என்ன ஏதேனும் புது செய்தி
உண்டா?
என்று கேட்டுக்கொண்டே
அமர்ந்தார் அறிவுடை நம்பி.
ஒன்றும் இல்லை ..''ஏதோ அசுணம்
என்ற ஒரு பறவையாம் ..
அது மென்மையான இசையை
ரசிக்கக்கூடியதாம் ..
பறை எனும் கடினமான
தாளவாத்தியக் கருவியின்
அதிர வைக்கும் சத்தத்தைக்
கேட்டால் அந்த இரைச்சல்
தாங்காமல் அந்தப் பறவை
இறந்து விடுமாம்..
என்னே விந்தை பாருங்கள்'' !
என்று கூறியவாறு அன்றைய
நாளிதழைப் பார்த்துக்கொண்டே
தேநீரை சுவைத்தார் அறிவுக்கொழுந்து
''ஓஹோ ! இதைத்தான் நான்மணிக் கடிகை
நூலின் நாலாம் பாடல்
கூறுகிறதோ''? என்று கூறி நிறுத்தினார்
அறிவுடை நம்பி ..
என்ன என்ன நான்மணி என்ற நடிகையா?
என்று ஆவலுடன் கேட்டார் அறிவுக்கொழுந்து ..
அடச் சீ உன்னிடம் வந்து இதைச்சொன்னேன் பார்!
என்று தன்னை நொந்துகொண்டே ..ஒய் ! அது
நான்மணி நடிகை இல்லை . நான்மணிக் கடிகை
என்ற நமது இலக்கிய அறநூல் என்று கூறினார்
அறிவுடை நம்பி ..
தொடர்ந்து ..
'' சில மனிதர்களும். வாழ்க்கையில் தங்களுக்கு
இனிமை மட்டுமே இருக்க வேண்டும் என்று
நினைப்பார்கள்.
மாறாக துன்பம் ஏதேனும் வந்துவிட்டால்
உயிரை விட்டு விடுவார்கள்''
இதைத்தானே நான்மணிக் கடிகை கூறுகிறது ...
பறைபட வாழா அசுணமா உள்ளம்
குறைபட வாழார் உரவோர் - நிறைவனத்து
நெற்பட்ட கண்ணே வெதிர்சாம் தனக்கொவ்வாச்
சொற்பட வாழாதாஞ் சால்பு
(நான்மணிக் கடிகை. பாடல் நான்கு )
-நிறைவனத்து
நெற்பட்ட கண்ணே வெதிர்சாம் தனக்கொவ்வாச்
சொற்பட வாழாதாஞ் சால்பு
காட்டில் மரங்கள் மிக அடர்த்தியாக
வளர்ந்திருந்தால் அங்கு நெல் முளைக்க
வழி இல்லை. வளரத் தொடங்கும் போதே
அழிந்து விடும். அது போல, ஒருவன் நல்ல
செயல்களைச் செய்ய முயலும்போது சுற்றி
உள்ளவர்கள் அதனை ஊக்குவிக்காமல்
எதிர்மறையாகப் பேசி அவன் மனதைப்
புண்படுத்தினால் அவனது முயற்சி
ஆரம்பத்திலேயே முடங்கிவிடும்.
என்று சொல்லிவிட்டு தேநீர் கணக்கை
அறிவுக்கொழுந்தின் தலையில் கட்டிவிட்டு
அங்கிருந்து அகன்றார் நம் அறிவுடைநம்பி !
சிவஷன்முகம்
ஐ! எங்கப்பா குதிருக்குள்ளே இல்லை!:blabla: