• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My jokes in Tamil and English

Status
Not open for further replies.
யார் இந்தப் பொண்ணு? ரொம்ப ஸ்லோவா இருக்காளே?
அவ பக்கத்து வீட்டுப் பொண்ணு. பேர் ஸ்லோசனா. அவதான் அவங்க வீட்டுக் கடைசிப் பொண்ணு. ரொம்ப நாள் கழிச்சிப் பிறந்தவ.
பேர் தான் அப்படின்னா, பிறப்பும் ரொம்ப ஸ்லோவா?
 
நம்ம நகராட்சியிலே எந்த வேலையும் நகர மாட்டேங்குதே.
இது நகராட்சி இல்லை. நகரா ஆட்சி. அப்படித்தான் இருக்கும்.
 
An employee approached his boss regarding a dispute on his pay-check… Employee – Sir, this is $100 less than my salary.
Boss – I know. But last month, when you were overpaid $100, by mistake, you didn’t complain!
Employee – Well, I don’t mind an occasional mistake, sir, but it seems to be becoming a habit, now!
 
டிவி சீரியல் ஒண்ணு எழுதப் போறேன்.
அது ரொம்பவும் கஷ்டமான விஷயம் ஆச்சே.
அதெல்லாம் ஒண்ணுமில்லை. அதுக்கு ஒரு ஈஸி ஃபார்முலா இருக்கு.
அது என்ன?
கதையிலே ஒரு அரை டஜன் வில்லன்களும் வில்லிகளும் வரணும். இந்த வில்லன், வில்லிகளெல்லாம் ரொம்ப கெட்டிக்காரங்க, சூப்பர் மூளை உள்ளவங்களா இருக்கிறதாகவும், அதுலே வர ஹீரோ, ஹீரோயின்களும் இந்த சீரியலைப் பார்க்கறவங்க எல்லாரும் படு மடையன்களாகவும், அல்லது படு மடச்சிகளாகவும் இருக்கிறதாகவும் நினைச்சுக் கிட்டு உங்க இஷ்டப்படி கதையை எழுதணும். அதுலே நடிக்கிறவங்க யாராவது நிஜமாவே இறந்துட்டா, கதையிலே அவங்களைத் தீர்த்துக் கட்டிடணும். இல்லே, அவருக்குப்பதில் இவர்னு போட்டுக் கதையை ஜவ்வு மாதிரி இழுத்துக்கிட்டே போகணும். தயாரிப்பாளர் போதும்னு சொன்னா லாஜிக் அது இதுன்னு பார்க்காம ஆயிரம் எபிசோடுகளுக்கு மேலா வளர்த்த கதையை டக்குன்னு அந்தக் கடைசி ஒரு வாரத்துலே முடிச்சுடணும். அவ்வளவுதான்.
 
A young Law student, having failed his Law exam, goes up to his crusty old professor, who is renowned for his razor-sharp legal mind.









Professor: "Actually, I probably do. Otherwise I wouldn't be a professor, would I?"




Student: "OK. So I'd like to ask you a question. If you can give me the correct answer, I will accept my mark as it is. If you can't give me the correct answer, however, you'll have to give me an "A"




Professor: "Hmmmm, all right. So what's the question?"




Student: "What is legal but not logical, logical but not legal, and neither logical nor legal?"




The professor wracks his famous brain, but just can't crack the answer. Finally he gives up and changes the student's failing mark into an "A" as agreed, and the student goes away, very pleased.




The professor continues to wrack his brain over the question all afternoon, but still can't get the answer. So finally he calls in a group of his brightest students and tells them he has a really, really tough question to answer: "What is legal but not logical, logical but not legal, and neither logical nor legal?"




To the professor's surprise (and embarrassment), all the students immediately raise their hands.




"All right" says the professor and asks his favourite student to answer.




"It's quite easy, sir" says the student "You see, you are 75 years old and married to a 30 year old woman, which is legal, but not logical. Your wife has a 22 year old lover, which is logical, but not legal. And your wife's lover failed his exam but you've just given him an "A", which is neither legal, nor logical."
 
எல்லாரும் அவங்க அவங்க மனைவிகளை கரும்பே, தேனே, சர்க்கரையேன்னு கொஞ்சற மாதிரி அவனாலே அவனுடைய மனைவியைக் கொஞ்ச முடியாது.
ஏன்?
ஏன்னா அவன் நீரிழிவு நோயாளி. டயாபெடிக்.
 
ஒத்தன் தண்ணி வித்து கோடீஸ்வரனானான்.
ஒத்தன் தண்ணி அடிச்சே பூண்டி ஆனான்
ஒருத்தன் பாட்டில் தண்ணி வாங்கியே ஆண்டியானான்.
ஒருத்தன் எல்லாருக்கும் தண்ணி காட்டியே பெரிய மனுஷன் ஆனான்
ஆனா இப்ப தண்ணிதான் எல்லாருக்கும் தண்ணி காட்டிக்கிட்டு இருக்கு.
 
டேய், நீ இந்தத் தடவை பரீட்சையிலே முதல் மார்க் வாங்க முயற்சிக்கணும். அதுக்காக நல்லா படிக்கணும். என்ன புரிஞ்சுதா?
அப்பா, அதுக்கு நான் மாத்திரம் ட்ரை பண்ணினா பத்தாது.
அப்படின்னா?
மத்தவங்க எல்லாரும் என்னைவிட குறைச்சலா மார்க் வாங்க ட்ரை பண்ணினாத்தான் அது நடக்கும்.
 
ஏண்டி, இந்த ரெண்டு மூணு மாசத்துலேயை என் மூஞ்சி கிழடு தட்டிப் போயிடுத்தா என்ன?
ஏன், எதுக்குக் கேக்கறேள்?
கொஞ்ச நாள் முன்னாடி வரையிலும் நான் பஸ்ஸுலே போகும்போது நின்னுண்டே தான் போவேன். ஒருத்தர் கூட வயசான மனுஷனாச்சேன்னு எனக்கு உட்கார சீட் கொடுத்ததே கிடையாது. என்னவோ தெரியல்லே. இப்ப கொஞ்ச நாளா பஸ்ஸுலே நான் ஏறின உடனே 'நீங்க உட்காருங்க சார்' னு எழுந்து இடம் கொடுக்கறாங்க. அதான் கேட்டேன்.
 
In the year 2010, the Lord came unto Noah, who was now living in the United States, and said: Once again the earth has become wicked and over-populated, and I see the end of all flesh before me. Build another Ark and save 2 of every living thing long with a few good humans. He gave Noah the blueprints, saying: You have 6 months to build the Ark before I will start the unending rain for 40 days and 40 nights. Six months later, the Lord looked down and saw Noah weeping in his yard – but no Ark. Noah! He roared, I’m about to start the rain! Where is the Ark ? Forgive me, Lord, begged Noah, but things have changed. I needed a building permit. I’ve been arguing with the inspector about the need for a sprinkler system. My neighbors claim that I’ve violated the neighborhood zoning laws by building the Ark in my yard and exceeding the height limitations. We had to go to the Development Appeal Board for a decision. Then the Department of Transportation demanded a bond be posted for the future costs of moving power lines and other overhead obstructions, to clear the passage for the Ark ‘s move to the sea. I told them that the sea would be coming to us, but they would hear nothing of it. Getting the wood was another problem. There’s a ban on cutting local trees in order to save the spotted owl. I tried to convince the environmentalists that I needed the wood to save the owls – but no go! When I started gathering the animals, an animal rights group sued me. They insisted that I was confining wild animals against their will. They argued the accommodations were too restrictive, and it was cruel and inhumane to put so many animals in a confined space. Then the EPA ruled that I couldn’t build the Ark until they’d conducted an environmental impact study on your proposed flood. I’m still trying to resolve a complaint with the Human Rights Commission on how many minorities I’m supposed to hire for my building crew. Immigration is checking the status of most of the people who want to work. The trade unions say I can’t use my sons. They insist I have to hire only Union workers with Ark-building experience. To make matters worse, they seized all my assets, claiming I’m trying to leave the country illegally with endangered species. So, forgive me, Lord, but it would take at least 10 years for me to finish this ark. Suddenly the skies cleared, the sun began to shine, and a rainbow stretched across the sky. Noah looked up in wonder and asked, “You mean you’re not going to destroy the world?” “No,” said the Lord. “The government beat me to it.”
 
ஆசிரியர்: என்ன நியூஸ் ஐயா இது? சென்னை மெயில் எந்த விதமான விபத்துகளுமின்றி, எந்த விதத் தடங்கலுமின்றி பிரயாணிகளுக்கு எந்த விதமான இடையூறுகளையும் ஏற்படுத்தாமல் சரியான நேரத்திற்கு மும்பய் வி டி ஸ்டேஷனைச் சென்று அடைந்தது. அந்த வண்டி ஸ்டேஷனை அடைந்த போது ஸ்டேஷனில் கூடியிருந்த அனைத்து மக்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து அதை வரவேற்று ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர். இது ஒரு நியூஸா ஐயா? வேறே ஏதாவது உருப்படியா எழுதிக் கொண்டு வா ஐயா.
செய்தியாளர்: நீங்க தானே சார் சொன்னீங்க எப்பவும் எல்லாப் பத்திரிகைகளிலும் வர மாதிரி கொலை, கொள்ளை, விபத்து இந்த மாதிரி இல்லாமல் அபூர்வமாகவும், புது மாதிரியாவும் ஜனங்களைக் கவரக் கூடிய மாதிரியாகவும், புதுமையா நல்ல செய்திகளை எழுதிக் கொண்டு வரச் சொன்னீங்க. அதைத்தான் நான் செஞ்சிருக்கேன்.
 
தலைவர் ஏன் இந்த வருஷம் தன்னோட பிறந்த நாள் விழாவைக் கொண்டாட வேண்டாம்னு சொல்லிட்டார்?
பிறந்த நாள் விழா கொண்டாடறதனாலே தான் அவருக்கு வருஷாவருஷம் வயசு கூடிக்கிட்டே போகுதாம். கொண்டாடாம இருந்தா வயசு கூடாம இருக்கும் இல்லியா அப்படிங்கறார்.
 
படிச்ச பொண்ணுன்னு சொல்றீங்க. ஆனா அவளுக்கு முதல்லே உலை வெக்கத் தெரியுமா?
அவ அப்பன் ஊருக்கே உலை வெச்சவன். அவன் பொண்ணுக்கு உலை வெக்கத் தெரியாம போகுமா என்ன
 
Ipl கிரிக்கெட் ஆட்டத்துக்காக வெளிநாட்டு விளையாட்டு வீரர்களையெல்லாம் கோடிக் கணக்குலே ரூபாகொடுத்து விலைக்கு வாங்கறாங்களே அதனாலே வெறும் 20,000 ரூபா விலை கொடுத்து ஒரு பையனை ஒரு ஏழை கிட்டே இருந்து அவருக்கு உதவி பண்ணறதுக்காக அது தப்பு இல்லைன்னு நெனச்சு வாங்கினா அது சட்டப்படி தப்புன்னு என்னைக் கைது செய்யறாங்களே, இது என்னங்க நியாயம்?
 
அவரும் நானும் ஒரே சமயத்துலே தான் 5 லட்சத்துக்கு ஒருத்தர்கிட்டே இன்சியூர் பண்ணிக் கிட்டோம். ஆனா பாவம் ரெண்டு வருஷம் கூட ஆகல்லை. அதுக்குள்ளே அவர் போயிட்டார்.
பாவம் என்னங்க பாவம். இப்ப அந்த வீட்டு அம்மாவுக்கு அஞ்சு லட்சம் கிடைக்கும்னு சொல்லுங்க. அதிர்ஷ்டக்கார பொம்பளை. அதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்.
 
முட்டை விலை ரொம்ப ஏறிப்போச்சுன்னு எல்லாரும் கவலைப் படும்போது நம்ம தலைவர் மாத்திரம் ரொம்ப சந்தோஷமா இருக்கார்.
ஏன் அப்படி? முட்டை வியாபாரம் பண்ணறாரா?
அதெல்லாம் இல்லை. முட்டை விலை ரொம்ப ஏறிட்டதனாலே இனிமே அவர் மீட்டிங்குலே யாரும் அவர்மேலே முட்டை வீசி எறிய மாட்டாங்கன்னு சந்தோஷப் படறார்
 
A religious women upon waking up each morning would open her front door stand on the porch and scream, “Praise the lord.” This infuriated her atheist neighbor who would always make sure to counter back, “there is no Lord.” One morning the atheist neighbor overheard his neighbor praying for food, thinking it would be funny, he went and bought her all sorts of groceries and left them on her porch. The next morning the lady screamed, “praise the Lord, who gave me this food.” The neighbor laughing so hard he could barely get the words out screamed “it wasn’t the Lord, it was me.” The lady without missing a beat screamed “praise the Lord for not only giving me food but making the atheist pay for it!!“
 
என்னங்க, இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?
நம்ம பேட்டை எலக்‌ஷனை கேன்சல் பண்ணிட்டாங்க இல்லே. அதான்
அதுலே உங்களுக்கு என்னங்க அவ்வளவு சந்தோஷம்?
எப்படியும் இந்தத் தொகுதிக்கு மறுபடியும் எலக்‌ஷன் வெச்சாகணும். அப்ப நமக்கு மறுபடியும் பணம் கிடைக்குமில்லே?
 
அவர் பொண்ணுக்குத்தான் கல்யாணம் ஆயிடுச்சே. அவர் ஏன் இன்னும் மாப்பிள்ளையைத் தேடறார்.
கல்யாணமான மறுநாளே மாப்பிள்ளை எங்கேயோ ஓடிப் போயிட்டாராம். அவரைத்தான் தேடிக்கிட்டு இருக்கிறார்.
 
One day an employee sends a letter to his boss to increase his salary!!! In thi$ life, we all need $ome thing mo$t de$perately. I think you $hould be under$tanding of the need$ of u$ worker$ who have given $o much $upport including $weat and $ervice to your company. I am $ure you will gue$$ what I mean and re$pond $oon Your$ $incerely,
Norman $oh
The next day, the employee received this letter of reply: I kNOw you have been working very hard. NOwadays, NOthing much has changed. You must have NOticed that our company is NOt doing NOticeably well . NOw the newspaper are saying the world`s leading ecoNOmists are NOt sure if the United States may go into aNOther recession. After the NOvember presidential elections things may turn bad. I have NOthing more to add NOw You kNOw what I mean.
Yours truly, Manager
 
அவன் தான் காதலித்த பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்க எவ்வளவு கஷ்டப் பட்டான்னு தெரியுமா?
அவன் காதலிச்ச அந்தப் பெண்ணைக் கல்யணம் பண்ணிக்கிட்டு இப்ப எவ்வளவு கஷ்டப் படறான்னு உங்களுக்குத் தெரியாது போல இருக்கு.
 
அவங்க வீட்டுலே அவனோடே அப்பா திட்டிட்டார்னு அவர் பையன் ஓடிட்டானாம்.
அப்படியா? அவங்களுக்கு அடுத்த வீட்டிலே அம்மா திட்டிட்டாங்கன்னு அவங்க வீட்டுப் பொண்ணு ஓடிப் போயிட்டாளாம்.
நீங்க சொல்றதைக் கேட்டா இது ஏதோ திட்டு வாங்கினதாலே ரெண்டு பேரும் ஓடிப் போன மாதிரி தெரியல்லே. திட்டமிட்டு ஓடிப் போன மாதிரி தான் எனக்குத் தோணுது.
 
உங்க அப்பா உடம்புக்கு ஒண்ணுமில்லாம இருக்காரா?
இல்லையே. வேஷ்டி, சட்டை எல்லாம் போட்டுண்டுதான் இருக்கார்
 
யமன்: அப்படியா? என்ன அது?
சி குப்தன்: இவனுடைய குருநாதர் இவனை ஒரு கோடி ராம ஜெயம் எழுதச்சொன்னார்.
ஆனால் இவன் நூறு ராம ஜெயம் மட்டுமே எழுதி அதை xerox எடுத்து ஒரு கோடியாக்கி குருநாதரிடம் காண்பித்து குருநாதரை ஏமாற்றிவிட்டான்.
யமன்: ஆ! அப்படியா? இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?
சி குப்தன்: மஹாராஜா!நம்மிடமோ xerox machine இல்லை. திரேதாயுக காலத்திலிருந்து நம்முடைய ரெகார்டுகளெலலாம் அழிந்துபோய்க்கொண்டிருக்கின்றன.இவனைவிட்டு அத்தனை ரெகார்டுகளையும் நகல் எடுக்கச்சொல்வோம்.அந்த வேலையை முடிக்க குறைந்தது ஒருயுகமாவது ஆகும்.எழுதி முடிப்பதற்குள் அவன் கை ஒடிந்துவிடும்.
 
ஒருவர்: அவர் ஏன் இறக்கணும், இறக்கணும்னு கத்திக்கிட்டு இருக்கார்?அவருக்கு அப்படி என்ன கஷ்டம் வந்துட்டுது?
மற்றவர்: அதெல்லாம் ஒண்ணுமில்லே.அவர் பரண்லே இருக்கிற சாமான்களையெல்லாம் கீழே இறக்கணும்னு கத்தறாரு.அவ்வளவுதான்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top