• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My Collections

Status
Not open for further replies.
அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதன் தத்த&

அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதன் தத்துவம்
Posted by பார்வதி அருண்குமார் i

திருமணத்தில் புதுமணத் தம்பதிகள் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது என்பது இன்றுவரை நடைமுறையில் உள்ள வழக்கம். ராமரின் குலகுருவான வசிஷ்டரின் மனைவி அருந்ததி. இவர்கள் மிகுந்த ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். இதன் விளைவாக இவர்கள் வானில் நட்சத்திரங்களாக ஒளிரும் பேறு பெற்றனர். இவர்களைப் போல் மணமக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காகவே அம்மி மிதித்து அருந்ததி பார்க்கின்றனர். ஆனால் இந்த நட்சத்திரம் பகலில் கண்களுக்கு புலப்படுவதில்லை. மானசீகமாக மனதில் நினைத்து வணங்குகிறோம்.

இதற்கு மற்றொரு காரணமும் சொல்வதுண்டு…..புராணங்களில் சப்த ரிஷி மண்டலம் என்று சொல்வார்கள். சப்தம் என்றால் ஏழு, ஏழு முக்கிய ரிஷிகள் ஒன்றாக இணைந்து நட்சத்திரமாக ஜொலிக்கிறார்கள். இந்த ஏழு நட்சத்திரங்களில் நான்கு, நாற்கோண வடிவத்தின் முனைகளாக இருக்கும். மற்ற மூன்றும் பட்டம் போல இருக்கும். இந்த பட்டத்தின் வாலில், நடுவில் இருப்பது வசிஷ்ட நட்சத்திரம், அதை ஒட்டி மெல்லியதாக இருப்பது அருந்ததி. இந்த இரு நட்சத்திரங்களும் ஒரே ஈர்ப்பு மையத்துடன் சுழல்பவை. அதாவது ஒன்றுக்கொன்று ஈர்ப்புடையவை. இந்த நட்சத்திரங்களைப் போல புதுமணத் தம்பதிகளும் ஒருவருக்கொருவர் ஈர்ப்புத் தன்மை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பது அருந்ததி பார்ப்பதின் தத்துவம்.



Source: K Hariharan
 
காயத்திரி மந்த்ரம் -- சின்னதாக சில விஷயம்.

காயத்திரி மந்த்ரம் -- சின்னதாக சில விஷயம்.

உலகத்திலேயே சிறந்த கடவுள் வாழ்த்து காயத்ரி மந்த்ரம். இதை நான் சொல்ல விரும்பினாலும் எனக்கு முன்னால் ஒரு அமெரிக்க விஞ்ஞானி சொல்லிவிட்டாரே.(டாக்டர் ஹோவார்டு ச்டீங்கேரில்) இதைச் சும்மா சொல்லவில்லை. நிறைய மதங்களின் முக்ய வேதங்களை அலசி அவற்றின் சக்தியை விஞ்ஞான பூர்வமாக வடிகட்டினபிறகு தான் இந்த முடிவுக்கு வந்தார்.


அப்படி என்ன கண்டுபிடித்தார்?

1. காயத்ரி மந்த்ரத்தை உச்சரிக்கும்போது 1,10,000 ஒலி அலைகள் ஒரு வினாடியில் வெளிவருகிறது.

2. காயத்ரி மந்த்ரத்தில் தான் மற்ற மந்த்ரங்களை விட உலகத்திலேயே சக்தி அதிகம்..

3. காயத்ரி மந்த்ரத்தின் சப்த அலைகள் ஆன்ம சக்தியை அதிகப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

4.ஜெர்மனியில் ஹாம்பர்க் சர்வகலாசாலை இதை ஆராய்ச்சி செய்து உயிர் வாழ உடலுக்கும் மனதுக்கும் அது தெம்பு கொடுப்பதை அறிந்தது.

5. தென் அமெரிக்காவில் சுரினாம் என்கிற நாட்டில் தினமும் மாலை ரேடியோ பரமரிபோவில் பதினைந்து நிமிஷங்களுக்கு காயத்ரி மந்த்ரம் ரெண்டு வருஷத்துக்கும் மேலே ஒலிபரப்பப்படுகிறதாம். இதை பின்பற்றி ஹாலந்து நாட்டிலும் இந்த நல்ல பழக்கம் வழக்கத்துக்கு வந்ததாம்.



இந்த காயத்ரி மந்த்ரத்தை பற்றி நமக்கு என்ன தெரியும்?



2500 லிருந்து 3500 வருஷங்களுக்கு முன்னால் சம்ஸ்க்ரிதத்தில், ரிக்வேதத்தில் தோன்றியது . அதற்கும் முன்னாலே பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே இது உச்சரிக்கப்பட்டு வந்தது என்கிறார்கள்.
இதில் என்ன வேடிக்கை என்றால் பல நூற்றாண்டுகளுக்கு மேல் நாட்டார்களுக்கு மட்டும் அல்ல, ஹிந்துக்களாகிய நம்மில் அநேகருக்கும் காயத்ரி மந்த்ரம் தெரியாது. தெரிந்தவர்கள் இதை ரகசியமாகவே பல காலம் மூடி மறைத்தார்கள். அதுவும் பெண்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதோடு பிராமணரல்லாதவர்க்கும் இது தேவையில்லை என்றும் சொல்லப்பட்டது.


அந்த காயத்ரி தேவியே மனது வைத்தாளோ என்னவோ இன்று உலகமுழுதும் காயத்ரி மந்த்ரத்தின் மகிமை பரவி ஓங்கி ஒலிக்கிறது .


அதன் அழகிய, ஒப்புமையிலாத உயர்ந்த அர்த்தம், சக்தி வாய்ந்த ஒலி, அன்றாட பாதுகாப்பாகவே அமைந்து விட்டதே. காயத்ரி மந்த்ரத்தின் பிரணவ சப்தம் மற்ற எந்த மந்திரத்திற்கும் மூலாதாரமாகவே உள்ளதே. உள்ளாம் கவர்ந்து, திறந்து,பரம்பொருளை நாடும் இந்த மந்திரம்,உலகில் எவ்வுயிர்க்கும் பொருந்தும். பல வருஷங்களுக்கு முன்பு ஒரு முறை ஏதோ ஒரு ஆங்கில புத்தகத்தில் முதலில் சந்திரனில் காலடி படித்த ஆம் ஸ்ட்ராங் என்ற விண்வெளி வீரர் பிரபஞ்சத்தில் சந்திரனை நோக்கி இறங்கும்போது ஓம் என்ற மனம் கவரும் சப்தம் கேட்டது என்று எழுதினகாக, படித்த ஞாபகம். வேறுசிலரும் இதை பற்றி படித்திருக்கலாம். அறிந்திருக்கலாம்.


தவம் என்றாலே நம் கண் முன் தோன்றி, மனத்தில் முதலில் இடம்பெறும் விச்வாமித்ரருக்கு உபதேசிக்கப்பட்டது காயத்ரி மந்த்ரம். இது மனித குலத்திற்கு கிடைத்த விலையில்லா பரிசு. சுத்தமான இதயத்திலிருந்து வெளிவரும் இந்த மந்திரம் உலக அமைதியை காக்கிறது. அளவற்ற ஞானம் தருகிறது.
'ஹே பரப்ரம்மமே உன்னிலிருந்து வெளிப்படும் அந்த ஞான ஒளி என்னிலிருக்கும் அஞ்ஞான இருளை விரட்டி ஞானப்ரகாசம் அருளவேண்டும்"


காயத்ரி மந்த்ரம் சொல்பவனை விடுங்கள். அது எவன் காதில் விழுகிறதோ அவனே புனிதமாகிறான். ஆத்மாவிலிருந்து புறப்படும் பிரம்ம உபதேசம் அல்லவா அது?.


காயத்ரி என்றால் என்ன? ''காய"" என்பது உயிரூட்டும் சக்தி. ''த்ரி'' என்றால் அது செய்யும் மூன்று வேலை: அதாவது பாதுகாக்கிறது, புனிதப்படுத்துகிறது, பரமனிடம் கொண்டு சேர்க்கிறது.


வேதங்களில் நாம் அறியும் ஏழு லோகங்கள் நாம் இருக்கும் இந்த லோகத்தைவிட,படிப்படியாக மேன்மை பெற்றவை. ஒன்றைக்காட்டிலும் மற்றொன்று அதி உன்னதமானது. எப்படி எலிமெண்டரி ஸ்கூலிலிருந்து, காலேஜ் வரை போகிறோமோ அப்படி. புரிகிறதா? இந்த காயத்ரி மந்த்ரம் தான் நம்மை கடத்திச்செல்லும் ஸ்கூல் வேன் .


நான் சொல்லவந்தது சொல்வது எல்லாமே ஒண்ணாம் க்ளாஸ் வாத்தியார் உபதேசம். காயத்ரி பற்றி தெரிய மகான்கள் எழுதியது பேசியது எல்லாம் படித்து கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். என்னிடம் அதை எதிர்பார்க்ககூடாது. ஏன் என்றால் நானே இன்னும் தேடுகிறேன். தேடத் தேட பூமிக்கடியிலே தோண்டினால் கிடைக்கும் தங்கம், வைரம் எல்லாம் போல நிறைய விஷயங்கள் புலப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அள்ள அள்ள குறையவில்லை. அள்ளி மாளவில்லை.


காயத்ரி மந்த்ரம் விடாமல்சொல்பவனைப் பார்த்த்தாலே அவனிடம்ஒரு தனி தேஜஸ், உள்ளே இருக்கும்ஓஜஸ் வேறு வெளியே ஒளி வீசும்.அதன் 24 அக்ஷரத்வனி அலாதி. சூக்ஷ்ம சரரஆத்மாவின் குரல் அது.


காயத்ரி மந்த்ரத்தை பாட்டு போலவோ, ராகம் போட்டோ, ஆலாபனத்தோடா, பக்க வாத்யத்தோடா பாடுவார்கள்? சிலர் செய்வது வேதனையாக இருக்கிறது. அது மனத்தை தொடவில்லை.


மந்த்ரத்து க்கெல்லாம் அதற்கென்று உச்சரிப்பு, ஒரு முறை இருக்கிறது. அர்த்தத்தை புரிந்துகொண்டு முழுமனத்தோடு தக்க குரு உபதேசத்தோடு சொன்னால் கைமேல் பலன். பழம் பழுக்கும், இனிய ருசி காரண்டீ . காயத்ரி மந்த்ரம் பற்றி இன்னும் கொஞ்சம் விஷயம் கைவசம் இருக்கிறது. டைம் கிடைத்தால் இன்னும் அப்புறம் சொல்கிறேனே.



Source: K Hariharan
 
நந்தி

நந்தி


நந்தி என்ற சொல்லுக்கு எப்பொதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்தி தேவர் கருதப்படுகின்றார்.சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு.

பிரதோஷ வேளையில் ஈசனை வழிபட அனைத்தும் சித்திக்கும். இக்காலத்தில் நந்தி தேவரை வழிபடுவது சிறப்பாகும். வலம் வருதல் : சாதாரண நாளில் சிவ சந்நிதியை மூன்று முறை வலம்வர வேண்டும். ஆனால் பிரதோஷ காலத்தில், சோம சூத்திரப் பிரதட்சணம் செய்ய வேண்டும்

சோமசூத்தகப் பிரதட்சிணம் என்பது முதலில் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு அப்பிரதட்சணமாக (தட்சிணாமூர்த்தி சன்னதி வழியாக) சண்டிகேசுவரர் சன்னதி வரை சென்று அவரை வணங்கிக் கொண்டு, அப்படியே திரும்பி வந்து, முன்போல் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு, வழக்கம் போல் அப்பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வரவேண்டும். அப்படி வலம் வரும் பொழுது சுவாமி அபிஷேக தீர்த்தம் வரும் தொட்டியை (கோமுகத்தை) கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி, அப்பிரதட்சணமாக சன்னதிக்கு வந்து சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்க வேண்டும். இப்படி மூன்று முறை வரவேண்டும். இது அநேக அசுவமேதயாகம் செய்த பலனைத் தரும் என சான்றோர் கூறியுள்ளனர். சனி கிழமைகளில் வரும் பிரதோஷத்தன்று இறைவனை இவ்வாறு வலம் வருவதால் இன்னல்கள் நீங்கி நன்மைகள் பெறுவர்


பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது. எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.


காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், சாபம், உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.


எனவே, பிரதோஷ காலத்தில் ஈசனையும் நந்தி தேவனையும் வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். குறிப்பாக சாயும்காலம் (மாலை) வழிபாடு மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும். பிரதோச கால நேரங்களில் சிவபெருமான் நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுவதாக புராணங்களில் நம்பிக்கை . எனவே நந்திக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.


நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.


மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.

நந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால் இவர் தேவர்கள் மற்றும் சிவனை தரிசிக்க வரும் பக்தர்களை தடுக்க வல்ல அதிகாரம் பெற்றவர்.பொதுவாக கோயிலில் சிவலிங்கமும் நந்தியும் ஒரே நேர்க்கோட்டில் காட்சி தருவார்கள்.

ஒரு ஆலயத்தில் ஏழு நந்திகள் இருக்குமானால் அந்த ஆலயம் மிகச் சிறப்புடையது. ஐந்து பிராகாரங்கள் உள்ள கோயில்களில் இந்திர நந்தி, பிரம்ம நந்தி, வேத நந்தி, விஷ்ணு நந்தி, தர்ம நந்தி என ஐந்து நந்திகளை தரிசிக்கலாம். ஒரு சமயம் இந்திரன், நந்தி ரூபத்தில் சிவபெருமானுக்கு வாகனமாக இருந்தார். அவரே இந்திர நந்தி. இந்திரன் போகங்களுக்கு அதிபதியாகத் திகழ்வ தால் இவர் ‘போக நந்தி’ என்றும் அழைக்கப்படுகிறார்.


பிரம்மன் ஒரு சமயம் நந்தியாகி சிவனைத் தாங்கினார். அதனால் அவர் பிரம்ம நந்தி எனப்பட்டார். பிரம்மன் வேத சொரூபி ஆனதால் இவரே ‘வேத நந்தி’யும் ஆனார். முப்புரத்தினை எரிப்பதற்காக சிவபெருமான் தேரில் ஏறியதும் ‘தன்னால்தான் திரிபுரம் அழியப் போகிறது’ என்று கர்வம் கொண்டது தேர். இதனை அறிந்த சிவபெருமான் தன் கட்டை விரலை தேரில் ஊன்றினார். தேர் உடைந்தது. அப்போது மகாவிஷ்ணு நந்தியாக உருவம் எடுத்து சிவபெருமானை தாங்கினார். அவர்தான் ‘மால் விடை’ என்று சொல்லக்கூடிய விஷ்ணு நந்தி. மகா பிரளய காலத்தில், தர்ம தேவதை நந்தியாக மாறி சிவபெருமானைத் தாங்கியது. அதுதான் ‘தர்ம விடை’ எனப்படும் தர்ம நந்தி.



கோயில் பிரதான வாயிலில் வலது பக்கம் பார்த்தபடி அதிகார நந்தி இருப்பார். பின்புறம் ரிஷப நந்தி இருக்கும். மூன்று நந்திகள் உள்ள ஆலயத்தில் இறைவனிடமிருந்து மூன்றாவது கொடி மரத்திற்கு அருகில் உள்ள நந்தி ‘ஆன்ம நந்தி’ எனப்படும். இந்த நந் தியை ‘சிலாதி நந்தி’ என்றும் சொல்வர்.கயிலையைக் காப்பவர், அதிகார நந்தி. சிவன் தாண்டவம் ஆடும்பொழுது மத்தளம் இசைப்பார். சிவபெருமானின் கட்டளையை நிறைவேற்ற சேனைத் தலைவராகவும் இருப்பவர். பிரதோஷ காலத்தில் நந்தி மிகவும் போற்றப்படுகிறார். நந்தியை தினமும் வணங்குபவர்களுக்கு ஞானம் கைகூடும். குலம் செழிக்கும், சிறப்பான வாழ்வு அமையும் என்பர்.




Source: Hindu Prasad
 
வலம் புரிச்சங்கு :



10552647_811374805581582_4175154709424072504_n.jpg




1.ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ëந்து இருக்கும்.

2. கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு மூலம் ஓடு போன்று உருவாகி வருவதே சங்கு என்றாலும் குபேரன் அருளைப் பெற்றுத் தருவது.

3. வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்தால் நமக்கு பிரம்மகத்திதோஷம் இருப்பின் போய்விடும். இதையே தர்ம சாஸ்திரம். ``சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ ஸ்ரீ! அங்க லஷணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்'' என்று விளக்குகிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.

4. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, பேதாண்டப் பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.

5. வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.

6. செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும்.

7. அதிகக் கடன் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும், அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16-வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும்.

8.சுத்தமான உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும்.

9. ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறுகிறோம்.


10. பிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால் சங்கில் நீர்விட்டு உத்ராட்சம் இட்டு அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோஷங்கள் அனைத்தும் விலகும்.

11. பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப்பஞ்சமே வராது


Source: Jeyanathan Durai
 
தெய்வீக மணம் கமழும் மாதமாக ஆடி மாதம்

தெய்வீக மணம் கமழும் மாதமாக ஆடி மாதம்



10443517_242503555958935_1526997486829322044_n.jpg




தெய்வீக மணம் கமழும் மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. இந்த மாதத்தை ‘அம்மன் மாதம்’ என்றே அழைக்கிறார்கள். அந்தளவுக்கு அம்மன், அம்பாள், சக்தி ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த பூஜைகள், ஹோமங்கள், உற்சவங்கள், பால் அபிஷேகம், பூச்சொரிதல் போன்றவை விமரிசையாக நடக்கும். அதிலும் ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக் கிழமைகள் மிகவும் சிறப்பு மிக்கவை. கோயில்களில் மட்டுமின்றி வீடுகள்தோறும் விரதம் இருந்து வேப்பிலை தோரணம் கட்டி அம்மனை வழிபட்டு நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி கூழ் ஊற்றுவார்கள். இந்த ஆடி மாதம் முழுவதும் அனைவரது வீட்டிலும் பக்தி மணம் கமழும். குறிப்பாக பெண்கள் இந்த மாதம் முழுவதும் விரதம் இருந்து தங்கள் வீட்டின் அருகில், தங்கள் ஊரின் அருகில் உள்ள அம்மன் ஸ்தலங்களுக்கு சென்று வருவார்கள். அந்த வகையில் அருகில் உள்ள தலங்களை சென்று தரிசிப்பது மிகவும் விசேஷமாகும்.



குபேரன் வழிபட்ட ‘வாஸ்து’ காளிகாம்பாள்


சென்னையின் முக்கிய பகுதியான பாரிமுனை தம்புச்செட்டி தெருவில் காளிகாம்பாள் கோயில் உள்ளது. இத்தலத்துக்கு பல சிறப்புகள் உண்டு. வியாசர், அகத்தியர், குபேரன் போன்றோர் வழிபட்ட ஸ்தலம். இத்தலம் காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஈசான்ய திசையிலும், மயிலை கற்பகாம்பாளுக்கு வடக்கிலும், திருவொற்றியூர் வடிவுடையம்மனுக்கு தெற்கிலும், திருவேற்காடு கருமாரி அம்மனுக்கு கிழக்கிலும் வாஸ்துப்படி அமையப் பெற்ற தலமாகும். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த அர்த்தமேரு சக்கரம் இங்கு உள்ளது.


நல்வாழ்வு தரும் மயிலை கற்பகாம்பாள்



சென்னை மாநகரின் பிரசித்தி பெற்ற ஸ்தலம் மயிலாப்பூர். இங்கு கபாலீஸ்வரரும், கற்பகாம்பாளும் அருள் புரிகிறார்கள். தல வரலாறுபடி சிவனை மயில் வடிவில் வழிபட்டதால் மயிலாப்பூர் என பெயர் ஏற்பட்டது. இது பாடல் பெற்ற ஸ்தலமாகும். சர்வரோக நிவாரண ஸ்தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள இறைவன் - அம்பாளை மனமுருக பிரார்த்தித்தால் சகல நோய்களும் நீங்கி, ஆரோக்கியமான, வளமான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.


குடிசையில் அருளும் முண்டகக் கண்ணி




சென்னை மயிலாப்பூர் நகரத்தின் மையப்பகுதியில் இத்தலம் உள்ளது. இது ஒரு பிரார்த்தனை ஸ்தலமாகும். வேண்டியவர்க்கு வேண்டியதை அருளும் வரப்பிரசாதி. இங்கு அம்மன் சன்னதியில் கருவறை விமானம் கிடையாது. அம்மன் விருப்பம் அது என்பதால், காலம் காலமாக கீற்றுக் கொட்டைகைக்குள் இருந்தபடி அருள் பாலிக்கிறாள்.



ஞானம் தரும் முப்பெரும் நாயகிகள்



கொடியிடைநாயகி: சென்னை அம்பத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஸ்தலம். திருவுடைநாயகி: சென்னை - பொன்னேரி மார்க்கத்தில் மீஞ்சூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஸ்தலம்.வடிவுடைநாயகி: சென்னை திருவொற்றியூரில் பிரசித்தி பெற்ற ஸ்தலம்.இந்த மூன்று அம்மன்களையும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, பவுர்ணமிகளில் வழிபடுவது மிகவும் விசேஷமானது. ஒரே நாளில் மூன்று அம்மனையும் தரிசித்தால் சகல பாக்யங்களும் விருத்தியாகும். குறிப்பாக கல்வி, கலைகள், ஞானம் சிறக்கும். மாணவர்கள் பவுர்ணமியன்று தரிசிக்க கல்வியில் மேன்மை அடைவார்கள்.

திருமண தோஷம் நீக்கும் கருமாரி



சென்னை - பூந்தமல்லி அருகே மதுரவாயல் அருகே திருவேற்காடு உள்ளது. வேலமரங்கள் சூழப்பட்டிருந்ததால் வேற்காடு என பெயர் பெற்றது. அன்னை பராசக்தியே கருமாரி அம்மனாக அருள் புரிகிறாள். இத்தலத்தில் மிகப்பெரிய புற்றுக் கோயில் உள்ளது. திருமணத் தடை, திருமண தோஷம், ராகு-கேது தோஷம், காலசர்ப்ப தோஷம் போன்றவைகளுக்கு இத்தலத்தில் வேண்டுதல் செய்து பிரார்த்தித்துக் கொண்டால் தோஷ நிவர்த்தி ஏற்படும் என்பது ஐதீகம்.


பதவி உயர்வு அளிக்கும் மாங்காடு காமாட்சி



சென்னை பூந்தமல்லிக்கு அருகே உள்ளது மாங்காடு. இத்தலத்து அம்பாள் உக்கிரமாக தவமிருந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டவள். ஆதிசங்கரரால் போற்றி துதிக்கப்பட்ட ஸ்தலம். உத்யோகத்தில் பிரச்னை இருப்பவர்கள், பதவி உயர்வு தடைபடுபவர்கள். இங்கு வேண்டிக்கொண்டால் உத்யோகம், தொழிலில் இருக்கும் தடை, தடங்கல்களை அகற்றி நல்வாழ்வு அருள்வாள்.

பாவங்கள் போக்கும் பெரியபாளையம் பவானி




திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள பெரியபாளையத்தில் பவானி அம்மன் அருள்புரிகிறாள். ஆடி திருவிழா இங்கு 10 வாரங்கள் வெகு விமரிசையாக நடக்கும். மாநிலம் முழுவதும் இருந்து மட்டுமின்றி, ஆந்திராவில் இருந்தும் பலர் வந்து பொங்கல் வைத்து, அம்மனுக்கு முடிகாணிக்கை செலுத்துவார்கள். உடம்பில் வேப்பிலை கட்டி கோயிலை பிரதட்சணம் செய்தால் சகல பாவங்களையும் போக்கி பெரியபாளையத்தாள் வளமான வாழ்வு தருவாள் என்பது நம்பிக்கை.

சுக்கிர தோஷம் நீக்கும் ஆனந்தவல்லி



சென்னையின் மைய பகுதியில் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் இந்த அம்பாள் அருள் புரிகிறாள். அம்பாளின் பெயர் ஆனந்தவல்லி. இது சிவ ஸ்தலம் என்றாலும், இங்கு சுக்கிரவார அம்மன் மிகவும் பிரசித்தி பெற்றது. சுக்கிரபகவான் தோஷம் நீக்கும் ஸ்தலம் என்பதால் சுக்கிரவார அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். இது பரிகார ஸ்தலமாகும். களத்திர தோஷம், சுக்கிரதோஷம் திருமண தடை போன்றவற்றுக்கு இங்கு வேண்டிக்கொண்டால் தடைகள் நீங்கி திருமணம் கூடி வரும். கண்நோய், கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இங்கு வந்து வழிபட ரோக நிவாரணம் ஏற்படும். இங்கு பல்லக்கு தூக்கி நேர்த்திக் கடன் செலுத்துவது சிறந்த பரிகாரமாகும். சுக்கிரவார அம்மனின் பல்லக்கை பெண்களே தூக்கி வருவது இத்தலத்தின் சிறப்பாகும்.


குழந்தை வரம் தரும் புட்லூர் அம்மன்




சென்னை - திருவள்ளூர் செல்லும் வழியில் காக்களூர் அருகே புட்லூர் என்ற இத்தலம் உள்ளது. இங்கு அம்மன் வித்தியாசமாக கர்ப்பிணிப் பெண் வடிவில் கால் நீட்டி படுத்து ஆசி வழங்குகிறாள். இத்தலத்தின் உள்ளே செல்வதே மெய்சிலிர்க்கும் அனுபவம். மஞ்சள், குங்கும வாசனையுடன் தெய்வீக அருள் பொதிந்து இருக்கும் தலம். இது குழந்தை பாக்ய ஸ்தலமாகும். குழந்தை பாக்ய தடை உள்ளவர்கள் மனதார பிரார்த்தித்தால் குழந்தை பாக்யம் உண்டாகும். கர்ப்பிணிகள் வழிபட்டால் சுகப்பிரசவம் உண்டாகும்.


வழக்கு, விவகாரங்கள் தீர்க்கும் மதுரகாளி



சென்னை தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் இந்த அம்பாள் அருள்புரிகிறாள். சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் ஆலய வழிபாட்டு முறையே இங்கும் பின்பற்றப்படுகிறது. இங்கு திங்கள், வெள்ளி கிழமைகளில் மட்டுமே மூலவரை தரிசிக்க முடியும். மற்ற தினங்களில் உற்சவரை மட்டுமே தரிசிக்கலாம். கோர்ட், வழக்குகள், மனநல பாதிப்பு போன்றவற்றுக்கு அம்மன் நிவாரணம் தருவாள் என்பது நம்பிக்கை. மதுரையை எரித்த கண்ணகிதான் சினம் தணிந்து மதுரகாளியாக வீற்றிருக்கிறாள் என்றும் சிலர் கூறுகின்றனர்.
கண்டுபிடித்து கொடுக்கும் அரைக்காசு அம்மன்



சென்னை - வண்டலூர் அருகே உள்ள ரத்தினமங்கலத்தில் அம்பாள் பார்வதிதேவி அம்சமாக நான்கு கரங்களுடன் அமர்ந்து இருக்கிறாள். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, அமாவாசை நாட்களில் இங்கு விசேஷம். இத்தலத்து அம்மனை வேண்டிக் கொண்டால் தொலைந்த பொருள் மீண்டும் கிடைப்பதாக நம்பிக்கை, மேலும் ஞானத்தையும், ஞாபக சக்தியையும் தருபவளாக இருக்கிறாள். இத்தலத்துக்கு அருகில் செல்வத்துக்கு அதிபதியான குபேரன் கோயில் அமைந்துள்ளது.

திருஷ்டிகள் நீக்கும் காஞ்சி காமாட்சி



மிகவும் பிரசித்தி பெற்ற, பாடல் பெற்ற ஸ்தலம் காஞ்சிபுரம். ஊரின் மையப் பகுதியில் காமாட்சி அம்மன் ஆலயம் உள்ளது. இது சக்தி பீடங்களில் ஒன்று. இதற்கு காமகோடி பீடம் என்று பெயர். இத்தலத்து அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்ததாக தல புராணம் கூறுகிறது. இங்குள்ள ஸ்ரீசக்கிரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். சகல திருஷ்டி தோஷங்களை நீக்கும் சக்தி உடையது. ஆனந்தலஹரி என்ற ஸ்தோத்திரத்தை இங்குதான் ஆதிசங்கரர் பாடினார். இது நவக்கிரக தோஷம் நீக்கும் ஸ்தலமாகும். இங்கு பஞ்ச காமாட்சிகள் அருள்புரிகிறார்கள். ஆடி மாதத்தில் அம்மன் தரிசனம் செய்து அவள் அருள் பெறுவோமாக!

Source:
Hindukkalin Prasad
 
மழைநீர் சேகரிப்பின் மகத்துவம்

மழைநீர் சேகரிப்பின் மகத்துவம்




Tamil_News_large_1023503.jpg




நம் முன்னோர்களிடம் ஒரு வழக்கம் இருந்து வந்தது. அவர்கள் தினமும் குளத்தில் குளிக்கும் போதும் குளித்து முடித்த பின்னும், ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து கரைக்கு வெளியே போட்டு விடுவார்கள். இப்படி செய்வது, குளத்தினை தினமும் தூர்வாருவதற்கு சமம்.

குளிக்கும் ஒவ்வொருவரும் தினமும் ஒரு கைப்பிடி மண்ணை அள்ளி வெளியேற்றும் போது, குளம் எப்போதும் ஆழமாகவே இருக்கும். நீர் எப்போதும் நிறைந்திருக்கும். அந்தளவிற்கு அப்போது பொறுப்பான சமூகம் இருந்தது. அதேபோல் ஆற்றிலோ, குளத்திலோ சிறுநீர் கழிப்பதோ, மலம் கழிப்பதோ, மலம் கழித்து விட்டு சுத்தம் செய்வது போன்ற செயல்களையும் செய்ய மாட்டார்கள். அது குடிநீர், குளிக்கும் நீர் என்பது எல்லோருக்கும் தெரியும். நீர் நிலைகளை தெய்வமாக மதித்து அருகில் கோயில் கட்டினார்கள்.

'மரங்களுக்கு சந்தனம் பூசி, ஆடை கட்டி அதனை வழிபட்டு, அது தெய்வம், வெட்டாதே,' என அறிவுறுத்தினார்கள். எல்லாவற்றையும் நாம் தவறாக புரிந்து கொண்டோம். இன்று ஆறுகள், குளங்கள் எல்லாமே கழிவுகளின் சங்கமம் ஆகி விட்டன. பிளாஸ்டிக் குப்பை அடைத்து பூமித்தாய் பிளாஸ்டிக் போர்வையால் போர்த்தப்பட்டு விட்டாள்.

ஒரு சொட்டு தண்ணீர் கூட பூமிக்குள் இறங்காதோ என்ற நிலைதான் இன்றைய சூழ்நிலை. ஆற்றிலோ, வாய்க்காலிலோ, குளத்திலோ தண்ணீர் தேங்க முடியாத அளவிற்கு நாம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி விட்டோம்.

இப்படி ஒரு பொறுப்பற்ற சமூகத்திலும், பொறுப்பான சிலர் வாழ்ந்து வழிகாட்டிக் கொண்டுதான் உள்ளனர்.

தேனி அருகே மதுராபுரியில் ஏ.சி.வி., மில்ஸ் நடத்தி வருபவர் சந்திரசேகர். இவர் 2004ம் ஆண்டே தனது மில்லில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கி விட்டார். இவரது மில்லின் பரப்பளவு இரண்டே முக்கால் ஏக்கர். இவ்வளவு நிலத்திலும் விழும் ஒரு சொட்டு நீர் கூட வீணாக வெளியேறாது. 9,200 சதுர மீட்டர் பரப்புள்ள இந்த மில்லில், கட்டடம் மட்டும் 5,200 சதுர மீட்டர். அதேபோல் மற்றொரு இடத்திலும் மில் வைத்துள்ளார். இதன் பரப்பளவு 40 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ளது. எல்லா இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைத்துள்ளார். கட்டடத்தின் மேல்தளத்தில் விழும் மழைநீர் வெளியேற மேலேயே கான்கிரீட் வடிகால் அமைத்துள்ளார்.


இந்த கான்கிரீட் வடிகாலில் இருந்து வரும் நீர் கான்கிரீட் வாய்க்கால் வழியாகவே செல்கிறது. தரைதளம் முழுவதும் பேவர் பிளாக் அமைத்து, இதில் விழும் மழைநீரும், கான்கிரீட் வாய்க்கால் வழியாகவே சென்று மிகப்பெரிய கிணற்றில் விழுவது போல் அமைத்துள்ளார். இந்த கிணறு மட்டும் 25 லட்சம் லிட்டருக்கும் மேல் கொள்ளவு கொண்டது. ஆண்டுக்கு இவரது மில்லில் மட்டும் சராசரியாக 2 கோடி லிட்டர் தண்ணீர் சேகரிக்க முடியும். அந்த அளவிற்கு மழைநீர் சேகரிப்பை வலுவாக அமைத்துள்ளார். இவரது மில்லில் 200 பேர் வேலை பார்க்கின்றனர். தினமும் இவர்களது தேவை மட்டும் 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர். இந்த கணக்குப்படி இவர் ஒவ்வொரு ஆண்டும் சேகரிக்கும் மழைநீர், இரண்டு ஆண்டிற்கும் மேல் போதுமானதாக உள்ளது. மழைநீர் சேகரிப்பு அமைத்தது முதல் தற்போது வரை, மில்லில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதே இல்லை. இதனால் மில்லிலேயே பால்பண்ணை அமைத்துள்ளார். சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகிறார்.

Please read more from here:

| ??????? ??????????? ????????? ?????? ???? ?????? ??????: 2 ???? ??????? ??????? ????????? Dinamalar
 
அஹம் பிரம்மாஸ்மி (நான் பிரம்மமாக இருக்கி

அஹம் பிரம்மாஸ்மி (நான் பிரம்மமாக இருக்கிறேன்);

அஹம் பிரம்மாஸ்மி (நான் பிரம்மமாக இருக்கிறேன்); சிவோஹம் &- நானே சிவன்; பிரம்ம ஏவஅஹம் -& நான் பிரம்மனே என்பதே அத்வைதம். அவ்வாறு அறிந்து, உணர்ந்திட ஞானம், சுய அறிவு தேவை. அதல்லாது ஜீவன் வேறு, பரமன் வேறு, ஜீவன் பரமனை உருவத்தில் ஆழ்ந்து வழிபட அந்த உருவம் முக்தி எய்திட ஏதுவாகும் என்பதும் ஒரு கொள்கை. ஆகவே, உருவத்தில் பிரம்மத்தை வழிபட, ஆறு சமயங்கள் வகுத்தார். அவை:

கணபதி வழிபாடு - காணாபத்யம்
சிவ வழிபாடு – சைவம்
விஷ்ணு வழிபாடு – வைணவம்
சூரிய வழிபாடு – சௌரம்
சக்தி வழிபாடு- சாக்தம்
முருக வழிபாடு – கௌமாரம்

எந்த உருவத்தைச் சிரத்தையுடன் ஆழ்ந்து வழிபட்டாலும் முக்தி எய்திடலாம் என்பதே அவரது ஷண்மதத் தத்துவம். உருவத்தில் வேறுபாடு, வெறுப்புக் கூடாது. ஈடுபாடு சமத்துவம் வேண்டும். ஓர் உருவத்தை வழிபடுபவன், மற்ற உருவத்தை வெறுக்கக் கூடாது. பழிக்கக் கூடாது. வீர வைணவர்கள் அதிகமாக விஷ்ணுவைத்தான் வணங்குவார்கள்.

சிவனை வணங்க மாட்டார்கள். ஆனால், வெறுக்கவோ, பழிக்கவோ கூடாது. அதே மாதிரி வீர சைவர்கள் சிவனைத்தான் வணங்குவார்கள். விஷ்ணுவை வெறுக்க, பழிக்கக் கூடாது. சமரச பாவம் தேவை.
ஷண்மத சம்மதம் என்ற பரந்த நோக்கு அருணகிரிநாதருக்கு. அவருக்குக் குருநாதன், இஷ்ட தெய்வம் முருகன்தான். கணபதியைப் பாடி, முருகன் சகோதரனே என்பார். சிவலீலைகளைப் பாடி, சிவன் மைந்த முருகா என்பார். மகாவிஷ்ணுவின் பல லீலைகளைப் பாடி, திருமால் மருகனே என்று முருகனில் முடிப்பார். சூரிய, நவகிரகங்களையும் இணைத்துப் பாடுவார். பராசக்தியைப் பலப்பலவாகப் பாடி, சக்தி மைந்தனே என்று முருகனை நினைப்பார்.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு சமரச ஆன்மீகர். சிறு வயதிலேயே சிவராத்திரியன்று நடிக்கச் சொல்ல, சிவமயமாகினார்.பேலூர் கோவிலில் ராதாகிருஷ்ணரைப் பூசை செய்யத்தான் சென்றார். பஞ்சவடியில் இரவு தியானம் செய்ய, ராதை தோன்றி அவருள் மறைந்தாள். அவரது இயற்பெயர் கதாதரன். மாதுர்பாபுவுக்கு ஒரு சமயம் ராமராகவும், திரும்ப சந்தேகித்துப் பார்த்த போது கிருஷ்ணராகவும் தரிசனம் தந்தாராம். ஆகவே அவர் பெயர் ராமகிருஷ்ணர் ஆயிற்று.


சாக்த மந்திர, தந்திர வழிகளில் உபாசனை செய்ய பிராம்மணி தேவி வந்தாள். அத்வைத சாதனைக்கு தோமபுரி வந்தாள். . காளிகோவில் பூசாரியானபோது காளி தரிசனம் வேண்ட, கிடைக்காதபோது அவளுடைய கத்தியையே எடுத்துத் தன்னை மாய்த்துக் கொள்ள முனைந்தபோது காளி தரிசனம் தந்தாள். காளி விக்கிரகத்தை உயிருடையதாக உணர்ந்தார். அத்தகைய ஆழ்ந்த பக்தி தேவை. அம்பிகையின் அருளை உணர, ஒன்றும் படிக்காத அவர் பேசியது வேத, உபநிடதத் தத்துவமாகியதே!


ஒன்றும் அறியாத பேதை இடையன் அரசவைக் கவிஞனாக எவ்வாறு மாறினான்? உஜ்ஜயினி காளியின் அருளால்தானே! அவன் பெயரே காளிதாசன் என்றாகிப் பல கவிகள் புனைந்தானே! அன்னை அருளுக்கு அளவுண்டோ, தகுதியுண்டோ?

காமாட்சி கோவிலில் தொழில் செய்பவன். ஊமை. அவனது இயற்பெயர் கூட இன்னும் தெரியாது. காமாட்சி மீது அன்புடன் இட்ட பணியைச் செய்பவன். ஒரு நாள் ஒரு சுமங்கலியாய்க் காமாட்சி வந்தாள். வாயைத்திற என்றாள். தன் வாயிலிருந்த தாம்பூலத்தை உமிழ்ந்து, சாப்பிடு என்றாள். சாப்பிட்டான். துதி பாடத் தொடங்கினான். மூக பஞ்சசதி என்று காமாட்சி மீது 500 துதிகள் வடமொழியில். சௌந்தர்ய லஹரி போல் மிளிரும். இன்றும் அதனைக் காமாட்சி கோவிலில் சலவைக் கல்லில் எழுதி வைத்துள்ளனர்.


திருக்கடவூர் மார்க்கண்டனுக்கு என்றும் 16 வயது என்று அருள் செய்த சிவத்தலம். ஆகவேதான் இன்றும் 60, 70, 75, 80 வயது நிறைந்தபின் தம்பதிகள் அங்கு பூசை, ஹோமம் செய்து நலம் பெறுகின்றனர். அங்குள்ள தேவியின் பெயர் அபிராமி. சுப்ரமணியன் என்பவர் ஓர் உன்னத அபிராமி பக்தர். அம்பாளுடன் பேசுவது போல் அவரது செயல் இருக்கும். அவரது செயல்களைப் பிடிக்காத சிலர், அந்த ஊரையாண்ட சரபோஜி அரசரிடம் புகார் செய்தனர்.

அரசர், கோவிலுக்கு வந்து அவர் அன்னையைப் பார்த்து இருந்த போது, இன்று என்ன திதி? என்றார். அன்னையிடம் மனம் பறிகொடுத்த அவர், இன்று பௌர்ணமி, அம்பாள் ஜொலிக்கிறாள் என்றார்.
உண்மையில் அன்று அமாவாசை. திடுக்கிட்ட அரசர் இன்று இரவு பூரண சந்திரன் தெரியுமா? என்று கேட்க, அவரோ சந்தேகமேன்? என்றார். சிறிது நேரம் கழித்து அவருக்குச் சுயநினைவு வர, அவரது நண்பர்கள் அரசனுடன் நடந்த பேச்சைக் கூறினர். அவர் நான் அம்பிகையின் பூரணப் பொலிவில் இருந்தேன். அப்படிச் சொல்ல வைத்தது அன்னையே. ஆக, பொறுப்பு அவளுக்கே என்றார். அரசரும் மற்றவர்களும் மாலையில் கூடினர். அவரோ, அம்பிகையின் மீது முழு நம்பிக்கை வைத்து அபிராமி அந்தாதி என்ற துதிகளைப் பாடத் தொடங்கினார்.

“தனம்தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும் நல்லன எல்லாம்தரும் அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!”

என்ற 69 ஆவது பாடலைப் பாடியதும் அம்பிகை தோன்றி அவருக்குத் தரிசனம் தந்தாள். தன் காதுத் தோடை எடுத்து ஆகாயத்தில் வீச, சந்திரன் பிரகாசித்தான். அமாவாசையன்று முழு நிலவு என்று வியந்து அபிராமி பட்டரின் பக்தியைப் போற்றினர். அரசரும் வணங்கி வாழ்த்தினார். அம்பிகை தரிசனம் கண்ட அபிராமி பட்டர் பாடினார் :

“கண்களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்
பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்ககுலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே!”

(70) அந்தாதியை 100 ஆகவும் பூர்த்தி செய்தார். அது அம்பிகை பக்தர்களுக்குப் பலன் அருளும் துதிகள்.
நவராத்திரி என்பது ஏன் விசேடம்? சக்தியில்லையேல் சிவனே என்று கிட என்போம். சக்தியல்லாத சிவன் சவம் என்பர். சிவனுக்கு அர்த்தநாரீஸ்வரியாக சக்தி அளிப்பவள் தேவி. ஸ்ரீமத் பாகவதம் மகாவிஷ்ணு அவதார மகிமை, கிருஷ்ண லீலைகளைக் கூறுமாயின், ஸ்ரீதேவி பாகவதம் பராசக்தியின் பல அவதார லீலைகளைக் கூறும். சாக்தர்கள் உகந்து வாசிப்பர்.

அதனுடன் நவாவரண பூசை, லலிதா சகஸ்ரநாமம், லலிதா திரிசதி, லலிதா அஷ்டோத்தரம், சௌந்தர்ய லகரி, முத்துசாமி தீட்சிதரின் நவாவரண கீதங்கள் பாடி நெகிழ்வர். புரட்டாசி மாத நவராத்திரிக்கு ஆஸ்வின, சாரதா நவராத்திரி என்று பெயர். அது யாவரும் கொண்டாடுவது. ஸ்ரீவித்யா உபாசகர்கள் மற்றும் நவராத்திரிகளில் தேவியைப் பூசிப்பர்.

சித்திரை / (பங்குனி)- & லலிதா- & வசந்த நவராத்திரி (ராமநவமி சமயம்)
ஆடி- வாராகி நவராத்திரி- வாராகி லலிதாவின் சேனாதிபதி
புரட்டாசி- சாரதா நவராத்திரி- துர்கா நவராத்திரி
மாசி- சியாமளா நவராத்திரி- & சியாமளா- லலிதாவின் மந்திரி.

சிவபக்த சூரத்மாதியரை வதைக்க சிவ மறு உருவக் கந்தன் தோன்றினான். சிவபக்த ராவணனை அழிக்க மகாவிஷ்ணு மனித உருவ ராமர் தோன்றினார். பிரம்மபக்த இரண்யகசிபுவை அழிக்க மகாவிஷ்ணு வினோத நரசிங்கமானார். மகிஷியை அழிக்க வினோத ஹரிஹரபுத்திரன் அவதாரம்.

அதுபோல் மகிசாசுரனை அழிக்க சிவ, பிரம்ம, விஷ்ணுவால் முடியாத வரம். ஆக அவர்கள் சக்தி, துர்கா, லட்சுமி, சரஸ்வதியாக இச்சா, கிரியா, ஞான சக்தியாக பராசக்தி தோன்றி அழித்தாள்.



Source: Hinddukalin Prasad
 
பீஷ்மர், தருமருக்குச் சொன்ன அறிவுரை

பீஷ்மர், தருமருக்குச் சொன்ன அறிவுரை – ஒரு மன்னன், கடை பிடிக்க வேண்டிய ’36 குணங்கள்’ தருமர்: ‘இம்மையிலும்.. மறுமையிலும் அரசனு க்கு நன்மை தரக் கூடிய குணங்கள் யாவை?’
பீஷ்மர்: ‘ஒரு மன்னன் 36 குணங்களைக் கடை பிடிக்க வேண்டும். அவை பி்ன்வருமாறு


images



1) விருப்பு, வெறுப்பு இன்றித் தர்மங்களைச் செய்தல்
2) பரலோகத்தில்
விருப்புடன் நட்புப் பாராட்டுதல்
3)அறவழியில் பொருளை ஈட்டுதல்
4)அறம் பொருள்கட்கு அழிவின்றி இன்பத்தைப் பெறுதல்
5)யாருடனும் அன்புடன் பேசுதல்


6)நல்லவர் அல்லாதார்க்குத் தராத கொடையாளியாக இருத்தல்
7)தற்புகழ்ச்சியின்றி இருத்தல்

8)கருணையுடன் இருத்தல்

9)கெட்டவர்களுடன் சேராது நல்லவர்களுடன் சேர்ந்திருத்தல்
10)பகைவன் எனத் தீர்மானித்துப் போரிடல்


11)நற்குணம் அற்றவரிடம் தூதர்களைச் சேராதிருத்தல்
12)பிறர்க்குத் துன்பம் தராது பணிபுரிதல்

13)சான்றோரிடம் பயனை அறிவித்தல்

14)பிறரது குணங்களை மட்டுமே கூறுதல்
15)துறவியர் அல்லாதாரிடம் கப்பம் வாங்குதல்


16)தக்காரைச் சார்ந்திருத்தல்
17)நன்கு ஆராயாமல் தண்டனை தராதிருத்தல்

18)ரகசியத்தை வெளியிடாதிருத்தல்

19)உலோபிகள் அல்லாதார்க்குக் கொடுத்தல்

20)தீங்கு செய்பவரை நம்பாதிருத்தல்


21)அருவருப்படையாமல் மனைவியைக் காத்தல்
22)தூய்மையுடன் இருத்தல்

23)பல பெண்களுடன் சேராதிருத்தல்

24)நலம் பயக்கும் சுவைகளை உண்ணுதல்
25)வழிபடத் தக்கவர்களைக் கர்வம் இன்றி வழிபடல்


26)வஞ்சனையின்றிப் பெரியோர்க்குப் பணிவிடை செய்தல்
27)ஆடம்பரமின்றித் தெய்வ பூஜை செய்தல்
28)பழிக்கு இடமில்லாப் பொருளை விரும்புதல்

29)பணிவுடன் பணிபுரிதல்
30)காலம் அறிந்து செயல்படுவதில் வல்லவனாய் இருத்தல்


31)பயனுள்ளவற்றையே பேசுதல்
32)தடை சொல்லாது உதவி புரிதல்
33)குற்றத்திற்கேற்பத் தண்டித்தல்
34)பகைவரைக் கொன்றபின் வருந்தாதிருத்தல்

35)காரணமின்றிச் சினம் கொள்ளாதிருத்தல்

36)தீங்கு செய்தவரிடம் மென்மையாக இராமை




Source:24 | July | 2014 | ?? ?? 2 ?? ?? ?? ? ??-(?-?)- V i d h a i 2 V i r u t c h a m (A-B)
 
ஆடி அமாவாசை;
----------------------------
ஆஞ்சநேயர் மார்கழி மாதம்,அமாவாசை அன்று மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தார்.அதனால் அமாவாசை திதி அனுமனுக்கும் மிகுந்த ஏற்ற திதியாகும்.அதனால்தான் அமாவாசை அன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.


ஆடி அமாவாசை,தை அமாவாசை அல்லது அமாவாசை அன்று மாலை ஸ்ரீஆஞ்சநேயரை வழிபட்டால்,தைரியமும்,தன்னம்பிக்கையும், .மிகுந்த மனவலிமையையும் கிடைக்கும் இல்லத்தில் தரித்திரம் விலகி செல்வம் பொங்கும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
நாராயண பட்டத்ரி

நாராயண பட்டத்ரி



நாராயண பட்டத்ரி குருவாயூரில் எழுந்தருளியிருக்கும் குருவாயூரப்பனைப் பார்த்து, ஹே குருவாயூரப்பா, பிராட்டி கண்களை உருட்டி உன்னை மட்டுமா பார்க்கிறாள்? உன்னுடைய கல்யாண குணங்களைக் கேட்பவர்கள் மற்றும் ரசிப்பவர்களின் இல்லங்களில் அவள் நிரந்தரமாக குடிகொள்கிறாள் என்றார் மகாலக்ஷ்மியின் மகிமை என்ற தமது சொற்பொழிவில் நாவல்பாக்கம் நரசிம்ஹன் ஸ்வாமி.



ஒரு முனிவர் காட்டில் கடுமையான தவம் புரிந்து கொண்டிருந்தார். ஹே முனிவரே. உன்னோடு நான் சில காலம் வாசம் செய்கிறேன். அப்பொழுது உனக்கு ராஜ மரியாதை கிடைக்கும் என்றாள் மகாலட்சுமி.
நானோ ஒரு சன்யாசி. எனக்கு எதற்கு ராஜ மரியாதை எல்லாம்? எனக்கு அது தேவையே இல்லையே என்றார் அந்த முனிவர். நீ வேண்டாம் என்று சொன்னாலும் உன்னோடு சிலகாலம் நான் வாசம் செய்யத்தான் போகிறேன் என்றாள் தாயார்.


தாயார் சென்ற பிறகு, முனிவர் நடந்து போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒருமூட்டையைப் பார்த்தார். அதைக் கண்டுகொள்ளாமல் விட்டவர், சரி; நம்மோடு லக்ஷ்மி வாசம் செய்கிறேன் என்று சொன்னாளே, அதை நாம் பரீட்சை செய்து பார்ப்போம் என்று எண்ணிக்கொண்டு, அந்த ஊர் அரசரிடம் சென்றார். நேராகச் சென்று அரசரின் கிரீடத்தை எட்டி உதைத்தார். ராஜாவின் கிரீடத்தை எட்டி உதைத்திருக்கிறோம்.

இப்பொழுதும் நமக்கு ராஜ மரியாதை கிடைக்கிறதா என்று பார்ப்போம் என்று நினைத்த முனிவருக்கு, நிஜமாகவே ராஜ மரியாதைதான் கிடைத்தது. ஆம்! கிரீடத்திலிருந்து ஒரு பாம்பு சீறிக்கொண்டு வெளியே வந்தது. ராஜா உள்ளம் மகிழ்ந்து, முக்காலமும் உணர்ந்த முனிவரே, என் உயிரைக் காப்பாற்றி விட்டீர் என அம்முனிவரைக் கொண்டாடி அவருக்கு ராஜமரியாதை அளித்தார். இதைப் போலவே இன்னொரு சந்தர்ப்பத்திலும் முனிவர் ஏதோ செய்ய, அதுவும் அவருக்கு சாதகமாகவே ஆனது.


ஒரு நாள் மகாலட்சுமி முனிவரின் கனவில் தோன்றி, முனிவரே! இன்றுடன் உங்களை விட்டு பிரியப் போகிறேன் என்று கூறி மறைந்தாள். அடுத்த நாள் முனிவர் ராஜாவுக்குக் கொடுத்த ஒரு பழம், ஒரு நாகம் தீண்டிய பழமாக மாற, அன்றோடு ராஜ மரியாதை என்பது மறைந்து அவர் மீண்டும் காட்டுக்கே திரும்பிவிட்டார். லட்சுமி கடாட்சம் என்பது ஒவ்வொருவரது வாழ்கையிலும் அவ்வளவு முக்கியமான ஒன்று. அது இருந்துவிட்டால், எல்லாம் கிடைத்துவிடும்.

ஆதிசங்கரரின் சரிதத்திலேயே இப்படி ஒரு விஷயம் உண்டு. அவர் சிறு பிள்ளையாக- இளம் பிராயத்தினராக இருந்தபோது, ஒரு வீட்டின் வாசலில் நின்று பவதி பிட்சாந்தேஹி என்று பிட்சை கேட்கிறார்.



அன்று துவாதசி. அந்த ஏழைக் குடும்பத்தில் இருந்த பெண்மணிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தம் கணவர் துவாதசி பாரணம் செய்வதற்காக வைத்திருந்த ஓரே ஒரு நெல்லிக்காய் மட்டும்தான் அவள் இல்லத்தில் அப்பொழுது இருந்தது. வந்திருக்கும் பாலகனுக்கு அதையாவது கொடுப்போம் என்று நினைத்தவள், நெல்லிக்காயை ஆதிசங்கரருக்கு அளிக்க, அவளது குடும்ப நிலைமை சங்கரருக்குப் புரிந்து விட்டது. உடனே மகாலட்சுமியை நோக்கி மனதால் தவம் புரிகிறார். கணவனும், மனைவியும் மிகவும் பாவம் செய்திருக்கிறார்கள். அதனால்தான் இந்த ஏழ்மையை அனுபவிக்கிறார்கள் என்று அசரீரி கேட்டது. ஆனாலும் ஆதிசங்கரர் மகாலட்சுமியிடம் மனம் இரங்கி அக்குடும்பத்துக்கு அருள்பாலிக்குமாறு ஸ்தோத்ரம் செய்ய, அங்கே தங்க நெல்லிக்காய்களே மழையாய் பொழிந்தது. அந்த ஸ்லோகம்தான் கனகதாரா ஸ்தோத்ரம். இதேபோல்தான் ஸ்வாமி தேசிகன் விஷயமும். காஞ்சிபுரத்தில், ஒரு ஏழை பிரம்மச்சாரிக்கு திருமணம் என்பது கைகூடவில்லை. காரணம், அவர் ஏழை. எப்படி அவரால் பெண்ணை வைத்து காப்பாற்ற முடியும்? அந்தச் சூழலில் அவருக்காக ஸ்ரீஸ்துதி என்கிற ஸ்தோத்திரத்தை அருளினார் ஸ்வாமி தேசிகன். அதையடுத்து பொன்மழை பொழிந்தாள் என்பது ஸ்வாமிதேசிகன் வரலாறு.



ஸ்ரீவித்யாரண்யர் சரிதத்திலும் இதுபோன்ற சம்பவம் உண்டு. வாழ்கையில் நிம்மதி, சந்தோஷம், நல்லகுணம், நல்ல மக்கள், உறவுகளோடு நல்ல இணக்கமான சூழல் என அனைத்தையும் அருளக்கூடியவள் மகாலட்சுமியே. அவளைப் போற்றி அவள் பாதத்தில் நம் சிந்தையைச் செலுத்தி நாமும் வாழ்கையில் எல்லா வளமும் பெறுவோமாக!




Source: Hinndukkalin Prasad
 
மகாலட்சுமி வாசம்

மகாலட்சுமி வாசம்


மகாலட்சுமி நான் வசிக்கும் இடங்களையும், வசிக்காத இடங்களையும் பற்றி ருக்மணியிடம் விபரமாக சொன்னதாக உள்ளது. அந்த விபரத்தை நாமும் தெரிந்து கொள்வோமா?


லட்சுமி தேவி கூறுகிறாள்: அழகும், தைரியமும், வேலைத் திறமையுள்ளவனும், வேலை செய்து கொண்டிருப்பவனும், கோபமில்லாதவனும், தெய்வ பக்தியுள்ளவனும், நன்றி மறவாதவனும், புலன்களை அடக்கியவனும் போன்ற சத்வ குணமுள்ளவர்களிடம் நான் எப்போதும் வசிக்கிறேன்.

மனதில் பயனைக் கருதாமல் தர்மத்தை அனுஷ்டிப்பவனிடமும் தர்மம் தெரிந்து, அதன்படி நடப்பவர்களிடமும், காலத்தை வீணாக்காதவர்களிடமும், தியானம் செய்வதையும், தத்துவ ஞானத்தை விரும்புபவர்களிடமும், பசுக்கள், வயோதிகர்களிடம், அன்பும், ஆதரவுமாக உள்ளவர்களிடமும் நான் வசிக்கிறேன்.

பக்தியுள்ளவர்கள் வீடுகளிலும், வீட்டையும், வீட்டிலுள்ள பாத்திரங்களையும் சுத்தமாக வைத்து, தானியங்களை சிதறாமல் வைத்துக் கொள்ளும் வீடுகளில் நான் வசிக்கிறேன்.

அடக்கமும், பொறுமையும், கடமை உணர்வும், பெரியோருக்கு பணிவிடை செய்தும், தர்மத்தின் சிரத்தையும் உள்ள பெண்களிடம் நான் வசிக்கிறேன். பண்டங்களைக் காப்பாற்றாமல் வீணடிப்பவர்களும், கோபமுள்ளவர்களும், தேவதைகள், பெரியோர் இவர்களை பூஜிக்காமலும், மரியாதை செய்யாமலும் உள்ள பெண்களிடம் நான் வசிப்பதில்லை. கணவனுக்கு எதிராகவோ, விரோதமாகவோ இருக்கும் பெண்களிடம் நான் வசிப்பதில்லை.

சதா அழுகையும், துக்கமும், தூக்கமும் உள்ள பெண்களிடமும் நான் வசிப்பதில்லை. எப்போதும் படுத்திருப்பவளும், வாசற்படியில் தலை வைத்து தூங்குகிற வீடுகளிலும், நடக்கும்போது தொம், தொம்மென்று அவல் இடிக்கிற மாதிரி ஓசை வரும்படி பெண்கள் நடக்கும் வீடுகளிலும் நான் வசிப்பதில்லை.


வாகனங்களிடத்தும், ஆபரணங்களிடத்தும், மேகங்களிடத்தும், தாமரை, அதன் கொடிகளிடத்தும், அரசர்களின் சிம்மாசனத்திலும், அன்னங்களும் அன்றில் கூடுதலினுள்ள தடாகங்களிலும், சித்தர்கள், சாதுக்களால் அடையப்பட்ட ஜலம் நிரம்பிய, சிம்மம், யானைகளால் கலக்கப்பட்ட நதிகளில் நான் வசிக்கிறேன்.
யானை, சிறந்த ரிஷபம், அரசன், சாதுக்கள் இவர்களிடம் வசிக்கிறேன்.

தினமும் காலத்தில் , தேவதா பூஜை, அதிதி பூஜை வேதாத்யானம் செய்யப்படும் வீடுகளில் நான் வசிக்கிறேன். நீதி தவறாத சத்ரியர், விவசாயத்தில் கருத்துள்ளவர்கள் ஆகியோரிடமும் வசிக்கிறேன். ஸ்ரீமத் நாராயணனிடத்தில் முழு அன்பு செலுத்துபவர்களுடன் நான் வசிக்கிறேன்.

என்னிடத்தில், எவர் பக்தியுடன் இருக்கிறாரோ, அவர் புண்ணியம், பொருள், இன்பம் எல்லாவற்றையும் பெறுகிறார் என்று சொல்லி முடித்தாள்.

இதையெல்லாம் கவனமாக படித்துப் பார்த்து, லட்சுமி தேவியின் அருள் பெறவும், நம் வீடுகளில் அவள் வாசம் செய்யவும் முயற்சிக்கலாமே! வெறும் போர்டு போட்டு விட்டால், அவள் வந்து விடுவாளா?



Source: Hinndukkalin Prasad
 
கீதாச்சாரம்

கீதாச்சாரம்

10547470_488858797915295_7762155352310252647_n.jpg




எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?

எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது

மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.

இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.

- பகவான் கிருஷ்ணர்

Chapter one introduces the scene, the setting, the circumstances and the characters involved determining the reasons for the Bhagavad-Gita's revelation. The scene is the sacred plain of Kuruksetra.

The setting is a battlefield. The circumstances is war. The main characters are the Supreme Lord Krishna and Prince Arjuna, witnessed by four million soldiers led by their respective military commanders. After naming the principal warriors on both sides, Arjunas growing dejection is described due to the fear of losing friends and relatives in the course of the impending war and the subsequent sins attached to such actions.




Source: Narayanan Dharmaraj
 
Who were ganesh, kartikeya, ayyappa, hanuma ?

WHO WERE GANESH, KARTIKEYA, AYYAPPA, HANUMA ? DO THEY ARE ALL OUR RELATIONS, COMMING FROM ONE `MOTHER` OF `ONE LOVE` ?


" In creation only Mother as an administator in nature with a co-ordination of one `Father` or `Super-power`, she created many roles and her own incarnations like Ganesh, Kartikeya, Ayyappa, Hanuman as our relations to learn knowledge from them.If we start from Ganesh, we should learn attainment of liberation and oneness of possitive thoughtful `mind` to reach Mother`s `Chith`Akasam` in a practice of one Mother & one Father to this creation as pillars with love of essence as real knowledge to attainment of a `bliss`. If we take Kartikeya incarnation the 6` energy points of moving wheels (chakras) were mingled to one attachment; that is one power and willing of mother`s love and one Father`s knowledge in to a creativity to save the nature. Kartikeya explained a lesson that the only power or energy is not sufficient in action, but there should be a love in a mindful thoght for an action.

If we take Ayyappa incarnation of two positives of males `Hari-Hara` with two (+) positives in creation of variation in nature (although they were males in roles,they were also females, because there is only `Male` of this creation) to show the only Mother`s love of essence is an all times to nature in a journey of 18` steps of inner-heart`s change is a reality, one human`s inner spiritual journey and outer relationships with society in a purity of Mother`s love only. Then only our Mother, allows us to show her `one beacon flash-light` in a darkness of our human life for a wayout in our ultimate liberation! Ayyappa also shown that even a lion or tiger will also be changed from it`s beast character in to smooth character in a practice and by attachment with him only!

Lostly in the incarnation of `Hanuma` came from `AIR` an element of power generated from Mother`s 6` elements of power to occupy the entire universe from an atom to universal (`anuraniyan` to `mahimahayan` meaning) is great Hanuma; as a living respirstion to human all times, when ever we chant `Rama`, he will be present with a bliss! He helped the Father in attaching Mother`s love in an activity according to Ramayan; it`s an exposer of his greatness of strength to get from one Father of this nature and Mother in many ways.

Hanuman used that Super-power as an obedient slave of one `Father`, if action demands him accidentally, he will use the father`s blessings as `Superpower! Hanuma knows and acknowledge the power of `RAMA`, there is a creative word of this creativity by one Super-power is `RA` and `MA` is a `love of Mother` of nature in cobined action in creativity. It is the word started from `RA`-`MA` and ends with mother as `MA`. So Hanuma is an itelligent incarnation of an obedience and surrender-ness of this creator`s of two forces as one Father ( positive `+` as phase ) and one Mother (negitive as an `-` earth). Hanuma is telling that obedient follower of Rama but in a fact his lord is a obedient follower of Hanuma; because whenever Hanuma called Ram-namam, Rama should respond to Hanuma for all time, even if Seeta Mata is with him.

IF WE WANT TO BE ONE UNIVERSAL-LOVE OF ONENESS OF `DIVINE`, WE SHOULD ADOPT SURREDER-NESS TO AN UN-IDENTIFY `SUPER-POWER` WITH SERVICE TO NATURE IN A LOVE OF ONE MOTHER.




Source:Sage of Kanchi

Vallampatti Swarup Saroja
 
Are you superstitious?

ARE YOU SUPERSTITIOUS?


10485381_10152963142369027_585491342920216866_n.jpg





My friend in the West recently saw a photograph related to my daughter's engagement ceremony and told me: "It is very funny to see a person like you perform ancient tribal rituals...Your religion is plagued by enormous superstitions, wrong customs, bad and ugly rituals, ceremonial impurity and immoral traditions...It is high time that your religion is modernized and move according to time like the Semitic religions in the West...”.

"I have two questions (1) Can you show me a single superstition in the original Sanatan dharma scriptures? (2) Can you show me a single scientific truth in any of your religions? “I asked.

He sent me a smiley of "lol" and rolls out and laughs!

"Seriously," I said, "I want to learn...As far as I know there is not even single superstition in any of our scriptures like Vedas, Upanishads, Dharma śāstra, Shrauta Sutra, Brahma Sutra, 40 Gitas (including Bhagavad Gita), Yoga Vasistha etc..."

"Oh, come on, everybody knows India is a land of superstitions and foolish beliefs...And how will people know about your scriptures? Non-Brahmins were not even allowed to learn Vedas, right?"

"You are a non-Hindu: even you can learn Vedas. Vedas are freely available for download on the Net. The scriptures said, “Brahmajnanana Eva Brahmana" means only if you learn Vedas you will become Brahmin. It is been mis-interpreted as "Only Brahmin should learn Veda"...Please don't go by postings on the Net or talk by fanatics from other religions or leftists. Seek truth and read it for yourself..."

"Really? You mean to say all your customs, rituals and beliefs are truth?"
"I didn't say that...There are Anacharas (irreverent, obsolete, outdated rituals, not useful in this century, but it might have been useful in olden times) and Duracharas (negative rituals like black magic, killing animals etc) that crept in Sanatan Dharma at a later stage...A person with common sense can remove those rituals and focus only on Sadhacharas..."

"What do you mean by Sadhacharas...?”

"Sanatan Dharma advocates rituals, customs traditions and belief that have any of or all of eight benefits..."

"8 benefits?"

"Yes, all out rituals are either or any or all these results: Psychological effect, physiological affect, physical benefits, spiritual family bondage, social bondage and national integration, environmental protection, sustainable healthy living....But all rituals that you people follow is ONLY to get link with god or to reserve a seat in the heaven nearer to god."I said.

"Let's don't compare..."he got angry, then he said: "I am curious to know, your acharas are not to link up with god or heaven?"

"Nowhere it is said that you will reach god if you follow acharas...It says, you will live like you are in heaven...Dharma sastra tells that acharas are for a long happy and healthy life and for sustainable and permanent positive results. By practicing those rituals you become happy, prosperous and wealthy (not in material terms). Those acharas will take you from darkness to light. It develops a sattvik character in you. It also says that you should eradicate anacharas and duracharas by logical, scientific and rational analysis..."

"And, what are those good acharas?"

"Have you heard about Pranayama (breathing exercise), Yogasana (or Yoga), Surya Namaskar (Salutation to sun) etc..."

"I know...all have excellent proven benefits...I asked my children to follow those"
"But you have just said we follow superstitions and thousands of years of tribal rituals...."I laughed.

"There could be other bad rituals..."

"Yes, we have lighting lamps, chanting mantra, singing bhajans, reading Gita, satsang, seeking blessings from elders by touching their feet, offering sweets to everybody after offering it to the deity...Do you think these are superstitious bad things. You please try to attend a function to learn any of those eight-some benefits..."

"Interesting...What are other acharas?"

"Going for pilgrimage all over India - the followers of Sanatan Dharma consider the land of "Bharat" as mother. They were patriots (in non-violent terms) hence national integration was their major agenda...The invaders consider India just as a piece of commercial real estate...Our ancestors believed that rivers like Ganges are god - now environmental protectionists groups can better explain to you the logic behind my ancestors worshipping rivers, mountains and trees..."

"I know all those things...the people elsewhere think that these resources are meant for exploitation. I agree with you."

"Then we have festivals to concrete the social bondages - like Diwali, Vinayak Chathurthi, Holi, Onam, Dussera, Durgashtami, Navaratri etc..."

"But, what about those people doing poojas and homas..."

"Hmmm...Even those homas and rituals have strong foundations. Take for instance, Ganapathy homam...Here we burn coconuts...The fibrous part of the husk (coir) produces moderate sulfur oxides (Sulfur dioxide (SO2) and sulfur trioxide (SO3)), the coconut Shell, when burned produce phenol and when you burn coconut with ghee, it produces pyrazine (a heterocyclic aromatic organic compound)...Please ask any school students, they will teach you how these can prevent virus, bacteria and germs that create chloera , typhoid, teatnus, neumonia, chicken pox etc..It is Antimicrobial. Please talk to any scientists about havens (homa). They will explain those things better. I am not talking about its spiritual and psychological benefits"

"But your people propagate superstitions like astrology and horoscope matching..."

"Our teacher, Swami Vivekananda said: "Anything of western origin- verify it and then accept it. Anything of Indian origin- accept it and verify it if necessary." The signs of the Zodiac are of Babylonian origin. Astrology was originated in Egypt. Hora means hour and Horoscope examining time/hour or fate. Indian Astrology is a modification of Egyptian system. Astrology doesn't have Indian origin. The cosmic science Astronomy has Indian origin. Vivekananda further said: “Astrology and all these mystical things are generally signs of a weak mind; therefore as soon as they are becoming prominent in our minds, we should see a physician, take good food, and rest." Nutty people may blindly follow astrology..."

"Hmm...So all scriptures in Sanatan Dharma teach you for an inclusive, sustainable and eco-friendly way living..."

"I can't say "all" scriptures...take for instance, Bhavishya Purana, which is been manipulated by Vamana Shastri who was actually the brother in law of Akbar, the Moghal King. Sometimes names are misleading about their true religion. So, there could be false elements that added in some scriptures by die-hard fans of invaders, Chinese and Russian communist and British-Church..."

"Hmmm....you made your points. The Semitic concepts are not scientific. And the basic principles of Sanatan Dharma are truly scientific and far advanced...But what about ground reality? The man on the street is just superstitious and idiotic..."

"You have answer in that question. He/she who follows superstitious ritual is an idiot. Nobody can correct idiots. We can tell people to follow only Sadhacharas. If they don't listen to truth, what can we do? Can it be blamed on our Dharma or Shastra? We cannot kill or die for religion. Ours is an inclusive Dharma


Udayalal Pal

http://udaypai.in/
 
அனுமன் வழிப்பாட்டின் மகிமை !!

அனுமன் வழிப்பாட்டின் மகிமை !!

இளநீர் உடம்பின் வெப்பத்தை அகற்றி சக்தியைக் தரும் வல்லமையுடயது.

ஹனுமான் என்றும் சிரஞ்சீவி ஆதலால், அவருக்கு இளநீர் அபிஷேகமோ அல்லது நிவேதனமோ செய்வதால், பக்தர்களை அனுக்கிரஹித்து எவ்வித கஷ்டமும் இன்றி அதிக நாட்கள் இப்பூலகில் வாழ வரமளிப்பார்.

அனுமானுக்கு பால் அபிஷேகம் செய்தால் எடுத்த காரியங்கள் நிறைவேறும் நல்ல செய்திகள் கிடைக்கும்.

குளிர்ச்சியான தயிரை அனுமனுக்கு அபிஷேகம் செய்தால் அனுமன் மனம் குளிர்ந்து நமக்கு அருள் புரிவார்.

தயிரை அபிஷேகம் செய்தால் மக்கட்பேறு உண்டாகும்.

அனுமானுக்கு நல்லெண்ணை காப்பு சாற்றுவதன் மூலம் குளிர்ச்சி தரும், அவரும் மனம் குளிர்ந்து அருள்வார் என்பது நம்பிக்கை

எலுமிச்சம் பழம் ராஜகனி, புள்ளி இல்லாத எலுமிச்சம் பழமே சிறந்தது. எலுமிச்சம் பழத்தை அனுமானுக்கு மாலை சாற்றினால் திருஷ்டியினால் உண்டாகும் கோளாறுகள் விலகும்.

ஏவல், பில்லி, சூனியம் விலகும்.



Source: Hinndukkalin Prasad
 
காக பகவானின் தியாகம் அறிவீர் !

காக பகவானின் தியாகம் அறிவீர் !


சனீஸ்வர பகவானின் வாகனம் காகம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், காகம் எப்படி சனீஸ்வர மூர்த்திக்கு வாகனமாய் அமைந்தது என்பது நீங்கள் இதுவரை அறியாத இரகசியமாகும்.



ஒரு தெய்வ மூர்த்திக்கு வாகனங்கள் எப்படி அமைகின்றன? மனிதர்கள் தங்களுக்கு வேண்டிய சைக்கிள், கார் போன்ற வாகனங்களை பணம் கொடுத்து தாங்களாக வாங்கிக் கொள்கின்றனர். ஆனால், தெய்வ மூர்த்திகளைப் பொறுத்த வரையில் அவர்களுடைய வாகனங்கள் தாங்கள் குறித்த தேவதா மூர்த்திகளுக்கு வாகனமாய் அமைய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றன. அதற்கு உரித்தான பல்வேறு , தீர்த்த யாத்திரைகளை நிறைவேற்றிய பின்தான் இறைவன் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவர்கள் விரும்பும் தெய்வ மூர்த்திகளின் வாகனங்களாக நியமிக்கின்றான்.


இவ்வகையில் அமைந்தவைதான் மூஷிகம், மயில், காளை போன்ற வாகன மூர்த்திகள். இக்காரணம் பற்றியே வாகன மூர்த்திகளை வணங்கினால் அந்த வாகனங்களுக்கு உரித்தான தெய்வ மூர்த்திகளை வணங்கிய பலன்களை வணங்கும் அடியார்களுக்கு இறைவன் தந்தருள்கின்றான். நந்தி என்பது வாகனம் என்பதற்கான இறை வார்த்தை.


காளை மட்டும் அல்லாது எம்பெருமான் சிவனுக்கு அமைந்த வாகனங்கள் கோடி கோடி.. அவை அனைத்துமே இறைவனை வேண்டி அடியார்கள் பெற்ற வரங்களே வாகனங்களாக உருபெற்றன.


ஒரு முறை தென்காசி புனித பூமியில் வாழ்ந்து வந்த காகத்திற்கு தான் சனீஸ்வர பகவானின் வாகனமாக ஆக வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. சனீஸ்வர பகவானின் பொறுமையைக் கேள்வியுற்று அவர் மேல் அலாதி அன்பும் பக்தியும் காகத்திற்கு ஏற்பட்டதே அதற்குக் காரணம். தெய்வீக முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பது நிதானம்தானே. தானத்தில் சிறந்தது நிதானம் என்பதை அது உணர்ந்திருந்தது.


எப்படியாவது சனீஸ்வர பகவானின் வாகனமாக வேண்டும் என்ற விருப்பத்தால் அது பல திருத்தலங்களுக்கும் யாத்திரை சென்று அங்கு வரும் மகான்கள், யோகிகளைச் சந்தித்து தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தியது. அவர்களும் தக்க தருணத்தில் காகத்தின் விருப்பம் நிறைவேறும் என்று உறுதியளித்தனர். நம்பிக்கை தளராது காகமும் தன்னுடைய திருத்தல யாத்திரைகளை தொடர்ந்து நிறைவேற்றி வந்தது.


ஒருமுறை தென்காசி திருத்தலத்திற்கு ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷி தன்னுடைய பத்தினி நற்பவி தேவியுடன் எழுந்தருளி இருப்பதைக் கேள்வியுற்று அவர்களைத் தரிசனம் செய்து தன்னுடைய விருப்பத்தைக் கூறியது. நற்பவி தேவி காகத்திற்கு குங்குமத் திலகமிட்டு விரைவில் காகத்தின் விருப்பம் நிறைவேறும் என்று அருளினாள். காகம் மிகவும் சந்தோஷம் அடைந்தது. தினமும் நற்பவி, நற்பவி என்று மனதினுள் ஜபித்துக் கொண்டிருந்தது.


கலியுகத்திற்கு உகந்தது தேவி உபாசனை. காகம் அனுதினமும் நற்பவி மந்திரத்தை ஓதி சக்தி உபாசனையில் உன்னத நிலையை அடைந்ததால் காகத்தின் தவம் விரைவில் கனிந்தது. ஒரு நாள் வழக்கம்போல் தென்காசி அருகில் உள்ள ஐந்தருவியில் நீராடிய பின் இலஞ்சி முருகப் பெருமானை தரிசிக்க வேண்டி சென்றபோது நண்பகல் வந்து விட்டதால் கோயில் நடை சார்த்தப்பட்டு விட்டது. எனவே, மீண்டும் நடை திறக்கும்வரை திருக்கோயில் வாசலிலேயே அமர்ந்து நற்பவி நாம ஜபத்தில் திளைக்க ஆரம்பித்தது.



அப்போது தன்னையும் அறியாமல் காகம் உறங்கி விட்டது. அப்போது அதற்கு ஓர் அருமையான கனவு வந்தது. அந்தக் கனவில் நற்பவி தேவி ஓர் அன்ன வாகனத்தில் பவனி வந்து காகத்தைப் பார்த்து, “சரணாகத இரட்சகரைச் சரணடைவாய், உன்னுடைய விருப்பம் நிறைவேறும்,” என்று கூறினாள். கனவு களைந்து காக்கை எழுந்தது. அதே சமயம் முருகப் பெருமானுக்கு தீபஆராதனை நிறைவேறியது. அதை சுப சகுனமாக ஏற்றுக் கொண்ட காகத்தின் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.


தன்னுடைய நீண்ட நாள் விருப்பம் நற்பவி தேவியின் அருளால் நிறைவேறும் என்று உணர்ந்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தது. முருகப் பெருமானை தீப ஆராதனை ஊடே தரிசனம் செய்து அவருக்குத் தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தது. உடனே கால தாமதம் செய்யாமல் சரணாகத இரட்சகர் தரிசனம் வேண்டி விரைவாகப் பறந்து சென்றது.



பொதுவாக, பகலில் உறங்குவதைத் தவிர்ப்பது நல்லது. இந்த விதிக்கு விலக்காக அமைந்த சில திருத்தலங்களில் இலஞ்சி முருகன் திருத்தலமும் ஒன்று. இங்கு வரும் பகல் கனவுகள் பலிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.






Source:Hinduukilin Prasad
 
ஸ்ரீசனீஸ்வர பகவான் மகிமை

ஸ்ரீசனீஸ்வர பகவான் மகிமை



Z




நவகிரக தேவதைகளுள் கருணைக் கடலாய் விளங்கும் தெய்வமே சனீஸ்வர மூர்த்தியாவார். ஆனால், நடைமுறையில் சனி என்ற வார்த்தையைக் கேட்டால் இடியுண்ட நாகத்தைப் போல மக்கள் நடு நடுங்கிப் போவதையே பெரும்பாலும் காண்கிறோம். இதற்குக் காரணம் சனி பகவானைப் பற்றிய தெய்வீக உண்மைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாததே ஆகும்.

வேதம் எப்படி சனீஸ்வரரைத் துதிக்கிறது ?

ஓம் பங்கு பாதாய வித்மஹே சூர்ய புத்ராய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோதயாத்

என்பது சனீஸ்வரரைத் துதிக்கும் காயத்ரீ துதி. ஊனமுற்ற காலுடன் சூரிய மூர்த்தியின் மைந்தனாய் இருக்கும், மெதுவாகச் செல்லக் கூடிய சனீஸ்வர பகவானைத் துதிப்பதாக இந்தத் துதி அமைந்துள்ளது. நவகிரக தேவதைகளுள் மிகவும் மெதுவாக செல்லக் கூடியவராய் இருப்பதால் அவரை இவ்வாறு அழைக்கிறோம்.

சனி பகவானின் வேகம் குறைந்த இயக்கத்தால் மக்களுக்கு விளையும் பலன்கள் ஏராளம். உதாரணமாக, ஒரு அலுவலக உத்தியோகத்தில் இருப்பவர் ஒவ்வொரு மாதமும் ஒரு தொகையை வங்கியில் போட்டு வைக்கிறார். அவர் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறும்போது கணிசமான ஒரு தொகை அவருக்குக் கிடைக்கிறது. இந்தத் தொகையை வைத்துத்தான் அவர் மீதமுள்ள ஆயுட்காலத்தைக் கழித்தாக வேண்டும்.

அவரிடம் உள்ள சேமிப்புப் பணம் மெதுவாக செலவழிந்தால்தான் அவர் தன்னுடைய இறுதிக் காலத்தை நிம்மதியாகக் கழிக்க முடியும். மருத்துவச் செலவு, குழந்தைகள் மேற்படிப்பு, கல்யாணம் போன்ற காரணங்களால் அவருடைய சேமிப்பு வேகமாகக் கரைந்து விட்டால் அவர் மீதமுள்ள காலத்தை எப்படிக் கழிக்க முடியும்? அப்போது வேதனைதானே மிஞ்சும். இவ்வாறு ஒருவரிடம் உள்ள செல்வம் நிரந்தரமாக தங்கி, மெதுவாக செலவழிக்க உதவுபவரே சனீஸ்வர மூர்த்தியாவார்.

மற்றோர் உதாரணம். ஒருவருக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது. அதனால் மூச்சிரைப்பும், இதயத் துடிப்பும் அதிகமாகவும் வேகமாகவும் இருக்கும். இந்நிலையில் அவர் ஆரோக்கியமாகத் திகழ வேண்டுமானால் அவருடைய இதயத் துடிப்பும், இரத்த ஓட்ட வேகமும் குறைந்தால்தானே நலம்? அதற்கு அனுகிரகம் புரியக் கூடியவரே சனி பகவான்.

அதேபோல ஒருவர் எப்போதும் உற்சாகத்துடன் படபடப்பாக நாள் முழுவதும் இருந்தாலும் இரவு நெருங்கும்போது அவருடைய உடல், மன இயக்கங்கள் குறைந்தால்தான் ஆழ்ந்த தூக்கம் கிட்டும். உடல் உறுப்புகள் அமைதி கொண்டால்தான் உடலுக்கு வேண்டிய ஓய்வு கிடைக்கும், ஆரோக்கியம் வளம் பெறும். இத்தகைய அமைதிக்கு வழிவகுப்பதே சனி பகவானின் மந்த சக்திகள் ஆகும்.



[TABLE="align: center"]
[TR]
[TD]
விதியை உணர்த்தும் வள்ளல்
[/TD]
[/TR]
[/TABLE]

எனவே சனீஸ்வர பகவானை முதுமை காலத்து நண்பன் என்றும், தேவையில்லாத வேகத்தைக் குறைத்து ஆரோக்கியத்தை அளிக்கும் ஔஷத மூர்த்தி எனவும், உடலுக்கும் மனதுக்கும் அமைதி அளிக்கும் புகலிடம் எனவும் கூறுவது மிகையாகாது.

சனிக்கு மற்றோர் பெயர் விதி என்பது. ஒருவர் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்பவே இப்பிறவி அமைகிறது. இப்பிறவியில் எந்த அளவுக்கு தன்னுடைய கர்ம வினைகளைக் கழிக்கிறாரோ அந்த அளவிற்கு அடுத்த பிறவிகள் நலமாய் அமையும். இல்லாவிட்டால் மேலும் மேலும் பாக்கிகள் வளர்ந்து துயரமே மேலோங்கும், பிறவிகள் வளரும். இதைத்தான் ஆதி சங்கரரும் புனரபி ஜனனம், புனரபி மரணம் என்று வர்ணித்துள்ளார்கள். மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து இறப்பதால் என்ன பயன்? பிறவித் தளையை அறுப்பதுதான் விவேகம் என்று எல்லா மகான்களும் வலியுறுத்துகிறார்கள்.

உதாரணமாக, ராமன் என்பவர் பஸ்சில் பயணம் செய்வதாக வைத்துக் கொள்வோம். முந்தைய பிறவியில் ராமன் கோவிந்தனுடைய காலை மிதித்து விட்டார். இந்தப் பிறவியில் கோவிந்தன் ராமனுடைய காலை மிதித்தால்தான் இந்த மிதித்தல் பாக்கி தீரும். இருவருடைய பாக்கியைத் தீர்ப்பதற்காக எத்தனை கோடி ஆண்டுகள் இடையில் கழிந்தன என்பது எவருக்கும் தெரியாது. அது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம். சித்தர்கள் கணக்குப்படி ஒரு மனிதப் பிறவி கிடைப்பதற்கு ஒரு கோடி ஆண்டுகள் ஆகும். அப்படியானால் ராமனும் கோவிந்தனும் எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன்னால் நமது பூமியில் மனிதர்களாய்ப் பிறந்தார்கள் என்பது தெரியாது.

தற்போது இருவரும் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது முற்பிறவி உந்துதலால் கோவிந்தன் ராமனுடைய காலை மிதிப்பார். இப்போது ராமன் என்ன செய்ய வேண்டும்? பொதுவாக, இந்தச் சூழ்நிலையில் இரண்டு விதமான நிகழ்ச்சிகள் ஏற்படலாம். கோவிந்தனுடைய செயலை ஏதோ தெரியாமல் செய்த தவறு என்று நினைத்து ராமன் கோவிந்தனை மன்னித்து விடலாம். அவ்வாறு செய்தால் தீர்க்கப்படாத பழைய பாக்கி இத்துடன் தீர்ந்து விடுகிறது. ராமனும் கோவிந்தனும் இந்தச் சிறிய விஷயத்திற்காக மீண்டும் பிறவி எடுக்க வேண்டாம்.

இரண்டாவது, நிகழ்ச்சியாக ராமன் கோவிந்தனின் செய்கையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கோவிந்தனை வசை பாடவோ அல்லது அடிக்கவோ செய்யலாம்? அவ்வாறு தகாத வார்த்தைகளைப் பேசி, உடலால் இம்சிக்கும் செயல்களைச் செய்தால் இது இன்னும் ஒரு பிறவிக்கு வழி வகுக்கும். இது உண்மை. இதுவே இறைவனின் விதி. இதிலிருந்து யாருக்கும் விலக்கு கிடையாது.

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். ஒரு நிகழ்ச்சி நாம் அனுபவிக்க வேண்டிய பாக்கியா அல்லது நாம் புதிதாக ஏற்படுத்தும் ஒரு கர்ம வினையா என்று எப்படித் தெரிந்து கொள்வது? ஒரு நிகழ்ச்சி நாம் அனுபவிக்க வேண்டியதாக இருந்தால் வேறு வழியின்றி அதை அனுபவித்து விடலாம். இல்லாவிட்டால் அதை எதிர்ப்பதற்காக நாம் போராடலாம்.

மனித வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவம் பாக்கியா கர்மமா என்பதை யாராலும் உணர முடியாது என்பதே தெய்வீக உண்மை. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் நம்மைக் காத்து வழிகாட்டவே சித்தர்கள் அற்புதமான அனுபவ மொழிகளை உபதேசமாக அருளியுள்ளனர்.

“வருவதை ஏற்றுக் கொள்,”. இதுவே சித்தர்களின் எளிமையான ஆனால் நடைமுறைக்கு மிகவும் பயனுள்ள உபதேசமாகும்.

மேற்கண்ட கால் மிதித்தல் நிகழ்ச்சியை நினைவு கூறுங்கள். இப்போது ராமன் சித்தர்களின் அருளுரையை ஏற்று மௌனமாக கோவிந்தனின் செயலைப் பொறுத்துக் கொண்டால் அவருக்கு மீண்டும் பிறவி எடுக்காத நிலை ஏற்படும். ஒருவேளை ராமனுக்கும் கோவிந்தனுக்கும் முற்பிறவி பாக்கி இல்லை என்றால் கோவிந்தனுடைய செயலை ராமன் எதிர்ப்பதால் தவறு இல்லை அல்லவா? உண்மைதான், அது ராமனுக்கு எந்தக் கர்மாவையும் ஏற்படுத்தாது. ஆனால், ராமன் சித்தர்களின் அமுத மொழியை ஏற்று பேசாமல் இருந்து விட்டால் கோவிந்தன் ராமனுடைய காலை மிதிக்கும்போது அவர் மௌனமாக இருந்த காரணத்தால் கோவிந்தனுடைய புதிய கர்மச் செயல் ராமனுக்கு சில புண்ணிய சக்திகளை அளிக்கும்.

அவ்வாறு கிடைக்கும் புண்ணியத்தின் பலனை மனிதக் கணக்கில் அளவு கூற இயலாது. இருப்பினும் உதாரணத்திற்காகக் கூற வேண்டுமானால் முற்பிறவி பாக்கி இல்லாமல் ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அடித்தால், அந்த அடியை வாங்குபவர் திருப்பி அடிக்காமல் தாங்கிக் கொண்டால் அடிக்கும் மனிதருடைய 50 வருட புண்ணிய சக்தி அடிபட்ட மனிதருக்கு போய்ச் சேரும் என்பது இறைவனின் விதி. இதுவே புண்ணியத்தால் பணம் பெறும் கலியுக சேமிப்பு விதியாகும்.

அதே போல முற்பிறவி பாக்கியில்லாமல் ஒருவர் மற்றொருவரை கடுமையான வார்த்தைகளால் தாக்கினால் அவருடைய ஒரு வருட புண்ணிய சக்தி திட்டு வாங்கியவருக்கு போய்ச் சேருகிறது என்பதை நினைவில் கொள்ளவும். இவ்வாறு தகாத வார்த்தைகளால், செயல்களால், புண்ணிய சக்திகள் மிகவும் குறைந்த நிலையை அடையும் போது அது வாய்ப் புற்று நோய், தொண்டையில் கட்டி, வாய்ப் பேச முடியாமல் மூச்சு முட்டுதல் போன்ற நோய்களாக இப்பிறவியிலேயே அனுபவிக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகி விடுகிறது.

இத்தகைய கர்ம பாக்கி நிகழ்ச்சிகள் ஏற்படும்போது அதை முறையாகச் செயல்படுத்தி அனுவிக்க வேண்டிய கர்ம வினைகளை அனுபவித்து மீண்டும் பிறவி எடுக்காத நிலையை ஏற்படுத்தித் தர நமக்கு உதவுபவரே சனீஸ்வர மூர்த்தியாவார். அதனால்தான் பெரியோர்கள் அவரை விதி என்று அழைத்தார்கள்.


BOONS GRANTED BY SANEESWARA BHAGAVAN !!



Picture: Google
 
பகவத் கீதை !!!

பகவத் கீதை !!!
------------------------

பல வருடங்களுக்கு முன் ஸ்வாமி சின்மயானந்தா அவர்களின் பிரசங்கத்திலிருந்து ஒரு ஸ்வாரஸ்யமான பகுதியை என் ஞாபகத்திலிருந்து சுருக்கமாக பதிவு செய்கிறேன். :



யாரோ ஒருவர் திடீரென்று உங்களிடம் “ஸார், ட்ரெயினைப் பிடிக்கணும், ஐந்து நிமிடங்கள் தான் இருக்கு. அதுக்குள்ள பகவத் கீதையை சொல்ல முடியுமா ? “ என்கிறார்.


தயங்கவே வேண்டாம், “ஐந்து நிமிடம் இருக்கா ? இரண்டே நிமிடம் போதுமே “ என்று சொல்லுங்கள். “விடு - பிடி. அல்லது பிடி - விடு. அவ்வளவுதான் “ என்று சொல்லுங்கள். - என்று சொல்லி விட்டு சிரி்துக்கொணடே கூட்டத்தைப் பார்த்தார். கூட்டம் ஒன்றும் புரியாமல் அமைதியாக இருந்தது. பிறகு அவரே விளக்கினார் :
இந்த உலக பந்தங்களையெல்லாம் உதரித் தள்ளுங்கள். பரந்தாமன் பாதங்களைப் பற்றுங்கள்.


ஆனால் சாமான்ய மக்களுக்கு இந்த உலக பந்தங்களை எல்லாம் உதரித் தள்ளுவது சுலபத்தில் முடிகின்ற காரியமில்லை. பிறகு எவ்வாறு பரந்தாமன் பாதங்களைப் பற்றுவது ?


கவலை வேண்டாம். இன்னொரு வழி இருக்கின்றது. முதலில் பரந்தாமன் பாதங்களைப் பற்றுங்கள். அந்தப பிடி இறுக, இறுக, இந்த உலக பந்தங்களின் மேல் உங்களுக்குள்ள பிடிப்பு தானாக தளர்ந்துவிடும்.


ஒரு உபமானம் சொல்லுகிறேன். சில விறகு குச்சிகள் ஒரு கயிற்றால் இறுக்கமாகக் கட்டபபட்டுள்ளன. அதனை அவிழ்க்க முடியவில்லை ( இது நம் உலக பந்தம் ) வேறு ஒரு கயிறு எடுத்து அதற்குப் பக்கத்திலேயே கட்டி, ஒரு குலுக்கு குலுக்கி இறுக்குங்கள். ( இந்த புதிய கட்டு பகவானின் பாதம பற்றிய பிடி.) புதிய கயிற்றின் இறுக்கத்தில், பழைய கயிறு இருக்கம் தளர்ந்து கழன்று விடும்.



உலக பந்தங்களை விட்டு, பரந்தாமன் பாதங்களைப் பற்றுவது ஞான மார்கம். ஞானிகளுக்கானது.
பரந்தாமன் பாதங்களைப் பற்றி, உலக பந்தங்களை விடுவது பக்தி மார்கம். சாமானிய மக்களுக்கானது.


எவ்வளவு எளிமையான விளக்கம் !!!


ஹரி ஓம்.... ஹரி ஓம்....





Source:Sethuram Krishnamurthy
 
ராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்கு&

ராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் ! ! !







சுவர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளும் தடைப்படுமோ என்று பயந்தனர் தேவர்கள்.

அசுரனிடமிருந்து சூரியனை விடுவிக்க, பரிகாரத்தில் ஈடுபட்டனர். இதில் இருள் விலகி, இளஞ்சிவப்பாகக் காட்சி தந்தான் சூரியன். கடைசியில், அவனது இயல்பான நிறமான வெண்மை பளிச்சிட்டது என்கிற தகவல் வேதத்தில் உண்டு (சுவர்பானு ராஸுர: ஸுர்யம் தமஸாவித்யத்...).


கிரகணம் பிடித்த நிலையில், கருவட்டமாகக் காட்சி தருவான் சூரியன். கிரகணம் விடத் துவங்கியதும், சிவந்த கலந்த வெண்மையில் ஒளிர்வான். முழுவதும் விட்டதும், வெண்மை நிறத்தினனாகக் காட்சி தருவான். வேதத்தில், அந்த கிரகணத்தின் நிகழ்வு உள்ளது. ராகுவைப் பற்றிய தகவல் அதர்வண வேதத்தில் உண்டு (சன்னோ கிரஹா: சாந்திரமஸா: சமாதித்ய: சராகுணா...). வேத காலத்தில் இருந்து, தினமும் 3 வேளை, ராகுவுக்கு நீரை அள்ளி வழங்கி வழிபடுவர், வேதம் ஓதுவோர். பிறகு வந்த சம்ஸ்கிருத இலக்கியங்களில், ராகுவை சுவர்பானு எனக் குறிப்பிட்டனர்.


ராகுவுக்கு சுவர்பானு எனும் பெயர் உண்டு என்கிறது அமரகோசம். கிரகண காலப் பெருமையை விளக்கும் வேளையில், ராகுவைக் குறிப்பிடுகிறது தர்மசாஸ்திரம் (ராஹுக்ரஸ்தேதிவாகரே). மாயையின் தரம் மற்றும் அதன் இயல்பை விளக்க வந்த மகான் ஆதிசங்கரர், தட்சிணா மூர்த்தி ஸ்தோத்திரத்தில் ராகுவைச் சுட்டிக்காட்டுகிறார்.


கிரக வரிசையில், ராகுவைக் குறிப்பிடவில்லை; கிழமைகளில் இடம் தரவில்லை. ராசிச் சக்கரத்தில் 12 வீடுகள் இருந்தும், ராகுவுக்கு வீட்டு உரிமை இல்லை; ராசிகளின் உட்பிரிவுகளிலும் ராகு இல்லை. ராகுவை சாயாகிரகம் என்கிறது ஜோதிடம். ராகு, தென்படும் ராசிக்கு உரியவன். அவனுடன் இணைந்தவன்; அவனைப் பார்ப்பவன். ஆகவே விகிதாசாரப்படி, ராகுவுக்குப் பலன் சொல்ல வேண்டும் என்கிறது ஜோதிடம். கேந்திர த்ரிகோணாதிபதிக்கு யோககாரகன் எனும் பெருமை உண்டு. அவனுடன் இணைந்த ராகு, நல்ல பலனை அளிப்பான் என்கிறது ஜாதக சந்திரிகை (யோககாரக ஸம்பந்தாத்...). தாம்பூலப் பிரஸ்னத்தில், லக்ன நிர்ணயம் செய்ய ராகு கேதுவைத் தவிர்த்து, ஏழு கிரகங்களை மட்டும் ஏற்பார்கள்.



ராகுவும் கேதுவும் இணையாத ஏழு கிரகங்களை வைத்து, ஸப்த க்ரஹ சித்தாந்தம் ஆரம்ப காலத்தில் இருந்தது. வராஹமிஹிரர் அந்த சிந்தாந்தத்தை ஆராதித்தவர் என்கிறது ஜைமினீய பத்யாமிருதம். கேமத்ரும யோகத்தில், ராசிக்கு 2-லும் 12-லும் ராகு இருந்தாலும், கிரகம் இல்லாததாகவே கருதப்படும்; வெற்றிடமாகவே ஏற்பர்; நிழல் கிரகம் என ஒதுக்குவர். ஒரு ராசிக்கு முன்னும் பின்னுமான ராசிகளில் (ராசிக்கு 2 மற்றும் 12-ல்) பாபக் கிரகம் இருந்தால், அதற்கு உபயபாபித்வம் என்று பெயர். இந்த இரண்டுகள் ஒன்றில் ராகு தென்பட்டால், உபயபாபித்வம் உருவாகாது. பாப கிரகம் எனும் அந்தஸ்தை இழந்துவிடுகிறான்.
முகூர்த்த சாஸ்திரம், லக்ன சுத்திக்கு, எட்டில் கிரகம் இருக்கக் கூடாது என்கிறது. அங்கு ராகு இருந்தால், கிரகம் இல்லாததாகக் கருதப்படும் என்கிறது முகூர்த்த சாஸ்திரம். தசா புக்தி அந்தரங்கள், கிரகணம், ராகு காலம் ஆகியவற்றில் ராகு தென்படுவான். அடுத்து வந்த சிந்தனையாளர்கள் உச்சம், நீசம், ஸ்வ ÷க்ஷத்திரம் எனக் கொண்டு, மற்ற கிரகங்களின் அந்தஸ்தை ராகுவுக்கு ஏற்படுத்தினர். எல்லாக் கிரகங்களும் வலமாக வந்தால், இவன் இடமாக வருகிறான்.



ராகுவுக்கு சர்ப்பி எனும் பெயர் உண்டு. சர்ப்பி என்றால் ஊர்ந்து செல்லுதல், பரவுதல், நகருதல் என்று அர்த்தம். பாம்பு ஊர்ந்து செல்லும். ஆகவே, பாம்பின் வடிவமென ராகுவைச் சொல்வார்கள் (உரகாகார:) சர்ப்பம் என்றும் பாம்பைச் சொல்வர். சந்திரனின் பாதம் அது என்கிறது கணிதம். ராகு, பூமியுடன் இணைந்து சந்திரனை மறைக்கிறான். சந்திரனுடன் இணைந்து, சூரியனை மறைக்கிறான். அதுவே கிரகணத்தின் நிகழ்வு என்கிறது ஜோதிடம்.



ஸ்ரீ ராகு பகவான்



பிரம்மாவிடம் வரம்பெற்று, கிரகண வேளையில் சூரிய சந்திரர்களைத் துன்புறுத்துகிறான் ராகு என்கிறது புராணம். ராகுவை சனிக்கிரகம் போல் பாவித்துப் பலன் சொல்லலாம் என்கிறது ஜோதிடம் (சனிவத்ராஹு:) ஆக்னேய கிரகம் 7-ல் இருந்தால், கணவன் இழப்பை அளிக்கும். சூரியன், செவ்வாய், சனி ஆகியவை ஆக்னேயத்தில் சேரும்; ராகு இதில் சேரவில்லை. குரூரக் கிரகம் 7-ல் இருந்தால், கெடுதல் விளையும், செவ்வாயை, குரூரக் கிரகம் என்கிறது ஜோதிடம் (க்ரூரத்ருத்..) அதிலும் ராகுவுக்கு இடமில்லை.

இப்படியிருக்க... ராகுவுக்கு தற்போது முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. ராகு 5-ல் இருந்தால், குழந்தை பாக்கியம் இல்லை; 7-ல் இருந்தால் கணவன் இழப்பு என்று பரிகாரங்களுக்கு காளஹஸ்தி தலத்தைச் சொல்வர். நாக தோஷத்துக்கு நாகப்பிரதிஷ்டை பரிகாரம்; ராமேஸ்வரத்தில் சேது ஸ்நானம் ஆகியவை பரிந்துரைக்கப்படும். ராகு தோஷ பரிகாரமாக, அம்பாள் வழிபாட்டை வலியுறுத்துவர். ஆக, பரிகாரத்தால் மறைகிற தோஷமாக, ராகு தோஷத்தைச் சொல்வர். 12 ராசிகளில் ராகு எங்கு இருந்தாலும் அது தோஷம் எனக் கருதி, பரிகாரத்தில் ஈடுபடுகிற நிலை வந்துவிட்டது. காலத்துக்குத் தக்கபடி, புதுப்புது பரிகாரங்களும் தற்போது வந்து விட்டன. 5 மற்றும் 7-ல் ராகு இருக்கிற ஜாதகங்கள், தீண்டத்தகாத ஜாதகங்களாக மாறிவிடுகின்றன. ஜோதிட நம்பிக்கை கொண்டவர்கள் பாடு சொல்லில் அடங்காதது.



கிரக வரிசையில் இடம்பிடித்த ராகு, நன்மையைவிட தீமையையே அதிகம் சுட்டிக்காட்டுவதாக சித்திரிப்பதால் ஏற்பட்ட பயம், மக்களின் சிந்தனையை முடக்கிவிடுகிறது. சம்பிரதாயம், நம்பிக்கை ஆகியவற்றுக்கு முதலிடம் கொடுக்கிற மனம், சாஸ்திரத்தை மறந்துவிடுகிறது; ஆசையை அடையும் வழி தெரியாமல், முட்டுச் சந்து போல் முடங்கிவிடுகிறது. ஜோதிடத்தை மனம் சரணடைந்தால், சிந்தனையானது படுத்துவிடும். ஜோதிடத் தகவல் சிந்தனைக்கு இலக்காகியிருக்க, தகவலின் தரம் ஒருவனது முன்னேற்றத்தை வரையறுக்கும். ராகுவின் தரம், ஜோதிடத்தில் அவன் பங்கு ஆகியவற்றை உள்ளது உள்ளபடி அறிய வேண்டிய கட்டாயம் உண்டு. ஜாதகத்தில் உள்ள ராகு, கெடுக்கிற ராகு அல்ல; கொடுக்கிற ராகு எனும் விளக்கமும் இருக்கிறது.



காலைச் சுற்றிய பாம்பு, (திருவாதிரை காலில் இருக்கும் ராகு) கடிக்காமல் விடாது (வேதனை அளிக்காமல் இருக்காது) என்று சிலேடையான விளக்கங்களை அளித்து ராகுவின் தரத்தைச் சொல்பவர்களும் உள்ளனர். தனி வீடு இல்லாததால், எல்லா வீடுகளிலும் தனி வீட்டுக்குச் சமமாக ராகு செயல்படும் வாய்ப்பு கிடைத்து விட்டது. நல்லவனுடன் இணைந்தால், நல்ல பலனை முடக்கி விடுவான்; எவரோடும் சேராமல், எவராலும் பார்க்கப்படாமல், தனியே ஒரு வீட்டில் தென்பட்டால், வீட்டுக்கு உரியவனின் இயல்புக்கு இணங்க, தனது இயல்பையும் கலந்து மாறுபட்ட பலனை அளிப்பான்.



கெட்டவனுடன் சேர்ந்தால், செயலின் தன்மையைக் கொடுமையாக்குவான். சூரியனுடன் இணைந்தால், ஜாதகரின் செல்வாக்கை இழக்கச் செய்வான். செயலை மங்கச் செய்வான். பெருந்தன்மையும் பேராதரவும் அங்கீகாரம் பெறாது. உச்சன் அல்லது வேறு வகையில் பலம் பொருந்திய சூரியனுடன் இணைந்தால், எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து, தனித்தன்மையுடன் திகழ்வான். எதிரியிடம் இருந்து வெகுமதிகள் வந்தடையும்; எதிர்பார்ப்புகள் சாதகமாகும் ! சந்திரனுடன் இணைந்தால் சிந்தனை சுணங்கும்; செயல் வலுவிழக்கும். பலம் பெற்ற சந்திரனுடன் இணைந்தால், சங்கடம் நேராமல் தடுத்துவிடுவான் ராகு. செவ்வாயுடன் இணையும்போது, தேவையற்றதில் செயல்படத் தூண்டிவிட்டு, ஆயாசத்தை உண்டாக்குவான். வலுப்பெற்ற செவ்வாயுடன் இணைந்தால், எதிர்ப்பைச் சமாளித்து, எளிதில் முன்னேறலாம். புதனுடன் சேர்ந்தால், தவறான நட்பால் நொந்து போகும் நிலை ஏற்படும். வலுவுள்ள புதனுடன் இணைந்தால், பக்குவ அணுகு முறையால் காரியங்களைச் சாதிக்கச் செய்வான் !



சுக்கிரனுடன் இணைந்தால், தாம்பத்திய வாழ்வில் சங்கடம் நேரும். தவறான வழியில் செல்வம் பெருகும். பலம் பெற்ற சுக்கிரனுடன் இணைய, எதிர்பார்த்த உலகவியல் சுகங்களை அனுபவிக்கலாம். பெரிய மனிதர்களது தொடர்பால், பொருந்தாத பெருமைகளும் வந்தடையும். சனியின் சேர்க்கையால், நண்பர்கள் எதிரிகளாவர். பலம் பொருந்திய சனியுடன் இணைந்தால், தரம் தாழ்ந்த வழியில் முன்னேறும் நிலை உண்டாகும். இக்கட்டான சூழலில், அவனுக்குப் பெருமைகள் தேடி வரும். குருவுடன் இணைந்தால், சௌக்கியங்களை இழக்க நேரிடும்; எத்தனை முயன்றாலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டாலும் தோல்வியைத் தழுவ நேரும். மனச்சோர்வு அதிகரிக்க, கடமைகளை மறக்கும் நிலை உருவாகும்.


வலுப்பெற்ற குருவுடன் இணைந்தால், சங்கடம் தீர்ந்தாலும், சந்தோஷம் இருக்காது;

காரியங்கள் காலம் கடந்து நிறைவேறும். குருவின் சேர்க்கையால், மற்ற கிரகங்களின் தோஷங்கள் முழுவதும் முடங்கிவிடும். ராகுவின் சேர்க்கையில் குரு செயலிழந்துவிடுவான். அதனை, குரு சண்டாள யோகம் என்கிறது ஜோதிடம். நல்லவனின் சேர்க்கை, கெட்டவனை நல்லவனாக்கும். ஆனால் ராகுவின் சேர்க்கை, குருவைக் கெட்டவனாக்கிவிடும் என்கிறது, அது ! அதேநேரம், யோக காரக கிரகங்களின் சேர்க்கையில், நல்லவனாக மாறுவதுடன் நிற்காமல், இணைந்த கிரகத்தின் நல்லபலன்களை இரட்டிப்பாக்கி, மகிழ்ச்சியை நிலைக்கச் செய்வான் ராகு. அசுர வேகத்தில் முன்னேற்றம் நிகழும். இதில் தடம்புரளாமல் இருக்க, ராகுவின் இடையூறு சாதகமாக மாறுவது உண்டு. இனிப்பின் அதீத தித்திப்பை, காரமானது குறைக்கும். ஐந்து கிரகங்கள் உச்சமாக இருந்தாலும், ராகுவின் சேர்க்கையில் துன்பத்துக்கு இடமளித்து, இன்ப சேர்க்கையில் துன்பங்களின் கலப்படமே வாழ்க்கை எனும் நியதியை நிறைவுசெய்ய... ராகுவின் பங்கு சில தருணங்களில் பயன்படும்.



ராகுவை வைத்து, காலசர்ப்ப யோகம் உருவானது. அதுவே, விபரீத கால சர்ப்ப யோகம் எனும் பெயரில் விரிவாக்கம் பெற்றது. சஞ்சாரத்தில் 180 டிகிரி விலகி நிற்பதால், ராகுவுக்கும் கேதுவுக்கும் சேர்க்கை நிகழாது. தினமும் ராகுகாலத்தைச் சந்திக்கிறோம். ராகு வழிபாடு என்பது, வேத காலத்தில் இருந்தே தொடர்கிறது. உலகம் தோன்றும் வேளையில், வானசாஸ்திரத்தில், ராகு இடம் பிடித்துவிட்டான். வராஹமிஹிரர், பிருஹத்சம்ஹிதையில் ராகுசாரத்தை விளக்கியுள்ளார். ஆகவே, போற்றுதலுக்கு உரிய கிரகங்களில் ராகுவையும் சேர்க்கலாம்.



செயல்படுவதற்குக் கைகள் தேவை. பிறர் உதவியின்றி வாழச் செய்வான் ராகு ! இன்றைய சூழலில், ராகுவின் அருள் அவசியம். ராகு பகவானை வணங்கினால், ஒளிமயமான வாழ்க்கை நிச்சயம் !





???????????? ?????????: ???????? ????????? ???? ???????? ??????????? ?????????? ???????? ! ! !
 
விடாத சனி விட்டதெப்படி?

விடாத சனி விட்டதெப்படி?

SUSEENDHIRAM+ANJANEYAR+B.JPG





திரேதா யுகத்தில், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் விஷ்ணு இராமராக அவதரித்த போது, அவருக்கு உதவி செய்வதற்காக அனுமனாகச் சிவபெருமான் அவதாரம் எடுத்தார். மீண்டும் ஒருமுறை பீடிக்க முயன்ற சம்பவம் இராமாயணத்தில் காணப்படுகிறது.

இராவணனை அழிக்க வானரப் படைகளுடன் இலங்கை செல்வதற்காகக் கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார் ராமன்.

இந்த சேதுபாலம் அமைக்கும் பணியில் சுக்ரீவன், அங்கதன், அனுமன் மற்றும் அவனது வானரப் படைகள் ஈடுபட்டிருந்தன. வானரம் ஒவ்வொன்றும் தனது சக்திக்கு ஏற்றவாறு மரங்களையும் பாறைகளையும் தூக்கி வந்து கடலில் வீசிக்கொண்டிருந்தன.

இராமர், லட்சுமணர் ஆகியோர் கடலில் பாலம் உருவாவதை நோக்கிய வண்ணம் எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர். அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின் மீது 'ஜெய் ஸ்ரீராம்’ என்ற அட்சரங்களைச் செதுக்கி கடலில் எறிந்து கொண்டிருந்தார்.

அப்போது, அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி, இராம லட்சுமணர்களை வணங்கியபடி, "பிரபு! அனுமனுக்கு ஏழரைச் சனி பீடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னைத் தவறாக எண்ணாதீர்கள். என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்" என்று வேண்டினார்.

"எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அதுபோல உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால், அனுமனைப் பீடித்துப் பாருங்கள்" என்றார் ராமன்.

உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி, "ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போது உனக்கு ஏழரைச்சனி ஆரம்பமாகிறது. உன்னைப் பீடித்து ஆட்டிப் படைக்க, உன் உடலில் ஓர் இடம் கொடு" என்றார்.

"சனீஸ்வரா! இராவணனின் சிறையில் இருக்கும் சீதாதேவியை மீட்க நாங்கள் இலங்கை செல்லவே இந்த சேதுபாலப் பணியை ஸ்ரீராம சேவையாக ஏற்றுத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பணி முடிந்ததும், நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்துக் கொள்ளலாம்" என்றான் அனுமன்.

"ஆஞ்சநேயா! காலதேவன் நிர்ணயித்த கால அளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பீடிக்கும் நேரம் நெருங்கி விட்டது. உடனடியாகச் சொல்;

உன் உடலின் எந்த பாகத்தில் நான் பீடிக்கலாம்?" என்று கேட்டார் சனீஸ்வரன்.

"என் கைகள் இராம வேலையில் ஈடுபட்டுள்ளது. அதனால், அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் இடம் தந்தால், அது பெரும் அவமதிப்பாகும். "நீங்கள் என் தலை மீது அமர்ந்து தங்கள் கடமையைச் செய்யுங்கள்" என்று கூறினார் அனுமன்.

அனுமன் தலை வணங்கி நிற்க, அவன் தலை மீது ஏறி அமர்ந்தார் சனீஸ்வரன்.

அதுவரை சாதாரண பாறைகளைத் தூக்கி வந்த அனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின்பு, மிகப் பெரிய மலைப் பாறைகளைப் பெயர்த்து எடுத்துத் தலைமீது வைத்துக் கொண்டு, கடலை நோக்கி நடந்து, பாறைகளைக் கடலில் வீசினார்.

பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை அனுமனுக்குப் பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்க வேண்டியதாயிற்று.

அதனால், சனீஸ்வரனுக்கேக் கொஞ்சம் பயம் வந்துவிட்டது. "ஏழரைச் சனியில் அடுத்தவரை அவதிப்படுத்த வந்து நாமே அவதிப்பட வேண்டியதாகி விட்டதே...?" என்று யோசித்தார்.

அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவனது தலையிலிருந்து கீழே குதித்தார்.

"சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னைப் பீடிக்கவேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டு விட்டீர்கள்?" என்று கேட்டார் அனுமன்.

அதற்கு சனீஸ்வரன், "ஆஞ்சநேயா! உன்னை ஒரு சில விநாடிகள் பீடித்ததால், நானும் பாறைகளைச் சுமந்து சேதுபாலப் பணியில் ஈடுபட்டுப் புண்ணியம் பெற்றேன்.

சிவபெருமானின் அம்சமான தங்களைக் கடந்த யுகத்தில் தங்களை நான் பீடிக்க முயன்று, வெற்றியும் பெற்றேன். இப்போது தோல்வி அடைந்து விட்டேன்" என்றார் சனீஸ்வரன்.

"இல்லை, இல்லை... இப்போதும் தாங்களே வென்றீர்கள்! ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை நிமிடங்களாவது என்னைப் பீடித்து விட்டீர்கள் அல்லவா?" என்றார் அனுமான்.

அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன், "அனுமான்..! உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்" என்றார்.

"இராம நாமத்தை பக்தியுடன் பாராயணம் செய்பவர்களை உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்கள் காத்தருள வேண்டும்" என வரம் கேட்டார் அனுமன்.

சனியும் வரம் தந்து அருளினார்.

இதனால் சனி பீடித்திருக்கும் காலத்தில் அனுமனை வணங்கி இராம பாராயணம் செய்பவர்களுக்கு சனியால் ஏற்படும் தொல்லை குறையும் என்று நம்பப்படுகிறது.


????? ??? ????????????? ~ Blog on vishnu temples
 
மகாதேவியின் விசுவரூபம்!

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவராலும் போற்றித் துதிக்கப்படும் அன்னை ஸ்ரீமகாதேவி

10576981_244075972468360_3631860873518606684_n.jpg




பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவராலும் போற்றித் துதிக்கப்படும் அன்னை ஸ்ரீமகாதேவியை, முற்பிறவியில் புண்ணியம் செய்திருந்தாலே அன்றி, வணங்கவோ வாழ்த்தவோ முடியாது என்பது தெள்ளத் தெளிவு.


ஆதிபராசக்தியாகிய அன்னை, "ஒலி' வடிவாகவும் விளங்குவதால், அவளை மகிழ்விப்பது தோத்திரங்களே ஆகும். "அன்னை, அட்சர வடிவாகவே விளங்குகிறாள்' என்று வேதங்கள், ஆகமங்கள், தேவி பராக்கிரமம், தேவி மகாத்மியம், ஸ்ரீதேவிபாகவதம், செüந்தர்ய லஹரி, ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி முதலிய "சாக்த' நூல்கள் அனைத்தும் குறிப்பிடுகின்றன.


ஐந்தொழில்களையும் அணுவும் மாறாமல் இயக்கி வருபவள், பேரருள் சக்தி வாய்ந்த மாதா ஸ்ரீமகா திரிபுரசுந்தரி. இவள் மிகவும் மகிழ்வது, அக்ஷர வடிவாய் உள்ள தோத்திரங்களால்தாம்!


சர்வ மங்கள வடிவினளாகிய மகாதேவியை, "சமஸ்த ஜகதாதார காரணபூதை' என்று வடமொழி துதிக்கும். 'ஆதிபராசக்தியின் திருவருளாலேயே அடைதற்கரிய அரும்பெரும் பதவிகள் அனைத்தும் அடையலாம் என்றும், அவ்வன்னையே பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் கருணைக் கண்நோக்கம் செய்து படைப்பு போன்றவைகளைச் சிறப்புற நடத்துபவள்' என்றும் இதன் பொருள் விரியும்.


அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாகிய அன்னை பராசக்தி, ஓம்கார வடிவத்தில் உள்ளாள். "இவளே ஞானத்தின் வடிவம்' என்று அறிஞர்கள் கூறுவர். அன்னை பராசக்தி தன்னிச்சையாய் எடுத்த "விசுவரூபம்' எவ்வாறு இருந்தது என்பதை சாக்த நூல்களில் காணலாம். சுவர்க்கமே அவளது தலையாகவும், ஆகாயமே கொப்பூழாகவும், சூரியன்- சந்திரன்- நெருப்பு ஆகியன மூன்று கண்களாகவும், எட்டு திசைகளும் செவியாகவும், பாதாளமே திருவடியாகவும், நட்சத்திரங்களே கொத்தாகத் தரித்த முத்து மாலையாகவும், ஆகாயத்தில் வசிப்பவர்களாகிய தேவர்கள் தோள்களாகவும், சமுத்திரமே ஆடையாகவும், சப்த மேகங்களும் கூந்தலாகவும், வாயுவே சுவாசமாகவும், ஏனையவை பிற உறுப்புகளாகவும் திவ்வியத் திருமேனி தாங்கியுள்ளவளாகக் காட்சி தருகின்றாளாம் அம்பிகை.


விசுவரூபம் என்பது அன்னை பராசக்தி, இச்சா சக்தி வடிவாய் எடுத்த தேகம். இயற்கையாகவே அன்னைக்கு நாம ரூபங்கள் இல்லை என வேதாகமங்கள் கூறுகின்றன. அவள் அக்ஷர வடிவாய்த் திகழ்பவள். ஆயினும், பக்தர்களுக்கு திருவருள் செய்யும் பொருட்டும், துஷ்டர்களை அழிக்கவும் அவள் கொள்ளும் திருமேனிகள் கணக்கற்றவை!


நவராத்திரி ஒன்பது நாள்களிலும் அன்னையின் தோத்திரங்களைப் பாடித் துதிப்பதனாலேயே அவளது திருவருளை எளிதில் பெறமுடியும் என்பது திண்ணம்.



??????????? ??????????!



 
லட்சுமியின் வேறு பெயர்கள்


லட்சுமியின் வேறு பெயர்கள்


836d127d-1f26-48b5-b81a-d70b7198dc68_S_secvpf.gif



மகாலட்சுமி பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள். அந்த ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ஹரிணி:பசுமையான மேனி அழகைப் பெற்றவள்.
சூர்யா:கதிரவனுக்கு நிகரான ஒளிமயமானவள்.
ஹிரண்மயி:பொன்னி.
ஈஸ்வரி:எல்லா உயிரிலும் உறைபவள்.
ஹிரண்ச வர்ணா:பொன்னிற மேனியாள்.
சந்திரா:நிலவுக்கு நிகரான முகமுடையாள்.
அனபகா முனிம்:நிலை தவறாதவள்.
ஆர்த்திரா: நீரில் தோன்றியவள்.
பத்ம ஸ்திதா:தாமரையில் வாசம் செய்பவள்.
பத்ம வர்ணா: தாமரை வர்ணத்தாள்.
ஆதித்ய வர்ணா:சூரியகாந்தி உடையவள்.
வருஷோபில்வ: கூவளத்தில் தோன்றியவள்.
கரிஷிணி:பெருகும் பசுச் செல்வமுடையவள்.
புஷ்ஷிணி:யானைகளால் வணங்கப்படுகிறவள்.
பிங்கள: செம்மை நிறம் கொண்டவள்.
யக்கரிணி: தர்ம தேவதை


??????????? ???? ???????? - ?????????? ?????????
 
16 வகை லட்சுமி

16 வகை லட்சுமி

10579981_243684665840824_906712385616196468_n.jpg





1. ஸ்ரீதனலட்சுமி:-நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.


2. ஸ்ரீவித்யாலட்சுமி:-எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.


3. ஸ்ரீதான்யலட்சுமி:- ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான் யட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.


4. ஸ்ரீவரலட்சுமி:- உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும், ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும், நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.


5. ஸ்ரீசவுபாக்யலட்சுமி:- ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மறற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்தால் சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.


6. ஸ்ரீசந்தானலட்சுமி:- எல்லா குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண் டும். தாயன்புடன் ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.


7. ஸ்ரீகாருண்யலட்சுமி:- எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர்வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.


8. ஸ்ரீமகாலட்சுமி:- நாம் நம்மால் முடிந்ததை மற்றவர் களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத் தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.


9. ஸ்ரீசக்திலட்சுமி:- எந்த வேலையும் என்னால் முடி யாது என்ற சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.


10. ஸ்ரீசாந்திலட்சுமி:- நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லட்சுமியை தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.


11. ஸ்ரீசாயாலட்சுமி:- நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் சாய்ந்து ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.


12. ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி:- எப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.


13. ஸ்ரீசாந்தலட்சுமி:- பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.


14. ஸ்ரீகிருத்திலட்சுமி:- நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீகீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.



15. ஸ்ரீவிஜயலட்சுமி:- விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.


16. ஸ்ரீஆரோக்கிய லட்சுமி:- நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும்.



Source: Hinnukkalin Prasad
 
City of Dwaraka

City of Dwaraka

Scientists were amazed at documentary of alien nature in the Hinduism text on the City of Dwaraka ruled by Lord Krishna. Western scientists could not believe the length of human civilization could go back to more than 5,000 years but the discovery of this underwater city had proven them wrong.

Not so long ago some Indian scientists accidentally discovered the lost city of Dwaraka, submerged off the north western coast of India near the Gulf of Cambay or Khambat. The first archaeological excavations at Dwaraka were done by the Deccan College , Pune and the Department of Archaeology, Government of Gujarat, in 1963. Since 1983 the Marine Archaeology Unit of the National Institute of Oceanography is engaged in the offshore exploration and excavation of the legendary city of Dwaraka.

A few years ago a team of NIOT scientists while working for British Gas in the Gulf of Cambay region were stunned to see images of objects and things, completely alien to the marine domain. Samples collected include artifacts, wood pieces, pottery materials, hearth pieces and animal bones which were sent to Manipur University, Oxford University, London, Institute of Earth Sciences, Hanover, Germany for analysis and dating. On analysis and dating of the samples collected it was found that the samples were about 9000 years old, about the same time when the Ice Age ended. Some of the artifacts discovered dated as far back as 32,000 years. Perhaps, this is the discovery of one of the oldest civilizations known to mankind.

Please read more from here, also see Videos

Lord Krishna - Dwaraka - YouTube

The lost city of Dwarka--Krishnas Capital & Greek Atlantis - YouTube

Alien Documentary found in 12,000 years old underwater city of Lord Krishna
 
குலதெய்வம்

குலதெய்வம்


குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.

ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் மாறலாம் ஆனால் அதன் சக்தி ஒரே அளவில் இருக்கும்.குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது.பிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை.

நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்கு சென்றால் மட்டும் அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும். உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒருமுறை கண்டிப்பாக . நேரில் சென்று பூஜை செய்துகொள்ளவேண்டும்.மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும்,குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய்,பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள்.ஆனால் குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது.

உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல்வைத்து படையல் போட்டு வணங்கியப்பின்னரே,அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும்.இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.


குலதெய்வம் படத்தை வாங்கிவந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.உங்களது மணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.வீடு கட்டுவதற்கும்,திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப்பின்னரே செயலில் இறங்கிட வேண்டும்.குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை.


aanmigam: ???????? ????????? ???? ?????? ???????? ?????????????? ???????????? ??????? ???? ???????? ????? ?????????????????.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top