திருமந்திரம் - எட்டாம் தந்திரம்
#2395 to #2399
#2395. தவமிக்கு உணர்ந்தவர் தத்துவத்தாரே
சிவனைப் பரமனுள் சீவனுள் காட்டும்
அவமற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனால்
நவமுற்று அவத்தையில் ஞானம் சிவமாம்
தவமிக்கு உணர்ந்தவர் தத்துவத் தாரே
குற்றமற்ற வேதாந்தமும், சித்தாந்தமும் செப்புவது இது:
தத்துவங்களைப் பற்றாமல் பரமாக விளங்கும் ஆன்மாவின் உள்ளேயும் வெளியிலும் உறைகின்றது சிவன். ஆன்மாவின் துரியாதீத நிலையில் உதிக்கும் ஞானமே சிவம் ஆம். இந்தச் சிவஞானத்தை உணர்ந்து கொண்டவர் சிறந்த தத்துவ அறிவு கொண்டவர் ஆவர்.
#2396. சிவ சாயுச்சியம்
தத்துவம் ஆகும் சகள அகளங்கள்
தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம்
தத்துவ மாகும் சீவன் தன் தற்பரம்
தத்துவ மாம்சிவ சாயுச் சியமே
உருவம் உடையனவாகவும், உருவம் அற்றவைகளாகவும் உள்ளன ஆன்மாவின் முப்பத்தாறு தத்துவங்கள். விந்து, நாதம், சதாசிவம் இவைகளும் தத்துவங்களே. ஆன்மாவின் நாதாந்த நிலையில் உள்ளது தற்பரம் என்னும் மெய்ப்பொருள். இதனை அடைவதே சிவசாயுச்சியம் என்னும் உயர்ந்த முக்தி நிலை ஆகும்.
#2397. பெரியோருக்கு இரண்டும் அபேதமே
வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும்என்று உள்ளன
நாதன் உரையவை நாடில் இரண்டந்தம்
பேதமது என்பர் பெரியோர்க்கு அபேதமே
வேதங்களும், ஆகமங்களும் இறைவன் அருளியவை என்பது முற்றிலும் உண்மை. வேதம் பொதுவானதாக உள்ளது. ஆகமம் சிறப்பானதாக உள்ளது. அவற்றின் முடிவுகள் வேறு வேறு என்று சிலர் மொழிவர். ஆனால் தத்துவத்தை உணர்ந்த பெரியோருக்கு அவற்றில் எந்த வித பேதமும் காணப்படாது
#2398. உள்ளம் பூரிக்கும் ஆனந்தம்
பராநந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம்
பரானந்தம் மேல்மூன்றும் பாழுறா ஆனந்தம்
விராமுத்தி ரானந்தம் மெய்நடன ஆனந்தம்
பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே
பரம் என்னும் நிலையை அடைந்துவிட்ட ஆன்மா அனுபவிக்கும் உயரிய ஆனந்தம் எல்லாம் சிவானந்தம் ஆகும். பாழாகிய மாயையில் பொருந்தாத ஆன்மா பெறும் ஆனந்தம்; பொருத்தமான சாம்பவி, கேசரி முதலிய முத்திரைகளால் விளையும் ஆனந்தம்; சிவ நடனத்தைத் தனக்குள்ளே கண்டு களிப்பதால் உண்டாகும் ஆனந்தம்; இவை அனைத்துமே ஆன்மாவை இன்பக் களிப்பில் ஆழ்த்துகின்ற சிவானந்தமே.
#2399. சிவன் என்னும் பஞ்சாந்தகன்
ஆகுங் கலாந்தம் இரண்டந்த நாதாந்தம்
ஆகும் பொழுதிற் கலைஐந்தாம் ஆதலில்
ஆகும் அரனேபஞ் சாந்தகன் ஆம் என்ற
ஆகும் மறைஆ கமம்மொழிந் தான்அன்றே?
கலாந்தம், நாதாந்தம் என்னும் இரண்டும் மாறுபட்ட அந்தங்கள். கலாந்தம் என்பது மேதை முதலிய சோடச கலைகளையும், நிவிர்த்தி முதலிய ஐந்து கலைகளையும் பற்றியது. நாதாந்தம் பிரணவத்தின் ஐந்து உறுப்புகளைப் பற்றியது. சிவனே பிரணவமாகப் பொருந்தி அவற்றை ஒன்றாக்குகி விடுகின்றான். ஐந்து வேறுபட்ட உறுப்புக்களை ( அ + உ + ம் + விந்து + நாதம்) முடிவுக்கு கொணர்ந்து, பிரணவமாக ஒன்றாக்குவதால் சிவன் ‘பஞ்சாந்தகன்’ என்று வேதங்களிலும், ஆகமங்களிலும் பேசப்படுகின்றான்.