• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My Collections

Status
Not open for further replies.
ஏழரை நாட்டு சனி

ஏழரை நாட்டு சனி

ஸ்ரீ ராமனுக்காக பாலம் கட்டும் பணியில் ஹனுமான் ஈடுபட்டிருந்த பொழுது அவருக்கு ஏழரை நாட்டு சனி தொடங்கும் காலம் வந்தது. அதற்காக அவரை பீடிக்க சனி பகவான் அவரிடம் அனுமதி கேட்கிறார். அவரோ தான் ராம கைங்கர்யத்தில் ஈடுபட்டிருப்பதால் தன்னை தொந்திரவு செய்யக் கூடாது என்கிறார். உலகில் உள்ள அத்தனை பேரும் தன் பிடிக்குள் ஏழரை ஆண்டு காலங்கள் வந்துதான் தீர வேண்டும் என்பது இயற்கை நியதி ஆகவே உங்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுத்தாமல் உங்கள் உடலின் ஏதோ ஒரு பகுதியில் நான் இருந்து கொள்கிறேன் என்கிறார். ஆஞ்சநேயர் தன் வாலில் அவர் இருந்து கொள்ளலாமேன்கிறார். அதன்படி சனீஸ்வரன் ஆஞ்சநேயரின் வாலில் உட்கார்ந்து கொள்கிறார்.

ராம பாலம் கட்டுவதற்காக கற்களை புரட்டி தன் வாலில் கட்டி மேட்டிலும் பள்ளத்திலும் தாவி, குதித்து, ஓடி வர படாத படு பட்டுவிட்ட சனீஸ்வரன்,' போதும் போதும் என்னை விட்டு விடு இனி நீ இருக்கும் பக்கமே நான் வர மாட்டேன்' என்று கதறுகிறார். உடனே ஆஞ்சநேயர்," என்னை மட்டுமல்ல என்னை வணங்குபவர்களுக்கும் நீ எந்த தொந்தரவும் தரக் கூடாது என்று அவரிடம் வாக்குறுதி பெற்றுக் கொள்கிறார்.

அதனால் எங்கு ஆஞ்சநேயர் இருக்கிறாரோ அங்கு சனி பகவான் வரமாட்டார் என்பது நம்பிக்கை. நடை முறையில் பார்த்தால் கூட ஆஞ்சநேயரின் அம்சமான குரங்குகள் எங்கு அதிகம் இருக்கின்றனவோ அங்கு சனி பகவானின் அம்சமான காக்கைகள் இருப்பதில்லை.



Source:Bhanumathy Venkateswaran

Indian Brahmins Forum
 
பத்மாஸனா

பத்மாஸனா




10314715_571774959609380_2567252326693447727_n.jpg



பத்மத்தை ஆஸனமாக உடையவள்

1.அம்பாள் ப்ரம்ஹா ரூபமாக இருப்பதாலும், ப்ரம்ஹா பத்மத்தை ஆஸனமாக உடையவராக இருப்பதாலும், அம்பாளுக்கு பதமாஸனா என்று பெயர்.

2.ப்ரக்ருதி மயமான இலைகளோடும் விகாரமயமான இதழ்கலோடும் ஸ்ம்வித்தாகிய தண்டோடும் கூடிய பத்மத்தை பீடமாக உடையவளென்றும் சொல்லலாம்.

3. பக்தர்களுக்கு பத்மாவை (லக்ஷ்மியை) பங்கிட்டு கொடுபவள் என்றும் அர்த்தம் சொல்லலாம்

4. பத்மனென்றால் சூரபத்மனைச் சொல்லப்படும். பத்மனை ஸம்ஹாரம் பண்ணியதால் பத்மாஸனா என்று பெயர்.

5. பிந்துவுக்கு பத்மம் என்று பெயர் உண்டு. அதில் வீற்றிருப்பவள் பத்மாஸனா

6. 'பத்மம் ஸ்யாத் அம்புஜ வ்யூஹ நிதி ஸம்க்யாஹி பிந்துஷு' என்றபடி பத்மம் என்ற பதத்திற்கு இருக்கும் இதர அர்த்தங்களும் இம்மாதிரியே சொல்லலாம்.


Source:

Sage of Kanchi
 
Last edited:
ஆனந்த தாண்டவம்

ஆனந்த தாண்டவம்



200px-Natarajar_at_chidambaram.jpg


ஆனந்த தாண்டவம்
என்பது சிவபெருமான் ஆடும் தாண்டவங்களில் ஒன்றாகவும். ஐம்பெரும் தாண்டவம், சப்த தாண்டவம், நவ தாண்டவம் மற்றும் பன்னிரு தாண்டவம் என்ற தாண்டவகைகளுள் முதன்மையானதாகவும்,


சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தினைக் காண சிதம்பரம் தலத்தில் பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் தவமிருந்தனர். அவர்களின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆட இசைந்தார். புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு, நாகாபரணம் அணிந்து, வலக்கையால் டமருகத்தை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயம் அளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடினார்.


படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களை இயற்றும் தாண்டவமாகவும், பிரபஞ்ச இயக்க நடனமாகவும் போற்றப்படுகிறது. இந்நடனத்தினை சிதம்பரத்தில் சிவபெருமான் ஆடினார். ஆனந்த தாண்டவம் ஆடும் சிவபெருமானின் கோலம் நடராஜர் என்று அறியப்பெறுகிறது.


??????????????
 
சிந்தனைக்குச் சில.1

சிந்தனைக்குச் சில....1

காலம்......மூலம்.....நாலம்..
கணபதி ஹோமத்திற்கு மிகவும் முக்கியமானது இவை
மூன்றும். காலம் என்பது உதய காலத்திற்குள் முடிக்க
வேண்டுமென்பதையும், மூலம் என்பது கணபதி மூல
மந்த்ரத்தால் கணபதி ஹோமம் செய்யவேண்டும்
என்பதையும், நாலம் என்பது தேங்காய் கீற்றுகள் எட்டு
கொண்டு ஹோமம் செய்து மிகுந்ததை வினாயகருக்கு
நிவேதனமகச் செய்வதையும் குறிக்கும்.

தீப வழிபாடு ...

தினந்தோறும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதற்கும் நேரம்,
நெறிமுறை அவசியம்.
அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் ஏற்றுவதாலும், மாலை
5.30 முதல் 6 மணிக்குள் ஏற்றுவதாலும் நிறைவாண வளமும்,
பலன்களும் நிச்சயம் உண்டாகும்.


திரி தரும் பலன்கள்..


பஞ்சுத் திரி : வீட்டில் மங்களம் நிலைக்கும்.
தாமரைத் தண்டுத் திரி:முன்வினைப் பாவம்
நீங்கி செல்வம் நிலைக்கும்.
வாழைத் தண்டுத் திரி: மக்கட் செல்வம் உண்டாகும்,
தெய்வக் குற்றம் நீங்கி மனச் சாந்தி யேற்படும்.
வெள்ளை எருக்கன் பட்டைத்திரி:
பெருத்தசெல்வம் வந்து சேரும்
புது மஞ்சள் துணித் திரி: பேய் பிடித்தவர்களுக்கு
அதன் தொல்லை தீரும், காற்று கருப்பு சேட்டைகள்
என்ற கஷ்டங்கள் விலகும். நோய் தீர்ந்து அம்பாள் அருள்
கிட்டும்.
திரு விளக்கை வழிபடும் திசை பலன்..
கிழக்கு:எல்லா வித கிரஹ தோஷங்களும் பீடைகளும்
விலகும். மேற்கு: கடன் தொல்லை, பங்காளிப் பகை,
சனிபீடை முதலியன நீங்கும். வடக்கு: திரண்டசெல்வம் சேரும்,
திருமணத்தடை நீங்கும், கல்வி வளர்ச்சியாகும், சர்வமங்களமும்
உண்டாகும். தெற்கு நோக்கி ஏற்றக் கூடாது.
ஜபம் செய்யும் முறை...பிறர் காதில் விழும்படி செய்வது வாசிகம்,
தனது காதில் விழும்படி செய்வது உபாம்சு, மனதினால் செய்வது
மானசம்.வாசிகம் ஒருமடங்கு பலன் தரும், உபாம்சு 100 மடங்கு
பலன் தரும், மானசம் 1000 மடங்கு பலனளிக்க வல்லது.

ஸ்ரீசடாரி...

திருவடிகளைக் காப்பது திருவடி நிலை. திருவடி நிலையே
பாதுகை. பாதுகையே ஸ்ரீசடாரி. ஸ்ரீ சடாரியே அழ்வார்.
பாதுகை, ஸ்ரீசடாரி, ஆழ்வார் யாவும் ஒன்றே. சடகோபன்
என்னும் பாதுகை அதாவது ஸ்ரீ சடாரி மூலமேதான் ஸ்ரீய:
பதியான பகவான் திருவடிகளில் நம் சிரசை சமர்பிப்பது
சாத்யம்.

அபிவாதனங்கள் செய்யத்தகாத காலங்கள்...
பெருமளை சேவிக்கும்போது,
யதிகளை சேவிக்கும்போது,
ஸ்த்ரீகளை சேவிக்கும்போது,
பெரியவர்களின் கோஷ்டியை சேவிக்கும்போது
அபிவாதனம் செய்யக்கூடாது.

ஆண்டவன் வசதியுள்ளவர்கள் படைக்கும் டாம்பீகமான
பூஜையை விட உண்மையான மனதுடன் செய்யும்
பூஜைகளையும் ப்ரார்த்தனைகளையும் ஏற்கிறான்.


பிறந்த தினங்களையும், ஆசார்யார்களின்

திருநக்ஷத்ரங்களையும் அந்த நக்ஷ்த்ரங்கள்
12 நாழிகைக்கு குறையாமல் இருக்கும்போது
கொண்டாட வேண்டும். குறைந்தால் முந்தினமே
கொண்டாட வேண்டும். ஒரே மாதத்தில் 2 நக்ஷத்திரங்கள்
வந்தால் 2வது நக்ஷத்திரத்தில் பண்ணவேண்டும்.

பூஜைக்கு மடி உலர்த்த சாப்பிடுமுன் தான் செய்ய
வேண்டும். சாப்பிட்ட பின் உலர்த்தினால் பூஜைக்கு
உகந்ததாகாது.

துளசியும், வில்வமும்...

திருமாலுக்கு உகந்தது துளசி, சிவனுக்கு உகந்தது வில்வம்.
சிவம் _ சூடு, விஷ்ணு= குளிர்ச்சி, சிவம் -அனல், விஷ்ணு-நீர்
அதனால் சிவாலயத்தில் வெந்த நீறும்(விபூதி), பெருமாள்
கோவில்களில் குளிர்ந்த நீரும் தருகிறார்கள். சூட்டைத்
தவிர்ப்பது வில்வம், குளிர்ச்சியைத் தவிர்ப்பது துளசி.
ஆகவே சிவாலயத்திலும், விஷ்ணு ஆலயத்திலும்
முறையே வில்வம், துளசி கொண்டு அர்ச்சிக்கிறார்கள்.

கோவில்களில் நமஸ்கரிக்கும் முறை...

பலி பீடம், கொடி மரம் இவற்றிற்கு அருகே மட்டும்
நமஸ்கரிக்கவேண்டும். மற்ற இடங்களில் கூடாது.
கிழக்கு நோக்கிய கோவிலில் வடக்கு நோக்கி
நமஸ்கரிக்க வேண்டும் மேற்கு நோக்கிய கோவிலுக்கும்
இதுவே முறை. வடக்கு தெர்கு நோக்கிய கோவில்களில்
வடக்கு நோக்கி செய்ய வேண்டும்.
பணிவுடன் வாழ்தல் எல்லாருக்கும் நல்லது.
வசதியுடையவர்கள் பணிவுடன் இருப்பது
இன்னும் அவர்களுக்கு சிறப்பு.

இன்னும் வரும்
சிந்தனைக்குச் சில..



Source:Sage of Kanchi

Saraswathi Thyagarajan
 
ஞானம் அடைவதற்கு மூன்று வழிகள் உள்ளன.

ஞானம் அடைவதற்கு மூன்று வழிகள் உள்ளன.



1. தீவிர வைராக்யம் கைகூடப் பெற்று தன் மனம் தன் வசமிருக்கப் பெற்றவன் ஞானமார்க்கத்தை ஏற்றுக் கொள்ளலாம்.


2. சாஸ்த்ர கர்மாக்களில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்கள் கர்ம மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளலாம்.


3. கர்மங்களைப் பற்றிய அறிவோ தீவிர வைராக்யமோ இல்லாதவர்கள் பக்தி மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளலாம்.


இவற்றுள் பக்தி மார்க்கம் ஆனந்த மயமான ஒன்று. ஞான மார்க்கத்தை அனுசரிப்பவர்களுக்கு சாதனை செய்யும் காலத்தில் ஆனந்தம் கிடையாது. மனத்தையும் இந்த்ரியங்களையும் அடக்கி எப்போதும் தம் வசம் வைத்திருக்கும் கடினமான பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.


ஆனால் பக்தி மார்க்கத்தில் இருப்பவர்களுக்கு எப்போதுமே ஆனந்தமான மனது திடமாக இல்லாவிட்டாலும் கூட பகவத் பக்தியினால் மனது தானாகவே ஸ்திரமாகி நிர்க்குணமான ஆத்ம ஸாக்ஷாத்காரம் தானாகவே வந்து சேரும்.


பகவான் பக்தனது ஹ்ருதயத்தில் அமர்ந்து ஞான தீபத்தைத் பிரகாசித்து அக்ஞானத்தை நாசம் செய்கிறான். பகவான் பெருமை இப்பேர்ப்பட்டது.


மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விஷயத்தில் ப்ரீதி வைத்து வாழ்கிறான். இந்த ப்ரீதி பகவானின் பாதார விந்தங்களின் மேல் திருப்பப்பட்டு மேலான பலன் கிடைக்கிறது.


ஏதேனும் கஷ்டம் நீங்குவதற்காக அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காகப் பகவானிடம் பக்தி செலுத்தினால் அது பக்தி ஆகாது. வெறும் வியாபாரமாகவே ஆகும். பகவானுக்காக மட்டுமே பக்தி செய்ய வேண்டும்.


ஸாதனா பக்தி, ஸாத்ய பக்தி என இரண்டு வகைகள் உள்ளன.


பகவானின் லீலா வினோதங்களைப் புராணங்களிலும், கதைகளிலும் படித்து அறிந்து ஆனந்தம் அடைவது ஸாதனா பக்தியாகும்.


இதன் மூலமாக பக்தி ஸ்திரமாகி பகவத் நாமா, லீலா விபூதிகளைக் கேட்ட மாத்திரத்திலேயே ரோமாஞ்சலி ஏற்படும் ஸாத்ய பக்தி உண்டாகிறது.


இறைவனைப் பற்றிக் கேட்பது
அவனை ஸ்துதிப்பது
அவனை நினைப்பது
அவனை ஸேவிப்பது
அவனை அர்ச்சிப்பது
அவனை வணங்குவது
அவனுடைய தாஸனாயிருப்பது
அவனை நண்பனாக வைத்துக் கொள்வது
அவனிடம் ஆத்ம நிவேதனம் செய்வது.



இவையே ப்ரஹலாதனால் காட்டப்பட்ட உத்தமமான வித்யைகளாகும்.


பகவத்பாதர் பக்தியிலே இருக்கப்பட்ட படிகளைக் காண்பிப்பதற்காக ஒரு ஸ்லோகத்தைத் தருகிறார்.

அதன்படி

14Pakthi.jpg



1. பக்தன் தன் பாக்ய விசேஷத்தால் பகவானைப் பிடித்துக் கொள்கிறான். அவனுக்கு மனோவ்ருத்தி பகவத் ஆதாரமாகிறது.


2. இவன் தன்னிடம் இப்படி ப்ரீதி வைத்து விட்டானே என பகவானுக்குப் பக்தன் மீது கருணை ஏற்பட்டு விடுகிறது. கருணை உண்டானவுடன் பக்தனே விட்டுப் போக வேண்டும் என்று நினைத்தாலும் போக முடியாது.


3. பகவான் பக்தனைத் தன்னுடையவன் என்றும், பக்தன் பகவானைத் தன்னுடையவன் என்றும் சொந்தம் கொண்டாடி ஓர் அந்யோன்யத்தை ஏற்படுத்திக் கொண்டு விடுகின்றனர்.


4. பக்தனுக்கு அனுக்ரஹம் செய்ய பகவான் பல வித ரூபங்களையும் எடுத்து பற்பல லீலைகளையும் புரிகிறான். ஆக பக்தனின் காரணமாக பகவானின் லீலைகள் நடைபெற்று அவற்றின் காரணமாகப் பகவானுக்கே ஒரு பெருமை ஏற்பட்டுவிடுகிறது.


5. பக்தனின் மனம் என்னும் ஆறு பகவான் என்னும் ஸமுத்திரத்தை இறுதியாக அடைகிறது. தானும் ஸமுத்திர வடிவையே பெற்றுவிடுகிறது. அப்போது மனம், ஆத்மா எனும் பாகுபாடே இருப்பதில்லை.
இத்தகைய ஒரு நிலைதான் ‘ஆத்ம நிவேதனம்’ என்று அழைக்கப்படுகிறது. இவ்வகையான ஆத்ம நிவேதனம் வரப் பெற்றால் ஞானம் கை கூடி விடுகிறது.


பக்தி மார்க்கம் மிகச் சுலபமானது. ஆனந்தமானது. பக்தனின் அந்தக்கரணம் சுத்தமாக இருக்கிறதா என்று மட்டும்தான் பகவான் பார்ப்பான். அப்படி இருக்கப்பட்ட எவர்க்கும் பகவத் அனுக்ரஹம் தானாகக் கிடைக்கும். பகவத் நாமாவிற்கு மிகவும் சக்தி உண்டு. கீழ்க்காணும் பத்து அபராதங்கள் இல்லாது கூறப்படும் நாமம் உடனடியாகப் பலனை அளிக்கிறது.
1. நல்லவர்களைக் குற்றம் சொல்வது;
2. துஷ்டர்களிடம் நாம மகிமையை எடுத்துக் கூறுவது;
3. சிவனும் விஷ்ணுவும் வேறு என நினைப்பது;
4. வேதத்தில்; 5. சாஸ்திரத்தில்; 6. குருவின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாமல் இருப்பது;
7. இறைவனின் பெயர்கள் உண்மையில் சக்தியற்றவை; இருந்தாலும் அவை போற்றப்பட்டிருக்கின்றன என நினைப்பது;
8. நாமா இருக்கிறதென்ற தைர்யத்தில் செய்யக் கூடாத காரியங்களைச் செய்வது;

9. விஹித கர்மாக்களைச் செய்யாமலிருப்பது.


10. மற்ற தர்மங்களுடன் நாமாவைச் சமமாக எண்ணுவது.
தெரிந்து சொன்னாலும் தெரியாமல் சொன்னாலும் பகவத் நாமா பாபங்களை எரிக்கிறது என்பது உண்மைதான். அதற்காகப் பாபம் செய்வதையே வழக்கமாகக் கொண்டவனிடம் தன் நாமம் பலன்றறுப் போகட்டும் என பகவானே சாபம் கொடுத்து விடுகிறான்.


நாம் அனைவரும் தூய பக்திக்கு அதிகாரிகளாகி பகவான் சொல்லும் வழியில் சென்று பகவானை அடைய வேண்டும்.






?????? ??????? - Deepawali 2013 - ?????
 
ஒரே நேரத்தில் 9 நதிகளில் புனித நீராட வேண்&#297

ஒரே நேரத்தில் 9 நதிகளில் புனித நீராட வேண்டுமா? திருச்சிக்கு வருக!!!


பஞ்சபூதத்தலங்களில் அப்புத்தலம் என்னும் நீருக்குரிய கோயிலாக விளங்குவது திருவானைக் காவல். திருச்சி அருகில் இவ் வூர் உள்ளது. இத்தலத்துசுவாமி சன்னதிக்குள் யானை செல்ல முடியாது என்பதால் "தந்திபுகாவாயில்' என்ற சிறப்புப் பெயர் உண்டு. மேற்கு நோக்கிய நிலையில் சுயம்புமூர்த்தியாக மூலவர் ஜம்புகேஸ்வரர் காட்சி தருகிறார். பஞ்ச

பூதத் தலங்களில் இது நீர் அம்சமாகப் போற்றப்படுகிறது.

சுவாமி சன்னதியில் ஒன்பது வாயில் கொண்ட சாளரம் (ஜன்னல்) ஒன்று அமைந் துள்ளது. இதன் வழியாக இறைவனைத் தரிசித்தால் ஒரே நேரத்தில் கங்கை, காவிரி போன்ற ஒன்பது புனித தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம் உண்டாகும். கோச்செங்கட்சோழன் கட்டிய 70 மாடக்கோயில்களில் திருவானைக்காவலே முதன்மையானது. இறைவனே
சித்தரைப் போல வந்து திருநீறை கூலியாகக் கொடுத்து கட்டிய மதில் ஒன்று இங்குள் ளது. இம்மதில் "திருநீற்றுமதில்' என்று அழைக்கப்படுகிறது.

சோழமன்னன் காவிரியில் நீராடிய போது கழன்று விழுந்த முத்தாரம் ஒன்று, அங்கு நீர் மொண்டு வருவதற்காக கொண்டு செல்லப்பட்ட அபிஷேக குடத்துக்குள் கிடந்தது. நீரை அபிஷேகம் செய்யும்போது, அந்த மாலை இறைவனின் கழுத்தில் விழுந்தது.


நாள் தோறும் கோபூஜை நடைபெறுவதும், சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகம் நடப்பதும், உச்சிக்கால பூஜையின் போது அர்ச்சகர் புடவை அணிந்து இறைவனைப் பூஜிப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சங்கள்.ஆதிசங்கரர் அகிலாண்டேஸ்வரி அம்மனை வழிபாடு செய்து தாடங்கப் பிரதிஷ்டை(அம்மனின் காதணியான கம்மலில் சக்கரப்பிரதிஷ்டை) செய்துள்ளார்.

AANMIGA KADAL (????????????): ??? ????????? 9 ???????? ????? ????? ????????? ???????????? ????!!!

 
Why only Coconut and Banana are offered in the temples ?

Why only Coconut and Banana are offered in the temples ?

Coconut and Banana are the only two fruits which are considered to be the "Sacred fruits". All other fruits are tainted fruits ( partially eaten fruits), meaning other fruits have seeds and which have the capacity to reproduce !

But in the case of coconut, if you eat coconut and throw its outer shell, nothing will grow out of it. If you want to grow a coconut tree, you have to sow the entire coconut itself.

Similarly Banana. If you eat a banana and throw its out sleeves, nothing will grow out of it. Banana tree is grown on its own when a banana plant start giving fruits.

The outer shell of coconut is the Ahamkara or ego, which one has to break. Once the ego is shed the mind will be as pure as the white tender coconut inside. The Bhavaavesha or Bhakthi will pour like the sweet water in it. The 3 eyes on the top they explain as Satwa, Raja and Tama or Past , Present and Future or Sthoola, Sukshma and Karana Sareera or body etc


Our ancestors had found this reality long ago and they had made it as a system which is till followed religiously.!



Source: Lakshmi Murthy

Smartha Brahmins
 
பிறந்த நட்சத்திரத்தன்று செய்ய வேண்டிய இ&

பிறந்த நட்சத்திரத்தன்று செய்ய வேண்டிய இறை வழிபாடு



யார் எந்தக்கடவுளை வழிபட்டால் சிறப்பு? நன்றி:பால ஜோதிடம்,பக்கம் 26,27,வெளியீடு 8.2.2010.

அசுவினி நட்சத்திரக்காரர்கள் அவர்களது ஜன்ம நட்சத்திரத்தன்று கூத்தனூர்
சென்று சரஸ்வதியை வணங்கினால் வித்தை விருத்தி அடையும்.

பரணியில் பிறந்தவர்கள் பூராடம் நட்சத்திரத்தன்று கதிராமங்கலம் சென்று
ராகு காலத்தில் ஸ்ரீதுர்கையை வழிபட்டால் சுகம் பெருகும்.

கார்த்திகையில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் திரு அண்ணாமலை
கிரிவலம் வந்தால் அக்னி பகவான் அருள் பெற்று பொருளாதார மேன்மை
அடைவர்.

ரோகிணி நட்சத்திரக்காரர்கள் அமாவாசையன்று கும்பகோணம் சென்று
ஸ்ரீபிரம்மாவை வழிபட தடைகள் பல விலகிவிடும்.

மிருக சீரிடம் நட்சத்திரத்தில் உதயமானவர்கள் திங்கட் கிழமை மற்றும்
பவுர்ணமி நாட்களில் திங்களூர் சென்று சந்திர பகவானை வழிபட்டால்
செல்வ வளம் பெருகும்.

திருவாதிரையில் பிறந்தவர்கள் சதுர்த்தசி திதி அல்லது மாத சிவராத்திரி
வரும் நாளில் சிதம்பரம் சென்று ஸ்ரீநடராஜரை வணங்கினால் அபூர்வ
ராஜயோகம் உண்டாகும்.

புனர்பூசத்தில் பிறந்தவர்கள் நவமி நாட்களில் கும்பகோணம் சென்று
ஸ்ரீஇராமசாமியை தரிசனம் செய்தால் இனிய வாழ்க்கை உண்டாகும்.

ஒளி மிகுந்த பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பவுர்ணமி நாட்களில்
தென்குடி திட்டைசென்று ராஜகுருவை வணங்கினால் நல்ல முன்னேற்றம்
உண்டாகும்.

ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் காளஹஸ்தி சென்று ராகு காலத்தில் ராகு மற்றும் கேதுக்களை வணங்கினால் மணவாழ்க்கையில் நல்ல உயர்வு கிடைக்கும்.

மகம் நட்சத்திரக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரபகவானின் ஸ்தலமான
கஞ்சனூர் சென்று வழிபட்டால் செல்வச்செழிப்பு உண்டாகும்.

பூர நட்சத்திரக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் சமயபுரம் சென்று மாரியம்மாளை
வழிபட்டால் நினைத்தது கைகூடும்.
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் சூரியனார் கோவில் சென்று சூரிய பகவானை வணங்கினால் நல்ல தொழில் வளம் உண்டாகும்.

அஸ்த நட்சத்திரக்காரர்கள் கார்த்திகை மாதந்தோறும் சபரிமலை சென்று
ஸ்ரீசாஸ்தாவை வணங்கினால் நலம் உண்டாகும்.

சித்திரை நட்சத்திரக்காரர்கள் செவ்வாய்க்கிழமைகளில் வைத்தீஸ்வரன் கோவில் சென்று ஸ்ரீ அங்காரகனை வழிபட்டு வர ஏற்றம் பல உண்டாகும்.

சுவாதியில் பிறந்தவர்கள் வாயுஸ்தலமான ஸ்ரீகாளஹஸ்தி சென்று ராகு காலத்தில்
இறை வழிபாடு செய்தால் இன்னல்கள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை அமையும்.

விசாக நட்சத்திரக்காரர்கள் கார்த்திகை நாட்களில் பழனிக்குச் சென்று முருகனை
வழிபட்டால் உயர்வுகள் பல உண்டாகும்.

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் சென்று
ஸ்ரீரெங்க நாதரையும் தாயாரையும் தரிசனம் செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

கேட்டை நட்சத்திரக்காரர்கள் அவர்களது ஜன்ம நட்சத்திரத்தன்று திரு அண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் செய்தால் சகல சவுபாக்கியமும் உண்டாகும்.

முல நட்சத்திரக்காரர்கள் திருப்பாம்புரம் சென்று ராகு காலத்தில் ராகு கேதுக்களை வழிபட்டால் இனிய இல்லறம் அமையும்.

பூராடம் நட்ச்த்திரக்காரர்கள் கார் காலங்களில் வருணன் வணங்கிய திரு அண்ணாமலையாரை வணங்கினால் செல்வ வளம் உருவாகும்.
உத்திராடம் நட்சத்திரக் காரர்கள் சங்கடஹர சதுர்த்தி நாட்களில் பிள்ளையார்பட்டி
சென்று விநாயக்கடவுளை வழிபட்டால் நலம் தரும் முன்னேற்றம் உண்டாகும்.

திரு ஓண நட்சத்திரக்காரர்கள் அவரது ஜன்ம நட்சத்திரத்தன்று திருப்பதி சென்று
ஏழுமலையானை வழிபட்டால் ஐசுவரியங்கள் கிடைக்கும்.
அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் சனிக்கிழமைகளில் திரு நள்ளாறு சென்று
சனி பகவானை வழிபட்டால் தனம் பெருகும்.

சதயம் நட்சத்திரக் காரர்கள் அமாவாசை நாட்களில் ஸ்ரீவாஞ்சியம் சென்று யமதர்மனை வணங்கினால் நல்வழி கிடைக்கும்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வியாழக்கிழமைகளில் திருச்சி திரு வானைக்கா சென்று குபேர லிங்கத்தை தரிசனம் செய்தால் நல்ல தன விருத்தி உண்டாகும்.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று திருவாடுதுறை சென்று
ஸ்ரீகோமுக்தீஸ்வரரை வணங்கினால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

ரேவதி நட்சத்திரக்காரர்கள் சனிக்கிழமைகளில் திருக்கொள்ளிக்காடு சென்று
சனிபகவானை வணங்கினால் சிறப்புகள் பல உண்டாகும்.

AANMIGA KADAL (????????????): ????? ???? ????? ??????? ?????? ???????????????? ????? ??????? ??? ???????

 
6 Cs to Avoid in Life

By Junaid Tahir:


Following Cs are suggested to be avoided in order to achieve extreme heights of contentment and happiness.


Cursing:
Cursing is opposite of blessing which means the one who curses is away from blessing. Both cursing and blessing are indirectly proportional to each other. The more you curse people the more you make yourself away from them and also from the blessings of Almighty. Control your thoughts to control your tongue. Daily audit at the end of each day will help improve your habit of cursing. This will improve your mental health and strengthen your inner powers.


Complaining:



Your complaining attitude reduces your social circle. When you start complaining about circumstances, about people around you and so on, you give up your energies to strive and eventually you weaken your relations with others and also lose your grip on your goals. This act degrades you in your social group and eventually you lose respect. Try speaking positive or stay silent.

Criticizing:



While healthy criticism helps improve things but most of the time you criticize with no clear positive intention. The more you criticize this way, the more you pollute your own mind and build up negative powers which back fires in terms of added stress due to negativity. Also criticizing is an indication that you are not part of solutions instead you are part of problems. So if you would like to live a happy life then no negative criticism please.

Complicating
Mind your own business. If you can't help don't complicate their problems. Don't confuse people by raising complicated questions. Speak up only if you have a positive advice and neat intention. Remember, giving advice is a matter of honesty so put yourself in others' shoes; listen empathically and then advice in the best interest of your companion.


Conspiring
This is one of the extreme ethical crimes I can think of. You conspire when you plan secretly (alone or with others) against someone to do something which is harmful and unlawful. In the court of humanity this is a punishable act and nature always takes revenge form you for the things you do against humanity.


Corrupting:



Corruption is a phenomenon of moral or economical deviation from the ideal. Corruption is a world-wide social disease which has spread like jungle fire and impacting millions of lives every day consequently polluting every society. May it be financial corruption, Ethical corruption or Relationship corruption, it is consistently polluting societies aDnd families. The more you earn with illicit acts the more you push yourself away from the state of contentment. Illegal acts always have reaction exactly equal or more than the magnitude of the actions you do.





Improve Yourself Daily !
 
எது உண்மை

எது உண்மை




நாம் ஒன்றை ஆராய்ச்சி செய்தால் நமக்கு இரண்டு விதமான அறிவு, உண்மை கிடைக்கும்.

முதலாவது, எது சரியானது என்ற அறிவு. இரண்டாவது, எது சரியில்லாதது என்ற அறிவு.


சரி எது, தவறு எது என்று விளங்கும் உண்மை எது , பொய் எது என்று விளங்கும்.


சத், அசத் என்று அதை கீதை கூறுகிறது.


அரை இருட்டில் சற்று தூரத்தில் கிடப்பது பாம்பா, கயிறா என்று தெரியவில்லை. சற்று நெருங்கி சென்று ஆராய்கிறோம். பாம்பு அல்ல, கயிறு தான் என்று தெரிகிறது. பாம்பு பொய், கயிறு நிஜம்.


எது சத்தியமானது என்று எப்படி அறிந்து கொள்வது ?



சத்யமான ஒன்றிற்கு ஏதாவது குணாதிசயம் இருக்கிறதா ? இப்படி இப்படி இருந்தால் அது உண்மையானது, சத்தியமானது என்று அறிந்து கொள்ளும்படி ஏதாவது கோட்பாடு இருக்கிறதா என்றால் – இருக்கிறது என்கிறது கீதை. அது மட்டும் அல்ல, ஒரு பெரிய பட்டியலே தருகிறது….


முதலாவதாக…எது மற்றொன்றை சார்ந்து இருக்கிறதோ, அது நிரந்தரமானது, உண்மையானது அல்ல. இரண்டு பொருள்கள் ஒன்றை ஒன்று சார்ந்து இருந்தால் அவை இரண்டுமே நிரந்தரமானவை அல்ல.
எப்படி ? கிருஷ்ணன் சொல்கிறான்.


நாம் உணரும் இன்பமும் துன்பமும் இரண்டு காரணங்களால் நிகழ்கின்றன.



ஒன்று புறக் காரணம் – சூடு, குளிர், உணவு, சுடு சொல் போன்ற புறக் காரணங்கள். இரண்டாவது, நம் மனம் என்ற அகக் காரணம்.

ஒரு உணவை ஒருவன் “ஐயோ காரம்” என்கிறான். அதே உணவை மற்றொருவன் ” என்ன இது உப்பு உறைப்பு இல்லாமல் இருக்கிறது ” என்கிறான். உணவு ஒன்று தான். சுவை மாறுபடுகிறது.

எது உண்மை ? காரமா ? காரம் இல்லாத தன்மையா ?


புலன்களும், புலன்களால் நுகரப்படும் இன்ப துன்பங்களும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. எனவே இரண்டும் உண்மையானவை அல்ல.


அனைத்து உறவுகளும் ஒன்றை ஒன்று சார்ந்தவை தானே ?


அர்ஜுனனின் தயக்கம் எல்லாம் உறவுகளை எப்படி கொல்வது என்பதில்தான் அடங்கி இருக்கிறது. அதை விளக்க வந்த கிருஷ்ணன், அதை மட்டும் விளக்க வில்லை, அதையும் தாண்டி உறவுகள் மட்டும் பொய் அல்ல வேறு எது எல்லாம் பொய் என்று சொல்கிறான். கீதை காலத்தை தாண்டி நிற்பதற்கு
அதுவும் ஒரு காரணம்.


எது ஒன்று, எதையும் சாராமல் தனித்து நிற்கிறதோ அதுவே உண்மையானது, நிரந்தரமானது.

Article by Pattambi Iyer



??? ????? | ?????? ???? ????????????? ??????? ????????????? ???? ????????????? ??????? ???????
 
சற்றே திரும்பிப் பாருங்கள்!'

சற்றே திரும்பிப் பாருங்கள்!'


'சற்றே திரும்பிப் பாருங்கள்!'


விவேகானந்தர் ஒருமுறை, இமயமலை நோக்கிபயணித்துக் கொண்டிருந்தார். அவருடன் வந்த வயதான முதியவர் ஒருவர், ''இன்னும் நீண்ட தூரம் பயணிப்பது சாத்தியம் இல்லை. இதற்கு மேல் என்னால் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாது. நெஞ்சே வெடித்து விடும் போல் இருக்கிறது'' என்று புலம்பினார்.
உடனே விவேகானந்தர், ''நீங்கள் கடந்து வந்த பாதையை சற்றே திரும்பிப் பாருங்கள்; உங்களுடைய கால்களின் மூலம்தான் இவ்வளவு தூரத்தையும் கடந்து வந்திருக்கிறீர்கள். இதே கால்களால்தான் இன்னமும் உள்ள தொலைதூரத்தை கடக்கப் போகிறீர்கள். அதற்கான சக்தியும் உறுதியும் உங்களது கால் களுக்கு உண்டு'' என்றார்.



இதைக் கேட்டு உத்வேகம் அடைந்த முதியவர், தொடர்ந்து நடப்பது என்று உறுதி கொண்டார். இந்த வைராக்கியத்தால்தான், விவேகானந்தருடன் இமயமலை செல்லும் பாக்கியம் முதியவருக்குக் கிடைத்ததாம்!


Source: Vikatan Magazine
_ கே.என். மகாலிங்கம்,
 
கருடன்;

கருடன்;

*மகாவிஷ்ணுவின் வாகனமான கருடன்.,இந்துக்கள் அனைவராலும் கருடாழ்வார் என வணங்கபடுகிறார். *பெருமாள் கோயிலில் மூலவருக்கு நேராக கைகளைக் கூப்பிய நிலையில் கருடாழ்வார் எழுந்தருளிப்பார்.


*வைகுண்டத்தில் இருந்து திருமலையான சப்தகிரியை (திருப்பதி) பூலோகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தவர். சப்தகிரி என்றால் ஏழு மலை. அந்த ஏழுமலைகளில் ஒன்றுக்கு கருடனின் பெயரில் கருடாத்ரி என்று பெயரிடப்பட்டுள்ளது.


*பெரும்பாலும் தெய்வத்தின் வாகனத்திற்கு,வாகனம் கிடையாது ஆனால் விஷ்ணுவின் வாகனமான கருடனுக்கு வாகனம் உண்டு.


*கருடனுக்கும் ஒரு வாகனம் இருப்பதாக விஷ்ணு சகஸ்ரநாமத்தில், சுபர்ணோ வாயு வாஹனா: என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது காற்றே அதன் வாகனம்.


*கருடனைப் பார்ப்பதும், அதன் குரலைக் கேட்பதும் நன்மையின் அறிகுறியாகும்.ஒவ்வொரு தினங்களிலும் கருடனின் தரிசனம் ஒவ்வொரு பலனை தரும்.


*ஞாயிறு - நோய் நீங்கும், திங்கள் - குடும்பம் செழிக்கும்,செவ்வாய் - உடல் பலம் கூடும்,புதன் - எதிரிகளின் தொல்லை நீங்கும்,வியாழன் - நீண்ட ஆயுள் பெறலாம், வெள்ளி - லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும், சனி - மோட்சம் கிடைக்கும்.


*கருடனின் சகுனம் முக்கியமாக கருதபடுவதால்தான்,தமிழகத்தின் உள்ள அனைத்து கோயில் கும்பாபிஷேகங்களிலும் கருடனின் தரிசனம் கிடைத்தபிறகே கலசத்தில் நீர் ஊற்றபடுகிறது.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்
 
விதி என்பது என்ன?

விதி என்பது என்ன?



விதி விளையாடி விட்டது. அது அவன் விதி. விதிப்படி நடந்தது என்றெல்லாம் சொல்கிறோமே.. இந்த விதி என்பது என்ன? யார் இதை நிர்ணயிகிறார்கள்? ஒருவனுக்கு விதி எவ்வாறு நிர்ணயிக்க படுகிறது? விதி தான் ஒருவனது வாழ்கையை நிர்ணயிக்க வேண்டும் என்றால் நாம் ஏன் ஒரு காரியம் செய்ய முயற்சிக்க வேண்டும். விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்றால் எனக்கு ஏன் ஆசைகள் வர வேண்டும்? நான் அதை அடைய உழைக்க வேண்டும்? எல்லாம் விதி தான் என்றால் வாழ்வில் எனது பங்கு என்ன? இன்னும் இந்த விதியை புரிந்து கொள்ள நிறைய கேட்டு கொண்டே போகலாம்.



முதலில் இந்த விதி என்ற நம்பிக்கை மூலமாக நமக்கு மனதளவில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதை பார்த்து விடுவோம்.. பிறகு விதி நிர்ணயிக்கப்படும் விதத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

.

விதி என்பது பெரும்பாலும் நமது மன சமதானதிற்காகவே பயன்படுவதை நம்மால் பார்க்க முடியும். அவன் விதி முடிந்து விட்டது போய் விட்டன.

தோற்க வேண்டும் என்று அவன் விதி,
அதனால் தான் தோற்றேன்.
எனக்கு விதிக்க பட வில்லை அதனால் தான் கிடைக்க வில்லை. அவன் விதி நல்லாயிருக்கு அதான் நல்லா இருக்கான் என்றெல்லாம் சமாதானம் செய்து கொள்வதற்காக நாம் விதியை பயன்படுத்துகிறோம் உண்மையில் இப்படி நமது செயல் பாடுகளால் ஏற்படும் விளைவுகளுக்கு விதி என்ற ஒன்றின் மீது பழிபோடா விட்டால் நம்மில் பலர் மிகப்பெரும் மனநோயாளிகளாக சட்டையை கிழித்து கொண்டு அலைந்து இருப்போம் என்பதே உண்மை. இத்தகைய சமாதானத்திற்கு விதி பயன் படுகிறது. இப்போது விதி என்பது எப்படி நிர்ணயிக்க படுகிறது என்று தெரிந்து கொள்வோம்.. விதி மூன்று வகைகளில் மனித வாழ்வில் விளையாடுகிறது.


1. சுய நிர்ணயவிதி
2. சமுக விதி
3. பிரபஞ்ச விதி


இவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்


சுய நிர்ணய விதி
விதி எப்படி நிர்ணயிக்க படுகிறது என்பதே கற்பனைக்கு விளங்காத ஒரு வலை பின்னலாக இருக்கிறது.. இதில் சுய நிர்ணய விதி என்பது என்ன?

எனது வெற்றிக்கும் தோல்விக்கும் நானே விதியை நிர்ணயம் செய்து கொள்கிறேனா? எப்படி எனது வாழ்கைக்கான விதியை என்னால் நிர்ணயம செய்து கொள்ள முடியும்?? இந்த கேள்விக்கெல்லாம் ஒரே பதில் முடியும்.. உங்கள் விதி உங்களாலே நிர்ணயிக்க பட்டு இருக்கிறது.. அனால், உங்கள் கட்டுபாட்டில் இல்லாமல் … புரிந்து இருக்காது புரிய வைக்க முயற்சிக்கிறேன் சுய நிர்ணய விதியை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அடிப்படையில் மறுபிறப்பு என்பதை நம்பே வேண்டிய அவசியம் உள்ளது.


பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ க்ரிஷ்ணர் அர்ஜுனரை பார்த்து சொல்கிறார் அர்ஜுனா… நீயும் நானும் இந்த மண்ணில் பலமுறை பல வடிவங்களில் பிறந்து இருக்கிறோம்! அது எனக்கு தெரியும் உனக்கு தெரியாது…. என்று சொல்லி அருஜுனனின் முற்பிறவி பற்றி எடுத்து உரைக்கிறார்..


மேலும் மனிதனின் உடல் தான் இரைகிறது ஆத்மா என்ற நமது உணர்வு ஸ்வரூபம் இறப்பது இல்லை.. அத்தைகைய ஆத்மா உடலை விட்டு பிரியும் போது தான் வாழ்ந்த பூமியில் தனக்கு சொந்த மானவற்றின் மீது பற்றுதல் கொண்டு மறைந்தாலோ, பிடிக்காத விஷயத்தின் மீது அதீத கோபத்துடன் மறைந்தாலோ தனது அடுத்த பிரவில் தான் விட்டு போன உணர்வுகளுக்கு பதில்
கிடைக்குமாறு வாழ முயற்சிக்கும்.. முற்பிறவியின் ஞாபகங்கள் இருக்காததால் தான் எதற்க்காக இப்படி நடந்து கொள்கிறோம் என்று சில நேரங்களில் வாழ்பவர்களுக்கு தெரியாது…உதாரணமாக நல்ல தெய்வ பக்தியுடன் கூடிய அமைதியாக தர்மத்தை கடைப்பிடித்து வாழும் ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவர் அடியும் தடியும் முரட்டு குணமும் போலீஸ் கேஸ் என்று அலையும் நிலையில் இருப்பார்.. உங்க குடும்பத்துக்கே இல்லாத புத்தி உனக்கு எங்கே இருந்துடா வந்தது என்ற புரியாமல் கேட்பார்களே அது இப்படி தான்.ஒருவன் முற்பிறவியில் என்னகுனத்தில் இருந்தானோ அதே குணத்தின் மிச்சம் இப்பிறவியில் அவனது அடிப்படை குணத்தை நிர்ணயிக்கும்.


இப்பிறவியில் எந்த வகையான குடும்பத்தில் பிறக்கிறானோ அக்குடும்ப வளர்ப்பு ஒருவனது குழந்தை பருவத்தை பாதிக்கிறது. அந்த பாதிப்பே அவன் இளமை பருவத்தின் நடவடிக்கைகளுக்கு விதியாக அமைகிறது.. அந்த விதிப்படி அவன் இளமை பருவத்தில் செய்யும் காரியம் முழுவதும் அவனது வாழ்கை முழுவதுமான விதியாக அமைகிறது.. இவ்வாறு ஒரு மனிதனின் வாழ்க்கையில் நன்மை தீமைகளுக்கான அடிப்படை விதி நிர்ணயிக்க படுகிறது.

சமூகத்தால் ஆன விதி


நான் நல்லவனாகத்தானே இருக்கிறேன் எனக்கு ஏன் கெட்டது நடக்க வேண்டும் என்று சில நேரங்களில் குழம்பி கொள்வோம்.. குடும்பம் என்பது மிக சிறய சமுகம்.. சமுகம் என்பது மிக பெரிய குடும்பம்… எனவே ஒரு சமுகத்தில் நடக்கும் எல்லா காரியங்களும் நம் குடும்பத்தில் பாதிப்பை விளைவிக்கும். இந்த சங்கிலி தொடர் இருகிறதே இது சமுகத்தால் உண்டாக்கும் விதி..உதாரணமாக நமக்கு முந்தய தலைமுறையில் ஆண் குழந்தை தான் பெருசு என்று பெண் குழந்தைகளை கருவிலேயே கலைத்தார்கள் என்றால் இந்த தலை முறைக்கு திருமணதிற்கு பெண்ணே கிடைக்காமல் போகிறது..அனால், தனி ஒரு மனிதனுக்கு, தனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று புரியாமல் போகும்.. ஆனால், இது சமுகத்தின் நடவடிக்கையால் உண்டான விதி.. அது நமக்கு சம்மந்தம் இல்லாமல் நம்மை பாதிக்கும் போது அது சமுகத்தால் உண்டான விதி ஆகும்..அதே போல் இரு வேறு இனங்களுக்கு இடையே நடக்கும் அடிமைபோர்கள் அதனால் ஏற்படும் மரணம் இதற்க்கு உதாரணமாக சொல்லலாம்…இவைகள் கடந்த காலத்தின் மூலமாக நிர்ணயிக்கப்பட்ட விதிகளாகிறது..

பிரபஞ்சத்தால் உண்டாகும் விதி


சுனாமி – இதை விட இதற்கு சிறந்த உதாரணம் சொல்ல முடியாது.. ஆம்.. இயற்கையின் அபரிமிதமான சீற்றத்தால் குவியல் குவியலாக இறந்து போகும் மனிதர்களுக்கு எந்த விதத்திலும் காரண காரியம் சொல்ல முடியாது. ஆனால், இயற்கையின் மாற்றம் ஒரு சங்கிலித்தொடர் போல காலகாலமாக நடந்து வரும். அவைகளும் ஒரு விதிக்கு உட்பட்டே செயல் பட்டு வருவதால் இது பிரபஞ்சத்தால் உண்டாகும் விதி.

இப்படி ஒருவருக்கு நடக்கும் எந்த ஒரு செயலும் இம்மூன்று விதிகளுக்கு உட்பட்டே நடக்கும். இந்த அடிப்படை விதிகளை கொண்டு வாழையில் ஒருவருக்கு நடக்கும் சம்பவங்களை மேக்ரோ முதல் மைக்ரோ வரை கணக்கு பண்ணி பாருங்கள். இந்த மூன்று விதிகளையும் மீறி ஒருவரால் வாழ்த்து இருக்க முடியாது.
இப்படி பல நேரங்களில் நமது கட்டுப்பாட்டில் இல்லாமலேயே நம்மை பாதிக்கும் பல சம்பவங்கள் நமக்கு விதிக்க படுவாதலேயே நம் விதியை நம்புவது நம் விதியாகிறது.


ஆக கடந்த கால இயற்கையின் நிகழ்வு, சமுக நிகழ்வு, மனித வாழ்கை இவற்றின் விளைவுகள் யாவும் நிகழ்காலத்தின் விதியை நிர்ணயிகின்றன.. நிகழ் காலத்தில் நாம் வாழும் வாழ்வும் அதன் விளைவும் எதிர்கால விதியை நிர்ணயிகிறது. எனவே இதை நன்றாக உணர்த்து நிகழ்காலத்தில் முடிந்த வரை தர்மங்களில் இருந்து மீறாமல் வாழ்வது எதிர்கால்டத்தில் நமக்கு நாமே நல்ல விதியை எழுதி கொள்வது போல் ஆகும்…


Source: Hindu Prasad
 
மாயையிலிருந்து விடுபடமுடியுமா?

மாயையிலிருந்து விடுபடமுடியுமா?


10427281_232783636930927_2945250655229247576_n.jpg



மனிதர்கள், அறிவில் சிறந்தவர்களாக, அனைத்து வேதங்களையும் கற்றுணர்ந்தவர்களாக, முற்றும் துறந்த முனிவர்களாக இருந்தாலும், பிறவி என்று ஒன்று எடுத்து விட்டால், அதன் கர்மங்களிலிருந்தும், மாயைகளிலிருந்தும் விடுபடவே முடியாது. இது குறித்து, தேவி பாகவதம் எனும் நூலில், மகா விஷ்ணுவே, நாரதருக்கு, ஞான உபதேசம் செய்துள்ள சம்பவம் ஒன்று... மகாவிஷ்ணுவை தரிசிப்பதற்காக, பாற்கடலுக்குச் சென்றார் நாரதர். அவரைப் பார்த்ததும், மகாவிஷ்ணுவின் அருகில் இருந்த மகாலட்சுமி, நாணத்தோடு உள்ளே சென்று மறைந்து விட்டார். நாரதருக்கு மனம் பொறுக்கவில்லை. ’பரந்தாமா... என்ன இது! நான் பொறி, புலன்களையும், ஆசை, கோபம் போன்ற மாயைகளை வென்றவன்; அப்படிப்பட்ட என்னைப் பார்த்து, லட்சுமிதேவி ஏன் வெட்கப்பட்டு மறைய வேண்டும்...’ என்றார். நாரதரின் கர்வம் கண்டு, நாராயணன் சிரித்தபடியே, ’நாரதா... மாயையை, யாராலும் வெல்ல முடியாது; வென்றவர்கள், இப்படி வெளியில் சொல்லிக் கொள்ள மாட்டார்கள். உருவமில்லாத காலமும், மாயைக்கு உருவமாக இருக்கிறது. காலமும், மாயையும் சேர்ந்து செய்யும் விளையாட்டை, அறியவோ, வெல்லவோ முடியாது...’ என்றார்.

நாரதர் விடவில்லை. ’மாயையைப் பற்றி, ஆழமாக அறிய ஆசைப்படுகிறேன்; மாயையை எனக்குக் காட்டுங்கள்...’ என்றார். ’சரி, வா...’ என்று கூறி, நாரதரை ஓர் அழகான குளத்திற்கு அழைத்துச் சென்ற மகாவிஷ்ணு, ’இக்குளத்தில் நீராடி விட்டு வா...’ என்றார். அதன்படியே, குளித்து, கரையேறிய போது, பெண்ணாக உருமாறியிருந்தார் நாரதர். பெண்ணாக மாறியிருந்த நாரதரை, காலத்வஜன் என்ற மன்னன், மணந்து கொண்டான். நாரதருக்கு பழைய நினைவுகள் ஏதுவும் நினைவில் இல்லை. இத்தம்பதிகளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு வீரவர்மன் என்று பெயர் சூட்டினர். அப்படியே, 12 பிள்ளைகள் பிறக்க, பேரன், பேத்திகள் என, குடும்பம் பெரிதானது. அரச போகத்துடன், இல்லற வாழ்க்கையில் திளைத்திருந்தார் நாரதர். திடீரென்று போர் மூண்டது; கணவன், பிள்ளைகள், பேரன்கள் என, அனைவரும் மடிந்தனர். அப்போது, மகாவிஷ்ணு கிழ வேதியராக வந்து, ’பெண்ணே... இறந்தவர்களுக்கான கர்மாவைச் செய்ய வேண்டும்; அதற்காக, குளத்தில் மூழ்கி எழ வேண்டும்...’ என்று கூறி, பெண்ணாக இருந்த நாரதரை அழைத்துக் கொண்டு, புருஷ தீர்த்தம் எனும் தடாகத்திற்குச் சென்றார். அத்தடாகத்தில் மூழ்கி எழுந்தவுடன், பழைய உருவத்திற்கு மாறியிருந்தார் நாரதர். எதிரில் இருந்த கிழவேதியர் மறைந்து, அங்கே மகாவிஷ்ணு இருந்தார். ’நாரதா... மாயை குறித்து இப்போது அறிந்து கொண்டாயா...’ என்றார்.

வேத, வேதாந்தங்கள் அறிந்து, பொறி, புலன்களை வென்று, ஆசை, கோபம், மாயைகளை அடக்கியதாகப் பெருமை பாராட்டிய நாரதர், வாய் மூடி, மகா விஷ்ணுவை பின் தொடர்ந்தார். உயிர்களின் தோற்றமே மாயை எனும், பிம்பங்களால் ஆனாது; இதில், அனைத்தையும் அறிந்து விட்டோம் என்று நமக்குள் எழும் ஆணவம் கூட, மாயை தான் என்பதை, அறிந்து தெளிய வேண்டும். அனைத்தும் மாயையின் சொரூபம் என்பது தெரிந்து விட்டால், நம்மிடம் இருக்கும், ஆணவம், கோபம், வெறுப்பு, விரோதம், கயமை அத்தனையும் மறைந்து, சக மனிதரை நேசிக்கும் பண்பு நமக்குள் ஏற்படும்.


Source: Hindu Prasad
 
எந்நேரமும் ‘நாராயண நாராயண’ என உச்சரிப்பத&#3006

எந்நேரமும் ‘நாராயண நாராயண’ என உச்சரிப்பதால் என்ன பயன்?



1559679_232802543595703_3966953806811045077_n.jpg



எந்நேரமும் ‘நாராயண நாராயண’ என உச்சரிப்பதால் என்ன பயன்? நாரதருக்கு ஏற்பட்ட சந்தேகம்!

சதா சர்வ காலமும் ‘ஓம் நமோ நாராயணாய’ என்று சொல்லி வரும் நாரத மகரிஷிக்கு, இப்படி எந்நேரமும் நாராயணின் நாமத்தை உச்சரிப்பதால் என்ன பயன்?” என்ற சந்தேகம் வந்து விட்டது. நேராக வைகுண்டம் செல்லும் அவர், அங்கு துயில் கொண்டிருந்த பரந்தாமனை பலவாறாக சேவித்துவிட்டு, “அச்சுதா.. சதா சர்வ காலமும் உன் நாமத்தையே கூறிக்கொண்டிருக்கிறேன். இதனால் ஏதேனும் பயன் உண்டா என்று எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. தேவரீர் தான் அதை தீர்த்து வைக்க வேண்டும்!” என்றார்.



சிறியதாக புன்முறவல் புரிந்த நாராயணன், “நாரதா இதை அனுபவப்பூர்வமாக உனக்கு விளக்க சிறிது காலம் தேவைப்படும். அதுவரை நீ நான் சொல்வதை தட்டாது கேட்கவேண்டும். பொறுமையாக இருக்கவேண்டும். பரவாயில்லையா?” என்கிறார்.


நாராயண நாமத்தை உச்சரிப்பதால் ஏற்படும் பயனை தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் இருப்பதால்… “அதனால் என்ன பிரபு… எப்படியோ எனக்கு உன் நாமத்தை உச்சரிப்பதால் ஏற்படும் பலன் பற்றி தெரிந்தால் போதும்!” என்கிறார்.


“சரி…நீ நேராக பூலோகம் சென்று அங்கு ஒரு சிறிய புல்லிடம் என் நாமத்தை கூறு. உனக்கே புரியும்” என்கிறார் பரமாத்மா.


நேராக பூலோகம் வரும் நாரதர், ஒரு நந்தவனத்தில் அப்போது தான் முளைத்த ஒரு சிறிய புல்லிடம் சென்று ‘ஓம் நமோ நாராயணாய’ என்கிறார். அடுத்த கணம் அந்த புல் கருகி கீழே சாய்ந்து விடுகிறது. அதிர்ச்சி அடையும் நாரதர் நேராக திரும்பவும் வைகுண்டம் வருகிறார்.


“என்ன பிரபோ உங்கள் நாமத்தை சொல்வதால் ஏதோ அதிசயம் நடக்கும் என்று நினைத்தால் தளிர் போல இருந்த புல்லும் கருகிவிட்டதே… இது தானா உன் நாமத்தின் மகிமை…?”


மறுபடியும் பகவான் தனக்கேயுரிய சிரிப்பை உதிர்க்கிறார்.


“சரி… அது போகட்டும் நாரதா… இம்முறை நீ பூலோகம் சென்று ஒரு புழுவிடம் என் நாமத்தை சொல்” என்கிறார்.


நாரதரும் பூலோகம் வந்து அப்போது தான் கூட்டிலிருந்து வெளியே வந்து மெதுவாக ஊரத் துவங்கிய புழு ஒன்றிடம் ‘ஓம் நமோ நாராயணாய’ என்கிறார். என்ன கொடுமை, அடுத்த கணம் அந்த புழு துடிதுடித்து இறக்கிறது.


நாரதரும் பூலோகம் வந்து அப்போது தான் கூட்டிலிருந்து வெளியே வந்து மெதுவாக ஊரத் துவங்கிய புழு ஒன்றிடம் ‘ஓம் நமோ நாராயணாய’ என்கிறார். என்ன கொடுமை, அடுத்த கணம் அந்த புழு துடிதுடித்து இறக்கிறது.

நாரதருக்கு இம்முறை சற்று அச்சம் ஏற்படுகிறது. மீண்டும் வைகுண்டம் ஓடிவருகிறார்.


“பரந்தாமா? என்ன இது அக்கிரமம்… உன் பெயரை சொன்னவுடன் அந்த புழு எழுந்து பறக்குமல்லவா என்று நினைத்தேன். மாறாக புல்லை போல அதுவும் மரணித்துவிட்டது. இது தானா உன் நாமத்தின் பெருமை? எனக்கே சற்று சந்தேகமாக இருக்கிறது” என்று குமுறுகிறார்.


“அப்படியா? எதற்கும் வேறொரு ஜீவனிடம் இன்னொரு முறை முயற்சித்து பாரேன்….” என்று கூறும் பகவான் அடுத்து அப்போது தான் முட்டையிலிருந்து பொரிந்து வெளியே வந்த ஒரு குருவிக்குஞ்சிடம் சென்று தன் நாமத்தை கூறுமாறு பணிக்கிறார். நாரதரும் அவ்வாறே செய்கிறார். குருவிக் குஞ்சும் உயிரை விட்டுவிடுகிறது.


அடுத்து ஒரு கன்றுக்குட்டி. கன்றுக்குட்டிக்கும் அதே கதி தான்.


இப்படியாக புல், புழு, பறவை, விலங்கு என்று ஒவ்வொன்றாக பார்த்து இறைவனின் கட்டளைப்படி நாராயண மந்திரத்தை கூறுகிறார் நாரதர். சொல்லி வைத்தார் போல அனைத்தும் உடனே மரணத்தை தழுவுகின்றன. நாராயண நாமத்தை சொல்கிறோம் என்ற நினைப்பில் ஒவ்வொரு உயிராக நாம் கொன்றுகுவிக்கிறோமே என்கிற பீதி ஏற்படுகிறது நாரதருக்கு.


இம்முறை பகவானிடம் சண்டைக்கே போய்விடுகிறார். “நாராயணா போதும் உன் விளையாட்டு. உன்னால் பல உயிர்களை இதுவரை கொன்றுவிட்டேன். அந்த பாவம் என்னை சும்மா விடாது. இப்போது உன் நாமத்தை உச்சரிப்பது குறித்து எனக்கே சற்று தயக்கமாக இருக்கிறது!” என்கிறார்.


“நாரதா எதற்கும் கடைசியாக ஒரே ஒரு முறை எனக்காக பூலோகத்தில் விதர்ப்ப நாட்டு மன்னனுக்கு இன்று பிறந்திருக்கும் குழந்தையிடம் சொல்லிப் பாரேன்….” என்கிறார்.


நாரதர் அலறியடித்துக்கொண்டு…. “ஐயோ… வேண்டாம் பிரபோ. இதுவரை நான் கூறியதெல்லாம் விலங்குகள். ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் இப்பொழுதோ ராஜகுமாரன். குழந்தைக்கு ஏதாவது என்றால் மன்னன் என்னை சும்மா விடுவானா ? கொன்றே விடுவான்…. நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு… என்னை விட்டுவிடேன்…” என்று கெஞ்சுகிறார்.


“ஐயோ… வேண்டாம் பிரபோ. இதுவரை நான் கூறியதெல்லாம் விலங்குகள். ஒன்றும் பிரச்னை இல்லை.

ஆனால் இப்பொழுதோ ராஜகுமாரன். குழந்தைக்கு ஏதாவது என்றால் மன்னன் என்னை சும்மா விடுவானா ? கொன்றே விடுவான்…. நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு… என்னை விட்டுவிடேன்…”

“நாரதா நிபந்தைனையை மீறினால் எப்படி… சொல்வதை கேட்டு பொறுமையாக இருப்பேன் என்றல்லவா கூறினாய்…?” என்கிறார் பகவான்.


சற்று யோசிக்கும் நாரதர்… “சரி… பூலோகம் சென்று அந்த குழந்தையிடம் உன் நாமத்தை சொல்கிறேன். ஆனால் என் உயிருக்கு ஏதாவது ஆபத்து என்றால் நீ தான் என்னை காப்பாற்ற வேண்டும். அதற்கு ஒப்புக்கொண்டால் நீ கூறியதற்கு நான் ஒப்புக்கொள்கிறேன்”


“சரி…” என்று பகவான் கூற நாரதர் விதர்ப்ப நாட்டிற்கு விரைகிறார்.


நாரதரை பலவாறாக துதித்து வரவேற்கிறான் மன்னன். குழந்தையை பார்க்கவேண்டும் என்று நாரதர் கூற, அந்தப்புறத்திற்கு அழைத்துச் செல்கிறான். அங்கு மன்னனுக்கு புதியதாக பிறந்த அந்த குழந்தையின் காதில் சென்று ‘நாராயணா! நாராயணா! நாராயணா!’ என்று கூறுகிறார் நாரதர்.


உடனே அங்கு அனைவரும் ஆச்சரியப்படும்படி அந்த குழந்தை வாய் திறந்து நாரதருக்கு நன்றி கூறி நாராயணனின் பெருமையை பேச ஆரம்பிக்கிறது . அந்த அதிசயத்தை கண்ட யாவரும் வியந்தனர்.
அக்குழந்தை கூறியதாவது…. “நாரத மகரிஷியே! உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. நான் போன பல பிறவிகளில் புழுவாகவும் பூச்சியாகவும் மற்ற ஜந்துக்களாகவும் பிறந்து அல்லல்பட்டு கொண்டிருந்தேன். எனது அதிர்ஷ்டம் நீர் எனது போன எல்லா பிறவிகளிலும் உடனே வந்து நாராயணனின் நாமத்தைக் கூறியதால் இம்மனிதப் பிறவியை அதுவும் ஒரு ராஜகுமாரனாக இந்த பிறவியை மிக விரைவில் அடைந்தேன். அது மட்டுமல்ல பிறந்தவுடனே பேசும் சக்தியையும் பெற்றுவிட்டேன். நாராயண நாமம் இல்லை என்றால் ஒவ்வொரு பிறவியிலும் பல காலம் உழன்று அல்லல்பட்டு அவஸ்தைப்பட்டிருப்பேன். எனக்கு ஸ்ரீமன் நாராயணனை அடைய வழிகாட்டியதற்கு நன்றி’ என்று அக்குழந்தை கூறியது.


நாராயண நாமத்தின் மகிமையை தவறாக புரிந்துகொண்டமைக்காக வெட்கப்பட்ட நாரதர் இறைவனின் கருணையை பின்னர் எண்ணி கண்ணீர் வடித்தார். ‘நாராயணா! என்னே உன் நாமத்தின் மகிமை!’ என வியந்து மகிழ்ந்தார்.


ஒரு புழுவே நாராயண நாமம் கேட்டு இத்தனை மேன்மை அடைந்திருக்கிறது என்றால், மனிதப் பிறவியில் நாம் அந்த நாமம் மூலம் சாதித்துக் கொள்ளக்கூடியவைகளை எண்ணிப் பாருங்கள். அதை நான் ஒரு பதிவில் கூறமுடியுமா? நூறு பிறவிகள் எடுத்தாலும் அதற்கு போதாதே…


இதைத் தான் ஆதி சங்கரரும் சொல்கிறார்..


பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே


இறைவனின் நாமத்தை எத்தனை முறை உச்சரித்தாலும் சரி….ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் பலன் உண்டு. எனவே நமது பிரார்த்தனை என்றும் உதடுகள் மூலமல்லாமல் உள்ளத்தின் மூலம் இருக்கட்டும்.
பகவானின் நாமஸ்மரனையும் சரி… உங்கள் பிரார்த்தனையும் சரி…. என்றுமே வீண் போகாது!


Source: Hindu Prasad
 
கட்டபொம்மன் பெயர் காரணம்

கட்டபொம்மன் பெயர் காரணம்



அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன்[SUP].


[/SUP]

இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார். இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் பொம்மு நாயக்கர் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.


??????????????
 
பஞ்சகவ்யம் சேர்ப்பது எப்படி?

பஞ்சகவ்யம் சேர்ப்பது எப்படி?


ஸந்தேக நிவாரணீ என்ற நூலிலிருந்து… நன்னிலம் பிரம்மஸ்ரீ ராஜகோபால கனபாடிகள் பதில்…
गव्यं (கவ்யம்) என்றால் பசுமாட்டிலிருந்து வெளிவந்தது என்றும், पञ्च (பஞ்ச) என்றால் ஐந்து என்றும் பொருள். பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோமூத்ரம் (மேலும் தர்பையின் ஜலம்) ஆகிய பசுவின் ஐந்து பொருட்களே पञ्चगव्यं (பஞ்சகவ்யம்) எனப்படுகிறது. மேற்கூறிய பொருட்களை தனித்தனியாக கிண்ணங்களில் வைத்துக் கொண்டு पञ्चगव्य सम्मेलनं करिष्ये (பஞ்சகவ்ய ஸம்மேளனம் கரிஷ்யே) என ஸங்கல்பித்து


गायत्र्यादाय गोमूत्रं गन्धद्वारेति गोमयं
காயத்ர்யாதாகோமூத்ரம் ந்தத்வாரேதி கோமயம்
आप्यायस्वेति च क्षीरं दधिक्राव्णेति वै दधि
ஆப்யாயஸ்வேதி ச க்ஷீரம் ததிக்ராவ்ணேதி வை ததி
शुक्रमसीति त्वाज्यञ्च देवस्यत्वेति कुशोदकं
சுக்ரமஸீதி த்வாஜ்யம் ச தேவஸ்யத்வேதி குசோ’கம்

அதாவது


காயத்ரி மந்த்ரம் சொல்லி – கோமூத்ரத்தையும்
கந்த த்வாராம் என்னும் மந்திரத்தால் – கோமயத்தையும் (பசுஞ்சாணத்தையும்)
‘ஆப்யாயஸ்வ’ மந்திரத்தால் – பசும்பாலையும்
ததிக்ராவ்ண்ண என்னும் ருக்கால் – பசுந்தயிரையும்
சுக்ரமஸி என்னும் யஜுஸ்ஸால் – நெய்யையும்
தேவஸ்யத்வா மந்த்ரத்தால் – தர்ப்பை சேர்ந்த ஜலத்தையும்
ஒரே கிண்ணத்தில் சேர்க்க வேண்டும். மேற்கண்ட மந்திரங்கள் தெரியாதவர்கள் ஓம் என்னும் பிரணவ மந்த்ரம் சொல்லி இவைகளை ஒன்றாகச் சேர்க்கலாம். இவ்வாறு சேர்ப்பதில் ஒவ்வொன்றுக்கும் அளவு உள்ளது.


गोमयात द्विगुणं मूत्रं मूत्रात सर्पि: चतुर्गुणं
கோமயாத் த்விகுணம் மூத்ரம் மூத்ராத் ஸர்பி: சதுர்குணம்
दधि पञ्चगुणं प्रोक्तं क्षीरं अष्टगुणं तता
ததி பஞ்சகுணம் ப்ரோக்தம் க்ஷீரம் அஷ்டகுணம் ததா

என்றபடி கோமயத்தை விட இரண்டு பங்கு கோமூத்ரமும், அதைவிட நான்கு பங்கு நெய்யும், நெய்யைக் காட்டிலும் ஐந்து பங்கு தயிரையும், தயிரை விட எட்டு மடங்கு பசும்பாலும் சேர்க்க வேண்டும்.


இவ்வாறு சேர்க்கப்பட்ட பஞ்சகவ்யத்தால் சிவனுக்கோ மற்ற தெய்வங்களுக்கோ அபிஷேகம் செய்வது மஹத் புண்யம். இந்த பஞ்சகவ்யத்தை காலையில் எதுவும் சாப்பிடுவதற்கு முன்பாக வெற்று வயிற்றில் சாப்பிட வேண்டும். அதற்கு மந்த்ரம்


यत्त्वक् अस्थिगतं पापं देहे तिष्ठति मामके

யத் த்வக் அஸ்திதம் பாபம் தேஹே திஷ்டதி மாமகே
प्राशनं पञ्चगव्यस्य दहत्वग्निरिवेन्धनं
ப்ராசனம் பஞ்சவ்யஸ்ய ஹத்வக்னிரிவேந்னம்


இவ்வாறு இதைச் சாப்பிடுபவரின் உடலில் உள்ள த்வக், தோல், மாம்சம், ரத்தம், மேதஸ், மஜ்ஜை, ஸ்நாயு, எலும்பு ஆகிய எட்டு தாதுக்களில் உள்ள பாபங்கள் நெருப்பில் இட்ட இந்தனம் (கட்டை) போல் எரிக்கப்படுகின்றன. உடல் தூய்மைப்படுத்தப்படுகிறது.



17 | June | 2014 | Dr.TVG
 
கதர் - அர்த்தம் தெரியுமா?


கதர் என்பது அரேபியச் சொல். இதற்கு, கௌரவம் என்று பொருள். ஒரு சந்திப்பின்போது காந்திக்கு, முகம்மது அலி ஜின்னா ஒரு கைத்தறி ஆடையை அணிவித்தார். அப்போது, ''இதைக் கதராக (கௌரவமாக) ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார். அன்று முதல் இந்த வகைத் துணிகள், 'கதர்’ எனப்படுகிறது.
- ப.அ.நிரஞ்சன்
சுட்டி விகடன்...


Source: Vikatan Magazine
 
கேதார கௌரி விரதம்

கேதார கௌரி விரதம்

மாங்கல்ய பாக்கியமும், கணவன் மனைவி இணை பிரியாது அன்போடு சுகவாழ்வு வாழும் வரமும்,
சகல சௌபாக்கியங்களும் நல்கும் காப்பு விரதம் – கேதார கௌரி விரதம்



பிருங்கி என்ற மகரிஷி வண்டின் உருவம் பெற்று, பரமேஸ்வரனுக்கும், பார்வதி தேவிக்கும் இடையில் சென்று (பார்வதி தேவியை வணங்காது) பரமேஸ்வரனை மட்டுமே 3 தடவை வலம் வந்து பயபக்தியோடு வணங்கிய நிகழ்வானதுசக்திரூபமான பார்வதி தேவியை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. சிவனும் சக்தியும் ஈருடலாக (தனித்தனியாக) காட்சி தருவதனாலேயே இத் துன்பம் நேர்ந்தது என்பதை உணர்ந்த பரமேஸ்வரி ஈருடலும் ஓருடலாக தோற்றமளிக்கும் வரம் வேண்டி; சிவனை விட்டுப் பிரிந்து பூலோகம் சென்ற பார்வதிதேவி அங்கிருந்து சிவனை நினைந்து விரதமிருந்து, வழிபட்டு அதன் பலனாக சிவபெருமானின் (இடது பக்க) பாதியுடம்பை பெற்று, அர்த்நாரிஸ்வரியாகவும், அர்த்த நாரீஸ்வரராகவும் ஒன்றாகி விரதமே கேதார கௌரி விரதமாகும்.

“கேதாரம்” என்பது இமயமலைச் சாரலில் உள்ள ஒரு சிவதலம். இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனை நினைத்து பார்வதி தேவியாகிய “கௌரி’ இவ் விரதத்தினை மேற்கொண்டதால் இப் பெயர் உண்டாயிற்று. சிவனுக்கு சமமான நிலையில் சக்திஅமையும் போது அது பராசக்தி எனப்போற்றப்படுகின்றது.

Please Read more from here

????? ???? ?????? | Arulmigu Sri Sadhananda Swamigal
 
வேதம் என்றால் என்ன ?

வேதம் என்றால் என்ன ?

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, நல்ல வழியாக இருப்பது, நல்ல வழிகாட்டியாக விளங்குவது, வழித்துணையாக இருப்பது, வழிப்பயனாக நிற்பது, உயிர் போன்றது, வாய்மையானது, மெய்மையானது, தூய்மையானது, துயரத்தைப் போக்க வல்லது, துன்பத்தைத் தடுத்து உடனடியாக அகற்ற வல்லது, உய்வினைத் தரக்கூடியது, உயர்வானது, உண்மையானது, உற்சாகத்தைத் தரக் கூடியது, உள்ளொளி வழங்குவது உலகு காப்பது, தொய்வினை நீக்க வல்லது, சோர்வினை மாற்ற வல்லது, அச்சத்தை அழிக்க வல்லது, கடவுளால் கூறப்படுவது, கடவுளைப் பற்றிக் கூறுவது... என்று பல பொருள்கள் உண்டு.

எனவேதான் இந்துவேதம் என்ற சொல்லுக்கு இந்து என்ற சொல்லுக்குரிய பொருள்களும், வேதம் என்ற சொல்லுக்குரிய பொருள்களும் இரண்டறக் கலக்கப் பெற்று எண்ணற்ற புதுபுதுப் பொருள்களும், இரண்டுக்குமுரிய பொருள்களும் கூறப்படுகின்றன.

குறிப்பாக இந்துவேதம் என்றால் அழியாதது, செழிப்பானது, கொழுமையானது, வளமானது, வலிமையானது, வாலிப்பானது, பொலிவு மிக்கது, விழிச்சிக்குரியது, எழிச்சிக்குரியது, பயிற்சிக்குரியது, முயற்சிக்குரியது, உயர்ச்சிக்குரியது, மலர்ச்சிக்குரியது, மறுமலர்ச்சிக்குரியது, வளவளர்ச்சிக்குரியது, ஆட்சிக்குரியது, மாட்சிக்குரியது, மீட்சிக்குரியது, கடவுளைக் காண உதவுவது, மனிதனைக் கடவுளாகவே காணவல்லது, கடவுளை உடனடியாக உதவிக்கு வரவழைப்பது, அருளுலகோடு உறவு கொள்ள உதவுவது, பிறப்பிறப்பை வெல்ல உதவுவது, பேரின்பத்தைத் தர வல்லது, எதையும் கடவுளாக்கும் வல்லமை பெற்றது. எல்லாக் கடவுள்களோடும் தொடர்பு கொள்ள உதவுவது, எல்லா வகையான போதனைகளையும் தரவல்லது என்றிப்படி எண்ணற்ற புதிய புதிய பொருள்கள் கூறப்படுகின்றன.

இதனால்தான், பதினெண்சித்தர்கள் இந்து வேதத்தை அருளூறு அமுதத் தெய்வீகச் செம்மொழியான முத்தமிழ்மொழியில் எந்த உலகுக்கும் முதன்முதலிலேயே வழங்குகின்றவர்களாக இருக்கின்ற¡ர்கள். அதாவது புதிது புதிதாக தோன்றக்கூடிய எந்த உலகான¡லும் சரி, அந்த உலகில் தோன்றிடக்கூடிய பயிரினங்களும், உயிரினங்களும் பண்பட்டு, தூய்மைப்பட்டு, வாய்மைப்பட்டு உய்வடைவதற்காக இந்துவேதத்தை, தெய்வீக தமிழ்மொழியில் முதன்முதலிலேயே வழங்குகிறார்கள் பதினெண்சித்தர்கள்.

இந்த இந்து வேதத்தில் உள்ள தமிழ் எழுத்துக்களும், சொற்களும், சொற்றெ¡டர்களும், உரத்த குரலில் ஒதப்பட்டு எழுப்பப்படுகின்ற ஒலி அலைகள்தான்

- பிண்டத்தை மற்ற பிண்டங்களோடும் அண்டங்களோடும் பேரண்டங்களோடும், அண்ட பேரண்டங்களோடும் இணைத்துப் பிணைக்கிறது.
- ஒவ்வொரு மனிதனுடைய முற்பிறப்பு, மறுபிறப்பு, இப்பிறப்பு ஆகிய மூன்றையும் இணைத்துப் பிணைத்து, இவற்றின் நல்லவை அல்லவைகளை கூட்டிக் கழித்து நிகழ்கால நடைமுறை வாழ்வுக்குரிய பொருளை விளக்குகின்றன.

இதே போல் இந்த இந்து வேத தமிழ் ஒலி அலைகள் தான்

- இறைவன் அல்லது கடவுள் என்பதையும், மனிதனுடைய உயிரையும், மனிதனுடைய சொந்த பந்த பற்றுக்களால் உருவாகும் பாசம் என்பதையும் இணைத்து மனிதனுக்குத் தேவையான அருளுலக வாழ்வுக்குரிய பக்குவங்களை விளைவித்துத் தருகின்றன.

இதனை விளக்கமாகக் கூறிட வேண்டுமென்ற¡ல், இந்து வேதத்தின் தமிழ் எழுத்து, சொல், சொற்றெ¡டர் எனும் மூன்றும் உரத்த குரலில் ஒதப்பட்டு எழுப்பப்படும் ஒலி அலைகளால்தான் மனித வாழ்வுக்குத் தேவையான பத்தி, சத்தி, சித்தி, முத்தி எனும் நான்கும் படிப்படியாகக் கிடைக்கின்றன,

இந்த இந்து வேதத்தின் எழுத்து, சொல், சொற்றெ¡டர் முதலிய மூன்றும் மனிதனுடைய ஆவி, ஆன்மா, ஆருயிர் என்ற மூன்றுக்கும் சமமானவை.

இந்த இந்து வேதம் எழுத்து, சொல், சொற்றெ¡டர் எனும் வரிவடிவங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு விரிந்து பரந்து எங்கும் வெகு வேகமாகச் செல்லக்கூடிய ஒலியாகத்தான் வாழுகிறது. எனவே, இந்து வேதத்தை எழுத்துக்களின் வரிவடிவங்களுக்குள்ளோ அல்லது சொற்களின் பொருள் வடிவங்களுக்குள்ளோ அல்லது சொற்றெ¡டர்களின் கருத்து விளக்க எல்லைகளுக்குள்ளோ உள்ளடக்கிக் கண்டிட முயலக்கூடாது, முயலக்கூடாது, முயலக்கூடாது என்று மூலப் பதினெண் சித்தர்களாலும் பதினெட்டாம்படிக் கருப்புகளாலும் மிகமிகத் தெளிவான வரையறுக்கப்பட்ட கருத்து அறிவிக்கப் பட்டிருக்கிறது, அறிவிக்கப் பட்டிருக்கிறது, அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதுவே இந்த வேதத்தின் அளப்பிரிய எல்லையற்ற விரிந்து பரந்துபட்ட அரிய பெரிய உயரிய, சீரிய, வீரிய, நேரிய நிலைமைகளை விளக்குகிறது, விளக்குகிறது, விளக்குகிறது,

-ஞானாச்சாரியார்
'அன்பு சித்தர்'

Source: Induism
 
Worries and Prayers

Worries and Prayers


Prayer is not a "spare wheel" that you pull out when in trouble, but it is a "steering wheel" that directs the right path throughout.

Do you know why a Car's WINDSHIELD is so large the Rear view Mirror is so small?
Because our PAST is not as important as our FUTURE. Look Ahead and Move on.

Friendship is like a BOOK. It takes few seconds to burn, but it takes years to write.

All things in life are temporary. If going well, enjoy it, they will not last forever. If going wrong, don't worry, they can't last long either.

Old Friends are Gold! New Friends are Diamonds! If you get a Diamond, don't forget the Gold! Because to hold a Diamond, you always need a Base of Gold!



Often when we lose hope and think this is the end, however, in actual it should be, "Relax, sweetheart, it's just a bend, not the end!

A blind person asked a wise person "Can there be anything worse than losing eye sight?" He replied: "Yes, losing your vision!"

WORRYING does not take away tomorrows' TROUBLES, it takes away today’s' PEACE.



Source: Keralites Net
 
பூஜைக்கு உதவும் புஷ்பம் எது?

பூஜைக்கு உதவும் புஷ்பம் எது?


E_1301561587.jpeg


ஒரு கோவிலில், நிறைய பக்தர்கள் வந்து போய் கொண்டிருந்தனர். ஒரு சிலர், கோவிலுக்காக எண்ணை, திரி, பழம், தேங்காய் என்று சிலவற்றை கொண்டு வந்தனர்; சிலர், ஒரு ஆழாக்கு அரிசி, ஒரு பிடி பருப்பு இப்படியாக கொண்டு வந்து, அதற்கான கூடைகளில் போட்டு சென்றனர்; எல்லாமே கைங்கர்யம் தான்.

ஒருவர், வேட்டி மடியில் கொஞ்சம் புஷ்பங்களை கொண்டு வந்து, அங்கிருந்த புஷ்பக் கூடையில் போட்டார். இதைப் பார்த்து கொண்டிருந்த பெரியவர் ஒருவர், புஷ்பம் போட்டவரை கூப்பிட்டு, "இப்போது புஷ்பம் கொண்டு வந்து போட்டாயே... இதை, ஒரு குடலையிலோ, ஒரு இலையிலோ எடுத்து வந்து போட்டிருக்க வேண்டும்; மடியில் கட்டி வருவது பூஜைக்கு உதவாது...' என்றார்.

அதற்கு, அவர், "அப்படியா... எனக்கு அதெல்லாம் தெரியாது. கோவிலுக்கு புஷ்பம் கொடுத்தால், புண்ணியம் என்றனர். அதனால், இங்கு வரும் போது, அடுத்த வீட்டு காம்பவுண்டு சுவர் பக்கமாக நிறைய புஷ்பம் பூத்திருந்தது; கீழேயும் கொஞ்சம் விழுந்திருந்தது. அவைகளை, அப்படியே எடுத்து மடியில் கட்டி, இங்கு வந்து போட்டேன்...' என்றார்.
"நீ செய்த எதுவுமே புண்ணியத்தை கொடுக்காது; மேலும், நீ செய்ததும் சரியல்ல...' என்றார்

பெரியவர். புஷ்பம் கொண்டு வந்தவர், "சரி... நான் செய்தது தவறாக இருக்கலாம். சரியான முறையை எனக்கு சொன்னால், அதன்படி செய்கிறேன்; தவறு வராமல் பார்த்துக் கொள் கிறேன்...' என்றார்; பெரிய வரும் சில விதிமுறைகளை சொன்னார்:

சிவலிங்கத்தின் தலையில் புஷ்பம் இல்லாமலிருக்கக் கூடாது; புஷ்பங்களில் சாத்வீகம், ரஜசம், தாமசம், மிச்ரம் என்ற நான்கு வகைகள் உண்டு. வெண்மையான புஷ்பங்கள் சாத்வீகம், சிவந்தவை ரஜசம், கருநிற புஷ்பங்கள் தாமசம், மஞ்சள் வர்ணமுள்ளது மிச்ரம். மூன்று தளங்கள் உள்ளதும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணமுள்ளதுமான ஒரு வில்வத்தை, சிவனுக்கு, அர்ப்பணம் செய்தால், மூன்று ஜென்மாவின் குலோத்தாரணம் செய்து, சிவலோகத்தில் கொண்டாடப்படுவான். வில்வ பத்ரம் புதிதாக இருந்தாலும், காய்ந்திருந்தாலும், சிவனுக்கு அர்ச்சிப்
பதால், சகல பாவங்களும் விலகும்.

வில்வ பத்திரத்தை ஒரு முறை அர்ச்சித்தபின், மறுதினம் அதையே தண்ணீரில் கழுவி, மீண்டும் அர்ச்சிக்கலாம்; தோஷமில்லை. சுவர்ண புஷ்பம், மூன்று நாளும்; வில்வம், ஐந்து நாளும்; துளசி, பத்து நாளும் திரும்பத் திரும்ப எடுத்து, பூஜிக்கலாம்; பழசு என்ற தோஷமில்லை.

ஸ்நானம் செய்தபின், அப்படியே புஷ்பம் பறித்து வந்தால், அது, பூஜைக்கு உதவாது. ஈரவேட்டி மாற்றி, காய்ந்த வேட்டி உடுத்தி, நெற்றிக்கிட்டு, வாழை இலை அல்லது பூக்குடலையில் கொண்டு வர வேண்டும். கீழே விழுந்த புஷ்பம், வஸ்திரத்தில், கையில் கொண்டு வந்த புஷ்பம், வாடியது, புழு அரித்தது, கேசம் சேர்ந்தது ஆகிய புஷ்பங்களைத் தள்ள வேண்டும்.

அட்சதையால் விஷ்ணுவையும், துளசியால் விநாயகரையும், அருகினால் தேவியையும், வில்வத்தால் சூரியனையும் பூஜிக்கக் கூடாது. ஊமத்தை, எருக்கு புஷ்பங்கள், விஷ்ணுவுக்கு கூடாது. பூஜைக்குரிய எருக்கு, செண்பகம், புன்னை, நந்தியாவட்டை, பாதரீ, கண்டங்கத்தரி, அரளி, நீலோற்பலம் ஆகிய இந்த எட்டும், அஷ்ட புஷ்பங்கள் எனப்படும். புஷ்பத்தை கிள்ளி, கிள்ளி பூஜை செய்தால் தரித்ரியம் ஏற்படும்.

பல நாமாக்களுக்கு ஒரு முழு புஷ்பம் அர்ச்சிக்கலாம். பத்திரத்தை கிள்ளி அர்ச்சிக்கலாம். வில்வம், துளசியை தளம், தளமாக அர்ச்சிக்க வேண்டும். தாமரை பூவில் சரஸ்வதியும், அரளிப் பூவில் பிரம்மாவும், வன்னியில் அக்னியும்... இப்படி ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு தெய்வம் உள்ளது. இன்னும் நிறைய விதிகள் உண்டு என்றார் அந்த பெரியவர்.


varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements
 
Legend about Jagannath puri Temple

Legend about Jagannath puri Temple


Legendary account as found in the Skanda-Purana, Brahma Purana and other Puranas and later Oriya works state that Lord Jagannath was originally worshipped as Lord Neela Madhaba by a Savar king ( tribal chief ) named Viswavasu. Having heard about the deity, King Indradyumna sent a Brahmin priest, Vidyapati to locate the deity, who was worshipped secretly in a dense forest by Viswavasu. Vidyapati tried his best but could not locate the place. But at last he managed to marry Viswavasu's daughter Lalita . At repeated request of Vidyapti, Viswavasu took his son-in-law blind folded to a cave where Lord Neela Madhaba was worshipped.


Vidyapati was very intelligent. He dropped mustard seeds on the ground on the way. The seeds germinated after a few days, which enabled him to find out the cave later on. On hearing from him, King Indradyumna proceeded immediately to Odra desha Orissa on a pilgrimage to see and worship the Deity. But the deity had disappeared. The king was disappointed. The Deity was hidden in sand. The king was determined not to return without having a darshan of the deity and observed fast unto death at Mount Neela, Then a celestial voice cried 'thou shalt see him.' Afterwards the king performed a horse sacrifice and built a magnificent temple for Vishnu. Sri Narasimha Murti brought by Narada was installed in the temple. During sleep, the king had a vision of Lord Jagannath. Also an astral voice directed him to receive the fragrant tree on the seashore and make idols out of it. Accordingly the king got the image of Lord Jagannath, Balabhadra, Subhadra and Chakra Sudarshan made out of the wood of the divine tree and installed them in the temple.

Jagannath Temple, Puri - Wikipedia, the free encyclopedia
 
நெல்லிக்காயின் மகத்துவம் தெரியுமா?

நெல்லிக்காயின் மகத்துவம் தெரியுமா?


ஏகாதசியில் நெல்லி மேல் பட்ட நீரில் நீராட, துவாதசியில் நெல்லி உண்பவன் கங்கையில் நீராடிய பயனும், காசியை பூஜித்த பலனையும் பெறுகின்றான். சூரியன் தவிர மற்றோரை நெல்லியால் பூஜிக்கலாம் அமாவாசையன்று நெல்லியை பயன்படுத்துதல் கூடாது. கோயில் கோபுரம் கலசங்களில் நெல்லியையும் போடுவர். மேலும் விமான உச்சிக் கலசத்தின் கீழாக நெல்லிக்கனி வடிவத்தில் ஒரு கல்லை செதுக்கி வைப்பார் இதற்கு ஆமலகம் என்று பெயர்.

நெல்லிக்கு ஹரிப்ரியா என்றும் பெயர் உண்டு. ஏகாதசியன்று நெல்லி இலை மற்றும் நெல்லி முள்ளி (காய்ந்த நெல்லிக்காய்ப் பொடி) இடப்பட்ட நீரில் குளித்து, விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பு. நெல்லிமரம் வளரும் வீட்டினைத் தீய சக்திகள் நெருங்காது, துர்மரணம் நிகழாது. அந்த வீடு லட்சுமி கடாட்சத்துடன் விளங்கும்.

நெல்லிக் கனியை நிவேதனம் செய்வதாலும் அதன் இலைகளால் அர்ச்சிப்பதாலும் மகாவிஷ்ணு மிகுந்த மகிழ்ச்சியடைகிறார். துவாதசி நாளில் ஏகாதசிவிரதத்தினை பூர்த்தி செய்து நெல்லிக்கனியை உண்பது அவசியம். இதனால் கங்கையில் நீராடிய பலனும், காசியில் வசித்த பலனும் கிட்டும். வெள்ளிக் கிழமைகளில் நெல்லி மரத்தினை வலம் வந்து வழிபடுபவர் திருமகளின் திருவருளைப் பெறுவர்.

Nellikka know the effects of spirituality and science? |???????? ??????? ???????? ?????? ?????????????? ????????? ????????? -Aanmeega Dinakaran
 
புது ஆடைகளில் மஞ்சள் தடவி அணிவது ஏன்?

புது ஆடைகளில் மஞ்சள் தடவி அணிவது ஏன்?



மஞ்சள் - தீமைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடிய ஆற்றல் உடையது.


புதிய ஆடைகள் அணிந்திருக்கும்போது, எவரேனும் தவறான எண்ணங்களுடனும் பொறாமையுடனும் நம்மைப் பார்த்தார்களேயானால், இந்த மஞ்சளானது நம்மைக் காப்பாற்றும் என்பது நமது நம்பிக்கை.
இதுமட்டுமல்லாமல், மஞ்சள் என்பது மங்களத்தின் அடையாளம் !


எனவே, ஒருவர் மஞ்சள் தடவிய ஆடையை உடுத்தியிருப்பார் ஆயின், அவர் ஏதேனும் மங்கள காரியத்தில் பங்கேற்றியிருப்பார் என்பதை நாம் அறியலாம்.


புத்தாடை என்பது கஞ்சி முதலானவையின் சம்பந்தம் உடையதனால், மஞ்சளை அதன்மேல் தடவுவதன் மூலம் அனைத்து வித தீயவையும் விலகி நன்மைகள் அடையக் காரணமாக அமைகின்றது.


Source: Anantha Narayanan
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top