• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

I read this Thirumanthiram you have quoted, which implies "VaishnavaTantric" practised by our ancient saints is more suitable for women who have large responsibilities and stress now a days and could not practise Dhyanam. They are power house of spiritual energy and if they invoke their pleasure points to induce spiritual thrust from Kundalini to Sahasraram they will attain enormous power in that what they think becomes true, what they talk becomes a far sight, and what they do become legendary in this material world.Biologically it is possible for only women folk and men cannot practice due to dangerous ramifications of social, physical and emotional impediments. The women folk need not change themselves for spiritual isolation and they can practice as they are and use its benefits to their family welfare in particular and for the society in general.But there is a social taboo and ignorant people will impair their growth not knowing they(people) are committing a sin for the cause.

I do not want to indulge in debates with enlightened persons who have reached that state of ONENESS

that they do not or can not see any difference between EVEN Saivism and Vaishnavism.

Anyone who thinks he / she has mastered anything will STOP learning any more.

I want to BE a student always - as far as learning is concerned.

I believe that "கல்வி கரை இல; கற்பவர் நாள் சில1"

P.S ( Post Script/ Parting Statement / Parting Shot)

வழிப் போக்கன் என்றால் என்ன மட்டமா?

வழி தவறியவன் தான் மட்டமானவன்!


வள்ளிக் கணவன்பேரை
வழிப் போக்கன் சொன்னாலும்

உள்ளம் குழைவதை அறிவீர் - நம்
ஊனும் உருகுவதை உணர்வீர்!
 
Last edited:
When Grammar goes on a long vacation ( on an one way trip never to return?) :rolleyes:

along with good manners and good sense it is best to bid it 'adieu' and mind one's own business! :wave:

That is precisely what I am planning to do. :)

I have miles to go and mountains to move!!! :ballchain:
 
Thirumanthiram is the essence of Saivism.

Thirumoolar was one of the 18 sidhdha purushaas and a great Sivayogi.

He teaches us how to obtain total liberation and merge with Siva inseparably.

To my knowledge Thirumoolar does NOT talk about any pleasure points.

He advises us to direct the basic feeling of lust towards the Higher Reality

after converting it into deep and unflinching love for God - namely Siva.

Women and men must be able to dispense the power they get from serious saadhana.

Otherwise they might become mentally deranged like a zero watts bulb through the energy meant for a 1000 Watts bulb is passed.


Living a pure life and remembering the name of God always by synchronizing it with our very breath is sure to take us nearer to Him every day.

Who does not like a person who keeps calling his/ her name with deep affection day in and day out?

Higher spiritual saadhanas are not for married women leading family life!

NOW I understand the full impact of what my Yoga sathguru meant when he said these highlighted words! :hail:
 
I know ONLY one king among men who would stoop so low as to assume
the name of a woman and pick up quarrels or try to provoke me into a quarrel.

I will recognize this SikhaNdi who is also gamaNdi from miles away.

A very good try but gone with the wind! :(

But wolves can't always pick on lambs with stories such as
"If you didn't do it your grand mother must have done it! :rolleyes:

It is the greatest O' Henry twist in real life, when people want to boast
of their deep knowledge often end up underlining their own ignorance! :tsk:
 
#1100. சிவத்தை வெளிப்படுத்துவாள்

கோலக் குழலி, குலாய புருவத்தள்,
நீலக் குவளை மலரன்ன கண்ணினாள்,
ஆலிக்கும் இன்னமுது, ஆனந்த சுந்தரி
மேலைச் சிவத்தை வெளிப்படுத்தாளே.


அழகிய கூந்தலை உடையவள்; நன்கு விளங்குகின்ற புருவத்தினள்; கருங்குவளைக் கண்ணினாள்; இனிய அமுதினை நிகர்த்தவள்; ஆனந்தம் நிரம்பிய அழகி. இவள் மேலான சிவத்தை நமக்கு வெளிப்படுத்துவாள்.

#1101. அடியவரை ஆட்கொள்ளுவாள்


வெளிப்படு வித்து விளைவு அறிவித்துத்
தெளிப்படு வித்து என் சிந்தையின் உள்ளே
களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி
ஒளிப்படு வித்து என்னை உய்யக் கொண்டாளே.


தேவி எனக்குச் சிவத்தை வெளிப்படுத்தினாள். அதனால் விளையும் பயனையும் அறிவித்தாள் . உள்ளத் தெளிவைத் தந்தாள் . என் சிந்தையில் களிப்பை ஏற்படுத்தினாள். ஒளிக் கதிர்களுடன் விளங்கும் சிவனை மேலும் ஒளி மிகச் செய்தாள். எளியோனை உய்வித்து ஆட்கொண்டாள்.

#1102. அனைத்தும் தாங்குபவள் அவளே


கொண்டனள் கோலம் கோடி அனேகங்கள்
கண்டனன் என்னென் கலையின் கண் மாலைகள்
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும்
தண்டலை மேல் நின்ற தையல் நல்லாளே.

சிரசின் உச்சியில் உள்ள குளிர்ந்த சந்திர மண்டலத்தில் விளங்குபவள் தேவி. பல கோடி சீவர்களிடம் பொருந்திப் பல கோடி உயிர்களைத் தாங்குகின்றாள் அந்தத் தேவி. பதினாறு கலைகளையும் வரிசையாகத் தன்னிடம் பொருத்திக் கொண்டுள்ளாள். வானத்தில் விரிந்து ஒளி வீசும் சூரியன், சந்திரன், அக்கினி என்ற மூன்று ஒளிரும் பொருட்களையும் படைத்தவள் அவளே.

#1103. இனிப் பிறவி இராது


தையல் நல்லாளை, தவத்தின் தலைவியை ,
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப்
பைய நின்று ஏத்திப் பணிமின், பணிந்தபின்
வெய்ய பவம் இனி மேவகி லாவே.


தையல் நாயகி ஆகிய தேவி துறவிகளுக்கு அருள் புரிபவள்; உலகத்தோரின் மயக்கத்தைத் தன் அருட் கண்களால் அகற்றுபவள்; அவளை மெல்ல நின்று துதித்துப் பணியுங்கள். அங்கனம் பணிந்தவரைக் கொடிய பிறவிப் பிணி இனிமேல் அண்டாது.

#1104. உள்ளத்தில் உள்ளாள்


வேய் அன தோளி, விரைஉறு மென்மலர்
ஏய குழலி, இளம் பிறை ஏந்திழை,
தூய சடைமுடிச் சூலினி, சுந்தரி,
ஏய்எனது உள்ளத்து இனிது இருந்தாளே.


தேவி மூங்கில் போன்ற அழகிய தோளை உடையவள். சந்திர மண்டலத்தில் விளங்குபவள். பொருந்திய குழலைப் போன்ற சித்திரணி நாடியில் விளங்குபவள். இளம் பிறையை முடிமேல் அணிந்தவள். தூய கதிர்களைச் சடைமுடியாகக் கொண்டவள். அவள் சூலினி. அவள் சுந்தரி. அவள் என் உள்ளதைத் தன் இருப்பிடமாகக் கொண்டு அமர்ந்திருப்பாள்.
 
Too much of humility too is a sort of ego in disguise.To accept something it is enough we have little knowledge, but not to accept something requires a lot of knowledge. A grammar competency devoid of awareness of God will be a language of an infant.
 
[h=1]குழந்தையும், ஞானியும்[/h]

குழவியும், ஞானியும் மனத்துக்கினியவர்;
குழப்பமில்லாத தெளிந்த மனத்தினர்!
ஏதும் அறியாக் குழந்தையும் இனியது;
எல்லாம் அறிந்த ஞானியும் இனியவர்.

நான், எனது என்ற எண்ணங்கள்
இல்லை இவர்கள் மனங்களிலே;
நன்மைகள் பல, வாழ்வில் தரும்
நல்ல குணம் ஒன்று, இதுவன்றோ ?

கோபம் வந்தால் ஒரே நொடியில்
மறந்து சிரிக்கும் குழந்தையே;
கோபமே என்றும் கொள்ளார்
சிறந்த ஒரு மெய் ஞானியே.

யாரைக் கண்டு உலகம் மகிழுமோ,
அது தான் ஒரு சிறு குழந்தை!
யாரைக் கண்டு உலகம் மதிக்குமோ,
அவர் தான் மெய் தத்துவ ஞானி!

செல்லும் இடங்களில் எல்லாம்
இன்பம் பரப்பும் சிறு குழந்தை;
செல்லும் இடங்களில் எல்லாம்
அன்பைப் பரப்புவார் ஒரு ஞானி.

மனதை அடக்கி மாதவம் செய்து,
ஞானி ஆவது மிகவும் கடினம்;
மன இருள் அகற்றி கள்ளமில்லாக்
குழந்தை போல ஆவது மிகவும் எளிது!

வஞ்சனையும் சூதும் இன்றியே,
வையகம் வாழ்ந்து மகிழ்ந்திட;
நாம் பிஞ்சுக் குழந்தைகள் போல,
நம் நெஞ்சினை மாற்றிடுவோம்.

பஞ்சம் இல்லாத அன்பை நம்
நெஞ்சில் விதைத்து, விளைத்து,
கனிவு கொண்டு மகிழ்ந்தவாறே,
இனிதே வாழ்ந்திடுவோம் நாம் !

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
slide11.jpg



THE INNOCENT AND THE ENLIGHTENED.


A Gnaani and a baby are both good natured and sweet tempered. They are not subjected to any delusions and confusions. The child is sweet since it completely innocent, ignorant and knows nothing . Gnnani is sweet since he knows everything.


Neither the baby nor the Gnnani has any thoughts related to “I” and “Mine”.These two qualities bring a lot of joy in our lives.


The baby forgets its anger within seconds and smiles sweetly. The Gnaani will never get angry for any reason. The one whom the whole world loves is a baby. The one whom the whole world respects is s Gnaani.


The baby wins over the love of everyone it meets. The Gnaani wins over the respect of everyone he meets. The baby spreads happiness wherever it goes. The Gnaani spreads knowledge wherever he goes.


For ordinary people, it is very difficult to control the mind, do penance and become a Gnaani. But giving up Ego and Pride and becoming child-like in the heart is much more easier.


Let us all become lovely and lovable like children. Let us give up pride and ego. Let us become humble and simple like the children and and live a happy and peaceful life.
 
[h=1]அரசனும், ஆண்டியும்[/h]

உலகையே வெல்ல விரும்பிய அலெக்சாண்டர்,
உலகினில் உள்ள சிறந்த பொருட்கள் ஐந்தை,
அரிஸ்டாடலுக்கு காணிக்கை ஆக்க விரும்பி,
அரிய படையை நடத்திப் பாரதம் வந்தார்.

கங்கைக் கரையில் அமர்ந்து மெளனமாக,
சிங்கம் போல தவம் செய்யும் சாதுக்கள்,
சந்நியாசிகளைப் பற்றிக் கேட்டு வியந்தவர்,
சந்நியாசி ஒருவரைக் காணவிரும்பினார்.

தளபதியிடம் அரசர் ஆணையிட்டார்,
தாமதமின்றி படையுடன் சென்று,
உலகம் துறந்த ஒரு சிறந்த ஞானியை,
கலகம் இன்றி அழைத்து வருமாறு!

“எமக்கு உம் அரசரிடம் என்ன வேலை?
எமது தொழில் தவம் செய்வது ஒன்றே!
உமது அரசன் என்னைக் காண விழைந்தால்
உம்முடன் நீர் இங்கு அழைத்து வாரும்!”

தளபதியின் சாந்த குணம் மாறியது;
தாளமுடியாத சினம் தலைக்கு ஏறியது;
உலகே அஞ்சும் பெரிய அரசன் இந்த
உலகைத் துறந்த ஆண்டியிடம் வருவதா?

ஆணை இட்டார் தம் வீரர்களிடம்,
“பிணைத்தாகிலும் இந்த ஆண்டியை
அரசனிடம் அழைத்து வாருங்கள்!
பிணங்கினால் விட்டு விடுவோமா?”

சென்றது ஒரு படை வீரர் கூட்டம்,
முயன்றது அந்த வீர சன்யாசியைக்
கயிற்றில் கட்டியாவது இழுத்து வர;
முயன்று முயன்று முடிவில் தோற்றது!

என்ன ஆச்சரியம்! என்ன அதிசயம்!
எத்தனை வீரர்கள் கூடி முயன்றாலும்,
எள்ளளவேனும் நகர்த்த முடியவில்லை,
எள்ளி நகையாடும் அந்த சன்யாசியை!

“உங்கள் அரசன் மண்ணை வென்றவன்;
நானோ என் மனத்தையே வென்றவன்.
என்னை யாராலும், எங்கும், எதுவும்,
நான் விரும்பாமல் செய்ய இயலாது!”

ஆன்மீகத்தின் அரிய சக்திகளை
அனைவரும் உணர்ந்து தெளிந்தனர்.
மண் ஆளும் அரசனும் இடவேண்டும்
மண்டி, மனத்தை வென்ற ஆண்டியிடம்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
alexander_the_great.jpg



THE KING AND THE HERMIT.

Alexander wanted to conquer the whole world! He wanted to gift to his teacher Aristotle five of the best things found in India. He had heard about the sadhus / saints and hermits of India – spending their entire lives in penance, on the banks of the river Ganges . He wanted to meet one of them.


He ordered the chief of his army to go with a small unit and bring to him one of those holy men.


When requested to go to Alexander, the hermit retorted, “I have no business with your king! My job is to pray and do penance here. If he wishes to see me, tell him to come here”.

The chief of the army got annoyed by this haughty reply. He became extremely angry at the suggestion that king

Alexander should come to meet this semi clad pauper!


He ordered his army men to bind and drag the fellow to the presence of Alexander.

The army tried their best to physically carry the lean and starving man but they could not budge him even by an inch – however hard they tried.


The hermit laughed at their futile attempt and said, “Your king has conquered only land. But I have conquered my mind. No one can make me do anything against my wishes. No one can do anything to me against my wishes.”


The army stood aghast wondering at the power of mind over matter and the greatness of a saint over a king!
 
#1105 to #1109

#1105. சார்பினை மாற்றி அமைப்பாள்

இனிய தென் மூலை இருக்கும் குமரி
தனி ஒரு நாயகி, தானே தலைவி,
தனிப்பட்டு வித்தனள் சார்வு படுத்து
நனிபடு வித்து உள்ளாம் நாடி நின்றாளே.


இனிய மூலாதாரத்தில் இருக்கு குமரிப் பெண் அவள்; ஒப்பற்றவள் தேவி அவள்; தானே தனக்குத் தலைவி ஆனவள்; அவள் என் மனத்தின் மலச் சார்புகளை அகற்றினாள். என்னை அவற்றிலிருந்து பிரித்த பின்னர் அந்த உள்ளம் அவள் திருவடிகளைச் சார்பாகக் கொள்ளச் செய்தாள். அவள் என்னை விரும்பி நின்றாள்.

#1106. பொற்சிலம்பின் ஒலி


நாடிகள் மூன்று நடுஎழு ஞாளத்துக்
கூடி யிருந்த குமரி, குலக்கன்னி
பாடகச் சீறடிப் பைம் பொன் சிலம்பு ஒலி
ஊடகம் மேவி உறங்குகின்றாளே.


மூன்று நாடிகளில் நடுவில் உள்ள நாளம் போன்ற நாடியில் பொருந்தி தேவி இருப்பவள். அந்தக் கன்னித் தன் காலில் அணிந்துள்ள பொற் சிலம்பு எழும் ஒலியுடன் என் உள்ளத்தில் பொருந்தி அமைதியாக இருகின்றாள்.

#1107. “உறங்க வேண்டாம்” என உபாயம் சொன்னாள்


உறங்கும் அளவில் மனோன்மணி வந்து
கறங்கு வளைக் கை கழுத்து ஆரப் புல்லி
பிறங்கு ஒளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு
“உறங்கல் ஐயா” என்று உபாயம் செய்தாளே.


நான் உறங்கிய போது மனோன்மணி என்னிடம் வந்தாள்.
வளைகள் ஒலிக்கும் கரங்களால் ( சுழுமுனை நாடியால்) என் கழுத்தை இறுகத் தழுவினாள்.(இது தலையில் ஒலியும், ஒளியும் பரவும்போது மூச்சுக் கீழே செல்லாத வண்ணம் தொண்டை இறுக்கம் அடைவது).
அவள் சக்தியை என் வாயில் தந்தாள். ( இது தலையில் அடங்கி இருந்த சக்தியைத் தேவி வெளிப்படுத்துதல்)
“ஐயா உறங்க வேண்டாம்!” என்று கூறி ( இறைவனைச் சென்று அடைவதற்கான ) உபாயத்தையும் சொன்னாள்.

#1108. உபாயமும், அபயமும் தந்தாள்


உபாயம் அளிக்கும் ஒருத்தி என் உள்ளத்து
அபாயம் அறக் கெடுத்து, அன்பு விளைவித்துச்
சுவாவை விளைக்கும் சுழியகத்துள்ளே
அவாவை அடக்கி வைத்தி “அஞ்சல்” என்றாளே.


இறைவனை அடையும் நல்ல உபாயத்தை எனக்கு அளித்தாள் தேவி. அவளே என் உள்ளத்தில் காமக் குரோதங்கள் முதலிய கொடிய பகைவர்களால் ஏற்படும் அபாயங்களையும் போக்கினாள். என்னுள் இறைவனிடம் நீங்காத அன்பை விளைவித்தாள். நாயைப் போலத் தறிகெட்டு அலைகின்ற உள்ளத்தில் எழுகின்ற ஆசைகளை அடக்கி வைத்தாள். “அஞ்சேல் ” என்று எனக்கு அபயமும் தந்தாள்.

#1109. சேவடி சேர்பவர் இன்பம் பெறுவர்


அஞ்சொல் மொழியா ளருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சமென் றெண்ணித்தன் சேவடி போற்றுவார்க்கு
இன்சொ லளிக்கும் இறைவியென் றாரே.

அழகிய பிரணவ ஒலியை எழுப்புபவள்; அரிய தவத்தால் அடையக் கூடிய பெண் தெய்வம்; சீரிய சொற்களையே சொல்பவள்; சிவந்த ஒளியில் திகழ்பவள்; சேயிழை; தஞ்சம் என்று அவள் திருவடிகளை அடைந்தவருக்கு “அஞ்சேல்” என்ற இனிய சொல்லைக் கூறும் தேவி. மனோன்மணியைக் குறித்து இவ்வண்ணம் சிறப்பாக உரைப்பர்.
 
#1110 to #1114

#1110. உள்ளம் குலாவி நிற்பாள்

ஆருயிர் ஆயும் அருந்தவப் பெண்பிள்ளை

காரிய கோதையள் காரணி, நாரணி,
ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும்
கோரிஎன் உள்ளம் குலாவி நின்றாளே.

நல்வினை ஆற்றியதன் பயனாகவே ஒருவரால் அந்த தேவியை ஆராய முடியும். செய்யும் அருந்தவமே அவளிடம் கொண்டு சேர்க்கும். அவள் கரிய நிறம் உடையவள்; அனைத்துக்கும் காரணமானவள்; நாரணனின் அன்புத் தங்கை; உடல், உயிர், உலகம் என்று அனைத்தையும் ஒடுக்கும் வல்லமை கொண்ட கோரமானவள். அவள் என் உள்ளத்துள்ளே மகிழ்வுடன் வீற்றிருந்தாள்.

அஞ்ஞானத்தில் மூழ்கியுள்ள சீவர்களிடம் கோரமாகவும், ஞான மயமான சீவர்களிடத்தில் இனிமையாகவும் இருப்பவள் தேவி.


#1111. உச்சியில் உலாவுவாள்


குலாவிய கோலக் குமரி, என் உள்ளம்

நிலாவி யிருந்து, நெடு நாள் அனைந்தும்
உலாவி இருந்து உணர்ந்து உச்சியின் உள்ளே
கலாவி இருந்த கலைத்தலை யாளே.

உள்ளத்தில் குலாவிய கோலக் குமரி நீண்ட காலம் என் உள்ளத்தில் நிலாவி இருந்தாள். அவள் சீவனின் உடலில் நாதத்தை வெளிப் படுத்துவாள். உணர்வுடன் கலந்து மேலே சென்று, சந்திர மண்டலத்தை அடைவாள். அங்கே சந்திர கலைகள் தன் தலையில் நன்கு பொருந்திட தலை உச்சியில் உலாவுவாள்.

#1112. படர்கின்ற சுடர்க்கொடி


கலைத்தலை நெற்றிஓர் கண்உடை கண்ணுள்

முலைத்தலை மங்கை முயங்கி இருக்கும்
சிலைத்தலை ஆறு தெரிவினை நோக்கி
அலைத்தபூங் கொம்பினள் அங்கு இருந்தாளே.

நெற்றியிலிருந்து தலை உச்சி வரையில் அமைந்துள்ளது சந்திர மண்டலம். சந்திரனின் ஒளியால் சிறப்புற்றது இந்த மதி மண்டலம். இங்கு மேருமலையின் உச்சியில் சக்தி சிவத்துடன் கூடிப் படரும் கொடி போல அசைந்து ஆடிக் கொண்டிருப்பாள். ஏனெனில் அசையும் ஒளிஅணுக்களால் ஆனவள் தேவி.

#1113. சிவத்துடன் ஒன்றி இருப்பாள்


இருந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவிப்

பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லித்
திருந்திய தாணுவில் சேர்ந்து, உடன் ஒன்றி
அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே.

சக்தி என் மனதில் மெல்லிய இழை போன்ற வடிவத்துடன் விளங்கினாள். உள் நாக்குக்கு மேலே நான்கு விரற்கடையளவு உள்ள பாதையில் புகுந்தவுடன் திருந்திய சிறந்த அறிவு வடிவாகிய சிவத்துடன் சக்தி ஒன்றாகி விட்டாள். அதன் மூலம் அவள் அருந்தவக் கூத்தினை அடைந்தாள்.

#1114. பிரியாமல் இருப்பாள்


ஆதி அனாதி அகாரண காரணி

சோதி, அசோதி, சுகபர, சுந்தரி
மாது, சமாதி மனோன்மணி, மங்கலை
ஓதிஎன் உள்ளத்து உடன் இயைந் தாளே.

இவள் எல்லாவற்றுக்கும் முன்னே இருந்தவள். இவளுக்கு முற்பட்டது என்று எதுவும் இல்லை. இவள் எல்லாவற்றுக்கும் காரணம் ஆனவள். இவளுக்கு ஒரு காரணம் என்று எதுவும் இல்லை. இவள் சோதியாகவும் இருப்பாள். இவளே சோதியின்றியும் இருப்பாள். சுகம் பொருந்தியவள். எல்லோரையும் விடவும் மிகவும் அழகானவள். இவள் இன்பத்தையும் அளிக்க வல்லவள். தூய சமாதி நிலையையும் அளிக்க வல்லவள்.
இவளே மனோன்மணி, இவளே மங்கலை, இவள் பிரிவின்றி என் உள்ளத்தில் உள்ளாள்.
 
#1115 to #1119

#1115. திரிகால ஞானம் உண்டாகும்

இயைந்தனள் ஏந்திழை என்னுள்ள மேவி

நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
அயன் தனை யோரும் பதமது பற்றும்
பெயர்ந்தனள் மற்றும் பிதற்றறுத்தாளே.

என்னுள்ளம் மேவிய பராசக்தி என்னிடமிருந்து பிரியாமல் இருந்தாள். அவள் என்னை விரும்பி இருந்தாள். சிவ வடிவமான தேவியை நான் வணங்கினேன். அதுவே நான்முகனின் படைப்பினை ஆராய்ந்து உணர்ந்து கொள்ளும் வல்லமையை நமக்கு அளிக்கும். தேவி என் பற்றுகளை அகற்றி அருளினாள். அவற்றுடன் நூல்களைக் கற்றதன் பயனாக பெற்ற அறிவினால் நான் பிதற்றிய மொழிகளையும் போக்கிவிட்டாள்.

#1116. முத்தி அருளும் முதல்வி


பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்,

முயற்றியில் முத்தி அருளும் முதல்வி
கயல் திகழ் முக்கண்ணும் கம்பலைச் செவ்வாய்
முகத்து அருள் நோக்கமும் முன்உள்ள தாமே.

பேதை மனிதர்கள் வாதம் செய்வதிலேயே தங்கள் வாழ்நாளைக் கழிகின்றனர். உண்மையை அறிந்து கொள்ள முயல்வதில்லை. அவள் முயற்சியால் வீடுபேற்றை அருளுபவள் அந்த முதல் தலைவி. மீன் போன்ற மூன்று கண்களை உடையவள். ஒலியை எழுப்புகின்ற சிவந்தி ஒளி படைத்தவள். அருள் பொழிகின்ற திருமுகம் கொண்டவள். இவற்றை எல்லாம் அறிந்து கொள்ளாமல் சிலர் விளங்குகின்றனரே.

#1117. கள்ள ஒளி தெள்ளத் தெளிவாகும்


உள்ளத்து, இதயத்து, நெஞ்சத்து ஒரு மூன்றுள்

பிள்ளைத் தடம் உள்ளே பேசப் பிறந்தது
வள்ளல் திருவின் வயிற்றினுள் மாமாயைக்
கள்ள ஒளியின் கருத்து ஆகும் கன்னியே.

மூலாதாரத்தில் விளங்க முடியாத ஓர் ஒளியாக இருப்பாள் தேவி. உள்ளம், இதயம், நெஞ்சு என்று மேலே சென்று அண்ணாக்குப் பகுதியில் தொடங்கி பிரமரந்திரம் வரை உள்ள சிறிய சீரிய பாதையில் நாதத்துடன் விளங்குவாள். வள்ளல் சிவாபெருமானின் கருத்துப் படி தொழில் ஆற்றுகின்ற சுத்த மாயையாகிய தேவி படைத்தலில் கருத்து ஊன்றிய கன்னி ஆவாள்.

#1118. மாயை என்னும் இருள்


கன்னியும் கன்னி அழிந்திளல், காதலி

துன்னி அங்கு ஐவரைப் பெற்றனள் தூய் மொழி
பண்ணிய நன்னூற் பகவரும் அங்குளன்
என்னே இம்மாயை இருள் அது தானே.

சக்தி மூலாதாரத்தில் இருக்கும் போது கன்னித் தன்மை அழியாதவள். அவளே சிவனின் காதலியாகி அவனுடன் பொருந்தி ஐந்து மக்களைப் பெற்றனள். (நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் ஐவர்). அவள் தூய நாத வடிவுடையவள்; மறைகள் புகழும் சிவனும் அங்கே உள்ளான். இதே மாயை அறியாமையின் இருளாகவும் விளங்குகின்றது! என்ன ஆச்சரியம் இது!

#1119. ஆதிப் பிரான் அருள் செய்வான்


இருளது சத்தி, வெளியது எம் அண்ணல்

பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம்,
தெருளது சிந்தையைத் தெய்வம் என்று எண்ணில்
அருளது செய்யும் எம் ஆதிப் பிரானே.

இருள் மயமாக இருக்கும் சக்தி. சிவன் ஞான வெளியில் விளங்குபவன். சிவனுடன் கலந்து இருக்கும் இன்பமயமான சிவயோகமே புண்ணியர்கள் விரும்புகின்ற சிவபோகம். தேடும் பொருள் சிவனே என்ற தெளிந்த சிந்தையுடன் ஒருவர் நாதத்தை வணங்கினால், சிவன் அந்த நாதத்தை இடமாகக் கொண்டு அவருக்கு அருள் புரிவான்.
 
#1120. விரிந்து பரந்து நிரம்பும் மனம்

ஆதி அனாதியும் ஆய பராசத்தி,
பாதி, பராபரை, மேல்உறை பைந்தொடி,
மாது, சமாதி, மனோன்மணி, மங்கலி
ஓதும் என் உள்ளத்து உடன் முகிழ்ந்தாளே.

பராசக்தி ஆதியானவள்; அனாதியானவள்; சிவனின் பாதித் திருமேனியை தனதாக்கிக் கொண்டவள்; எல்லாத் தெய்வங்களுக்கும் மேலானவள்; எல்லா தெய்வங்களுக்கும் மேலே நாதமயமாக விளங்குபவள்; உயரிய மாது, பெருமைகளை தன்னிடம் நிலைக்கச் செய்பவள்; மனோன்மணி, நித்திய மங்கலி. அவளை எண்ணித் தொழுபவர் மனத்தை அவள் விரிந்து பரந்து நிரப்புவாள்.

#1121. சாதியையும் பேதமும் சக்தியே


ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை
ஆதியில் வேதமேயாம் என்று அறிகிலர்
சாதியையும் பேதமும் தத்துவமாய் நிற்பள்
ஆதி என்று ஓதினள் ஆவின் கிழத்தியே.


“கலைகளில் உயர்வானது பிரணவம். அந்தப் பிரணவமே யாம் என்ற உண்மையை அறியாத மக்கள் உள்ளனர்!” சாதிகள், அவற்றால் விளையும் பேதங்கள், அவற்றின் தத்துவங்கள் அனைத்துமே சக்தியே என்ற உண்மையை ஆதிசக்தியே எனக்கு அறிவித்தாள்.

#1122. வினைகளைக் கடிந்து களைவாள்


ஆவின் கிழத்தி நல் ஆவடு தண்துறை
நாவின் கிழத்தி, நலம் புகழ்ந்து ஏத்திடும்,
தேவின் கிழத்தி, திரு ஆம் சிவ மங்கை,
மேவும் கிழத்தி வினை கடிந்தாளே.

உயிர்களின் தலைவி சக்தி தேவி. உயிர்களை பக்குவம் செய்யும் வீணாத் தண்டில் இவள் வாகீசுவரியாக விளங்குவாள். நன்மைகளைத் தருபவள் என்று அவளைத் தேவர்கள் புகழ்ந்து பேசும் தலைவி. சிவபெருமானின் மங்கை இவள்; விரும்பி வழிபடும் அடியவரின் வினைகளைக் கடிந்து களைபவள்.

#1123. சிவனுக்கும் அவள் அனாதி ஆவாள்


வினை கடிந்தார் உள்ளத்து உள்ளொளி மேவித்
தனை அடைந்தோர்க்கு எல்லாம் தத்துவமாய் நிற்பள்
எனை அடிமை கொண்ட ஏந்திழை, ஈசன்
கணவனைக் காண அனாதியும் ஆமே.


வினைப் பயன்களை அழித்து விட்டவர்களின் உள்ளத்தில் இவள் ஒளியாக விளங்குவாள். தன்னையே அடைக்கலம் என்று தஞ்சம் அடைந்தவருக்கு தத்துவம் என்னும் உண்மைப் பொருளாக விளங்குவாள். இவள் என்னை அடிமை கொண்டுவிட்ட ஏந்திழை. இவள் கணவன் ஆகிய சிவனைக் காட்டிலும் இவளே அனாதி ஆனவள் என்று அறிவீர்.

#1124. சக்தியே சிவனின் வடிவம்


ஆதி, அனாதி, அகாரணி, காரணி,
வேதம் அது ஆய்ந்தனள், வேதியர்க்காய் நின்ற
சோதி தனிச் சுடர் சொருபமாய் நிற்கும்
பாதி, பராரை, பன்னிரண்டு ஆதியே.

தேவி அனைத்துக்கும் முதன்மையானவள்; அனைத்துக்கும் பழமையானவதள். தனக்கு என்று காரணம் ஒன்றும் இல்லாதவள்; எல்லாவற்றுக்கும் தானே காரணம் ஆனவள்; வாக்கின் தெய்வமாக இருந்து வேதியர்களுக்கு ஆராயும் திறனைத் தந்தவள்; தனி பெருஞ் சுடரான சிவத்தின் வடிவம் ஆனவள்; அவன் மேனியில் பாதியைத் தனதாக்கிக் கொண்டவள்; பன்னிரண்டு ஆதவர்களைப் போல ஒளி வீசுபவள் ஆதி சக்தி.
 
7. பூரண சக்தி

7. பூரண சக்தி என்றால் முழுமையான சக்தி.

#1125. ஆராய்ச்சியின் முடிவு

அளந்தேன் அகலிடத்துஅந்தமும் ஈறும்,
அளந்தேன் அகலிடத்து ஆதி பிரானை,
அளந்தேன் அகலிடத்து ஆணொடு பெண்ணும்,
அளந்தேன் அவன் அருள் ஆய்ந்து உணர்ந்தேனே.


உலகங்களின் முடிவையும், அவை முடிகின்ற இடத்தையும் நான் ஆராய்ந்தேன். அனைத்துமே ஆதிப் பிரான் ஆகிய சிவனிடம் சென்று லயம அடைவதை அறிந்து கொண்டேன். ஆண் பெண் என்னும் மாறுபட்ட பாலுணர்ச்சி முடிவடையும் இடத்தையும் நான் அறிந்து கொண்டேன். சிவசக்திய எங்கனனம் அருள் புரிகின்றனர் என்பதையும் நான் ஆராய்ந்து அறிந்து கொண்டேன்.

#1126. ஆன்மாவின் லயம்


உணர்ந்திலர்; ஈசனை ஊழி செய் சத்தி
புணர்ந்தது பூரணம்; புண்ணியர் தங்கள்
கணங்களைத் தன் அருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பகம் ஆமே.

ஆன்மாவின் மீது ஈசன் செலுத்தும் ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் பராசக்தியை மக்கள் அறிந்து கொள்ளவில்லை. குண்டலினி சக்தி பராசக்தியுடன் கலக்கும் போது முழுமை அடையும். பராசக்தி புண்ணியம் செய்தவர்களைத் தன்னருளில் நிலைத்திருக்கச் செய்பவள்; ஆன்மா உடலின் பொருந்திட உதவியது போலவே பராசக்தி ஆன்மா லயம் அடைவதற்கும் உதவுவாள்.

விளக்கம்


ஆன்மா உடலில் இருந்து பிரிந்த பிறகு, மகேசுவரர் அதன் மீது செலுத்திய ஆட்சி முடிந்து விடும்.
குண்டலினிசக்தி சிற்சக்தியுடன் பொருந்திப் பூரணம் அடையும் போது உடல் நினைவு அழிந்து விடும்.
அப்போது மூச்சின் இயக்கம் முழுமையாகவே நின்று விடும். இயல்பாகவே கும்பகம் அமைந்திடும்.


#1127. அன்பே வடிவம் ஆகும்


கும்பக் களிறு ஐந்தும், கோலொடு பாகனும்
வம்பில் திகழும் மணிமுடி வண்ணனும்
இன்பக் கலவி இனிது உறை தையலும்
அன்பின் கலவியு ளாய்ஒழிந் தாரே.


மதம் கொண்ட ஐந்து யானைகளே நம் ஐம்புலன்கள். அவற்றை செலுத்துவது நம் மனம் என்னும் பாகன். குண்டலினி சக்தி கீழ் முகமாகப் பாயும் பொழுது காமச் செயலில் விருப்பம் ஏறபடுத்தி சீவர்களுக்குச் சிற்றின்பத்தைத் தருவாள். அவளே சிவன் காதல் கொண்டு மேலே சென்று சகசிரதளத்தை அடைபவர்களுக்கு கலவி இன்பதை ஒழித்துப் பேரின்பத்தை அளிப்பாள்.

#1128. இன்பக் கலவியும், துன்பக் குழம்பும்


இன்பக் கலவியில் இட்டு எழு கின்றது ஓர்
அன்பில் புகவல்ல னாம் எங்கள் அப்பனும்,
துன்பக் குழம்பில் துயர் உறும் பாசத்துள்
என்பில் பராசக்தி, என் அம்மை தானே.


சீவர்களை இன்பக் கலவியில் செலுத்தி அங்கே எழும் ஆனந்தத்தில் நுழைய வல்லவன் சிவபெருமான். துன்பக் குழம்பாகிய சுக்கில சுரோணிதச் சேர்க்கையில் சிவன் விருப்பம் கொள்வான். சீவர்களுக்குப் பந்தத்தை விளைவிப்பான். இந்தச் செயலுக்குத் துணையாகப் பராசக்தியும் சீவனின் முதுகுத் தண்டாகிய வீணாத் தண்டில் பொருந்தி உள்ளாள்.

#1129. அப்பனும், அம்மையும் சிவசக்தியர்


“என் அம்மை, என் அப்பன்” – என்னும் செருக்கு அற்று
உன் அம்மை ஊழித் தலைவனும் அங்கு உளன்
மண் அம்மை ஆகி மருவி உரை செய்யும்
பின் அம்மையாய் நின்ற பேர் நந்தி தானே.


உம் உற்பத்திக்குக் காரணம் உடல் உறவு கொண்ட உம் தாயும் தந்தையும் என்ற மயக்கம் தரும் எண்ணத்தை நீக்கி விடுவீர். சுத்த வித்திய மண்டலம் என்னும் சுத்த மாயையில் உள்ள அன்னையும், சிவனும் நம் தாயும் தந்தையும் ஆவர். இந்த அம்மை நிலையாக உம்மைப் பொருந்தி நாதத்தைத் தந்தருள்வாள். அவள் விளங்குகின்ற ஒளி மண்டலம் நந்தி என்னும் குருமண்டலம் ஆகும்.
 
#1130. நாமேல் உறையும் நாயகி

தார் மேல் உறைகின்ற, தண்மலர் நான்முகன்

பார் மேல் இருப்பது, ஒரு நூறு தான் உள,
பூ மேல் உறைகின்ற போதகம், வந்தனள்
நா மேல் உறைகின்ற நாயகி ஆணையே.

உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள் ஒரு மாலையைப் போல விளங்குபவை. அவற்றில் ஒன்றான சுவாதிட்டானத்தில் வீற்றிருக்கும் நான்முகன் படைக்கும் சீவர்களின் ஆயுள் நூறு ஆண்டுகள் ஆகும். சுவாதிட்டானத்தில் இருந்து கொண்டு படைப்புக்கு உதவுபவள் நாமகள். அவளே ஞானவாணியாக சிரசின் மேலே எழுந்தருளுவாள். சீவனைத் தாழ்ந்த காமத்தை விட்டுவிட்டு உயரிய ஞானத்தை நாடச் செய்கின்றாள்.

#1131. பரத்தை அறிந்த பிறகு…


ஆணைய மாய், வருந் தாதுஇருந்தவர்

மாண் ஐயம் ஆய மனத்தை ஒருக்கிப் பின்
பாணையம் ஆய பரத்தை அறிந்தபின்,
தாண் நயம் ஆய தனா தனன்தானே.

உண்மையாகவே இறைவனிடம் நம்பிக்கை வைப்பவர் “எல்லாம் அவன் செயல்” என்று கவலை இன்றி இருப்பார்கள். மனத்தில் இருந்த நுட்பமான ஐயங்கள் தெளிவடைந்த பிறகு, மனத்தை அடக்கி நாதமயமான பரத்தை அறிந்து கொள்வார்கள். அதன் பிறகு இறைவன் தன்னை விட்டு அகலாதபடி அவன் இருப்பிடம் ஆகிவிடுவார்கள்.

#1132. மதி மண்டலம் அமையும்


தானே எழுந்த இத்தத்துவ நாயகி

வான்நேர் எழுந்து, மதியை விளக்கினள்,
தேன்நேர் எழுகின்ற தீபத்து ஒளியுடன்
மானே நடம் உடை மன்று அறியீரே.

தத்துவ நாயகி சீவனின் மீது தன் அருள் மிகுந்தால் மூலாதாரத்தில் இருந்து தானே மேலே எழுவாள். மதி மண்டலத்தில் ஒளி வீசச் செய்வாள். வான மண்டலத்தை நன்கு புலப்படச் செய்வாள். தேன் தாரையை போன்று இடைவிடாத விருப்பத்தால் எழும் ஒளியில் பராசக்தி நடனம் செய்யும் இடம் பொன்னம்பலம் ஆகும். இதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

#1133. விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும்


அறிவான மாயையும் ஐம்புலக் கூட்டத்து

அறிவான மங்கை அருள் அது சேரின்,
பிரியா அறிவு அறிவார்; உளம் பேணும்
நெறியாய சித்தம் நினைத்து இருந்தாளே.

ஐந்து தன்மாத்திரைகளை (சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்பவற்றை) அறிய உதவுபவை ஐந்து ஞானேந்திரியங்கள் (செவி, த்வக்கு, கண், நாக்கு, மூக்கு). இவை அனைத்தும் ஐம்பொறிகளின் உதவி இல்லாமல் அறியக் கூடிய பராசக்தியைச் சேர வேண்டும். அப்போது நீங்காத ஆறிவு பிறக்கும். அங்ஙனம் அவளைப் பொருந்தி நிற்பவரின் விருப்பங்கள் எல்லாம் அவள் அருளால் நிறைவேறும்.

#1134. நாத சக்தி


இரவும் பகலும் இலாத இடத்தே

குரவம் செய்கின்ற குழலியை நாடி,
அரவம் செய்யாமல் அருளுடன் தூங்கப்
பருவம் செய்யாததோர் பாலனும் ஆமே.

சந்திரன், சூரியன் இயங்காத இடத்தில், மகிழ்ச்சியைத்தரும் நாதசக்தியுடன், ஆரவாரம் செய்யாமல், அருளுடன் அமைந்திருந்தால், பருவம் மாறாத பாலகனாகவே எப்போதும் இருக்கலாம். நாதசக்தியாகிய தேவியுடன் பொருந்தி இருப்பவர் என்றும் இளமையோடு இருப்பார்.
 
#1135 to #1139

#1135. சக்தி விளங்கும் இடம் எது?

பாலனும் ஆகும் பராசக்தி தன்னோடு,
மேல் அணுகா, விந்து நாதங்கள் விட்டிட,
மூலம் அது ஆம் எனு முத்திக்கு நேர்படச்
சாலவு மாய்நின்ற தற்பரத் தாளே.

தேவியாகிய நாதசக்தியோடு பொருந்தியிருந்தால் என்றும் இளமையோடு இருக்கலாம். ஆனால் விந்து நாதங்களைக் கடந்து விட்டால் வீடுபேற்றினை அளிக்கும் பாதையில் பராசக்தி விளங்குவதைக் காணலாம். மூலத்தை அடைவதே முத்தி எனில் விந்து நாதங்களைக் கடக்கும்போது அங்கு பராசக்தியைக் காணலாம்.

#1136. முத்தி நிலை என்பது என்ன?


நின்ற பராசத்தி நீள் பரன் தன்னொடும்
நின்று அறி ஞானமும் இச்சையுமாய் நிற்கும்,
நன்று அறியும் கிரியா சக்தி நண்ணவே
மன்றன அவற்றுள் மருவிடும் தானே.


சக்தி இச்சா சக்தி, கிரியா சக்தி , ஞான சக்தி என மூவகைப் படும். சீவன் கீழ் நோக்குடன் இருக்கும் போது இச்சா சக்தியாகவும், கிரியா சக்தியாகவும் விளங்குவாள் பராசக்தி. சீவன் மேல் நோக்குடன் ஞானத்தைத் தேடிச் செல்கையில் அவளே ஞான சக்தியாக விளங்குவாள். நாதாந்ததில் நிலை பெற்ற பராசக்தி சிவத்துடன் ஒன்றி விடுவாள். சீவனின் சித்தம் சிவம் ஆகும் போது சீவனும், சிவனும், சக்தியுள் அடங்கிவிடுவர். மூவகைச் சக்திகளும் பராசக்தியில் அடங்கி விடும். பரன், பராபரை, பரம் ஆகிவிட்ட சீவன் மூன்றும் ஒன்றிவிடும் நிலை முத்தி நிலை எனப்படும்.

#1137. மலரும் மணமும் போலச் சிவசக்தியர்


மரு ஒத்த மங்கையும் தானும் உடனே
உரு ஒத்து நின்றமை ஒன்றும் உணரார்,
கரு ஒத்து நின்று கலக்கின போது,
திரு ஒத்த சிந்தை வைத்து எந்தை நின்றானே.

மணமும் மலரும் போலச் சிவசக்தியர் பிரிக்க முடியாத படி இணைந்துள்ளனர். அவர்கள் இவ்வாறே ஆன்மாக்களிலும் பிற தத்துவங்கள் அனைத்திலும் பொருந்தியுள்ளனர். ஆயினும் இதை உலகத்தோர் சிறிதும் உணர்வதில்லை. இங்ஙனம் சிவசக்தியர் சமமாகக் கலந்த நிலையில் சிவன் சக்தியின் மேல் வைத்த சிந்தையை என் மேலும் வைத்து அருளினான். அவன் எனக்கு நன்கு விளங்கினான்.

#1138. ‘அ’ முதல் ‘க்ஷ’ வரை


சிந்தையின் உள்ளே திரியும் சிவசக்தி
விந்துவும் நாதமும் ஆயே விரிந்தனள்,
சந்திர பூமி, சடாதரி, சாத்தவி,
அந்தமொடு ஆதியது ஆம் வண்ணத்தாளே.

சிந்தைக்குள் உலவிடும் சக்திதேவி நாதம், விந்துக்களாக விரிவடைந்தாள். அவள் சந்திர மண்டலத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டவள். அவள் உடலின் ஆறு ஆதாரங்களிலும் விளங்குபவள். அவள் சத்துவ குணம் நிரம்பியவள். அவள் ‘அ ‘ முதல் ‘க்ஷ ‘ ஈறாக ஐம்பத்தொன்று எழுத்துக்களிலும் உறைபவள்.

#1139. சிந்தையில் ஊறும் சுந்தரி


ஆறி இருந்த அமுத பயோதரி
மாறி இருந்த வழி அறிவார் இல்லை,
தேறி இருந்து நல் தீபத்து ஒளியுடன்
ஊறி இருந்தனள் உள் உடையார்க்கே.

சந்திர மண்டலத்தைத் தன்னிடமாகக் கொண்டவள் சக்தி தேவி. அவள் தன் ஆற்றலைக் குறைத்துக் கொண்டு அமுது ஊறும் அழகிய கொங்கைகளுக்குக் கீழேயும் விளங்குவாள். இவ்வாறு மேலும் கீழுமாக இரண்டு மாறுபட்ட நிலைகளில் சக்தி தேவி அமைவதை அறிந்தவர் எவரும் இல்லை. மனம் தெளிவடைந்து, புருவ மத்தியில் விளங்கும் ஒளியைக் காணும் அன்பர்களின் சிந்தையில் அந்த சுந்தரி ஒரு வற்றாத ஊற்றாக விளங்குவாள்.
 
#1140 to #1144

#1140. அங்கி வடிவான உருத்திரன்

உடையவன் அங்கி , உருத்திர சோதி,
விடையவன் ஏறி விளங்கி இருக்கும்,
கடையவர் போயிடும், கண்டவர் நெஞ்சத்
தடை; அது ஆகிய சாதகர் தாமே.


தீ வடிவான உருத்திரனின் அடிமை நான். மூலாதாரத்தில் இவன் சோதியாக விளங்குவான். இவனே விந்து மண்டலத்தை அடைந்து அங்கு சிறப்புடன் அமர்வான். இந்த உண்மையினை அறியாதவர்கள் சென்று விடுங்கள்! இதனை அறிந்தவர் சிறந்த யோகசாதகர் ஆவார்.

#1141. சகசிர தளத்தில் சக்தி தேவி


தாம் மேல் உறைவிடம் ஆறு இதழ் ஆனது;
பார்மேல் இதழ் பதினெட்டு இருநூறு உள,
பூமேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள்
பார்மேல் உறைகின்ற பைங்கொடியாளே
.

ஆறு இதழ்த் தாமரையான சுவாதிட்டானம் தேவி உறையும் இடம். பூமித் தத்துவமாகிய இதற்கும் மேலே இன்னும் 218 உலகங்கள் உள்ளன. பூமித் தத்துவத்தில் விளங்கிய நாதசக்தியே மேலே சென்று சகசிரதளத்துக்குப் புண்ணிய வசத்தினால் வந்து சேர்ந்தாள்.

அண்டகாயத்தில் 224 உலகங்கள் உள்ளன. பூமித் தத்துவமாகிய ஆறு இதழ்த் தாமரையாகிய சுவாதிட்டானத்துக்கு மேலே இன்னும் 218 உலகங்கள் உள்ளன. இவை அனைத்துக்கும் மேலே அமைந்துள்ளது சகசிரதளம்.


#1142. இயக்குபவள் சக்தி தேவி


பைன்தொடியாளும் பரமன் இருந்த இடம்
திண்கொடியாகத் திகழ் தரு சோதியாம்,
விண்கொடி யாகி விளங்கி வருதலால்
பெண்கொடி யாக நடந்தது உலகே.


சிவபெருமான் இருந்தபடி இருப்பான். சக்தியே செயலாற்றுவாள். வல்லமை மிகுந்த சோதி வடிவான சிற்சக்தி இவளே. வான் கூற்றில் விளங்கும் தேவியும் இவளே. உலகம் இயங்குவது பெண்கொடியாகிய சக்தியின் அருளால் மட்டுமே.

#1143. குண்டலினியே நவசக்தியானது


நடந்தது அம்மலர் நாலுடன் அஞ்சாய்,
இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்,
படர்ந்தது தன் வழி பங்கயத்துள்ளே,
தொடர்ந்து உள்வழி சோதி அடுத்தே.


நான்கு இதழ்த் தாமரையாகிய மூலாதாரத்தைத் தன் இருப்பிடம் ஆகக் கொண்டது குண்டலினி சக்தி. அதற்கு மேல் உள்ள சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஐந்து ஆதாரங்களிலும் அது பொருந்தியது. சகசிரதளத்தை அடைந்து அங்கே நவசக்தியராக மாறியது. அதுவே உள்வழியாகிய வீணா தண்டின் ஊடே போரொளியாகப் புகுந்து சென்றது.

#1144. சகசிரதளத்தில் குண்டலினி சக்தி


அடுக்குந் தாமரை ஆதியின் இருப்பிடம்
எடுக்குந் தாமரை இல்லகத் துள்ளது
மடுக்குந் தாமரை மத்த கத்தேசெல
முடுக்குந் தாமரை முச்சது ரத்தே.


சகசிரதளம் ஆதிசக்தியின் இருப்பிடம். இதன் ஆற்றல் உடலில் உள்ள மற்ற சக்கரங்களிலும் உள்ளது. இது உடலையும் சிதாகாசத்தையும் இணைப்பது. குண்டலினி சக்தியை மேல் நோக்கிச் செலுத்தி சகசிரதளத்தை அடையச் செய்வது முக்கோணமும் நாற்கோணமும் பொருந்திய மூலதாரமே ஆகும்.
 
#1145. குண்டலினி பரவிச் செல்வாள்

முச்சது ரத்தி லெழுந்த முளைச்சுடர்
எச்சது ரத்து மிடம் பெற ஓடிடக்
கைச்சது ரத்துக் கடந்துள்லொளி பெற
எச்சது ரத்து மிருன்தனள் தானே.

முச்சதுர வடிவான மூலாதாரத்தில் முளை போல விளங்குவாள் குண்டலினி சக்தி. அவளே எல்லா ஆதாரச் சக்கரங்கள் வழியே பரவிச் செல்வாள். சுழுமுனையின் உச்சியில் விளங்கும் சகசிரதளத்தில் அமைந்துள்ள பிரமரந்திரதைக் கடந்து உள்ளம் ஒளி பெற உதவுவாள்.

#1146. பத்து திசைகளிலும் பரவுவாள்


இருந்தனள் தன்முகம் ஆறொடு நாலாய்,
பரந்தனள் வாயு திசை திசை தோறும்,
குவிந்தன முத்தின் முகஒளி நோக்கி
நடந்தது தேறல்; அதோ முகம் அம்பே.


பத்துத் திசைகளிலும் பத்து முகங்களைக் கொண்டவள் தேவி. அதனால் அவள் பத்துத் திசைகளிலும் பரவி இருப்பாள். சிரசை நோக்கிக் குவிந்துள்ள சகசிரதளம் முத்தைப் போல ஒளி வீசும். அதைக் கண்டு இனிமை தரும் காம வாயு அதோ முகத்திலிருந்து திசை மாறி நீரோட்டம் போல மேலே சென்று சகசிரதளத்தை அடையும்.

#1147. நம்பனை நோக்கி நவில்வது என்ன?


அம்பு அன்ன கண்ணி, அரிவை, மனோன்மணி,
கொம்பு அன்ன நுண் இடைக் கோதை, குலவிய
செம்பொன் செய் யாக்கை செறிகமழ், நாள்தொறும்
நம்பனை நோக்கி நவிலுகின் றாளே.


அம்பைப் போன்ற கண்களையும், கொம்பைப் போன்ற மெலிந்த இடையையும் கொண்டவள் மனோன்மணி.அவள் செம்பொன் நிற மேனிச் சிவனிடம் அரிய உயிர்களுக்கு இன்பம் தரும் அரிய மறையை நாள்தோறும் நவிலுகின்றாள்.

#1148. அண்டம் முழுதும் நிற்பாள்


நவிலும் பெருந்தெய்வம் நான்மறைச் சக்தி
துகில்உடை ஆடை, நிலம்பொதி பாதம்,
அகிலமும் அண்ட முழுதும் செம்மாந்தும்
புகலும் சோதி புனைய நிற்பாளே.


புகழ்ந்து பேசப்படும் சக்தி பெருந்தெய்வம் ஆவாள். பிரணவத்தில் விளங்கும் இன்பத்தைத் தருவாள். அவள் உடுக்கும் ஆடை பவளம் போன்ற செவ்வொளி. அவள் பாதங்கள் பாதாளம் வரை பதியும். அண்டங்களைக் கடந்து ஒளி வீசுகின்ற கதிரவன், சந்திரன், அக்கினி என்னும் முச்சுடர்களை அவள் புனைந்து நிற்பாள்.

#1149. போற்றுவீர் இறையொரு பாகத்தினளை!


புனைய வல்லாள் புவனத்தி திறை எங்கள்
வனைய வல்லாள் அண்ட கோடிகள் உள்ளே
புனைய வல்லாள் மண்டலத்து ஒளி தன்னைப்
புனைய வல்லாளையும் போற்றி என்பேனே.

தன் மேனியின் ஒரு பாதியில் புவனத்து இறைவனைப் புனைய வல்லவள் அவள். அண்டங்களின் உள்ளே தன் சங்கற்ப சக்தியினால் மாற்றங்களைச் செய்ய வல்லவள் அவள். தன்னிடம் அண்டங்களின் அனைத்து ஒளியையும் ஒருசேரப் பெற்றுள்ளாள் அவள். அனைத்தையும் புனையும் ஆற்றல் படைத்த அவளை நான் போற்றுகின்றேன்.
 
#1150 to #1154

#1150. கூற்றுவனை வெல்லலாம்

போற்றி என்பேன் புவனாதிபதி அம்மை என்
ஆற்றலுள் நிற்கும் அருந்தவப் பெண் பிள்ளை,
சீற்றம் கடிந்த திருநுதல் சேயிழை
கூற்றம் துரக்கின்ற கொள்பைந் தொடியே.


அந்த புவனாதிபதி அம்மையை நான் அன்புடன் போற்றுவேன். என் அருந்தவத்தின் ஆற்றலுள் நிற்கும் பெண் அவள். என் மனத்தின் சினத்தை மாற்றியவள் அவள். சிற்றம்பலத்துள் விளங்கும் சொவ்வொளி மயமானவள் அவள். கூற்றுவனை விரட்டும் திறமை படைத்தவள் அவள்.

#1151. ஆதிப் பரம்பொருள் அவளே


தொடி ஆர் தடக்கை சுகோதய சுந்தரி
வடிவு ஆர் திரிபுரை யாம் மங்கை, சங்கைச்
செடி ஆர் வினை கெடச் சேர்வரை என்றென்
அடியார் வினை கெடுத்து ஆதியும் ஆமே.


சுழுமுனையில் நாதமாக விளங்கி இன்பத்தைத் தரும் அழகிய பெண் அவள். வடிவழகு படைத்த திரிபுரை என்னும் இனிய மங்கை அவள். கங்கையாற்றைப் போலப் பெருகுகின்ற தீவினைகளைப் போக்கும் வழியினைக் கூறுபவள் அவள். அடியார்களின் வினைகளைப் போக்கும் ஆதி சக்தியும் அவள்.

#1152. மெல்லியலாள் மனம் புகுந்தாள்


மெல்லிசைப் பாவை, வியோமத்தின் மென்கொடி,
பல்லிசைப் பாவை, பயன்தரு பைங்கொடி,
புல்லிசைப் பாவையைப் போதந் துரந்திட்டு
வல்லிசைப் பாவை மனம்புகுந் தாளே
.

சக்தி நுட்பமான நாதத்தில் விளங்குகின்றவள். அவள் பராகாசதில் உள்ள மெல்லிய ஒளி அணுக்களால் ஆன மென் கொடி. எல்லோராலும் புகழப்படுபவள். அடியவர்களின் பக்குவத்துக்கு ஏற்பப் பயன்களைத் தருபவள். அற்பமான புகழ் மொழிகளில் உள்ள விருப்பத்தைப் போக்கி, வலிமை மிகுந்த நாதமயமான பராசக்தி என் உள்ளதில் புகுந்தாள்.

#1153. படைப்பவள் பராசக்தி


தாவித்த அப்பொருள் தான் அவன்; எம் இறை;
பாவித்து உலகம் படைக்கின்ற காலத்து,
மேவிப் பராசக்தி மேலொடு கீழ்தொடர்ந்து
ஆவிக்கும், அப்பொருள்தான் அது தானே.


அவள் அருளால் தாபிக்கப்பட்டவன் தான் என் இறைவன் சிவன். சங்கற்பத்தால் அவள் உலகைப் படைக்கின்ற போது அவள் மேலும் கீழுமாகப் பரவுகின்றாள். தானே அப்பொருளாகித் தானே அதற்கு உயிரையும் தருகின்றாள்.

#1154. திரிபுரையை வழிபடுங்கள்


அதுஇது என்பர் அவனை அறியார்
கதிவர நின்றது ஓர் காரணம் காணார்
மதுவிரி பூங்குழல், மாமங்கை நங்கை
திதம்அது உன்னார்கள் தேர்ந்துஅறி யாரே.


சிவத்தின் பெருமையை அறியாதவர்கள் அது, இது என்று சென்று பலவேறு தெய்வங்களை வழிபடுவார்கள். முத்தியைத் தரும் மூலநாதன் சிவன் என்பதை அவர்கள் அறியார். தேன் சிந்தும் மலர்களை அணிந்த அம்மையின் ( குழலை நிகர்த்த சித்திரணி என்னும் நாடியில் விளங்குகின்ற அம்மையின்) அருளால் இது நிகழ்கின்றது என்று அவர்கள் அறிய மாட்டார்கள். அவர்கள் தெளிவினைச் சிறிதும் பெறாதவர்கள் ஆவர்.
 
8. ஆதாரம், ஆதேயம்

திரிபுடி என்பது நெருங்கிய தொடர்புடைய மூன்று சொற்களாகும்.

ஆதாரம், ஆதேயம், தாரணம் என்பவை ஒரு திரிபுடி

ஆதாரம் = தாங்கும் இடம்

ஆதேயம் = தாங்கப் படும் பொருள்

தாரணம் = தாங்கும் சக்தி

சக்தி தேவியே ஆதாரமாகவும், ஆதேயமாகவும் விளங்குகின்றாள்.


#1155 to #1159

#1155. சக்தியே ஆதாரங்கள் ஆவாள்

நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு

தான்இதழ் ஆனவை நாற்பது நால் உள
பால்இதழ் ஆனவள் பங்கயம் மூலமாய்த்
தான்இதழ் ஆகித் தரித்திருந் தாளே.

நான்கு இதழ்த் தாமரை ஆகிய மூலாதாரத்துக்கும், ஆறாவது ஆதாரமாகிய ஆக்ஞைக்கும் இடையே தொண்ணூறு நரம்புகளல் செயல்படுகின்றன.

சுவாதிட்டானம் (6 இதழ்கள்); மணிபூரகம் ( 10 இதழ்கள்); அனாகதம்
(12 இதழ்கள்); விசுத்தி ( 16 இதழ்கள்) என இவ்விரண்டு ஆதாரங்களுக்கு இடையே உள்ள நான்கு ஆதாரங்களில் மேலும் நாற்பத்து நான்கு இதழ்கள் உள்ளன.

ஆக்ஞைச் சக்கரத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் இருப்பவள் சக்திதேவி. உடலின் மற்ற ஆதாரங்களைத் தாங்குபவளும் அவளே! அவற்றில் விளங்குபவளும் அவளே!

உடலில் தொண்ணூறு உணர்வு சக்திகள் உள்ளன. நாம் ஒரு செயல் புரிவதும், புரிந்த செயலை அறிவதும் இந்த உணர்வுகளாலேயே.

சீவன் ஆக்ஞைச் சக்கரத்தில் உள்ளபோது இந்த உணர்வுகள் பணி புரியும். ஆக்ஞையில் இரண்டு உணர்வுகளும் மற்ற ஆதாரங்களில் 88 உணர்வுகளும் அமையும்.


#1156. மாது நல்லாள் நம்மை இயக்குவாள்


தரித்திருந் தாள்அவள் தன் ஒளி நோக்கி,
விரித்திருந் தாள்அவள் வேதப் பொருளைக்
குறித்திருந் தாள் அவள் கூறிய ஐந்து
மறித்திருந்தாள் அவள் மாது நல்லாளே.


தன் ஆளுமையில் உள்ள ஆறு ஆதாரங்களின் அறிவை அறிந்து கொள்வதற்காகத் தேவி அவற்றைத் தன் திரு மேனியிலே தரித்துக்கொண்டு இருக்கின்றாள். அவள் தன் அறிவைச் செயல்படுத்த உடலில் மூலாதாரம் வரையில் நரம்புகளை வலை போல விரித்திருக்கொண்டு இருக்கின்றாள். அவள் கழுத்துக்குக் கீழே உள்ள ஐந்து சக்கரங்களின் இயக்கத்தைக் கவனித்துக் குறித்துக் கொண்டு இருக்கின்றாள். யோகியர்களின் உடலில் இவை ஐந்தும் செயல் படாமல் அவற்றை மறித்துத் தடுத்துக் கொண்டு இருக்கின்றாள்.

யோகியரின் நோக்கம் விந்துவும், நாதமும். அதனால் அவர்களுக்குக் கண்டத்துக்குக் கீழே நிகழும் மற்ற செயல்களின் அவசியம் இல்லை.


#1157. வேதனைகள் தீர்ப்பாள்


மாதுநல் லாளு மணாள னிருந்திடப்

பாதிநல் லாளும் பகவனு மானது
சோதிநல் லாளைத் துணைப் பெய்ய வல்லிரேல்
வேதனை தீர்தரும் வெள்ளடை யாமே.

கண்டத்துக்குக் கீழே நிகழ்வதை அறியும் ஆவல் இல்லாத போது , சக்தி தேவிய சிற்சக்தியாகச் சிவனுக்குச் சமமான அறிவுடன் விளங்குவாள். இங்ஙனம் சமமான நிலையில் இறைவனும் இறைவியும் இருக்கும் போது ஒளி வடிவான அன்னையைத் தியானிக்க வேண்டும். அப்போது செயல்வழிச் செல்லும் சக்தி நிலை கெடும். துன்பங்கள் மறையும். சாதகன் உடலைத் தாண்டி விட்டு வெளியில் வந்து விளங்குவான்.

#1158. சக்தியின் தன்மை வந்து பொருந்தும்


வெள்ளடை யானிரு மாமிகு மாமலர்க்

கள்ளடை யாரக் கமழ்குழ லார்மனம்
அள்ளடை யானும் வகைத்திற மாய்நின்ற
பெண்ணொரு பாகம் பிறவி பெண்ணாமே

வெளி வானத்தில் சிவனுடன் பொருந்தியவன்; சகசிரதளத்தில் உள்ள பேரின்பத்தை அனுபவித்தவன்; மணம் மிகுந்த மலர் சூடும் பெண்களின் இதயத்தில் இடம் பெறாதவன்; சக்தி தேவியை வழிபடும் போது தானும் சக்திதேவியின் பெண் தன்மை அடைவான்.

#1159. பேரின்பத்தில் பேச்சறும்!


பெண்ணொரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை

பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது
பெண்ணிடை ஆணென் பிறப்பறிந் தீர்க்கின்ற
பெண்ணுடை ஆணிடைப் பேச்சற்ற வாறே.

ஒரு பெண் ஆசை கொண்டு மற்றொரு பெண்ணைச் சேர்வது அறியாமை. ஆனால் பராசக்திக்குப பெண் தன்மையும் உண்டு; ஆண் தன்மையுமுண்டு. சக்தி இங்ஙனம் இரண்டுமாக இருப்பானேன்?

சாதகனைக் கவர்ந்திடும் போது, சிவன் ஆண் தன்மை கெட்டுச் சக்தி மயமாகப் பெண் தன்மை பெறுவான். சக்தியைத் தொழுபவன் சக்தியின் பெண் தன்மை பெறுவான். பின்னர் சிவத்துடன் கூடுவான். சிற்றின்பத்தில் பேச்சற்று இருப்பது போலவே பேரின்பத்திலும் பேச்சு அறும்!
 
#1160 to #1164

#1160. சக்தி மன மகிழ்ச்சி தருவாள்

பேச்சுஅற்ற நற்பொருள், காணும் பெருந்தகை,
மாச்சு அற்ற சோதி, மனோன்மணி மங்கையாம்
காச்சு அற்ற சோதிக் கடவுளுடன் புணர்ந்து,
ஆச்செற்றுஎ னுள் புகுந்து ஆலிக்கும் தானே.


சொற்களைக் கடந்த நற்பொருள்; காண்பதற்கரிய பெருந்தகை; மாசற்ற சோதி; மனோன்மணியாகிய மங்கை; சினம் இல்லாத சோதிக் கடவுடன் கூடி என்னுள்ளம் புகுந்தாள். எனக்கு மன மகிழ்ச்சியைத் தந்தாள்.

#1161. சிவசக்தியர் ஐந்தொழில் புரிவர்


ஆலிக்கும் கன்னி யரிவை மனோன்மணி
பாலித் துலகிற் பரந்து பெண்ணாகும்
வேலைத் தலைவியை வேத முதல்வியை
ஆலித் தொருவன் உகந்து நின்றானே.

வாலையாக மூலாதாரத்தில் இருந்து கொண்டு சீவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவாள் சக்தி. சிவத்தினிடமிருந்து வேறாக இருந்து கொண்டு உலகினை விளக்குவாள் பார்வதி தேவி. உலகில் எல்லா உயிர்களையும் காத்துப் பரந்த பெண் வடிவம் ஆவாள் மனோன்மணி. ஐந்தொழிகளின் தலைவி, வேதத்தின் முதல்வியாகிய அவளுக்கு மகிழ்வூட்ட சிவன் விரும்பி நின்றான்.

#1162. சிவசக்தியர் உயிர்களைக் காப்பர்


உகந்துநின் றானம்பி யொண்ணுதற் கண்ணோடு
உகந்துநின் றாநம் முழைபுக நோக்கி
உகந்துநின் றானிவ் வுலகங்க ளெல்லாம்
உகந்துநின் றானவ டன்றோ டொகுத்தே.


சிவபெருமான் நெற்றிக் கண்ணுடன் மகிழ்ச்சியாக நின்றான். அவன் சீவர்களிடம் எழுந்தருள விழைந்தான். அதனால் சிவன் எல்லா உலகங்களையும் விரும்பி நின்றான். போகியாகிச் சக்தி தேவியின் தோளைத் தழுவியபடி நின்றான்.

#1163. பேரின்பம் சொல்ல இயலாதது


குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்
துத்தி விரித்த சுணங்கின் தூமொழி
புத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத்
தொத்த கருத்துச் சொல்லகில் லேனே.

பெருத்த முலைகளை உடையவள்; மென்மையான இடையை உடையவள்; புள்ளிகள் பரவிய தேமலை உடையவள்; தூய மொழி பேசுபவள்; மயில் தோகை போன்ற மெல்லிய அடிகளை உடையவள். இத்தகைய சக்தியை அடைந்ததால் விளைந்த இன்பத்தை எடுத்துக் கூற இயலாது.

#1164. மல்லவொண்ணாத மனோன்மணி


சொல்லவொண் ணாத அழற்பொதி மண்டலம்
செல்லவொண் ணாது திகைத்தங் கிருப்பர்கள்
வெல்லவொண் ணாத வினைத்தனி நாயகி
மல்லவொண் ணாத மனோன்மணி தானே.


தீ மண்டலம் விளங்கும் காமபீடத்தின் வலிமையை வெறும் வாய் வார்த்தைகளால் உரைக்க இயலாது. செல்ல இயலாமலும், அளந்து அறிய இயலாமலும், மக்கள் திகைத்து அங்கேயே இருப்பார்கள். வினைப் பயன்களை வெல்ல அரிதாகும்படிச் செய்கின்றாள் ஒப்பில்லாத தலைவியாகிய சக்தி. ஆற்றல் மிகுந்த மனோன்மணியைச் செயலாற்றாத வண்ணம் பந்தித்து நிறுத்தவும் இயலாது.
 

Latest ads

Back
Top