• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
Sri Chandrashekhara Bharati Swami of Sringeri Bhasana on - Earnest Endeavor is most E

Sri Chandrashekhara Bharati Swami of Sringeri Bhasana on - Earnest Endeavor is most Essential

The tendency to neglect the wholesome doctrine - that Vedantic study is intended only for the competent - is responsible for the confused thinking of modern days. Even for simple crafts, such as masonry or carpentry, a preliminary course of training is required before a person is allowed to handle the instruments; but in the field of Brahma Vidya, the science of the Self, the highest and the most difficult of all sciences, everybody thinks himself competent and entitled to study the system of Advaita and even to sit in judgment over it.

This attitude must go and must be replaced by earnest endeavor first to secure the necessary competence. If we make an honest attempt to secure that competence by following implicitly the direction of the Sastras and the Guru, the Lord will guide us along the path of progress, solve all our problems and doubts, free us from all worry and trouble and lead us on to the state of realization of the Advaita Reality, the Truth and the bliss of the absolute oneness of all in the undifferentiated Brahman.

It is now ordinarily thought that for a modern Advaitin it is indispensable that he just studies the commentaries of our great master Sri Sankaracharya. He was certainly a seer. Did He become one after writing them and cogitating over the thoughts contained therein? What about His predecessors Govindapada, Goudapada, Suka and Vyasa Himself? Did they study the commentaries of Sankara to become seers?

This clearly shows that a study of these commentaries is not indispensable for a genuine aspirant for Self-realization. Further we are seeing every day very many persons who are very proficient in their exposition of these commentaries and other allied literature. Can we say with any truth that they are in any way nearer to Self-realisation than others? Catch hold of a single truth enunciated by the Vedas and stressed by our ancients and try hard to make it your own. God will certainly regard your honest efforts and guide you aright.

- Sri Chandrashekhara Bharati Swami of Sringeri

Source : Sage of Kanchi

Jambunatha Iyer
 
Cook your own food!

COOK YOUR OWN FOOD!

Swayam Paakam as a custom caters for improvement in ones environs and personal habits. That also enables disciplining one self.

Instead of lounging lazily and spend time in gossiping, cinema, cards games and so on, the need to cook ones own food will be a binding factor on time. Then we will not look for variety in materials and tastes, salivating with our tongue hanging out! So the tongue is brought under control.

Then the food may be full of sattva guna, we may be motivated to chant God's names while preparing the food. If you deliberate on the subject deeply, what looks like a minor issue of cooking ones own food has so many advantages. That is why, it is a Dharma Aachaara as given in our Saastraa-s.

Males do not have to be aghast as to how they are going to manage that. Once we have come to accept the necessity of doing so, we will learn.

Do not the girls learn by the time they are 12 years of age? Sans variety, some rice or chapatti, one vegetable and some curd; quickly our food is ready! What can be prepared in 15 minutes can be learnt in four days practice!

We have to eat to live. This is a basic need. So Swayam Paakam can be included in the basic syllabus of education for all boys and girls. I am very clear about this that, the existing so called secular education should be replaced by religious orientation along with all technical and professional education. As food is the main input for physical, mental and spiritual growth, making food should be a part of the basic syllabus.

All over the world, there is an effort to make women do all sorts of jobs originally thought to be men's exclusive domain.

At the same time there is a lot of heart burn that women have their hands full at home, cooking, feeding, cleaning, mending, washing and ironing; while the men folk behave like the Lions amidst their pride!

Swayam Paakam is a solution to this anomaly too!

(Source: Deivathin Kural, Vol. 3)



Sage of Kanchi

Venkatesan Ramadurai
 
Time stands still here

Time stands still here

March 26, 2015 20:17 IST


Close to Kanchipuram is the place special in many ways, writes Geetha Venkatramanan.

27FRMEDITATIONHALL_2353623g.jpg





“Could you please take us to the Veda-patasala run by Sri Sankara Bhakta Jana Sabha Trust?” G. Vaidyanathan, trustee, is only too willing to escort this writer, the photographer in tow, to the places, where the Vedas are taught. Vaidyanathan, 81, after retirement from service has totally dedicated himself to the task that was close to Paramacharya’s heart.


Our first stop is the meditation hall opposite the Kanchi Math on Salai Street. A 100-ft pillar erected to commemorate Paramacharya’s centenary welcomes visitors. Enlarged pictures of Sri Chandrasekharendra Saraswati adorn the walls, a massive version of Shilpi’s portrait of Mahaswami doing Chandramouliswara puja providing a colourful backdrop.


“See him with the Travancore ruler and there with the Kasi Maharaja!” with childlike enthusiasm Vaidyanathan points out to the frames that capture Mahaperiyava in all those rare moments. “That is me, before my marriage,” he chuckles, showing a picture in which a young man is trying to keep pace with the swift gait of Periyava.


But for the perseverance and devotion of a few expert photographers, the exhibition and the books would not have been possible. “Tiruchi Ramesh, Voltas Krishnaswamy, Vignesh Studio… they all trailed him,” says Vaidyanathan. Did Periyava allow himself to be photographed? “Oh, you couldn’t be sure. Suddenly Periyava would say, ‘Enough, shut down your camera,’ and they would fold up. Another source was Sita Ravi of Kalki. Dinamani and The Hindu also provided a lot of pictures,” he adds.


The Mantap has superb idols of Periyava to which puja is done. The palanquins that Periyava used for his journey have been preserved here. This is where Sama Veda classes are conducted. Young students form a group to render a brief chant of the most musical of the Vedas.


According to Mr. Vaidyanathan, as many as 396 students have passed out of the Patasala so far. “It was started in 1978 as suggested by Periyava,” he recapitulates. “He was in Satara at that time. He also suggested the name Sri Mahaswami Vidya Pita Trust. He never allowed his name or picture for any kind of endorsement but made an exception for the sake of the cause,” explains Vaidyanathan, who was asked to be a trustee. Ananthanarayana Sastri, great scholar, was handpicked by Paramacharya. Along with another Vaidyanathan, nine trustees were appointed to take care of the project. “Periyava strictly said the Trust should not seek Government aid,” the octogenarian says. A corpus fund, replenished by philanthropists, is the source.


“It takes nine years to master the entire regimen including ghanam but in six years a student is ready to pursue vaidikam as vocation,” says Vaidyanathan. Not all will be at par when it comes to learning? “True, the teaching is flexible. You know, Periyava told us categorically not to turn any student away on the grounds of mediocrity. ‘Find a way to make him useful. Rejection will only lead to laziness and depression,’ an advice that is followed even today.”


Our next destination is Anaikatti Street. The mid-day summer heat does not bother Vaidyanathan. Stopping in front of a house, he announces, “This is where Kanakabishekam was performed.” A huge picture of the Acharya stands on the spot. A personification of simplicity, how did he agree to the ritual? “Oh, he shook his head several times and finally melted when we pleaded with him.” Rig Veda is taught here.


Vaidyanathan never fails to ask of the young students, “What did you have for lunch? Is the milk supply regular? Did you wake up early in the morning?”


Prativadi Bayangaram Annangarachariar, whose house is located on the same street, and Periyava shared a unique relationship. “Periyava never hesitated to approach him for clarification on Vaishnavism and the scholar obliged happily. Why, he even came to Brahmatirtham in the Thenambakkam temple to do his anushtanam, a gesture about which Periyava once teased him, all in good humour.”


With the ease of a man much used to the route, the driver steers the car to Sivaasthanam. Sri Brahmapuriswarar temple is set in quiet rural surroundings. A favourite destination of Paramacharya, the temple is untouched by urban intrusion. In a way, the clock seems to have stopped here, the presence of Periyava palpable. “This is the room in which he stayed for one year. He didn’t see outside world during that period and would communicate only if it was absolutely necessary,” Vaidyanathan shows the room that has been preserved. He was one of the few allowed to serve him. Huge portraits and an eternal lamp add to the divine ambience.


“See that small window? Food, a fistful of puffed rice, would be pushed through that. Initially he would sweep the floor with darba grass and also mop it. We begged him to let us do it when he was away for his bath. We would finish the job in a jiffy and flee,” Vaidyanathan revels in memories.


The well from which water was drawn for Periyava’s ablutions is maintained with care. “It was on that side of the well that Indira Gandhi stood facing Paramacharya who was at the door step. They hardly spoke but he blessed her raising his hand which eventually became the Congress symbol,” says Vaidyanathan. “We huddled in a corner unobserved by both,” he adds with a twinkle in his eye.


The small window through which Periyava had darshan of the Ganapati shrine outside is boarded up. The wooden steps that he climbed to have gopura darisanam is intact too. “Many days Periyava would just stand in the pose of Tapas Kamakshi, one leg lifted and both palms folded above his head.”
Why?


“Who knows? For that matter, why did he choose to live in semi-exile for a whole year, giving up what little comfort he might have got at the Math? Only he knew the answer.” Vaidyanathan’s voice trails off as his mind travels back five decades.


“The area was overgrown with shrubs with little human inhabitation around. One day, we were shocked to see a snake coiled on his lap as he was deep in meditation. We couldn’t enter the room and there was no way we could signal to Periyava. With bated breath we watched through the window and as he was opening his eyes we whispered the message. Periyava gently shed his clothing and the snake slithered away. Turning to us he casually murmured, ‘It has been visiting me for the past four days. What’s the fuss all about?’”

This is where Yajur Veda is taught. “The premises is private property. It was Periyava’s foresight that saved the place, which otherwise would have been sold to settle some debts,” we are informed.


The ground slopes several feet and the ditch is full of vegetation. “That is Brahmatirtham. The water was believed to have curative properties. A philanthropist has come forward to restore the tank to its original form. That will happen soon.” Vaidyanathan’s optimism is touching.


“Well, with Periyava’s grace, the Trust has managed to keep his pet project alive. He has laid out the path; our task is to continue the journey,” says Vaidyanathan earnestly.


Time stands still here - The Hindu
 
ராம நாம மகிமை

ராம நாம மகிமை நம்முடைய இந்து சமயத்திலே ராமனும், கிருஷ்ணனும் பிரிக்கமுடியாத இரு வடிவங்களிலே நமக்கு அருள் பாலித்து வரகிறார்கள். ஒருவர் தட்சிணாயனம், மற்றொருவர் உத்தராயணம்.

ராமர் உத்தராயணத்திலே பங்குனி மாதக் கடைசியிலே சைத்ரமாச, சிரேஷ்ட மாசத்திலே அவதரித்தார். ராமன் சுக்ல பட்சத்திலே அவதரிக்கிறார். ராமன் நவமியிலே அவதரிக்கிறார்.

கிருஷ்ணன் அஷ்டமியிலே அவதரிக்கிறார். இப்படி ஒவ்வொரு விதம். ராமன் திரேதா யுகத்திலே, கிருஷ்ணன் த்வாபர யுகத்திலே, ஆனால் வடிவத்திலே இருவரும் நீலமேக ஸ்யாமளமாக, ஒரே வடிவத்திலே இருக்கிறார்கள். அங்கே ராமன் தர்மத்தை வாழ்நாள் முழுவதும் நடததிக் காட்டினார். கண்ணபிரான் தர்மத்தை தன் வாழ்நாள் முழுவதும் நடத்திக் காட்டியேதாடு மாத்திரம் இல்லாமல், அவருடைய பகவத் கீதையை நமக்கு அருளிச் செய்தார்.

இப்படியாக ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் பொருத்தம் அதிகமாக இருக்கிறது. அங்கேயும் ராமபிரான் தனியாகச் செல்லும்போது முதன்முதலாக விஸ்வாமித்ரர் யாக ஸம்ரட்சணத்தின் போது தாடகையை முதன் முதலாக கொல்கிறார். இங்கேயும் கிருஷ்ணபகவான் பிறந்தவுடன் முதன் முதலாக பூதனையைத்தான் கொல்கிறார்.

இப்படி இருவருக்கும் உள்ள ஒற்றுமையைப் பார்க்கும்போது, தர்ம ஸம்ரட்சணத்துக்காக நாம் எந்த காரியத்தைச் செய்தாலும் தவறில்லை என்பதைத்தான் அவர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். அந்த வகையிலே ராமனும், கிருஷ்ணணும், இருவரும் நம்முடைய வாழ்க்கைக்கு உயிர்நாடியான தீபங்கள். அதிலும் ராம நாமம் என்பது மிகவும் உன்னதமான நாமம் "ராமேதீ ராமா" மூன்று பெயருக்கும் அர்த்தம் உண்டு.

க்ருஷ்ணேதி க்ருஷ்ணா". நம்முடைய துக்கத்தையெல்லாம் போக்கடிப்பவர் ராமன். "ராமேதி ராமா" ஆனந்தத்தை எல்லாம் அளிப்பவர் ராமன் என்று பெயர். தசரதர் காலம் முதல் பழங்காலம் தொட்டு எத்தனையோ பேருக்கு வாழ்க்கையிலே துனபத்தையெல்லாம் போக்கி, ஆனந்தத்தை அளித்த பரம்பொருள். அந்த பரம்பொருளின் நாமம், மஹாவிஷ்ணு குரு வடிவத்திலே இருந்து ஸ்ரீ ராமனாக தசரதகுமாரனாக அவதாரம் செய்தார். தசரதருக்கு வெகு நாட்களாக குழந்தைகள் இல்லாமல் இருந்ததனால் இந்த துன்பம் எல்லாம் நீங்குவதுடன் குழந்தை பிறந்தவுடன் என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்ட பொழுது துன்பங்கள் எல்லாம் நீக்கி ஆனந்தத்தை கொடுக்கக் கூடிய பெயர் 'ராமன்' என்ற பெயரை வைத்தார்கள்.

உபநிஷத்திலேயிருந்து ராமனுடைய நாமம் விளங்கி வருகிறது. தசரதர் மெய்மறந்து அந்த பெயரை வைத்தார். தசரதனுடைய குமாரனுக்கு 'ராமன்' என்று பெயரை வைத்தார்களே தவிர 'ராமா ராமா' என்பது அனாதியாக உலகம் தோன்றிய காலம் முதல் உபநிஷத்திலேயிருந்து நாமமாக உள்ளது ராம நாமம். 'தாரக நாமம்' என்று சொல்லுவார்கள். நம்முடைய துக்கங்களை எல்லாம் கடக்க வைக்கக்கூடியது ராம நாமம் என்றும் சொல்லுவார்கள். எத்தனையோ கோடிக்கணக்கான மக்களுடைய துன்பங்களை எல்லாம் கடக்கவைப்பது ராம நாமம்.

தசரத ராஜாவுக்கும் அவர்களுடைய குடும்பத்துக்கும் துன்பங்களை போக்கியதால் 'ராமன்' என்று பெயர் வைத்தார்கள். இப்படி தேவதைகளுடைய துன்பங்கள் எல்லாம் போக்கடித்தார் ஸ்ரீராமன். தாடகா ஸம்ஹாரம் மூலமாக ரிஷிகளுக்கு எல்லாம் வந்த துன்பதைப் போக்கடித்து ஆனந்தத்தைக் கொடுத்தார்.


பதினான்கு வருடம் காட்டிற்கு யாத்திரை செய்து ரிஷிகளுக்கு எல்லாம் தரிசனம் கொடுத்தார். இப்படி பல செய்கையாலும் பலருக்கும் ஆனந்தத்தைக் கொடுப்பது 'ராம நாமம்' இன்றைக்கும் பலருக்கும் மனதிற்கு சாந்தியை அளித்து, ஆனந்தத்தை அளிக்ககூடியது 'ராம நாமம்' அப்படிப்பட்ட 'ராம நாமத்தினுடைய' ஜெயந்தி உத்சவம் ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி அன்று வருகிறது. அன்றைய தினம் நாம் ஒவ்வொருவரும் ராமபிரானை மனதில் நினைத்து ராம நாமத்தை ஜெபித்து நம்முடைய வாழ்க்கையிலும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருக ஸ்ரீராம் ஸ்ரீராம் என்று எல்லோரும் சொல்லவேண்டும்.


ராமனுடைய ஆட்சி காலத்திலே உலகிலே உள்ள பொருள்கள் இன்றைக்கு விலையேறி கிடந்தும் கிடைக்காத நிலையில் இருப்பது போல் அன்றைக்கு பொருள்கள் கிடைக்காத நிலையிலிருந்தும் வருந்திக்கொண்டு அத கிடைக்கவில்லை. இது கிடைக்கவில்லை அந்தப் பொருள் இல்லை என்று அழவில்லை "ராமோ ராமோ ரானமதி இராஹா மனோ கதாஹா:" ராம ராஜ்யம் உலகம் முழுவதும் ராமமே ராஜ்யம் உஷ சகி.

ராமன் ராஜ்ய பரிபாலனம் பண்ணும் போது ராமா ராமா என்று சொல்லுகின்ற ஜனங்கள் அரிசியில்லை, உளந்து இல்லை, கிருஷ்ணாயில் இல்லை, கறிகாய் இல்லை என்று ஒருவரும் அழவில்லை. அப்படிப்பட்ட நிலையை நம்முடைய நாட்டில் திரும்பவும் கொண்டு வர உலகம் முழுவதும் ராமா ராமா ராமா என்று ஜபத்தை ஜபித்து நம்முடைய வாழ்க்கையில் உள்ள எல்லா துன்பங்களும் அகலுவதற்கும், மனிதனுடைய துன்பங்கள் எல்லாம் அகலுவதற்கும்,

நல்ல புத்தி கிடைப்பதற்கு "ஸப்கோ சன்மதி ஹே பகவான்" என்று பிரார்த்தனை செய்து எல்லோருக்கும் நல்ல புத்தி கிடைப்பதற்கு ராமபிரான் அருள்வாராக.

??? ??? ????? : ( ??????????/ ??? ????????? - ??? ??????? ) : kamakoti.org:
 
அநுக்ரஹம்

அநுக்ரஹம்

அநுக்ரஹம் என்ற வார்த்தைக்கு ஒரு அர்த்தம் தோன்றுகிறது. 'அநு'என்பது 'அநுஸரித்து' அதாவது 'தொடர்ந்து' போவது என்று அர்த்தம் கொடுக்கும்.


'க்ரஹம்'என்றால் பிடித்துக் கொள்வது. நாம் ஈச்வரனை அவனுடைய நிர்குணமான ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் தொடர்ந்து போய் பிடிக்க முயற்சி பண்ணும்போது ஈச்வரனும் நம்மைத் தொடர்ந்து வந்து பிடித்துக் கொள்வதுதான் 'அநுக்ரஹம்'!அவனைப் பிடிப்பதில் ஒரு குறியாக இல்லாமல் இந்த மனஸ் மறுபடி எங்கேயாவது ஒடும்.


ஆனாலும் அவன் அதைத் தொடர்ந்து, அதாவது துரத்திக் கொண்டே வந்து பிடித்து, அது தன்னைப் பிடிக்கும்படியாகப் பண்ணுவதுதான் 'அநுக்ரஹம்'. தன்னை என்றால் மாயையோடு கூடிய நிலையிலுள்ள ஈச்வரனையுந்தான்;மாயா ஸம்பந்தமில்லாத ப்ரஹ்மத்தையுந்தான். ஏனென்றால், நம் மாதிரி ஈச்வரனும் மாயா ஸம்பந்தமுள்ளவன்தான் என்றாலும் நாம் மாயைக்கு அடிமைப்பட்டு மதியிழந்து ஆத்மஸ்வரூபத்தை மறந்திருப்பது போல இல்லாமல் அவன் மாயையும் தனக்கு அடிமையாக வைத்துக் கொண்டு, இத்தனை மாயா கார்யம் பண்ணுகிற போதிலும் பூர்ணமான ப்ரஹ்மாநுபவத்துடன் இருப்பவன். ஆகையால் அவனை மாயா ஸஹித ஈச்வரனாகவே நாம் பிடித்தாலும் அவன் மாயா ரஹித ப்ரஹ்மமாக நம்மைத் தன்னோடு ஐக்யம் பண்ணிக் கொள்வான்.

மாறி மாறி ஜீவனுக்கும் ஈச்வரனுக்கும் 'ரன்னிங் ரேஸ்'எப்படி நடக்கிறதென்றால்:இவன் (ஜீவன்) அவனைப் பிடிக்க முயற்சி பண்ணுகிறபோது அவன், 'ஏகப்பட்ட கர்மா பாக்கி உள்ள இவனுக்கு நாம் அத்தனை ஸுலபத்தில் எல்லா ஸம்பத்துக்களுக்கும் மேற்பட்ட ஸாக்ஷ£த்காரத்தைக் கொடுத்தால் தர்ம நியாயமே இல்லை'என்று பிடிபடாமல் ஒடுவது;அதனால் ஜீவ மனஸு, 'அவன்தான் பிடிபடலையே!'என்று அலுத்துப் போய் தனக்குப் பிடிபடுகிற கண்ட கண்ட விஷயங்களில் ஒடுவது;அப்போது ஈச்வரன் கருணையோடு அவனைத் தொடர்ந்து துரத்திக் கொண்டு வந்து பிடித்துத் தன்னை அவன் பிடித்துக் கொள்ளும்படி பண்ணுவது;ஆனாலும் இதை ஒரே வீச்சில் ரொம்ப 'லீனியன்டா'கச் செய்வது கர்ம தர்மத்திற்கு ஏற்றதில்லை என்பதால், தான் தொடருவதையும் பிடித்துக் கொள்வதையும் ஜீவன் தெரிந்து கொள்ளாத அளவுக்கு அத்தனை ஸ¨க்ஷ்மமாகச் செய்து மனஸை அப்பப்போ ஆத்ம விஷயத்தில் ஈடுபடும்படி (அது தான் அவனைப் பிடித்துக் கொள்வது - ஆனாலும் ரொம்ப லேசாகத் தொடுவது;அப்படி) ச் செய்வது;லேசான பிடிப்பை ஜீவன் இறுக்கப் பண்ணிக் கொண்டு அதற்கான காலம் வருவதற்கு முன்னாடியே விடுபட்டுவிடாமல் ஸமயத்திலே அவனிடமிருந்து நழுவி விடுவது;ஜீவன் மனஸைத் தறிகெட விடுவது;அப்புறம், 'அதற்குள்ளே இவன் அம்ருதத்திலே முழுகக் கூடாது என்று நாம் விலகிக் கொண்டால், இவனானால் ஜலத்திலேகூட முழுகாமல் சாக்கடையில் போய் விழுகிறானே!'என்று ஈச்வரன் பரிதாபப்பட்டு மறுபடி கொஞ்சம் பிடிபடுவது- என்றிப்படி இழுத்தடிக்க வேண்டிய மட்டும் இழுத்தடித்து விட்டு, கால க்ரமேண ஜீவன் நன்றாகவே மனஸ் முழுதையும் லக்ஷ்யத்தில் முழுக்கும்படிப் பண்ணி அப்போது ஈச்வரன் ஒரே துரத்தாகத் துரத்தி ஒரே பிடியாகப் பிடித்து, அதாவது 'அநுக்ரஹம்'என்பதைப் பூர்ணமாகச் செய்து ஸாக்ஷ£த்காரத்தில் சேர்ப்பது என்று நடக்கிறது.


http://www.kamakoti.org/tamil/dk6-77.htm
 
ஈஸ்வரனின் ஐந்து செயல்கள்

ஈஸ்வரனின் ஐந்து செயல்கள்


Iswaran_1770994h.jpg



ஞானிக்கு ஆத்ம ஸ்வரூபத்தைத் தவிர வேறெதுவுமே தெரிவதில்லை. ஒரே பரமாத்மா தான் இத்தனையாகவும் தெரிகிறது என்று கண்டு கொண்டவன் அவன். வெளியிலே தெரிகிற தோற்றத்தை மாயை என்று தள்ளிவிட்டு, எல்லாவற்றுக்கும் உள்ளேயிருக்கிற பரமாத்ம ஸ்வரூபத்தை மட்டுமே அநுபவிக்கிறவன் அவன். வெளிப் பார்வைக்குத் தெரிகிற உலகம் மாயை என்று ஆகிவிட்டதால், இந்த மாயா லோகத்தில் ஞானிக்குத் காரியம் எதுவுமே இல்லை. பார்க்கிறவன், பார்க்கப்படுகிற வஸ்து, பார்வை எல்லாம் ஒன்றாக அடங்கிப் போனவனுக்குக் காரியம் எப்படி இருக்க முடியும்? அவன் பிரம்மமாகவே இருக்கிறான் என்று உபநிஷத்து சொல்கிறது.



பிரம்மத்துக்குக் காரியம் இல்லை. ஆனால், இந்த மாய உலகத்தில் அகப்பட்டுக் கொண்டு காரியங்களைச் செய்து வருகிறவர்கள் ஈசுவரன் என்று ஒருவனைப் பூஜை செய்து தங்கள் காரியங்களை நடத்தித் தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள். நல்ல காரியங்களுக்காக நல்ல மனஸோடு பிரார்த்தித்தால் ஈஸ்வரனும் அவற்றை நடத்தித் தருகிறார். இதிலிருந்து ஈஸ்வரன் காரியமே இல்லாமல் இருப்பவரல்ல என்று தெரிகிறது. நாம் பிரார்த்தித்தாலும் பிரார்த்திக்காவிட்டாலும் சகல பிரபஞ்சங்களையும் இத்தனை ஒழுங்கான கதியில் நடத்திக்கொண்டு, சகல ஜீவராசிகளுக்கும் சோறு போடுகிற பெரிய காரியத்தைச் செய்கிறார்.


காரியம் இல்லத பிரம்மம் வேறு. காரியம் செய்கிற ஈஸ்வரன் வேறு என்பதா? இல்லை. ஞானியின் பிரம்மமே தான் லோக காரியங்களை நிர்வாகிக்கிற ஈஸ்வரனாகவும் இருக்கிறது.


சிவனின் தக்ஷிணாமூர்த்திக் கோலம் பிரம்ம நிலையைக் காட்டுகிறது. அங்கே காரியமே இல்லை. ஒரே மௌனம்தான். அதே பரமசிவன் எத்தனை காரியங்களை செய்திருக்கிறார்? சிதம்பரத்தில் ஒரேடியாகக் கூத்தடிக்கிறார். தாருகாவனத்தில் பிக்ஷாடனனாக அலைந்து மோகிக்கச் செய்திருக்கிறார். தக்ஷ யக்ஞத்தில் சூரியனைப் பளீரென்று அடித்துப் பல்லை உதிர்த்திருக்கிறார்.


ஸ்வாமி எப்போதும் உள்ளே அடக்கி பிரம்மமாக இருக்கிறார். வெளியிலே சகல ககாரியமும் செய்யும் ஈஸ்வரனாக இருக்கிறார். சாதாரண ஜனங்கள் ஏரியில், சம்ஸார அலைகளில் நீந்திக் கொண்டிருக்கிறார்கள். ஞானிகள் மறுபக்கம் வயலிலே நிற்கிறார்கள். நடுவில் ஏரிக்கரை. அது குறுக்கிடுவதால் ஞானிக்கு ஏரி தெரியாது. ஸ்வாமியோ இரண்டுக்கும் மத்தியில் இருக்கிற கரைமேல் இருக்கிறார். ஏரித் தடத்தில் நிற்கிற தடஸ்தன் அவர். அவருக்கு லோகமும் தெரியும். லோக சிருஷ்டி நசித்துப்போன ஞானியின் நிலையும் தெரியும். ஏரியில் முழுகுகிறவனைத் தூக்கிப் போடு என்று வயலில் இருக்கிறவனைக் கூப்பிட்டு அவர் சொல்ல முடியும்.


எல்லாம் தாமே என்பதை ஸ்வாமி அறிந்திருக்கிறார். ஆனாலும் அவரை வேறாக நினைத்திருக்கிற ஜீவர்களை அவரும் வேறுபோலப் பார்த்து வேடிக்கையும் செய்வார். இதைப் பற்றி  நீலகண்ட தீக்ஷிதரின் சிலலீலார்ணவத்தில் ஓர் அழகான சுலோகம் உண்டு. அதன் தாத்பரியத்தைச் சொல்கிறேன். பரமேஸ்வரனின் கூலியாளாக வந்து பிட்டுக்கு மண் சுமந்த கதை எல்லோருக்கும் தெரியும். அவர் உடைப்பு அடைத்து ஒழுங்காக வேலை செய்யாததைக் கண்டு பாண்டிய ராஜா அவரைப் பிரம்பால் அடித்தான். உடனே அந்த பிரம்படி பாண்டியன் உட்பட சகல ஜீவராசிகள் மீதும் விழுந்தது. இங்கே தாமே எல்லாமும் என்பதை அவர் காட்டிவிட்டார்.


இதைப் பார்த்துக் கவி கேட்கிறார். அது சரி, உன்னைத் தவிர வேறில்லை என்ற சிவாத் வைதம் பிரம்படி படுவதற்கு மட்டும்தானா? மதுரமான பிட்டை வாங்கி வாங்கித் தின்றாயே, அப்போது மட்டும் ஏன் எல்லா ஜீவராசிகளுக்கும் அதை உண்ட ஆனந்தம் இல்லை? அடிபடும்போது ஒன்று, ஆனந்தத்தின்போது வேறு வேறா?

ஸ்வாமி உள்ளே அடங்கிய பிரம்மமாகவும், வெளியே காரியம் செய்கிற ஈசுவரனாகவும் இருப்பதை இந்த ரஸமான கேள்வி மூலம் தெரிந்துகொள்கிறோம். அவர் செய்கிற காரியங்களை ஐந்தாகச் சொல்வார்கள். பஞ்ச கிருத்யம் என்பார்கள். சிருஷ்டி, ஸித்தி, ஸம்ஸாரம் என்ற மூன்று உங்களுக்கே தெரியும். இந்த மூன்றும் மாயாலோக விஷயம்தான். இப்படி மாயையால் மறைக்கிற காரியம் திரோதானம் எனப்படும். இந்த மாயையிலிருந்து விடுவிப்பதே அவன் செய்கிற மகா பெரிய காரியம். அநுக்கிரகம் என்று அதற்கே பேர். அத்வைத ஸித்தி நமக்கு ஏற்பட வேண்டும் என்றால், அதற்கு இந்த அநுக்கிரகமின்றி வேறு வழியில்லை. இந்த அநுக்கிரத்தை வேண்டி வேண்டிச் செய்கிற உபாஸனைக்கே, நம்மை அநுக்கிரகிக்கக்கூடிய கருணை படைத்தவர் அவர் என்று நம்பி அவரிடம் நெஞ்சுருகி அன்பு செலுத்துவதற்கே பக்தி என்று பெயர்.


????????? ????? ???????? - ?? ?????
 
Ramayana in One Sloka Ekasloka Ramayanam

[h=3]Ramayana in One Sloka Ekasloka Ramayanam[/h]
ramayana-one-sloka-ekasloka-ramayanam.jpg





Ramayana One Sloka or Eka Sloka Ramayanam is reading the ancient epic Ramayana in one stanza describing all the 7 Kandas of Ramayana. Also known as Eka Sloki Ramayana, this sloka says the story of Ramayan in short. It is believed that reading this single sloka on Ramayan with devotion is equal to reading the whole book.

Eka Sloki Ramayana Lyrics

Poorvam Rama Thapovanadhi Gamanam
Hatva Mrigam Kanchanam
Vaidehi Haranam, Jataayu Maranam
Sugreeva Sambhashanam
Bali Nigrahanam, Samudra Tharanam
Lankapuri Dahanam,
Paschath Ravana Kumbhakarna Madanam
Ethat Ithi Ramayanam

Explanation Of Eka Sloka Ramayana in English

Once Lord Rama went to forest, He chased the deer, Sitha was kidnapped, Jatayu was killed, There were talks with Sugreeva, Bali was killed, The sea was crossed, Lanka was burnt, And later Ravana and Kumbha Karna were also killed. This in short is the story of Ramayanam.


Ramayana in One Sloka Ekasloka Ramayanam | Hindu Devotional Blog
 
Smt. DKP & Our APPA

Smt. DKP & Our APPA

When Smt DK Pattammal was seven years old, she had the rarest opportunity of taking the blessings of Mahaperiyava of Kanchi Mutt, His Holiness Sri Sri Chandrasekarendra Saraswathi Swamigal. She was a regular visitor to the Kanchi mutt and her father would always insist on her to chant slokas in the mutt regularly after having dharshan at Kanchipuram Kamakshi Amman Temple.

Having noticed the little girl’s potential, Mahaperiyava personally requested DKP’s father to bring DKP to Esanur (when she was only 7 or 8 years of age) where he was stationed for observing the Chathurmasya Vratha. He wanted Krishnaswami Dhikshithar to participate during the Navarathri Pooja and wanted Young Pattammal to sing during his nine day Pooja.

DKP remembered with gratitude how Mahaperiyavaa himself offered the coconut kept in the Navarathri kalasam to DKP’s father and asked him to make Payasam (Kheer) out of the coconut and give it to the little kid. In her later days, she fondly remembered this incident and always believed that her success was due to the rarest blessings that she received from Mahaperiyavar!

There is an interesting story behind Anandeshvarena, Muthuswamy Deekshithar krithi in anandhabhairavi ragam. Once, D.K. Pattammal went to Kanchipuram, had darshan of the Kanchi Paramacharya and sang this song before him. The Paramacharya after expressing appreciation, asked her to desist from singing the song in concerts. The song according to Him ought to be sung only for pujas, in the presence of Sanyasis and Yatis, and in temples.

She says, “As a child I sang everyday before the Paramacharya of Kanchi. He said that I was blessed with Vak suddham, impeccable clarity in diction.” That was a great asirvadam blessing for me!”

Another story: When little DKP was a two month old child, her parents took her to Tiruvannamalai, where she received the blessings of Sri Ramana Maharishi Who seems to have fed her some honey and He was delighted when the little child enjoyed the taste. DKP in her later days shared that may be her diction and perfect rendition which she is popular for is due to the rare blessings of Sri Ramana Maharishi Himself.

*****
What a blessed Lady!

Smt DK Pattammal the eminent Carnatic music singer, was born today March 28th, 95 years back in 1919.



Source: Sage of Kanchi

Anantharaman Balu
 
அஸ்ப்ருகா - எட்டு குணத்தில் கடைசி.

அஸ்ப்ருகா - எட்டு குணத்தில் கடைசி.




அருணா பப்ளிகேஷன் வெளியிட்ட, 'காஞ்சி பெரியவரின் ஆன்மிக முத்துக்கள்' நூலிலிருந்து:
மனிதனுக்கு தயை, சாந்தி, அநசுயை, சவுசம், அநாயாசம், மங்களம், அகார்ப்பண்யம், அஸ்ப்ருகா என, எட்டு குணங்கள் உள்ளன.

தயை - சர்வ உயிர்களிடமும் அன்பு கொள்வது; சாந்தி  - அமைதி. விதியின் காரணமாக நமக்கு ஏற்படும் நோய், விபத்து, பணக் கஷ்டம் போன்ற துன்பங்களை பொறுத்துக் கொள்வதும், துன்பம் செய்வோரை மன்னித்து விடுதலும் அமைதியின் குணம்.

அநசுயை - பொறாமைப்படாமல் இருப்பது. சவுசம் என்பது, 'சுசி' என்பதிலிருந்து வந்தது. சுசி என்றால் சுத்தம்! ஸ்நானம், வஸ்திரம், ஆகார முறை எல்லாம் சவுசம் என்பதில் வரும்.

அநாயாசம் என்பது, 'டேக் இட் ஈஸி' என்பார்களே... அது தான், அநாயாசம். ஆயாசம் இல்லாமல், அதாவது, எதையுமே ஒரு சுமையாக எடுத்துக் கொண்டு கஷ்டப்படாமல், லேசாக இருப்பது அநாயாசம்.
மங்களம் - ஆனந்தமாக, அதிலேயே ஒரு நிலையாக இருப்பது.

அகார்ப்பண்யணம் - கருமித்தனம் இல்லாமல் இருப்பது. கிருபணன் என்றால் உலோபி; கருமி!
இந்தக் கருமித் தனத்திற்கு, கார்ப்பண்யம் என்று பெயர். அப்படி கருமித் தனம் இல்லாமல் தான, தர்ம சிந்தனையோடு இருப்பது தான் அகார்ப்பண்யம்.

அஸ்ப்ருகா - எட்டு குணத்தில் கடைசி. 'ஸ்ப்ருகா' என்றால் பற்று; ஆசை! எதிலும் பற்றில்லாமல் இருப்பதே, அஸ்ப்ருகா!


??????! | ??????? | Varamalar | tamil weekly supplements
 
வெளிநாட்டு விஷயத்தில் தண்ட நீதி

வெளிநாட்டு விஷயத்தில் தண்ட நீதி

வெளிநாட்டு ராஜாவால் ஜனங்களுக்கு ஹிம்ஸை உண்டாகாமல் ரக்ஷி்ப்பதும் ராஜநீதியில் முக்யமான அம்சம். லோகத்தில் எந்த தேசமானாலும் ஆதிகாலத்திலிருந்தே ராஜாக்கள் மற்ற நாடுகளைத் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வருவதற்காகப் படையெடுத்து யுத்தம் செய்வது என்று ஏற்பட்டிருக்கிறது. இதற்கு நான் ந்யாயாந்யாயங்கள் சொல்லப் போவதில்லை.


ஒரு வெள்ளைக்காரர்[SUP]*[/SUP] என்னிடம், அர்த்த சாஸ்த்ரத்தில் ஒரு காரணமும் இல்லாமல் ஒரு அரசன் பிற அரசர்கள் மேல் படையெடுத்து ராஜ்ய விஸ்தாரம் பண்ண வேண்டுமென்று சொல்லியிருப்பதை இப்போதுள்ளவர்கள் பின்பற்றலாமா என்று கேட்டார். அது ஏதோ அந்த நாள் நடைமுறை. அதுவும் இது தர்ம ஸம்பந்தமாயிருப்பதைவிட அர்த்த ஸம்பந்தமாகவே சொல்லப்பட்ட வழி. அதற்கு சாச்வத validity (செல்லுபடித்தன்மை) இருப்பதாகக் கொள்ளவேண்டியதில்லை என்று பதில் சொன்னேன்.


எப்படியோ, ராஜா என்றால் ஏக சக்ராதிபத்யத்துக்கு முயற்சி செய்ய வேண்டுமென்பது ஸ்திரப்பட்டுவிட்ட fact -ஆக எல்லா நாட்டிலும் பின்பற்றப்பட்டதை மட்டுமே கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். வேதாந்தத்தில் இது மண்ணாசை, பென்னாசைகளின் கீழேதான் வருமானாலும், அந்த வேதாந்தம் ராஜாவைப் பொருத்த மட்டில் அவனுடைய முதுமையில் வானப்ரஸ்த ஆச்ரமம் போக வேண்டியபோதுதான் இந்த ஆசைகளை விட வேண்டும் என்று அவனுக்குச் சொல்கிறது.


தர்ம சாஸ்திரம் ராஜாவை யுத்தத்துக்குப் போகாமல் கட்டுப்படுத்தி வைக்கவில்லையானாலும் அவனை யுத்தத்தில் தூண்டிவிடவுமில்லை. அர்த்த சாஸ்திரங்களோ, வெளி ராஜாவால் தன் நாட்டுக்கு ஹிம்ஸை ஏற்படும்போது மாத்திரம் டிஃபென்ஸில் (தற்காப்புக்காக) யுத்தம் செய்வது, அல்லது அந்நிய தேசங்களில் அதர்மம் அதிகம் இருக்கிறது என்பதற்காக அங்கே தர்மத்தை நிலைநாட்ட மாத்திரம் படையெடுத்துப் போய் யுத்தம் செய்து தர்ம ஆட்சியை ஏற்படுத்துவது என்றெல்லாமில்லாமல், பொதுவாகவே ராஜாவானவன் தன் ராஜ்யத்தை விஸ்தாரம் பண்ணிக் கொண்டு ஸார்வ பௌனமாக, சக்ரவர்த்தியாகப் பிரகாசிக்க வேண்டும் என்பதற்குத் தூண்டுதல் தருவதாக இருக்கின்றன.



ஆனாலும் ராஜ்ய விஸ்தரிப்பு என்பதற்காக எடுத்தவுடனேயே யுத்தத்துக்குப் போகும்படி அர்த்த – தர்ம சாஸ்திரங்கள் சொல்லவில்லை. உபாய சதுஷ்டயம் என்பதாக நாலு வழிகளைச் சொல்லி, நாலாவதாகவே யுத்தத்தை வைத்திருக்கிறது. மற்ற தேசங்களின் போக்கோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது நமக்குப் பெருமை தருகிற விஷயமாகும். கேள்விமுறை இல்லாமல் அரசர்கள் ரத்தக் களரி பண்ணுவது பிற தேசத்தவர்களின் வழக்கம்.


உபாய சதுஷ்டயம் என்பவை ஸாமம், தானம், பேதம், தண்டம், என்னும் நாலாகும்.
ஒரு ராஜா தானாக ராஜ்யத்தை விஸ்தாரம் பண்ணும்போதும், இன்னொரு ராஜா இவன்மேல் படையெடுக்க உத்தேசிக்கிறபோதும், இரண்டு ஸமயத்திலும் இந்த நாலு உபாயங்களை ஒன்றபின் ஒன்றாகத் கடைபிடிக்க வேண்டும்.


முதலில் அன்போடு பழகி அதனால் ஒரு ராஜாவை அடங்கி வரும்படிப் பண்ணமுடியுமாவென்று பார்க்க வேண்டும். வேண்டியவர்களைக் கொண்டு அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லச் செய்ய வேண்டும். மனஸில் சாந்தியோடு பிரயத்னம் செய்ய வேண்டும். இதுதான் ஸாமம்.


இரண்டாவது தானம். அதாவது நமக்குப் பிரியமான பொருளை அவனுக்குக் கொடுத்து, என் ராஜ்யத்தோடு சேர்ந்துவிடுகிறாயா என்று கேட்பது. அல்லது அவன் படை எடுத்து வந்தால் இப்படிக் கொடுத்து, திருப்தி பண்ணி அவனைத் திரும்பிப் போகப் பண்ணுவது. ராஜ்யத்தில் ஒரு சின்னப் பகுதியைச் சண்டையில்லாமலே கொடுப்பது, அல்லது தன தான்யங்களைக் கொடுப்பது, இல்லாவிட்டால் ராஜகுமாரியை எதிராளி ராஜாவுக்கோ, ராஜகுமாரனுக்கோ கன்யாதானம் செய்து கொடுத்து அவனோடு சண்டையில்லாமல் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்வது – இதெல்லாமல் தானோபாயத்தில் வரும். உள்ளன்பின் சக்தியால் மனஸை மாற்றுவதைவிட, பொருளைத் தந்து விரோதத்தைப் போக்கிக் கொள்வது கீழ்தான் என்பதால் ஸாமத்துக்கு அப்புறம் தானத்தைச் சொல்லியிருக்கிறது. நிஜமான பிரியம் இருக்குமானால், நம்முடையதெல்லாம் அவனுடையது அவனுடையதெல்லாம் நம்முடையது என்ற எண்ணம் வந்துவிடுமாதலால், என்னுடையதில் கொஞ்சம் உனக்குத் தருகிறேன் என்ற பேச்சு வராது. தானம் என்கிறபோது ஒற்றுமை போய் வேறுபாடு வந்துவிட்டதாகவே அர்த்தம்.



பேதம் என்பது இன்னம் கீழே. ஸாதாரணமாக நம் வாழ்க்கை விஷயங்களில் பேதோபாயத்தைப் பின்பற்றவே கூடாது. பேதமும் தண்டமும் ராஜாங்கத்துக்கு மட்டும் அநுமதிக்கப்பட்டிருக்கும் வழி தனி மநுஷ்யர்களுக்கல்ல. எதிராளியைச் சேர்ந்திருப்பவர்களிடம் பிளவு உண்டாகும்படிப் பண்ணி, இதனால் அவனுக்கு ஆதரவு குறையுமாறு செய்து, சக்தி குன்றிப்போன ஸ்திதிக்கு அவனைக் கொண்டு வந்து, இப்போது எனக்கு அடங்குகிறாயா என்று கேட்டுக் கப்பம் கட்ட வைப்பது பேதோபாயம். Divide and rule (பிரித்து ஆளுவது) என்பதில் divide பண்ணுவது (பிரிப்பது) பேதம். இது கெடுதலான உபாயந்தானென்றாலுங்கூட, அர்த்த சாஸ்திரத்தில் இதிலும் ஒரு தார்மிகக் கட்டுப்பாடு வைத்திருப்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது எதிராளியின் சக்தியைப் பேதோபாயத்தால் குறைத்தவுடனேயே அவன் மேல் படையெடுத்து ஹதாஹதம் பண்ணி ஜயித்துவிட முடியும்தான் என்றாலும், அப்படிச் சண்டைக்குப் போகாமல், பலம் குறைந்த அந்த ஸ்திதியில் அவனாகப் பணிந்து வருகிறானா என்று பார்த்துவிட்டே, வராவிட்டால் யுத்தம் செய்ய வேண்டும் என்று வைத்திருக்கிறது.


யுத்தந்தான் நாலாவதான தண்டம். உள்நாட்டுக் குற்றவாளிகளுக்குப் பலவிதமான தண்டனைகள் மூலம் தண்டம். வெளி ராஜாவுக்கு யுத்தத்தின் மூலம் தண்டம். இரண்டுக்கும் இடையில் அநேக வித்யாஸங்களிருந்தாலும் ஹிம்ஸிப்பது, சிக்ஷிப்பது பொது அம்சம். ஃபிஸிகலாக பலத்தைக் காட்டுவது இரண்டுக்கும் பொது.


கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உள்நாட்டு விஷயத்தில் கூட இந்த நாலு உபாயமும் இருப்பதாகத் தெரிகிறது. ஸத்துக்களைக் கொண்டு வாழ்க்கை உதாரணத்தாலும், உபதேசத்தாலும் தர்மங்களை ஸாத்விகமாகப் பரப்புவது ஸாமம். மான்யம், டைட்டில், சலுகைகள் தருவது தானம். ப்ராஸிக்யூஷன் (அதாவது ராஜாங்கம்) குற்றவாளியைச் சேர்ந்த ஒருவனையே அப்ரூவராக ஆக்கிக்கொண்டு குற்றத்தை நிரூபணம் செய்வது பேதம். தண்டனைதான் தண்டம்.


https://dheivathinkural.wordpress.com/2014/10/09/வெளிநாட்டு-விஷயத்தில்-த/
 
புராதன நூல்களில் நவீனக் கண்டுபிடிப்புக&#

புராதன நூல்களில் நவீனக் கண்டுபிடிப்புக்கள்



வராஹமிஹிரர் "ப்ருஹத் ஸம்ஹிதை' என்று ஒரு கிரந்தம் எழுதியிருக்கிறார் என்றேனல்லவா? அதில் இல்லாத விஞ்ஞானக் கண்டுபிடிப்பு இல்லை.


வெறும் ஆகாசத்தில் இந்தக் கிரஹங்களெல்லாம் இருக்கின்றனவே. விழாமல் எப்படி நிற்கின்றன?

இதற்குக் காரணத்தை நியூடன் என்பவர்தாம் கண்டுபிடித்தார் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். மிகப் பழைய காலத்தில் உண்டான சூரிய சித்தாந்தத்தின் ஆரம்பத்தில் இருக்கிற ச்லோகமே, பூமி விழாமல் இருப்பதற்கு ஆகர்ஷண சக்தி காரணம் என்று சொல்லுகிறது.

நம் பகவத்பாதாளின் உபநிஷத் பாஷ்யத்திலும் பூமிக்கு ஆகர்ஷண சக்தி இருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு வஸ்துவை நாம் மேலே வீசி எறிந்தால் அது மறுபடியும் கீழே வந்து விழுகிறது. அப்படி விழுவது அதனுடைய ஸ்வபாவகுணம் அல்ல. அது பூமியில் விழுவதற்குக் காரணம் பூமியின் ஆகர்ஷண சக்தியே. ஆகர்ஷண சக்தி யென்றால் இழுக்கும் சக்தி என்பது அர்த்தம். பிராணன் மேலே போகும்; அபானன் அதைக் கீழே இழுக்கிறது. ஆகவே, கீழே இழுக்கிற சக்திக்கு அபானசக்தி என்று பெயர்.

ஸ்ரீ ஆசார்யரவர்கள் பிருதிவிக்கு அபானசக்தி, அதாவது ஆகர்ஷண சக்தி, இருக்கிறதென்று சொல்லியிருக்கிறார்கள். ப்ரச்நோபநிஷத்தில் (III.8.) "ப்ருதிவியின் தேவதையே மநுஷ்ய சரீரத்தில் அபானனை இயக்குகிறது" என்று வருகிறது. அதன் பாஷ்யத்தில் ஆசார்யாள், மேலே போட்ட பொருளை பூமி ஆகர்ஷிக்கிற மாதிரி, மேலே போகிற பிராணனை அபானம் கீழே இழுப்பதைப் பற்றிச் சொல்கிறார். இதனால் உபநிஷத்திலேயே Law of Gravitation பேசப்படுவதாக ஆகிறது. இவைகளைப் போன்ற பல அருமையான விஷயங்கள் நம்முடைய சாஸ்திரங்களில் இருக்கின்றன. நமக்கு இவைகள் தெரியாததனால் தேசாந்திரத்தில் உள்ளவர்கள் நமக்கு எவ்வளவோ காலம் பிற்பட்டு எழுதியவைகளுக்கு அளவில்லாத கௌரவத்தைக் கொடுக்கிறோம்.



இப்பொழுது எவ்வளவு விதமான கணக்குகள் லோகத்தில் இருக்கின்றனவோ அவ்வளவு கணக்குகளும் எவ்வளவோ வருஷங்களுக்கு முன்பே உண்டான நம்முடைய ஜ்யோதிஷ சாஸ்திரங்களில் இருக்கின்றன.


[ஸ்ருஷ்டி தொடக்கமான] கல்பாரம்பத்தில் எல்லாக் கிரஹங்களும் ஒரே நேராக இருந்தன. அப்புறம் காலம் ஆக ஆக அவை கொஞ்சங் கொஞ்சமாக மாறிக் கொண்டே வருகின்றன. மற்றொரு கல்பாரம்பத்தில் மறுபடியும் நேராக வந்துவிடும்.


நாம் செய்யும் கர்மாக்களில் முதலில் சொல்லும் ஸங்கல்பத்தில பிரபஞ்ச வர்ணனை, கால அளவை என்றெல்லாம் சொல்லப்படுகிற அவ்வளவும் ஜ்யோதிஷ விஷயந்தான்.


பூ ஆகர்ஷணம் மட்டுமில்லை, பூமி சுற்றுவதையும்கூட ஆர்யபடர், வராஹமிஹிரர் முதலானவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 'பூமிதான் நம் பிரபஞ்சத்துக்கு மத்தியாக நின்ற இடத்தில் நின்று கொண்டிருக்கிறது. ஸூர்யனே அதைச் சுற்றி வருகிறான். அதனால்தான் இரவு பகல் உண்டாயிருக்கின்றன' என்றே மேல் நாட்டுக்காரர்கள் பதினாறாம் நூற்றாண்டுவரை நினைத்து வந்தார்கள். இதற்குக் கொஞ்சம் மாறாக யாராவது ஆராய்ச்சி பண்ணிச் சொன்னால், அவரை மதகுருமார்கள் stake என்ற கம்பத்தில் கட்டி நெருப்பை வைத்துக் கொளுத்தினார்கள்! ஆனால் ரொம்பவும் பூர்வ காலத்திலேயே நமக்கு இந்த விஷயங்கள் தெரிந்திருந்தன.


பூமிதான் ஸூர்யனைச் சுற்றுகிறது, ஸூர்யன் பூமியைச் சுற்றுவதில்லை என்பதற்கு, ஆர்யபடர் ரொம்ப அழகாக ஒரு பேர் கொடுத்திருக்கிறார். அதற்கு 'லாகவ - கௌரவ நியாயம்' என்று பேர். லகு என்றால் லேசானது, சின்னது என்று அர்த்தம். 'லகு'வைக் குறிப்பது 'லாகவம்'. 'லேசாக', 'லைட்'டாக ஒன்றை எடுத்துக் கொண்டு செய்வதைத்தான் 'கை லாகவம்', 'ஹஸ்த லாகவம்' என்கிறோம்.

லகுவுக்கு ஆப்போஸிட் (எதிர்ப்பதம்) குரு. கனமானது, பெரியது எதுவோ அதுவே குரு. மஹாகனம் பொருந்தியவர், கனவான், பெரியவர்கள் எனப்படுகிறவரே குரு. அவர்தான் ஆசாரியர். ஆசாரியர் குரு என்றால், அப்போது சிஷ்யன்தான் லகு. குருவான ஆசாரியரைத்தானே லகுவான சிஷ்யன் பிரதக்ஷிணம் பண்ணுகிறான்? அதாவது சுற்றிச் சுற்றி வருகிறான்? ஆசாரியர் சிஷ்ய பிரதக்ஷிணம் பண்ணுவாரா? மாட்டார். நம் பிரபஞ்சத்தில் (solar system -லே) பெரியது, குருவானது ஸூர்யன் தான்; லகு பூமி. குருவைத்தான் லகு பிரதக்ஷிணம் செய்யும் என்பதே 'லாகவ-கௌரவ நியாயம்'! இதன்படி பூமிதான் ஸூர்யனைச் சுற்ற வேண்டும். இப்படிப் பிரபஞ்சத்தை குரு - சிஷ்ய கிரமமாக பார்த்து சாஸ்திரமாகவும் ஸயன்ஸாகவும் ஆர்யபடர் சொல்லியிருக்கிறார்.



இப்போது நாம் எந்த மதஸ்தர்கள் விஞ்ஞான சாஸ்திரம் வளர முடியாதபடி விஞ்ஞானிகளை 'ஹெரிடிக்' என்று சொல்லிக் கொளுத்தினார்களோ, அதே மதஸ்தர்களோடு சேர்ந்துகொண்டு, "இந்தியாவில் ஸயன்ஸ் வளராததற்கு காரணம் ஹிந்து மதம்தான். பரலோகம், பரலோகம் என்று சொல்லிக்கொண்டு ஹிந்து மதம் இந்த லோகத்து விஷயங்களையெல்லாம் அலக்ஷ்யம் செய்துவிட்டது" என்று குற்றம் சொல்கிறோம்! வாஸ்தவத்தில் அத்தனை ஸயன்ஸுகளும் நம் சாஸ்திரங்களிலே இருக்கின்றன.
ஸூர்யன் இருந்தபடிதான் இருக்கிறது; பூமிதான் அதைச் சுற்றி வருகிறது; பூமி சுற்றுவதால்தான் ஸூர்யன் உதிப்பதாகவும் அஸ்தமிப்பதாகவும் தோன்றுகிறதேயன்றி வாஸ்தவத்தில் ஸூர்யன் பூமியின் கிழக்கே தினம் தினம் உதித்து அப்புறம் மேற்கே நகர்ந்துகொண்டேபோய் அஸ்தமிக்கவில்லை என்ற விஷயம் ரிக்வேதத்திலுள்ள ஐதரேய பிராம்மணத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. "ஸூர்யன் உதிப்பதும் இல்லை; அஸ்தமிப்பதும் இல்லை" என்று அதிலே தெளிவாகச் சொல்லியிருக்கிறது
பூமி சுற்றுகிற விஷயம் வித்வான்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்த விஷயம் என்பதற்குத் திருமலை நாயகரிடம் மந்திரியாக இருந்த நீலகண்ட தீக்ஷிதரின், "சிவோத்கர்ஷ மஞ்ஜரி"யில் ஆதாரம் இருக்கிறது. 'பூமிர் ப்ராமயதி' என்றே இதில் கடைசி சுலோகம் ஆரம்பிக்கிறது. அந்த ச்லோகத்திலிருந்து, நீலகண்ட தீக்ஷிதருக்குப் பெரிய பாட்டனாரான அப்பய தீக்ஷிதருக்கும் பூமி சுற்றும் விஷயம் தெரியும் என்பது தெரிகிறது. [அந்த] ச்லோகத்தில் என்ன சொல்லியிருக்கிறது?



ஈச்வரனுக்கு அஷ்டமூர்த்தி என்பது ஒரு பெயர். பூமி, ஜலம், வாயு, அக்னி, ஆகாசம், ஸூர்யன், சந்திரன் (யாகம் செய்கிறவனான) யஜமானன் ஆகிய இந்த எட்டும் ஈச்வரனுடைய மூர்த்திகள். இவற்றிலே யஜமானன் ஒருத்தனுக்கு மட்டும் ப்ரமணம் (சுற்றுதல்) இல்லை. பாக்கி ஏழும் ப்ரமணம் உடையவையே என்று அப்பய தீஷிதர் சொல்லியிருக்கிறார். அப்படி அவர் சொல்லியிருக்கிறார் என்பதை அவருடைய தம்பி பேரரான நீலகண்ட தீக்ஷிதர் இந்த ச்லோகத்தில் எடுத்துக்காட்டியிருக்கிறார்.


காற்று நின்ற இடத்தில் நிற்காமல் சுற்றுவதும், நெருப்பும் கொஞ்சம்கூட ஸ்டெடியாக இல்லாமல் அசைந்து ஆடுவதும், ஜலமும் இப்படியே ஒரு இடமாக இருக்க முடியாமல் ஓடுவதும் நம் கண்ணுக்கே தெரிவதுதான். ஆகாசத்தைப் பார்க்கும் போது ஸூர்ய - சந்திரர்கள் சுற்றுவது தெரிகிறது. ஆகாசத்திலேதான் ஸகல ஸப்தங்களும் இருக்கின்றன. சலனம்தான் சப்தமூலம் என்பதால் அந்த ஆகாசமும் ப்ரமணமுடையது என்று தெரிகிறது. ஆனால் பூமியைப் பார்த்தால் அது, போட்டது போட்டபடி இருக்கிற மாதிரித்தானே தெரிகிறது? இப்படித் தெரிந்தாலும், அதுவும் சுற்றுகிற ஏழில் ஒன்று என்றே அப்பைய தீக்ஷிதர் கருதியிருக்கிறார். "பூமிர் ப்ராமயதி" என்று ச்லோகம் ஆரம்பிப்பது பூமியின் சுழற்சியைத் தான் சொல்கிறது.


பூமியின் ஆகர்ஷணம், சுற்றுவது முதலியன இருக்கட்டும். பூமியின் ரூபத்தையே பார்க்கலாம். வெள்ளைக்காரர்கள் என்ன சொல்கிறார்கள்? 'பூமி தட்டையாகத் தோசைக்கல் மாதிரி இருக்கிறது என்றுதான் பழங்காலத்தில் நினைத்தார்கள். அது தட்டையாக இல்லை, பந்து மாதிரி உருண்டையாக இருக்கிறது என்று நாங்கள்தான் ஸமீப நூற்றாண்டுகளில் கண்டுபிடித்தோம்' என்கிறார்கள். ஸரி, 'ஜாகரஃபி'க்குப் பேர் என்ன சொல்கிறோம்? 'பூகோள சாஸ்திரம்' என்கிறோம். 'பூசாஸ்திரம்' என்று சொன்னாலே போதும். ஆனாலும் பூமியானது கோளமாக, அதாவது உருண்டையாக இருப்பது நமக்கு ஆதிகாலத்திலிருந்தே தெரியும் என்று தெரிவிப்பதாகத்தான் 'பூகோளம்' என்று சொல்லியிருக்கிறது.



Universe எனப்படும் ஸகல நக்ஷத்ர லோகங்களும் உட்பட்ட பிரபஞ்சத்தை 'ப்ரம்மாண்டம்' என்கிறோம். 'பிரம்மனால் படைக்கப்பட்ட அண்டம்' இது. அண்டம் என்றால் என்ன தெரியுமா? கோழி முட்டை. கோழி முட்டை திட்டமான உருண்டையாக இருப்பதல்ல. ஒரு உருண்டையின் ஓரங்களைத் தட்டிவிட்ட மாதிரி நீளவட்டத்தில் கனபரிமானம் உள்ளதாக முட்டை இருக்கிறது. நவீன விஞ்ஞானத்திலும் Universe என்பது உருண்டையாக (spherical) இல்லை; முட்டை மாதிரி oval வடிவத்தில் கனபரிமாணமுள்ளதாக elliptical -ஆகவே இருக்கிறது என்கிறார்கள்.


இந்தப் பிரபஞ்சம் முழுக்க நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது என்ற மாடர்ன் அஸ்ட்ரானமியில் சொல்கிறார்களென்றால் வேதகாலத்திலிருந்து நாம் இதற்குத் தந்திருக்கிற பேரே இந்த உண்மையைத்தான் சொல்கிறது. 'ஜகத்', 'ஜகத்' என்றே நாம் சொல்கிறோம். 'ஜகத்' என்றால் நின்ற இடத்தில் நிற்காமல் போய்க்கொண்டேயிருப்பது என்றுதான் அர்த்தம் .


பூமி சுற்றுகிறது என்ற வாதத்தை ஆக்ஷேபித்தவர்களும் நம்மவர்களில் சிலர் இருந்துதான் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சாராருடைய அபிப்பிராயத்தைச் சொல்கிறேன்: பூமியின் சுற்றளவு (circumference) சுமார் இருபத்தையாயிரம் மைல். அதனால் ஒரு நாளில் (24 மணிகளில்) பூமி ஒரு தடவை தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது என்றால், அது மணிக்கு ஆயிரம் மைல் சுற்றுகிறது என்று அர்த்தம். அப்படியென்றால், ஒரு நிமிஷத்தில் அது பதினாறு அல்லது பதினேழு மைல் சுற்றுகிறது. அதாவது, பூமி சுற்றிக் கொண்டேயிருப்பதால் இந்த நிமிஷத்தில் இந்த மயிலாப்பூர் இருக்கிற இடத்தில், அடுத்த நிமிஷம் இங்கேயிருந்து பதினேழு மைலில் இருக்கிற ஒரு ஊரோ, சமுத்ரமோ வந்தாக வேண்டும். இந்த நிமிஷத்திலே இந்த மயிலாப்பூரில் உட்கார்ந்து கொண்டிருக்கிற காக்காய் உட்கார்ந்த இடத்தைவிட்டு எழும்பி ஆகாசத்தில் நேரே போகிறது. அடுத்த நிமிஷம் அது கீழே வருகிறது. முன்னே எங்கே உட்கார்ந்திருந்ததோ அதே மயிலாப்பூர் மரத்தில் அல்லது மாடியில் வந்து உட்காருகிறது. பூமி சுற்றுவது நிஜமானால் இது எப்படி ஸாத்தியமாக இருக்க முடியும்? அது மேலே எழும்பின ஒரு நிமிஷத்தில் கீழே இருக்கிற பூமி சுற்றுகிற சுற்றில் மயிலாப்பூர் இருக்கிற இடம் நகர்ந்து பதினேழு மைலுக்கு அந்தண்டை உள்ள இடமல்லவா இங்கே வந்திருக்க வேண்டும்? - இப்படிக் கேட்கிறார் பூப்ரமண ஸித்தாந்தத்தை ஆக்ஷேபிக்கிறவர்.



இதற்கு மேற்படி ஸித்தாந்திகள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று நான் பார்க்கவில்லை. ஆனால் நவீன விஞ்ஞானம் படித்தவர்களைக் கேட்டபோது, "பூமியைச் சுற்றி சுமார் 200 மைலுக்கு atmosphere என்ற காற்று மண்டலம் இருக்கிறது; அதற்கப்புறமும் உறைகள் மாதிரிச் சில மண்டலங்கள் இருக்கின்றன; இவையும் பூமியோடு கூடவே சுற்றி வருகின்றன" என்று விளக்குகிறார்கள். நான் இப்போது சொன்னதில் கொஞ்சம் பிசகு இருந்தாலும் இருக்கலாம். அதெப்படியானாலும், பூமி மட்டுமன்றி அதன் அட்மாஸ்ஃபியரும் அதோடுகூட சுற்றுகிறது என்பதில் சந்தேகமில்லை.
Arabic Numeral என்று சொல்கிற 1,2,3,4 இலக்கங்களக்கு இந்தியாதான் மூலமான தாய்வீடு என்று, இப்போது மேல் நாட்டினர் கண்டுபிடித்திருக்கிறார்கள்.


ஸைஃபர் என்பதே இந்தியாவிலிருந்து வந்ததுதான் என்று மேல்நாட்டு அறிஞர்கள் சொல்கிறார்கள். இது தெரிய வந்ததால்தான் கணித சாஸ்திரம் பூரண ரூபம் பெற முடிந்தது என்கிறார்கள்.
ஸைஃபர் வந்தது மட்டுமில்லை, எந்த இலக்கத்தை ஸைஃபரால் வகுத்தாலும் infinity (அனந்தம்) வருகிறது என்ற சூக்ஷ்மமான கணித உண்மையையும் பாஸ்கராசாரியார் சொல்லி அதைப் பரமாத்ம தத்வத்தோடு சேர்த்துத் தம் கணித சாஸ்திரத்தின் மங்கள ச்லோகமாகக் கூறுகிறார்.



வகுக்கும் எண் (divisor) சின்னதாக ஆக ஆக ஈவு (quotient) பெரிதாகும் அல்லவா? பதினாறை எட்டால் வகுத்தால் (அதாவது வகுக்கும் எண் எட்டாக இருந்தால்) ஈவு 2; வகுக்கும் எண் நாலானால் ஈவு 4; இரண்டானால் ஈவு 8 ஆகிறது. ஸைஃபராலேயே வகுத்து விட்டால்? அப்போது ஈவானது எண்ணிக்கையாலேயே குறிப்பிட முடியாத அனந்தமாகிவிடுகிறது; infinity ஆகி விடுகிறது. வகுபடும் எண் எதுவானாலும் சரி, அதை வகுக்கிற எண் ஸைஃபரானால் ஈவு அனந்தம். இதற்கு கஹரம் என்று பாஸ்கராச்சாரியர் பேர் கொடுத்திருக்கிறார். 'கம்' (Kham) என்றால் ஸைஃபர்; 'ஹரம்' என்றால் வகுத்தல், 'இப்படி அனந்தமாக இருக்கிற பரமாத்மாவை நமஸ்கரிக்கிறேன்' என்று தம்முடைய கணித சாஸ்திரத்தில் அவர் சொல்கிறார்.


?????? ????????? ?????? ?????????????????? : ( ??????????? ????? - ???????? ????? ) : kamakoti.org:
 
ஜீவன் ஒரு வருஷம் ப்ரயாணம் பண்ணித்தான் பி

ஜீவன் ஒரு வருஷம் ப்ரயாணம் பண்ணித்தான்
பித்ரு லோகம் சேர்கிறது...

ஒருவர் இறந்த பிறகு ஜீவன் உடனே பித்ரு லோகம்
போவதில்லை. இன்னொரு ஜன்மாவும் எடுத்து
விடுவதில்லை. இறந்து போனவனின் ஜீவன் ஒரு
வருஷம் ப்ரயாணம் பண்ணித்தான் பித்ரு ஸ்தானத்தை
அடைகிறது. இதை நம் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிற
மாதிரியே க்ரீக் மிதாலஜி முதலான மத க்ரந்தங்களிலும்
சொல்லியிருக்கிறது. ஜீவ வைதரணி நதியைக் கடந்து
எம பட்டணம் போக வேண்டும் என்று நாம் சொல்கிறாற்
போல் அவர்களு ஒரு நதிstyx யைத் தாண்டித் தான் மறு
லோகம் hades போகவேண்டும் என்று சொல்கிறார்கள்.
நாம் சொல்கிறார்போல் எமப் பட்டணத்தில் ஒரு காவல்
நாய் போல அவர்களும் ஒன்றைcerberus சொல்கிறார்கள்.

இந்த ஒரு வருஷத்தில் ஜீவன் பரலோகம் போகப் பிடிக்கும்
இந்தக் காலத்தில் அதன் த்ருப்திக்காக மாதா மாதம் சில
சடங்குகளைச் செய்வது, உணவு முதலியன யாத்ரா வழிக்கு
செய்வது கூட சில மதங்களில் சொல்லியிருக்கிறது.
பிள்ளை குட்டி இல்லாதவர்களுக்கு நாம் கயா பத்ரி போன்ற
இடங்களில் பிண்டம் போடுவது போல்,க்ருஸ்துவர்களும்
all souls day என்று ஒரு வழிபாடு எல்லா ஆத்மாக்களும்
கரையேற நடத்துகிறார்கள்.லோகம் பூராவும் இப்படியோரு
நம்பிக்கை இருக்கிறதானால் அது சத்யமாகத்தானே
இருக்கவேண்டும்!

மஹா பெரியவாளின் அருளுரை

ஜய ஜய சங்கரா.....



Sage of Kanchi

Saraswathi Thyagarajan
 
அந்நியக் கொள்கைகள் ஆறு

அந்நியக் கொள்கைகள் ஆறு

அந்நிய ராஜ்யங்களிடம் ஒரு ராஜா கடைப்பிடிக்க வேண்டிய ஆறு கொள்கைகளை 'ஷாட்குண்யம்'என்று அர்த்த சாஸ்திரங்கள் வகுத்துக் கொடுத்திருக்கின்றன.

ஸந்தி, விக்ரஹம், யானம், ஸ்தானம் (அல்லது ஆஸனம்) , ஸம்ச்ரயம், த்வைதீபாவம் என்பனவே இந்த ஷட்குணங்கள்.

'ஸந்தி'என்பது ஸ்நேஹ உடன்படிக்கை, ஸமாதான உடன்படிக்கை செய்துகொண்டு ஒற்றுமையாயிருப்பது. ஸந்தி செய்துகொண்டுள்ள ராஜ்யங்களைத் தற்காலத்தில் allies (நேச நாடுகள்) என்கிறோம்.

'விக்ரஹம்'என்பது விரோத நாடாகவே கருதி யுத்தம் செய்வது. 'ஸ்தானம்'அல்லது 'ஆஸனம்'என்பது இந்தக் காலத்தில் சொல்கிற neutrality (நடுநிலைமை) , non-alignment (கூட்டுச்சேராமை) என்று சொல்லலாம்.

'யானம்'என்பது Cold-war மாதிரி - அதாவது, ஆக்சுவலாக யுத்தப் முஸ்தீபுகள் மட்டும் பண்ணிக் காண்பித்துக் கொண்டிருப்பது,

'ஸம்ச்ரயம்'என்பது நம்மைவிட பவிஷ்டனான இன்னொரு ராஜாவிடம் ஸ்நேஹ பாவத்துடன் போய், அவனை ர¬க்ஷயாகக் கொண்டு வேறொரு சத்ரு ராஜாவை எதிர்ப்பது. First World War -ல் இப்படித்தான் ஆஸ்ட்ரியா ஜெர்மனியையும், வேறேதோ ஒரு சின்ன தேசம்*ரஷ்யாவையும் ஸம்ச்ரயமாக அடைய அந்த இரண்டு சிறிய ராஜ்யங்களின் சண்டை பெரிய உலக யுத்தமாகவே ரூபமெடுத்து விட்டது. '

த்வைதீபாவம்
' என்பது ஒரு ராஜ்யத்தோடு யுத்தம் போடுவதற்காகவே, அதற்குப் பக்கத்திலுள்ள ராஜ்யம் அதோடு சேர்ந்துவிடாமல், முன்கூட்டி அதைத் தனக்கே ஸ்நேஹிதமாக ஆக்கிக் கொண்டு ஸமாதான உடன்படிக்கை செய்து கொள்வது.

ஸ்நேஹத்துக்காக ஸ்நேஹமில்லாமல் காரிய்துக்காக ஸ்நேஹம். டிப்ளமஸி (ராஜதந்த்ரம்) என்பது டூப்ளிஸிடியாகவே (இரண்டு விதமான ஸ்டான்டர்டுகளில் ஏமாற்றுதலாகச் செய்வதாகவே) ஆகிவிடுவதற்குத்தான் ' த்வைதீபாவம் ' என்று பெயர் கொடுத்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

முன்னேயே சொன்னாற்போல டூப்ளஸிடி என்பது தர்ம சாஸ்திரத்துக்கு ஸம்மதமில்லாமல் அர்த்த சாஸ்திரம் மட்டுமே சற்று அநுமதித்துள்ள விஷயந்தான். அதனால் இதற்கு நாம் மதிப்புக் கொடுக்க வேண்டியதில்லை.

???????? ????????? ??? : ( ??????????? ????? - ???????? ????? ) : kamakoti.org:
 
பொய்யும் பயமும்!


பொய்யும் பயமும்!



ஒரு தப்பு செய்த போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? அது ஓர் அழுக்கு மாதிரி உங்கள் மனசையே உறுத்துகிறது. உடனே இந்த அழுக்கை யாரும் தெரிந்து கொண்டு விடக்கூடாது என்று அதை மூடி மறைக்க தோன்றுகிறது. நியாயமாக தவறுதல் உண்டானவுடன் பிரார்த்தனை பண்ணினால் அந்த பிரார்த்தனையே சோப்பை போல் அந்த தப்பை அகற்றிவிடும். அப்படி செய்யாமல் தப்பை மற்றவர்கள் தெரிந்து கொள்ளாமல் மூட வேண்டும் என்கிறபோது பொய்ய சொல்ல வேண்டியதாகிறது.

அழுக்கை தேய்த்து கழுவாமல் மூடி மூடி வைத்தால் சீழ் பிடித்து சிரங்காகிவிடுகிறது. உள்ளத்தை ரொம்பவும் கெடுக்கிற பயங்கரமான சிரங்கு பொய் தான்.

எதனால் தப்பை மறைக்க பார்க்கிறோம்? ஒன்று நம்மை மற்றவர்கள் நல்லவன் என்றே நினைக்க வேண்டும் என்ற பொய் எண்ணத்தினால் அல்லது இன்னொருத்தரிடம் பயத்தினால் மறைக்கப்பார்க்கிறோம். பொய் என்பது சிரங்கு என்றால் பயம் என்பது சொறி மாதிரி.

பெரியவர்களிடமெல்லாம் உங்களுக்கு நிறைந்த மரியாதையும் மதிப்பும் இருக்கத்தான் வேண்டும். ஆனாலும் அர்த்தமில்லாத பயம் கூடாது. பயம் உள்ளத் தூய்மையை கெடுக்கிற அழுக்கு. தப்பு செய்வதால் கூட அதை உணர்ந்து பணிவுடன் உள்ளபடி பெரியவர்களிடம் சொல்ல வேண்டுமே ஒழிய பொய்யால் மூடி மறைக்க கூடாது. தப்பு செய்தது போதாது என்று பொய்யும் சொன்னோம் என்பது வெளிப்பட்டு நமக்கு மேலும் அவமானம், கஷ்டம் தான் ஏற்படும்.

உள்ளப்படி சொன்னால் பெரியவர்கள் மன்னித்து விடுவார்கள். மன்னிக்காமல் அவர்கள் தண்டித்தாலும் பரவாயில்லை. அவர்களுக்கு அந்த உரிமை உண்டு. நாம் தப்பு செய்தோம். அதனால் அதற்குரிய தண்டனையை பெறுகிறோம் என்று தைரியத்துடன் தண்டனையை ஏற்க வேண்டும். தைரியம், சத்தியம் இவை எல்லாம் மனஅழுக்கை போக்குகிற சோப், சீயக்காய் மாதிரி.

ஜத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகராந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வமிகள்

???????? ??????! | ????? | Kalki | tamil weekly supplements
 
3 simple teachings of adi shankara.

Three Simple Teachings of Sri Adi Shankaracharya





https://www.youtube.com/watch?v=UOtyBmBmkJE&list=PLqC-yIoshJcaPNAamDJy9dt5nROCUgkYR

On 30th December, Jagadguru Shankaracharya Sri Sri Bharati Tirtha Mahaswamiji arrived at Mancherial. The Jagadguru was received with great devotion and devotees were blessed with an Anugraha Bhashanam after the performance of Dhuli Pada Puja to the holy Padukas of the Jagadguru.


In His Anugraha Bhashanam, the Jagadguru stated that many great people have taken birth in this country and have performed many noble deeds. Sri Adi Shankaracharya is among the foremost of such great personages. He was verily the incarnation of Lord Shiva. Our country has a timeless tradition of following Sanatana Dharma. Although it is referred to as Hindu Dharma in the present times, Sanatana Dharma is its original name. This has been in practice since creation began. The Holy Veda has described Dharma thus:

धर्मो विश्वस्य जगतः प्रतिष्ठा लोके धर्मिष्ठं प्रजा उपसर्पन्ति धर्मेण पापमपनुदति धर्मे सर्वं प्रतिष्ठितम् तस्माद्धर्मं परमं वदन्ति ।


Thus have the Vedas described the greatness of Dharma. As it is expounded in the Vedas, this Dharma is called Vaidika Dharma. As this Dharma has been in practice since time immemorial, it is called Sanatana Dharma. The world will be prosperous as long as this Dharma is practiced. When there is a break in the practice of this Dharma, it will lead to all kinds of disasters. It is with this view that our tenets prescribe an uninterrupted practice of Dharma.


However time is a wondrous thing! In a long span of time, conditions do not remain the same. They change. That is the greatness of time. There will be a time when there will be destruction of Dharma. Certain people keep destruction of Dharma as their sole aim, causing inconvenience to those who follow Dharma. During such a time, there will be no practice of Dharma, the country will be in turmoil. Under such conditions, God Himself will incarnate. He will annihilate those who try to destroy Dharma, protect those who practice it and thereby protect this Dharma. This happens in every aeon (Yuga). If one were to look back, during Tretaa Yuga, God reincarnated as Rama and killed Ravana and others who oppressed Dharma. During Dwaapara Yuga, God incarnated as Krishna and protected Dharma. Similarly, in the Kali Yuga, God incarnated as Adi Shankaracharya and protected Dharma.


There is a unique feature about this incarnation. Unlike in the earlier incarnations of God, Sri Shankaracharya did not kill anybody to protect Dharma. He removed the misconceptions in the minds of people. As a result of Buddhist propaganda, people then thought that this Dharma was of no use, that the Vedas were not the ultimate authority and that there was no need to practice what was preached in them. However through His endeavors, Sri Adi Shankaracharya strengthened the faith in the Vedas and made people realize that not adhering to them would result in a crisis. Thus people took a keen interest in Dharma; peace and prosperity were restored in the country.


Sri Adi Shankaracharya, who had carried on such great endeavors, has also blessed us by writing several works. They number in the hundreds. Through these works, we can gain knowledge about several topics. To understand Dharma, Vedanta and other such noble subjects, it is essential that we read Sri Adi Shankaracharya’s works. He has written to bestow knowledge on a variety of audiences, including the layman.

TEACHING ONE. OFFER YOUR MIND TO GOD



For instance, we think that to make an offering to God, we need to take fruits, flowers, food, etc. However Sri Shankaracharya says, “This is fine. But this alone is insufficient. There is one thing which is of utmost importance, which should be offered. What is that? It is but your mind. Without first offering your mind, there is no use of offering anything to God.” Therefore, Sri Shankaracharya has said:

समर्प्यैकं चेतः सरसिजमुमानाथ भवते
I should offer my mind as a flower to the Lord’s feet.


In this context, what is meant by offering the mind to the Lord? Is mind a tangible object? How then, is it possible to offer the mind? Offering your mind means meditating on the Lord always in your mind. You should think only of the Lord, not of other unnecessary things. Why? Because there is simply no purpose. There are so many things happening in the world. But do we stand to gain anything by thinking about them? No. But if we use the same time to meditate upon the Lord, it will give us great benefit. In our life, time is invaluable. Wasting it is a big mistake. The only way to not waste it, is to think of God always. If even a small bit of time is spent without thinking about the Lord, we should be as pained as we would feel if there was a theft in our house.


मुहूर्तमात्रेऽतिक्रान्ते भगवच्चिन्तनं विना ।
दस्युभिर्मुषितेनेव युक्तमाक्रन्दितुं ध्रुवम् ॥


If even a moment is wasted without thinking of the Lord, we should feel guilty about it. We think of many unnecessary matters. Is it of any use? Certain people come to attend a Puja, but start discussing about irrelevant matters, when seated in front of the deity. Is that the time to talk such matters? Where have you come and what are you discussing? Your duty then is to keep thinking of the Lord and watch the Puja. You have to chant the Lord’s name and meditate upon Him. Instead, if you let your mind dwell on impertinent matters, there is no bigger mistake than this. Therefore, Sri Shankaracharya has asked us to offer our mind as a flower to God. In essence, it means: Focus on the Lord, without letting your mind wander.


TEACHING TWO. KEEP THE COMPANY OF SATPURUSHAS



Similarly, Sri Shankaracharya has given us another teaching: “To always spend your time in the company of Satpurushas.”


Satpurushas never think badly of others, even in their minds. They only think of helping others, at all times. Such people see only the good in every person, never their bad qualities. Every person, in this world has good and bad traits. Nobody is 100% good or 100% bad. Therefore, we have to view only the good attributes in every person. We must never pay attention to the bad traits, as it will not be of any use to do so. Noble people are like that. Lord Shiva is cited as an example in this regard. During the churning of the milk-ocean, the moon and the Haalaahala poison were obtained. Lord Shiva kept the moon on His head, visible to everybody. He consumed and concealed the poison in His throat, without releasing it. What is the meaning behind this? We have to prevent the bad from coming out, while displaying only that which is good.


गुणदोषौ बुधो गृह्णन् इन्दुक्ष्वेडाविवेश्वरः ।
शिरसा श्लाघते पूर्वं परं कण्ठे नियच्छति ॥


We have to view only the good qualities, not the bad. But it is a trait in man to see only the bad qualities in others. If suppose a person has done ten good deeds, nobody has praise. Instead people keep pinpointing the one fault that he may have committed. This is man’s nature. But the noble are not like that; they see only the good. Therefore, if we keep the company of the noble, we will also imbibe their qualities. It is man’s nature to imbibe the qualities of the company he keeps. If we subcribe to the company of the ignoble, we tend to become so. On the other hand, we attain nobility in the company of the noble. Hence, Sri Shankaracharya has advised us to always stay in the company of good people and avoid association with the bad.


TEACHING THREE. SHED YOUR EGO



Yet another matter that Sri Shankara Bhagavatpada has taught us is to shed ego.
People are proud of their wealth, knowledge, position and strength. Sri Shankaracharya has stated: “None of these are permanent. Wealth, knowledge, position and strength are ephemeral. Being proud on account of these is a very big mistake.”


मा कुरु धनजनयौवनगर्वम् ।
हरति निमेषात् कालः सर्वम् ॥


All these will perish in a moment. Why are you proud of these? Due to ego, we tend to commit mistakes. When a person is egoistic, he tends to think that nobody can do anything to him and that he can do whatever he pleases. But we need to tell such people that nobody may question them here in this world, but there is surely somebody who will question upon leaving one’s mortal coil. You cannot escape from Him (God) by stating that you own wealth, knowledge or authority! You will have to face the consequences. Hence, bear this in mind and do not err. Therefore, Sri Shankaracharya has asked us to always remember that we are answerable after death and has asked us to be cautious in our actions. The wealth you have obtained is due to God. So use it for His service. Use it to alleviate the sufferings of those in need. Do not use your wealth to do misdeeds. Similarly, use your authority, which you have obtained as a result of merit acquired in your previous birth, to do good to the society, not to cause harm.


In this manner, Sri Adi Shankaracharya has given a number of teachings on how even a common man should lead his life. It is due to this that His fame has become immortal. If, even after 12 centuries of His incarnation, we still utter Sri Adi Shankaracharya’s name with utmost devotion and respect, one can imagine the yeoman service He has rendered to us. Thus, we have to journey in the noble path prescribed by Him and make our lives worthy and pure. Only then will this great human birth be made meaningful and worthy.
The Jagadguru wished that everyone should keep this in mind and lead one’s life accordingly. The Jagadguru mentioned His two previous visits to Mancherial. He noted that the people here have welcomed and served the Sringeri Jagadguru and have become worthy of Their blessings. The Jagadguru expressed happiness at the devotion of the people of Mancherial.


The Jagadguru invoked the following prayer to conclude His Anugraha Bhashanam, “May God always let you have this devotion and sincerity. May He always grant you keenness in matters pertaining to Dharma. May your minds always dwell on God. May you attain all-round welfare.”


Mancherial: December 30, 2012 @ The Vijaya Yatra of the Sringeri Jagadguru


 
ஜகத்குரு அருளிய அதிசய மந்திரம்! — ரா.கணபதி

ஜகத்குரு அருளிய அதிசய மந்திரம்! — ரா.கணபதி

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எனக்குள் ஒரு கேள்வி: ஒன்றேயான கடவுளின் பல
வடிவங்களான பல தேவதைகளுக்குத்தான் மூல மந்திரங்கள் உள்ளனவே தவிர, மூலமான ஒரே
கடவுளுக்கென அந்த மந்திரமும் இல்லாதிருப்பது ஏன் என்பதே கேள்வி.

ப்ரணவம் எனும் ‘ஓம்’ மூலக்கடவுளுக்கே உரித்தான மந்திரந்தான் ஆயினும் வேறு பல
மகான்களின் கருத்துக்கு மாறாக, சாஸ்திரக் கருத்தையே மட்டுமே ப்ரணவ ஜபம்
செய்யலாம், ஏனையோர் முதலில் ‘ஓம்’ என்று கூறி அதோடு குறிப்பிட்டதொரு
தேவதைக்கான மந்திரத்தைச் சொல்லலாமே தவிர, தனியாக ப்ரணவ ஜபம் செய்யலாகாது என்று
கூறி வந்துள்ளார்.

ப்ரணவம் எனும் ஓம்காரம் நமக்குள் தன்னியல்பாகவே இதயத்தை ஒட்டிய அநாஹத
சக்கரத்திலிருந்து எழும் ஒலி; எனவே சிலருக்குத் தன்னியல்பாகவே ‘ஓம்’ என்பது
ஒலிக்கும். அவர்கள் மட்டுமே துறவியாய் இல்லாவிடினும் ப்ரணவ ஜபம் செய்யலாம்
என்பது *ஸ்ரீ பெரியவாளின்* கருத்து.

இவ்விஷயமாக *ஸ்ரீ பெரியவாளையே* கேட்டுத் தெளிவு பெறவேண்டும் என்ற எண்ணத்துடன்
முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு, அப்பொழுது அவர்கள் முகாமிட்டிருந்த
தேனம்பாக்கத்துக்குச் சென்றேன். நேரம்: மாலை ஐந்து மணி.

முகாமில் இருந்த கிணற்றின் ஒரு புறத்தில் இருந்த குடிலை ஒட்டிய
பகுதியிலிருந்து *ஸ்ரீபெரியவாள்* தரிசனம் தருவார்கள்; கிணற்றின் மறுபுறத்திலி
ருந்து மக்கள் தரிசனம் பெறுவார்கள்.

அன்றும் அப்படியே நடந்தது. நாங்கள் *40-50 பேர்* இருந்தோம். வழக்கம் போல்
அதில் பல்வேறு வயதினரும், பல்வேறு சமூகத்தினரும் இருந்தோம். ஓரிரு
வெளிநாட்டவரும் இருந்தனர்.

தரிசனத்தின்போது ஓர் ஐயங்கார் மாது, நேற்றிரவு *பெரியவாள்* சொப்பனத்தில் வந்து
ஏதோ ஒரு மந்திரம் உபதேசித்தீர்கள்; ஆனால் என் துரதிர்ஷ்டம். இன்று காலை அந்த
மந்திரம் மறந்து போய்விட்டது! *பெரியவாள்* அவசியம் அந்த மந்திரத்தை மறுபடி
உபதேசிக்க வேணும். எப்பொழுது மடியாக வந்து அந்தரங்கமாக உபதேசம் பெறலாம்?” என
மிகவும் ஆதுரத்துடன் வினவினார்.

அப்பொழுது சாஸ்திரக் காவலரான *ஸ்ரீ பெரியவாளா* பேசுகிறார் என்று பேராச்சர்யம்
அடையுமாறு அவர்கள் கூறிய மறுமொழி: மடியும் வேண்டாம்; அந்தரங்கமும் வேண்டாம்;
பகிரங்கமாக எல்லோருக்குமாகச் (அம்மந்திரத்தை) சொல்கிறேன்.” – இப்படிச் சொல்லி
கணீரென்ற *தெய்வத்தின் குரலில்*, *அம்பகவ”: அம் பகவ”: அம் பகவ”: *என மும்முறை
உபதேசித்தார்கள்.

இப்படியும் மந்திரமூர்த்தியே ஆகிய ஸ்ரீமஹாபெரியவாளிடமிருந்து கேளாமலே உபதேசமா என்ற பேருவகையுடன் அங்கு கூடியிருந்த எல்லோரும் ‘அம் பகவ’:மந்திரோபதேசம் பெற்றோம்.

ஆச்சர்ய உணர்வைத் தொடரும் விதத்தில் அவர்கள் ‘*இதை ஜபிக்க எந்த நியமமும்
(விதிமுறையும்) இல்லை. எவரும், எந்த நேரமும் ஜபிக்கலாம்*’ என்றும் கூறினார்கள்.

மந்திரத்தின் உச்சரிப்பு: *UMBHAGAVAHA* (*UMBRELLA* என்பதிலுள்ள *UM* ஒலி) ‘பகவ’ என்பதன் முடிவான *‘வ’:* என்பதை ‘*வஹ*’ என்று கூறவேண்டும். ஒலியியலின்படி
‘*வ*’ என்பதற்கும் ‘*வஹ*’ என்பதற்குமிடையே சிறு மாறுபாடு உண்டு. ஆனால் நாம்
அதைக் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. அன்று ஸ்ரீ பெரியவாளும் ‘வஹு’ என்றே
ஸ்பஷ்டமாக மொழிந்தார்கள்.

ஆகக்கூடி எந்த மந்திர சாஸ்திர நூலிலும் காணப்படாத ‘அம் பகவ’: என்ற மகா
மந்திரம் *ஸ்ரீ பெரியவாளின்* வாய்மொழியில் நமக்கெல்லாம் ஓர் அமுதச்சுனையாகக்
கிடைத்துவிட்டது!

*‘பகவ’: *என்பதற்கு ‘*பகவானே!*’ என்று பொருள். ‘*அம்*’ என்பது ஒரு மங்கல
அக்ஷரம்.

நெடுங்காலமாக எனக்குள் இருந்த கேள்விக்கான பதிலும் கிடைத்துவிட்டது! அனைத்து
தெய்வங்களுமான மூலக் கடவுளுக்குரிய மந்திரம்* ‘அம் பகவ!’*எந்த தெய்வத்தை
இஷ்டமூர்த்தியாகக் கொண்டவரும் இம் மந்திரத்தை அம்மூர்த்திக்குரியதாகக் கருதி
ஜபிக்கலாம் என்றும், *‘பகவ;’ *என்பது ஆண்பாலில் இருந்தாலும் பெண் தெய்வங்களை
ஸ்மரித்தும் இதனை ஜபிக்கலாம் என்று*பெரியவரிடமிருந்து* விளக்கம் பெற்றோம்.

*ஸ்ரீபெரியவாள்* தமது நீண்ட நெடிய நூறாண்டு வாழ்வில் அன்று ஒரே ஒருநாள்தான்
இப்படியொரு மந்திரத்தை – அதுவும் பஹிரங்கமாக மொழிந்திருக்கிறார்கள் என்பது
இன்னொரு பேராச்சர்யம்!

*எல்லோருக்குமான இத் தங்கப் புதையலை 36 ஆண்டுகள் நான் எனக்குள் மட்டுமே
வைத்திருக்கிறேன்!* சென்ற ஆண்டிலிருந்துதான் எனக்குத் தெரிந்த மற்ற பலருக்கும்
இதனைக் கூறி வருகிறேன். அவர்களில் *ஸ்ரீ மகா பெரியவர்களையே* இஷ்டதேவதையாகக்
கொண்ட சிலர் இம்மந்திர ஜபத்தால் தங்களுக்கு விசேஷ மான பலன் கிடைப்பதாக
உவகையுடன் கூறுகிறார்கள்.

நன்றி – கல்கி

We just read there is a one word moola matram revealed by Mahaperiyawal to
one of his bhakthas and he said one need not think about the time and
place or even cleaniness to keep uttering this mantra for immense benefit
it is அம்பகவ: pronounced UMBHAGAVAHA. Please do keep telling this along
with Sri Rama Jayam and Gayathri



Sage of Kanchi

Bala Thiru
 
வடதேச வழக்கின் உயர்வு

வடதேச வழக்கின் உயர்வு


நா ம் நம்மைவிட அநாசாரக்காரர்கள் என்று நினைக்கும் வடக்கத்திக்காரர்கள்தான் அநேக விஷயங்களில் நம்மைவிட நல்ல சாஸ்திர வழக்குகளை அநுஸரிப்பவர்களாயிருக்கிறார்கள்.

'ஸ்வதந்திரம்'வந்த பிற்பாடு அங்கேயும் ரொம்ப க்ஷீண தசை என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் ஸமீப காலம் வரையில் நான் தெரிந்து கொண்டதில் அவர்களிடம் பல நல்ல அம்சங்கள் இருக்கின்றன. ஆஹார விஷயம் அதில் ஒன்று. இத்தனை புளி, மிளகாய், பெருங்காயம் என்று நாம் வைத்துக் கொண்டிருப்பது போல அங்கேயில்லை. இதெல்லாம் ராஜஸத்தில் சேர்ப்பதுதான்.


இதில் பெங்காலை குறிப்பாகச் சொல்ல வேண்டும். "மத்ஸய்ப் பிராம்மணாள்"உள்ள ஊராச்சே என்றால் அது (மத்ஸ்யம் உண்ணும் பழக்கம்) முன்னேயே சொன்னாற்போல் ஒரு நிர்ப்பந்தத்தில் ஏற்பட்டது.
நாங்கள் பெங்கால் போயிருந்தபோது அவர்கள் ஆஹார வசதிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அப்போது பெரிய முகாமாக மடத்து ஜனங்கள் போயிருந்தோம். அவர்களும் சளைக்காமல் நாநூறு ஐநூறு பேர் சமைத்துச் சாப்பிடுவதற்கு வேண்டிய சாமான்கள் கொண்டு வந்து வைத்திருந்தார்கள்.

ஆனால் அதில் புளி இல்லை. புளி இல்லாமல் நமக்கு ஏது சாப்பாடு?குழம்பு, ரஸம் எதுவானாலும் அதுதானே முக்யம்?அவர்களுக்கோ கோதுமையும், டாலுக்குப் பருப்பும் இருந்தால் போதும், பெங்காலின் அரிசிச் சாதம் சாப்பிடுபவர்கள் தானென்றாலும் ரஸம், குழம்பு போட்டுக் கொள்ளாதவர்கள். அதனால் அவர்களுக்குப் புளியே தேவையில்லை.


நாங்கள் புளி வேண்டுமென்று கேட்டோம். உடனே எங்கேயோ நாலைந்து மைல் போய் அங்கேயிருந்த புளிய மரத்திலிருந்து கொஞ்சம் பச்சைக் காயைப் பறித்துக் கொண்டுவந்து கொடுத்தார்கள். அவர்கள் கொண்டு வந்த ஸ்வல்பப் புளியங்காய் இங்கே மடத்திலே வைக்கிற அண்டா சாம்பாருக்கு ஸமுத்திரத்தில் பெருங்காயம் கரைக்கிற மாதிரிதான் ஆகியிருக்கும்.


"இத்தனூண்டை வைத்துக்கொண்டு என்ன பண்ணுவது?இன்னும் ரொம்ப வேணுமே!"என்றோம்.
உடனே அவர்கள் பரிஹாஸமாக, "க்யா ஆப் இம்லீ காதே ஹை, யா சாவல் காதே ஹை?" (நீங்கள் புளியைச் சாப்பிடுகிறீர்களா, அல்லது அரிசி சாப்பிடுகிறீர்களா?) என்று கேட்டார்கள்!

பெங்கால் மாதிரி மத்ஸ்ய ஸம்பந்தங்கூட இல்லாமல் ராஜஸ்தானம், குஜராத், ஸெளராஷ்ட்ர, கட்ச் மத்யப் பிரதேஷ் ஆகிய ராஜ்யங்களில் எல்லா ஜாதியாரிலுமே மரக்கறி உணவுக்காரர்கள் ஏராளமாயிருக்கிறார்கள்.


டேராடன் மாதிரி இடங்களில் பிராம்மண கூலிக்காரன் முதுகிலே பெட்டி கட்டிக்கொண்டு அதில் வெள்ளைக்கார துரையை உட்கார்த்தி வைத்துக்கொண்டு போவான். ஆனால் வழியில் வாயிலே பச்சைத்தண்ணி விடமாட்டானாம். போக வேண்டிய இடத்துக்குப் போய் விட்டு, ஸ்நானம் பண்ணித் தன் ஆஹாரத்தைத் தானே சமைத்துத்தான் சாப்பிடுவான்.








தர்வான், வேலைக்காரி முதலியவர்கள்கூட யஜமான் வீட்டில் நாயாக உழைத்தாலும், அந்த வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிடுவது கிடையாது என்பதே வடதேசத்து வழக்கம் ஜாதியில் உசத்தி, தாழ்த்தி சொல்லிக் கொண்டு "தாழ்ந்தவன் வீட்டில் உசந்தவன் சாப்பிட்டாலென்ன?"என்று கேட்டுக்கொண்டு எல்லாவற்றையும் குழப்பிப் பல பட்டடை பண்ணுவதுதான் சீர்திருத்தம் என்று இங்கே நாம் நினைக்கிறோமென்றால், அங்கே தாழ்ந்த நிலையில் உள்ள வேலைக்காரன்கூட உயரந்த நிலையிலுள்ள முதலாளி வீட்டில் சாப்பிடுவதில்லை என்றிருக்கிறான்!இப்படி ஜாதிக்காக இல்லாமல் 'ஸ்வயம்பாகம்'என்ற நியமத்துக்காக என்று வைத்துக் கொள்ளும்போது, சண்டையும் இல்லாமலிருக்கிறது.


வடக்கே ஸம்பந்திகள் வீட்டில்கூட ஜன்மத்திலேயே ஒரு நாளாகக் கல்யாண தினத்தன்று மட்டுந்தான் சாப்பிடுவார்கள்.


அவனவனும் தன்னை pure -ஆக வைத்துக் கொள்ளப் பாடுபட்டுக் கொண்டிருந்தாலே எல்லாருக்கும் க்ஷேமம். இதிலே ஒரு அங்கம்தான் பிறத்தியாரால் அந்த purity -க்கு கெடுதல் வந்துவிடப் போகிறதே என்று ஜாக்கிரதையாக, அவர்களுடைய 'ரேடியேஷன்'ஆஹாரத்தில் ஏற்படாமல், தன் சாப்பாட்டைத் தானே பண்ணிக் கொள்வது. சாப்பாட்டு விஷயத்திலே ஜாதி முதலான அம்சங்களுக்கு இடமேயில்லை. இந்த ஸமத்வத்துக்காக யார் சமைத்தாலும் எல்லாரும் சாப்பிட்டாக வேண்டுமென்று பண்ணி ஜனங்களின் personal purity -ஐ பாதிக்க வேண்டாம். "ஜாதி கூடாது"என்று ஆரம்பத்திலிருந்து இப்படி ஸம்பந்தமில்லாத விஷயங்களிலெல்லாங்கூட ஜாதியைக் கொண்டு வந்து அதில் அபேத வாதத்தை நிலை நாட்டுவதே எல்லாவற்றையும்விட முக்யம் என்பதாக விஷயம் தெரிந்துகொள்ளாமல் செய்து வருகிறார்கள்.


ஒருத்தர் சமைத்து இன்னொருத்தர் சாப்பிடுவது என்கிறபோது சாஸ்திரத்தைப் பார்த்தால் ஒரு விதமாயிருக்கிறது;சீர்திருத்தக்காரர்கள் சொல்வது இன்னொரு விதமாயிருக்கிறது. மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று தப்பாக நினைத்துக்கொண்டு, "c சாப்பிடலாம், c சாப்பிடக்கூடாது"என்று வித்யாஸம் பார்த்தால் சிலருக்குக் கஷ்டமாயிருக்கிறது. "இதிலே மேலும் இல்லை;கீழும் இல்லை அவரவர் காரியம் ஒழுங்காக நடப்பதற்காக அந்தந்தக் காரியத்துக்கு அநுகூலமாக நியமங்களை வித்யாஸம் செய்திருக்கிறது.


வித்யாஸத்தை எடுத்தால் எல்லாம் கலந்து குழம்பிப் போய்விடும்"என்று நினைக்கிறவர்களுக்கோ 'ஸமத்வம்'என்று சொல்லப்படுகிறதைப் பின்பற்றினால் கஷ்டமாயிருக்கிறது. அதாவது எவர் பண்ணிப் போட்டாலும் எல்லாரும் சாப்பிடலாம் என்றால் சிலருக்குக் கஷ்டமாயிருக்கிறது. சாப்பிடக் கூடாது என்றால் சிலருக்குக் கஷ்டமாயிருக்கிறது. கஷ்டம் என்கிறது சண்டையாக ஆகிறது.



காயத்துக்குத்தான் ஜாதியே தவிர சண்டைக்கா வைத்திருக்கிறது?அதுவும் சாப்பாட்டிலே சண்டை என்றால் வேதனையாயிருக்கிறது. இதற்கெல்லாம் ஒரே ஸொல்யூஷன் ஸ்வயம்பாகம்தான் என்று தெரிகிறது. மேல் ஜாதியா, கீழ் ஜாதியா என்ற கேள்விக்கே இடமில்லாமல், "The question does not arise" என்கிறாற்போல், இந்த விஷயங்கள் எழும்புவதற்கே இடமே தராமல், அந்தந்த ஜாதிக்காரனே சமைத்தாலும் சாப்பிடுவதில்லை, அம்மாவோ, அகமுடையாளோ பண்ணினால்கூடத் தொடுவதில்லை, அவனவனும் தன் கையால்தான் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று வைத்து விடுகிற நியமமே ஸொஸ்யூஷன்.










எவன் தொட்டுச் சாப்பிடலாம், எவன் பார்த்துச் சாப்பிடலாம், எவனோடு சாப்பிடலாம் என்கிற கேள்விகள் இருக்கிறவரையில் சாஸ்திரம் ஒன்றாகவும் சீர்திருத்தம் இன்னொன்றாகவும் இருந்துகொண்டு சண்டைதான் வரும். அதனால் எவனுமே தொடாமல் அவனவனே சமைத்துக் கொண்டு, எவனுமே பார்க்காமல், எவனோடும் சேர்ந்து உட்காராமல் தனித்தனியாகப் போஜனம் பண்ணி விடுவது உத்தமம். ' காகம் கரைந்துண்ணக் கண்டீர் 'என்கிறாற்போல் சேர்ந்து சாப்பிட வேண்டுமென்றிருந்தால் பழங்கள், பானங்களைச் சேர்ந்து சாப்பிடலாம். மற்றவர்கள் சமைத்துக் கொள்ள உணவுப் பண்டங்களாகக் கொடுப்பதே விருந்துபசாரந்தான்;அப்படிப் பண்ணலாம்.



இதுவரை தக்ஷிணத்தில் நம்மைவிடக் கடும் குலாசாரமுள்ளவர்களின் கையில், அல்லது பெர்ஸனலாக நம்மைவிட சுத்தமானவர்களின் கையிலிருந்து வாங்கிச் சாப்பிடலாம் என்று இருந்து வந்திருக்கிறது. வடக்கேயோ இதுவும் கூடாது. கிஸான் (குடியானவன்) ஆனாலும் பணடிட் ஆனாலும் அவனவனே சமைத்துக்கொள்ள வேண்டுமென்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதிலேயும் ஒரு நல்ல அம்சம் இருக்கிறது. நம்மைவிட சுத்தர்கள் கையில் சாப்பிடலாம் என்பதனாலேயே நாம் அவ்வளவு சுத்தியாவதற்கு பிரயத்தனப்படாமலே இருந்து கொண்டிருக்கலாம் என்பதற்கும் இடம் கொடுத்துப் போகிறது. ஸ்வயம்பாகம் என்று வைத்து, நம்முடைய அசுத்தி நாமே பண்ணிக் கொள்கிற சாப்பாட்டினால் நமக்குள் மேலே மேலே போய்க்கொண்டேயிருக்கிறபோது தான், இப்படி நம்மைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது என்று நினைத்து நம்மை சுத்தப்படுத்திக் கொள்வதற்குப் பிரயத்னம் செய்வோம். "சாப்பாடு பண்ணிப் போடுகிறவனின் சுத்தம் சாப்பிடுகிறவனுக்குள் போகிறது;நாம் சுத்தனாக வேண்டும்;அதே ஸமயத்திலே நம் சாப்பாட்டை நாமே பண்ணிக்கொள்ள வேண்டும்"என்றால் அப்போது நாம் சுத்தமாக ஆவதற்கு முயற்சி பண்ணத்தானே செய்வோம்?


ஸ்வாமி பிரஸாதம், குருப் பிரஸாதம் தவிர ஸ்வயம்பாகம்தான் என்று ஆக்கிக் கொண்டுவிட வேண்டும்.



இதனால் ஒரு டிஸிப்ளினும் உண்டாகிறது. சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கவோ, அரட்டை, சீட்டு, ஸினிமா என்று போகவோ விடாமல் சமையல் வேலை என்று ஒன்று ஒருத்தனைக் கட்டிப் போடுகிறதல்லவா?இதில் தானே பண்ணிக் கொள்வதால் நிறைய தினுசு வேண்டாம் என்று நாக்கு டிஸிப்ளினும் வருகிறது. சமைத்ததில் ஸத்வ ரஸம் இருக்க வேண்டுமென்பதை உத்தேசித்து அப்போது நாமஜபம் செய்கிற டிஸிப்ளின் வேறு. தானே பொங்கிப் போட்டுக் கொள்வது என்கிற, அல்பமாகத் தோன்றுகிற தர்மாசாரத்துக்கு இத்தனை நல்ல பலன்கள்!


"எப்படிக் கற்றுக் கொள்வது?"என்று புருஷர்களாய் பிறந்தவர்கள் பிரமிக்க வேண்டியதில்லை. "இப்படித்தான் இருக்கணும்"என்ற எண்ணம் வந்துவிட்டால், ஈஸியாக கற்றுக் கொண்டு விடலாம். பொம்மனாட்டிக் குழந்தைகள் சூட்டிகையாயிருந்தால், அரைத்துக் கரைத்து இத்தனை தினுஸோடும் சமைப்பதற்குப் பன்னிரண்டு வயஸுக்குள் கற்றுக் கொண்டு விடவில்லையா? 'வெரைய்டி'இல்லாமல் ஸிம்பிளாக ஒரு சப்பாத்தி அல்லது ஒரு பொங்கல், ஒரு தயிர் என்று ஆஹாரத்தை ஆக்கிக் கொண்டு விட்டால், நாலே நாளில் கற்றுக்கொண்டு விடலாம். என் அபிப்ராயம், பதினைந்தே நிமிஷத்தில் தயாரிக்கக்கூடியதாக ஏதாவது ஒரு ஸிம்பிள் ஆஹாரத்தைப் புருஷர்கள் அத்தனை பேரும் தெரிந்து கொண்டு தாங்களே அதைப் பண்ணிப் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டுமென்பது.

????? ???????? ?????? : ( ??????????? ????? - ???????? ????? ) : kamakoti.org:
 
Shankara Jayanthi Mahotsav at Srinagar, Jammu & Kashmir 17-23 April 2015

Shankara Jayanthi Mahotsav at Srinagar, Jammu & Kashmir
17-23 April 2015


With the Benign Blessings of Their Holinesses Pujyasri Shankaracharya Swamijis of Shri Kanchi Kamakoti Peetham, Shankara Jayanthi Mahotsav will be celebrated at Srinagar, Kashmir, and Atharva Veda Sammelan will be conducted at Shankaracharya Hill, Srinagar, J&K from 17th April to 23rd April this year. Rigveda Samhita Havan & Atharva Veda Parayana will be held. Programme will conclude on Sri Shankara Jayanti Day - Vaishakha Shukla Panchami - 23rd April.

For further details pl contact Shri Balasubramanyam 09840056148 or 9840412086. Devotees are invited to participate and receive the blessings of His Holiness and Anugraha of Jyeshtha Mata Devi and Sri Tripurasundari Sameta Chandramouleeshwaraswamy.


Please read more from here


: kamakoti.org
 
ப ண்பா டு


ப ண்பா டு



போஜ ராஜ்யத்தை விட்டு எங்கே ஓடினாலும் காளிதாஸனை லோகம் அடையாளம் கண்டு கொண்டாட ஆரம்பித்துவிடும். அப்படிக் கொண்டாட வேண்டாம் என்றே காளிதாஸனுக்கு இருந்தது. ப்ராண ஸகாவாக இருந்த போஜன் தன்னைத் திரஸ்காரம் பண்ணின விட்டு லோகத்தில் வேறு யாரும் தன்னை ஆதரிக்க வேண்டிய தில்லை, அப்படி ஆவதற்குத் தான் விட்டால் அது அவனிடம் தனக்குள் உத்தமமான ஸ்நேஹத்துக்கே த்ரோஹம் செய்கிற மாதிரி என்று காளிதாஸன் நினைத்தான். அத்தனை உசந்த எண்ணம் அவனுக்கு இருந்தது. அதனால் ஊரைவிட்டு ஓடின அப்புறம், தான் காளிதாஸன் என்றே தெரியாமல் ஏதாவது மாறுவேஷம் போட்டுக்கொண்டு சுற்றுவது என்று முடிவு பண்ணினான். என்றைக்காவது ஒரு நல்ல காலம் பிறந்து மறுபடியும் தான் போஜனோடு சேரும்படியாக இருக்கலாமென்பதற்காக, இப்படி மாறுவேஷத்தில் உயிரை வைத்துக்கொண்டிருக்கலாமென்று நினைத்தான்.


என் மாதிரி வேஷம் போட்டுக்கொண்டான். என்று கதை!அதாவது, பைத்தியக்கார சாமியார் மாதிரி வேஷம் போட்டுக்கொண்டானாம்!


அவன் ஊரை விட்டுப் போன கொஞ்ச நாளுக்கு அப்புறம், போஜராஜாவினால் அவனில்லாமல் தாங்க முடியவில்லை. அதனால் அவன் குடுகுடுப்பாண்டி வேஷம் போட்டுக் கொண்டு காளிதாஸனைத் தேடிக்கொண்டு புறப்பட்டான். விநோதமான ஒரு விதத்தில் அவனைக் கண்டுபிடித்தான் என்று கதை.

நான் சொல்ல வந்தது, ஒருத்தன் ராஜா என்பதற்காகக் கூட அவன் சொல்வதற்கெல்லாம் ஸலாம் போடுவது என்றில்லாமல் தங்கள் தன்மானப்படி மனஸ்ஸாக்ஷியை காப்பாறிக் கொண்டவர்களாக அநேக கவிகள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் காளிதாஸனும் ஒருவன் என்பதுதான்.


???? ????? : ( ??????????? ????? - ???????? ????? ) : kamakoti.org:
 
Veda Dharma Sastra Paripalana

[TABLE="width: 100%"]
[TR]
[TD]Veda Dharma Sastra Paripalana
[/TD]
[TD="align: right"]
[/TD]
[/TR]
[/TABLE]
64th Visesha Upanyasam @ PORUR by Veda Dharma Shastra Paripalana Sabha on 5th April 2015 at Residence of Mr. V. Subramaniam (9962164414) Venue: No: 18, Kurinji Street, Annai Sathya Nagar, Ramapuram, Chennai-600089 ( Near Senthamizh Nagar).

Upanyasam on "Manushya Dharmam" Upanyasakar "Brahmmasri R. Chandramouli Srouthigal" from 4:00 PM to 5:30 PM

11046806_445048262316885_1578994032902658268_n.jpg





Sage of Kanchi
 
விவாஹமே பெண்டிருக்கு உபநயனம்

விவாஹமே பெண்டிருக்கு உபநயனம்

இதற்குப் பிரம்மச்சரியம் ஒருத்தனைத் தயார் பண்ணுகிறது என்றால் பெண்ணின் கதி என்ன? அவளுக்கு உபநயனமோ, பிரம்மச்சரிய ஆச்ரமமோ இல்லையே! புருஷன் மனசு கட்டுப்பட்டிருக்கிற மாதிரி அவளையும் கட்டுப்பாட்டில் கொண்டு வராமல் இருக்கலாமா? சீர்திருக்காரர்கள் சொல்கிற மாதிரி ஸ்திரீகளுக்கு உபநயனமும் பிரம்மச்சரிய ஆச்ரமமும் இல்லாமல் அநீதிதான் இழைத்திருக்கிறதா என்றால் – இல்லை.


புருஷனுக்கு உபநயன-பிரம்மச்சரியங்களுக்கு அப்புறம் ஏற்படுகிற விவாஹ ஸம்ஸ்காரமேதான் ஒரு பெண்ணுக்கு உபநயன ஸ்தானத்தில் அமைகிறது. அந்தக் குழந்தை பிராயத்திலிருந்து இவளுக்கு வயது வந்து தாம்பத்தியம் ஆரம்பிக்கிற வரையில், குருவிடம் பிரம்மச்சாரி மனஸை அர்ப்பணம் பண்ணின மாதிரி இவள் பதியிடம் பண்ண வேண்டும்.


“ஸ்த்ரீணாம் உபநயன ஸ்தானே விவாஹம் மநுரப்ரவீத்” என்பது மநுஸ்மிருதி.
இதற்கு ஒரு வெளி அடையாளம் காட்டு என்றால் சட்டென்று, ‘உபநயனத்திலே ஒரு பையனுக்குப் பூணூல் போடுகிற மாதிரி விவாஹத்திலே பெண்ணுக்கு மங்கள் ஸூத்திரம் கட்டப்படுகிறது’ என்று சொல்லிவிடலாம்.


உப-நயனம் என்றால் ‘கிட்டே அழைத்துப் போவது’, அதாவது ‘குருவினடம் அழைத்துப் போய் குருகுல வாஸத்தில் பிரம்மசரியம் அநுஷ்டிக்கும்படிப் பண்ணுவது’ என்று அர்த்தம் சொன்னேன். ஸ்திரீகளுக்குப் பதியே குரு. அவனிடம் கொண்டு சேர்க்கிற விவாஹம்தான் அவளுக்கு உபநயனம்!

அதாவது சாஸ்திரப் பிரகாரம், ஒரு பிள்ளைக்கு உபநயனம் செய்கிற ஏழாவது வயசில் பெண்ணுக்கு விவாஹம் செய்துவிட வேண்டும். காமம் தெரிகிற முன்பே இவள் பதியை குருவாக வரித்துவிடும்படி செய்ய வேண்டும். காமம் தெரியாவிட்டால்தான் இப்படி குருவாக வரிக்கவும் முடியும்! குருவை ஒருத்தன் தெய்வமாகவே மதிக்க வேண்டும் என்பதும் சாஸ்திரம் அல்லவா? அப்படியே இந்தப் பெண் குழந்தை சின்ன வயசில் பதியை குரு-தெய்வமாக பாவித்து ஹ்ருதயத்தை அவனுக்கு ஸமர்ப்பணம் பண்ணிவிட வேண்டும். அந்த இள வயசில்தான் இது ஸாத்தியமும் ஆகும். பிற்பாடு புத்தியால் எதிர்க்கேள்வி கேட்பது, அஹம்பாவத் தடிப்பு எல்லாம் உண்டாகிவிடும்.


ஹ்ருதய-ஸமர்ப்பணம் – சரணாகதி – தான் ஜன்மாவைக் கடைத்தேற்றுகிற பெரிய ஸாதனம். கீதையின் சரம ச்லோகத்தில் சொன்ன இந்த சரணாகதியை தெய்வமோ, குருவோ, பதியோ, யாரிடமோ பண்ணிவிட்டால் போதும். அப்புறம் தனக்கென்று ஒன்றும் இல்லை. நாம் யாரிடம் சரணாகதி பண்ணினோமோ அவர்கள் மூலம் ஈச்வரன் அநுக்ரஹம் பண்ணிவிடுவான்.


இம்மாதிரியாகப் பிள்ளையாகப் பிறந்த ஒருத்தனை குருவிடம் சரணாகதி பண்ணும்படியாக உபநயனத்தையும், அவன் கல்யாணம் செய்துகொள்ளும் போது அந்தக் கல்யாணத்தையே பெண்ணாய்ப் பிறந்தவள் பதியிடம் சரணாகதி பண்ணும்படியாக விவாஹ ஸம்ஸ்காரத்தையும் ரிஷிகள் ஏற்பாடு செய்து தந்திருக்கிறார்கள்.


அதாவது, பெண்ணை மட்டும் மட்டம் தட்டி அவளைப் புருஷனுக்கு சரணாகதி பண்ணச் சொல்லவில்லை. அந்தப் புருஷனையும் விவாஹத்துக்கு முந்தியே குருவுக்கு சரணாகதி பண்ணச் சொல்லியிருக்கிறது. அவன் எந்த வயசில் இந்த சரணாகதியைச் செய்கிறானோ அநத வயசில் இவள் அவனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு சரணாகதி பண்ணவேண்டும் என்பது சாஸ்திரத்தின் அபிப்ராயம்.


உசத்தி-தாழ்த்தி, உரிமை (right), ஸ்தானம் (position) முதலான விஷயங்களைவிட சித்த சுத்தியைப் பெரிதாக நினைத்தால் அப்போது சரணாகதிதான் முக்கியமாகிறது. அதற்கு வழியாகத்தான் புருஷனுக்கு உபநயனமும் பெண்ணுக்கு விவாஹமும் விதிக்கப்பட்டிருக்கின்றன என்று புரிந்து கொள்ள வேண்டும்.



https://dheivathinkural.wordpress.com/2014/07/25/விவாஹமே-பெண்டிருக்கு-உப/
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top