• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My Collections

Status
Not open for further replies.
சிவபூஜையில் கரடி என்றால் என்ன?



பூஜை செய்யும்போது தடங்கல் வந்தால், சிவ பூஜையில் கரடி வந்த மாதிரி என்று சொல்வார்கள். இதில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது. கரடி என்பது ஒரு வகை வாத்தியம். முற்காலத்தில் மன்னர்கள் சிவபூஜை செய்யும் போது, கரடி வாத்தியம் வாசிக்கச் செய்வர். இதைத்தான், சிவபூஜையில் கரடி என்பர். ஆனால், பிற்காலத்தில் இதுவே பூஜைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம் மாறி விட்டது.


Classroom for Aanmeegam | ?????? ????????!
 
பாமா ருக்மிணி
கிருஷ்ணருடன், பாமா ருக்மிணி ஆகியோர் இணைந்து காட்சி தருவர். விஷ்ணு சகஸ்ரநாமத்தில் ஸத்யபாமாப்யாம் ஸஹிதம் க்ருஷ்ண மாச்ரயே என்ற ஸ்லோகம் வருகிறது. இதன் அடிப்படையில் தென்னகத்தில் பாமா, ருக்மிணிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பாமா பூமாதேவி அம்சம் என்றும், ருக்மிணி லட்சுமி அம்சம் என்றும் கூறுவதுண்டு. பூமாதேவி பூலோக மக்களின் குறையை வானத்திலுள்ள லட்சுமியிடம் எடுத்து தாயார் சமர்ப்பிக்கிறாள். அதை லட்சுமி தாயார் பகவானிடம் சமர்ப்பித்து அருள் செய்ய வகை செய்கிறாள். எனவே, ஸ்ரீ கிருஷ்ணரை பாமா, ருக்மிணி சமேதராக வழிபடுவது இரட்டிப்பு பலன் தரும். வடமாநிலங்களில் ருக்மிணியும், சத்யபாமாவும் இணைந்த வடிவத்தை ராதை எனக்கருதி ராதைக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.

Classroom for Aanmeegam | ?????? ????????!
 
Lord of Six Faces


six-mur.jpg




Murugan is popularly depicted as having six faces and twelve arms. The poets like to address Him as "Arumugan" - Lord of Six Faces.



The sacred functions of Murugan as having six faces are described as thus :

  • One face sheds rays of Light and removes the dense darkness shrouding the world;


  • One face with gracious look lovingly showers boons on his devotees who praise Him with Love and Joy;


  • One face watches over the sacrifices of the Brahmans who perform them without deviating from the strict Vedic traditions;


  • One face like full moon, which brightens all the quarters of the world, lights the sages' minds to enable them to search for hidden Truth;


  • One face with raging heart performs battle-sacrifice-destroy His enemies and


  • One face smiles lovingly on His young consort, the pretty daughter of the hunting tribe.

Lord of six faces - lord murugan - arumugam !!!!!!!!!! - IndusLadies
 
தானமும் - பலன்களும்'.........

1), வஸ்த்ரதானம் - ஆயுள் விருத்தி;
2), பூமி தானம் - ப்ரம்ம லோக பதவி.

3), தேன் - புத்ர பாக்கியம். (வெண்கல பாத்திரத்தில்)
4), கோதானம் - ரிஷிக்கடன்,தேவக்கடன்
பித்ருக்கடன்,மூன்றையும்
போக்கும்.
5), நெல்லிக்காய்தானம் - ஞானத்தை கொடுக்கும்

6), கோவிலில் தீப தானம் - சக்கரவத்தி பதவி
கிட்டும்.
7), தீப தானம் - கண்பார்வை விருத்தி.
8), விதை தானம் - தீர்க்க - ஆயுள்,
தீர்க்க -ஆயுள் - சந்ததி கிட்டும்
9), அரிசி - சகல பாவமும் போகும்.
10), தாம்பூலம் , பழம் - ஸ்வர்க்க பதவி கிட்டும்.

11), கம்பளி தானம் - வாயுரோகம் தீரும்.
12), பருத்தி - குஷ்டம் அகலும்.
13), பூணூல் - பிராம்மண ஜென்மா
கிடைக்கும்.
14), புஷ்பம்,துளசி, - ஸ்வர்க்கத்தை ஸமித்து,கறிகாய் தானம அளிக்கும்.
15), நெய் - ரோக நிவர்த்தி.

16), சர்க்கரை - ஆயுள் விருத்தி.
17), பால் - துக்கம் அகலும்.
18), எள் - எமபயம் அகலும்.
19), கடலை - சந்தான விருத்தி.
20), ஸ்வர்ணம் - பாபம்,ஏழ்மை அகலும்.

21), குடை,பாதுகை - யமலோகத்தில் சுகம்
தரும்.
22), கன்யா தானம் - ப்ரம்ம லோக பதவி
தரும்.
23), ஜப மாலை, ஆசனம் - நல்ல ஜன்மாவை
விபூதி,கோபி,சந்தனம் அளிக்கும்.
24), அன்னதானம் - ஸ்வர்க்க பதவி.

aanmigam

 
ஒவ்வொரு சுப நிகழ்ச்சியின் போது பிள்ளையார் பிடித்து வைப்பதை காண்கிறோம்
ஒவ்வொரு பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் ஒவ்வொரு விதமான பலன்கள் உள்ளது
அவை....

1:மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
2:குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.
3:புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்,விவசாயம் செழிக்கும்
4:வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும்.
5:உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.

6:வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி,சூன்னியம் விலகும்.
7:விபூதியார் வினாயர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்
8:சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.
9:சாணத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழிவகுக்கும்
10:வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்

11:வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்
12:சர்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்கரை நோய்யின் வீரியம் குறையும்.
நன்றி நண்பர்களே...

இறைவழிபாடே இல்லறத்தை நல்லறமாக்கும் அருமருந்து


aanmigam
 
கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்

கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்

ST_171256000000.jpg




கொடையளிப்பதில் இவனுக்கிணை வேறு எவருமே இல்லை என்று போற்றப்பட்டவன் கர்ணன். அவன் கொடுப்பதை என்றுமே இழப்பாக எண்ணியதில்லை. அவன் செய்த தர்மங்களுக்கு அளவேயில்லை. அதனால் குற்றுயிராக கர்ணன் போர்க் களத்தில் கிடந்தபோது அவன் செய்த தர்மங்கள் அவன் உடலிலிருந்து உயிரைப் போக விடாமல் காத்து நின்றன. இதைக் கண்ட கர்ணன், நீ செய்த தர்மத்தின் பலன் யாவும் தந்துதவுக, என்று வேண்டுகிறான். மார்பில் புதைந்த அம்பை எடுத்துக் கொட்டும் செங்குருதியில் அவன் செய்த தர்மத்தின் பலன் யாவையும் கண்ணனுக்கு அர்ப்பணிக்கிறான் கர்ணன். இவ்வளவு சிறந்த கொடையாளியின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு நாள் காலை கிணற்றடியில் எண்ணெய் தேய்த்து முழுக கர்ணன் தயாராகிக் கொண்டிருக்கிறான். இடக் கையில் வைத்துக் கொண்டிருந்த எண்ணெயைக் கிண்ணியிலிருந்து எடுத்து உடம்பில் பூசிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு ஏழை அங்கு வந்து கர்ணனிடம் தனக்கு ஏதேனும் உதவி செய்யக் கோரினான். அடுத்த கணமே இடது கையில் ஏந்தியிருந்த தங்கக் கிண்ணியை அந்த ஏழையிடம் கர்ணன் கொடுத்து விட்டான்.


அங்கிருந்த நண்பர் ஒருவர் கர்ணனைக் கேட்டார். கர்ணா! தர்மம் என்றாலே கர்ணன் என்று தான் பெயர். ஆனால் கொடுக்கும் தர்மத்தை வலது கையால்தான் கொடுக்க வேண்டும் என்ற முறை உனக்குத் தெரியாதா? சிரித்துக் கொண்டே தெளிவாக கர்ணன் பதில் சொன்னான். நீர் சொல்வது சரிதான். வாழ்க்கை என்பது எப்பொழுதும் முன்னெச்சரிக்கை கொடுக்காது. ஆகையால்தான் இடக்கையிலிருந்து வலக்கைக்குக் கிண்ணம் மாறுவதற்குள் ஏதேனும் எனக்கு நிகழ்வதற்குள் உடனேயே அந்தத் தர்மத்தைச் செய்துவிட வேண்டும் என்ற துடிப்பில் தான் இடக் கையாலேயே கொடுத்து விட்டேன். மூட்டையாகச் சுமக்கும்போது அது பாரம். போட்டியாகச் சுமக்கும்போது அது பொய். வாட்டமாகச் சுமக்கும் போது அது வாழ்க்கை. நாட்டமாகச் சுமக்கும் போதுதான் அது ஞானம். யோசிக்காமல் கொடுப்பதே தானம்.

????? ??????, ?????? ??? ???? ?????? ????? ????????
 
வீட்டில் பூஜை செய்யும் போது சிறு செம்பில

வீட்டில் பூஜை செய்யும் போது சிறு செம்பில் நீர் வைப்பது ஏன்?

வீட்டில் பூஜை செய்யும் போது, சிறு செம்பு கிண்ணங்களில் நீர் வைக்கிறார்கள். இதில் புண்ணிய நதிகளின் நீரை நிரப்ப வேண்டும். இதற்கு எல்லாருக்கும் வசதியிருக்காது. எனவே, வீட்டிலுள்ள நிறை குடத்து நீரை, காவிரி, கங்கை, தாமிரபரணி, வைகை போன்ற புண்ணிய தீர்த்தங்களாகக் கருதி பக்தியுடன் நிரப்ப வேண்டும். உங்கள் இஷ்ட தெய்வம் அந்த புனிதநீரில் வந்து எழுந்தருள வேண்டும் என உருக்கமாக வேண்டிக் கொள்ள வேண்டும். பூஜை முடிந்ததும் அதை பக்தியுடன் பருக வேண்டும். ஏதேனும் ஒரு சாதம், கல்கண்டு, பழம், வெற்றிலை, பாக்கு படைக்க வேண்டும். "ப்ர என்றால் "கடவுள். நாம் படைக்கும் வெறும் சாதம், "ப்ர என்ற கடவுளுடன் சம்பந்தப்படும் போது, "ப்ரசாதம் (பிரசாதம்) ஆகி விடுகிறது. இதை உண்ணும் போதும், பருகும்போதும், நம்மை தீய சக்திகள் அணுகாது. மனோபலம் பெருகும்


Source: Ananthanarayanan
 
நாய் படாத பாடு

நாய் படாத பாடு


குரங்கு படாத பாடு சிங்கம் படாத பாடு என்று மற்ற விலங்கினங்களை குறித்து சொல்லாமல்
நாய் படாத பாடு என்று மட்டும் ஏன் சொல்லுகிறோம்?


சாதாரணமாக ஒரு விலங்கின் ஏதேனும் ஓர் உறுப்பு செயலிழந்தாலோ அல்லது நாம் அதனை கடுமையாக அடித்துப் போட்டாலோ அது சீக்கிரத்திலேயே இறந்துவிடும்.



ஆனால் நாய்கள் அப்படியில்லை.நான்கு கால்களையும் இழந்த நாய் கூட ஊர்ந்து சென்றாவது தன் உணவைத் தேடிக்கொள்ளும்.


அடிப்பட்டு முகம் சிதைந்த நாய்கள் கூட பல மாதங்கள் உயிர் வாழும் . அதாவது நாய்களுக்கு அடிப்பட்டாலோ அல்லது அவைகளுக்கு உணவே கிடைக்கவில்லை என்றாலும் கூட அவைகள் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்குமே தவிற சீக்கிரத்தில் சாவதில்லை.


நாய் பட்ட பாடு என்றால் அவை சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் துன்பப் படுவதைத்தான் அப்படிச் சொல்கிறார்கள்.


அவைகள் பட்ட துன்பங்களையும் தாண்டி இவர்கள் அவ்வளவு கஷ்டப் பட்டிருக்கிறோம் என குறிப்பிடத்தான் நாய் படாத பாடு என்று சொல்கிறார்கள்.

???? ???? ???? | ?????? ???????? | Kavanagar Muzhakkam
 
எந்த இடத்தில் எப்படி நீராட வேண்டும்?

எந்த இடத்தில் எப்படி நீராட வேண்டும்?

TN_124706000000.jpg


ஸ்நானம் என்றால் நதியில் நீராடுவதும் அல்லது பக்கெட்டில் இருந்து எடுத்து உடலில் ஊற்றிக்கொள்வதும் பளிச் சென்று நம் நினைவுக்கு வரும். ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நமது சாஸ்திரங்களில் இருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிகின்றது. ஸ்நானங்கள் இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முக்கிய ஸ்நானம், கௌண ஸ்நானம் ஆகும். க்ரியா ஸ்நானம், காம்ய ஸ்நானம், நைமித்திக ஸ்நானம், க்ரியாங்க ஸ்நானம் மலாபாஹர்ஷண ஸ்நானம், நித்ய ஸ்நானம் ஆகியவை முக்கியமானவை.


க்ரியா ஸ்நானம்: பவித்திரமான புண்ணிய நதிகளில் நீராடுவதுதான் க்ரியா ஸ்நானம். நதிகளில் நீராடும்போது, நதியின் நீரோட்டம் எந்தப் பக்கம் இருக்கின்றதோ, அதற்கு எதிர்முகமாக நின்றுகொண்டு (நீரோட்டத்தை எதிர்த்தாற்போல்) நீரில் நன்கு மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.


க்ரியா ஸ்நானம்: பவித்திரமான புண்ணிய நதிகளில் நீராடுவதுதான் க்ரியா ஸ்நானம். நதிகளில் நீராடும்போது, நதியின் நீரோட்டம் எந்தப் பக்கம் இருக்கின்றதோ, அதற்கு எதிர்முகமாக நின்றுகொண்டு (நீரோட்டத்தை எதிர்த்தாற்போல்) நீரில் நன்கு மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.


காம்ய ஸ்நானம்: ஒரு சிலருக்கு பரிகாரத்துக்காக சில ÷க்ஷத்திரத்தில் இருக்கும் குளங்களில் ஸ்நானம் செய்ய நேரிடும். அவ்வாறு குளிக்கும்போது, வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் சூரியனைப் பார்த்து நின்றுகொண்டு குளத்தில் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.


நைமித்திக ஸ்நானம்: சூரிய கிரகணம், சந்திர கிரகணம், துக்கத் தீட்டு, பிரசவத் தீட்டு, க்ஷவரத் தீட்டு, தம்பதியர் சேர்க்கைத் தீட்டு இவற்றுக்காகச் செய்யப்படும் ஸ்நானமே நைமித்திக ஸ்நானம் ஆகும். இந்தத் தீட்டைக் களைய, குளங்களில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு நீராட நேர்ந்தால், கிழக்கு நோக்கியபடி நின்றுகொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். அதைத் தவிர, கிணற்றங்கரையிலோ பாத்ரூமிலோ குளிப்பவர்கள், கிழக்கு முகமாகப் பார்த்தவண்ணம் ஸ்நானம் செய்ய வேண்டும்.



க்ரியாங்க ஸ்நானம்: ஹோமம், ஜபம், பித்ருகர்மா முதலியவை செய்வதற்காக நீராடுவதுதான் க்ரியாங்க ஸ்நானம். ஹோமம், ஜபம் முதலியவை செய்வதை முன்னிட்டு, ஸ்நானம் செய்யும்போது கிழக்கு திக்கைப் பார்த்தும், பித்ருகர்மா செய்யும்போது தெற்கு திக்கைப் பார்த்தபடியும் நின்று கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.


மலாபாஹர்ஷண ஸ்நானம்: சரும வியாதிகளைப் போக்கிக் கொள்ள தைலங்கள் தேய்த்துக்கொண்டு குளித்தல் மற்றும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு மலாபாஹர்ஷண ஸ்நானம் என்று பெயர். இந்த ஸ்நானத்துக்கும் கிழக்கு நோக்கித்தான் நீராடவேண்டும். சூரிய உதயத்துக்குப் பின் உச்சிவேளைப் பொழுதுக்கு ஸ்நானம் செய்ய வேண்டும்.


நித்ய ஸ்நானம்: அன்றாடம் உடலிலுள்ள அழுக்கைப் போக்கிக் கொள்வதற்காச் செய்யப்படும் ஸ்நானமே நித்ய ஸ்நானம் எனப்படுகிறது. சாஸ்திரத்தில் தினமும் மூன்று முறை ஸ்நானம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.


கௌண ஸ்நானம்: மேற்கூறிய முக்கிய ஸ்நானங்களுக்குப் பதிலாக, தேக ஆரோக்கியம் காரணமாக சாஸ்திரத்தில் கூறிய முறைப்படி அல்லாமல் மாற்று முறையில் செய்யப்படுவதுதான் கௌணஸ்நானம். உதாரணமாக, தலையில் ஜலம் ஊற்றிக்கொள்ள உடல்நலம் இடம் தராமல் கழுத்தோடு குளிப்பது அல்லது அதுவும் முடியாமல் மஞ்சள் கலந்த நீரை ப்ரோக்ஷித்துக்கொண்டு விபூதியை இட்டுக்கொள்வது போன்றவை முக்கிய விதியைத் தவிர்த்து, கௌண விதியை அனுசரித்து மேற்கொள்ளும் முறையாகும். சாஸ்திர முறைகள் ஒருபக்கம் இருக்க, லௌகீகமாக பஞ்ச ஸ்நானங்கள் என்பதும் உண்டு. அதாவது, பஞ்சபூதங்களின் சக்திகள் நம்மை இயக்குகின்றன என்பதை பஞ்ச ஸ்நானங்களின் மூலம் லோகாயதமாக அறிந்துகொள்ள முடிகிறது.


1. அக்னி சம்பந்தமுடைய பஸ்மத்திலிருந்து விபூதி கிடைப்பதால், விபூதி தரித்துக்கொள்வதை ஆக்நேய ஸ்நானம் என்றும் தேயுவுக்கு சம்பந்தமாகவும் கூறப்படுகிறது.


2. பசுக்கள் செல்லும்போது அவற்றின் குளம்படிகளிலிருந்து கிளம்பும் மண் காற்றின் மூலம் மேலே படுவது சிரேஷ்டமாகக் கூறப்படுகின்றது. அதற்கு வாயவ்ய ஸ்நானம் என்று பெயர். இது, வாயுவின் பெயரால் பெறப்படும் ஸ்நானம்.


3. சாதாரணமாக, வெறுமனே நீரை மட்டும் தேகத்தில் விட்டுக்கொண்டு குளிப்பது வாருண ஸ்நானம் அதாவது, வாருணம்தான் அப்பு என்பது.


4. மந்திரங்கள் யாவும் ஆகாசத்தில் ஒலியாக வியாபித்திருக்கின்றன. பூஜைகளின்போதும் ஹோமங்களின்போதும், ஒரு கலசத்தில் இருக்கும் நீரை மந்திரங்கள் கூறிய படி தர்ப்பையால் புரோகிதர் நம்மேல் தெளிப்பதற்கு ப்ராஹ்ம ஸ்நானம் என்று பெயர். பஞ்சபூதங்களில் ஆகாயத்துக்கானது இது.


5. நடக்கும்போது பசுக்களின் குளம்படி மண்ணானது வாயுதேவனின் உதவியோடு நம்மேல் பட்டாலும், அந்த மண்ணானது (கோ தூளி) ஒருவரைப் புனிதமாக்குவதாகப் கூறப்படுகிறது. மேலும், ரோக நிவாரணத்துக்காக மேனியில் பூசப்படும் புற்றுமண் போன்றவையால் இதை மிருத்திகை ஸ்நானம் என்கிறார்கள். இவை இரண்டுமே ப்ருத்விக்காகக் கூறப்படுகிறது. இவையெல்லாவற்றையும்விட விசேஷமாகவும் ஸ்ரேஷ்டமாகவும் சொல்லப்படுவது திவ்ய ஸ்நானம் என்பது. அதாவது, வெயில் காயும்போதே சில சமயங்களில் மழைத் தூறல்களும் சம்பவிக்கும். அப்போதைய மழைத்துளிகள் தேவலோகத்தில் இருந்துவரும் தீர்த்தத்துக்குச் சமமாகக் கருதப்படுகின்றது. அப்படிப்பட்ட வேளையில் எல்லோரும் அந்தப் புனித நீரில், அதாவது, திவ்ய ஸ்நானத்தில் நனைந்து நம்மைப் புனிதப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா கூறியிருக்கிறார்.



இது பெண்களுக்கு மட்டும்



விசேஷ தினங்களைத் தவிர, மற்ற நாட்களில் பெண்கள் தலைக்குத் தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. மஞ்சள் தண்ணீரை, தலைக்கு புரோக்ஷணம் செய்து கொண்டாலே போதும் என்று சாஸ்திரத்தில் கூறியிருக்கிறது என்கிற தகவலையும் ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா தெரியப்படுத்தியிருக்கிறார். ஸ்நானம் என்பது, உடல் அழுக்கை மட்டும் போக்குவதற்காக மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்பு எனக் கொள்ளக் கூடாது. ஆன்மாவின் பாவங்களைக் களைவதற்காகவும் மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்ப என்பதை மனதில் ஆழமாக பதியவைத்துக்கொண்டு நீராட வேண்டும். ஒவ்வொரு முறை ஸ்நானம் செய்யும்பொழுதும்,


கங்கேச யமுநே சைவ கோதாவரீ ஸரஸ்வதீ

நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதிம் குரு



என்கிற ஸ்லோகத்தைக் கூறி ஸ்நானம் செய்தால், ஏழு புண்ணிய நதிகளிலும் ஸ்நானம் செய்த பலன் கிட்டும்


Theertham | Snanam | ???? ???????? ?????? ????? ?????????
 
Blowing of shankh in puja ritual

Blowing of shankh in puja ritual

Blowing of shankh has special significance in puja ritual. It has been mentioned in ‘Varaha Puran’ that one should not open the door of temple without first blowing the shankh. The left turned shankh is blown before the start of puja or performance of arti. There are three types of frequencies in the atmosphere namely sattva dominant, raja dominant and tama dominant. Among them the raja dominant and tama dominant frequencies generate distressing vibrations. The sattva dominant frequencies get attracted to the place of puja ritual but these frequencies are opposed by the raja and tama dominant frequencies so that they do not reach the place of puja and thus the flow of sattva frequencies is hindered.


When the shankh is blown before the start of puja energy is emitted from the shankh. This energy reduces the strength of distressing frequencies. Besides a protective armour of chaitanya (divine consciousness) is formed around the articles of puja.


There is another benefit too. That is when the shankh is blown the activated energy of Lord Vishnu in the universe gets attracted towards the place of worship which is not only beneficial to the person who is blowing the shankh but also to all those who hear it.


Just as the shankh is blown before the start of puja, it is also blown before an arti. The objective behind this being to sustain the deity’s chaitanya attracted to the place of puja ritual and the pure atmosphere generated because of the sattvik frequencies, for a long period.


Why is shankh blown before start of puja? - Hindu Janajagruti Samiti
 
Kiratarjuniya – Story of Kirata – Shiva as Hunter – and Arjuna

Kiratarjuniya – Story of Kirata – Shiva as Hunter – and Arjuna

Kiratarjuniya is a very famous story in the Mahabharata. The two main characters in the story are Kirata (Shiva) and Arjuna. During the exile of Pandavas in the Mahabharata, Sage Vyasa advises the Pandavas to use the exile period to propitiate Gods and become more powerful. Arjuna decided to propitiate Indra for this purpose; he went to the Indrakila Hill and subjected himself to severe austerities.


Indra appeared before Arjuna and asked him to propitiate Shiva as only Mahadev can bless a warrior with different powerful weapons.


Arjuna then started severe penance – by only eating dry leaves and fallen fruits. Arjuna’s penance was so intense that heat began to emit from earth. This made the life of living beings on earth harsh.


Finally Shiva decided to appear before Arjuna as Kirata – the hunter.





When Shiva was approaching Arjuna, He saw a demon in the form of a boar about to jump on to Arjuna.


Arjuna also saw the boar.


Both Arjuna and Kirata shot arrows on the boar. One arrow hit the boar and it fell down dead.


Both Arjuna and Kirata made the claim to the kill.


A battle of words ensued between them. Soon it turned into a fierce fight. First with bows and arrows, then with sword, missiles etc.


All attempts of Arjuna were thwarted by Kirata. Fire missiles were answered with rain missiles. Nagastra was minimized by Garudastra.


Finally both took to hand to hand to combat. Arjuna was easily overpowered by Kirata.


Soon Arjuna realized that Kirata was no human. Arjuna immediately collected some clay and created a Shivling and started showering it with forest flowers.


The forest flowers flew to Kirata’s head. Arjuna at once fell on the feet of Shiva.


Shiva revealed his true form sitting atop Nandi and blessed Arjuna with Pashupastra.


Kiratarjuniya ? Story of Kirata ? Shiva as Hunter ? and Arjuna ~ Hindu Blog


 
விநாயகரும் விளாம்பழமும்

விநாயகரும் விளாம்பழமும்

விநாயகச் சதுர்த்தி வரும் போது கூடவே விளாம்பழமும் வந்து விடும் கடைத் தெருவில்! எத்தனையோ பழ வகைகள் இருக்க, என்ன விசேஷம் விளாம்பழத்தில்? அது மனிதன் வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.



விளாங்காயாக இருக்கும் போது, ஓடு பச்சையாக இருக்கும். உள்ளே இருக்கும் சதையும் ஓடோடு இறுக ஒட்டிக்கொண்டிருக்கும். அது போல் பக்குவமில்லாத நிலையில் மனிதன் உலக ஆசைகளோடு ஒட்டியிருப்பான். அவனைப் பிரித்தெடுப்பது கடினம்!



விளாங்காய், பழமாக மாறியபின், ஓடு மஞ்சள் கலந்த நிறமாக மாறி விடும். உள்ளே இருக்கும் சதையும் ஓட்டை விட்டுப் பிரிந்து தனியாக வந்து

விடும். அது மட்டுமல்ல. பழத்தின் நறுமணமும் கூடிவிடும்.



பக்குவப்பட்ட மனிதன் இறையனுபவத்தை நாட ஆரம்பித்தவுடன் உலக ஆசைகளை விட்டு விலக ஆரம்பித்து விடுவான். காயாய் இருந்த அவன், கனியாய்க் கனிந்து விடுவான். கனிந்த பழத்தை அதன் மணம் காட்டி கொடுத்து விடும். அது போல் ஞானியாகிவிட்ட அல்லது ஞான மார்க்கத்தின்பால் சென்று கொண்டிருப்பவரை அவருடைய ஞானம் காட்டிக் கொடுத்துவிடும்.



இரண்டுக்கும் விளம்பரம் தேவையில்லை. ஞான நிலையைப் பற்றிக் குறிப்பது விளாம்பழம். அதனை யாருக்கு அளித்தால் சிறப்பு? ஞானக் கொழுந்தாய் விளங்கும் விநாயகனுக்கு அளித்தால்தானே சிறப்பு?



விநாயகருக்கு உகந்த விநாயகச் சதுர்த்தி அன்று நாம் ஞானத்தை அடைய வேண்டி, ஞானத்தைக் குறிக்கும் விளாம்பழத்தை, ஞானக் கொழுந்தனுக்கு அளித்து அவன் அருள் பெற்றுக் கொள்வோம்!


aanmigam: ?????????? ????????????
 
திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லு&#

திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது குத்து விளக்கை ஏற்றச்சொல்வது ஏன் ?

ஒரு பெண்ணுக்கு இருக்க‍ வேண்டிய ஐந்து நற்குணங்கள்,
இந்த குத்துவிளக்கில் உள்ள‍ ஐந்து முகங்ககளை ஏற்றுவதன் மூலம் உறுதி அளிப்ப‍தாக அர்த்த‍ம்!
என்ன‍ இது, குத்துவிளக்குக்கும் பெண்ணுக்கும் என்ன‍ சம்பந்தம் என்று தானே யோசிக்கிறீர்கள்.
இதற்கு விளக்கம் உண்டு முத லில்
இந்த குத்துவிளக்கின் பாகங்களைப்பற்றி பார்ப்போம்.

குத்துவிளக்கின் தாமரைப்போன்ற பீடம் – பிரம்மாவையும்
குத்துவிளக்கின் நடுத்தண்டு – விஷ்ணுவையும்
நெய் எறியும் அகல் – சிவனையும்
திரி – தியாகம்
தீபம் – திருமகளையும்
சுடர் – கலைமகளையும் குறிக்கிறது

குத்துவிளக்கில் உள்ள‍ ஐந்து முகங்களும், பெண்ணுக்கு வேண் டிய
அன்பு,
அறிவு,
உறுதி,
நிதானம்,

பொறுமை போன்ற ஐந்து நற்குணங்களை குறிப்பதாகும்.


அதனால்தான் ஒரு பெண் திருமணமாகி முதல் முறையாக தனது கணவன் வீட்டிற்கு அதாவது புகுந்த வீட்டிற்கு வரும்போது முதல் வேலையாக அப்பெண்ணைக் குத்துவிளக்கை ஏற்றச் சொல்லி, அந்த குத்து விளக்கில் ஏற்ற‍ப்பட்ட‍ தீபம் மூலமாக வீடுமுழுக்க‍ ஒளிபரவச் செய்கின்றனர்.


Category: இந்து-சாஸ்திரங்கள் சம்பிரதாயம்


??? ????, ?????????? ??????? ???????????? ???????????? ?????? ??????? ????????????? ??? ? - ??? ????????
 
எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங&

எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்?

பொதுவாக கடவுள் வழிபாட்டில் உருவ வழிபாடு மிக முக்கியமானது. உருவ வழிபாடே மக்களின் மனதை கடவுளிடம் ஒன்றுமாறு செய்யக…்கூடியதாகும். இத்தகைய உருவ வழிபாட்டில் பிம்பங்களை அதாவது படங்களை வைத்து வழிபாடு செய்வதும் அடங்கும். அவ்வாறு படங்களை வைத்து வழிபாடு செய்வதில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இல்லையேல் நமது வாழ்வில் குழப்பங்கள் உண்டாகும். எனவே குழப்பங்களை தவிர்த்து இறை வழிபாடு தழைக்கவே இப்பதிவு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
வீட்டில் வைத்து வணங்க வேண்டிய கடவுள்கள் / தெய்வங்கள் / தேவதைகள்:-


1. அவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இது மிகவும் நன்மை பயக்கும். குல தெய்வம் நம்மை கண்ணின் இமை போல் காத்து நிற்கும். குல தெய்வத்தினை விட உயர்ந்த தெய்வம் உலகில் இல்லை. குல தெய்வத்தின் அருள் இல்லாமல் நாம் வாழவே இயலாது.


2. அவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இதுவும் நன்மை பயக்கும். நமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நம்மை காப்பாற்றும் தெய்வம் இஷ்ட தெய்வமே. குல தெய்வத்திற்கு அடுத்தபடியாக நமக்கு அருள் பாலிக்கும் தெய்வம் இஷ்ட தெய்வமே.


3. எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம். முழு முதற் கடவுள் இவரே. இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம். காரியசித்தி உண்டாக்குபவர் இவரே. விக்கினங்களையும், வினைகளை களைபவரும் இவரே. நல்வழி காட்டுபவரும் இவரே.


4. குழந்தை கடவுளரின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம். இது குழந்தை வரம் தரும். குழந்தை இல்லாதவர்கள் வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். நல்ல குழந்தைகள் பிறக்கும். பிறந்த குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.


5. ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும், அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. இவரின் அருள் இல்லாமல் அரசியலும் இல்லை, அரசாங்கமும் இல்லை.


6. மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தடையை போக்கும் வடிவம் ஆகும். திருமணம் ஆனவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை பொங்க செய்யும் வடிவம் இதுவே ஆகும். இல்லறம் நல்லறமாக நடக்கும்.


7. அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம். நாம் அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. பிரிந்த தம்பதியர் வணங்கி வந்தால் விரைவில் ஒன்று சேருவர். தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை, அன்பு, காதல், பாசம் உண்டாகும். தம்பதியரின் கருத்து வேற்றுமை நீங்கும்.


8. சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம். சிவசக்தி கலப்பே உலகம். சிவசக்தி கலப்பில்லாமல் உலகில்லை. சக்தியுடன் இருக்கும் சிவபெருமானுக்கே மிகவும் வலிமை அதிகம். எப்போதும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் வடிவம் சிவசக்தி வடிவம் ஆகும்.


9. ராதையுடன் இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்கி வரலாம். இது திருமணத்தடையை நீக்கும் வடிவம் ஆகும். இந்த வடிவம் தம்பதியர் இடையே அன்பு, பாசம், காதல், நேசம் இவற்றை உருவாக்கும் வடிவம் ஆகும். தம்பதியரின் கருத்து வேற்றுமையை நீக்கும் வடிவம் ஆகும்.


10. குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம் வைத்து வணங்கி வரலாம். இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது. இதனை வைத்து வணங்கி வர குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் உண்டாகும். குடும்பம் ஒற்றுமையுடன் செழித்து வளரும்.


11. தனது மனைவியான சொர்ணதாதேவியை அணைத்தவாறு தன் மடியில் அமர்த்தி அருள்பாலிக்கும் சொர்ணபைரவரின் படமும் வீடுகளில் வைத்து வணங்கத் தக்கதே. பைரவ வடிவங்களிலேயே சிறந்த இவ்வடிவத்தினை வணங்கி வர அறம், பொருள் மற்றும் இன்பம் அனைத்தும் பெருகும்.


12. ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே. பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர். அனுமனின் படம் வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.


13. லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் திருமகளின் அருள் கிட்டும். நிம்மதியான வாழ்க்கையும் 16 வகை பேறுகளும் கிட்டும்.


14. சிவகாமசுந்தரியுடன் நடனமாடும் நடராசரை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இது சிவசக்தி அருளைத் தரும். 16 பேறுகளும் கிட்டும். நடனம், இசை முதலான நுண்கலைகளில் புலமை உண்டாகும். கர்மவினைகள் தொலையும். மாயை விலகும். முக்தி கிட்டும்.


15. ஞானத்தினை போதிக்கும் தட்சணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று. இதனால் அறிவும், ஞாபக சக்தியும் உண்டாகும். கல்வி ஞானம் கிட்டும். ஞாபக மறதி உடைய குழந்தைகள் வணங்க வேண்டிய வடிவம் இதுவே. கல்வி, செல்வம், வீரம் மூன்றும் கிட்டும்.


16. கலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே. இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும், எழுத்துத்திறமையும் உண்டாகும். நமது வளமான வாழ்விற்கு வாணி வழிகாட்டுவாள். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும்.


17. லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். குபேரனுக்கு அருள் பாலிக்கும் லட்சுமி படமும், லட்சுமி மற்றும் குபேரன் இவர்கட்கு அருள் பாலிக்கும் சிவபெருமானின் படமும் மிகவும் சிறந்தவை. இத்தகைய படங்களை வைத்து வணங்கி வர 16 பேறுகளும் கிட்டும். 8 ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.


18. அலர்மேல்மங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும், சுகமான வாழ்க்கையும் அமையும். மேற்கண்ட படத்துடன் லட்சுமியின் படமும் இருப்பது மிகவும் சிறப்பானது.


19. துர்க்கையின் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும். கணவன் மற்றும் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும். செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். வியாபாரம் பெருகும்.


20. அன்னம் பாலிக்கும் அன்னபூரணியின் படம் நாம் அவசியம் வீட்டில் வைத்து வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பானது. இதன் மூலம் வறுமை அகலும். பசி, பட்டினி, பஞ்சம் தீரும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும்.


21. சித்தர்கள், மகான்கள், முனிவர்கள், யோகிகள், ரிஷிகள் இவர்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் குருவருள் வந்து சேரும். தோஷங்கள் விலகும். கர்மவினைகள் நீங்கி புண்ணியம் சேரும். வளமான, நிம்மதியான வாழ்க்கை கிட்டும்.



Category: இந்து-சாஸ்திரங்கள் சம்பிரதாயம்


???????? ?????????? ???????? ?????? ?????????
 
விளக்கேற்றிய பின் தலை வாரக்கூடாது என்பத&

விளக்கேற்றிய பின் தலை வாரக்கூடாது என்பது ஏன்?




மாலை நேரம் வழிபாட்டுக்குரிய நேரம். விளக்கேற்றும் வேளையில் திருமகள் இல்லத்தில் உறைந்திருப்பதாக ஐதீகம். அந்த சமயத்தில் பெண்கள் கூந்தலை விரித்தபடி நிற்பது நல்லதல்ல. எனவே விளக்கு வைப்பதற்கு முன்பாக மாலை 5.30 மணிக்குள் பெண்கள் தலைவாரி, பூ முடித்து, நெற்றியில் திலகமிட்டுக் கொள்வது சிறப்பைத்தரும் என கூறுகின்றனர் சான்றோர்கள்.


Dinakaran - Why then is the head vilakkerriya varakkutatu? |???????????? ???? ??? ??????????? ?????? ????
 
கடவுளை பகவான் என்று ஏன் சொல்கிறோம்?

கடவுளை பகவான் என்று ஏன் சொல்கிறோம்?


Tamil-Daily-News-Paper_39726984501.jpg


‘பகம்’ என்றால் ஆறு குணங்கள். அதி உன்னதமான ஆறு குணங்களை உடையவன், பகவான். அந்த ஆறு குணங்கள்: எல்லையற்ற ஞானம், எல்லையற்ற பலம், எல்லையற்ற ஐஸ்வரியம், எல்லையற்ற வீரியம், எல்லையற்ற ஆதாரசக்தி, எல்லையற்ற தேஜஸ்.

ஈஸ்வரன் இமாசலத்தின்மீது அமர்ந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இன்று மனிதனால் அதே இமாசலத்தின் மீது பறக்க முடிகிறது. ஆனால் அவனால் அங்கு ஈஸ்வரனைப் பார்க்க முடியவில்லையே?

ஒருவன் தன் காதலியிடம், ‘‘எப்போதும் என் இதயத்தில் குடியிருக்கிறாய்” என்கிறான். அவள் உடனே அவனது இதயத்தைப் பிளந்து பார்த்தால் என்ன ஆகும்?

ஈஸ்வரன் இமாசலத்தின் மீது அமர்ந்திருப்பதாகக் கூறுவது ஓர் உருவகமே. தூய்மையான எண்ணங்கள், தூய்மையான செயல்கள் இவற்றிற்கு வெண்ணிறத்தை அடையாளமாகக் குறிப்பிடுவதுண்டு. அதேபோல் மலைமீது உருவாகும் பனி எந்தவித அசுத்தமும் படியாதது. அத்தகைய வெண்ணிறப் பனிமலை இறைவனின் உறைவிடம் என்பது ஓர் உருவகம் மட்டுமே.

‘இமா’ என்பது தூய்மையான வெண்ணிறத்தைக் குறிக்கிறது. ‘அசலம்’ என்பது அசையாத பொருள். சபலங்களால் மனம் அசைவது மானுடம். அந்த அசைவு ஏதும் இன்றி இருப்பது தெய்வீகம். அதை ‘நிச்சல’ என்றும் கூறுவர். ஆக இமாசலம் என்ற சொல் தூய்மைக்கும் அமைதிக்கும் அசைவற்ற உறுதிக்கும் அடையாளமான சொல். அந்தப் பண்புகள் அமையும்போது இறைவன் அங்கு குடியிருக்கிறான். நம்முடைய இதயத்தில் இந்தப் பண்புகள் அமைந்துவிட்டால் ஈஸ்வரன் அங்கு வந்து தங்குவான். நாமும் அவன் இருப்பதை உணர முடியும்.

பிரம்மச்சரியத்திற்கும் கடவுள் தேடலுக்கும் என்ன சம்பந்தம்? புராணங்களில் வரும் கடவுள் கல்யாணங்கள் எதை வலியுறுத்துகின்றன?

பிரம்மச்சரியம் என்பது ஒருவித சக்தி. விளையாட்டு வீரர்களுக்குக்கூட இது அவசியம் என்று சொல்லப்படுகின்றது. பரீட்சைக்குப் போகும் மாணவனுக்கு இது நல்லது என்பது உண்மை. இறை வழிபாட்டிலும் இதற்கு நல்ல பங்கு உண்டு.

கடவுளர் திருமணங்கள் இல்வாழ்க்கையின் லட்சணங்களைச் சொல்பவை. நெறிப்பட்ட காமம் மிக முக்கியம். பிரம்மச்சரியத்தின் மேன்மையை உணர்ந்து பிறகு திருமணம் செய்து, நெறிப்பட்ட காமம் அனுபவிக்கும்படி புராணங்கள் சொல்கின்றன.

கோயிலில் சுவாமியை பிரதட்சிணம் வருவதால் என்ன நன்மை? அப்பிரதட்சிணமாக வரக்கூடாதா?

கோயிலில் சுவாமியை பிரதட்சிணம் வருவதால் மனம் தூய்மையடையும். அகங்காரம் குறைந்து பக்தி வளரும். பொதுவாக, போற்றுவதற்குரிய எந்தப் பொருளாக இருந்தாலும் அதை பிரதட்சிணம் செய்வது மரியாதைக்கு அடையாளம்.உயிர் நீத்தவர்களை வழிபடும் போதுதான் அப்பிரதட்சிணம் செய்வது சம்பிரதாயம். கோயில்களில் நிச்சயமாக அப்பிரதட்சிணமாக வரக்கூடாது.

Dinakaran - ?????? ?????? ????? ??? ???????????
 
நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் !!!!!

நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் !!!!!


அந்த
விவசாயியின் ஜாதகத்தை சோதித்து பார்த்த ஜோதிடருக்கு , உள்ளூர தயக்கம் ! காரணம் , அன்றிரவு எட்டு மணிக்கு அந்த விவசாயிக்கு மரணம் நேரக்கூடிய கண்டம் இருந்தது ;

அதை
..அவனிடம் நேரிடையாக சொல்ல விரும்பாமல் ,
'' ஐயா ...எனக்கு நிறைய வேலைகள் உள்ளன ...உங்கள் ஜாதகம் என்னிடமே இருக்கட்டும் !..நாளை காலையில் என்னை வந்து பாருங்கள் !'' என்றார் ;
ஜோதிடரின் வீட்டிலிருந்து புறப்பட்ட விவசாயி , தன் கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தபோது , மாலை சாய்ந்து இருள் சூழ ஆரம்பித்தது ! அப்போது , லேசாக மழைத்தூறல் ஆரம்பிக்க ......சற்றைக்கெல்லாம் பெருமழை கொட்ட துவங்கியது! மழையில் நனைந்தவாறே ,சுற்றுமுற்றும் பார்வையை

சுழலவிட்டவனின் கண்களில் ..அந்த .பாழடைந்த சிவன் கோயில் தென்பட......ஓடோடிச்சென்ற அவன் , கோயிலின்
முன்னே இருந்த மண்டபத்தில் ஒதுங்கினான்:

..மண்டபத்தில் நின்றவாறே , கோயிலின் பாழடைந்த நிலை கண்டு உள்ளூர வருந்தினான் !
தன்னிடம் போதுமான பணம் இருந்தால் அக்கோயிலை புதுப்பிக்கும் வேலையை செய்வேன் என்று மானசீகமாக நினைத்துக்கொண்டதோடு நில்லாது .....அக்கோயிலை புதுப்பிப்பதாக மானசீகமாக கற்பனையும் செய்து கொண்டு ....கோபுரம் ...ராஜகோபுரம் ...உட்பிராகாரங்கள் மற்றும் ..மண்டபங்கள் முதலானவற்றை மனதிற்குள் கற்பனையாகவே
அமைத்து ....வேதியர்கள் புடைசூழ கும்பாபிஷேகமும் விமரிசையாக நடத்தி
.....இப்படி தன்னை மறந்து சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தவனின் பார்வை தற்செயலாக மண்டபத்தின் எதிரே நோக்க .......

அங்கே ஒரு பெரிய கருநாகம் படமெடுத்த நிலையில் ..அவனை கொத்த தயாராக இருந்தது !!
சூழ்நிலையின் விபரீதத்தை உணர்ந்த அவன் , மறுகணம் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வரவும் ,மண்டபம் ' கிடுகிடு ' வென்று இடிந்து விழவும் சரியாக இருந்தது !
இப்போது மழையும் நின்று விட்டிருக்க ....விவசாயியும் வீடு போய் சேர்ந்தான் :
பொழுது விடிந்ததும் முதல் வேலையாய் ஜோதிடர் வீட்டுக்கு சென்ற அவனை கண்டு ஜோதிடருக்கு வெகு ஆச்சரியமும் , திகைப்பும் ! ' எப்படி இது சாத்தியம் ? நாம் ஜோதிடக்கணக்கில் தவறிவிட்டோமோ ' பலவாறான எண்ண அலைகளுடன் மீண்டும் அவனது ஜாதகத்தை அவர் ஆராய .. .அவரது கணக்கு சரியாகவே இருந்தது! பின் , ஒரு உந்துதலின் பேரில்அவர் ஜோதிட
நூல்களை துல்லியமாக ஆராய்ந்த அக்கணம் ....
' இப்படிப்பட்ட கண்டத்திலிருந்து ஒருவன் தப்ப வேண்டுமானால் , அவனுக்கு ஒரு சிவன் கோயிலை கட்டி முடித்து , கும்பாபிஷேகமும் செய்த புண்ணியம்
இருக்கவேண்டும் ' என்று ஜோதிட நூலில் குறிப்பிட்டிருந்தது !

' ஒரு ஏழைக்கு , சிவன் கோயிலை கட்டி , கும்பாபிஷேகமும் செய்வது என்பது எப்படி சாத்தியம் '

என்று எண்ணியவாறே ஜோதிடம் அறிவித்த அனைத்து விவரங்களையும் அவனிடம் அந்த ஜோதிடர் இப்போது எடுத்துரைக்க .....அவனோ , வெகு இயல்பாக முந்திய நாள் இரவு
தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவரிடம் எடுத்துரைத்தான் !!..
தெய்வப்பணி பற்றிய கற்பனை கூட இடையூறுகளை நீக்கும் !
நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும் !


https://groups.google.com/forum/#!msg/vallalargroups/ImxAp97PYuw/eFI2KLQnGWoJ
 
ஏன் கடவுளுக்கு இத்தனை உருவங்கள்?

ஏன் கடவுளுக்கு இத்தனை உருவங்கள்?


ஒருவர் வீட்டுக்கு போகிறோம். அந்த வீட்டு சுவற்றில் பல படங்கள்
மாட்டப்பட்டிருக்கின்றன. அந்த வீட்டுக்காரர் வந்து, இதுதான் என்னுடைய
தகப்பனார் படம் என்று ஒரு படத்தைக் காட்டுகிறார். அதற்கு பின்னால் ஒரு
பெண்ணோடு இருப்பவர் படத்தைக் காட்டி, இதுவும் என் தகப்பனார் படம்
என்கிறார்.

அதற்குப் பின்னால் ஆணும், பெண்ணும், ஒரு குழந்தையுடன் இருக்கிற படத்தைக்
காட்டி இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். அதற்குப் பின்னர்
விருத்தாப்பியப் பருவத்தில் ஒருவரும், கல்யாண கோலத்தில் இருக்கிற ஒரு
ஆணும், பெண்ணும் இருக்கிற படத்தைக் காட்டி இதுவும் என் தகப்பனார் படம்
என்கிறார்.

அதற்குப் பின்னால் ஒரு குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கிற படத்தைக்
காட்டி இதுவும் என் தகப்பனார் படம் என்கிறார். இவ்வளவையும் பார்த்துக்
கொண்டு வருகிறவர் உனக்கு எத்தனை தகப்பனார் என்று கேட்கலாமா?,அப்படிக்
கேட்பவன் அறிவுடையவன் ஆவானா?

முதல் படம் இவன் தகப்பனார் வாலிபனாக இருந்தபோது எடுத்த படம்.அடுத்த படம்,
இவனுடைய தாயை, தகப்பனார் கல்யாணம் செய்து கொண்ட போது எடுத்த படம்.
அடுத்தது, இவன் குழந்தையாகப் பிறந்த போது எடுத்த படம். அடுத்து இவனை மண
அறையில் மனைவியோடு தகப்பனார் ஆசீர்வாதம் செய்கிற படம்.

அடுத்தது இவன் பெற்ற குழந்தையைத் தகப்பனார் கொஞ்சுகிற படம்.ஒரே தகப்பனார்
பல காலத்தில் பல உருவில் இருக்கிறார்.

அதுப்போலவே இறைவன் பல கால சுழற்சியில் பல உருவங்களை பெறுகிறார்.

- பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்.----- 21.2.1957 அன்று
காஞ்சிபுரத்தில் ஆற்றிய உரையிலிருந்து:...


https://groups.google.com/forum/#!topic/panbudan/jk1q5OmTUbE
 
ஆண்டவனே நினைச்சாலும் நம்ம கிட்ட இருந்து

ஆண்டவனே நினைச்சாலும் நம்ம கிட்ட இருந்து பிரிக்க முடியாதுங்க

ஒரு ஊரில் ஒரு தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது,அவள் பெயர் அனிதா.அவள் தாய் மீண்டும் கருவுற்றிருந்தாள் அவர்களுக்கு தெரியும் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் என்று.

பெற்றோர்கள் இருவரும் அனிதாவிடம் உனக்காக ஒரு தம்பி பாப்பா வரப் போகிறான்,நீயும் அவனும் சேர்ந்து ஜாலியா விளையாடப்போறீங்க என்று சொல்லியே வளர்த்தார்கள்.

அனிதா அவள் அம்மா வயிற்றில் தினமும் கைகளால் தடவிக்கொண்டே டேய் தம்பி சீக்கிரம் வெளியே வாடா நாம ஜாலியா விளையாடலாம் நான் உன்னை யாருக்கும் குடுக்க மாட்டேன், நான் மட்டுமே உன் கூட விளையாடுவேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.

அனிதா இன்னும் முகம் பார்க்காத தன் தம்பியிடம் அவ்வளவு பாசமாக இருப்பதை பார்த்து அவள் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தார்கள்.அனிதாவுக்கும் தினமும் அம்மா வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதே வாடிக்கையாக இருந்தது.

நாட்கள் உருண்டோடின பிரசவ வலி எடுக்கவே மருத்துவமனையில் சேர்த்தார்கள்.பிரசவம் நார்மலாக இருக்கும் என்று நினைத்தார்கள் ஆனால் மிக சிக்கலாகி ஆப்ரேஷன் பண்ணிதான் குழந்தையை வெளியே எடுத்தார்கள்.மருத்துவர்கள் குழந்தை மிக பலவீனமாக இருக்கிறது இன்னும் சில நாட்களே உயிரோடு இருக்கும் என்று கூறி icu வில் அட்மிட் பண்ணினார்கள்.

அனிதாவையும் அவள் தந்தையையும், குழந்தையையும் அம்மாவையும் பார்க்க அனுமதிக்கவே இல்லை.பிறகு அனிதாவின் தந்தையை மட்டும் அனுமதித்தார்கள் அவர் உள்ளே சென்று குழந்தையை பார்த்துவிட்டு வந்தார்.

ஒரு வாரம் ஓடி விட்டது அனிதா அடம் பண்ண ஆரம்பித்தாள் நீ மட்டும் பார்த்துட்டு வந்தியே நானும் தம்பியை பார்க்கனும் என்று கத்தினாள்.உன் தம்பி சாமிக்கிட்ட போகபோறான் உன்னை மருத்துவமனையில் பார்க்க அனுமதிக்கமாட்டாங்கம்மா என்று அவள் அப்பா சொன்னார்.அவள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணவே சரி நாளைக்கு எப்படியாவது உன்னை உள்ளே கூட்டிட்டு போறேன் என்றார்.

மறுநாள் மருத்துவமனயில் அனிதாவையும் குழந்தையை பார்க்க அனுமதிக்கவேண்டும் என்று கேட்டார் ஆனால் குழந்தையை icu வுக்குள் செல்ல அனுமதிக்கமாட்டோம் என்று கூறினார்.பிறகு அவர்கள் கெஞ்சுவதை பார்த்து அனுமதித்தார்கள்.

அனிதா உள்ளே ஓடிச் சென்று குழந்தையின் பிஞ்சு விரலை பிடித்தாள்,அவள் கை பட்டதும் குழந்தை லேசாக அசைந்தது .’டேய் தம்பி எழுந்து வாடா நாம விளையாடலாம் ’என்றாள்.குழந்தை லேசாக மூச்சு விட ஆரம்பித்தது.’உன்னை நான் சாமிக் கிட்ட கொடுக்கமாட்டேன், நானே வச்சுக்குவேன்,நீ என் கூடத்தான் இருக்கனும்’ என்றாள். இப்போது குழந்தையின் மூச்சு சீராக வர ஆரம்பித்தது.

மருத்துவர்களே ஆச்சரியப்பட்டார்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்து விட்டு இனி நீங்கள் பயப்படத் தேவை இல்லை என்றார்கள்.

நாம ஒரு பொருள் மேல உன்மையான பாசம் வச்சிட்டா அந்த ஆண்டவனே நினைச்சாலும் நம்ம கிட்ட இருந்து பிரிக்க முடியாதுங்க.
 
Significance of SARVA MANGALA SIDDHI BUDDHI KALYANAM

Significance of SARVA MANGALA SIDDHI BUDDHI KALYANAM


Significance of Siddhi Buddhi Kalyanam.





Ganesha is known in almost all places as a Brahmachari (Bachelor). Ganesha, the God of Wisdom is the first to be worshiped in all rituals and at the commencement of any auspicious enterprise. Barring a few pockets, in all other parts believe that Ganesha is a bachelor. However there is a school of thought based on Shiva Purana which believes that Lord Ganesha has two wives. This system is said to be unique in North India. This eternal Brahmachari (Lord Ganesha) who is the eternal reservoir of knowledge, wisdom and suggestive articulation is also known as the father of two sons. The names of his wives are Siddhi (Attainment) and Buddhi (Awareness or Wisdom). The sons are Kshema (Welfare) born to Siddhi and Labha (Achievement) born to Buddhi.



The story behind Siddhi Buddhi Kalyanam is that Siva and Parvati decide to marry their sons Ganesh and Karthikeya. They come out with a novel idea to decide who is to get married first and tell their sons whosoever goes round the Dharani (World) first, will get married first. Karthikeya immediately leaves on his Mayura for the global trip but Ganesh with his heavy body feels he would not be able to do so. He gets enlightment that Pradakshina of parents is equal to BhooPradakshina (World) and does the same. Happy with this action, Shiva and Parvati decide to marry Ganesh first. Brahma offers his two daughters Siddhi and Buddhi to Ganesh and Siva and Parvati agree. Two sons are born out of this wedlock and they are Subham and Labham. The bottom line of the marriage is that whosoever worships Ganesha begets Siddhi(Attainment) and Buddhi (Awareness or Wisdom). and thereby Subham and Labham.

C V Ramakrishnan: Significance of SARVA MANGALA SIDDHI BUDDHI KALYANAM
 
Last edited:
அரோஹரா

அரோஹரா

ஏன் சிவன் கோவிலில் பல நபர் அரோஹரா என்ற கோஷம் கேட்கும். இதை ஏன் சொல்கிறார்கள்?
முருகன் கோயிலாகட்டும், சிவன் கோயிலாகட்டும் அரோஹரா என்ற கோஷம் கேட்கும். இதை ஏன் சொல்கிறார்கள்? இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?முக்தி (பிறப்பற்ற நிலை) அருளும் தலங்கள் நான்கு. திருவாரூரில் பிறக்க முக்தி; காசியில் இறக்க முக்தி; சிதம்பரத்தில் தரிசிக்க முக்தி; ஆனால், யாராக இருந்தாலும் நினைத்த அளவிலேயே முக்தி அருளும் தலமாக இருப்பது திருவண்ணாமலை. பஞ்சபூதத்தலங்களில் அக்னித்தலமாக விளங்குகிறது.


இத்தலத்தில், அண்ணாமலைக்கு அரோஹரா எனச் சொல்லி சிவபெருமானை வணங்குவர். சிவனின் திருநாமங்களில் ஹரன் என்பதும் ஒன்று. இத்திருப்பெயரினைஹரன், ஹரன் என அடுக்குத்தொடர்போல சொன்னார்கள் ஒரு காலத்தில்! அது ஹர ஹர ஹர ஹர என்று மாறியது. பின்னர் அரோஹரா எனத் திரிந்தது. ஹர ஹர என்றால் சிவனே சிவனே என சிவபெருமானை கூவி அழைப்பதற்கு ஒப்பாகும்.



Source: Sage of Kanchi

Balaji iyer
 
இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் பொருளும் அ&

இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் பொருளும் அதன் பயனும் !


1.நன்னீர் - தூய்ப்பிக்கும்
2. நல்லெண்ணை - நலம்தரும்
3. பச்சரிசி மா - மல நாசம், கடன் தீரும்
4. மஞ்சள் தூள் - நல் நட்பு வாய்ப்பிக்கும்
5. திருமஞ்சனத்தூள் - நோய் தீர்க்கும்

6. பஞ்சகவ்யம் - தீதளிக்கும், ஆன்மசுத்தி (பசுவின் பால், தயிர், நீர், சாணம், நெய் கலந்தது)
7. பசும்பால் - நீண்ட ஆயுள் தரும்
8. பசுந்தயிர் - மகப்பேறு வாய்க்கும்
9. பஞ்சாமிருதம் - பலம், வெற்றி தரும்
10. தேன் - சுகமளிக்கும், சங்கீதவிருத்தி

11. நெய் - முக்தியளிக்கும்
12. சர்க்கரை - எதிரியை ஜெயிக்கும்
13. இளநீர் - நல் சந்ததியளிக்கும்
14. கருப்பஞ்சாறு - ஆரோக்கியமளிக்கும்
15. நார்த்தம்பழம் - சந்ததி வாய்க்கும்

16. சாத்துக்கொடி - துயர் துடைக்கும்
17. எலுமிச்சை - யமபய நாசம், நட்புடை சுற்றம்
18. திராøக்ஷ - திடசரீரம் அளிக்கும்
19. வாழைப்பழம் - பயிர் செழிக்கும்
20. மாம்பழம் - செல்வம், வெற்றி தரும்
21. பலாப்பழம் - மங்கலம் தரும், யோகசித்தி

22. மாதுளை - பகைநீக்கும், கோபம் தவிர்க்கும்
23. தேங்காய்த்துருவல் - அரசுரிமை
24. திருநீறு - சகல நன்மையும் தரும்
25. அன்னம் - அரசுரிமை

26. சந்தனம் - சுகம், பெருமை சேர்க்கும்
27. பன்னீர் - சருமம் காக்கும்
28. கும்பஜலம் - பிறவிப்பயன் அளிக்கும்
29. சங்காபிஷேகம் - நலமெலாமளிக்கும்





Source: Sage of Kanchi

Balaji
 
நம்பக்கூடிய 7 அதிசய உண்மைகள்....!

நம்பக்கூடிய 7 அதிசய உண்மைகள்....!

1. வைரம் ...!

வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும் . இது எங்கிருந்து கிடைக்கிறது என்று தெரியுமா. ஆம் பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப்போன நிலக்கரியில் இருந்து தான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது. ஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக்கிறது என்பது எத்தைனை பேருக்கு தெரியும். அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மையில் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள். ஆனால் பூமிக்கு அடியில் 90 மையில் தொலைவில் தான் இந்த வைரம் இருக்கும். 2 மையில் தெலைவில் வெறும் நிலக்கரி மட்டுதான் கிடைக்கும்.

2. வௌவால்

வௌவால் ஒரு வித்தியாசமான உயிரினம் இவைகளுக்கு கண்கள் இல்லை என்பது உண்மைதான் . ஆனால் இந்த உரினத்தால் பார்க்கவும் முடியும் . இவைகள் தங்கள் மீஒலி எனப்படும் சத்தத்தை எழுப்பி அதன் மூலம் தனக்கு எதிரில் என்ன பொருள்கள் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளும் தன்மை கொண்டது.

3.எம்பயர் ஸ்டேட்

எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். பலர் கூறுவது என்னவென்றால் இந்த கட்டிடத்தின் உயரத்திலிருந்து ஒரு நாணயத்தை ஒருவர் மீது எரிந்தால் அந்த நாணயம் அவரை கொன்றுவிடும் என்பதாகும். ஆனால் இது தவறான கூற்று ஏனெனில் கட்டிடத்தின் உயரத்திலிருந்து விழும் நாணயத்தின் வேகத்தின் அளவானது 1 மணி நேரத்திற்க்கு 50 மைல் தொலைவு என்ற வேகத்தில் தான் விழும் . அதானல் இந்த வேகத்தினால் ஒருவரை கொல்ல முடியாது.

4.சுத்தமான தண்ணீர்

சுத்தமான தண்ணீரில் அவ்வளவாக மின்சாரம்பாயாது . ஆனால் தண்ணீரில் நின்று மின்சாரக் கம்பியய் பிடித்தால் மின்சாரம் பய்கிறதே அது ஏன் என்று கேட்க்கலாம். பொதுவாக தண்ணீரில் பல வகையான மினரல்கள் மற்றும் அழுக்குகள் படிந்திருப்பதால் அதில் மின்சாரம் பாய்கிறது. ஆனால் சுத்தமான நீரில் இப்படிப்பட்ட தாதுக்கள் இல்லாதிருப்பதால் மின்சாரம் பாய்வதில்லை.

5 மருக்கள்

மனிதனின் மருக்கள் உருவாகக் காரணம் தவளைகள் மற்றும் தேரைகள் என்று பலரும் கருதுகின்றனர் இது தவறான கூற்றாகும். இதற்க்கு காரணம் தேரைகள் அல்ல மனிதர்கள் தான் மருக்கள் இருக்கின்ற ஒருவரிடம் கைகளைக் குலுக்கினால் இவ்வாறான மருக்கள் தோன்றும் என்று அறிவியல் அறிஞர்கள் பலர் கூறியுள்ளார்கள்.

6. தீக்கோழி

தீக்கோழியை யாராவது அச்சுறுத்தினால் அவற்றின் தலையை மணலில் புதைத்துக்கொள்ளும் என்று சிலர் கூறுவார்கள். ஆனால் அவற்றினை அச்சுறுத்தினால் அவைகள் இறந்தவைகளைப் போல செயல்பட்டு தப்பிக்க முயலுமாம்.

7.மனித இரத்தம்.

மனிதன் இறந்த பின்பு மனித இரத்தம் பார்ப்பதற்க்கு நீலமாகவோ அல்ல அடர்ந்த சிவப்பு நிறமாகவோ இருக்காது. ஆனால் தோலின் வழியாக பார்த்தால் இரத்தமானது எப்பொழுதும் நீல நிறமாகவே காட்சியளிக்கும்


social services: ??????????? 7 ????? ????????
 
செல்வம் நிலைக்க-தரித்திரத்தை தவிர்க்க,

செல்வம் நிலைக்க-தரித்திரத்தை தவிர்க்க,


1,ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.


2,செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.

3,வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

4,இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.

5,எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.

6,,வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.

7,அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.
துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.
உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.

8,உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக
வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.

9,,ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.


10,வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.

11,சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.

12,தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.

13,பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.

14,செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.

15,சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.

16,காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்

17 தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.

18 ,விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.

19,விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். சரியா?

20,வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.
மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.
ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.

21எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.

22,எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.

23,வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.

24,எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

25எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.
சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.

26,தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.

27,குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.

28,அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.

29,பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.

அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது
வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.
இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.
வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.
பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.
மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.
விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.
விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.


30,கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம். பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.
துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.

31,பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.

32 ,சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.

அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.
அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது
நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.
பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.
சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.
ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.
பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.

33 தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.
பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது

34,செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.

35,செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.

36,நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும்.அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும்.எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும்.

37,ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் இல்லை;மாட்டேன்; இதுமாதிரியான அவச்சொல்லை எப்போதுமே பேசக்கூடாது.குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை 5மணி முதல் 7 மணி வரை இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவது முற்றிலும் தவறு.

38,வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட வேண்டும்.அலசியபின்னர், நமது வீட்டுப்பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.
ஒருபோதும் இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால்,எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான்.

39,குளிக்கும்போதும், தூங்கும் போதும் நிர்வாணமாக இருக்கக் கூடாது;அப்படி நிர்வாணமாக இருந்தாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.ஆணோ,பெண்ணோ சுய இன்பம் செய்யாமலிருப்பதும் அவசியம்.அடிக்கடி சுய இன்பம் செய்பவர்களின் வீடுகளிலிருந்து செல்வச் செழிப்பு தரும் கடவுளாகிய மகாலட்சுமி,புவனேஸ்வரி வெளியேறிவிட்டு,அவளின் மூத்த சகோதரியான மூதேவி வந்துவிடுவாள்.

40,எக்காரணம் கொண்டும் தம்பதியர் இரவில் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது.அப்படி செய்தால்,யாராவது ஒருவரை சூட்சும சக்திகள் பிடிக்கும்.அதன் விளைவாக இருவரில் யாராவது ஒருவர் அளவற்ற காம வெறியை அடைந்துவிடுவர்.குடும்பங்கள் நாசமடைவதற்கான முதல் காரணம் இதுதான்.

41,கரடு முரடான ராக் இசை முதலான மேற்கத்திய இசையை வீட்டில் அதிகமான அலறலுடன் ஒலிக்க வைப்பதாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.மெல்லிய இசை(சினிமா பாட்டாக இருந்தாலும் சரி;கர்னாடக இசையாக இருந்தாலும் சரி;மனோதத்துவ இசையாக இருந்தாலும் சரி)யை அடிக்கடி ஒலிக்கச் செய்வதன் மூலமாக செல்வ வளம் நம்மைத் தேடி வரும்.

42,மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் குப்பையை சேர்த்து வைத்தாலும் பண வரவு குறைந்துவிடும்.]
ஒரு ஆடையை இரண்டு தடவைக்கு மேல் அல்லது இரண்டு நாளுக்கு மேல் அடிக்கடி அணிந்தாலும் பண வரவு குறைந்துவிடும்

43,தினமும் வீட்டில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து,பின் வருமாறு வழிபாடு செய்து வருவதால் நமது நீண்டகால கடன்கள் தீர்ந்துவிடும்;வராக்கடன் வசூலாகும்.பணம் மிச்சமாகும்.அதே சமயம்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு கைவிட வேண்டும்.

44,தினமும் காலையில் காலைக் கடன்களை முடித்துவிட்டு,ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக அவரது மூலமந்திரத்தை 33 தடவை ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபிக்கும்போது சந்தன பத்தியை அவர் முன்பாக கொளுத்தியிருக்க வேண்டும். பசு நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு ஒரு மண்டலம் செய்தால்,பண ரீதியான சிக்கல்கள் தீரத்துவங்கும்.ஓராண்டு வரை வழிபட்டு வந்தால்,நமது வருமானம் நான்கு மடங்கு அதிகரிக்கும்;பண வரவும் நான்கு முதல் எட்டு மடங்கு அதிகரிக்கும்;ஓராண்டுக்கு மேலாக
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால்,ஒவ்வொரு ஆண்டும் நமது வருமானம் ,நான்கு மடங்கு முதல் எட்டு மடங்கு வரை அதிகரித்துக்கொண்டே செல்லும்.ஐந்தாண்டுக்கும் மேலாக ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால், ஆறாம் ஆண்டிலிருந்து தங்கம் நம்மிடம் சேரத் துவங்கும்.

45,தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.


இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.
அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். அன்னை திருமகளை வேண்டுகிறேன்
.



Source:crorepathy: ??????? ??????? ..


 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top