• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

திருமூலரின் திருமந்திரம்: இரண்டாம் தந்திரம்

#390. சிவனே பிரமன் ஆவான்

ஓங்கு பெருங்கலடலுள்ளுறு வானோடும்
பாங்கார் கயிலைப் பராபரன் தானும்
வீங்குங் கமலா மலர்மிசை மேலயன்
ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந்தானே.

விரிந்த கமல மலர்மீது அமரும் நான்முகன் உடலுடன் உயிரைப் பொருத்தும் செயல் செய்கின்றான். இதன் தன்மையை ஓங்கிய கடற் பகுதியாகிய சுவாதிஷ்டானத்தில் உள்ள திருமாலுடன், தலையின் மீதுள்ள வெண்மையான ஒளியில் விளங்கும் சிவபெருமானும் நன்கு அறிவான்
 
391. சிவனே அனைத்துமாவான்

காரணன் அன்பில் கலந்து எங்கும் நின்றவன்
நாரணன் நின்ற நடுவுடலாய் நிற்கும்
பாட அணன்அன்பின் பதம் செய்யும் நான்முகன்
ஆரணமாய் உலகாய் அமர்ந்தானே.


அன்புடன் அனைத்துப் பொருட்களிலும் கலந்து உறைபவன் சிவபெருமான். அவனே படைப்புக்குக் காரணம். அவனே உடலின் நடுப் பகுதியில் நாபிப் பிரதேசத்தில் திருமாலாகவும் அமர்ந்துள்ளான். அவனே உலகங்களைப் படைக்கும் பிரமனாகவும் உள்ளான். அவனே சொற் பிரபஞ்சமாகவும் பொருட் பிரபஞ்சமாகவும் விளங்குகின்றான்.
 
392. சிவன் துணை பயன் தரும்!

பயன்எளி தாம் பரு மாமணி செய்ய
நயன்எளிது ஆகிய நம்பன் ஒன்று உண்டு
அயன்ஒளி யாய் இருந்து அங்கே படைக்கும்
பயன்எளிது ஆம் வயணம் தெளிந்தேனே.

எளிமையாக நன்மைகள் செய்யும் சிவபெருமான் ஒருவன் உளான். பயனை எளிதாக்கும் ஒரு பெரிய மாணிக்கத்தைப் போன்றவன் அவன். அவனே மூலாதாரத்தில் இருந்து கொண்டு
நான்முகனுக்கு ஒளியை அளித்துப் படைப்புத் தொழிலில் உதவுகின்றான். அவன் துணையைப் பெற்றால் பயன்களை எளிதாக அடைந்து விடலாம் என்று நான் உணர்ந்து கொண்டேன்.
 
Posting in the new blog will continue as fast I can manage typing
both Meendun NaaraayaNeeyam and Thirumanthiram 3.

God give me the budhdhi to understand the thirumanthiram easily
and shakthi and yukthi to type on effortlesly and keep in good health. :pray:
 
#393. முத்தொழில்கள்

போக்கும் வரவும் புனிதன் அருள் புரிந்து
ஆக்கமும் சிந்தையது ஆகின்ற காலத்து
மேக்கு மிகநின்ற எட்டுத் திசையோடும்
தாக்கும் கலக்கும் தயாபரன் தானே.


படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களையும் உள்ளத்தில் எண்ணிப் பார்க்கும் போது மூலாதாரத்திலிருந்து எழுகின்ற சிவந்த ஒளி மேலே சென்று சிரசைச் சுற்றியுள்ள எட்டு திசைகளிலும் பரவும். அப்போது அங்கே சிவன் வெளிப்படுவான்
 
#394. இன்பம் தருவான்

நின்று உயிர் ஆக்கும் நிமலன் என் ஆருயிர்
ஒன்று உயிர் ஆக்கும் அளவை உடல் உற
முன்துயர் ஆக்கும் உடற்கும் துணையதா
நன்று உயிர்ப்பானே நடுவு நின்றானே.

குற்றமற்றவன் சிவபெருமான். அவன் உலக உயிர்களுடன் பொருந்தி அவற்றைப் பக்குவம் அடையச் செய்வான். அவன் என் அரிய உயிரை என் உடலில் பொருந்தினான். முன்பு துன்பம் தந்தது இந்த உடல். இன்று அவன் நடுநாடியின் உயிர்ப்பாக இருந்து கொண்டு நன்மை செய்கின்றான்.
 
#394. உடலும் அவனே!

ஆகின்ற தன்மையின் அக்கு அணி கொன்றையன்
வேகின்ற செம்பொன்னின் மேல் அணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்து உடலாய் உளன்
ஆகின்ற தன்மை செய ஆண் தகையானே.

உயிரைச் சிவமாகி ஆள்பவன் சிவன். உருத்திராக்கம் அணிந்து கொன்றை மலர் சூடியவன் சிவன். உருக்கிய பொன் நிற மேனியன். பிறக்கும் எல்லா உயிர்களின் உடலாகவும் அவனே உள்ளான்.
 
“One of the greatest gifts you can give to anyone is the gift of attention” -- Jim Rohn


It is the ONLY gift all people have sworn
never ever give to anyone known to them ! :(

It does cost money or even energy.
It may cost time and patience utmost.

It makes everyone happy-whether old or young.
But everyone wants to talk and no one wants to listen!

 
[h=1]Types of Listening[/h]

We all appear to listen attentively to what is being told to us. But surprisingly we hardly listen to 50% of what is being told to us and later on hardly remember 50% of what we had listened to!

This is due to the defective listening techniques we employ. There are several defective listening techniques like ‘false listening’, ‘initial listening’ and ‘partial listening’. On the other hand ‘good listening’ can be either ‘full listening’ or ‘deep listening’.

False listening occurs when a person pretends to listen keenly, but actually nothing gets registered in his mind. People who are known to indulge in this kind of listening are the Royalty, Politicians, Sports stars, Film stars and famous persons in any other field. They are forced to listen to a lot of talk, from persons whom they may never meet again! So they need not listen to nor remember, what they are being told!

Initial listening is when we listen to the opening remark, immediately form an opinion about it and wait for a chance to voice it. We stop listening to everything that follows the initial remark.

Partial listening is what most of us do most of the time! We listen a little and soon get diverted or distracted and lose the continuity.

Full listening is the most active form of listening. The listener pays close attention to the speaker and understands thoroughly what is being conveyed to him.

Deep listening is, when we not only listen to the words being spoken, but also understand the underlying emotions. We watch the body language of the speaker. We grasp the needs, preferences, biases, values and beliefs of the speaker. Deep listening is called as “the whole person listening”. It is also the wholesome listening technique.

It is said that, “The best gift you can ever give a woman is your undivided attention.” This is the gift every woman seeks for, all her life, but sadly very few ever receive it!

Visalakshi Ramani
 
[h=1]Selective Listening[/h]

There are many similarities in the ways the brain processes the sound signals and the visual images. But there are many differences too. The main difference relates to the attention we pay.

We have more control on what we want to see than what we want to hear. Why?

We can turn our head and look at the object of interest without any disturbances. But it is difficult to listen just to the sound that interests us. We always hear overlapping and conflicting sounds which cause chaos. But this problem is settled in a unique way!

We can mentally choose to focus on one sound and block out the other conflicting sounds. This ability is called ‘Selective listening’. When two different stories are read out, in the two ears of a person simultaneously, he can decide to hear any one of them fully and just skip the other willfully.

We communicate through languages which have both sound and meaning. We understand coherent and meaningful words but not disconnected and meaningless chatter. Even in a crowded room filled with multi-lingual-babble, we can hear our name being called out softly, by some one, somewhere in the crowd.

Selective listening is an everyday business for almost every one. A person immersed in a T.V show is virtually deaf to all the other sounds around him. Have you ever watched a person working on a P.C? He is in the deepest form of meditation—lost to the entire external world! Many domestic quarrels result from this kind of selective listening.

It is amazing to watch students who use music as a barrier to all the other sounds. Have you watched a person studying hard for an upcoming exam, while music is played around him, round the clock? The music does not disturb his study but helps to keep off all the other unpleasant and disturbing sounds.

Diamond cuts a diamond. So too a pleasant sound cuts off an unpleasant sound!

Visalakshi Ramani
 
திருமூலரின் திருமந்திரம்: இரண்டாம் தந்திரம்

#396 to #398

#396. மாறுபட்ட பயன்கள்

ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்;
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்;
பருவங்கள் தோறும் பயன் பல ஆன;
திருஒன்றில் செய்கை செகம் முற்றும் ஆமே.

சிவனும் சிவையும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் விளையாடல்களை விளையாடினர். அவ்விருவர் விளையாடும் விளையாட்டு அனைத்தையும் செய்ய வல்லது. சூரியனின் கதி மாறினால் பருவங்கள் மாறிவிடும். இறைவனின் அருட்தன்மை மாறுபடுவதால் ஜீவன் அடைகின்ற பக்குவம் மாறுபடும். அதனால் விளைகின்ற பயன்களும் வேறுபடும்.
 
#397. முத் தொழில்களைச் சிவன் அறிவான்

புகுந்துஅறிவான் புவனாபதி அண்ணல்

புகுந்து அறிவான் புரி சக்கரத்து அண்ணல்
புகுந்து அறிவான்மலர் மேல் உரை புத்தேள்
புகுந்து அறியும் முடிக்கு ஆகி நின்றாரே.

சிவபெருமான் உலகத்தின் தலைவனாகிய ருத்திரனிடம் புகுந்து உலகை அழிக்கும் செயலை அறிந்துள்ளான். சக்கரத்தை ஆயுதமாகக் கொண்ட திருமாலிடம் பொருந்தி அப்பெருமான் உலகைக் காக்கும் தொழிலை அறிந்துள்ளான். சுவாதிஷ்டானத்தில் கமலத்தில் வீற்றுள்ள பிரமனிடம் பொருந்தி படைப்புத் தொழிலையும் அவன் அறிந்துள்ளான். அவ்வாறு அவன் அறியும்படி அந்த மூவரும் அவன் ஆளுகைக்கு உட்பட்டே அந்தத் தொழில்களை நிகழ்த்துகின்றனர்.
 
#398. அதிகார மலம்

ஆணவச் சத்தியும் ஆம் அதில் ஐவரும்

காரிய காரன் ஈசர் கடைமுறை
பேணிய ஐந்தொழிலால் விந்துவில் பிறந்து
ஆணவம் நீங்காதவர் எனல் ஆகுமே.

ஆணவ மலத்தை உடையவர்கள் நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்னும் ஐவர். தகுதியால் மேலே உள்ள ஈசனைக் காரண ஈசன் என்றும் கீழே உள்ள ஈசனைக் காரிய ஈசன் என்றும் கூறுவர். சுத்த மாயையில் தோன்றி ஐந்தொழில்கள் புரியும் இவர்கள் ஆணவ மலம் நீங்காதவர்கள் என்றே கருதப் படுவர்.
 
திருமூலரின் திருமந்திரம்: இரண்டாம் தந்திரம்

#399. சிவசக்தியரின் விளையாட்டு

உற்ற முப்பால் ஒன்று மாயாள் உதயமாம்
மற்றைய மூன்றும் மாயோதயம் விந்து
பெற்றவன் நாதம் பரையில் பிறத்தலால்
துற்ற பரசிவன் தொல் விளையாட்டிதே

சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை என மாயை மூன்று வகைப்படும். சாதாக்கியம், மகேசுவரம், சுத்த வித்தை என்ற மூன்றும் மாயையின் காரியங்கள் ஆகும். பரையிலிருந்தே தோன்றும் நாதமும், விந்துவும். பரையுடன் சிவன் ஆடுகின்ற விளையாட்டே படைப்பு ஆகும்.
 
#400. மாயா சக்தி

ஆகாயம் ஆதி சதாசிவர் ஆதி என்
போகாத சத்தியுள் போந்து உடன் போந்தனர்
மாகாய ஈசன் அரண் மால் பிரமனாம்
ஆகாயம் பூமி காண அளித்தலே.

வான் முதலான பூதங்கள் ஐந்து. இவற்றை இயக்குகின்ற சதாசிவன் போன்றவர்களும் ஐவர் ஆவர். மாயையில் பொருந்தி, இவ்வைவரும் என் உடலிலும் உயிரிலும் தொழில் புரிகின்றார்கள். வான் மண் போன்ற உலகங்களைத் தோன்றுமாறு செய்பவர்களும் இந்த ஐவரே!
 
#401. ஐந்தொழில்கள்

அளியார் முக்கோணம் வயிந்தவம் தன்னில்
அளியார் திரிபுரையாம் அவள் தானே
அளியார் சதாசிவம் ஆகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்தும் செய்வாளே.

தேவியின் முக்கோணப் பீடம் அருளால் நிறைந்தது. அதில் உள்ள விந்துவின் மையத்தில் விளங்குவாள் அருள் மிகுந்தவளும், மண்டலங்களின் தலைவியும் ஆகிய சக்தி தேவி. அருள் மிகுந்த சதாசிவ மூர்த்தியிடம் பொருந்தி இருப்பவளும் அவளே. ஐந்தொழில்களைச் செய்பவளும் அவளே.
 
திருமூலரின் திருமந்திரம்: இரண்டாம் தந்திரம்

402. எல்லாமாக இருப்பவள்

வாரணி கொங்கை மனோமனை மங்கலி
காரணி, காரியம் ஆகக் கலந்தவள்;
வாரணி ஆரணிவானவர் மோகினி
பூரணி போதாதி போதமும் ஆமே.

கச்சை அணிந்த ( சூரியன் , சந்திரன் என்னும்) இரண்டு ஸ்தனங்களை உடைய மனோன்மணி ஆவாள் சதாசிவனின் நாயகி; அவளே மங்கலப் பொருள்; அவளே எல்லாவற்றுக்கும் காரணம், அவளே காரியமாகிய ஐந்தொழில்களில் கலந்தவள்; அவளே ஓங்காரத்தின் வடிவம்; அவளே வேதப் பொருள்; அவளே தேவர்களையும் மயக்கும் திரோதான சக்தி; அவளே அறிவாகவும் (ஞானமாகவும்) பேரறிவாகவும் (அனுபவ ஞானமாகவும்) விளங்குபவள்.
 
403. சதாசிவனே அனைத்து மூர்த்திகள்

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங்கு இயங்கும் அரன் திருமாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேல் அயன்
என்ற இவராக இசைந்திருந்தானே.

மகேசுரன் சதாசிவத்துடன் கலந்து இருப்பான். அவனே கீழே சென்று தத்தம் தொழில்களைப் புரியும் உருத்திரனாகவும், திருமாலாகவும் ஆண் பெண்களின் சேர்க்கையைச் சுவாதிஷ்டானச் சக்கரத்தில் இருந்து கொண்டு செய்யும் நான்முகனாகவும் பொருந்தி இருக்கின்றான்.
 

Latest ads

Back
Top