• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My Collections

Status
Not open for further replies.
Thanjavur dancing doll

THANJAVUR DANCING DOLL

pommalattam3.jpg





Thanjavur or formerly called Tanjore, the 11th largest city of Tamil Nadu, has a rich history of art and crafts. Thanjavur is one of the most ancient cities of India whose history dates back to the Sangam period. This city is special for one more particular sense , ' the tanjore doll ' - a kind of roly-poly toy made from terracotta .These dolls draw attraction due to their dance-like continuous movement with slow-damping oscillations.


Thanjavur Dancing Dolls



Thanjavur’s name is proudly called out when it comes to India’s heritage, arts and culture. Thanjavur’s paintings, handicrafts, Tamil literature, classical dance and music, silk weaving and the dancing dolls are famous round the globe. This city is definitely a shopper’s paradise. Among all the interesting things that Thanjavur offers, the dancing doll is the most unique and exquisite one.


It is also called Thalaiyatti Bommai, the dancing dolls are traditional hand-made dolls that can be used to decorate the house or give away as gifts. These are basically a pair of a king and a queen symbolic of the many dynasties that homed Thanjavur. The heads of these dolls shake and are detachable too. The lower part of the body is bigger than the heads and as they shake, it is a delight to watch them.

History of Dancing dolls


da8a96cfc8ca1dd33bc42677c8b9c7c6_L.jpg




Talking about the history of these dolls, they are believed that it was arrived by Thanjavur in the early nineteenth century during King Saraboji’s reign. Since then this craft is being made by the creative and talented artisans of the city.


These dancing dolls of Thanjavur have now been included in the Government of India Geographical Indications Registry. This has recognized the dancing dolls’ origin to belong to the city of Thanjavur lawfully. This has been a noble step towards the protection of the heritage of Thanjavur. This registration has marked the items paper mache, sago, wood pulp and Plaster of Paris to be its core manufacturing raw materials and methods. The clay that is used in the making of these dancing dolls is taken from the banks of the river Cauvery. This fertile soil adds to the beauty of the dolls after it’s been made.

The Logic of Balance


These dancing dolls contain their core weight at the bottom most part of their body. This presents a dance like movement due to its slow oscillations. The beautiful movement of the doll’s head adds to its uniqueness.

The shops containing many such dancing dolls are mainly located around Punainallur Mariamman Temple in Thanjavur. Children find these dolls extremely fascinating and the adults find them perfect to be decorated in their show cases and show stands. So if you make a visit to Thanjavur to see its rich culture and heritage, purchasing these dancing dolls or Thalaiyatti Bommai should definitely be in your must-to-do list….

pommalattam2.jpg




THANJAVUR DANCING DOLL
 
ஞான மார்க்கமா?பக்தி மார்க்கமா?

ஞான மார்க்கமா?பக்தி மார்க்கமா?
-----------------------------------------------------------
இராமகிருஷ்ண பரஹம்சரிடம் ஏராளமான சீடர்கள் பயின்றுவந்தனர்.ஒவ்வொரு நாளும் சீடர்களுக்கு ஓவ்வொரு உபதேசம் செய்வார்.எல்லா மனிதர்களிடமும் அன்பு செலுத்தவேண்டும் என்பதை உணர்த்துவதற்க்காக சீடர்களிடம்,”நாம் இந்த பூமியில் காணும் உயிர்கள் யாவும் நாராயணின் மறு உருவமே அதனால் நாம் எல்லா உயிர்களையும் நாராயணனாக எண்ணி அன்பு செலுத்தவேண்டும்”என சீடர்களுக்கு அறிவுறுத்தினார்.


இரு நாட்கள் கழித்து சமைப்பதற்கு விறகு சேகரிக்க சீடர்கள் காட்டுக்குள் சென்றனர்.அப்போது மதம் கொண்ட யானை ஒன்று இவர்களை தாக்க்குவதற்கு ஓடி வந்தது.எல்லா சீடர்களும் உயிரை காப்பாற்றிகொள்ள ஓடினர் ஆனால் ஒரு சீடர் மட்டும் அசையாமல் அந்த இடத்திலேயே நின்றார்.



பாதுகாப்பாக நின்ற சீடர்,”யானை தக்கப்போகிறது ஓடி வா”என்றா.ஆனால் அந்த சீடரோ”நாம் குரு நாதர் சொல்லியிருக்கிறார் எல்லா உயிர்களும் நாராயணனின் மறு உருவம் என்று அதனால் யானை நாராயணன் வருகிறார் வரமாட்டேன்” என சொல்லிக்கொண்டியிருக்கும்போதே யானை பலமாக தாக்கி காயமுற்றார்.
அவரை இராமகிருஷ்ணரிடம் தூக்கி வந்தனர்.காயத்திற்கு மருந்து போட்டுகொண்டே சீடரிடம்,யானை தாக்க வரும்போது ஓடியிருக்கலாமே என வினவுகிறார்.அதற்கு அந்த சீடர் குருவிடம்,”நீங்கள்தானே சாமி சொன்னீர்கள்,எல்லா உயிரும் நாராயணனின் மறு உருவம் என்று அதானால் யானை நாராயணன் தாக்க மாட்டார் எனஓட வில்லை”என்றார்.அதற்கு இராமகிருஷ்ண பரஹம்சர்”அந்த யானை நாராயணன் தாக்க வரும்போது,பக்கத்தில் இருக்கு சீடர் நாராயணன் சொன்னாரே அதை நீ கேட்டியிருக்கலாமே”என்றாராம்.


இந்த கதை நகைச்சுவையாக தெரிந்தாலும் ஆழ்ந்த பொருளுள்ளது.நாம் ஒரு விசயத்தை கடைபிடிக்கும்போது அது ஞானம் கலந்து இருக்கவேண்டும்.தெய்வ பக்தியை கடைபிடிப்பதாகட்டும்,ஆன்மிக கோட்பாடுகள் மற்று சமயம்சார்ந்த நம்பிக்கைகளை கடைபிடிக்கும்போது அதில் கூறப்படும் விசயங்களை கண்மூடித்தனமாக கடைபிடிக்காமல்,ஞானத்தோடு அலசி ஆராய்ந்து கடைபிடிக்கவேண்டும்.வாழ்வில் தன்னம்பிக்கையையும்,வெற்றியையும் பெறுவதற்கு ஞானம் கலந்து பக்தியே முக்கியமாகும்.


தெய்வ பக்தி மட்டும் என்றில்லை,நாம் செய்யும் வேலையாக இருக்கட்டும்,தொழிலாக இருக்கட்டும் வேலையை நேசித்தலும் பக்திதான்.தொழிலை நேசித்தலும் பக்திதான் அதனால் வேலை பக்தியாக,தொழில் பக்தியாக இருக்கட்டும்,அதை நல்ல ஞானத்தோடும்(அறிவு சார்ந்து) அர்பணிப்போடும் கடைபிடித்தால்,நாம் அதன் மீது கொண்டுள்ள பக்தியும், நம்பிக்கையும் கண்டிப்பாக நமக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும்.


அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
பணப்பெட்டி வைக்கும் இடம்;

பணப்பெட்டி வைக்கும் இடம்;
---------------------------------------------------
வாஸ்து என்பது ஒரு நவீன அறிவியல் ஆகும்.இந்த பூமி எண்ணற்ற சக்திகளை தன்னகத்தே கொண்டுள்ளது.நம்முடைய பூமிக்கும்,பிரபஞ்சத்திற்கும் எப்போதும் தொடர்பு இருந்துகொண்டே இருக்கிறது.பிரபஞ்சத்தில் எண்ணற்ற கோள்கள் இருந்தாலும்,பூமிக்கு அருகே உள்ள 9 கோள்களின் செயல்பாடுகள் பூமியில் உள்ள மனிதர்களை பாதிக்கக்கூடியவை அதன் அடிப்படையிலேயே ஜோதிட கலை அமைந்த்து.


வீட்டின் தென்மேற்கு திசையில் குபேர திசை என்று சொல்லக்கூடிய வடக்கு திசையை பார்த்து அல்லது நேர் கிழக்கு திசையை பணப்பெட்டியை வைக்க வேண்டும்..அதேபோல் வடகிழக்கு திசையிலும் அமைக்கலாம்.அலுவகத்திலும் இதே முறையை பயன்படுத்தி பணப்பெட்டியை வைக்கலாம்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
ஈஸ்வர தத்துவம்

ஈஸ்வர தத்துவம்


நாம் அனுபவிக்கும் இந்த உலகை பராபிரகிருதி எனும் இறைத் தத்துவமாகவும், அபராபிரகிருதி எனும் சடமான தத்துவமாகவும் பகவான் இரண்டாகப் பிரிக்கிறார். இந்த உடல், உலகை அறியும் சடப்பொருளாக உள்ளது. இந்த சட தத்துவமும் (அபராபிரகிருதி), இறைத்தத்துவமும் (பராபிரகிருதி) நானே என அறிமுகப்படுத்துகிறார் பகவான். பராபிரகிருதி என்பது மேலான, நிலையான, சத்தியமான இறைத்தத்துவம் ஆகும். அபராபிரகிருதி என்பது கீழான நிலையற்ற சடதத்துவம் ஆகும். சடதத்துவம் மாயையின் வசத்திற்குட்பட்டது. மேலும் இது நிலையற்றதும் அழியக்கூடியதும் ஆகும் (மித்யா). இந்த மாயை பகவானின் வெளிப்பாடே என்று ஈஸ்வர தத்துவத்தை கண்ணன் விளக்குகிறார்.



பக்தி / பக்தன்


பகவான் தன்னை வழிபடுபவர்கள் மற்றும் வழிபடாதவர்கள் என இரண்டாக பிரிக்கிறார். மேலும் செம்மையான மனம் இல்லாதவர்கள் பகவானை வழிபட மாட்டார்கள் என்று இடித்துரைக்கிறார். பகவானை வழிபடும் பக்தர்களை நான்காக பிரிக்கிறார். 1. தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு மட்டும் பகவானை வழிபடும் பக்தர்கள். 2. ஆபத்திலிருந்தும், நோய்களிலிருந்தும் மற்றும் துயரங்களிலிருந்தும் தங்களை காத்துக் கொள்வதற்கு மட்டும் பகவானை வழிபடும் பக்தர்கள். 3. பகவானையே அடைய வேண்டும் எனும் நோக்கில் பகவானை வழிபடும் பக்தர்கள். 4. பகவானை அறிந்து கொள்ள சாதனை செய்யும் ஞானி பக்தன். இந்த ஞானி பக்தனே அனைத்து பக்த்ர்களில் உயர்வானவன் என்று பகவான் ஞானியை புகழ்கிறார்.




Source: Hindu Prasad
 
காயத்திரி மந்திரம்

காயத்திரி மந்திரம்


SO_171438000000.jpg



காயத்திரி மந்திரம் என்பது சூரிய வழிபாட்டைத்தான் குறிக்கும்.

ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்

அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நாம் தியானிக்கிறோம். பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தி அது. அந்தப் பரம சக்தி நமது புத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பது இதன் பொருள்.

24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. காயத்ரி சந்தசமம் மாத எனப்படும்.

இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அதற்காக வேண்டும் என்றே தெரிந்தே பாவங்களைச் செய்து விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடைக்காது.


காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரி க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி க்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.

காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது.

இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும், பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களுள்ள காயத்ரி மந்திரமும் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும், இரண்டாவது வியாஹ்ருதிகளிலும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்திலும், நான்காவது பர்க்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும், ஐந்தாவது தியோ யோ ந; ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி சொல்ல வேண்டும்.

மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008 அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன் கிடையாது. முறையாக 27 தடவை முழு மன ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே பலன் கிடைக்கும்.

காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும் முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும், மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும், மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும்.

தினமும் குறைந்தது 108 முறை ஜபிக்கவும். ஆபத்துக் காலத்தில் 28 அல்லது 10 தடவை ஜபிக்கவும். உடலும், உள்ளமும் தூய்மையான குழந்தைகளும், வயதான பெண்களும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.

காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு:


யோ -எவர்
ந -நம்முடைய
தியோ -புத்தியை
தத் -அப்படிப்பட்ட
ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ
தேவஸ்ய -ஒளிமிக்கவராக
ஸவிது -உலகைப் படைத்த
வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான
பர்கோ -சக்தியை
தீமஹி -தியானிக்கிறோம்

நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.

???????????, ??????????, ??????????, ????????????
 
பூஜையில் மணக்கும் சாம்பிராணி எவ்வாறு தய&

பூஜையில் மணக்கும் சாம்பிராணி எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா?


TN_130211142529000000.jpg



இறைவழிபாட்டில் சாம்பிராணி முக்கிய இடம் பெறுகிறது. பாறை போல் இறுகிக் கிடக்கும் சாம்பிராணிக் கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாகிப் போகிறது. அதுபோல், கடினமாகக் கிடக்கும் துன்பங்கள் எல்லாம், அக்னி உருவாக உள்ள இறைவனின் அருள் கடாட்சம் கிட்டியவுடனே, புகையைப் போன்று லேசாகி விலகிவிடும் என்பதற்காகவே பூஜையில் சாம்பிராணி பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு இறைவழிபாட்டுக்குப் பயன்படுத்தப்படும் ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன; அவற்றின் மருத்துவ குணங்கள் என்ன என்பது பலருக்குத் தெரியாது. சாம்பிராணி, பாஸ்வெல் லியா செர்ராட்டா எனப்படும் தாவர வகைக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். பிரா ங்கின்செ ன்ஸ் எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் தான் நாளடைவில் காய்ந்து, கடினமாகி சாம்பிராணி என்ற பெயரில் நமக்குக் கிடைக்கிறது.

ஆவியாக்கப்பட்ட சாம்பிராணியில் போஸ்வெல்யா, டர்பென்டைன் உள்ளிட்ட எண்ணெய்களை எடுக்கின்றனர். இதிலிருந்து வார்னிஷ் தயாரிக்க ப்படுகிறது. சோப்பு தயாரிப்பிலும் சாம்பிராணி பயன் படுத்தப்படுகிறது. சாம்பிராணி கிடைக்கும் பிராங்கின்சென்ஸ் மரத்திலிருந்துதான் கோந்தும் கிடைக்கிறது. இந்த கோந்துடன் தண்ணீர் சேர்த்து பெண்டோஸ் சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. இது இருமல், காமாலை, நாள் பட்ட புண், சொறி, சிரங்கு, படர்தாமரை போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.


Temple News | News | Dinamalar Temple | ???????? ???????? ?????????? ??????? ?????????????????? ?????????
 
கோயில்களில் மணி அடிப்ப‍தும் சங்கு ஊதுவ த

கோயில்களில் மணி அடிப்ப‍தும் சங்கு ஊதுவ தும் ஏன்? ஓர் அரியதொரு விளக்க‍ம்


10454343_655700257854193_5891150077908254461_n.jpg




க‌டந்த கால வரலாற்றில் சங்கு ஊதுவதும் மணியடிப்ப‍தும் சுப‌ சகுனமே தவிர அபசகுனம் அல்ல‍! சங்கு ஊதுவது என்பது தற் காலப் பேச்சு வழக்கில் அபசகுனம் போன்ற ஒரு பிர மையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் கோ வில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்யும் போது சங்கை ஊதுவது பலகாலமாக நம் நாட்டில் இருந்து வருகிறது. பூஜையின் போது மட்டுமல்லாமல் மங்கல நிகழ்ச்சிகளின் போதும், போர் துவங்குவதைக் குறிக்கவோ, போரில் ஒரு படை வெற்றி அடைந்ததை அறிவிக்கவோ
சங்கு ஊதப்படுகிறது. மகாகவி பார தியாரும் “சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே” என்று பாடி, வெற்றி யைப் பறைச்சாற்றும் பொரு ளாகச் சங்கைக் கொண்டிருக்கிறார்.



மஹாபாரதப் போரின்போது காலை யில் போர் ஆரம்பிக்கும் போதும் மாலை சூரியாஸ்தமனம் ஆனவுட ன் போரை முடிக்கும் போதும் சங்கு ஊதியதாக நாம் படிக்கிறோம். பஞ் சபண்டவர்களும், கிருஷ்ண பரமாத் மாவும் வைத்திருந்த சங்குகளுக் குத் தனித்தனி பெயர்கள் இருந்தன. தருமரிடம் இருந்த சங்கின் பெயர் அனந்த விஜயம். பீமனது சங்கின் பெயர் பவுண்டிரம். அர்ச் சுனனிடம் இருந்த சங்கு தேவதத்தம். நகுலனது சங்கின் பெயர் சுகோஷம். சகாதேவனது சங்கு
மணிப்புஷ்பகம். ஸ்ரீ கிருஷ் ணரிடமிருந்தது பாஞ்ச ஜன்ய ம் என்ற பிரபல சங்கு.

சங்கு தோன்றியதைப் பற்றி புராணங்களில் ஒரு கதை சொல்ல ப்படுகிறது. சங்காசு ரன் என்னும் அசுரன் தேவர்க ளைப் போரில் மூழ்கடித்து அவர்களிடம் இருந்து வேத ங்களைத் திருடிக் கொ ண்டு கடலுக்கு அடியில் பதுங்கிக் கொண்டான். தேவர்கள் மகா விஷ்ணுவிடம் போய் முறையிட அவர் மத்ஸ்ய (மீன்) அவதாரம் எடுத்து சங்காசுரனைக் கொன்றா ர். அப்போது சங்காசுரனின் தலை மற்றும் காதில் இருந்து சங் கைப் போன்ற தோற்றம் உள்ள எலும்பி னை எடுத்து ஊத அதில் இருந்து ’ஓம்’ என்ற ஓசை எழுந்தது என்றும் அந்த ஓசையில் இருந்து வேதங்கள் வெளிப் பட்டன என்றும் சொல்லப்படுகிறது.

சங்காசுரனிடமிருந்து தோன்றியதால் தான் அதற்கு சங்கு என்ற பெயர் ஏற்பட் டது. மகாவிஷ்ணு தன் நான்கு கைகளி ல் ஒன்றில் பாஞ்சஜன்யம் என்ற அந்த சங்கை எப்போதும் ஏந்திக் கொண்டி ருப்பார். தர்மம் என்கிற உயர் அம்சத்தை
சங்கு குறிப்பதாகவும் எனவே தர் மத்தை நிலை நாட்டும் இறைவ ன் சங்கைத் தன் கையில் எப்போ தும் ஏந்திக் கொண்டிருக்கிறார் எ ன்றும் பெரியோர் கூறுகிறார்கள். சங்கையும், சக்கரத்தையும் ஏந்தி க் கொண்டிருப்பதால் அவருக்கு ‘சங்கு சக்ரதாரி’ என்ற பெயர் உண் டு.

இவ்வாறு சங்கு உருவானதால் சங்கொலி அதர்மத்தின் அழிவை யும், தர்மத்தின் வெற்றியையும் காட்டுகிறது. சங்கு பிறந்த கதைக் கேற்ப சங்கை நம் காதருகில் வைத்துக் கேட்டால் கடல் அலைகளின் ஓசையை நம்மால் கேட் க முடியும்.

வேதங்களின் பொருளான ஓ ம்கார மந்திரத்தைத் தருவதா லும், தர்மத்தை நிலைநாட் டும் பொருளைத் தருவதாலு ம் பூஜையறையில் இறைவ ன் முன்பு வைத்து வணங்கப் படும் அளவு சங்கிற்கு சிறப்பு உண்டு. மங்கலகரமான பூ ஜை நேரங்களில் அமங்கல மான வார்த்தைகளோ, பேச்சுக்களோ பக்தர்களின் காதில் விழு ந்து பக்தி மனோபாவத்தைக் குறைத்து விடாதிருக்கவும் சங்கு ஊதுவது உதவுகிறது.

மேலும் சங்கு ஊதுவது ஆன்மி க ரீதியாக அல்லாமல், ஆரோக் கிய ரீதியாகவும் உதவுகிறது. சங்கு ஊதும் போது நாதமானது மூலாதாரத்தில் இருந்து எழுகி றது. அதனால் சங்கு ஊதுவதன் மூலம் மூலாதார சக்ரா நன்றா க செயலாக்கம் பெறுகிறது.

மேலும் சங்கு ஊதுவதினால் மூச்சு ஆழப்பட்டு, நுரையீரல் செய ல்படுவதும் சீராகிறது. சங்கி ற்கு உடலைப் பாதிக்கும் நுண்கிருமி களை அழிக்கும் தன்மை உள்ளது என்று நம் முன்னோர் நம்பி னார்கள். அதனால் தான் தீர்த்தம் சங் கில் தரப்படுவது விசேஷமா கக் கருதப்பட்டது. குழந்தை களுக்கும் அக்காலத்தில் மருந்தையும், பாலையும் சங்கில் ஊற்றித் தரும் வழ க்கம் நம் வீடுகளில் இருந்தது.

கோயில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்யும் போது மணி அடிப் பதும் கூட சங்கு ஊதுவதைப் போன்றே மங்கல ஒலியா கக் கருத ப்படுகிறது. மணி அடிக்கும் போதும் ஓம்கார ஒலி ஒலிக்கிறது. பூஜை நே ரங்களில் தெய்வீகசூழ் நி லைக்குப் பொருந்தாத ஓசை களை மூழ்கடித்து இறைவ னிடம் மனம் லயிக்க மணி அடிப்பதும் உதவுகிறது.

கோயில்களில் பெரிய பெரிய மணிகள் தொங்க விடப்பட்டிருப் பதை நாம் பார்த்திருக்கிறோம். அவற்றை அடிப்பதில் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆர்வம் காட்டு வதுண்டு. அந்த மணிகளை அடிப்பதன் காரணம் குறித்து சிலர் தான்தோன்றி த்தனமாக ஏதே தோ சொல்வது உண்டு. இறைவனை உறக்கத்தில் இருந்து எழுப்பு வதற்காக மணி அடிப்பதாகவும், தங்கள் வருகையை இறைவனு க்குத் தெரியப்படுத்துவதற்காக மணி அடிப்ப தாகவும் சிலர் அறி யாமையால் சொல் வதுண்டு. எழுப்பி தெரியப்படுத்த வே ண்டிய அவசியம் இறைவனுக்கு இல் லை. மணி அடிப்பது அறியாமை உறக்க த்தில் ஆழ்ந்து கிடக்கிற நம்மை அதில் இருந்து தட்டி எழுப்பத்தான். அந்த ஓங் கார ஒலியைக் கேட்டவுடன் இறையுண ர்வு எழும்பி நம் மனதினை ஒருநிலைப்படுத்த நாம் செய்யும் ஆய த்தம் தான் மணியை அடிப்பதன் உண்மைப் பொருள்.


பண்டைய காலங்களில் ஒவ் வொரு கிராமத்திலும் ஒரு பிரதான கோயில் இருக்கும். இறைவனுக்குச் செய்யப்ப டும் பூஜைகளின் போது கோ யில்களில் இருக்கும் பெரிய மணிகள் அடிக்கப்படும், சங்கு ஊதப்படும். அந்த ஒலி அந்தக் கிராமம் முழுவதும் கேட்கும். பூஜையில் கலந்து கொள்ள ஆலயத்திற்கு நேரி ல் செல்லும் சூழ் நிலை எல்லோருக்கும் இருக்கும் என்று சொல் ல முடியாது. வே லை உள்ளவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் போன்றவர்கள் பூஜையில் பங்கேற்க முடியாது.

கோயில் மணியின் பலத்த ஒலியும், சங்கொலியும் கேட் கும் போது வேலை செய்பவர் கள் தங்கள் வேலையை அப் படியே நிறுத்தி விட்டு தாங்க ள் இருக்கும் இடத்திலேயே இறைவனை கண நேரம் தொ ழுவார்கள். அதே போல் உடல் நலம் குன்றியவர்களும் அந்த நேர த்தில் வீட்டில் இருந்தபடியே கண நேரம் இறைவனை வணங் குவார்கள். இப்படி மானசீகமாக இருக்கும் இடத்திலேயே இறைவ னைத் தொழும் மங்கலமான சூழ் நிலையை மணிஒலியும், சங் கொலியும் ஏற்படுத்தித் தந்திருக் கிறது. ஊருக்கே கேட்கும் வண் ணம் பெரிய பெரிய ஆலய மணிக ளை அடிப்பதன் உள்ளார் ந்த இந்த அர்த்தம் மிக உன்னதமானது.
கிராமமானாலும் நகரமானாலும் நீங்கள் இப்படிக்கோயில் மணி யோசையும், சங்கொலியும் கேட் க நேர்ந்தால் மேலே சொன்ன காரணத்தை நினைவு கொள்ளு ங்கள். இறைவனை நினைக்க ஒரு நல்ல சந்தர்ப்பமாக அதை எடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் இருக்கும் இடமே கோயில். அந்த மணியோசையும், சங்கொ லியும் உங்களுக்காகவே ஒலிக் கின்றன. எல்லாவற்றையும் ஒரு கணம் ஒதுக்கி வைத்து விட்டு எல்லாம் வல்ல இறைவனை ஒரு கணம் மானசீகமாக வணங்குங் கள். எத்தனையோ விதங்களில் நேரத்தை நாம் வீணாக்குகிறோ ம். அப்படி இருக்கையில் அந்த ஒரு கணத்தில் மனதை இறைவ னிடம் திருப்புவதால் நம் நேரம் பெரிதாக வீணாகி விடப் போவ தில்லை. மாறாக கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கிப் பெறும் பெரும்பயனை நாம் அந்தக் கணத்தில் பெற்று விடுகிறோ ம் என்பதை நினைவில் வையுங்கள்.


தி ன த் த ந் தி நா ளி த ழி ல் . . .





Source:Nagarathar
 
அரைஞாண் கயிறு

அரைஞாண் கயிறு

இடுப்பில் கட்டும் கயிறை இடுப்பில் கட்டும் கயிறை அரைஞாண் கயிறு என்பர். அரை என்றால் இடுப்பு;ஞாண் என்றால் தொங்குவது. குழந்தை பிறந்த ஐந்தாம் நாளில், நீராட்டி, சுபவேளையில் இடுப்புக் கயிறை அணிவிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது. கயிற்றில் விஷ்ணுவின் பஞ்சாயுதங்களான சங்கு, சக்கரம், வாள், கோதண்டம், கதாயுதம் பொறித்த காசுகளை அணிவிப்பர். இதனால், குழந்தைகளுக்கு பாதுகாப்பும், சுபகிரகங்களின் ஆதிக்கம் உண்டாகும் என்பதும் நம்பிக்கை.. என்பர்.

aanmigam: ??????? ?????
 
தக்ஷன் (Dakshan)

தக்ஷன் (Dakshan)


ப்ரம்மாவின் வலக் கட்டை விரலிலிருந்து வந்தவன். இடக் கட்டைவிரலிலிருந்து வந்த "அஸ்கினி"/வீராணி" யை மணந்து சதி என்ற பெண்ணை அடைந்தான். இவனும் ஸ்ருஷ்டி தொழிலில் ஈடுபட, இவனையும் தக்ஷ ப்ரஜாபதி என அழைத்தனர். இரண்டு தக்ஷண்களை புராணங்கள் கூறுகின்றன. தக்ஷயக்ஞம் முடிந்ததும் ஒரு தக்ஷனின் கதை முடிவடைகிறது. அதாவது இந்த தக்ஷன். தன் மகளை(சதியை) யாகத்திற்கு அழைக்காமல் போக,அவளே வர, அவளை அவமானபடுத்த, சிவனின் ஆணைப்படி, வீரபத்ரரும், பத்ரகாளியும் சென்று அவனை அழிக்கின்றனர்.

உலகில் காடுகள் மண்ட, காற்று செல்ல கூட இடமில்லாமல் போக, பரஸெதசர்கள் தங்கலின் தவ வலிமையால் நெருப்பை உண்டாக்கி காடுகளை அழித்தனர்;; அப்போது மரங்களின் தலைவனான சந்திரன் இடைமறித்து, அவர்களுக்கு மாரிஸா என்ற பெண்ணை உருவாக்கி ,அவளை பர்ஹிஸ் முனிவரின் பத்து பிள்ளைகளுக்கும்(ப்ரஸிதாஸர்கள்) மணமுடிக்க, அப்போது பிறந்தவன் மற்றொரு தக்ஷன். இவனிடம் ப்ரம்மா ப்ரஜா தொழில் செய்ய சொல்ல, இவன் மூலம் பல கடவுள்கள் தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள்,பாம்பினங்கள் வந்தன. இவர்கள் இனப்பெருக்கம், செய்யாததால் மறுபடியும் அஸ்கினி மூலம் 5000 பிள்ளகைளை உருவாக்கினான். அவர்கள்"ஹர்யஸ்வர்கள்". இவர்களை ஸ்ருஷ்டி தொழில் செய்யவிடாமல், நாரதர் அவர்களை திசை திருப்ப, அவர்கள் திரும்பவேயில்லை. ஆக மறுபடியும் 1000 பிள்ளைகளை (ஸபலாஸ்வர்கள்) உருவாக்க, அவர்களையும் நாரதர் திசை திருப்பி விட்டார். கோபமுற்ற தக்ஷன், நாரதரை மூவ்வுலகையும் சுற்றி திரிவாய், என சபித்தான். பிறகு தக்ஷன் அஸ்கினி மூலம் 60 பெண்களை பெற்றான்.

அவர்களை கீழ்கண்டாவறு மணமுடித்தான். 10--தர்மதேவன்;; 13--கஸ்யபர்;;

27--சந்திரன்(ஸோமதேவன்);;4--அரிஷ்டநேமி;;2--பாஹூபுத்ரன்;;2--ஆங்கீரஸமுனிவர்;; 2--க்ரஸாஸ்வர்;; இதை தவிர தக்ஷன் தன் மனைவி ப்ரஸுதி(உத்தானபாதரின் தங்கை) மூலம் 24 பெண்களை அடைந்தான். அவர்களில் 13 பெண்களை தர்மதேவன் மணந்தான். மற்றவர்களை;; க்யாதி--ப்ருகு;; சதி--சிவன்; ஸம்பீதி--மரீஸி;;ஸ்ம்ருதி--ஆங்கீரஸ்;; ப்ரீதி--புலஸ்தியர்;; க்ஷமா--புலஹ;;ஸந்ததி--க்ரௌது;; அனுசுயா--அத்ரி;; ஊர்ஜா--வசிஷ்டர்;; ஸ்வாஹா--அக்னி;; ஸ்வதா--பிதுர்க்கள்;;; (விஷ்ணு புரா--15).

தக்ஷனை கொன்றதற்கு பல காரணங்கள் உள்ளன. துருவாசர்(அத்ரியின் மகன்) ஜகதாம்பிகையிடமிருந்து தெய்வீக மாலை பெற்று வர, அதை தக்ஷன் கேட்க கொடுத்தர். அதை அவன் தன் படுக்கை அறையில் வைக்க, அதன் நறுமணத்தால் காமம் மேலிட, மனைவியுடன் புணர்ந்தான். இதை அறிந்த சிவனும் பார்வதியும் அவனை சபிக்க, அதனால் இவன் அவர்களை யாகத்திற்கு கூப்பிடவில்லை.அந்த யாகத்தின் பெயர்"பரஹஸ்பதிசவன";;


மற்றொரு காரணம் ;;சிவன் ப்ரம்மாவின் தலையை கொய்து தன் கையில் வைத்து, ஆடியதால் புனிதமற்றவன் ஆனான் என எண்ணி தக்ஷன் அவரை கூப்பிடவில்லை. தக்ஷன் இறந்த பிறகு அவன் தலையில், ஆட்டின் தலையை வைத்தனர். சந்திரன் இவனின் 27 பெண்களை மணந்தாலும், ரோஹிணி மேல் அளவிலா காதலுடன் வாழ்ந்தான்;; இதை மற்ற பெண்கள் பலமுறை தக்ஷனிடம் கூற, அவன் கோபத்தில் சந்திரனை வ்யாதியுள்ளவனாக இருப்பாய் என சபித்தான்;;; இவனுக்கு "கன்" என்ற பெயரும் உண்டு. ஏனெனிலிவனுக்கு பத்து தகப்பன்கள். உலகிலுள்ள அத்தனை ஜீவராசிகளும் இவன் மூலமே உண்டாகின. இவன் ப்ரம்மாவின் சபையிலிருந்தவன்.

Tamil Thedal
 
காமாட்சி விளக்கு;

காமாட்சி விளக்கு;
-------------------------------
*ஒவ்வொரு இல்லத்திலும் கட்டாயம் இருக்க வேண்டியது லெட்சுமி விளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஆகும்.


*எந்த ஒரு பூஜை செய்யும் முன் காமாட்சி விளக்கை பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபட வேண்டும்.


*புதுமனை புகும் போதும், மணமக்கள் மணப்பந்தலை வலம் வரும்போதும், எல்லா இருள்களையும் நீக்கியபடி, அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி முன்னால், பக்தியுடன் ஏந்திச் செல்லப்படும் விளக்கும் காமாட்சி அம்மன் விளக்கே.


*புதுப்பெண் புகுந்த வீட்டுக்கு வரும்போது, "நிறைநாழி'' எனப்படும் படியில் நெல் வைத்து அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கு வைத்து அதில் மீது தீபம் ஏற்றவேண்டும்.


*சுமங்கலி பெண்கள் செவ்வாய்,வெள்ளி காலையில் குளித்துவிட்டு தாய் நிலையில் "நிறைநாழி'' வைத்தால் அந்த இல்லத்தில் செல்வம் பொங்கும்.


*பெண்ணுக்கு சீர் வரிசைகளை தரும்போது காமாட்சி அம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்க வேண்டும்.


*நம்முடைய தமிழர் வாழ்வில் காமாட்சி விளக்கு ஓர் அங்கமாகவும்,மங்கலப் பொருட்களில் இன்றியமையாத ஒன்றாகவும் விளங்குகிறது.


அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
கிருஷ்ணரை வழிபடுவது எப்படி?

கிருஷ்ணரை வழிபடுவது எப்படி?

3a31e2f6-0694-4bf3-ade8-e12cd334b15b_S_secvpf.gif



கிருஷ்ண பரமாத்வை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா? ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன் வழிபடுவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை வரையவும். ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும். கிருஷ்ணகமல் பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும்.

மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும். அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும். பூக்களை நீள்வட்ட வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும். சந்தனம், தாழம்பூ, மல்லிகை, சம்பா, சாய்வாலா, ஆம்பர் மணம் கொண்ட ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும்.

வாசனை திரவியங்களில் சந்தனம் உபயோகிக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும். கிருஷ்ண பகவான் அஷ்டமி திதியில், ஸ்ராவண மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் நடுஇரவில், ரோகிணி நட்சத்திரத்தில் வ்ருஷப ராசியில் பிறந்தார்.

கோகுலாஷ்டமி திதியில், கிருஷ்ண தத்துவம் இப்பூவுலகில் 1000 மடங்கு அதிகம் ஆகியுள்ளது. மீதி நாட்களைக்காட்டிலும் அன்றைக்கு கிருஷ்ண தத்துவம் அதிக செயலாற்றலைக் கொண்டிருப்பதால் `ஓம் நமோ' பகவதே வாசுதேவாய' என நாமஜபம் செய்தால் கிருஷ்ணரின் அருள் நமக்கு அதிக பலனைக் கொடுக்கும்.


????????? ????????? ??????? || krishna worship
 
பீஷ்மர் சொன்ன கதை

பீஷ்மர் சொன்ன கதை




அரசன் யாருடன் உறவு கொள்ள வேண்டும். அந்த உறவு எத்தன்மையானதாக இருக்க வேண்டும் என்பது குறித்த தர்மனின் கேள்விக்கு பீஷ்மர் அவனுக்கு எலி,பூனை, கீரி, கோட்டான், வேடன் அடங்கிய கதை ஒன்றைச் சொல்கிறார்

காட்டிலே ஒரு வேடன் மாலை வேளையில் வலை விரித்துச் செல்வான். இரவு அதிலே சிக்கும் விலங்கினை தன் வேட்டைப் பொருளாக மறுநாள் காலையிலே எடுத்துச் செல்வான் அப்படி அவன் ஒரு நாள் விரித்த வலையில் ஒரு பூனை சிக்கியது.

காலையிலே அந்தப் பக்கம் வந்த எலி ஒன்று பூனை வலையிலே சிக்கியிருப்பதை பார்த்து ஆனந்தம் கொண்டது. “அப்பாடா பூனை சிக்கிச்சி. வேடன் வந்து இந்தப் பூனையைக் கொண்டு செல்வான். நாம இனிமே சுதந்திரமா இருக்கலாம் “ என நினைத்த எலி குதியாட்டம் போட்டது. அப்போது அந்த எலியைப் பிடித்துவிடும் நோக்கில் ஒரு கீரி பாய்ந்து வந்த்து. ஒரு கோட்டானும் வானில் இருந்து எலியைக் குறிவைத்துப் பறந்து வந்தது. பூனைத் தொந்தரவு இருக்காது என்ற எலியின் ஆனந்தம் ஷண நேரம் தான் நிலைத்திருந்தது. ஓடி சென்று வலையில் ஒளிந்தது.

அங்கிருந்த படி பூனையிடம் பேசியது.

”பூனையாரே !. நான் உங்களை இந்த வலையின் பிடியிலிருந்து விடுவிக்க தயார்.ஆனால் அதற்காக நான் உங்கள் அருகில் வந்த்தும் நீங்கள் என்னை லபக்கென கடிக்கக் கூடாது”
எலியின் இந்த யோசனை அதன் பயத்தின் காரணமானது. அதற்கு, பூனை, கீரி, கோட்டான் என மூன்று விரோதிகளை ஒரே நேரத்தில் எதிர் கொள்ள் திராணியில்லை. எதிரியில் ஒருவர் இப்போது ஆபத்தில் இருக்கிறார். அவருடன் நாம் தற்காலிக நட்பு கொண்டு அவரை விடுவித்து அதன் மூலம் தானும் மற்ற இரண்டு எதிரிகளிடமிருந்து தப்ப ஒரு வாய்ப்பு. இப்படியான சிந்தனை எலியுடையது.

எலியின் யோசனையினைப் பூனை ஏற்றது. எலி வேகமாக வலையிலிருந்து ஓடி வந்து பூனையின் மடியில் படுத்தவாறு வலையினை தன் கூர்மையான பல்லால் கடித்து வலையினை அறுக்கத் தொடங்கியது.

எலி இப்போது பூனையுடன் நட்பு கொண்டது கண்ட கீரியும், கோட்டானும் அங்கிருந்து விலகின.

பூனை எலியிடம், “என்னப்பா இத்தனை மெதுவாக கடிக்கிறாய். வேடன் வருவதற்குள் நான் தப்ப வேண்டாமா ‘ என்றது

“ நான் காரணமாகத்தான் மெதுவாக செய்கிறேன். அதோ தெரிகிறதே ஒரு ஒற்றையடிப்பாதை அது வழிதான் வேடன் வருவான். அவன் தொலைவில் வரும் போதே இங்கிருந்து பார்த்துவிடலாம். அவன் வருவதற்கு முன்பே நான் இந்த வலையினை முழுவதும் கடித்து உன்னை விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடமாட்டாய் என்பது என்ன நிச்சயம். வேடன் வந்தபின் அவன் வலையிலே நீ சிக்கியிருப்பதைப் பார்ப்பான். உடனே விரைந்து இந்த இட்த்தை அடைய வேகம் கூட்டுவான். நான் அந்த சமயம் பார்த்து உன்னை முழுவதும் விடுவித்தால் உன் கவனம் அவனிடமிருந்து எப்படியாவது தப்ப வேண்டும் என்பதில் இருக்கும் . என்னைக் கடித்து விழுங்க வேண்டும் என்ற எண்ணம் உனக்கு அப்போது வராது”

அதே போல் தூரத்தில் வேடன் தலை தெரிந்த்து. அவனும் வலையிலே பூனை சிக்கியிருப்பதைப் பார்த்துவிட்டான். நடையிலே வேகம் கூட்டினான், எலியும் தன் கடிக்கும் வேகத்தை அதிகப்படுத்தியது. டக்கென வலை முழுமையாக அறுந்த்து. பூனையும் எலியும் வேடனிடம் பிடிபடாமல் ஓடினர்.

நெடுந்தூரம் ஓடிக் களைத்தனர்.

ஓர் ஆற்றங்கரையில் நின்றனர்.

பூனை எலியினை நன்றிப் பெருக்குடன் பார்த்து, ”தக்க சமயத்தில் என்னைக் காத்தாய். நான் இனி உன் நண்பன். என் பூனை இனமே உன்னை ஒன்றும் செய்யாது. வா இருவரும் இணைந்தே இந்தக் காட்டிலே வாழலாம்” என்றது.

”இதோ பாரப்பா.. கீரியிடமிருந்தும் கோட்டானிடமிருந்தும் தப்பிக்கவே
உன்னிடம் வந்தேன். நாம் நட்பு கொள்வதென்பது இயற்கையாகாது. காரணம் என் இனம் உன் இனத்தின் உணவு. அது தான் இயற்கை. அதை உன்னால் மாற்ற முடியாது.

அது போல உன் பூனை இனமே என்னை நட்பாக ஏற்கும் என்பது சாத்தியமில்லாத விஷயம். அப்படி உன் இனம் சார்பாக ஒரு உத்திரவாத்த்தினை நீ எப்படித் தரமுடியும். நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ள உன்னிடம் வந்தேன். நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ள என் உதவியை ஒப்புக் கொண்டாய். இது அவ்வளவு தான்.” எனச் சொல்லி வேகமாக ஓடி மறைந்தது .

???????????????? ??????? ??????: ??????? ????? ??? ( ??? ?????? 3)
 
Grief of Yudhishtira !!

[FONT=&quot]Grief of Yudhishtira !!


Rishi Vaishampayana continued “A massive crowd of People of Varanavarth assembled in search of sons of Pandu, witnessed the gigantic fire in the Palace, shortly they realized that the palace was made out of wax and other inflammable materials constructed by Purochan by the command of deceitful plan of Duryodhana, after a long struggle to put off the fire they found that Purochan and his family was killed in the fire accident. The people of Varanavarth echoed that it was the plan of wicked Duryodhana to kill the sons of Pandu, it must be a wisely conceived plan of Duryodhana and Dhrutharashtra to kill the Pandavas, or Dhrutharashtra must have opposed the treacherous plan of his son. They also suspected that the Bhishmacharya son of King Shanthanu, Dronacharya, Vidura, Krupacharya and other responsible members of the Kouravas were failed to perform their responsibilities. Ultimately the people of Varanavarth decided to convey a message to King Dhrutharashtra commenting ‘Your irrepressible desire has come true! You have burnt Pandavas to death!’.
[/FONT]


[FONT=&quot] [/FONT]

[FONT=&quot]Later, it was decided to conduct rigorous search for the bodies of Pandavas. They found the mortals of Nishadha woman and her five children. The man who was appointed for the construction of tunnel by Vidura furtively removed the ashes from its place and crammed the tunnel with it. The people of Varanavarth duly conveyed the depressing message about the death of Pandavas and Purochan to Dhrutharashtra. The King Dhrutharashtra was devastated at the misfortune of Pandavas, he became inconsolable and spoke “It is definite that the memorable brother of mine and King Pandu must have met his death today after listening to the loss of five warriors and their mother in the fire accident. Oh! Sons, hurry to Varanavarth and perform the final rite for the great warriors, sons of Pandu and daughter of King Kunthibhojan. Bring the remnants of the mortal in Hasthinapur and perform appropriate rites. Let the relatives and friends of deceased go to Varanavarth and perform those entire rites for Pandavas and Kunthi immediately.”[/FONT]

[FONT=&quot] [/FONT]

[FONT=&quot]Dhrutharashtra, son of Ambika was assembled with relatives and sons, he performed ceremonial bath for the Pandavas. The people of Hasthinapur were grief-stricken, cried their heart out calling the names of sons of Pandu and Kunthi, ‘ Oh! Yudhishtira, King of Kuru Dynasty’, ‘Oh! Bhima, Oh! Phalguna’, ‘ Oh! Nakula & Sahadeva’, ‘Oh! Kunthi’. They took ceremonial bath for the deceased and the entire Hasthinapur wept for the Pandavas. But, Vidura who was aware of the truth was remained calm.[/FONT]

[FONT=&quot] [/FONT]

[FONT=&quot]In the meantime, Pandavas, the glorious warriors with their mother safely arrived at a place far from Varanavarth situated on the other side of river Ganga, due to the favorable weather conditions and the skill of ferry man. Immediately, they deserted the ferry went inside the dense forest in the moon light. Oh! King Janamejaya, ultimately they arrived in the middle of an impassable forest. They were extremely tired of hunger, thirst and sleeplessness. Yudhishtira spoke to Bhima “What else could be painful other than this destitution? We are in the middle of dense forest. We are utterly miserable without the knowledge of routes. We are unaware about the news of wicked Purochan. How did we protect ourselves from the sight of others? Oh! Bhima, you are the powerful and fast amongst us, so carry us on your shoulder and precede the journey. Bhima carried his mother on his shoulder, brothers on his arms and waist after listening to Yudhishtira and continued their journey promptly.[/FONT]
[FONT=&quot][/FONT]
[FONT=&quot][/FONT]

[FONT=&quot]Jai Sriman Narayana !![/FONT]


Mahabharath: Adi Parvam !! Grief of Yudhishtira !!
 
ஐயப்பன் சாப்பிட்ட அவல்

ஐயப்பன் சாப்பிட்ட அவல்


பந்தளம் மன்னர் காலத்தில் எருமேலி அடர்ந்த காடாக இருந்தது. வனவிலங்குகள் சர்வ சாதாரணமாக நடமாடின. அப்படிப்பட்ட இடத்தில்தான் சுவாமி ஐயப்பன் புலிப்பால் தேடி வந்தார். அடர்ந்த காடு. அந்தி மயங்கும் நேரம். இருள் மெல்ல மெல்ல பரவ தொடங்கியது. ஐயப்பன் அந்த பகுதியில் விளக்கு வெளிச்சம் தெரிந்த வீட்டுக்கு சென்றார். அங்கு ஒரு வயதான மூதாட்டி இருந்தார். தாயே! பசிக்கிறது, ஏதாவது கொடுங்கள், என்று ஐயப்பன் கேட்க, மூதாட்டிக்கு தர்ம சங்கடம். மகனே, வீட்டில் சோறு இல்லையே. எல்லாரும் சாப்பிட்டாகி விட்டது. சுவாமிக்கு சமர்ப்பித்த அவல், பழம் இருக்கிறது, அதைச் சாப்பிடுகிறாயா? எனக்கேட்டார். அது போதும், என்று ஐயப்பன் ஆசையுடன் வாங்கி சாப்பிட்டார். பின்னர் மூதாட்டியிடம், இன்று இரவு இங்கு தங்க அனுமதிக்க வேண்டும், என்று கேட்டார்.


பாட்டியோ பகவானிடம், அப்பா! இங்கு மகிஷி என்ற அரக்கியின் தொல்லை தாங்க முடியாது. அதிலும் ஆண்களை அவளுக்கு அறவே பிடிக்காது. உன்னை அவள் கொன்று விடுவாள். எனவே எங்காவது மறைந்து கொள், என்றாள். ஆனால், ஐயப்பன் விடாப்பிடியாக பேசி மூதாட்டியிடம் சம்மதம் பெற்று அந்த வீட்டில் தங்கினார். நள்ளிரவில் மூதாட்டிக்கு தெரியாமல் வெளியேறி காட்டுக்குள் சென்றார். மகிஷி எதிரே வந்தாள். அவளைஅவர் வதம் செய்தார். பின்னர் வீடு திரும்பிய ஐயப்பன், மகிஷியைக் கொன்ற வாளை மூதாட்டியிடம் கொடுத்து, மகிஷியை கொன்று விட்டேன், இனி அவளது தொந்தரவு இருக்காது, என்று கூறி மறைந்தார். அந்த வாளை ஐயப்பன் தங்கிய அறையில் வைத்து மூதாட்டி பூஜை செய்தார். பல தலைமுறையாக இந்த வீடு எரிமேலியில் தான் இருக்கிறது. அதன் வடிவத்தைக் கூட மாற்றவில்லை. தினமும் விளக்கு வைப்பதை தவிர வேறு எந்த பூஜையும் நடத்துவதில்லை, என்கிறார் மூதாட்டியின் வாரிசான கோபாலபிள்ளை. கரியாலும், சாணத்தாலும் மெழுகிய தரை, மரங்களால் அமைக்கப்பட்ட அறை என்று பழமை மாறாமல் இந்த வீடு காட்சி தருகிறது. தேவபிரஸ்னம் நடத்திய போது, இந்த வீட்டில் ஐயப்பன் தங்கியதற்கான அறிகுறிகள் தெரிந்ததாக கோபாலபிள்ளை கூறுகிறார். மண்டல, மகரவிளக்கு காலத்தில் ஏராளமான பக்தர்கள் இந்த வீட்டுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.

Temple News | News | Sabarimala Temple | ??????? ????????? ????
 
விஷ்ணு பக்தர்கள், தங்கள் உடலில் 12 இடங்களி&#29

விஷ்ணு பக்தர்கள், தங்கள் உடலில் 12 இடங்களில் நாமம் போட்டிருப்பார்கள். இதற்கு காரணம் என்ன தெரியுமா?


விஷ்ணுவுக்கு, கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ஹ்ருஷீகேச, பத்மநாப, தாமோதர என்னும் 12 நாமங்கள் உண்டு. இதை "துவாதச நாமங்கள்' என்பர். "துவாதச' என்றால் "பன்னிரண்டு'. இந்த நாமங்களைச் சொல்லியபடியே, பக்தர்கள் பன்னிரண்டு இடங்களில் திருமண் (நாமம்) இடுவர். பெருமாளின் நாமங்களைச் (விஷ்ணுவின் பெயர்) சொல்லியபடியே, திருமண் இடுவதால் தான், நாமம் என்றே பெயர் ஏற்பட்டது.

Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts
 
கண்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்?


கண்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்?




a3a83068-3339-44eb-a74c-8c551c1ddbf1_S_secvpf.gif



தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார். பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள்.


எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான். மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை. சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும். இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் ஆகும்.

ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது. கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன்மூலம் நிரூபிக்கிறான். ஆலிலையில் படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான். அடே பக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே.

என்னைப் போலவே நீ குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டாய். குடும்பம் என்ற சம்சாரக்கடலில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இரு என்கிறான். இதுதான் கண்ணன் ஆலமர இலையில் மிதக்கும் தத்துவம் ஆகும்.

?????? ????????? ?????????????? ???? || kannan sleeping why alilai kannan
 
சமநோக்கை வலியுறுத்தும் மனீஷா பஞ்சகம்

சமநோக்கை வலியுறுத்தும் மனீஷா பஞ்சகம்


ஆதி சங்கரர் அருளிய பல்வேறு படைப்புகளில் “மனீஷா பஞ்சகம்” முக்கியமான ஒன்றாகும். சாதி அபிமானத் தியாகம் (சாதி துவேஷம் இல்லாமல் இருப்பது) என்ற பண்பு அனைவரும் வளர்த்துக் கொள்ளவேண்டிய ஒன்று என்பதை உணர்த்தும் படைப்பாகும். “பஞ்சகம்” என்றால் ஐந்து பொருட்களின் சேர்க்கை என்று அர்த்தம். சமஸ்கிருதத்தில் மனீஷா என்றால் நிச்சயமான அறிவு(ஞானம்) என்று பொருள். நம்பிக்கையினாலோ, கொள்கையினாலோ அல்லாமல், ஒரு உயர்ந்த அறிவுக்கருவியின் மூலம் ஐயமின்றி ஏற்படும் உறுதியான அறிவே “மனீஷா” எனப்படும். இந்த நிச்சய அறிவை விளக்கும் ஐந்து ஸ்லோகங்களே “மனீஷா பஞ்சகம்” எனப்படுகின்றன.



இந்த மனீஷா பஞ்சகம் உருவாவதற்கு வழிவகுத்த சம்பவம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் அந்தச் சம்பவமே சாதி அபிமானத் தியாகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வல்லது.



ஒரு நாள் சங்கரர் காசியில் கங்கையில் நீராடிவிட்டு தன் சீடர்களுடன் குறுகிய பாதை ஒன்றில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரில் புலையன் ஒருவன் நாய்களோடு வந்துகொண்டிருந்தான். சங்கரரின் சீடர்கள், புலையனை ஒதுங்கி வழிவிடச் சொன்னார்கள். சங்கரரும் அப்புலையனைப் பார்த்து “விலகிப் போ விலகிப் போ” என்றார்.

அதைக் கேட்ட புலையன் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டான்:


“துறவிகளில் மேலானவரே! தாங்கள் விலகிப்போ என்று கூறியது இந்த உடலையா? அப்படியென்றால், என்னுடைய உடலும் சோற்றால் ஆன ஒரு ஜடம்; தங்களுடைய உடலும் சோற்றால் ஆன ஒரு ஜடம்; ஒரு ஜடத்திலிருந்து இன்னொரு ஜடம் எப்படி விலகும்? அல்லது தாங்கள் விலகிப் போ என்று கூறியது இந்த உடலுக்குள் இருக்கும் சைதன்யத்தையா? சைதன்யமான ஆத்மா எனக்குள்ளும், உங்களுக்குள்ளும், எங்கும் பரவியுள்ளதே; அது எப்படி விலகிப் போக முடியும்? எனவே தாங்கள் விலகிப் போ என்று எதைக் கூறினீர்கள்? கதிரவனின் பிம்பம் கங்கையிலும் விழுகிறது, சாக்கடையிலும் விழுகிறது, இதனால் கதிரவனுக்கு இழுக்கு ஏற்படுவது இல்லையே? மேலும் பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயம் மண் பானைக்குள் இருந்தாலும் சரி, பொன் பானைக்குள் இருந்தாலும் சரி, ஆகாயம் வேறுபடுவதில்லையே? இந்த அறிவை தாங்கள் அறிந்திருக்கக்கூடுமே; அப்படி இருந்தும் ஏன் உங்களையும் என்னையும் பேதப்படுத்தி விலகிப் போ என்று கூறினீர்கள்?”



மேற்கூறிய கேள்விகளைக் கேட்டவுடன், சங்கரர் எவ்விதச் செருக்கும் இல்லாமல், அந்நொடியிலேயே அப்புலையனிடம் பணிந்து “அத்வைத அறிவில் நிலைத்து நிற்கும் தாங்களே என் குரு” என்று வணங்கி “மனீஷா பஞ்சகம்” எனும் படைப்பை அருளினார்.உபநிஷத்துக்களில் முதன்மையாக விளக்கப்படும் அத்வைத அறிவை, இந்த ஐந்து சுலோகங்கள் மூலமாகப் பல்வேறு வழிகளில் சாரமாக விளக்கியுள்ளார். முதல் இரண்டு சுலோகங்களில், ஜீவ பிரம்ம ஐக்கியம் பற்றி விளக்கியுள்ளார். மூன்றாவது சுலோகத்தில் அத்வைத அறிவை அடைவதற்குப் பின்பற்ற வேண்டிய வழிகளையும், அதனால் கிடக்கும் பலன்களையும் விளக்கியுள்ளார். நான்காவது சுலோகத்தில் ஆத்மா அறிவு சொரூபமானது என்றும், அதை ஏன் புற அறிவினால் அறிய முடியாது என்றும் விளக்கியுள்ளார். ஐந்தாவது சுலோகத்தில் அத்வைத அறிவின் பலன் ஆத்மாவை ஆனந்தம் என அறிவதே என்று விளக்கியுள்ளார்.



ஒவ்வொரு சுலோகத்திலும் தன்னுடைய நிச்சயித்த அறிவை நிலைநாட்டியுள்ளார்: “அனைத்து உயிர்களுக்குள் இருக்கும் ஜீவாத்மாவும், உலகத்திற்கே சாட்சியாக இருக்கும் பரமாத்மாவும் ஒன்று என்ற அத்வைத அறிவை எவர் ஒருவர் அடைந்து, அந்த அறிவிலேயே நிலைத்து நிற்கிறாரோ, அவர் புலையனாக இருந்தாலும் சரி, வேதம் ஓதும் அந்தணராக இருந்தாலும் சரி, அவரே எனது குரு”.


சாதி வேற்றுமை இல்லாமல் சமுதாய வளர்ச்சிக்காக சம நோக்கு என்ற பண்பை நாம் அனைவரும் வளர்த்து கொள்ள ஆதி சங்கரரின் மனீஷா பஞ்சகம் ஒரு எடுத்துக்காட்டு என்பது தெளிவாக உள்ளது.

http://tamil.thehindu.com/society/spirituality/
 
மனிதன் விடும் மூச்சை வைத்து வாழ்நாளை கணக

மனிதன் விடும் மூச்சை வைத்து வாழ்நாளை கணக்கிடலாம்:


Man-gets-life-breath-calculate-calculate-your-life.jpg




ஒரு மனிதன் நிமிடத்திற்கு விடும் மூச்சை வைத்து அவனது ஆயுள் காலங்கள் கணக்கிடப்படுகின்றது. அதன் சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)}

ஒரு மனிதன் கீழ்கண்டவாறு கணக்கிடலாம்.

ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விட்டால் 100 ஆண்டுகள் வாழலாம்.

ஒரு நிமிடத்திற்கு 16 முறை மூச்சு விட்டால் 93ஆண்டுகள் வாழலாம்.

ஒரு நிமிடத்திற்கு 17 முறை மூச்சு விட்டால் 87 ஆண்டுகள் வாழலாம்.

ஒரு நிமிடத்திற்கு 18 முறை மூச்சு விட்டால் 80 ஆண்டுகள் வாழலாம்.

ஒரு நிமிடத்திற்கு 19 முறை மூச்சு விட்டால் 73 ஆண்டுகள் வாழலாம்.

ஒரு நிமிடத்திற்கு 20 முறை மூச்சு விட்டால் 66 ஆண்டுகள் வாழலாம்.

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு.

1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு.

0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை.

சுவாசப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் அதிக காலம் உயிர் வாழ்கின்றார்கள், அத்துடன் தியானம், யோகா போன்றவையும் ஆயுளை அதிகரிக்கின்றன.

தியானத்தின் பொது மூச்சுப்பயிற்சியும் இடம் பெறுவதினால் சிறந்த பெறுபேறுகளைப் பெறலாம். ஆழ்ந்த நீண்ட சுவாசமானது நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியமான் வாழ்க்கைக்கும் உறுதுணையாகும்.



?????? ?????? ?????? ?????? ???????? ???????????: ?????? ??????? ?????????????! - TamilDiscovery
 
Why is Lord Hanuman’s Body covered in Sindoor?


Why is Lord Hanuman’s Body covered in Sindoor?

After the “14 years of exile (vanvas)” was over and Shri Ram, Sita Mata were back in Ayodya. On day Lord Hanuman saw Sita Mata wearing sindoor and asked with curiosity about the same. Sita Mata replied, because I’m married to Shri Ram & because he is my master, as per rituals I have to wear it. Sita Mata replied, wearing Sindoor will result good for my husband & will also bless my master with long life. A second later Shri Hanuman besmeared sindoor in all his body. With this gesture of Shri Hanuman, Shri Ram was very impressed & gave a blessing to Shri Hanuman, that any one who will offer Sindoor to Shri Hanuman, all his hurdles will get removed automatically.


That’s why when some one is surrounded with problems, got able to save money, not getting response from seniors or government, getting into judicial cases, unexpected expensed, property issues, family disputes, is advised to offer Sindoor to Shri Hanuman.


Why is Sindorr offered to Hanuman JI, Why did Hanuman ji applied Sindoor all over his body
 
சமித்து :

சமித்து :

சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள்.ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உள்ளன.


வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது

துளசி சமித்து : நாராயணனுக்குப் பிடித்தது

அத்தி சமித்து : சுக்கிரனுக்குப்பிடித்தது...

நாயுருவி சமித்து : புதனுக்குப் பிடித்தது

பலாமர சமித்து : சந்திரனுக்குப் பிடித்தது

அரசரமர சமித்து : குருவிற்குப் பிடித்தது

வன்னிமர சமித்து : சனீஸ்வரனுக்குப்பிடித்தது

அருகம் புல் : விநாயகருக்கும்,ராகுவுக்கும் பிடித்தது

மாமர சமித்து : சர்வமங்களங்களையும் சித்திக்கும்

பாலுள்ள மரத்தின் சமித்துக்கள் : வியாதி நாசினி

தாமரை புஷ்பம் : லஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது

மாதுளை மரம் : அழகான் வடிவமும்,வசீகரமும் கிடைக்கும்.

சமித்து குச்சிகளும் பலன்களும்:

--------------------------------------------
அத்திக் குச்சி : மக்கட்பேறு.

நாயுருவி குச்சி : மகாலட்சுமி கடாட்சம்

எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை

அரசங் குச்சி : அரசாங்க நன்மை

கருங்காலிக் கட்டை: ஏவல் ,பில்லி ,சூனியம் அகலும் .

வன்னிக் குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.

புரசங் குச்சி : குழந்தைகளின் கல்வி வளர்ச்சி

வில்வக் குச்சி : செல்வம் சேரும்

அருகம்புல் : விஷபயம் நீங்கும்.

ஆலங் குச்சி :புகழைச் சேர்க்கும்.

நொச்சி : காரியத்தடை விலகும்.


aanmigam: ??????? :
 
குலதெய்வம் எத்தனை ஜென்மங்களுக்கு ஒரு வம&

குலதெய்வம் எத்தனை ஜென்மங்களுக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும்


d0b9fd51-30af-4334-98a3-a11fb8c13d05_S_secvpf.gif




சாதாரணமாக ஏழேழு ஜென்மங்களுக்கும் குலதெய்வம் குடும்பங்களைக் காப்பாற்றும் என்பது பெரிய நம்பிக்கை. ஏழேழு ஜென்மம் என்பது 7*7 அதாவது 49 ஜென்ம ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு. 49 என்பதின் கூட்டுத் தொகை 4+9 = 13. இந்த எண்தான் ஒருவருடைய வம்சத்தை நிர்ணயிக்கும் முக்கியமான எண்.

ஒருவர் இறந்து விட்டால் பதிமூன்றாம் நாள் அன்று கிரேக்கியம் என்ற நல்ல காரியத்தை செய்வது பழக்கம். அன்றுதான் உடலை விட்டு வெளியேறிய ஆத்மா சொர்கத்தை அடைகின்றது என்று நம்புகிறோம். அது போலத்தான் இறுதிக் காலமாக 13 என்ற அந்த காலத்தைக் குறிக்கும் விதத்தில் 49 ஜென்ம காலமான 13 ஜென்மத்துடன் ஒரு வம்சம் முடிவடைகின்றது என்று நம்பப்படுகின்றது.

அதாவது எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக் கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் அந்த வம்சத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும்.

ஆகவே ஏழேழு ஜென்மங்களுக்கு மேல் எந்த வம்சத்தினரும் இருக்க மாட்டார்கள். ஆகவே ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது 13 ஜென்மத்துக்கு வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள்.

?????????? ?????? ?????????????? ??? ?????????? ???????????? || How many lifetimes kula deivam save a family
 
ஹிரண்யகஷிபுவின் மகன் பிரஹலாதன் எப்படி வ


ஹிரண்யகஷிபுவின் மகன் பிரஹலாதன் எப்படி விஷ்ணுவின் பக்தன் ஆனான் ?



நாம் அனைவருமே ஹிரண்யகஷிபு நரசிம்ம அவதாரம் பெற்ற மகாவிஷ்ணுவினால் கொல்லப்பட்ட கதைதான் பெரும்பாலும் அறிந்து இருபோம். ஆனால் அது ஏன் நடந்தது, ஹிரண்யகஷிபுவிற்கு பிரஹலாதன் மகனாகப் பிறந்தது ஏன் என்பதையோ அவன் எப்படி விஷ்ணுவின் பக்தனாக இருந்தான் என்ற கதையையோ பலருக்கு தெரிந்து இருக்காது. காரணம் பல புராணங்களில் கூட அந்தக் கதை மாறுபட்டு உள்ளது.




ஒரு ஜென்மத்தில் ஹிரண்யகஷிபுவும், அவனுடைய சகோதரரான ஹிரண்யாஷ்டசகனும் வைகுண்டத்தில் ஜெயா- விஜயா எனும் பெயர்களில் துவாரகாபாலகர்களாக இருந்தவர்கள். அவர்கள் ஒருமுறை பிரும்மாவின் மகன்களை வைகுண்டத்தில் நுழைய விடவில்லை என்பதினால் அவர்கள் மூன்று யுகங்களில் ஆண்களாக பூமியில் பிறந்து விஷ்ணுவினால் அல்லது விஷ்ணுவின் ஏதாவது ஒரு அவதாரத்தினால் மரணம் அடைவார்கள் என சபிக்கப்பட்டார்கள். அப்போது அவர்கள் பார்வதியிடம் சென்று அழுதபடி பெண்களான தமக்கு விடிமோட்ஷம் தருமாறு வேண்டினார்கள். அவளும், அவர்களின் சாபத்தை தன்னால் மாற்ற முடியாது என்றும், ஆனால் அவர்கள் மூன்று யுகங்களிலும் சாபத்தைக் களைந்து கொண்டப் பின் மீண்டும் அவர்கள் பெண் துவாரகாபாலகர்களாகி, சக்தி தேவிகளின் காவல் தேவதைகளாக இருப்பார்கள் என வரம் கொடுத்தாள். அதனால்தான் சக்தி தேவியின் ஆலய சன்னதியின் கருவறையில் ஜெயா-விஜயா என்பவர்கள் காவல் தேவதைகளாக நிற்கிறார்களாம்.


பிரும்மாவின் சாபத்தினால் மூன்று அசுரர்களின் அவதாரங்களை மூன்று ஜென்மங்களில் எடுத்த ஜெயாவும் விஜயாவும், அவர்களது கடைசி பிறப்பில் வராக ரூபத்தில் வந்த விஷ்ணுவினால் கொல்லப்பட்ட ஹிரண்யாஷ்டசகனாக ஒருவளும், பக்த பிரஹலாதனின் தந்தையாக ஹிரண்யகஷிபு என்றவனாகவும் வந்து நரசிம்ம அவதாரம் எடுத்த விஷ்ணுவினால் கொல்லப்பட்டான். அதன் பின் சாப விமோசனம் பெற்றவர்களை சக்தி தேவியானவள் தனது ஆலய காவல் தேவதைகளாக நியமித்துக் கொண்டாளாம்.
ஹிரண்யகஷிபு பல அறிய வரங்களையும் , அவனை எளிதில் அழிக்க முடியாத அளவிற்கான வரங்களையும் பிரும்மா மூலம் பெற்று இருந்தவன். அவனால் அனைத்து தேவர்களும், ரிஷி முனிவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார்கள் . அவனைக் கண்டு அஞ்சி ஓட வேண்டி இருந்தது.


அத்தனை வலிமை மிக்கவனாக இருந்தும் தனக்கு இன்னமும் அதிக சக்தி வேண்டும் என்று எண்ணியவன் சிவனை வேண்டிக் கொண்டு ஐம்பது வருட கடும் தவத்தில் அமர்ந்து கொண்டான். அந்த தவத்தில் அவன் வெற்றி அடைந்துவிட்டால் அவனே மூலோகங்களின்- தேவலோகம், வைகுண்டம் மற்றும் கைலாயங்களின் அதிபதி ஆகிவிடுவான். அவனுக்கு பூரக ஜென்ம சாபமான விஷ்ணுவினால் மரணம் என்பதும் இருக்காது என்பதினால் அனைத்து தேவர்களும், ரிஷி முனிவர்களும் கவலைக் கொண்டார்கள்.



அந்தப் பறவையைக் கொல்கிறேன் எனக்
கோபமாக எழுந்தான் ஹிரண்யகசிபு

அவனோ தவத்தில் யாருக்கும் சளைத்தவன் அல்ல. கடுமையான விரதம் பூண்டு அன்ன ஆகாரம் இன்றி தவம் இருப்பவன். ஆகவே மேற்கூறிய காரணத்தினால் அவன் தவத்தைக் கலைக்க வேண்டியது அவசியம் ஆயிற்று. தேவர்கள் அனைவரும் சென்று ஏழு உலகிலும் அப்போது இருந்த எவராலும், எதனாலும் மரணம் சம்பவிக்க முடியாது என்ற அழியா வரத்தை ஹிரண்யகஷிபுவிற்கு தந்து இருந்த பிரும்மாவிடம் சென்று தமது கவலையை தெரிவித்தார்கள். அவரும் கவலை அடைந்தார். தான் செய்து விட்ட தவறினால் அவன் எளிதில் அழியா வரம் பெற்று விட்டான். என்ன செய்வது எனக் கவலைப்பட்டவர் நாரதரை அழைத்தார். அவரிடம் ஹிரண்யகஷிபுவின் தவத்தைக் கலைக்கவும், அவனைக் கொல்லவும் ஏதாவது உபாயம் உள்ளதா எனக் கேட்டார். நாரதர் அவரைத் தேற்றினார். கவலைப்பட வேண்டாம் என்றும், அதற்கான உபாயத்தை தான் செய்வதாகவும் கூறி விட்டு சென்றார்.


அதற்கு முன்னரேயே நாரதர் விஷ்ணுவிடம் ஆலோசனை பெற்று இருந்தார். அதன்படி வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைக்க வேண்டும் என்பதினால் தவத்தின் முடிவில்தான் அவன் தவத்தைக் கலைக்க வேண்டும் என எண்ணிய நாரதர் , ஹிரண்யகசிபு நாற்பத்தி ஒன்பது ஆண்டுகளாக அவன் தவத்தில் இருந்த இடத்தின் அருகில் இருந்த மரத்தில் ஒரு பறவையின் உருவில் சென்று அமர்ந்து கொண்டார். அதன் மீது அமர்ந்து கொண்டு வேண்டும் என்றே, உரத்தக் குரலில் 'ஓம் நமோ நாராயணா....ஓம் நமோ நாராயணா....ஓம் நமோ நாராயணா...'எனக் கத்திக் கொண்டே இருந்தார்.



சிவபெருமானை துதித்தபடி தவத்தில் அமர்ந்து நாற்பத்தி ஒன்பது வருடங்களாகி விட்டது. இன்னும் ஒரே ஒரு வருடம்தான் பாக்கி. அவன் தவத்தினால் மனம் மகிழ்ந்து இருந்த சிவபெருமான் அவனுக்கு காட்சி தர தன்னை தயார் செய்து கொண்டு இருந்தார். அந்த நேரமே அதைத் தடுக்க சரியான நேரம் என்பதை உணர்ந்த நாரதர் அந்த நேரத்தை தேர்ந்து எடுத்து ர் தவத்தில் இருந்தவன் காதுகளில் அந்த ஒலி பெரியதாக சென்று விழும் வகையில் பறவை போல கத்திக் கொண்டு இருக்க அவன் தவம் கலைந்தது. நாற்பத்தி ஒன்பது வருட தவம் செய்தது வீணாயிற்று. எந்தப் பறவை அப்படி கத்துகிறது என கோபத்துடன் அதை கொல்வதற்காக மரத்தில் அதை தேடியபோது அது பறந்து சென்று விட்டது. 'ஓம் நமோ நாராயணா....ஓம் நமோ நாராயணா....ஓம் நமோ நாராயணா...என்ன நாராசம் இது ...இந்தப் பறவை என் நாற்பத்தி ஒன்பது வருட தவத்தையே கலைத்து விட்டதே' என ஆத்திரத்துடன் அரண்மனைக்கு திரும்பினான்.






காயாது வயிற்றில் இருந்தக் குழந்தையின்
நினைவும், மனதும் விஷ்ணுவையே
நோக்கி ஓடிக் கொண்டு இருந்தது





அப்போதுதான் அவன் மனைவியான 'காயாது' என்பவள் குளித்து விட்டு வந்திருந்தாள். 'என்ன தவம் முடிந்து வரங்களை பெற்றுவிட்டீர்களா' என ஆர்வத்துடன் அரைகுறை ஆடையுடன் இருந்தவள் அவனை வந்து கட்டிக் கொள்ள, அவளை அந்த நிலையில் கண்ட அவனுக்கு காமவெறி தலை தூக்கியது.


'அனைத்தும் குளறுபடியாகிவிட்டது....எதோ ஒரு பறவை வந்து ஓம் நமோ நாராயணா....ஓம் நமோ நாராயணா....ஓம் நமோ நாராயணா...எனக் கூவிக் கொண்டே என் தவத்தை கலைத்து விட்டது' என ஆத்திரத்துடன் மீண்டும் மீண்டும் அதையே கூறிக் கூறிக் கொண்டு அவளுடன் உடலுறவை தொடர்ந்து கொண்டிருக்க அவனுடைய உயிர் அணுவும் ஓம் நமோ நாராயணா....ஓம் நமோ நாராயணா....ஓம் நமோ நாராயணா...என்ற மந்திரத்தை கிரகித்துக் கொள்ள அந்த உயிர் அணுவினால் கர்பமுற்ற 'காயாது' வயிற்றில் இருந்தக் குழந்தையான பிரகலாதனும் விஷ்ணுவின் நாமத்தை ஜெபித்தபடியே இருந்தான்.




தனக்குப் பிறந்தக் குழந்தையே
தன்னை கொல்ல அவதாரம் எடுத்துள்ளது எனத்
தெரியாமல் மகிழ்ச்சியுடன் அதை கொஞ்சினான்
இன்னொரு புராணக் கதையின்படி ஹிரண்யகசிபு தவத்தில் அமரும் முன் அவன் தனது மனைவியான 'காயாது' என்பவளை கர்பவதியாக்கி இருந்தான். அவன் தவத்தில் அமர்ந்து இருந்த நேரத்தில் ஹிரண்யகசிபுவை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திரன் அங்கு வந்து கர்பமுற்று இருந்த 'காயாது'வை இழுத்துக் கொண்டு போகத் துவங்கியபோது அவள் மயக்கம் அடைந்தாள். அப்போது நாரதர் அங்கு கோபமாக வந்து அவனை வழிமறித்தார். 'நீ செய்வது உனக்கே சரியாக உள்ளதா இந்திரா, இவளுக்கு பிறக்க உள்ள குழந்தை விஷ்ணுவின் பக்தனாகி, அவன் மூலமே அந்த அசுரனை விஷ்ணு பகவான் அழிக்க உள்ளார் என்பதினால்தான் இவள் வயிற்றில் இந்தக் குழந்தையை வளரச் செய்துள்ளார்.


ஒரு பெண்ணை, அதுவும் ஒரு கர்பிணியை, உன்னுடன் உனக்கு நிகராக சண்டைப் போட்டு தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் உள்ள இவளை நீ அவமானப் படுத்தியதினால், இந்த பாவச் செயலை செய்த நீ பிரும்மஹத்தி தோஷம் பிடித்து அலைவாய். உடனே அவளை விட்டு விட்டு இந்த இடத்தை விட்டுச் செல்' எனக் கோபமாகக் கத்தியப் பின், ஒரு ரிஷி உருவில் தன்னை மாற்றிக் கொண்ட அவர் மயக்கம் அடைந்துக் கிடந்தவளை தண்ணீர் தெளித்து எழுப்பினார். அதனால்தான் இந்திரன் கௌதம முனிவரின் மனைவியான அஹில்யாவிடம் முறை கேடாக நடந்து சாபம் பெற்ற சம்பவம் நடந்தது.


அஹில்யாவின் சாபத்தினால் இந்திரன் உடம்பு முழுவதும் பெண் அங்கங்களாக மாறி அவமானப்பட்டு நாரதர் மூலம் மீண்டும் விமோசனம் பெற்றார். மயக்கம் தெளிந்த 'காயாதுவை' ரிஷி உருவத்தில் இருந்த நாரதர் தான் யார் என்பதைக்காட்டிக் கொள்ளாமல், அவளை பத்திரமாக அவள் வீட்டில் கொண்டு சேர்த்தார். போகும் வழி முழுவதும் வேண்டும் என்றே ஓம் நமோ நாராயணா....ஓம் நமோ நாராயணா....ஓம் நமோ நாராயணா...என கூறிக் கொண்டே அவர் சென்றபோது அவள் வயிற்றில் இருந்தக் குழந்தை அந்த மந்திரத்தை தம்மை அறியாமலேயே கிரகித்துக் கொண்டது. அதன் நினைவெல்லாம் நாரயணராகி விட்டது. வீடு திரும்பிய 'காயாது'வும் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி ஹிரண்யகசிபு வந்தால் கூற வேண்டும்,


அந்த ரிஷி உருவில் இருந்த நாரதர் உச்சரித்துக் கொண்டு இருந்தது சக்தி வாய்ந்த மந்திரம் என்பதை அறியாமல், அவர் எதோ முணுமுணுத்தார் என எண்ணிக் கொண்டு அந்த வார்த்தையை நினைவு வைத்திருந்து ஹிரண்ய கஷிபுவிடம் கூற வேண்டும் என்பதற்காக அவ்வப்போது ஓம் நமோ நாராயணா....ஓம் நமோ நாராயணா....ஓம் நமோ நாராயணா...என தன் மனதில் நினைவுபடுத்திக் கொண்டே கொண்டே இருக்க அவள் வயிற்றுக்குள் வளர்ந்து வந்த பிரஹலாதனும் அதை இன்னமும் நன்றாக கிரகித்துக் கொண்டான்.

அதனால்தான் அவன் விஷ்ணுவின் பக்தன் ஆனான்.

Santhipriya's pages: Some unknown story from Purana
 
தானத்தில் சிறந்தது அன்னதானம்!

தானத்தில் சிறந்தது அன்னதானம்!


E_1403257974.jpeg



மனிதர்கள் அனைவருமே ஒருவாய் சோற்றுக்குத் தான், எல்லா சிரமங்களையும் அனுபவிக்கின்றனர்.
சித்த புருஷர்களிலேயே, முதல்வராகக் கருதப்படும் பட்டினத்தாரே, 'அன்ன விசாரம் அதுவே விசாரம்...' எனப் பாடியிருக்கிறார் என்றால் நாம் எந்த மூலை?


இதை, நமக்கு அறிவுறுத்தவே, கடவுள் வழிபாட்டில் அன்னதானம் முக்கிய இடத்தை வகிக்கிறது.
அடுத்தவர் பசித்திருக்கப் பார்க்காததும், அடுத்தவர் பசியைப் போக்குவதுமே ஆன்மிகம்.
ஏழாம் நூற்றாண்டில், திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் அஞ்ஞான இருளை போக்கி, மக்களிடம் ஞான மார்க்கத்தை புகுத்திக் கொண்டிருந்தனர்.


அவர்கள் இருவரும், திருவீழிமிழலை எனும் திருத்தலத்தில் தங்கி, நேத்ரார்ப்பணேஸ்வரர் கோவிலில், சிவபெருமானை, வழிபட்டுக் கொண்டிருந்த வேளை—
அந்த ஊரில் மழையில்லாததாலும், நதிகளில் நீர்ப்பெருக்கு குறைந்ததாலும், பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் மிகுந்த பசித் துன்பம் அடைந்தனர்.

அப்போது சிவபெருமான், 'நீங்கள் இந்தக் காலபேதத்தால் மனத்துயர் அடைய வேண்டாம். உங்களுக்காக தினமும் படிக்காசு தருகிறோம். அவற்றை வைத்து மக்களின் பசித் துன்பத்தை தீருங்கள்...'என்று கூறி, கோவிலின் கிழக்கு வாசல் படியிலும், மேற்கு வாசல் படியிலும், தினந்தோறும் படிக்காசு - பொற்காசு வைத்தருளினார்.

அந்த இரு காசுகளையும், திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் எடுத்து, அதன் மூலம் பண்டங்களை வாங்கி, உணவு தயாரித்து, 'அடியார்கள் எல்லாரும் அமுது உண்ண வாருங்கள்...' என, பறைசாற்றித் தெரிவித்து, அன்னமிட்டனர்.

இந்தச் செயல், பஞ்சம் தீரும் வரை தொடர்ந்தது.
'அன்னத்தை இகழாதே; அன்னத்தை உற்பத்தி செய்...' என, மறைகளும் முழங்குகின்றன. அதனால், எந்த விதத்திலும், ஒரு பிடி அன்னமாக இருந்தாலும், ஒரு பருக்கை அன்னமாக இருந்தாலும் அன்னத்தை வீணாக்கக் கூடாது.

இதிகாசங்கள், புராணங்கள், மறைகள், வழிபாட்டு முறைகள் என, எல்லாவற்றிலும் புகழப்படும் அன்னதானத்தை, முடிந்த வரை செய்வோம்!

பி.என்.பரசுராமன்

varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements
 
சொல்கிறார் அன்னை


சொல்கிறார் அன்னை




large_142210845.jpg


* உங்கள் முன் இருக்கும் லட்சியத்தை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். சுகபோகத்தை மறந்து கொழுந்து விட்டெரியும் நெருப்பாக மாறி செயல்படத் தொடங்குங்கள்.

* அடுத்தவர்களின் குறைகளை மாற்றக்கூடிய சக்தி உங்களுக்கு இருந்தாலன்றி, யாரையும் குறை சொல்ல முற்படாதீர்கள்.

* வாழ்வில் எதிர்ப்படும் அனைத்தும் நம் முன்னேற்றத்திற்காக என்றே எண்ணிச் செயல்படுங்கள். அப்போது தான் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்.

* எந்த செயலையும் உங்கள் சொந்த மகிழ்ச்சிக்காக செய்வது கூடாது. அதில் பொதுநலம் இருப்பது மிகவும் அவசியம்.

* நீங்கள் உண்ணும் உணவு மகத்தான செயல்களைச் செய்வதற்குத் தேவையான சக்தியை உங்களுக்கு அளிப்பதாக இருக்கட்டும்.

* பேச்சை எப்போதும் உங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அவசியமானதை மட்டுமே பேசுங்கள்.

* தளராத முயற்சி உங்களுக்குள் புதிய கதவைத் திறக்கட்டும். அப்போது ஒரு திவ்விய ஒளி உங்கள் மீது குவியும்.

* உங்கள் வாழ்விற்கு நீங்களே எஜமானர் என்பதை உணருங்கள். நல்லவர்களின் லட்சியம் வெற்றி பெறுவது உறுதி. பெருமித உணர்வோடு வாழ்க்கைப் பாதையில் வெற்றி நடைபோடுங்கள்.

* கடவுளை உணரும் உணர்வு அழகின் மலர்ச்சியால் வெளிப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது முழுமையற்றது தான்.

* எப்போதும் அன்பு கொண்டவராக இருங்கள். எதிர் மறையான விமர்சனங்களை விட்டு விடுங்கள்.

* அன்பில்லாத மனிதன் சிடுமூஞ்சியாகவும், இரக்கம் இல்லாதவனாகவும் ஆகி விடுவான். அவனுக்கு எல்லாவற்றின் மீதும் வெறுப்புணர்வு உண்டாகி விடும்.

* அச்சம் நோயை விட பயங்கரமானது. ஆபத்தானதும் கூட. அதுவே, உங்களிடம் இருந்து களையப்பட
வேண்டிய முதல் குறைபாடு.

* உங்களிடமுள்ள முழு வலிமையையும் பயன்படுத்தி நேர்மையுடன் செயல்பட்டால், அச்சத்தின் நிழல் கூட இல்லாமல் செய்ய முடியும்.

* புதிய உலகம் படைப்பதற்காகவே மனிதராகப் பிறந்திருக்கிறோம். நாம் இங்கு இருப்பதே மதிப்பிட முடியாத பெரிய வாய்ப்பு.

* துணிவுடன் செயலாற்றுங்கள். நம்பிக்கை மனதில் மேலோங்கட்டும். வாழ்க்கைப்பாதையின் முடிவில் பேரொளியைக் காணத் தயாராக இருங்கள்.

* முன்னேறுவதற்காகவே பூமியில் பிறந்திருக்கிறோம். ஒவ்வொரு நிமிடமும் முன்னேறாவிட்டால் நம் வாழ்க்கையே சுவாரஸ்யமற்றதாகி விடும்.

* வழியில் துன்பங்களும், தடங்கல்களும் குறுக்கிடலாம். அதற்காக நேர்மையை கைவிடுவது கூடாது. முயற்சியும், போராட்டமும் இல்லாமல் எதையும் வாழ்வில் சாதிக்க முடியாது.

* மாசற்ற மனம், நோயற்ற உடல் இரண்டும் இருந்து விட்டால் போதும். எதையும் எதிர் கொள்ளும் ஆற்றலையும், சாதிக்கும் உந்துதலையும் பெற்று விட முடியும்.

* கடந்த காலம் எப்படிப்பட்டதாயும் இருந்து விட்டுப் போகட்டும். நீங்கள் தவறு கூட செய்திருக்கலாம். ஆனால், உள்ளத்தின் அடி ஆழத்தில் தூய்மை மிக்கவராகவே எப்போதும் இருக்கிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.

* எந்த நிலையிலும் உதவிக்காக கடவுளை வேண்டிஅழைக்க கற்றுக் கொள்ளுங்கள். அற்புதங்களை நிகழ்த்த கடவுளால் மட்டுமே முடியும்.

சொல்கிறார் அன்னை




Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts
 
உயர்ந்தவர் யார்?

உயர்ந்தவர் யார்?


உடலில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள் "நானே பெரியவன் என்று ஆணவம் கொண்டு சண்டையிட ஆரம்பித்தன. "நான் இல்லாவிட்டால் எதுவும் நடக்காது. பார்வையில்லாத ஒருவன் .

உயிர் இருந்தும் இல்லாதவனே. அவனால் எதுவும் செய்யமுடியாது என்று கண்கள் இரண்டும் மற்ற உறுப்புகளைப் பார்த்து எகத்தாளம் பேசியது.காதும் தன் பங்குக்கு கூச்சலிட்டது. "கூப்பிட்ட வார்த்தைக்கு என்ன என்று ஒருவரைக் கேட்க வைப்பதே நான் தான்! நான் இல்லாவிட்டால் இனிய பாடலை ரசிக்கத் தான் முடியுமா? என்றது. கை, கால்களோ உழைப்பின் அருமையை உணர்த்தி நின்றன.திடீரென மூளை, ""அட அறிவிலிகளே! நான் அல்லவா தலைமை இடத்தில் இருந்து கட்டளையிடுபவன்! உங்களை இயக்கும் சூத்திரதாரியே நான் தானே! என்ற புகழ்ந்து கொண்டது. ""நீங்கள் எல்லாரும் பேசுவது நன்றாக இருக்கிறது!


சற்று பொறுத்திருங்கள். உயிர் இல்லாவிட்டால், உங்களின் நிலை என்னாகும் என்று யோசித்துப் பாருங்கள் என்றது உயிர். இதையடுத்து மற்ற உறுப்புகளால் எதுவும் பேச இயலாமல் போனது. அதை நிரூபிக்கும் வகையில் உடலை விட்டுப் பிரிந்தது. ஆனால், எவ்வளவு முயன்றும் முடியவில்லை. அப்போது கடவுள் தோன்றி, ""அட முட்டாள்களே! உங்கள் யாராலும் தனித்து யாராலும் இயங்க முடியாது. அனைவரையும் இயக்குபவன் நானே! அவரவர் கடமையறிந்து ஒற்றுமையுடன் செயல்படுங்கள் என்று சொல்லி உடலுக்கு உயிர் அளித்தார். கடவுளே நம்மை இயக்க வல்லவர்.உனக்காகவே வாழ்கிறேன்!


சீடன் ஒருவன், ""குருவே!கடவுளை அடைய நான்என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என கேட்டான்.குரு அவனிடம்,""வேகமாக ஓடு! ஆனால், அதற்கு முன் கடவுளே! உனக்காகவே ஓடுகிறேன் என்று எண்ணிக் கொள், என்றார்.""என்ன குருவே! கடவுளை அடைய வழி கேட்டால் ஓடச் சொல்கிறீர்களே! ஏன் உட்கார்ந்து கொண்டு ஏதாவது செய்ய வழியில்லையா? என்றான்.""ஏன் இல்லை? தாராளமாகச் செய்யலாம். ஆனால், உட்காருவதற்கும் நிபந்தனை உண்டு. கடவுளே! உனக்காகவே உட்காருகிறேன் என்ற எண்ணியபடி உட்கார். அவ்வளவு தான்! என்றார். ""ஓடிக் கொண்டும், உட்கார்ந்து கொண்டும் இருந்தால் போதுமா? ஜபம், தவம் ஏதும் தேவையில்லையா? என்று கேட்டான். ""தாராளமாய் செய்யலாம். ஆனால், ஒன்றை நினைவில் வை. கடவுளே! இவற்றையும் உனக்காகவே செய்கிறேன் என்று சொல், என்றார்குருநாதர்.""அப்படியானால், கடவுளுக்காக இதைச் செய்கிறேன் என்னும் கருத்து தான் இங்கு முக்கியமாகிறது. செயலை விட கடவுளுக்கு அர்ப்பணம் என்பது தான் முக்கியமா? என்றான் சீடன்.""செயலும் அவசியம் தான். செயல் இல்லாவிட்டால், மனதில் இவ்வகை பாவனையே தோன்றாது. எண்ணமும், செயலும் எப்போது ஒன்று படுகிறதோ, அப்போது தான் எதுவும் முழுமையடையும். கடவுள் விஷயத்தில் இது மிக மிக அவசியம், என்றார் குரு.


Temple News | News | Dinamalar Temple | ?????????? ?????
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top