• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
தீமைக்கெல்லாம் காரணம் பணம்

தீமைக்கெல்லாம் காரணம் பணம்



* செல்வத்தின் பாலுள்ள விருப்பை விடு. ஒன்றொன்றுக்குள்ள வித்தியாசத்தை ஆராய்ந்தறி. மனம் உணர்ச்சி வசப்படாமலிருக்க பயில, உன் சொந்த முயற்சியால் ஈட்டும் சிறு பொருளுடன் திருப்தி அடை.


* தீமைக்கெல்லாம் ஆதி காரணம் செல்வமே. உண்மையில் அதில் இன்பத்தின் அடிச்சுவடை சிறிதளவும் காண முடியாது. செல்வருக்குத் தம் மக்களிடமிருந்தே அச்சம் தோன்றும். எங்கும் இதே நிலைதான்.


* உன் மனைவி யார்? உன் மகன் யார்? இவ்வுலகம் மிக விசித்திரமானது நீ யார்? யாருடையவன் நீ? நீ எங்கிருந்து வந்தாய்? இவ்விஷயங்களைப் பற்றிச் சிந்தனை செய்.


* உன் சுற்றத்தாரையோ, செல்வத்தையோ, இளமையையோ பற்றிப் பெருமைப்படாதே. எல்லாவற்றையும் விழுங்கும் காலன், இவற்றையும் ஒரு கணத்தில் விழுங்கிவிடுவான். பொய்யான இப்பொருள்கள் யாவற்றையும் துறந்து, பரமனைக் கண்டு அவனிடம் சரணடைந்து விடு.


* உணர்ச்சிவெறி, கோபம், பற்று, பேராசை இவற்றையெல்லாம் துறந்து, உன் உண்மையான தன்மையைக் கண்டுபிடிக்க முயற்சிசெய்.


* ஆத்ம ஞானம் இல்லாத மூடர் பயங்கர நரகங்களையே அடைவர். இவர்கள் கோயிலிலோ, மரத்தடியிலோ வசிக்கலாம். தரையில் படுத்துறங்கலாம். மான்தோல் போர்த்துக் கொள்ளலாம். விஷய போகங்களை துறக்கலாம். இத்துறவுகளால் யாருக்கு இன்பம் ஏற்படப் போகிறது?


* நண்பனிடமோ, பகைவனிடமோ, மகனிடமோ, உறவினிடமோ, யுத்தத்தின் பாலோ, சமாதானத்தின்பாலோ பற்று வைக்காதே. நீ விரைவில் பரம நிலை அடைய விரும்பினால், எதிலும் சமபுத்தியுடையவனாக இரு. உண்மையைப் பொய்யினின்று வேறுபடுத்தி அறி.


ஆதி சங்கரர் ஆன்மிக சிந்தனைகள்


Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy
 
Sri Chakram

Sri Chakram



ஸ்ரீயந்த்ரம் என்றும் அதைச் சொல்வதுண்டு. 'ஸ்ரீவித்யா பூஜை'என்றாலே ''ஸ்ரீசக்ரம் வெச்சுப் பூஜை பண்றாளா?''என்றுதான் கேட்கிறோம். ''ஆமாம்''என்றே பதில் வரும். எல்லா ஸ்வாமிக்கும் - ஒவ்வொரு ஸ்வாமிக்கும் - ப்ரத்யேகமாக யந்த்ரம் உண்டு. ஆனாலும் சிவ பூஜை, விஷ்ணு பூஜை என்றெல்லாம் பண்ணுகிறவர்கள் பெரும்பாலும் அந்த மூர்த்திகளுக்கான யந்த்ரங்கள் வைத்துப் பண்ணுவதில்லை.

ஆலயங்களில் வேணுமானால் ஸந்நிதிகளில் விக்ரஹங்களுக்குக் கீழே அந்தந்த யந்த்ரம் பூமிக்குள் - சில இடங்களில் வெளியிலேயேகூட - ப்ரதிஷ்டையாகி இருக்குமே தவிர அகங்களில் அப்படியில்லை.

[சிவனுக்கு]பாணம், [விஷ்ணுவுக்கு] ஸாளக்ராமம் என்று வைத்துப் பூஜை பண்ணுபவர்களே நிறைய இருக்கிறார்கள். இப்படிப் பஞ்சாயதன மூர்த்திகளில் அம்பாளுக்கு இயற்கையில் கிடைக்கிற கல் 'ஸ்வர்ண ரேகா சிலா'என்பது. ஆனால் அதை வைத்துப் பூஜிப்பவர்கள் துர்லபமாகவே இருப்பார்கள். ஸுப்ரஹ்மண்ய பூஜை செய்கிறவர்கள் வேலை வைத்தே பூஜிப்பதுண்டு. ஆனாலும் பொதுவில் மற்ற ஸ்வாமிகளுக்கு ஒன்று, அவயவங்களோடு கூடின மூர்த்தி, அல்லது இயற்கையில் கிடைக்கும் கல்லு ஆகியவற்றை வைத்தே பூஜிப்பது வழக்கமாயிருக்க அம்பாளுக்கு மாத்திரம் ஸ்ரீசக்ரம் என்றே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சம் அதோடுகூட - தனியாயில்லை, ஸ்ரீசக்ரத்தோடு கூட - அவயங்களோடு கூடிய விக்ரஹமும் வைப்பது வழக்கத்திலிருக்கிறது.

ஒவ்வொரு தேவதைக்குமான எந்த தந்த்ரத்தை [வழிபாட்டு முறையை]எடுத்துக் கொண்டாலும் அதில் 'மந்த்ரம்', 'யந்த்ரம்'என்று இரண்டு இருக்கும். ஒவ்வொரு விதமான சப்தக் கோவையை ஜபித்து ஜபித்து ஸித்தி பெற்றால் அதற்குரிய தேவதையை ஸாக்ஷத்கரிக்கலாம். அப்படியுள்ள சப்தக் கோவையே அந்த தேவதைக்கான மந்த்ரம் கர சரணாகதிகள் கொண்ட அவயவ ரூபம் போலவே ஒரு தேவதைக்கு இந்த அக்ஷர ஸமூஹமும் ஒரு ரூபம்;சப்த ரூபம், மந்தர ரூபம் என்பது. அதோடுகூட யந்த்ர ரூபமும் இருக்கிறது. ஏதோ கோடும், கோணமும், கட்டமும், வட்டமுமாகத் தெரிகிற யந்த்ரத்தில் அந்த ஒவ்வொன்றுக்கும் அர்த்தமுண்டு; அபார சக்தியுண்டு. ஒவ்வொரு யந்த்ரமும் பரமாத்மாவை ஒரு குறிப்பிட்ட தேவதையாகப் பிடித்துத் தர ஏற்பட்டது. மந்த்ரத்தை மனஸுக்குள் ஜபிப்பது மாத்திரமின்றி யந்த்ரத்திலும் அர்ச்சன, ஆவாஹனாதிகளில் ப்ரயோஜனப்படுத்துவதுண்டு. அந்தந்த யந்த்ரத்தின் கோணங்களுக்கும், தளங்களுக்கும் உள்ளேயே அந்த தேவதைக்கான மந்த்ராக்ஷரங்களைப் பொறித்து வைப்பதும் உண்டு.

அவயங்களோடுள்ள விக்ரஹ ரூபத்திற்குப் பண்ணுவதுபோலவே யந்த்ரத்திற்கு அபிஷேகம், அர்ச்சனை, நைவேத்யம் என்று எல்லா உபசாரங்களுடனும் பூஜை பண்ணவேண்டும். ஏனென்றால் அந்த விக்ரஹத்தின் உயிராகவுள்ள தேவதையேதான் இப்படி யந்த்ர ரூபத்தில் இருப்பதும். அந்த தேவதை மட்டுமில்லாமல் அதனுடைய வாஸ ஸ்தானம், அதனுடைய ஸகல பரிவாரங்கள் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து இந்த யந்த்ர ரூபம் ஏற்பட்டிருக்கிறது.



அம்பாளுக்குப் பல ரூபமிருப்பதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு யந்த்ரமும் உண்டு. ஆனாலும் மீனாக்ஷி, துர்கை, புவனேச்வரி, சாரதாம்பிகை என்று மூர்த்தி வைத்திருப்பவர்களுங்கூட [அந்தந்த மூர்த்திக்கான யந்த்ரமாக இன்றி]ஸ்ரீசக்ரமே வைத்துப் பூஜை பண்ணுவதையும் பார்க்கிறோம். அகங்களில் மாத்திரமில்லை;ஆலயங்களிலும் இப்படி இருக்கிறது. திருவண்ணாமலை கிரிப்ரதக்ஷிணத்தில் ஒரு ப்ரஸித்தமான துர்க்கையம்மன் கோவிலிருக்கிறது.


அங்கே யந்த்ரத்தைப் பார்த்தால் ஸ்ரீசக்ரமாகவே இருக்கிறது. சிருங்கேரியில் சாரதாம்பாள் மூர்த்தியாக இருந்தாலும் ஸ்ரீசக்ரமே பூஜை நடக்கிறது.


இப்படி மற்ற எந்த ஸ்வாமியையும்விட அம்பாளுக்கே யந்த்ரம் விசேஷமாகவும், அம்பாளுக்கே இருக்கப்பட்ட அநேக ரூபங்களுக்கான யந்த்ரங்களிலும் ஸ்ரீயந்த்ரத்திற்கே விசேஷம் என்றும் இருக்கிறது.


கோடுகள், வட்டங்கள், சதுரங்கள், அந்தக் கோடுகளாலான கோணங்கள் இவை எல்லாம் ஒரு சக்ர ரூபத்தில் அமைந்து, மத்ய பிந்துவோடு [நடுப் புள்ளியோடு]இருப்பதே யந்த்ரம் என்பது. இந்த மாதரி டிஸைனுக்கே ஒவ்வொரு தேவதையின் சக்தியை க்ரஹித்துக் கொடுக்கும் சக்தி - அபரிமிதமான சக்தி - இருக்கிறது. [சிரித்து] Divine Design !கெட்ட சக்திகளைத் துரத்தியடிக்கவும், திவ்ய சக்திகளை ஆகர்ஷித்துத் தருவதற்கும் சக்தி படைத்தவையாக அந்த டிஸைன்கள் இருக்கின்றன.


ஸ்ரீ சக்ரத்தில் சக்ரம் என்று வட்டமாக இருக்கும் மத்ய பாகத்தில் ஒன்பது முக்கோணங்கள் ஒன்றையன்று வெட்டிக் கொள்வதில் நாற்பத்து மூன்று முக்கோணங்கள் உண்டாயிருக்கும். மத்ய பிந்துவையும் கோணமாகவே சேர்த்து நாற்பத்து நான்கு கோணங்கள் ஆறு ஆவரணங்களாக அமைந்திருக்கின்றன.

ஆவரணம் என்றால் மறைப்பு என்பது நேர் அர்த்தம். இங்கே சுற்று, ப்ராகாரம், row என்று அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டும். ஒருத்தரைச் சுற்றிப் பல பேர் நின்றால் ஆஸாமி தெரியாமல் மறைக்கத்தானே செய்யும்?அதனால் ஆவரணம் என்று பேர்.

மத்ய பிந்துவையும் கோணம் என்று சொன்னாற் போலவே ஆவரணம் என்றும் சொல்கிறது. வாஸ்தவத்தில் அதைச் சுற்றி நாற்பத்து மூன்று கோணங்களே ஐந்து ஆவரணங்களாக அமைந்திருக்கின்றன. அதையும் சேர்த்து ஆறு ஆவரணம். 'நவாவரணம்', 'நவாவரணம்'என்று ஒரு வார்த்தை பல பேர் கேட்டிருக்கலாம். இப்போது தீக்ஷிதரின் நவாவரண க்ருதிகளுக்கு மவுஸு ஏற்பட்டு ரேடியோவில் ஒலி பரப்புவதால் அந்த வார்த்தை ப்ரசாரத்தில் வந்திருக்கிறது. நவாவரணம் என்பது ஸ்ரீசக்ரத்திலுள்ள ஒன்பது சுற்றுக்கள் தான். அந்த ஆவரணம் ஒவ்வொன்றிலும் யாரார் இருக்கிறார்கள், என்னென்ன தத்வங்கள் இருக்கின்றன, அதற்கு அதிதேவதை யார், அவர்கள் என்ன அநுக்ரஹம் செய்கிறார்கள், அங்கே என்ன முத்ரை காட்ட வேண்டும் என்றெல்லாம் சாஸ்திரங்களில் இருக்கிறது. அதையே சுருக்கமாக தீக்ஷிதர் கீர்த்தனத்தில் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு ஆவரணத்திற்கு ஒரு க்ருதி. இப்போது அதில் ஆறு சொன்னேன். இந்த ஆறில் தான் 44 கோணங்கள் இருப்பது. இந்த ஆறுக்கு வெளியிலே இன்னும் மூன்று சுற்று. அதையும் சேர்த்தாலே நவாவரணம். அதிலே இரண்டு, தாமரை இதழ்கள் வட்ட வடிவமாக அமைந்துள்ள சுற்றுக்கள். இந்த எட்டு ஆவரணத்திற்கும் சேர்த்து வெளி மதிலாக ஒரு ஆவரணம். அது மூன்று காம்பவுண்டுச் சுவர்கள் எழுப்பினாற்போல மூன்று கோடுகளாக வெளியே இருக்கும். அவை சக்ராகாரமில்லை. சதுரம், சதுரமாகவே இருக்கும். இப்படி ஒரு டிஸைன், அபரிமிதமான திவ்ய சக்தியோடு....



ஆனால் இதில் ஜாக்ரதை வேண்டும். ஒரு யந்த்ரம் என்றால் அதில் ஒவ்வொரு கோடும், கோணமும் என்ன பரிமாணத்தில் இருக்க வேண்டுமோ அப்படிக் கணக்காக இருக்க வேண்டும். கொஞ்சங்கூட முன்னே, பின்னே இருக்கக் கூடாது. ஒரு மந்திரத்தில் சப்தம் கொஞ்சம் மாறுபட்டால்கூடப் பெரிய தோஷமாகிவிடலாம் என்பது போலவே யந்த்ரத்திலும் டிஸைனில் சின்னத் தப்பிதம் இருந்தாலும் கெடுதல் உண்டாகிவிடும். டிஸைன் முழுக்க ஸரியாயிருந்தால் கூட, ஸ்ரீ யந்திரத்தில் நடு முக்கோணம் கிழக்கு நோக்கி இல்லாமல், மேற்கு நோக்கியிருக்கும்படி வைத்துவிட்டால் பலனே மாறிவிடும். (பூஜா மூர்த்திகளைக் கிழக்குப் பார்க்க வைப்பதே கிரமம். எனவே ஸ்ரீசக்ரத்தையும் அவ்வாறே வைக்கவேண்டும். அதாவது நடு முக்கோணத்தின் கூர்முனை கிழக்குப் பார்க்க இருக்கவேண்டும்.




அதற்கு எதிரே அமர்ந்து பூஜகர் பூஜிக்கும்போது, ஸ்ரீசக்ரத்தின் ஒன்பது முக்கோணங்களில் நடு முக்கோணம் உள்பட ஐந்தின் முனை அவரை நோக்கியும், மீதம் நான்கின் முனைகள் எதிர்த் திசை நோக்கியும் இருக்கும்.)
இன்னொரு அம்சம், ஜாக்ரதை தேவைப்படும் அம்சம், என்னவென்றால், விக்ரஹம் வைத்துப் பூஜை செய்வதை விடவும் யந்திரத்திற்குச் செய்யும்போது சாஸ்திரோக்தமாகவும், மடி ஆசாரங்களோடும் செய்ய வேண்டும்.


தற்காலத்தில் தெரியாத்தனத்தால் கொஞ்சம், ஜம்பத்துக்காகக் கொஞ்சம், இது ஒரு ஃபாஷன் என்று கொஞ்சம் என்பதாகப் பல 'கொஞ்சம் பேர்'. சேர்ந்து அதுவே 'நிறைய'ஆகி, ரொம்ப வீடுகளில் ஸ்ரீ சக்ர பூஜை என்ற பேரில் ஒன்று நடக்கிறது. ஆனால் நியமங்கள் போதாததால் துர்பிக்ஷம், அசாந்திகளும் விருத்தியாகிக் கொண்டேயிருக்கின்றன!


ஆசைப்பட்டால் மட்டும் போதாது, அது அதற்கு எப்படி சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறதோ, பெரியவர்கள் செய்து காட்டியிருக்கிறார்களோ அப்படி நாமும் செய்தால்தான் பலன் வரும். ஸ்ரீசக்ரத்தின் விசேஷத்தைப் பற்றி சாஸ்திரத்தில் நிரம்பச் சொல்லியிருப்பது வாஸ்தவம். ஆனால் அதை எப்படிப் பூஜிக்க வேண்டுமென்றும் அதே சாஸ்திரத்தில் சொல்லியிருப்பதைத் தள்ளிவிட்டு, ''இஷ்டப்படி, ஸெளகர்யப்படி [பூஜை]பண்ணுவேன்!''என்றால் பலன் கிடைக்காது. விபரீத பலனே கிடைக்கலாம்....


யந்த்ரம் என்பது ஒரு தேவதையின் இருப்பிடமாகவும், அது மாத்திரமில்லாமல், ஸாக்ஷத் அந்த தேவதைக்கு ப்ரதிநிதியாகவுமே இருப்பது 'ப்ரதி'நிதி என்பதுகூட ஸரியில்லை. 'ப்ரதி'- 'காப்பி'- இல்லை; அஸலே அந்த தேவதைதான் இப்படி டிஸைன் ரூபத்திலிருப்பதும்.


அதிலும் அம்பாள் ஸ்ரீவித்யா தேவதையாக இருக்கும் போது யந்த்ர ரூபத்திலேயே விசேஷமாக ஸாந்நித்யம் கொண்டிருக்கிறாளென்பதால்தான் அந்த ஸ்ரீயந்த்ரத்திற்கு அலாதியான சிறப்பு இருக்கிறது. அம்பாளுடைய பரம ஸெளந்தர்யமான அவயவ ரூபத்தைவிடக் கூட இந்த யந்த்ர ரூபத்திற்கே சிறப்புத் தந்து பூஜிப்பதாக இருக்கிறது. (நாமம், ரூபம் என்ற இரண்டை விசேஷமாகச் சொல்கிறோம். ஆனால் பொதுவாகவே தாய்த் தெய்வத்தின் மந்திரங்களில் நாமம் என்பதே மிகப் பெரும்பாலும் இல்லை. ஸ்ரீவித்யா மந்திரங்களிலோ அடியோடு இல்லை. பீஜாக்ஷரங்களே உள்ளன. அவ்வாறே ஸ்ரீவித்யா தேவதை த்ரிபுர ஸுந்தரி என்று அழகு உருவத்தாலேயே பெயர் பெற்றிருந்தும் அவளுக்கு உருவம் அமைக்காமல் யந்திரத்திலே வழிபடுவதே அதிகம் காண்கிறது. ஏன் இவ்வாறு நம் அன்னை விஷயத்தில் மட்டும் நாமம், ரூபம் இரண்டும் முக்யம் பெறாமலுள்ளன என்று ஸ்ரீசரணர்களிடம் கேட்கப்பட்டதுண்டு. ஆனால் அவர்களோ இவ்விதம் இருப்பதைத் தாமும் திரும்பச் சொல்லி வியந்து கொள்வதாகக் கட்டினார்களே தவிர விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.)



அம்பாளுக்கு இரண்டு வாஸ ஸ்தானம். அம்ருத ஸாகரத்தில் ஒன்றும், மேரு மத்தியில் ஒன்றுமாக என்றேனல்லவா?அதோடு மூன்றாவது வாஸஸ்தானமாக ஸ்ரீசக்ரத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.....

இப்போது நான் சொன்னதில் இரண்டு தப்பு. ஒன்று, ஸ்ரீ சக்ரம் அம்பாளுடைய வாஸஸ்தானம் மட்டுமில்லை;அவளுமேதான்!வாஸஸ்தானம் + வஸிக்கிற ஆஸாமியாக அது இருக்கிறது!இன்னொரு தப்பு என்னவென்றால் அம்ருதஸாகரம் மாதிரியும், மேரு சிகரம் மாதிரியும் இது மூன்றாவது [வாஸ ஸ்தானம்]இல்லை. அம்ருத ஸாகரமானாலும் ஸரி, மேரு சிகரமானாலும் ஸரி, அங்கே சிந்தமணி க்ருஹம் என்ற அரண்மனையிலே இந்த ஸ்ரீ யந்த்ரம் இருக்கும். நம் அகங்களில் ஒரு கையளவு இருக்கும் யந்த்ரம் அங்கே ஆயிரம், பதினாயிரம் மடங்கு பெரிசாக ஆவரணம் என்று சொல்லும் ஒன்பது சுற்று அங்கணங்களோடு இருக்கும்.


அந்த ஒன்பதிலும் அநேக தேவதைகள், தத்வங்கள் அம்பாளின் பரிவாரங்களாக இருப்பார்கள். ஒன்பதாவதாக உள்ள மத்ய பிந்துதான் பஞ்ச ப்ரம்மாஸனத்தில் அம்பாள் இருக்கிற இடம்.


மேரு சிகரத்திலே அம்பாள் இருக்கும்போது இந்த ஒவ்வொரு ஆவரணமும் அந்த சிகர மத்தியிலே சிகரத்திற்கு மேல் சிகரங்களாகத்தானே எழும்பியிருக்கும்?அந்த அமைப்பில்தான் ஸ்ரீ சக்ரத்தையே ஸமதளத்தில் நீளம், அகலம் ஆகிய இரண்டு பரிணாமத்தில் பண்ணுவது மாத்திரமில்லாமல் உயரமும் சேர்த்து, அடுக்கடுக்காக, மூன்று தளத்தில் cone -ஆக [கூம்பாக]ப் போய்முடிகிற விதத்திலும் பண்ணுவதாக இருக்கிறது.

இப்படி மூன்று பரிணாமத்தில் உள்ள ஸ்ரீ சக்ரத்திற்கு மேரு ப்ரஸ்தாரம் என்றே பேர். மேரு என்று மாத்திரம் அதைச் சொல்வதாகவும் ஏற்பட்டுவிட்டது. ஸமதளமாக பூமி மட்டத்தோடு இருக்கும் ஸ்ரீசக்ரத்திற்கு பூப்ரஸ்தாரம் என்று பெயர். இரண்டும் கலந்து, ஆரம்ப ஆவரணங்கள் உயரவாட்டிலும் பிற்பாடு வருபவை ஸம தளமாகவும் அமைந்ததை அர்த்த மேரு என்பார்கள். எல்லா ஆவரணமும் மேரு ப்ரஸ்தாரமாயிருந்தால் பூர்ண மேரு. காஞ்சீபுரத்தில் காமகோஷ்டத்தில் இருப்பது பூப்ரஸ்தாரம். நம் மடத்தில் பூர்ண மேரு.
மாங்காட்டில் அர்த்த மேரு. திருவிடைமருதூர் மூகாம்பாள் ஸந்நிதியில் பூர்ண மேரு.



?????????? :???? ???????????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய

ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா

ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும்
ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா

ஸ்நானம் என்றால் நதியில் நீராடுவதும் அல்லது பக்கெட்டில் இருந்து எடுத்து உடலில் ஊற்றிக்கொள்வதும் பளிச் சென்று நம் நினைவுக்கு வரும். ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நமது சாஸ்திரங்களில் இருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகின்றது. ஸ்நானங்கள் இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முக்கிய ஸ்நானம், கௌண ஸ்நானம் ஆகும். க்ரியா ஸ்நானம், காம்ய ஸ்நானம், நைமித்திக ஸ்நானம், க்ரியாங்க ஸ்நானம் மலாபாஹர்ஷண ஸ்நானம், நித்ய ஸ்நானம் ஆகியவை முக்கியமானவை.

க்ரியா ஸ்நானம்: பவித்திரமான புண்ணிய நதிகளில் நீராடுவதுதான் க்ரியா ஸ்நானம். நதிகளில் நீராடும்போது, நதியின் நீரோட்டம் எந்தப் பக்கம் இருக்கின்றதோ, அதற்கு எதிர்முகமாக நின்றுகொண்டு (நீரோட்டத்தை எதிர்த்தாற்போல்) நீரில் நன்கு மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.

காம்ய ஸ்நானம்: ஒரு சிலருக்கு பரிகாரத்துக்காக சில ÷க்ஷத்திரத்தில் இருக்கும் குளங்களில் ஸ்நானம் செய்ய நேரிடும். அவ்வாறு குளிக்கும்போது, வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் சூரியனைப் பார்த்து நின்றுகொண்டு குளத்தில் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.

நைமித்திக ஸ்நானம்: சூரிய கிரகணம், சந்திர கிரகணம், துக்கத் தீட்டு, பிரசவத் தீட்டு, க்ஷவரத் தீட்டு, தம்பதியர் சேர்க்கைத் தீட்டு இவற்றுக்காகச் செய்யப்படும் ஸ்நானமே நைமித்திக ஸ்நானம் ஆகும். இந்தத் தீட்டைக் களைய, குளங்களில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு நீராட நேர்ந்தால், கிழக்கு நோக்கியபடி நின்றுகொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். அதைத் தவிர, கிணற்றங்கரையிலோ பாத்ரூமிலோ குளிப்பவர்கள், கிழக்கு முகமாகப் பார்த்தவண்ணம் ஸ்நானம் செய்ய வேண்டும்.

க்ரியாங்க ஸ்நானம்: ஹோமம், ஜபம், பித்ருகர்மா முதலியவை செய்வதற்காக நீராடுவதுதான் க்ரியாங்க ஸ்நானம். ஹோமம், ஜபம் முதலியவை செய்வதை முன்னிட்டு, ஸ்நானம் செய்யும்போது கிழக்கு திக்கைப் பார்த்தும், பித்ருகர்மா செய்யும்போது தெற்கு திக்கைப் பார்த்தபடியும் நின்று கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.

மலாபாஹர்ஷண ஸ்நானம்: சரும வியாதிகளைப் போக்கிக் கொள்ள தைலங்கள் தேய்த்துக்கொண்டு குளித்தல் மற்றும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு மலாபாஹர்ஷண ஸ்நானம் என்று பெயர். இந்த ஸ்நானத்துக்கும் கிழக்கு நோக்கித்தான் நீராடவேண்டும். சூரிய உதயத்துக்குப் பின் உச்சிவேளைப் பொழுதுக்கு ஸ்நானம் செய்ய வேண்டும்.

நித்ய ஸ்நானம்: அன்றாடம் உடலிலுள்ள அழுக்கைப் போக்கிக் கொள்வதற்காச் செய்யப்படும் ஸ்நானமே நித்ய ஸ்நானம் எனப்படுகிறது. சாஸ்திரத்தில் தினமும் மூன்று முறை ஸ்நானம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

கௌண ஸ்நானம்: மேற்கூறிய முக்கிய ஸ்நானங்களுக்குப் பதிலாக, தேக ஆரோக்கியம் காரணமாக சாஸ்திரத்தில் கூறிய முறைப்படி அல்லாமல் மாற்று முறையில் செய்யப்படுவதுதான் கௌணஸ்நானம். உதாரணமாக, தலையில் ஜலம் ஊற்றிக்கொள்ள உடல்நலம் இடம் தராமல் கழுத்தோடு குளிப்பது அல்லது அதுவும் முடியாமல் மஞ்சள் கலந்த நீரை ப்ரோக்ஷித்துக்கொண்டு விபூதியை இட்டுக்கொள்வது போன்றவை முக்கிய விதியைத் தவிர்த்து, கௌண விதியை அனுசரித்து மேற்கொள்ளும் முறையாகும். சாஸ்திர முறைகள் ஒருபக்கம் இருக்க, லௌகீகமாக பஞ்ச ஸ்நானங்கள் என்பதும் உண்டு. அதாவது, பஞ்சபூதங்களின் சக்திகள் நம்மை இயக்குகின்றன என்பதை பஞ்ச ஸ்நானங்களின் மூலம் லோகாயதமாக அறிந்துகொள்ள முடிகிறது.

1. அக்னி சம்பந்தமுடைய பஸ்மத்திலிருந்து விபூதி கிடைப்பதால், விபூதி தரித்துக்கொள்வதை ஆக்நேய ஸ்நானம் என்றும் தேயுவுக்கு சம்பந்தமாகவும் கூறப்படுகிறது.

2. பசுக்கள் செல்லும்போது அவற்றின் குளம்படிகளிலிருந்து கிளம்பும் மண் காற்றின் மூலம் மேலே படுவது சிரேஷ்டமாகக் கூறப்படுகின்றது. அதற்கு வாயவ்ய ஸ்நானம் என்று பெயர். இது, வாயுவின் பெயரால் பெறப்படும் ஸ்நானம்.

3. சாதாரணமாக, வெறுமனே நீரை மட்டும் தேகத்தில் விட்டுக்கொண்டு குளிப்பது வாருண ஸ்நானம் அதாவது, வாருணம்தான் அப்பு என்பது.

4. மந்திரங்கள் யாவும் ஆகாசத்தில் ஒலியாக வியாபித்திருக்கின்றன. பூஜைகளின்போதும் ஹோமங்களின்போதும், ஒரு கலசத்தில் இருக்கும் நீரை மந்திரங்கள் கூறிய படி தர்ப்பையால் புரோகிதர் நம்மேல் தெளிப்பதற்கு ப்ராஹ்ம ஸ்நானம் என்று பெயர். பஞ்சபூதங்களில் ஆகாயத்துக்கானது இது.

5. நடக்கும்போது பசுக்களின் குளம்படி மண்ணானது வாயுதேவனின் உதவியோடு நம்மேல் பட்டாலும், அந்த மண்ணானது (கோ தூளி) ஒருவரைப் புனிதமாக்குவதாகப் கூறப்படுகிறது. மேலும், ரோக நிவாரணத்துக்காக மேனியில் பூசப்படும் புற்றுமண் போன்றவையால் இதை மிருத்திகை ஸ்நானம் என்கிறார்கள். இவை இரண்டுமே ப்ருத்விக்காகக் கூறப்படுகிறது. இவையெல்லாவற்றையும்விட விசேஷமாகவும் ஸ்ரேஷ்டமாகவும் சொல்லப்படுவது திவ்ய ஸ்நானம் என்பது. அதாவது, வெயில் காயும்போதே சில சமயங்களில் மழைத் தூறல்களும் சம்பவிக்கும். அப்போதைய மழைத்துளிகள் தேவலோகத்தில் இருந்துவரும் தீர்த்தத்துக்குச் சமமாகக் கருதப்படுகின்றது. அப்படிப்பட்ட வேளையில் எல்லோரும் அந்தப் புனித நீரில், அதாவது, திவ்ய ஸ்நானத்தில் நனைந்து நம்மைப் புனிதப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா கூறியிருக்கிறார்.

இது பெண்களுக்கு மட்டும்

விசேஷ தினங்களைத் தவிர, மற்ற நாட்களில் பெண்கள் தலைக்குத் தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. மஞ்சள் தண்ணீரை, தலைக்கு புரோக்ஷணம் செய்து கொண்டாலே போதும் என்று சாஸ்திரத்தில் கூறியிருக்கிறது என்கிற தகவலையும் ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா தெரியப்படுத்தியிருக்கிறார். ஸ்நானம் என்பது, உடல் அழுக்கை மட்டும் போக்குவதற்காக மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்பு எனக் கொள்ளக் கூடாது. ஆன்மாவின் பாவங்களைக் களைவதற்காகவும் மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்ப என்பதை மனதில் ஆழமாக பதியவைத்துக்கொண்டு நீராட வேண்டும். ஒவ்வொரு முறை ஸ்நானம் செய்யும்பொழுதும்,

கங்கேச யமுநே சைவ கோதாவரீ ஸரஸ்வதீ

நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதிம் குரு

என்கிற ஸ்லோகத்தைக் கூறி ஸ்நானம் செய்தால், ஏழு புண்ணிய நதிகளிலும் ஸ்நானம் செய்த பலன் கிட்டும்.




ராதே கிருஷ்ணா 27-05-2014
Guruji: ??????? ?????? ????????? ???????? ????? ???????? ???? ???? ??? ???????
 
நரசிம்மர் தோன்றுதல்

நரசிம்மர் தோன்றுதல்

TN_110909150107000000.jpg



சுரேஷ்வாச்சாரியாரும், மற்ற சீடர்களும் பின் தொடர, ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் வந்து மல்லிகார்ஜுன சுவாமியை தரிசனம் செய்தார். அங்கு ஒரு நாள் ஒரு காபாலிகன் வந்தான். சங்கரர் துர்மதங்களைக் கண்டித்து அத்வைதத்தை நிலைநாட்டி, வருவதைப் பார்த்து , தன் மதமும் போய்விடுமோ என்று பயந்து, எப்படியாவது அவரை ஒழித்துவிடவேண்டும் என்று நினைத்தான்.

அவன் சங்கரரிடம், நான் பல ஆண்டுகளாக இவ்வுடலுடன் கைலாயம் செல்ல எண்ணி பரமசிவனைக் குறித்து தவம் செய்து வருகிறேன். அவர் என் முன் தோன்றி, எல்லாம் அறிந்த ஒருவன் ஞானி அல்லது சக்கரவர்த்தி இவர்களில் ஒருவருடைய தலையை எடுத்து அக்னியில் போட்டு ஹோமம் செய்தால் உன் எண்ணம் ஈடேறும் என்று அருளினார். ஆனால் இக்காலத்தில் சக்ரவர்த்தி தலை கிடைப்பதரிது. தாங்கள் ஒரு ஞானி. எல்லாமறிந்தவர். உங்கள் தலையை நான் வெட்டினால் உங்களுக்கு துக்கமேற்படாது. எனக்கும் காரியம் கைகூடும் என்று வேண்டினான்.

அவன் சொன்னதை புரிந்து கொண்ட சங்கரர், சிரித்துக் கொண்டே, தன் தலையை பலியாகக் கொடுக்க தமக்கு ஆட்சேபணை இல்லையென்று சொன்னார். தம் சீடர்களுக்குத் தெரியாமல் பைரவர் கோயிலுக்குத் தாம் வருவதாக கூறி, நள்ளிரவில் கோயில் இருந்த குகைக்குப் புறப்பட்டார். தன் குருவுக்கு ஏதோ ஆபத்து என்று பத்மபாதர் உணர்ந்தார். ஆகவே குருவைக் காப்பாற்றும்படி பகவான் நரசிம்மரை மனமுருக வேண்டிக் கொண்டார். நரசிம்ம மந்திரத்தில் சித்தி பெற்றிருந்த பத்மபாதர் தானே நரசிம்மமாகி சங்கரர் இருக்குமிடத்திற்கு குதித்து ஓடிவந்து காபாலிகன் மேல் பாய்ந்து அவன் மார்பை பிளந்து அவனைக் கொன்றார்.

நரசிம்மன் செய்த அட்டகாசத்தால் தியானம் கலைந்த சங்கரர் கண்ணைத்திறந்து பார்த்து நடந்ததை அறிந்து கொண்டார். இதன்பின் சங்கரர் கோகர்ணம், ஹரிபுரம் முதலிய இடங்களில் யாத்திரை செய்து பின், கொல்லூர் மூகாம்பிகை தலத்திற்கு வந்தார். அங்கு தமது ஒரே புதல்வன் இறந்து போய் அச்சடலத்தை மடியில் வைத்துக்கொண்டு வருந்தும் தம்பதிகளைக் கண்டு சங்கரர் மனம் உருகி, கடவுளை பிரார்த்திக்க இறந்த புதல்வன் உயிர்பெற்று எழுந்தான். அதன்பின் சங்கரர் மூகாம்பிகையின் ஆலயத்துள் சென்று அம்பிகையைத் துதித்து, தன் சிஷ்யர்களுடன் சில தினங்கள் இங்கு தங்கி இருந்தார். சங்கரர் கொல்லூரில் தங்கியிருந்த போது, அவருக்கு கடுமையான காய்சச்சல் ஏ ற்பட்டது. அவருடைய காய்ச்சலை குணப்படுத்த, மூகாம்பிகையே கசாயம் தயாரித்து சங்கரருக்கு கொடுத்து குணப்படுத்தியதாகவும், அதன் அடிப்படையில் இன்றும் கூட மூகாம்பிகைக்கு இரவு நைவேத்தியத்தியன் போது கசாயம் வைக்கப்படுவதாக கூறுவர்.

சங்கரரின் மற்றொரு சீடர் ஹஸ்தாமலகர்: சங்கரர் கர்நாடகாவில் பல புண்ணிய தலங்களுக்கு சென்றார். அப்போது ஸ்ரீவாடியில் கடவுள் பக்தியுள்ள ஒரு அந்தணர் தனது ஊமை மகனை அழைத்துக் கொண்டு சங்கரரிடம் வந்தார். அவரை நமஸ்கரித்து, ஐயா! என் மகன் ஊமையாக மட்டுமல்லாமல் மூளை வளர்ச்சியின்றி காணப்படுகிறான். தாங்கள் தான் அவனை குணப்படுத்த வேண்டும் என்று சொன்னார். சங்கரர் சிறுவனைப் பார்த்து, நீ யார்! ஏன் இப்படி ஜடம் போல் இருக்கிறாய் என்று கேட்டார். அதுவரை ஊமையாக இருந்த சிறுவன் பேச ஆரம்பித்தான். நான் ஜடமில்லை, சித்ஸ்வரூபி என்று பதிலளித்து 12 ஸ்லோகங்களால் ஆத்ம தத்துவத்தை விளக்கினார். இதுவே ஹஸ்தாமலகீயம் என்று சொல்லப்படுவது. சங்கரர் இதற்கு உரை இயற்றியுள்ளார். சங்கரர் அச்சிறுவனை ஆசிர்வதித்து, அவனுக்கு ஹஸ்தமாலகா (உள்ளங்கை நெல்லிக்கனி) என பெயரிட்டு தன் சீடராக ஏற்றுக் கொண்டார்.



ஹஸ்தாமலகருக்கு எப்படி பிறவியிலேயே, பாடம் கற்காமலே ஞானம் வந்தது என்று சீடர்கள் வினவ, சங்கரர் கூறினார். யமுனா நதிக்கரையில் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் ஒரு மாது தனது இரண்டு வயது பாலனை அவரிடம் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு நதியில் ஸ்நானம் செய்யச் சென்றாள். தற்செயலாக குழந்தை நதியில் விழுந்து இறக்க மக்கள், அந்தக் குழந்தையின் சடலத்தை அந்த முனிவர் முன் இட்டு புலம்பினார்கள். கருணை மிகுந்த முனிவர் நடந்ததை அறிந்து, தன் யோகசக்தியால் குழந்தையின் உடலில் புகுந்தார். அவரே ஹஸ்தாமலகர் என்று சங்கரர் உரைத்தார்.


சிருங்கேரி சாரதா: சங்கரர் கர்நாடகா துங்கபத்திரை நதிக்கரையில் இருந்த சிருங்கேரிக்கு வந்து சேர்ந்தார். தசரதர் புத்ரபாக்யம் வேண்டி செய்த புத்ரகாமேஷ்டி யாகத்தை நடத்தி வைத்த ரிஷ்யசிருங்க மாமுனிவரின் ஆசிரமம் இங்கு இருந்தது. இங்கு நிறைமாத கர்ப்பிணியான ஒரு தவளை வெயிலில் உஷ்ணம் தாங்காமல் தவிக்கும்போது ஒரு நாகப்பாம்பு படமெடுத்து தன் தலையால் குடைபிடித்து அத்தவளையைக் காப்பாற்றிய அற்புத காட்சியை சங்கரர் கண்டார். இயல்பாகவே, விரோதிகளான இவை இரண்டும் ஒன்றாக இருப்பதைக் கண்ட சங்கரர் இந்த இடம் மிகவும் சக்திவாய்ந்த இடம் என கருதினார். முன்பு உபயபாரதியை வனதுர்கா மந்திரத்தால் கட்டுப்படுத்தி தான் விரும்பும் இடத்தில் அமர்ந்து அருள்பாலிக்க வேண்டும் என்று செய்த வேண்டுகோள் நினைவுக்கு வர, அதன்படியே அவளுக்கு ஓர் ஆலயத்தை ஏற்படுத்தி பிரம்மஸ்வரூபிணியாக சாரதாபரமேஸ்வரியை பிரதிஷ்டை செய்தார்.



இன்னுமொரு சீடர் தோடகாச்சாரியார்: சிருங்கேரியில் சங்கரர் தங்கியிருக்கும் இடத்திற்கு அநேக சீடர்கள் வந்தார்கள். அவர்களில் கிரி என்ற சீடரும் ஒருவர். இவர் சற்று மந்த புத்தி உடையவர். அதிகம் பேசமாட்டார். ஆனால் குரு சங்கரர் மீது மிக்க பக்தி கொண்டிருந்தார். எப்போதும் குரு சேவையிலேயே ஈடுபட்டிருப்பார். பாடங்களை கிரஹிக்கத் திறமையற்றவர். இதனால் மற்ற சீடர்கள் அவரை அலட்சியப்படுத்தினர். ஒருநாள் வகுப்பு ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ஆனால் கிரி வரவில்லை. அவர் குருவின் துணிகளைத் துவைப்பதற்காக துங்கபத்திரா நதிக்குச் சென்றிருந்தார். கிரி வந்தவுடன் பாடம் ஆரம்பிக்கலாம் என்று சங்கரர் கூறினார். கிரியோ மந்தமாக இருக்கிறார். அவருக்காக நாம் காத்திருப்பானேன்! என்று மற்ற சீடர்கள் கூறினர். தம் சீடர்களுக்கு பாடம் கற்பிக்க விரும்பிய சங்கரர், மனதினாலேயே தியானம் செய்து கிரிக்கு எல்லா வித்யைகளும் தோன்றட்டும் என்று அருள்புரிந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் கிரி உள்ளே நுழைந்தார். தம் குருவைப் பாராட்டி தோடகா என்னும் பண்ணில் எட்டு ஸ்லோகங்கள் கொண்ட ஒரு பாட்டைப் பாடிக்கொண்டு வந்தார். இந்த துதியே தோடகாஷ்டகம் ஆனது. இதனாலேயே கிரி, தோடகாச்சாரியார் என்று அழைக்கப்பட்டார். அன்றிலிருந்து மற்ற சீடர்கள் தோடகாச்சாரியார் மீது மிக்க மதிப்பு வைக்க ஆரம்பித்தனர்.



குருவின் உத்தரவுப்படி எல்லா சீடர்களும் பல நூல்களை இயற்றினார்கள். சங்கரர் அருளியுள்ள தைத்திரீய உபநிஷத் உரைக்கும், பிருஹதாரண்யக உபநிஷத் உரைக்கும், சுரேஸ்வரர் மறு விளக்க உரை இயற்றியுள்ளார். இது தவிர நைஷ்கர்ம்ய ஸித்தி என்ற தனி நூலும் செய்திருக்கிறார். அதுபோல சங்கரரது தட்சிணாமூர்த்தி அஷ்டகம் என்ற ஸ்தோத்திரத்திற்கு மானஸோல்லாசம் என்ற பெயரில் ஒரு உரை இவரால் செய்யப்பட்டது. பஞ்சபாதிகா என்ற பெயரில் பிரம்மசூத்திரங்களுக்கு பொருள் கூறும் ஒரு விரிவான நூலையும், சங்கரருடைய பிரபஞ்சஸாரம் என்ற மந்திர சாஸ்திர நூலுக்கு ஒரு உரையும் பத்மபாதரால் செய்யப்பட்டது. தோடகாச்சாரியார் சங்கரர் பெயரில் தோடகாஷ்டகம் என்ற துதியையும், ச்ருதி ஸாரஸமுத்தரணம் என்ற நூலையும் இயற்றியிருக்கிறார். ஹஸ்தாமலகருடைய ஸ்லோகங்கள் ஹஸ்தாமலகீயம் எனப்படும். இவ்வாறு சங்கரர் சீடர்களுடன் 12 ஆண்டுகள் சிருங்கேரியில் தங்கியிருந்தார்.

Adi Sankara | ????????? ?????????
 
தீபாவளியின் தம்பி

தீபாவளியின் தம்பி

கங்கை சிவ சம்பந்தமா, விஷ்ணு சம்பந்தமா என்பதை பூமாதேவி நினைக்கவில்லை. சைவ, வைஷ்ணவ வித்யாசமில்லாமல் சமஸ்த ஜனங்களும் புண்ய தீர்த்தங்களுக்குள் அக்ர (முதன்மை) ஸ்தானம் தருவது கங்கைக்குத் தானே? அதனால் தீபாவளி ஸ்நானத்துக்கு கங்கா ஸ்நான பலன் ஏற்படவேண்டும் என்று வரம் பெற்றாள்.



சாதாரணமாக எந்த க்ஷேத்திரத்தின் ஸ்தல புராணத்தைப் பார்த்தாலும், ‘இது காசிக்கு சமமானது; அல்லது காசியையும் விட உசந்தது’ என்றே இருக்கும். இப்படி ஒரு க்ஷேத்திரத்தை மற்ற எந்த க்ஷேத்திரத்தோடும் ‘கம்பேர்’ பண்ணாமல் காசியோடேயே எல்லா க்ஷேத்திரங்களையும் ஒப்பிட்டிருப்பதாலேயே காசிதான் க்ஷேத்ர ராஜா என்று தெரிகிறது.


இப்படியே மற்ற புண்ய தீர்த்தங்களைப் பற்றிய புராணங்களிலும் அவற்றை ஒன்றோடொன்று ஒப்பிட்டு உசத்தி சொல்லாமல், அந்தந்த நதியையும் பற்றி ‘இது கங்கா துல்யமானது’ அல்லது ‘கங்கையை விட விசேஷமானது’ என்றுதான் சொல்லியிருக்கும். இதனாலேயே கங்கைதான் தீர்த்தங்களில் தலைசிறந்தது என்று ‘ப்ரூவ்’ ஆகிறது.


நம் ஆசார்யாளே பகவத்கீதா கிஞ்சித் அதீதாகங்கா ஜலலவ கணிகா பீதாஸக்ருதபி ஏன முராரி ஸமர்ச்சாக்ரியதே தஸ்ய யமேந சர்ச்சாஎன்று பஜகோவிந்தத்தில் சொல்கிறார். ‘எவன் கொஞ்சமாவது கீதா பாராயணம் பண்ணி, துளியாவது கங்கா தீர்த்தத்தைப் பானம் பண்ணி, ஒரு தடவையாவது முராரிக்கு அர்ச்சனை பண்ணுகிறானோ அவனுக்கு யமனிடம் வியவஹாரம் ஒன்றுமில்லை. அதாவது யமலோகத்துக்கு, நரகத்துக்குப் போகாமல், புண்ய லோகத்துக்கு அவன் போகிறான்’ என்று அர்த்தம்.

நமனை அஞ்சோம் என்று அப்பர் சுவாமிகளும், நலியும் நரகும் நைந்த; நமனுக்கிங்கு யாதொன்றுமில்லை என்று நம்மாழ்வாரும் சொன்ன மாதிரி, கங்கா தீர்த்த பானம் பண்ணினவனிடம் யமனுக்கு ‘ஜூரிஸ்டிக்‌ஷன்’ (ஆணையில்லை) இல்லை என்று பகவத்பாதாள் சொல்கிறார்.


இந்த ஸ்லோகத்தில் ஒரு ஆச்சரியம், இதில் சொல்லியிருக்கிற கீதை, கங்கை, முராரி, யமன் ஆகிய நாலுக்குமே தீபாவளி சம்பந்தம் இருப்பதுதான். கீதையை நான் தீபாவளியின் தம்பி என்று சொல்வது வழக்கம். ஏன்? தீபாவளிக்கு நான் என்ன சிறப்புச் சொன்னேன்? சற்றும் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில், அதாவது மகத்தான புத்ர சோகத்தின் மத்தியில் இப்படிப்பட்ட கோலாஹலமான பண்டிகையை ஒரு தாயார்க்காரி உண்டாக்கிக் கொடுத்ததால்தான் அது பண்டிகைகளுக்கே ராஜாவாக இருக்கிறது என்றுதானே சொன்னேன்.


இதே மாதிரிதான், எத்தனை மதப் புத்தகங்கள், தத்வ சாஸ்திரங்கள் இருந்தாலும், அதற்கெல்லாம் சிகரமாக ‘கீதை’, ‘கீதை’ என்றே ஆதிகால மதாசாரியர்களிலிருந்து திலக், காந்தி, இப்போதுள்ள பல சாதுக்கள், பிலாஸஃபிகாரர்கள், அரசியல்வாதிகள்வரை எல்லோரும் கொண்டாடுவதைப் பார்க்கிறோம்.
கீதையும் தீபாவளி மாதிரியேதான் கொஞ்சமும் எதிர்பார்க்க முடியாத சந்தர்ப்பத்தில் பிறந்த தியாக சக்தியிலிருந்து தோன்றியிருக்கிறது. சாதாரணமாகத் தத்வோபதேசம் என்றால் விச்ராந்தியான ஆசிரமத்திலே வயசான குரு, வயசில் சின்னவனான சிஷ்யனுக்குச் செய்வதாக இருக்கும். ஆனால் இந்த பகவத்கீதையோ நேர்மாறாக யுத்த பூமியில், கோரமான ரணகளத்தில் பிறந்தது.


அர்ஜுனன் தனக்கு சம வயசினனான கிருஷ்ணரிடம், தான் யஜமானனாயிருந்து, அவர் வண்டிக்காரனாகத் தேரோட்டுகிறபோது பெற்றுக் கொண்ட உபதேசம். அடுத்த க்ஷணமே தன் தலை போனாலும் போகக்கூடும் என்கிற ஆபத்தான சந்தர்ப்பத்தில் பிராணனை விட சத்யத்தைத் தெரிந்து கொள்வதுதான் பெரிசு என்ற தியாக புத்தியுடன் அர்ஜுனன் பகவானிடம், ‘சிஷ்யஸ்தேஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம்’ - “சிஷ்யனாக நான் உன்னிடம் சரணாகதி பண்ணிவிட்டேன். எனக்கு உபதேச ரூபமாக உத்தரவு போடு” என்று நமஸ்காரம் செய்தபோது கீதை பிறந்தது.


இதனால்தான் பண்டிகைகளில் தீபாவளி மாதிரி புத்தகங்களில் கீதை உச்சியாக இருக்கிறது. தீபாவளி, கீதை இரண்டையும் கிருஷ்ணரே தான் கொடுத்திருக்கிறார். அடுத்ததாக ஆசார்யாள் சொல்கிற கங்கைக்கும் தீபாவளிக்கும் உள்ள ‘கனெக்‌ஷன்’ இத்தனை நாழி பார்த்தோம்.


மூன்றாவதாக முராரியை அர்ச்சிக்க வேண்டும் என்கிறார். பகவானுடைய பெயர்கள் எத்தனையோ இருக்க ‘முராரி ஸமர்ச்சா’ என்றே சொல்கிறார். நரகாசுரனின் சகாவான முரனைக் கொன்றபோதுதான் பகவான் முராரியானார் என்பதைச் சற்று முன்தான் பார்த்தோம்.


கடைசியில் ஆசார்யாள் யமனைப் பற்றிச் சொல்கிறார். நரகன் என்றவுடனேயே நரகத்தின் ஞாபகமும் யமதர்மராஜா ஞாபகமும்தான் வருகின்றன. அதுவும் தவிர, தீபாவளியன்று யமனுக்குத் தர்ப்பணம் பண்ண வேண்டுமென்று சொல்லியிருக்கிறது.


வட தேசத்தில் தீபாவளிக்கு முதல் நாள் யம தீபம் என்றே போடுகிறார்கள்.

??????????? ????? - ?? ?????
 
ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு

ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு




ஸ்திரீகளுக்குப் புத்திர சோகத்தைக் காட்டிலும் வேறு பெரிய சோகம் கிடையாது. என்றாலும் நரகாசுரன் மரணமடைந்தபோது அவனது தாய் லோக முழுவதையும் ஏக சக்ராதிபதியாகப் பரிபாலனம் செய்த புத்திரன் போய் விட்டானே என்ற துக்கத்துக்கு இடம் தர வில்லை. "அவனுக்கு பகவானை நேரில் பார்க்கிற பாக்கியம் கிடைத்ததே" என்று மனதை ஆறுதல் செய்துகொண்டு, லோக க்ஷேமமாக அன்று பண்டிகை கொண்டாடவேண்டுமென்று பிரார்த்தனை செய்து கொண்டாள். 'என் பிள்ளை போனது இருக்கட்டும். எனக்கு பிள்ளை போன துக்கம் ஏற்பட்டாலும் லோகத்தில் இருப்பவர்களுக்கு ஒரு துக்கமும் ஏற்படக்கூடாது, ஆக இன்றைக்கு எல்லோரும் எண்ணை தேய்த்துக்கொண்டு, புத்தாடை உடுத்திக்கொண்டு, நல்ல விருந்து உண்டு, சந்தோஷமாக இருக்க வேண்டும்' என்று பகவானிடம் வேண்டிக் கொண்டாள்.

நரகாசுரனுடைய தாய்க்குத்தான் தன்னுடைய புத்திர சோகத்திலும்கூட உலகம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு வந்திருக்கிறது. அதனால் தான் தீபாவளிக்கு மற்ற எல்லா பண்டிகைகளையும்விட அதிகக் கியாதி.


Source: Sage of Kanchi

Ramachandran Ventaraman
 
Preservation of the Vedas

Preservation of the Vedas

The importance of Sanskrit is due to the fact that it is the language of the Vedas. There is evidence to prove the influence of Sanskrit in Far-Eastern countries like Indonesia and even in places like Persia. It once occupied the place of an international language.

The Vedas must be preserved in the Sanskrit language and not in translation, because the spirit will get diluted in the process of translation. Though there may be translations, a reference to the original will become necessary, when difficulty arises in interpretation. We can trace the basis for all religions to the Vedas. For the preservation of Vedas, it is necessary that some people devote their entire time for Vedic study. That is how the Vedas were preserved in the past and were handed down to succeeding generations by oral transmission. A community will cease to exist the moment it loses sight of its purpose in society. The purpose of the Brahmin community is to learn, preserve and hand over to posterity, the Vedas and the Vedangas

Preservation of the Vedas : kamakoti.org
 
Vedas will protect humanity: seer

Vedas will protect humanity: seer

Vedas which are quintessential of the Sanatana Hindu Dharma, if properly safeguarded, will protect the entire humanity, said pontiff of the Kanchi Kamakoti Peetam Jayendra Saraswati.


In his inaugural address at the six-day national Veda Agama Vidwat conference organised under the aegis of the TTD at SV Vedapatasala in Dharmagiri at Tirumala, the seer who advocated the illustrious religious idiom – ‘Vedo Rakshati Rakshitha’ urged the students not only to learn Vedas but also digest their essence and promote them for the welfare of universe. TTD Executive Officer M.G. Gopal termed the Vedas as divine scriptures which had the power of mesmerising even the nature.


Enlisting several instances wherein the nature God responded positively to the Vedic appeals, he said the town which reeled under drought conditions witnessed downpour after the traditional conduct of Pavithrotsavams and Varuna Japa – Prajanya Shanti homam atop the sacred town.

TTD JEO Pola Bhaskarsaid that the TTD had been relentlessly organising various conferences for the benefit of the humanity.


Prominent among others who took part in the conference include Rashtriya Vidyapeetah Vice-Chancellor Hare Krishna Sathpathy, Vedic Varsity V-C Devanadan and other officials.


Kanchi Kamakoti pontiff Jayendra Saraswati urges students not only to learn Vedas but also digest their essence and promote them for the welfare of universe

Vedas will protect humanity: seer - The Hindu
 
Veda Dharma Shastra Paripalana Sabha


Veda Dharma Shastra Paripalana Sabha - 20th Visesha Upanyasam on 18th October 2014 at Residence of Mr. S Kalyanaraman Plot 98, Kamaraj Salai, Palavakkam, Chennai 600041.

Upanyasam Presented by Brahmashree Sundararama Dikshithir on "Bhojana Niyamanam" from 6:30 PM to 8:00 PM.



1959350_374570299364682_1453903587745682246_n.jpg




Source: Sage of Kanchi
 
நாம மஹிமை

நாம மஹிமை

தியானம், ஜபம், பூஜை, யக்ஞம் க்ஷேத்திராடனம் ஆகியவற்றைப் போலவே நம் தேசத்தில் நீண்ட காலமாக பகவன் நாமாக்களைக் கோஷ்டியாகப் பாடி பஜனை செய்கின்ற பழக்கமும் இருந்து வருகிறது. இந்த ஜீவாத்மாவானது அந்த பரமாத்மாவுடன் தொடர்பு கொள்வதற்கு ஒரு பெரிய உபாயமாக நாம பஜனை தொன்று தொட்டு தேசத்தில் அனுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. அநேகமாக கிராமம், நகரம் எல்லாவற்றிலும் பஜனை மடம், அல்லது பஜனைக்கூடம் என்றே ஒன்று காணக்கிடைப்படுவதிலிருந்து, பஜனை பத்ததி நம் நாட்டில் எவ்வளவு செழிப்பாக இருக்கின்றது என்று ஊகிக்கலாம். இந்த பஜனை மடங்களில் சனிக்கிழமை தோறும், ஏகாதசி தோறும் ஜனங்கள் எல்லோரும் சேர்ந்து பஜனை செய்வார்கள்.


கோயில்களில் பூஜையைப் பார்க்கிறோம். தெய்வத்தைத் தியானிக்கிறோம். பஜனையிலோ நாமே வாய்விட்டுத் தெய்வத்தின் நாமங்களையும் குணங்களையும், லீலைகளையும் பாடி ஈஸ்வரபரமாக மனஸை ஈடுபடுத்துகிறோம். பலர் சேர்ந்து கொண்டு சமூதாய வாழ்க்கை அடிப்படையில் பக்தி செய்கிற சிறப்பு பஜனைக்கு உண்டு. அவரவரும் ஆத்ம க்ஷேமத்தை அடைந்து, அதனாலேயே ஜீவ கோடிகளுக்கு க்ஷேமத்தைத் தரவேண்டும் என்று, தனி மனிதர் அடிப்படையிலேயே (individual basis) ஹிந்து மதம் முக்கியமாக அமைந்திருந்தாலும், கோயில், உத்ஸவம், பஜனை இவற்றில் கூட்டு வழிபாட்டு முறை (congregational worship) யும் இருக்கிறது.


இன்னிசையுடனும், வாத்திய கோஷத்துடனும் செய்கிற பஜனை எல்லா உள்ளங்களயும் சுலபமாக இழுத்து பகவத் ஸ்மரணத்தில் செலுத்துகிறது. “ரகுபதி ராகவ ராஜாராம்”, “ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே” என்பது போல் சுலபமான வார்த்தைகளை மதுரமான ஸங்கீதத்தோடு கலந்து செய்கிற பஜனையால் எளிதாகத் தெய்வத்தை நினைவு கொள்ள முடிகிறது.


பஜனைக்கூடம் என்ற ஓர் இடத்தில் அமர்ந்து பஜனை செய்வதோடு, நகர ஸங்கீர்த்தனம் செய்கிற பழக்கமும் உண்டு. வைகுண்ட ஏகாதசி போன்ற புண்ணிய காலங்களில் ஜனங்கள் எல்லோரும் பகவன்நாமாக்களை பஜனை செய்தபடி வீதி வீதியாகச் செல்வதுதான் நகர ஸங்கீர்த்தனம் எனப்படுவது. விசேஷமாக மார்கழி மாததில் தினந்தோறும் அதிகாலையில் இப்படி வீதி வீதியாக பஜனை செய்து ஊர் முழுவதும் திவ்ய நாமங்களைப் பரப்புவதுண்டு.


இந்த நல்ல பழக்கம் மறுபடியும் நன்றாக உயிர் பெற்று வளரவேண்டும். கிராமங்களில் உள்ள பஜனை மடங்களில் பகவன்நாமம் இல்லாமல் வெறுமையாக போகவிடக்கூடாது. சமீப காலத்தில் பஜனை முறை நன்றாக விருத்தியடைந்து வருவதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. நம் வேதம், ஆகமம், ஆசாரம், எல்லாம் ரொம்பவும் க்ஷீணமாக போயிருக்கிற இந்த நாளிலும் நம் மத அம்சமாக ஏதாவது ஒன்றாவது க்ஷீணிக்காமல், தினந்தினம் விருத்தியாகி வருகிறது என்றால் அது ராம பஜனைதான். இன்று நம் மதத்துக்காக ஒவ்வொர் ஊரிலும் இருக்கிற ஸத்சங்கமே பஜனை கோஷ்டிதான். அந்த மட்டும் சந்தோஷம்.


பகவானிடம் பக்தியை விருத்தி செய்வதினால் பகவானின் நாம ஸங்கீர்த்தனமும் பகவத் குணங்களைப் பாடுவதும் முக்கியமான ஸ்தானம் பெற்றுள்ளது. ஸ்ரீ பகவன்நாம போதேந்திரர்கள், ஸதானந்த ஸ்வரூபியான பரமாத்மா ஜகத்தின் க்ஷேமத்தைக் கருதித் தனிப்பெரும் கருணை கூர்ந்து, ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ பரமேஷ்வரன் முதலிய ரூபங்களை எடுத்துக் கொண்டான். உலகை உய்விக்க அந்த மூர்த்திகள் மட்டும் போதாது என்று கருதி, ஹரி, சிவ முதலிய நாமங்களாகவும் ஆகி, அவற்றில் எப்போதும் விழித்துக் கொண்டிருக்கிறான் என்கிறார். அதாவது, நாமங்கள் வெறும் பெயர் மட்டுமில்லை. மூர்த்தியை போல அவையும் ஸாக்ஷாத் பகவானே. பகவானுக்கு உள்ள அத்தனை சக்தியும் நாமத்துக்கு உண்டு.


இவ்வாறு நாம ஸ்ங்கீர்த்தனத்தின் மூலம் பகவத் ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்காரம் செய்த புண்ணிய புருஷர்களின் முகாரவிந்தத்திலிருந்து உற்பத்தியான புனித கானங்களைப் பாடுவதால், பாபம் விலகி, புண்ணியம் கை கூடுகிறது. ஜயதேவர், தீர்த்த நாராயணர், ராமதாஸர், புரந்தர தாஸர், தியாகப்பிரம்மம், ஸதாசிவப் பிரம்மேந்திராள் ஆகியோரின் கீதங்கள், தமிழ்ப் பாடல்கள், ஹிந்தி, மஹாராஷ்டிர பக்தி கீர்த்தனம் எல்லாம் மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள் வகுத்துத் தந்த பத்ததியான ஸம்பிரதாய பஜனையில் பாடப்படுகின்றன. டோலோத்ஸவம், கொட்டனோத்ஸவம், வஸந்த கேளி என்றெல்லாம் பஜனையைப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடுவார்கள். கஷ்டமான சாதனையாக இல்லாமல், ஆனந்தமாக ஆடிப்பாடிக்கொண்டு பகவதநுபவத்தில் இருப்பது இதெல்லாம் வழிகள். பாகவதாதி சாஸ்திரங்களிலேயே, எந்த சிரமமான சாதனையும் செய்ய சக்தியும் சௌகரியமும் இல்லாத கலி காலத்தில், நாம ஸங்கீர்தனம் தான் மோக்ஷ உபாயம் என்று சொல்லி இருக்கிறது — ‘கலௌ ஸங்கீர்த்ய கேசவம்’.




பலர் சேர்ந்து பண்ணுகிற பஜனை ஒருபுறம் இருக்கட்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள அனைவரும் மாலை வேளைகளில் வீட்டிலேயே ஒரு பத்து நிமிஷமாவது பகவத் நாமங்களைப் பாடி பஜனை செய்ய வேண்டும். இதில் காரிய சாத்தியமில்லாத சிரமம் எதுவும் இல்லை. குடும்பத்தினர் எல்லோரும் பூஜை அறையில் — அல்லது பூஜைக்கென்று அறை இல்லாவிட்டால், ஒரு குத்து விளக்கை ஏற்றி வைத்து அதன் முன் உட்கார்ந்து கீர்தனங்களைப் பாட வேண்டும். நாமாவளிகளை கானம் செய்ய வேண்டும்.


அவரவர்களும் தங்களுக்குறிய நித்ய கர்மாநுஷ்டானங்களை விடாமல் செய்துவிட்டு, அதோடு பஜனையும் செய்ய வேண்டும். பகவானைப் பாடுவதற்கு வெட்கமே வேண்டாம். கருணையே உருவான கடவுளின் நாமத்தைச் சொல்வதில் வெட்கத்துக்கு ஏது இடம்? பெரிய ஸங்கீத ஞானம், ராக பாவம், சரீர வசதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பக்தி பாவனைதான் முக்கியம். ஏதேதோ விளையாட்டுகளில் திரிந்து கொண்டிருக்கிற குழந்தை அம்மாவின் நினைப்பு வந்ததும், அவளிடம் வந்து, ‘அம்மா! அம்மா!’ என்று கத்துகிறதல்லவா? அதில் வெட்கமோ, ஸங்கீத அழகோ இல்லை. லோக மாதாவான பரமாத்மாவை லௌகிக வ்யாபாரங்களிடையே சிறிது நேரமாவது நினைத்து இப்படியே ராமா, க்ருஷ்ணா, சிவா, அம்பா, என்று கத்த வேண்டும். இந்தப் பழக்கம் ரொம்பவும் நல்லது. நம் நித்திய க்ஷேமத்தையும், ஆனந்தத்தையும் பெருக்கவல்ல பெரிய நிதி இது.
-காஞ்சி மஹாஸ்வாமிகள்
நன்றி: தெய்வத்தின் குரல்



May | 2009 | PARAMACHARIAR - SPIRITUAL JOURNEY

 
சூன்யஹ

சூன்யஹ


பீஷ்மர், சரமாரியாக அம்புகளை விட்டுக்கொண்டே இருந்தார். அத்தனை அம்புகளும் ஸ்ரீகிருஷ்ணரின் முகத்தில் வந்து காயத்தை ஏற்படுத்தியபடி இருந்தன. ‘எந்தச் சூழலிலும் ஆயுதம் எடுக்கமாட்டேன்’ என்று பகவான் ஸ்ரீகண்ணபரமாத்மா செய்து கொடுத்த சத்தியம் அர்ஜுனனுக்கு நினைவுக்கு வந்தது. இதனால் ரொம்பவே கலவரமாகிப் போனான் அவன்.

இந்தச் சத்தியத்தைத் தெரிந்து வைத்திருந்த பீஷ்மர், மேலும் மேலும் அம்புகளை விட்டுக்கொண்டே இருந்தார். எல்லா அம்புகளும் கிருஷ்ண பரமாத்மாவின் திருமுகத்தில் காயங்களை ஏற்படுத்திக்கொண்டே இருந்தன. அவை அனைத்தையும் சிரித்த முகத்துடன் தாங்கிக்கொண்டார் ஸ்ரீகிருஷ்ணன்.

அதுமட்டுமா? அதே சிரித்த முகத்துடன், திருமுகத்தில் உண்டான அத்தனைத் தழும்புகளுடன் இன்றைக்கும் நமக்குத் திருக்காட்சி தந்துகொண்டிருக்கிறார் திருவல்லிக்கேணி திவ்விய தேசத்தில்!



ஒருவேளை போர் முனைக்கு ஸ்ரீருக்மிணிதேவியும் வந்திருந்தால் என்னாகியிருக்கும்?

அவனுக்கு முன்னே நின்றபடி, அத்தனை அம்புகளையும் தடுத்திருப்பாள் தழும்புகள் இல்லாத கிருஷ்ண பரமாத்மாவாக இருந்திருப்பார், பகவான்!

ஸ்ரீருக்மிணிதேவி வராததும் ஒருவகையில் நல்லதுக்குத்தான்! அப்படி அவள் வராததால்தான், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் தழும்பேறிய முக தரிசனம் நமக்குக் கிடைத்திருக்கிறது.

அர்ஜுனன் எனும் உண்மையான பக்தனுக்காக, பாண்டவர்கள் என்கிற நல்லவர்களுக்காக எதையும் தாங்கிக்கொள்வான்; எதனையும் ஏற்றுக் கொள்வான் ஸ்ரீகிருஷ்ணன் என்பதை உலகுக்குக் காட்டுகிற ஒப்பற்ற திருத்தலம் அல்லவா அது?!

ஒருகட்டம் வரை அமைதியாக இருந்து, அத்தனை அம்புகளையும் முகத்தில் வாங்கிக்கொண்ட கண்ணன், அடுத்து அர்ஜுனனுக்கு பீஷ்மர் குறி வைத்தபோது, பொங்கியெழுந்தான். விறுவிறுவென தேரில் இருந்து இறங்கினான். பீஷ்மரை நோக்கி வேகம் வேகமாக நடந்தான். சட்டென்று அவன் கையில் சக்ராயுதம் சுற்றியது. ‘ஆயுதத்தையே எடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்தாயே கிருஷ்ணா…’ என்று எல்லோரும் கேட்பதாக ஒருகணம் தோன்றியது அவனுக்கு.

ஆனாலும், அவன் ஆயுதத்தை எடுத்தான்; சத்தியத்தை மீறினான். ‘எனக்கு ஆபத்து வந்தால் அதைப் பொறுத்துக் கொள்வேன். என் அடியவருக்கு ஏதேனும் ஆபத்து என்றால், ஆயுதம் எடுக்கவும் தயங்கமாட்டேன்’ என்பதைச் சொல்லாமல் சொல்லி, உலகுக்கு உணர்த்தினான் ஸ்ரீகிருஷ்ணன். அதனால்தான் கண்ணபிரானுக்கு ‘சூன்யஹ:’ எனும் திருநாமம் அமைந்தது.

சூன்யஹ என்றால், ஒரு தீமையும் துர்க்குணமும் இல்லாதவன் என்று அர்த்தம். தீமைகளுக்கும் துர்க்குணங்களுக்கும் ஆட்படாதவன் என்று பொருள்
 
தர்மம் பண்ணுவதில் மட்டும் 'அப்புறம்' என்&#2993

தர்மம் பண்ணுவதில் மட்டும் 'அப்புறம்' என்று ஒத்திப் போடாமல்


தர்மம் பண்ணுவதில் மட்டும் 'அப்புறம்' என்று ஒத்திப் போடாமல், எப்போதும் யமன் உன் தலை மயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டே இருக்கிறான் என்று நினைத்து, உடனுக்குடன் பண்ணி விட வேண்டும்.

வியாசர், பதினெட்டு புராணங்களையும் பண்ணி முடித்தபின், சிஷ்யர்கள் அவற்றின் ஸாராம்சத்தை ஒன்றிரண்டு ஸ்லோகங்களில் சுருக்கித் தருமாறு வேண்டினார்கள். "பதினெட்டுப் புராணம் மட்டுமின்றி, மொத்தமுள்ள கோடிப் புத்தகங்களின் ஸாரத்தையும் அரை ஸ்லோகத்தில் சொல்கிறேன்" என்றார்.

"ச்லோகார்த்தேந ப்ரவக்ஷயாமி யதுக்தம் க்ரந்த கோடீஷு
பரோபகார: புண்யாய பாபாய பரபீடிதம்"


இருக்கும் அத்தனை கோடி மத சாஸ்த்ர புத்தகங்களும் உயிர் நிலையான தத்வம் என்னவென்றால், "புண்யம் சம்பாதிக்க வேண்டுமென்றால் பரோபகாரம் பண்ணு. பாபத்தை மூட்டை கட்டிக் கொள்வதென்றால் மற்ற ஜீவன்களுக்குக் கஷ்டத்தைக் கொடு", என்பதுதான்.
 
Ashothram of Maha Periyavaa. It can be chanted on Anusham Star Days

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதீச்வர ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி அஷ்டோத்தரசத நாமாவளி:
ஓம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதீச்வராய நம:
ஓம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி குருப்யோ நம:
ஓம் ஸன்யாஸாச்ரம சிகராய நம:
ஓம் காஷாய தண்ட தாரிணே நம:
ஓம் ஸர்வபீடாபஹாரிணே நம:
ஓம் ஸ்வாமிநாத குரவே நம:
ஓம் கருணாஸாகராய நம:
ஓம் ஜகதாகர்ஷண சக்திமதே நம:
ஓம் ஸர்வ சராசர ஹ்ருதயஸ்தாய நம:
ஓம் பக்த பரிபாலக ச்ரேஷ்டாய நம:
ஓம் தர்ம பரிபாலகாய நம:
ஓம் ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வத்யாசார்யாய நம:
ஓம் ஸ்ரீ விஜயேந்த்ர ஸரஸ்வதி பூஜிதாய நம:
ஓம் சிவ சக்தி ஸ்வரூபகாய நம:
ஓம் பக்த ஜன ப்ரியாய நம:
ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவைக்ய ஸ்வரூபாய நம:
ஓம் காஞ்சீ க்ஷேத்ர வாஸாய நம:
ஓம் கைலாஸ சிகர வாஸாய நம:
ஓம் ஸ்வதர்ம பரிபோஷ காய நம:
ஓம் சாதுர் வர்ண்ய ரக்ஷகாய நம:
ஓம் லோக ரக்ஷித ஸங்கல்பாய நம:
ஓம் ப்ரஹ்ம நிஷ்டாபராய நம:
ஓம் ஸர்வ பாப ஹராய நம:
ஓம் தர்ம ரக்ஷக ஸந்துஷ்டாய நம:
ஓம் பக்தார்ப்பி்த தன ஸ்வீகர்த்ரே நம:
ஓம் ஸர்வோபநிஷத் ஸாரஞ்ஞாய நம:
ஓம் ஸர்வ சாஸ்த்ர கம்யாய நம:
ஓம் ஸர்வ லோக பிதாமஹாய நம:
ஓம் பக்தாபீஷ்ட ப்ரதாயகாய நம:
ஓம் ப்ரம்மண்ய போஷகாய நம:
ஓம் நானாவித புஷ்பார்ச்சித பதாய நம:
ஓம் ருத்ராக்ஷ கிரிட தாரிணே நம:
ஓம் பஸ்மோத் தூளித விக்ரஹாய நம:
ஓம் ஸர்வக்ஞாய நம:
ஓம் ஸர்வ சராசர வ்யாபகாய நம:
ஓம் அநேக சிஷ்ய பரிபாலகாய நம:
ஓம் மனஸ்சாஞ்சல்ய நிவர்த்தகாய நம:
ஓம் அபய ஹஸ்தாய நம:
ஓம் பயாபஹாய நம:
ஓம் யக்ஞ புருஷாய நம:
ஓம் யக்ஞாநுஷ்டான ருசிப்ரதாய நம:
ஓம் யக்ஞ ஸம்பன்னாய நம:
ஓம் யக்ஞ ஸஹாயகாய நம:
ஓம் யக்ஞ பலதாய நம:
ஓம் யக்ஞ ப்ரியாய நம:
ஓம் உபமான ரஹிதாய நம:
ஓம் ஸ்படிக துளஸீருத்ராக்ஷ ஹார தாரிணே நம:
ஓம் சாதுர்வர்ண்ய ஸமத்ருஷ்டயே நம:
ஓம் ருக் யஜுஸ் ஸாமாதர்வண சதுர்வேத ஸம்ரக்ஷகாய நம:
ஓம் தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபாய நம:
ஓம் ஜாக்ர ஸ்வப்ன ஸூஷுப்தயவஸ்வாதீதாய நம:
ஓம் கோடி ஸுர்யதுல்ய தேஜோமயசரீராய நம:
ஓம் ஸாதுஸங்க ஸம்ரக்ஷகாய நம:
ஓம் அச்வ கஜ கோ பூஜா நிர்வர்த்தகாய நம:
ஓம் குருபாதுகா பூஜா துரந்தராய நம:
ஓம் கனகாபிஷிக்தாய நம:
ஓம் ஸ்வர்ண பில்வதள பூஜிதாய நம:
ஓம் ஸர்வ ஜீவ மோக்ஷதாய நம:
ஓம் மூகவாக்தான நிபுணாய நம:
ஓம் நேத்ர தீக்ஷாதானாய நம:
ஓம் த்வாதசலிங்க ஸ்தாபகாய நம:
ஓம் கான ரஸஞ்ஞாய நம:
ஓம் ப்ரஹ்ம ஞானோபதேசகாய நம:
ஓம் ஸகலகலா ஸித்திதாய நம:
ஓம் சாதுவர்ண்ய பூஜிதாய நம:
ஓம் அநேகபாஷா ஸம்பாஷண கோவிதாய நம:
ஓம் அஷ்டஸித்திப்ரதாயகாய நம:
ஓம் ஸ்ரீ சாரதாமட ஸுஸ்திதாய நம:
ஓம் நித்தியான்னதான ஸுப்ரீதாய நம:
ஓம் ப்ரார்த்தனாமாத்ர ஸுலபாய நம:
ஓம் பாதயாத்ரா ப்ரியாய நம:
ஓம் நானாவிதமத பண்டிதாய நம:
ஓம் சுருதி ஸ்ம்ருதி புராணஞ்ஞாய நம:
ஓம் தேவ யக்ஷ கின்னர கிம்புருஷ பூஜ்யாய நம:
ஓம் ச்ரவணானந்தகர கீர்த்தயே நம:
ஓம் தர்சனானந்தாய நம:
ஓம் அத்வைதானந்த பரிதாய நம:
ஓம் அவ்யாஜ கருணா மூர்த்தயே நம:
ஓம் சைவவைஷ்ணவாதி மான்யாய நம:
ஓம் சங்கராசார்யாய நம:
ஓம் தண்ட கமண்டலு ஹஸ்தாய நம:
ஓம் வீணாம்ருதங்காதி ஸகலவாத்யநாத ஸ்வரூபாய நம:
ஓம் ராமகதா ரஸிகாய நம:
ஓம் வேத வேதாங்க ஆகமாதி ஸகலகலா ஸதஸ் ப்ரவர்தகாய நம:
ஓம் ஹ்ருதய குஹாசயாய நம:
ஓம் சதருத்ரீய வர்ணித ஸ்வரூபாய நம:
ஓம் கேதாரேஸ்வர நாதாய நம:
ஓம் அவித்யா நாசகாய நம:
ஓம் நிஷ்காம கர்மோபதேசகாய நம:
ஓம் லகுபக்திமார்கோபதேசகாய நம:
ஓம் லிங்கஸ்வரூபாய நம:
ஓம் ஸாலக்ராம ஸூக்ஷ்மஸ்வரூபாய நம:
ஓம் காலட்யாம் சங்கரகீர்த்திஸ்தம்ப நிர்மாண கர்த்ரே நம:
ஓம் ஜிதேந்த்ரியாய நம:
ஓம் சரணாகதவத்ஸலாய நம:
ஓம் ஸ்ரீ சைலசிகரவாஸாய நம:
ஓம் டம்ரிகநாத விநோதனாய நம:
ஓம் வ்ருஷபாரூடாய நம:
ஓம் துர்மதநாசகாய நம:
ஓம் ஆபிசாரிகதோஷ ஹர்த்ரே நம:
ஓம் மிதாஹாராய நம:
ஓம் ம்ருத்யுவிமோசன சக்தாய நம:
ஓம் ஸ்ரீசக்ரார்ச்சன தத்பராய நம:
ஓம் தாஸாநுக்ரஹ க்ருதே நம:
ஓம் அனுராதா நக்ஷத்ர ஜாதாய நம:
ஓம் ஸர்வலோக க்யாதசீலாய நம:
ஓம் வேங்கடேச்வர சரணபத்மஷ்டபதாய நம:
ஓம் ஸ்ரீ த்ரிபுரசுந்தரி ஸமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பூஜாப்ரியாய நம:
மஹாஸ்வாமி பாத அஷ்டோத்தர சதநாமாவளி ஸம்பூர்ணம்.





Source: FB

 
மஹா பெரியவா அருள்வாக்கு :

மஹா பெரியவா அருள்வாக்கு : -




வைதீக தர்மத்திற்கு சாரமாக இருப்பது பஞ்ச மகா யக்ஞங்கள் எனும் பஞ்ச வேள்விகள். வேதம் ஓதுவது, ஒதுவிப்பது எனும் வித்யா தானமே “ப்ரம்ம யக்ஞம்“. மூதாதையருக்குச் செய்யும் தர்ப்பணமே “பித்ரு யக்ஞம்“. ஈஸ்வர ஆராதனமே “தேவ யக்ஞம்“. நாயும் காக்கையும் உட்பட எல்லா ஜீவராசிகளுக்கும் பலி போடுவது “பூத யக்ஞம்“. அதிதி – விருந்தினரை உபசாரம் செய்வது “ந்ரு யக்ஞம்“. படைப்பில் ஒரு பிரிவைக்கூட விடாமல் உபகாரம் பண்ணி வைப்பது பஞ்ச மகா யக்ஞம்.


Anubavangal 1000 | Balhanuman's Blog | Page 2
 
அம்மா உனக்கு நமஸ்காரம்!

அம்மா உனக்கு நமஸ்காரம்!


ஆதிசங்கரருக்கு இளம் வயதிலேயே துறவு மனப்பான்மை ஓங்கி இருந்தது. தாய் ஆர்யாம்பாளிடம் துறவுக்கு அனுமதியைக் கேட்க, தன் ஒரே மகன் துறவியாவதைக் காண சகிக்க முடியாத அந்தத் தாய் மறுத்து விட்டார். இளம் வயதிலேயே விதவையான அந்தத் தாயிற்கு அந்த உத்தம மகனை விடப் பெரிய உறவோ, சொத்தோ இருக்கவில்லை. தாயின் அனுமதியில்லாமல் துறவியாகவோ ஆதிசங்கரருக்கு சம்மதமில்லை.

ஒருமுறை பூர்ணா நதியில் குளிப்பதற்காக தாயுடன் சென்றிருந்த ஆதிசங்கரரின் காலை ஒரு முதலை ஒரு பற்றிக் கொண்டது. ஆதிசங்கரர் உரத்த குரலில் தாயிடம் சொன்னார். “அம்மா என் காலை ஒரு முதலை பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது. நான் சன்னியாசி ஆக நீ அனுமதி தந்தாயானால் அது என்னை விட்டு விடும்”.

ஒரு இக்கட்டான நிலைக்கு ஆளான ஆர்யாம்பாள் வேறு வழியில்லாமல் மகன் துறவியாவதற்கு ஒத்துக் கொண்டார். ஆதிசங்கரர் தகுந்த மந்திரங்களை எல்லாம் சொல்லி அந்த நதியிலேயே துறவறம் மேற்கொண்டார். முதலை அவர் காலை விட்டு விட்டது. (அந்த முதலை பிரம்மாவின் சாபம் பெற்ற ஒரு கந்தர்வன் என்றும் ஆதிசங்கரரின் கால் பட்டதும் அவன் சாப விமோசனம் பெற்றான் என்றும் சொல்லப்படுகிறது)

கரையேறிய ஆதிசங்கரர் தன் வீடு புகவில்லை. வீடு வந்த பின்னும் வாசலிலேயே “பிக்ஷாந்தேஹி” என்று மகன் நின்ற போது தான் ஆர்யாம்பாளுக்கு உண்மை முழுமையாக உறைத்திருக்க வேண்டும். முன்பே ஒரு முறை மகன் துறவியாவது போல் கனவு கண்டு அந்தக் கனவுக்கே துடித்துப் போன அந்தத் தாயின் நிலைமை அப்போது எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எல்லையில்லாத சோகத்தில் மூழ்கிய ஆர்யாம்பாள் மகன் இருந்தும் இல்லாதது போல் வாழ வேண்டி வரும் நிலைமையையும், ஈமக்கிரியை கூட மகன் இல்லாமல் போகும் அவலத்தையும் எண்ணி மிகவும் வருந்தினார்.

உறவுகளைத் துறக்கும் போது உறவுகளுடன் கூடிய அனைத்தையும் முடித்துக் கொள்வதால் துறவிகள் பெற்றவர்களுக்கு ஈமக்கிரியைகள் கூட செய்யக் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் தாயின் சோகத்தால் நெகிழ்ந்த ஆதிசங்கரர் அந்த விதியை மீறித் தன் தாயிற்கு வாக்களிக்கிறார். ‘உன் அந்திம காலத்தில் உன் ஈமக்கிரியைகளைச் செய்ய நான் கண்டிப்பாக வருவேன்”

ஆண்டுகள் பல கழிந்த பின் ஆர்யாம்பாள் மரணப்படுக்கையில் கிடக்கையில் தன் ஞான திருஷ்டியால் அதை அறிந்த ஆதிசங்கரர் உடனடியாகத் தாயிடம் வந்தார். ஒரு துறவியான பின் தாயிற்கு ஈமக்கிரியை செய்வதா என்று சாஸ்திரம் படித்த உறவினர்கள் குமுறினார்கள். சிதைக்குத் தீ மூட்ட நெருப்பைக் கூடத் தர மறுக்க தன் சக்தியாலேயே தாயின் சிதைக்கு ஆதி சங்கரர் தீ மூட்டினார்.

அரும் பெரும் தத்துவங்களையும், உபநிடத சாரங்களையும் உலகத்திற்குத் தந்த ஆதிசங்கரர் தாயின் அந்திம காலத்தில் மடியில் கிடத்திக் கொண்டு பாடிய “மாத்ரு பஞ்சகம்” மிகவும் நெகிழ்ச்சியானது. அறிவால், ஞானத்தால், பக்தியால் எத்தனையோ பொக்கிஷங்களைத் தந்த ஆதிசங்கரர் உணர்ச்சி பூர்வமாக எழுதியது அந்த ஐந்து சுலோகங்களை மட்டுமே. ஒரு ஜகத்குரு ஒரு மகனாக அன்னையின் பாசத்தையும், தியாகத்தையும் எண்ணிப் பாடிய மாத்ரு பஞ்சகம் இது தான் -

“அம்மா, என்னைக் கருவில் தாங்கி நான் பிறக்கும் வரை உடல் மெலிந்து நீ பட்ட கஷ்டங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? குழந்தையான என் மலம் மூத்திரம் எல்லாம் சுத்தம் செய்து, எனக்காகப் பத்தியம் இருந்து என்னைக் காப்பாற்றி வளர்த்த உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்? அன்று முதல் இன்று வரை நீ எனக்கு செய்ததற்கு கைம்மாறு செய்ய எனக்குப் பல ஜென்மங்கள் போதாதே!

நான் குருகுலத்தில் இருந்த ஒரு சமயம் நான் துறவு பூண்டதாக நீ கனவு கண்டாய். உடனே நீ அங்கு ஓடி வந்து கதறினாய். அதைக் கண்டு எல்லோரும் என்ன விஷயம் என்று கேட்க உன் கனவைச் சொல்லிக் கதற அதைக் கேட்ட குருகுலம் முழுவதும் கதறியதே! அத்தகைய உனது காலில் வீழ்ந்து நான் இன்று கதறுகிறேன்.

எல்லா சக்திகளும் அற்றுப் போன கடைசி காலத்தில் கொஞ்சம் தண்ணீர் தந்தால் ஆறுதல் உண்டாகும். அந்தப் பாக்கியமும் எனக்குக் கிடைக்கவில்லையே. பின்பு ஒவ்வொரு முறையும் திதியில் சிரார்த்தம் செய்யும் பாக்கியமும் இல்லாத சன்னியாசியாக நான் இருக்கிறேனே.

அம்மா! என்னைக் கூப்பிடும் போதெல்லாம் முத்தே, மணியே, கண்ணே, ராஜாவே, குழந்தாய் நீ வெகு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்திய வாய்க்கு வாய்க்கரிசி போடுகிறேனே.

தாயே பிரசவ வேதனை தாளாமல் அம்மா, அப்பா, சிவா, கிருஷ்ணா, கோவிந்தா, முகுந்தா என்றெல்லாம் கதறிய ஒரு கதறலுக்கு என்னால் பதில் கூற முடியுமா? அம்மா உனக்கு நமஸ்காரம்.


???????????? : March 2014
 
குரு' இலக்கணம்

குரு' இலக்கணம்

சார்யாளிடம் வஸித்து, வித்தையை அப்யாஸம் பண்ணுவதற்கு 'குருகுலவாஸம்' என்று பெயர். 'ஆசார்ய குல வாஸம்' என்றில்லை. இதைப் பார்த்தால் ஆசார்யர், குரு இரண்டும் ஒன்றேதான் என்று தோன்றும். ஜகத்குரு சங்கராச்சாரியார் என்பதால் ஒருத்தரே குரு ஆச்சார்யார் இரண்டுமாக இருக்கிறார் என்று ஏற்படுகிறது. இப்படியிருப்பதாலேயே இரண்டும் கொஞ்சம் வேறாயிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.
'குரு' என்றால் நேர் அர்த்தம் என்ன? 'ஆச்சார்யார்' என்ற வார்த்தைக்கு definition சொன்னதுபோல 'குரு'வுக்கு என்ன சொல்வது?


'குரு' என்றால் 'கனமானது', 'பெரிசு' என்று அர்த்தம். அதாவது பெருமை உடையவர், மஹிமை பொருந்தியவர் என்று அர்த்தம். பெரியவர்களை கனவான், மஹாகனம் என்கிறோமல்லவா? ('ரைட் ஆனரபிள்' என்ற பட்டத்தை 'மஹாகனம்' என்றே சொல்வார்கள்.) 'பெரியவர்கள்' என்று இங்கே நான் சொன்னதே பெரிசை வைத்துதான். 'குரு' என்கிற மாதிரியே 'ப்ரஹ்மம்' என்றாலும் பெரிசு என்றுதான் அர்த்தம்.

கனமானவர், பெரியவர் என்றால் எதைக்கொண்டு இப்படிச் சொல்கிறது?. கனமென்றால் Weight ஜாஸ்தி என்று அர்த்தமா? பெரியவரென்றால் வாட்டசாட்டமாக இருப்பதாக அர்த்தமா? மஹான், மஹான் என்றாலும் பெரிசானவர், பெரியவர் என்றுதான் அர்த்தம். எதில் பெரிசு? என்னை குரு என்கிறீர்கள். பெரியவா என்கிறீர்கள். இன்னும் குஞ்சம் அபிமானம் ஜாஸ்தியானால் மஹான் என்றும் சொல்கிறீர்கள். ( Weight , வாட்டசாட்டம் இவற்றைப் பார்த்தால்) என்னை இப்படிச் சொல்ல நியாயமில்லை. அதனால் இப்படியெல்லாம் சொல்லும்போது ஒருத்தர் உள்ளுக்குள்ளேயே அறிவாலோ, அநுபவத்தாலோ, அருளாலோ கனம் வாய்ந்தவர், பெருமை பெற்றவர் என்றுதான் அர்த்தம். பகவத்பாதாளின் பெயர் என்னிடம் ஒட்டிக் கொண்டிருக்கிற ஒரே காரணத்துக்காக, எனக்கு இதெல்லாம் இருப்பதாக ஏமாந்து குரு, பெரியவா, மஹான் இன்னம் என்னென்ன ஸாதோத்ரமாக உண்டோ அத்தனையும் சொல்கிறீர்கள்.



ஆக, குரு என்றால் அவர் உள்ளுக்குள்ளே ரொம்பப் பெருமை படைத்தவராகயிருக்க வேண்டும். ஆசாரியர் என்பவர் வெளியிலே படிப்பிலே பெரியவர், வெளியிலே போதனை பண்ணுவதில் சதுரர், வெளியிலே நடத்தையால் வழிகாட்டுவதிலே சிறந்தவர். அவருடைய உள் சீலம் ( Character ) தான் வெளிநடத்தையாக ( conduct ) ஆக வெளிப்படுகிறதே தவிர, வெளியே அவர் போலியாக உத்தமர் போல நடித்துக் காட்டுபவரல்ல என்பது நிஜமானாலுங்கூட அவரை வெளி லோகத்துடன் பொருத்தியே வைத்திருக்கிறது-உலகத்துக்கு அவர் தாம் உபதேசிக்கிற ஐடியல்களை வாழ்ந்து காட்ட வேண்டும்.



குரு ஸமாச்சாரம் என்ன? அவர் வெளியிலே எதுவுமே பண்ண வேண்டுமென்றில்லை. அவருக்கு வெளிப்படிப்பு, வித்வத் வேண்டும் என்றில்லை. அவர் சாஸ்திரங்களைப் படித்துக் கரை கண்டிருக்க வேண்டுமென்றில்லை. அவர் எந்த சாஸ்த்ரத்தையோ ஸம்பரதாயத்தையோ ஆசார்யரைப்போல வழுவறப் பற்றி ஒழுகிக்காட்ட வேண்டுமென்பதில்லை. ஏன், அவர் வாயைத் திறந்து போதனைப் பண்ணணும், உபதேசிக்கணும் என்றுகூட இல்லை. மௌனகுரு என்றே இருந்திருக்கிறார்களே!

தன்னில் தானாக நிறைந்து ஒருத்தர் எங்கேயாவது தன்னந்தனியாக உட்கார்ந்திருந்தால்கூட அவருடைய உள்பிரபாவம் தெரிந்தவர்கள் அவரை குருவாக வரிக்கிறார்கள். அதற்காக அவர் இவர்களுக்கு சாஸ்த்ரபாடம் சொல்ல வேண்டும் என்பது இல்லை. ஆனாலும் அவரை குருவாக வரித்தவரிடம் அவருடைய அநுக்ரஹ சக்தியே வேலை செய்து விடுகிறது. அவர் இவரை 'சிஷ்யர்'என்றுகூட நினைத்திருக்கமாட்டார். ஆனாலும் தம்மை அவருக்கு சிஷ்யராக நினைத்தவர் எதை நாடி அவரிடம் போனாரோ அது ஸித்தித்துவிடுகிறது.
படிப்பு என்றால் என்ன என்றே தெரியாமல் இப்படிப் பல குருக்கள். பாடம் நடத்தாமல் எத்தனையோ குருக்கள். வாயையே திறக்காத தக்ஷிணாமூர்த்திதான் ஆதிகுருவே! சாஸ்திர விதிகள் எதற்கும் கட்டுப்படாமல் பேய் மாதிரி, பிசாசு மாதிரி, பைத்தியம் மாதிரி, உன்மத்தம் மாதிரித் திரிந்த அதிவர்ணாச்ரமிகள் பலர் குருமார்களாக இருந்திருக்கிறார்கள். திகம்பரமாக இப்படித் திரிந்த தத்தாத்ரேயரைத்தான் அவதூத குரு என்று ரொம்பவும் ஏற்றம் கொடுத்துச் சொல்கிறோம்.



ஆசாரியன் என்பவன் எல்லாவற்றிலும் 'ஸிஸ்டம்'உள்ளவர். அவர் ஏதாவது ஒரு ஸிஸ்டத்துக்கு (சாஸ்த்ர ஸம்ரதாயத்துக்கு) பிரதிநிதியாக இருக்க வேண்டும். அதன் புத்தகங்களை, விஷயங்களை அவர் 'ஸிஸ்டமாடிக்'காகக் கற்றும் கேட்டும் அறிந்திருக்க வேண்டும். இதை கற்றும் கேட்டும் அறிந்திருக்க வேம்டும். இதை மற்றவர்களும் 'ஸிஸ்டமாடிக்'காக 'டீச்'பண்ணணும். எல்லாவற்றுக்கும் மேலே தாமும் 'ஸிஸ்டமாடிக்'காக வாழ்ந்து காட்ட வேண்டும்.



குருவுக்கு இப்படியெல்லாம் இருந்துதான் ஆக வேண்டும் என்று நிபந்தனை எதுவும் இல்லை. அவர் உள் அநுபவி. அவருடைய அநுபவத்தின் பெருமையாலேயே அவரை மஹான் என்பது. அதன் கனத்தாலேயே குரு என்பது. Character, Conduct (சீலம், நடத்தை) என்பதற்கெல்லாம் அவர் மேலே போனவர். பகவானின் காரெக்டர், கான்டக்ட் எப்படி என்று யாராவது பார்ப்போமா?அப்படித்தான் இதுவும். சாஸ்திரத்தைப் பார்த்துப் பண்ண வேண்டும் என்பதும் குருமார்களுக்கு இல்லை. ஆத்மா அல்லது பிரம்மம் என்பதோடு சேர்ந்த ஞானிகளாக அவர்கள் இருப்பார்கள்;அல்லது ஈஸ்வரன், பகவான் என்கிற மஹாசக்தியுடன் 'டச்'உள்ளவர்ளாக இருப்பார்கள்;அல்லது மனஸை அடக்கி ஸமாதியிலிருக்கிற யோகிகளாக இருப்பார்கள்.



உள்ளே இப்படியிருக்கிறவர்களே வெளியில் ஆச்சார்யர்களாகவும் வித்வத்துடன் பிரகாசித்துக் கொண்டு, சிஷ்யர்களுக்குப் போதனை பண்ணிக்கொண்டு, தாங்களே சாஸ்த்ரப் ப்ரகாரம் கார்யங்கள் செய்துகொண்டும் இருக்கலாம். பகவத்பாதாளும் மற்ற மதாசார்யர்களும் இப்படியே குரு, ஆசார்யன் இரண்டுமாக இருந்திருக்கிறார்கள்.



ஆத்ம ஸாக்ஷ£த்காரம், ஈஸ்வர ஸாக்ஷ£த்காரம், யோக ஸமாதி என்கிற அளவுக்குப் போகாவிட்டாலும் முன்னாளில் வித்யாப்யாஸம் செய்வித்த ஆசார்யர்கள் எல்லோருமே உள்ளூர ஒரு பெருமை படைத்தவர்களாகயிருந்தால்தான் அவர்களை குரு என்றும், அவர்களிடம் போய்ப் படிப்பதை குருகுலவாஸம் என்றும் சொல்வதாக ஏற்பட்டிருக்கிறது.

ஒரு ஸிஸ்டத்தில் கட்டுப்படாதவராகயிருந்தாலுங்கூட சொந்தமாகவும், சாஸ்திரங்களைக் காட்டியும் நிறைய உபதேசம் செய்த குருக்களும் உண்டு. அவர் சொன்னபோது அவை குறிப்பிட்ட சாஸ்திர ஸிஸ்டமாக இல்லாவிட்டாலும், அவருக்குப் பிற்பாடு அவை அவர் பேரிலேயே ஒரு Systematised சாஸ்திரமாகி, அவரே அதற்கு மூல ஆசார்யர் என்றாகிவிடுவார். வெளியிலே ஸிஸ்டப்படி இருந்த அநேக ஆசார்யர்கள், உள்ளே தனக்குத்தானே ஒரு பெருமை படைத்த குருவாக இருந்திருக்கிறார்கள்; குருவாக இருந்த பலர் எந்த ஸிஸ்டத்திலும் வராமலும் இருந்திருக்கிறார்கள்.


'????' ???????? : ( ??????????? ????? - ???????? ????? ) : kamakoti.org:
 
"அடுப்பங்கரை மதம்"


[TD="class: content"] அடுப்பங்கரை மதம்


நேரு, அடிக்கடி விவேகானந்தாவை கோட் பண்ணி, "kitchen religion " "அடுப்பங்கரை மதம்" என்று ஹிந்து மதத்தை தாம் ரொம்ப நன்றாக பரிஹாசம் செய்கிறோம் என்று நினைக்கிறார், வாஸ்தவத்தில் அவர்தான் ஹிந்து மதத்தின் சாரத்தை புரிந்துகொண்டு அதற்கு certificate தருகிறார்; நம் மதம் அடுப்பங்கரை மதம்தான்" என்று ஒரு சஸ்பென்ஸ் வைத்தார்.

"நாரதர் சனத்குமாரரிடம் போய் ஆத்மவித்தை உபதேசிக்க சொன்னார். அப்போது சனத்குமாரர், "ஆஹார சுத்தவ் சத்வ சுத்தி;" என்றுதான் ஆரம்பிக்கிறார். சாந்தோக்கிய உபநிஷத்திலேயே இந்த விஷயம் இருக்கிறது. "தூய உணவில் ஆரம்பி; அதுதான் குணம் தூய்மை ஆவதற்கு வழி. இப்படி சித்த சுத்தி ஏற்பட்ட பின்தான் படிப்படியாக ஈஸ்வர ஸ்மரணம், கட்டுக்கள் விடுபட்ட மோக்ஷம் எல்லாம் சித்திக்கும்" என்று சனத்குமாரரே kitchen religion ல்லதான் ஆரம்பிக்கிறார்" என்றார்.

இன்னொருத்தர் உதவியில்லாம அவாவா கார்யத்தை அவாவாளே பண்ணிக்கறா மாதிரி கல்வித்திட்டத்ல கொண்டு வரணும்ன்னுதானே சமூஹ சீர்திருத்தவாதிகள் சொல்லறா? அதுனாலதான், வாழ்க்கைக்கு முக்யமா வேணுங்கற அன்னத்தை அவனவன் ஸ்வயம்பாகம் பண்ணிக்க கத்துக் குடுத்துட்டா அதுதான் நெஜமான சீர்திருத்தம். சாஸ்த்ர வாக்யம் ஒண்ணு இருக்கு..."பஞ்சாசத் வத்ஸராத் ஊர்த்வம் ந குர்யாத் பாணி பீடநம்" அப்படீன்னா அம்பது வயசுக்கு மேல கல்யாணம் பண்ணிக்கக்கூடாது. புருஷாளுக்கே வயசானாவிட்டு, சமையல் பண்ண தெரிஞ்சிருக்கணும்ன்னு சாஸ்த்ரம் சொல்றது. சமையல் தெரிஞ்சுட்டா, வானப்ரஸ்தம் போக வேண்டிய வயஸ்ல தாம்பத்யத்துக்கு திரும்பற ஆபாசம் நடக்காம இருக்குமோல்லியோ?

முன்னமாதிரி இல்லாம இப்போ பக்ஷிகள் மாதிரி பூலோகத்ல எங்கெங்கே வேலை உண்டோ, அங்கங்கே போகணுங்கற நெலைமைல ஸ்வயம்பாகம் அத்யாவஸ்யமாறது. சுத்தத்துக்கு சுத்தம்; ஸத்வத்துக்கு ஸத்வம்; அதோட வெந்ததும் வேகாததுமா, கண்ட கையால சமைச்சததை ஹோட்டல்ல சாப்ட்டு சாப்ட்டு, சின்ன வயஸ்லேயே அல்சர், அது இதுன்னு அவஸ்தை படாம இருக்கலாம். சின்னதா ரொட்டி, பொங்கல் மாதிரி பண்ணத் தெரிஞ்சிண்டா போறும். இப்போ என்னடான்னா, கணக்கு வழக்கில்லாம வ்யாதிகள்தான் சர்வ வ்யாபகமா இருக்கு.

ரொம்ப தூரம் ப்ரயாணம் பண்ணணும்னாக்கூட பூரி, சத்துமா இதுகளை பண்ணி எடுத்துண்டு, பாலையோ, மோரையோ விட்டு சாப்ட்டுக்கலாம். அரிசியை நன்னா செவக்க வறுத்து பொடிச்சு வெச்சிண்டா அதுதான் சத்துமா. அதுல பாலையோ, மோரையோ விட்டு சாப்டா, புஸ்ன்னு ஊறிண்டு பசியடங்கி, புஷ்டியாவும் இருக்கும். 'குக்கர், கிக்கர்' கூட வேண்டாம். சுலபமா நாலைஞ்சு தினுசு அதுல பண்ணிக்கலாம்தான். ஆனா, குக்கர்ன்னு ஆரம்பிச்சா, அப்புறம் அஞ்சறைப்பெட்டி, ரொம்ப புளி, காரம் ன்னு எல்லாம் கூடவே வரும். உடம்புக்கு வரும். பரிஹாரமா மருந்து, அந்த மருந்துல அநாச்சாரம்...ன்னு போய்ண்டிருக்கும். அதுனால, ஒரு சாமான், ரெண்டு சாமான்னு வெச்சிண்டு, ஸாத்வீகமா பெரியவா சொல்றா மாதிரி, மதுரமா, ஸ்நிக்தமா லேசான ஆகாரத்தை நாமே தயார் பண்ணி சாப்பிடணுங்கறதை "ஜன்ம வ்ரதமா" எடுத்துக்கணும். "ஸ்நிக்தம்" ன்னா பசையுள்ளதுங்கறதுக்காக நெய் சொட்ட சொட்ட இருக்கணும்னு அர்த்தமில்லே.வறட்டு வறட்டுன்னு இல்லாம பால்லையோ, மோர்லையோ ஊறினதா இருக்கணும்.

சரி. அப்பிடி ரொம்ப சிம்பிளா சமைசுண்டா, அதிதி சம்ஸ்காரம் எப்பிடி பண்ணறது? அதையும் பெரிய தர்மமா சொல்லியிருக்கேன்னா, வர்றவாளுக்கு பாலும், பழமும் குடுக்கலாம். நம்ம கையால குடுக்கறது, அவாளோட குக்ஷில போகணும். அவ்வளவுதான். அந்தக் காலத்ல திருடனுக்கு கூட பால்சாதம் போட்டுட்டா, அவன் அந்த ஆத்ல திருடமாட்டான். நல்ல எண்ணத்தை வளக்கறது பால். அதுனாலதான் பாலோட, பழத்தையும் சேத்து குடுக்கச் சொல்றேன்.

எல்லாத்துக்கும் மேல, நாம சமைச்சதை பகவானுக்கு நிவேதனம் பண்ணிட்டு அதுல இருக்கற கொஞ்ச நஞ்ச தோஷத்தையும் போக்கிடணும். வேற மூர்த்தி, விக்ரஹம் இல்லாட்டா கூட, ப்ரத்யக்ஷ தெய்வமா இருக்கும் சூர்ய பகவானுக்கு நிவேதனம் பண்ணிடணும்.

[/TD]

[TD="class: foot"] Jaya Jaya Shankara, Hara Hara Shankara ![/TD]

??????????? ????! | Kanchi Periva Forum
 
ரமணர் எழுதிய தீபாவளி பாடல்!


ரமணர் எழுதிய தீபாவளி பாடல்!

நா
ன் இந்த உடம்பு மட்டுமே’ என்ற எண்ணம் உடையவனே நரகன். உடல் ஈடுபாட்டை ஒழித்து, அதாவது தேகாத்ம பாவம் (உடல் பற்று) நீங்கி, ஆத்மாவாய் ஒளிவிடுவதே தீபாவளி தத்துவம் என்பது, ரமணரின் திருவாக்கு.

தீபாவளியைப் பற்றி இரண்டு பாடல்களை ரமணர் இயற்றியுள்ளார். அவை எழுதப்பட்ட சூழலும் சுவையானதுதான். ரமணர் எதையும் தமக்காகச் செய்வதில்லை; பிறருக்காகவே செய்வார். ஞானத்தின் அடையாளமே அதுதானே!


p70.jpg


ஒரு தீபாவளி தினத்தன்று, தீபாவளி பற்றிப் பாடல் எழுத வேண்டும் என்று ரமணரிடம் வேண்டிக்கொண்டார் அவரின் பக்தரான முருகனார். அவரே சிறந்த கவிஞர். எனவே, 'நீங்களே கவிதை எழுதலாமே?’ என்றார் ரமணர். அதற்கு, ''நீங்கள் எழுதினால் நானும் எழுதுகிறேன்' என்றார் முருகனார். ரமணரும் ஒப்புக்கொண்டு இரண்டு பாடல்கள் எழுதினார்.



முதல் பாடல்:



நர குடல் நானா நர குலகு ஆளும்
நரகன் எங்கென்று உசாவின்ஞானத் திகிரியால்
நரகனைக் கொன்றவன் நாரணன் அன்றே
நரக சதுர்த்தசி நல் தினமாமே



கருத்து: தான் வெறும் உடல் மட்டுமே என்பவன்தான் நரகன். நரகன் யார் என்று அறிந்து, ஞான திருஷ்டியால் அவனைக் கொல்பவனே நாராயணன். ஞானத்தால் நாம் உடல் அல்ல என்று அறிந்து கொள்வதுதான் தீபாவளியாகும்.



2வது பாடல்:



நரக உருவா நடலையில் உடல
கிரகம் அகம் எனவே கெட்ட நரகனாம்
மாயாவியை நாடி மாய்த்துத் தானாய் ஒளிர்தல்
தீபாவளியாம் தெளி



கருத்து: உடம்பு நரகம் போன்றது. அதுவே நான் என்ற தவறான கருத்து உடையவன் நரகன். அந்தத் தவறான கருத்தை அழித்து, ஆத்மாவாக ஒளிவிடுவதே தீபாவளி.


ஆக, உடல் நீங்கி, ஆத்மாவாக ஒளிவிட்டுப் பிரகாசிக்க வேண்டும் என்பதுதான் பகவான் ரமணர் விளக்கும் தீபாவளி தத்துவம்.




????? ?????? ??????? ?????! - ????? ?????? - 2014-10-28
 
What is so special about Deepavali?

What is so special about Deepavali?

None can answer the question better than Kanchi Paramacharya. “A day of universal happiness emanated from the greatest calamity that could befall a mother and a son; nothing can be nobler than the wishes of a dying demon, and more so, the prayer of his bereaving mother, when all they asked for was that the death must be remembered as a day of celebration by everyone else”, so said the great Acharya in his Deepavali message in 1957.

The legend is well known. During Krishnavathara, there was a demonic king Narakasura. As no one else could defeat him, Lord Krishna’s help was sought and he proceeded to fight Narakasura with Devi Sathyabhama accompanying him. She in a different form as Bhoomi Devi was in fact Narakasura’s mother and indeed that was one of the reasons for his arrogance and belief that no one would be able to kill him. In the ensuing fight, Lord Krishna, feigned unconsciousness and the greatly shocked Devi Sathyabhama herself shot an arrow to kill Narakasura. As he was about to die, deep in sorrow, she asked the Lord that the day should forever be remembered: Narakasura’s wish was also the same. Thus came about the celebration of Deepavali.


Deepavali literally means an array of lights. ‘Thamosoma Jyotirgamaya’, so says the Upanishad – ‘lead me from darkness to light’. Darkness is not just the physical phenomenon of lack of light: it symbolizes misery and sorrow and failure: one wants to move away from these to happiness, health and prosperity. According to another legend this was the day, Lord Vishnu, in his incarnation as Vamana sent the evil Emperor Bali to the netherworld. In exercising the right of His promised third foot, He puts down the ahamkara or arrogance of Emperor Bali.

Deepavali is therefore about light, literally and metaphorically, dispelling darkness of all kinds. It is about a small foot trouncing the ultimate ahamkara.


“In the south India, the high point of celebration is the dawn preceding the new moon day, ie., chaturdasi, when the Sun is in the Thula Rasi and any water is deemed to be the sacred Ganga and the oil is deemed blessed by Sri Mahalakshmi herself. Everyone, from the simplest to the greatest, from an innocent child to a serene saint, is enjoined to take oil bath early that day and illuminate every nook and corner with a string of lights.


“Bhagavat Gita that emerged from the battle field, in the face of death and agony, is the foremost among books of knowledge. Deepavali, that emanated from two hearts, at a moment of ultimate sorrow for them, but with the happiness of the world at large as their objective, is thus the foremost festival.”


In the north India, where also Diwali is celebrated with gusto, it is deemed the day of Lord Rama’s return to Ayodya and his coronation: as the celebrations follow the coronation, it is an evening festival in the north. It is the day when Lakshmi puja is performed and business men especially in Gujarat and Rajasthan treat the day, or the following day, depending on tradition, as the beginning of the year, or prathama thithi.


Irrespective of what the underlying legend is, Deepavali, or Diwali, is celebrated throughout most of India as a day when the house is decorated with lights, everyone wears new clothes and fires crackers, exchanges and consumes sweets and passes on good wishes to everyone else.


According to Paramacharya, the message of Deepavali, however, remains simple: “It is a monument to the high ideal of subjucating the self for universal welfare’.


What is so special about Deepavali?
 
Cow's milk improves Sathva Guna

Cow's milk improves Sathva Guna


In practical terms, it is only cow’s milk which is a wholesome food. Usually, such a nutritious food will not be easily digested. But cow’s milk can be easily digested even by a small child and also by old people. It is also a food for the sick and the very weak.

Looking at it in terms of Vaidhikam, cow’s milk has the quality to improve sathva guna. This need not be accepted merely on the basis of faith. This will be clear if we look at sadhus who take only milk for their food and or so sathvik in nature.

Before the name Gomatha for Ambal, the name Gurumurthih and Gunanidhih occur. The power of food is among those which helps a person to evolve into a Gurumurthih, Gunanidhih. Milk is such a pure food.

There is something funny in this. Usually, the food that we get from the animal kingdom will affect sathva guna and increase rajasa and thamasa gunas. Sathvam – sathvikam means the mind being clear and being peaceful and at the same time remaining alert and not feeling tired or sleepy. Rajasa or rajasam is being affected by desire, anger etc and being in an agitated state. Thamasam means having no enthusiasm for anything, feeling exhausted and sleepy and dull. In such a dull stage, noble attitude will not develop but desire and anger will keep coming up. Sathva alone is pure. Cow’s milk though coming from an animal and is almost like its blood should normally affect the development of sathva guna and it also looks like being opposed to ahimsa food. But our sasthras have allowed cow’s milk as food for the sanyasi whose greatest dharma is ahimsa and who must have sathvik guna till the mind and guna are destroyed. If the cow has something which creates such purity, should it not be greatly divine?

The food of a sanyasi has two aspects. One is that it should improve sathvik quality and the other is that it should have been obtained without causing any harm to any other being. Cow’s milk satisfies both these requirements. In God’s creation, it has been created as the dwelling place of universal love. That is why among the mammals, it is only the cow, which produces more milk than what is needed for its calf and gives the excess to us. If a calf sucks the entire milk that the cow has, it will upset it health. What is clear from this is that it is the intention of the Lord that although the cow gives out milk only when its calf is near, it should also be mother to human beings and gives them milk. It is that love of a mother which has given the cow the high status not given to any other animal. The status is so high as to be considered divine.

The cow is God. Although she is an animal, she is Gomatha who gives milk like a mother and is the form of Srimatha. As Kamadenu, she is the divine mother who gives all that is desired. Kamadenu manifested from the Ocean of Milk (Kshirabdhi). It was Srimatha who came as Gomatha. This is how Muka prays to Kamakshi in his Panchasathi – ‘May you be our Kamadenu’

Kamadhuga bhava Kamale Kamakale Kamakoti Kamakshi

காமதுகா பவ கமலே காமகலே காமகோடி காமாக்ஷி
( ‘மூக பஞ்சசதீ’, ஆர்யா சதகம், ச்லோ.49)

Source: Voice of God Vol 7
 
மூர்த்தி வழிபாடும் முற்றிய ஞானமும்

மூர்த்தி வழிபாடும் முற்றிய ஞானமும்

இதோ எனக்கு முன்னால் வாழைப்பழச் சீப்பு வைத்திருக்கிறது. "இதைப் பார், இது மஞ்சளாக இருக்கிறது" என்று நான் சொன்னால் இது மஞ்சளாகத்தான் இருக்கிறது என்று காண்கிறீர்கள். அதற்குமேல் மனஸில் அதைப்பற்றி எந்தப் பிரதி சிந்தனையும் ( reaction ) எழுவதில்லை. மாறாக, இதே வாழைப்பழத்தைக் காட்டி, "இதோ பார், இது சிவப்பாக் இருக்கிறது" என்று நான் சொல்லியிருந்தால், உடனே நீங்கள் மனஸில் ஒர் ஆட்சேப உணர்ச்சி எழுந்திருக்கும். இது மஞ்சள் என்றோ, சிவப்பு என்றோ நான் சொல்லாமல், "இந்த வாழைப்பழம் சிவப்பாக இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னால் அப்போது உங்கள் மனஸில் ஒருவிதமான பிரதி உணர்ச்சி உண்டாகிறது. மஞ்சள் பழத்தையே சிவப்பாக இருப்பதுபோல் உங்கள் மனஸில் கற்பனை செய்து பார்க்கிறீர்கள்.

மனஸை ஒருமுகப்படுத்தினால் அப்படி பாவிக்கவும் முடிகிறது.



உபாஸனை என்பதை இப்படிப்பட்டதுதான். பரம்பொருள் இப்படி இப்படி இருப்பதாக பாவியுங்கள் என்று பலவிதமான குணங்களைக் கொண்ட பல மூர்த்திகளைக் காட்டிக் கொடுக்கிறது உபாஸனா மார்க்கம். வாழைப்பழம் உண்மையில் மஞ்சள் நிறம் என்பதுபோல் பரமாத்மாவின் உண்மையான குணம் என்ன? அது குணம் கடந்தது என்பதே பரமாத்மா எல்லா குணமும் கடந்த வஸ்து என்று சொல்லி விட்டால், அப்புறம் ஜனங்களின் மனசு அதில் மேற்கொண்டு நிற்பதற்கு இடமே இல்லை. இது நமக்குப் புரிபடாத வஸ்து என்று விட்டு விடுவார்கள். வாழைப்பழத்தைச் சிவப்பு என்று சொன்னதை மனசு ஆட்சேபித்ததுபோல் ஒரு சிலையைக் காட்டி இதுதான் பரமாத்மா என்றாலும், அதை எவராலும் ஏற்க முடியாது.

'இது ஒரு கல் பொம்மை அல்லவா? இது எப்படி உலகத்தை நடுத்துகிற பரமாத்ம சக்தி ஆகும்?' என்று தோன்றும். ஆனால், ஒரு சிலையைக் காட்டி, "இதைப் பரமாத்மா என்று பாவியுங்கள்" என்றால் அப்படி பாவிக்க முடிவதாகத் தோன்றும்- வாழைப்பழத்தைச் சிவப்பாகக் கற்பனை செய்வதுபோல். ஆனால் சிவப்பு என்றால் என்னவென்று மனசுக்குத் தெரிவதுபோல் பரமாத்ம லக்ஷணம் தெரியாதே! அதனால் விக்கிரகத்தை 'ஏதோ பெரிய வஸ்து என்று சிறிது எண்ணிப் பார்க்கலாமே தவிர, அதிலேயே ஆழ ஊன்றி நிற்க முடியாது.


தெரிந்த விஷயங்களில்தான் மனசு பிடிமானத்தோடு நிற்கும். எனவே ஒர் காருண்யமும் சௌந்தரியமும் வழிகிற மாதிரி ஸ்திரீ ரூபத்தில் விக்கிரகம் செய்து, "இதில் பரமாத்மா தாயாராக வந்திருக்கிறார் என்று பாவனை பண்ணு" என்றால், மனசு அதை நன்றாகக் கிரகித்துக்கொண்டு அப்படியே ஆழ்ந்து ஈடுபட முடிகிறது.



குணமற்ற பரமாத்ம வஸ்துவிலிருந்துதான் அனந்த கல்யான குணங்களும் வந்திருக்கின்றன. ரூபமற்ற பரமாத்மாவிடமிருந்துதான் சகல உருவங்களும் தோன்றியிருக்கின்றன. அந்தந்த குணத்துக்கு அநுகூலமான ரூபம், முத்திரை, ஆயுதம் முதலியவற்றோடு திவ்விய மூர்த்திகளைக் காட்டினால் அவற்றில் மனசு ஈடுபடுகிறது. புரியாத பரமாத்ம தத்துவத்தை நமக்குப் புரிகிற விதத்தில் உபாஸிக்க முடிகிறது.



சகலமும் ஆன பரமாத்மா, நாம் அவரை எந்த ரூபத்தில் உபாஸித்தாலும் அந்த ரூபத்தின் மூலம் அருள் புரிகிறார். படிப்படியாக நம் மனநிலையை உயர்த்துகிறார். கடைசியில் மனஸே இல்லாத, மனஸைக் கடந்த அந்த நிலையிலேயே குணமும் ரூபமும் கடந்த பரமாத்மாவை உள்ளபடி அநுபவிக்க முடிகிறது.

ஆரம்பத்தில் நமக்குப் பலவித மனோ விகாரங்கள் இருக்கும்போது, "பரமாத்மா எல்லாம் கடந்தவர்" என்றால் அதில் பிடிப்புக் கொள்ள முடியவில்லை. ரூபத்தில், குணத்தில் அவரை உபாஸித்தால், அது முற்றிய நிலையில், எல்லாவற்றுக்கும் அதீதமான பரமாத்மாவை உள்ளபடியே அநுபவிக்க முடிகிறது. மஞ்சள் பழத்தை மஞ்சளாகவே பார்க்கிறபோது மனஸுக்கு வேலை இல்லாமல் போகிறது.

"உபாஸனையின்போது, பரமாத்மாவாகவே இப்படி இப்படி பாவனை செய்தால் அதற்கு இன்னின்ன மந்திரம் ஜபிக்க வேண்டும். இன்னின்ன ஆசாரம் வேண்டும். இன்னின்ன பூஜா பத்ததி வேண்டும்" என்று விதிகள் இருக்கின்றன. பாவனை போய், அவரை உள்ளவாறு அறிகிறபோது எந்த விதியும் இல்லை, செயலும் இல்லை. சரீரம் மனசு இவற்றின் காரியமாகிற உபாஸனை இப்போதுதான் அநுபவமாகிற ஞானம் என்பதாகப் பழுத்து விடுகிறது.



இந்த ஞானம் நமக்கு ஆரம்பத்திலேயே வந்து விட்டதாக பாவனை செய்துவிடக்கூடாது. உபாஸனையே பெரும் பாலான ஜனங்களுக்கு ஞானம் பெற உபயமாகும், திவ்விய மூர்த்திகள் நாமாகச் செய்கிற கல்பிதமான பாவனை மட்டுமல்ல. பரமாத்மாவே மகான்களுக்கும் ரிஷிகளுக்கும் இந்த ரூபங்கள், மந்திரங்கள், விதிகள் எல்லாவற்றையும் அநுக்கிரகித்திருக்கிறார். பரமாத்மா வாஸ்தவமாகவே இப்படிப்பட்ட மூர்த்திகளாகி, அவற்றை அடைகிற மந்திர, யந்திர, தந்திரங்களாகவும் ஆகியிருக்கிறார். எனவே, உபாஸனை முறையை நம்பிக்கையுடன் சிரத்தையுடன் பின்பற்றினால் நிச்சயம் ஞானத்துக்கு வழி உண்டாகும்.



ஞானம் வருவதும் வராததும் இருக்கட்டும். இப்போது உபாஸிக்கிறபோது அன்போடு அதைச் செய்யவேண்டும். இந்த அன்பே, பக்தியே நமக்கு பெரிய நிறைவைத் தரும். அதனால் பகவானின் எல்லையில்லாத அன்பையும் அனுபவிப்போம். அதுவே பெரிய ஆனந்தம். இதற்கப்புறம் அவர் இஷ்டப்பட்டு அத்வைத ஞானம் தரட்டும்; தராமல்தான் இருக்கட்டும். அதைப்பற்றி இப்போது கவலைப்பட வேண்டாம். நாம் செய்யக்கூடியது பக்திதான். இதற்குப் பிரதியாகப் பெறக்கூடிய பகவதநுக்கிரக ஆனந்தமே நமக்குப் போதும்.

???????? ????????? ??????? ??????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
ஸ்கந்த சஷ்டி

ஸ்கந்த சஷ்டி


·.இன்று 24-10-2014 தொடக்கம்.


‘சஷ்டி’ என்றால் ஆறு என்று பொருள். திதிகளில் ஆறாவது என்பதால் அதற்கு ‘சஷ்டி’ என்றும் பெயர். ‘ஸ்கந்த சஷ்டி’ என்பது ஆறுமுகப்பெருமான், சூரனை வதைத்த பெருமையைக் கொண்டாடும் விழாவாகும். ஐப்பசி மாதம், சுக்ல பட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் ஸ்கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாட்களையும் முருக பக்தர்கள் விரத நாட்களாகக் கருதி வழிபடுகின்றனர்.

கூர்கொண்ட வேலன், போர் பூண்ட காலன், ஆறிரு தடந்தோளன் ஆறுமுகனுக்கு ஆயிரமாயிரம் கோயில்கள் இருந்தாலும் திருச்செந்தூர் தனிச்சிறப்பு வாய்ந்தது. முருகனின் அறுபடை வீடுகளில், திருச்செந்தூர் மட்டுமே கடற்கரைக் கோயில். ‘திருச்சீரலைவா’ என அழைக்கப்பட்ட திருச்செந்தூரில் அமைந்துள்ள இக்கோயில், சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் சிறப்பு வாய்ந்தது. இங்கு கொண்டாடப்படும் ‘ஸ்கந்த சஷ்டி’ விழா உலகப் பிரசித்தி பெற்றது. பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் இங்கு முருகப்பெருமான் நிகழ்த்தும் சூரசம்ஹார வைபவத்தைக் காணக் கண்கோடி வேண்டும்.

மங்கலங்களையே விரும்புவது மனித மனம். மங்கலங்களை நமக்களிப்பது போதுமென்ற மனம். போதுமென்ற மனத்தை அடையத் தடையாக இருப்பது ஆசை. அதுபோன்றே, பரம்பொருளாம் இறை பதம் சென்றடைய ஆணவம், கன்மம், மாயை போன்றவை தடைகளாக உள்ளன. இம்மும்மலங்களின் மொத்தத் தோற்றமே சூரபத்மன். அதர்மத்தின் வித்தான இவனது கொடுமையால் விளைந்தது தேவர்களின் சிறைவாசம். தேவர்தம் குறை தீர்க்கும் பொருட்டு சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோற்றமானான் கந்தப்பெருமான்.
ஆறுமுகன் தரிசனம் வேண்டி, தேவ குரு பிரகஸ்பதி செந்தூர் தலத்தில் தவமிருக்க, அவருக்குக் காட்சி தந்த முருகப்பெருமான் இங்கேயே தங்கினார். தேவ குரு மூலம் சூரபத்மனின் கொடுங்கோல் பின்னணியையும் தெரிந்து கொண்டார். அவனைத் திருத்தி ஆட்கொள்ள சமாதானம் வேண்டி தமது படைத்தளபதி வீரவாகுவைத் தூதாக அனுப்பினார்.

அசுர குணமல்லவா? ஆண்டவன் அருட்குணத்தைப் புரிந்து கொள்ளவில்லை. போருக்குக் கிளம்பி வந்த சூரபத்மனை வெற்றி கொண்டான் முருகப் பெருமான். இது, ‘ஆணவம்’ எவ்வகையில், எத்தனை முறை தலையெடுத்தாலும் அது பூண்டோடு அழிக்கப்பட்டே தீரும் என்பதை உணர்த்துவதாகும். இறுதியில் சூரபத்மனை வாஞ்சையோடு ஆட்கொள்ளவும் செதார் சிவனார் மைந்தன்.

எப்படி? முருகப்பெருமான் சூரபத்மனை கொல்ல வில்லை. மாறாக, மாமரமாக உருமாறி எதிர்த்த சூரபத்மனை தமது வேலாயுதத்தால் இரண்டாகப் பிளந்தார். இருகூறாகப் பிளந்த மாமரம், சேவலாகவும், மயிலாகவும் மாறியது. அசுர சுபாவத்தால் எதிர்க்கவும் முனைந்தது. தம் அருட்பார்வையை அவற்றின்மீது செலுத்தி ஆட்கொண்டார் முருகப்பிரான். கொடியவனான சூரன் சேவல் கொடியானான்; வேலவனைத் தாங்கும் வாகனமும் ஆனான்.

தேவர்களைப் பொறுத்தவரை நடந்தது சம்ஹாரம் என்றாலும், சூரபத்மனைப் பொறுத்தவரை அவனுக்கு நிகழ்ந்தது மங்கலமே. அனைவரையும் அலற வைத்தவன், அனைவராலும் வணங்கப்படுபவனாக ஆனது, எவ்வளவு பெரிய மாற்றம்?! ஆறுமுகனல்லவா இந்தப் பேற்றை அவனுக்கு அருளினான்.
ஸ்கந்த சஷ்டியன்று, யானை முகன், சிம்ம முகன், சூரபத்மன் என மூன்று ரூபங்களில் வரும் அசுரர்களை வதைக்கிறார் முருகப்பெருமான். இம்மூன்று அசுரர்களும் முறையே மாயை, கன்மம், ஆணவம் போன்றவற்றை உணர்த்துகின்றன. மாயையை உணர்த்தும் யானை முகன் முதலில் வதைக்கப்படுகிறான். மாயை ஒழிந்தால் கன்மம் தானாகவே தொலையுமாதலால் அடுத்து, சிம்ம முகனை வதைக்கிறார். மூன்றாவதாக, ஆணவ மலமானவன் சூரபத்மன். ஆணவ மலம் ஒடுங்குமே தவிர, அழியாது. எனவே, சூரபத்மனை மயிலாகவும், சேவலாகவும் ஒடுக்கிப் பணிகொண்டார் முருகப்பெருமான். இதுவே ஸ்கந்த சஷ்டி நமக்கு உணர்த்தும் தத்துவப் பொருளாகும்.

மனிதத் தலைகளாய் அல்லது கடல் அலைகளாய் என வியப்புறும் வண்ணம் லட்சோப லட்சம் மக்கள் பங்கு பெற்று களிப்புறும் திருச்செந்தூர் ஸ்கந்த சஷ்டி திருவிழா 12 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது. முதல் ஆறு நாட்கள் சஷ்டி விரதம் மேற்கொள்ளப்பட்டு, முடிவில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. பின்பு, ஏழாம் நாள் முருகப்பெருமான் - தெய்வானை திருக் கல்யாண வைபவம். அடுத்த ஐந்து நாட்கள் சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை சாதிக்கிறார். எதிர்த்து நின்றவனையும் ஏற்றுக் கொள்ளும் அம்பிகையின் அருமந்த புதல்வனின் அருட்திறத்தைத் தான், திருச்சீரலைவாயின் கடலலைகள் இன்றும் பாடிக் கொண்டிருக்கின்றன.


Source: Sage of Kanchi

Varagooran Narayanan
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top