#1283 to #1286
#1283. சிவனை அடையலாம்
பார்க்கலும் ஆகும் பகை அறு சக்கரம்
காக்கலும் ஆகும், கருத்தில் தடம் எங்கும்
நோக்கலும் ஆகும், நுணுக்கமற்ற நுண் பொருள்
ஆக்கலும் ஆகும் அறிந்து கொள் வார்க்கே.
ஜனனம் மரணம் என்னும் பகைவனை அழிகின்ற வல்லமை கொண்டது இந்தச் சக்கரம். இதைப் பார்க்கவும் முடியும். தன் உள்ளத்துக்குள் இதைக் காக்கவும் முடியும். நுட்பமானவற்றுள் நுட்பமாகிய சிவனைக் நம்மால் நோக்கவும் முடியும். உள்ளபடி உணர்ந்து கொண்டவரால் இதை அடையவும் முடியும்.
#1284. பெருமை சொல்லில் அடங்காது
அறிந்திடும் சக்கர மாதி யெழுத்து
விரிந்திடும் சக்கர மேலெழுத் தம்மை
பரிந்திடும் சக்கரம் பாரங்கி நாளும்
குவிந்திடும் சக்கரம் கூறலு மாமே.
இந்தச் சக்கரத்தின் முதல் எழுத்து ‘அ’கரம் ஆகும். அதற்கும் அடுத்த எழுத்து தேவிக்கு உரிய எழுத்தாகிய ‘உ’கரம். இந்தச் சக்கரத்தில் மாயையின் செயல்களாகிய நிலம், நீர், தீ, காற்று என்னும் நான்கு பூதங்களும் அமைந்திருக்கும். இவை அனைத்தும் குவிந்துள்ள இந்தச் சக்கரத்தின் பெருமையைப் புகலவும் முடியுமோ?
#1285. ஆறு இயல்புகள் கொண்ட மந்திரம்
கூறிய சக்கரத் துள் எழுமந்திரம்
ஆறு இயல்பாக அமைந்து விரிந்திடும்;
தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழு மாரணம்
ஆறு இயல்பாக மதித்துக் கொள்வர்க்கே.
தெளிவான ஐந்து எழுத்துக்கள் கொண்ட மந்திரம் மாரணம். சொல்லப் பட்ட சக்கரத்துடன் எழும் அம மந்திரம் ஆறு செயல்களைச் செய்வதாக விரிந்து அமையும் அவை (1). தம்பனம், (2). மோகனம், (3). உச்சாடனம், (4). வித்வேடனம், (5). மாரணம், (6). வசியம்.
#1286. ஐம்பூதங்கள் பகையை வெல்ல உதவும்
மதித்திடும் அம்மையும் மாமாதும் ஆகும்,
மதித்திடும் அம்மையும் அங்கனல் ஒக்கும்,
மதித்து அங்கு எழுந்தவை காரணம் ஆகில்,
கொதித்து அங்கு எழுந்தவை கூடகி லாவே.
குறிப்பிட்ட சக்கரத்தின் தலைவி எல்லா சீவர்களுக்கும் அருளும் அன்னை ஆவாள். அவளைத் துதிக்கின்ற அன்பர்களுக்கு அவள் பகையை வெல்ல உதவுவாள். ஐம் பெரும் பூதங்களும் அன்னையின் ஆணைப்படித் தொழில் புரிபவை. அவள் ஆணையின்றி அவை எதுவும் செய்யா.