• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My jokes in Tamil and English

Status
Not open for further replies.
நம்ம வேட்பாளர் சுப்பண்ணாவை ஏன் கைது பண்ணி இருக்காங்க?
தேர்தல் கமிஷன் ஆபீஸர்கிட்டே போய் தேர்தல் கமிஷன்னு சொல்றீங்களே, உங்ககிட்டே தேர்தல் நடத்த எவ்வளவு கமிஷன் கொடுத்தா தேர்தல்லே நீங்க என்னை ஜெயிக்க வெப்பீங்கன்னு கேட்டிருக்காரு. நீங்க எவ்வளவு கேட்கிறீங்களோ அதுக்கு மேலேயே நான் தரத் தயாரா இருக்கேன்னு வேறே சொல்லி இருக்காரு. அதுக்காக அவரை உள்ளே பிடிச்சி போட்டுட்டாங்க
 
A judge was trying to convince a woman filing for divorce to change her mind “you’re 92 he said, you’re husband’s 94 you’ve been married for 73 years, why give up now?”
“Our marriage has been on the rocks for quite a while” the woman explained “but we decided to wait until the children died. Because we didn't want to set a bad example for our children ”
 
அவர் கோவிலுக்குப் போய் என்ன வேண்டிக்கிட்டாரு?
அவர் பையன் +2 லே பாஸாகணுமேன்னு வேண்டிக்கிட்டாராம்.
ஆமாம். அவர் பையன் கோவிலுக்குப் போய் என்ன வேண்டிக்கிட்டான்?
அவங்க அப்பாவுக்கு இந்த இடைத்தேரதல்லே தேர்தல்லே டெபாஸிட்டாவது கிடைக்கணுமேன்னு வேண்டிக்கிட்டானாம்.
 
Attempt to suicide not punishable
அப்பாடா, இப்பத்தான்சார் எனக்கு நிம்மதியா இருக்கு. இனிமேல் தைரியமா தூக்குப் போட்டுக்கலாம். கயறு பாதியிலே அறுந்து விழுந்துடுமோ இல்லை, கலப்பட விஷம் வேலை செய்யாம போயிடுமோன்னு பயப்படத்தேவை இல்லை.
 
டேய், நீ இந்தத் தடவை பரீட்சையிலே முதல் மார்க் வாங்க முயற்சிக்கணும். அதுக்காக நல்லா படிக்கணும். என்ன புரிஞ்சுதா?
அப்பா, அதுக்கு நான் மாத்திரம் ட்ரை பண்ணினா பத்தாது.
அப்படின்னா?
மத்தவங்க எல்லாரும் என்னைவிட குறைச்சலா மார்க் வாங்க ட்ரை பண்ணினாத்தான் அது நடக்கும்.
 
Mexican Olympics Why isn’t Mexico in the Olympics?…
Because everyone that can swim, jump, climb, and sprint are already over the Border..
 
அப்பா: டேய் நீ உன்னோடே ஃபோர்ஃபாதர்ஸைப் பத்தி முதல்லே தெரிஞ்சிக்கணும்.
மகன்: நீங்க ஒரு ஃபாதர் மட்டும்தான் எனக்குத் தெரியும். மிச்சம் மூணு ஃபாதர்ஸைப் பத்தி அம்மா இதுவரையிலும் எதுவுமே எங்கிட்டே சொல்லவே இல்லையே அப்பா.
அம்மா: இதுக்குத்தான் உங்க கிட்டே சொல்றது, தத்துப்பித்துன்னு எதையாவது அவன்கிட்டே உளறி வெக்காதீங்கன்னு. ஃபோர்ஃபாதர்ஸ் என்ன ஃபோர்ஃபாதர்ஸ்? நம்ம முன்னோர்களைப் பத்தின்னு அவன்கிட்டே சொல்லி இருக்கலாமில்லே.
 
நடிகை: R.k.நகர்லே இடைத்தேர்தல் வருதாமே. நான் அதுலே பங்கு எடுத்துக்கலாம்னு இருக்கேன்.
நண்பி: உனக்கு எப்படி இப்படி திடீர்னு அரசியல்லே ஆர்வம் வந்தது?
நடிகை: அரசியலா?
நண்பி: ஆமாம். அரசியல் தேர்தல்தான் அது. நீ என்ன நெனச்சே?
நடிகை: இடை அழகுக்கான தேர்தல்னு நெனச்சேன். அது இல்லையா? பின்னே ஏன் அதை இடைத் தேர்தல்னு சொல்றாங்க?
 
A constantly nagged and harried son-in-law decided to buy his mother-in-law a cemetery plot as a birth day present. The next birth day came but this year he didn’t buy her a gift. The mother-in-law was upset and asked the son-in-law why was he had forgotten this time. The angry son-in-law responded, “Well, you still haven’t used the gift I bought you last year!”
 
ட்டம்னா சட்டம்தான்
நீங்க போன வருஷம் உயிரோடு இருந்ததற்கான சான்றிதழை கொடுக்கத் தவறிட்டீங்க. நாங்களும் அதைக் கவனிக்காம உங்களுக்கு பென்ஷன் கொடுத்துட்டோம்.
சார், ஆனால் இந்த வருஷம் நான் உயிரோடே இருப்பதற்கான சான்றிதழை கொடுக்க நேராவே வந்திருக்கேனே சார்.
அதையெல்லாம் நீங்க போன வருஷம் உயிரோடு இருந்திருக்கீங்கற சாட்சியமா ஏத்துக்க முடியாது. சட்டம்னா சட்டம்தான்.அதுக்கான போன வருஷ சாட்சியத்தைத் தந்தாலொழிய உங்களுக்கு இந்த வருஷம் பென்ஷன் தர முடியாது.l
 
Max was caught red handed by a police officer in the very act of burglarizing a store. He was quickly brought to trial. “How do you plead? asked the judge.
“Your honor,” answered Max, “before I plead guilty or not guilty I ask that the court kindly appoint a lawyer to defend me.”
“Max you were caught in the actual commission of a crime. What could any lawyer possibly say in your defense?”
That’s exactly my point, your honor,” said Max. “I’m curious also to hear what he could possibly say!”
 
சந்தோஷமா இருக்கணும்னா வருஷத்துக்கு ஒருமுறை கம்ப்ளீட் ஹெல்த் செக் அப்
செஞ்சிக்கணும். ஆறுமாசத்துக்கு ஒருமுறை ஹார்ட்டை செக் அப் பண்ணிக்கணும். எட்டு மாசத்துக்கு ஒருமுறை பிளட் டெஸ்ட் பண்ணிக்கணும்.மூணு மாசத்துக்கு ஒருதரம் சுகர் செக் பண்ணிக்கணும். மாசாமாசம் bp செக் செஞ்சிக்கணும்.ஆறுமாசத்துக்கு ஒரு தடவை கண் ரெடினாவை சரி பார்க்கணும். வருஷத்துக்கு ஒரு தரம் கண் டெஸ்ட் பண்ணிக்கணும். வருஷத்துக்கு ரெண்டு தடவையாவது காதை செக் பண்ணிக்கணும். காதுலே பிரச்சினை வராம இருக்க ஜலதோஷம் பிடிக்காம பாத்துக்கணும் அப்படி ஜலதோஷம் பிடிக்கும்போல இருந்தா, உடனேயே டாக்டரைப் போய்ப் பாத்துடணும். ஆறு மாசத்துக்கு ஒருதரம் கோலினாஸ்கோபி செஞ்சிக்கணும். வயத்துலே சின்ன கோளாறு இருக்கிற மாதிரி தோணினாக்கூட உடனே எண்டாஸ்கோபி செஞ்சிக்கணும். அப்புறம் சொல்ல மறந்துட்டேனே....
இன்னும் வேறே இருக்கா?
இன்னும் நிறைய இருக்கு.
அப்படி செஞ்சிக்கிட்டா?
நல்ல சௌக்கியமா சந்தோஷமா பல காலம் வாழலாம்.
யாரு? நாமா?இல்லே டாக்டரா?
 
என் தலைவர் என்னைத் துடப்பம் எடுத்துக் கூட்டணும்னு சொன்னாக்கூட நான் கூட்டத்தயார்.
அது சரி. இப்ப துடப்பத்தோடே எங்கே கிளம்பிட்டீங்க?
தலைவர் இன்னிக்கு மந்திரி சபையைக்கூட்டணும்னு சொன்னார். அதான் மந்திரி சபையைக் கூட்டப் போறேன்.
 
ஏன்னா!கொஞ்ச நேரம் பொறுத்திருந்தா நான் சமையல் பண்ணிடுவேன். நீங்க சாப்பிட்டுட்டுப் போயிடலாம்.
இல்லை. நீ சமைச்சு சாப்பிட்டுக்கோ. நான் வெளியிலே சாப்பிட்டுக்கறேன்.
நன்னா இருக்கே நீங்க சொல்றது. நானும் உஙகளோடேயே வெளியிலே சாப்பிட வரேன். ஒரு நாளாவது நல்ல சாப்பாடு சாப்பிடணுங்கற ஆசை எனக்கு மட்டும் இருக்காதா என்ன?
 
little boy was in a cemetery with his mother “Mommy” the boy asked , “do they ever bury two people in the same grave?”
“Of course not, dear.” replied the mother, “Why would you think that?”
“The tombstone back there said, Here lies a lawyer and an honest man.”
 
ஒரு நல்ல எழுத்தாளனுக்கு அடையாளம் ஏதாவது ஒரு பாத்திரத்தைப் படைக்கும்போது அவனே அந்தக் கதாபாத்திரமாக மாறிடணும்.
இப்பப் புரியுது நீங்க எப்படி உங்க கதை ஒண்ணுலே நாயைக் கதாபாத்திரமா வெச்சி அவ்வளவு தத்ரூபமா அந்தக் கதையை எழுதினீங்கன்னு.
 
There are two times when a man doesn’t understand a woman –
before marriage and after marriage.
 
( குக்கிராமத்தில் )
என்ன அந்தக் கிழவி அப்படி சந்தோஷப்படுது?
ஒண்ணுமில்லே. அதோட பேத்தி இங்கிலீஷூலே ரெண்டு வார்த்தைப் பேசிட்டுது. அதான் காரணம்.
 
ஜய் ஜக்கம்மா! ஜய் ஜக்கம்மா! நல்ல காலம் பொறந்திடுச்சு, நல்ல காலம் பொறந்திடுச்சு.வெலைவாசியெல்லாம் தலைகுப்புற விழுந்துடிச்சு. பெட்ரொல் வெலை அதல பாதாளத்துக்கே போயிட்டுது. டீஸல் வெலை டிச்சுக்குளளே போயிட்டுது. கெரோஸின் வெலை கிணத்துக்குள்லே போயிட்டுது. ஆட்டோவெல்லாம் அரை ரூபாய்க்கு 5 கிலோமீட்டர் ஓடுது. ஹோட்டல்லேயெல்லாம் 40 ரூபா தோசை 4 ரூபாய்க்கு வந்துட்டுது. இருபது ரூபா இட்லி ஒரு ரூபாய்க்கு வந்துட்டுது. எல்லா ஹோட்டல்லேயும் அஞ்சு ரூபாக்கு முழுச்சாப்பாடு கிடைக்குது. அஞ்சு ரூபாக்கு முழுச்சாப்பாடு கிடைக்குது.

ஜய் ஜக்கம்மா! ஜய் ஜக்கம்மா! நல்ல காலம் பொறந்திடுச்சு, நல்ல காலம் பொறந்திடுச்சு.



ஜய் ஜக்கம்மா! ஜய் ஜக்கம்மா! நல்ல காலம் பொறந்திடுச்சு, நல்ல காலம் பொறந்திடுச்சு

காவிரித் தண்ணி தமிழ் நாட்டுலே கரைபுரண்டு ஓடோ ஓடுன்னு ஓடப் போகுது. முல்லைப் பெரியாறு தொல்லையெல்லாம் தீரப் போகுது. தண்ணிப் பஞ்சம் தன்னாலே தீரப் போகுது. பட்டினிச்சாவு, பட்டினி கெடந்து சாகப்போகுது. வளமான வாழ்வு வருது. எல்லாருக்கும் வளமான வாழ்வு வருது. ஈழத் தமிழங்களுக்கும் வளமான வாழ்வு வரப் போவுது. பசங்க எல்லாம் சிந்திக்க ஆரம்பிச்சிட்டாங்க. போராட்டத்தை நிறுத்திட்டு பரீட்சை எழுதப் போறாங்க. ஒரு நாளைக்கு 30 மணி நேரம் கரண்ட் வரப் போவுது. தமிழ்நாட்டுக்கு விடிவு வரப்போகுது. இனிமே தமிழ்நாட்டு மீனவங்க மீனைப்பிடிச்சா அவங்களை வேறே யாரும் பிடிக்க மாட்டாங்க.

ஜய் ஜக்கம்மா! ஜய் ஜக்கம்மா! நல்ல காலம் பொறந்திடுச்சு, நல்ல காலம் பொறந்திடுச்சு

பெரியம்மா போன துக்கத்துலே இருந்து தமிழனைக் காப்பாத்த சின்னம்மா அவதாரம் எடுத்தாங்க. அதைப் புரிஞ்சிக்காம சில துரோகிகள் தடுத்தாங்க. அவரைக் கம்பிக்குப் பின்னால தள்ளிட்டாங்க. ஆனா செஞ்ச தவறு உணர்ந்து அவங்களை விடுதலை பண்ணிட்டாங்க. அது மாத்திரம் இல்லை. அவருக்குப் போட்ட அபராதத்தை ரத்து செஞ்சு அபவாதத் தொகையா அவருக்கு 100 கோடி ரூவா நஷ்ட ஈடு கொடுத்து தமிழ் நாட்டைக் காப்பாத்தச் சொல்லி அந்த சுப்ரீம் கோர்ட்டே அவங்களை வெளியே விட்டுட்டாங்க. இப்ப அவங்களுக்குக் கிடைச்சிருக்கிற தொப்பி, எதிரிகளையும் உதிரிகளையும் எந்திரிக்க விடாம திக்கு முக்காட வச்சிருக்கு. வர எலக்‌ஷன்லே எதிரிகள் எல்லாம் டெபாஸிட் போய் அம்மா கால்லே விழப்போறாங்க. இனிமே ஆயுசு பூராவும் சின்னம்மா எங்கே இருந்தாலும் அவங்க ஆட்சிதான். தட்டிக் கேக்குற திராணி யாருக்கும் கிடையாது. இனிமே வர மந்திரிங்க முதுகு வளைஞ்சே இருக்கும். நிமிரவே நிமிராது. வளைஞ்சது வளைஞ்சதுதான். மந்திரிசபையை நிரப்பறதுக்கு ஏற்கெனவே வேண்டிய ஆட்களை அவங்க வீட்டிலே சின்னம்மா தயார் பண்ணி வெச்சிருக்காங்க. வெளி ஆட்களுக்கு இனி வேலை இல்லை.

தமிழ்நாட்டுலே பாலாறு ஓடுதோ இல்லியோ, இனி தேனாறு ஓடப்போகுது. நீரிழிவு வியாதிக்காரங்க மாத்திரம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. சனங்களெல்லாம் சந்தோஷத்துலே திக்கு முக்காடிப் போயிருக்காங்க. நல்ல காலம் பொறந்திடுச்சு. நல்ல காலம் பொறந்திடுச்சு. ஜய் ஜக்கம்மா! ஜய் ஜக்கம்மா! நல்ல காலம் பொறந்திடுச்சு. நல்ல காலம் பொறந்திடுச்சு.

அத்தோடு ஏப்ரல் 1ம் தேதியும் பொறந்திடுச்சு!

ஏப்ரல் 1ம் தேதியும் பொறந்திடுச்சு! மறந்துடாதீங்க!

ஏப்ரல் 1ம் தேதியும் பொறந்திடுச்சு!
 
A few years after my retirement, I met one of my friends in a eye hospital. After the usual mutual enquiries and yogakshema, he asked me
" Hi, are you doing any consultancy work?"
I replied
"Yes. I am consulting Dr so and so for my eye problem, Dr ........ for my piles problem, Dr ....... For my B.P, Dr....... for my knee problem and Dr....
" O.K, o.k, enough. I know how busy you are with your consultancy work" he said and left fearing that he might have to consult a Doctor after listening to me!
 
இந்த ஊர்லே சாவு ரொம்பவும் கம்மின்னு சொன்னீங்களே. டாக்டர்கள் ரொம்ப அதிகமோ?
அதெல்லாம் இல்லே. டாக்டர்கள் ரொம்பக் கம்மி. அதான்.
 
Harry had been feeling sick lately and was finally convinced to see the Doctor after his wife Suzy’s urging. After a thorough examination, and much thought, the Doctor was ready to tell Harry and a very worried Suzy, his prognosis. Harry was too stressed out. He would need 6 months of pure relaxation. Suzy, very agitated, took out her notepad to begin writing down his list of orders for these months of relaxation. “How should I go about it?” asked Harry. “OK” said the doctor “I would like your wife to take one tranquilizer four times a day…”
 
மனைவி: ஏங்க இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தீங்க?
கணவர்: டெபாஸிட் கட்டிட்டு வர இவ்வளவு நேரம் ஆயிடுச்சு.
மனைவி: உங்களுக்கு எதுக்குங்க இந்த வேண்டாத வேலை? உங்களுக்கு யாருங்க ஓட்டுப் போடுவாங்க? கட்டின பணம் அம்போதான்.
கணவர்: சீ! சும்மா உளறாதே. நான் பாங்கிலே ஃபிக்ஸட் டெபாஸிட்டுலே பணம் கட்டிட்டு வரேன். அதைச்சொன்னேன்.
 
We are living in a fast world. Previously it used to be a seven year itch. But now it has become a seven day itch.
What do you mean by that?
Previously it took seven years for a couple to feel fed up with each other and go in for divorce. But now within seven days of their marriage, they want to separate.
 
அம்மா: உங்க ரெண்டு பேருக்குள்ளே அப்படி என்னடா சண்டை நேத்து ராத்திரி?
மகன்: அதெல்லாம் ஒண்ணும் இல்லேம்மா. அவ உன்னை சாதாரண முதியோர் விடுதியிலே சேர்த்தாப் போதும். அப்பத்தான் செலவு குறைச்சலா ஆகும். அதுதான் நமக்குக் கட்டுப்படியாகுங்கறா. ஆனா உன்னைக் கொஞ்சம் வசதியுள்ள முதியோர் விடுதியிலே சேர்க்கணும். செலவு கொஞ்சம் கூட ஆனாலும் பரவாயில்லைனு நான் சொல்றேன். அவ்வளவுதான் வேறே ஒண்ணுமில்லே.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top