• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

:welcome: back dear Sir. :)
True! Last year at about the same time I was requesting three gentlemen
to keep alive this thread after I planned to quit from the forum.
One of them were you and you responded positively! :)
Then came the whirlwind activity promoted by a friend
pushing the thread to the list of hot threads.
I am grateful to him.
Now this thread has become like a steady stream
flowing without gurgling or murmuring!
I saw that you had become busy in many threads in G.D!:thumb:
 
சுவர்க்கம், நரகம்!



சுவர்கமும் நரகமும் எப்படி வேறுபடும்?
அவற்றுள் என்ன பேதம் அறிவீரா?
சுவர்க்கமும் நரகமும் வேறுபடுவது
அவற்றுள் வசிக்கும் ஆத்மாக்களாலே!

சுவர்க்கம் நரகம் இரண்டையுமே
சுற்றி வந்து ஒருவர் பார்த்தபோது,
இரண்டில் உள்ளவர்களின் நிலையும்
இருந்தது ஒரு போலவே, விந்தை!

கையுடன் சேர்த்துக் கட்டி இருந்தனர்
கனத்த நீண்ட மரக் கரண்டி ஒன்று.
எதிரில் அறுசுவை உணவு இருந்தும்,
எடுத்துத் தாமே உண்ண இயலாது!

நரகத்தில் வசிப்போர் உணவின்றி
நானா இன்னல்கள் அடைத்தாலும்,
சுவர்க்கவாசிகள் உணவு உண்டு,
சுகமாகவே இருந்து வந்தனர்!

எப்படி இது சாத்தியம் என வியந்தால்,
இப்படித்தான் எனச் செய்து காட்டினர்.
சுவர்க்கவாசி ஒவ்வொருவரும் தம்
எதிரே உள்ளவருக்கு ஊட்டிவிட்டார்.

நரகவாசிகள் நவின்றதோ இப்படி!
“நான் ஏன் ஊட்டிவிட வேண்டும்?
பசியுடன் நான் இருப்பது போலவே,
பசியுடன் அவனும் இருக்கட்டுமே!”

நரகமும் சுவர்க்கமும் நமது மனங்களே!
நரகமும் சுவர்க்கமும் வெளியே இல்லை.
நாலு பேருக்கு உதவுவதுதான் சுவர்க்கம்.
“நான்! எனது!” என்றே வாழ்வது நரகம்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

https://visalramani.wordpress.com/



 
# 65. பராசக்திக்கு அருளினான்

மாரியும், கோடையும் வார்பனி தூங்க நின்று
ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து
ஆரியமும் தமிழும் உடனே சொலிக்
காரிகை யார்க்குக் கருணை செய்தானே.

ஊழிக்காலத்தில் மழைக் காலம், கோடைக் காலம்
இரண்டுமே லயப்பட்டு நிற்கும். ஏரிகள் வறண்டுவிடும்.
அந்தக் காலத்தில் சிவபெருமான் சக்தி தேவிக்கு
வடமொழி, தமிழ்மொழி என்ற இரண்டிலும்
ஆகமப் பொருளை உபதேசித்து அருளினான்.
 
# 66. அறிய இயலாது

அவிழ்க்கின்றவாரும், அதுகட்டு மாறும்
சிமிட்டலைப் பட்டு உயிர் போகின்றவாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே.

உயிர்களைப் பந்தத்திலிருந்து நீக்கும் முறையையும்,
உயிர்களை பந்தத்தில் கட்டும் முறையையும்,
இமைக்கும் தொழில் ஒழித்து உயிர் போகும் முறையையும்,
தமிழ்ச் சொல், வடசொல் இரண்டிலும் கூறி உணர்த்துகின்ற
சிவனை ஆகம அறிவால் மட்டும் அறிந்து கொள்ள முடியுமோ?
 
iv. குரு பாரம்பரியம்

# 67. நந்தி அருள் பெற்ற எண்மர்

நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி , வியாக்கிரமர்
என்ற இவர், என்னுடன் எண்மரும் ஆமே.

நந்தியின் அருள் பெற்ற குருநாதர்கள் எண்மர் ஆவர்.
சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் நால்வர் ஆவர்.
இவர்களோடு சிவயோக முனிவர், பதஞ்சலி, வியாக்கிரபாதர்
என்னும் மூவரையும் என்னையும் சேர்த்தால் எண்மர் ஆவோம்.
 
# 68. நந்தியின் அருள்

நந்தியின் அருளாலே நாதனாம் பேர் பெற்றோம்;

நந்தி அருளாலே மூலனை நாடினோம்;
நந்தி அருளாவது என் செயும் நாட்டினில்
நந்தி வழி காட்ட நான் இருந்தேனே.

சிவன் அருளால் குருநாதர் ஆகும் தகுதியை அடைந்தேன் .
சிவன் அருளாலே மூலாதாரத்தில் விளங்கும் மூர்த்தியை நாடினேன்.
சிவன் அருள் எதையும் சாதிக்க வல்லது இந்த பூவுலகினில்.
சிவன் வழி காட்ட மூலாதாரத்தில் இருந்து மேலே ஏறி
தலையின் மேல் சஹஸ்ரதளத்தில் நான் நிலை பெற்றேன்.
 
"You don't have to change that much for it to make a great deal of difference. A few simple disciplines can have a major impact on how your life works out in the next 90 days, let alone in the next 12 months or the next 3 years." -- Jim Rohn





 
An ocean is made up of tiny droplets of water.
A long lifespan is made up of tiny seconds and minutes.
A life is made up of small action, reaction and inaction!
 
Last edited:
# 69. மாணவர் எழுவர்


மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமனுத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவருமென் வழியாமே.

திருமந்திர உபதேசத்தை முறையாகப் பெற்ற என் மாணவர்கள் எழுவர்.
மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், காலாங்கி மற்றும்
கஞ்ச மலையான் என்னும் எழுவர் என் வழித்தோன்றிய மாணவர்கள் ஆவர்.
 
# 70. நால்வர் உபதேசம்


நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்
நால்வரும் நானா விதப் பொருள் கைக்கொண்டு
நால்வரும் நான் பெற்றதெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதரானார்களே.

சனகன் முதலிய நால்வரும் திசைக்கொருவர் என்று
நாலு திசைக்கும் நான்கு குரு நாதர்கள் ஆவார்கள்.
அவர்கள் நால்வரும் தாம் பெற்ற பல்வேறு அனுபவங்களை
மற்றவருக்கு எடுத்துரைத்து மேன்மையான குருநாதர் ஆயினர்.
 
கணக்குக் கேட்டால் பிணக்கு வரும். :argue:

உள்ளதைச் சொன்னால் உடம்பு எரியும்! :mad2:
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும். :whoo:

தன்னைப் போலவே பிறரையும் எண்ணுவர். :decision:

காளி கூளிக்குள் மறைந்து உறைவாள். :fear:

காளி மாறவோ மறையவோ மாட்டாள். :nono:

கண்டு களித்தேன் (!) ஓராண்டுக்குப் பின் :rolleyes:

மீண்டும் மகளிர் அணியின் கோரத் தாண்டவம்!! :scared:
 
# 71. சிவன் செய்த உபதேசம்

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை யிறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே.

சிவபெருமான் சிவயோக முனிவர், பதஞ்சலி முனிவர்,
வியாக்கிரபாத முனிவர் என்ற மூவர்க்கும், மற்றும்
சனகர் முதலிய நால்வருக்கும் உபதேசம் செய்தார்.

அது பிறப்பு இறப்பு என்னும் இரண்டையும் ஒழிக்கும்

பெருமை பெற்ற நல்ல நெறியாகும்.

ஆதவன், சந்திரன், அக்கினி என்ற முச்சுடர் வடிவான ஈசன்

நமக்கு குறைந்த பெருமையை அளிப்பவன் அல்லவே அல்ல.
 
# 72. கடன்கள் தடை படவேண்டாம்

எழுந்து நீர் பெய்யினும் எட்டு திசையும்
செழுந்தண் நியமங்கள் செய்யுமினென் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர் சடையோடே
அழுந்திய நால்வருக் கருள் புரிந்தானே.

"பெரிய மழை பொழிந்து எட்டு திசைகளிலும் நீர் எழுந்தாலும்
முன்னேறத் தேவையான கடமைகளை விடாது செய்யுங்கள்!" எனக்
கொழுவிய, பவழம் போன்ற, செவ்வொளி வீசும் குளிர்ந்த சடைமேல்,
அன்பு கொண்டு அதில் அழுந்தி இருந்த சனகர் முதலிய நால்வருக்கும்
ஈசன் அருள் புரிந்தானே.
 
திருமூலர் வரலாறு

# 73. ஆகமம் செப்பலுற்றேன்

நந்தி திருஅடி நான் தலைமேற்கொண்டு
புந்தியின் உள்ளே புகப்பெய்து, போற்றி செய்து
அந்தி மதி புனை அரனடி நாள்தொறும்
சிந்தை எய்து ஆகமம் செப்ப லுற்றேனே.

என் குருவாகிய சிவனின் இரு திருவடிகளை என் சிரமேற்கொண்டேன்.
அந்தப் பெருமானை என் அறிவில் நிறுத்தி நான் வணங்கி வழிபட்டேன்.
புருவ மத்தியாகிய முச்சந்தியில் பொருந்தியுள்ள மதியணி நாதனின் சிறந்த திருவடிகளை தியானித்து, இந்தத் திருமந்திரம் என்னும் இந்த ஆகம நூலைத் தொடங்குகின்றேன்.
 
# 74. தனிக் கூத்துக் கண்டேன்!

செப்பும் சிவாகமம் என்னும் அப்பேர் பெற்றும்
அப்படி நல்கும் அருள் நந்தி தாள் பெற்றத்
தப்புஇலா மன்றில் தனி கூத்துக் கண்டபின்
ஒப்பில் ஏழு கோடி யுகம் இருந்தேனே.

சிவாகமம் சொல்ல வல்லவன் என்ற தகுதியைப் பெற்றேன்.
அந்தத் தகுதியை அளித்த குருவின் திருவடிகளைப் பெற்றேன்.
தலை உச்சியில் உள்ள சிதாகாசத்தில், ஒப்பில்லாத சூரிய சந்திரர்களின்
ஒளிக் கதிர்களின் அசைவுகளை நான் கண்டு தரிசித்தேன்.
ஏழு ஆதாரச் சக்கரங்களும் விளங்குமாறு நெடுங்காலம் அமைந்திருந்தேன்.


உடலில் உள்ள ஏழு ஆதாரச் சக்கரங்கள் உள்ளிருந்து வெளிப்படும் கதிரவனின் கலைகளையும்,
வெளியிருந்து உள்ளே புகும் சந்திரக் கலைகளையும் இயக்குகின்றன.

சிவ யோகியர் ஒளிக்கதிர்கள் உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் இணைவதை அறிவர்.


உடலே ஆன்மா என்று மயங்கி நிற்கும் சராசரி மனிதர்கள் இதனை அறிய முடியாது.
 
[TABLE="width: 620"]
[TR]
[TD="align: justify"][TABLE="width: 580"]
[TR]
[TD]To live a creative life, we must lose our fear of being wrong.[/TD]
[/TR]
[/TABLE]
[/TD]
[/TR]
[TR]
[TD]- Joseph Chilton Pearce[/TD]
[/TR]
[/TABLE]
 
# 75. அருந்தவச் செல்வி

இருந்தவக் காரணங் கேளிந்திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியினாலே.

இங்ஙனம் நான் ஆதார சக்கரங்களில் பொருந்தி இருந்த காரணத்தைக்
கேள் இந்திரன் என்னும்
என் மாணவனே!

புவனங்களின் நாயகியாகிய பராசக்தி அங்கு பொருந்தி உள்ளாள்.
அந்த அருந்தவத்துக்கு உரிய செல்வியை பக்தியுடன் அடைந்து
வணங்கி விட்டு அவளுடன் நான் மீண்டும் திரும்பினேன்.


[சஹஸ்ர தளத்தில் உறையும் சிவனை நோக்கிச் செல்லும் பொழுது,
மூலதாரத்தில் மண்டலமிட்டு இருக்கும் குண்டலினி சக்தி நிமிரும்.
ஆதாரச் சக்கரங்கள் வழியே சிவத்தை அடையும். அதனுடன் இணையும்.
சமாதிக்குப் பின் மீளும் போது குண்டலினி சக்தியும் கீழே இறங்கி விடும்.]
 
# 76. பாராமுகம் உண்மையை உணர்த்தியது

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேனின்ற காலம்
இதாசனி யாதிருந் தேன் மனம் நீங்கி
உதாசனி யாதுடனே உணர்ந்தோமால்.

தத்துவத்தையும், முத்தமிழையும், வேதத்தையும்
பெரிதும் நுகர்ந்து அனுபவித்தேன் நான்.
அந்த வேளையில் உடலுக்கு இதமான உணவையும் கூட
உண்ணாமல் இருந்து வந்தேன் நான்.
மனம் தெளிந்து, விருப்பு வெறுப்பு என்ற இரண்டும் இல்லாமல்,
நான் உதாசினமாக இருந்ததால் உண்மைப் பொருளை உணர்ந்தேன் நான்.
 
# 77. திருக் கூத்தைக் கூற வந்தேன்!

மாலாங்க னேயிங்கு யான் வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளோடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே.

மாலாங்கன் என்னும் என்னுடைய மாணவனே!
இந்தத் தென் திசைக்கு நான் வந்த காரணம் இதுவே.
நீல நிற மேனியையும், சிறந்த அணிகலன்களையும் உடைய
சிவகாமி தேவியுடன், மூலாதாரத்தை இடமாகக் கொண்டு
சதாசிவன் நடத்தும், ஐந்தொழிற் கூத்தின் சிறப்பை விளக்கும்
வேதத்தை, எல்லா மக்களுக்கும் எடுத்துக் கூறுவதற்காகவே.

[உலகைப் படைக்கும் ஆற்றல் நீல ஒளியில் உள்ளது.
எனவே பராசக்தி தேவியின் நிறம் நீலம்.
சிவந்த ஒளி அறிவு மயமானது. அறிவு சிவ மயமானது.
இந்த இரண்டு ஒளிகளின் சேர்க்கையால் உலகம் படைக்க படுகின்றது.
ஐந்தொழில்கள் நடக்கின்றன. இதுவே யோகத்தின் ரகசியம் ஆகும்.]
 
# 78. பதம் சேர்ந்திருந்தேன்

நேரிழை ஆவாள் நிரதிச யானந்தப்
பேருடையாள்; என் பிறப்பு அறுத்து ஆண்டவள்;
சீருடையாள்; சிவன் ஆவடு தண்துறைச்
சீருடையாள் பதம் சேர்ந்திருந்தேனே.

சிறந்த அணிகலன்களை அணிந்தவள் பராசக்தி.
சிவானந்தவல்லி என்னும் பெயர் பெற்றவள்.
என் பிறப்பை நீக்கி என்னை ஆட்கொண்டவள்.
எல்லையில்லாத சிறப்பை உடையவள் அவள்.
ஜீவர்களைப் பக்குவம் அடையச் செய்வதற்காகச்
சிவன் எழுந்தருளிய தண்டில் சக்தியும் பொருந்தி இருப்பாள்.
அத்தகைய தேவியின் திருவடியில் நான் சேர்ந்திருந்தேன்.
 
# 79. நாமங்களை ஓதினேன்

சேர்ந்திருந்தேன் சிவமங்கை தன்பங்கனைச்
சேர்ந்திருந்தேன் சிவன் ஆவடு தண்துறை;
சேர்ந்திருந்தேன் சிவபோதியின் நீழலில்;
சேர்ந்திருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே.

உமையொரு பாகனாகிய சிவபெருமனைச் சேர்ந்து வழிபட்டேன்.
ஜீவர்களைப் பக்குவம் செய்யும் சிவபெருமான் உறையும்
தண்டின் உச்சியில் உள்ள சஹஸ்ர தளத்தில் சேர்ந்திருந்தேன்.
சிவம் என்னும் அறிவின் நீழலில் நான் சேர்ந்திருந்தேன்.
அவ்வமயம் நான் சிவன் நாமங்களை ஓதியபடி இருந்தேன்.
 

Latest ads

Back
Top