• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My jokes in Tamil and English

Status
Not open for further replies.
Barry and Hannah, an old married couple, are sitting on the couch watching TV. On the show they were speaking about how to prepare in case of death etc. “Honey,” says Barry, turning to his wife with a serious expression, “I want you to promise me, that if there ever comes a time that I am dependent on just machines and bottled fluid, that you will make sure to put an end to it.” “No problem hun,” said Hannah, and she promptly got up, turned off the TV, and poured his beer down the drain.
 
இந்த மருந்தைச் சாப்பிட்டா நாம அதுக்கு அடிக்ட் ஆயி அப்புறம் அது இல்லாம முடியாம போயிடுமா?
யார் சொன்னா? அந்த மாதிரி எல்லாம் கிடையாதுங்க. நானும் அந்த மருந்தை 35 வருஷமா விடாம சாப்பிடறேன். அந்த அனுபவத்துலே சொல்றேன்.
 
இடுக்கண் வருங்கால் நகுகன்னு வள்ளுவர் சொன்னபடி பண்ணப்போக என் வேலை போயிடுத்து.
ஏன்?
எங்க ஆபீஸ் மானேஜர் நான் சரியா வேலை செய்யல்லேன்னு என்னைக் கன்னா பின்னான்னு திட்டினார். அதைக் கேட்டு நான் சிரிச்சேன்.
 
நம்ம ஊர் பஞ்சாயத்து யூனியன் தலைவருக்கு மக்கள் திலகம்னா உயிரு. அவரைக் கூப்பிட்டு பையனுக்கு பேர் வெக்கச் சொன்னது தப்பாய்ப் போயிட்டுது.
ஏன்? என்ன ஆச்சு?
பையனுக்கு மக்கள்திலகம்னு பேர் வெச்சுட்டார்.
 
விருந்தாளி: குழந்தை ஏன் அழுதுகிட்டே இருக்கு?
வீட்டுக்காரர்: அது பாருங்க. இந்த வீட்டுக்கு யாராவது புதுசா வந்து மூணு நாளைக்கு மேலே தங்கினா அது இப்படித்தான் ஒரேயடியா அழ ஆரம்பிச்சுடும்.
 
வக்கீல் ஐயா, நான் சாகற வரையிலும் இந்த கேஸ் முடியாம நீங்க தான் பார்த்துக்கணும்.
அது ஒண்ணும் பிரச்சினையே இல்லை. பாதி நாள் ஸ்டிரைக், மீதி நாள் வாய்தான்னு அப்பப்ப வாங்கி உங்க ஆயுசு முடியறவரைக்கும் இழுக்கடிச்சிட மாட்டோம்? நீங்க சாகறதுக்கு முன்னாடி இந்த கேஸை முடிக்கச் சொன்னாத்தான் பிரச்சினை.
 
My pencil drawing 2014
என்ன பிள்ளையாரப்பா, உன் மௌஸைக் காணோம்?
அதுவா? பக்கத்து வீட்டுப் பையன் அவனோடே கம்ப்யூட்டர் மௌஸைக் காணோம்னு சொல்லி இதை எடுத்துட்டுப் போயிட்டான்.
ஓ! இந்த மௌஸுக்கு இப்படி ஒரு மவுசு வந்துடுத்தா?


 
பிச்சைக்கார(ர்) உலகம்
பிச்சைக்காரன் 1: கறுப்புப் பணம்னு சொல்றாங்களே. அது என்ன அண்ணே?
பிச்சைக்காரன் 2: அது ஒண்ணுமில்லை அண்ணே. அது கள்ளப் பணம். திருடங்க பறிச்சி வச்சிருந்தா அது திருட்டுப்பணம். பணக்காரங்க பதுக்கி வச்சிருந்தா அது கறுப்புப் பணம்.
பிச்சைக்காரன் 1: என் கிட்டே இருக்கிற இந்த நூறு ரூபாய் சில்லறையும் ஒரே கறுப்பா யிருக்கே, அதுதான் கறுப்புப் பணமோன்னு நினைச்சேன்.
 
என்ன? இந்தக் கடையில் வேலைக்கு ஆள் தேவைன்னு போர்டு போட்டிருக்கு. ஆனா நீரிழிவு நோய் உள்ளவர்கள் மட்டும் மருத்துவ சான்றுகளுடன் விண்ணப்பிக்கவும்னு போட்டிருக்கே?
அது தித்திப்புப் பலகாரங்கள் விற்கும் கடை ஆச்சே. அதான்.
 
ஏம்பா, உன் பேத்தியை யாருக்குக் கட்டிக் கொடுத்தே?
ஒரு ஆம்பிளைப் பையனுக்குத் தான்.
ஆம்பிளைப் பையனுக்கா இல்லாம ஒரு பொம்பளைப் பிள்ளைக்கா கட்டிக் கொடுப்பாங்க?
ஏன், என் பேரன் ஒரு பொம்பளைப் பிள்ளையைத்தானே கட்டிக்கிட்டு இருக்கான்.
 
கூந்தலழகி குந்தளாதேவி
ஆமாம். உங்க கூந்தல் எப்படி இவ்வளவு நீளமாவும், பளபளப்பாவும், அழகாவும் இருக்கு?
ஓ! அதுவா? அதெல்லாம் நாம் பராமரிக்கிறதிலேதான் இருக்கு.
நீங்க எப்படி பராமரிக்கிரீங்க? அதை கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்களேன்.
சொல்றேன். நான் என் முடியை முதல் வேலையா நல்ல வெதுவெதுப்பான சுத்தமான தண்ணியை விட்டு அலசு அலசுன்னு அலசுவேன். அப்படிப் பத்துப் பதினஞ்சு நிமிஷம் அலசின பிறகு ஹேர் டிரையரை ஆன் பண்ணி ஒரு பதினஞ்சு நிமிஷம் டிரை பண்ணுவேன், அதாவது காய வைப்பேன். அதுக்கு அப்புறம் முடியை ஒரு பத்து நிமிஷம் ஆறப்போடுவேன். நல்ல ஆறப்போட்டு ஈரம் முழுதுமா காஞ்ச உடனே எனக்கு முடிமலையிலே இருக்கிற எங்க குல சாமியார் அவர் கையாலேயே எனக்குன்னு ஸ்பெஷலா அங்கே இருக்கிற மலையிலே கிடைக்கிற அபூர்வ மூலிகையை உபயோகிச்சி செய்த முடிமலை மோகன சுகந்த பரிமள திவ்ய ச்ரவண சிங்கார தைலத்தை ஒரு டீ ஸ்பூன் இடது கையிலே ஊத்திக்கிட்டு அதை மிருதுவா நாலுதரம் மேலும் கீழுமா தேச்சி கூந்தலை மூணுபிரியா பிரிச்சிக்கிட்டு ஒவ்வொரு பிரியிலும் நிதானமா தடவிப்பேன்.
அக்கா, அந்தத் தைலத்தை எனக்கு வாங்கித்தருவீங்களா அக்கா?
ஊஹூம். அது எனக்குன்னு எங்க சாமியார் பிரத்யேகமா செஞ்சி இதை வேறே யாருக்கும் கடனாகக்கூட தரக்கூடாதுன்னு சொல்லியிருக்கார்.
சரி. மேலே சொல்லுங்க அக்கா.
அதை இந்த மாதிரி காலையிலே ஒருதரம், மத்தியானம் ஒரு தரம், சாயந்தரம் ஒரு தரம்னு ஒருநாளைக்கு மூணு தரம் பூசிக்கணும். ஒவ்வொரு தரமும் தலைமுடியை இதுக்காகவே நான் மைசூரிலிருந்து ஸ்பெஷலா வாங்கிக்கிட்டு வந்த இந்த சந்தன சீப்பாலே வாரி அதுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து நான் வாங்கிவந்த இந்த எனாமல் சீப்பை உபயோகிச்சி என் பாட்டி சொல்லித்தந்த முறையிலே ராணி கோப்பெருந்தேவி பாணியிலே சடையாப் பின்னிப்பேன்.
அடேயப்பா. இவ்வளவுக்கும் எவ்வளவு நேரம் ஆகும்?
அதுக்கென்ன பண்றது? கூந்தலழகை பராமரிக்கணும்னா பாடுபட்டுத்தானே ஆகணும்?
அப்புறம்?
கூந்தல் எதுலேயும் மாட்டிக்காம சிக்கு கிக்கு விழுந்துடாம கண்ணுக்கு கண்ணா அதைப் பாத்துக்கணும். கடைசியிலே முக்கியமா மறக்காம தினமும் ராத்திரி படுக்கப் போறதுக்கு முன்னாடி அதை கசங்காம கழட்டி எடுத்து அதோ அந்த கோட் ஸ்டாண்டுலே மாட்டிட்டு காலையிலே எழுந்து ஜாக்கிரதையா தலையிலே மாட்டிப்பேன்.
ஆ!ஆ!ஆ!
 
பையன்: அப்பா என் கிளாஸ்மேட் ஸ்மார்ட் செல்ஃபோன் வச்சிருக்காம்பா. எனக்கும் ஒண்ணு வாங்கிக்கொடுங்க அப்பா.
அப்பா: அதெல்லாம் என்னாலே முடியாது. நமக்கு வசதி பத்தாது.
பையன்: இல்லை அப்பா. வாங்கிக் கொடுங்க அப்பா. அப்பத்தான் அவன் என்னை மதிப்பான்.
அப்பா: உன்னைவிட செல்ஃபோன் வாங்க முடியாதவங்க எத்தனை பேர் இருக்காங்க?அதை நினைச்சுப் பாரு. நம்மளைவிட மேலே இருக்கிறவங்களைப் பார்த்து வருத்தமோ பொறாமையோ படறதை விட நம்மைவிட கீழே இருக்கிறவங்களை நினைச்சுப் பார்த்து சந்தோஷப் படறதுக்கு கத்துக்க.
(சிறிது நாள் கழித்து)
அப்பா: என்னடா கணக்குலே இவ்வளவு கம்மியா மார்க் வாங்கியிருக்கே. உனக்கு வெட்கமாயில்லே. உன் ஃப்ரெண்ட் ராமு நூத்துக்கு நூறு வாங்கியிருக்கான்.
பையன்: அப்பா என்னை விடமுப்பது பேர் கணக்குலே கம்மியா மார்க் வாங்கியிருக்காங்க. ராமு மாதிரி ஆட்களைப் பார்த்து வருத்தப் படறதை விட என்னைவிட குறைச்சலா மார்க் வாங்கினவங்களைப் பார்த்து சந்தோஷப்படுங்க அப்பா.
 
Stairway to Heaven
A redhead, brunette and blonde were on their way to Heaven.
God told them the stairway to Heaven was 1000 steps, and on every 5th step He’d tell them a joke. But, they must not laugh or else they couldn’t enter heaven.
The brunette went first and started laughing on the 65th step, so she could not enter Heaven.
The redhead went next and started laughing on the 320th step, so she could not enter Heaven either.
Then, it was the blonde’s turn. When she got to the 999th step, she started laughing.
“Why are you laughing?” God asked. “I didn’t tell a joke.”
“I know,” the blonde replied. “I just got the first one.”
 
அமெரிக்காவுக்குப் போனது தப்பாப் போச்சு.
ஏன் அப்படிச் சொல்றே?
இப்ப எல்லாம் வாரத்துக்கு ஒரு நாள்தான் என் வொய்ஃப் சமைக்கிறா. ஏன்னு கேட்டா அமெரிக்காவுலே எல்லாம் வாரத்துக்கு ஒரு நாள்தானே சமைக்கிறாங்கன்னு சொல்றா.
 
அம்மாள்: : எங்க பெண்ணுக்கு வரன் பார்க்கணும்.
புரோக்கர்: அப்படியா? அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த பையன். அவனுடைய அப்பா அம்மா எல்லாம் நம்ம ஊரிலே இருந்து போனவங்க தான்.
அம்மாள்: : ஓ! அந்தப் பையனையே முடிச்சிடலாம்.
புரோக்கர்: அந்தப் பையனோட தங்கை ஒண்ணு இருக்கு, அங்கேயே பிறந்து வளர்ந்தது. அதை உங்க பையனுக்கு.....
அம்மாள்: ஊஹூம். அது வேணாம். அது நமக்கு சரிப்பட்டு வராது.
 
Texas, California, & Nevada Horse Riders
A Texan, a Californian, and a Nevadan were out riding their horses. The Texan pulled out an expensive bottle of tequila, took a long draught, then another, and then suddenly threw it into the air, pulled out his gun and shot the bottle in midair.
The Californian looked at the Texan and said, "What are you doing? That was a perfectly good bottle of whiskey!! The Texan replied, "In Texas, there's plenty of whiskey and bottles are cheap.
A while later, not wanted to be outdone, the Californian pulled out a bottle of wine, took a few sips, threw the half full wine bottle into the air, pulled out his gun, and shot it in midair.
The Nevadan couldn't believe this and said "What the heck did you that for? That was an expensive bottle of wine!
The Californian replied, "In California there is plenty of wine and bottles are cheap."
A while later, the Nevadan pulled out a bottle of Sierra Nevada Pale Ale. He opened it, took a sip, took another sip, then chugged the rest. He then put the bottle back in his saddlebag, pulled out his gun, turned, and shot the Californian.
The shocked Texan said "Why in the world did you do that?" The Nevadan replied, "Well, in Nevada we have plenty of Californians, and bottles are worth a nickel."
 
சார், இந்தக் குதிரை அசல் அரபுக் குதிரை சார், கார் வேகத்திலே போகும். இப்ப நீங்க 7 மணிக்குக் குதிரைமேலே ஏறினா 8 மணிக் கெல்லாம் டாண்ணு நீங்க செங்கல்பட்டுலே இருப்பீங்கன்னா பாத்துக்கங்களேன்.
நான் செங்கல்பட்டுக்குப் போய் என்ன பண்ணப் போறேன்? அதனாலே இந்தக் குதிரை எனக்கு வேணாம்.
 
இந்தக் காலத்துக் குழந்தைங்க எல்லாம் சின்ன வயசுலேயே பெரியவங்க ஆயிடறாங்க..
எப்படிச் சொல்றீங்க?
பாருங்களேன். இந்தச் சின்ன வயசுலேயை அவங்களுக்குப் பெரியவங்க மாதிரி, துக்கம் சோகம், குழப்பம், மனசு ஒடிஞ்சி போறது, தற்கொலை பண்ணிக்கிற எண்ணம் எல்லாம் வந்துடுதே.
 
Rupert and Elaine, a young couple, got married and went happily on their honeymoon.
When they got back, Elaine immediately 'phoned her mother and her mother obviously asked, 'How was the honeymoon, dearest?'Ironing Board
'Oh, Ma,' she replied, 'the honeymoon was wonderful. So romantic...'
Then Elaine burst out crying. 'But, Ma, as soon as we returned home Rupert started using the most ghastly language... saying things I've never heard before! I mean, all these awful 4-letter words! You've got to come get me and take me home.... Please Ma.'
'Calm down, Elaine!,' said her mother, 'Tell me, what could be so awful? What 4-letter words?'
Still sobbing, Elaine whispered, 'Oh, Ma...words like dust, wash, cook, and iron.'
 
என்ன அப்பா? போன வாரம்தானே புது செருப்பு வாங்கினே. அதுக்குள்ளாறே இன்னொரு செருப்பு வாங்கணும்னு சொல்றே?
ஆமாம்பா. முந்தாநாள் ஒரு மந்திரியோட கூட்டத்துக்குப் போயிருந்தேன். அப்போ கோபத்துலே புது செருப்புங்கறதைக்கூட மறந்துட்டு மந்திரிமேலே அதை வீசி எறிஞ்சுட்டேன்.
 
இப்ப மழை பெய்யுமா? பெய்யாதா?
பெய்யலாம். இல்லை. பெய்யாமலும் இருக்கலாம். சொல்லமுடியாது.
சொல்ல முடியாதுன்னா போயேன். ரொம்பவும் கிராக்கி பண்ணிக்காதே
 
எஸ்கலேட்டர்லே ஏறத் தெரியாம தட்டுத் தடுமாறி ஏறி கீழே விழுந்துட்டாரே. அவர் யார்?
அவர்தான் எங்க தெருவிலே இருக்கிற எல்லார் வீட்டுக்கும் அவங்கவங்க வீட்டுத் தென்னை மரத்துலே ஏறி இளநீர் பறிச்சிப் போடறவர்
 
நெத்தியிலே ஏன் இப்படி பட்டை போட்டுக்கிட்டுத் திரியறே. பிறக்கும்போது பட்டையோடேயா பிறக்கறோம்? சிந்திச்சுப் பாரு.
அப்படிப் பார்த்தா பிறக்கும்போது நாம டிரஸ் போட்டுக்கிட்டா பிறக்கிறோம்?
 
உங்களுக்கு என்ன பிரச்சினை?
டாக்டர், மோஷனே போகமாட்டேங்குது. நீங்க தான் இதுக்கு ஒரு வழி பண்ணணும்.
இதுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு. வேறே வழி பண்ணறது அவ்வளவு நல்லா இருக்காது.
 
யோகா செஞ்சா ஆயுசு கூடும்னு சொல்றாங்களே. அது உண்மையா?

ஆமாம். உண்மைதான். ஆனால் 70 அல்லது 80 வருஷம் தொடர்ந்து செஞ்சாத்தான் பலன் கிடைக்கும்
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top