• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My Collections

Status
Not open for further replies.
மங்களம் தரும் ஸ்ரீதுளசி

மங்களம் தரும் ஸ்ரீதுளசி


1b2a4ec2-0e5e-4e48-9528-871219304dff_S_secvpf.gif




முன்னொரு காலத்தில் சங்கசூடன் என்னும் ஓர் அசுரன் இருந்தான். அவன் அருந்தவம் பல புரிந்து வரங்கள் பல பெற்றிருந்தான். வர பலத்தால் அவன் பல கொடுமைகளைச் செய்து வந்தான். குழந்தைகளை மிதித்தும், குணசீலர்களைக் கொடுமைப்படுத்தியும், யாகங்களைச் சிதைத்தும், பெண்களின் கற்பைச் சூறையாடியும் களியாட்டம் போட்டு வந்தான்.


அவனது கொடுமைகளைத் தாங்க முடியாமல் மண்ணவரும் விண்ணவரும் பெரும் துயரம் அடைந்தனர். சங்கசூடனை அழிக்க வழி தெரியாமல் திணறினார்கள். கடைசியாக அவர்கள் மும்மூர்த்திகளிடம் சென்று தங்கள் குறைகளை முறையிட்டார்கள். அதனால் கோபமடைந்த மும்மூர்த்திகளுக்கும் சங்கடசூடனுக்கும் யுத்தம் நடந்தது.

ஆனால் சங்கசூடனை யாராலும் வெல்ல முடியவில்லை. அதற்கு காரணம் அவன் கடுந்தவம் புரிந்து அதன் பயனாய் பெற்றுத் தன் கழுத்தில் அணிந்திருந்த ஸ்ரீகிருஷ்ண கவசமாகும். அந்தக் கவசம் அவன் கழுத்தில் இருக்கும் வரை அவனை யாராலும் வெல்லவோ, அழிக்கவோ முடியாதென்று மும்மூர்த்திகளும் உணர்ந்தனர்.

சங்கசூடனின் மனைவி துளசி. மகாபதி விரதை, கற்புக்கரசி, கணவன் சொல்லை மீறி எந்தச் செயலும் செய்யாதவள். அழகு, அன்பு, கருணை அனைத்தும் நிறைந்தவள். அவளின் கற்பின் திறன் கணவனுக்கு அரனாக விளங்கியது. துளசியின் கற்பின் மகிமையை உணர்ந்த பரந்தாமன் கற்பினுக்கு அரனாக விளங்கும் துளசியை புகழ்ந்து ஸ்தோத்திரம் சொல்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று முடிவு செய்தார்.

பிறகு பத்து தோத்திரங்களால் பகவான் துளசியை புகழ்ந்துரைத்து துதித்தார். வைகுந்த வாசனே தன்னைத் துதித்ததை எண்ணி துளசி தன்னை மறந்தாள். நெஞ்சம் நிகழ்ந்தாள், மிகவும் மகிழ்ந்தாள். அன்பைப் பொழிந்தாள், அவரை வாயாரப் போற்றிப் பாடினாள், ஆடினாள், கற்புக்கனலாக நின்ற அவளை நாராயணர் ஆதரவாகப் பார்த்து வேண்டிய வரங்களைக் கேள் என்றார்.

அதற்கு அவள் மீண்டும் பிறவா வரமும், பிறந்தால் நாராயணரை மறவா மனமும் வேண்டும் என்றாள். பிறகு ஸ்ரீமகா விஷ்ணுவின் பாதார விந்தங்களில் பணிந்தாள், அவளது உயிர் மகாவிஷ்ணுவின் பாதங்களில் ஒளி வடிவாகச் சென்றடைந்தது.

அவளது உடல் கண்டகி என்னும் நதியாக மாறியது. அவளது கேசம், துளசி செடியாக துளசி வனமானது. ஸ்ரீமஹாவிஷ்ணு அந்த துளசியை மாலையாக்கி அணிந்து துவளத்தாமனாகக் காட்சி அளிப்பவரானார். மனைவியைப் பிரிந்த சங்கசூடன் சக்தியற்ற வனானான். அவன் முற்பகலில் செய்த கொடுமைகளே பிற்பகலில் அவன் அழிவிற்கு வழி வகுத்தன.

அவனை ஸ்ரீமஹாவிஷ்ணு எளிதில் வதம் செய்து எல்லோருக்கும் மங்களங்கள் தந்தருளினார். ஸ்ரீதேவியின் ஓர் அங்கம் பூவுலகில் தங்கி தம் மக்களின் உடற்பிணி உள்ளப்பிணி ஆகிய பிணிகளைப் போக்கி பேரின்ப வாழ்வளிக்க எடுத்த வடிவமே ஸ்ரீதுளசி. சாதாரணமாக காண்பவர் களுக்குச் செடியின் உருவமாகவும், பிணிகளைத் தீர்க் கும் மருந்துச் செடியாகவும் தெரிவாள்.

ஆனால் தெய்வீக நோக்குடன் காணும் போது உல கத்தை விளங்க வைக்கும் மகா லட்சுமி யின் உருவ மாகக் காட்சி அளிக் கிறாள். ஸ்ரீதுளசி மாதா. ஸ்ரீமகா லட்சுமியே இந்த துளசிச் செடியாய் மாறி ஸ்ரீமகா விஷ்ணுவிற்கு மிகவும் விருப்பமுள்ள மலராக விளங்குகிறார். துளசி இல்லாத பூஜையை மகாவிஷ்ணு ஏற்றுக் கொள்வதில்லை.

"திருத்துழாய்'' என்ற பெயரில் பெருமாள் கோவில்களில் சிறந்த பூஜைப் பொருளாக விளங்குவது இந்தத் துளசியே! துளசி உள்ள இடத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு எப்போதும் வாசம் செய்கிறார். துளசியினால் விஷ்ணுவைப் பூஜித்தால் 1000 பால்குடங்கள் கொண்டு அபிஷேகம் செய்த மனமகிழ்ச்சியை ஸ்ரீமகாவிஷ்ணு அடைகிறார்.

கடைசி காலத்தில் துளசிதீர்த்தம் உட்கொண்டால் பிறவி நீங்கி வைகுண்ட பதவி கிடைக்கும். துளசியினால் ஸ்ரீமகாவிஷ்ணுவை மட்டுமின்றி ஸ்ரீமகாதேவனையும் அர்ச்சிக்கலாம். ஏனெனில் அவர் ஸ்ரீசங்கர நாரயாணராக இருக்கிறார்.

இத்தகைய மகிமை வாய்ந்த ஸ்ரீதுளசியை நம் வீடுகளில் அழகிய மாடங்களில் வளர்த்து, பக்தி சிரத்தையுடன் பூஜித்தால் வாழ்க்கையில் சர்வ மங்களங் களையும் பெறலாம். கன்னிப் பெண்கள் பூஜித்தால் நல்ல கணவனைப் பெறுவார்கள்.

சுமங்கலிகள் பூஜித்தால் தீர்க்க சவுமாங்கல்யத்தையும், சகல சவுபாக்கியங்களையும் பெறுவார்கள். இவ்வளவு பெருமை வாய்ந்த துளசி சரித்திரத்தை மனமுவந்து படிப்பவருக்கும், படிப்பதை கேட்பவருக்கும், ஸ்ரீதுளசி மாதாவின் பெருங்கருணையும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பரிபூர்ண அருளும் கிடைக்கும்.







??????? ????? ????????? || mangalam tulsi worship
 
சூரிய ஒளியின் வேகம் சொல்லும் ரிக் வேதம்!

சூரிய ஒளியின் வேகம் சொல்லும் ரிக் வேதம்!

TN_20140807180215015026.jpg



ஜய, அஜவ, விஜய, ஜிதபர்ணா, ஜிதக்ரமா, மனோஜபா, ஜிதக்ரோதா என்ற ஏழு குதிரைகள் மீது பவனி வருவான் சூரியன் என்று நமது புராண இதிகாசங்கள் கூறியதை நவீன அறிவியல் கூற்றான சூரிய ஒளி கொண்டிருக்கும் 7 வண்ணங்களான விப்ஜியார்- டன் ஒப்பிட்டும், சனியை மந்தன் என்று கூறியதை சூரியனைச் சுற்றும் கிரகங்களிலேயே அதிக காலமான 30 வருடங்களை சனி எடுத்துக் கொள்வதை ஒப்பிட்டும் அனைவரும் மகிழ்ந்து வந்துள்ளோம்.

ரிக் வேதம் கூறும் ஒளியின் வேகம்: சூரிய ஒளியின் வேகம் வினாடிக்கு ஒரு லட்சத்தி என்பத்தாறாயிரம் மைல்கள் என்பதை நவீன அறிவியல் சென்ற நூற்றாண்டில் தான் உறுதிப்படுத்தியது. ஆனால் இந்த வேகத்தை உலகின் ஆதிநூலான ரிக் வேத துதிப்பாடலில் (1:50) அப்படியே காண்கிறோம். தரணிர் விஷ்வதர்ஷோ ஜ்யோதிஷ்க்ரதசி சூர்ய விஷ்வமா பாசிரோசணம்-

இந்த மந்திரத்தின் பொருள்: வேகமாகவும் அழகாகவும் இருக்கும் ஓ சூரியனே, ஒளியை உருவாக்குபவனே, அனைத்துலகையும் பிரகாசிக்க வைப்பவனே என்பதாகும். இதற்கு புக்கர் ஸ்தாபித்த விஜயநகர சாம்ராஜ்யத்தில் அமைச்சராக இருந்த வேத விற்பன்னரான சாயனர் உரை எழுதுகையில், சதா ச ஸ்மர்யதே யஞ்னானாம் ஸஹஸ்ரே த்வே த்வே சதே த்வே ச யோஜனே ஏகேன நிமிஷார்தேன க்ரமமான் என்று எழுதியுள்ளார். இதன் பொருள்: சூரியன் அரை நிமிஷ நேரத்தில் 2202 யோஜனை தூரம் செல்கிறான் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். நிமிஷம் என்பது இமைக்கும் பொழுது ஆகும். அதில் பாதி நேரத்தில் 2202 யோஜனை தூரத்தை ஒளி கடக்கிறது! சாந்தி பர்வத்தில் நிமிஷம் முதற்கொண்டு பல்வேறு கால அளவுகளைப் பற்றிய விளக்கம் வருகிறது. இதன்படி கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு நிமிஷம் என்பது இன்றைய கால அளவீட்டின்படி 0.2112 வினாடிகள் ஆகும். அரை நிமிஷம் என்பது 0.1056 வினாடிகள் ஆகும்


இனி யோஜனை என்ற தூரத்தைக் குறிக்கும் அளவு பற்றி விஷ்ணு புராணம் ஆறாவது அத்தியாயத்தில் தெளிவாக விளக்கம் தரப்படுகிறது. பரமாணுவிலிருந்து அளவுகள் ஆரம்பித்து யோஜனையில் முடிகிறது இந்த விளக்கம். இதன்படி ஒரு யோஜனை என்பது இன்றைய தூரத்தை அளக்கும் அளவீட்டின் படி 9.09 மைல்கள் ஆகும். இதை வைத்து இப்போது ஒளியின் வேகத்தைக் கணக்கிடலாம்-0.1056 வினாடியில் சூரிய ஒளி 9.09 மைல்கள் பயணப்படுகிறது. அப்படியானால் ஒரு வினாடியில் 1,89,547 மைல்கள் பயணப்படுகிறது என்று ஆகிறது! இதை விஞ்ஞானிகள் கூறும் 1,86,000 மைல்கள் என்பதுடன் ஒப்பிட்டால் வரும் சிறிது வேறுபாடானது நாம் வேத கால அளவுகளைச் சற்று மாற்றிக் கணக்கிடுவதனாலேயே. (இந்த அளவின்படி ஒரு அங்குலம் என்பது முக்கால் அங்குலமாகக் கணக்கிடப்படுகிறது)

இந்த சாயனரின் உரை 1890- ஆம் ஆண்டிலேயே மாக்ஸ்முல்லரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. சாயனரின் கி.பி. 1395- ஆம் ஆண்டில் எழுதப்பட்ட எழுத்துப் பிரதி இன்றும் இருக்கிறது. இவற்றைச் சுட்டிக் காட்டும் வேத அறிஞர் சுபாஷ் கக், இந்தக் காரணங்களால், இதை ஃப்ராடு என்று சொல்ல வழியே இல்லை என்று நிரூபிக்கிறார். வேதங்களின் முழு அர்த்தமும் தெரிய வரும்போது பொன்னான உலகம் பிறக்கும் என்று மஹரிஷி அரவிந்தர் அருளியுள்ளதை இங்கு நாம் நினைவு கூறலாம். வேத விஞ்ஞானத்தைத் துல்லியமாக அறியும் பணியில் ஏராளமான அறிஞர்கள் இன்று ஈடுபட்டு ஆய்வு முடிவுகளைப் புத்தகங்களாக வெளியிட்டு வருகின்றனர். இதைப் படித்து விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவரும் பிரம்மிக்கின்றனர்.



Sun rays | ????? ??????? ????? ???????? ???? ?????!
 
தவ வலிமையா அல்லது கூட்டு பிரார்த்தனையா… &#2951

கடவுளின் நாமம் சொல்வதே கூட்டு வழிபாடு சிரனந்துendru உணர்த்திய ஆதிசேஷன்

தவ வலிமையா அல்லது கூட்டு பிரார்த்தனையா… இரண்டில் எது சிறந்தது?” என்று வசிஷ்டருக்கும் விஸ்வாமித்திரருக்கும் இடையே ஒரு சமயம் வாக்குவாதம் மூண்டது.

தவவலிமை தான் சிறந்தது என்று விஸ்வாமித்திரரும் இல்லை இல்லை கூட்டு பிரார்த்தனை தான் சிறந்தது என வசிஷ்டரும் வாதிட்டனர்.


“உயிர்கள் இறைவனை அடைய மனம் ஒருமித்த தவம் இருக்க வேண்டும். அது ஒன்று தான் அவன் அருளை பெற ஒரே வழி” என்று விஸ்வாமித்திரர் வாதிட்டார். வசிஷ்டரோ “துறவிகளுக்கு வேண்டுமானால் தவமிருப்பது சாத்தியப்படலாம். ஆனால், சம்சார சாகரத்தில் பல்வேறு பிரச்னைகளில் இன்னல்களில் ஆசா பாசங்களில் மூழ்கிக் கிடக்கும் குடும்பஸ்தர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அது ஒன்றே அவர்களை இறைவனிடம் சேர்ப்பித்து விடும்” என்றார்.


இருவரும் நீண்ட நேரம் விவாதித்தனர். பிரச்னை தீர்வுக்கு வந்தபாடில்லை.


இருவரும் நேராக பிரம்மாவிடம் சென்றார்கள். பிரம்மா இவர்களிடம், “நான் படைப்புத் தொழிலில் ரொம்பவும் மும்முரமாக இருக்கிறேன். நீங்கள் சிவனைப் பாருங்கள்”, என சொல்லி விட்டார். சிவனிடம் சென்றார்கள் இருவரும். “என் பரமபக்தன் ஒருவன் பூலோகத்தில் மிகவும் கஷ்டப்படுகிறான். என்னை வருந்தி அழைத்தான். அவனைப் பார்க்கப் போகிறேன். மகாவிஷ்ணு தான் இது போன்ற விஷயங்களுக்கு தீர்வு சொல்வதில் சமர்த்தர். உங்கள் கேள்விக்கு பொறுமையாக பதில் சொல்வார். அவரிடம் செல்லுங்கள்” என்றார்


இருவரும் பரந்தாமனை நோக்கி ஓடினார்கள். விஷ்ணு ஒரு சிறிய புன்முறுவலுடன் “முனிவர்களே! இதற்கு எனக்கு பதில் தெரியுமாயினும், என்னை விட இதோ படுத்திருக்கிறேனே! ஆதிசேஷன். அவனுக்கு ஆயிரம் நாக்கு. நீங்கள் கேட்ட கேள்விக்கு ஒரு நொடியில் பதில் சொல்லி விடுவான்” என்று ஆதிசேஷனை காண்பித்து தான் தப்பித்துக் கொண்டார்.


ஆதிசேஷன் அவர்களை வணங்கிவிட்டு, “முனிவர்களே! உங்கள் கேள்விக்கு என்னிடம் பதில் இருக்கிறது. ஆனால், அதைச் சொல்ல ஒரு நிபந்தனை. நான் தான் இந்த உலகைத் தாங்குகிறேன். இப்போது பாரம் அதிகமாக இருக்கிறது. பேசவே முடியவில்லை. இதை நீங்கள் ஏதாவது செய்து சற்று குறையுங்கள். உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன்” என்றார்.


விஸ்வாமித்திரர் தான் செய்த தவத்தின் பலனில் நூறில் ஒரு பங்கை ஆதிசேஷனுக்கு கொடுத்தார். பாரம் இறங்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கூட்டி கடைசியில் தான் செய்த அத்தனை தவப் பயனையும் கொடுத்தார். ஓரளவு கூட அசையவில்லை.


வசிஷ்டர் தன் சிஷ்யர்களுடன் தான் செய்த கூட்டு வழிப்பாடு பலனில் லட்சத்தில் ஒரு பங்கு தான் கொடுத்தார். ஆதிசேஷனின் பாரம் நீங்கி விட்டது. விஸ்வாமித்திரர் தலை குனிந்தார்.


தவம், விரதம் முதலானவை கடினமானவை. கூட்டுப் வழிப்பாடு இலகுவானது. இது வீட்டில் ஒற்றுமையை வளர்க்கும். வெளியிடங்களில் சகோதரத்துவத்தை உருவாக்கும். ஊர் கூடி தேர் இழுத்தால் தான் தேர் நகரும். எனவே கலியுகத்தில் கூட்டு பிரார்த்தனையைவிட வலிமைமிக்கது வேறொன்றுமில்லை.




எனவே அடுத்தவர் நன்மைக்காக நாம் பிரார்த்தனை செய்வோம். இறைவன் அவற்றை உடனே தீர்ப்பது மட்டுமின்றி நம் கோரிக்கைகள் தாமே நிறைவேற்றப்படும்.




Source: ??? ??????? ?????? ?????? ?????????????? ??? ?????????? ???????? ????????? ?????! | RightMantra.com
 
பிரதோஷம்

[SUB]பிரதோஷம்[/SUB]



ஸ்ரீ திருநீலகண்டேஸ்வரசுவாமி நஞ்சை கண்டத்தில் அடக்கி பிற உயிர்கள் துன்பம் அடையக் கூடாது என்பதற்காக சிறிது நேரம் மௌனமாக இருந்தார் அந்நாள் ஏகாதசியாகும். இந்நாளில் தேவர்கள் உண்ணா நோன்பிருந்து சிவனை வழிபட்டனர்.

அதற்கு அடுத்த நாள் துவாதசி அன்று தேவர்கள் தமது விரதத்தை முடித்துக்கொண்டு மகிழ்வுற்றனர். அதற்கு அடுத்த நாள் திரயோதசி அன்று இதுவரையிலும் துன்பத்தில் இருந்து வந்த உயிர்கள் எல்லாம் இன்பம் அடையுமாறு உமா தேவியர் ரிஷியர் முனிவர் முப்பத்துகோடி தேவர்கள் காண சிவபெருமான் கயிலையிலே தமது திருக்கரத்தில் தமருகம் திரிசு10லம் ஏந்த நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு இடையே திருநடனம் செய்தார். இரவும் பகலும் சந்திக்கும் சந்தியா காலத்தில் ஆடியதால் இந்நடனம் சந்தியா நிறுத்தம் எனப்பெயர் பெற்றது.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை தேய்பிறை ஆகிய இ;வ்விரண்டு காலங்களில் வரும் திரயோதசி திதியில் சு10ரியன் மறைவதற்கு முன் (3¾ நாழிகை) மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை பிரதோஷகாலம் என்பது. இறைவன் நஞ்சு உண்ட பின்பு சந்தியா நிறுத்த நடனமாடியது சனிக்கிழமை திரயோதசி திதியில் ஆகவே சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகச்சிறப்புடையது என புராணங்கள் கூறுகின்றன.

நந்திதேவரின் இருகொம்புகளுக்கிடையே இறைவன் நடனம் ஆடியதால் பிரதோஷ வழிபாட்டில் திருநந்தி சிறப்பிடம் பெறுகிறார். மேலும் சிவபெருமான் நஞ்சருந்தியபோது அங்கிருந்த நந்திதேவர் தமது மூச்சுக்காற்றால் நஞ்சின் வேகத்தை இழுத்துக்கொண்டதால் அவரின் நாக்கு நீலநிறமாயிற்று. பிரதோஷ வேளையில் சுவாமிக்கும் நந்தி தேவருக்கும் ஒரு சேர அபஷேகமும் ஆராதனையும் இத்தலத்திலே நடைபெற்று வருகிறது.

திருநந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாத்தி 13 நெய்தீபம் ஏற்றி பச்சரிசியில் வெல்லம் கலந்து நெய்வேத்தியம் செய்து நந்திதேவரின் இரு கொம்புகளின் இடைவெளி வழியே சிவலிங்க மகாதீபாராதனை நடைபெறுகிறது. அதுசமயம் இவ்விறு கொம்புகளுக்கிடையே சிவதரிசனமும் செய்யப்படுகிறது.

இயல்பாகத் திருக்கோயிலை வலம் வரும் முறையில் இருந்து சற்று வேறுபட்ட நிலையில் பிரதோஷ காலத்தில் வலம் வர வேண்டும். இதனை "சோம சு10ந்திர வலம்" என்று கூறுவர். இறுதியில் வீடு திரும்பும் போது ஆத்ம பிரதட்சணம் (தன்னைத்தானே சுற்றிக்கொள்ளல்) செய்தல் வேண்டும். இவ்வாறாக நஞ்சினை உண்டு உலகினைக் காத்த சிவபெருமானின் இத்திருக்கோயிலில் பிரதோஷம் காண்பது மிகவும் நன்மையினைப் பயக்கும் என்பதால் பிரதோஷ நாளன்று இக்கோயிலில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் மற்றும் தீபாரதனைகள் நடைபெறும்.

குறிப்பு : பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுவதால் பிரதோஷ வழிபாட்டிற்கு பெரும் மகிமை உண்டு.


Welcome to Sri Thiruneelagandeswaraswamy Charitable Trust
 
யார் பிராமணன்?

யார் பிராமணன்?

பாண்டவர்கள் வனவாசம் செய்துகொண்டிருந்த சமயம். ஒருநாள் பீமசேனன் வனத்தின் அழகை ரசித்துக்கொண்டு உலாவிக்கொண்டிருந்தான். திடீரென்று ஒரு பெரிய மலைப்பாம்பு அவனை பிடித்து சுற்றிக்கொண்டது. அசாத்தியமான பலம் கொண்ட பீமனால் எத்தனை முயற்சித்தும் அந்த பாம்பிடமிருந்து மீள முடியவில்லை.

கொஞ்ச நேரத்தில், யுதிஷ்டிரர் தமயனை... தேடி அங்கு வந்தார். பீமனின் நிலையை பார்த்து பயந்துபோனார். பாம்பிடம் பீமனை விட்டுவிடும்படி பிரார்த்தித்தார். வேறு ஏதாவது இறை கொடுத்துவிடுகிறேன் என்றார். ஆனால், அந்த சர்ப்பம் அதற்கு இணங்கவில்லை.

ஆச்சரியமாக, அந்த பாம்பு பேச ஆரம்பித்தது.

அந்த பாம்பு வேறு யாருமல்ல, பாண்டவர்களின் மூதாதயர். பூர்வீக பிறவிகளில் அந்த பாம்பு நஹூஷன் என்ற அரசன். பணமும், அதிகாரமும் சேர்ந்த செருக்கால் அந்த அரசன் பிராமணர்களை அவமதிக்கவே அகஸ்தியரின் சாபத்தால் பாம்பாக பிறந்திருந்தான்.
அந்த பாம்பு யுதிஷ்டிரரிடம் சில கேள்விகளுக்கு சரியான விடை சொன்னால் பீமனை விட்டுவிடுவதாக சொன்னது.

நஹூஷனுக்கும் யுதிஷ்டிரருக்கும் நடந்த உரையாடல் வருமாறு..

ந : எவன் பிராமணன்? எது அறியத்தகுந்தது?

யு : சத்யம், தயை, பொறுமை, நல்ல நடத்தை, பூர்ணமாக ஹிம்ஸையை விலக்குதல், புலனடக்கம், கருணை என்ற குணங்கள் கொண்டவனே பிராமணன். சுக துக்கங்களைக் கடந்த பிரம்மமே அறியத்தக்கது. அதை அறிவதால் ஒருவன் பூர்ணத்துவம் பெறுகிறான்.

ந : இந்த குணங்கள் ஒரு சூத்திரனிடம் இருந்தால் அவன் பிராமணனா? பிரம்மம் என்பது சுகதுக்கங்கள் இல்லாதது என்றால், சுகதுக்கங்களை கடந்த நிலை இருக்கும் என்று தோன்றவில்லையே!

யு : சத்தியம் முதலான நான் சொன்ன குணங்கள் ஒரு சூத்திரனிடம் இருக்குமானால் அவன் சூத்திரன் அல்லன். இந்த குணங்கள் ஒரு பிராமணரிடம் இல்லையென்றால் அவன் பிராமணன் அல்லன். ஓ, சர்ப்பமே, இந்த குணங்கள் கொண்டிருக்கும் மனிதன் பிராமணன் என்றே ஆகிறான். இக்குணங்கள் இல்லாமல் இருப்பவன் சூத்திரனே.

சுகதுக்கங்கள் இல்லாத நிலை இல்லை என்று சொல்வது கர்மத்தால் விளைந்த அனைத்துக்கும் பொருந்தும். நீர் எப்படி இயற்கையில் உஷ்ணமாகாதோ, நெருப்பு எப்படி இயற்கையில் குளிர்ந்திருக்காதோ அப்படியே அறியாமை அகன்ற சத்தியத்தில் சுகதுக்கங்கள் இல்லை.

ந : குணங்களே பிராமணனை தீர்மானிக்குமானால், இக்குணங்கள் இல்லா பிராமணின் பிறப்பு முக்கியமற்று போகிறதே.

யு : பல குணங்கள் கலந்துவிட்ட இக்காலத்தில் பிறப்பால் பிராமணனை காண்பது கஷ்டம். எல்லாரும் பிறப்பில் சூத்திரர்களே. சில சம்ஸ்காரங்களாலும், வேதம் படிப்பதாலும் பிராமண குணங்கள் கிடைத்து பிராமணனாகிறான். ஸ்வாயம்புவ மனு சொல்வதும் இப்படியே. எல்லா சம்ஸ்காரங்களும் செய்தும், வேதம் படித்தும் அவனுக்கு இக்குணங்கள் கொள்ளாவிட்டால் அவன் பல குணங்கள் கலந்தவன் என்று அறிந்துகொள். சாத்திரங்களின் முடிவான தீர்மானம் இது. தன் சம்ஸ்காரங்களால் நற்குணங்கள் மேலெழும்பி இருப்பவனே பிராமணன்.

யுதிஷ்டிரனின் இந்த பதில்களால் சந்தோஷப்பட்ட நகுஷன் பீமசேனனை விடுவிக்கிறான்.

- மகாபாரத இதிஹாஸம். தத்வலோகா பத்திரிக்கையில் 1993


aanmigam: June 2013
 
வேடு கட்டுதல்.

வேடு கட்டுதல்.
---------------------------
10524005_754793937895714_3623343852527676240_n.jpg




வேடு என்ற சொல்லுக்கு வேய்தல் என்ற பொருளுண்டு.வேடு கட்டுதல் என்பது பானை அல்லது உணவு இருக்கும் பாத்திரத்தின் வாயை துணியால் மூடி கட்டுவதே ஆகும்.


நான் சிறுவயதாக இருக்கும்போது கிராமப்புறங்களில் ஒரு பேச்சுவழக்கு உண்டு.இரவு படுக்கபோகும் போது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்வார்கள்”மறக்காம அந்த சோத்து பானையை வேடுகட்டி வச்சுட்டு படு”என்பார்கள்.


சோத்து பானை மட்டுமல்ல,குழம்பு இருக்கும் சட்டி மற்றும் எல்லா வகையான உணவுகளையும் வேடுகட்டி வைக்கும் பழக்கம் முன்பு இருந்தது ஆனால் இப்போது கிடையாது என்பது வருத்தமான விசயம்.உணவின் மீது நம் கை படாமல் வேடு கட்டி வைத்திருக்கும் உணவு பொருள் எத்தனை காலத்திற்கும் கெடாமல் இருக்கும்.


அந்த காலத்தில் சமைத்த தானிய உணவுகளையும் மற்றும் இறைச்சி உணவுகளையும் பல காலத்திற்கு வேடுகட்டி வைத்து சாப்பிட்டியிருக்கிறார்கள்.அந்த உணவுகள் கெடாமல் இருப்பதற்கு அவ்வப்பொழுது வெய்யிலிலும் வைத்து பிறகு பாதுகாத்து வைத்து சாப்பிடுவார்கள்.அவர்கள் ஆரோக்கியமாகவும்,எந்த நோய் நொடியின்றியும் வாழ்ந்தார்கள் ஆனால் இப்போது குளிர்சாதன பொருட்கள் வந்தாலும்,எவ்வளவும் நவீன வசதிகள் வந்தாலும் பண்டைய கால தொழிநுட்பத்திற்கு ஈடு இணை ஏது?



அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
வலம்புரிச் சங்கு!

வலம்புரிச் சங்கு!



லம்புரிச் சங்கு பூஜிக்கப்பட்டு வரும் இல்லங்களில், பிரம்மஹத்தி முதலான அனைத்துவகை தோஷங்களும் அகன்றுவிடும். ‘சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி அங்க லக்ஷ்ணம் மனுஷ்யானாம் ப்ரம்ம ஹத்யாதிகம் தஹேத்’ என்பது வேதவாக்கு. வீடு கட்டுபவர்கள் கைப்பிடி அளவுள்ள வலம்புரிச் சங்கை நிலை வாசலில் வைத்து, வாஸ்து விதிப்படி சங்குப் பதிப்பு முறை செய்துவிட்டால், அந்த வீடு மூன்று தலைமுறைக்கு செல்வச் செழிப்போடு குபேர சம்பத்துடன் விளங்கும் என்பது நம்பிக்கை.


ஆலயங்களிலும் கும்பாபிஷேகம் நடைபெறும்போது, யாக சாலைகளில் எண்வகை மங்களப் பொருட்களில் ஒன்றாக வலம்புரிச் சங்கும் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. அதேபோன்று, கார்த்திகை மாத சோமவார (திங்கட்கிழமை) அபிஷேக காலங்களில் 108 சங்குகளுக்கு நடுவில் வலம்புரிச் சங்கு ஒன்றை வைத்து, சிவபெருமானாக வர்ணிக்கப்பட்டு பூஜிக்கப்படும்.அபிஷேக ஆராதனைகள் செய்த பிறகு, சங்கு தீர்த்தத்தை நம் மீது தெளிப்பார்கள். சங்கு நீர் உடலில் பட்டாலே அனைத்து துர்சக்திகளும் நம்மை விட்டு விலகும் என்கிறது சாஸ்திரம்.


p101a.jpg
புராணங்களில் வலம்புரிச் சங்கு



அமிர்தம் வேண்டி தேவ-அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த 16 வகை தெய்விகப் பொருட்களில் வலம்புரிச்சங்கும் ஒன்று. அதை இடக்கையில் ஏந்தியபடி தோன்றிய மகாலட்சுமியை, திருமால் தமது வலக் கையில் பிடித்துக்கொண்டார் என்கின்றன புராணங்கள்.
ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா வைத்திருந்த சங்குக்கு பாஞ்சஜன்யம் என்று பெயர். குருகுல வாசம் முடிந்ததும் குருநாதர் சாந்தீபனி முனிவரிடம், ”குருதட்சணையாக என்ன வேண்டும்?” எனக் கேட்டார் கிருஷ்ண பரமாத்மா. அவரும் அவர் மனைவியும், தங்கள் ஒரே மகனை
பஞ்சஜனன் எனும் அசுரன் கடத்தி கடலுக்குள் வைத்திருப்பதாகவும், அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டினார்கள். கிருஷ்ணரும் அந்த அசுரனுடன் போரிட்டு குருவின் மகனை மீட்டு வந்தார். அந்த அசுரன் எரிந்து சாம்பலாகி ஒன்று திரண்டு சங்கு வடிவமானதால், அதற்கு ‘பாஞ்ச ஜன்யம்’ என்று பெயர்.
கண்ணனைப் போன்று பாண்டவர்கள் ஐவருமே ஒவ்வொரு வகையான சங்கை கொண்டிருந்தனர்: தருமர்- அனந்த விஜயம்; அர்ஜுனன்- தேவதத்தம்; பீமன்- மகாசங்கம்; நகுலன்- சுகோஷம்; சகாதேவன்- மணிபுஷ்பகம்.



கடலில் உருவாகும் சங்குகளில் பல வகை உண்டு. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு ஆகியவற்றில் வலம்புரியாகக் கிடைக்கும் சங்குகளுக்கு சக்தி அதிகம் என்கின்றன ஆகமசாஸ்திரங்கள்


திருப்பதி பெருமாள் மணிசங்கு கொண்டிருக்கிறார். இவரைப் போன்றே திருவனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி பாருத சங்கும், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் வைபவ சங்கும், திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜ பெருமாள் துயிலா சங்கும் கொண்டு திகழ்கிறார்கள்.


p102a.jpg

நன்றி விகடன்

28 | May | 2014 | ??????????? ????? ???????? ???? ???????
 
மந்திரங்களில் மேலானது காயத்ரி. அதன் மகிம

மந்திரங்களில் மேலானது காயத்ரி. அதன் மகிமையைச் சொல்லும் ஒரு கதை:



முற்காலத்தில் நெல்லையைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த பாண்டிய மன்னன் ஒருவன், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டான். வைத்தியர்கள் பலர் முயன்றும் குணப் படுத்த முடியவில்லை. இதனால் பெரிதும் வருந்தினான் மன்னன்.


ஒரு நாள் மன்னனைச் சந்தித்த ஜோதிடன் ஒருவன், “தங்களுக்கு மருந்து தேவையில்லை. பரிகாரம் செய்தாலே போதும்!” என்றான். உடனடியாக, ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிட்டான் மன்னன்.
[TABLE="align: right"]
[TR]
[TD]
[/TD]
[/TR]
[/TABLE]
விரைவில் வேள்வி துவங்கியது. உரிய மந்திர உச்சாடனங்களுடன் எமதர்மனின் உருவில் பொம்மை ஒன்றைச் செய்த ஜோதிடன், அதற்கு விலை உயர்ந்த ஆபரணங்களை அணிவித்தான். மேலும் பொம்மையின் அருகில் தங்க நாணயங்களைக் குவித்ததுடன், அதன் கையில் கத்தி ஒன்றையும் செருகி வைத்தான்.


பிறகு, “மன்னா, பொம்மையின் கையில் உள்ள கத்தியைக் கீழே விழ வைப்பவர்கள், இந்த நகை மற்றும் தங்க நாணயங்களைப் பரிசாக எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவியுங்கள்!” என்றான் ஜோதிடன்.
அதன்படியே அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் அரண்மனைக்கு வந்தனர்.
ஆனால், ஒவ்வொருவரும் அந்த பொம்மையை நெருங்கும் வேளையில்… அது, மூன்று விரல்களை உயர்த்திக் காட்டும். வந்தவர்கள் ஒன்றும் புரியாமல் விழிப்பார்கள். பிறகு, அவர்களை நோக்கி பொம்மை ஆவேசத்துடன் நகர்ந்து வர ஆரம்பிக்கும். வந்தவர்கள் தலைதெறிக்க ஓடிவிடுவார்கள்.



p10.jpg



இந்த நிலையில், கன்னட தேசத்தைச் சார்ந்த அந்தணர் ஒருவர் திருநெல்வேலிக்கு வந்தார். அவர் தினமும் மூன்று வேளை தவறாமல் காயத்ரி ஜபம் செய்பவர். மன்னனின் அறிவிப்பைக் கேள்விப்பட்டவர், தானும் முயற்சித்துப் பார்க்கலாமே என்று எண்ணினார்.


நேரே அரண்மனைக்குச் சென்றவர், போட்டிக்கான நிபந்தனைகளைக் கேட்டறிந்தார். பிறகு, அந்த மந்திர பொம்மையை நெருங்கினார். வழக்கம்போல மூன்று விரல்களை உயர்த்திக் காட்டியது பொம்மை. அந்தணர், எதோ புரிந்தவராக, ‘முடியாது!’ என்பது போல், தலை யாட்டி மறுத்தார். உடனே பொம்மை, ஒரு விரலை மடக்கி வைத்து கொண்டு, இரு விரல்களை மட்டும் காட்டியது. இப்போதும் ‘முடியாது’ என்றே தலையாட்டினார் அந்தணர். அதன் பின்னர் ஒற்றை விரலை மட்டும் பொம்மை உயர்த்திக் காட்ட, ‘சரி’ என்பது போல தலை அசைத்தார் அந்தணர். அத்துடன், அருகில் பாத்திரத்தில் இருந்த நீரைக் கையில் ஏந்தி, தாரை வார்த்தும் கொடுத்தார். மறுகணம், கையில் இருந்த கத்தியைக் கீழே போட்டது பொம்மை. அப்போதே மன்னனின் வயிற்று வலியும் குணமானது. மன்னன் மிகுந்த மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தான்.



பிறகு, மந்திர பொம்மையின் மூன்று விரல் ரகசியத்தையும், அந்தணர் தலையசைத்து பதில் கூறியதன் விளக்கத்தையும் அவரிடமே கேட்டான் மன்னன். அந்தணர் விளக்கினார்:


“மன்னா… மந்திர பொம்மை மூன்று விரலை உயர்த்திக் காட்டியதும், தினமும் மூன்று வேளை காயத்ரி மந்திரம் ஜபிப்பதால் கிடைக்கும் பலனைத் தானமாகக் கேட்பதாகக் கருதி, ‘முடியாது’ என்று மறுத்தேன்.

பிறகு இரு விரல்களை மட்டும் காட்டியது பொம்மை. அப்போது, ‘இரு வேளைகள் காயத்ரி மந்திரம் ஜபித்த பலனை கொடு!’ என்று பொம்மை கேட்பதாக எண்ணினேன். அதற்கும் மறுத்து விட்டேன். இறுதியில், ஒற்றை விரலை சுட்டிக் காட்டியது பொம்மை. உடனே, ‘ஒரு வேளை ஜபித்த பலனைத்தானே கேட்கிறது… கொடுக்கலாம்!’ என்ற முடிவுடன், ‘சரி’ என்று சம்மதித்து, பலனை தாரை வார்த்தேன். பொம்மையும் கத்தியை கீழே போட்டு விட்டது!” என்றார்.

இதைக் கேட்ட மன்னன், காயத்ரி மந்திரத்தின் மகிமையை தானும் உணர்ந்து கொண்டான். நெடுஞ்சாண்கிடையாக அந்தணரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கியவன், அவருக்கு மேலும் பல பரிசுகளை வழங்கி கௌரவித்தான்.


நன்றி – சக்தி விகடன்


https://balhanuman.wordpress.com/2010/10/24/
 
பெரியவர்களிடம் ஆசி பெறுவது எப்படி?

பெரியவர்களிடம் ஆசி பெறுவது எப்படி?






பெரியவர்களிடம் ஆசி பெற சில விதிமுறைகளை தர்ம சாஸ்திரம் வகுத்துள்ளது.



* கடவுளை வணங்கிக் கொண்டிருப்பவர், தியானம், ஜபம் செய்பவர், தூங்கிக் கொண்டிருப்பவர், குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டிருப் பவர்களை நமஸ்காரம் செய்யக் கூடாது.



* கைகளில் அர்ச்சனைத் தட்டு, பூ ஆகியவற்றை வைத்துக் கொண்டு ஆசி பெறவோ, வணங்கவோ கூடாது.



* வயதில் மூத்தவர்கள் அமர்ந்திருக்கும் திசையை நோக்கி கால்களை நீட்டி நமஸ்காரம் செய்யக்கூடாது.



* சூரியன் இருக்கும் திசையில் கால்களை நீட்டிக் கொண்டு நமஸ்காரம் செய்யக் கூடாது. ஏனெனில், சூரிய மண்டலத்தில் அனைத்து தெய்வங்களும் இருக்கிறார்கள்.



* உறவினர் இறந்ததற்காக துக்கம் அனுஷ்டிக்கும் நாட்களில் யாரையும் நமஸ்காரம்



செய்யக்கூடாது. பிறரால் செய்யப்படும் நமஸ்காரத்தை ஏற்றுக் கொள்ளவும் கூடாது.



-நன்னிலம் வைத்தியநாத தீட்சிதர்


Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy
 
அட அப்படியா!

அட அப்படியா!
உலகப் புகழ்பெற்ற நயாகரா அருவியின் நுழைவு வாயிலில் தமிழில் வரவேற்பு வாசகம் எழுதப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பெரிய நூலகம் நியூயார்க் நகரில் உள்ளது. அதன் முகப்பு வாயிலில் "கற்க கசடற' என்ற திருக்குறள் வாசகம் இடம்பெற்று இருக்கிறது.

அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் "சைக்போட்ரான்' என்னும் நவீன கருவி மூலம் பிளாட்டினத்தை தங்கமாக மாற்றியுள்ளார்கள்.
(ஆதாரம்: புதிய கண்டுபிடிப்புகள்)

உலகின் முதல் பொதுவான நீட்டல் அளவையை இன்று இந்தியாவில் உள்ள பூ விற்பவர்கள் மட்டுமே பின்பற்றுகின்றனர். முழங்கை மூட்டிலிருந்து நடுவிரல் நுனி வரை உள்ள நீளமே ஒரு முழம். எகிப்தியர்களும், பாபிலோனியர்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இப்படித்தான் நீளத்தைக் கையினால் முழம்போட்டு அளந்தனர்.
(என்ன? யார்? எங்கே? எப்போது? நூலிலிருந்து)


குளியல்கள் பலவிதம்

அழகி கிளியோபாட்ரா ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி பழரசங்களையும், ஆலிவ் எண்ணெய்யையும் நீரில் கலந்து குளிப்பாராம்.

மொகாலய மன்னர் அக்பர் திறந்த வெளியில் புதிய குளத்து நீரில் ஐஸ் கட்டிகளை நிறைய மிதக்கவிட்டு அதில் குளிப்பாராம்.

ரோமானியர்கள் குளிப்பதை ஒரு விழாபோன்று கொண்டாடினார்கள். 2500 பேர் வரை சேர்ந்து ஒன்றாகக் குளிப்பார்களாம்.

விக்டோரியா காலத்தில் இங்கிலாந்தில் குளிப்பது என்பது எப்போதாவதுதான்.

நெப்போலியன் காலத்தில் குளிப்பதென்பது பணக்காரத் தன்மையாகும்.

ஜப்பானியர் 12ஆம் நூற்றாண்டிலிருந்தே தினசரி குளிப்பதை விரும்பினார்களாம்.

ஸ்பெயின் தேசத்து புகழ்பெற்ற அரசி இசபெல்லா தன் வாழ்நாளில் இரண்டே தடவைதான் குளித்தாராம். அதாவது பிறந்தவுடன் ஒரு முறை. அடுத்து திருமணத்தின் போது ஒரு முறை.
அது சரி? நீங்கள் எப்படி?



60,000 நெல்வகைகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு உலகிலுள்ள பல நாடுகளில் இருந்தும் சேகரிக்கப்பட்ட 60,000 நெல்வகைகள் ஆராய்ச்சிக்காக "நெல் பண்பக வங்கி'யில் பாதுகாத்து வைத்துள்ளார்கள். ஆங்கிலத்தில் இதற்கு "ரைஸ்ஜேர்ம் பிளாசம் பாங்' (Rice Germ Plasom Bank) என்று பெயர்.
(ஆதாரம்: International Rice Research Institute)

இப்படியெல்லாம் நம்பினார்கள்!

கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் உள்பட, முதலில் இதயம்தான் (மூளைக்குப் பதிலாக) மனிதனின் செய்கையை கண்ட்ரோல் செய்கிறது என்று நம்பினார்கள்.

குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது பாலுடன் தாயாரின் "மாரல் காரெக்டரும்' சேர்ந்து குழந்தைக்கு வருகிறது என்று இங்கிலாந்தில் நம்பினார்கள். தாய்ப்பால் இல்லாத சீமாட்டிகள், பால் கொடுக்க ஆயாக்களை நியமிக்கும்போது அவர்கள் காரெக்டர், பார்த்துதான் வேலைக்குச் சேர்த்தார்கள்.

பூமி தன்னைத்தானே எப்படி சுற்ற முடியும்? அப்படி சுற்றினால் கட்டடங்கள் நொறுங்கிவிடும். பறவைகள் அடித்துச் செல்லப்படும் - என்றெல்லாம் கலிலியோவிற்கு முன்பு நம்பினார்கள்.

அக்கால டாக்டர்கள் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் காலைக் கழுவவே கூடாது என்று கட்டளை பிறப்பித்தனர். அப்படிச் செய்வது பிறக்கும் குழந்தைகளுக்குக் கேடு விளைவிக்கும் என்று நினைத்ததே காரணம்.

முதலையைக் கடவுளாக வணங்கும் வழக்கம் பண்டைய எகிப்து மக்களிடம் இருந்தது.

பண்டைக்காலத்து கிரேக்கர்கள் கருப்பையில் இரண்டு அறைகள் இருப்பதாகவும், இடது பக்க அறையில் பெண் சிசுக்களும், வலது பக்க அறையில் ஆண் சிசுக்களும் உற்பத்தி ஆவதாகவும் நம்பினர்.





360 ?????? - Dinamani - Tamil Daily News
 
காய்கறிகளைச் சமைக்கும் முறை!

காய்கறிகளைச் சமைக்கும் முறை!

7.jpg





• காய்கறிகளை வாங்கியவுடன் உபயோகிக்க வேண்டும்.
• காய்கறிகளை அரியும் முன்பே கழுவ வேண்டும். காய்கறிகளைப் பெரிய துண்டுகளாக நறுக்குவது நல்லது.
• காய்கறிகளை நறுக்கியதும் தண்ணீரில் ஊறவைக்கக் கூடாது. இதனால் வைட்டமின் சத்து குறைகிறது.
• காய்கறிகளை அதிகமான நீரில் வேகவைக்கவும் கூடாது.
• காய்கறிகளை வேகவைக்கும் போது பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும்.
• காய்கறிகளை குறைந்த நேரம் வேகவைப்பதால் ஊட்டச்சத்துக்களைப் பாதுகாக்கலாம்.
• நீரை முதலில் கொதிக்க வைத்து பிறகு கொதிநீரில் காய்கறிகளை வேக வைக்கவேண்டும்.
• சமைக்கும்போது சோடா மாவு சேர்ப்பதால் வைட்டமின் "பி' அழிக்கப்படும்.
• காய்கறிகளை குளிர்ச்சியான ஈரப்பசை உள்ள இடத்தில் வைக்க வேண்டும்.
• ஒருமுறை சமைத்த காய்கறிகளை மறுபடியும் சூடாக்கக் கூடாது.

சொ.மு.முத்து, ஓமலூர்.



???????????? ????????? ????! - Dinamani - Tamil Daily News
 
"குக்குடம்'

"குக்குடம்'



13.jpg







குத்துகாலிட்டு அமர்ந்திருக்கும் நிலையை யோகாசனத்தில் "குக்குட' ஆசனம் என்று அழைப்பார்கள். உடல் உறுப்புகளை அடக்கி ஒரு நிலைக்கு கொண்டு வந்து அமர்ந்து அதன் மூலம் மனதை கட்டுப்படுத்தும் நிலையை "குக்குடாசனம்' என்பார்கள். ஐயப்பன் இந்த கோலத்தில்தான் காட்சி அளிக்கிறார்.


"குக்குடம்' என்றால் கோழி என்று பொருளாகும். இந்த ஆசனத்தில் அமர்ந்திருக்கும் நிலை ஒரு கோழி நிற்பது போன்ற நிலையை ஒத்திருப்பதால் இந்தப் பெயர் வந்தது.

கிருத்திகா, திருச்சி.



"?????????' ??????? - Dinamani - Tamil Daily News
 
குணங்கள்..,

குணங்கள்..,
---------------------
துரியோதனன் தன் மனைவி பானுமதியை பார்க்க அந்த புரத்திற்கு செல்கிறார்.அங்கே கர்ணனும்,பானுமதியும் சொக்கட்டான் விளையாடுகிறார்கள்.கணவர் துரியோதனை பார்த்தவுடன் பானுமதி இருக்கையை விட்டு எழுந்திரிக்கிறார்.


ஆட்டத்தை பாதியிலேயே விட்டு பானுமதி எழுந்திரிக்கிறாரே என நினைத்த கர்ணன் பானுமதியின் கையை பிடித்து அமர சொல்கிறார்.இந்த காட்சியை கண்ட துரியோதனன்,கர்ணனனின் செயலை தவறாக நினைக்கவில்லை.கர்ணனும்,பானுமதியும் வார்த்தைகளில் மட்டும் அண்ணன்,தங்கையாக பழகவில்லை,உள்ளத்திலும் உண்மையான அண்ணன் தங்கையாக பழகினர்,



எவ்வளவு நல்ல குணங்கள் கொண்டவார்க இருந்தாலும்,தன் மனைவியின் கையை பிடித்து நண்பன் உட்காரசொன்னால் தவறாக நினைப்பார்கள் ஆனால் துரியோதன எவ்வளவு தீய குணங்கள் கொணாடவராக இருந்தாலும் அந்த செயலை தவறாக எண்ணாமல் பெருந்தன்மையாக எடுத்துகொண்டார்.

தருமர் மாகபாரத் போரில் முதல் நாள் பின்னடைவை சந்தித்தவுடன்,அவரால் அந்த சிறு தோல்வியை கூட தாங்கி கொள்ளமுடியாமல் பலி வாங்கும் குணம் பீறீட்டதாம்.


அதுபோல் நாம் நல்லவராக நினைப்பவர்களுக்கும் மோசமான குணங்கள் இருக்கும்,மோசமானவராக நினைப்பவர்களுக்கு உயர்ந்த குணங்கள் இருக்கும் இதுதான் வாழ்வின் யாதார்த்தமான உண்மை.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
சித்தருக்கு காட்சி கொடுத்த கருமாரி

சித்தருக்கு காட்சி கொடுத்த கருமாரி


d76fb8ba-7bf8-4a6b-a745-f2efe9bc48e8_S_secvpf.gif


சித்தர்கள் என்னும் பெரியவர்கள், அன்னை கருமாரியின் பெருமையை அறிந்தவர்கள்; அன்னையின் திருப்பெயர் சிறப்பில் இரண்டறக் கலந்தவர்கள். அவர்களிடையே இருந்த கோடக சித்தர் என்பார். ஒரு சமயம், `அன்னை கருமாரியின் சக்திவேதச் சிறப்புடையதா? அல்லது தனித்தநாதப் பொருட் சிறப்புடையதா?' என்னும் ஐயம் கொண்டார்;

தம்முடன் இருந்த சித்தர்களிடம் ஐயத்தை வினவினார். சித்தர் திருக்கூடத்தில் வீற்றிருந்த குணநாத சித்தர் என்பவர், ``அன்னை கருமாரியின் சக்தியைக் குறித்துச் சந்தேகமா? இந்த எண்ணமே தவறானது. அன்னை கருமாரியின் திருப்பெயர் மகிமை மிக்கது.

அத்திருப் பெயரைச் சொன்ன அளவில் அறிவு சிறக்கும், செல்வம் பெருகும், வாழ்வு வளமுறும். அன்னை கருமாரி போன்று வேறு தெய்வமின்று. அவளே புவனம் முழுமைக்கும் அன்னை. அவளது திருப்பெயரைப் போன்றே அவளது அருட்சாம்பலுக்கும் அற்புத சக்தி உண்டு. அவளே அகிலமெல்லாம் படைத்துக் காத்து வருகின்றாள்.

அன்னையவள் அருளாட்சியே எங்கும் நடைபெற்று வருகின்றது. அவளே பரம்பொருள், அனைத்துத் தத்துவங்கட்கும் அவளே ஆதாரம். ஐந்தெழுத்து மந்திரமாகிய `சிவாயநம' அவளுக்கு உரியது. அவளே வேதங்களில் நிறைந்து விளங்குபவள்'' என்று அன்னை கருமாரியின் அருட்சக்தி பற்றி விரித்துரைத்தார்.

குணநாத சித்தரால் ஐயம் தெளிந்தார் கோடக சித்தர். ஐயம் நீங்கி அகத்தெளிவு கொண்ட அவர், அன்னை கருமாரியைக் கண்டு தரிசிக்க ஆவலுற்று, திருவேற்காட்டுப் பதிவந்தடைந்து அன்னை மாரியைப் பணிந்து வணங்கினார். வேதமும், வேதத்தின் விழுப்பொருளும் அவளே என உணர்ந்து போற்றினார்.

ஐயம் கொண்ட தம்மை அபயம் கொள்ள வேண்டும் என்று வேண்டினார். சித்தருள் சிறந்தவராகிய கோடக சித்தர் மீது இரக்கம் கொண்ட அன்னை கருமாரி, அவர்முன் தோன்றித் திருக்காட்சி தந்து, அருட்சாம்பல் அளித்து, அதன் சிறப்புணர்த்தி, தானே வேதங்களின் ஆதாரம் என்னும் உண்மையையும் உணர்த்தித் திருவருள் புரிந்து மறைந்தாள்.


??????????? ?????? ??????? ??????? || karumariamman siddhar worship
 
தீபம் எரியும் திசை பலன்

தீபம் எரியும் திசை பலன்



296c519a-85de-4687-86ee-d5844ee0da13_S_secvpf.gif


திருவிளக்கு ஏற்றுவது மிகவும் சிறப்பான ஒன்றாகும். அந்த விளக்கின் தீபம் எந்த திசை நோக்கி இருக்கிறதோ அதற்கு ஏற்றவாறு பலன்கள் கூறப்படுகிறது.

* கிழக்கு திசை நோக்கி தீபம் எரிந்தால், எல்லாவித கிரக தோஷங்களும், பீடைகளும் விலகும்.

* தீபம் மேற்கு நோக்கி இருந்தால் கடன் தொல்லை, பகை, சனி தோஷம் முதலியன நீங்கும்.

* வடக்கு நோக்கி இருக்கும் தீபத்தால், திரண்ட செல்வம் வந்து சேரும். திருமணத் தடை விலகும். கல்வி வளர்ச்சியும், சர்வ மங்கலமும் உண்டாகும்.

* தீபமானது தெற்கு நோக்கி இருப்பது அபசகுணமாகும். தெற்கு திசை நோக்கி தீபம் ஏற்றப்படக்கூடாது.


????? ??????? ???? ???? || deepam benefits
 
வீட்டுக்குறிப்புகள்

வீட்டுக்குறிப்புகள்




1. டிவி, குளிர்சாதனப்பெட்டி, ட்யூப் லைட் இவற்றை உபயோகத்திற்குப்பின் அணைத்து விட்டு மீண்டும் உடனே போடக்கூடாது. ரெஃப்ரிஜிரேட்டரில் கம்ப்ரெஸ்ஸரும், டிவியில் பிக்சர் ட்யூபும் ட்யூப் லைட்டில் பாலண்டும் பழுதாகி விடும். நிறுத்திய பின் உள்ளே மாற்றங்கள் நிகழ்ந்து பூர்த்தியாக சில நிமிடங்கள் பிடிக்கும். சில நிமிடங்கள் விட்டு மறுபடியும் போடுவது நல்லது.


2. குளிர்சாதனப்பெட்டியைத் துடைக்கும்போது பச்சைக்கற்பூரம் கலந்த நீரினால் துடைத்தால் பூச்சிகள், சிறு வன்டுகள் உள்ளே நுழையாது.


3. கறுத்துப்போன வெள்ளி சாமான்களை தாம்பூல சுண்ணாம்பு கொண்டு தேய்த்தால் பளபளவென்று ஆகி விடும்.


4. சர்க்கரை வைத்திருக்கும் பாட்டிலில் சில ஏலக்காய்களைப் போட்டு வைத்தால் எறும்புகள் சீனியை மொய்க்காது.

5. சில வகை தண்ணீரில் துணிகள் துவைக்கும்போது துணிகள் பழுப்பாகி விடுகின்றன. இதற்கு அவற்றை சோப் பவுடரில் ஊறவைக்கும்போது 2 மேசைக்கரண்டி கல் உப்பும் சேர்த்து ஊறவைத்தால் துணிகள் பழுப்பு நிறம் நீங்கி பளிச்சென்றாகி விடும்.


6. ம‌ர‌ச்சாமான்க‌ளை பாலீஷ் செய்வ‌த‌ற்கு, முத‌லில் அவற்றை வினீகர் கலந்த நீரால் கழுவி, துடைத்து காய வைத்து பிற‌குதான் பாலீஷ் பூச வேண்டும்.

7. மூட்டைப்பூச்சி தொந்தரவிற்கு, கட்டிலின் நான்கு கால்களிலும் சூடம் அல்லது புரசம் பூவை வைத்து கட்டி வைக்க வேண்டும். தலையணை, மெத்தை இவற்றில் கற்பூரத்தைத் தூள் செய்து தூவலாம்.


8. தோல் பொருள்க‌ளின் நிற‌ம் ம‌ங்காதிருக்க‌, அவ‌ற்றின் மீது லின்ஸிட் ஆயில் என‌ப்ப‌டும் ஆளி விதை எண்ணையைப் பூசி துடைக்க‌ வேண்டும்.
9. ஈக்க‌ள் அதிக‌ம் உள்ள‌‌ இட‌த்தில் தூவக்காலில் நெருப்பிட்டு கிராம்புத்தூளைத் தூவினால் ஈக்கள் பறந்து விடும்.


10. மெழுகுவ‌ர்த்தி அதிக‌ வெளிச்ச்ச‌ம் த‌ர‌, அதை ஒரு பாத்திரத்தில் நிற்க வைத்து அதன் அடியில் தண்ணீர் ஊற்றி எரிய விடவும். உப்பில் புதைத்து வைத்தும் எரிய விடலாம்.

??????????????: ???????????????????

 
குண்டலினி என்றால் என்ன?

குண்டலினி என்றால் என்ன?

உயிரின் ஆதாரத்தோடு தொடர்பு கொள்ள, குண்டலினி சக்தியை யோகா அணுகும் விதத்தையும், நம் மூலத்தோடு தொடர்பு கொள்வதனால் நமக்கு ஏற்படும் தாக்கத்தையும் அழகுடன் விவரிக்கிறது இக்கட்டுரை. குண்டலினி வெறும் வார்த்தையல்ல, நமக்குள் புதைந்திருக்கும் புதையல்…


Please read more from here

????????? ??????? ???? | kundalini enral enna
 
நந்தீஸ்வரரின் சிறப்பு!

நந்தீஸ்வரரின் சிறப்பு!

சிவதரிசனத்தையே தன்உயிர்மூச்சாகக் கொண்டிருப்பவர்நந்தீஸ்வரர்.

இவருக்கு விடை, காளைஎன்றும் பெயர்களுண்டு. இவருடையஅனுமதி பெற்ற பின்னரே, சிவபெருமானின் சந்நிதிக்குள் நுழைய வேண்டும் என்கிறது ஆலய தரிசன விதி.

சிவ பக்தர்களில் இவரேதலைமையானவர். சிவனைப் போலவேமூன்று கண்களும், சிவனுக்குரிய மான்மற்றும் மழுவையும்(கோடரி) கையில்ஏந்தியிருக்கிறார். வெள்ளை நிறம்,வெள்ளை உள்ளம் கொண்டவரான நந்தீஸ்வரர், சிவ தியானத்தில்எப்போதும் திளைத்திருப்பார். சைவஆகமநுல்கள் அனைத்தையும் உலகிற்கு உபதேசித்தவர் இவரே. தர்மத்தின் சொரூபமான நந்தி மீது எழுந்தருளியே சிவன் அடியவர்களுக்கு காட்சியளிப்பார். நாயன்மார் அறுபத்துமூவருக்கும் சிவன் அம்மையப்பராக அம்பிகையுடன் நந்தி மீது எழுந்தருளியே காட்சி தந்துள்ளார்.ஞானசம்பந்தரின் முதல் பாடல், ‘தோடுடைய செவியன் விடையேறி’ என்றே துவங்குகிறது. இதிலிருந்து நந்தியின் பெருமை எந்தளவுக்கு உயர்ந்தது என்பதை அறிந்துகொள்ளலாம்.

சிவரகஸ்யம் என்னும் ஆகம நுõலில் நந்தீஸ்வரரின் பெருமை விரிவாகக் கூறப்பட்டுள்ளது.


Temple News | ????????????? ???????!
 
Hindu temple customs and etiquette

Hindu temple customs and etiquette


Any Hindu Temple is a holy place designated for public worship of God, where the form of God has been consecrated as per "Agama Shastra" (Procedures and rites based on specific scripture dealing with temple construction and worship). A temple is an essential part of the community and its presence is expected add to the peace and tranquility of the locality.


Many ancient temples are also rich treasure houses of traditional Indian art, sculpture and architecture; they serve as museums too for the tourists to come, view and appreciate the magnificent sculptural and architectural capabilities of the artisans of the yore.


Whether you are visiting a temple as a devotee or as a tourist, you should know how to conduct yourself at the holy premises. You may be surprised to notice that in reality even many of the devotees of God and the staff of the temple may not be following some of the guidelines here, but that need not be an excuse for you to ignore them.


In most of the temples, the priests or pujaris belong traditionally to Brahmin class. In most of the temples (particularly in south India), only pujaris are allowed to touch the image if the God and do all the procedural worship including bathing the idol, dressing up, conducting puja and archana and other such practices. None other than the pujaris can enter the "Garbha Gruha" (Sanctum Sanctorum - the cubicle in which the idol is placed and worshiped).


In a well maintained temple, worship is conducted 6 times a day. Food (Prasad) is specially prepared for offering to God (at least twice a day) and the food is distributed to the priests, employees and the devotees who visit the temple.


There are many other customs and practices regularly followed in temples and there will be many differences in them from one temple to another based on several facts like who is the Prime God worshiped (like Shiva or Vishnu or other Gods), the specific region or location of the temple, the specific cultural background behind the origin of the temple and so on. Devotees are expected to honor the specific customs followed in a specific temple, though it may be patently different from those followed in some other temple.


Here are some etiquette to be followed by visitors to the temple:


Please read more from here

Raman's: Hindu temple customs and etiquette
 
கருடபுராணமும், பாவங்களுக்கான தண்டனைகளு&#

கருடபுராணமும், பாவங்களுக்கான தண்டனைகளும்...



ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர். உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிரா மணர்களுக்கு அளித்தல் வேண்டும். ஜீவன் செல்லும் போது குடைதானம் குளிர்ந்த நிழலில், அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.



1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம்.

2. கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம்.

3. சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.

4. குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவம்.

5. தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்கு கும்பீபாகம்.

6. பெற்றோர், மற்ற பெரியோர்ளைத் துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.

7. தெய்வ நிந்தனை, தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.

8. கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.

9. துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான நரகம் அந்த கூபம்.

10. நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத் துளைப்போர்க்கானது கிருமிபோஜனம்.

11. பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர்க்கு அக்கினி குண்டம்.

12. கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம்.

13. தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் பாவிகள் பெறும் நரகம் சான்மலி.

14. அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.

15. ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லட்சியமின்றி விலங்குகளைப் போல் திரிவோர்க்கான நரகம் பூபோதம்.

16. பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு பிராணி ரோதம்.

17. டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு விசஸனம்.

18. இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது லாலா பக்ஷம்.

19. தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக் கொல்வோர்க்கு சாரமேயாதனம்.

20. பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம் கொண்டோர்க்கானது அவீசி.

21. மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.

22. தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு க்ஷõரகர்த்தமம்.

23. நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை ஆகியவற்றுக்கு ர÷க்ஷõணம்.

24. தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.

25. தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.

26. உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.

27. விருந்தினரை வெறுத்தோர், சுயநல வாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம்.

28. செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.


தாமிஸிர நரகம்: பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள்.

அநித்தாமிஸ்ர நரகம்: கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.

ரௌரவ நரகம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.

மகா ரௌரவ நரகம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.

கும்பிபாகம்: சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.

காலகுத்திரம்: பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.

அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும்.

பன்றி முகம்: குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதிப்படுவார்கள்.

அந்தகூபம்: உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.

அக்னிகுண்டம்: பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.

வஜ்ரகண்டகம்: சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

கிருமிபோஜனம்: தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும். பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தும்.

சான்மலி: நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.

வைதரணி: நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகம் இது. வைதரணி என்பது நதியல்ல. இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும். கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து துன்பப்படுவார்கள்.

பூபோதம்: சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும்.

பிராணி ரோதம்: பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால் அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.

விசஸனம்: பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.

லாலா பக்ஷம்: மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனும் அதே முறையில் வதைபடும்.

சாரமேயாதனம்: வீடுகளை தீவைப்பது, சூறையாடுவது, உயிர்களை வதைப்பது, விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுகுவித்தல் போன்ற கொடிய பாவங்களைச் செய்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கு விசித்திரமான கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும்.

அவீசி: பொய்சாட்சி சொன்னால் நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்துவார்கள்.

மார்க்கண்டேய புராணம் கூறும் பாவத்திற்கேற்ற தண்டனைகள்:

1. பிறர் மனைவியை காமக்கண் கொண்டு நோக்கியவர்களின் கண்கள் இரும்புமுகம், நீண்ட அலகுள்ள கொடிய பறவைகளால் கொத்திப் பிடுங்கப்படும்.

2. குருவை அவமதித்தல், சாஸ்திரத்தைச் சாதுக்களைக் கேலி செய்தல், கோள் சொல்பவர்கள் நாக்கு இடுக்கிகளால் பிடுங்கப்படும்.

3. விருந்தோம்பாமல் தான் மட்டுமே உண்டு மகிழ்பவன் மலம், சிறுநீர், குருதி போன்றவற்றை உணவாகக் கொள்ளச் செய்யப்படுவர்.

4. அக்கினி, குரு, பசு ஆகியவற்றை காலால் தீண்டியவன் கால்கள் வெட்டப்படும்.

5. தெய்வநிந்தனை, குருவை இகழ்தல் செய்வதைக் கேட்டவர் காதில் இரும்பு ஆணி அடிக்கப்படும்.



?????????????, ????????????? ???????????....
 
நிம்மதி அளிக்கும் நீல வண்ணன்!

நிம்மதி அளிக்கும் நீல வண்ணன்!

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி தாலுக்காவிலுள்ள 'அகர மேல்' என்ற அழகிய கிராமத்தில் மஹாபாரதத் தொடர்புடையதான திருத்தலம் ஒன்று அமைந்துள்ளது. இக்கிராமம் புராதன காலத்தில், 'புருஷ மங்களம்' என்று அழைக்கப்பட்டது. தற்போது பேட்டை, நசரத் பேட்டை, வரதராஜபுரம் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.



மஹா பாரதப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம்.... கௌரவர் தரப்பில் துரோணாசாரியர் தீவிரமாகப் போர் புரிந்ததால் பாண்டவர்கள் மனதில் ஒரு திகில் ஏற்பட்டுவிட்டது. அவர்கள் ஸ்ரீகிருஷ்ண பகவானை தரிசித்து இது பற்றி கேட்டனர்.


ஸ்ரீகிருஷ்ணர், ''குல குருவான துரோணரை வீழ்த்தவில்லையென்றால் பாண்டவர்களுக்கு தோல்வி ஏற்படுவது நிச்சயம். துரோணாசாரியாரை அழிக்க ஒரே வழிதான் உள்ளது. அவரின் மகனான அஸ்வத்தாமா இறந்துவிட்டதாக ஒரு பொய் சொன்னால், அதுவும் தர்மர் சொன்னால், துரோணர் அதை நம்பி, புத்திர சோகத்தால் சில நிமிடங்களாவது செயலற்றுப் போவார்; போர் புரிவதை நிறுத்திவிடுவார். அப்போது சமயம் பார்த்து அவரை வீழ்த்திவிடலாம்'' என்று ஆலோசனை கூறினார்.

ஆனால் தர்மர் இந்தக் குறுக்கு வழியை ஏற்கவில்லை. அந்தச் சமயத்தில் தர்மரின் தம்பி பீமசேனன், ஒரு யுக்தி செய்தான்; 'அஸ்வத்தாமா' என்ற பெயருடைய ஒரு யானையை வீழ்த்தினான். உடனே கிருஷ்ண பகவான் தர்மரை பார்த்து, ''அஸ்வத்தாமா அதஹ: குஞ்சர'' என்று உரக்கச் சொல்லச் சொன்னார். அதாவது, 'அஸ்வத்தாமா என்ற யானை இறந்துவிட்டது' என்பது இதன் பொருள். தர்மராஜனும் அவ்வாறே உண்மையைக் கூறியபோது, 'குஞ்சர' என்ற வார்த்தையை ('குஞ்சரம்' என்றால் யானை) தன் சங்கை முழக்கி அடக்கிவிட்டார் கண்ணன். தர்மரின் வாக்கியம், துரோணரின் காதில், 'அஸ்வத்தாமன் இறந்துவிட்டான்' என்கிற ரீதியில் கேட்டது. உடனே அவர் புத்திர சோகத்தினால் தன் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட, அச்சமயம் பாண்டவர்கள் அவரை வீழ்த்தினர்.




தெரிந்தே ஒரு நாடகமாடியிருந்ததால் தர்மருக்கும், ஏனைய பாண்டவர்களுக்கும் 'தாங்கள் கபடமாக துரோணரை வீழ்த்திவிட்டோமே' என்ற துன்பம் மனதை அறுத்தது. இதற்குப் பரிகாரம் செய்ய எண்ணி நாரத முனிவரை அணுகி நடந்ததை அவரிடம் கூறினர். நாரதர், ''புருஷ மங்களம்' என்ற தலத்தில் 'தர்ம சத்ர யாகம்' செய்வதே இதற்குப் பரிகாரம்'' என்று கூறினார். அதன்படி பாண்டவர்கள் தற்போது 'அகர மேல்' என்றழைக்கப்படும் இந்தக் கிராமத்துக்கு வந்து யாகம் நடத்தினர்.

ஸ்ரீகிருஷ்ண பகவான், எந்த யானையை வைத்து பாண்டவர்களை பொய் சொல்ல வைத்தாரோ அதே யானையாகிய 'அஸ்வத்தாமா'வின் (பச்சை யானை) மீது ருக்மினி, சத்யபாமாவுடன் யாகத்திலிருந்து வெளிப்பட்டார்; அனைவர்க்கும் காட்சி தந்து, பாண்டவர்களுக்கு சிறப்பாகத் திருவருள் செய்தார். இதன் மூலம் தன் லீலைகள் அனைத்தும் தர்ம நெறி நிற்பவை; கபடமற்றவை என நிரூபித்தார். பாண்டவர்களுக்கும் இதனால் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி இன்றளவும் 'பச்சை வாரணப் பெருமாளாக' காட்சி தந்து, தன்னை தரிசிப்பவர்களுக்கு நிம்மதி அளிக்கின்றார் திருமால் என்பது தல வரலாறு.

??????? ????????? ??? ??????!
 
Faith

Faith



"A man wanted to cross the river. A sage gave him an amulet and said, This will carry thee across.' The man, taking it in his hand, began to walk over the waters. When he reached the middle of the river curiosity entered into his heart, and he opened the amulet to see what was in it. Therein he found, written on a bit of paper, the sacred name of Râma. The man at this said deprecatingly, Is this the only secret?' No sooner had he said this than he sank down. It is faith in the name of the Lord that works miracles, for faith is life, and doubt is death.” -

Sri Ramakrishna

Ramakrishna, His Life and Sayings: The Sayings of Ramakrishna: The Sayings of Râmak<I>ri</I>sh<I>n</I>a: 200-299
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top