• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

சினம் இறக்கக் கற்றாலும்
சித்தி எல்லாம் பெற்றாலும்
மனம் இறக்கக் கல்லார்க்கு
வாயேன் பராபரமே
தாயுமானவர்

பச்சைக் கண்ணாடி போட்டுக் கொண்டால் உலகம் பச்சை நிறமாகின்றது
கண்ணாடியின் நிறத்துக்கு ஏற்பக் காணும் பொருட்களின் நிறம் மாறுகின்றது.
மனம் என்பதும் இது போன்ற நிறம் கொண்ட ஒரு கண்ணாடியே.
நல்ல மனம் உடையவருக்கு உலகம் முழுவதுமே நல்லது.
கெட்ட மனம் உடையவருக்கு உலகம் மிகவும் கெட்டது.
மனம் என்ற கண்ணாடியையே உடைத்து எறிந்தவருக்கு
எல்லாமே கடவும் மயம்! ஸர்வம் பிரம்ம மயம்! :hail:
 
[h=5]"Life is the most difficult exam we write .Many fail trying to copy others not realizing that each person has a different question paper, that’s why I am me".- Uche Elendu[/h]
 
Not only is the question paper different,
but Life conducts the exam first and
then gives us all the information
we actually needed to write the exam. :sad:
Good thing that the copy cats FAIL!!! :)
 
சந்ததமும் இளமையோடு இருக்கலாம்.
தாயுமானவர்

இறைவா! நீ என்றும் குமரன் . இளைமையே வடிவானவன்.
காலத்துக்கு அப்பாற்பட்டவன். காலம் உன்னைக் கட்டுப்படுத்துவதில்லை
உன் பாங்கில் நான் நிலைத்திருந்தால் நானும் என்றைக்கும் என் இளமையைக் காக்க முடியும்.
 
ஓடும் இருநிதியும் ஒன்றாகக் கண்டவர்கள்
நாடும் பொருளான நட்பே பராபரமே
தாயுமானவர்

ஓட்டாஞ் சில்லையும், பொன்னையும் ஒரேபோல மதிப்பவர்கள்
நாடுவது பரம்பொருளாகிய உன் நட்பு ஒன்றையே!
 
One stormy night many years ago, an elderly man and his wife entered the lobby of a small hotel in Philadelphia. Trying to get out of the rain, the couple approached the front desk hoping to get some shelter for the night.
Act of being human and kindness pays . George C Boldt. : -
“We’d like a room, please,” the husband requested. The clerk, a friendly man with a winning smile, looked at the couple and explained that there were three conventions in town. “All of our rooms are taken,” the clerk said. “But I can’t send a nice couple like you out in the rain at one o’clock in the morning. Would you perhaps be willing to sleep in my room? It’s not exactly a suite, but it will be good enough to make you folks comfortable for the night.”
When the couple declined, the clerk insisted. “Don’t worry about me; I’ll make out just fine,” he told them. So the couple agreed to spend the night in his room.

As he paid his bill the next morning, the elderly man said to the clerk, “You’re an exceptional man. Finding people who are both friendly and helpful is rare these days. You are the kind of manager who should be the boss of the best hotel in the United States. Maybe someday I’ll build one for you.”

Two years passed. The clerk was still managing the hotel in Philly when he received a letter from the old man. It recalled that stormy night and enclosed was a round-trip ticket to New York, asking the young man to pay him a visit.
The old man met him in New York, and led him to the corner of Fifth Avenue and 34th Street.

He then pointed to a great new building there, a palace of reddish stone, with turrets and watchtowers thrusting up to the sky. “That,” he said, “is the hotel I’d like you to manage.” That old man’s name was William Waldorf Astor, and the magnificent structure was the original Waldorf-Astoria Hotel. The clerk who became the first manager was George C. Boldt. This young clerk never foresaw how his simple act of sacrificial service would lead him to become the manager of one of the world’s most glamorous hotels.
 
Thank you for a nice heart warming story arunaranai. :yo:

It would have made greater impact if it had been posted in

the thread Think or Sink- which tries to promote logical thinking,

and make people wonder and ponder at Human Life and rare People. :welcome:
 
ஆங்காரம் என்னுமத யானைவா யில்கரும்பாய்

ஏங்காமல் எந்தையருள் எய்துநாள் எந்நாளோ

தாயுமானவர்

இன்பத்துக்குக் காரணமான இறைவனே! அகங்காரத்தால் உன்னைப் புறக்கணித்துவிட்டு என்னையே முன்னிலைப் படுத்தும் போதெல்லாம் நான் துன்பத்துக்கு ஆளாகின்றேன்.
அகங்காரத்தை அடியோடு அகற்றியவனுக்குத் துன்பம் இல்லை.
 
பார்த்தஇட மெல்லாம் பரவெளியாய்த் தோன்றவொரு
வார்த்தை சொல்ல வந்த மனுவே பராபரமே
தாயுமானவர்

உலக விஷயங்களில் செல்லும் இந்திரியங்கள் கெட்டு விடுகின்றன. அவற்றை நாம் அடக்குதல் வேண்டும். இறைவன் பால் செல்லும் இந்திரியங்கள் திட்பம் பெறுகின்றன அவற்றை நாம் ஒடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவைகள் பண்பட்ட நல்ல வாயில்கள் ஆகின்றன. காண்பதெல்லாம் அவன் காட்சி. கேட்பது அவன் சொல். உண்பது அவன் பிரசாதம். நுகர்வது அவன் வடிவமும் அவன் மணமும். எனவே இறைவன் சேவையில் புலன்களை நீட்டலாம்.
 
கன்றினுக்குச் சேதா கனிந்திரங்கல் போல எனக்கு
என்று இரங்குவாய் கருணை எந்தாய் பராபரமே
தாயுமானவர்

உலகு அனைத்தையும் ஈன்ற தாயே! அறியாமையினால் கேடுகள் பல செய்யும் என்னையும்
மன்னித்துக் கன்றுக்குத் தாய்ப்பசு இரங்குவது போல் என்னைக் கருணையோடு காப்பாய்.
 
[h=5]Water in the street comes to considered as holy when mixed with the water of the Ganga. Similarly, ordinary people who mingle with Satpurushas end up being like them. This is the nature of the mind which will be good when the company of good people is kept. Mingle with Satpurushas and make your life pure. -
Sri Sri Bharati Tirtha Mahaswamigal
[/h]
 
தமிழில் சொன்னால்........

மேருவுடன் சேர்ந்த காக்கையும் பொன் நிறம்.

பூவுடன் சேர்ந்த நாறும் மணம் பெறும்.
 
தந்தைதா யாவானும் சார்கதியிங் காவானும்
அந்தமிலா இன்பநமக் காவனும் - எந்தமுயிர்
தானாகுவானும் சரணாகுவனும் அருட்
கோனாகுவானும் குரு
குரு வணக்கம்

எருவைச் செடி தன்மயம் ஆக்குகின்றது.
குரு சிஷ்யனைத் தன்மயம் ஆக்குகின்றார்.
கருணையே வடிவானவர் உத்தம குரு.
கைம்மாறு கருதாதவர் உத்தம குரு.
மனம் என்னும் கல்லைப் பிசைந்து
இனிக்கும் கனியாக ஆக்குபவர் குரு.
இறையே குரு, குருவே இறை.
 
சிந்தை அவிழ்ந்து அவிழ்ந்து
சின்மயமா நின்னடிக்கே
வந்தவர்க்கே இன்பநிலை
வாய்க்கும் பராபரமே.
தாயுமானவர்

அடுப்புகரி அக்னியைச் சேர்ந்து அக்னி மயமாகி விடுகிறது.
கருணைக் கடலான தெய்வமே! உன்னைச் சார்ந்து நானும்
உன் தெய்வப் பெற்றியை எல்லாம் பெறுவேனாகுக!
 
If one chants the following daily for 108 items,
all the diseases will get cured.

"அச்சுதானந்த கோவிந்த நமோ சரண, பேஷஜாத் நஸ்யந்தி சகலா ரோக, சத்யம் சத்யம் வதாம்யஹம்
"‘
 
I want to be rid of all my health problems.
Surely I am going to try this mantra. :thumb:
Any other "do"s and "don't"s that go with this mantra??? :noidea:

My intuition says that it should read

அச்சுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்
நஸ்யந்தி சகலா ரோக: சத்யம் சத்யம் வதாம்யஹம்
"‘
 
எண்ணாத எண்ணமெல்லாம்
எண்ணி எண்ணி ஏழை நெஞ்சம்
புண்ணாகச் செய்தது இனிப்
போதும் பராபரமே.
தாயுமானவர்

அட்டைப் பெட்டிக்கு என்று தனியாக மதிப்பு இல்லை.
அதனுள் வைக்கும் பொருளுக்கு ஏற்ப அதற்கு மதிப்புக் கூடுகிறது.
நெஞ்சம் ஆலயம் ஆவதும் அல்லது அழுக்குக்கூடை ஆவதும்
அதனுள் நாம் நிரப்பியுள்ள எண்ணங்களைப் பொறுத்தது
குப்பைத் தொட்டி கீழ்மையடைவது அதனுள்ளிருக்கும் குப்பையால்.
தீய எண்ணங்களை நீக்கிவிட்டால் உள்ளம் தானே தேவாலயம் ஆகிவிடும்
 
தூங்காமல் தூங்கிச் சுகப்பெருமான் நின்நிறைவில்
நீங்காமல் நிற்கும் நிலை பெறவுங் காண்பேனோ?
தாயுமானவர்

வெறி பிடித்து அலையும் மனத்துக்கு ஓய்வு தேவை.

கடமையிலிருந்து விலகுவது ஓய்வு அல்லவே அல்ல.

மனதில் தொல்லைப் படாமல் இருப்பதே ஓய்வு.

தொல்லை மனதைத் தேய்க்கிறது.

துன்பங்களை மேலும் அதிகரிக்கிறது.

அலுவல்கள் செய்யும் போதும் அமைதியான மனமே கொள்வதே ஓய்வு.

வெளி வேலைகள் செய்யும் போதும் ஆவல் கொள்ளாமல் இருப்பது ஓய்வு.
 
அளகேசன் நிகராக அம்பொன்மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவார்.
தாயுமானவர்

மூட்டை சுமக்காத ஆள் விரைவாக நடக்க முடியும்.
அது போலவே பொருள் மீது பற்று இல்லாவிட்டால்
இறைவன் அருளுக்கு விரைவில் பாத்திரமாகலாம்.
தராசில் கனமான தட்டு கீழே தாழும்; லேசானது மேலே எழும்.
பற்றுள்ள மனம் ஈசனை நாடாது; பரலோகத்தை விழையாது
ஊசிக் காதில் ஒட்டகம் நுழைந்தாலும் நுழையும்
பணக்காரன், பற்றுள்ளவன் பரலோகத்தை அடைய முடியாது.
 
ஆசைகள் அறுமின்





“ஆசை தான் துன்பத்துக்கு காரணம்”,
ஆர் தான் அறியார் இதை எனினும்,
ஆசையை அறுத்தவர் யார் உள்ளார்?
அலைந்து தேட வேண்டும் உலகில்!

ஆசைகள் நிரம்பிய மனமானது, ஒரு
ஓட்டைக் குடம்; என்றுமே நிறையாது!
ஆசைகளை நிறைவேற்ற முயன்றால்,
ஓங்கும் அவை, நெய் இட்ட நெருப்பாக!

மத யானைகள் போல் வலம் வருகின்ற,
மனதின் ஆசைகளை அடக்கத் தேவை,
விவேகம் என்ற ஒரு கூரிய அங்குசம்;
வைராக்கியம் எனும் ஒரு இரும்புச் சங்கிலி.

ஆசை கொண்ட மனத் தராசின் முள்,
ஈசனை விட்டு விலகியே நிற்கும்;
ஆசை, செய்த தவத்தைக் கெடுக்கும்;
ஆசை, வளர்த்த பக்தியை அழிக்கும்.

பிறவிப் பிணி என்னும் முள் மரத்தின்,
மறுக்க முடியாத வித்துக்கள் ஆசைகளே!
அஞ்சி அகன்றிடுவீர் ஆசைகளில் இருந்து;
வஞ்சித்து வாழ்வை அழித்திடும் அவைகள்.

துன்பத்துக்கு இனிய முகமன் கூறி,
துன்பக் கடலில் நம்மைத் தள்ளும் ஆசை;
இன்பத்துக்கு விடை கொடுத்து அனுப்பி,
இன்பத்தை விலக்கி வைக்கும் ஆசை.

ஆசைகள் குறைந்து அழியும் போது,
லேசாகிவிடும் மனிதனின் மனது;
லேசாகிய மனமே உயர எழும்பும்;
ஈசனை நாடும்; பிறவியை நீக்கும்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.






 
அவன்றி ஓர் அணுவும் அசையாது.
தாயுமானவர்

சாட்டை இல்லாப் பம்பரம் போல நம்மை

ஆட்டுவிப்பவன இறைவனே ஆவான்.

சக்தியின்றி உலகில் எதுவுமே நிகழாது.

சக்தியே அந்த முக்தி தரும் ஈசன் தான்.
 
[h=5]Be honest with yourself. The world is not honest with you. The world loves hypocrisy. When you are honest with yourself you find the road to inner peace.

~ Paramahansa Yogananda
[/h]
 
காயநிலை அல்லவென்று காண்பார் உறங்குவரோ?

தூய அருட் பற்றாத் தொடர்வார் பராபரமே.

தாயுமானவர்

அண்டங்கள் அனைத்தையும் படைத்தும் காத்தும் வருகின்ற இறைவனுக்கு ஓய்வு என்பதே இல்லை. நம் வாழ்வு விழுப்பம் உடையதாக இருக்க நாமும் விடாமல் உழைக்க வேண்டும்.
முறையான உழைப்பே இறை வணக்கமாக மாறிவிடும். ஆங்கிலத்தில் கூறுவார்கள்...
Work is Worship!
 

Latest ads

Back
Top