P.J.
0
கல்லும் இறைவனும்
கல்லும் இறைவனும்
ஒரு முறை புலவர் கீரன் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர், “பழனி போன்ற மலைக்கொயிலுக்கு ஏறும்போது கீழே உள்ள கல்லைப் ‘படி’ என்று மிதிக்கிறோம். ஆனால் அதே மாதிரி கல்லை ‘சாமி’ என எப்படி வழிபடச் சொல்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.
கீரன் அவரிடம் ஒரு கையில் வெற்று பேப்பரையும், மறுகையில் நூறு ரூபாயையும் கொடுத்து, ‘’இந்த இரண்டுமே பேப்பர்தான். இந்த வெற்றுக் காகிதத்தைக் கடையில் கொடுத்தால் எதுவும் வாங்க முடியாது. ஆனால் இந்த பேப்பரைக் (நூறு ரூபாயை) கடையில் கொடுத்தால் பல சாமான்கள் வாங்கலாம். ஏனெனில் இதில் நம் அரசாங்க முத்திரை உள்ளது. அதுபோல் வெறும் கல்லாக இருந்தால் மிதிபடுவதும், அதுவே கண், காது, மூக்கு, வாய், முகம், கை, கால் என்று உருவ அமைப்புகளுடன் இருந்து தெய்வ சாந்நித்தியமும் இருந்தால் அதைக் கடவுளாக வழிப்படுகிறோம்,’’ என்றார்.
Source: Dharma Seva FB