• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My jokes in Tamil and English

Status
Not open for further replies.
நீங்க எந்த ஹேர் ஆயில் உபயோகிக்கிறீங்க?
தினேஷ் ஹேர் ஆயில்.
நீங்க எந்த சோப் உபயோகிக்கிறீங்க?
தினேஷ் சோப்.
நீங்க எந்த டூத் பேஸ்ட்டை உபயோகிக்கிறீங்க?
தினேஷ் டூத் பேஸ்ட்.
நீங்க எந்த பிளேட் உபயோகிக்கிறீங்க?
தினேஷ் பிளேட்.
நீங்க எந்த கிரீம் உபயோகிக்கிறீங்க?
தினேஷ் கிரீமைத்தான்.
என்னங்க எதுக்கு எடுத்தாலும் தினேஷ் பொருட்களையே உபயோகிக்கிறதாகச் சொல்றீங்க. ஆனால் இவ்வளவு வெரைட்டியான பொருள்களை உற்பத்தி செய்கிற தினேஷ் அப்படிங்கற கம்பெனி பேரை நான் கேட்டதேயில்லையே.
தினேஷ் அப்படிங்கறது எனக்கு கம்பெனி கொடுக்கிற என்னுடைய ரூம் மேட்டுங்க. கம்பெனி இல்லே.
 
என்னுடைய மனைவி பெண்கள் விடுதலை இயக்கத்துலே சேர்ந்ததுலே எனக்கு ரொம்ப நிம்மதி.
எப்படி?
முந்தியெல்லாம் எதுக்கெடுத்தாலும் என்னை மாத்திரம்தான் குறை சொல்லிக்கிட்டு இருந்தா. இப்ப எல்லா ஆம்பளைகளைப் பத்தியும் குறை சொல்ல ஆரம்பிச்சுட்டா.
 
PhDs excuse me
Do you know that he is a PhD?
Eh! I never knew that? But how is it..........?
Yes. He is a Pizza Hut Deliveryman
 
Wait for me honey, I'm just finishing my make-up.
You don't need any make-up ,my darling
Oh, Richard.....really? That is so sweet of you!
You need only plastic surgery!
 
உங்களுக்கு அடுத்த சீட் காலியா?
ஆமாம். உட்காருங்க. அதுவும் என்னோட சீட் தான்.
ஏன் நீங்க ரெண்டு சீட் புக் பண்ணினீங்க?
என் மனைவிக்காக புக் பண்ணினேன். ஆனால் அவ இறந்து போயிட்டா.
அடடா, கேக்கறதுக்கே கஷ்டமா இருக்கே. ஆமாம். அந்த டிக்கட்டுக்கு உங்க சொந்தக்காரங்க யாரையாவது கூட்டிக்கிட்டு வந்திருக்கலாமே.
ஆனா அவங்க எல்லாரும் அவளோடே இறுதிச் சடங்குக்குப் போயிருக்காங்க.
 
அந்த டாக்டர் போலி டாக்டரா இருப்பார் போல இருக்கே.
எப்படிச் சொல்றே?
'நேத்து ராத்திரி லைட்டாத்தான் சாப்பிட்டேன். அப்படியும் வயித்து வலி வந்துட்டுது டாக்டர்' அப்படின்னு சொன்னா லைட்டையெல்லாம் சாப்பிட்டா வயித்து வலி வராம என்ன செய்யும்னு கேக்கறாரே.
 
Honey, what will you give me for our 25th wedding anniversary?
A trip to Hawai!
Wow, that's really awesome, and for our 50th anniversary
Then I pick you up again back home
 
ஒரு கணவனின் புலம்பல்
எதுக்கு எடுத்தாலும் பத்து மாசம் சுமந்து பெத்தேன், பத்து மாசம் சுமந்து பெத்தேன்னு சொல்றியே. நீ அவன் 2.5 கிலோவுக்குக் கம்மியா இருந்தபோது அவனை பத்து மாசம் சுமந்திருக்கே. அவ்வளவுதான். ஆனா அதுக்கப்புறம் அவன் ரெண்டரை கிலோவிலே இருந்து 10 கிலோ ஆகிற வரையிலும் அவனை நான்தான் சுமந்திருக்கேன். தெரியுமா?
 
நீ இந்த வரிசையிலே கடைசியிலே போய் நில்லு.
சரி சார்.
ஏம்பா கடைசிவரையிலும் போயிட்டு அங்கே நிக்காம திரும்பி வநதுட்டே?
அந்தக் கடைசியில் ஏற்கெனவே ஒரு பையன் நின்னுகிட்டு இருக்கான் சார். அதான் வந்துட்டேன்.
 
அமெரிக்காவிலே இருக்கிறவங்களை அஞ்சு நிமிஷத்துலே கான்டாக்ட் பண்ணி அவங்களோடே அஞ்சு மணி நேரம் பேசறோம்.
ஆனா அடுத்த வீட்டுலே இருக்கிறவங்க அண்ணாசாமி கிட்டே அஞ்சு வருஷமானாலும் பேசமாட்டேங்கறோம்.
இதுதான் நாகரீகம் வளர்ந்ததுக்கான அடையாளமா?
 
ஏண்டா ஃபெயிலானதுக்கா இப்படி அழறே?
இல்லை சார். நான் ஃபெயில் ஆனது தெரிஞ்சா எங்க அப்பா எவ்வளவு வருத்தப் படுவார்னு நெனச்சு அழறேன்.
 
அவர் ரொம்பவும் சின்சியரா வேலை செய்யறவர். அவங்கவங்க எப்படா ஆபீஸ் முடியும் வீட்டுக்குப் போகலாம் பறந்துகிட்டு இருக்கும்போது இவர் மாத்திரம் தினமும் ராத்திரி ஒன்பது மணி வரையிலும் வேலை செய்யறார்னா பாத்துக்கங்க.
அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. அவருக்கு வீட்டுக்குப் போறதுன்னா அவ்வளவு பயம்.
 
“I got a compliment on my driving today,” said a blonde to her friend, there was a note left on my windshield it said “parking fine”.
 
நான் இந்த கடிதத்தை ரொம்பவும் மெதுவாகவே எழுதுகிறேன். ஏன்னா இப்பத்தான் நீ எழுத்தெல்லாம் ஒவ்வொண்ணா கூட்டித் தமிழ் படிக்க ஆரம்பிச்சிருக்கே. உன்னாலே வேகமாப் படிக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும்.
 
இது லேட்டஸ்ட் மருந்து. கொஞ்சம் விலை அதிகம் தான். ஆனா அந்த மருந்துக்குப் பக்க விளைவு (side effect) ங்கறதே கிடையாது. தைரியமா நீங்க அதை சாப்பிடலாம்.
நீங்க பாட்டுக்க சொல்லிட்டீங்க பக்க விளைவு கிடையாதுன்னு. ஆனா அதோட பக்கா விளைவை நான் இப்ப அனுபவிச்சிக்கிட்டு இருக்கேன்..
நீங்க என்ன சொல்றீங்க?
அந்த மருந்து சாப்பிட ஆரம்பிச்சதுலே இருந்து என் ஆஸ்தியே கரைய ஆரம்பிச்சிட்டுது..
 
அந்த டாக்டர் ஒரு பெரிய பரோபகாரி.
எப்படிச் சொல்றீங்க?
ஆபரேஷன் பண்ணின கத்தி, கத்தரிக்கோல் இதையெல்லாம் ஆபரேஷன் முடிஞ்சவுடனே மத்த டாக்டர்கள் மாதிரி அவர் தன்னோடே எடுத்துக்கிட்டு போக மாட்டர். அதுக்குப் பதிலா அவங்கவங்க வயத்துலேயை பத்திரமா வச்சி தெச்சுடுவாரு.
 
One day in the Garden of Eden, Eve calls out to God.
'Lord, I have a problem!
''What's the problem, Eve?''
Lord, I know you created me and provided this beautiful garden and all of these wonderful animals and that hilarious comedic snake,
but I'm lonely, and I'm sick to death of apples.
''Well Eve, in that case, I have a solution.
I shall create a man for you.
''What's a man, Lord?''
Man will be a flawed creature, with many bad traits.
He'll lie, cheat and give you a hard time.
But... he'll be bigger, faster, and will like to hunt and kill things.
He will look silly when he's aroused, but since you've been complaining,
I'll create him in such a way that he will satisfy your physical needs.
He will be witless and will revel in childish things like fighting and kicking a ball about.
He won't be too smart, so he'll also need your advice to think properly.
''Sounds great!" says Eve, with an ironically raised eyebrow.
"What's the catch, Lord?'' Well... you can have him on one condition.
''What's that, Lord?''
As I said, he'll be proud, arrogant, and self-admiring...
So you'll have to let him believe that I made him first.
Just remember, it's our little secret.. You know, woman to woman.'
 
ஏண்டா, பல்லுலே வலிக்கிறமாதிரி இருக்கே. டாக்டர்கிட்டே காட்டினா பரவாயில்லைடா.
அம்மா, இது நம்ம ஊரு இல்லே நினைச்ச உடனே டாக்டரைப் போய்ப் பாக்கறதுக்கு. இது அமெரிக்கா. டாக்டர்கிட்டே முதல்லேயே அப்பாயின்ட்மென்ட் வாங்கி அவர் எப்ப வரச் சொல்றாரோ அப்பத்தான் அவரைப் பாக்க முடியும்.
இதென்னடா இது கூத்தா இருக்கு அப்பாயின்ட்மென்டும் அம்மாயின்மென்டும்? டாக்டருக்கு எப்ப சௌகரியமோ அப்பத்தான் எனக்குப் பல் வலி வரணுமா?
 
நம்ம தலைவர் சுத்த சாப்பாட்டு ராமனா இருப்பார் போல இருக்கே.
எதை வச்சு அப்படிச் சொல்றே?
மணமக்களை வாழ்த்தும்போது எல்லாரும் நகமும் சதையும் போல, பூவும் மணமும் போல, இசையும் இனிமையும் போல இந்த மாதிரி உவமானம் சொல்லி வாழ்த்துவாங்க. ஆனால் இவர் இட்டிலியும் சட்டினியும் போல, தோசையும் சாம்பாரும் போல, பொங்கலும் கொத்ஸும் போல, பூரியும் கிழங்கும் போல, சப்பாத்தியும் குருமாவும் போல அப்படின்னு சாப்பாட்டு உதாரணமாவே சொல்லி வாழ்த்துறாரே.
அதுவா? அவர் அரசியலுக்கு வரதுக்கு முன்னே ஹோட்டல் நடத்திக்கிட்டு இருந்தார். அதான்.
 
சர்வாதிகாரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?சர்வாதிகாரத்துலே ஜனங்கள் அதிகாரிகள்கிட்டே உண்மையைச் சொல்லப் பயப்படுவாங்க. ஆனா ஜனநாயகத்திலே ஆட்சியாளர்கள் ஜனங்க கிட்டே உண்மையைச் சொல்லப் பயப்படுவாங்க.
 
கொசு: ஏய், அவனைக் கடிச்சுடாதே. அவன் இந்தியாவிலிருந்த வந்திருக்கான். அவனைக் கடிச்சா உனக்கு பூனைக்கால், எலிக்கால்னு ஏதாவது எக்கச்சக்கமான வியாதி வந்து தொலையப் போகுது.
 
நானும் இன்னிக்குக் காலையிலே இருந்து அந்த மருந்துக் கடைக்குப் போன் பண்ணுறேன்.எப்பப் பாத்தாலும் யங்கேஜ்டாவே இருக்கு. அந்த லைன் கிடைக்கிறதுக்குள்ளே, நான் ஓல்ட் ஏஜ்டா ஆயிடுவேன் போல இருக்கு.
 
தற்பெருமை அடிச்சிக்கிறவங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
நீங்க சொல்றது வேடிக்கையா இருக்கே. ஏன்?
ஏன்னா அவங்க தங்களைப் பத்தியே பேசிக்கிட்டு இருப்பாங்களே ஒழிய அவசியம் இருந்தாக் கூட பிறத்தியாரைப் பத்தி பேசவேமாட்டாங்க.
 
Mother in Law
Standing at the edge of the lake, a man saw a woman flailing about in the deep water.Unable to swim, the man screamed for help.
A trout fisherman ran up. The man said, "My wife is drowning and I can't swim. Please save her. I'll give you a hundred dollars."
The fisherman dove into the water. In ten powerful strokes he reached the woman, put his arm around her, and swam back to shore.
Depositing her at the feet of the man, the fisherman said,"Okay, where's my hundred dollars?"
The man said, "Oh, I thought it was my wife but this is my mother in law."
The fisherman reached into his pocket and said,"Just my luck. How much do I owe you?"
 
உங்க ரேட் எவ்வளவு ஜோசியரே?
ரெண்டு கேள்விக்கு 500 ரூபா.
இவ்வளவு ஜாஸ்தியா இருக்கே. உங்களுக்கே இது நியாயமா இருக்கா?
சரி. ரெண்டு கேள்வி கேட்டுட்டீங்க. எடுங்க 500 ரூபாயை.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top