புதுவையில் ஒரு புதுமையான மனிதர்.
வைதீகத் தொழிலை வியாபாரமாக்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பூஜை, புனஸ்காரம் எதுவாயினும், கான்ட்ராக்ட்
எடுத்து அதில் கமிஷன் அடிப்பதும் அதிகரித்துவிட்டது. தம் மக்களை எஞ்சினீயர் ஆக்கத் துடிக்கின்றது வைதீக வர்க்கம்.
இந்தக் கால கட்டத்தில், புதுவையில் ஒரு புதுமையான மனிதரைக் கண்டேன்!
அமைதியான தோற்றம்; வேதங்களையும் சாஸ்த்திரங்களையும் கற்ற விற்பன்னர்; வேத பாடசாலையும், கோசாலையும்
மிகச் சிறப்பாக நடத்துபவர்; தன் இரு புதல்வர்களும் தன் தொழிலைக் கற்றுத் தேற முனைபவர்; எந்தச் செயலாயினும்,
அதில் ஒரு நேர்த்தியும், கலை நயமும் மிளிர வைப்பவர்; அந்தணர்களுக்கு வழங்கும் தானங்களையெல்லாம், சரி சமமாகப்
பங்கிட்டு, அனைவரையும் காப்பவர்; ஒவ்வொருவரின் தேவையையும் அறிந்து, அதற்கேற்ப பொருட்களை வாங்கித் திருப்தி
அளிப்பவர்; சுப காரியங்களை நடத்தி, அந்த வருமானத்தை மட்டும் தனதாக்கி, அந்திமக் கிரியைகள் தரும் வருமானத்தைத்
தன் பாடசாலைக்கும், கோசாலைக்கும் இன் முகத்துடன் அளிப்பவர்; பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து, நல்லவை பல
போதிப்பவர். இவர் வந்து நடத்தும் எதுவாயினும், அனைவருக்கும் மன நிறைவை அளிக்கும் என்பது உறுதி!
இவரைப் போலப் பலர் மாறினால், சமுதாயம் மேன்மை அடையுமே! :thumb: