• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
URGENT:: Vilvam needed for Periyavas at their RA Puram camp

URGENT:: Vilvam needed for Periyavas at their RA Puram camp

Please note that vilvam for Lord Chandramouleeswarar archanai is urgently needed at Sri Matham Camp, R A Puram, Chennai. Their camp is at Lakshmi Kamakshi Temple, Geenways Road, RA Puram, Chennai.


Kindly bring leaves with the branches. The matham people will cut the branches properly and take the vilvam. Please treat this as urgent.


Once Mahaperiyava said, “The vilva leaves you all collect with great difficulty stays on my hand only for few seconds before it reaches Lord Chandramouleeswarar. All you acquire lot of punyams than me!”.


So let us spread the word and do a small service by getting good vilva leaves for the puja.

Hara Hara Sankara Jaya Jaya Sankara!

https://mahaperiyavaa.wordpress.com...-needed-for-periyavas-at-their-ra-puram-camp/
 
மகா பெரியவர் மனம் உறைந்திருக்கும் இடம்

மகா பெரியவர் மனம் உறைந்திருக்கும் இடம்



mahaperiyava11_2360874d.jpg



ஸ்ரீ சங்கர பக்த ஜன சபை நடத்தும் வேத பாடசாலைக்கு எங்களை அழைத்துச் செல்ல முடியுமா?” என்று நாங்கள் கேட்டதுதான் தாமதம், அந்த அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவரான ஜி. வைத்யநாதன் உடனே முன்வந்து, என்னையும் புகைப்படக்காரரையும் காஞ்சிபுரத்தில் வேதம் கற்றுத்தரப்படும் அனைத்து இடங்களுக்கும் ஆர்வமாகக் கூட்டிச் சென்றார்.


81 வயதாகும் வைத்யநாதன் பணி ஓய்வுக்குப் பிறகு தன்னுடைய வாழ்நாளை பரமாச்சார்யரின் லட்சியமாக இருந்த பணிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுவிட்டார். ஆங்காங்கே நாம் பார்த்த காட்சிகளுக்கு விளக்கம் தந்தும், கேள்விகளுக்குப் பதில் அளித்தும் நம்முடைய பயணம் சிறக்க உதவி செய்தார்.


நாங்கள் முதலில் சென்ற இடம், சாலைத் தெருவில் காஞ்சி மடத்துக்கு எதிரில் இருக்கும் தியான மண்டபமாகும். பரமாச்சார்யரின் நூறாவது ஆண்டைக் கொண்டாடும் வகையில் நிறுவப்பட்ட எழிலான 100 அடி தூண் முதலில் நம்மை வரவேற்கிறது.  சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பல்வேறு புகைப்படங்கள் உருவில் பெரிதாக்கப்பட்டு சுவர்களை அலங்கரிக்கிறது. மகா ஸ்வாமிகள், சந்திரமௌளீஸ்வரருக்கு அர்ப்பணிப்போடு செய்யும் பூஜையை அச்சு அசலாகப் பார்த்து வரைந்த ஓவியர் சில்பியின் பிரமிப்பான ஓவியம் வண்ணமயமாகக் காட்சி தருகிறது.


“அங்கே பாருங்கள் திருவாங்கூர் மகாராஜாவுடன் ஸ்வாமிகள் இருக்கிறார், இதோ பாருங்கள் காசி மகாராஜா” என்று குழந்தையைப்போன்ற உற்சாகத்தோடு புகைப்படங்களை நமக்குச் சுட்டிக்காட்டி விளக்குகிறார் வைத்யநாதன்.


மகா பெரியவரின் வேகமான நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஒரு இளைஞர் திணறும் காட்சியைக் காட்டி, “அது நான்தான், திருமணத்துக்கு முன்னால் அப்படி இருந்தேன்” என்று நாணுகிறார்.


“மிகச் சிறந்த சில புகைப்படக்காரர்கள் அவரிடத்தில் கொண்ட பக்தியும் அன்பும் அயராத உழைப்பும்தான் இத்தனை அரிய புகைப்படங்கள் நமக்குக் கிடைக்கக் காரணமாக இருந்தன” என்று திருச்சி ரமேஷ், வோல்டாஸ் கிருஷ்ணசுவாமி, விக்னேஷ் ஸ்டுடியோ என்று பலரை நினைவுகூர்கிறார்.


“தன்னைப் புகைப்படங்கள் எடுக்க பெரியவா அனுமதித்தது உண்டா?” என்று வியப்புடன் கேட்டபோது, “நிச்சயமாகச் சொல்ல முடியாது; திடீரென்று, ‘போதும் கேமராவை மூடு’ என்று பெரியவா சொல்லுவா, அவர்கள் மூடிவிடுவார்கள்” என்று பதில் அளிக்கிறார். கல்கி பத்திரிகையின் சீதா ரவி, தினமணி, தி இந்து ஆகிய பத்திரிகைகளிலிருந்தும் நிறைய புகைப்படங்களைப் பெற்றோம் என்று தெரிவிக்கிறார்.


சாம வேத பாடசாலை



மண்டபத்தில் பெரியவர் சிலா ரூபமாக எழுந்தருளியிருக்கிறார், பூஜைகள் நடக்கின்றன. வெளியூர் பயணங்களின்போது பெரியவாளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பல்லக்கு இங்கே பாதுகாக்கப்படுகிறது. இந்த இடத்தில் சாம வேதம் கற்றுத்தரப்படுகிறது. இன்னிசை வடிவில் அமைந்த சாம வேதத்திலிருந்து சிறு பகுதியை அங்கு கூடிய இளம் சாமகர்கள் இசைத்தது மெய்மறக்கச் செய்தது.


இந்தப் பாடசாலை தொடங்கப்பட்டது முதல் இதுவரையில் 396 பேர் சாம வேதம் படித்து பட்டம் வாங்கிச் சென்றுள்ளனர். பெரியவாளின் ஆக்ஞைப்படி 1978-ல் இந்த பாடசாலை தொடங்கப்பட்டது. பெரியவர் அப்போது மகாராஷ்டிரத்தின் சதாரா என்ற ஊரில் முகாமிட்டிருந்தார். ‘ஸ்ரீ மகா ஸ்வாமி வித்யா பீட அறக்கட்டளை’யைத் தொடங்கி வேதம் கற்றுக்கொடுக்க ஸ்வாமிகள் அங்கிருந்தபடியே அனுக்கிரகித்தார். வழக்கமாக தன்னுடைய பெயரையோ, படத்தையோ பயன்படுத்த அனுமதிக்காத ஸ்வாமிகள், இந்த ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் வேத சம்ரட்சணத்துக்காக அனுமதித்தார்.


என்னையும் அறக்கட்டளையில் உறுப்பினராக இருக்கப் பணித்தார். இந்தப் பாடசாலையை நடத்த அனந்தநாராயண சாஸ்திரி என்ற வேத பண்டிதரை ஸ்வாமிகளே நியமித்தார். இன்னொரு வைத்யநாதன் உள்பட மொத்தம் 9 அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர். எந்தவிதத்திலும் அரசிடமிருந்து உதவி எதையும் கேட்கக்கூடாது என்று ஸ்வாமிகள் கண்டிப்புடன் கூறிவிட்டார்.


அறச் சிந்தனையாளர்கள் வேத சம்ரட்சணத்துக்காகத் தரும் நன்கொடையில் வேதங்கள் கற்றுத்தரப்படுகின்றன. கணம் உள்பட அனைத்தையும் கற்றுக்கொள்ள ஒரு மாணவனுக்கு 9 ஆண்டுகள் தேவைப்படுகின்றன. 6 ஆண்டுகள் தொடர்ந்து வேதம் படிப்பவர்கள் வைதீக காரியங்கள் செய்வதற்கான தகுதிகளைப் பெற்றுவிடுகிறார்கள்” என்றார்.


“எல்லா மாணவர்களும் வேதம் கற்பதில் சமமான திறமை பெற்றவர்களாக இருக்க மாட்டார்களே?” என்று கேட்டதற்கு, “உண்மைதான், இங்கு வித்யார்த்தியின் சக்திக்கு ஏற்ப லகுவாக சொல்லித்தரப்படுகிறது. கற்றுக்கொள்வதில் சூட்டிகையாக இருப்பவர்களும் மந்தமாக இருப்பவர்களும் உண்டு.


ஆனால் யாரையும் திருப்பி அனுப்பிவிடக்கூடாது என்று பெரியவா கூறியுள்ளபடியால் எல்லோருக்கும் அவரவர் வேகத்துக்கேற்ப கற்றுக்கொடுத்து தகுதியுள்ளவர்களாக்கி அனுப்புகிறோம்; வேகமும் ஆர்வமும் இல்லை என்று மாணவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டால் அவர்கள் மனதளவில் தாழ்ச்சி அடைவார்கள், சிலர் சோம்பியும் திரிவார்கள் என்பதால் அதைத் தவிர்த்துவிட வேண்டும் என்று ஸ்வாமிகள் கூறியதை அப்படியே கடைப்பிடிக்கிறோம்” என்றார்.


ரிக் வேத பாடசாலை



அடுத்து நாங்கள் சென்றது ஆனைக்கட்டித் தெருவுக்கு. கோடை வெயில் அதிகமாக இருந்தாலும் வைத்யநாதன் அதைக்கண்டு சோர்ந்துவிடவில்லை. ஒரு வீட்டின் முன்னால் நின்றுகொண்டு, “இங்குதான் மகா ஸ்வாமிகளுக்கு கனகாபிஷேகம் நடந்தது” என்று தெரிவித்தார். அங்கே ஸ்வாமிகளின் மிகப்பெரிய புகைப்படம் இருந்தது.


“ஸ்வாமிகள் எளிமையைக் கடைப்பிடித்தவர் ஆயிற்றே, கனகாபிஷேகத்துக்கு எப்படி சம்மதித்தார்?” என்று வியப்பு மேலிடக் கேட்டோம். “பலமுறை நாங்கள் கேட்டு, அவர் கூடாது என்று மறுத்துவிட்டார்; கடைசியாக நாங்கள் எல்லோரும் மன்றாடி கேட்டுக்கொண்டதற்குப் பிறகு எங்களுக்காகச் சம்மதித்தார்” என்ற வைத்யநாதன், இங்கே ரிக் வேதம் கற்றுத்தரப்படுகிறது என்றார்.


வேத பாடசாலை மாணவர்களைப் பார்க்கும்போதெல்லாம், “மதியம் என்ன சாப்பிட்டாய்? பால் தொடர்ந்து கிடைக்கிறதா? காலையில் எத்தனை மணிக்கு எழுந்துகொள்கிறாய்?” என்றெல்லாம் கேட்பதற்கு வைத்யநாதன் தவறுவதே இல்லை.


ஆனைக்கட்டித் தெருவில்தான் ‘பிரதிவாதி பயங்கரம்’ அண்ணங்கராச்சாரியார் என்ற வைணவப் பெரியவர் வாழ்ந்துவந்தார். மகா ஸ்வாமிகள் அவருடன் நன்கு பழகுவார். வைணவம் தொடர்பாக ஏதேனும் கேட்க வேண்டும் என்றால் அவரிடம் கேட்பார், அவரும் மகிழ்ச்சியோடு பெரியவருடன் பேசுவார். தேனம்பாக்கம் கோவிலில் உள்ள பிரம்மதீர்த்தத்துக்கு அனுஷ்டானங்களைச் செய்வதற்காக அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி வருவது உண்டு; ஸ்வாமிகள் அதுபற்றி அவரிடம் வேடிக்கையாக எதையாவது கேட்பார், அவரும் வேடிக்கையாக பதில் அளிப்பார்” என்று நினைவுகூர்கிறார் வைத்யநாதன்.


பிரம்மபுரீஸ்வரர் கோவில்



அடுத்தது சிவஸ்தானம். அமைதியான கிராமச் சூழலில் அமைந்திருக்கிறது பிரம்மபுரீஸ்வரர் கோவில். நகர வாசனையே தீண்டாத இக்கோவில் பரமாச்சாரியாருக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று.

பெரியவருடைய சாந்நித்தியம் இங்கே நிறைந்து இருக்கிறது. கடிகாரம் ஓடாததைப் போல காலம் இங்கே உறைந்து கிடக்கிறது.


“இதோ இந்த அறையில்தான் பெரியவர் ஒரு முழு ஆண்டு தொடர்ந்து தங்கியிருந்தார். அந்த ஓராண்டு காலத்தில் வெளியுலகம் எப்படி இருக்கிறது என்று ஸ்வாமிகள் பார்க்கவே இல்லை. மிகவும் அவசியமாக இருந்தால் மட்டுமே மற்றவர்களுடன் ஏதாவது ஒருவகையில் தொடர்பு கொள்வார்” என்றார்.


அந்த அறை அப்படியே இப்போதும் பராமரிக்கப்படுகிறது. அவருக்குத் தொண்டுபுரிய அனுமதிக்கப்பட்டவர்களில் வைத்யநாதனும் ஒருவர். ஸ்வாமிகளின் மிகப்பெரிய புகைப்படமும் தூங்கா மணிவிளக்கும் அவர் அங்கே தொடர்ந்து வாசம் செய்துகொண்டிருக்கும் தெய்வீக உணர்வை ஏற்படுத்தியது.


“அதோ சின்ன ஜன்னல் தெரிகிறதல்லவா, அதன் வழியாகத்தான் ஸ்வாமிகளுக்கு ஒரு கைப்பிடி அளவு மட்டுமே அவல் தரப்படும். ஆரம்ப காலத்தில் தர்ப்பைப்புல்லால் தரையை அவரே பெருக்குவார். நீங்கள் நீராடச் செல்லும்போது இந்தக் கைங்கரியத்தை நாங்கள் செய்கிறோம் என்று கெஞ்சுவோம். சில நாள்களில் அவர் வருவதற்குள் தரையைத் தூய்மைப்படுத்திவிட்டு சிட்டாகப் பறந்துவிடுவோம்” என்று பழைய நினைவுகளில் மூழ்கினார்.


பெரியவரின் அனுஷ்டானங்களுக்காகத் தண்ணீர் இறைக்கப்பட்ட கிணறு இன்றும் அப்படியே தூய்மை கெடாமல் பாதுகாக்கப்படுகிறது.


“அந்தக் கிணற்றுக்கு அந்தப் பக்கத்தில்தான் இந்திரா காந்தி நின்றுகொண்டிருந்தார்; ஸ்வாமிகள் அறை வாசலில் நின்றுகொண்டிருந்தார். அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஸ்வாமிகள் கையை உயர்த்தி அவருக்கு ஆசி வழங்கினார்.” என்று அந்த நாளை நினைவுகூர்ந்தார்.


அருகில் இருந்த கணபதி கோவிலை ஸ்வாமிகள் உள்ளிருந்தபடியே தரிசிக்க உதவிய ஜன்னல் இப்போது அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. கோபுர தரிசனத்தைப் பார்ப்பதற்காக அவருக்காக அமைக்கப்பட்ட மரப் படிகளும் இப்போதும் அதே இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.


“ஒரு காலை மட்டும் மடித்துத் தூக்கிவைத்து இரு உள்ளங்கைகளையும் தலைமீது வைத்து,  காமாட்சியம்மன் தவமிருந்ததைப் போலவே மகா ஸ்வாமிகளும் சில நேரங்களில் நின்று கொண்டிருப்பார்” என்றார்.


“ஏன்?”


“யாருக்குத் தெரியும்; மடத்தில் அவருக்கிருந்த மிகச் சில வசதிகளைக்கூட வேண்டாமென்று ஒதுக்கிவிட்டு ஓராண்டுக்காலம் அறையைவிட்டு வெளியே வராமல் தவமிருந்தது ஏன் என்பதும் அவருக்குத்தான் தெரியும்” என்ற பதில் வந்தது வைத்யநாதனிடமிருந்து.


“இந்த இடத்தில் அப்போது ஏராளமான புதர்கள் மண்டிக் கிடந்தன. மனித நடமாட்டமே இருக்காது. ஒருநாள் அவர் ஆழ்ந்து தியானத்தில் இருந்தபோது பாம்பு ஒன்று அவருடைய தொடையில் ஏறி சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்து நாங்கள் பதறிப்போனோம். அந்த அறைக்குள் நாங்கள் போகக்கூடாது; அவரை எச்சரிக்கவும் வழியேதும் இல்லை. மூச்சுவிடக்கூட அஞ்சியபடியே நாங்கள் ஜன்னல் வழியாக அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம்.


அவர் கண்ணைத் திறந்து பார்த்தபோது, அவர் மடியில் பாம்பு ஒன்று படுத்திருப்பதை சன்னமான குரலில் தெரியப்படுத்தினோம். அவர் உடனே தன்னுடைய ஆடையை லேசாக உதறினார், பாம்பு ஊர்ந்து வெளியேறியது. பெரியவா எங்கள் பக்கம் திரும்பி, “அது நாலு நாளா எங்கிட்ட வர்றது, இதுக்கு என்னத்துக்கு ஆர்ப்பாட்டம் என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தார்” என்று பழைய நினைவில் மீண்டும் ஆழ்ந்தார் வைத்யநாதன்.


யஜுர் வேத பாடசாலை



“இங்கே யஜுர் வேதம் கற்றுத்தரப்படுகிறது. இது தனியாருக்குச் சொந்தமான இடம். ஸ்வாமிகளுடைய முன்னேற்பாட்டால் இந்த இடம் மடத்திடம் தங்கியது, இல்லாவிட்டால் சில கடன்களுக்காக இது கைமாறியிருக்கும்” என்றார் அவர்.


இங்கே தரை சரிவாக இருக்கிறது. சில அடிகளுக்கு அப்பால் பச்சைப் பசேலென்று செடிகள் வளர்ந்துள்ளன. “இதுதான் பிரம்மதீர்த்தம். இந்தத் தண்ணீருக்கு பல வியாதிகளைத் தீர்க்கக்கூடிய அரிய தன்மை இருப்பதாக நம்பப்படுகிறது. இந்தத் திருக்குளத்தை அதன் பழைய நிலைக்கு மீட்டுத்தர ஒரு நன்கொடையாளர் முன்வந்திருக்கிறார். விரைவிலேயே இது பழைய நிலையை எட்டிவிடும்” என்று அவர் நம்பிக்கையுடன் கூறுவது நம் உள்ளத்தைத் தொடுகிறது.


“பெரியவாளின் கருணையால் அவருடைய மனதுக்கு உகந்த வேத சம்ரட்சண திட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அவர் பாதை வகுத்துக் கொடுத்தார், நாங்கள் அதில் தொடர்ந்து பயணப்பட்டுக்கொண்டிருக்கிறோம்” என்கிறார் வைத்யநாதன் அடக்கமாக.



தமிழில்: சாரி


??? ???????? ???? ??????????????? ?????
 
Karma and Bakthi

From Periva forum

Karma and Bakthi

Source: Deivathin Kural - Volume 1

When Sankara Bagawat Padal was about to leave this mortal coil, his disciples surrounded Him. They said, ‘You gave a lot of advices to us about various things connected to Vedas and Teachings related to our religion. There are many things in them beyond our grasp and understanding. Please tell us something, easy for us to understand.’

He gave them a Sloka of five stanzas, called, ‘Sopana Panchakam’.

“Follow the path as defined by the Vedas. Daily do the duties as delineated there-in, without let. Think this very action as an offering to God. Instead of going by only what is seemingly pleasing to your mind and heart, do all the duties, as your contribution for the welfare of the public and common man.” This is the idea with which Sopana Panchakam commences.

There are some people still living in this world, who do their allotted duties, as required by the Vedas. There are some who are doing Pooja with fervour. Some others can conduct a festival with organizational zeal. There could be some who could conduct a gathering with devotional songs. Those who conduct Pooja or Bajan or festivals, look down on those who are strictly adhering to ‘Karma Anushtana’, and say, ‘What is the use of doing only Karma? If your heart is not melted to tears by devotion, what is the use?’ Those who are following the Karma Path, look at the other experts in conduct of festivals and devotional activities, and say, ‘They have no devotion to their duties. What is the use of all this pomp and show?’

Acharyal in Sopana Panchakam tells us to do one’s duties itself as an offering to God. Duties as per Karma Anushtana are not to forgotten, neither is one to forget God! Do Sandhya Vandanam, Brhma Yagnam, Jyothish Homam, Tarpanam, if you were a Brahmin; do train yourself in battle crafts and fight your battles at the time of war, if you were a Kshtariya; do your trading and business, if you were a Vaisya; and do your duties of Agriculture or Carpentry or Pottery and so on, if you were the Soodra. But whether you were a Brahmin or Kshtriya or Vaisya or Soodra, do Your allotted duties, with Your mind riveted on God. That is the advice. But this is an exalted stage, not easily achieved. When we are involved in any work, attention to Divinity, will be or could be forgotten. So Karma and Bakthi, both are required. Over a period, both may fruition in to oneness. That is, someone may totally involve in Karma with his mind riveted on God or someone else may so get involved in Bakthi, that he may forget all other duties. He or she reaches a stage of, ‘Krta Krtya’, ie., ‘one who has no more duties to perform’!

Let it be set aside. If we look at the initial stages. Will God be pleased with Some one who does duties or display much devotion? Say there is a rich man employing many servants. Amongst the servants, there is one who simply does his duties, and another who is all the time praising that rich man. Unless the rich man is an idiot, he is not likely to ignore the fact that the second is failing in his duties. You cannot think of God as susceptible to praise and flattery. But if the one simply doing his duty, will not last long either!

“This world is God’s creation. God is the King and we are all, his citizen. So, all the people are my kinsmen. He is not only the King, but the Father and Mother. So, we are all his children. So, we are all brothers and sisters. To keep everyone happy, Veda Dharma, has allotted roles for each. We shall do our duties without being crassly, selfish. God’s family should flourish. God’s will be done. In this, I shall do my bit, as my contribution.” This should be our attitude. In our doing the action, devotion will be inbuilt. Then we will be fully eligible to receive God’s Grace. The Path of Devotion and the Path of Action are not divergent, but convergent in God




Source: Sage of Kanchi

Bala Thiru
 
" அறியாதவன் ": வார்த்தை விளையாடல்

" அறியாதவன் ": வார்த்தை விளையாடல்




சைவ-வைஷ்ணவ ஸமரஸ பாவத்தில் தமிழ் தேசத்தில் சொல்கிற பாபுலர் வசனத்தில்கூட இப்படிச் சின்ன வார்த்தை விளையாட்டு செய்து பெரிய அர்த்த லாபத்தை உண்டாக்குவதுண்டு.


"அரியும் சிவனும் ஒண்ணு;அறியாதவன் வாயிலே மண்ணு;என்பது நம் எல்லோருக்கும் தெரிந்தது. இதிலே 'அறியாதவன்'என்பதில் வல்லின 'றி'யை இடையினமாக மாற்றி, 'அரியாதவன்'என்று சொல்வார்கள். 'ஹரி'யாகிய 'யாதவ'குலக் கண்ணன் என்று அர்த்தம். அவன் வாயிலே மண்ணைப் போட்டுக்கொண்டுவிட்டு யசோதைக்கு லோகம் முழுவதையும் காட்டினான் அல்லவா?அதைத்தான் ''அரி யாதவன் வாயில் மண்ணு"என்பது.


"ஸரி. அரியும் சிவனும் ஒன்று என்று சொல்லிவிட்டு, இப்படி ஒன்று - இவர்களிலே ஹரி லோகம் முழுவதையும் காட்டினவன் என்று - எதற்காகச் சொல்லவேண்டும்?"


எதற்காகவா?இதிலேயும் பெரிய தத்வம் இருக்கிறது. ஒரே பிரம்மம்தான் ஹரி, சிவன் இரண்டு பேரும். அதனாலே அவர்கள் ஒன்றேதான். ஆனால் அந்த ஒரே பிரம்மத்தை நிர்குணம், ஸகுணம் என்று இரண்டு நிலைகளில் நாம் பாவிக்க வேண்டியதாயிருக்கிறது. இந்த இரண்டில் லோக வ்யவஹாரம் அடிப்பட்டுப்போன நிர்குணம்தான் சிவன். லோக வ்யவஹாரத்தை நடத்தும் ஸகுணமே ஹரி.

மண்ணைத் தின்று லோகம் முழுவதையும் தன் வாயில் அடங்கியிருப்பதாக அவன் காட்டினபோது இந்த உண்மையைத்தான் உருவகப்படுத்தியிருக்கிறான். 'அரி யாதவன் வாயில் மண்ணு'என்று சொல்லி இதை ஞாபகப்படுத்திவிட்டால், முதல் வரியில் சொன்ன 'அரியும் சிவனும்'என்பதில் விட்டுப்போன சிவன் நிர்குணம் என்பதையும் சொன்னதாகி விடுகிறது.


'றி'யை 'ரி'யாகக் கூட மாற்றாமல் 'அறியாதவன்'என்ற ஒற்றை வார்த்தையை 'அறி யாதவன்'என்று இரண்டாகப் பண்ணிக்கொண்டாலே போதும்!'அறி, யாதவன் வாயிலே மண்ணு'என்றாலே, 'அரியும் சிவனும் ஒண்ணானாலும் இவர்களில் யாதவனாக வந்து மண்ணைத் தின்னவன் ஸகுண ப்ரமம் என்று அறி;அதனால் இன்னொருவன் நிர்குணம் என்றும் அறி'என்று அர்த்தமாகிவிடும்.

''?????????'' :???????? ????????? : ( ??????????? ????? - ???????? ????? ) : kamakoti.org:
 
" கன்னம் அதிகம் "

" கன்னம் அதிகம் "


ஒரு ஸ்லோகத்தில் வருகிற அத்தனை 'த'வையும் தட்டிவிடும்படி ஸீதை சொன்னாள். காளிதாஸனோ ஒரே ஒரு புள்ளியைத் தட்டிவிட்டே ஒரு ஸ்லோகத்தின் ரஸத்தை ஒரே தூக்காகத் தூக்கிவிட்டான்.


பவபூதி என்று ஏறக்குறைய காளிதாஸனுக்கு ஸமதையாக ஒரு மஹாகவி. அவனுடைய காலத்திலேயே இவரும் இருந்தார் என்றும், இந்த இரண்டு பேருக்கும் போட்டி, மூக்கறுபட்டது என்றெல்லாமும் கதைகள் இருக்கின்றன. நான் சொல்லப் போகிற கதை அப்படிப்பட்டதில்லை. ஒருவர் அபிப்ராயத்தை இன்னொருவர் கலந்தாலோசித்துத் தாம் எழுதியதைத் திருத்திக் கொண்டதாக இந்தக் கதை.


உத்தர ராமாயணத்தை "உத்தர ராம சரிதம்"என்று ஹ்ருதயத்தை கவ்விக்கொள்ளுகிற மாதிரி பவபூதி நாடகமாக எழுதி அந்தச் சுவடியைக் காளிதாஸனுடைய 'அப்ரூவ'லுக்காக எடுத்துக்கொண்டு போய்ப் படித்தார். காளிதாஸன் தனக்கு ப்ரியமான ஸ்த்ரீ தாம்பூலம் மடித்துக் கொடுக்க கொடுக்க அதை ருசி பார்த்துக்கொண்டே உத்தரராம சரிதத்தையும் ருசித்துக்கொண்டு போனான்.


அதிலே முதல் ஸீனில் ராமர் தண்டகாரண்யத்தில் ஸீதையோடு தாம் கழித்த ஆனந்தமான நாட்களைப் பற்றிய நினைவுகளைச் சொல்கிறார். அதனிடையில், "எப்படிப் பொழுது போச்சு என்றே எங்களுக்குத் தெரியாமல் ராத்ரி நேரம் இவ்வாறு பேச்சில் போய்விடும்"என்று வருகிறது.


" அவிதித-கத-யாமா ராத்ரிரேவம் வ்யரம்ஸீத் "


இந்த வரியை பவபூதி படித்தவுடன் காளிதாஸன் "சுன்னம் ஜாஸ்தி"என்றான். அவனுக்குத் தாம்பூலம் கொடுத்துக் கொண்டிருந்தவள், 'ஜாஸ்தி சுண்ணாம்பு வைத்துக் கொடுத்துவிட்டோம்;அதைத்தான் சொல்கிறார்'என்று நினைத்துக்கொண்டுவிட்டாள். அவளுக்கெதிரே தான் பவபூதிக்கு அட்வைஸ் பண்ணுவது மரியாதை இல்லை என்பதால் வேண்டுமென்றேதான் காளிதாஸன் இப்படி பூடகமாகச் சொன்னது. மேதையானதால் பவபூதிக்குப் புரிந்துவிட்டது. ஸுன்னம் என்றால் ஸைஃபர், அல்லது புள்ளி.

'ராத்ரிரேவம்'என்பதில் 'ம்'என்று உள்ள புள்ளியைத்தான் காளிதாஸன் ஜாஸ்தி என்று சொல்வதை அவர் புரிந்துகொண்டு*இந்த நுட்பமான கரெக்ஷனை ரொம்பவும் கொண்டாடி, ஸுன்னத்தை எடுத்தவிட்டு 'ராத்ரிரேவ'என்று மாறிவிட்டார். 'ராத்ரிரேவம் வ்யரம்ஸீத்'என்றால் 'ராத்திரி இவ்வாறு போச்சு'. 'ராத்ரி ரேவ வ்யரம்ஸீத்'என்றால் 'ராத்ரிதான் முடிந்தது'என்று அர்த்தம். அதாவது 'ஸீதையும் தானும் பேசுகிற பேச்சு அப்போதும் முடிந்திருக்காது;ராத்ரி மட்டுமே முடிந்திருக்கும்'என்று வ்யங்கியமாக (உள்ளுறை பொருளாக) ராமர் சொன்னதாக ஆகிவிடும்!



பவபூதியிடம் காளிதாஸன் 'அநுஸ்வாரம் ஜாஸ்தி'என்று சொன்னதாகப் பொதுவிலே சொல்வார்கள். அநுஸ்வராம் என்றால் 'ம்'. ஆனால் இப்படி வெளிப்படையாகச் சொன்னானென்பதைவிட இரண்டு அர்த்தம் தருமாறு 'ஸுன்னம் ஜாஸ்தி'என்று சிலர் சொல்லுகிற கதை அந்த இருவருடைய ஸ¨க்ஷ்ம ரஸனைக்கும் பொருத்தமாயிருக்கிறது.








இப்படிக் காளிதாஸன் சொல்லியிருந்தால் அவன் ஆந்திர தேசத்தைச் சேர்ந்தவனாயிருக்க வேண்டும். ஏனென்றால் தெலுங்கு பாஷையில்தான் 'ஸுன்னம்'என்று இந்த இரண்டு அர்த்தமும் கொடுக்கும்படியான வார்த்தை இருக்கிறது. இது ஒன்றை மாத்திரம் கொண்டு தெலுங்கன் என்று சொல்லக்கூடாதென்றால் இன்னொன்று சொல்கிறேன். 'ராமகிரி'என்ற இடத்திலிருந்துதான் காளிதாஸனின் 'மேக ஸந்தேச'காவ்யத்தில் வரும் யக்ஷன் மேகத்தை தூது அனுப்பினானென்று இருக்கிறது.

மத்ய ப்ரதேஷில் நாக்பூருக்குப் பக்கத்திலிருக்கிற ராம்டேக்தான் ராமகிரி என்று அபிப்ராயப்படுகிறார்கள். ஆனால் ஆந்திராவிலும் நாகலாபுரம் தாண்டி ஒரு ராமகிரி இருக்கிறது.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------
* 'வம்'என்பது தேவநாகரி லிபியில் 'வ'என்ற எழுத்துக்குமேல் புள்ளி வைப்பதாகும். க்ரந்த லிபியில் 'ம்'என்பது ஸைஃபரைப் போலவே வட்டமாயிருப்பதாகும்.
 
இரண்டாவது ஒன்று இருந்தால், அது நம்மைவிடச


இரண்டாவது ஒன்று இருந்தால், அது நம்மைவிடச் சக்தி உள்ளதாக இருந்தால், பயம் உண்டாகிறது.



இரண்டாவது ஒன்று இருந்தால், அது நம்மைவிடச் சக்தி உள்ளதாக இருந்தால், பயம் உண்டாகிறது. அழகாக இருந்தால் ஆசை உண்டாகிறது; சித்த விகாரம் உண்டாகிறது. இரண்டாவது இல்லாவிட்டால் ஆசை இல்லை; த்வேஷம் இல்லை; பயம் இல்லை. இப்படி இரண்டாவது இல்லாமல் பண்ணுவது தான் அத்வைதம். இரண்டாவது இல்லையானால் பயம் நீங்குகிறதென்று உபநிஷத் சொல்கிறது. இரண்டாவதாக ஒன்றை நினைத்து விட்டாயோ பயத்துக்கு விதை போட்டு விட்டாய் என்கிறது:


"த்விதீயாத்வை பயம் பவதி"
(-பிருஹதாரண்யக உபநிஷத்.)

பிரபஞ்சத்தில் பலர் இருக்கிறார்களே, இவர்களெல்லாம் ஒன்றாக எப்படி ஆகமுடியும்? இரண்டாவது இல்லாமல் எப்படிப் பண்ணுகிறது?



வேதாந்தம் இந்த லோகத்தில் நாம் பல வஸ்துக்களாகக் காண்பவைகளெல்லாம் பொய் என்கிறது. எல்லாம் ஈச்வர ஸ்வரூபம் என்று சொல்கிறது. நமக்கு அப்படி தோன்றவில்லையே! எல்லாம் ஈஸ்வரன் என்பது நிஜமானால், நமக்குத் தோன்றுவது பொய்யாக வேண்டும். நமக்குத் தோன்றுவது நிஜமானால், எல்லாம் ஈஸ்வரன் என்பது பொய்யாக இருக்க வேண்டும். நமக்குத் தோன்றுவது நிஜமாக இருந்தால் நமக்கு கஷ்டம் வரக்கூடாது. ஆனால் கஷ்டம் வருகிறது. வேதாந்தத்தை அனுபவமாக்கிக் கொண்ட மஹான்கள், ஞானிகள்தான் நம் மாதிரித் திண்டாடாமல் ஸதாவும் ஆனந்தமாக இருக்கிறார்கள்; கஷ்டமே தெரியாமல் இருக்கிறார்கள். ஆகையால் வேதாந்தம் சொல்வது தான் நிஜம். அது உண்மையானால், எல்லம் ஈச்வர ஸ்வரூபம் என்பது உறுதியாக வேண்டும்.

லோகமெல்லாம் மெய்யான ஒரே வஸ்துவென்று அத்வைதம் சொல்கிறது. நமக்கு வஸ்துக்களாகத் தோன்றுவதெல்லாம் பொய். இந்தத் தோற்றங்களுக்கெல்லாம் ஆதாரமான வஸ்துவொன்றே மெய்.

மெய்யான வஸ்துவை பிரம்மம் என்றும், ஆத்மா என்றும் அத்வைதம் சொல்லும். லோக வழக்கில் ஈஸ்வரன் என்கிறோம். பிரம்மம் நிர்குணமானது, ஈஸ்வரன் ஸகுணமானவன் என்கிற பாகுபாடு இங்கே நான் சொல்லவில்லை.


எல்லாம் ஈஸ்வரன் என்றால் நாம் மட்டும் வேறேயா? நம்மையும் அந்த ஈஸ்வரனாகக் கரைக்க வேண்டும். அப்பொழுது இரண்டாவது என்பது இல்லை. நாம் இப்பொழுது வெவ்வேறாகப் பார்க்கிறோம்.

எல்லம் ஈச்வரனாகப் பார்ப்பது தான் நிஜப் பார்வை. இரண்டாவது இல்லாமல் நாமும் கரைந்துவிட்டால் நல்லது உண்டாகும். துக்கம் இல்லாமல் போகும். லோகத்தில்கூட இரண்டு மனஸுகள் ஒன்றானால் சண்டையில்லை. அதுபோல எல்லாம் ஈச்வரனாகி ஒன்றாகி விட்டால் எந்தக் கிளர்ச்சியும் இல்லை.

ஒரே சாந்திதான். அப்போது எல்லாம் நாமாக ஆகிறோம். நமக்கே நம் மேல் ஆசை அப்பொழுது ஏற்படாது. ஆசையில்லாவிட்டால் பாபம் இல்லை. பாபம் இல்லையென்றால் தேகம் இல்லை. இந்த தேகம் இருக்கிறபோதே அது இல்லை என்ற ஞானம் உண்டாகிவிடும். இது போனபின் இன்னொரு தேகம் வராது. அப்படியே அத்விதீயமான ஆனந்தத்தோடு ஒன்றாகியிருப்போம். தேஹம் இல்லாவிட்டால் துக்கமே இல்லை. அந்த துக்க நிவர்த்திக்கு அத்வைதம் மருந்து. இரண்டாவது இல்லாமற் பண்ணுவது அத்வைதம். எல்லாம் பகவானாகப் பார்ப்பது அத்வைதம். உள்ளதை உள்ளபடி பார்ப்பதுதான் அத்வைதம்.



http://www.kamakoti.org/tamil/Kural8N1.htm
 
பண்பாடு

பண்பாடு
வருங்காலத்தவருக்கு வஞ்சனை செய்யலாமா ?



நமது பழைய சாஸ்திரங்களில் இல்லாத கலைகளோ ஸயன்ஸ்களோ மற்ற விஷயங்களோ இல்லவே இல்லை. போஜராஜன் செய்துள்ள ஸமராங்கண சூத்திரம் என்ற நூலில் பலவிதமான மிஷின்கள் செய்யும் முறைகள்கூட உள்ளன. அதில் ஆகாயவிமானத்தைப் பற்றிக்கூட வருகிறது என்றால் ஆச்சரியமாயிருக்கும்! போஜன் இந்த விமானத்தைப் பற்றிய சித்தாந்த முறையை (Theory) மட்டுமே சொல்லிவிட்டு, "நடைமுறையில் (Practical) இதைப் பண்ணும் வழியை நான் சொல்லாததால் எனக்கு அது தெரியாது என்று நினைக்க வேண்டாம்; நடைமுறையைச் சொல்லி இந்த விமானம் செய்யப்பட்டால், ஜனங்களுக்கு சௌகரியத்தை விட அசௌகரியமே அதிகமாகும் என்றே சொல்லவில்லை" என்கிறார்.


ஆகாய விமானம், அணுசக்திக் குண்டு இவற்றையெல்லாம் நடைமுறைக்குக் கொண்டு வந்ததன் அனர்த்தத்தை நாம் உலக யுத்தத்தில் கண்கூடாகப் பார்த்து விட்டோம். அது ஒரு புறம் இருக்கட்டும்.
போஜன் சொல்லியிருக்கிற ஆகாயவிமான 'தியரி'யைச் சில என்ஜினீயர்களுடன் சேர்த்து படித்துப் பார்த்ததில் பலூன், ஜோர்டான் என்ஜின் போன்ற ஒரு முறையை போஜன் சொல்கிறார் என்று தெரிய வந்தது.


பழைய காலத்தில் ஒவ்வொரு கலைக்கும் ஸயன்ஸுக்கும் தனித்தனி நூல்கள் இருந்தன. இந்த நூல்கள் ஒவ்வொன்றையும் டைஜஸ்ட் மாதிரி ஒரு அத்தியாயமாகச் சுருக்கி 'பிருஹத் ஸம்ஹிதை' என்ற புஸ்தகத்தை வராஹமிஹிரர் எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட 1500 வருஷங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்தப் புஸ்தகத்தில் தாவர சாஸ்திரம், மிருக சாஸ்திரம், பட்சி சாஸ்திரம், தாது சாஸ்திரம் இப்படி சகல விஷயங்களும் அடங்கியிருக்கின்றன.


பழங்காலத்தவரின் என்ஜினீயரிங் ஞானம் இன்றுள்ள நிபுணர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
இவற்றுக்கெல்லாம் ஆதார நூல்கள், சாஸ்திரங்கள் உள்ளன. ஆயிரம், பதினாயிரம் வருஷங்களாக — தலைமுறை தலைமுறையாக — ரக்ஷிக்கப்பட்டு நம் கைக்கு வந்துள்ளன. இந்த நாள்போல் அச்சுப் புஸ்தகம் போடத் தெரியாத காலங்களிலும் இவற்றை நம் முன்னோர்கள் எப்படியோ காத்து நம் வரைக்கும் தந்துவிட்டார்கள். இப்படி யுகாந்தரமாக வந்த சாஸ்திரங்களை எல்லாம் நமக்குச் சகல வசதி இருந்தும், அடுத்த தலைமுறைக்குக் காத்துத் தராமல் இருக்கிறோம். ஆயிரம், பதினாயிரம் வருஷங்களாகத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த இழையை அறுத்து விடுகிற 'பாக்கியம்' நமக்கே ஏற்பட்டிருக்கிறது.



குருடன் ஒருவன் கையில் லாந்தருடன் போய்க் கொண்டிருந்தானாம். எதிரில் வந்த ஒருவன் 'உனக்குத்தான் கண் தெரியவில்லையே, லாந்தர் ஏன் எடுத்து வருகிறாய்?' என்று கேட்டான். அதற்குக் குருடன், 'எனக்கு கண் இல்லாவிட்டாலும் உனக்குக் கண் இருக்கிறது அல்லவா? அதற்காகத்தான் இதை எடுத்து வருகிறேன். இல்லாவிட்டால் இந்த இருட்டில் நீயே என்மேல் தடுக்கி விழுந்திருப்பாயே' என்றானாம். அதுபோலவே பழைய சாஸ்திரங்கள் நமக்குப் புரியாவிட்டாலும், எதிர்காலத்தில் யாருக்காவது புரியலாம்; பயனாகலாம் என்பதனாலாவது அவற்றை நாம் ரக்ஷித்தாக வேண்டும். "வசதியே இல்லாத காலங்களில் யுகாந்தரமாக ரக்ஷிக்கப்பட்ட சாஸ்திரங்களை நமக்கு முதல் தலைமுறையினர் எல்லா வசதியிருந்தும் காப்பாற்றாமல் அழித்து, நம்மை வஞ்சித்து விட்டார்கள்" என்று, வருங்காலத் தலைமுறையினர் நம்மைக் குற்றம் சொல்ல இடம் வைக்கலாமா?



பழைய காலங்களில் சாஸ்திர ரக்ஷணம் அரசர்களின் பொறுப்பிலிருந்தது. இப்பொழுது ராஜாக்கள் இல்லை; ராஜ்ய, மத்ய சர்க்கார்கள்தாம் உள்ளன. அவற்றுக்கு நிம்மதியே இல்லை. ஒரு பக்கம் பாஷை சண்டை; ஒரு பக்கம் எல்லைச் சண்டை. ஏகப்பட்ட பாலிடிக்ஸ், ஊழல் இப்படிப் பல கஷ்டங்கள். அந்தக் காலத்தில் ஒரு ராஜாவுக்கும் இன்னொரு ராஜாவுக்கும் சண்டை நடந்தது என்றால், இப்பொழுது ஒரு ராஜ்ஜியத்துக்கும் இன்னொரு ராஜ்ஜியத்துக்கும் சண்டை; ஒரு வர்க்கத்துக்கும் இன்னொரு வர்க்கத்துக்கும் சண்டை; ஒரு கட்சிக்கும் இன்னொன்றுக்கும் மண்டை உடைகிறது. எனவே, சாஸ்திர ரக்ஷணத்திற்கு அரசாங்கத்தை எதிர்ப்பார்த்துப் பிரயோஜனமில்லை. 'சுற்றுப்புறத்தில் எல்லாம் ஒரே பூசல்; குடும்பத்திலும் தொல்லை' என்று நாம் தட்டிக்கழிக்கக்கூடாது. வனவிலங்களுகளைப் பாருங்கள். சிங்கம் புலியை அடிக்கிறது. புலி மானை அடிக்கிறது. இருந்தாலும், காட்டிலே சிங்கக்குட்டியும்,

புலிக்குட்டியும், மான் குட்டியும் வளர்ந்துகொண்டும் விளையாடிக்கொண்டும்தான் இருக்கின்றன. அப்படி இருக்க நாமும் பழக வேண்டும். எத்தனை இடையூறு இருப்பினும், நமக்கு எதிர்காலத்தினரிடம் உள்ள கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து பழைய சாஸ்திரங்களை ரக்ஷித்துத் தரவேண்டும்.


?????????????????? ?????? ????????? ? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
தமிழ் நாட்டு வள்ளல்கள்

தமிழ் நாட்டு வள்ளல்கள்


தமிழ் தேசத்திலும் வள்ளல்கள் என்று இவர்களை தெய்வத்துக்கு ஸமானமாகக் கொண்டாடுகிற வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது.'' முதலெழு-இடையெழு-கடையெழு வள்ளல்கள்''என்று குமணன், அதியமான் முதலான 21பேரை ஸ்லோகித்துச் சொல்லியிருக்கிறது. காரி, பாரி ஓரி என்றெல்லாம் ஏழு பேரைக் கடையெழு வள்ளல்கள் என்பார்கள்.

பாரி வள்ளல் முல்லைக் கொடி படருவதற்காகத் தன் தேரையே கொடுத்த கதை எல்லோருக்கும் தெரியும். இன்னொருத்தன் (பேகன்) மயில் குளிரில் நடுங்குகிறதே என்று தன் உத்தரீயத்தையே எடுத்து அதற்குப் போர்த்தினானாம்.


அதியமானுக்கு சிரஞ்ஜீவித்வத்தைத் தரக்கூடிய நெல்லிக்கனி கிடைத்தது. 'நாம் சிரஞ்ஜீவியாக இருந்து என்ன ஸாதிக்கப் போகிறோம்?அவ்வைப் பாட்டி இருக்கிறாளே, ஸதாவும் லோக க்ஷேமத்தைப் பண்ணிக் கொண்டு, ஊர் ஊராக ஓடி குழந்தைகளுக்கு உபதேசம் செய்து வருகிறாளே, அவள் திடகாத்திரத்தோடு எத்தனை ஆயசு இருந்தாலும் அதுதான் லோகத்துக்கு நல்லது' என்று அவன் நினைத்து அவளுக்கே அந்த நெல்லிக்கனியை தானம் பண்ணிவிட்டான்.


'அதியமான் பண்ணியது புத்திசாலித்தனமாக இருக்கிறது. ஆனால் முல்லைக்குத் தேராவது?மயிலுக்கு எங்கேயாவது குளிருமா?அதற்குப் பட்டுப் பீதாம்பரத்தைப் போர்த்தவாவது?இதெல்லாம் புத்தி இல்லாத கார்யமாக அல்லவா இருக்கிறது?' என்று கேட்கலாம். என்னைக் கேட்டால், இப்படி புத்திக்கு வேலையே இல்லாமல் முட்டாள்தனம் மாதிரி கூடத் தோன்றுகிற கார்யங்களைச் செய்வதுதான் நிஜமான அன்பை, நிஜமான த்யாகத்தைக் காட்டுகிறது என்பேன்.

அன்பு பீறிக்கொண்டு வருகிறபோது மூளையினால் அதற்கு நியாய அநியாயங்கள் பார்க்க முடியாது. இப்படித்தான், நாயன்மார்களைப் பார்த்தால் பெண்டாட்டியையே ஒருத்தர் தானம் பண்ணினார், இன்னொருத்தர் பிள்ளையையே கறி பண்ணிப் போட்டார் என்கிறபோது, இதெல்லாம் மூடத்தனம், உணர்ச்சிக் கட்டுப்பாடில்லாத கார்யம் என்று சொல்லக்கூடாது. அவர்களுக்கு எப்படிப்பட்ட த்யாக சிந்தனை இருந்தது என்பதுதான் முக்யம். மூளையால் ஸமாதானம் சொல்ல வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் உருட்டிப் புரட்டிக் கொண்டு வந்துவிட்ட த்யாகம்தான் நிஜமான த்யாகம் என்று என் அபிப்ராயம்.



இம்மாதிரி ஆவேசமாகப் பரோபகாரம் பண்ணின பெரியவர்கள் நம் தேசத்தில் ஆதிகாலத்திலிருந்து அவிச்சின்னமாக (தொடர் முறியாமல்) வந்து கொண்டே இருந்திருக்கிறார்கள்.



http://www.kamakoti.org/tamil/3dk33.htm
 
Nicely crafted,

We consume medicine to get cured. Say for instance Crocin. we need not know the constituent of the medicine as is, It is enough doctor knows about it. the disease would be cured :)
 
Shri Shankara Jayanthi Mahotsav - Invitation & Programme Details


Shri Shankara Jayanthi Mahotsav - Invitation & Programme Details




11059375_1631050237127204_3289777758097347558_n.jpg



Source: Sri Kanchi Kamakoti Peetam, Kanchipuram
 
Vadakke Madham Brahmaswam, Thrissur,

Vadakke Madham Brahmaswam, Thrissur,




Vadakke Madham Brahmaswam, Thrissur, is the one and only traditional Veda Padhasala in Kerala, where Rigveda, Yajurveda and Samaveda are being taught in the traditional style. Here, the method of teaching and learning is entirely different from other disciplines.

Please read more from here


VADAKKE MADHAM BRAHMASWAM: Present Activities
 
Veda Dharma Sastra Paripalana

10003443_296817833806596_5060478861960082098_n.jpg
Veda Dharma Sastra Paripalana



65th Visesha Upanyasam "Vivaaha Dharmam" @ Royapettah, Chennai by Veda Dharma Shastra Paripalana Sabha on 12th April 2015 at Residence of Mr. R Sivakumar (9444018283) Venue: No 167, Flat A 2, Ground Floor, Lloyds Road, Royapettah, Chennai-600014 (Opp to Hemamalini Kalyana Mandapam).

Upanyasakar "Veda Vidyaalankaara, Vidya Rathnam,Salakshana vidhwan, Nannilam Brahmmasri V. Rajagopala Ganapadigal" from 4:00 PM to 5:30 PM.


11146418_1631457327086495_1480411543991482760_o.jpg




Sri Kanchi Kamakoti Peetam, Kanchipuram

Sage of Kanchi
 
A genuine request to parents

A genuine request to parents

By mahesh on April 10, 2015


I recently came across a very disheartening incident during a wedding alliance process of one of our readers. In general, the marriage process itself is a very stressful process for all – boy, girl, parents etc. On top of that rejecting a boy or a girl is a tough situation. From time immortal, we are used to telling various reasons for rejecting – “horoscopes didn’t match”, “boy/girl wants to wait for 2 more years” etc…so many reasons that we know that there is a mismatch somewhere and we move on.


In this case, the parent introduced themselves as great Mahaperiyava devotees and Periyava is everything to them etc. In the process, boy met the girl, they liked each other and suddenly the boy’s parent said to girl’s parents that there is a mismatch on living style/status, wealth etc. Didn’t they know about this before they proceeded? I don’t know about how the boy took the whole thing but this young lady is so hurt. It pains me. I know she is a great person – staunch devotee of Periyava.


Come on! Is this what Periyava taught us all? All His life Periyava has been telling us to look into the family values, culture, bride/groom’s compatibility – their character, devotion etc. How come we completely ignore all these? How are these people “devotees” of Periyava? How Periyava is everything to them?! I don’t get it.

Choosing the life partner is a very important process and one has every right to reject a person. All those filtering of social status, wealth etc should happen before even you proceed – not after boy and girl meets and likes each other…We have seen/read so many incidents where millionaires became beggars due to one’s karma. We have also seen Periyava’s blessings alone have made ordinary people so rich and wealthy.
I dont know if those concerned parties read this post. If so, my only request to them is “don’t do this mistake one more time”.


Periyava once said that “if you get dowry, don’t put my name in the invitation”. I guess it needs to be extended to this situation as well…We all are educated and the very reason we are here in this temple is that we are devotees of Periyava. Please take extra caution in dealing in such sensitive matters and make a resolution that nobody’s feelings are going to be hurt in this process. This is the least thing we can do as a devotee. If you can’t do this, stop calling yourselves as Periyava devotee as it would be a great insult to Him.


I am not writing this to create a sympathy wave for her. I am so confident that Periyava will find a wonderful, handsome groom for her. I only want all the parents to behave responsibly. As it comes in Spiderman movie “great power comes with great responsibility”. The moment you call yourself a Periyava devotee, it comes with a great responsibility to live up to that expectation.


Along this same topic, I have been thinking for quite some time to kick-start a way to leverage our user base for exchanging of horoscopes etc and make this process little easier. I intend to implement this soon by partnering with few volunteers who are doing service with HH Balaperiyava…This is only a heads-up…
During this trip, I had a great opportunity spend lot of time with HH Balaperiyava and listened to all His plans for the next generation, protecting our culture, values etc. I will share them all with you soon.



https://mahaperiyavaa.wordpress.com/2015/04/10/a-genuine-request-to-parents/
 
ஸ்ரீ சங்கர ஜெயந்தி மஹோத்ஸவம்-

ஸ்ரீ சங்கர ஜெயந்தி மஹோத்ஸவம்-


பெரியவா சரணம்.


வருகிற ஏப்ரல் மாதம் 23ம் தேதி சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ சங்கர மடம் கோசாலையில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி மஹோத்ஸவம் நடைபெறவுள்ளது.


11146181_841239419270612_7130117291869325731_n.jpg





Source:Sage of Kanchi
 
Sri shankaracharya-varyam:

SRI SHANKARACHARYA-VARYAM:

https://www.youtube.com/watch?v=3AlOw207ZvM

Published on May 3, 2014
Hymn to Sri Adi Shankaracharya composed by the 36th Jagadguru Shankaracharya of the Sringeri Sharada Peetham, Sri Sri Bharati Tirtha Mahaswamiji.

For interactive learning of this stotra and Text of this stotra (Lyrics) in Devanagari (Sanskrit), Kannada, Telugu, Malayalam, Gujarati and Roman diacritics, please visit http://stotra.sringeri.net/stotras/sh...

shrIsha~NkarAchAryastavaH - Jagadguru Stotra Ratna Mala
 
What is MANTRA ?? beautifully explained by Swamiji

What is MANTRA ?? beautifully explained by Swamiji

https://www.youtube.com/watch?v=lSUc2s1uP2w

Published on Apr 9, 2015


HH Swamiji explained the significance of MANTRA in his discourse @ Kurukshetra.

His Holiness Sri Chinna Jeeyar Swamiji delivered discourses on Bhagavad Geeta @ Kurukshetram, the birth place of Bhagavad Geeta.

We are so blessed to listen these discourses from our beloved Acharya His Holiness Chinna Jeeyar Swamiji.
 
[TABLE="width: 100%"]
[TR]
[TD]Veda Dharma Sastra Paripalana[/TD]
[TD="align: right"]
[/TD]
[/TR]
[/TABLE]
66th Visesha Upanyasam @ KK Nagar by Veda Dharma Shastra Paripalana Sabha on 14th April 2015 at Residence of Mr. K. Swaminathan (9600077562) Venue: AP 341, First Floor, 36th sector, 7th street, KK Nagar, Chennai-78.

Upanyasam on “Panchaanga Padanam” & “Sthree Dharmam” Upanyasakar "Maha Mahobadhyaya, Vedabashya Rathnam, Dharshana Kalanithi, Meemamsa Vedantha Sironmani, Veda Sastra Rathnakaraa Mullaivasal Brahmashri R.KRISHNAMURTHY SASTRIGAL" from 6:30 PM to 8:00 PM.



Sage of Kanchi
 
Sringeri Jagadguru on What to do if no time for Puja and Nitya Karma

Sringeri Jagadguru on What to do if no time for Puja and Nitya Karma


https://www.youtube.com/watch?v=IaBoreHbio8


Published on Dec 19, 2014


Sringeri Jagadguru on What to do if no time for Puja or Nitya Karma

Excerpt from the book: Sanatana Dharma Vol. 1
Chapter 11 Dharma is eternal and unchanging
Page 75-77

Today many people lament: “Swamiji, we are not in a position to put into practice the principles ordained by the sastras. Times have changed. In the past people led a leisurely life. They used to indulge in religious pursuits from morning till evening. We have to rush to our offices at 8 AM in the morning. How can we take up religious practices, like in the past?” They request me to frame a new set of principles to suit the present day situation. In their opinion, rules framed by the Jagadguru would be accepted by all and would be valued.

I told them that Sri Adi Sankaracharya did not establish the Peethas to stipulate new sets of rules and procedures. He established these Peethas to guide the people, to encourage them and ensure that they abided by the Sastras. It is thus impossible, to change the sastras.

They persist, saying it is not possible to follow the guidelines laid down in the sastras. This is only due to the poor understanding of what is prescribed in the sastras. What do the sastras prescribe?

It is prescribed that we offer worship both in the morning and in the evening. If an elaborate worship is not possible owing to some constraints the sastras prescribe a shorter method of worship as a solution. Why is this not being adopted?

It is prescribed that you should chant the Gayatree mantra 1008 times during the sandhyavandana. If this is not possible it suggests that the mantra be chanted at least 108 times. If, even this is not possible it suggests that you chant the mantra at least 32 times.

The sastras suggest both, mukhyakalpa and anukalpa. lf you follow mukhyakalpa you have to chant the mantra 1008 times. If it is not possible to follow mukhyakalpa you may follow anukalpa and chant the Gayatree mantra only 108 times. What you are asking is - If there is a means by which sandhyavandana can be totally avoided. I am emphatically saying that it is not possible. It is my firm opinion; if it is not possible to chant the Gayatree mantra 1008 times, chant it 108 times; even if that is not possible chant it atleast 32 times, but do not give up sandhyavandana.

If you cannot perform worship in an elaborate manner, chanting Rudra and chamaka, perform it at least in a brief manner, chanting only the purushasookta.

lt would be sheer escapism if you say that even this is not possible.You have time for reading the news papers, for watching the television serials and all other activities. If you say you do not have time only for chanting the Gayatree mantra 108 times it would only amount to escapism. It is a lame excuse given to cover, your lack of interest and faith.
 
தாளும் கோளும்

தாளும் கோளும்




காமாக்ஷி ஸகல கஷ்டத்தையும் நிவ்ருத்தி பண்ணிப் பரமானந்தத்தை அளிக்கிறவள். நமக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு ஜ்யோதிஷ ரீதியில் நவக்ரஹங்களைத் தானே காரணமாகச் சொல்கிறார்கள்?இந்த நவக்ரஹ பாதிப்பு எதுவும் அவள் பாதத்தை ஸ்மரிக்கிறவருக்கு ஏற்படாது என்று பொருள் படுமாறு 'மூக பஞ்சசதி'யில் வார்த்தை விளையாட்டுப் பண்ணி ஒரு ஸ்லோகம் இருக்கிறது.


"மூக பஞ்சசதி"என்பது ஞானம், பக்தி, சாக்த சாஸ்த்ர தத்வங்கள், காவ்ய ரஸம் எல்லாம் சேர்ந்ததாகக் காமாக்ஷியைப் பற்றி மூகர் என்பவர் அநுக்ரஹித்துள்ள ஐநூறு ஸ்லோகம் கொண்ட ஸ்தோத்ரம். இவற்றிலொன்று தான் நவக்ரஹங்களில் ஒவ்வொன்றின் தன்மையும் அம்பாளின் சரணாவிந்தத்தில் இருப்பதாகச் சொல்லும் ஸ்லோகம்.

(பாதாரவிந்த சதகம்-59)



ப்ரகாசிப்பதாலே 'பாஸ்வத்தாம்'என்று அந்தப் பாதத்தைச் சொல்கிறார். நவக்ரஹங்களில் முதலில் வரும் ஸ¨ர்யனின் தன்மை இதுதானே?'பாஸ்கரன்'என்றே அவனுக்கு ஒரு பேர்.

அம்பாள் சரணத்திலிருந்து அம்ருதம் கொட்டுகிறது. இதை 'அம்ருத நிலய:'- என்கிறார். யோகிகள் சிரஸின் உச்சியில் அவளுடைய பாத பத்மத்தின் அம்ருதம் பெருகுவதில் அப்படியே 'உச்சி குளிர்ந்து'இருப்பார்க்ள். 'சரணாம்ருதம்'என்றே சொல்வது வழக்கம்.

இதேபோல அம்ருதம் பெருக்குகிற தன்மை சந்த்ரனுக்கு உண்டு. அதனால்தான் 'ஸுதாகரன்'என்று பெயர். 'லோஹிதவபு:'என்று ஸ்லோகத் இருப்பதற்கு 'சிவந்த ரூபமுள்ளது'என்று அர்த்தம்.

சிவப்பாயிருப்பதுதான் செவ்வாய். 'விநம்ராமாணாம் ஸெளம்ய:'- அந்தப் பாதத்திலே போய் நமஸ்காரம் பண்ணுகிறவர்களுக்கு அது ஸெளம்யமாயிருக்கிறது. மனஸுக்குப் பரமஹிதமாக, ம்ருதுவாக, சாந்தமாக இருப்பதெல்லாம் ஸெளம்யம். உக்ர தேவதை என்பதற்கு ஆப்போஸிட்டாக ஸெளம்ய தேவதை என்கிறோம். நேர் அர்த்தம் என்ன?'ஸோம'என்ற சந்திரனிலிருந்து உண்டானதே 'ஸெளம்யம்'. நிலவு போலக் கோமளமாக, சாந்தமும் ஹிதமும் தருவதாக இருப்பதையெல்லாம் இதனால் ஸெளம்யம் என்கிறோம்.

ஸோமனுக்குப் புத்ரனாக உண்டானவன் புதன். அதனால் அவனுக்கு ஸெளம்யன் என்று பேர். அம்பாள் பாதம் 'குருரபி'- 'குரு:அபி'என்கிறார். 'குருவானதும்கூட'என்கிறார். குரு என்றால் குணவிசேஷத்தால் பெரியது என்று அர்த்தம். அதோடுகூட அந்தப் பாதம் க்ஷணகாலம் பட்டுவிட்டால் திருவடி தீ¬க்ஷயினாலே ப்ரஹ்மஞானமே ஸித்தித்துவிடும். இப்படி ஞானம் தருவதாலும் அது குருவாயிருக்கிறது.

குரு என்றால் வியாழன், குருவாரம் என்றே அந்தக் கிழமைக்குப் பேர். 'கவித்வம் ச கலயந்'- கவித்வத்தையும் அநுக்ரஹித்துவிடுகிறது அம்பாள் பாதம். அம்பாளுடைய பாத தீர்த்தம் மூகனையும் (ஊமையையும்) கூட மஹாகவியாக்கிவிடுகிறதென்று ஆசார்யாளே சொல்லியிருக்கிறார்*.

இப்படி அவளருளால் அருட்கவியாகி, ஒரு காலத்தில் தாம் மூகனாயிருந்ததை லோகமெல்லாம் அறிய வேண்டுமென்பதால் 'மூகர்'என்றே பெயர் வைத்துக் கொண்டவர்தான் இந்த ஸ்லோகத்தைப் பண்ணியிருப்பவரே!

நவக்ரஹங்களில் கவித்வகாரகன் வெள்ளிக்கிழமைக் சூரிய சுக்ரன்.




குரு என்று வெறுமே சொன்னால் எப்படி அது தேவகுருவான ப்ருஹஸ்பதியைத்தான் குறிக்குமோ அப்படியே 'கவி'என்று வெறுமே சொன்னால் அது அஸுர குருவான சுக்ராசாரியாரைத்தான் குறிப்பிடும். கவித்வ சக்தி அருளுவதால் அம்பாளின் பாதம் சுக்ரனாக இருக்கிறது. 'கதௌ மந்த:'மிக மெதுவான நடை உள்ளது அம்பாள் பாதம். '

மந்தன்'என்று சனிக்கு பேர். அது ரொம்ப மெதுவாக ஸஞ்சாரம் செய்யும் க்ரஹம். 'சனீச்வரன்'என்று சொல்வது தப்பு. மற்ற க்ரஹம் எதற்கும் இல்லாத 'ஈஸ்வர'ப் பட்டம் இதற்கு மட்டும் வருவதற்கு நியாயமில்லை. 'சனைச்சரன்'என்பதே சரியான வார்த்தை. 'சனை:'- மெதுவாக, 'சர'- ஸஞ்சரிப்பவன். அதைச் சுருக்கி சனி என்கிறோம்.

'பஜதாம் தம:கேது:'- அம்பாள் பாதம் தன்னை பஜிக்கிறவர்களின் தமஸுக்கு உலை வைக்கும் தூமகேதுவாக இருக்கிறது. தமஸ் என்றால் இருட்டு. துக்கம், அஞ்ஞானமெல்லாம்தான் பெரிய இருட்டு. தமஸ் என்று ராஹ§வுக்கும் பெயர். கேது என்பது ஒன்பதாவது க்ரஹமென்று எல்லோருக்கும் தெரியும்.


ஸ்லோகத்தில் ராஹவின் தன்மை மாத்திரம் நேரே அம்பாள் பாதத்துக்கிருப்பதாகச் சொல்லாமல், ஆனாலும் 'தமஸ்'என்ற வார்த்தையை வைத்து, மற்ற எட்டு க்ரஹங்களையும் நேரே அந்தச் சரண ஸம்பந்தப் படுத்திச் சொல்லியிருக்கிறது.




ததாநோ பாஸ்வத்தாம் அம்ருதநிலயோ லோஹிதவபு :
விநம்ராணாம் ஸெளம்யோ குருரபி கவித்வம் ச கலயந் *
கதௌ மந்தோ கங்காதர-மஹிஷி காமாக்ஷி பஜதாம்
தம : கேதுர்-மாத : ஸ்தவ சரணபத்மோ விஜயதே **


?????? ?????? : ( ??????????? ????? - ???????? ????? ) : kamakoti.org:
 
கொசுவும் கேசவனும்

கொசுவும் கேசவனும்



லோகத்திலே ஒரு விஷயம் பாக்கியில்லாமல் எல்லாவற்றையும் பற்றி இப்படி அநேக கவிதைகள் சமத்காரமாக இருக்கின்றன. பரமாத்மாவிலிருந்து ஆரம்பித்து ஒரு சின்னக் கொசுவரையில் எதைப்பற்றியும் அர்த்த சித்ரமாகவும் சப்த சித்ரமாகவும் கவிகள் விநோத விநோதமாகப் பண்ணியிருக்கிறார்கள்.


பரமாத்மா, கொசு இரண்டையும் குறிப்பிடுவதாகச் சிலேடை செய்துகூடக் கவி இருக்கிறது. ஒரு அர்த்தப்படி ஸாக்ஷ£த் மஹாவிஷ்ணுவைக் குறிக்கும்;இன்னொரு அர்த்தப்படி கொசுவைக் குறிப்பிடும்:


சக்ர-ப்ரமண-கரத்வாத்
குத்ருஷ்டிபிர்-தூரவர்ஜ்யமாநத்வாத் *
ச்ருத்யந்த-கேலநத்வாத்
மசக த்வாமேவ மாதவம் மந்யே **



சக்ர ப்ரமண கரத்வாத் '- சுற்றிக்கொண்டேயுள்ள சக்ரத்தைக் கொண்ட கரத்தை உடையவர் மஹாவிஷ்ணு. சக்கரவட்டமாகச் சுற்றும் காரியத்தை ஓயாமல் செய்வது கொசு. 'கர'என்பது விஷ்ணுவைக் குறிக்கும் போது 'கை'என்று பொருள்படும். கொசுவைக் குறிப்பிடும் 'செய்வது'என்று பொருள்படும்.


' குத்ருஷ்டிபி : தூர வர்ஜ்யமாநத்வாத் '- கெட்ட நோக்குடையவர்களால் நெருங்க முடியாமல் தூரத்தில் விலகியிருப்பவர் பகவான். 'குத்ருஷ்டிபி:'என்றால் 'கண் வலிக்காரர்களால்'என்றும் இன்னொரு அர்த்தம். கொசு என்றாலே கண்நோவுள்ளவர்கள் தூர ஓடி விடுவார்கள்.


' ச்ருத்யந்த கேலநத்வாத் '- 'ச்ருதி'என்றால் வேதம். 'ச்ருத்யந்தம்'என்றால் வேதாந்தமாகிற உபநிஷத். உபநிஷத்திலே பகவான் ஆனந்தமாக விளையாடுகிறார். கொசுவைக் குறிப்பதாகக் கொள்ளும்போது, 'ச்ருதி'என்றால் காது. காதுநுனி 'ச்ருத்யந்தம்'. கொசு நம்முடைய காதோரத்தில் வந்து 'ஒய்ங்'என்று சப்தம் பண்ணிக் கொண்டு விளையாடி ஹிம்ஸை பண்ணுகிறது!



'மசக!த்வாம் ஏவ மாதவம் மந்யே'- 'ஏ கொசுவே!உன்னையே நான் மாதவனாக நினைக்கிறேன்'என்று முடிக்கிறார்.


'சக்ர ப்ரமணம் பண்ணுவது, குத்ருஷ்டிக்காரர்களை தூரப்போகப் பண்ணுவது, ச்ருச்யந்தத்தில் விளையாடுவது என்ற காரியங்களை c செய்கிறபடியால், ஏ கொசுவே!உன்னையே மஹாவிஷ்ணுவாக நினைக்கிறேன் - மசக ! த்வாமேவ மாதவம் மந்யே !'


இப்போது இங்கேயும் கொசு பாட ஆரம்பித்து விட்டது. எல்லாருக்கும் தூக்கமும் வந்துவிட்டது. இது வரையில் வேடிக்கை கேட்டதில் இரண்டும் தெரியவில்லை. இப்போது தூங்க வேண்டும் என்று படுத்துக் கொண்டால் கொசு ஹிம்ஸைதான் தெரிய ஆரம்பிக்கும். அனந்த சயனமாகப் படுத்துக்கொண்டு தூங்குகிற பகவான்தான் அந்த கொசு ரூபத்தில் வந்து காதிலே ரீங்காரம் பண்ணுகிறார் என்று நினைத்துக்கொண்டால் கொஞ்சம் ஹிம்ஸையை மறக்கலாம். கொசுத் தொல்லையில் தூக்கம் வராவிட்டால் இந்த கவித்வ விசித்ரங்களை நினைத்துக் கொண்டு கொஞ்சம் நிம்மதி பண்ணிக் கொள்ளலாம்.




???????? ???????? : ( ??????????? ????? - ???????? ????? ) : kamakoti.org:
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top