rgurus
Active member
ஒரு ஊரில் ஒரு பொற்கொல்லன் ஒருவன் இருந்தான். அவன் இழைத்த ஒரு குற்றத்திற்காக அவனுக்குத் தூக்குத் தண்டனை தரவேண்டி இருந்தது. ஆனால் அந்த ஊர் அரசனோ அவனுக்குப் பதிலாக ஒரு தையற்காரனைத் தூக்கிலிட உத்தரவிட்டார். ஊர் மக்களுக்குத் திகைப்பு ஏற்பட ஊர்த்தலைவர் 'என்ன அரசே, இப்படி செய்துவிட்டீர்கள்?' என்று வினவினார். அதற்கு அரசன் சொன்னான்:'நம் ஊரில் ஒரேயொரு பொற்கொல்லன் தான் இருக்கிறான். ஆனால் தையல்காரர்களோ இரண்டு பேர் இருக்கிறார்கள். எப்படியும் துக்கிலிடப் படவேண்டும் என்ற என் உத்தரவு நிறைவேற்றப்பட்டே ஆகவேண்டும். எனவே நான் சொன்னபடி செய்யுங்கள்'.