• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My Collections

Status
Not open for further replies.
தர்ப்பையின் மகிமை -

தர்ப்பையின் மகிமை -


தர்ப்பை புல்லுக்கு இன்னொரு பெயர் ‘குசா’ என்பதாகும். இராமபிரானின் இரண்டாவது மகனின் பெயர் குசா. அவருடைய பெயரைக் குறிக்கும் அளவில் இந்தப் புல்லின் பெயரை வைத்துள்ளார்கள்.

* தர்ப்பைப்புல் உஷ்ணத்தை அகற்றி உடலைக் குளுமை செய்கிறது.
* பாலும், சிறுநீரும் அதிகளவில் சுரக்கச் செய்கிறது.
* சிறுநீரக வலிக்குக் குணமளிக்கிறது.
* பாம்புக் கடி விஷத்தை அகற்றுகிறது.
* தர்ப்பை புல் பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று தோஷங்களை சுத்தம் செய்கிறது.
* சிறநீரக கற்களைக் கரைக்கிறது. இரத்தத்தில் தேங்கும் யூரியா, கிரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றகிறது.

* உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுகிறது. மொத்தத்தில் இது சிறுநீரக நோய் நிவாரணி என்று வேதங்கள் கூறுகின்றன.

உயிரைக் குடிக்கும் நோய்களில் கிட்னிஃபெயிலியர் மோசமானது. ஆயுர்வேத, யுனானி மருத்துவர்கள் தர்ப்பை புல்லை பதப்படுத்தி மருந்தாகத் தருகின்றனர். அதனால் டயாலிஸிஸ் செய்யத் தேவையில்லை. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் தேவைப்படுவதில்லை.


50 வருடங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை இல்லாத காலக்கட்டத்தில் மக்கள் இறைவனை வணங்கிவிட்டு வைத்தியர் தரும் தர்ப்ைப்புல் மருந்தைத்தான் பயன்படுத்தியதாக வேதங்கள் கூறுகின்றன.


இந்து சமுதாயத்தில் நன்றியைச் செலுத்தும் பழக்கம் அதிகளவில் இருப்பதால் தனக்கு வாழ்வளித்த தர்ப்பைப்புல்லை வணங்கும் பழக்கம் உள்ளது.

யுனானி மருத்துவத்தில் தர்ப்பைப்புல் மருந்தாகப் பயன்படுத்தப்படுக஠ ?றது. இதை முறையாகப் பதப்படுத்தி கிட்னி ஃபெயிலியர், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகத் தரப்படுகிறது.

தர்ப்பையின் மகிமை, இந்துக்களின் நம்பிக்கை:

தர்ப்பையை தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும், பித்ரு காரியங்களுக்கு தெற்கு நுனியாகவும் பயன்படுத்துவார்க. தர்ப்பை உஷ்ண வீரியமும், அதிவேகமும் கொண்டது.

மேலும் பஞ்ச லோகங்களில் தாமிரத்தில் உள்ள மின்சார சக்தி தர்ப்பையிலும் உண்டு. எனவேதான் கோவில் கும்பாபிஷேகங்களி தங்க, வெள்ளி கம்பிகளின் இடத்தில் அருளைக் கடத்த தர்ப்பையைப் பயன்படுத்துவார்க
தர்ப்பையின் சாம்பலால்தான் கோவிலில் உள்ள விக்ரங்களையும், பாத்திரங்களையும் துலக்குவார்கள்.

எல்லா விதமான ஆசனங்களையும்விட தர்ப்பாசனம் சிறந்தது என்பார்கள். பிரேத காரியங்களில் ஒரு தர்ப்பையாலும், கப காரியங்களில் இரண்டு தர்ப்பைகளாலும், பித்ரு காரியங்களில் மூன்று தர்ப்பைகளாலும் தேவகாரியங்களில் ஐந்து தர்ப்பைகளாலும் சாந்தி, கர்மா போன்றவற்றில் ஆறு தர்ப்பைகளாலும் மோதிரம் போல் முடிய வேண்டும். இறைவழிபாடு, ஜபம், ஹோமம், தானம், பித்ரு தர்ப்பணம் முதலியவற்றில் கையில் தர்ப்பை மோதிரம் போட்டுக் கொள்ளாமல் செய்வது உரிய பலனைத் தராது என்பார்கள்.

கிரகண காலங்களிலும், அமாவாசையிலும் தர்ப்பைக்கு வீரியம் அதிகம். எனவேதான் கிரகண காலங்களில் உணவுப் பண்டங்களில் நுண்ணிய கிருமிகளால் கெடமாமலிக்க தூய்மையான தர்ப்பையைப் பரப்புகிறார்கள். தர்ப்பை மோதிரத்தை அணிந்துதான் பிராணாயாமம் செய்ய வேண்டும் என்பதும் வழக்கமாக உள்ளது.

தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்:

திருநள்ளாறு கோயிலில் தருப்பைப்புல் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

சங்க இலக்கியம்:

‘தருப்பை’ என்பது ஒருவகையான நீளமான புல் ஆகும். இதனைக் கொண்டு கூரைவேயப்படும் என்கிறார் கடியலூர் உருத்திரங்கண்ணனா. பெரும் பாணாற்றுப்படை என்னும் நூலில் சங்க இலக்கியப்பெயராக தருப்பை எனவும், உலக வழக்குப் பெயராக தர்ப்பை, குசப்புல், தருப்பை, நாணல் எனவும் வழங்கப்படுகிறது. இது புதர்ச் செடியாகத் தரையடி மட்டத் தண்டிலிருந்து செழித்து வளரும்


Source: Sage of Kanchi

Hindukkalin Prasad
 
இறைவன் தரும் வாய்ப்பு!

இறைவன் தரும் வாய்ப்பு!


எத்தனை அயோக்கியனாக இருந்தாலும் அவன் திருந்த, சிந்திக்க இறைவன் ஒரு வாய்ப்பை அளிப்பான். இரணியனுக்கு அந்த வாய்ப்பு நரசிம்மபிரபுவின் மடியில் படுத்திருந்தபோது கிடைத்தது.


அவன் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. ராவணனுக்கு அந்த வாய்ப்பு "இன்றுபோய் நாளைவா" வில் கிடைத்தது.


அவனும் அதை கோட்டை விட்டான்.
துரியனுக்கு கண்ணன் தூதின்போது கிடைத்தது.

விஸ்வரூபமெடுத்து நாராயணனாய் துரியன் முன் நின்று தான் யார் என்பதை உணர்த்தி துரியன் சிந்திக்க ஒரு வினாடியை கொடுத்தான்

இறைவன். இதை "moment of truth" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.


ஒவ்வொரு மனிதருக்கும் தன் வாழ்நாளில் ஒருமுறை இந்த "moment of truth" வரும்.....அந்த வினாடியில் எடுக்கும் முடிவு தான் அவர்கள் வாழ்க்கையை மாற்றும்.


அருச்சுனனுக்கு போரின்போது இந்த போது குழப்பம் நேர்ந்தது. கீதையை உபதேசித்து "போரிடுகிறாயா,வில்லை கீழே போடுகிறாயா?" என்று கேட்டான் இறைவன்.
கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் பற்றிக்கொண்டான் அருச்சுனன்.


கர்ணன் முன் தோன்றி அவன் திருந்த ஒரு சந்தர்ப்பம் அளித்தான் இறைவன்.
செஞ்சோற்றுகடனின் பேரில் அதை முட்டாள்தனமாக நிராகரித்தான் கருணன்.


கும்பகருண்னைபோல் கருணனும் செஞ்சோற்றுகடனுக்காக இறைவன் அளித்த ஒரு வாய்ப்பை நழுவவிட்டான்....

பாகவதத்தில், புராணத்தில் இது வழக்கமாக கானப்படும் நிகழ்வுதான்.


இறைவன் யாரையும் உடனே தண்டிப்பதில்லை.
திருந்த எத்தனை தூரம் சந்தர்ப்பம் தர முடியுமோ
அத்தனை தூரம் சந்தர்ப்பம் கொடுக்கிறான்.


இரணியனை எப்போது அவன் கொன்றான்?
பிரகாலாதனை வருடக்கனக்காய் சித்திரவதை செய்தபோதும் அவன் திருந்த சந்தர்ப்பம் கொடுத்து காத்திருந்தான்....


ஒரு சிறுவனை கூட தன்னால் கொல்ல முடியவில்லை என்பதை உனர்ந்தும் இரணியன் திருந்தவில்லை.
இறுதியில் நரசிம்மமாய் வந்து இரணியனை எடுத்து தன் மடிமேல் அமர்த்தி அவன் விழிகளை உற்றுநோக்கினான் நாராயணன்.


அப்போதும் இரணியன் மனதில் துளி பக்தி வரவில்லை.துளியும் அவன் திருந்தவில்லை.இரணியனின் விழிகளில் நாராயனன் கண்டது வெறுப்பைத்தான்.


இனிமேல் இவன் திருந்தவே மாட்டான் என்பதை அறிந்தபின்னரே அவன் வயிற்றை கிழித்து அவனை மாய்த்தான் நாராயணன்.


ராமாவதரத்திலும் அதுதான் நடந்தது.
ராமன் பரசுராமனை வென்றபோதே ராமாயணம் முடிவுக்கு வந்துவிட்டது என்பார்கள்.

ஏன் எனில் ராவனனை வென்றவன் கார்த்தவீரியார்சுனன்.கார்த்த வீரியாசுனனை கொன்றவன் பரசுராமன். பரசுராமனை ராமன் வென்றபோதே ராம,ராவன யுத்தத்தின் முடிவு தெரிந்துவிட்டது.


ராவணனை கட்டி வனமெங்கும் இழுத்துபோன வாலியை கொன்ரபோது அதுமீண்டும் ஊர்ஜிதமானது.

அதன்பின் நடந்ததெல்லாம் ராவணன் திருந்த தரப்பட்ட சந்தர்ப்பமே...


ஆயுதமேந்தி தோற்ற ராவணனை அன்றே கொல்லாமல் "இன்று போய் நாளை வா" என சொல்லி அவன் திருந்த மீண்டும் ஒரு சந்தர்ப்பம் தந்தான்.


இறுதிவரை ராவணன் திருந்தவில்லை...இறுதியில் அவனை வேறு வழியின்றி மாய்த்தான்.



Source: Sage of Kanchi

Hindukkalin Prasad
 
நமது நாட்டின் தேசிய மலரான தாமரை பெருமைகள

நமது நாட்டின் தேசிய மலரான தாமரை பெருமைகள் அறிவோம்

தாமரை நம் நாட்டின் தேசிய மலர். இந்திய அரசு வழங்கும் உயர் விருதுகள் எல்லாம் பத்மஸ்ரீ, பத்மபூஷன் என பத்மம் என சமஸ்கிருதத்தில் அழைக்கப்படும் தாமரையை ஒன்றியே வருவதாக இருக்கும்.

செல்வத்தின் கடவுளான திருமகள் சிவப்புத் தாமரையில் அமர்ந்திருப்பதாகவும், கல்வியின் கடவுளான கலைமகள் வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பதாகவும் நம் நாட்டில் சித்தரிக்கப் படுகிறார்கள்.

மகாவிஷ்ணுவின் நாபியில் இருந்து தாமரை வருவதால் மகாவிஷ்ணுவிற்கு பத்மநாபன் என்ற பெயரும் உண்டு.

கண்ணனின் கண்கள் தாமரை போன்ற அழகுடன் இருப்பதால் கண்ணனுக்கு கமலக் கண்ணன் என்ற பெயரும் உண்டு.


தாமரை நம் நாட்டு தேசிய மலர் மட்டுமல்ல வியட்னாம், எகிப்து போன்ற நாடுகளுக்கும் அது தேசிய மலர் ஆகும். பண்டைய எகிப்தில் தாமரை நைல் நதிக்கரை ஓரத்தில் பரவலாகக் காணப்பட்டதாகவும், அக்கால எகிப்தியர்கள் தாமரை மலரைப் புனிதமாகப் போற்றியதாகவும் சொல்லப்படுகிறது. நம் நாட்டு தெய்வங்களைப் போலவே பண்டைய எகிப்திய கடவுள்களும் தாமரை மலரைக் கையில் வைத்திருப்பதாக பழங்கால எகிப்திய சிற்பங்கள் கூறுகின்றன. ஆனால் எகிப்திய தாமரை நம் நாட்டு தாமரையை விட தோற்றத்தில் சற்று வேறுபட்டிருக்கிறது.


இனி தாமரை மலருக்கு ஆன்மிக ரீதியாகவும், மற்ற விதங்களிலும் உள்ள தனிச்சிறப்புகளைப் பார்ப்போம்.


தாமரை மலர் சத்தியம், சிவம், சுந்தரம் என்ற முக்குணங்களின் இருப்பிடம். இறைவனும் இந்த முக்குணங்களையும் கொண்டவன் தானே? அதனால் தான் இறைவனின் பல அம்சங்களும் தாமரை மலருடனேயே ஒப்பிடப்படுகின்றன. தாமரைக் கண்கள், தாமரைப் பாதங்கள், தாமரைக் கைகள், இதயத்தாமரை என்றெல்லாம் சொல்கிறோம். தாமரை மலர் இறைவனைப் பூஜிக்க மட்டுமே பயன் படுத்தப்படுகிறது. தாமரை மலரைத் தலையில் யாரும் சூடிக்கொள்வதில்லை.


நம் வேதங்களிலேயே தாமரை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

சோம என்பது தாமரையை குறிக்கும் என்பது டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ மெக்டொனால்ட் என்ற தாவரவியலாளரால் நிறுவப்பட்டிருக்கிறது. வேதம் சொல்லும் தாவரம் நிச்சயமாக இந்திய கண்டத்தில் மிக முக்கியமான, மையமான இடம் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர் சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து பிற்காலத்திய சைவ, வைணவ, பவுத்த பண்பாடுகள் வரை ஆராய்ச்சி செய்தார். இத்தகைய முழுமையான பண்பாட்டு ஆராய்ச்சியின் விளைவாக அவர் சோமத் தாவரம் என்பது வேறெதுவும் அல்ல தாமரை (Nelumbo nucifera) தான் என முடிவு செய்தார்.

வேதங்களின் உருவகத்துக்கும் சிந்து சமவெளி நாகரிக முத்திரைகளில் காணப்படும் சித்திரங்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை அவர் சுட்டிக்காட்டினார். சிந்து வெளி பண்பாட்டு முத்திரைகளில் காணப்படும் இலச்சினை சித்திரத்தில் புனிதத் தாமரை மிக அழகான முறையில் காட்டப்பட்டுள்ளது. தாமரைப்பூவின் தூண் போன்ற பீடம் முக்கியப்படுத்தப் பட்டுள்ளது என்பதை ஆதாரபூர்வமாகக் காட்டி உள்ளார்.


இப்படி பழமைச் சிறப்பு வாய்ந்துள்ள தாமரையின் வேர் தரையில் சேற்றில் இருந்தாலும் அதன் மலர்கள் அத்தகைய சுற்றுப்புறத்தினால் பாதிக்கப்படாதவையாக அழகுடன் ஒளி வீசுபவையாக இருக்கும். அப்படியே நாமும் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் அந்த சூழ்நிலையில் இருந்து மேல் எழுந்து தாமரையைப் போலவே உள்ளும் புறமும் தூய்மையுடனும், அழகுடனும் விளங்க வேண்டும் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள்.



அதே போல தண்ணீரிலேயே இருந்தாலும் தாமரை இதழ்கள் தண்ணீரினால் நனைவதில்லை. இது ஞானிகளின் மனநிலைக்கு உதாரணமாக இருக்கிறது. எத்தனையோ துன்பங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் நடுவே ஞானியின் உலக வாழ்க்கை அமைந்தாலும் ஞானி அவற்றால் சிறிதும் பாதிக்கப்படாமல், தன் மேலான இயல்பு மாறாமல்இருப்பதை தாமரை இலை – தண்ணீர் உதாரணம் மூலம் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.



தனியாக ஓரிடத்தில் இருப்பவன் எதனாலும் பாதிக்கப்படாமல் இருக்கலாம். அது ஒரு கஷ்டமான காரியம் அல்ல. துன்பங்களும், பிரச்சினைகளும், கவர்ந்திழுக்கும் விஷயங்களும் நிறைந்த உலகின் மத்தியில் வாழ்ந்து கொண்டு இருந்தும் அவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பது தான் பேருயர்வு. அது தான் உன்னத நிலை. அந்த நிலைக்கு ஒருவன் உயர்ந்திருக்க ஏண்டும் என்று சதா நினைவூட்டிக் கொண்டிருப்பது தாமரையின் தனிப்பெரும் சிறப்பு.




பகவத் கீதையிலும் கிருஷ்ண பரமாத்மா ஒரு சுலோகத்தில் தாமரை மலர் உதாரணத்தையே அர்ஜுனனிற்கு சொல்லி விளக்குகிறார். ”எவனொருவன் செயல் புரிகையில் அச்செயல்களிடத்தில் பற்றுதல் கொள்ளாமல் அவற்றை இறைவனுக்கு அர்ப்பணித்து விடுகிறானோ அவன் நீரில் இருப்பினும் நீரினால் நனைக்கப்படாத தாமரை இதழ்களைப் போல் பாவங்களினால் பாதிக்கப்படாமல் இருப்பான்”.


இப்படி வேத காலத்தில் இருந்து ஆன்மிக மலராய் கருதப்படும் தாமரைக்கு மருத்துவத் தன்மைகளும் இருக்கின்றன. பழங்காலத்திலிருந்தே தாமரை ஆயுர்வேத வைத்தியத்தில் பயன்படுவதால், அதைப் பற்றிய விவரங்கள் ஆயுர்வேத நூல்களில் அதிகம் சொல்லப்பட்டிருக்கின்றன. கப, பித்தங்களை சீராக்கவும், பேதிக்கு மருந்தாகவும் தாமரை பயனாகிறது. முக்கியமாய் இதய நோய்களைக் கட்டுப்படுத்தும் மருந்தாக தாமரை கருதப்படுகிறது.


பொதுவாக ஜுரங்களுக்கு மருந்தாகவும், தாகத்தை தணிப்பதாகவும், வயிற்றுப்பூச்சிகளை போக்கும் மருந்தாகவும், உடலில் உஷ்ணம், எரிச்சல் இவற்றை குறைக்க வல்லதாகவும் ஆயுர்வேதத்தில் தாமரை கருதப்படுகிறது.

தாமரை விதைகள் தானியங்களை விட சத்துள்ள உணவாக கருதப்படுகிறது. தாமரையின் வேர்கிழங்கு (Rhizome) உடல் வளர்ச்சிக்கு சத்துணவாகும். இது உடலுக்கு ‘டானிக்’ காக செயல்படும். கல்லீரல் நோய்கள், இருமல், மாதவிடாயில் அதிக ரத்தப்போக்கு, மூலத்தில் ரத்தம் வருவது போன்றவற்றுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது. தாமரை பிராங்கைடீஸ் போன்ற நுரையீரல் நோய்களுக்கும் மருந்தாகும்.

செந்தாமரையை விட வெண் தாமரைக்கு மருத்துவ குணங்கள் அதிகம் என்கின்றனர்.



இப்படி மகாலட்சுமியின் உறைவிடமாகவும், மெய்ஞான நிலையின் உதாரணமாகவும், மருத்துவ குணங்களின் தொகுப்பாகவும் இருக்கும் நம் நாட்டு தேசிய மலரான தாமரையின் மகத்துவத்தை அறிந்திருந்து, முறையாகப் பயன்படுத்தி நாம் முழுப்பலன் அடைவோமாக!



Source: Sage of Kanchi

Hindukkalin Prasad
 
திருநீறு விளக்கம்

திருநீறு விளக்கம்

ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை திருநீறு (விபூதி) குறிக்கின்றது.

வெந்துஅனைவரும் பிடி சாம்பலாக ஆவார்.


திருநீற்றை 4 வகைகளாகப் பிரிக்கின்றனர்.

அவை

1) கல்பம்
கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு.


2) அணுகல்பம்
காடுகளில் கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு


3) உபகல்பம்
மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு


4) அகல்பம்
அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு
"மந்திரமாவது நீறு" - திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம். மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு.



நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.

புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்பர், அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர்.


புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது. அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்.


உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் 18 இடங்கள் குறிப்பிடப்படுகின்றன.

------------------------------------------------------------------------------------
1) தலை நடுவில் (உச்சி)
2) நெற்றி
3) மார்பு
4) தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
5) இடது தோள்
6) வலது தோள்
7) இடது கையின் நடுவில்
வலது கையின் நடுவில்
9) இடது மணிக்கட்டு
10) வலது மணிக்கட்டு
11) இடது இடுப்பு
12) வலது இடுப்பு
13) இடது கால் நடுவில்
14) வலது கால் நடுவில்
15) முதுகுக்குக் கீழ்
16) கழுத்து
17) வலது காதில் ஒரு பொட்டு
18) இடது காதில் ஒரு பொட்டு


பலன்கள்
-------------
திருநீறு அணிவதால்
தடையற்ற இறைச் சிந்தனை,
உயர்ந்த நற்குணங்கள்,
குறைவற்ற செல்வம்,
நல்வாக்கு,
நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும்.

பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும்,
தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோட்சம் செல்ல வழிகாட்டும்.


இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.
-----------------------------------------------------------------------------------
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!



Source:

Subha Anadhi
 
கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்&

கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!

TN_20140411153639189635.jpg



ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர்.

உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிரா மணர்களுக்கு அளித்தல் வேண்டும். ஜீவன் செல்லும் போது குடைதானம் குளிர்ந்த நிழலில், அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.


1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம்.
2. கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம்.
3. சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.
4. குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவம்.
5. தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்கு கும்பீபாகம்.

6. பெற்றோர், மற்ற பெரியோர்ளைத் துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.
7. தெய்வ நிந்தனை, தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.
8. கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.
9. துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான நரகம் அந்த கூபம்.
10. நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத் துளைப்போர்க்கானது கிருமிபோஜனம்.

11. பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர்க்கு அக்கினி குண்டம்.
12. கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம்.
13. தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் பாவிகள் பெறும் நரகம் சான்மலி.

14. அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.
15. ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லட்சியமின்றி விலங்குகளைப் போல் திரிவோர்க்கான நரகம் பூபோதம்.

16. பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு பிராணி ரோதம்.
17. டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு விசஸனம்.
18. இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது லாலா பக்ஷம்.
19. தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக் கொல்வோர்க்கு சாரமேயாதனம்.
20. பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம் கொண்டோர்க்கானது அவீசி.

21. மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.
22. தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு க்ஷõரகர்த்தமம்.
23. நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை ஆகியவற்றுக்கு ர÷க்ஷõணம்.
24. தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.
25. தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.

26. உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.
27. விருந்தினரை வெறுத்தோர், சுயநல வாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம்.
28. செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.

தாமிஸிர நரகம்: பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள்.

அநித்தாமிஸ்ர நரகம்: கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.

ரௌரவ நரகம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.

மகா ரௌரவ நரகம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.

கும்பிபாகம்: சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.

காலகுத்திரம்: பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.

அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும்.

பன்றி முகம்:
குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதிப்படுவார்கள்.

அந்தகூபம்: உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.

அக்னிகுண்டம்: பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.

வஜ்ரகண்டகம்: சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

கிருமிபோஜனம்: தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும். பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தும்.

சான்மலி: நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.

வைதரணி: நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகம் இது. வைதரணி என்பது நதியல்ல. இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும். கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து துன்பப்படுவார்கள்.

பூபோதம்: சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும்.

பிராணி ரோதம்: பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால் அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.

விசஸனம்: பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்

லாலா பக்ஷம்: மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனும் அதே முறையில் வதைபடும்.

சாரமேயாதனம்: வீடுகளை தீவைப்பது, சூறையாடுவது, உயிர்களை வதைப்பது, விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுகுவித்தல் போன்ற கொடிய பாவங்களைச் செய்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கு விசித்திரமான கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும்.

அவீசி: பொய்சாட்சி சொன்னால் நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்துவார்கள்.


மார்க்கண்டேய புராணம் கூறும் பாவத்திற்கேற்ற தண்டனைகள்:

1. பிறர் மனைவியை காமக்கண் கொண்டு நோக்கியவர்களின் கண்கள் இரும்புமுகம், நீண்ட அலகுள்ள கொடிய பறவைகளால் கொத்திப் பிடுங்கப்படும்.
2. குருவை அவமதித்தல், சாஸ்திரத்தைச் சாதுக்களைக் கேலி செய்தல், கோள் சொல்பவர்கள் நாக்கு இடுக்கிகளால் பிடுங்கப்படும்.

3. விருந்தோம்பாமல் தான் மட்டுமே உண்டு மகிழ்பவன் மலம், சிறுநீர், குருதி போன்றவற்றை உணவாகக் கொள்ளச் செய்யப்படுவர்.

4. அக்கினி, குரு, பசு ஆகியவற்றை காலால் தீண்டியவன் கால்கள் வெட்டப்படும்.

5. தெய்வநிந்தனை, குருவை இகழ்தல் செய்வதைக் கேட்டவர் காதில் இரும்பு ஆணி அடிக்கப்படும்.

6. தீர்த்தத்தில் மலம், சிறுநீர் கழிப்பவன் கல்லுக்குள் தேரையாய்ப் பிறப்பான்.

7. நீசனிடம் தானம் கேட்டோர், யாசகர், குருவிடம் பொய் கூறியோர் நாயாகப் பிறப்பர்.

8. தானியத்தை திருடியவன் எலியாகவும், சகோதரர் மனைவியைக் கெடுத்தவன் குயிலாகவும், குரு பத்தினியைக் கூடியவன் பன்றியாகவும், உணவு பால் திருடியவன் கொக்காகவும், கொழுந்து விட்டு எரியாத தீயில் ஓமம் செய்தவன் செரிமானம் இன்றி அவதிப்படுபவனாகவும் பிறப்பர். இப்படி வேறு, வேறு பாவங்களுக்கு ஏற்ப ஏராளமான தண்டனைகள் நரகத்தில் அளிக்கப்படும். எனவே மனிதன் பாவத்திற்கு ஏற்ற தண்டனை நரகில் நிச்சயம் என்று அறிந்து புண்ணியத்தையே சம்பாதிக்க வேண்டும்.



Temple News | News | Dinamalar Temple | ???? ??????? ?????? ???????? ????????????? ?????????!
 
மாங்கல்யம்

மாங்கல்யம்

DSCN1647.jpg



தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு

உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்

திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்

அதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.

உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை

தாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்

“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''

என்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்

ஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.

உணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

தாலி என்பது ஒரு புனித நூல். அதனை ஒரு குறிப்பிட்ட முறையில் உருவாக்க வேண்டும். அது மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் அந்த தாலியைப் புதுப்பிக்கவும் வேண்டும். ஆனால் இன்றோ இது வழக்கத்தில் இல்லாத நடைமுறையாக மாறிவிட்டது. பெண்கள், தாலி என்று சொல்லிக் கொண்டு தடிமனாக ஒரு தங்கச் சங்கிலியைப் போட்டுக் கொள்வதே இதற்கு காரணம்.

உண்மையில் தாலி என்பது நூலில்தான் இருக்க வேண்டும். அதுவும் குறிப்பிட்ட முறையிலான பருத்தி நூலாகவோ அல்லது பட்டு நூலாகவோ இருக்க வேண்டும். இந்த புனித நூல், சம்பந்தப்பட்ட இருவரின் சக்திநிலைகளைப் பயன்படுத்தி, தாந்திரீக வழியில் உருவாக்கப்படுகிறது.

அதாவது, ஆணின் குறிப்பிட்ட ஒரு நாடியையும் (சக்திநிலை) பெண்ணின் ஒரு குறிப்பிட்ட நாடியையும் இணைத்து, அந்த புனித நூல் ஒரு குறிப்பிட்ட வழியில் தயாரிக்கப்பட்டு பிறகு அணிவிக்கப்படுகிறது.

அதன் பின் அந்த ஆணும் பெண்ணும் உடலளவில் இணையும்போது அந்த இரு உடல்களின் இணைப்பு மட்டுமல்ல; அந்த இருவரின் சக்திநிலையும் கூட பின்னிப் பிணைந்த சங்கமமாக இருக்கும். இப்படி இருவரின் சக்திநிலைப் பிணைப்பு சாதாரணமானதல்ல.

இதுபோல் செய்யும்போது அந்த இணைப்பை, உறவை சுலபத்தில் முறிக்க இயலாது. அப்படியும் வலிய முறித்தால் குறிப்பிட்ட இருவருக்கும் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். இப்படித்தான் முன் காலத்தில் விவாகங்கள் நடத்தப்பட்டன.

இளம் வயதிலேயே, அதாவது 10, 11 வயதிலேயே விவாகங்கள் செய்து வைக்கப்பட்டன. இதுபோன்ற சக்திநிலை பிணைப்பால், அவர்களின் கவனம் தவறான வழியில் செல்லாமல் எப்போதும் பாதுகாப்புடன் காக்கப்பட்டது. இன்றைய மனிதர்களுக்கு இவை கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.

ஆனால் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், அந்த உறுதியான பிணைப்பு கணவன்-மனைவி இருவருக்கும் ஒரு அபரிமிதமான சக்தியைக் ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த சக்தி ஒரு சமநிலையிலும் இருந்ததால் தங்கள் வாழ்க்கையில் என்ன செய்ய நினைக்கிறார்களோ, அதை எந்த மனச் சிதறலும் இல்லாமல் அவர்களால் செய்ய முடிந்தது.

இவர் தன்னை விட்டுப் பிரிந்து விடுவாரோ என்பது போன்ற பாதுகாப்பற்ற தன்மையால் அவர்கள் பாதிக்கப்படவில்லை. அந்த அளவிற்கு அவர்களிடம் உறுதியான பிணைப்பு, பந்தம் இருந்தது. இப்போது காணப்படும் பாதுகாப்பற்ற தன்மை பாரதத்திற்கு மிகவும் புதிதான ஒரு சமாச்சாரம்.

கணவன் என்னை விட்டுப் பிரிந்து விடுவாரோ, மனைவி என்னை விட்டுப் பிரிந்து விடுவாரோ என்கிற பாதுகாப்பற்ற உணர்வுகள் முன்பு இருந்ததில்லை. ஆனால் தற்போது தாலி அல்லது மங்கள சூத்திரம் என்பது வெறும் சடங்காகி விட்டது.

நாம் சில திருமணங்களை முறைப்படி செய்து வைக்கிறோம். அந்த திருமணத்தால் அவர்களுக்குள் இருக்கும் பிணைப்பு அபரிமிதமானதாக இருக்கிறது. அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து எப்படி ஒரே சக்தியாகப் பணிபுரிகிறார்கள் என்பதையும், அப்போது அந்தப் பணி எவ்வளவு சக்தியுடன் நடக்கிறது என்பதையும் நீங்கள் பார்க்க முடியும்.

வாழ்க்கையில் நாம் செய்ய நினைப்பதை பயமோ, பாதுகாப்பற்ற தன்மையோ இன்றி உறுதியுடன் செய்து முடிக்க முடியும். இதற்காகத்தான் திருமணம், தாலி போன்ற அமைப்புகள் எல்லாம் நம் வாழ்விற்கு ஒத்தாசையாக உருவாக்கப்பட்டது.

தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது . உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.
நீங்கள் எப்போதும் உயர்ந்ததையே பாருங்கள் உயர்ந்ததாக சிந்தியுங்கள் உங்கள் வாழ்வும் உயர்ந்ததாக இருக்கும் அதை விட்டு விட்டு ஆகயாத்தில் பறக்கின்ற கழுகு தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதை மறந்து கீழே பூமியில் கிடக்கும் அழுகிய மாமிசத்தை பார்ப்பது போல் தாழ்மையான கருத்துக்களை பார்க்காதீர்கள் தாழ்வான சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதிர்கள் உயர்ந்தவர்கள் எப்போதும் உயர்ந்ததையே காண்பார்கள்.


?????????? - Good News
 
ஆய கலைகள் 64

ஆய கலைகள் 64


1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)

2. எழுத்தாற்றல் (லிகிதம்)

3. கணிதம்

4. மறைநூல் (வேதம்)

5. தொன்மம் (புராணம்)

6. இலக்கணம் (வியாகரணம்)

7. நயனூல் (நீதி சாத்திரம்)

8. கணியம் (சோதிட சாத்திரம்)

9. அறநூல் (தரும சாத்திரம்)

10. ஓகநூல் (யோக சாத்திரம்)

11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)

12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)

13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)

14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)

15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)

16. மறவனப்பு (இதிகாசம்)

17. வனப்பு

18. அணிநூல் (அலங்காரம்)

19. மதுரமொழிவு (மதுரபாடணம்)

20. நாடகம்

21. நடம்

22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)

23. யாழ் (வீணை)

24. குழல்

25. மதங்கம் (மிருதங்கம்)

26. தாளம்

27. விற்பயிற்சி (அத்திரவித்தை)

28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)

29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)

30. யானையேற்றம் (கச பரீட்சை)

31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)

32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)

33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)

34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)

35. மல்லம் (மல்ல யுத்தம்)

36. கவர்ச்சி (ஆகருடணம்)

37. ஓட்டுகை (உச்சாடணம்)

38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)

39. காமநூல் (மதன சாத்திரம்)

40. மயக்குநூல் (மோகனம்)

41. வசியம் (வசீகரணம்)

42. இதளியம் (ரசவாதம்)

43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)

44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)

45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)

46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)

47. கலுழம் (காருடம்)

48. இழப்பறிகை (நட்டம்)

49. மறைத்ததையறிதல் (முஷ்டி)

50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)

51. வான்செலவு (ஆகாய கமனம்)

52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)

53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)

54. மாயச்செய்கை (இந்திரசாலம்)

55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)

56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)

57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)

58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)

59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)

60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)

61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)

62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)

63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)

64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)


Source: dinakaran daily newspaper
 
பாம்பாட்டிச் சித்தர்

பாம்பாட்டிச் சித்தர்

8ead8802-13fc-40d1-ba19-ea108532d2f7_S_secvpf.gif



மருத மலைமீது பெரிய நவரத்ன பாம்பு ஒன்று இருப்பதாகவும், அதன் தலையில் விலை மிகுந்த மாணிக்கம் இருப்பதாகவும், அதனைப் பிடிப்பவன் பெரிய பாக்யசாலி என்றும் சிலர் பேசிச் சென்றனர். இதனைக் கேள்விப்பட்ட பாம்பாட்டி சித்தர் அதனைப் பிடிக்க விரும்பி காட்டிற்குள் சென்று பாம்பைத் தீவிரமாகத் தேடினார்.

அப்போது திடீரென்று அங்கே சட்டைமுனி சித்தர் தோன்றினார். இங்கு எதைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பாம்பாட்டி சித்தர் ``நான் நவரத்ன பாம்பைப் பிடிக்க வந்தேன் அதைக் காணவில்லை'' என்றார். இதைக் கேட்ட சட்டமுனி சிரித்தார். நவரத்ன பாம்பை நீயே உனக்குள் வைத்துக் கொண்டு வெளியே தேடுகின்றாயே! இது பயனற்ற செயலல்லவா!

மிகுந்த உல்லாசத்தைத் தரக் கூடிய ஒரு பாம்பு எல்லோர் உடலிலும் உண்டு; ஆனால் யாரும் அதை அறிவதில்லை. அதனால் வெளியில் திரியும் இந்த பாம்பை விட்டுவிடு. உன் உடலில் இருக்கும் அந்த பாம்பை அறியும் வழிதேடு. இல்லாத பாம்பைத்தேடி ஓடாதே என்று சொன்னார். எல்லாவற்றையும் கேட்டு உண்மையை உணர்ந்த பாம்பாட்டியார் சித்தரின் காலில் விழுந்து வணங்கினார்.

சித்தர் கனிவோடு அவரைப் பார்த்து விளக்கமளிக்கத் தொடங்கினார். அற்புதமான இந்த மனித சரீரத்தினுள் ஆதியிலிருந்தே ஒரு பாம்பு படுத்துக்கொண்டிருக்கிறது. குண்டலினி என்பது அதன் பெயர். தூங்கிக் கொண்டிருக்கும். அந்த பாம்பு அறிவை சுருக்குகிறது. இதன் நுட்பத்தை அறிவது அரிது. மக்களின் துன்பத்திற்கு மூலாதாரமே இந்தப் பாம்பின் உறக்கம் தான்.

இறைவனை உணரப் பாடுபடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். அப்பொழுது `குண்டலினி' என்ற அந்தப் பாம்பு விழித்து எழும், அதனால் தியானம் சித்தியாகும். இறைவன் நம்முள் வீற்றிருப்பார். மனிதனுள் இறைவனைக் காணும் ரகசியம் இதுவே என்று சொல்லி முடித்தார் சட்டைமுனி. ``குருதேவா! அரும்பெரும் இரகசியத்தை இன்று உங்களால் அறிந்தேன். மேலான இந்த வழியை விட்டு இனி நான் விலக மாட்டேன்''! என்று சொன்ன பாம்பாட்டியார், சித்தரை வணங்கி எழுந்தார். சித்தர் அருள்புரிந்து விட்டு மறைந்தார்.

பாம்பாட்டியார் செய்த தொடர் யோக சாதனையால் குண்டலினி கை கூடியது. எல்லாவகை சித்துக்களும் சித்தியானது. ஒருநாள் வான் வழியே உலா வந்து கொண்டிருந்த போது பாம்பாட்டி சித்தர் யோசித்தார். கூடுவிட்டு கூடுபாயும் வித்தையின் வாயிலாக பாம்பாட்டி சித்தர் இறந்து போன அரசனின் உடலில் புகுந்தார். அரசன் எழுந்தான் அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆனால் அரசன் பிழைத்துக் கொண்டாரே தவிர அவர் செய்கைகள் ஏதும் திருப்திகரமாக இல்லை.

மக்களின் விமர்சனம் காதுபடவே விழுந்தது. ராணி கவலைப்பட்டாள். அவள் மனதில் சந்தேகப் புயல் மெல்ல விஸ்வரூபம் எடுத்தது. அந்த பாம்பாட்டியை நேரடியாகவே கேள்விகள் கேட்கத் தொடங்கினாள் ராணி. ``ஐயா! தாங்கள் யார்ப எங்கள் அரசராப அல்லது சித்து வித்தைகள் புரியும் யாரேனும் மகானாப என்று கேட்டாள்.

அரசி! உனக்கு உண்மைபுரிய ஆரம்பித்திருக்கிறது. இறந்து போன மன்னனுக்காக அழுது கொண்டிருந்த உங்களது துயரைப் போக்குவதற்காகவே நான் மன் னனது உடலில் புகுந்திருக்கிறேன். என்னுடைய பெயர் பாம்பாட்டிச் சித்தன் என்றார். அரசி உண்மையை உணர்ந்தாள் கைகளைக் கூப்பி எங்களுக்குத் தெய்வமாக வந்து உதவி செய்தீர் நாங்கள் என்ன செய்ய வேண்டும்.

கடைத்தேறும் வழியை உபதேசியுங்கள் என்று வேண்டினாள். அரசரிடமிருந்து பலப் பல தத்துவப் பாடல்கள் உபதேச மாக வந்தன. அவைகளைக் கவனமாக அனைவரும் கேட்டனர். அரசர் உடலிலிருந்து சித்தர் வெளியேறினார். அரசர் உடம்பு கீழே விழுந்தது. சித்தர் உபதேசப்படி ராணி அந் நாட்டை ஆளத் தொடங்கினாள்.

அரசர் உடலில் இருந்து வெளியேறிய பாம்பாட்டிச் சித்தர் தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த தன் பாம்பாட்டி உடலில் புகுந்தார். (இவர் தவம் செய்த குகை மருதமலை யில் இருக்கிறது. இவர் மருதமலை யில் சித்திய டைந்ததாகச் சிலரும், துவாரகை யில் சித்தியடைந் ததாகச் சிலரும், விருத்தாசலத்தில் சித்தியடைந்ததாகச் சிலரும் கூறுகின்றனர்.

மூன்று தலங்களிலும் இவரது நினைவிடம் உள்ளது.) பாம்பாட்டி சித்தர் ஸ்வாமிகளின் படத்தை வைத்து, அதன்முன் மஞ்சள், குங்குமம் இட்டு, அலங்கரிக்கப் பட்ட குத்து விளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் ஸ்வாமியே போற்றி! போற்றி! இவ்வாறு பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பிறகு, மூலமந்திரமான ``ஓம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் ஸ்வாமியே போற்றி'' என்று 108 முறை கூறி, ஜெபிக்க வேண்டும்.

பின்னர் நிவேதனமாக சர்க்கரை போடாத பச்சைப் பாலையும், வாழைப்பழங்களையும் வைக்க வேண்டும். பின் உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூறி வேண்டவும். பாம்பாட்டி சித்தர் நவக்கிரகங்களில் ராகு பகவானை பிரதிபலிப்பவர். இவரை முறைப்படி வழிபட்டால் நாகதோஷம் அகலும். மாயை அகன்று மனத்தெளிவு ஏற்படும்.

நிழல் நிஜமாகவும், நிஜம் நிழலாகவும் தோன்றும் நிலை மாறும். கணவன், மனைவி இடையே உள்ள தாம்பத்ய பிரச்சினைகள் அகலும். போதைப் பொருட்கள், புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் போன்ற தீய பழக்கங்கள் அகலும். வெளிநாட்டில் வேலைவாய்ப்பு, வெளிநாட்டு பிரயாணங்கள் உண்டாகும்.

ஜாதகத்தில் ராகுபகவானால் ஏற்படக்கூடிய களத்திர தோஷம் நீங்கி, நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் பெருகும். வீண்பயம் அகன்று தன் பலம் கூடும். நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் அகலும். இவருக்கு கருப்பு வஸ்திரம் அணிவித்து வழிபடுதல் விசேம். இவருக்கு பூஜை செய்ய சிறந்த நாள் சனிக்கிழமை.


???????????? ??????? || pambatti siddhar
 
கிருஷ்ணன் வணங்கும் 6 பேர்

கிருஷ்ணன் வணங்கும் 6 பேர்

கிருஷ்ணன் வணங்கும் 6 பேர் .

நான் 6 பேரை வணங்குகிறேன் என்று கிருஷ்ணபரமாத்மா சொல்லியிருக்கிறார் . அந்த 6 பேர் யார் தெரியுமா ?


ப்ராதஸ்நாநி அதிகாலையில் குளிப்பவன் .

அஸ்வத்தசேவி அரச மரத்தை வணங்குபவன் .

த்ருணாக்னி ஹோத்ரி மூன்று தீயை இடையறாது வளர்ப்பவன் .

நித்யான்னதாதா நாள்தோறும் ஏழைகளுக்கு உணவளிப்பவன் .

சதாபிஷேகி நூற்றாண்டு விழா செய்து கொண்டவன் .

ப்ரம்மஞானி இறைவனை உணர்ந்தவன் .

aanmigam: ????????? ???????? 6 ????
 
ஈசுவரன் ஏன் எல்லார்க்கும் முக்தி யளிப்ப&

ஈசுவரன் ஏன் எல்லார்க்கும் முக்தி யளிப்பதில்லை?

முக்தியை நாடுபவர்களுக்கு பகவான் முக்தியைக் கொடுக்கிறான்.

புத்தியை (போகத்தை) நாடுபவர்களுக்கு பகவான் போகத்தைக் கொடுக்கிறான்.

போகப் பொருள்களாய்ப் பரிணமித்திருப்பதும் பகவானே யாதலால் போகத்தை நாடுபவர்களும் தம் அறிவுக்கு எட்டியபடி பகவானையே நாடுகிறார்கள்.

இயற்கையோடு வைத்துள்ள வெவ்வேறு விதமான இணக்கத்துக்கு ஏற்றாற்போன்று பலவிதமான அனுபவங்கள் வாயிலாக எல்லா உயிர்களும் இறைவனையே இறுதியாக வந்தடைவதால் மார்க்கங்கள் யாவும் அவனை நோக்கிச் செல்பவைகளாகின்றன.

ஈசுவரன் கற்பக விருக்ஷம் போன்றவன். கற்பக விருக்ஷத்தின் அடியில் இருந்துகொண்டு யார் எதை விரும்புகிறார்களோ அதை அடைகின்றனர்.


Bhagavad Gita | Part-4 | Gnana Karma Sanyaasa Yogah | ????????? | ??????? ?????? ?????
 
மலையை விழுங்கிய மாமுனிவர்:

மலையை விழுங்கிய மாமுனிவர்:

Very+Old+Manu+Temple+in+Manali+Town+of+Dev-Bhoomi+%2528Himachal+Pradesh%2529-01.jpg


தவ வலிமை மிக்கவரான ஒரு முனிவர் மூவுலகமும் சென்று வரும் ஆற்றல் பெற்றவர். அப்படி ஒரு சமயம் அவர் விண்ணுலகம் சென்றபோது அவரது பார்வை தர்ம தேவனின் ராஜ்ஜியமான நரகத்தின் மீது பதிந்தது.


அங்கே மிகப் பெரிதாக வளர்ந்து நின்ற ஒரு குன்று, அவரது கவனத்தை ஈர்க்க தர்ம தேவனிடம் அது பற்றி விசாரித்தார்.




" முனிவரே ! உமது சிறு வயதில் அதிதி ஒருவரின் உணவில் நீர் விளையாட்டாகப் போட்ட கல்தான் இப்படிக் குன்றாக உயர்ந்து நிற்கிறது. நீர் இங்கு வந்து இதனை உண்ட பிறகே மோட்ஷம் பெற முடியும் ! " என்று சொன்னார் தர்ம தேவன்.



அதிர்ந்து போன முனிவர் விமோசனம் கேட்க, பூவுலகில் இதே அளவுள்ள ஒரு குன்றை நீர் தின்று விட்டால் போதும், இக்குன்று மறைந்து விடும் என்றார்.





அப்படியே பூவுலகம் வந்து முனிவர் தம் தவ பலத்தால் குன்று ஒன்றினைப் பொடிப்பொடியாக்கி நீரில் கரைத்து விழுங்கினார்.


சிலா ( பாறை ) நிறைந்த குன்றினை அதம் ( பொடி ) செய்து உண்டதால் அம்முனிவருக்கு சிலாதர் என்ற பெயர் உண்டாயிற்று.


அந்த சிலாத முனிவர் யார் தெரியுமா ?


கைலையின் காவல் நாயகரான நந்தியம்பெருமானின் அப்பா தான்
இந்த சிலாத முனிவர்.







buminathan - vazkhai pathivugal--?????????? ????????
 
எமன் பெற்ற சாபம் :

எமன் பெற்ற சாபம் :

astrology_3.jpg



நள்ளிரவில் அரண்மனைக்குள் புகுந்த திருடர்கள் விலை உயர்ந்த அணிகலன்களைத் திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்தார்கள். விழித்த வீரர்கள் அவர்களைத் துரத்தத் தொடங்கினார்கள்.

தப்பிக்க நினைத்த திருடர்கள் அருகில் இருந்த காட்டிற்குள் நுழைந்தார்கள். வீரர்களும் அவர்களை விடாமல் துரத்தினார்கள் . அங்கு ஓரிடத்தில் மாண்டவ்யர் என்ற முனிவர் தவம் செய்து கொண்டு இருந்தார்.

மாண்டவ்யர் கழுத்தில் மிகவும் விலை உயர்ந்த முத்து மாலையைப் போட்டான் ஒரு திருடன். பின்னர் அவர்கள் எல்லோரும் அருகினில் இருந்த புதரினில் பதுங்கி மறைந்துகொண்டனர்.

திருடர்கள் எல்லோரையும் வீரர்கள் வளைத்துப் பிடித்தார்கள். கழுத்தில் மிக உயர்ந்த மலையுடன் இருந்த மாண்டவ்யரையும் திருடன் என்றே நினைத்து கைது செய்தனர் .

திருடர்களுடன், மாண்டவ்யரையும் சேர்த்து இழுத்துச் சென்று அரசனின் முன்பு நிறுத்தனார்கள். அரசனும் உண்மையை உணராது எல்லோரையும் கழுவில் ஏற்றும்படி கட்டளை இட்டான்.

எல்லோரும் கழுவில் ஏற்றப்பட்டனர். திருடர்கள் எல்லோரும் உயிரிழந்தனர். முனிவர் மட்டும் உயிரோடு இருந்தார். இந்த அதிசியத்தைக் கண்ட வீரர்கள் அரசனுடன் ஓடிச் சென்று சொன்னார்கள்.


திடுக்கிட்ட அரசன் அங்கு ஓடி வந்தான். தவறுதலாக முனிவருக்கு தண்டனை தந்ததை எண்ணி வருந்தினான்.
கழுவில் இருந்து முனிவர் கீழே இறக்கப்பட்டார். வேதனையால் துடித்துக்கொண்டு இருந்த முனிவரின் கால்களில் அரசன் விழுந்தான்.
" அறியாமல் செய்த பிழையை மன்னித்து என்னைக் காத்து அருள வேண்டும் " என்று வேண்டினான்.

அரசனை மன்னித்து , பின்பு எமன் உலகம் சென்றார் . அங்கு எமனிடம்,
" எமக்கு இவ்வளவு கொடிய துன்பம் வரக் காரணம் என்ன ? " என்று வினவினார் .

எமனும், " நீங்கள் சிறுவனாக இருந்த போது , தும்பி ஒன்றைப் பிடித்து அதை ஈரக் குச்சியில் குத்தி , வாலைக் கோர்த்து விளையாடினீர்கள். அந்த தும்பி பட்டத் துன்பத்தை நீங்கள் பட வேண்டும் எனபது விதி. அதனால்தான் தங்களுக்கு இந்த பிறவியில் இந்த துன்பம் நேர்ந்தது. " என்று கூறினார்.

மாண்டவ்யரும், " எமனே ! பிள்ளைப் பருவத்தில் அறியாமையால் செய்த பாவத்திற்கு இவ்வளவு கொடிய தண்டனையா ? இப்படி விதித்த நீயும், இதற்கு உரிய தண்டனையாக பூமியில் மனிதனாகப் பிறப்பாயாக .......!" என்று சாபம் தந்தார்.

இவ்விதம் சாபம் பெற்ற எமனே விதுரனாகப் பிறந்தார் என்கிறது உபநிஷத்.

buminathan - vazkhai pathivugal--?????????? ????????


Indian Penal Code in its Criminal law states that “nothing is an offence which is done by a child under age of seven years. The age of criminal responsibility is raised to 12 years if the child is found to have not attained the ability to understand the nature and consequences of his or her act.”


According to the sections 82 and 83 of the IPC a child who commits a crime and is below the age of seven is not considered to have committed a crime. A child who is between the ages of seven and twelve and is deemed to have immature understanding about the consequences of his/her actions is also considered incapable of committing a crime.


India Penal Code and Child related offenses
 
தானத்துக்கும், தர்மத்துக்கும் வித்தியா&a

தானத்துக்கும், தர்மத்துக்கும் வித்தியாசம் தெரியுமா

TN_20140701155745923306.jpg






உயர்ந்தவர்களுக்குக் கொடுப்பது தானம். எளியவர்களுக்கு கொடுப்பது தர்மம். பொதுவாக உதவி புரியும் எண்ணத்துடன் செய்யும் எந்த செயலுக்கும் இரவு, பகல் கிடையாது. அதற்குரிய புண்ணியம் கொடுத்தவருக்கு உடனே கிடைத்து விடும். ஆனால், மனதில் எண்ணியிருக்கும் விருப்பம் நிறைவேற வேண்டும் என்பதற்காக கொடுக்கப்படும் தானத்தை பகலில் தான் செய்ய ÷ வண்டும். ஏனென்றால், அதற்கு சூரியதேவன்சாட்சியாக இருப்பார் என்பது ஐதீகம். சந்திர கிரகணம், திருமணச் சடங்கு, மாதப்பிறப்பு, வெளியூர் கிளம்பும் நேரம், ஆபத்து காலம்,குழந்தை பிறப்பு, ராமாயணம், மகாபாரத சொற்பொழிவு போன்றவற்றின் போது இரவு நேரத்திலும் தானம் செய்யலாம்.


ஒருவர் செய்யும் தானங்களும் அதற்கான பலன்களும்



மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக உள்ளது உணவு அதன்பொருட்டு பிறர்க்கு தானம் செய்தலும் அதன் பலன்களும் தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது. பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்டவாயால் போதுமென்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.


சக மனிதனின் பசியை போக்குபவன் கடவுளின் தயவைப் பூரணமாகப் பெறும் தகுதியை பெறுகிறான். பசி என்னும் கொடுமை ஏழைகளின்மீது பாய்ந்து கொள்ளும் தருனத்தில் உணவிட்டு காப்பதே ஜீவகாருண்யமாகும். அன்னதானம் இடுபவரை வெய்யில் வறுத்தாது - வறுமை தீண்டாது - இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும். - வள்ளலார்.


தானங்களும் - அதன் பலன்களும்


1. மஞ்சள் தானம் - மங்களம் உண்டாகும்
2. பூமி தானம் - இகபரசுகங்கள்
3. வஸ்த்ர தானம் (துணி) - சகல ரோக நிவர்த்தி
4. கோ தானம் (பசுமாடு) - பித்ருசாப நிவர்த்தி
5. திலதானம் (எள்ளு) - பாப விமோசனம்
6. குல தானம் (வெல்லம்) - குல அபிவிருத்தி - துக்கநிவர்த்தி
7. நெய் தானம் - வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்
8. வெள்ளி தானம் - பித்ருகள் ஆசிகிடைக்கும்
9. தேன் தானம் - சுகம்தரும் இனியகுரல்
10. சொர்ண தானம் (தங்கம்) - கோடிபுண்ணியம் உண்டாகும்
11. தண்ணீர் தானம் - மனசாந்தி ஏற்படும்
12. கம்பளி (போர்வை) தானம் - துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி
13. பழவகைகள் தானம் - புத்ரபவுத்ர அபிவிருத்தி
14. பால் தானம் - சவுபாக்கியம்
15. சந்தனக்கட்டை தானம் - புகழ்
16. அன்னதானம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.






Sampradayam hindu culture

Temple News | ?????????????, ?????????????? ??????????? ?????????
 
Last edited:
பகவத் கீதையின் தத்துவப் பொருள்

பகவத் கீதையின் தத்துவப் பொருள்

கர்மண்யே வாதிகாரஸ்தே
மா பலேஷு கதாசன |
மா கர்மபல ஹேதுர்பூர்
மாதே ஸங்கோ ஸ்த்வகர்மணி||


பொருள்: செயல் புரிய மட்டுமே உனக்கு உரிமை உண்டு. ஒரு போதும் பயனில் இல்லை. வினைப்பயனை எண்ணி செயலைச் செய்பவன் ஆகிவிடாதே. செயல் புரியா
திருக்கவும் விழையாதே''.


யதா யதா ஹி தர்மஸ்ய
க்லானிர் பவதி பாரத|
அப்யுத்தான மதர்மஸ்ய
ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்||


பொருள்: பாரத குலத்தில் உதித்தவனே! எப்பொழுதெல்லாம் தர்மத்திற்கு அழிவும், அதர்மத்திற்கு உயர்வும் உண்டாகின்றதோ, அப்போதெல்லாம் நான் என்னைப் படைத்துக் கொள்கிறேன்.


பரித்ராணாய ஸôதூனாம்
விநாசாய ச துஷ்கிருதாம்|
தர்ம ஸம்ஸத்தாபனார்த்தாய
ஸம்பவாமி யுகே யுகே||


பொருள்: நல்லோரைக் காப்பதற்கும் தீயோரை அழிப்பதற்கும் தர்மத்தை நன்கு நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் உதிக்கிறேன்.

????? ???????? ???????? ?????? - Dinamani - Tamil Daily News
 
பூஜையின் போது

பூஜையின் போது

நாம் கைகளை குவிப்பதற்கும் கீழே விழுந்து வணங்குவதர்க்குமான உரிய விளக்கத்தை எவ்வளவு எளிமையாக ஸ்ரீலஸ்ரீ திருமுருக கிருபனந்தவாரியர் சுவாமிகள் அளித்துள்ளார்கள் !

நமது வலது கரம் உணவு உண்ணுதல், எழுதுவது போன்ற நல்ல காரியங்களுக்கு பயன்படுகிறது. நமது இட கரமோ ஈனமான காரியங்களுக்கு பயன்படுகிறது. ஆனால் ஆண்டவன் முன்னிலையில் உயர்வு - தாழ்வு இல்லை. எல்லோரும் சமம். அதை உணர்த்தவே இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்து ஆண்டவனை கும்பிடுகிறோம்.

கடவுள் எல்லாவற்றையும் தன்னிடம் விட்டு சரண் அடைந்து நிற்பவர்களிடம் கருணை காட்டுகிறார். அவர்களுக்கு உதவ மனம் இளகி முன்வருகிறார். 'என் செயலால் ஆவது ஒன்றும் இல்லை. எல்லாம் உன்னுடையவை. உன்னுடைய ஆளுகைக்கு என்னை விட்டு விட்டேன் !' என்று உடம்பை தரையோடு தரையாகக் கிடத்தி வணங்கி, எல்லா செயல்களும் ஒடுங்கி, பணிவின் அடையாளாமாக இருக்கும் நிலையில் ஆண்டவன் நாமை ஏற்றுக் கொண்டு அருள்புரிய முன் வருகிறான்.

காலை வெய்யிலில் உடம்பில் சூடு முழுவதுமாக உரைக்கும். நடுப்பகலிலோ தலையில் மட்டுமே வெயில்படும். அப்போது தலைக்கு மட்டும் மறைப்பு இருந்தால் போதும். பண்படாத மனதுக்குப் பலவிதத்திலும் பாதுகாப்பு தேவை. பண்பட்டு உயர்ந்த உள்ளத்துக்கு ஆண்டவன் அருள் மட்டும் இருந்தால் போதும். இப்படி மனத்தை உயர்த்திக் கொள்வதைக் காட்டும் அடையாளமாகவே இரண்டு கைகளையும் தலைக்குமேல் உயர்த்திக் குவித்து ஆண்டவனை வணங்குகிறோம்.

???? ??? ??????? ???????????? ????: ???????? ???? ?????? ???? ????
 
விநாயகர் சிலையை திருடுவது ஏன்?

விநாயகர் சிலையை திருடுவது ஏன்?
-----------------------------------------------------------------

10366055_788450067863434_5476598177536124612_n.jpg



விநாயக வழிபாடு இல்லாத இறைபக்தியை நினைத்துக்கூட பார்க்கமுடியாது.பண்டைய காலத்தில் தமிழகத்தில் விநாயகர் வழிபாடு கிடையாது.பின்னர்தான் கணபதியை நாம் தரிசித்தோம்.


சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசி, மகேந்திரவர்ம பல்லவரை தோற்கடித்து காஞ்சியை நாசம் செய்ததற்கு பழி வாங்குவதற்காக நரசிம்மவர்ம பல்லவர் வாதாபி யின்மீது படையெடுத்து அந்நகரை தீக்கிரையாக்கி அழித்து இரண்டாம் புலி கேசியையும் கொன்றார்.


படைக்கு தலைமை வகித்து போர் புரிந்தவர் பின்னாளில் 63 நாயன்மார்களில் ஒருவரான பரஞ்சோதி ஆவார், பரஞ்சோதியாக மாறுவதற்குமுன் விக்ரம கேசரி என்றழைக்கப்பட்ட இந்த தளபதி பல்லவ சேனைக்கு தலைமை தாங்கி வாதாபியை வெற்றி கொண்டு அழித்து பல்லவ தேசம் திரும்பியபோது வாதாபியில் இருந்து வாதாபி கணபதி என்ற விநாயகர் சிலையை கவர்ந்து கொண்டு வந்தார்.


இதற்கு பிறகுதான் தமிழகத்தில் விநாயகர் வழிபாடு வந்தது.நாயன்மார் பரஞ்சோதி,வாதாபியில் இருந்து விநாயகர் சிலையை கவர்ந்து(திருடி)வந்து தமிழகத்தில் நிறுவியதன் அடிப்படையில்தான் விநாயகரை திருடி சென்று பிரஷ்டிக்கும் பழக்கம் ஏற்பட்டது.


அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
பழந்தமிழரின் அளவை முறைகள்..

பழந்தமிழரின் அளவை முறைகள்..


முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.


கால அளவுகள்

அறுபது விநாடி = ஒரு நாளிகை.
இரெண்டரை நாளிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாளிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாளிகை = ஒரு நாள்.
ஏழரை நாளிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.

நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.


https://groups.google.com/forum/#!topic/mintamil/zXBzX27gHrk
 
திருவிளக்கை அணைப்பது எப்படி?

திருவிளக்கை அணைப்பது எப்படி?

திருவிளக்கை குளிரச் செய்ய பூவில் பாலைத் தொட்டு குளிர வைக்கும் வழக்கம் இருக்கிறது. சிலர் அரிசியை விளக்கின் எண்ணெய்க்குள் சிறிது வைத்து விட்டு, பிறகு பூவினால் குளிரச் செய்வர். எண்ணெய் தீர்ந்து போய் தானாக விளக்கை குளிரச் செய்யும் பழக்கமும் உண்டு. ஆனால், பூஜைக்குப் பயன்படுத்திய பூவினால் தீபத்தை குளிரச் செய்வதே சரியான நடைமுறை. எக்காரணம் கொண்டும், விளக்கை வாயினால் ஊதி அணைப்பது கூடாது என்கிறது சாஸ்திரம்.

Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts
 
எப்போதும் கையால் வாயை மூடி இருப்பது எது &#2980

எப்போதும் கையால் வாயை மூடி இருப்பது எது தெரியுமா?

TN_120711145040000000.jpg




குருவின் முன் சீடர்கள் அடக்கத்தின் அடையாளமாக வாயைக் கையால் பொத்தி நிற்பதுண்டு. உயிரினங்களில் இயற்கையாகவே கையால் வாய் மூடி இருப்பது யானைக்கு மட்டுமே. இந்த தும்பிக்கை மூலம் விநாயகர் பெரிய தத்துவத்தை உணர்த்துகிறார். எவ்வளவு தான் கல்வி அறிவு பெற்றிருந்தாலும் தொணத் தொண என்று யாரும் வீணானதை பேசக்கூடாது. ஞானத்தின் அடையாளம் மவுனம் தான். வாயைத் திறந்தால், நல்ல விஷயங்கள் மட்டுமே வர வேண்டும். இதனால் தான் விநாயகரை ஸுமுகர் என்பர். இதற்கு நல்ல வாயை உடையவர் என்று பொருள். நல்ல விஷயங்களை பேசுபவர்களின் வீட்டில் எப்போதும் சுமூகமான நிலை இருக்கும். ஒரு இடத்தில் ஏதாவது பிரச்னை என்று வந்து விட்டால், சுமூகமான பேச்சு நடத்த வேண்டும். இல்லாவிட்டால் பிரச்னை பெரிதாகி விடும். ஞானத்தை அருளும் வித்யா கணபதியை வழிபட்டு வந்தால், நாம் இருக்கும் இடத்தில், சுமூகம் நிலவும்.

Temple News | News | Dinamalar Temple | ????????? ?????? ???? ???? ???????? ??? ?????????
 
பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம்

பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம் என்ன?

248116_642630619096289_345105924_n.jpg



மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தல் புண்ணியம். அதிலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தல் பெரும் புண்ணியமாகும். வசதி படைத்த பணக்காரர்கள் அக்காலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தார்கள். ஆனால், ஏழை என்ன செய்வான்? அந்த ஏழையும் ஆயிரம் உயிர்களுக்கு அன்னதானம் செய்யும் வழிவகைகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். பச்சரிசி மாவில் கோலம் போட்டால் அம் மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிட்டபின், மீதமிருக்கும் அரிசி மாவை எடுத்துச் சென்று தங்கள் வலைகளில் சேமித்து வைக்கும். எனவே, ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சிப்படுத்தும், இந்த முறையைப் போல் ஆன்ம நேயத்தையும், ஆன்மீகத்தையும் சிறப்பிக்கும் செயல் வேறு உண்டோ எனில் இல்லையெனக் கூறலாம்.


” உன்னிலும் என்னிலும் இருக்கும் ஈசன், ஈயெறும் புடலிலும் இருக்கிறான்” எனபது நினைவு கூறத்தக்கவை. ஆயிரம் உயர்களுக்கு உணவளித்த அந்த மகிழ்ச்சி, உணவளித்தவரின் உள்ளம், உடல் ஆகிய இரண்டையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் அல்லவா?


கோலம் போடுவதில் இன்னொரு தத்துவமும் அடங்கியிருக்கிறது. பல புள்ளிகள் வைத்து பல வடிவங்களில் வளைத்து போடப்படுகின்ற கோலம், பார்ப்பவரின் மனத்தைக் கவரும். யாராவது வீட்டில் தகராறு செய்ய வேண்டும் என்று நினைத்து வருகின்றபோது, அந்த அழகுக் கோலங்கள், வருபவரின் எண்ணத்தைச் சிதற வைக்கிறது. அதனால், வருபவர் கோபம் தணிந்துதான் வீட்டுக்குள்ளே வருவார். இப்படிப்பட்ட மனோவசிய சக்தி கோலங்களுக்கு உண்டு என அறிந்தே முன்னோர்கள் கோலம் போடுவதைப் பரவலாக செய்தார்கள்.


Why? | elenshilian
 
சந்தனம்,விபூதி,குங்குமம் எல்லாம் எதுக்க&

சந்தனம்,விபூதி,குங்குமம் எல்லாம் எதுக்காக..? இந்து மதம் அற்புதம்

m_027-089.jpg


நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம்.

வாகனங்க ளின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைத்து எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு செய்யும் தலையாய கடமை.



தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி தரிப்பதன் நோக்கம்.

நெற்றிப்பகுதி அதிக சூடாவதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள்; அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம். குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். அதை மறந்து பெண்கள் இன்று மஞ்சள், குங்குமத்தை ஒதுக்கி வருகின்றனர்.
பெரும்பாலான பெண்கள் ஸ்டிக்கர் பொட்டையே நம்பியிருக்கிறார்கள். ஸ்டிக்கர் பொட்டு உடல்நலனுக்குக் கெடுதியே செய்யும். அதில் தடவியிருக்கும் ஒட்டும்பசை ரசாயனத்தால் ஆனது. இது நெற்றியில் எரிச்சலை ஏற்படுத்தும். மற்றும் சூரிய ஒளி நெற்றிப் பொட்டில் விழுவதைத் தடுத்துவிடும். கண் மற்றும் புருவங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு ஆபத்தானது.



Translation
SANDALWOOD, VIBHUTI, VERMILION (KUNGUMAM) EVERYTHING.. FOR WHAT? WONDERFUL HINDU RELIGION..
All of our body are seeking to connect with narampukalum brain. Most of the nerves that pass through the body of the bot forehead. The forehead area is much usnamakave. Fire power we have in the abdomen. But most feel the impact of the hot forehead pottiltan done. If you placed your hand on the forehead of fever usnat know why. Following the running of the engine overheats when we most vehicles. Reduce the heat to the engine and the radiator to give more life. Perhaps our brains, we have to cool it on the forehead veins connecting the paramount duty of applying cantanakkulampu.


Sweating in the head, the head of water above the falls as snow and remain at the head of the fractional kettippattu. The headache, insomnia occurs. Vibhuti veliyerrave tarippatan such bad aim to absorb water. Nerrippakuti high cutavat is likely to cause infection. Yellow stop infection, and made from vermilion. Vermilion, sandal, Vibhuti Three of the best disinfectants. Women today have forgotten it yellow, vermilion, are excluded. Most women pottaiye relies on the sticker. Ketutiye to mark sticker to health. If the chemistry is ottumpacai will apply. It can cause irritation in the forehead. And prevent sunlight from falling on the forehead bot. Sticker mark dangerous to the eye and eyebrows.


Why? | elenshilian
 
தரித்திரத்தை தவிர்ப்பது எப்படி?

தரித்திரத்தை தவிர்ப்பது எப்படி?


cb1d1144-8f7f-4d5a-9d7e-3eac305ea099_S_secvpf.gif


1. ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.


2. வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

3. இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது.

4. வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.

5. சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது.

6. குத்து விளக்கை தானாக அணைய விடக்கூடாது, ஊதியும் அணைக்க்கூடாது. புஷ்பத்தினாலும் அணைக்க கூடாது.

7. வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. இழவு என்றும் கூறக்கூடாது.

8. அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது

9. துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.

10. உப்பைத் தரையில் சிந்தக் கூடாது. அரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது.


???????????? ?????????? ??????? || How to avoid destitution
 
அன்னதானம் :

அன்னதானம் :




sharapanjari-bhishma.jpg

பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார்.


வரவிருக்கிற தக்ஷிணாயன புண்ய காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். அவரின் இறுதி ஸ்வாசத்தை நோக்கி மூச்சு வந்துபோய்க் கொண்டிருக்கும் தருணம். அவரின் விடைபெறலுக்கு முன் அவரிடமிருந்து நீதி, நேர்மை, அரசியல் தர்மம் குறித்த போதனைகளைப் பெற தர்ம புத்திரர் விரும்பினார்.

தனது சகோதரர்கள் நால்வருடன் திரௌபதியையும் அழைத்துக்கொண்டு பிதாமகரிடம் சென்றார் .

பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி "பிதாமகரே!தாங்கள் எங்களுக்கு நீதி, நேர்மை, அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும் " என்று கேட்க, திரௌபதி மட்டும் பலமாக வாய்விட்டுச் சிரித்தாள்.
அதில் கேலியின் நெடியை உணர்ந்த தர்மர், "நம் தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய்?இது தகாத செயல்" என்று கடுமையாகக் கேட்டார்.

"துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்தபோது, கண்ணனின் அன்புக்கும் கருணைக்கும் நிகரான முடிவில்லாத ஆடை மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும்?


இன்றைக்கு போதனை செய்ய இருக்கிற தர்மவானான பீஷ்மர், அந்தச் சபையில் அமர்ந்து, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர, துரியோதனனை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா?
இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றிக் கேட்கிறீர்களே என்று நினைக்கும்போது சிரிக்காமல் என்ன செய்வது?" என்று சொல்ல, தர்மரையும் உள்ளிட்ட பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியில் உறைந்தார்கள்.

பீஷ்மர் பொருள் பொதிந்த பார்வையுடனும் புன்னகையுடனும் பதில் அளித்தார்.

"திரௌபதியின் சிரிப்பும் கேள்வியும் முற்றிலும் நியாயமானது. அவள் உதிர்த்த வார்த்தைகளுக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும். அப்போதுதான் உங்களுக்கும், உலகத்துக்கும் உண்மை என்னவென்று தெரியும்.

துரியோதனன் அன்னமிடுவதில் உயர்ந்தவன். எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிறையும்படி உபசரிப்பான்.


ஆனால் அவன் செய்யும் அன்னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல. சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவிட்டு, அவர்களைத் தன் காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வான்.


உண்டவர்களும் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, வேறு வழியில்லாமல் அவன் சொல்படி நடப்பார்கள். இதற்கு சல்லியனும் கர்ணனும் உதாரணங்கள்.
.
"ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன், மற்றவர்களுக்கு அன்னமிட்டால், அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும்.


நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது.
அதனால்தான் பாஞ்சாலியை மானபங்கம் செய்தபோதும் எதுவும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன்"

"ஆனால் இப்போது பார்த்தன் அமர்த்திக் கொடுத்த அம்புப்படுக்கையில் படுத்த பிறகு எனது உடலிலிருந்த தீய எண்ணங்களுடன் கலந்திருந்த ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டது.
அத்தோடு தீய சக்திகளும் வெளியேறிவிட்டன.


இப்போது என் உடலில் தூய்மையான ஆன்மா மட்டும்தான் இருக்கிறது.


எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ளவனாக என்னைக் கருதுகிறேன்." என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய்தார்.

அதனால்தான் முற்காலத்தில் விவரம் தெரிந்த சான்றோர்கள், சாதுக்கள், ஞானிகள், பண்டிதர்கள் பரான்னத்தை அதாவது வெளியில் சாப்பிடுவதை விரும்பமாட்டார்கள்.


???????????: ?????? ???????

 
கஜேந்திரன்

கஜேந்திரன்


E_1349415875.jpeg


இந்திரத்துய்மன் என்ற மன்னன் அகத்தியரை தன் குருவாகக் கொண்டவன். பெருமாள் பக்தன். ஒருமுறை, அகத்தியர் அவனது அவைக்கு வந்தார். அப்போது மன்னன் கேளிக்கை விளையாட்டுகளில் மூழ்கியிருந்தான். குரு வந்திருப்பதாக அவனுக்குத் தெரிந்தும், விளையாட்டு மும்முரத்தில் அவருக்கு மரியாதை செலுத்த செல்லவில்லை. இதுகண்டு குமுறிய அகத்தியர், தன்னை மதிக்காத மன்னனை, யானையாக மாற சாபம் விடுத்தார். மன்னன் மன்னிப்பு கேட்டபோது, வனத்தில் பல காலம் சுற்றித் திரிந்து, பெருமாளின் அருளால் மோட்சம் பெறுவாய் என சபித்தார். இந்திரத் துய்மனும் யானையானான். அதற்கு, கஜேந்திரன் எனப் பெயர்.

இதேபோல, கபில முனிவர் ஒருமுறை, ஆற்றில் நீராடச் சென்றார். கந்தர்வன் ஒருவனும் நீராடி கொண்டிருந்தான். அவன், தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று, முனிவரின் காலைப் பிடித்து இழுத்து சில்மிஷம் செய்தான். கோபம் கொண்ட முனிவர், "தண்ணீரில் மறைவாக வந்து காலைப் பிடித்து இழுத்த நீ, முதலையாக பிறப்பாய்....' என சாபமிட்டார். அவனும் சாப விமோசனம் கேட்ட போது, "பிற்காலத்தில் விஷ்ணுவின் கரத்தால் மோட்சம் பெறுவாய்' என்றார். அந்த முதலை, "கூஹு' என்ற பெயருடன் ஆற்றில் கிடந்தது.

ஒரு சமயம், கஜேந்திர யானை, தன் கூட்டத்துடன் தண்ணீர் குடிக்க வந்தது. உள்ளே கிடந்த முதலை, அதன் காலைக் கவ்வியது. இரு விலங்குகளுக்கும் கடும் போராட்டம் நடந்தது. உடன் வந்த யானைகளோ, உதவி ஏதும் செய்யாமல், உயிருக்குப் பயந்து கரையேறி விட்டன. பெரியவர்களுக்கு மரியாதை தராதவர்களுக்கு மறுபிறப்பில், உறவுகளின் ஒத்துழைப்பு கிடைக்காது என்பது இதன் மூலம் உணர்த்தப்படும் தத்துவம்.
இந்நேரத்தில், கஜேந்திர யானைக்கு சாப விமோசன நேரம் வந்தது. தன் உயிர் போகும் நேரத்திற்குள் பெருமாளை வணங்க எண்ணி, ஆற்றில் இருந்த தாமரை மலரைப் பறித்தது; "ஆதிமூலமே' எனக் கதறியது.


இந்த சப்தம், வைகுண்டத்தில் லட்சுமியுடன் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்த பெருமாளின் காதில் கேட்டது. இருவரில் யார் தோற்றாலும் எழுந்து ஓடிவிடக் கூடாது என்பதற்காக, பெருமாளின் வஸ்திரமும், தாயாரின் புடவையும் இணைத்துக் கட்டப்பட்டிருந்தது. அதைக் கூட பொருட்படுத்தாமல் பெருமாள் வேகமாக எழுந்தார். கருடன் விரைந்து வந்தார். கருடன் மீதேறி, தாயாரும், பெருமாளும் ஆற்றிற்கு வந்தனர். சக்கரத்தை வீசி முதலையை அழித்தார் பெருமாள். சக்கரத்தின் மகிமையால் முதலை மோட்சம் அடைந்தது. கஜேந்திரன் விடுபட்டது.

யானையைப் பிடித்ததாவது ஒரே ஒரு முதலை தான்! ஆனால், மனிதர்களாகிய நம்மை, கண், காது, மூக்கு, வாய், உடல் எனும் ஐந்து முதலைகள் பிடித்துக் கொண்டிருக்கின்றன. பணம், வீடு, வாசல், பெண் போன்ற பல சுகங்கள் வேண்டுமென இந்த முதலைகள், இளைஞர்களை பாவச் சேற்றில் தள்ளி விடுகின்றன.



?????? ???????! ?????????????! | ??????? | Varamalar | tamil weekly supplements
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top