• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My jokes in Tamil and English

Status
Not open for further replies.
நீங்க உங்க பையனுக்குப் பார்க்கிற பொண்ணு எப்படி இருக்கணும்னு எதிர்பார்க்கிறீங்க?
பொண்ணு பார்க்க ரொம்ப அழகா இருக்கணும். நிறைய படிச்சவளா இருக்கணும். பெரிய பணக்கார இடத்துப் பொண்ணா இருக்கணும். நல்ல பண்புள்ளவளா இருக்கணும்.
நீங்க கேட்கிறதைப் பாத்தா பையனுக்கு நாலு பொண்கள் பார்க்கிறீங்க போல இருக்கே.
 
கூடப் பிறந்த தம்பியா இவன்?
இல்லை. லேட்டாப் பிறந்த தம்பி.
 
உனக்கு கிளாஸ் எடுக்கற ப்ரொஃபஸர் பேர் என்ன?
இன்னும் நாங்க அவருக்குப் பேர் வெக்கலை!
 
பாட்டி, ஏன் இங்கே தனியா இருந்து கஷ்டப் படறீங்க? பேசாம கிரீன் கார்டு வாங்கிண்டு உங்க பேரனோடே அமெரிக்காவுக்குப் போய் இருக்க வேண்டியது தானே.

சுடுகாடு போற நேரத்துலே எனக்கு எதுக்குடா கிரீன்காடு?
 
நீ ஆரம்பிச்சி இருக்கிற ஹோட்டல் பேர் என்ன?
ஹோட்டல் மீனா.
சைவ ஹோட்டலா, அசைவ ஹோட்டலா?
சுத்த சைவ ஹோட்டல்.
சைவ ஹோட்டலுக்குப் போய் யாரவது மீனா, தவளையா, நண்டான்னு பேர் வைப்பாங்களா?
அப்படின்னா வெண்டைக்காயா, சுண்டைக்காயான்னு பேர் வைக்கணுங்கிறியா?
 
இதுக்குத்தான் சொல்றது. மரத்தைச் சுத்தி சுத்தி லவ் பண்ற மாதிரி சீன் வேணாங்கிறது. இப்பப் பாரு அந்த நடிகை மரத்தைச் சுத்தி சுத்தி வர மாதிரி நாலுடேக் எடுக்கப் போய் இப்ப அவங்க மயக்கமா விழுந்துட்டாங்க.
 
நாடகத்துலே நடிச்சிக்கிட்டு இருந்த நீங்க இப்ப அரசியலுக்கு வந்தப்புறம் நாடகத்துலே நடிக்கிறதை ஏன் நிறுத்திட்டீங்க?
ஒரே சமயத்துலே ரெண்டு இடத்துலே நடிக்க முடியாதுங்கறதாலே.
 
'ஆபரேஷன் பண்ணியே ஆகணும். அப்பத்தான் பிழைக்க முடியும்'னு என்னை நேத்து செக் பண்ணின டாக்டர் சொல்றாரே.
அது அவர் பிழைக்கறதைப் பத்திச் சொல்லியிருப்பார்.
 
I saw six men kicking and punching the mother-in-law.
My neighbor said ‘Are you going to help?’
I said, ‘No, Six should be enough.
 
சார், ஒரு அப்பாவியைப் போட்டு அடிச்சிக்கிட்டு இருக்காங்க. வாங்க போய்க் காப்பாத்துவோம்.
நான் அதை வீடியோ எடுத்துக்கிட்டு இருக்கேன் இல்லே. இப்பப் போய் நீங்க என்னை டிஸ்டர்ப் பண்ணுறீங்களே. அறிவு இருக்கா உங்களுக்கு? வேறே பத்திரிகைகள்லே வரதுக்கு முன்னாடி நான் இதை எங்க பத்திரிகைக்கு அனுப்பிச்சாகணும். அப்பதான் அது ஸ்கூப் நியூஸ் ஆகும்.
 
என் பையன் எல்லாத்துலேயும் A plus
என் பையன் எல்லாத்துலேயும் D plus
ஆமாம் உன் பையன்?
எல்லாத்துலேயும் Hopeless
 
(பல் டாக்டர் கிளினிக்கில்)
டாக்டர் சார் பாம்பாட்டி ஒருத்தர் வந்து காத்துக்கிட்டிருக்கார்.
எதுக்கு?
அவரோட பாம்புக்குப் பல் பிடுங்கணுமாம்.
 
பிச்சைக்கார(ர்) உலகம்
அம்மா, தாயே, ரெண்டு இட்லி, ஒரு பொங்கல் தர்மம் பண்ணுங்க தாயே. அப்படி உங்களாலே முடியல்லேனா அதுக்கான காசை தர்மம் பண்ணினீங்கன்னா நான் அம்மா கான்டீன்லே சாப்பிட்டுக்கிறேன் தாயே.
 
அந்த டாக்டர் போலி டாக்டரா இருப்பாரோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு.
எதனாலே அப்படிச் சொல்றே?
ஒரு ஜலதோஷம்னு அவர்கிட்டே போனா Chest X-ray, ECG, தலையிலிருந்து கால் வரையிலும் Scan எடுக்கணும், மத்த எல்லா டெஸ்டும் பண்ணணும் அப்படீன்னு எல்லாம் சொல்லாம, ஒரு மருந்தை அதையும் புரியற மாதிரி எழுதிக் கொடுத்து "ரெண்டு நாள் இந்த மருந்தை சாப்பிடுங்க. அப்புறம் வந்து என்னைப் பாருங்க" ன்னு சொல்றார்னா பாத்துக்கோயேன்.
 
நீங்க காதல் கல்யாணத்தை ஆதரிக்கிறீங்களா இல்லை எதிர்க்கிறீங்களா?
என் பொண்ணு காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டா அதை ஆதரிப்பேன். ஆனா பையன் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டா அதை எதிர்ப்பேன்.
ஏன்?
பையன் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டா வரவேண்டிய வரதட்சிணை போயிடும்.
அதே பொண்ணு காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டா செலவு மிச்சம். அதான் காரணம்.
 
ENT டாக்டர்: உனக்கு எந்த இயர் (ear) தம்பி ரொம்ப டிரபிள் கொடுக்குது?
இஞ்சினீரிங் மாணவன்: ஃபைனல் இயர் (Final year) தான் டாக்டர்.
 
அந்தப் படத்தைப் பத்து தரம் பாத்தீங்களாமே? அதுலே அப்படி என்ன இருக்கு?
அதைத் தெரிஞ்சிக்க இன்னும் ரெண்டு மூணு தரமாவது போய்ப் பாத்தாத்தான் முடியும்.
 
நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணணும், தாத்தா.
என்னடா உதவி?
நான் இன்னிக்கு ஸ்கூலுக்குப் போகல்லே. நீங்க செத்துப் போனதா சொல்லி லீவு போட்டிருக்கேன். தயவு செஞ்சி எங்க வாத்தியார் கண்ணுலே படாம கொஞ்ச நாள் இருங்க தாத்தா.
 
பிச்சைக்கார(ர்) உலகம்
நான் பிச்சை கேக்க வரலை தாயே. நீங்க ஒரு வாரமா Facebook லே எழுதாததைப் பாத்து உங்களுக்கு உடம்பு சரி இல்லையோன்னு விசாரிச்சிட்டுப் போகலாம்னு வந்தேன் தாயே.
 
அந்த டாக்டர் ஏழை பணக்காரன் வித்தியாசமெல்லாம் பார்க்காம எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் சிகிச்சை பண்ணுவார்.
பரவாயில்லையே.
பணக்காரங்களுக்கு என்ன சார்ஜ் பண்ணுவாரோ, அதே சார்ஜ் தான் ஏழைகளுக்கும் பண்ணுவார்.
 
உன் தலைவரை ஏன் நெஞ்சைப் பிளந்து கொன்னே?
ஒவ்வொரு தேர்தல் போதும் எனக்கு சீட் தராம ஏமாத்திக்கிட்டு வந்தார். என்ன தலைவரே இப்படி பண்ணிட்டீங்கன்னு கேட்டா தேர்தல்லே சீட் தராவிட்டால் என்ன, உனக்கு நான் என் இதயத்துலே இடம் கொடுத்திருக்கேன்னு சொன்னாரு. அது நெஜம் தானா ன்னு பார்க்கத்தான் அவர் நெஞ்சைப் பிளந்து பார்த்தேன்
 
ஐயா, உங்க வூட்டு சாப்பாட்டுலே உப்பு சாஸ்தியா இருக்கறதை நீங்க எனக்குப் போடற இம்மாத்தூண்டு பிச்சையிலேருந்து கண்டு பிடிச்சுச் சொல்றேன். அம்மாவை சாப்பாட்டுலே உப்பை கொஞ்சம் குறைச்சலாப் போடச்சொல்லுங்க. இல்லாங்காட்டி வூட்டுலே அத்தினி பேருக்கும் bp வந்து உடம்புக்கு நோவு வந்துட்டா எனக்கு உங்க வூட்டுப் பிச்சை இல்லாம பூடும்.
 
நான் அட்டெண்ட் பண்ற கேஸ் போயிடுத்துன்னா அந்த மாதிரி கேஸுக்கெல்லாம் நான் பணம் வாங்கறதே இல்லை.
ஐயோ பாவம்? அப்புறம் நீங்க உங்க லைஃப் டைம்லே எப்பத் தான் பணம் வாங்கறது?
 
நம்ம சேது 'பாலம்' னு ஒரு படம் எடுத்துட்டு இருந்தானே. அது என்ன ஆச்சு?
அது சேதுபாலம் மாதிரி பாதியிலேயே நின்னு போச்சு.
 
அம்மா, தாயே, ஐயா, சாமி நான் ஒரு வாரம் வேறே வேலையா காசுவல் லீவுலே போறதாலே எனக்குப் பதிலா என் தம்பியை என் ஏரியாவுலே பிச்சை எடுக்க பவர் கொடுத்திருக்கேன். என்னை இதுவரை ஆதரிச்ச பெரியவங்க எல்லாம் எனக்குப் பதிலா என் தம்பியை தொடர்ந்து பிச்சை போட்டு ஆதரிக்கணும்னு கேட்டுக்கறேன்
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top