• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

# 21. கோனைப் புகழ்மின்!

வானப் பெருங்கொண்டல் மால்அயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனை,
காணக் களிறு கதறப் பிளந்த எம்
கோனைப் புகழுமின், கூடலும் ஆமே.

வானத்தில் உள்ள மேக நிறம் கொண்ட கரிய திருமால், பிரமன்,
பிற தேவர்களின் இழிந்த பிறவியை நீக்குபவன் சிவபெருமான்.
ஒப்பற்ற ஒருவன் ஆவான் அவன். ஆணவமாகிய காட்டு யானை
கதறும்படி அதைப் பிளந்து அழித்தவன் சிவபெருமான்;
இத்தகைய எம் கோனைப் போற்றிப் புகழுங்கள்!
அவனையே அடைந்து முக்தி பெற அதுவே உதவும்.
 
# 22. பேணி நிற்பான்

மனத்தில் எழுகின்ற மாயநன் னாடன்
நினைத்தது அறிவனென்னில் தான் நினைக்கிலர்
எனக்கு இறை அன்புஇலன் என்பர்; இறைவன்
பிழைக்கநின் றார் பக்கம் பேணிநின் றானே.


தியானப் பொருளாக மனத்தில் தோன்றுவான் மாயநாடனாகிய சிவன்.
தன்னை ஜீவர்கள் நினைப்பதை நன்கு அறிவான் சிவபெருமான் எனினும்
அவனைச் சிறிதும் நினையாது வாழ்கின்றனர் பற்பல ஜீவர்கள்.
"சிவனுக்கு என் மீது அருள் இல்லை!" என்றும் கூறுவார்கள் பலர்!
தன் கருணையை நாடாதவர்களுக்கும் கருணை வழங்கும் வள்ளல்.
அவன் தன் கருணையின் சிறப்புத் தான் என்னே!
 
#23. அல்லும் பகலும் அருள்வான்

வல்லவன் வன்னிக்கு இறைஇடை வாரணம்
நில்என் நிற்பித்த நீதியுள் ஈசனை
இல் என வேண்டா; இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின்றானே.


இறைவன் எல்லாம் செய்ய வல்ல ஆற்றல் பெற்றவன்.
கடலின் நடுவே அக்னி தேவனை நிலைக்கச் செய்பவன்.
இத்தகைய இறைவனை இல்லை என்று கூற வேண்டாம்.
பிற தெய்வங்களுக்கும் முதல்வனாக இருந்துகொண்டு
அல்லும் பகலும் நமக்கு அருள் செய்கின்றான் சிவபெருமான்.
 
# 24. சிவன் அடி

போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனிதன்அடி
தேற்றுமின் என்றும்; சிவன் அடிக்கே செல்வம்
ஆற்றியது என்று, மயல் உற்ற சிந்தையை
மாற்றி நின்றார்வழி மன்னி நின்றானே.



சிவபெருமானின் திருவடிகளை இடைவிடாது
போற்றிப் புகழ்ந்து எப்போதும் சிந்தனை செய்யுங்கள்.
நம் செல்வம் அனைத்தும் அவன் திருவடிகளுக்கே உரியது
என்று புறப் பொருட்களில் மயங்கிய மனத்தை மாற்றினால்
சிவன் நம் சிந்தையில் நீங்காமல் நிலையாக நிற்பான்.
 
#25. அஞ்ஞானம் விலகும்

பிறப்பிஇலி, பிஞ்ஞகன் பேரருளாளன்
இறப்புஇலி, யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்புஇலி தன்னைத் தொழுமின்; தொழுதால்
மறுப்பு இலி, மாயா விருத்தமும் ஆமே.


அவன் பிறவி அற்றவன்;
கனத்த சடை முடியை உடையவன்;

பேரருள் மிக்கவன்; அழிவு என்பது அற்றவன்;
எல்லோருக்கும் இடையறாத இன்பத்தைத் தரும் இறைவன்;
அவனை வணங்குங்கள்.

அதனால் அஞ்ஞானம் நீங்கப் பெறலாம்;
மெய்ஞானம் அடையலாம்


 
#26. இதயம் ஆலயம்.

தொடர்ந்து நின்றானைத் தொழுமின்; தொழுதால்
படர்ந்து நின்றான்பரி பாரகம் முற்றும்
கடந்து நின்றான்; கமலம் மலர் மேலே
உடந்திருந்தான் அடிப்புண்ணியம் ஆமே.

ஆன்மாக்களைத் தொடர்ந்து நிற்கும் சிவபெருமானை
எப்போதும் இடைவிடாது வணங்குவீர்.
அங்ஙனம் வணங்கினால் நமக்குக் கிடைக்கும்
எங்கும் பரவி விரவி இருப்பவனும்;
உலகம் முழுவதையும் கடந்தவனும்,
ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரையில் உறைபவனும்
ஆகிய சிவபெருமானின் சீரியத் திருவடிப் பேறு.
 
# 27. இதயம் ஆலயம்

"சந்தி எனத்தக்க தாமரை வாள் முகத்து
அந்தம்இல் ஈசன் அருள் நமக்கே" என்று
நந்தியை நாளும் வணங்கப்படும் அவர்
புந்தியின் உள்ளே புகுந்து நின்றானே.


சேர்க்கையின் இடம் எனப்படும் சுவாதிஷ்டானத்தின் கீழே,
"முடிவு இல்லாத இறைவனின் அருள் எனக்கு உரியது!" என
அந்தப் பெருமானை வணங்குபவரின் அறிவினுள் புகுந்து,
அவர் இதயமே ஆலயமாக நிலைத்து நிற்பான் சிவபெருமான்.

 
#29. உறவு ஆர் உளர் ?

காண நில்லாய் , அடியேற்கு உறவு ஆர் உளர்?
நாண கில்லேன் உன்னை நான் தழுவில் கொளக்
கோணி நில்லாத குணத்து அடியார் மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்து நின்றானே.

நான் உன்னைக் காணும்படி வெளிப்பட்டு அருள்வாய்!
எனக்கு உனையன்றி உறவு வேறு யார் உளார் கூறு !
வெளிப்படும் உன்னைத் தழுவிக் கொள்ள நான் நாணுகில்லேன்!
மனத் தூய்மை வாய்ந்த, குணம் மிகுந்த, அடியவர்கள் உள்ளங்களில்
ஆணி வேரெனே உறுதியாக எழுந்தருளி இருக்கும் என் தலைவா வா!
 
#29. உறவு ஆர் உளர் ?

காண நில்லாய் , அடியேற்கு உறவு ஆர் உளர்?
நாண கில்லேன் உன்னை நான் தழுவில் கொளக்
கோணி நில்லாத குணத்து அடியார் மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்து நின்றானே.

நான் உன்னைக் காணும்படி வெளிப்பட்டு அருள்வாய்!
எனக்கு உனையன்றி உறவு வேறு யார் உளார் கூறு !
வெளிப்படும் உன்னைத் தழுவிக் கொள்ள நான் நாணுகில்லேன்!
மனத் தூய்மை வாய்ந்த, குணம் மிகுந்த, அடியவர்கள் உள்ளங்களில்
ஆணி வேரெனே உறுதியாக எழுந்தருளி இருக்கும் என் தலைவா வா!
 
# 30. ஞானம் கருதியே!

'வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தான்நின்று அழைக்கும்கொல்' என்று தயங்குவார்;
ஆன்நின்று அழைக்கும் அதுபோல், என் நந்தியை
நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே.


வானம் தானே உவந்து முன்வந்து மழை பொழிவதைப் போலவே
தானே வந்து அருள் மழை பொழிவார் ஈசன் எனத் தயங்கி நிற்பார் சிலர். கன்று ஒன்று தன் தாய்ப் பசுவை அன்புடன் அழைப்பது போல
இன்று நான் ஈசனை அழைப்பது ஞானம் பெற விரும்புவதால்!
 
#31. இசைந்த வடிவினன்

மண்ணகத் தான்ஒக்கும், வானகத் தான்ஒக்கும்,
விண்ணகத் தான்ஒக்கும், வேதகத் தான்ஒக்கும்
பண்அகத்து இன்னிசை பாடல் உற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே.

இறைவன் மண்ணுலகில் வசிப்பவர்களுக்கு
மனித உருவில் வந்து வெளிப்படுவான்.
வானுகத்தில் வசிப்பவர்களுக்கு இறைவன்
வானவடிவில் ஒளிமயமாக வெளிப்படுவான்.
விண்ணுலகில் வசிப்பவர்களுக்கு இறைவன்
தேவ வடிவில் வந்து வெளிப்படுவான்.
சித்திகளை விரும்புபவர்களுக்கு இறைவன்
சித்தர் வடிவில் வந்து வெளிப்படுவான்.
நிறைவு பெற்ற மனதில் நின்று கொண்டு
நாதத்தை வெளிப்படுத்தும் பெருமானிடம்
அறிவின் இடத்தில நின்று நான் அன்பு பூண்டிருந்தேன்.
 
# 32. பாடிப் பணிவோம்

தேவர் பிரான், நம்பிரான் திசை பத்தையும்

மேவு பிரான், விரி நீர்உலகு ஏழையும்
தாவு பிரான், தன்மைதான் அறிவார் இல்லை
பாவு பிரான் அருள் பாடலும் ஆமே.

சிவ பெருமான் தேவர்களுக்குத் தலைவன்;
சிவ பெருமான் நம் போன்றவருக்கும் தலைவன்;
ஜீவராசிகளைப் பத்து திசைகளிலும் சூழ்ந்திருப்பான்;
விரிந்த நீரால் சூழப்பட்ட ஏழு உலகங்களைக் கடந்தவன்;
அவனது தன்மையை அறிந்தவர் யாரும் இல்லை.
அந்த பெருமானைப் பாடிப் பணிவோமாகுக.
 
10929980_1585832471633640_2598519154472060978_n.jpg
 
# 28. வழித்துணை

இணங்கிநின் றான், எங்குமாகி நின் றானும்,
பிணங்கிநின் றான்,பின் முன் ஆகிநின்றானும்,
உணங்கிநின் றான், அமரா பதி நாதன்;
வணங்கிநின் றார்க்கே வழித்துணை ஆமே.

ஆன்மாக்களுடன் பொருந்தி விளங்குபவன் சிவன்;
இங்கு அங்கு என்னாதபடி எங்கும் நிறைந்தவன் அவன்;
எக்காலத்திலும் இருக்கும் அவன் மாறுபட்ட தன்மை உடையவன்;
தேவர்களின் உலகை ஆளும் அந்த நாதன் தனக்கு என்று ஒரு செயல் இல்லாதவன்;
தன்னை அணுகி வணங்குபவர்களுக்கு நல்ல வழித்துணையும் ஆவான் அவன்.
 
Today's posts:

# 33. நெஞ்சம் வாடுகின்றார்


பதிபல வாயது பண்டு இவ்வுலகம்
விதிபல செய்துஒன்றும் மெய்ம்மை உணரார்,
துதிபல தோத்திரம் சொல்லவல் லாரும்
மதி இலர் நெஞ்சினுள் வாடுகின்றாரே.

தொன்று தொட்டே இந்த உலகினில்
பல வேறு தெய்வங்கள் இருந்துள்ளனர்.
அவர்களைத் தொழும் விதிகள் பலவற்றை
ஏற்படுத்தியும் உண்மையை உணரவில்லை.
துதித்து பாட வல்லவர்களும் சிவத்துடன் கலந்து
பெறுகின்ற உண்மை அறிவைப் பெறவில்லை!
அவர்கள் அமைதியின்றி நெஞ்சம் வாடுகின்றனரே.
 
# 34. புகழ்ந்து நின்றேன்


சாந்து கமழும் கவரியின் கந்தம் போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்நெறி
ஆர்ந்த சுடர் அன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.


சிவபிரான் தேவர்களுக்கு அருளிய மெய்நெறி
கலவைச் சாந்தில் வீசும் கஸ்தூரியைப் போலச்
சிவமணம் வீசிக் கமழும். உலகில் திகழும்.
அந்த உண்மை நெறியில் செல்வதற்குத தேவை
அரிய சுடர் போன்று வழிகாட்ட ஒரு பெரிய ஒளி.
அதனை அளிப்பது அந்தப் பெருமானின் ஆயிரம் நாமங்கள்.
அவற்றை நான் இருக்கும் போதும் நடக்கும் போதும் ஓதுகின்றேன்
 
பானகத்தில் துரும்பு!
தேன் சுவையில் கசப்பு!

இன்னதென்று அறியார்
இவர் தான் செய்வது!

மன்னியுங்கள் இவரை
மாண்புடன் திருமூலரே!
 
# 35. திருமந்திரம்

ஆற்றுகில் லாவழி யாகு மிறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் குங்கிழக் குத்திசை யெட்டொடு
மாற்றுவ னப்படி ஆட்டவுமாமே.

பிறர் படைக்காத செந்நெறியில் திகழ்பவன் சிவபெருமான்.
அவனைப் போற்றுங்கள்; அவனைப் புகழுங்கள். அப்போது
அவன் நம் சிரசில் கவிழ்ந்த நிலையில் இருக்கும் அஷ்ட தளக் கமலத்தை
நிமிரச் செய்து விட்டு சன்மார்க்க நெறியில் நம்மைச் செலுத்துவான்.
அப்போது ஊர்த்துவ முகமான ஈசான முகம் ஒளிமயமாக விளங்கும்.
 
# 36. அருள் பெறலாம்

அப்பனை நந்தியை ஆரா அமுதனை
ஒப்புஇலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரிசு ஆயினும் ஏத்துமின்; ஏத்தினால்
அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே.

உயிர்கள் அனைத்துக்கும் தந்தை அவன்;
நம் அனைவரின் இறைவனும் அவன்;
திகட்டாத அமுதம் போன்றவன் அவன்;
தனக்கு ஒரு ஒப்பில்லாதவன் அவன்;
வேண்டியவர்களுக்கு வேண்டியவற்றை
வேண்டியபடியே அருளும் ஓர் வள்ளல் அவன்;
ஊழியின் உயர்ந்த தலைவன் அவன்; அவனை
எவ்வழியிலாகினும் தொழுது வழிபடுங்கள்;
இவ்வழியில் அவன் அருளைப் பெற இயலுமே.
 
# 37. வான்மதி போல் ஊனில் நிற்பான்

நானும்நின்று ஏத்துவன் நாள்தொறும் நந்தியைத்

தானும்நின் றான் தழல்தான் ஒக்கும் மேனியன்;
வானில் நின்று ஆர் மதிபோல் உடல் உள்ளுவந்து
ஊனில் நின்று ஆங்கே உயிர்க்கின்ற வாறே.

நாள் தோறும் நிலையாக இருந்து நான் ஈசனை வழிபடுவேன்.
அதனால் தழல் போன்ற மேனி இறைவன் வெளிப்பட்டு நிற்பான்.
வானத்தில் கலைகளுடன் திகழும் திங்களைப் போல அவன்
ஊன் பொருந்திய உடலில் மகிழ்வுடன் வந்து தோன்றுவான்.
சஹஸ்ர தளக் கமலத்தில் பிராண வடிவமாக ஒளிவீசுவான்.
 
# 38. பிதற்று ஒழியேன்

பிதற்று ஒழியேன்பெரி யான்அரி யானை;
பிதற்று ஒழியேன் பிறவா உருவானைப்
பிதற்று ஒழியேன் எங்கள்பேர் நந்தி தன்னை;
பிதற்று ஒழியேன் பெருமைத்தவன் தானே .

பெரியவன், அரியவன் ஆகிய பெருமானை
வழியாடுவதை நான் கைவிடவே மாட்டேன்!

ஒரு தாயின் வயிற்றில் பிறவாதவனும்,
உருவம் உடையவும் ஆகிய பெருமானை
வழிபடுவதை நான் கைவிடவே மாட்டேன்!

என் பெருமானான இறைவனைச் சிவனை
வழிபடுவதை நான் கைவிடவே மாட்டேன்!

எப்போதும் அவனை வழிபடுவதாலேயே
பெரிய தவம் செய்தவன் ஆவேன் நான்!
 
# 39. ஈசன் அருள்

வாழ்த்த வல்லார் மனத்துள் உறுசோதியை,
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெருமான் என்று இறைஞ்சியும்
ஆத்தம் செய்து ஈசன் அருள் பெறலாமே.

திரு ஐந்தெழுத்தால் வணங்குபவர்களின் உள்ளத்தில்
இறைவன் அறிவின் பேரொளியாகத் தோன்றுவான்.
பாசங்களில் இருந்து நீங்கியவன் அந்தப் பெருமான்.
உயிர்களிடத்தில் மகிழ்ந்து திளைக்கும் ஈசன் அவன்.
அவனை ஏத்திப் புகழுங்கள்; அவனிடம் இறைஞ்சுங்கள்;
தன்னையே அவனுக்குத் தந்தால் அவன் நல்ல நண்பன் ஆவான்.
அப்போது அவன் அருளைப் பெறுவது நமக்கு மிகவும் எளிதாகும்.
 
# 40. சடம் செய்யான்!

குறைந்து அடைந்து ஈசன் குரை கழல் நாடும்
நிறைந்து அடை செம்பொன்னின் நேர்ஒளி ஒக்கும்
மறைஞ்சு அடம் செய்து வாழ்த்தவல் லார்க்குப்
புறம் சடம் செய்யான், புகுந்து நின்றானே.

தாழ்ந்தும், பணிந்தும், மிகுந்த விருப்பத்துடன்
ஒலிக்கும் கழல் அணிந்த ஈசனின் திருவடிகளை
அடைவதற்கு ஒவ்வொருவரும் விரும்ப வேண்டும்.
நிறைந்த செம்பொன்னின் ஒளியை உடையவன் சிவன்.
வஞ்சனையால் மறையாமல், குறும்புகள் செய்யாமல்,
வாழ்த்தும் மெய் அன்பர்களின் உடலைப் புறக்கணியாது
அன்புடன் அவன் அதில் புகுந்து நிற்பான் சிவபெருமான்.
 
# 41. இணங்கி நிற்பான்

சினம்செய்த நஞ்சு உண்ட தேவர் பிரானைப்
புனம்செய்த நெஞ்சிடைப் போற்ற வல்லார்க்கு,
கனம் செய்த வாள்-நுதல் பாகனும் அங்கே
இனம்செய்த மான் போல் இணங்கி நின்றானே.


பாற்கடலில் சீறிச் சினத்துடன் எழுந்த கொடிய நெஞ்சை தான் உண்டு
அருளியவன் தேவர்களின் தலைவன் ஆகிய நம் சிவபெருமான்.
கடின மனத்தைத் திருத்தி விளைநிலம் போல் ஆக்கி அவனை வணங்கினால்,
நாதஒலி காட்டும் அந்த மாதொரு பாகன், அந்தப் பண்பட்ட உள்ளத்தில்
பெண் மானைக் கண்ட ஆண் மான் போல இணங்கி நிற்பான்.
 
#42. இல்லறவாசிகளுக்கும் அருளுவான்

போய் அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயகன் நான்முடி செய்து அதுவே நல்கும்;
மாயகம் சூழ்ந்து வரவல்லார் ஆகிலும்
வேயன தோளிக்கு வேந்து ஒன்றுந்தானே.

சிவபிரானை அடைந்து தோத்திரம் செய்பவர் அடையும் பயன் இது.
நான்கு சிரங்கள் கொண்ட பிரம்மன் படைத்த பல பிறவிகள் எடுத்து
மாயையுடன் கூடிய இல்லற பந்தத்தில் உழல்பவர்களே ஆயினும்
அழகிய மூங்கில் போன்ற தோள்களை உடைய உமையின் நாதன்
அவர்களிடமும் அன்புடன் வந்து பொருந்துவான்.
 

Latest posts

Latest ads

Back
Top