• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

58094_485139168234006_1542052823_n.jpg

A friend is NEED is

is a friend Indeed

(also in deed)
:)
 

சுய நலம் இல்லாத உறவும் இல்லை.

சுயநலம் இல்லாத நேசமும் இல்லை.


நமக்கு இன்பம் தருவதனால் தானே நாம்

ஒரு நபரை / பொருளை நேசிக்கின்றோம்.
 
149082_449279151820008_2006403122_n.jpg


வலக்கரம் தருவதைக் கூட

இடக்கரம் அறியக் கூடாது. :nono:

பெருமைக்காகவே உதவி செய்யும்

பலரை நான் நன்கு அறிவேன்! :blah:
 
392932_442930815788175_1320841563_n.jpg



இருவருமே ஒருபோலப்
பேச்சை மு
றித்துக் கொள்ள
விரும்பினால் அன்றி அங்கு
பேச்சும் நிற்காது! மூச்சும் தான்!!
 
64380_441715749243015_1717979982_n.jpg



அகமும், முகமும்




அகத்தின் அழகு முகத்தில் தெரியும்;
முகத்தின் அழகை விடவும் அதிகமாக!
முயற்சி செய்தாலும் மறைக்க முடியமா
முன்னே வந்து நிற்கும் அந்த அக அழகை?

அசலும், நகலும் என்று வேறுபடுத்தி
அறியவே இயலாத வண்ணம் இன்று,
அற்புதமான பொருட்கள் பலவற்றை
அழகுத் துறையில் நாம் கண்டிடலாம்!

பட்டாம்பூச்சிகள் போல இறகடிக்கும்;
போலி கண் இமையின் நீள் நுனிகள்!
நாணம் கொண்ட ஒரு சிறு பெண் போல,
நாளெல்லாம் திகழும் இரு கன்ன நிறம்!

இருப்பதை மறைத்து வரையப்பட்ட,
வில் போன்ற நீண்ட புருவங்கள்!
கனிந்த ஆப்பிள் பழம் போல் ஒரு
கணத்தில் உருப்பெறும் இரு உதடுகள்!

தோலின் நிறத்தையே மாற்றும் சில
தோல் சலவை திரவங்கள், பொடிகள்;
மொழு மொழு எனத் தோன்றிடத் தேவை,
மெழுகு வகைகள் சிலவற்றின் சேவை!

இலை போன்ற மிகத் தட்டையான வயிறு;
இல்லாதது போன்ற ஒரு உடுக்கை இடுப்பு;
நகங்களுக்கும் உண்டு பல நிறப் பூச்சு,
நாளெல்லாம் இதே மூச்சு, இதே பேச்சு!

மாறிக் கொண்டே இருப்பதன் பெயர் தான்
மாண்பு மிகு நம் ‘சரீரம்’ என்று அறிவீரா?
மாறிக் கொண்டே இருக்கும் ஒன்றுக்காக
மனிதனின் பொருள், நேரம் வீணாகலாமா?

உடல் கிடைத்தது நல்ல சாதனை புரியவும்,
உலகம் உய்ய நல்ல சேவை செய்யவுமே!
உழைத்து, உடலைக் காட்சிப் பொருளாக்கி,
உலகத்தோருக்கு காண்பிப்பதற்கு அல்ல!

மணி வெளுக்க சாணை உண்டு,
மனம் வெளுக்க வழியும் உண்டோ என
மனம் வெதும்பிப் பாடுகின்றார் அல்லவா
மனம் கவர்ந்த தமிழ்க் கவி பாரதியார் ?

மனம் வெளுத்தால் நம் அகம் அழகுறும்.
முகத்தில் தெரியும் அந்த அகத்தின் அழகு!
முயற்சிகள் எத்தனை செய்த போதிலும்,
முக அழகு என்றும் அக அழகை வெல்லாது!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 



மௌன மொழி!




குறை குடம் தான் தளும்பி வழியும்;
நிறை குடம் என்றுமே தளும்பாது!
நெல்லின் பதர்கள் காற்றில் பறக்கும்,
நெல் மணிகள் என்றுமே பறக்காது!

இறைவன் தந்தான் இரண்டு செவிகளை,
நிறைய நிறைய நாம் கேட்பதற்காக!
இறைவன் தந்தான் ஒரே ஒரு நாவினை,
குறைவாகப் பேச வேண்டும் என்பதற்காக
.

அறிவிலிகளும் அறிவாளர்களே, தங்கள்
திருவாயைத் தாம் திறக்காத வரையிலும்.
கன்று முட்டி, முட்டிப் பால் வேண்டுவது போல,
நின்று கேட்பவர்களிடமே நாம் பேச வேண்டும்.


பால் பொங்கிய பின் வெளியே வழியும்,
மனம் பொங்கி நிறைந்த பின்னரே,
பால் போல் இனிய சொற்கள் வழிந்து,
மனம் குளிர வெளியில் வரவேண்டும்.

பயனில்லாச் சொல் பாராட்டக் கூடாது,
புறம், கோள், வம்புகள் பேசக்கூடாது;
முத்து உதிர்ந்தார்ப் போலப் பேசினால்,
உற்று கவனிப்பார்கள் மற்றவர்களும்.


பேசாத போதுதான் நினைவலைகள்,
தூசாக அடங்கிச் சற்று அமைதியுறும்;
பள்ளத்தை நோக்கி ஓடும் வெள்ளம் போல,
உள்ளத்தை நோக்கி ஓடத் தொடங்கும்.

உள்முகமாகச் சென்றால்தான் பல
உண்மைகள் நமக்குப் புரிய வரும்.
உண்மைகள் புரிந்த பின்னர், நமது
வண்மைகள் நமக்கு நன்கு புலப்படும்.

அதிகம் பேசுபவராக இல்லாமல்,
மிதமாகப் பேசுபவராக மாறுவோம்;
சக்தி வாய்ந்த நம் வார்த்தைகளை,
யுக்தியுடன் நாம் பயன்படுத்துவோம்.


வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
563484_419499831464607_98473883_n.jpg


எல்லாம் இருப்பவர்கள் நம்பிக்கையை இழந்து

தற்கொலை செய்து கொள்ளும் போது

எதுவுமே இல்லாத இவர்கள் மட்டும்

எந்த நம்பிக்கையில் உயிர் வாழ்கிறார்கள்??? :hail:
 
தொட்டதற்கெல்லாம் கோபித்துக் கொண்டு


விவாகரத்து செய்யும் பெண்களே!கூறுங்கள்

எந்த சுகத்தை எதிர்பார்த்து இந்தத் தள்ளாத கிழவி


இன்னமும் இவனை விட்டுப் பிரியாமல் இருக்கிறாள்??? :moony:
 
397558_411717588909498_598503333_n.jpg

விழாமல் கற்றுக் கொள்ள முடியாது
நடப்பதற்கும் சைக்கிள் விடுவதற்கும்.
இதை அறிந்து கொண்ட பின்னும்
அலமந்து போவதன் பெயரே தாய்ப் பாசம். :)
 

Latest ads

Back
Top