• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

திருமூலரின் திருமந்திரம்: இரண்டாம் தந்திரம்

#425. மூன்று சங்காரங்கள்

நித்த சங்காரம் உறக்கத்து நீள் மூடம்

வைத்த சங்காரமும் சாக்கிரதாதீதம் ஆம்
சுத்த சங்காரம் தொழில் அற்ற கேவலம்;
உய்த்த சங்காரம் பரன்அருள் உண்மையே.

உறக்கத்தின் போது எதையுமே அறிந்து கொள்ளாமல் இருப்பது நித்த சங்காரம் என்னும் தினப் பிரளயம். வைத்த சங்காரம் என்பது (சாக்கிரத்தை, சொப்பனம், சுஷுப்தி, துரியம், துரியாதீதம் என்ற) ஜீவனின் ஐந்து அவஸ்தைகளுடன் தொடர்பு இன்றி இருக்கும் நிலை. சுத்த சங்காரம் என்பது சகஜ நிலையிலேயே செயல் ஒன்றும் இல்லாமல் இருக்கும் யோகநிலை. சிவன் அருளுடன் பொருத்துவதே உய்த்த சங்காரம் ஆகும்.
 
426. மெய்யான சங்காரம்

நித்த சங்காரம் இரண்டு உடல் நீவுதல்
வைத்த சங்காரமும் மாயாள் சங்காரமாம்
சுத்த சங்காரம் மனாதீதம் தோய்வித்தல்;
உய்த்த சங்காரம் சிவன் அருள் உண்மையே.

நாள் ஒடுக்கம் என்ற நித்த சங்காரத்தில் ஜீவன் ஸ்தூல சூக்ஷ்ம சரீரங்களுடன் தொடர்பு கொண்டிருக்கும். இது மாயையுடன் பொருந்திய சங்காரம். (கனவு நிலயில் ஜீவன் ஸ்தூல உடலை விட்டு விலகி சூக்ஷ்ம உடலுடன் தொடர்பு கொள்ளும்). மனம் அதீதத்தில் நிலைத்து செயல் ஒன்றும் இல்லாது இருப்பது சுத்த சங்காரம். அப்போது ஜீவன் சிவன் அருளில் தோய்வதே உண்மையான சங்காரம் ஆகும்.
 
427. சிவமாகும் தன்மை

நித்த சங்காரங் கருவிடர் நீக்கினால்

ஒத்த சங்காரமுடலுயிர் நீவுதல்
வைத்த சங்காரம் கேவலமான்மவுக்
குய்த்த சங்காரஞ் சிவமாகு முண்மையே.

நாள் ஒடுக்கம் என்பது பிறவித் துயரை நீக்கும். மனம் கருவிகள் இவ்விரண்டின் ஒத்த ஒடுக்கத்தில் உயிரும் உடலும் பிரிந்திருக்கும் நிலை உண்டாகும். இந்தகைய ஒடுக்கம் ஆன்மாவின் தூய நிலை (சுத்த கேவல நிலை) எனப்படும். சிவத் தன்மையை அளிக்கும் ஒடுக்கமே உண்மையான ஒடுக்கம்.
 
திருமூலரின் திருமந்திரம்: இரண்டாம் தந்திரம்

#428. நான்கு வகை ஒடுக்கங்கள்

நித்த சங்காரமும் நீடு இளைப்பு ஆற்றுதல்
வைத்த சங்காரமும் மன்னும் அனாதியில்
சுத்த சங்காரமும் தோயாப் பரன் அருள்
வைத்த சங்காரமும் நாலாம் மதிக்கிலே.

நாள் ஒடுக்கம் என்னும் நித்த சங்காரம் ஜீவன் நீண்ட உறக்கத்தில் இருப்பது ஆகும். அமைத்து வைத்த சங்காரம் என்பது மனம் முதலிய கரணங்களை அடக்கி ஒடுக்குவது ஆகும். சுத்த ஒடுக்கம் கருவிகளின்றும் நீங்கி இருந்த போதிலும் பரன் அருளில் தோயாமல் இருக்கக் கூடும். கரணம் கருவிகளில் இருந்து நீங்கிப் பரமன் அருளில் தோய்ந்து நிற்பதே நான்காவது வகையான சங்காரம்.
 
#429. சுத்த சங்காரம்

பாழே முதலா எழும் பயிர் அப்பயிர்

பாழாய் அடங்கினும் பண்டைப் பாழாகா
வாழாச் சங்காரத்தின் மால் அயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும் அப்பாழிலே.

குணம், குறி இரண்டும் இல்லாதது சிவம். அந்தச் சிவத்தை முதலாகக் கொண்டு தோன்றும் ஆன்மா என்னும் பயிர். உடல், கரணம் இவற்றுடன் கூடிய பின்னர் அவற்றை விடுத்தாலும் ஆன்மா தன் முந்தைய நிலையை அடையாது. எனவே இந்த சங்காரம் முடிவைத் தராத ஒடுக்கம் ஆகும். இத்தகைய ஆன்மாக்கள் நான்முகன் திருமால் செயல்களுக்கு உட்படுவர். மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பார். பிறப்பு, இறப்பு என்று உழல்வர். ஆனால் ஆணவ மலம், வறுக்கப்பட்ட விதையின் முளைக்கும் திறனைப் போல அழிந்த பின்னர் அந்த ஆன்மப் பயிர் சிவத்தில் அடங்கி விடும்.
 
430. ஒளி மண்டலம்

தீய வைத்து ஆர்மின்கள் சேரும் வினைதனை

மாயவைத்தான் வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம் வைத்தான் கலந்து எங்கும் நினைப்பது ஓர்
ஆயம் வைத்தான் உணர்வு ஆர வைத்தானே.

உம்மிடம் சேருகின்ற வினைகளைச் சுட்டெரிக்கச் சிவனிடம் ஆர்வத்தைப் பெருக்குங்கள் உலகீரே! வினைகளை அழிக்கும் சிவன் வாழும் இடம் என்று ஒன்று உண்டு. அதுவே சஹஸ்ரதளம் ஆகும். சஹஸ்ர தளத்தை உடலில் வைத்தான் சிவன் . அத்துடன் கலந்து சிந்திக்க ஒளிக் கற்றைகளையும் அமைத்துள்ள சிவனின் கருணை தான் என்னே!
 

Sins accrue when actions, prescribed by the Shastras are not performed and when forbidden acts are resorted to. A potent antidote for both kinds of sins is the recitation of Lord’s Name.- Sri Sri Bharati Tirtha Mahaswamigal
 
திருமூலரின் திருமந்திரம்: இரண்டாம் தந்திரம்

#428. நான்கு வகை ஒடுக்கங்கள்


நித்த சங்காரமும் நீடு இளைப்பு ஆற்றுதல்

வைத்த சங்காரமும் மன்னும் அனாதியில்
சுத்த சங்காரமும் தோயாப் பரன் அருள்
வைத்த சங்காரமும் நாலாம் மதிக்கிலே.

நாள் ஒடுக்கம் என்னும் நித்த சங்காரம் ஜீவன் நீண்ட உறக்கத்தில் இருப்பது ஆகும். அமைத்து வைத்த சங்காரம் என்பது மனம் முதலிய கரணங்களை அடக்கி ஒடுக்குவது ஆகும். சுத்த ஒடுக்கம் கருவிகளின்றும் நீங்கி இருந்த போதிலும் பரன் அருளில் தோயாமல் இருக்கக் கூடும். கரணம் கருவிகளில் இருந்து நீங்கிப் பரமன் அருளில் தோய்ந்து நிற்பதே நான்காவது வகையான சங்காரம்.
 
#429. சுத்த சங்காரம்

பாழே முதலா எழும் பயிர் அப்பயிர்

பாழாய் அடங்கினும் பண்டைப் பாழாகா
வாழாச் சங்காரத்தின் மால் அயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும் அப்பாழிலே.


குணம், குறி இரண்டும் இல்லாதது சிவம். அந்தச் சிவத்தை முதலாகக் கொண்டு தோன்றும் ஆன்மா என்னும் பயிர். உடல், கரணம் இவற்றுடன் கூடிய பின்னர் அவற்றை விடுத்தாலும் ஆன்மா தன் முந்தைய நிலையை அடையாது. எனவே இந்த சங்காரம் முடிவைத் தராத ஒடுக்கம் ஆகும். இத்தகைய ஆன்மாக்கள் நான்முகன் திருமால் செயல்களுக்கு உட்படுவர். மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பார். பிறப்பு, இறப்பு என்று உழல்வர். ஆனால் ஆணவ மலம், வறுக்கப்பட்ட விதையின் முளைக்கும் திறனைப் போல அழிந்த பின்னர், அந்த ஆன்மப் பயிர் சிவத்தில் அடங்கி விடும்.
 
#430. ஒளி மண்டலம்

தீய வைத்து ஆர்மின்கள் சேரும் வினைதனை
மாயவைத்தான் வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம் வைத்தான் கலந்து எங்கும் நினைப்பது ஓர்
ஆயம் வைத்தான் உணர்வு ஆர வைத்தானே.

உம்மிடம் சேருகின்ற வினைகளைச் சுட்டெரிக்கச் சிவனிடம் ஆர்வத்தைப் பெருக்குங்கள் உலகீரே! வினைகளை அழிக்கும் சிவன் வாழும் இடம் என்று ஒன்று உண்டு. அதுவே சஹஸ்ரதளம் ஆகும். சஹஸ்ர தளத்தை உடலில் வைத்தான் சிவன் . அத்துடன் கலந்து சிந்திக்க ஒளிக் கற்றைகளையும் அமைத்துள்ள சிவனின் கருணை தான் என்னே!
 
I just realized that I have posted yesterday's quota of poems again.

I do not want to delete them. So here are the poems meant for today.

Sorry for the oversight since I forgot to note down yesterday's posting.
 
திருமூலரின் திருமந்திரம்: இரண்டாம் தந்திரம்

12. திரோபவம்


திரோபவம் என்பது மறைப்பது. ஜீவர்கள் தங்கள் வினைப் பயன்களை நுகரும்படிச் செய்வதற்காக அவர்கள் அறிவை மறைப்பது. வினைகளை அழிக்கும் இதுவும் ஓர் அருட் செயலே ஆகும்.
 
#431. மன மல மறைப்பு

உள்ளத்து ஒருவனை உள்உறு சோதியை

உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவனை
உள்ளமும் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உரு அறியாதே.

உயிருக்கு உயிராக இருப்பவன் சிவன். மனத்தில் பேரொளியாக விளங்குபவன். மனத்தை விட்டுச் சிறிதும் அகலாதவன். மனத்துடனேயே அவன் ஒன்றி இருந்த போதிலும் ஆன்மா அவனை மன மலம் என்னும் திரையினால் அறிய முடியாமல் போகின்றது.
 
432. முக்தியை அளித்தான்

இன்பப் பிறவி படைத்த இறைவனும்

துன்பஞ் செய் பாசத்துயருள் அடைத்தனன்
என்பில் கொளுவி இசைந்து உறு தோல் தசை
முன்பின் கொளுவி முடிகுவது ஆக்குமே.

இன்பம் பெறுவதற்காகப் பிறவியைத் தந்தான் ஈசன். துன்பம் தரும் பாசங்களையும் அவற்றுடனேயே அமைத்தான். அவன் எலும்பு, தசை, தோல் என்று வலிமை வாய்ந்த உடலைத் தந்தது சீவர்களைத் தூய்மைப்படுத்தி அவர்களுக்கு முக்தி அருள்வதற்காகவே.
 
#433. யார் அறிவார் ?

இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
மறையவன் வாய்த்த பரிசு அறியாரே.

உருத்திரன், திருமால் , இனத்தைத் தரும் நான்முகன் என்னும் மூவரும் ஒன்றாக வந்து ஈசன் அளித்த உடலில் மறைவாக இருப்பார்கள். இருந்த போதிலும் அவர்களும் அவன் அருட் செயல்களை அறிய மாட்டார்கள்.
 
#434. வான் மண்டலம்

காண்கின்ற கண்ஒளி காதல் செய் ஈசனை

ஆண் பெண் அலி உருவாய் நின்ற ஆதியை
ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கைச் செயல் அணையரே.

கண்களின் ஒளியாக இருப்பவன் ஈசன். ஆணாகப் பெண்ணாக அலியாக விளங்குபவன். ஆதியாகிய சிவன் அவனை அறிய வழி ஒன்று உண்டு. உணவு உண்ணப் பயன் படும் நாவின் வழியே மனத்தைச் செலுத்த வேண்டும். தலை உச்சியில் உள்ள வான் மண்டலத்தில் உள்ள தடாகத்தில் அதைக் கொண்டு சென்று பொருத்த வேண்டும்.
 
Last edited:
திருமூலரின் திருமந்திரம்: இரண்டாம் தந்திரம்

#435. அண்டகோசம்

தெருளும் உலகிற்கும் தேவர்க்கும் இன்பம்

அருளும் வகை செய்யும் ஆதிப் பிரானும்
சுருளும் சுடர் உறு தூவெண் சுடரும்
இருளும் அற நின்று இருட்டறையாமே.

தெளிவு பொருந்திய உயிர்களுக்கும் தேவர்களுக்கும் இன்பம் தருபவன் சதாசிவன். அவனே ஜீவர்களின் அண்ட கோசத்தில் இருந்து கொண்டு வலிய இருளாக உண்மையை மறைக்கவும் செய்வான்.
 
436. மறைக்கும் சக்தி

அரைக்கின்ற அருள் தரும் அங்கங்கள் ஓசை

உரைக்கின்ற ஆசையும் ஒன்றோடு ஒன்று ஒவ்வாப்
பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்
கரக்கின்றவை செய்த காண் தகையானே.

உலகில் பல தத்துவங்கள், தன்மாத்திரைகள், வேறுபட்ட ஆசைகள், மாறுபட்டு விளங்கும் பல வடிவங்கள் என்று நிறைந்துள்ளன. உலகம் முழுவதையும் தானாக மறைக்கின்ற ஈசனே மறைக்கின்ற சக்தியை அருள்பவன் ஆவான்.
 
#437. அக வழிபாடு

ஒளித்துவைத் தேன்உள் ஊற உணர்ந்து ஈசனை

வெளிப்பட்டு நின்று அருள் செய்திடும் ஈண்டே;
களிப்பொடும் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட்டு இரைஞ்சினும் வேட்சியும் ஆமே.

உள்ளத்தில் உணர்ந்து நாம் சிவனை வழிபட்டாலும், அவன் காட்சியில் வெளிப்படுவான். தன் அருளைப் பொழிவான். உள்ளத்து அன்பு என்பது வெளிப்படும் வண்ணம் நாம் வெளிப்படையாக அவனை வழிபட்டால் அதுவும் அவனுக்கு உவப்பையே அளிக்கும்.
 
திருமூலரின் திருமந்திரம்: இரண்டாம் தந்திரம்

#438. மகேசுவரன் மறைப்பான்

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்

சென்றங்கு இயங்கி அரன் திருமாலவன்
நன்றது செய்யும் மலர்மிசை அயன்
என்றிவராகி இசைந்திருந்தானே.

அனைத்தையும் மறைத்து நிற்கின்றவன் மகேசுவரன். அவன் கீழ் முகமாகச் செயல் புரிவான். அவன் உருத்திரன், திருமால், கமல மலரில் அமர்ந்து நன்மைகள் செய்யும் பிரமன் என்னும் மூவர்களுடனும் கலந்து விளங்குகின்றான்.
 
#439. மனமாசு நீங்க வேண்டும்

ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தின்
இருங்கரை மேல் இருந்து இன்புறநாடி
வரும் கரை ஓரா வகையினில் கங்கை

அருங்கரை பேணில் அழுக்கு அறலாமே.

மன மாசு நீங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? பாசத்தை ஒடுக்க வேண்டும்; சிவன் என்னும் பெருங்கரையின் மீது அமர வேண்டும்; ஆன்ம அனுபவத்தை நாட வேண்டும்; பிறவியை நாடாமல் இருக்க வேண்டும்; தூய வான் கங்கையுடன் பொருந்த வேண்டும்.
 
#440. உயிர்கள் அறிய இயலாது

மண் ஒன்று தான் பல நற்கலம் ஆயிடும்

உள் நின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே;
கண் ஒண்டு தான் பல காணும் , தனைக் காணா
அண்ணலும் அவ்வண்ணம் ஆகி நின்றானே.

ஒரே மண் பலவிதக் கலங்களாக மாறிவிடும். உடல்களில் காணப் படும் பேதங்களுக்கும் காரணம் ஆனவன் ஈசன் ஒருவனே. கண்களால் வெளியே உள்ள எல்லாவற்றையும் காண இயலும் ஆயினும் தன்னைத் தானே காண இயலாது. அது போன்றே உயிர்களின் வேறுபாடுகளுக்குக் காரணமான அந்த ஒருவனை உயிர்களால் காண முடியாது.
 

Latest ads

Back
Top