• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

# 176. இல்லை மரண வேதனை


உடம்போ டுயிரிடை விட்டோடும் போது
அடும்பரி சொன்றில்லை அண்ணலையெண்ணும்
விடும்பரி சாய்நின்ற மெய்ந்நமன் தூதர்
சுடும் பரிசத்தையுஞ் சூழகிலரே.



உயிர் உடலைப் பிரிவதை வெல்லும் வகை ஒன்றும் இல்லை.
இறைவனை நினைந்திருப்பதே ஒரே வழி ஆகும் யம தூதர்கள்
நமக்கு மரண வேதனையைத் தராமல் காத்துக் கொள்வதற்கு.


செல்வம் நிலையாமை முடிவு பெற்றது.
அடுத்து வருவது இளமை நிலையாமை.
 
# 177. இளமை நிலையாது


கிழக்கு எழுந்து ஓடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டும் தேறார் விழிஇலா மாந்தர்
குழக்கன்று மூத்து எருதாய்ச் சிலநாளில்
விழக் கண்டும் தேறார் வியன் உலகோரே.


கிழக்கில் உதிக்கும் இளம் சூரியன் மேற்கில்
விழுந்து மறைவதைக் கண்ட பிறகும் இளமையின்
நிலையாமையை உணரமாட்டர்கள் அறிவில்லாதவர்கள்.
இளம் கன்று முதிர்ந்து எருதாகி மூப்படைந்து மறைவதைக்
கண்ட பிறகும் வாழ்க்கை நிலையாமையை உணரமாட்டார்கள்.
 
# 178. சிவ ஒளி


ஆண்டுகள் பலவும் கழிந்தன அப்பனைப்
பூண்டு கொண்டாரும் புகுந்து அறிவார் இல்லை;
நீண்ட காலங்கள், நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடர் அறியாரே.

அறியாமையிலேயே பல ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
இறைவனே நம் அனைவருக்குத் தந்தையாவான்.
அவன் நினைவை நெஞ்சில் பூண்டு கொண்டு
அவன் ஒளியில் புகுந்து பேரறிவு பெறுபவர் இல்லை.
நீண்ட ஆயுள் பெற்று, நீண்ட நாட்கள் வாழ்ந்த போதிலும்,
தூண்டினால் ஒளியைப் பெருக்கும் விளக்குப் போன்ற
இறைவனை அறியாமலேயே உலகில் வாழ்கின்றனர்.
 
# 179. இளமையே நல்ல சமயம்


தேய்ந்து அற்று ஒழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்து அற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்து அற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்து உற்றுக் கொள்ளும் உயிர் உள்ள போதே.


சிறிது சிறிதாக இளமை தேய்ந்து மறைந்து விடும்.
அரிய கருமங்களை முதுமையில் செய்ய இயலாது.
எனவே உயிரும் உடலும் நன்றாக இருக்கும் போதே
கங்கை நதி அணிந்த சிவனை நன்றாக ஆராய்ந்து
அடைந்து அவனிடம் ஒன்றாகப் பொருந்தி விடுங்கள்.
 
# 180. முதுமை கொடுமை!


விரும்புவர் முன்னென்னை மெல்லியல் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக் கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்கும்
கரும்பொத்துக் காஞ்சிரங் காயுமொத் தேனே.

இளமையில் மெல்லியல் கொண்ட மங்கையர் ஒரு ஆணை
அடிக் கரும்பின் சாற்றைப் போல மிகவும் விரும்புவர்.
தாமரை மொக்குப் போன்ற நகில்களும் அழகிய நகைகளும் அணிந்த மாதர்
வயது முதிர்ந்த பிறகு அதே ஆணை எட்டிக் காயைப் போல வெறுப்பார்கள்.
 
# 179. இளமையே நல்ல சமயம்


தேய்ந்து அற்று ஒழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்து அற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்து அற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்து உற்றுக் கொள்ளும் உயிர் உள்ள போதே.


சிறிது சிறிதாக இளமை தேய்ந்து மறைந்து விடும்.
அரிய கருமங்களை முதுமையில் செய்ய இயலாது.
எனவே உயிரும் உடலும் நன்றாக இருக்கும் போதே
கங்கை நதி அணிந்த சிவனை நன்றாக ஆராய்ந்து
அடைந்து அவனிடம் ஒன்றாகப் பொருந்தி விடுங்கள்.

Human life comes with a date of delivery :baby:and a date of expiry. :rip:

All the more reason why we should stay focused of the :laser:

real purpose of a human life and not while away the

precious time in useless persuits which can be

safely classified as kaalakshepam!

( = Killing Time/destroying Time/ throwing away Time)
 
பிறவிப்பயன்





இறைவன் அளித்த இச்சிறந்த உடலின்
பிறவிப்பயன் என்ன என்று அறிவீரா?
மறைகள் புகழும் இறைவன் அவனை, இப்
பிறவியிலேயே அறிந்து கொள்வதே!

கயிலாயத்துறை காஞ்சன வண்ணனை
கணப்பொழுதேனும் காணாத கண்கள்,
மயில் தோகையில் மாண்புடன் விளங்கும்
பயனில்லாத கண்களைப் போன்றவே!

திருவுடன் கூடி உலகினைக் காக்கும்
திருமால் பெருமை கேளாத செவிகள்,
கம்மல், கடுக்கன், தோடு, ஜிமிக்கி என
கல் நகையணியும் வெறும் காதுகளே!

வனமாலை அணியும் மனம் கவர் கள்வன்
புனைந்த மாலையைப் பெற்று நுகராத,
இரு துவாரம் உடைய நாசியோ, காற்றை
இழுத்து விடுகின்ற இருமான் துருத்தியே.

கமல மலர் அமர்ந்து கருணை பொழியும்
கமலக் கண்ணியைப் பாடிப் பரவாத நாவு,
குவளை மலரிடை அமர்ந்து இரைச்சலிடும்
தவளையின் நீள் நாவுக்கு ஒப்பானதே!

எண் குணத்தானை மனத்தில் நினைத்து
எட்டு அங்கமும் நிலம்பட வணங்காத,
மண்டிய கர்வம் கொண்டவன் தலை
முண்டாசையே தாங்கும் மூளையை அல்ல!

கண் முன் அழகனாய் காட்சி அளிக்கும்
ஷண்முகன் திருவடி வணங்காத கைகள்,
இயக்கமும் இரத்தமும் இழந்து போன
குயவன் செய்த மண் கைகளை போன்றவே!

திருவருள் தேடி அவன் திருவடி நாடி
தீர்த்த யாத்திரை செல்லாத கால்கள்,
விண் முட்ட ஓங்கி வளர்ந்து நிற்கும்
மண்ணில் இருக்கும் மரத்தின் வேர்களே!

தாளாத காதலுடன் அவன் துதி கேட்டு
இளகாத நெஞ்சம் இரும்பு நெஞ்சமே!
கண்ணீர் மல்கி கனியாத மனங்கள்
மண்ணில் வாழ் விலங்குகள் மனமே!

பிறவிப்பயனை அறிந்தோம் இன்று,
பிறவிப் பயனுக்கு முயல்வோம் இன்றே!
“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல்,”
அரிதிலும் அரிது விடுதலை அடைதல்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
att00045.jpg


WHY ARE WE BORN?


Do you know the purpose of our being born as human beings? It is to help us realize God in this birth itself and not for any other purpose besides this.

The eyes of a man which do not find pleasure in looking at the lovely form of the glowing Shiva and praise Him are no better than the colorful but useless eyes found on the feathers of a peacock.

Th ears which do not find happiness in listening to the great stories of Lord Narayana and Lakshmi Devi are useful only for wearing the various ear ornaments – as if they were jewel stands!

The nose which has never once smelled the fragrance of the Thulasi nirmaaylam of Sri Krishna is nothing better than the bellows of a blacksmith – drawing in fresh air for melting iron.

The tongue that does not praise and sing the glory of the Lakshmi Devi seated on a lovely red lotus is nothing better than the tongue of a croaking frog – sitting amidst the lotus leaves.

The head which has never bent or touched the ground in a sashtaanga namaskaaram in front of a God is only a turban stand in a human form. It does not contain any brain inside .

The hands which never did anjali to the most handsome and delightful form of Lord Shanmukha are nothing better than the clay hands of the dolls made by a potter – devoid of blood circulation and the sense of touch.

The feet of a man who never went on a theertha yaatra are none better than the roots of the tall trees found in the forests.

The heart which does not melt with bakthi is but made of iron. The mind that does not spill over through the eyes as tears is none better than the mind of an animal.

Being born as a human being is a rare opportunity. Let us not waste this precious janma in vain.

Now that we know the real purpose of our janma and our existence, let us strive for the real purpose and not waste one minute of our lives in other useless pursuits.
 
Thousands of candles can be lighted from a single candle, and the life of the candle will not be shortened. Happiness never decreases by being shared.-Buddha
 
திருமூலரின் திருமந்திரம்

# 181. பல பருவங்கள்

பாலன், இளையன், விருத்தன் என நின்ற
காலம் கழிவன கண்டும் அறிகிலார்;
ஞாலம் கடந்து அண்டம் ஊடு அறுத்தான் அடி
மேலும் கிடந்தது விரும்புவன் நானே.

பாலன் என்றும் இளையவன் என்றும், முதியவன் என்றும்
பல பருவங்கள் உண்டு ஒரு மனிதனின் உலக வாழ்வில்.
இந்த உலகத்தைக் கடந்து அண்டங்களை ஊடறுத்து நிற்கும்
இறைவன் திருவடிகளிடம் மேலும் மேலும் அன்பு செய்வேன்.
 
# 182. வாழ்நாள் வீணாகலாகாது


காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாணாள் கழிவதும்
சாலும்; அவ்வீசன் சலவியன் ஆகிலும்
ஏல நினைப்பவர்க்கு இன்பம் செய்தானே.

காலையில் எழுவதும், மாலையில் உறங்குவதும்
வாழ்நாளைக் குறைக்கின்ற செயல் மட்டுமே ஆகும்.
வாழ்நாளை இங்ஙனம் வீணாக்கும் மனிதர்கள் மீது
ருத்திரன் சினம் கொள்வான் என்ற போதிலும் தன்னை
ஏற்ற முறையில் நினைப்பவருக்கு இன்பமே அளிப்பான்.
 
# 183. பரு ஊசி

பருஊசி ஐந்தும் ஓர் பையினில் வாழும்
பருஊசி ஐந்தும் பறக்கும் விருகம்;
பருஊசி ஐந்தும் பனித் தலைப்பட்டால்
பருஊசிப் பையும் பறக்கின்றவாறே.

பருத்த, கூர்மையான ஊசிகளைப் போன்றவை நம் ஐம்பொறிகள்.
தோல் பையைப் போன்ற நமது உடலில் இவை அமைந்துள்ளன.
பறந்து சென்று, இழிந்த பொருட்களை உண்ணும் காகத்தைப் போலவே உடலின் ஐம்பொறிகளும் இழிந்த பொருட்களையே நாடுபவை. சிரசில் உள்ள பனிப் படலம் போன்ற ஒளியில் அந்த ஐம்பொறிகள் சென்று அமைந்துவிட்டால், ஐம்பொறிகள் கொண்ட உடலின் உணர்வு அகன்று விடும்.
[ நின்மல சாக்கிரத நிலை ஏற்பட்டு உடல் உணர்வுகள் ஒழிந்துவிடும். ]
 



# 184. முப்பது ஆண்டுகள்

கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை
உள்நின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்
விண்உறு வாரையும் வினை உறு வாரையும்
எண் உறும் முப்பதில் ஈர்ந்தொழிந்தாரே.

குளிர்ந்த நிலவும், காயும் கதிரவனும், உலகத்தவர்
உடலில் இருந்து கொண்டு அவர்கள் வாழ்நாட்களை
அளந்து கொண்டு இருக்கின்றார்கள்.
இதை பலர் அறிவது கூட இல்லை.
விண்ணுலகப் பேறு அடையப் போகின்றவர்களையும்
வினைப் பயனாக மீண்டும் மண்ணுலகத்தையே
அடையப் போகின்றவர்களையும், சூரிய சந்திரர்
முப்பது ஆண்டுகளில் இனம் கண்டு கொண்டு விடுவர்.

{ இடகலை பிங்கலை நாடிகள் நன்கு அறியும்
ஆன்மீகத் தேடலில் ஈடுபடுபவர்களை இனம் கண்டு.
முப்பது வயதுக்குள் ஆன்மக் கலையை அறிந்து கொண்டவர்கள்
விண்ணுலக வாழ்வடைவர். மற்றவர் மண்ணுலக வாழ்வடைவர் }
 
# 185. திகைப்பு ஒழியாதவர்


ஒன்றிய ஈரெண் களையும் உடன் உற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்
சென்று அதில் வீழ்வார் திகைப்பு ஒழியாரே.


பதினாறு கலைகளும் பொருந்தி உடன் நிற்கும் போது
அவற்றின் வழியே சென்று மேலே விளங்கும்
ஈசனைச் சிறிதும் நினைப்பதில்லை நீசர்கள்.
ருத்திரன் சினம் அடைந்து மீண்டும் கருக்குழியில் வைத்த பின்னர்
மீண்டும் பிறவிக்கடலில் வீழ்வார் மன மயக்கம் ஒழியாதவர்கள்.
 
# 186. உண்மையை உணர்ந்தேன்

எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவது அறியாமல்
எய்திய நாளில் இருந்து கண்டேனே.

இளமை நீங்காது இருக்கின்ற போதே
பிரசாத நெறியில் மேலே சென்று,
சந்திர மண்டலம் விளங்கும் போது,
ஈசனை துதித்துப் புகழ்ந்து பாடுங்கள்.
இவ்வாறு அறிந்து கொள்ளவில்லை நான் பிராண இயக்கத்தை.
தியானத்தில் பொருந்தி இருந்து உண்மையை உணர்ந்து கொண்டேன்.
 
5. உயிர் நிலையாமை

# 187. தொழ அறியாதவர்

தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற எல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பு இன்றி எம் பெருமான் அடி ஏத்தார்
அழைக்கின்ற போது அறியார் அவர் தாமே.

பூங்கொம்பில் தழைக்கும் செந்தளிர்கள்,
மற்றும் அழகிய மலர்கள் போன்றவை.
இவை அனைத்துமே சருகுகளாக மாறிவிடும்.
இதைக் கண்ட பிறகும் கூட உயிர் உள்ளபோதே
மக்கள் இறைவன் திருவடிகளைத் தொழுவதில்லை.
யமனிடமிருந்து அழைப்பு வந்த பிறகு எங்கனம் வணங்குவர்?
 
# 188. உடலை ஓம்ப வேண்டும்

ஐவர்க் கொருசெய் விளைந்து கிடந்தது,
ஐவருமச் செய்யைக் காத்து வருவர்கள்
ஐவர்க்கு நாயகனோலை வருதலால்
ஐவருமச் செய்யைக் காவல்விட்டாரே.

பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன்
என்ற ஐவர் தத்தம் தொழில்களைச் செய்வதற்கு
அவர்களுக்கு விளைநிலமாக ஓர் உடல் கிடைத்தது.
அந்த ஐவரும் அந்த உடலை நன்கு ஓம்புவார்கள்
அதன் வினைப் பயன்களை அதற்கு ஊட்டி விடுவார்கள்.
இவர்களின் தலைவனாகிய சிவபெருமான் அந்த உடலின்
வினை நுகர்வு முடிந்தவுடன் இறுதிச் சீட்டு அனுப்புவான்.
அதன் பிறகு இந்த ஐவரும் அந்த உடலை ஓம்ப மாட்டார்கள்.
 
# 189. கோவில் மண்ணாகி விடும்

மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுஉள
அதுள்ளே வாழும் அரசனும் அங்கு உளன்
அதுள்ளே வாழும் அரசம் புறப்பட்டால்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.

மாயை என்ற மண்ணால் உருவாகிய உடல் ஒன்று உண்டு.
அதில் உயிர்ப்பை நிறுத்தவும் விடுக்கவும் இரண்டு இடங்கள் உள்ளன.
அந்த உடலில் பற்றுக் கொண்டு வாழும் ஜீவன் ஆகிய அரசன் அங்கு உள்ளான்.
ஆனால் அந்த அரசன் அந்த உடலை விட்டு நீங்கிய உடனேயே
கோவில் போன்ற அந்த உடல் மீண்டும் மண்ணாக மாறி விடும்.
 
# 190. வேதாந்தக் கூத்தன்

வேங்கடநாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத்துள்ளே விளையாடும் நந்தியை
வேங்கடம் என்றே விரகு அறியாதவர்
தாங்கவல்லார் உயிர் தாம் அறியாரே.

சிரசின் மேல் ஈசான திசையில் விளங்குபவன் சிவன்.
வேதம் கூறும் வாக்கின் வடிவான பிரமமும் சிவன்.
வெந்து அழியும் இடலில் தீயாக இருப்பவனும் சிவன்.
தம் உடம்பாக சிவன் இருக்கும் உண்மையை அறியாதவர்
உடலைத் தாங்கும் உயிரைப் பற்றியும் அறியாதவர் ஆவர்.
 

Latest ads

Back
Top