• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

images


Dear Bala Anna!
This is for you and your loved ones
wishing each and every one of you
A HAPPY AND PROSPEROUS NEW YEAR!
 
திருமூலரின் திருமந்திரம்


விநாயகர் காப்பு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே

ஐங்கரன், ஆனைமுகன், இளம் பிறை போன்ற தந்தங்களை உடையவன்;
சிவன் மகன், ஞான வடிவானவன், அவன் திருவடிகளை வணங்குகின்றேன்.






 
Last edited:
1. கடவுள் வாழ்த்து

ஒன்று அவன்தானே; இரண்டு அவன் இன்னருள்;
நின்றனன் மூன்றினுள்; நான்கு உணர்ந்தான்; ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன் ஏழு உம்பர்ச்
சென்றனன்; தான் இருந்தான் ; உணர்ந்து எட்டே.


ஒரே மெய்ப் பொருளானவன்,

சிவ சக்தியராக இரண்டானவன்,


பிரமன், திருமால் ருத்திரன்
என்ற மும் மூர்த்திகளுமானவன்,

நான்கு புருஷார்த்தங்களை (
அறம் பொருள் இன்பம் வீடு) உணர்ந்தவன்,

ஐம் பொறிகளை ( மெய், கண், மூக்கு, வாய், செவி ) வென்றவன்,


ஆறு சக்கரங்களில் (மூலாதார
ம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம்,
அநாஹாதம், விசுத்தி, ஆக்ஞைகளில் ) விரிந்தவன்,

ஏழாவது சக்கரமான ஸஹஸ்ர தளத்தில் இருப்பவன்,


எட்டுப் பொருட்களில் ( நிலம், ஜலம், தீ, வளி, வெளி,
கதிரவன், நிலவு, ஆன்மா ) கலந்து விளங்குபவன்.
 
திருமூலரின் திருமந்திரம்

# 2. கூற்றுதைத்தான்
போற்றி!

போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நால் திசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனை
மேல்திசைக்குள் தென் திசைக்குஒரு வேந்தனாம்
கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே.

தூயவனாக இனிய உயிரில் பொருந்தி உள்ளான்,
நான்கு திசைகளுக்கும், சக்திக்கும் அவனே நாயகன்,
தென்திசை மன்னனாகிய யமனை உதைத்தவன்,
அந்த இறைவனை நான் புகழ்ந்து போற்றுகின்றேன்.



 
# 3. இறைவனின் திறன்

ஒக்க நின்றானை, உலப்புஇலி தேவர்கள்
நக்கன் என்று எத்திடும் நாதனை நாள்தோறும்
பக்கம் நிற்றார் அறியாத பரமனைப்
புக்கு நின்று உன்னி யான் பொற்றிசெய்வேனே.

உயிர்களுடன் கலந்து நிற்பவன்!
அமரர்களான தேவர்கள்
திகம்பரன் எனத் தொழுதிடும் நாதன்!
அருகில் உள்ள பிற
தேவர்களும் அறிய இயலாத மேன்மைகள்
உடையவன்!
அவனை நான் நாள் தோறும் சென்று வழிபடுவேன்.
 
திருமந்திரம்

# 4. அறியாமை நீங்கினேன்

அகல்இடத்தார் மெய்யை, அண்டத்து வித்தைப்,
புகல் இடத்து என்றனைப் போதவிட்டானைப்
பகல்இடத்தும் இரவும் பணிந்து ஏத்தி
இகல்இடத்தே இருள் நீங்கி நின்றேனே.

அண்டத்தின் ஜீவர்களுக்கு மெய்ப் பொருள் ஆனவன்,
அண்டங்களுக்கு இவன் ஒருவனே வித்தானவன்,
புகுந்த இடத்தலேயே என்னை வாழ வைத்தவன்'
இவனைப் பகலிலும், இரவிலும் பணிந்து புகழ்ந்து
நான் இந்த உலகின் அறியாமை நீங்கப் பெற்றேனே.
 
திருமந்திரம்

# 5. ஒப்பில்லாதவன் சிவன்

சிவனோடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை ;
அவனொடொப்பார் இங்கு யாவரும் இல்லை;
புவனங் கடந்தன்று பொன்ஒளி மின்னும்
தவனச் சடை முடி தாமரை யானே!

சிவனை விடச் சிறந்த தெய்வம் ஒன்று உலகில் இல்லை.
அவனுக்கு ஒப்பானவர் என்றும் இங்கு எவருமில்லை.
சிவன் அண்டத்தைக் கடந்து நின்று பொன் போல் ஒளிர்பவன்.
ஸஹஸ்ரதளத்தில் மேல் நோக்கிய செந்தாமரையில் உறைபவன்.
 
திருமந்திரம்


# 6. முக்தி தருபவன் சிவன்
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனின்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன்றில்லை
அவனன்றி ஊர் புகுமாறறி யேனே.



சிவனை விட உயரிய தெய்வம் ஒன்றும் இல்லை.
அவனையன்றிச் செய்யும் அருந்தவம் ஒன்றும் இல்லை.
அவனின்றி மும் மூர்த்திகள் செய்வது ஒன்றும் இல்லை.
அவனின்றி முக்தி அடையும் வழி ஒன்றும் இல்லை
 
# 7. அவனியோருக்குத் தந்தை சிவனே!

முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கும் மூத்தவன்

தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னை," அப்பா" எனில் அப்பனுமாய் உளன்
பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத் தானே.

தனக்குச் சமமான மும் மூர்த்திகளுக்கும் மூத்தவன்;
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைமகன் சிவன்;
தன்னை "அப்பா!" என்பவருக்குத் தந்தையாவான்;
பொன்னை ஒத்த ஸஹஸ்ர தளத்தில் விளங்குவான்.
 
திருமந்திரம்

#8. வெய்யன், தண்ணியன்

தீயனும் வெய்யன் புனலினும் தண்ணியன்;
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை;
சேயினும் நல்லன்; அணியன் நல்அன்பர்க்கு;
தாயினும் நல்லன்; தாழ் சடையோனே.


தாழ்ந்த சடையினை உடைய சிவ பெருமான்
தீயவருக்குத் தீயை விட வெம்மையானவன்;
தன் அடியவருக்கு நீரை விடக் குளிர்ந்தவன்;
சின்னக் குழந்தையை விட நல்லவன் ;
தன் அன்பர்களுக்கு மிகவும் அருகில் இருப்பவன்;
பெற்ற தாயைவிட அருள் மிகுந்தவன்;
ஆயினும் அவன் அருளை எவரும் அறிவதில்லை
 
# 9. தொழப்படுவர் இல்லாதவன்

பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னால் பிறங்க இருந்தவன்; பேர் நந்தி;
என்னால் தொழப்படும் எம் இறை; மற்று அவன்
தன்னால் தொழப்படுப வார்இல்லை தானே.


பொன்னை முறுக்கி அமைத்தது போன்ற
செஞ்சடை பின்புறம் விளங்குகின்ற சிவன்;
அவன் பெயர் நந்தி என்பதாகும்;
என்னால் வணங்கத் தகுந்தவன் அவன்;
உயிர்கள் எல்லாவற்றுக்கும் தலைவன்;
ஆனால் அவனால் வணங்கத் தகுந்தவர்
என்று எவரும் இல்லாதவன் என் இறைவன்.



 
திருமந்திரம்

# 10. யாதுமாகி நிற்பவன்

தானே இருநிலம் தங்கி விண்ணாய் நிற்கும்;
தானே சுடும் அங்கி, ஞாயிரும், திங்களும்;
தானே மழை பொழி தையலுமாய் நிற்கும்;
தானே தடவரை, தண்கடல் ஆமே.



தானே இரு நிலத்தையும் தாங்குவான்;
தானே விண்ணாக வடிவெடுத்து நிற்பான்;
தீயாகவும், சூரிய, சந்திரர்களாகவும் உள்ளான்;
தானே அருள் மழை பொழியும் சக்திதேவி ஆகின்றான்;
அகன்று உயர்ந்த மலையும் அவனே!
பரந்து குளிர்ந்த கடலும் அவனே!
 
திருமந்திரம்

# 11. அவன் பெயர் நந்தி


அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதும்ஒன்று இல்லை;
முயலும் முயலில் முடிவும் மற்று அங்கே
பெயலும் மழை முகில்; பேர் நந்தி தானே.


தொலைவிலும், அருகிலும் எங்கு நோக்கினும்
என் பெருமானுக்கு ஒப்பான தெய்வம் இல்லை.
முயற்சியும் அதன் பலனும் அந்தப் பெருமானே.
மழை பொழிகின்ற மேகமும் அந்தப் பெருமானே.
அந்தப் பெருமானின் பெயர் நந்தி என்பதாகும்.
 
திருமந்திரம்


# 12. தலைவன் அவனே

கண்ணுத லான் ஒரு காதலின் நிற்கவும்
எண்இலி தேவர் இறந்தார் எனப் பலர்;
மனஉறு வார்களும் வான்உறு வார்களும்
அண்ணல் இவன்என்று அறியகிலார்களே.



நெற்றிக் கண்ணை உடைய சிவபெருமான்
நிகரில்லாத அன்புடன் அழியாது இருக்கையில்,
எண்ணில்லாத தேவர்கள் அழிந்து பட்டனர்.
மண்ணவர்களும், விண்ணவர்களும் தாங்கள்
அழியாது வாழ அருள் செய்பவன் சிவனே என்று
அறியாமல் இருக்கின்றனர்! என்னே இவர் பேதைமை!



 
# 13. கடந்து நின்றான்

மண்அளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்அளந்து இன்னம் நினைக்கிலார் ஈசனை;
விண்அளந் தான்தன்னை மேல்அளந்தார் இல்லை;
கண்அளந்து எங்கும் கடந்து நின்றானே.



மண் அளந்த மாலவனும், தாமரை மலரில் உதித்த பிரமனும்
பிற தேவர்களும் ஈசனை எண்ணத்தில் நிறுத்துவதில்லை;
அவனைப் பற்றி அவர்கள் சிறிதும் எண்ணுவதில்லை.
விண்ணில் விரிந்துள்ள சிவனை மண்ணவர் அறிய முடிவதில்லை.
சிவன் மண்ணில் கலந்தும், அனைத்தையும் கடந்தும் விளங்குகின்றான்.



 
# 14. கண்காணிக்கின்றான் சிவன்

கடந்துநின்றான் கமல மலர் ஆதி;
கடந்துநின்றான் கடல்வண்ணன் எம் மாயன் ;
கடந்து நின்றான் அவர்க்கு அப்புறம் ஈசன்;
கடந்துநின்றான் எங்கும் கண்டு நின்றானே.


சிவன், சுவாதிஷ்டானத்தில் விளங்கும் நான்முகனைக் கடந்து விளங்குகின்றான்.
சிவன் மணிபூரகத்தில் விளங்கும் திருமாலைக் கடந்து விளங்குகின்றான்.
இவ்விருவரையும் கடந்து அனாஹதத்தில் விளங்கும் ருத்திரனையும் கடந்து சிவன்
சிரசின் மேல் சஹஸ்ரதளத்தில் இருந்துகொண்டு அனைத்தையும் கண்காணிக்கின்றான்.
 
# 15. ஆதியாகிய சோதி

ஆதியுமாய், அரனாய், உடலுள் நின்ற
வேதியுமாய் விரிந்து ஆர்ந்து இருந்தான் அருள்
சோதியுமாய்ச் சுருங்காதது ஓர் தன்மையுள்
நீதியுமாய் நித்தம் ஆகி நின்றானே.


உலகினைப் படைப்பபவன் சிவ பெருமான்;
உலகினை அழிப்பவனும் சிவபெருமான்;
உடலில் மாற்றங்களைச் செய்பவன் அவன்;
அவற்றைக் கடந்து விளங்குபவனும் அவன்;
குவியாத அருட் சோதியாக விளங்குபவன் சிவன்;
ஊழினை இயக்குபவன் அவன்; நீதியாகி, நித்தியமாகி
என்றும் அழியாமல் இருப்பவன் சிவபெருமானே.
 
# 16. வணங்குவது எதற்காக ?

கோது குலாவிய கொன்றைக் குழல்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவிக் குணம் பயில் வாரே.


நரம்புகள் உள்ள கொன்றை மலரை அணிந்த
சுருண்ட சடையுடையவன் சிவ பெருமான்.
ஒளிரும் நெற்றியுடைய உமையொரு பாகத்தினன் .
மூவர்களும், தேவர்களும் குற்றங்கள் பொருந்தியுள்ளதால்
சிவனை எந்த குணத்தைப் பாராட்டி நாடுவர்? நாட மாட்டார்!
 
# 17. ஒப்பில்லாத உறவு!

காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்
மாயம் கத்தூரிஅது மிகும்; அவ்வழி
தேசம் கலந்து ஒரு தேவன் என்று எண்ணினும்
ஈசன் உறவுக்கு எதிர் இல்லை தானே.



பருவுடல், நுண்ணுடல் இரண்டும் ஒன்றாகக் கலந்திருந்த போதிலும்,
மாயையுடன் தொடர்புடைய நுண்ணுடலில் தான் கானம் மிகுந்திருக்கும்.
அந்த கானம் வழியே மனம் பொருந்தி ஆன்மா தன்னையே ஒளிவடிவாக் காண இயலும். அதுவும் உடலை விட்டு வான்வடிவான சிவனுடன் கொள்ளும் தொடர்புக்கு ஒப்பாகாது.
 
#18. வரமருளும் வள்ளல்

அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறை தவம் நோக்கி
அதுபதி ஆதரித் தாக்கம் அது ஆக்கின்
"இதுபதி கொள்" என்றஎம் பெருமானே.



அளகாபுரி மன்னன் குபேரனை வடதிசைக்குத்
தலைவனாக ஆக்கியது அவன் அருந்தவம்.
செல்வத்தின் அதிபதியாக்கியது அவன் அருந்தவம்.
"அந்த வடதிசையைப் போற்றி சேமிப்பைப் பெருக்கினால்
இந்த வடதிசைக்கு நீ தலைவன் ஆகலாம்!" என்று
சொல்பவன் என் இறைவன் சிவபெருமான்.


 
# 19. தவத்தில் விளங்குகின்றவன்

இதுபதி ஏலம் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன்; மூதறிவாளன்;
விதுபதி செய்தவன்; மெய்த்தவம் நோக்கி,
அதுபதி யாக அமர்கின் றானே.

வடக்கு திசைக்கு அதிபதியானவன் சிவபெருமான்.
விஷய வாசனைகள் விளங்கும் ஏழு ஆதாரங்களையும்
அழித்துப் பாழ் நிலமாக ஆக்கியவன் சிவன்.
அனைத்தையும் அறிய வல்ல மூதறிவாளன்.
நம் பாவங்களைப் போக்க வல்லவன் சிவன்.
அடியவர்களின் உண்மையான தவத்தைக் கண்டவுடன்
அதையே தன் இருப்பிடமாகக் கொண்டு எழுந்தருள்வான
 
# 20. ஈசன் உருவம்

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறநெறி நாடில்,
இடியும் முழக்கமும் ஈசன் உருவம்
கடிமலர்க் குன்றம் மலைஅது தானே.


சிவன், கருவில் உருவாகும் முன்னரே நம்முடைய
பிறப்பையும், இறப்பையும் வரையறை செய்பவன்.
அவன் உறையும் நியதியை அறிந்து கொண்டால் அதுவே
விளக்கம் பொருந்திய கண் மலர்களுக்கு மேலுள்ள சிரசாகும்.
அந்த இறைவனின் வடிவம் ஒளியும், இடியின் ஒலியும் ஆகும்.

(பஞ்ச பூதங்களின் தலைவர் சிவபெருமான். தியானப் பயிற்சியில்
ஈடுபடுபவர்களுக்கு ஒளி வட்டம் தோன்றும்! இடி முழக்கம் கேட்கும்!)
 

Latest posts

Latest ads

Back
Top