[h=2]வெப்பம் தணிய…...[/h]அப்பா, அம்மா எரிமலையாய்
கொதிக்கின்ற போதெல்லாம்
எண்ணை மழை கொட்டாதீர்கள்
ஐஸ் மழை பொழியுங்கள்
கொதிக்கின்ற போதெல்லாம்
எண்ணை மழை கொட்டாதீர்கள்
ஐஸ் மழை பொழியுங்கள்
செருப்பு...
பலருடைய வாழ்கையில்
பல பொருத்தங்கள்
பல நெருக்கங்கள்
இருந்த போதும்
இதன் பொருத்தம் போல்
இருப்பதில்லை!...
மிக சரியாக சொன்னீர்கள்.
வெப்பம் தணிய…...
அப்பா, அம்மா எரிமலையாய்
கொதிக்கின்ற போதெல்லாம்
எண்ணை மழை கொட்டாதீர்கள்
ஐஸ் மழை பொழியுங்கள்
ஆசை..
சீதனம் வாங்கி - என்னை
சிறைப்பிடித்த கணவருக்கு
பெண் பிள்ளைகளாகவே
பெற்றுக்கொடுக்க ஆசை....
உன் நினைவுகள் தோழா
நட்பால் ஆனது உறவு
பிரிவால் போனது மறைவு
நினைவால் நீண்டது கனவு
ஏக்கம் தந்து விட்டு
தூக்கமாய் போகின்றாய்
ஏங்கித் தவிக்கின்றோம்
எழுந்திடாத உறக்கத்தில் நீ
ஆச்சி சொன்ன அறிவுரை
மாட்டுவண்டி ஏறி மைல் பத்து
செல்ல முன்பே..
ஏரோப்பிளேன் ஏறி இங்கிலாந்தில்
இறங்குதுகள் – கட்டுமரம் ஏறி
கரைதேட பலகாலம் - இப்போ
கண்மூடி முளிக்க முன்னே – உலக
கரையொன்றில் நிக்குதுகள்
வேகத்தை விரும்புகின்ற - எம்
விஞ்ஞான பிள்ளைகளை
பழய காலத்துக்குள் இழுத்து, இழுத்து
பாழ் அடிக்க வேண்டாமே.....
கையுக்குள் கணணி..!
பரந்து விரிந்த உலகம்-இப்போது
ஒவ்வொருவர் கைக்குள்ளும்..
ஒடுங்கி அடங்கி சிரிக்கிறது-எனி
தேடவேண்டியது தேசங்கள் இல்லை
மனிதர்களின் மனங்களையே....!
மன உறுதி.....
பெய்கின்ற மழையை
நில் என்று சொன்னால் நிற்குமா
ஆனால் நனையாமல் இருக்க முடியும்
புறம் பேசும் மனிதர்களை
நிறுத்த முயல்வது நடக்காத காரியம்
ஆனால் நீ நீயாக இருக்க முடியும்..
சமையலில்…
வெங்காயம்…..
கண்ணீர்க்காவியம்
எழுதப்பட்ட மண்ணில்
கிடைத்த ஏடு.
உள்ளி…….
வாய்க்கு வெளியே
உள்ள பற்கள்
வாய்வின் எதிரி
வயிற்றின் நண்பன்.
மிளகாய்…….
சீன வெடி வெடிக்கும்
சில்லித்தாய்.
கடுகு……
உலகத்தை விடப்பெரியது
உருட்டி,உள்ளிருக்கும்
விடயம்.
கருவேப்பிலை……….
அறு சுவை- அடிக்கும்
மூலிகைச்சென்று.
மிளகு………
கா(ர)ர் இருளின்
குளிர்ச்சி.
என் தங்கை!....
ஆயிரம் சண்டைகள்
போட்டாலும்...
அடுத்த நொடியே
அகம் மகிழ
அண்ணா என்றழைத்து
அழகாய் சிரிக்கும்
செல்ல தேவதை
என் தங்கை!...
பாடசாலை விடுமுறை....
அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
பாடசாலை விடுமுறை
பணம்...
இல்லாவிட்டாலும் பிரச்சனை
இருந்தாலும் பிரச்சனை
பணம்...