• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My Collections

Status
Not open for further replies.
63 நாயன்மார்கள்- இயற்பகை நாயனார்2

63 நாயன்மார்கள்- இயற்பகை நாயனார் 2

10351753_646917082065844_101466877500759543_n.jpg



எம்பெருமான் பல்வேறு திருவுருவங்களைத் தாங்கி, பல்வேறு சமயங்களுக்கு அருள் பாலிப்பது போல் சோழவள நாட்டிலே பாய்ந்து ஓடும் காவிரியாறும் பற்பல கிளைகளாகப் பிரிந்து பற்பல இடங்களுக்குப் பெருவளத்தை கொடுக்கிறது. இவ்வாறு பரந்து விரிந்து ஓடும் காவிரியாற்றில் ஒரு கிளை கடலோடு கலக்கிறது. அந்த இடம்தான் காவிரி சங்கமம் எனப்படும் பூம்புகார் பெருநகரம். இப்பெரு நகரத்தை தலைநகராகக் கொண்டு, அநபாய சோழனது குலத்தில் தோன்றிய மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். அக்கொற்றவனின் கொடி நிழலிலே சுபிட்சமாக மக்கள் வாழ்ந்து வந்தனர். அவ்வாறு வாழ்ந்து வந்தவர்களுள், வணிக குலத்தைச் சேர்ந்தோர் பலர் இருந்தனர்.

அவ்வணிகர் குலத்தில் சிவத்தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பற்றற்ற பரமஞானி ! தனது என்று உலகோர் பற்று கொள்ளும் பாச உணர்ச்சிகளுக்கு இவ்வடியார் பகையாயிருந்தார். அதனால் இவரை இயற்பகையார் என்று அனைவரும் அழைக்கலாயினர். இது காரணம் பற்றியே இவரது இயற்பெயர் இன்னதென்பது அறிய முடியாது போனது ! இயற்பகையார் என்ற பெயரே நிரந்தரமானது. இயற்பகையார் இறைவனிடம் ஈடில்லா பக்தி கொண்டிருந்தார். இயற்பகையாரும், அவர் தம் மனைவியாரும் இல்லறம் எனும் நல்லறத்தை இனிது நடத்தி வந்தனர். அடியாரைப் பேணுவதையே, தலைசிறந்த அறமாகக் கருதி, இயற்பகையார் சீரோடும், சிறப்போடும், நிறைவோடும் வாழ்ந்து வந்தார். தெய்வம் தொழாது கொழுநனையே தொழுதெழுவாள் என்ற குறளுக்கேற்ப வாழ்ந்து வந்த அவரது மனைவியும், இயற்பகையாரோடு சேர்ந்து கொண்டு திருநீரணிந்த மெய்புடை அன்பர்களுக்கு பாதபூசை செய்யத் தவறுவதே இல்லை.

வெள்ளி மாமலையை வீடெனக் கொண்ட தேவர்களின் தேவன் இவர்கள் பெருமையை உலகிற்கு உணர்த்தத் திருவுள்ளங் கொண்டார். அந்தணர் வேடம் தாங்கி, இயற்பகையார் இல்லத்திற்கு எழுந்தருளினார் எம்பெருமான் ! இயற்பகையார், அடியாரை வணங்கி வரவேற்று, ஆசனத்தில் அமரச் செய்தார். மனைவீ நீர் வார்க்க பாதங்களைத் தூய நீராட்டினார்; நறுமலர் தூவினார். அன்பர்க்கு அன்பரே ! இந்த ஏழையின் குடிசைக்கு தாங்கள் இன்று எழுந்தருளியிருப்பது அடியேன் செய்த பேறுதான் என்று பணிவோடு பகர்ந்தார் இயற்பகையார். உமது பக்திக்கு யாம் புளகாங்கிதம் அடைந்தோம். எம்போன்ற சிவனடியார்கள் யாசிப்பதை எல்லாம் இல்லை எனாது அள்ளிக்கொடுக்கும் பண்பினர் நீவிர் என்று கேள்விப் பட்டோம். யாம் விருப்பும் ஒன்றை உம்மிடமிருந்து பெற்றுப் போகலாம் என்றுதான் வந்தோம்.இந்த அடிமையின் கடமையே அதுதானே ! இந்த ஏழை, ஐயன் எதைக் கேட்பினும் மறுக்காமல் கொடுப்பேன் என்பது உறுதி.



அடியாராக வந்த முக்கண்ணன் முகம் மலர புன்னகை புரிந்தார். இயற்பகையாரை ஒரு முறை பார்த்துவிட்டு, அவர் அருகே நின்ற அவரது மனைவியாரையும் நோக்கிப் பின்னர் இயற்பகையாரிடம், கேட்டால் மறுக்க மாட்டீரே ? என்று திரும்பவும் கேட்டார். அணுத்துணையும் ஐயம் வேண்டாம் ஐயனே ! ஆணையிடுங்கள் அடியேன் செய்து முடிக்கிறேன் ! உம்மைப் பற்றித்தான் நான் நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேனே ! சொன்ன சொல் தவறாதவர் நீர் என்பது ! அடியார்களைப் பல வழிகளில் சோதிக்கப் புறப்பட்ட அருட்பெருஞ்சோதி, உம் மனைவியை அழைத்துப் போகவே யான் வந்தேன் என்றார். பரமன் மொழிந்ததைக் கேட்டு, இயற்பகையார் சற்றும் திகைப்படையவில்லை. மறுத்து ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை. அதற்கு மாறாக, முன்னிலும் மகிழ்ச்சி பொங்க கரம் கூப்பியவாறே, ஐயனே ! என்னிடம் உள்ள பொருளையே கேட்டீர்கள். உண்மையிலேயே தங்கள் அருளுக்கும் ஆசிக்கும் இந்த எளியோன் அடிமை என்றார்.

இயற்பகையார், சிவனடியார்களிடத்துக் கொண்டுள்ள பக்தி நிலையைத்தான் என்னென்பது? மனைவியைக் கொடுக்கலாமா ? கொடுத்தால் என்ன நேருமோ ? என்ற அச்சம் அவர் தம் நெஞ்சத்தைக் கொஞ்சமும் தீண்டவில்லை. நல்ல உறக்கத்தில் இருப்பவன், கையில் இருக்கும் எத்தகைய விலை <உயர்ந்த பொருளையும் நழுவ விடுவதுபோல், இயற்பகையார் தன்னை மறந்த பக்தி நிலையில் மனைவி என்பதையும் மறந்து அடியார்க்கு அளித்த ஆற்றலைத்தான் என்னவென்பது ! பக்தி என்றால் இதுவன்றோ பக்தி ! இயற்பகையாரின் மனைவியார், கணவரின் விருப்பப்படி அம்மையப்பரின் திருவடியை வணங்கி நின்றாள். அடுத்தது யாம் யாது செய்தல் வேண்டும் ? என்று இயற்பகையார் கேட்டார். உனது மனைவியை அழைத்துச் செல்வதால் உன் சுற்றத்தார் என் மீது வெறுப்பு கொள்ளலாம். அதனால் இம் மங்கையோடு இவ்வூர் எல்லையை கடக்கும் மட்டும் என்னுடம் துணையாக வருதல் வேண்டும் எனக் கேட்டார் எம்பெருமான். அப்படியே ஆகட்டும், பெரியவரே ! இப்பணி எனக்கு கிட்டியதுதான் எத்துணைச் சிறப்புடையது என்று விடை பகர்ந்தார். வேகமாக உள்ளே சென்றார் நாயனார். போர்க்கோலம் பூண்டு வாளும், கேடயுமும் ஏந்தி வெளியே வந்தவர், மாதொரு பாகனையும் தமது மனைவியையும் முன்னே போகச் செய்து, அவர்களுக்குத் தக்க துணையாகப் பின்னே வீர நடைபோட்டுப் புறப்பட்டார். இச்செய்தியைக் கேட்டு ஊரார் வெகுண்டனர். வில், வாள், வேல், சரிகை, முதலிய படைக்கருவிகளைத் தூக்கிக்கொண்டு ஆர்த்து எழுந்தனர்.



வணிக குலத்திற்கே மாசு கற்பித்து விட்டாரே இயற்பகையார் என்று பொருமினர்; தூற்றினர்; ஊர்ப் பெரியவர்கள். அஞ்சவில்லை இயற்பகையார் ! வெஞ்சினம் கூறினார். அவர்கள் கொதித்து எழுந்தனர். இவர்களிடையே போர் மூண்டது. இயற்பகையாரின் வீரம் விளையாடியது. எதிரிகளின் பலம் சிதறியது - சிதைந்தது சின்னபின்னமானது ! திசைக்கொருவராய் ஓடி ஒளிந்தனர். இயற்பகையார் அனைவரையும் வென்றார். உய்ந்தேன் என்று அடியாரை வணங்கி அஞ்சாமல் முன்போல் அடி எடுத்து வைப்பீர்களாக என்று கேட்டுக்கொண்டார். பிறகு மூவரும் அவ்வூரின் எல்லையில் அமைந்துள்ள சாய்க்காட் என்னும் இடத்தை எவ்வித ஆபத்துமின்றி அடைந்தனர். அவ்விடத்திற்கு வந்ததும் யோகியார், இனிமேல் நீ திரும்பலாம் என்று இயற்பகையாருக்குக் கட்டளையிட்டார். வணிகர் குலமகனும் யோகியாரின் மலரடிகளில் வீழந்து வணங்கி அருள் பெற்று வந்த வழியே திரும்பினார்.


செய்தற்கரிய அரும் பெரும் தியாகத்தைச் செய்து திரும்பும் தொண்டரது செவிகளில் விழுமாறு, இயற்பகையாரே ! ஓலம் ! ஈண்டும் நீ வருவாய் ஓலம் ஓலம் என்று யோகியார் கூவி அழைத்தார். அடியாரின் ஓலக்குரலைக் கேட்டு இயற்பகையார் வந்தேன் அடியேன் ! மீண்டும் தங்களைத் துன்புறுத்த வருவோரை இவ்வாளால் தடுப்பேன் என்று உரக்கக் கூறியபடியே சிவனார் குரல் கொடுத்த திசை நோக்கி விரைந்தார். அப்பொழுது வேதியர் வடிவில் வந்த மறையவர் மறைந்தார் ! தமது மனைவி மட்டும் நிற்பதைக் கண்டார் ! நாயனார் யோகியாரைக் காணாமல் திகைத்தார் ! அப்பொழுது வானத்து வீதியிலே ஞானத்து வேத முதல்வோன், உமையாளுடன் விடையின் மேல், அற்புதமான அருட்பöருஞ் சோதியாகத் திருத்தொண்டருக்குக் காட்சி கொடுத்தார். கண்டதும் சிவத்தொண்டர் நிலத்தில் வீழ்ந்தார். எழுந்தார். கரம் குவித்துச் சிரம் தாழ்த்தி வணங்கினார். அவர் தம் அருங்குண மனைவியாரும் கணவரோடு சேர்ந்து வணங்கினார்கள். எம்பெருமான் அவர்களைத் திருநோக்கம் செய்து, அன்பனே ! உன் எல்லையற்ற அன்பின் திறத்தைக் கண்டு புளகாங்கிதம் அடைந்தோம். பாரே வியக்கும் வண்ணம் பரமனிம் பெரும் பக்தி பூண்ட தொண்டனே ! நீயும் உன் கற்புடைச் செல்வியும் பூவுலகில் பன்னெடுங் காலம் வாழ்ந்து பின்னர் நம்பால் வந்து அணைவீர்களாக என்று திருவாய் மலர்ந்து அருளி மறைந்தார். இயற்பகையார் மனைவியுடன் இல்லத்திற்குத் திரும்பினார். எம்பெருமானின் அற்புத திருவிளையாடலைப் பற்றி <உணர்ந்த ஊர் மக்கள் இயற்பகையாரின் பக்திக்கு அடிபணிந்தார்கள். இயற்பகையார் எல்லோராலும் தொழுதற்குரிய மகான் ஆவார். இயற்பகையார் மனைவியுடன் பல்லாண்டு காலம் இன்புற்று வாழ்ந்தார்.


குருபூஜை: இயற்பகையார் நாயனாரின் குருபூஜை மார்கழி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்.


Iyarpagai Nayanar | 63 Nayanmars | ??????? ???????

Nagarathar
 
சுயதரும வாதம்

சுயதரும வாதம்

“அர்ச்சுனா, உன்னுடய சுயதருமம் க்ஷத்திரியனுக்குகந்த தருமப்போர் தான். இப்போருக்காக நீ பல ஆண்டுகள் தவமிருந்திருக்கிறாய். போரிலிருந்து பின்வாங்குவது உனக்கு ஒவ்வாத ஒன்று.” ‘சுயதருமமும் உன் சுபாவமும் விதிக்கும் க்ஷ்த்திரிய தருமத்தில் குறை இருந்தாலும் அதைக் கைவிடாதே. எந்தச் செய்கையிலும் நெருப்புக்குப் புகைபோல் ஏதாவதொரு குறை இருக்கத்தான் செய்கிறது’.(18-48)


‘பிறிதொருவனுடைய கடமையை ஏற்று அதை நன்றாகச் செய்தாலும் அதைவிடச் சிறந்தது தன்னுடைய கடமையில் ஈடுபட்டிருப்பதே. அது முறையாக ஆற்றப்படாவிடினும் அதுவே சிறந்தது’ (3-35). ‘சுபாவத்தினால் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதில் பாவம் சம்பவிப்பதில்லை’ (18-47).
இந்த சுயதருமப் பார்வை எப்படி மற்ற வாதங்களுடன் ஒழுங்காகவும் தர்க்க ரீதியாகவும் பிணைக்கப் படுகின்றது


கர்ம யோகம்


இது கர்ம யோகம் என்று பெயர் கொண்ட புரட்சி மிகுந்த உபதேசம். எளிதில் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடியது. ‘ஒவ்வொரு மனிதனும் செய்யவேண்டிய கடமைகள் பல. அவைகளைச் செய்வதில் விருப்போ அல்லது வெறுப்போ ஒரு பிரச்சினை ஆகக்கூடாது. கடமையைக் கடமைக்காகவே செய்ய வேண்டும். கடமையைச் செய்வதற்குத் தான் உனக்கு அதிகாரம். அவை என்ன பயன் தருகிறதோ, தருமோ என்ற பிரச்சினை உன்னை எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது. பயனுக்காகவோ அல்லது பயனை விரும்பியோ, வெறுத்தோ செயலில் ஈடுபடுவது உன்னை கட்டுப்படுத்தும். இந்தப்போர் உன்னுடைய கடமைகளில் ஒன்று. இதை ஆசையோ, நிராசையோ, கோபமோ தாபமோ இல்லாமல், ஆனால் அலட்சியமும் இல்லாமல், நன்றாகவே செய்யவேண்டும்’. ‘உனது செயல்களை யெல்லாம் எனக்கு அர்ப்பணித்து விட்டு என்னில் நிலைத்த மனதுடன், பயனில் பற்றற்று, அகங்காரத்தை விட்டு, மனக் கொதிப்பில்லாமல் போரிடு’ (3 – 30).


கீதை 2வது அத்தியாயம் 39 வது சுலோகத்திலிருந்து 5வது அத்தியாயம் முடியும் வரை இதை கர்ம யோகம் என்ற ஒரு உயரிய யோக நூலாக விவரிக்கப்படுகிறது.


பக்திப் பார்வை


‘எல்லாம் வல்ல இறைவன் நான். என்னை நம்பு. நீயாகச்செய்வது ஒன்றுமே இல்லை. என்னையன்றி ஓரணுவும் அசையாது.’ 11 வது அத்தியாயத்தில் தன் விசுவ ரூபத்தைக் காட்டிவிட்டு கண்ணன் சொல்கிறான்: ‘இவர்களெல்லாம் என்னால் ஏற்கனவே கொல்லப்பட்டவர்களே. நீ என் கருவி மட்டும் தான்.’ (11–33). ‘உன் செயல்களை யெல்லாம் எனக்காகச் செய். இவ்வுலகிலும் சரி, அவ்வுலகிலும் சரி. நான் உன்னுடன் இருப்பேன்.’ என்று கண்ணன் தன்னை ஆண்டவனாகவே வைத்துப் பேசுவதாக இந்தப் பகுதி உள்ளது.இது எல்லாம் ஈசன் செயல் என்ற பக்தி வாசகத்தை ஆதாரமாகக் கொண்டு எடுத்தாளப்பட்ட வாதம் என்கிற கருத்தும் உண்டு.

??????????????
 
Legend of Tirumala

Legend of Tirumala


220px-Lord_Balaji_only_at_Parashakthi_Temple.jpg




According to the Tirumala sthala Purana, the legend of Venkateswara's Avatar (incarnation) is as follows:



Once, some rishis headed by Kasyapa began to perform a sacrifice on the banks of the Ganges. Sage Narada visited them and asked them why they were performing the sacrifice and who would be pleased by it. Not being able to answer the question, the rishis approached Sage Bhrugu, who according to the Vedas, is believed to have an extra eye in the sole of his foot.

To reach a solution after a direct ascertainment of reality, Sage Bhrigu first went to Satyaloka, the abode of Lord Brahma. At Satyaloka, he found Lord Brahma reciting the four Vedas in praise of Lord Narayana, with each of his four heads, and attended upon by Saraswati. Lord Brahma did not take notice of Bhrigu offering obeisance. Enraged, Bhrigu cursed Lord Brahma that he shall have no idols or temples of worship in Bhooloka and left Satyaloka for Kailasa, the abode of Lord Shiva. At Kailasa, Bhrigu found Lord Shiva deep in meditation with Parvati by his side. Bhrigu called out to Lord Shiva with no response from the Lord. Enraged with the disregard of his presence, Bhrigu cursed Lord Shiva that he shall have only stone idols Linga in Bhooloka (Since Lord Shiva was so deep in meditation like a rock) and then left for Vaikuntha, the abode of Lord Vishnu.



At Vaikuntha, Lord Vishnu was reposing on Adisesha with Sri Mahalakshmi in service at His feet. Finding that Lord Vishnu also did not notice him, the sage was infuriated and kicked the Lord on His chest, the place where Mahalakshmi resides. Vishnu, in an attempt to pacify the sage, got hold of the legs of the sage and started to press them gently in a way that was comforting to the sage. During this act, he squeezed the extra eye that was present in the sole of Bhrigu's foot. The extra eye is believed to represent the sage's egotism. The sage then realized his grave mistake and apologized to Vishnu. Thereupon, the sage concluded that Lord Vishnu was the most supreme of the Trimurti and told the rishis the same.


Sri Mahalakshmi was angered by the action of Her Lord in apologizing to Bhrigu who committed an offense. Out of anger and anguish, She left Vaikuntha and resided in Karavirapur now known as Kolhapur. After the departure of Mahalakshmi, a forlorn Lord Vishnu left Vaikunta, came down to Earth, and took abode in an ant-hill under a tamarind tree, beside a pushkarini on the Venkata hill, meditating for the return of Lakshmi, without food or sleep.


Taking pity on Lord Vishnu, Brahma and Maheshwara decided to assume the forms of a cow and its calf to serve Him. Surya, the Sun god, informed Mahalakshmi of this and requested Her to assume the form of a cowherdess and sell the cow and calf to the king of the Chola country. The king of the Chola country bought the cow and its calf and sent them to graze on the Venkata Hill along with his herd of cattle.

Discovering Lord Vishnu on the ant-hill, the cow provided its milk, and thus fed the Lord. Meanwhile, at the palace, the cow was not yielding any milk, for which the Chola Queen chastised the cow herder severely. To find out the cause of lack of milk, the cow herder followed the cow, hid himself behind a bush and discovered the cow emptying her udder over the ant-hill. Angered by the conduct of the cow, the cow herder aimed a blow with his axe on the head of the cow. However, Lord Vishnu rose from the ant-hill to receive the blow and save the cow. When the cow herder saw the Lord bleed at the blow of his axe, he fell down and died of shock.



The cow returned to the Chola King, bellowing in fright and with blood stains all over her body. To find out the cause of the cow's terror, the King followed her to the scene of the incident. The King found the cow herder lying dead on the ground near the ant-hill. While he stood wondering how it had happened, Lord Vishnu rose from the ant-hill and cursed the king saying that he would become an Asura because of the fault of his servant. The king pleaded innocence, and the Lord blessed him by saying that he will be reborn as Akasa Raja and that the curse would end when the Lord will be adorned with a crown presented by Akasa Raja at the time of His marriage with Padmavati. With these words, the Lord turned into stone.



Thereafter, Lord Vishnu, also known by the name of Srinivasa, decided to stay in Varaha Kshetra and requested Sri Varaha swami to grant Him a site for His stay. His request being readily granted, Srinivasa ordained that a pilgrimage to His shrine would not be complete unless it is preceded by a bath in the Pushkarini and darshan of Sri Varaha swami and that pooja and naivedya should be offered to Sri Varaha swami first. Vishnu built a hermitage and lived there, attended to by Vakuladevi who looked after Him like a mother.



A while later, a King named Akasa Raja who belonged to the Lunar race, came to rule over Tondamandalam. Akasha Raja had no heirs, and therefore, he wanted to perform a sacrifice. As part of the sacrifice, he was ploughing the fields when his plough turned up a lotus in the ground. On examining the lotus, the King found a female child in it. The king was happy to find a child even before he performed a sacrifice and carried it to his place and gave it to his Queen to tend to it. At that time he heard an aerial voice which said "O King, tend it as your child and fortune will befall you". As she was found in a lotus, the king named her Padmavati. She grew up as a princess into a beautiful maiden and was attended by a host of maids.



One day, Lord Srinivasa, who was hunting, chased a wild elephant in the forests surrounding the hills. In the elephant's pursuit, the Lord was led into a garden, where Princess Padmavati and her maids were picking flowers. The sight of the elephant frightened the Princess and her maids. But the elephant immediately turned around, saluted the Lord and disappeared into the forest. Lord Srinivasa, who was following on horse back, saw the frightened maidens, but was repulsed with stones thrown at Him by the maids. He returned to the hills in haste, leaving His horse behind. The Lord informed Vakuladevi that unless He married Princess Padmavati, He would not be calmed.


The Lord then narrated the story of Padmavati’s previous birth and His promise to marry her. After listening to Srinivasa's story of how he had promised to marry Vedavati in her next birth as Padmavati, Vakuladevi realized that Srinivasa would not be happy unless He married her. She offered to go to Akasha Raja and his queen and arrange for the marriage. On the way she met the maids of Padmavati returning from a Shiva Temple. She learnt from them that Padmavati was also pining for Srinivasa. Vakuladevi went along with the maid servants to the Queen.


Meanwhile, Akasa Raja and his Queen Dharanidevi were anxious about the health of their daughter, Padmavati. They learnt about Padmavati's love for Srinivasa of Venkata Hill. Akasa Raja consulted Brihaspati about the marriage and was informed that the marriage was in the best interest of both the parties. Kubera lent money to Lord Srinivasa to meet the expenses of the marriage. Lord Srinivasa, along with Lord Brahma and Lord Shiva started the journey to the residence of Akasha Raja on his vahana Garuda. At the palace entrance, Lord Srinivasa was received by Akasha Raja with full honors and taken in procession on a mounted elephant to the palace for the marriage. In the presence of all the Devas, Lord Srinivasa married Princess Padmavati, thus blessing Akasa Raja. Together, they lived for all eternity while Goddess Lakshmi, understanding the commitments of Lord Vishnu, chose to live in his heart forever.



Venkateswara's temple, today is located at the top of the Seven hills in Tirumala. It stands as a special place, commemorating the marriage between the two. Everyday, a kalyana utsavam celebrates the divine union in a celebration that stretches to eternity. Even today, during the Brahmotsavam at the temple, turmeric, kumkum and a sari are sent from the temple to Alamelu Mangapuram, the abode of Padmavati.


Venkateswara - Wikipedia, the free encyclopedia
 
சிவபெருமானின் 19 அவதாரங்கள்!


[h=2]சிவபெருமானின் 19 அவதாரங்கள்![/h]


சிவபெருமானின் 19 அவதாரங்கள்! –
விஷ்ணு பெருமானின் தசாவதாரம் அல்லது 10 அவதாரங்களை பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் சிவபெருமானுக்கும் அவ தாரங்கள் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? சொல்லப் போனால் சிவபெருமான் 19 அவதாரங்களை கொண்டுள்ளார். அவதாரம் என்றா ல் கடவுள் வேண்டுமென்றே பூமியி ல் மனிதனாக அவதரிப்பது. மனிதர் களை காப்பாற்ற தீமையை அழிக்க வே அவதாரம் எடுப்பதன் முக்கிய நோக்கமாகும்.

சுவாரஸ்யமான வேறு: ருத்ராட்சை பற்றிய சுவாரஸ்யமான

தகவல்கள் !!!
images



சிவபெருமா
னை பற்றி பார்க்கையில், வெகு சிலருக் கே அவரின் 19 அவதாரங்கள் பற்றி தெரியும். சிவபெரு மானின் ஒவ்வொரு அவதாரமும் சிறப்பு முக்கியத்து வத்தை கொண்டுள்ளது. அவரின் இந்த 19 அவதாரங் களுக்கும் குறிப்பிட்ட காரணங்கள் இருந்தது. அதன் உட்சபட்ச நோக்கம் மனித இனத்தின் நலனே.


அவதாரம் 1 – பிப்லாட் அவதாரம்


தாதிச்சி துறவியின் வீட்டில் பிப்லாட்டாக பிறந்தார் சிவபெருமா ன். ஆனால் பிப்லாட் பிறப்பதற்கு முன்பாகவே அத்துறவி அவர் வீட்டை விட்டு சென்றார். சனி திசையின் இருக்கை நிலை சரியி ல்லாமல் இருந்ததால் தன் தந்தை வீட்டை விட்டு வெளியேறி னார் என்பதை பிப்லாட் வளரும் போது தெரிந்து கொண்டான். அதனால் சனியை பிப்லாட் சபித்து, தன் விண்ணக இருப்பிடத்தில் இருந்து சனி கிரகத்தை விழச் செய்தான். பின்னர் 16 வயது ஆவ தற்கு முன்பாக யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற நிப ந்தனையோடு சனியை மன்னித்தான். அதனால் பிப்லாட் வடிவி லான சிவபெருமானை தரிசித்தால் நம்மை பிடித்த சனி தோஷம் நீங்கும் என்று நம்பப்படுகிறது.



அவதாரம் 2 – நந்தி அவதாரம்


images



நந்தி என்ற பெரிய காளை தான் சிவபெருமானின் ஏற்ற மாகும். சிவபெருமானை நந்தி வடிவில் இந்தியாவில் பல இடங்களில் தரிசித்து வருகின்றனர். மந்தைகளின் பாதுகாவலனாக சிவபெரு மானின் நந்தி அவதாரம் பார்க்கப்படுகிறது. நான்கு கைகளை கொண்ட காளை யாக அவர் தீட்டப்பட்டுள்ளா ர். கோடரி மற்றும் மானை இரண்டு கைகள் கொண்டிருக்கும். மற்ற இரண்டா கை கள் ஒன்றாக சேர்த்திருக்கும்.


அவதாரம் 3 – வீரபத்திர அவதாரம்


டக்ஷ்ணா யாகத்தில் சதி தேவி தன்னை பலியாக்கி கொண்டதா ல், சிவபெருமான் கடும் கோபத்திற்கு ஆளானார். தன் தலையில் இருந்து சிறிது முடியை எடுத்து அதனை தரையில் போட்டார். அதிலிருந்து பிறந்தவர்கள் தான் வீரபத்திரர் மற்றும் ருத்ரகாளி. சிவபெருமானின் கடுமையான அவதாரம் இதுவே. மூன்று கடுஞ் சின கண்களோடு, எலும்பு கூடு மாலை அணிந்து பயங்கரமான ஆயுதங்களை கொண்டிருக்கும் கருமையான கடவுளாக அவர் சித்தரிக்கப்பட்டுள்ளார். சிவபெருமானின் இந்த அவதாரம், யாகத் தில் டக்ஷ்ணாவின் வெட்டுண்ட தலையை கொண்டிருக்கும்.


அவதாரம் 4 – பைரவ அவதாரம்


பிரம்மனுக்கும் விஷ்ணுவிற்கும் யார் சிறந்தவர்கள் என்ற சண் டை எழுந்த போது, சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார். தன் உயர்வானநிலையை பிரம்மன் மறைத்த போது, சிவபெருமா ன் பைரவ வடிவத்தை எடுத்து பிரம்மனின் ஐந்தாவது தலையை துண்டித்தான். துண்டித்த பிரம்மனின் தலை பார்த்த போது, ஒரு பிராமணனை கொன்ற குற்ற உணர்வு சிவபெருமானுக்கு ஏற்பட் டது. அதனால் 12 வருடத்திற்கு ஒரு பிக்ஷாடனாவாக, பிரம்மனின் மண்டை ஓட்டை சுமந்து அவர் அவர் சுற்றி திரிய வேண்டி இருந் தது. இந்த வடிவத்தில் அனைத்து சக்தி பீடத்தையும் சிவபெருமா ன் காத்து வந்தார் என்று நம்பப்படுகிறது.


அவதாரம் 5 – அஸ்வத்ஹமா


பாற்கடலை கடைந்த போது, சிவபெருமான் கொடிய நஞ்சை உட் கொண்ட நேரத்திகுள்நேரத்தில், அந்த நஞ்சு அவர் தொண்டையி ல் எரியத் தொடங்கியது. சிவபெருமானின் உள்ளிருந்த விஷ் புரு ஷ் வெளிவந்தது. அதற்கு கடவுள் ஒரு வரத்தையும் அளித்தார். அதன் படி, பூமியில் துரோணரின் மகனாக பிறந்து எதிர்த்து நின்ற அனைத்து சத்ரியர்களையும் கொள்வான் விஷ் புருஷ். அதனால் அஸ்வத்ஹமாவாக பிறந்தான் விஷ் புருஷ்.


அவதாரம் 6 – ஷரபா அவதாரம்


ஷரபா வடிவத்திலான சிவபெருமான் பாதி பறவையாகவும் பாதி சிங்கமாகவும் இருப்பார். சிவ புராணத்தின் படி, விஷ்ணுவின் பாதி சிங்க அவதாரமான நரசிம்மரை அடக்க ஷரபா வடிவத்தை எடுத்தார் சிவபெருமான்.


அவதாரம் 7 – க்ரஹபதி அவதாரம்


விஸ்வனார் என்ற பிராமணரின் வீட்டில் அவரது மகனாக பிற ந்தார் சிவபெருமான். அவருக்கு க்ரஹபதி என பெயரிட்டார் விஸ் வனார். க்ரஹபதிக்கு 9 வயதான போது, அவர் இறக்க போகிறார் என்று அவரது பெற்றோரிடம் தெரிவித்தார் நாரதர். அதனால் மர ணத்தை ஜெயித்திட காசிக்கு சென்றான் க்ரஹபதி. அங்கே சிவ பெருமானிடம் ஆசி பெற்றதால் மரணத்தை ஜெயித்தான் க்ரஹப தி.


அவதாரம் 8 – துர்வாசா


அண்ட சராசரத்தில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க இந்த வடிவத் தை எடுத்தார் சிவபெருமான். துர்வாசா என்பவர் முன் கோபத்தி ற்கு பெயர் போன மிகப்பெரிய துறவியாவார்.


அவதாரம் 9 – அனுமான்


குரங்கு கடவுளான அனுமானும் கூட சிவபெருமானின் ஒரு அவ தாரமாகும். ராமர் வடிவில் இருந்த விஷ்ணுவிற்கு சேவை புரிந் திடவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்துள்ளார்.


அவதாரம் 10 – ரிஷப அவதாரம்


பாற்கடல் கடைதலுக்கு பிறகு, கீழோகத்திற்கு சென்றார் விஷ் ணு பகவான். அங்கே ஒரு அழகிய பெண்ணின் பார்த்து மயங்கி னார். அங்கே தங்கியிருந்த போது விஷ்ணு பகவானுக்கு பல மகன்கள் பிறந்தனர். ஆனால் அவரின் அனைத்து குழந்தைகளும் அசுரத்தனத்துடன் கொடியவர்களாக இருந்தனர். அனைத்து கட வுள்களையும் மனிதர்களையும் ஒரே மாதிரியான தொல்லைக ளை அளித்து வந்தனர். அப்போது சிவபெருமான் காளை அல்லது ரிஷப வடிவத்தை எடுத்து விஷ்ணு பகவானின் அனைத்து கொடி ய மகன்களையும் கொன்றார். காளையுடன் சண்டையிட விஷ் ணு பகவான் வந்த போது அது சிவபெருமானின் அவதாரம் என் பதை அவர் உணர்ந்து அவர் இடத்திற்கே சென்று விட்டார்.


அவதாரம் 11 – யாதிநாத் அவதாரம்


ஒரு முறை ஆஹுக் என்று பழங்குடியை சேர்ந்த ஒருவன் வாழ்ந் து வந்தான். அவனும் அவன் மனைவியும் தீவிர சிவ பக்தர்கள் ஆ வார்கள். ஒரு முறை யாதிநாத் வடிவில் சிவபெருமான் அவர்க ளை சந்தித்தார். இரண்டு பேர் மட்டுமே இருக்க கூடிய சின்ன குடி சையில் அவர்கள் இருந்ததால், விருந்தாளியை உள்ளே தங்க வைத்து தான் வெளியே படுக்க தீர்மானித்தான் ஆஹுக். ஆனால் துரதிஷ்டவசமாக அன்று இரவு ஒரு வனவிலங்கால் கொல்லப் பட்டான் ஆஹுக். மறுநாள் காலை, ஆஹுக் இறந்திருப்பதை கண்டு அவன் மனைவியும் சாக நினைத்தால். அப்போது தன் உண்மையான ரூபத்தை வெளிக்காட்டிய சிவபெருமான் அவளு க்கு ஒரு வரமளித்தார். அதன் படி, அவளும் அவள் கணவனும் நளன் மற்றும் தமயந்தியாக மீண்டும் பிறப்பார்கள். அவர்களை சிவபெருமானே சேர்த்து வைப்பார்.



அவதாரம் 12 – கிருஷ்ண தர்ஷன் அவதாரம்


ஒருவர் வாழ்க்கையில் யாகம் மற்றும் சடங்குகளின் முக்கியத் துவத்தை உணர்த்தவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடு த்தார்.


அவதாரம் 13 – பிக்ஷுவர்யா அவதாரம்


அனைத்து விதமான ஆபத்துகளில் இருந்து மனித இனத்தை காக் கவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.


அவதாரம் 14 – சுரேஷ்வர் அவதாரம்

தன் பக்தர்களை சோதிக்க இந்திரன் வடிவை ஒரு முறை எடுத் தார் சிவபெருமான். அதனால் தான் அவரை சுரேஷ்வர் என்று அழைக்கிறோம்.


அவதாரம் 15 – கீரத் அவதாரம்


அர்ஜுனன் தவத்தில் இருந்த போது கீரத் அல்லது வேட்டைக்கா ரன் வடிவை எடுத்தார் சிவபெருமான். அர்ஜுனனை கொல்ல மூக் கா என்ற அரக்கனை அனுப்பி வைத்தார் துரியோதனன். காட்டுப் பன்றி போல் தன்னை மாற்றிக்கொண்டான் மூக்கா. ஆழ்ந்த தியா னத்தில் இருந்த அர்ஜுனனின் கவனம் ஒரு பெரிய சத்தத்தால் சிதறியது. அவன் கண்ணை திறந்து மூக்காவை பார்த்தான். அந்த காட்டுப்பன்றியை அர்ஜுனனும் கீரத்தும் தங்களின் அம்புகளால் வீழ்த்தினார்கள். பின் யார் அந்த காட்டுப்பன்றியை முதலில் வீழ் த்தியது என்ற சண்டை கீரத்திற்கும் அர்ஜுனனுக்கும் பிறந்தது. கீர த் வடிவில் இருந்த சிவபெருமானை சண்டைக்கு வரச்சொல்லி சவால் விசுத்தான் அர்ஜுனன். அர்ஜுனின் வீரத்தை கண்டு மகி ழ்ந்த சிவபெருமான் அவனுக்கு தன்னுடைய பஷுபதா ஆயுதத்தை பரிசளித்தார்.


அவதாரம் 16 – சுண்டன்டர்கா அவதாரம்


திருமணத்தின் போது பார்வதி தேவியின் தந்தை ஹிமாலயாவி டம் பார்வதியின் கரத்தை பிடிக்க அவர் இந்த அவதாரத்தை எடு த்தார்.


09-1397024321-18-shiva3.jpg



அவதாரம் 17 – பிரமச்சாரி அவதாரம்


சிவபெருமானை கணவனாக அடைய சிவனை பிரார்த்தனை செய்த பார்வதி தேவியை சோதிக்க இந்த அவதாரத் தை எடுத்தார் சிவபெருமான்.


அவதாரம் 18 – யக்சேஷ்வர் அவதாரம்


கடவுள்கள் மனதில் குடிகொண்டிருந்த போலியான அகங்காரத் தை ஒழிக்கவே இந்த அவதாரத்தை எடுத்தார் சிவபெருமான்.


அவதாரம் 19 – அவதுட் அவதாரம்


இந்திரனின் இறுமாப்பை அழிக்கவே இந்த அவதாரத்தை எடுத்தா ர் சிவபெருமான்.
- அசோக் சி.ஆர்.




21 | April | 2014 | ?? ?? 2 ?? ?? ?? ? ??-(?-?)- V i d h a i 2 V i r u t c h a m (A-B)
 
வீடுகளில் மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?

வீடுகளில் மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?

TN_20140603170119844568.jpg



மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும். இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.

மாவிலைத் தோரணம் லட்சுமி கடாட்சத்தையும், மங்கலத்தையும் குறிப்பதாகும். கோயில், பெரியவீடுகளின் நிலைக்கதவில் கஜலட்சுமியை சிற்பமாக வடித்து வைத்திருப்பர். சுபவிஷயம் வீட்டில் நடக்கும் போது நிலைக்கதவில் இருக்கும் திருமகளைப் போற்றும் விதத்தில் மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.



Temple News | News | Dinamalar Temple | ????????? ???????? ?????? ???????? ????
 
Why Women Cannot Perform Last Rites In Hinduism?

Why Women Cannot Perform Last Rites In Hinduism?

Hinduism prescribes a lot of rules and regulations when it comes to women. Some of these rules make sense and are there for the benefit of women while others can be simply called superstitions and a way to keep women away from important business. One of these rules is performing the last rites of parents. The Hindu scriptures say that the last rites or antim sanskar of parents can only be performed by the son. Women are exempted from performing the antim sanskar or the last rites. This rule has been a source of controversy since centuries.

There have been instances where a couple is survived only by a female child. In such cases, the funeral rites are performed by some male member of the family. This rule thereby denies the right of the woman not only over her parents but also on the parental property.

WHY HINDUS SHAVE OFF THEIR HEAD?

Yet over the centuries, the rules have taken a backseat and women have realised their importance. It is no more a taboo where a girl child cannot perform the last rites of the parents. So, why is it that women cannot perform the last rites in Hinduism? Let us find out. The Emotional Ones Scriptures say that women are soft hearted and emotional beings. They have a higher attachment to the dead and the death becomes overwhelming for them. So, while performing the rites they may be overcome with extreme grief which may result in incomplete execution of rituals. The Woman Factors The feminine factors and issues such as pregnancy and menstruation is a hindrance in performing the rites. Taking these factors into consideration, women were exempted from performing the last rites. Only An Excuse? Though the reasons seem valid to some extent, the hard and fast rule about women not performing the last ritual seems like an excuse.

There are women who are strong enough to handle the grief. Apart from that menstruation is only health condition which should not prevent women from performing any kind of rituals. But since menstruation is considered as impure in Hinduism, women are exempted from performing any kind of ritual during the phase. Some scholars are of the view that this rule was added to the scriptures to prevent women from demanding paternal property.

Since Indian society is highly patriarchal, exempting women from performing last rites of parents would ensure that they have no rights or legal claim on their parents' property. The Changing Pattern With the changing times, the pattern is also changing for women. Women are now coming out of the veil and claiming their rights. Many women who happen to be the only child of their parents are now performing the antim sanskar ritual. This changing pattern is a sure sign that women have realised that they are not to be subjugated and have realised their worth.

Thus, the modern woman is challenging all the derogatory practices which seeks to restrict freedom and rights. She is emerging as the power which will definitely take Hinduism towards a better future.

Read more at: Why Women Cannot Perform Last Rites In Hinduism? - Oneindia Boldsky
 
மனிதன் எந்தக் காரியத்தையும் இரகசியமாகச&#

மனிதன் எந்தக் காரியத்தையும் இரகசியமாகச் செய்யமுடியாது.
சூரியன்,
சந்திரன்,
காற்று,
நெருப்பு,
ஆகாயம்,
பூமி,
நீர்,
இதயம்,
யாமம்,
இரவு,
பகல்,
தர்மம்,
நீதி,

இறைவன்

ஆகிய பதின்மூன்று சாட்சிகள்
சதா மனிதனின் நடத்தையைக்
கவனித்துக் கொண்டிருக்கின்றன.


Source: Ananthanarayanan Ramaswamy
 
மீன்கொத்திப்பறவையைப் பாருங்கள்

மீன்கொத்திப்பறவையைப் பாருங்கள்

மீன் கொத்திப்பறவை போன்று உலகத்தில் வாழ்ந்திருங்கள். அது நீருக்குள் இருக்கின்றவரை அதன் சிறகுகளில் நீர் ஒட்டிக் கொண்டிருக்கும். வெளியில் வந்து சிறகுகளைக் குலுக்கியதும் ஒட்டிக் கொண்டிருந்த நீர் அகன்றுபோய்விடும். அதுபோல உலகஆசைகளை விட்டுவிடப் பழகிக் கொள்ளுங்கள்.

* மக்கள் பெரும்பாலும் புகழுக்காகவோ, புண்ணியத்தை தேடவோ பிறருக்கு உதவி செய்ய எண்ணுகின்றனர். அத்தகைய உதவிகள் அனைத்தும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை.

* ஆசைகளில் பணத்தின் மீது கொண்ட பற்றும், காம எண்ணங்களும் அனைவரின் மனதையும் ஆட்டிப்படைக்கின்றன. இந்தநோயைப் போக்க வேண்டுமானால் அடிக்கடி நல்லவர்கள் கூடும் சத்சங்கம் ஒன்றுதான் வழி.

* பணத்தை ஏராளமாகச் சம்பாதித்தவர்கள் தங்களுடைய செல்வத்தை சொந்த சுக சவுகர்யங்களுக்காகச் செலவிடுவது போல, கஷ்டப்படுகின்ற ஏழைகளுக்காகவும் செலவழிப்பதற்கு முன்வரவேண்டும்.

* உலகில் மக்கள் எத்தனையோ துன்பங்களுக்கு ஆளானபோதும், ஆசைகளை அடக்குவதில்லை.ஒட்டகம் முட்செடியைத் தின்னும் போது வாயில் ரத்தம் வழிந்தாலும் தன் செயலை அறியாமல் தொடர்ந்து கொண்டிருக்கும்.

* செடி ஒன்று பெரிய மரமாகிவிட்டால், அதற்கு வேலி தேவையில்லை. ஒரு யானையை அம்மரத்தில் கட்டும் அளவுக்கு மரம் வலிமை பெற்றுவிடும். அதுபோல, உள்ளத்தில் பக்குவம் வந்து விட்டால் வெளியுலக விஷயங்கள் ஒருவனை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை.


-ராமகிருஷ்ணர்

Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy
 
63 நாயன்மார்கள்- காரைக்கால் அம்மையார் 3

63 நாயன்மார்கள்- காரைக்கால் அம்மையார் 3
காரைக்கால் அம்மையார்


10427265_646921888732030_3805397574347325113_n.jpg




காரைக்கால் வளம் பெருகும் சோழ நாட்டிலே உள்ள ஒரு திருநகரம். அந்நகரிலே சிறந்து விளங்கிய அறநெறி தவறாத வணிகர் குடியில் தனதத்தனார் என்னும் பெரியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவ்வணிகருக்கு திருமகளைப் போன்ற பேரெழில் கொண்ட புனிதவதி என்னும் ஒரு மகள் இருந்தாள்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல் புனிதவதியார் மழலை மொழி பேசும்போதே சிவனடியாரிடம் அளவு கடந்த அன்புடையவராய் இருந்தாள். புனிதவதியாரின் பிஞ்சு மனத்திலே அரவணிந்த அண்ணலின் அருள் தோற்றம் பக்திப் பெருக்கோடு பதிந்து விட்டது. புனிதவதி காணுவதெல்லாம் கண்ணுதலார் தோற்ற பொலிவையே! திருவாய் மலர்ந்து செப்புவது அனைத்தும் செஞ்சடையான் திருநாமமே! இளமை முதற்கொண்டே பரமனின் பாதங்களி‌ல் பற்றுடையவளாய் வளர்ந்து வந்த புனிதவதி மங்கைப் பருவம் எய்தினாள். மங்கைப் பருவம் கொண்ட அம்மையாரை நாகப்பட்டிணத்தில் வசித்து வந்த பரமதத்தன் என்ற வணிக குல மகனுககுத் திருமணம் செய்து வைத்தார் தனதத்தனார்.

திருமணம் முடிந்த பிறகு தனதத்தனுக்குத் தன் மகளை நாகைக்கு அனுப்ப மனம் ஒப்பவில்லை. புனிதவதி தனது ஒரே மகள் ஆகையால் அவளைப் பிரிய மனம் இல்லாமல் வருந்தினார். தனதத்தன் மகளையும், மருமகளையும் காரைக்காலில் தனியாக ஒரு இல்லத்தில் வாழ வைத்தார். காரைக்காலிலே தனிக்குடித்தனம் வைக்கப்பட்ட இவ்வில்லறச் செல்வர் மøனயறத்தை மாண்புற மேற்கொண்‌டனர்.

அவர்கள் இல்லற‌ெமென்னும் நல்லறமதை இனிதே நடத்தி வந்தனர். அத்தோடு கூட பரமதத்தன் வணிகத் தொழிலைப் பண்போடும் நேர்மையோடும் நடத்தி வந்தான். புனிதவதி இறைவனிடம் கொண்டுள்ள பக்தி நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. எந்நேரமும் சிவனடியார் திருநாமத்தைப் போற்றி வழிபடுவதிலேயே இருந்தாள். ஒருநாள் பரமதத்தன் கடையில் இருக்கும்பொழுது, அன்புடைய ஒருவர் இரண்டு மாங்கனிகளைக் கொடுத்துச் சென்றார். பரமதத்தன் அம் மாங்கினிகளை ஆள் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைத்தான். புனிதவதி அந்த இரண்டு மாங்கனிகளையும் வாங்கி வைத்துக் கொண்‌டாள்.



புனிதவதி பிற்பகல் உணவிற்கான ஏற்பாட்டைச் செய்து கொண்டிருந்தாள். அதுசமயம் வாயிற்புறமிருந்து சிவாய நம என்று குரல் கேட்டது. புனிதவதி, வாயிற் பக்கம் விரைந்து வந்தாள் சிவன் அடியார் நிற்பதைக் கண்டாள்; அன்போடு அவரை வரவேற்றாள். அடியார் உணவில் மிக்க வேட்டையுடைவராய் இருந்தார், பசியால் வாடும் அடியார் முகத்தோற்றத்தைக் கண்டு மனம் வாடிய புனிதவதி சற்றும் தாமதியாமல் அடியார் பசியைப் போக்க எண்ணினாள். விரைவில் சாப்பாடும் செய்தாள். புனிதவதி அடியார் திருப்பாதம் விளக்க நீர் அளித்து அமர ஆசனமும் இட்டாள். தொண்டரும் திருவமுது செய்ய அமர்ந்தார். இலையில் பக்குவமாகச் சமைத்த சோற்றை மட்டும் பறிமாறி மாம்பழங்களில் ஒன்றை கறியமுதிற்குப் பதிலாக இட்டாள்.

பசியால் தள்ளாடி வந்த தொண்டருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவர் திருவமுதை வயிறார உண்டு, புனிதவதியை வாயார வாழ்த்திப் பசியாறிச் சென்றார். அடியார் சென்ற சற்று நேரத்திற்கெல்லம் வழக்கம்போல் பரமதத்தன் நண்பகல் உணவிற்காக வீட்டிற்கு வந்து சேரந்தான். கை கால் கழுவி சுத்தம் செய்து கொண்டு அமுது உண்ண அமர்ந்தான். புனிதவதி முறையோடு அமுது படைத்தாள். பிறகு கணவருக்கு மீதி இருந்த மாங்கனியையும் அரிந்து பரிகலத்தில் போட்டாள். பரமதத்தன் மதுரம் வாய்ந்த அம்மாங்கனியை உண்டவுடன் அதன் இனிமை கண்டு மற்றொன்றையும் உண்ணக் கருதி அதையும் இலையில் இடுக என்று பணித்தான், கணவனின் கட்டளை கேட்டு, புனிதவதிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை, ஒரு வினாடியில் உளம் தடுமாறிப் போனாள். இருப்பினும் கனியெடுத்து வருபவள் போல் உள்ளே சென்றாள்.

பாவம் ! என்ன செய்வாள் ? அகத்துள் மாம்பழம் இருந்தால்தானே ! செய்வதறியாது மனங்கலங்கனாள். இறுதியில் வழியொன்றும் தோன்றாது, அரனாரை வேண்டினாள். அப்போது இறைவனின் திருவருளால் அதி மதுரக்கனி ஒன்று அம்மையாரின் கைகளில் வந்து தங்கியது. தனக்காக திருவருள் புரிந்த அரனாரை மனதில் தியானித்தபடியே மாங்கனியைக் கொண்டு வந்து கணவன் இலையில் பறிமாறினாள். அதனையுண்ட பரமதத்தன் முன் உண்ட கனியை விட இக்கனி தனிச்சுவையுடன் இருக்கக் கண்டு புனிதவதி ! இக்கனி, அமுதத்தைப் போன்ற சுவையுடையதாக இருக்கிறதே. தேவர்களுக்கும் , மூவர்களுக்கும் கிட்டாத கனிபோல் அல்லவோ தோன்றுகிறது இஃது ஏது உனக்கு? என்று கேட்டான். இறைவனின் சோதனைக்கு அடியவர்கள் ஆளாவது போல் கணவனின் சோதனைக்குப் புனிதவதி ஆளாயினாள்.



இறைவன் அருள் பெற்று இக்கனியைப் பெற்றேன் என்று செப்புவதற்குத் திறனற்ற நிலையில் புனிதவதி, உண்மையை எப்படி உணர்த்துவது ? என்பதையும் புரிந்துகொள்ள முடியாமல் மனம் வாடினாள். ஆயினும் கணவனிடம் உண்மையை மறைப்பது கற்புடைய பெண்டிர்களுக்கு முறையல்ல என்பதையும் எண்ணி்ப் பார்த்தாள். இறுதியில் இறைவனுடைய செஞ்சேவடிகளைச் சிந்தையில் எண்ணியவளாய் கணவரிடம், இம்மதுர மாங்கனி இறைவன் திருவருளால் கிடைத்தது என்று கூறினாள். பரமதத்தன் வியப்புற்றான். புனிதவதி அடியார் வந்தது முதல் சற்றுமுன் தனக்கு மாங்கனி கிடைத்ததுவர‌ை நடந்த அத்தனை நிகழ்சிகளையும் ஒன்றுவிடாமல் விளக்கினாள். புனிதவதி மொழிந்தவற்றைச் சற்றும் நம்பாத நிலையில் அங்ஙனமாயின் இதுபோல் இன்னும் ஓர் சுவையான மாங்கனியைப் பெற்றுத் தருக என்று பணித்தான் பரமதத்தன்.

புனிதவதி மீண்டும் உள்ளே செனறாள். பெருமானை தியானித்தாள். இறைவன் ! நீவிர், மற்றும் ஒரு மாங்கனியை அளித்து அருளி எம்மை ஆதரிக்காவிடில் என்னுரை பொய்யாகும் என்று பிரார்த்தித்தாள். இம்முறையும் மற்றொரு மாங்கனியை அளித்து அருள்புரிந்தார் எம்பெருமான். புனிதவதி மகிழ்ச்சியோடு மாங்கனியைக் கொண்டு வந்து கணவனிடம் கொடுத்தாள். வியப்பு மேலிட, மாங்கனியைப் பரமதத்தன் வாங்கினான். அக்கனி உடனே மாயமாக அனர் கையிலிருந்து மறைந்தது. அதைப் பார்த்ததும், பரமதத்தன் பயந்து நடுநடுங்கினான். தன் மனைவி புனிதவதி மனிதப் பிறவி அல்ல, தெய்வீகத தன்மை பொருந்தியவள் என்பதை உணர்ந்தான். சிந்தை மயங்கி செயலிழந்தான் பரமதத்தன். அக்கணம் முதல் தன் மனைவியைத் தாரமாக எண்ணவில்லை; தொழுவதற்குரியவளாய் மனதில் விரித்தான் பரமதத்தன் !

இறைவன் திருவருளைப் பெற்ற நீ தொழுதற்குரிய‌வளே! உன்னுடன் சேர்ந்து வாழ எனக்குத் தகுதி கிடையாது தனித்து வாழ்வதுதான் முற்றிலும் முறை என்றான். கணவனின் பேச்சைக் கேட்டு புனிதவதி வருந்தினாள். அவளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. இதனால் பரமதத்தனும் புனிதவதியும் வாழ்க்கையில் வேறுபடுத்தப்பட்டனர். புனிதவதி, உலகப் பற்றைத் துறந்து வாழும் பக்குவ நிலையைச் சிறுகக் சிறுக பெற்றாள். தெய்வ சிந்தனையிலே அழுந்தினாள். அக்காலத்தில் வணிகர்கள் கடல் கடந்து வாணிபம் செய்து பொருளீட்டி வருவது வழக்கம். பரமதத்தன் தன் உறவினர்களிடம, தானும் வெளியூர் சென்று பொருள் சேர்க்கப் போவதாகக் கூறினான். அவர்களும் அவனது மு‌யற்சிக்கு முழு ஆதரவு கொடுத்தனர்.

ஒருநாள் வாணிபத்திற்குரிய பொருளோடு மனைவியிடமும், மாமனிடமும் விடைபெற்றுப் புறப்பட்டான். கடல் தேவதையை வழிபட்டு கப்பலேறிச் சென்றான். வெளியூர் சென்ற பரமதத்தன் வாணிபத் தறையில் தனக்குள்ள தனித் திறமையால் ஓரிரு வாரத்துள் நிரம்பச் செல்வம் ‌சேர்த்துக் கொண்டு, பாண்டிய நாடு திரும்பினான். அவன் காரைக்காலுக்குச் செல்ல விரும்பாததால் பாண்டிய நாட்டிலுள்ள வேறு ஒரு பட்டனத்தில் தனது வாணிபத்தைத் ‌தொடங்கினான். அயல் நாட்டிலிருந்து தான் கொண்டுவந்த அளவற்ற பொருள்களை எல்லாம் அந்நகரிலேயே விற்றுப் பெருஞ்‌ செல்வந்தனான். பரமதத்தனின் செல்வச் சிறப்பையும், அழகின் மேம்பாட்டையும் உணர்ந்த அவ்வூரிலுள்ள வணிகன் ஒருவன் தனது புதல்வியை அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான்.



இரண்டாவது மனை‌வியோடு இன்பமாக வாழும்நாளில், அவன் மனைவி கருவுற்று ஒரு பெண மகவைப் பெற்றெடுத்தாள். அப்பெண்ணுக்கு பரமதத்தன் தான் மனத்தால் வழிபடும் புனிதவதியின் நாமத்தையே சூட்டி மகிழ்ந்தான், இவ்வாறு பரமதத்தனின் இல்லறவழி அமைய அவனுடைய முதல் மனைவியின் வாழ்க்கையோ அறவழி நின்றது. இறைவனை வழிபடுவதும், அடியார்களை வழிபடுவதுமாக புனிவதி வாழ்ந்து வந்தாள்.

பரமதத்தன் பண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, எப்படியோ சுற்றத்தார்கள் மூலம் புனிதவதிக்குத் தெரியவந்தது. சுற்றத்தார்கள் புனிதவதியை எப்படியும் பரமதத்தனோடு சேர்ப்பது என்று உறுதிகொண்டனர். ஒருநாள் மனையறம் புரிந்து வரும் மடந்தை புனிதவதியை சுற்றத்‌‌தார், இரத்தினம் இழைத்த அழகிய சிவிகையில் ஏற்றிக்கொண்டு பாண்டி நாட்டிற்குப் புறப்பட்டனர். ஊர்கள் பல கடந்து காடுகள் மேடுகள் பல தாண்டி ஆறுகள் பல கடந்து ஒருவாறு பாண்டி நாட்டை அடைந்து பரமதத்தன் வாழும் நகருள் நுழைந்தனர். அந்நகரில் ஊருக்கு வெளியே உள்ள ஒரு சோலை அருகே தங்கினர்.

புனிதவதி வந்திருக்குமு் செய்தியைப் பரமதத்தனுக்கு ஆள் மூலம் சொல்லி அனுப்பினர். சற்றும் எதிர்பாராமல் தன் முதல் மனைவி இப்படி வந்ததும் பரமதத்தன் அஞ்சினான். ஒருவாறு மனதைத் திடப்படுத்தி கொண்டு, அவர்கள் என்னிடம் வரும் முன்பு அவர்கள் இருக்கும் இடத்திற்கு நான் செல்வேன் என்று கருத்தி்ல் கொண்டான். இரண்டாவது மனைவியுடனும், குழந்தைய புனிதவதியுடனும் புனிதவதி தங்கியுள்ள இடத்திற்குப் புறப்பட்டான் பரமதத்தன். புனிதவதி தங்கியிருக்கும் இடத்தை அடைந்த பரமதத்தன், விரைந்து சென்‌று மனைவி மகளுடன் புனிதவதியார் பாதங்களில், வீழ்ந்து வணங்கி எழுந்தான். அடி‌யேன் உமது திருவருளால் இனிது வாழ்கிறேன் இச்சிறு குழந்தைக்கு அம்மையாரின் திருநாமத்தையே சூட்டியிருக்கிறேன். அருள் புரிய வேண்டும் என்று கூறினான். கணவனின் செயல் கண்டு புனிதவதி அஞ்சி ஒதுங்கி நின்றாள்.

பரமதத்தனின் செயல்கண்டு திகைத்துப்போன சுற்றத்தார் அவனிடம், மனைவியின் காலடியில் விழக் காரணம் ‌என்னவென்று கேட்டனர். பெரியோர்களே! இவர் என் மனைவியாக இருக்கலாம். இன்று இவர்கள் மானிடப் பிறவியே அல்லர். அம்மையார் எல்லோராலும் தொழுதற்குரியவர். அதனால்தான் நான் தாள் பணிந்தேன். நீங்களும் பணிந்து போற்றுங்கள் என்றான். பரமதத்தன் மொழிந்‌ததைக் கேட்டு அனைவரும் திகைத்து நின்றனர். கணவனின் முடிவு புனிதவதியின் மனத்தில் பெரும் வேதனையைக் கொடுத்தது. அழகுத் திருமகளாய் இளம் குன்றாத வடிவழகுப் பெண்ணாய்க் காட்சி அளித்த அம்மையார், அழகையும் இளமையையும் வெறுத்தார். ஒரு பெண் கணவனுக்காக மட்டும்தான் அழகோடும் இளமையோடும் வாழ வேண்டும் என்ற பெண்மை இயல்பினை உணர்ந்திருந்த புனிதவதி அக்கணமே இறைவனிடம், எம்பெருமானே ! அம்ப‌லவாணரே! என் கணவருக்காக இதுவரையில் தாங்கி நின்ற இந்த வனப்புமிகு ‌எழில் உடம்பு எனக்குத் தேவையில்லை. இவ்வடிவமைக்குப் பேய் வடிடு தந்து அருளுதல் வேண்டும என்று வேண்டியவாறு பரமனைத் துதித்தாள்.



இறைவன் புனிதவதி வேண்டி நின்றதுபோல் அவளுக்குப் பேய் வடிவைக் கொடுத்து அருளினார். புனிதவதியின் வனப்பு மிகுந்த தசைகள் மாயமாக மறைந்தன. எலும்பு போல் காட்சியளித்தாள். விண்ணவரும் மண்ணவரும் வியக்கும் பேய் வடிவைப் புனிதவதி பெற்றாள். பெண்ணாக நின்றவள் பேயாக மாறினாள். வணக்கத்திற்குரியவள் ஆனாள். அங்கு கூடி நின்ற சுற்றத்தார்களும், உறவினர்களும் அம்மையாரை வணங்கியவாறு அங்கு நிற்பதற்கே அஞ்சினர். அம்மையார் பேய் உருக்கொண்டதோடு நல்ல தமிழ் புலமையும் பெற்றார். அருட்கவியுமாக மாறினார். இறைவனின் அருளிலே பெற்ற பாப்பாடும் திறத்தால் அம்மையார் அருளிலே திவந்தாதியும், திரு இரட்டை மணிமாலை என்னும் திருப்பிரபந்தத்தையும் பாடினார்.

புனிதவதி, காரைக்கால் அம்மையார் என்று அனைவராலும் அழைக்கலாயினார்! அல்லும் பகலும் சிவநாமச்சிந்தையுடன் வாழ்ந்து வந்த அம்மையார், திருக்கயி‌லை சென்று பரமனைத் தரிசிக்க எண்ணினார். அம்மையார் சிவநாமத்தைச் சிந்தையிலே கொண்டு பாதயாத்திரையைத் தொடர்ந்தார். கயிலை மலையை அடைந்தார். திருக்கயிலை மலையை, பாதத்தினால் மிதித்து நடந்து செல்வதற்கு அஞ்சிய அம்மையார், தலையால் நடந்து மகிழ்ச்சி‌ மேலிட கயிலை மலைமீதேறிச் சென்றார்.

புனிதவதி அம்மையார் மலைக்கு வந்து கொண்டிருப்பதைக் கண்டு, பிரட்டியார் பரமனிடம், ஐயனே! தலையினால் வருகின்ற என்புருவம் படைத்த உடம்பின் அன்பை என்னவென்பது என்று சொன்னாள். உமையாளின் மொழி கேட்டு இறைவன், தேவி! இவ்வென்புடம்ப நம்மை வழிபடும் அம்மை. இந்த என் புருவத்தை நம்மிடமிருந்து வேண்டுமென்றுதான் பெற்றார் என்று திருவாய் மலர்ந்தார். காரைக்கால் அம்மையார் அருகில் வருவதை விழி மலர்ந்த வள்ளலார் அன்பு மேலிட, அம்மையே என்றார். அம்மையாரும அப்பா என்றார். இறைவன் திருவடித் தா‌மரைகளில் வீழ்ந்து வணங்கினார். அம்மையே ! உனக்கு ‌யாது வரம் வேண்டும் என்று ஐயன் திருவாய் மலர்ந்தார், அம்மையார் பக்திப் பெருக்கோடு, ஐயனே ! அன்பருக்கு மெய்யனே ! எனக்கு என்றும் இறவாத இன்ப அன்பு வேண்டும். மானிடப் பிறவி எடுத்து உலகப்பற்று, பாசத்தில் சிக்கி உழலாமல் இருக்க அருள்புரிய வேண்டும். ஒருக்கால் உலகில் பிறவி எடுத்துவிட நேர்ந்தால் ஐயனை மறவாதிருக்க அருள் புரிய வேண்டும். அத்தோடு இறைவா! ஐயன் ஆனந்தத் தாண்டவம் ஆடும்போது நான் திருவடிக்கீழ் இருந்து ஆனந்தமாகப் பாடிக்களித்து மகிழந்து பேரின்பம் கெõள்ளத் திருவருள் புரிய வேண்டும் என்று வணங்கி நின்றார்.

தென்னாட்டில் உள்ள திருவாலங்காட்டில் நாம் நடனம் ஆடும்போது நீ எமது திருவடிகீழ் அமர்ந்து கண்டுகளித்துப் பாடி மகிழ்வாயாக ! என்று இறைவன் அருள் செய்தார். அம்மையார் மீண்டும் தலையாலேயே நடந்து திருவாலங்காட்டை அடைந்தார். திருவாலங்காட்டை அடைந்த அம்‌மையார், ஆனந்தக் கூத்தின் திருக்கோல நடனம் கண்டு, கொங்கை திரங்கி என அடி எடுத்து மூத்த திருப்பதிகம் ஒன்றைப் பாடி மகிழ்ந்தார். தாண்டவ மூர்த்தியின் நர்த்தனத்தின் சக்தியிலே அம்மையார் அருள் பெற்று எட்டியிலவம் எனத் தொடங்கும் திருப்பதிகத்தையும் பாடினார். இவ்வாறு திருப்பதிகங்கள் பல பாடி மகிழ்ந்த காரைக்கால் அம்மையார் திருசடையான் சேவடி நிழலிலே என்றென்றும் பாடிப் பரவசமடையும் பிறவாய் பெரு வாழ்வைப் பெற்றார்கள்.



குருபூஜை: காரைக்காலம்மையார் குருபூஜை பங்குனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.



Source:Nagarathar
 
அஷ்ட லட்சுமிகள்

அஷ்ட லட்சுமிகள்

cd59b3bc-3024-47bd-b82f-b67760f702c2_S_secvpf.gif



மகாலட்சுமியின் அருளாற்றலை எட்டு விதமாக பிரித்து அஷ்டலட்சுமிகள் என்று போற்றுவது மரபு. அஷ்ட லட்சுமிகள் வருமாறு:-


1. கஜலட்சுமி,
2. ஆதிலட்சுமி,
3. சந்தானலட்சுமி,
4. தனலட்சுமி,
5. தானியலட்சுமி,
6. விஜயலட்சுமி,
7. வீரலட்சுமி,
8. மகாலட்சுமி.

மகாலட்சுமியின் அருளாசியினை எட்டு விதமாக செல்வங்கள் என்ற கருத்தில் அஷ்ட ஐசுவரியங்கள் என்று கூறுவர்.

1. ராஜாங்கம் (ஆட்சி அல்லது உயர் பதவி),
2. மக்கள்,
3. சுற்றம்,
4. பொன்,
5. நவமணிகள்,
6. தானியம்,
7. வாகனம்,
8. பணியாட்கள்

இவை தான் அஷ்ட ஐசுவரியங்கள். பொதுவாக எட்டு என்ற எண்ணுக்கு தனித்த பெருமை உண்டு. பகவான் விஷ்ணுவை வழிபடும் முக்கியமான மந்திரத்தை அஷ்டாட்சரம் என்று கூறுவர். அதாவது ஓம் நமோ நாராயணா என்பதாகும். சித்த மருத்துவ முறைப்படி
1. சுக்கு,
2. மிளகு,
3. திப்பிலி,
4. ஓமம்,
5. சீரகம்,
6. கருஞ்சீரகம்,
7.இந்துப்பு,
8.பெருங்காயம்

ஆகிய மருந்து மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் மருந்துக்கு அஷ்ட சூரணம் என்று பெயர். அகில், சந்தனம், குங்குமப்பூ, மஞ்சள், கஸ்தூரி, கோரோஜனை, விளாமிச்சை, குருவிவேர் என்ற இந்த எட்டு நறுமணப் பொருட்களும் அஷ்ட கந்தம் என அழைக்கப்பெறுகின்றன. எட்டு சுலோகங்கள் கொண்டது அஷ்டகம்.

ஜயதேவரின் அஷ்டபதி மிகவும் புகழ் பெற்றதாகும். மனித வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கும் எட்டு வித செல்வங்களுக்கு மகாலட்சும அதி தேவதையாகும். மகாலட்சுமியின் எட்டு விதமான தோற்றத் திருவுருவங்களையும் மெய்யன்போடும், முழுமையான பக்தியோடும் வழிபடும் எவரும் மகாலட்சுமியின் அருளால் இன்பமும் மகிழ்ச்சியும் இழையோடும் அஷ்ட போக வாழ்க்கையை பெறுவார்கள். அத்தகைய எட்டு விதமான போகங்கள் விவரம் வருமாறு:-

1. குடும்பத்தில் அன்பும், பண்பும், அழகும் அமைந்த, கணவன்-மனைவி அமைதல்.
2. மன உல்லாசத்துக்கு ஆதாரமாக விளங்கும் சிறந்த உடைகளை பெறுதல்.
3. அழகு மிளிரும் அணிகலன்களை அடைதல்.
4. ருசியான உணவு வகைகள் அடைய பெறுதல்.
5. நலம் தரும் தாம்பூல வகைகள் தடையின்றி கிடைத்தல்.
6. அற்புதமான நறுமன பொருட்களை பெறுதல்.
7. மனத்திற்கு மகிழ்ச்சிïட்டும் இன்னிசை.
8. மன உல்லாசத்துக்கு உதவும் மண மலர்கள்.

இந்த எட்டு போகங்களும் முழுமையாக அமையப் பெற்றது தான் உயர்ந்த வாழ்க்கை.


http://www.maalaimalar.com/2012/08/01094000/ashtalakshmi-worship.html
 
ராமாவதாரம்

ராமாவதாரம்

10436259_1424929067783503_2390442671134249833_n.jpg



பெருமாளின் அவதாரங்களில் இது 7வது அவதாரமாகும்: ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும்
.
வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.



இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார்.


சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள்.


சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன்.

இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீமந் நாராயணன் கோசலைக்கு ராமன் என்ற மகனாக அவதரித்தார்.


Source:Anantharaman Kumbakonam
 
63 நாயன்மார்கள்-அமர்நீதி நாயனார் 4

63 நாயன்மார்கள்-அமர்நீதி நாயனார் 4

பழையாறை என்னும் பழம்பெரும் பதியில் - வணிக குல மரபில் அமர்நீதியார் என்னும் சிவ அன்பர் தோன்றினார். வணிககுல மரபிற்கு ஏற்ப வியாபாரத்தில் வல்லமையுள்ளவராய், மேம்பட்டு விளங்கிய அவரிடமிருந்த பொன்னும், மணியும், முத்தும், வைரமும், துகிலும், அவரது செல்வச் சிறப்பையும், வெளிநாட்டினரோடு அவருக்கிருந்த வர்த்தகத் தொடர்பையும் உலகோர்க்கு எடுத்துக் காட்டின. இத்தகைய செல்வச் சிறப்பு பெற்ற அமர்நீதியார், சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்வதையே, இலட்சியமாகக் கொண்டிருந்தார். அவர் தமது இல்லத்திற்கு வரும் அடியார்களுக்கு அமுது அளித்து, ஆடையும், அரைத் துண்டும், கோவணமும் அளித்து அளவிலா ஆனந்தம் பெற்றார்.

பழையாறைக்குப் பக்கத்திலே உள்ள சிவத்தலம் திருநல்லூர். இவ்விடத்தில் ஆண்டுதோறும் அங்கு எழுந்தருளியிருக்கும் நீலகண்டப் பெருமானுக்குத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவிற்கு வெளியூர்களிலிருந்தெல்லாம் பக்தர்கள் வெள்ளமெனத் திரண்டு வருவர். அமர்நீதியாரும் அவ்விழாவிற்குத் தம் குடும்பத்துடன் சென்று இறைவனை வழிபடுவார். அவ்வூரில் அடியார்களுக்கு என்றே திருமடம் ஒன்றை கட்டினார். ஒரு சமயம் அவ்வூர் திருவிழாக் காலத்தில், அமர்நீதியார் தமது குடும்பத்தாரோடு மடத்தில் தங்கியிருந்தார். சிவனடியார்களுக்கு நல்ல பணிகள் புரியும் அமர்நீதியாரின் உயர்ந்த பண்பினை - பக்திப் பெருக்கினை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான்.



அந்தண பிரம்மச்சாரி போன்ற திருவுருவம் பூண்டு, அவர் தங்கியிருந்த மடத்திற்கு எழுந்தருளினார். அமர்நீதியார் அடியாரைப் பார்த்ததும் மகிழ்ச்சயோடு வரவேற்று தேவரீர் இம்மடத்திற்கு இப்போதுதான் முதல் தடவையாக வருகிறீர் என்று கருதுகிறேன். அடியார் இங்கே எழுந்தருளுவதற்கு யான் செய்த தவம்தான் என்னவோ ! என முகமன் கூறி வரவேற்றார். அவர் மொழிந்ததைக் கேட்டு எம்பெருமான், அடியார்களுக்கு அமுதளிப்பதோடு, கந்தை, கீவ், அழகிய வெண்மையான கோவணம் முதலியனவும் தருகின்றீர் என்று கேள்வியுற்றுத்தான் உம்மைப் பார்த்துவிட்டுப் போக வந்தேன் என்று பதிலுரைத்தார். அம்மையப்பரின் அருள் வாக்கு கேட்டு மகிழ்ந்த அமர்நீதியார் உள்ளங்குளிர, மடத்தில் அநதணர்களுக்காக வேதியர்களால் தனியாக அமுது செய்கின்றோம். அதனால் ஐயன் தயவு கூர்ந்து திருவமுது செய்து அருள வேண்டும் என்று பக்திப் பரவசத்தோடு வேண்டினார். நன்று நன்று, உமது விருப்பத்தை யாம் உளமாற ஏற்கின்றோம். முதலில் யாம் காவிரியில் நீராடச் செல்ல இருக்கின்றோம். அதற்கு முன் ஒரு சிறு நிபந்தனை. என்ன சுவாமி ! ஒன்றும் இல்லை. வானம் மப்பும் மந்தாரமுமாக இருப்பதால் ஒருக்கால் மழை வந்தாலும் வரலாம். இக்கோவணம் இரண்டும் நனைந்து போக நேரிடும். அதனால் ஒன்றை மட்டும் கொடுத்து விட்டுப் போகிறேன்.



பாதுகாப்பாக வைத்திருந்து தரவேண்டும். இந்தக் கோவணத்தைச் சர்வ சாதாரணமாக எண்ணி விடாதீர். இதன் பெருமையைப் பற்றி அப்படி, இப்படி என்று எடுத்து இயம்புவது அரிது. இவ்வாறு சொன்ன பெருமான், தண்டத்தில் இருந்த கோவணங்களில் ஒன்றை அவிழ்த்து, அமர்நீதியாரிடம் கொடுத்துவிட்டு, நீராடி வரக் காவிரிக்குப் புறப்பட்டார். வேதியர் மொழிந்ததை மனதில் கொண்ட அமர்நீதியார் அக்கோவணத்தை மற்ற கோவணங்களோடு சேர்த்து வைக்காமல் தனிப்பட்ட இடத்தில் தக்க பாதுகாப்பாக வைத்தார். அடியார்களைச் சோதிப்பதையே தமது திருவிளையாட்டாகக் கொண்ட பெருமான், திருநீலகண்டரிடம் கொடுத்துவிட்டுச் சென்ற திருவோட்டை அன்று மறைத்தது போல், இன்று இவ் வணிகரிடம் கொடுத்த கோவணத்தையும் மாயமாக மறையச் செய்தார்.

அத்தோடு நிறுத்தவில்லை. தமது சோதனையை ! அன்று பகீரதனுக்காகக் கங்கையைப் பெருக விட்ட பெருமான் இன்று வணிகனைச் சோதிக்க திடீரென்று மழையையும் வரவழைத்தார். முதல்வோன், கங்கையில் தான் நீராடினாரோ, இல்லை காவிரியில்தான் நீராடினாரோ அல்லது நம் மாமனது திருவிடத்திலே பாய்ந்தோடும் வற்றாத வைகை நதியில்தான் நீராடினாரோ அவருக்குத்தான் வெளிச்சம் ! சற்று நேரத்திற்கெல்லாம் மழையில் நனைந்து கொண்டே, மடத்தை வந்தடைந்தார். அதற்குள் அமர்நீதியார், அடியார்க்கு வேண்டிய அறுசுவை உண்டியைப் பக்குவமாகச் சமைத்து வைத்திருந்தார்.

அடியார் மழையில் நனைந்து வருவதைக் கண்டு மனம் பதறிப்போன அமர்நீதியார், விரைந்து சென்று அடியார் மேனிதனைத் துவட்டிக் கொள்ளத் துணிதனைக் கொடுத்தார். இதெல்லாம் எதற்கு ? முதலில் நான் கொடுத்து கோவணத்தை எடுத்து வாரும், எதிர்பாராமல் மழை பெய்ததால் எல்லாம் ஈரமாகிவிட்டது என்றார் இறைவன்.


அமர்நீதியார் கோவணத்தை எடுத்து வர உள்ளே சென்றார். வேதியரின் சூது மொழியை, அமர்நீதியார் எப்படி புரிந்து கொள்ள முடியும் ? இறைவனின் கொவ்வைச் செவ்வாய் இதழ்களிலே குமிழ்ச் சிரிப்பு சிறிது நேரம் நர்த்தனம் புரிந்தது. அமர்நீதியார் சென்று, கோவணத்தைத் தாம் வைத்திருந்த இடத்தில் பார்த்தார். அங்கு கோவணத்தைக் காணவில்லை. சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தார். எங்குமே காணவில்லை. யாராவது எடுத்திருக்கக் கூடுமோ ? என்று ஐயமுற்று அனைவரையும் கேட்டுப் பார்த்தார், பலனேதுமில்லை.


அமர்நீதியாரும், அவர் மனைவியாரும் செய்வதறியாது திகைத்தனர். மனைவியோடு கலந்து ஆலோசித்து இறுதியில் மற்றொரு அழகிய, புதிய கோவணத்தை எடுத்துக்கொண்டு, வேதியர் முன் சென்று, வேதனை முகத்தில் தோன்ற, தலைகுனிந்து நின்றார். கண்களில் நீர்மல்க அந்தணரை நோக்கி, ஐயனே ! எம்மை அறியாமலே நடந்த தவற்றைப் பொறுத்தருள வேண்டும் என்றார் அமர்நீதியார். அமர்நீதியார் மொழிந்ததைக் கேட்ட செஞ்சடையான், என்ன சொல்கிறீர் ? எமக்கு ஒன்றுமே புரிய வில்லையே ! என்றார். ஐயனே ! தங்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட கோவணத்தைப் பாதுகாப்பான இடத்தில்தான் வைத்திருந்தேன். ஆனால், இப்பொழுது போய்ப் பார்த்தால் வைத்திருந்த இடத்தில் அதைக் காணவில்லை. பெரும் வியப்பாகத்தான் இருக்கிறது. அதனால் தேவரீர் இதனை அணிந்துகொண்டு எம் பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்று மிகத் தாழ்மையோடு மனம் உருகி வேண்டினார்.



அமர்நீதியாரின் இவ்வார்த்தைகளைக் கேட்டதும், எம்பெருமானின் திருமுகத்திலே கோபம் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. நன்றாக உளது உமது பேச்சு. சற்று முன்னால் கொடுத்துச் சென்ற கோவணம் அதற்குள் எப்படிக் காணாமற் போகுமாம் ? நான் மகிமை பொருந்திய கோவணம் என்று சொன்னதால், அதனை நீரே எடுத்துக்கொண்டு, மற்றொரு கோவணத்தைக் கொடுத்து என்னை ஏமாற்றலாம் என்று நினைக்கிறீரோ ? இந்த நிலையில் நீர் அடியார்களுக்குக் கோவணம் கொடுப்பதாக ஊரெல்லாம் முரசு முழுக்குகின்றீரோ ! கொள்ளை லாபம் கொழிக்க, நீர் நடத்தும் வஞ்சக வாணிபத்தைப்பற்றி இப்போது அல்லவா எனக்குப் புரிகிறது. உம்மை நம்பி நான் அல்லவா மோசம் போனேன் ! மதுரை மீனாட்சி அம்மன் கைப்பிடிக்க, வளையல் வியாபாரியாக வந்த சோமசுந்தரக் கடவுள் அமர்நீதியாரின் வாணிபத்தைப் பற்றி மேற்கண்டவாறு கடிந்து கூறினார்.

எம்பெருமான் மொழிந்ததைக் கேட்டு அஞ்சி நடுங்கிய அமர்நீதியார், அறியாது நடந்த பிழையை மன்னித்து பொறுத்தருள வேண்டும். இவ்வெளியோன் வேண்டுமென்றே செய்யவில்லை. காணாமற் போன கோவணத்திற்கு ஈடாக அழகிய, விலை உயர்ந்த பட்டாடைகளும், பொன்மணிகளும் எவ்வளவு வேண்டுமாயினும் தருகின்றேன். ஐயன் எங்ஙனமாகிலும் சினம் தணிந்து எம்மைப் பொறுத்தருள வேண்டும். என்று பயபக்தியுடன் பிரார்த்தித்தார்.



பன்முறை மன்னிப்புக் கேட்டார். அடியாரை வீழ்ந்து வீழ்ந்து வணங்கினார். அமர்நீதியார், கல்லும் கரையக் கெஞ்சுவது கண்டு, சினம் சற்று தணிந்தாற்போல் பாவனை செய்த வேதியர், தண்டில் இருக்கும் நனைந்த கோவணத்தைக் காட்டி, இது உம்மிடம் கொடுத்த கோவணத்தோடு கொடுத்தால் அதுவே போதுமானது. பொன்னும் பொருளும் எமக்கு எதற்கு என்று மொழிந்தார். இறைவனின் தீர்ப்பைக் கேட்டு அமர்நீதியார் சற்று மன அமைதி கொண்டார். உள்ளே சென்று துலாக்கோலை எடுத்து வந்து மறையவர் முன் நாட்டினார்.


அந்தணரிடமிருந்த கோவணத்தை வாங்கி ஒரு தட்டிலும் தம் கையில் வைத்திருந்த கோவணத்தை மற்றொரு தட்டிலுமாக வைத்தார். நிறை சரியாக இல்லை. அதுகண்டு அமர்நீதியார் அடியார்களுக்கு அளிப்பதற்காக வைத்திருந்த கோவணங்களை எடுத்து வந்து வைத்தார். அப்பொழுதும் நிறை சரியாக நிற்கவில்லை அமர்நீதி நாயனாரின் தட்டு உயர்ந்தேயிருந்தது. ஒவ்வொன்றாக மற்ற கோவணமனைத்தையும் தட்டில் வைத்துக்கொண்டே வந்தார். எடை சமமாகவே இல்லை. அந்தணரின் கோவணம் இருந்த தட்டு தாழ்ந்தே இருந்தது. அம்மாயத்தைக் கண்டு வியந்தார் அமர்நீதியார். இஃது உலகத்திலே இல்லாத பெரும் மாயையாக இருக்கிறதே என்று எண்ணியவாறு தொடர்ந்து நூல் பொதிகளையும், பட்டாடைகளையும் கீள்களையும் ஒவ்வொன்றாக அடுக்கடுக்காகத் தட்டில் வைத்துக் கொண்டே போனார்.



எவ்வளவுதான் வைத்தபோதும் எடை மட்டும் சரியாகவே இல்லை. அமர்நீதியார் தட்டு உயர்ந்தும், சிவனார் தட்டு தாழ்ந்தும் இருப்பதைப் பார்க்கும்போது, அமர்நீதியார் அடியார்களிடம் கொண்டுள்ள பக்தியும், அன்பும் உயர்ந்துள்ளது என்பதையும், அத்தகைய பக்திக்கு முன்னால் இறைவனின் சோதனைகூடச் சற்றுத் தாழ்ந்துதான் உள்ளது என்ற உண்மையை உணர்த்துவதுபோல் தோன்றியது. மடத்திலிருக்கும் அனைவரும் இக்காட்சியைக் கண்டு வியந்து நின்றனர். தராசுத் தட்டின் மீது இறைவனால் வைக்கப்பட்டுள்ள கோவணத்தின் மகிமையை யார்தான் அறிய முடியும் ? வேதத்தையல்லவா ? ஈரேழு உலகமும் அதற்கு ஈடு இணையாகாதே ! அன்பர்களின் அன்பிற்குத் தானே அது கட்டுப்படும் !


இறைவனின் இத்தகைய மாய ஜால வித்தையை உணரச் சக்தியற்ற தொண்டர் சித்தம் கலங்கினார். செய்வதறியாது திகைத்தார். தொண்டர் நல்லதொரு முடிவிற்கு வந்தார். பொன்னும் பொருளும், வெள்ளியும், வைரமும், நவமணித் திரளும் மற்றும் பலவகையான உலோகங்களையும் கொண்டுவந்து குவித்தார். தட்டுக்கள் சமமாகவில்லை. தம்மிடமுள்ள எல்லாப் பொருட்களையும் தராசு தட்டில் கொண்டுவந்து வைத்து மலைபோல் குவித்தார். இப்படியாக அவரிடமுள்ள பொருள்கள் அனைத்தும் ஒரு வழியாகத் தீர்ந்தது. இனிமேல் எஞ்சியிருப்பது தொண்டரின் குடும்பம் ஒன்றுதான் ! அமர்நீதியார் சற்றும் மன உறுதி தளரவில்லை. இறைவனை மனதிலே தியானித்தார்.



ஐயனே ! எம்மிடம் இருந்த பொருள்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. நானும், என் மனைவியும், குழந்தையும் தான் மிகுந்துள்ளோம். இந்தக் தராசு சமமான அளவு காட்ட, நாங்கள் தட்டில் உட்கார தேவரீர் இயைந்தருள வேண்டும் என்று வேண்டினார் நாயனார். பிறவிப் பெருங்கடலில் நின்றும் தம் தொண்டனைக் கரையேற்றும் பொருட்டு தராசில் குடும்பத்தோடு சேர்ந்து அமர அனுமதி கொடுத்தார் எம்பெருமான். அமர்நீதியாரும், அவரது மனைவியாரும், மகனும் அடியாரின் பாதங்களில் ஒருங்கே வீழ்ந்து வணங்கி எழுந்தனர். நாங்கள் திருவெண்ணீற்றில் உண்மையான பக்தியுடன் இதுகாறும் பிழை ஏதும் புரியாமல் வாழ்ந்து வந்தோம் என்பது சத்தியமானால் இந்தத் தராசு சமமாக நிற்றல் வேண்டும் என்று கூறினார். திருநல்லூர் பெருமானைப் பணிந்தார்.

நமச்சிவாய நாமத்தை தியானித்தவாறு தட்டின் மீது ஏறி அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து மனைவியாரும், மகனும் பரமனை நினைத்த மனத்தோடு ஏறி அமர்ந்தனர். மூவரும் கண்களை மூடிக்கொண்டு, ஐந்தெழுத்து மந்திரத்தை மனத்தால் முறைப்படி ஓதினர். துலாக்கோலின் இரண்டு தட்டுகளும் சமமாக நின்றன. மூவரும் கண் திறந்தனர்.அதற்குள் முக்கண்ணன் மாயமாய் மறைந்தார். அந்தணரைக் காணாது அனைவரும் பெருத்த வியப்பில் மூழ்கினார், அப்போது வானத்திலே தூய ஒளி பிரகாசித்தது. நீலகண்டப் பெருமான் உமாதேவியாருடன் விடையின் மீது காட்சி அளித்தார். விண்ணவர் கற்ப பூக்களை மழைபோல் பொழிய மறைகள் முரசுபோல் முழங்கின. வணிகரும், மனைவியாரும், மகனும் துலாத்தட்டில் மெய்மறந்து இருந்தபடியே சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டேயிருந்தனர். இறைவனின் அருளினால் துலாத்தட்டு புட்பக விமானமாக மாறியது. அமர்நீதியார் குடும்பம் அப்புட்பக விமானத்தில் கைலயங்கிரியை அடைந்தது. அமர்நீதியார் இறைவனின் திருவடித்தாமரை நீழலிலே இன்புற்று வாழலானார்.



குருபூஜை: அமர்நீதி நாயனாரின் குருபூஜை ஆனி மாதம் பூரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கு அடியேன்.








Source: Nagarathar
 
63 நாயன்மார்கள்-பட்டினத்தார் 5

63 நாயன்மார்கள்-பட்டினத்தார் 5


10373690_646930558731163_8849994988942017567_n.jpg


முன்னொருகாலத்தில் சோழ நாட்டு தலைநகரம் காவிரிப்பூம்பட்டினத்தில் சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவனருளால் ஒரு மகன் பிறந்தார். திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட இவரும் சிறந்த சிவபக்தர். கடல் கடந்து வாணிபம் செய்யும் பணி செய்து வந்த இவர், தனது 16ம் வயதில் சிவகலை என்பவரை மணந்து கொண்டார். திருமணமாகி பல்லாண்டுகளாக இத்தம்பதியருக்கு குழந்தை இல்லை. திருவெண்காடர் சிவனை வழிபட்டு, புத்திரப்பேறு அருளும்படி வேண்டினார்.



இதனிடையே சிவசருமர், சுசீலை என்னும் மற்றொரு சிவபக்த தம்பதியினருக்கு சிவனே மகனாக பிறந்தார். குழந்தைக்கு மருதவாணர் என பெயரிட்டு சீரும், சிறப்புமாக வளர்த்தனர். சிவனுக்கு சேவை செய்தே வறுமையில் வாடிய இத்தம்பதியரால், ஒருகட்டத்தில் குழந்தையை சரியாக வளர்க்க முடியவில்லை. திருவெண்காடர், சிவசருமர் தம்பதிக்கு அருள் செய்ய எண்ணம் கொண்டார் சிவன். சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை திருவெண்காடருக்கு தத்து கொடுத்து, பதிலாக பொருள் பெற்றுக்கொள்ளும்படி கூறினார். அதேசமயம் திருவெண்காடரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை வளர்க்கும்படி கூறினார். அதன்படி திருவெண்காடர், மருதவாணரை தத்தெடுத்து வளர்த்தார்.

மருதவாணரும் தந்தையின் தொழிலையே செய்தார். ஒருசமயம் மருதவாணர், கடல் கடந்து வாணிபம் செய்துவிட்டு ஊர் திரும்பினார். தாயாரிடம் ஒரு பெட்டியை மட்டும் கொடுத்த அவர், ஒன்றும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்றுவிட்டார். இதனிடையே வெளியே சென்றிருந்த திருவெண்காடர், மகன் சம்பாதித்து வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தார். அதில் தவிட்டு உமிகளைக் கொண்டு செய்யப்பட்ட எரு மட்டும் இருந்தது. கோபம் கொண்ட அவர், எருவை வீசியெறிந்தார். அதற்குள், ""காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'' என்று எழுதப்பட்ட காகிதத்தைக் கண்டார்.


திருவெண்காடருக்கு ஏதோ சுரீர் என்று உரைத்தது. ""மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது,'' என்று உணர்ந்தார். உடன் இல்லற வாழ்க்கையை துறந்த அவர், சிவனை வணங்கி முக்தி கொடுக்கும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தகுந்த காலத்தில் முக்தி கிடைக்கும் என்றார். அதன்பின் சிவத்தல யாத்திரை சென்ற திருவெண்காடர். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால், "பட்டினத்தார்' என்றழைக்கப்பட்டார்.

காசியை ஆட்சி செய்த பத்ரகிரியார் என்னும் மன்னனை தனது சீடனாக ஏற்றுக்கொண்டார். திருவிடைமருதூர் தலத்தில் இருவரும் சிலகாலம் தங்கியிருந்தனர். சிவன் பத்ரகிரியாருக்கு முதலில் காட்சி கொடுத்து முக்தி கொடுத்தார். பட்டினத்தார் தனக்கும் முக்தி வேண்டவே ஒரு கரும்பை கொடுத்து, அதன் நுனி இனிக்கும் இடத்தில் முக்தி தருவதாக கூறினார். அதன்பின் பல தலங்களுக்குச் சென்ற பட்டினத்தார் திருவொற்றியூர் தலத்திற்கு வந்தபோது நுனிக்கரும்பு இனித்தது. இங்கிருந்த சிலரை அழைத்த அவர், தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி கூறினார். அவர்களும் அவ்வாறு செய்யவே, லிங்க வடிவமாக மாறி முக்தி பெற்றார். பிற்காலத்தில் இவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.


Source: Nagarathar
 
known Facts 1

known Facts 1

The speed of Earth around the Sun: 30km/s. The speed of the Sun around our Milky Way galaxy center: 200km/s. The earth takes a year around the Sun once whereas the Sun takes a mind-boggling 200 million years for one round in our galaxy. Our solar system is around 4.5 billion years old whereas the universe is about 14 billion years old.


More to follow.


Source: R V Ramachandran
 
ஊஞ்சல் ஆடுவது எதற்காக

ஊஞ்சல் ஆடுவது எதற்காக

oonchal-NewsTIG.jpg



* ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது. மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

* ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.

* கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.

* தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும். இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

* ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

* சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும். வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

* பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை. சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

* இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று. இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர். வாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது.


source:??????? ?????? ?????? ??????? ????????? ????????????? ???????? ???????????..! | ??????????
 
காசியில் சிவலிங்கப் பிரதிஷ்டை

காசியில் சிவலிங்கப் பிரதிஷ்டை

காசி கண்டம், காசியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்வதுபற்றிப் பின்வருமாறு கூறுகிறது. காசியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யும் புத்திமானானவன் நூறு கோடி கல்பம் முடிந்தபிறகும் பிறவி எடுக்க மாட்டான்.
எந்த புண்ணியாத்மாக்கள் காசியில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்களோ, அவர்கள்தாம் தர்மம் செய்தவர்கள். அவர்களே புருஷார்த்திகள் ஆவார்கள். காசியில் சிவலிங்க ஸ்தாபனம் செய்வதைவிடச் சிரேஷ்டமான காரியம் உலகில் இல்லை. அதைவிட ஒரு நற்கர்மமும் கிடையாது.


தக்ஷனின் யாகமெல்லாம் அடியோடு அழிக்கப்பட்ட பிறகு அவனது நிலை மிகவும் பரிதாபமாக ஆகிவிகிறது. கையறு நிலைக்கு வந்துவிட்ட தக்ஷன் மீது கருணை கொண்ட பிரம்மா, அவன் கடைத்தேறுவதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு என்கிறார். அப்போது பிரம்மா, தக்ஷனிடம், தக்ஷனே! சிவபிரானை நிந்தித்ததனால் உனக்கு உண்டான பாவமான சக்தியை நீ கழுவ விரும்பினால் வாராணசிக்குச் செல். மகா பாதகங்களையும் விநாசம் செய்யும் காசிபுரிக்குச் சென்று நீ சிவலிங்கப் பிரதிஷ்டை செய்வாயாக. அதனால் சிவபிரான் உள்ளம் மகிழ்வார். மகேஸ்வரர் சந்தோஷமடைந்தால் இந்தச் சராசர உலகமும் சந்தோஷமடையும் காசீபுரியைத் தவிர நீ வேறு எங்கேதான் சென்றாலும் உன் பாவ கர்மங்கள் உன்னைவிட்டு விலகா என்று கூறுகிறார்.


காசியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்பவர்க்கு முக்தி நிச்சயம் கிடைக்கும். என்ற கருத்து ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வழிவழியாக வந்து இந்துக்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதித்துவிட்டிருக்கிறது. காசியில் பல்லாயிரக் கணக்கில் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

Source: Swarnagiri Vasan
 
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்...

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த
பண்ணு...
தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய்
சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க
சரி...

2.படிச்சவன் பாட்டை கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்....
இதுவும் தப்பு
சரியானது என்னன்னா ...........
படிச்சவன் பாட்டை கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ...
.
3.ஆயிரம் பேரை கொன்றவன்
அரை வைத்தியன்...
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன்.......

4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ....
சூடு அல்ல சுவடு...
சந்தையில்
மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்....

5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்....
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....
வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம் ...

காலப்போக்கில்....நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்..

Source: Dinakaran
 
ஒன்பது (Nine)

ஒன்பது (Nine)

இந்த எண்ணில் உள்ள பல அறிய விஷயங்கள்

ஒன்பது தோஷங்கள்---குளிகன், விஸ்டி, கந்தாந்தம், விஷம், உஷ்ணம், எகார்களம், ஸ்ர்பசிரஸ்,லாடம், வைத்ருதம்;;;;;

ஒன்பது கர்மசாக்ஷினிகள்--சூர்யன், சந்திரன், யமன், காலம், ஆகாசம், வாயு, அக்னி, ஜலம், பூமி;;;.

ஒன்பது நதிகள்--ஸரஸ்வதி, வைத்தரணி, ஆபாகா, மந்தாகினி, மதுஸ்ரவ,அம்லு, கௌசிகி, த்ரஸத்வதி, ஹிரந்வதி;;;;.

ஒன்பதுதூதிகள்--தூதி, தாஸி, ஸகி, செதீ, தாத்ரேயி, ப்ராதிவேசினி, லிங்கினி, சில்பினி, ஸ்வஸ்த்ரி;;;;

ஒன்பது நிதிகள்-- மஹாபத்ம, பத்ம, ஸங்க, மகர, கச்சப, முகுந்த, குந்த, நில, கரவ;;;

ஒன்பது ப்ரஜாபதிகள்---ப்ருகு, ஆங்கிரஸ, மரிசீ, அத்ரி, தக்ஷ, கர்தம, புலஹ, புலஸ்தய, க்ரௌது;;;;

ஒன்பது யோகினிகள்--கவி, ஹரி, அந்தரிக்ஷ, ப்ரபுத்த, பிப்பலாயன, ஆவிஹோத்ர, த்ரமிட, சமஸ, கரபாஜன;;;

ஒன்பது வ்ர்ஷங்கள்--பாரத, கிம்புருஷ, ஹரி, இலா, ரம்யக, ஹிரண்மய, குரு, பத்ராஸ்வ, கேதுமாலா;;;;

ஒன்பது அரசர்கள்--ஸார்வபௌம, அதிராஜ, நரேந்திர, பார்ஸ்நிக, ப்ட்டத்ருக், மண்டலேஸ்வர, பட்டபாக, ப்ரஹாரக, ஸ்ரோத்ரக்ரஹி;;;;;

ஒன்பது தேவதைகள்--பக்திஜ்வாலக, ஞானாதிக்ய, பத்ராசன, நாதக்ருத்ய, தத்வாக, பலவத, ஸமாதானமுக்ய, முக்யதேவதூத.



Source:jeyanathan Durai
 
அமாவாசையில் பிறந்தவர்கள் திருடர்களா?

அமாவாசையில் பிறந்தவர்கள் திருடர்களா?
--------------------------------------------------------------------
அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக திறமை இருக்கும். அமாவாசை ‌தித‌ி‌யிலு‌ம், பெளர்ணமி திதியிலும்தான் ஒன்பது கிரகங்களும் வலுவடைகின்றன.


தாய் கிரகமான சந்திரன் மறைவதால்,தாயின் அரவணைப்பு அமாவாசையில் பிறந்தவர்களுக்கு குறையும் என்பது சாஸ்திரநம்பிக்கைஆதலால் தாயின் அரவனைப்பில் வளராத ஆணாக இருந்தால் திருடராகவும்,பெண்ணாக இருந்தால் ந்ல்லொழுக்கம் இல்லாதவராக இருப்பார் என்பது வழிவழியாக வந்த செய்தியாகும்.



திதி செளம்ய தோஷம் என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது. அதாவது, குறிப்பிட்ட திதியில் பிறந்தால் அன்றைய தினம் ஒரு சில கிரகங்கள் வலுவிழக்கும். அதுதான் திதி செளம்ய தோஷம். ஆனால் அமாவாசை மற்றும் பெளர்ணமி திதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு எ‌ந்த ‌தி‌தி செ‌ள‌ம்ய தோஷமும் இருக்காது.
அதனால் இவர்களுக்கு மூளை பலம் அ‌திக‌ம். வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல், வாய்ப்புகளை அவ‌ர்களே உருவாக்குவார்கள். அதற்காக சில தவறுகளை அவர்கள் அறியாம‌ல் செய்வார்கள்.


சுயநலக்காரர்களாக இருக்க மாட்டார்கள்... திறமைசாலிகளாக இருப்பார்கள், அவ‌ர்களது ‌திறமையை மற்றவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள், அதற்காக வெறுத்து அவர்கள் தங்களைத் தாங்களே தலைவனாகவோ அரசனாகவோ பிரகடனப்படுத்திக் கொள்வர். அதனா‌ல் அவர்களை தலைக் கனம் பிடித்தவ‌ர்கள் என்று கூறுவர்.


அமாவாசையி‌ல் ‌பிற‌ந்தவ‌ர்க‌ள் ஏதாவது ஒரு மன வருத்தத்திலேயே இருப்பார்கள், ஒரு தேடல் இருக்கும். இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தி அடைய மாட்டார்கள். ஒரு விதமான மன உளைச்சலுடன் இருப்பார்கள். ஏனெனில் அமாவாசையன்று சந்திரன் வலுவிழப்பதுதான். சந்திரன் மனோகாரகன் என்பதால் எப்போதும் ஒருவித மன சஞ்சலத்திலேயே இருப்பார்கள். சாதித்துவிட்ட பின்னரும் இன்னமும் சாதிக்கவில்லை சாதிக்கவில்லை என்றே மன உளைச்சலில் இருப்பர்.


அமாவாசையில் பிறந்தவர்கள் ஒருவகையில் திருடுபவர்கள்தான். ஆனால் மற்றவர்களின் பொருட்களை அல்ல, மனதையும்,அன்பையும் திருடுவதில் வல்லவர்கள். அமாவாசையில் பிறந்தவர்கள் அறிவியல் திருடர்கள், அவ‌ர்க‌ள் எடு‌த்த முடிவை மா‌ற்‌றி‌க்கொ‌ள்ள மா‌ட்டா‌ர்க‌ள், முடிவு எடு‌த்தா‌ல் எடு‌த்ததுதா‌ன்.
நல்ல வாழ்க்கை துணை அமையும், ஆனாலு‌ம் இ‌ன்னு‌ம் ந‌ல்லவராக அமை‌ந்‌திரு‌க்கலாமே எ‌ன்று ‌எ‌ண்ணுவ‌ர். சாப்பிடும் வரை திருப்தி அடைவர், பிறகு குறை சொல்வார்கள். எல்லாவற்றிலும் திறன்பட செய்ய வேண்டும் என்று எண்ணுவார்கள். தாய் தந்தையை
நேசிப்பவர்களாக இருப்பர்.


பொதுவாகவே ஒருத்தரின் பிறப்பிற்கு காலமும்,நேரமும் முக்கியம்.திதி,மாதம் முக்கியம் கிடையாது.உதாரணமாக எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் குறைந்தது 20 லட்சம் நபர்களாவது பிறந்துருப்பார்கள் அதற்க்காக எல்லோரும் எம்.ஜி.ஆர் மாதிரியா ஆகிவிட்டார்கள்.கண்டிப்பாக ஒருவருக்கு பிறக்கும் நேரம் அருமையாக அமைந்து விட்டால் அவர் வாழ்வில் எல்லாவளமும் பெறுவார் என்பது உண்மை.



அன்புடன் ஜோதிடர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன்.
 
அருந்ததியை ஏன் பார்க்க வேண்டும்?

அருந்ததியை ஏன் பார்க்க வேண்டும்?

xHindu_jpg_1606135h.jpg.pagespeed.ic.KzemQZEpaU.jpg



திருமணச் சடங்கில் 'அருந்ததி பார்ப்பது' என்பது முக்கியச் சடங்கு வழக்கமாகப் பின்பற்றப்படுகிறது. யார் இந்த அருந்ததி? அருந்ததி தேவி சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரின் மனைவி. வானில் வசிஷ்டரும் அருந்ததியும் நட்சத்திரங்களாக மின்னிக்கொண்டிருப்பதாக நம்பிக்கை உண்டு.



சப்தரிஷி மண்டலத்தை நாம் வானில் எளிதாகக் காண முடியும். அதில் நான்கு நட்சத்திரங்கள் ஒரு நீள்சதுரம்போல் தோன்றும். அதிலிருந்து வளைந்த வால்போல் மூன்று நட்சத்திரங்கள் வரிசையாக நீண்டு இருக்கும். அந்த மூன்றில் நடுவில் உள்ள நட்சத்திரம்தான் வசிஷ்டர். அதற்கு மிக அருகில் ஒளி வீசும் நட்சத்திரம்தான் அருந்ததி.


அருந்ததி தர்ம பத்தினியாகப் புராணக்கதைகளில் போற்றப்படுகிறார். அருந்ததி முன்ஜென்மத்தில் பிரம்மனின் மகளாக இருந்தார் .



அக்னி தேவனுடைய மனைவி ஸ்வாஹா, முனிவர்களின் மனைவியரைப் போல் உருவம் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவள். ஒருமுறை அவளுக்கு அருந்ததியைப் போல உருமாற விருப்பம். அவளும் பலமுறை உருமாற முயன்றாள். ஆனால் அவளால் அப்படி மாற முடியவில்லை. வேறு ஒருவராக உருமாற, முதலில் அவர்களின் பண்புகளைப் பெற வேண்டும். எவ்வளவோ முயன்றும் அருந்ததியின் பண்புகளை ஸ்வாஹா், பெற முடியவில்லை.



மனம் தளர்ந்த அவள் இறுதியாக அருந்ததியிடம் சென்று, வணங்கித் தோல்வியை ஒப்புக்கொண்டாள். திருமணத்தின்போது கணவனின் கரம் பிடிக்கையில் அருந்ததியைப் பார்க்கும் பெண் நீண்ட காலம் நல்ல இல்லறத்தையும் செல்வத்தையும் அடைவாள் என்றும் வாழ்த்தினாள்.


திருமணச் சடங்கில் அருந்ததியைப் பார்க்கும் பழக்கம் உருவானது.

????? ???? - ?? ?????
 
கந்தர் சஷ்டி கவசத்தில் மனோவைத்யம்.

கந்தர் சஷ்டி கவசத்தில் மனோவைத்யம்.



10460786_766947996669319_6993111071030044252_n.jpg


கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வோரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம்.


உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.


கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க‌!...
விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க‌!
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க‌!
பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க‌!
கன்னமிரண்டும் கருனைவேல் காக்க‌!
என் இளங்கழுத்தை இனியவேல் காக்க‌! .


என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம்.


இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது. மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.


இப்படி மூளையின் தனி கவனத்திற்க்கு வரும் போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இப்படி தினசரி மிகவும் அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்க்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும்.


மனோவைத்திய ரீதியாக உடல் நோய்களைப் போக்க முடியும் என்று தற்காலங்களில் நாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி கேட்பதில்லையா. இன்றைக்கு ஆராய்ச்சி என்று சொல்லி வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததாகச் சொல்லுவதை நம் முன்னோர்கள் ஏற்கனவே கண்டறிந்தது மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்பாட்டில் செயல்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.


இந்த மனோவைத்திய முறை நம் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது.

கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாகிறது.




Source: Chinthamani
 
Last edited:
ஸ்ரீ பாஸ்கர ராயர்

ஸ்ரீ பாஸ்கர ராயர்
கி.வா.ஜகந்நாதன்

அம்பிகையைப் பரதேவதையாகக் கொண்டு வழிபடும் பக்தர்கள் ஸ்ரீ வித்யோபாசகர்கள். அவர்களுக்கு வேதத்தைப் போலப் புனித நூலாக விளங்குவது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம். அதற்குப் பலர் பாஷ்யம் எழுதியிருக்கிறார்கள். அவற்றில் எல்லாம் சிறப்பாக இருப்பது ஸ்ரீ பாஸ்கரராயர் இயற்றிய பாஷ்யம். ஸௌபாக்ய பாஸ்கரம் என்று அதற்குப் பெயர்.


ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் பிரம்மாண்ட புராணத்தின் உத்தர காண்டத்தில் உள்ள லலிதோபாக்கியானத்தில் இருக்கிறது.


பாஸ்கர ராயர் பதினேழாவது நூற்றாண்டில் தோன்றியவர். மகாராஷ்டிர தேசத்தில் உள்ள பாகா என்னும் ஊரில் கம்பீர ராயர் என்னும் பேரறிஞருக்கும் கோனாம்பிகை என்னும் அன்னைக்கும் புதல்வராக உதித்தார். இவரைத் தந்தையார் உரிய காலத்தில் காசிக்கு அழைத்துச் சென்று அங்கே உபநயனம் செய்து வைத்தார். ந்ருஸிம்ஹாத்வரி என்னும் பண்டிதரிடத்தில் இவர் வேத சாஸ்திரங்களைக் கற்றார். ஏழாம் ஆண்டிலேயே இவர் தம்முடைய அறிவுச் சிறப்பால் சபேசுவரர் என்ற அரசருடைய பெருமதிப்பைப் பெற்றார். கங்காதர வாஜபேயி என்பவரிடம் தர்க்க சாஸ்திரத்தைப் பயின்றார். அதர்வ வேதத்தில் ஆழ்ந்த பயிற்சி உடையவரானார்.


சிவதத்த சுக்லர் என்பவர் இவருக்கு ஸ்ரீ வித்யையை உபதேசித்தார். பாஸூரானந்த நாதர் என்னும் தீஷா நாமத்தை இவர் பெற்றார். ஆனந்தி என்னும் பெண்மணியை இவர் மணம் புரிந்துகொண்டார். பிறகு பார்வதி என்ற மங்கையையும் மணந்தார். பல இடங்களுக்குச் சென்று பலரோடு வாதம் செய்து வெற்றி பெற்றார். காசியில் ஸோமயாகம் செய்தார். இவருடைய புகழ் எங்கும் பரவியது.

இவருடைய ஆசிரியராகிய கங்காதர வாஜபேயி என்பவர் தமிழ் நாட்டில் காவிரிக் கரையில் உள்ள திருவாலங்காட்டில் வாழ்ந்து வந்தார். இவர் சில காலம் கிருஷ்ணா நதிக்கரையில் தங்கியிருந்தார். அப்பால் தமிழ் நாட்டிற்கு வரவேண்டுமென்ற விருப்பம் ஏற்பட்டது. அக்காலத்தில் தஞ்சையில் மகாராஷ்டிர மன்னர் ஆண்டு வந்தார். அந்த மன்னர் பாஸ்கர ராயருடைய பெருமையை அறிந்து வழிபட்டார். ஆகவே இவருக்கு ஓர் அக்ரகாரத்தையே வழங்கினார். பாஸ்கர ராயர் அங்கே தங்கித் தம்முடைய கடமைகளை ஆற்றிவந்தார். பல நூல்களை இயற்றினார். இவர் வாழ்ந்தமையால் அந்த ஊர் பாஸ்கர ராஜபுரம் என்ற பெயரைப் பெற்று விளங்குகிறது.


இறுதிக் காலத்தில் இவர் திருவிடைமருதூரில் வந்து வாழ்ந்தார். மகாதானத் தெருவில் ஒரு வீட்டில் இருந்து வந்தார். இவருடைய பெருமையை அறிந்த பல பெரியவர்களும் ஸ்ரீ வித்தியோபாசகர்களும் இவரை வந்து தரிசித்துச் சென்றார்கள். மந்திர சாஸ்திரத்தில் கரைகண்ட பெரும் புலவராகிய இவரிடம் தம் ஐயங்களைச் சொல்லித் தெளிவு பெற்றுச் சென்றார்கள்.


மாலை வேளையில் தம்முடைய இல்லத்தில் வாசல் திண்ணையில் இவர் அமர்ந்திருப்பார். தம் காலைத் தூணில் உதைந்துகொண்டு திண்ணையில் சாய்ந்தபடியே இருப்பாராம். திருவிடைமருதூரில் எழுந்தருளிய ஶ்ரீமகாலிங்க சுவாமியைத் தரிசித்து வருவதற்காக மாலை வேளையில் அந்த வீதிவழியே ஒரு சந்நியாசி போவாராம். அப்போதும் பாஸ்கர ராயர் தம் காலை மடக்காமல் தூணில் உதைந்தபடியே அமர்ந்திருப்பாரம். துறவியாகிய தமக்கு இல்லறத்தாராகிய இவர் மரியாதை தரவில்லையே என்று அந்தச் சந்நியாசிக்குக் கோபம்.



ஒருநாள் பாஸ்கர ராயர் திருவிடைமருதூர்த் திருக்கோயிலுக்குச் சென்றார். அப்பொது அந்தத் துறவியும் வந்திருந்தார். அவை இவரை கண்டதும் தம் கோபத்தை வெளிபடுத்த எண்ணிணார். அருகிலிருந்த சிலரிடம், "இவர் அகங்காரியாக இருக்கிறார். சந்நியாசியைக் கண்டால் எழுந்து நின்று வணங்குவது இல்லரத்தாருக்கு முறை. இவர் வாசல் பக்கம் காலை நீட்டிக்கொண்டிருப்பார். என்னைக் கண்டு காலை மடக்குவது கூட இல்லை" என்று சொன்னார்.



:இவர் பெரிய மகான். ஸ்ரீ வித்தையில் இவருக்கு நிகராக யாரும் இல்லை. இவர் அப்படிச் செய்திருக்கமாட்டார். தாங்கள் வேறு யாரையோ கண்டிருப்பீர்கள்" என்று சிலர் சமாதானம் கூற வந்தார்கள்.
"இவர்தான் அப்படி உட்கார்ந்திருந்தார். என் கண்ணையே நான் நம்பமுடியாதா"? என்றார் துறவி.


அப்போது சிலர், பாஸ்கர ராயரைப் பார்த்து, "சுவாமி, இந்த யதி சொல்வது உண்மைதானா? உண்மையானால் அப்படித் தாங்கள் செய்தது நியாயமாகுமா?" என்று கேட்டார்கள்.


இவர் சிரித்துக் கொண்டே, "நான் எழுந்து சென்று இவரை வணங்கியிருந்தால் இவருக்கு ஆபத்து வந்திருக்கும்" என்றார்.


"இது வீண் கற்பனை. எனக்கு மரியாதை கொடுக்காததோடு இப்படி ஒரு மிரட்டலும் செய்கிறார்" என்றார் துறவி. "அப்படி என்ன ஆபத்து வரும்?" என்று கேட்டார்.


உடனே பாஸ்கர ராயர், "சுவாமி, தங்களை நான் வணங்க எண்ணினாலும் அது தீங்காக முடியுமே என்று எண்ணி அப்படிச் செய்யவில்லை. தங்களுடைய தண்ட கமண்டலங்களையும் மேலே அணிந்த காஷாய வஸ்திரத்தையும் தனியே வையுங்கள். அவற்றை நான் வணங்குகிறேன். அவற்றிற்கு என்ன கதி நேருகின்றதென்பதைக் கண்ட பிறகும், தங்களை வணங்கச் சொன்னால் அப்படியே செய்கிறேன்" என்றார்.



உடன் இருந்தவர்கள் யாவரும் என்ன நிகழப்போகிறதோ என்ற ஆவலுடன் இருந்தனர். சந்நியாசி தம் தண்ட கமண்டலங்களையும் காஷாய உடையையும் ஓர் இடத்தில் வைத்துவிட்டு விலகி நின்றார். பாஸ்கர ராயர், "மஹாத்ரிபுரஸுந்தரி" என்று சொல்லிக்கொண்டே அவற்றின்முன் விழுந்து நமஸ்காரம் செய்தார். என்ன ஆச்சரியம்! அடுத்த கணத்தில் அவை துண்டு துண்டாக உடைந்தும் கிழிந்தும் போயின. கண்டவர்கள் யாவரும் வியந்தனர். துறவி பாஸ்கர ராயருடைய பெருமையை நினைத்து அஞ்சலி செய்தார். "தாங்கள் இல்லறவாசியானலும் துறவிகளுக்கு எல்லாம் மேற்பட்டவர்" என்று சொல்லிப் போற்றினார்.


காசியில் இவர் இருந்தபோது இவர் ஒரு யாகம் செய்தார். அப்போது பல சாஸ்திர விற்பன்னர்கள் அங்கே வந்திருந்தார்கள். இவரிடம் பொறாமைகொண்ட பலர் இவரை அணுகிப் பல கேள்விகளைக் கேட்டார்கள். அவற்றிற்கெல்லாம் தக்கபடி இவர் விடையிறுத்தார். வேதம், சாஸ்திரம், மந்திர சாஸ்திரம் முதலிய பலவற்றில் அவர்கள் வினா எழுப்பினார்கள். அவற்றுக்கெல்லாம் இவர் உடனுக்குடன் விடையிறுத்து வந்தார். அவற்றைக் கேட்டுப் பலரும் இவரை வணங்கி வழிபட்டனர்.



லலிதா ஸஹஸ்ரநாமத்தில் "மஹாசதுஷ்ஷஷ்டிகோடி யோகினீ கண ஸேவிதா" என்பது ஒரு திருநாமம். "அறுபத்து நான்கு யோகினிக் கூட்டத்தினரால் போற்றி வழிபடப்படுகிறவள்" என்பது அதன் பொருள். ஒரு பொறாமைக்காரர் இவரை அணுகி, "அந்த அறுபத்து நான்கு கோடி யோகினிகளப் பற்றிய விவரங்களைச் சொல்வீர்களா"? என்று கேட்டார்.



"சொல்லுகிறேன். நீங்கள் எழுதிக்கொள்ளுங்கள்" என்றார் இவர்.



உடனே அவர் ஏடும் எழுத்தாணியும் கொண்டு வந்து எழுதச் சித்தமானார். பாஸ்கர ராயர் ஒவ்வொரு யோகினியின் பெயரையும் அவளைப்பற்றிய விவரங்களையும் சொல்லத் தொடங்கினார்.



எழுதுகிறவர், "இவர் எவ்வளவு பேர்களைச் சொல்லப் போகிறார்! நூறு பேரைச் சொன்னாலே பெரிது" என்ற அலட்சிய பாவத்தோடு எழுதலானார். பாஸ்கர ராயரோ தட்டுத் தடங்கலின்றிச் சொல்லிக்கொண்டே வந்தார். எழுதுகிறவர் முதலில் உற்சாகத்துடன் எழுதினார். பிறகு சற்றே தளர்ச்சியுடன் எழுதினார். அப்புறம் பல்லைக் கடித்துக்கொண்டு எழுதினார். அவர் கை வலித்தது. விரல்கள் சிவந்தன.


அவருடைய சிரமத்தையறிந்து சற்றே நிதானமாகச் சொல்லத் தொடங்கினார் இவர். அவர் எழுதிப் பார்த்தார். இனிமேல் எழுத முடியாது என்ற நிலை வந்தது. ஏட்டையும் எழுத்தாணியையும் அப்படியே வைத்தார். இவருடைய திருவடிகளில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணினார். "சுவாமி, என்னை மன்னிக்க வேண்டும். நான் அறியாமையால் தங்களைப் பரிசோதிக்கத் தொடங்கினேன். அதற்குரிய தண்டனையை இந்த அளவிலே பெற்றது போதும். என்னை க்ஷமித்து எனக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டும். தாங்கள் மனிதப் பிறவியல்ல. அம்பிகையின் திருவருள் முழுதும் பெற்ற தெய்வப் பிறவி" என்று சொல்லி விம்மினார்.



"உங்களுக்கு கஷ்டமாயிருப்பதை முன்பே சொல்லக்கூடாதோ? நான் அப்போதே நிறுத்திக்கொண்டு, மறுபடியும் சௌகரியமான நேரத்தில் வந்து எழுதும்படி சொல்லியிருப்பேனே! உங்களுக்கு விருப்பமானால் மறுபடியும் வந்து சேருங்கள்’ சொல்லுகிறேன். எழுதிக்கொள்ளலாம்" என்றார் இப்பெரியார்.


"அபசாரம்! அபசாரம்! இனிமேல் தங்களுக்கு இத்தகைய அபசாரத்தைச் செய்ய மாட்டேன்" என்று சொல்லி அவர் விடைபெற்றுச் சென்றாரம்.


பாஸ்கர ராயர் தம்முடைய 95-ஆவது வயசில் திருவிடைமருதூரில் அம்பிகையின் திருவடிகளை அடைந்தார். பாஸ்கரராஜபுரத்தில் இவரைச் சமாதி செய்து அதிஷ்டானத்தை நிருமித்தார்கள். இவருடைய மூத்த மனைவியார் அங்கே ஸ்ரீ பாஸ்கரேசுவரர் ஆலயத்தை அமைத்து வழிபட்டார். அந்த ஆலயத்தில் இன்றும் பூஜை முதலியவை முறையாக நடைபெற்று வருகின்றன. ஆனந்தவல்லி என்பது இந்தக் கோயிலில் உள்ள அம்பிகையின் திருநாமம்.


பாஸ்கய ராயர் நாற்பதுக்கு மேற்பட்ட நூல்களை இயற்றியிருக்கிறார். மீமாம்ஸா பாஷ்யம், வியாகரணம், யாப்பியல், ஸ்ம்ருதி, துதிகள், மந்திர சாஸ்திரம், பாஷ்யங்கள் ஆகிய பல துறைகளில் அமைந்தவை அவை. காசி முதலிய இடங்களில் சில ஆலயங்களை நிறுவியிருக்கிறார்.


இவருடைய லலிதா ஸஹஸ்ரநாம பாஷ்யத்தைப் பார்த்தால் இவருடைய மேதாவிலாசம் நன்கு புலப்படும். வேதம், ஆகமம், புராணம், மந்திர சாஸ்திரம், ஸ்ரீ வித்யை முதலியவற்றில் இவருக்குள்ள பரந்த அறிவு யாவரையும் வியப்பில் ஆழ்த்துவதற்குரியது. இவருடைய மாணாக்கர்கள் பலர். அவர்களில் ஒருவராகிய, ஜகந்நாதர் என்ற உமாநாதர் ஸ்ரீ பாஸ்கர விலாஸம் என்ற நூலில் இவருடைய பெருமையையெல்லாம் விரித்துரைத்திருக்கிறார்.


லலிதா ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் இவர் 168 நூல்களிலிருந்து மேற்கோள்காட்டுகிறார். உபநிஷத்துக்கள், ஸ்மிருதிகள், புராணங்கள், தந்திரசாஸ்திரங்கள், தோத்திர நூல்கள், காவிய, கல்பசூத்திரங்கள், ஆகமங்கள், உபபுராணங்கள், கீதை, இதிகாசங்கள், யோக சாஸ்திரம், ஸம்ஹிதைகள் என்ற பலவகை நூல்களை இவர் நன்கு அறிந்திருந்தார் என்பதை அந்த மேற்கோள்கள் தெளிவுபடுத்தும்.


இத்தகைய மகானுடைய அதிஷ்டானத்திருக்கோயில் தமிழ் நாட்டில் இருப்பது இந்த நாட்டின் பெருமையை அதிகப்படுத்துகிறது. மகான்களுடைய திருக்கோயில்கள் தனிச்சிறப்புடையவை. பல பெரிய தலங்கள் சித்தர்களுடைய சமாதியின் மேல் எழுந்தவை. அவை வழிபடுபவர்களுக்குப் பலவித நன்மைகளை அளித்துக்கொண்டு விளங்குகின்றன. பாஸ்கரராஜபுரத்திலுள்ள பாஸ்கரேசுவரர் திருக்கோயிலும் அத்தகைய புனித ஆலயங்களில் ஒன்று.


நன்றி : கலைமகள்



: kamakoti.org

~~~~~~~
 
அருந்ததி தேவி

அருந்ததி தேவி


சந்திரபாகா நதிக்கரையில் தாபஸாரண்யம் என்று பெயருள்ள ஒர் ஆச்ரமம் இருந்தது. அதில் மேதாதிதி என்ற முனிவர் வசித்து வந்தார். அவர் பெரும் வேள்வி நடத்தினார். அவ்வேள்வியின் முடிவில் வேள்வித் தீயிலிருந்து ஒரு பெண் குழந்தை தோன்றியது. முனிவரான மேதாதிதி அக்குழந்தையை அன்புடன் வளர்த்து வந்தார். குழந்தை விளையாட்டில்கூடத் தர்மமான கார்யங்களுக்குத் தடங்கலாக இருந்ததில்லை. ஆகையால் அவளுக்குத் அருந்ததி என்ற பெயர் சூட்டப்பட்டது. குழந்தை அருந்ததிக்கு வயது ஐந்தாயிற்று. ஒரு நாள் பிரம்ம தேவர் மேதாதிதி முனிவரின் அருகில் வந்தார்.

குழந்தை அருந்ததியை நோக்கினார். மறைந்திருந்த முன்ஜன்ம அறிவுகள் வெளிப்பட வேண்டிய காலம் வந்ததை அறிந்தார். முனிவரின் சொன்னார். அருந்ததி கல்வி கற்கும் வயதை அடைந்திருக்கிறாள். ஆகையால் இவளை இப்பொழுதே நல்லோழுக்கமுள்ள பத்தினிப் பெண்களிடம் அனுப்ப வேண்டும். அவர்களிடமிருந்தே இவன் ஒழுக்கத்துடந் கூடிய கல்வியைக் கற்க வேண்டும்.





இதைக் கேட்ட முனிவர், குழந்தையிடம் உள்ள பேரன்பினால் குழந்தையைப் பிரிய மனமில்லாதவராக்த சற்று தயங்கினார். இதைக் கண்ட பிரம்மன் முனிவரை நோக்கி நீரும் நானும் படித்தவர் தாம். இருந்தாலும், பெண்களுக்குகந்த கல்வியைப் பெண்கள்தான் கற்பிக்கமுடியும். பெண்களுக்கு இயற்கையாக அமைந்துள்ள நாணம், அச்சம், பக்தி, பொறுமை முதலிய நற்குணங்களை உள்ளவர்கள்தான் வர்ணிக்க முடியும். ஆண்கள் பெண்களுக்குக் கல்வி கற்பிப்பதால் அப்பெண்கள் ஞானம் முதலிய பெண்களுக்குள்ள சிறப்பான குணங்களை இழந்து ஆண்களுடைய குணங்களைப் பெறுகிறார்கள். பெண்களுக்கு ஒழுக்கமும் நாணமும்தான் முக்கியம்.

உன் ஆச்ரமத்தில் பெண்கள் கிடையாது. ஆகையால் c இக்குழந்தையைப் சாவித்ரியிடம் அனுப்பு என்று சொன்னார். முனிவர் பிரம்மாவின் கட்டளைப்படி அருந்ததியை அழைத்துக்கொண்டு சூர்யலோகம் சென்றார். சாவித்ரி தேவியைச் சந்தித்தார். சாவித்ரி தேவியும் அருந்ததியை அழைத்துக் கொண்டு மேருமலைக்குச் சென்றார். அங்கே சரஸ்வதி காயத்ரி முதலிய தேவர்களும் வந்திருந்தார்கள். முனிவர் அவர்களை தனித்தனியாக வணங்கினார். பிறகு அவர்களை நோக்கி, தேவியரே இவள் என் பெண் அருந்ததி, பிரம்மனின் கட்டளைப்படி இவளை உங்களிடம் கல்வி கற்க ஒப்புவிக்கிறேன். இவள் தங்களிடமே இருக்கட்டும். தாங்கள் இவளுக்குப் பெண்களுக்கு உசிதமான கல்வியைக் கற்பியுங்கள் என்றார்.



தேவியர் முனிவரே பகவான் விஷ்ணுவின் அருளாள் இவள் முதலிலேயே ஒழுக்கமுள்ளவளாக இருக்கிறாள். பெண்களுக்கு ஒழுக்கம்தான் மிக முக்யம். ஆனாலும் பிரமனின் கட்டளைப்படி இவளை எங்கள் அருகில் வைத்துக்கொள்கிறோம். இவள் முன் ஜென்மத்தில் பிரம்மனின் பெண்ணாக இருந்தாள். உம் தவவலிமையாலும், ஈசனருளாலும் இவளை நீர் மகளாகப் பெற்றீர். இவளால் உலகத்திற்கு அநேக நன்மைகள் உண்டாகும். பெண் உலகத்திற்கே ஒற் எடுத்துக்காட்டாக விளங்கப்போகிறாள் என்றார்கள்.



முனிவர் தம் குழந்தை அருந்ததியை அவர்களிடம் ஒப்புவித்துச் சென்றார். அருந்ததியும் அத்தேவியற்களுக்கு தினமும் பணிவிடை செய்து கொண்டும், கல்வி கற்றுக்கொண்டும் வந்தாள். சில ஆண்டுகள் சென்றன. அருந்ததி திருமணப் பக்குவத்தை அடைந்தாள். ஒரு நாள் வசிஷ்ட முனிவர் அருந்ததியின் ஆசிரமப் பக்கம் சென்றார். தற்செயலாக இருவரும் சந்தித்தார்கள். அருந்ததி நாணமடைந்து உள்ளே ஒடி விட்டாள்.


இதையறிந்த தேவியர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலிய தேவர்களும் வந்தார்கள். மேதாதிதி முனிவர் வசிஷ்டமுனிவருக்குத் தம் மகள் அருந்ததியைத் தானம் செய்தார். தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். மும்மூர்த்திகளும், மணப்பந்தலில் தம்பதியினரை உட்காரவைத்து நீராட்டினார்கள். அந்நீரே கோமதி, சரயூ முதலிய ஆறுகளாக பெருகிற்று. திருமண காலத்தில் பிரம்ம தேவர் மிக அழகிய விமானமும், விஷ்ணு அழியாப் பதவியும், ருத்ரர் நீண்ட ஆயுளையும் அளித்தார்கள். வசிஷ்டர், தம் மனைவியுடன் தமக்கென அளிக்கப்பட்ட சப்தரிஷி மண்டலத்தில் இன்னமும் இருந்து கொண்டிருக்கிறார். அவர் அருகில் மிகச் சிறு நக்ஷத்திரமாக அருந்ததி தேவி விளங்குகின்றாள். சப்தரிஷி மண்டலத்தில் தம் கனவரை விட்டுப் பிரியாமல் இடம் பெற்று இருக்கும் தேவி அருந்ததி ஒருவள்தான்.




ஒரு சமயம் அக்னி தேவனுடைய மனைவி ஸ்வாஹாதேவி, அருந்ததியைப்போல உருவம் எடுக்க விரும்பினாள். எவ்வளவு முயற்சி செய்தும் அருந்ததியைப்போல உருவம் எடுக்க முடியவில்லை.

இதற்குமுன், அநேக முனிவர்களின் மனைவியைப்போல உருவம் எடுத்திருக்கிறாள். ஒருவரைப்போல் நாம் ஆகவேண்டுமானால் முதலில் அவர்களுடைய குணங்களைப் நாம் பெற வேண்டும். குணத்தை அடைந்த பிறகே நாம் அவர்களைப்போல் ஆகமுடியும்.

அருந்ததியோ மஹா உத்தமி. ஒழுக்கத்தை உயிரினும் மேலாக மதிப்பவள். ஸ்வாஹாதேவி அருந்ததியிடம் சென்று கைகூப்பிச் சொன்னாள். தேவி நீங்கள் ஒருவர்தான் பதிவ்ரதா தர்மத்தைச் சரியான முறைப்படி அனுஷ்டிக்கிறீர்கள். தங்களைப் போன்ற உத்தம பத்தினியை நான் இதுவரை பார்த்ததே இல்லை. எந்தப்பெண் திருமண காலத்தில் அக்னி, அந்தணன் இவர்களுக்கு முன்னால் கணவனின் கையைபிடிக்கும் சமயம் உங்களை நினைக்கிறாளோ, அவள் நீண்டகாலம் கணவனுடன் சுகத்தையும், புத்திரனையும், செல்வத்தையும் அடைவாள். நான் எனது அல்ப புத்தியினால் உங்களைப்போல் உருவத்தை அடைய எண்ணினேன். ஆனால் என்னால் முடியவில்லை. என்னை மன்னிக்கவேண்டும் என்று வணங்கிச் சொன்னாள். இதனால்தான் திருமணக்காலத்தில் அருந்ததியைப் பார்க்கின்றார்கள். நல்லோரைக் காண்பது நல்லதல்லவா.



ஒரு சமயம் இந்திரன், அக்னி, சூரியன், இம்மூவரும் பதிவ்ரதா தர்மத்தைச் சோதிப்பதற்காக அருந்ததியின் ஆச்ரமத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அருந்ததி நீர் எடுத்துவர, குடத்தை எடுத்துக் கொண்டு நதியை நோக்கிச் சென்றுகொம்டிருந்தாள். எதிரில் தேவர்களைக் கண்டு வணங்கினாள். வருகையின் காரணம் வினவினாள். தேவர்கள் எங்களுடைய சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காக தங்களிடம் வந்துள்ளோம் என்றாகர்கள்.

அருந்ததி சற்ரு இவ்வாசனத்தில் அமருங்கள் நான் நதியிலிருந்து ஜலம் கொண்டுவந்தபின் உங்களுடைய சந்தேகத்தைத் தீர்க்கிறேன் என்றாள். தேவர்கள் எங்களுடைய சக்தியால் இக்குடத்தை நிறப்பிவிடுகிறோம் என்றார்கள். அருந்ததி குடத்தை கீழே வைத்தாள். இந்திரன், அக்னி, சூர்யன் மூவரும் எவ்வளவு முயற்சி செய்தும் அக்குடத்தை நிரப்பமுடியவில்லை. மூவரின் சக்தியால் முத்தால் குடம்தான் நிறைந்தது. தேவர்கள் தங்களால் முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டனர். அருந்ததி தனது பதிவ்ரதா மகிமையால் அக்குடத்தை நிரப்பினாள்.

தேவர்கள் சந்தேகம் தெளிந்தவர்களாய் பதிவ்ரதையை வணங்கிச் சென்றனர். பத்தினிப் பெண்ணின் பெருமை தேவர்களின் பெருமையைவிட மிக உயர்ந்தது.

பத்தினிப் பெண்களால்தான் நம் தேசம், தர்மம் இவை முன்னேர வேண்டும்.

: ( ) : kamakoti.org:
 
The Four Types Of Friends According To The Buddha

The Four Types Of Friends According To The Buddha


Great_Buddha_Ch.jpg



Young man, be aware of these four good-hearted friends: the helper, the friend who endures in good times and bad, the mentor, and the compassionate friend.

The helper can be identified by four things: by protecting you when you are vulnerable, and likewise your wealth, being a refuge when you are afraid, and in various tasks providing double what is requested.


The enduring friend can be identified by four things: by telling you secrets, guarding your own secrets closely, not abandoning you in misfortune, and even dying for you.


The mentor can be identified by four things: by restraining you from wrongdoing, guiding you towards good actions, telling you what you ought to know, and showing you the path to samsaric heavens.


The compassionate friend can be identified by four things: by not rejoicing in your misfortune, delighting in your good fortune, preventing others from speaking ill of you, and encouraging others who praise your good qualities.

- Taken from the Sigalovada Sutta


The Four Types Of Friends According To The Buddha | TruthTheory
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top