• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My jokes in Tamil and English

Status
Not open for further replies.
Sam goes to the doctor for his yearly checkup. “Everything is fine”, said the doctor, “You’re doing OK for your age.” “For my age?” questioned Sam, “I’m only 75, do you think I’ll make it to 80? “Well” said the doctor, “do you drink or smoke?” “No” Sam replied. “Do you eat fatty meat or sweets?” “No” said Sam “I am very careful about what I eat.” “How about your activities? Do you engage in thrilling behaviors like speeding or skiing? “No” said Sam taken aback, “I would never engage in dangerous activities.” “Well,” said the doctor, “then why in the world would you want to live to be 80?
 
அதோ ரோடுலே கம்பீரமா நடந்து போய்க்கிட்டு இருக்காரே அவர் யார்?
அந்த ஆளா? அவர்தான் இந்த ஊரிலேயே பெரிய கேடி. அவர் பேர்லே ஏகப்பட்ட கேஸ் இருக்கு கொலை கேஸூகள் உள்பட.
அப்படின்னா வருங்கால மந்திரின்னு சொல்லு.
 
அந்த புது டாக்டர் போலியோ டாக்டர்னு நான் நினைக்கிறேன்.
டாக்டரே போலியோன்னு நான் சந்தேகப்படறேன்..
 
நீங்க உங்க பையனுக்குப் பார்க்கிற பொண்ணு எப்படி இருக்கணும்னு எதிர்பார்க்கிறீங்க?
பொண்ணு பார்க்க ரொம்ப அழகா இருக்கணும். நிறைய படிச்சவளா இருக்கணும். பெரிய பணக்கார இடத்துப் பொண்ணா இருக்கணும். நல்ல பண்புள்ளவளா இருக்கணும்.
நீங்க கேட்கிறதைப் பாத்தா பையனுக்கு நாலு பொண்கள் பார்க்கிறீங்க போல இருக்கே.
 
While working the lunch shift at a local restaurant, I watched as an elderly couple ate. It seemed as if the man was the only one eating. First his appetizer, then his main, and then finally his dessert. All the while with his wife just looking on, not even touching her food. Confused, I approached the woman and asked if there was anything I could get for her. “No thank you,” came her answer, “it’s his turn for the teeth.”
 
இப்ப நடக்கிற கல்யாணங்களெல்லாம் சுத்த மோசம்.
ஆமாம். பழைய காலம் மாதிரி இல்லாமல் சடங்குகளையெல்லாம் ரெம்ப சுருக்கமா பண்றாங்க. அதைத்தானே சொல்றே?
அதெல்லாம் இல்லை. முந்தியெல்லாம் கல்யாணத்துக்குப் போனா செருப்பையெல்லாம் வெளியே கழட்டி வெச்சிட்டுக் கல்யாண மண்டபத்துக்குப் போவோம். இப்ப எல்லாம் செருப்போடேயே கல்யாண மண்டபத்துக்குப் போயிடறாங்க. அதனாலே இப்ப கல்யாணத்துக்குப் போனா புது செருப்பு கெடைக்கிறதுக்கு சான்ஸே இல்லாமல் போயிட்டுது.
 
நம்ம படத்திலே ஏதோ சிலரைப் புண்படுத்தற மாதிரி சீன் வருதுன்னு சொன்னியே, ஜாக்கிரதை. ஏதாவது ஏடாகூடமா ஆயிடப் போகுது.
அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. ராமரை மட்டம் தட்டி ஒரு சீனும், ................ கிண்டல் பண்ணி ஒரு சில சீன்களும் வருது. அவ்வளவுதான்.
அவ்வளவுதானே. இதுலே எந்தப் பிரச்சினையும் வராது. மதச் சார்பின்மை, சமூக நீதி அப்படின்னு சொல்லி சமாளிச்சிடலாம். தைரியமா எடு. சென்சார் போர்டோ, அரசாங்கமோ, பொது ஜனங்களோ இதைக் கண்டுக்க மாட்டாங்க. ஆனா தப்பித் தவறிக்கூட வேறே மதத்தைப்பற்றியோ, வேறே ஜாதியைப் பற்றியோ தவறா எடுத்திடாதே. அப்புறம் போராட்டம், கல்லை விட்டெறியறது, பஸ்ஸைக் கொளுத்தறது, கடைகளை அடிச்சி நொறுக்கறது, அடிதடின்னு ரகளை ஆயிடப் போகுது. அப்புறம் நமக்கு பெரிய தலைவலியாயிடும். மாநில அரசாங்கம், மத்திய அரசாங்கம் எல்லாம் நாம மத அமைதியைக் குலைச்சிட்டோம்னு சொல்லி படத்தைத் தடை செஞ்சு நம்மையும் உள்ளே தள்ளிடுவாங்க.
 
தலைவர் ஏன் இவ்வளவு கவலையா இருக்கார்?
இருக்காதுங்களா? ஒவ்வொருத்தர் தலைக்கு 10 லட்சம் 20 லட்சம்னு சொல்லும்போது இவர்தலைக்கு மாத்திரம் 2 லட்சம்னு சொன்னா கோபம் வராதா, தன் தலையை இவ்வளவு குறைவா மதிப்பிட்டுட்டாங்களேன்னு?
 
அந்த அம்மா அப்பளாம் வெச்சி விக்கறாங்க.
ஏன் அப்பளாம் வெச்சி விக்கணும்? தொண்டை காஞ்சா தானா விக்கல் வருமே.
 
வண்டிச் சத்தம் என்ன இவ்வளவு அதிகமா கேக்கறே?



வண்டி என்ன இவ்வளவு அதிகமா சத்தம் போடுதுன்னு நீங்கதானே கேட்டீங்க. அதுக்குத் தகுந்த சத்தம் தான் நான் கேக்கறேன்.
 
உங்களுக்கு எந்த வருஷம் கல்யாணம் ஆச்சு?
இந்த சந்தோஷமான நேரத்துலே அதை ஏன் ஞாபகப் படுத்துறீங்க?
 
உலகம் சுத்தினா பொது அறிவு வளரும்.
அப்படிங்களா? இது தெரியாம நான் ஊரைச்சுத்தற என் பையனை கண்டிச்சுட்டேன். இனிமே நான் அந்த மாதிரி அவனைக் கண்டிக்க மாட்டேன்.
 
அவங்க வீட்டுலே அவனோடே அப்பா திட்டிட்டார்னு அவர் பையன் ஓடிட்டானாம்.
அப்படியா? அவங்களுக்கு அடுத்த வீட்டிலே அம்மா திட்டிட்டாங்கன்னு அவங்க வீட்டுப் பொண்ணு ஓடிப் போயிட்டாளாம்.
நீங்க சொல்றதைக் கேட்டா இது ஏதோ திட்டு வாங்கினதாலே ரெண்டு பேரும் ஓடிப் போன மாதிரி தெரியல்லே. திட்டமிட்டு ஓடிப் போன மாதிரி தான் எனக்குத் தோணுது.
 
அவர் லஞ்சம் வாங்கறதுலே மகா கெட்டிக்கார்.
எப்படிச்சொல்றே?
மத்தவங்களையெல்லாம்போல 100 ரூபா வாங்கிட்டு 5 வருஷம் ஜெயிலுக்குப் போகாம, லட்சம் லட்சமா வாங்கி 5 வருஷம் மந்திரியா இருந்தவர்.
 
நம்ம தலைவர் நடத்தின சிறப்புக் கூட்டத்தின் போது ஏகப்பட்ட செருப்புகள் வந்து விழுந்ததே. கவனிச்சீங்களா?
ஆங். கவனிச்சேன், கவனிச்சேன். கடைசியிலே சிறப்புக் கூட்டம் செருப்புக் கூட்டமா மாறிப்போச்சு.
 
இந்தப் படத்துக்கு எந்த முட்டாள் கதை எழுதினான்னு தெரியல்லே.
ஏன்? நான் தான்.
மன்னிக்கணும். கதை பரவாயில்லை. வசனம்தான் கெடுத்துடுத்து. அதை எழுதினவன் சரியான மடையன்.
சாரி!வசனம் எழுதினதும் நான்தான்.
அடேடே அப்படியா? வசனம்கூட பரவாயில்லை. டைரக்ஷன் தான் சுத்த மோசம்.
அந்தப் படத்தோட டைரக்டரும் நான் தான்.
அய்யய்யோ! என்னை மன்னிக்கணும். நீங்கயாருன்னு தெரியாம உங்க கிட்டே ஏதேதோ சொல்லிட்டேன்.
அதனாலே பரவாயில்லை. எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்.
என்ன சந்தோஷமா?
ஆமாம். ஏன்னா இவ்வளவு கஷ்டப் பட்டு நான் எடுத்த படத்தைப் பாத்ததே
நீங்க ஒத்தர்தானே.
 
நேத்து பிரியா ஊருக்குப் போகும்போது அவ தங்கைக்கு வடை பிடிக்குமேன்னு வடை கொடுத்து அனுப்பினேன்.
பிரியாவடை கொடுத்து அனுப்பினேன்னு சொல்லு.
 
He told me that he will send a email to you with regard to his problem. Has he sent it?
What he sent me was not email but BLACKMAIL.
 
நேத்து நீங்க வீட்டிலே பலமா கத்திக்கிட்டு இருந்தீங்களே. மனைவியோடே சண்டையா?
ஆமாம்.
பரவாயில்லையே. மனைவிக்கு எதிரா பலமா கத்தற அளவுக்கு உங்களுக்குத் தைரியம் இருக்கே.
மண்ணாங்கட்டி.அவ முந்தாநாளே ஊருக்குப் போயிட்டா.அவ மேலே இருக்கிற ஆத்திரத்தையெல்லாம் நேத்து நானே கத்தித் தீர்த்துக் கிட்டேன்.
 
எனக்குத் தெரிஞ்ச பொண்ணு உங்க கடையிலே வேலை பண்ணிக்கிட்டு இருந்ததே. அந்தப் பொண்ணு எங்கே?
அந்தப் பொண்ணு டெலிவரிக்குப் போயிருக்கு.
என்ன சொல்றீங்க நீங்க ? அந்தப் பொண்ணுக்குக் இன்னும் கல்யாணமே ஆகல்லியே.
அந்தப் பொண்ணு நம்ம கடை சாமான்களை கஸ்டமர் வீடுகளுக்குக் கொண்டு போய் டெலிவர் பண்றதுக்குப் போயிருக்குன்னு சொல்ல வந்தா நீங்க வேறே.
 
உண்மையில் நடந்தது

நான் ஒரு டாக்ஸி புக் பண்ணியிருந்தேன். டாக்ஸி டிரைவர் எனக்கு ஃபோன் பண்ணி இடம் எது என்று தெரிந்து கொள்ள 'எங்கே சார் வரணும்?' என்று கேட்டார். நான் அவரிடம் 'திருவான்மியூர் பஸ் டெப்போ தெரியுமா?' என்று கேட்டேன். 'தெரியும்' என்றார் அவர். 'அங்கே வந்து நின்று கொண்டு பார்த்தால் எதிர் வரிசையில் ரெண்டு கேட் தெரியும். அதுலே இடது பக்கக் கேட்டுக்குள் நுழையவும்' என்று சொன்னேன். 'அதெல்லாம் சரிதான் சார். இடது பக்கக் கேட்டுன்னா ரைட்டா லெஃப்டான்னு சொல்லுங்க சார். வெறும் இடது பக்கம்னு சொன்னா எப்படி சார்?' என்றாரே பார்க்கலாம். 'என்னப்பா உனக்குத் தமிழ் தெரியாதா? இடது பக்கம்னா லெஃப்ட்டுன்னு கூடத் தெரியாதா?' என்று கேட்டேன். 'தெரியும் சார். நான் (பச்சைத்) தமிழன் சார். ஆனா நல்லாப் புரியற மாதிரி லெஃப்ட்டுன்னு (தமிழ்லெ) சொன்னா நான் புரிஞ்சிக்கிட்டு இருப்பேன் இல்லே' என்றார். தமிழ் நாட்டின் கதியை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று எனக்குப் புரியவில்லை.



அந்த வண்டியில் நாங்கள் புறப்பட்டோம். டிரைவர் ஒரு ரோடு ஜங்ஷன் வந்த போது எந்தப் பக்கம் திரும்ப வேண்டும் என்ற சந்தேகம் வரவே 'சார், லெஃப்ட்லே தானே திரும்பணும்' என்று கேட்டார். 'எஸ் ரைட்' என்று நான் சொன்னவுடன் லெஃப்டில் திரும்ப ஆரம்பித்த டிரைவர் திடீரென்று ரைட் ஸைடில் திரும்ப ஆரம்பிக்கவே 'என்னங்க, லெஃப்டிலே திரும்பினவர் ஏன் ரைட்லே திரும்பறீங்க?' என்று நான் கேட்கவே அவர் ' நீங்கதானே சார் சொன்னீங்க ரைட்டுனு' என்றார். 'என்னங்க குழப்பறீங்க? 'நீங்க லெஃப்டிலேதானே திரும்பணும்'னு கேட்டீங்க. நானும் 'நீங்க சொன்னது ரைட்'டுனு சொன்னேன். நான் தமிழ்லே 'ஆமாம் சரி' ன்னு சொல்லியிருந்தா உங்களுக்குப் புரியாம போயிருக்கும். அதனாலே இங்கிலீஷுலே சொன்னேன். எப்படிச்சொன்னாலும் நீங்க குழம்பிப் போறீங்க. நான் என்ன செய்யறது?' என்றேன் நான்.
 
என் அத்தையோட அத்தனை சொத்தைப் பல்லையும் பிடுங்கச் சொன்னா,
நம்ம பல் டாக்டர் அத்தையோட அத்தனை சொத்தையுமே பிடுங்கிட்டார்.
 
என் உப்பைச் சாப்பிட்டு சாப்பிட்டுத்தான் இன்னிக்கு நீ இவ்வளவு பெரிய ஆளா ஆயிருக்கேங்கறதை மறந்துடாதே.
அப்படியா? இப்பத்தான் தெரியறது என்னுடைய high BP க்கு உங்க உப்பு தான்காரணம்னு.
 
என் ஃப்ரெண்ட் பிரகலாத் அப்பாவுக்கு ஹெரண்யா ஆபரேஷனாம்.
யார் டாக்டர்?
டாக்டர் நரசிம்மா.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top