்பு மண் வழியே ஒடி வருகிறது. கங்கை என்றால் வெளுப்பு. இதுவும் அது ஓடி வருகின்ற பிரதேசத்தைப் பொறுத்து ஏற்பட்ட பெயர்தான். யமுனை கறுப்பு. இவை மூன்றும் ஒரே சமுத்திரத்தில்தான் கலக்கின்றன. சிவப்பு ரஜோகுணம், கறுப்பு தமோகுணம், வெளுப்பு சத்வகுணம், மனசானது முக்குணங்களில் எதில் பாய்கிறதோ, அதை ஒட்டி ஜீவாத்மாவின் சுபாவம் அமைகிறது. எப்படியானாலும் கடைசியில் பரமாத்மா என்கிற சமுத்திரத்தைத்தான் அடைந்தாக வேண்டும்.


தொடர்புடைய நீர்போக்கு, ஒரே மட்டத்தில்தான் இருக்க முடியும் என்பார்கள். மலையுச்சியில் மழை பொழிந்து நதி உண்டாகிறது. அங்கிருந்து கீழே கனவேகமாக, ஒரே இரைச்சலுடன் விழுந்து ஒடுகிறது. பூமியில் ஒடும்போது அத்தனை சத்தம் இல்லை. முடிவில் சமுத்திரத்தில் கலந்தபின் சத்தமே இல்லை. அப்போது தான் நதி தன் லெவலுக்கு வந்த பிறகு பரம சாந்தமாகிறது. எதிலுமே சரி லெவல்- அதாவது, அளவு அறிந்து அந்த மட்டத்தோடு நிற்கிற மனோபாவம் வந்தால் தான் சாந்தம் உண்டாகும். இதுவே சத்துவகுணம். கடைசியில் இதைத்தான் பெற வேண்டும்.


ஜாதியினால் சண்டை வருவதற்குக் காரணம் அவற்றுக்கிடையே உசத்தி, தாழ்த்தி என்ற பேதம் இருப்பதாக நினைப்பதுதான். வாஸ்தவத்தில் இப்படி ஒரு வேறுபாடு இல்லவே இல்லை. அவரவருடைய பண்பு, பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை இவற்றை ஒட்டித்தான் ஜாதிகள் ஏற்பட்டிருக்கின்றன. பழைய தர்மமான இந்த முறைக்கு ஒரு தலைவலி மாதிரி சண்டை வருகிறது என்பதனால் தலைவலியை நீக்கத் தலையையே வெட்டி விடுவதைப் போல, மூலதர்மத்தையே எடுத்துவிடலாம் என்று சொல்வது அசம்பாவிதம்.


ஒரே ஜாதி உள்ளமேல் நாடுகளில் சண்டையோ சச்சரவோ ஏற்படவில்லையா?
ஒரே ஜாதிமக்கள் உள்ள பகுதிகளில் இன்று மொழி காரணமாகச் சண்டைகள் வரலில்லையா? பாஷையினால் வரும் கண்டைகளைப் பார்த்தால் ஜாதிச் சண்டை அதற்கு உறைபோடக் காணாது. தமிழுக்கும், தெலுங்குக்கும், பெங்காலிக்கும், பிஹாரிக்கும், ஆங்கிலத்துக்கும் இந்திக்கும் எத்தனை சண்டைகள்? பல பாஷைகள் இருப்பதனால் தான் இத்தனை சண்டைகள் வருகின்றன. பாஷைகளையே அழித்துவிட்டு, ஊமையாக இருக்கலாம் என்று கூறிவிட முடியுமா?


வாஸ்தவத்தில் தனக்கென ஒரு சமூகப் பொறுப்பும் இல்லாமல், பெயரளவில் வைத்துக் கொண்டிருக்கிற ஜாதிகளை வெறும் சுயாபிமானத்துக்காக வளர்ப்பதில் நியாயம் இல்லை. ஆனால் சமூக நன்மைக்காக, ஒவ்வொரு கூட்டத்தாரிடமும் பாரம்பரியமாக ஒரு காரியத்தைக் கொடுத்து, அவர்களை அந்தப் பொறுப்பைக் கடமையாகச் செய்யும்படி வைப்பதற்குத்தான் ஜாதிகளை ஏற்ப்படுத்தினார்கள். இந்தக் கண்ணோட்டத்துடன் ஏற்றுக் கொண்டால் ஜாதிகள் நமக்குள் சண்டையை ஏற்படுத்தாது.


உலக வாழ்க்கையில் பணம் இல்லாதவர்கள் கஷ்டப்படுகிறார்கள். பதவிக்காக ஆசப்படுகிறவர்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் இவர்களுடைய கஷ்டம் மிக அளவானது. அவை இல்லாவிட்டால் படுகிற சிரமும் மிகக் குறைவானது. ஆனால் பணக்காரனை, பதவியில் உள்ளவனைக் கேட்டால்தான் அவன் எவ்வளவு கஷ்டப்படுகிறான் என்று தெரியும். ஏனென்றால், அவனால் அந்தப் பணமோ - பதவியோ போய்விட்டால் அப்புறம் வாழவே முடியாது. நாம் திண்ணையில் உட்கார்திருக்கிறோம். அதனால் விழுந்தால் சிராய்ப்புடனோ,, சுளுக்குடனோ போய்விடும். பணக்காரனும் பதவிக்காரனும் மாடிமேல் இருக்கிறான். எனவே அவன் விழுந்தால் எலும்பெல்லாம் முறிந்து போகும். பிராணாபத்து உண்டாகும். ஆகவே, பணமும் பதவியும் உள்ளபோது சிறிது சுகமோ - திருப்தியோ கிடைக்கலாம். ஆனால் அவை வந்து விட்டாலோ, போய்விடக் கூடாதே என்ற கவலை தான் சுகத்தைவிட அதிகமாக இருக்கிறது. அவற்றை இழந்து விட்டாலோ தாங்க முடியாத துக்கம் உண்டாகி விடுகிறது. இப்படி, இருந்தாலும் கவலை போனாலும் துக்கம் என்கிற பணமும் பதவியும் இருப்பதைவிட, அவற்றைத் துறப்பதால், அவற்றுக்கு ஆசைப்படாமல் இருப்பதால் பெறுகிற அமைதியே மேலானது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.


யாகங்கள் பிரசித்தி பெற்ற தமிழ் மன்னர்களால் பெரும் அளவில் செய்யப்பட்டன. அவர்கள் வைதிகமதத்தை மனமார வளர்த்தார்கள். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்றே ஒரு சங்ககால அரசனுக்குப் பெயர் இருக்கிறது. பிற்காலத்திலும் கல்வெட்டுக்களில் எங்குப் பார்த்தாலும் தமிழரசர்கள் வேதவித்துக்களுக்கு வரி இல்லாத இறையிலியாக நிலத்தைச் சாசனம் செய்திருக்கிறார்கள். நான் மறைகளின் வளர்ச்சிக்காகவே தானமாக வழங்கப்பட்ட கிராமங்கள் சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில் உள்ளன.


வெளிநாட்டு விஷயம் ஒன்று நம் நாட்டுக்கு வந்தால் அதற்கு உள்ளுர் பாஷையில் வார்த்தை இருப்பதில்லை, வெளிநாட்டடிலிருந்து நம்முடைய தேசத்துக்கு வந்த ரேடியோ, டெலிபோன், பஸ் முதலியவற்றுக்கெல்லாம் நம்முடைய பாஷையில் வார்த்தை இல்லை. தமிழில் நாம் புதிதாகப் பெயர்களை உண்டாக்கி இருந்தாலும். பழக்கத்தில் ஆங்கிலப் பெயர்களையே சரளமாக உபயோகிக்கிறோம்.
வேதம், யாகம் முதலியன சிலர் சொல்லுவதைப் போல, தமிழ்நாட்டின் ஆதிசைவத்துக்குப் புறம்பானவை பிற்பாடு வந்தவை என்றால், யாகம்- வேதம் முதலிய பதங்களுக்குச் சரியான தமிழ் வார்த்தை இருக்க முடியாது. ஆனால் மிகப் பழைய தமிழ் இலக்கியங்களிலேயே, வேதம் என்பது மறை என்றும் யாகம் என்பது வேள்வி என்றும் புகழ்ந்து பேசப்படுகின்றன. இவை மிகவும் அர்த்தபுஷ்டியுள்ள பதங்கள் என்பதைச் சமஸ்கிருத பண்டிதர்கள், தமிழ்ப் புலவர்கள் இருவருமே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். வேட்டலிலிருந்து வேள்வி வந்திருக்கிறது. எல்லா தர்மத்துக்கும் வேரான வேதம் வேரைப் போலவே வெளியே தெரியாமல், அதாவது எல்லோரிடமும் புழக்கத்துக்கு வராமல், அதை ரட்சிப்பதற்கான கடும் நியதிகளைப் பின்பற்றும் சிலரிடமே மறைந்திருக்க வேண்டும் என்ற உயர்ந்த கருத்தைச் சொல்லும் வார்த்தையாக மறை எனப்படுகிறது. வைதிகப் பண்பாடும், யக்ஞ அனுஷ்டானமும் தமிழ்நாட்டில் ஊறிப்போயிருந்தா லொழிய அந்த நாகரிகத்தைக் காட்ட இத்தனை அழகான சொந்த மொழி வார்த்தைகள் உண்டாகி இருக்க முடியாது. வேதத்தை எழுதி வைத்துப் படிக்காமல், தலைமுறை, தத்துவமாக, வாயால் சொல்லிக் காதால் கேட்டே, கற்க வேண்டும் என்பதால், தமிழில் எழுதாக் கிளவி என்ற பெயரும் வேதத்துக்கு உள்ளது. கேள்வியாலேயே பாடம் பண்ணுவதால்தான், வேதத்துக்குச் சமஸ்கிருதத்திலும் ஸ்மிருதி என்று பெயர். மறை என்பதைப் போல வேத லக்ஷணத்தைப் பளிச்சென்று சொல்கின்ற வார்த்தை சமஸ்கிருதத்திலேயே இல்லை.


சரித்திரங்கள் நடந்த வரலாற்றைக் கூறுகின்றன. சரித்திரம் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி நடக்கின்றன என்று சொல்லுகிறார்கள். அதனால் நடந்த சரித்திரத்தைத்
தெரிந்து கொண்டால், அதிலிருந்து எதிர்காலத்தில் நடக்கப் போவதற்கு ஒரு படிப்பினையைப் பெறலாம். இப்படி இப்படி சூஞ்நிலை உருவானால் யுத்தம் ஏற்பட்டு மக்கள் வாழ்வு கெட்டுப் போகும், ஒரு பெரிய நாகரிகம் விழுந்து விடும் என்பது சரித்திரத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. இதனால் அதே மாதிரியான சூழ்நிலைகள் உருவானால், அவற்றை முதலிலேயே உஷாராக இருந்து தடுத்துவிட வசதியாக இருக்கும். இது சரித்திரத்தின் ஒரு பிரயோஜனம் என்கிறார்கள்.


கல்பத்துக்குக் கல்பம் ஒரே மாதிரியாக சம்பவங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு கல்பத்திலும் ராமாயணம், பாகவதம், தசாவதாரம் மற்றும் எல்லாப் புராணங்களும் நடக்கின்றன என்று நம் சாஸ்திரங்கள் சொல்லி இருப்பதைத்தான், சரித்திரம் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி நடக்கிறது என்று சற்று மாறுதலான அபிப்பிராயத்தோடு சொல்லுகிறார்கள்.


ஆனால் நடைமுறையில் ஒத்துக் கொள்ளப்பட்டிருக்கிற சரித்திரத்தில் இப்படிப் பலன் கிடைக்கிறதா என்று பார்க்கப் போனால், அதுதான் இல்லை!செங்கிஸ்கான், தைமூர், கஜினி, மாலிக்காபூர் போலப் பல பேர் அவ்வப்போது தோன்றி நாட்டைச் சூறையாடி ஹதாஹதம் செய்திருக்கிறார்கள் என்று சரித்திரத்தினால் தெரிகிறது. தெரிந்து கொண்டதால் மட்டும் இப்படிப்பட்ட வெறிப் போக்குக்களைத் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறதா என்ன? உலக யுத்தம் நடக்கவில்லையா, ஓர் அரசு தவறான வழிகளில் அரசாண்டு தேர்தலில் தோற்றுப் போகிறது. புதிதாக வரும் அரசு அந்தப் படிப்பினையை ஏற்றுக் கொள்கிறதா என்ன? அதே தவறுகளை இவர்களும் அதே தவறுகளை இவர்களும் செய்ததாக ஏற்பட்டு, அடுத்த தேர்தலில் இவர்களுக்கும் அதே கதி ஏற்படுகிறது. ஆக இப்படி என்று தெரிந்து கொண்டு, ஒரு பலனும் கிடைப்பதில்லை. தர்மத்தை நாம் ஏற்கும்படியாகச் சரித்திரத்துடன் குழைத்துக் கொடுத்தால் தான், அது நம்மை நல்வழிப்படுத்தப் பயன்படும்.


ஆத்ம ஞானத்தை அளிக்கும் கல்வியைப் பரவித்யை எனவும் மற்றவற்றை அபர வித்யை எனவும் கூறினர். பரவித்யை எனும் பிரும்ம ஞானம் நேரான பலனை அளிக்கிறது. அஞ்ஞான இருளைப் போக்குகின்றது.


பாரத நாட்டில் தற்காலம் நமது மக்கள் பெரும்பாலும் சிறு பிராயம் முதலே ஒழுக்கம், இறை வணக்கம் இவ்விதமான பழக்கமே இல்லாமலும், கலாசாரம், விஞ்ஞானம் இவைகளைப் பயில்வதில் வெளிநாட்டாரது பழக்கங்களையே பின்பற்றியும் வருகின்றனர். இதனால் மக்களுக்கு இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் பேரின்ப வழியை அடையத் தடை ஏற்படுகிறதென்பது தெளிவு. அதனால் ஆஸ்திகப் பரம்பரையில் தோன்றிய நமது குழந்தைகளுக்குச் சிறு வயது முதலே நமது பண்புக்குரிய தருமம், ஒழுக்கம், உண்மை முதலியவைகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதற்கு அனுகூலமான கல்வியைப் போதிக்க வேண்டும்.


ஒருவர் தனது பையனைப் பட்டணத்தில் படிக்கவைத்திருந்தார். அவன் பரீட்சைக்குப் பணம் கட்ட வேண்டி இருந்தது. உடனே அப்பாவுக்கு, தந்தி மணியார்டரில் பணம் அனுப்பும்படி எழுதி இருந்தான். அப்பா தபாலாபீசுக்குப் போனார். ரூபாயைக் கொடுத்து விட்டுத் தந்தி மணியார்டர் பண்ண வேண்டும் என்றார். தபாலாபீஸ் குமாஸ்தா ரூபாயில் ஓட்டை பண்ணிக் கம்பியில் கட்டி அனுப்பிவிடுவார் என்று எண்ணினார். ஆனால் அந்தக் குமாஸ்தா ரசீது கொடுத்துவிட்டுச் சரி உம்முடைய பணம் போய்ச் சேர்ந்துவிடும். ரசீது கொடுத்தாகி விட்டது என்றார் குமாஸ்தா பணத்தை வாங்கிப் போட்டுக் கொண்டதையும், ரூபாயைக் ஒட்டை பண்ணிக் கம்பியில் கோர்த்துவிடாமல் இருப்பதையும் பார்த்த அப்பா, என்னுடைய பணம் இங்கேதான் இருக்கிறது. அதை நீர் கோத்து அனுப்பவில்லையே என்று கேட்டார். அது போய்ச் சேர்ந்துவிடும் என்று குமாஸ்தா சொன்னார். மறுபடியும் தொடர்ந்து கட்டுக்கடகட என்று தந்தியும் தொடர்ந்தது. ஏதோ லொட்டு லொட்டு தட்டுகிறார். பணம் இங்கேயே இருக்கிறது. இது எப்படிப் போய்ச் சேரும் என அவர் சந்தேகப்பட்டுக் கொண்டே போனார். ஆனாலும் பணம் போய்ச் சேர்ந்துவிட்டது.


தர்ப்பணம் முதலியன பண்ணுவதும் அந்த மாதிரிதான். நாம் எதைக் கொடுத்தாலும் அதற்குரிய சட்டப்படி கொடுத்தால், அது போய்ச் சேர்ந்துவிடும். சாஸ்திரம் என்ற சட்டப்படி நாம் கொடுக்கும்போது பிதுர்தேவதைகள் அது யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்குச் சேர்த்துவிடுவார்கள்.
விறகுக் கட்டையை அக்னியானது பஸ்பமாக்குவதைப் போல, ஞானம் என்ற அக்னி எல்லாக் கருமங்களையும் பஸ்மமாக்குகிறது என்று பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணன் உபதேசம் செய்கிறார். பஸ்பமாகிய விபூதி இவ்வாறு கர்மங்களை எரித்தபின் நிற்கும் ஞானத்துக்கே அடையாளமாகும். விபூதி பூதிரைச்வர்யம் என்று அமரகோசத்தில் உள்ளது. அதாவது, விபூதி என்பதும் ஜஸ்வர்யம் என்பதும் ஒரே பொருளைத் தரும். எந்தப் பொருளையும் தீயில் இட்டால் முதலில் அது கருப்பாக ஆகும். பிறகு இன்னும் அக்கினிப்புடம் போட்டால் நீற்றுப் போகும் அதன் பின் சுத்த வெளுப்பாக ஆகிவிடும். அப்புறம் தீயில் போட்டாலும் அதுமாறாது. அதுவே முடிவான நிலை.


வைஷ்ணவர்கள் திருமண்ணை இட்டுக் கொள்வார்கள் துளசிச் செடியின் அடியில் உள்ள மண்ணை எடுத்து இட்டுக் கொள்வது வழக்கம். மண்ணை இட்டுக் கொள்வதும், திருநீற்றை இட்டுக் கொள்வதும் நமக்கு மிக உயர்ந்து தத்துவத்தை விளக்குகிறது. மன்னனும், மாசற்றோனும் இறுதியில் பிடி சாம்பலாகத்தான் வேண்டும். நாம் கடைசியில் சாம்பலாகத்தான் முடியப் போகிறோம் அதுவே முடிவான நிலை. இதைத்தான் அது ஞாபகப்படுத்துகிறது. மண்ணிலே பிறந்த நாம் மண்ணிலேயே தான் கலக்கப் போகிறோம் என்பதையே திருமண் நினைவுப்படுத்துகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப்போகிற இந்தத் தத்துவத்தை அன்றாடம் நாம் ஞாபகப்படுத்திக் கொண்டால், அடக்கமாக வாழ்வோம், ஸ்ரீரங்கத்தில் மிருத்ஸஸ்ரஹணம் செய்யும்போது வில்வவிருஷ மண்ணை எடுக்கிறார்கள்.


நாம் ஒவ்வொருவரும் குலாசாரத்தை அனுசரித்து திருநீற்றையோ, திருமண்ணையோ இட்டுக் கொள்ள வேண்டும். திருமண் இவற்றைத் தரிப்பது பரமாத்மஸ்வரூபத்தின் உண்மையையும், உலகில் உள்ள பொருட்களின் அனித்தியமான நிலையையும் நமக்குக் காட்டுகிறது.


விவாஹ உத்தேசம் மூன்று. முதலாவது நல்ல பிரஜை உண்டாக வேண்டும். சரீர புஷ்டியோடு லாவண்யமும் புத்தியும் உடையவர்களாக இருக்க வேண்டும். எந்த மாதிரி இருக்க வேண்டுமோ அப்படி இருக்க வேண்டும். இரண்டாவது, ஸ்திரீகளுக்குச் சித்த பரிசுத்தி ஏற்பட்டு ஒன்றைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அதன் மூலமாகக் கடைத்தேற வேண்டும். அதற்காக விவாஹம் பண்ண வேண்டும். மூன்றாவது உத்தேசம்,புருஷனுக்குக் கிருஹஸ்தாசிரமத்திலிருந்து ஸ்வதர்மானுஷ்டானம் பண்ணி சிரேயஸை அடைய ஒரு ஸஹாயம் வேண்டும். இப்படி மூன்று உத்தேசங்கள் இருக்கின்றன. புருஷனுக்கு, பரிபக்குவமடையாத நிலையில் தர்மானுஷ்டானத்திற்காகவும் ஸ்திரிகளுக்கு வேறு வழி கிடையாதாகையால் அவர்கள் கடைத்தேற ஒரு அவலம்பனம் வேண்டியதற்காகவும் லோகத்திற்கு நல்ல பிரஜைகள் உண்டாவதற்காகவும் இப்படி மூன்று உத்தேசங்களுக்காக விவாஹமாக வேண்டும்
மஹாமகக் குளத்தில் ஊற்றுப் போட்டு ஜலம் இறைத்தால் வெள்ளைக்காரன் கூட ஸ்நானம் பண்ணுவான். எவ்வளவு சேறானாலும் அது தீர்த்தம் என்று முழுகினால் அப்பொழுதுதான் உண்மையான பக்தி இருக்கிறதென்று தெரியும்.


மாடியிலிருந்து விழுந்தால் பூமி தாங்கும். மரத்தில் இருந்து விழுந்தால் பூமிதான் தாங்கும் ஈசுவராபசாரத்தைக் குருவினிடம் சொல்லித் தீர்த்துக் கொள்ளலாம். குருவினிடம் அபசாரம் பண்ணினால், எங்கே அபசாரம் பண்ணினோமோ அங்கேயே போக வேண்டும்.


அக்கினியில் பரமேசுவரனை ஆராதிக்க வேண்டும். தீப சிகையில் பரமேசுவரன் இருக்கிறார், அது ஜோதிர்லிங்கம், தேஜோரூபமானது. அந்த
மகாலிங்கம் அந்தகாரத்தை நிவர்த்திக்கிறது. அந்தத் தீப சிகையில் மூன்று வர்ணம் காணப்படும். பச்சை, மஞ்சள், சிவப்பு என்ற மூன்று வர்ணங்களும் தீப சிகையில் இருக்கின்றன. அந்த மூன்றைப் போலத்தான் லிங்காகாரத்தில் பிரம்ம விஷ்ணு ருத்திர மூர்த்திகளாகப் பாகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

காயத்திரியிலும் ஸ¨ர்யனிலும் அக்கினியிலும் சம்பு இரக்கிறார் என்று நம்முடைய ஸ்ரீ ஆசார்யர்கள் சொல்லியிருக்கிறார்கள். திருவண்ணாமலையில் பரமேசுவரனை அக்கினி ஸ்வரூபியாக ஆராதிக்கிறார்கள். கேரளத்தில் விளக்கேற்றி வைத்து அதில் அம்பாளை ஆராதிக்கிறார்கள். பகவதீ ஸேவை என்று அதைச் சொல்லுவார்கள்.


இப்பொழுது எவ்வளவோ பிராம்மணர்கள் வீட்டில் பேய் முதலியவைகளால் கஷ்டப்படுபவர்களை வேப்பிலையால் அடித்து மந்திரிக்கிறார்கள். பிரம்பால் அடிக்கிறார்கள் வைதிக அக்னி வீட்டில் இருந்து வந்தால் இவைகளெல்லாம் வேண்டாம். நாம் அதை வைத்துக் கொண்டிருந்தால் அந்த ர¬க்ஷயே நமக்குப் போதும். ஒரு உபத்திரவமும் வராது.


விவாஹத்திற்காகப் பண்ண வேண்டிய செலவு ஒன்றும் சாஸ்திரத்தில் சொல்லப்படவில்லை. முன் நாளில் பெண் குழந்தைகளுக்கு நிறையப் பணங் கொடுத்தார்கள். இப்பொழுது பிள்ளைக்கு கொடுக்கிறார்கள். அந்தக் காலத்தில் பணம் வாங்குகிறவர்கள் பெண் வீட்டுக்காரர். ஆகையால் கொஞ்சமாகச் செலவு பண்ணிக் கொண்டு பாக்கியை வைத்துக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது பணம்
கொடுக்கிறபோது விவாஹச் செலவும் அதிகமாக இருக்கிறது. சாஸ்திரப் பிரகாரம் அலங்கிருத கன்னிகாதானம் பண்ண வேண்டும். தானத்துக்குத் தக்ஷினை உண்டு. கன்னிகைக்குப் பணம் வாங்குவது சாஸ்திர ஸம்மதமில்லை. சில ஜாதியில் இப்பொழுது கன்னிகைக்குப் பணம் வாங்குகிறார்கள். குருக்கள், வைகாநஸர்கள், தெலுங்கர்களில் சில ஜாதியார் இவர்களில் கன்னிகைகள் குறைவு, அதனால் கன்னிகைக்காகப் பணம் வாங்குகிறார்கள்.


வரசுல்கத்தால் அதிக ஸங்கடங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பிள்ளை வீட்டுக்காரர்கள் வாங்குகிற பணம் இப்பொழுது வீணாகத்தான் செலவழிகிறது. வாங்காவிட்டால் கௌரவம் இல்லை என்று நினைக்கிறார்கள். இந்தக் கஷ்டம் தீர்வதற்கு எவ்வளவோ பிரயத்தனம் பண்ணி வருகிறார்கள். தாரித்திரியம் வந்தால் தீரும்.
எனக்கு ஒரு மருந்து தோன்றியது. சொல்ல நினைத்தேன். இப்பொழுது சமயம் வாய்த்தது. இந்தக் கஷ்டம் தீர அது ஒரு வழி என்று எண்ணியிருக்கிறேன். முன் நாளில் ஏன் பணம் கொடுத்தார்கள். இப்பொழுது ஏன் இப்படி மாறியிருக்கிறது.


கன்னிகை ஒன்று பிறந்தால் அவளை எப்படியாவது ஒருவனிடத்தில் ஒப்புவிக்க வேண்டும். இந்த அவசியம் இருக்கிறவரை வாங்கிக் கொள்கிற வரனைத் தேட வேண்டும். வரன்கள் அதிகமாக இருந்தால் கன்னிகையின் பிதாவிடம் வந்து பிரார்த்தித்துக் கொண்டு கன்னிகையைப் பெற்றுக் கொண்டு போவான் பணம் கேட்க மாட்டான். ஆகவே கன்னிகைகள் குறைவாக இருந்தால் இந்த வரதக்ஷினை கஷ்டம் இல்லாமற் போகும். விவாஹம் வியாபார விஷயமாகி
விட்டது. அதிகமாக இருக்கிற ஸாமானுக்குக் கிராக்கியில்லை. குறைந்திருந்தால் நான்கு ஐந்து பேர் வந்தால் எது ஸெளகரியம் என்று பார்ப்பார்கள். ஸஹஜமாக அர்த்த ஸெளகர்யத்தைத்தான் பார்ப்பார்கள்.
கன்னிகைகள் குறைவாகப் பிறக்க வேண்டும். அதற்கு என்ன பண்ணுவது? சாஸ்திர ரீதியாக என்ன பண்ணுவது? முன் காலத்தில் பிள்ளை வீட்டுக்காரர்களுக்குக் கஷ்டம் இல்லையா என்றால் அப்பொழுது இவ்வளவு அவஸரமில்லை. பெண்களுக்குத்தான் அவஸரமாகக் கல்யாணம் பண்ண வேண்டும். அந்தக் காலத்தில் கல்யாணம் பண்ணாமலும் இருக்கவில்லை. அப்பொழுது வரர்கள் அதிகம் இருந்ததார்கள், எதனால் அதிகம் இருந்தார்கள். அதற்கு அந்தக் காலத்தில் என்ன செய்தார்கள்? அதுமாதிரி இப்பொழுதும் செய்தால் அப்படி ஆகுமல்லவா? புத்திரர்கள் என்ன காரணத்தால் அதிகமானார்கள்? அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். அதைக் கண்டு பிடிக்க வேண்டும். அந்தக் காரணம் தர்ம சாஸ்திரத்திலும் வைத்திய சாஸ்திரத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது.


பிராசீனமான ஆசாரம் உடையவர்களுக்குத் துர்பலம் இல்லை. வியாதி இல்லை. பிராசீன ஆசாரத்தை இப்பொழுது அநுஷ்டித்து இருக்கிறவர்கள் ஸ்திரீகள்தாம். அவர்களிடம் ஸ்வல்பப் பழக்கமாவது இருக்கிறது. அதனால் அவர்களிடம் உண்டாகிறவர்கள் பெண்களாக இருக்கிறார்கள். புருஷர்கள் அதிகமாக பிராசீன ஆசாரத்தை வைத்துக் கொண்டிருந்தால் ஆண் ஸந்ததி அதிகமாக உண்டாகும். ஸ்தல தரிசனம், தீர்த்த ஸ்நானம், ஒளபாஸனம் முதலியவைகளைப் புருஷர்கள் பண்ணி வந்தார்கள். இப்பொழுது அவர்களும் சேர்த்து ஸ்திரீகள் பண்ணுகிறார்கள். புருஷர்கள் ஆசாரத்தை விட்டதனால் புருஷப் பிரஜைகள் குறைவாக ஆகிவிட்டார்கள். அவர்கள் பிராசீன ஆசாரத்தை வைத்துக் கொண்டிருந்தால் புருஷப் பிரஜைகள் பிறப்பார்கள். இப்பொழுது பாட்மிண்டன், டென்னிஸ் முதலியவற்றை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவைகளுக்குப் பதிலாக ஆசார அநுஷ்டானங்களை வைத்துக் கொள்ள வேண்டும். தாரித்திரிய நிவர்த்திக்கும் வரசுல்க நிவர்த்திக்கும் ஆசார அநுஷ்டானந்தான் வழி.


கூட்டம் கூடி யோசிக்காமல் கையெழுத்துப் போடுகிறார்கள். அந்த மாதிரி காரியங்களெல்லாம் தற்கால சாந்தியானவையே. நிரந்தரமாக இருப்பதற்கு இதுதான் மருந்து. பிராசீன தர்மத்தோடு இருந்து லௌகிகமான விஷங்களை விட்டுவிட வேண்டும். பிராத ஸ்நானம் பண்ணுகிறவன் அகால மரணம் முதலியவற்றைப் பார்க்கமாட்டான் என்று சொல்லியிருக்கிறார். அதனால் டாக்டர் பில் குறையும். பிராதஸ்நானம், ஸ்வாமிதரிசனம், காயத்திரீ ஜபம், நாமாக நமது வேஷ்டியைத் துவைத்துக் கொள்வது முதலியவைகளை வைத்துக் கொள்ள வேண்டும். இவைகளுக்காக கிளப்பிற்குப் போவது, பீச்சுக்குப் போவது முதலியவைகைளக் குறைத்துக் கொள்ளலாம்.


முன்பு சொன்ன காரியங்கள் நியாயமாகப் பண்ண வேண்டும். நம்முடைய தாரித்திரியத்தைப் போக்கிக் கொள்ள ஒரு ஸங்கள்பம் பண்ணிக் கொள்ள வேண்டும். ஒரு நாள் கல்யாணமும் மூன்று நாள் அக்னி காரியமும் பண்ண வேண்டும். கடைசித்தரமாக உள்ள வஸ்திரத்தைக் கட்டிக் கொள்ள வேண்டும்.
ஆசார அநுஷ்டானங்கள் செய்துவர வேண்டும். ஒளபாஸனம் செய்து வர வேண்டும். அதனால் புத்திரப் பிரதிபந்தம் நீங்கும். பிசாசு முதலியவைகளால் ஏற்படும் தோஷங்கள் இல்லாமற் போகும். புத்திரபிரதிபந்த தோஷம் இல்லையென்றால் வரசுல்க கஷ்டமும் மாறும்.


: ( ) : kamakoti.org:
 
ஆசை படுதலை பற்றி நமது மதம் என்ன சொல்கிறத&#3009


ஆசை படுதலை பற்றி நமது மதம் என்ன சொல்கிறது.



ஆசைதான் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்று சொன்ன அக்காலத்து ஞானிகளுக்கும், அனைத்திற்கும் ஆசைப்படு என்று சொல்லும் இக்காலத்தை சேர்ந்த துறவிகளுக்கும் என்ன? வித்யாசம் என்று என்னை ஒரு நண்பர் இப்பொழுது கேட்டார். இதே கேள்வியை பலர் கேட்டு விட்டனர். நானும் அலுக்காமல் பதில் சொல்லி கொண்டு இருக்கிறேன். உண்மையில் நமது ஹிந்து மதம் நியாயமான விடயங்களுக்கு கூட ஆசைப்படுவது தவறு என்று சொல்கிறதா. ஹிந்து மதத்தில் இரண்டு பெரும் பிரிவுகாளான சைவமும், வைணவமும் ஆசை பற்றி என்ன? சொல்கிறது.



நாவுக்கரசர்

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.
என்று தனது ஆசையை வெளிப்படுத்துகிறார்.



தொண்டரடி பொடி ஆழ்வார்


பச்சை மாமலை போல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ! ஆயர்தம் கொழுந்தே ! என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே !


என்று தனது ஆசையை வெளிப்படுத்துகிறார். ஆசையை துறக்க வேண்டும் என்று நினைப்பதும் ஒருவித ஆசை தான்.

இறைவனின் அருளை நாம் அடைய வேண்டும் என்று நினைப்பதும் ஒருவித ஆசைதான். ஒரு மனிதனுடைய நியாயமானஆசைகள் இஷ்ட்ட, காமியார்தங்கள் நிறைவேற வேத மந்திரங்கள், ஸ்லோகங்கள் இருக்கிறது. ஆசைப்படுவது தவறாக இருந்தால் நமது முன்னோர்கள் அதை நிறைவேற்ற எதற்க்கு? இவற்றையெல்லாம் ஏற்படுத்த வேண்டும். நம்முடைய ஆசை நியாயமான ஆசையாக இருக்க வேண்டும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்னும் முது மொழிக்கு ஏற்ப்ப நான் உலகிலேயே No1 கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்று நினைத்தாலும் தவறு இல்லை. அதற்கான சரியான திட்டமிடலை, நியாயமான வழிமுறைகளை பின்பற்றி செய்ய வேண்டும். கோவில் கட்டுவதாக இருந்தாலும்,காந்திக்கு மண்டபம் கட்டுவதாக இருந்தாலும் பணம் இல்லாமல் முடியாது.

இந்த பணம் பற்றி ராமகிருஷ்ண பரம ஹம்சர் சொல்வது. கப்பலை சுற்றி நாலாபக்கமும் சூழ்ந்துள்ள கடல் நீர் அளவு கூட உன்னிடம் பணம் இருக்கலாம். ஆனால்?உன்னை சுற்றி உள்ள பணம் உன் மனதினுள் புகாமல் நீ பார்த்து கொள்ளவேண்டும்




. உன்னுள் பணம். அதாவது பணத்திமிர் புகுந்தால் ஓட்டை கப்பல் மூழ்குவதை போல் உன் வாழ்க்கை
மூழ்கி விடும். என்ன? அழகான விளக்கம் பாருங்கள்.

அனைத்து நியாயமான விடயங்களுக்கும் ஆசைபடுங்கள். தவறே இல்லை.

harikesanallur's spiritual Blog
 
சாந்த நிலையை அடையவே கலைகள் உதவ வேண்டும்

சாந்த நிலையை அடையவே கலைகள் உதவ வேண்டும்


காவிய ரஸங்களைச் சொன்னேன். இப்படியே ருசியிலும் ஆறு ரஸங்கள் இருக்கின்றன. ‘அறுசுவை’ என்பார்கள். நாக்குக்கு ருசிக்கிற இந்த ‘ரஸங்’களை வைத்துத்தான் மனசுக்கு ருசியாக இருக்கப்பட்ட கலை அநுபவங்களுக்கும் நவ’ரஸம்’ என்று பெயர் வைத்தார்கள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உறைப்பு, கரிப்பு என்று ஆறு ரஸங்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றுமே ‘ப்பு’ என்றுதான் முடிகின்றன. அதனால் எல்லாவற்றிலுமே ‘உப்பு’ இருப்பதாகச் சொல்லலாம். ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்று இதனால்தான் சொல்கிறோம் போலிருக்கிறது! இதில் எந்த ரஸத்தையும் தனியாகச் சாப்பிட முடியவில்லை. வெறும் உப்பை, வெறும் புளியை, மிளகாயை, கடுக்காயை, பாகற்காயைச் சாப்பிடுவது என்றால் முடியாத காரியம். சர்க்கரை, வெல்லத்தை வேண்டுமானால் ஏதோ கொஞ்சம் சாப்பிடலாம்.

ஆனாலும் அதுகூட, மாவு கீவு சேர்த்துத் தித்திப்புப் பட்சணமாகப் பண்ணினால் சாப்பிடுகிற அளவுக்கு வெல்லத்தையும் சர்க்கரையையும் சாப்பிட முடிவதில்லை. அது திகட்டி விடுகிறது. ஆனால் தனியாகச் சாப்பிட முடியாத இந்த ஷட் ரஸ வர்க்கங்களையும் விதம்விதமாகக் கலந்துவிட்டால், பல தினுசு வியஞ்சனங்கள் செய்து வயிறாரச் சாப்பிட முடிகிறது. ஒன்று சேருவதில், ஸங்கத்தில் விளைகிற பெரிய ருசிக்கு இது ஒரு திருஷ்டாந்தம், வாழ்க்கையிலும் இப்படியே ஏதோ ஓர் உணர்ச்சி மட்டும் இருந்தால் சீக்கிரம் திகட்டிவிடும். அதனால்தான் அழுகை சிரிப்பு, வெற்றி தோல்வி, மான அவமானம் எல்லாம் கலந்து வருகின்றன.

சரி, எல்லாக் கலரும் சேர்ந்த வெள்ளை மாதிரி, எல்லாச் சுவைகளும் சேர்ந்த சுவை ஏதாவது இருக்கிறதா? உணர்ச்சியில் சாந்தம், கலர்களில் சூரிய ஒளி போல் சுவைகளில் ஏதேனும் உண்டா? ஒன்றே ஒன்று இருக்கிறது. அதுதான் வெண்ணெய். இதுவும் பார்த்தால் வெளுப்பாக இருக்கிறது. ரொம்ப நைஸாக இருக்கிறது. அதன் ருசியிலேயே ஒரு ஸாத்விகம், சாந்தம். மற்ற ருசியெல்லாம் ராஜஸம்தான்., உணர்ச்சியைத் தூண்டுபவைதான்.

வெண்ணெய் மட்டும் உணர்ச்சியை உண்டுபண்ணுவதில்லை. வெண்ணெயைக் கொஞ்சம் ஜாஸ்தி சாப்பிட்டு விட்டாலோ உணர்ச்சி செத்து, மந்தமாக, உறக்கமாகவே ஆகிவிடுகிறது. கிருஷ்ண பரமாத்மா அதன் சாந்தம், ஸாத்விகம் இவற்றுக்காகத்தான் நவநீத சோரனாக இருக்கிறார். வெண்ணெயின் ருசியைத் தித்திப்பு என்று சொல்ல முடியாது. அதுவே உண்மையான மதுர ரஸம் என்று சொல்லலாம். இதிலே இன்னொரு விசேஷம் என்ன என்றால் வெண்ணெய் காய்ச்சின நெய்யைவிட்டுத் தீபம் ஏற்றினால் அதுவும் ஸுர்ய வெளிச்சம் போல் வெள்ளை ஒளியாக இருக்கிறது. ஒவ்வொரு தைலத்தில் ஏற்றுகிற தீபத்துக்கு ஒவ்வொரு நிற ஜ்வாலை உண்டாகிறது. நல்லெண்ணெய் விளக்கு செம்மஞ்சளாக எரியும்; கடலெண்ணெய் தீபம் ஒரு தினுசான மஞ்சளாக எரியும். நெய் விளக்கு மட்டும், அதைப் பார்த்தாலே மனசு அடங்குகிற மாதிரி, வெள்ளை ஒளியாகப் பிரகாசிக்கிறது – அதிலே சிவப்பு ஜோதி வீசுவதில்லை. நல்ல சுத்தமான நெய்க்கு இதுதான் லக்ஷணம். அதனால்தான் ஸ்வாமி சந்நிதானத்தில் எல்லோர் மனத்திலும் சாந்தம் உண்டாக வேண்டும் என்று நெய் விளக்கே ஏற்றச் சொல்வது.

சாந்தமுலேக ஸௌக்யமுலேது” என்று தியாகையர்வாள் பாடினது போல், நாம் எத்தனைவிதமான உணர்ச்சிகளில் மொத்துப்பட்டாலும் கடைசியில் சாச்வத சௌக்கியம் வேண்டுமானால் சாந்த நிலையைத்தான் அடைய வேண்டும். அதற்குத்தான் எல்லாக் கலைகளும் உதவ வேண்டும்.

நாடகங்களில் நானாதினுசான உணர்ச்சி மோதல்கள் இருந்தாலும், அது மிக உயர்ந்த நாடகமானால் அதைப் பார்த்து முடித்தபின் மனஸில் இனம் தெரியாத ஒரு விச்ராந்தியும் அமைதியும் ஆனந்தமும்தான் நிலவ வேண்டும்.

: ( ) : kamakoti.org:

 
ஆச்சாரிய புருஷர்களும் மகான்களும் கூட கர்ம வினையை (உடல் வலி ஜுரம் மற்றும் பலவித துன்பங்களையம்) அனுபவிக்கவேண்டுமா ? அவர்கள் தங்களின் தபோ வலிமையால் நீக்கிக்கொள்ள முடியாதா ?

ஜகத்குரு ஆதி சங்கரர் இந்து மதத்துக்கே புத்துயிர் கொடுத்தவர். அவர் சிருங்கேரியில் இருந்தபோது விஜய நகர மன்னன் அவரை தரிசிக்க வந்தான். அப்போது ஆச்சாரிய சுவாமிகளுக்கு கடுமையான ஜுரம் வந்து படுத்துக் கொண்டிருந்தார். ஆசிரமத்தை சேர்ந்தவர்கள் மன்னனிடம், "நீங்கள் அவரை தரிசிக்க முடியாது. அவருக்கு கடுமையான குளிர் ஜுரம் வந்திருக்கிறது!"என்று சொன்னார்கள்.


அது உள்ளே படுத்திருந்த சுவாமிகளின் காதில் விழுந்து விட்டது. தனது சீடர்களில் ஒருவரை அனுப்பி மன்னனை அழைத்துவரச் சொன்னார். அஷிரமத்தில் உட்காருவதற்கு ஆசனம் ஏதும் கிடையாது. வெறும் மரப் பலகையை மன்னனுக்கு போட்டு உட்கரா சொன்னார்கள். எதிரே சுவாமிகள் வெறும் தரையில் உட்கார்ந்துகொண்டார். ஸ்வாமிகளுக்காக போடப்பட்ட மணப் பலகையை எடுத்து பக்கத்தில் போட்டுவிட்டார். அந்த பலகை சிறுது நேரத்தில் நடுக்கம் கொண்டு ஆடத்தொடங்கியது . இதனிடையே சுவாமிகளும் மன்னனும் உரையாடிக் கொண்டிருந்தனர். மன்னன் அவ்வோப்போது உரையடாளுக்கிடையில் நடுங்கி கொண்டிருந்த வெற்று பலகையை வியந்தவாறு பார்த்துக் கொண்டிருந்தான். சுவாமிகள் மன்னருடன் உரையாடி முடித்த பிறகு, கடைசியாக மன்னன், "சுவாமி ! ஒரு சிறு சந்தேகம். இவ்வளவு நேரமும் அந்தப் பலகை நடுங்கி ஆடியதன் காரணம் என்ன ?" என்று கேட்டான்.
"எனக்கு வந்திருந்த காய்ச்சலை, உன்னுடன் உரையாடவேண்டும் என்று கொஞ்ச நேரம் அந்தப் பலகைக்கு மாற்றி வைத்திருந்தேன். அதானாலேயே என் உடலில் நடுக்கம் இல்லை. அந்த பலகை நடுங்கி கொண்டிருந்தது!" என்றார் சுவாமிகள். மன்னனுக்கு மிகுந்த ஆச்சரியம் உண்டாயிற்று. "சுவாமி! உங்கள் உபாதையை எனக்காக இவ்வளவு நேரம் அந்தப் பலகைக்கு மாற்றி வைத்திருந்த தாங்கள் உங்களுக்காக அந்த உபாதையை விலக்கி வைத்து கொள்ள முடியாதா?" என்று கேட்டான்.

சுவாமிகள் சொன்னார் " துறவியான பிறகு என்னை திருடனாக சொல்லுகிறாயா மன்னா? சில கர்மவினைகளை நான் ஏற்கனவே உருவாக்கி இருக்கிறேன். அதை நான் அனுபவித்தே தீர்க்க வேண்டும். நான் என்னுடைய கர்மாவை கழிக்க நினைத்தால், இயற்கையின் விதியை மீறிய திருடன் ஆவேன். நல்லவையோ தீயவையோ, அதன் பலனை அனுபவித்தே ஆகவேண்டும். அதிலிருந்து நான் மாற விரும்பவில்லை!" என்றார் ஜகத்குரு ஆதிசங்கரர்.

சுவாமி முக்தானந்தாவின் ‘In the Company of Siddha’ என்ற நூலிருந்து
******************************






Source: Sage of Kanchi

Ramani Ramaswamy
 
Prayer

PRAYER


hh20chandrasekharendra20saraswathi20swamiji.jpg



The purpose of prayer is not to petition for benefits. Such petitioning implies either that God does not know what we want, which will militate against His omniscience, or that He waits to be asked and delights in praise, which will degrade Him to the level of ordinary man. Why then do we pray? Though Omniscient God is immanent in every creature and knows what is in the heart of every person, yet, if what we wish to say in prayer remains unsaid, it afflicts our heart and so prayer heals that affliction. By prayer we do not seek to change what God ordains; in fact, we cannot do so. We go to Him to remove our impurities. As Tiruvalluvar said, we attach ourselves to Him, who has no attachments, to rid ourselves of our attachments. A devout consciousness that God exists will itself do the miracle of alchemising us into purity of nature. We obtain a spiritual charge into our frame by being in His presence.


Agajaana padmaarkam gajaananam ahamisam Anekadam-tam bhaktaanaam ekdantam upaasmahe.

This is a familiar prayer verse addressed to Vinayaka. Agaja is the Divine Mother, Parvathi. As we know, Sri Parvathi is regarded as the daughter of the mountain, Himavan. While even trees, plants and creepers are considered to have motion, because they grow upwards, mountain is static or again,motionless. Being born mountain , Parvathi is Agaja. At the sight of Her beloved child, Vinayaka, Sri Parvathi’s face (aananam)beams With joy, even as the lotus face (padma aanana) of Sri Parvathi, Vinayaka is the sun (arka). For His devotees, Vinayaka showers. Benefits generously -bhaktaanaam anekadam. He has only one tusk – eka-dantam. The devotee says that he is worshipping that elephant-faced Vinayaka – Tam- gajaananam upaasmahe – who is the beloved son of Agaja, etc.

GOD IS ONE

All troubles in this world start only when attempts are made to wean away people from their native religion and to convert them to a new faith, by holding out the temptation that people can attain salvation only if they embraced that new faith. This is more than what any sensible person can swallow. Since every religion speaks of God, to ask a person to give up the religion in which he is born is tantamount to asking him to give up God and is a sin against God. It is the duty of every person to follow the religion of his ancestors.

INNER IMPURITIES

All of us take care to keep our bodies and our clothes clean. But do we bestow any attention on our inner or mental cleanliness? Inner impurity is the result of desire, anger, and fear. It is common knowledge that when one is in the presence of one’s mother one keeps all evil thoughts under control. Similarly in the presence of the Divine mother we can control our evil thoughts. We can cleanse our hearts only by the Dhyana-thirtha (holy water of meditation) of the Divine Mother. When the heart is so cleansed, It will learn to distinguish the real from the unreal, which will result in the end of births. A day spent without a conscious attempt to clean one’s heart, is a day wasted. Impurity of cloth or body will lead to disease which will last only for one life-time. But impurity of heart will lead to diseases which will afflict the soul for several births.


ISHTADEVATA


Some Western scholars in their ignorance have dubbed Hindu religion as polytheistic. The uniqueness of our religion lies in the fact that under whichever name a devotee worships his Ishtadevata – that manifestation of God which appeals to him most – he considers Him as the all-pervading Paramatma. In fact, the culmination of all conception of the Supreme Being is in Monism. That is Advaita Vedanta, Isvara, Narayana and Parasakti are all different aspects of the one Supreme Being. This is visibly illustrated in the Divine forms of Ardhanaareeswara and Sankara-Narayana. Such manifestations of the Divine are installed in many South Indian temples.


TRUE EDUCATION


Right education should make us know that God is the Truth. Knowledge must fill one with good qualities, through which alone one can realise the Truth, that is God. Therefore, the goal of knowledge is the understanding of the Ultimate Truth. The first fruit of education must be humility and self- control. Education that does not produce these qualities is useless.


May | 2014 | One Page Hinduism
 
"shrArde sapta pavitra"

"shrArde sapta pavitra"


Periyavaa asked: Which (things) are pointed out as "shrArde sapta pavitra"?

One Vaidika said: " ucchishtam (cow's milk), Shiva nirmAlyam (the Ganga), vamanam (honey), savaparpaTam (white silk), dauhityam (daughter's son), kutapa (time), tila (sesame)."

And then Periyavaa explained:


" savapaTam should not be taken to mean 'the silk cloth made of silk fibres obtained by killing a silkworm'. ' savam ' means a silkworm that was dead on its own, (so) the pattu veshti prepared from the silk obtained from such worms. Which is why even today there is a custom in Kerala to gift white silk to the tithi nimantraNa vaidika s (priests invited to perform the Tithi ceremony), a custom that continues.

"Next, dauhityam . Thinking that this word is dauhitraH , the custom has arisen that the daughter's son sits to partake the meal of a shrArdam .

" dauhityam means the vessel (ladle) made of the horn of a gANDAmRugam (rhinoceros). All mRuga s (forest animals) will have two horns. Only the gANDAmRugam has one horn. Which is why it has also the name eka-shRungi (one-horned). They have given the vyAkhyAnam as " dauhityam ekashRungi pAtra visheSaM ..."

Such subtle explanations would Maha SwamigaL give anAyAsa (effortlessly).
 
துக்கச் சுமை குறைய வழி

துக்கச் சுமை குறைய வழி



நாம் எல்லோரும் பரம்பொருளை பற்றிய உண்மையான ஞானத்தைப் பெற முயல வேண்டும். இந்த ஞானம் என்பது என்ன? பரம்பொருளைத் தவிர, வேறெதுவுமே இல்லை என்பதுதான். அந்த ஒன்று இத்தனை யாகவும் தோன்றுகிறது. இத்தனையான தோற்றங்களிலேயே மனஸைச் செலுத்திக் கொண்டிருந்தால் சஞ்ஜலம், ஏற்றத்தாழ்வு, இவற்றால் உண்டாகும் கஷ்டங்கள் எல்லாம் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும். இத்தனை தோற்றத்திலிருந்தும் மனஸைத் திருப்பி, இவற்றுக்குக் காரணமான ஒன்றையே அறியத் தொடங்கினால் எண்ணமும் பலவாக ஓடி அவதிப் படாமல், சஞ்சலங்கள் ஓயும். ஒரே வஸ்து என்றபின் சஞ்சலிக்கவோ ஏற்றத்தாழ்வுக்கோ இடம் ஏது? அந்த நிலையிலேயே நித்திய சுகத்தைப் பெறலாம். இந்த நிலையைத்தான் ஞானம் என்கிறோம்.



உலக வாழ்வில்கூட சுகம் வருவது போலிருக்கிறது. ஆனால் அது நித்தியமாக நிலைத்து நிற்பதில்லை. வெளியிலிருந்து வருகிற சுகத்தை நாம் எப்படி சாசுவதமாக்கிக் கொள்ள முடியும்? வெளியிலிருந்து வருவது நமக்கு ஸ்வாதீனப்படாமல் நம் கைவிட்டு ஓடியும் விடும். அப்போது அதனால் கிடைக்கிற சுகமும் போகத்தான் செய்யும். இப்படித்தான் இந்த நிமிஷம் சுகமாக இருப்பது அடுத்த நிமிஷமே மறைகிறது. அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகிறபோது இடுக்கு வழியாகக் கொஞ்சம் வெளிச்சம் வந்து பாய்ந்துவிட்டு, அடுத்த நிமிஷமே நிழல் வந்து மூடிக்கொள்வது போலத்தான், உலகத்தின் துன்பத்துக்கு நடுவில் கொஞ்சம் கொஞ்சம் சுகம் தலையை எட்டிப் பார்த்துவிட்டு ஓடிவிடுகிறது. நிரந்தர சுகம் என்பது உலகத்துக்குக் காரணமான ஒன்றை அறிவது தான்.


உலக வாழ்வில் சகல மனிதர்களுக்கும் அளவில்லாத கஷ்டங்கள் உண்டாகத்தான் செய்யும். பணக்காரன், பெரிய பதவியில் இருப்பவன் கஷ்டமில்லாமல் இருப்பதாக மற்றவர்கள் நினைக்கலாம். அப்படி நினைத்துத் தாங்களும் அவர்களைப் போலப் பணமும் பதவியும் பெறப் பாடுபடலாம். ஆனால், பணக்காரனை, பதவியில் உள்ளவனைக் கேட்டால் தெரியும், அவனுக்கு எத்தனை கஷ்டங்களென்று. நாம் திண்ணையில் இருக்கிறோம்; விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடோ, சுளுக்காவதோடோ போய்விடும். பணக்காரனும், பதவிக்காரனும் மாடிமேல் இருக்கிறான். எனவே, அவன் விழுந்தால் எலும்பெல்லாம் முறிந்து விடும். பிராணாபத்து உண்டாகும்.

ஒருவனுக்கு பணமும் பதவியும் உள்ளபோதே அதனால் உண்டாகிற சிறிது சுகத்தோடு, தன் பணம், பதவி போகக்கூடாது என்ற கவலை, சுகத்தைவிட அதிகமாக இருக்கிறது. இதனால்தான் உலகத்தில் எவனுமே, தான் சந்தோஷமாக இருப்பதாகச் சொல்லக் காணோம்! ஒவ்வொருவனும் தானே மகா புத்திசாலி, தானே மிகவும் யோக்கியன், தானே ரொம்பவும் அழகு என்று நினைத்துக் கொண்டிருப்பதுபோல், அதிக துக்கமுள்ளவனும் தானே என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.



துக்கம் நம் உடன் பிறப்பு. நம் பூர்வ கர்மாவின் பயனாக இந்தத் துக்கங்களுக்கு நாம் முன்னமேயே விதை போட்டிருக்கிறோம். இதிலிருந்து தப்ப வழி இல்லை.



ஆனால் கர்மத்தினால் ஏற்படும் கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டு சாந்தமாக இருக்க வழி உண்டு. புதிதாக கர்ம மூட்டையைப் பெருக்கிக் கொண்டு எதிர் காலத்தில் கஷ்டத்தை அதிகமாக்கிக் கொள்ளாமலிருக்க வழி உண்டு. முதலில் சொன்ன ஞானம்தான் அந்த வழி.


சித்தப் பிரமை பிடித்து, ஜடமாகி விட்டால் கஷ்டம் தெரிவதில்லை. பைத்தியத்தின் கஷ்டம் வேரூன்றி நிற்பதில்லை; ஆனால், சித்தப் பிரமையில் நித்திய ஆனந்தமும் இல்லை. தூக்கத்தில் துக்கமில்லை. ஆனால் தூக்கதித்தில் சுகமாக இருக்கிறோம் என்கிற அறிவு இல்லை. ஞானிதான் எப்போதும் விழிப்பிலேயே இருந்து கொண்டும் சாசுவத ஸுகியாக இருக்கிறான். அவனது தேகத்தில் சிரமங்கள் இரா என்பதில்லை. ஆனால் அவனுடைய மனத்தில் கிலேசமே இராது. வெளியிலிருக்கிற சிரமம் அவன் உள்ளே பாதிப்பதே இல்லை.


கிணற்று ஜலத்துக்குள் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால் தண்ணீர் மட்டத்துக்கு மேலே குடம் வந்தவுடன் கனக்க ஆரம்பித்து விடுகிறது. எளிதில் புரட்ட முடியாத பெரிய மரங்களை வெள்ளத்துக்கு அடியாகத்தான் புரட்டி எடுப்பது வழக்கம். அதே மாதிரி நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிற தண்ணீரில் அமுக்கி விடவேண்டும். அப்போதும் துக்க ஹேதுவான விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஜலத்துக்குள் இழுக்கிற குடம் மாதிரி அப்போது துக்கம் பரம லேசாகிவிடும்.


??????? ???? ????? ??? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
தேவதாமூர்த்திகள் அவதார புருஷர்கள்

தேவர்கள்



"ஸ்வாமி ஒருவர்தானே! உங்களுக்கு மட்டும் என்ன முப்பத்து முக்கோடி தேவதைகள்?" என்று மற்ற மதஸ்தர்கள் நம்மைப் பரிஹாஸம் செய்கிறார்கள்.


ஸ்வாமி ஒருவர்தான். அவரைத்தான் நாம் பேச்சு வழக்கில் 'தெய்வம்', 'தெய்வம்' என்கிறோம். தெய்வம் என்றால் 'விதி' என்றே அர்த்தம். விதி என்பது ஸ்வாமி நமக்குத் தருகிற கர்ம பலன்தான். ஆனால் நாம் 'ஸ்வாமி' என்ற அர்த்தத்திலேயே தெய்வம் என்ற பதத்தை உபயோகிக்கிறோம். அதோடு, அந்த தெய்வமும் தேவர்களும் ஒன்று என்று நினைத்துக் கொண்டு, 'முப்பத்து முன்று கோடி தெய்வமானது' என்று நாமும் மற்ற மதஸ்தர்களோடு சேர்ந்துக் கொண்டு கேலியாக எண்ணுகிறோம்.


தெய்வம் (ஸ்வாமி) வேறு. தேவர்கள் வேறு. ஸ்வாமி ஒருவர்தான் என்பதே நமது மதம். அவரே மூன்று ரூபங்களை எடுத்துக்கொண்டு பிரம்மாவாக சிருஷ்டிக்கிறார். விஷ்ணுவாகப் பரிபாலிக்கிறார். ருத்திரனாக சம்ஹாரம் செய்கிறார்.


உண்மையில் இவர்களும் வேறு வேறு இல்லை. கோர்ட்டுக்குப் போகும்போது தாசில்தார் ஸுட் போட்டுக் கொண்டிருக்கிறார். பூஜை செய்யும்போது அவரே பஞ்சகச்சம் கட்டிக் கொள்கிறார்; பத்தினி அகத்தில் இல்லாமல் அவரே சமைக்க நேர்ந்தால் அப்போது துண்டை மட்டும் இடுப்பில் சுற்றிக் கொள்கிறார். நாம் சாமானிய ஜீவர்கள். வேலைக்குத் தக்கபடி உடுப்பை மட்டும் மாற்றிக் கொள்கிறோம். சர்வ சக்தனான ஸ்வாமி வேலைக்கு ஏற்ப ரூபத்தையும் மாற்றிக் கொள்வார். பார்க்கப் போனால் சரீரம் என்பதே ஆத்மாவுக்கு ஒரு உடுப்பு மாதிரிதான். கீதையில் பகவான் இப்படித்தான் சொல்லியிருக்கிறார்.



அல்ப சக்தர்களான நமக்கு வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு வேஷங்கள் ஏற்படுகின்றன. சர்வ சக்தரான ஸ்வாமி ஒரே சமயத்தில் பல காரியங்களில் ஈடுபட்டுப் பல வேஷங்களையும் போடுவார். நாம் ஒரு சமயத்தில் ஒரு வேலைதான் செய்கிறோம்; ஸ்வாமி ஒரே சமயத்தில் சகல வேலையும் செய்வதால் எல்லோ வேஷமும் போட்டுக் கொண்டிருக்கிறார். இவற்றை வெவ்வேறு தெய்வ வடிவங்களாகச் சொல்கிறோம். இந்த தெய்வ ரூபங்களில் மகாவிஷ்ணு, ஈசுவரன், அம்பாள், விக்நேசுவரர், ஸுப்ரம்மண்யர் போன்றவர்கள் ஒரு சமயத்தில் ஏதோ ஒரு மாதிரி காரியம் மட்டும் செய்தாலும்கூட அவர்களுக்கு உள்ளுக்குள் தாங்கள் முழுமுதல் ஸ்வாமிதான் என்று தெரியும். அதனால் அவர்கள் பக்தர்களுக்கு மோக்ஷபரியந்தம் எல்லா ஆநுக்கிரஹங்களும் செய்வார்கள்.


ஆனால், தேவர்கள் யாவரும் இப்படி முழு ஸ்வாமியாகத் தங்களைத் தெரிந்து கொண்டிருக்கிற தெய்வ வரிசையைச் சேர்ந்தவரல்ல.


அவர்கள் யார் என்று சொல்கிறேன்:
ஸ்வாமி சிருஷ்டித்துள்ள எண்ணி முடியாத அண்டங்களில் இருக்கும் பிராணிகளுக்கெல்லாம் இருக்க இடம், உண்ண உணவு முதலியன வேண்டியிருக்கின்றன. ஆகாயம், காற்று, தீ, நீர், மண் இந்த பஞ்ச பூதங்களைப் பலவிதங்களில் கலந்தே அவர் இத்தனை பிராணிகளுக்கும் வாழ்வுக்கான உபகரணங்களைத் தந்திருக்கிறார். ஆறே சுவைக்குள் அடங்கும் சரக்குகளை வைதத்துக்கொண்டு நாம் ஆயிரக்கணக்கான பட்சண தினுசுகளைச் செய்வது மாதிரி, ஐந்தே பூதங்களைப் பலவிதங்களில் கலந்து எல்லா உயிர்களுக்கும் ஜீவனோபாயம் தருகிறார் ஸ்வாமி.


பஞ்சபூதங்களும், அவற்றின் தினுசான கலவை (Mixture)களும் பிராணிகளுக்கு ஹிதமாக அமைந்து அவர்களை ரக்ஷிக்க வேண்டும். இவ்விதம் அவற்றை நமது வாழ்வுக்கு அநுகூலமாக்கித் தரும் பொறுப்பை 'தேவர்கள்' என்ற இனத்துக்கு ஸ்வாமி அளித்திருக்கிறார். இப்போது மநுஷ்ய இனம், பக்ஷி இனம், விலங்கினம், தாவர இனம் என்று சொல்கிறோமல்லவா? அது மாதிரி ஒரு ஜீவராசிதான் தேவர்கள்.

லௌகிகமாகப் பிராணிகளை ரக்ஷிக்கும் ராஜா அல்லது ராஜாங்கம், பல அதிகாரிகளை வைத்துக் கொண்டு ரக்ஷணம் தருவது போல், தேவர்கள் என்ற அதிகாரிகளைக் கொண்டு சர்வ லோகங்களையும் ஆண்டு ரக்ஷணம் செய்கிறார் ஸ்வாமி. ஒரு ராஜா அல்லது ராஜாங்கம் பஞ்ச பூதங்களில் தனக்குரிய பூமி, கடல் பிரதேசம், வானவெளி இவற்றைக் காப்பாற்றத் தரைப்படை, கப்பற்படை, விமானப்படை இவற்றை வைத்திருப்பது போல், ஈசுவரனும் பஞ்ச பூதங்களைக் காப்பாற்ற தேவர்களின் சைன்னியத்தை வைத்திருக்கிறார். நமது ராஜாங்கத்தில் சைன்னியத்தைத் தவிர, நீர்ப்பாசனம், மராமத்து, போக்குவரத்து இவற்றுக்கெல்லாம் அதிகாரிகள் இருப்பதுபோல், ஈசுவர சாம்ராஜ்யத்திலும் ஜனங்களுக்குத் பஞ்ச பூதங்களை அநுகூலமாக்கித் தருவதற்காகப், பலவிதமான தேவர்கள் அதிகாரம் வகிக்கிறார்கள். நம் உலகில் ஜல சப்ளை விஷயத்தைக் கவனித்து, வெள்ளம் வந்தால் வெட்டி விடவும், வறட்சி பாதிக்காமல் அணை கட்டவும் என்ஜினீயர்கள் இருக்கிறார்களல்லவா; ஆனால், ஜலத்தை இவர்களே சிருஷ்டிக்க முடியாது. ஸ்வாமி தான் சிருஷ்டிக்கிற ஜலத்தை லோகங்களில் பங்கீடு செய்ய எஞ்சினீயர்களெக்கெல்லாம் என்ஜினீயராக வருணனை வைத்திருக்கிறார். இதே மாதிரி நெருப்பைக் கவனித்து அதை மக்களுக்கு அநுகூலமாக்குபவன் அக்னி, காற்றைபப் பிராணிகளுக்கு அநுகூலமாக்கித் தருபவன் வாயு. இப்படிப் பல தேவர்கள். அவர்களுக்கெல்லாம் அதிபதி இந்திரன்.



உயிரினங்களில் பல வகைகளை நாம் நேருக்கு நேர் கண்ணால் பார்க்கிறோம். நாம் மனித இனம். இன்னும் விலங்கினம், புள்ளினம், தாவர இனம் என்று பலவற்றைப் பார்க்கிறோம். சிருஷ்டியில் கீழே போகப் போகப் கிரியா சக்தி அதிகம். யானை, சிங்கம் போன்ற பலம் மனிதனுக்கு இல்லை. ஒரு குருவியைப் போலவோ, தேனீயைப் போலவோ கூடுகட்ட இவனுக்குத் தெரியவில்லை. ஆயினும் அவற்றைவிட மனிதனுக்கு ஞான சக்தி அதிகம். கிரியா சக்தி, ஞான சக்தி இரண்டுமே மிக அதிகமாகப் படைத்த உயிரனத்துக்குத் தேவர்கள் என்று பெயர். மனிதர்களுக்குள்ளேயே நீக்ரோ இனம், மங்கோல் இனம் (race) என்றெல்லாம் இருப்பதுபோல் தேவர்களுக்குள்ளும் கின்னரர், கிம்புருஷர், யக்ஷர், ஸித்தர், சாரணர், ஸாத்யர், கந்தர்வர் என்று பலவகைகள் உண்டு. தேவர்களை ஊனக் கண்ணால் பார்க்க முடியவில்லை. அதனால், இல்லை என்று சொல்லிவிடக்கூடாது. காற்று கண்ணுக்குத் தெரியாதது போல், அவர்கள் தெரியாமல் இருக்கிறார்கள். ஆனால், விசிறிக்கொண்டால் காற்றை நாம் அநுபவிப்பதுபோல், கர்மாநுஷ்டானங்களைச் செய்தால் தேவர்களின் அநுக்கிரகத்தை அநுபவத்தில் நிச்சயமாகப் பெறலாம்!
நாம் கர்மாநுஷ்டானம் செய்வதற்கும், தேவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேட்பீர்கள். சொல்கிறேன்; ராஜாங்கம் நியமித்துள்ள அதிகாரிகளுக்கு ராஜாங்கம் சம்பளம் தருகிறது. ஆனால், சம்பளம் தருவதற்கு ராஜாங்கம் எங்கிருந்து பணம் பெற்றது. பிரஜைகளிடமிருந்துதான் வரியாகப் பெருகிறது. அப்படியே ஸ்வவாமி நம்முடைய கர்மாநுஷ்டானங்களிலிருந்தே தேவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைப் பிரித்துத் தருகிறார். நமக்கு பஞ்ச பூதங்களை அநுகூலமாக்கித் தரும் தேவர்களுக்குப் பிரதியாக நாம் யாகம், யக்ஞம் செய்து ஆகாரம் தருகிறோம். கர்மாநுஷ்டான வரி செலுத்தினாலே தேவ அதிகாரிகளின் சகாயத்தைப் பேற முடியும். பலவிதமான உயிரினங்களில் புழுவுக்கும் மனிதனுக்கும் இடையில் எத்தனை வித்தியாசம் இருக்கிறது? மனிதனுடைய பழக்கங்களைப் புழு புரிந்து கொள்ள முடியுமா? அப்படியே தேவர்களின் வழிமுறைகளை நாம் புரிந்து கொள்ள முடியாது. தேவ வகையைச் சேர்ந்தவர்களுக்கு நம்மைப்போல் மூப்பு, மரணம் இவை இல்லை. அவர்களுக்கு நம்மைவிட சக்தி மிகவும் அதிகம். இருந்தாலும் அவர்கள் நம்மிடமிருந்தே ஆஹுதி பெறுமாறு பகவான் வைத்திருக்கிறார்.



உயிரனத்தின் உச்சி நிலையில் உள்ள இந்தத் தேவர்களுக்கு மூன்று ரூபங்கள் உண்டு. தேவலோகத்தில் ஒவ்வொரு தேவதையும் திவ்ய சரீரத்துடன் இருப்பதை ஆதி தைவிக ரூபம் என்பார்கள். மனிதர்கள் தபஸினால் பெரிய சக்தி பெற்றுவிட்டால், இந்த தேவ ரூபங்களைப் பார்த்துப் பேச முடியும். தேவர்கள் தேவ லோகத்தில் ரூபத்துடன் இருப்பது மட்டுமல்ல; நம் பூலோகத்திலேயே பஞ்ச பூதங்களில் கரைந்தும் அரூபமாக இருப்பார்கள். இதற்கு ஆதி பௌதிக ரூபம் என்பார்கள். எல்லா ஜலத்திலும் வருணனின் ஆதி பௌதிக ரூபம் கரைந்திருக்கிறது. எனவே எங்கே நாம் ஜலத்தை அசுத்தம் செய்தாலும் அவனுக்குத் தெரிந்துவிடும். நம் ராஜாங்க அதிகாரிகளுக்கும், ஈசுவரனின் அதிகாரிகளான தேவர்களுக்கும் இது பெரிய வித்தியாசம். நாம் பெட்டிஷன் கொடுத்தால்தான் ராஜாங்க அதிகாரிகளுக்குக் குற்றம் தெரியும். ஆனால், எந்த இடத்தில் எந்தப் பாபம் செய்யப்பட்டாலும், அது ஆங்காங்கு கரைந்திருக்கிற குறிப்பிட்ட தேவதைக்கு உடனே தெரிந்துவிடும். நம் உடம்பிலேயே ஒருவர் கிள்ளினால், இன்னொருவன் பெட்டிஷன் கொடுத்தா அது நமக்குத் தெரிய வேண்டும்; அதுபோல!



நிலம் முழுவதற்கும் ஒரு தேவதை. நீர் நிலம் முழுவதற்கும் ஒரு தேவதை; இப்படியே நெருப்பு, காற்று ஒவ்வொன்றுக்கும் ஒன்று. இவற்றில் எதற்கு எங்கே நாம் அபசாரம் இழைத்தாலும் அந்தந்த தேவதைக்கு அது தெரிந்துவிடும் என்று சொன்னால், 'இதெல்லாம் ஜடவஸ்துக்களாகத்தானே தெரிகின்றன? இவற்றுக்கு எங்கே உயிர் இருக்கிறது? சாஸ்திரம் வெறும் புரளிதான் பண்ணுகிறது' என்று தோன்றலாம். கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம். நம் சரீரம் இருக்கிறது. இதற்குள்ளேயே பாக்டீரியாக்கள், நாக்குப் பூச்சி மாதிரி சில கிருமிகள், புழுக்கள் உண்டாகி நம் மாமிஸத்தைத் தின்றே ஜீவிக்கின்றன. இவை எங்கே ஹிம்ஸை செய்தாலும் நமக்குத் தெரிந்துவிடுகிறது. ஆனால் இப்படி நமக்குத் தெரியும் என்பது அந்தப் கிருமிக்குத் தெரியும் என்று எப்படிச் சொல்ல முடியும்? நாம் நிலத்தையும் நீரையும் பற்றி நினைக்கிற மாதிரி, அது அதனளவில், ஒரு உலகம் மாதிரி பெரிசாக இருக்கிற நம் சரீரத்தையும் சமுத்திரம் மாதிரி இருக்கிற நம் ரத்தத்தையும் வெறும் ஜடவஸ்துக்கள் என்றும், இவற்றுக்குள் ஒரு உயிர் இருக்கிறது என்றும் தெரிந்து கொள்ளாமலே இருக்கலாம். இப்படித்தான் நாம் பூதேவி உண்டா? வருணன் என்கிற சமுத்திர ராஜா உண்டா? என்று கேட்பதும். நம் சரீரத்தில் எங்கே ஒரு கிருமி கெடுதல் செய்தாலும் நாம் மருந்து சாப்பிட்டு அதை ஒழித்து விடுகிறோம். நாம் பஞ்ச பூதம், விருக்ஷம், பர்வதம் என்று எதற்குக் கெடுதல் பண்ணினாலும், அதற்குறிய தேவதைகள் நம்மைத் தங்களுடைய சொந்த சக்தியாலேயே தண்டிப்பார்கள். ஸர்வேச்வரன் அவர்களுக்கு அப்படிப்பட்ட சக்தி தந்திருக்கிறான். உடனே ஸ்தூலமாக வந்து தண்டிக்காமல், பிற்பாடு எப்போதோ தண்டிப்பதால் நமக்கு இது தெரியவில்லை.



ஆத்யாத்மிகம் என்றும் தேவர்களுக்கு மூன்றாவதாக ஒரு ரூபம் உண்டு. அதாவது அண்டத்திலுள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது என்றபடி, பிராணிகளின் ஒவ்வொர் அங்கங்களிலும் ஒவ்வொரு தேவதை தங்களுக்கு வாஸஸ்தானம் வைத்திருக்கிறார்கள். சூரியன் நம் கண்ணில் இருக்கிறான். அக்னி நம் வாக்கில் இருக்கிறான். இந்திரன் நம் கையில் இருக்கிறான். இப்படியே எல்லா தேவதைகளுக்கும், நம் சரீரத்திலேயே இருப்பிடம் இருக்கிறது. மனிதன் இழைக்கிற குற்றங்களுக்கு ஆளாகும் பஞ்ச பூதங்களில் இருப்பதோடு, குற்றம் செய்கிற மனிதனின் அங்கங்களுக்குள்ளும் தேவர்கள் இருப்பதால், அவர்களை ஏமாற்றவே முடியாது. தர்மங்களை மீறாமலும், கர்மங்களை அநுஷ்டானம் பண்ணிக் கொண்டும் நாம் இருக்கிறவரையில்தான் அவர்கள் நம்மை ரக்ஷிப்பார்கள். இல்லாவிட்டால் சிக்ஷிக்கவே செய்வார்கள்.



தேவதை என்பவனும் ஓர் உயிர்தான். நமக்கு ஆகாரம் இல்லாவிட்டால் எப்படிக் கஷ்டமோ, அப்படித்தான் தேவர்களுக்கும் நாம் ஆகாரம் தராவிட்டால் கஷ்டம். அதனால்தான் வைதிக கர்மாநுஷ்டானங்கள் குறைந்போதெல்லாம், அவர்கள் ஸ்வாமியிடம் முறையிட்டதாகவும், ஸ்வாமி அவதரித்ததாகவும் புராணங்கள் பார்க்கிறோம்.


தேவர்களைப் பற்றி இன்னுமே சில நூதன விஷயங்கள் சொல்கிறேன். தேவதைகளுக்கு வேத அத்யயனம், யக்ஞம் முதலிய கர்மாநுஷ்டானங்கள் கிடையாது. ஏன் தெரியுமா? நாம் தேவதைகளைக் குறித்து வேத ஸூக்தங்களை ஒதுகின்றோம். யாகங்கள் செய்கிறோம். தேவதைகள் யாரைக் குறித்து இவற்றைச் செய்வார்கள்? நாம் இந்திரனையும், சூரியனையும் உபாஸிப்பதுபோல், இந்திரனும், சூரியனும் தங்களையே உபாஸித்துக் கொள்ள முடியாதல்லவா? அதனால்தான் அவர்களுக்கு வைதிக கர்மாவில் அதிகாரமில்லை.



வேதத்தை நம் போல் அத்யயனம் செய்யாவிட்டாலும், அவர்களுக்கு வேதம் தானாகவே தெரியும். அதனால்தான், நம் வேத மந்திரத்தைச் சொன்னால் அநுக்கிரகம் செய்ய வந்துவிடுகிறார்கள். மீன் குஞ்சுக்குப் பிறவியிலேயே நீந்தும் சக்தி இருப்பதுபோல், தேவர்களுக்குப் பிறவியிலேயே வேத ஞானம் உண்டு. இதனால் அவர்களுக்கு 'ஸ்வயம் பிரதி பாதித வேத' ர்கள் என்று ஒரு பெயர் உண்டு.
தேவர்களும் ஆத்ம விசாரம் செய்து அத்வைத ஞானத்தை அடைந்து பிரம்மத்துடன் ஐக்கியமாகலாம். கர்மமும் உபாஸனையும் இல்லாவிட்டாலும், அவர்களுக்கும் ஞான மார்க்கத்தில் ஈடுபடுவதற்கு அதிகாரம் உண்டு என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.



ஸ்வாமி என்கிற பரமேசுவரன் இல்லாத இடம் இல்லை. நமக்குள் இருக்கும் பரமேசுவரன் தேவர்களுக்குள்ளும் இருக்கிறான். ஆனால், நமக்குள் ஈசுவரன் இருப்பதை நாம் உணராதது போலத்தான் தேவர்களிலும் பெரும்பாலோர் இருக்கிறார்கள். நம்முடைய அதிகாரிகளில் பெரும்பாலோருக்கு ராஜாவை (அல்லது ராஷ்டிரபதியை) நேரில் தெரியாதல்லவா? இப்படியேத்தான் தேவர்களிலும் பலருக்குப் பரமேசுவரனைப் பற்றித் தெரியாது. ஆத்ம விசாரம் செய்தால் நமக்கு ஈசுவரனே நம்மில் நாமாக இருப்பது தெரியும். அதற்குப் பிறகு தேவர்களால் நமக்கு ஆக வேண்டியது எதுவும் இல்லை. எப்போது எல்லாக் காரியமும் நம்மை விட்டுவிடும். ஆனால், அதுவரை தேவர்களை உத்தேசித்த கர்மங்களை நாம் செய்யத்தான் வேண்டும். நம் பூர்வ கர்மா தீர்ந்து, சித்த சுத்தி உண்டாவதற்கே, தேவதைகளை உத்தேசித்த வேத கர்மாக்களை நாம் செய்தாக வேண்டும்.

???????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
Sharada Navaratri Mahotsavam

Sharada Navaratri Mahotsavam
25 September- 4 October 2014

Their Holinesses Pujyashri Jayendra Saraswathi Shankaracharya Swamiji and Pujyashri Shankara Vijayendra Saraswathi Shankaracharya Swamiji will perform Sharada Navaratri Mahotsava for Sri Mahatripurasundari Sametha Sri Chandramouleeswara Swami at Sri Mahaswami Vidya Mandir, No.1, Shankara Nagar, Rajakilpakkam, East Tambaram, Chennai from Thursday - 25 September to Saturday - 4 October 2014.


Special pujas, japas, parayanam, homam etc. will be performed during this period for Lokakshema . Devotees are invited to participate in the pujas and receive the bountiful blessings of Sri Mahatripurasundari Sametha Sri Chandramouleeswara Swami and Pujyasri Acharya Swamijis.

Read more from here:

: kamakoti.org
 
எல்லாம் கடவுள்மயம்

எல்லாம் கடவுள்மயம்



* மதத்தின் பெயரால் நாம் ஒருவரை ஒருவர் வெறுக்கக்கூடாது. அவரவர் மன விருப்பப்படி, எந்த வடித்தில் வணங்கினாலும் நாம் வழிபடுவது ஒரே கடவுளைத் தான்.

* கடவுள் ஒருவரே. அவரையே ரிஷிகள் பல பெயர்களால் அழைக்கின்றனர் என்று ரிக்வேதம் கூறுகிறது.

* "எல்லா உடம்புகளிலும் நானே உயிராக இருக்கிறேன்' என கீதையில் கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். அதனால், எந்த உயிருக்கும் துன்பம் செய்யக்கூடாது.


* "எல்லாம் பிரம்ம மயம்' "சர்வம் விஷ்ணுமயம் ஜகத்' என்னும் வசனங்கள் உலகம் கடவுளின் வடிவம் என்பதை உணர்த்துகிறது.

* எல்லாம் கடவுள் மயம் என உணர்ந்தவன், எதற்கும் பயப்படாமல் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

* உண்மை, நேர்மை, வீரம், பக்தி, உயிர்க்கருணை போன்ற நற்குணங்களை நமக்குப் போதிப்பதற்காக ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் எழுதப்பட்டன. அவற்றைத் தினமும் படியுங்கள்.


- பாரதியார்


http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=5219
 
கர்ம மார்க்கம்

கர்ம மார்க்கம்

கர்ம யோகம்


யுத்தம் செய்து பந்துக்களையும் மித்திரர்களையும் கொல்வது பாபமல்லவா என்பது அர்ஜுனனின் கேள்வி. நமக்கும் அர்ஜுனன் கேட்பது நியாயம் போலத்தான் தோன்றுகிறது. ஆனால் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பகவத்கீதையிலே இதற்கு வேறு விதமாக விடை தந்திருக்கிறார். உலகத்தின் பார்வைக்கு ஒரு காரியம் கெட்டதாக, கொடுமையாகத் தோன்றலாம். ஆனால், அதனால் மட்டும் அது பாபமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. உலகத்தின் க்ஷேமத்துக்காகவே கொடுமைகளைக்கூடச் செய்ய வேண்டி நேரலாம். அப்போது அதில் பாவமில்லை. இதுதான் பகவான் தருகிற பதில். அப்படியானால் எது பாபகாரியம்; எது புண்ணிய காரியம்? இதற்கும் பகவான் பதில் சொல்கிறார். ஆசையினாலோ, துவேஷத்தினாலோ செய்கிற காரியங்கள்தான் ஒருத்தனைப் பாபத்தில் தள்ளுகின்றன. ஆசையும் துவேஷமும் இல்லாமல் லோக க்ஷேமமாகச் செய்கிற காரியங்கள் எத்தனை கொடுமையாகத் தோன்றினாலும் அதெல்லாம் புண்ணியமானவைதான். இதுதான் கீதை தருகிற பதில்.

ஆசையும், துவேஷமும் இல்லாமல்கூடக் கொடிய காரியம் செய்யப்படுமா என்று சந்தேகம் வரலாம். திருஷ்டாந்தம் சொல்கிறேன்; ஒரு ஜட்ஜ் குற்றவாளியைச் சிக்ஷிக்கிறபோது அவருக்கு சொந்த ஆசையோ துவேஷமோ இருக்கிறதா? சிக்ஷை தருவது கொடுமையாகத் தோன்றலாம். ஆனால்? அதுவே லோக க்ஷேமத்துக்காக, அந்த குற்றவாளியின் ஆத்ம க்ஷேமத்துக்காகவும்கூட விதிக்கப்படுகிறது. நம் பிள்ளைக்கே பைத்தியம் முற்றிப் போனால் சங்கிலி போட்டுக் கட்டிப் போடுகிறோமே. இது பாபமாகுமா? அவனுடைய நன்மைக்காகவும், அவனால் ஊராருக்குக் கஷ்டம் வரக்கூடாது என்ற பரோபகார எண்ணத்திலும் இப்படிக் கட்டிப் போடுகிறோம்.

சாஸ்திரங்கள் நம்மையெல்லாம் இப்படித்தான், 'இது இதைச் செய்' என்கிற விதிகளாலும், 'இது இதைச் செய்யாதே' என்ற நிஷேதங்களாலும் கட்டிப் போட்டிருக்கின்றன. அவற்றால் நமக்கும் நன்மையே; லோகத்துக்கும் நன்மையே. அந்த சாஸ்திரப் பிரகாரமே நாம் காரியம் செய்ய வேண்டும் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் அடித்துச் சொல்கிறார். "தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யா கார்ய வ்யவஸ்தி தௌ" என்கிறார். "எது செய்யத் தக்கது; எது செய்யத் தகாதது என்று நிச்சயிப்பதில் சாஸ்திரமே உனக்கு பிரமாணம்" என்று அழுத்தமாகச் சொல்கிறார். அவனவன் தன் மனம் போனபடி முடிவு பண்ணாமல், சாஸ்திரப்படியே கருமம் செய்ய வேண்டும் என்கிறார்.

இப்போது கீதைக்கு லோகம் முழுவதும் மவுசாக இருக்கிறது. நம் சாஸ்திரங்கள் சொல்கிற ஆச்சார அநுஷ்டானங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள், ஆராய்ச்சிக்காரர்கள், வெள்ளைக்காரர்கள் எல்லோரும் கீதையைப் பிரமாதமாகச் சொல்கிறார்கள். கீதையில் ஸ்வதர்மப்படி அவனவனும் நடக்க வேண்டும் என்று சொல்லியிருப்பதற்கு இவர்கள் பல விதத்தில் அர்த்தம் சொல்கிறார்கள். ஆனால் அந்த கீதையிலேயே மேலே நான் காட்டிய வாக்கியத்தில் அவனவனும் சாஸ்திரப் பிரகாரம் தனக்கு விதிக்கப்பட்ட கருமத்தையே செய்ய வேண்டும் என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொல்லியிருக்கிறது.

சொந்த ஆசை, துவேஷம் இல்லாதபோது எவனுக்கும் எந்தக் காரியம் செய்வதிலும் வெறுப்பு இராது. ஆசையும் துவேஷமும் போய்விட்டால், எந்தக் காரியத்தையும் அன்போடு செய்து கொண்டு ஆனந்தமாக இருக்க முடியும்.

ஆசைக்கும் துவேஷத்துக்கும் காரணம் அகங்காரம். அகங்காரம் தொலைந்தால் எந்தக் காரியங்களுக்கிடையிலும் உயர்வு தாழ்வு தெரியாது. நாம் பாட்டுக்கு நம் கடமை இது என்ற உணர்ச்சியோடு ஆனந்தமாகச் செய்து கொண்டிருப்போம். லோகம் க்ஷேமமாக இருக்கும். 'நான் செய்கிறேன்; எனக்காகச் செய்து கொள்கிறேன்' என்கிற அகம்பாவம் இல்லாமல் கடமையைச் செய்து, பலனை ஈசுவரனுடைய பாதத்தில் அர்ப்பணம் பண்ணுவதுதான் கீதை சொல்கிற கர்மயோகம். சொந்த விருப்பு வெறுப்பில்லாமல், லோக க்ஷேமார்த்தமாகக் காரியம் செய்து ஆத்ம பரிசுத்தி பெறுகிற இந்தப் பண்பாடு, வேத காலம் தொட்டு நம் தேசத்தில் தழைத்து வந்திருக்கிறது. அந்தப் பண்பாட்டை ஒரு கையடக்கமான பேழையில் போட்டுக் கொடுத்த மாதிரி கீதையில் அநுக்கிரகம் செய்திருக்கிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.

இந்த உபதேசத்தை நம் வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்திலும் உரைத்து உரைத்து அலசிப் பார்க்க வேண்டும். "இந்தக் காரியத்தில் சொந்த லாபம், பேர், புகழ் இருக்கிறதா? ஆசையிருக்கிறதா? துவேஷம் இருக்கிறதா? பட்ச பாதம் இருக்கிறதா? இவை இருந்தால் வெளிப்பார்வைக்கு நாம் செய்வது எத்தனை உயர்வாக இருந்தாலும் அது பாபம்தான்" என்று நாம் செய்கிற ஒவ்வொரு செயலையும் அலசி அலசிப் பார்க்க வேண்டும். நமக்கு என்று நாமாக ஆசைப்பட்டு ஒரு காரியத்தை உண்டாக்கிக் கொண்டால் அதைச் சாதித்துக் கொள்வதில் அநேக தப்பிதங்கள் வந்து கொண்டேதான் இருக்கும். அதனால் அவரவருக்கும் சாஸ்திரம் வைத்திருப்பதே காரியம் என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா சொன்னாற்போல் அதையே பிரமாணமாக வைத்துக் கொள்ள வேண்டும். சமமான அன்புடன் இருந்து கொண்டு, சுத்தமான எண்ணத்தோடு அவரவரும் அப்படித் தன் கருமத்தைச் செய்தால், சமூகத்தில் போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவு எதுவுமே இருக்காது. லோகமே இன்பமயமாக இருக்கும்.


???? ????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
An overview of sanmohana Krishna


An overview of sanmohana Krishna


sanmohankrishnan.jpg




Shri krishnam kamalapatratcham divya aabharana bhhoshit am
Tribangi lalitakaaram athisundara mohanam
Bhagam dakshinaam purusham anya strirupinam thatha
Shanku chakram saangu sancha puspha baanam cha pankajam
Itchi sabam venu vaadyamsa thatrayandambhujashtakai
Swetha gandhanu liptangam puspha vastra tragujwalam
Sarva kamartha sidyartham mohanam shri krishnamasraye



In vaishnavite The common of separation Sakti and saktiman, i.e. Female and Male principle in god arrives at the conclusion Sakti and saktiman are the same. Each and every god has its partner, 'betterhalf' or Sakti and without this Sakti he is sometimes viewed being without essential power. It is not uncommon feature or Hinduism when worship of a pair rather than one personality constitutes worship of God,
 
அம்பிகையே அருள் புரிவாள்.

அம்பிகையே அருள் புரிவாள்.


அம்மனுக்குரிய ஆடி மாதத்தில், நமது சிந்தனையைத் தூண்டிவிடும் மகாபெரியவரின் அருளுரையைக் கேட்போமா!

"நான் தான் இதைச் செய்தேன்' "இதை சாதித்துக் காட்டினேன்' என்று கர்வத்தோடு பேசுவது கொஞ்சம் கூட நியாயமானது அல்ல. நாம் எதையும் சாதிப்பதற்கான புத்தியோ, தேகபலமோ எங்கிருந்து வந்தது? இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் அத்தனை காரியமும் எப்படி நடக்கிறது.

நாம் செய்கிற செயல்களுக்குரிய சக்தியெல்லாம் ஒரு மகாசக்தியிடம் இருந்தே வந்திருக்கிறது.

அது இல்லாவிட்டால் நம்மால் மூச்சாவது விட முடியுமா? வாழ்வில் இத்தனை சாதனை புரிந்ததாக எண்ணி கர்வப்படுகிற நம்மை விட்டு சுவாசம் போய் விடுகிறது. அதைப் பிடித்து வைத்துக் கொள்ளும் சாமர்த்தியம் நமக்கு கொஞ்சமும் கிடையாது. அப்போது, நம் சக்தியெல்லாம் கனவு போல காணாமல் போய் விடும். சக்தி சமுத்திரமாக இருக்கும் அம்பிகையின் ஒரு துளி அனுக்ரஹத்திலேயே நடக்கிற காரியங்களை எல்லாம் நம்முடையதாக எண்ணி அகந்தை கொள்வது அசட்டுத்தனம் தான் என்பது புரியும்.

எத்தனைக்கெத்தனை இதை அனுபவத்தில் தெரிந்து கொண்டு அம்பிகையின் முன் ஒரு துரும்பு போல அடங்கி கிடக்கிறோமோ அத்தனை அளவுக்கு அவளின் அருளை அதிகம் பெற முடியும்.

அவதார புருஷர்களாக வந்தவர்கள் கூட இந்த அடக்கத்தை நமக்கெல்லாம் போதிப்பதற்காக தாங்களே வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். ராமசந்திர மூர்த்தி தர்மத்திற்கும், சத்தியத்திற்கும், சாஸ்திரத் திற்கும் அடங்கி மனிதனாக வாழ்ந்து காட்டி இருக்கிறார். அவருடைய அடக்கத்தை நினைக்கும்போது, எனக்கு தோன்றுகிற எண்ணத்தைச் சொன்னால் விசித்திரமாக இருக்கும். எல்லாரும் ராமர் பிறந்த காலத்தில் நாம் பிறக்கவில்லையே என வருத்தப்படுகிறார்கள் அல்லவா? எனக்கோ நான் அப்படி பிறக்காமல் போனதே நல்லது தான் என்று தோன்றுகிறது. ஏன் தெரியுமா? ராமர், தாம் ஒரு க்ஷத்திரியர் என்பதால் அடக்கத்தோடு வேத வித்துக்களையும், ரிஷிகளையும், ஆச்சாரியர்களையும் விழுந்து விழுந்து நமஸ்கரித்தார். அவர் காலத்தில் ஒரு மடாதிபதியாக இருந்தால், என்னையும் அவர் வந்து நமஸ்கரிக்கும்படியாக ஆகி விடும்.

அது எத்தனை தர்மசங்கடமாக இருக்கும்! இப்போதோ, அவரை நான் நமஸ்காரம் செய்து சந்தோஷப்பட முடிகிறது. நாம் நன்றாக எழுதுகிறோம், பேசுகிறோம், பாடுகிறோம், வேறு ஏதோ காரியம் செய்கிறோம் என்று உலகமே புகழ் மாலை போடுகிறது. அந்த சமயத்தில் நமக்குத் தலைக்கனம் ஏறத் தான் தொடங்கும். ஆனால், இந்த புகழ் மாலைக்குப் பாத்திரமாகி அகந்தை கொள்ள, நமக்கு கொஞ்சமும் உரிமை இல்லை என்று உணர வேண்டும். வருகிற பெருமையை எல்லாம் பராசக்தியின் பாதார விந்தங்களில் அர்ப்பணித்து விட வேண்டும். அப்போது நமக்கு ஒரு குறையும் இல்லாமல் அந்த அம்பிகையே அருள் புரிவாள்.
 
குறையொன்றுமில்லாத கோவிந்தா

குறையொன்றுமில்லாத கோவிந்தா

ராமாயணத்தில் ஸ்ரீராம பட்டாபிஷேகம் மாதிரி, பாகவதத்தில் பகவானுக்குப் பட்டாபிஷேகமான சந்தர்ப்பத்தில் சூட்டப்பட்ட பேர் “கோவிந்த” என்பதே. ராமர் மாதிரி கிருஷ்ணர் பெரிய ராஜ்யத்துக்கு ராஜாவாகப் பட்டாபிஷேகம் பண்ணிக்கொள்ளாவிட்டாலும், தேவ ராஜாவாலேயே பட்டாபிஷேகம் பெற்றதால் இதற்கு ரொம்ப முக்கியத்துவம் உண்டு. “கோவிந்தராஜா” என்று கிருஷ்ணனுடைய பல பெயர்களில் இதற்கு மட்டுந்தான் “ராஜா” சேர்க்கிறோம்.


எனக்கு ஒன்று தோன்றுவதுண்டு. ஆண்டாள் திருப்பாவையில் “குறையொன்றுமில்லாத கோவிந்தா!” என்று கூப்பிடுகிறார் அல்லவா? பகவானுக்குக் குறை இருந்தது என்று யாராவது நினைப்பதுண்டா? சாதாரண மநுஷ்யன் குறைப்பட்டுக்கொண்டேயிருக்கும் சுபாவமுள்ளவன். அதனால் அப்படியில்லாத ஒருவனைக் ‘குறையொன்றுமில்லாத மநுஷ்யர்' என்று விசேஷிப்பது பொருத்தம், பகவானை ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்? இப்படிச் சொல்வதாலேயே, ‘அப்பன் குதிருக்குள் இல்லை' என்கிற மாதிரி, பகவானுக்குக் குறையிருந்தது போலத்தானே தொனிக்கிறது.


யோசித்துப் பார்த்ததில், பகவானுக்கு வாஸ்தவமாகவே பூர்வத்தில் ஒரு குறை இருந்தது. அது கோவிந்தனாக அவன் ஆனபோதுதான் தீர்ந்தது என்று தெரிந்தது. பகவானுக்கு என்ன குறை இருந்தது? ‘ராம பட்டாபிஷேகம்' என்றேனே. அதிலேயே குறை. சக்ரவர்த்தியாக முடி சூடியதில் என்ன குறை என்றால், இதை வால்மீகி தம்முடைய ராமாயணத்தில் வர்ணித்திருக்கிற தினுசிலேதான் குறை ஏற்பட்டுவிட்டது.


‘வஸிஷ்ட வாம தேவாதி ரிஷிகள் எட்டுப் பேர் ராம சந்திரமூர்த்திக்குப் பட்டாபிஷேகம் பண்ணினார்கள், அது எப்படித் தெரியுமா இருந்தது? அஷ்ட வசுக்கள் தேவேந்திரனுக்குப் பட்டாபிஷேகம் பண்ணின மாதிரி இருந்தது' என்று வால்மீகி வர்ணித்திருக்கிறார், “வஸவோ வாஸவம்யதா” - “வாசவன் எனப்படும் இந்திரனுக்கு வசுக்கள் பண்ணியதுபோல” என்று அர்த்தம். இந்த Comparison (ஒப்புவமை) தான் ராமருக்குக் குறை உண்டாக்கிவிட்டது. ஏன்?


இந்திரன் சீரழிந்த கதையை இதே வால்மீகி பாலகாண்டத்தில் சொன்னார். கௌதம பத்னியாகிய, அதாவது தாய் போல் மதிக்க வேண்டிய, ரிஷி பத்னி அகல்யையிடம் தப்பாக நடந்துகொண்டு, மகாபாவம் பண்ணினவன் இந்திரன். அதற்காக சாபத்தை வாங்கிக் கட்டிக்கொண்டு அவமானப்பட்டவன்.

பதிதையாகிவிட்ட அகல்யைக்கு ராமசந்திர மூர்த்தி புனருத்தாரணம் தந்த பெருமையால்தான் இன்றைக்கும் அவரை “பதித பாவன சீதாராம்” என்கிறோம்.


கதை இப்படியிருக்க, அந்த இந்திரனையே தனக்கு உவமையாக வால்மிகி மகரிஷி சொல்லிவிட்டதில் ராமருக்கு உள்ளூரக் குறை ஏற்பட்டு விட்டது. ஏகபத்னி விரதனான தம்மைத் தகாத பாபம் பண்ணினவனோடு ஒப்பிட்டுவிட்டாரே என்று ஒரு குறை.


ஆதியிலே ஒரு பட்டாபிஷேகம் நிச்சயமான சமயத்திலே அது நிறைவேறாமலே ராமர் வனவாசம் பண்ணும்படி ஆயிற்று. அப்புறம் பதிநாலு வருஷங்கள் ஜனங்கள் தவியாய்த் தவித்துக் காத்திருந்து மறுபடி பட்டாபிஷேகம் நடக்கிறது. அதனால் பட்டாபிராமன் என்றே பகவானுக்கு ஒரு பேர் ஏற்பட்டிருக் கிறது. ராமாயண பாரா யணம், ப்ரவசனம் எதுவானாலும் பூர்த்தி செய்யும் மங்களமான கட்டம் அதுதான்.

அங்கே போய், பால காண்டத்தில் தன் கால் தூசியினாலேயே பரிசுத்தி பெற்ற ஒருத்தியை ஆதியில் தூசுபடுத்தியவ னோடு தன்னை ஓப்பிட்டால் பகவானாகத்தானிருக்கட்டும், அவர் மநுஷ்யம் மாதிரிதானே நன்றாக ‘ஆக்ட்' பண்ணினார், அதனால், வருத்தம் ஏற்படத்தானே செய்யும்?


இன்னொரு குறை. இந்திராதி தேவர்கள் ராவணனின் ஹிம்சையைத் தாங்க மாட்டாமல் பிரார்த்தனை பண்ணிக் கொண்டதன் மேல்தான் மஹாவிஷ்ணு ராமாவதாரம் பண்ணினது. ராவணனின் புத்திரன் மேகநாதனே இந்திரனை ஜயித்து “இந்திரஜித்” என்று பேர் பெற்றிருந்தான்.


அப்படிப்பட்ட ராவணனைத் தாமே ஜெயித்தும், இந்திரஜித்தைத் தாம் ஜெயிக்க வேண்டுமென்று இல்லாமல் தம்பி லக்ஷ்மணனை விட்டே ஜெயித்தும் விஜயராகவனானவர் ராமர். இப்படி ராட்சசனை சம்காரம் பண்ணிவிட்டுப் பட்டாபிஷேகம் பண்ணிக் கொள்கிறபோது, தம்மிடம் தோற்றுப் போனவரிடம் தோற்றுப்போன இந்திரனுக்கே தம்மை ‘கம்பேர்' பண்ணினால் குறையாகத்தானே இருக்கும்?


வால்மீகி பாத்திரங்களின் குணத்தை Compare பண்ணி இப்படிச் சொல்லவில்லை. பட்டாபிஷேக வைபவத்திலிருந்து ஆனந்தக் கோலாகாலத்தைப் பார்த்ததும் வேதலோகத்தில் நடந்த இந்திர பட்டாபிஷேகத்தின் விமர்சைக்கு இதை ஓப்பிடலாம் என்று நினைத்தார். எட்டு வசுக்கள் மாதிரியே இங்கேயும் சரியாக எட்டு ரிஷிகள் அபிஷேகம் பண்ணின வுடன், “வஸவோ வாஸவம் யதா” என்று உற்சாகத்தில் எழுதிவிட்டார்.


இதனால் பகவானுக்கு உள்ளுக்குள்ளே ஏற்பட்ட குறை, அப்புறம் கிருஷ்ணாவதாரத்தில் சாட்சாத் அந்த இந்திரனே, தோற்றேன் என்று இவர் காலில் வந்து விழுந்து இவருக்கு ‘கோவிந்த' பட்டம் தந்து அபிஷேகம் பண்ணினபோதுதான் தீர்ந்தது. ராமபட்டாபிஷேகத்தில் உண்டான குறை கோவிந்த பட்டாபிஷேகத்தினால்தான் தீர்ந்தது. இதைத்தான் ஆண்டாள் suggestive -ஆக (குறிப்பால் உணர்த்தும் முகமாக) “குறையொன்றுமில்லாத கோவிந்தா” என்று சொன்னாள்.


‘குறைவேயில்லாத' என்றால் பரிபூர்ண வஸ்து என்று அர்த்தம். ‘பூர்ணம் ப்ரஹ்ம சநாதனம்', ‘பூர்ணாவதாரம்' என்று கிருஷ்ண பரமாத்மாவைச் சொல்வது இதனால்தான்.
தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்)


????????????????? ???????? - ?? ?????
 
Devi Mahatmyam Reading Procedure

Devi Mahatmyam Reading Procedure


goddess-durga-devi.jpg



Devi Mahatmyam (Durga Saptashati or Chandi Path) is a powerful text dedicated to Goddess Shakti. The reading procedure of Devi Saptashati is given here in detail version. Many devotees are confused on how to recite this powerful text – on which day, which adhyaya (chapter) needs to be chanted..



There are two methods to start reading Devi Mahatmym – Trayangam and Navangam.

Trayangam is a method in which we need to chant three prayers – Devi Kavacham, Argala Stotram and Devi Keelakam followed by Navakshari Mantram.


Navangam is a method for which nine prayers are recited prior of starting reading the book. Navangam stotrams are: Devi Nyasa, Devi Avahana, Devi Namani, Argala Stotram, Keelaka Stotram, Devi Hrudaya, Dhala, Devi Dhyana and Devi Kavacha.


As per the prescribed methods in ancient scriptures, Devi Mahatmya should be read in one sitting. After finishing the recital of Devi Mahatmya, one should chant the Devi Suktam (slokas 7 to 36 of Chapter 8).


Devi Saptashati Parayana in 3 days & 7 days



Apart from one sitting recital, devotees read Devi mahatmya for three consecutive days: Prathama Charitra or 1[SUP]st[/SUP] Chapter on first day, Madhyama Charitra (2, 3, 4 chapters) on 2[SUP]nd[/SUP] day, and Uttama Charitra (5-13 chapters) on third day.


Some devotees also read Devi Mahatmya in 7 days. They chant 1[SUP]st[/SUP] Chapter on first day, 2-3 chapters on 2[SUP]nd[/SUP] day, 4[SUP]th[/SUP] chapter on 3[SUP]rd[/SUP] day, 5-8 chapters on 4[SUP]th[/SUP] day, 9-10 chapters on 5[SUP]th[/SUP] day, 11[SUP]th[/SUP] chapter on 6[SUP]th[/SUP] day and 12-13 chapters on 7[SUP]th[/SUP] day.


Each chapter should be read in single sitting. Due to any reason, Parayana is stopped in between a chapter; the whole chapter should be read again.


The order of reciting Durga Saptashati Parayana daily is: Trayanga Mantra, Devi Mahatmya text followed by Devi Suktam.


Many devotees read Durga Saptashati during Navratri Durga Puja 9/10 days.. Here is the procedure to read Devi Mahatmyam during Navratri


How to read Durga Saptashati (Devi Mahatmyam) during Navratri festival



1[SUP]st[/SUP] day: Chapter 1 (Madhu kaitabha samhaaram)
2[SUP]nd[/SUP] day: Chapter 2, 3 and 4 (Mahishhasura samhaara)
3[SUP]rd[/SUP] day: Chapter 5 and 6 (Dhuumralochana vadha)
4[SUP]th[/SUP] day: Chapter 7 (Chanda Munda vadha)
5[SUP]th[/SUP] day: Chapter 8 (Rakta biija samhaara)
6[SUP]th[/SUP] day: Chapter 9 and 10 (Shumbha Nishumbha vadha)
7[SUP]th[/SUP] day: Chapter 11 (Praise of Narayani)
8[SUP]th[/SUP] day: Chapter 12 (Phalastuti – reciting merits or benefits)
9[SUP]th[/SUP] day: Chapter 13 (Blessings to Suratha and the Merchant)
10[SUP]th[/SUP] day: Chapter 14 (Aparadha Kshamaprarthana) on 10th day


You can also complete the recital on 9th day by chanting Devi Aparadha Kshama Prarthana Stotram on 9th day itself.


You should read Siddha Kunjika Stotram after completing the recital of every chapter.


Devi Mahatmyam Reading Procedure | Sage of Kanchi
 
ஸ்வாமி என்றால் என்ன ?

ஸ்வாமி என்றால் என்ன ?


ஸ்வாமி என்றால் என்ன? 'ஸ்வம்' என்கிற வார்த்தைக்கு 'உடைமை', 'சொத்து' என்று அர்த்தம். 'ஸ்வம்' என்பதே தெலுங்கில் 'ஸொம்மு' என்றாகியிருக்கிறது. 'ஸொம்மு' என்றால் 'சொத்து'. ஸ்வந்தம் - நமக்குச் சொந்தமானது - அதுவே நம் சொத்து. கோயிலைச் சேர்ந்த சொத்தைக் கேரளத்தில் 'தேவஸ்வம்' என்கிறார்கள் அல்லவா? உடைமைக்கு சொந்தக்காரர் யாரோ அந்த உடையவர்தான் 'ஸ்வாமி'. ஸ்வாமி என்பதற்கு நேர் தமிழ் வார்த்தை 'உடையார்' என்பது. முன் காலத்தில் கோயில் சுவர்களில் வெட்டப்பட்ட கல்வெட்டுக்களிலெல்லாம் 'திருச்சிற்றம்பலமுடையார்', 'திருவேங்கடமுடையார்', 'திருநாகேச்சுரமுடையார்', 'கபாலீஷ்வரமுடையார்', என்பது போலவே 'உடையார்' என்ற பெயரில்தான் தெய்வங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


குருவும் ஸ்வாமியும் ஒன்று என்பதால்தான் வைஷ்ணவர்கள் ஸ்ரீ ராமாநுஜரை 'உடையவர்' என்றே சொல்கிறார்கள்.


'ஸ்வாமி' என்றால் சொத்துக்கு உரிமைக்காரர் என்றேன். எந்தச் சொத்து? சகலப் பிரபஞ்ஜமும்தான். அதிலுள்ள நாமும் அவன் சொத்துத்தான். உள்ளதனைத்தும் அவன் ஒருவனுக்கே உடமையாகும். 'எல்லாம் என் உடமையே' என்று தாயுமானவரும் பாடினார். நம் சொத்து, பிறர் சொத்து என்றெல்லாம் பாத்தியதை கொண்டாடுகிறோமே, உண்மையில் இந்தச் சொத்தெல்லாம்- அவற்றுக்குப் பாத்தியதை கோரும் நாம், பிறர் எல்லோருமே - அவனுடைய சொத்துதான். அவன் இல்லாவிட்டால் இந்தப் பிரபஞ்சமும் இல்லை, நாமும் இல்லை. நாம் பாத்தியதை கோருகிற சொத்துக்களும் இல்லை.


நாம் வீடு, வண்டி போன்ற சில சொத்துக்களைப் புதிதாக உண்டாக்கினதாக நினைக்கிறோம். விஞ்ஞானிகள் புதிது புதிதாக இயந்திரங்கள் செய்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் அடிப்படையில் எந்த மூலப்பொருள்களை வைத்துக் கொண்டு செய்கிறோமோ, அவை ஸ்வாமி செய்ததுதான். நாம் அவர் சொத்தை எடுத்து வேறு ஒரு ரூபத்தில் மாற்றுகிறோமே தவிர புதிதாக எதுவும் செய்யவில்லை.

'மூலப்பொருளை (element) செய்'. 'அணுவை (atom) உண்டாக்கு' என்றால் எந்த விஞ்ஞான நிபுணராலும் அது முடியாத காரியம். இத்தனை மெஷின்கள், குண்டுகள் செய்கிற விஞ்ஞானியால் ஒரு சின்னஞ்சிறிய இலையைச் செய்ய முடியுமா?


எல்லாவற்றையும் செய்கிற ஒரே ஒருத்தருக்குத்தான் அவையெல்லாம் சொந்தம். அதனால்தான் அவர் உடையவர், ஸ்வாமி என்று அழைக்கப்படுகிறார். நாமும் அவரது உடமைகள்தான். நம் சொத்து என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதை நம் இஷ்டப்படி விநியோகிக்க உரிமை பெற்றிருக்கிறோம் அல்லவா? அப்படியே ஸ்வாமியின் சொத்தாகிய நாமும், நம்மை அவன் இஷ்டப்படி நடத்தட்டும் என்று விட்டுவிட்டால் நமக்கு எந்த பாரமும் இல்லை. ஒரே ஆனந்தம்தான்.


இப்போது, 'நான், நான்' என்று எதையோ சொல்லிக்கொண்டு அலைகிறோமே, உண்மையில் இது அவனுக்குதான் சொந்தம் என்று புரிந்து கொண்டுவிட்டால் அப்புறம் நாமாகக் கிடந்து அலையமாட்டோம். நமக்கென்று சொந்தமாக ஒரு ஆசையும் ஒரு துவேஷமும் பாராட்டுவதற்கு உரிமை இல்லை என்று தெரிந்து கொண்டு விட்டால், அப்புறம் ஒரு அலைச்சலும் இல்லை. ஒரே நிம்மதிதான்! 'ஸ்வாமி' என்கிற வார்த்தையே, நமக்கு நம்மிடமே எந்த சொந்தமும் இல்லை. நாம் அவன் தன்னிஷ்டப்படி விநியோகிக்க உரிமை பெற்றிருக்கிற அவனுடைய சொத்துத்தான் என்பதை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது. இப்படி உணர்வதுதான் பக்தியின் பரம லக்ஷியமான சரணாகதி என்பது.


?????? ??????? ???? ? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
காமாக்ஷியின் சிவப்பு

காமாக்ஷியின் சிவப்பு

கரும்பு வில்லும் புஷ்ப பாணமும் தரித்து, ஸமஸ்த லோகத்துக்கும் அநுக்கிரகம் செய்கிற திவ்ய மாதாதான் காமாக்ஷி. சகல ஜீவராசிகளையும் இந்திரிய சேஷ்டையிலிருந்து விடுவிப்பதற்காக மலர் அம்பும், மனஸின் ஆட்டங்களிலிருந்து விடுவிப்பதற்காக கரும்பாலான தனுஸையும் தாங்கியிருக்கிறாள். இதில் வேடிக்கை என்னவென்றால், மன்மதனும் இதேபோல் கரும்பு வில்லையும், புஷ்பத்தாலான ஐந்து பாணங்களையும்தான் வைத்திருக்கிறான். அவனுடைய காரியமோ அம்பாளுடைய காரியத்துக்கு நேர் விரோதமானது. அவன் இந்த வில்லையும் அம்பையும் வைத்துக்கொண்டுதான் ஸமஸ்தப் பிராணிகளுக்கும் இந்திரிய விகாரத்தை – அடங்காத காம வேகத்தை – உண்டாக்கி வருகிறான்.


அதுவும் பராசக்தியான அம்பாளுடைய லீலைதான். அவள்தான் மன்மதனுக்கு இப்படிப்பட்ட சக்தியை அநுக்கிரஹம் செய்திருக்கிறாள். பிஞ்சு கசப்பாக இருந்து, பிறகு துவர்ப்பாகி, அப்புறம் புளிப்பாகி, கடைசியில் பரம மதுரமாக பழுக்கிற மாதிரி, ஜீவர்களும் படிப்படியாக பலவித அநுபவங்களில் முன்னேறி முன்னேறி கடைசியில் பழமாகப் பக்குவம் பெற வேண்டும் என்றே அம்பாள் பிரகிரிதி நியதிகளை – இயற்கை வேகங்களை உண்டாக்கியிருக்கிறாள். ஒரேடியாக இவை நம்மை அடித்துச் செல்வதற்கு, நாம் இடம் தந்துவிடக்கூடாது. ஒரேடியாக எடுத்த எடுப்பில் இந்த வேகங்களிலிருந்து தப்ப முடியாவிட்டால், அதற்காக வருத்தப்பட்டு மனமுடைந்து விடவும் கூடாது. அம்பாளைத் தஞ்சம் புகுந்தால், படிப்படியாக அவள் வழிகாட்டி விடுதலை தருவாள் என்ற நம்பிக்கையோடு, வேகங்களைக் குறைத்துக் கொள்ள அவளைப் பிராத்திக்க வேண்டும். சம்ஸாரம் என்பதில் ஈடுபட்டிருக்கும்போதே இதில் ஏதாவது ஸாரம் இருக்கிறதா என்றும் அடிக்கடி சிந்தித்து வரவேண்டும். இப்படிச் சிந்திப்பதே ஒரு ஸாரம்தான். அதனால்தான் சம்ஸாரத்திலிருந்து விடுபடுகிற விரக்தி உண்டாகிறது. அந்தந்தக் காலத்தில் அந்தந்தப் பிரகிருதி வேகங்கள் – இயற்கை உந்தல்கள் – ஏற்பட்டாலும், அதனால், மனம் கலங்காமல், பராசக்தியைப் பிரார்த்திக் கொண்டேயிருந்தால் பிஞ்சுகாயாகி, காய் கனியாகி, கனி தானே முற்றி மரத்திலிருந்து இற்று விழுந்துவிடுவதுபோல், கடைசியில் சம்ஸார விருக்ஷத்திலிருந்து விடுபட்டு அம்பாளின் சரணார விந்தத்தில் விழுந்து அதோடேயே சேர்ந்து விடுவோம்.


நம்மைப்போல் எத்தனையோ பிராணிகள் ஏகப்பட்ட பூர்வ கர்மாவைச் செய்து குவித்திருக்கின்றன. இந்த கர்மாவைக் கழித்துக்கொள்ள அவையெல்லாம் ஜன்மா எடுத்துத்தானாக வேண்டும். எடுக்கிற ஜன்மாவில் கர்ம மூட்டையைத் ஜாஸ்தியாக்கிக் கொள்ளலாம், அல்லது குறைத்துக் கொள்ளலாம். அது எப்படியானாலும் கர்மாவைக் கழித்துக்கொள்ள வேண்டுமானால் ஜன்மா எடுத்து அதைத் தர்ம வழியில் பிரயோஜனப்படுத்திக் கொள்வது தவிர, வேறு வழியில்லை. கடைசியில் கர்மம் முழுவதும் அழுந்தால் பிறப்பே இல்லாத நிலை அடைவோம். ஜீவர்களுக்கு ஜனன நிவுருத்தி உண்டாவதற்கே ஒரு பயிற்ச்சிக் கூடமாக அவர்கள் ஜன்மம் எடுத்தாக வேண்டியிருக்கிறது. இவ்வாறு ஜீவர்களுக்கு ஜன்மம் ஏற்படுவதற்காகத்தான் அம்பாள் காமத்தை வைத்திருக்கிறாள். அதற்கு அதிகாரியாக மன்மதனை நியமித்திருக்கிறாள்.


ஆனால், எதுவும் தன் எல்லையறிந்து அடங்கி நிற்க வேண்டும். மன்மதன் பக்தர்களிடமும் ஞானிகளிடமும் தன் கைவரிசையைக் காட்ட அம்பாள் விடமாட்டாள். இவள் தான் மகா ஞானியான பரமேசுவரனை மட்டும் தன்னிடம் பிரேமை கொள்ளுமாறும் செய்தவள். மன்மதன் அவரிடம் தன் கை வரிசையைக் காட்டப் பார்த்தான். அவர் நெற்றிக்கண்ணைத் திறந்து அவனை பஸ்மீகரமாக்கி விட்டார். அப்புறம் ஆடாமல், அசங்காமல் பிரம்மமாக அமர்ந்துவிட்டார். அவர் அப்படியிருந்தால் அம்பாளுடைய பிரபஞ்ச லீலை எப்படி நடக்கும்? எனவே, அவள் மன்மதனுடைய கரும்புவில்லையும், புஷ்ப தனுஸையும் தானே தன் கைகளில் எடுத்துக் கொண்டு பரமேசுவரன் முன் வந்தாள். மன்மதனைப் போல், ‘அவரை ஜயிப்பேன்’ என்று அகங்காரத்தோடு வரவில்லை. அன்போடு அடக்கத்தோடு வந்தாள். உடனே, பரம ஞானியான பரமேசுவரனும் காமேசுவரனாக மாறிவிட்டான். இவள் அன்பு பொங்குகிற கண்களால் காமாக்ஷியாகி, காமேசுவரியாகி, அவரைப் பார்க்க அவரும் அன்பு மயமாகிக் காமேசுவரனாகிவிட்டார்.


பிரம்மமாகச் செயலற்று இருந்த வஸ்துவுக்கு லோகாநுக்கிரகம் என்ற பரம கருணை உதிப்பதைத்தான் காமாக்ஷி என்று சொல்கிறோம். சுத்த ஸ்படிக ஸங்காசமாக நிறமில்லாதிருந்த பிரம்மம், அப்போது சிவப்பு நிறத்தை அடைகிறது.


அன்பு, கருணை இவற்றைச் சிறப்பாகவே சொல்வது வழக்கம். ராகம் (அன்பு) , அநுராகம் என்பதிலிருந்தே ரக்தம் (ரத்தம்) என்ற பதம் வந்தது. தமிழிலும் மனச்செம்மை, செவ்விய உள்ளம் என்றெல்லாம் சொல்கிறோம். இதுவே காமாக்ஷியின் சிவப்பு:கருணையின் வர்ணம்.



???????????? ??????? | ??????????? ?????
 
Atma Sodhana

Atma Sodhana



We can’t do thapas as saints did in those days..The best we can do is to develop the mindset to treat any tough time as exercise for our inner purity and inner strength and perseverance as Periyava advised.

mettur_periyava1.jpg



What would one get to undergo the difficulties or even tortures (more of mental)? Sri Mettur Periyava in his poorvasrama (before sanyasa) was called Sri Mettur Rajagopal. He has left Mettur Chemicals & came as full time service to Periyava. That was very testing times as he couldn’t fit with other parishadars in the mutt. He felt highly uncomfortable but for his longing for Periyava, he could’ve left the mutt long ago. Mettur Rajagopal was considered to be having a high level of purity in his mind & deeds but once you don’t fit in, you’d begin to be felt like tortured. Once it so happens that he has mentally decided to leave…


He has come for some work at Chennai & decided to stay back. Before that he had gone to have darshan of Sri Sivan Sar. Sri Sar gave darshan & told Sri Mettur that it is better for him if he is with the mutt. Sri Mettur was surprised at there was no discussion on this topic but the direction came to him. So he has dropped his idea of staying back & went back to the mutt. There Periyava was waiting…


Periyava & Sri Sar are the same with different rupa is the conclusion of Sri Triplicane Periyava. At the mutt, Periyava was waiting. When Sri Mettur Periyava has arrived for darshan, Peroyava looked at him & said…
Periyava has said, “உனக்கு ஏற்படற கஷ்டமெல்லாம் (இடையூறு, அவமானமெல்லாம்) ஆத்மா சோதனைன்னு எடுத்துகொள்ளேன்!”

Sri Mettur raised his face & looked at Periyava. Sometimes communication could be beyond what we hear or what we see… especially when the creator is at work. Also it seems whatever has to be transpired has got transpired. Periyava has asked him to bear all the difficulties (including insults) as ‘atma sodhanai’ and as a true devotee Sri Mettur has taken it. Result?



Because Sri Mettur has gone back to mutt, he has become Sri Mettur Swamigal, the sanyasa given by MahaPeriyava himself! Also Sri Sivan Sar has told that both Kuvalaikkal & Mettur are his ‘kuzhandhaigal’. What else one need?


Sri Triplicane Periyava has said that Sri Sumitra Devi was such a good lady in spite of showing partiality publicly by King Dasaratha. Sending her ONLY son Sri Rama to the forest. Even then she was good to King Dasaratha. All becuase not that she’d gain something. She’s is good because just that she wants to be good. Sri Triplicane Periyava has said that’s the way for any ‘nallava’. Prayers to Periyava, Sri Sivan Sar & Sri Triplicane Periyava to shower their blessings for us to have strength all the times to…


Atma Sodhana | Sage of Kanchi
 
மஹான்களின் உபதேசம்

மஹான்களின் உபதேசம்




லோகத்தில் அடைகிற இந்திரிய ருசிகளும், விஷய வாஸனையும்தான் ஜனங்களுக்கு இஷ்டமாயிருக்கின்றன. இந்த வழியிலேயே போய் ஜனங்கள் பாபத்தையும் துக்கத்தையும் பெருக்கிக் கொள்ளும்போது மஹான்கள் அவர்களை ரக்ஷிக்க உபதேசம் பண்ணுகிறார்கள். அந்த உபதேசம் விளககெண்ணெய்யாகத்தான் தோன்றும். ஆனால் அதுதான் உண்மையில் விளக்கும் எண்ணெய். 'பல் விளக்குவது', 'பாத்திரம் விளக்குவது'என்று ஸாதாரண ஜனங்கள் சொல்லுவதில் நிரம்ப அர்த்தம் இருக்கிறது. ஒன்றிலே இருக்கிற அழுக்கைத் தேய்த்துப் போக்கி விட்டால் அது சுத்தமாகி, விளக்கம் பெற்றுவிடுகிறது என்பதைத்தான் இப்படிச் சொல்கிறார்கள். வயிற்றில் இருக்கிற அழுக்குகளை அலசிப் போக்கி சுத்தமாக்கி வைப்பதே விளக்கெண்ணெய். மஹான்களின் உபதேசம் மனஸில் உள்ள அழுக்குகளை தேய்த்து அலம்பி விளக்கி வைத்து ஞான விளக்கை ஏற்றி வைப்பது

??? ???????? ??????? ???????? : ????????????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top