• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

நேச நிருவிகற்ப நிட்டையல்லால் உன்னடிமைக்கு
ஆசையுண்டோ நீ அறியாதன்றே பராபரமே.
தாயுமானவர்.

காற்று வீசும் போது சிறிய அலைகள் ஏற்படும்.
நீர்ப் பரப்பில் சந்திரனின் பிம்பம் தெளிவாக இராது.
அலை அடங்கிய நீர் பரப்பில் சந்திர பிம்பம் சந்திரன் போலவே இருக்கும்
மனதின் அலைகள் அடங்கியதும் ஜீவாத்மாவில் பரமாத்மா பிரகாசிக்கும்.
அவை இரண்டும் ஒன்று போல ஆகிவிடும்.
மனம் அற்ற நிலை உருவாகும் நிருவிகற்ப சமாதியில்.
அந்த நிலயில் ஈஸ்வரனும், ஜீவனும் இருப்பர் ஒன்று போல.
 
சகமனை த்தும் பொய்யெனவே
தானுணர்ந்தால் தூக்க
சுகமனைத்ததும் பொய்யன்றோ
சோராது - இக பரத்தும்
விட்டுப் பிரியாத மேலான அத்துவிதக்
கட்டுக்குள் ஆவதென்றோ காண்
தாயுமானவர்

சூரியனும் சூரிய ஒளிக் கிரணமும்
ஒன்றுக்கு ஒன்று அன்னியமானவை அல்ல.
அலையும் கடலும் இரு வேறு பொருட்கள் அல்ல.
அவை அத்வைதம் எனப்படும்.
சிவமும், சக்தியும் அத்வைதம்.
பிரம்மமும், மாயையும் அத்வைதம்.
உடலும், உயிரும் அத்வைதம்.
சேதனமும், அசேதனமும் அத்வைதம்.
ஜீவத்மாவாவும் பரமாத்மாவாம் அத்வைதம்.
 
[h=1]இன்பமயமே![/h]
பானை ஒன்று வேண்டும் நமக்குப்
பரமாத்மாவைப் புரிந்து கொள்ள.

பானைக்கும், அந்தப் பரமனுக்கும்
பாரில் என்ன தொடர்பு கூறும்?

மண்ணை நீரில் குழைப்பதனால்;
மண்ணும், நீரும் மிகவும் தேவை.

காற்றில் உலரவைப்போம்; எனவே
காற்றும் மிகவும் அவசியமானதே.

காய்ந்தால் மட்டும் போதாது;
வெந்தால்தான் உறுதி பெறும்.

எரியும் நெருப்பில் இட்டு, அதைக்
கரியாமல் சுட வைப்போம் நாம்.

பானைக்குள் ஆகாசம் உள்ளதைப்
பாமரனும் கூட அறிந்திடுவான்.

ஐம்பூதங்களின் உதவி இன்றியே,
அமையாது ஓர் அழகிய பானை!

ஐம்பூதங்களின் உதவி இன்றியே,
அமையாது உலக ஸ்ருஷ்டியுமே.

மாறுபாடுகளும் உள்ளன என்பதை
மறுப்பதற்கில்லை எனக் காண்போம்.

பானை செய்யும் களிமண் வேறு;
பானை செய்யும் குயவன் வேறு;

பானை என்பது முற்றிலும் வேறாம்.
பானை, குயவனோ, மண்ணோ அல்ல.

பானைக்கும், பரமாத்மாவுக்கும்
ஆன பேதங்கள் இவைகளே ஆம்.

அவனே இங்கு களிமண் ஆவான்,
அவனே இங்கு குயவன் ஆவான்.

அவனே இங்கு பானையும் ஆவான்.
அவனே மூன்று பொருளுமாவான்.

செயல், செய்பவன், செய்யப்படும்
பொருள் அனைத்தும் இங்கு, அவனே.

மனத்தில் இதை நினைவுகொண்டால்,
அனைத்துலகமும் இனி இன்பமயமே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
[h=1]பிரம்மமும், மாயையும்[/h]
நிறைந்த சக்தியே பிரம்மம்; அதன்
சிறந்த வெளிப்பாடே மாயை ஆகும்!

இயங்காத சக்தி என்பது பிரம்மம்;
இயங்கும் சக்தி என்பது மாயை!

சலனமற்றது பிரம்மம் என்றால்,
சலனம் உடையது மாயை ஆகும்!

எரியும் நெருப்பு பிரம்மம் என்றால்,
எரிக்கும் சக்தி அதன் மாயை ஆகும்!

பிரம்மம் ஒரு முப்பட்டைக் கண்ணாடி;
பிறக்கும் வர்ண ஜாலமே மாயை ஆகும்.

படைப்புகளுக்குக் காரணம் பிரம்மம்;
படைப்புகள் என்னும் காரியம் மாயை.

காண முடியாதது பிரம்மம் ஒன்றே;
காணும் பொருட்கள் எல்லாம் மாயை!

என்றும் தனித்து நிற்கும் பிரம்மம் ;
என்றும் மனத்தை மயக்கும் மாயை!

தோற்றம் இல்லாதது பிரம்மம் என்றால்,
தோன்றி ஒடுங்குவது அதன் மாயை!

பாலும் நீரும் போலக் கலந்த இவற்றை,
பரமஹம்சர்களே பிரிக்க வல்லவர்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
“They say that life is an accident, driven by sexual desire, that the universe has no moral order, no truth, no God.

Driven by insatiable lusts, drunk on the arrogance of power, hypocritical, deluded, their actions foul with self-seeking, tormented by a vast anxiety that continues until their death, convinced that the gratification of desire is life's sole aim, bound by a hundred shackles of hope, enslaved by their greed, they squander their time dishonestly piling up mountains of wealth.

"Today I got this desire, and tomorrow I will get that one; all these riches are mine, and soon I will have even more. Already I have killed these enemies, and soon I will kill the rest. I am the lord, the enjoyer, successful, happy, and strong, noble, and rich, and famous. Who on earth is my equal?”

Ved Vyasa, The Bhagavad Gita
 
கருதும்அடி யார்கள்உளங் காணவெளி யாகுங்
துரிய நிறைவான சுகமே பராபரமே
தாயுமானவர்.


நாள்தோறும் நாம் கனவு, நனவு, ஆழ்ந்த உறக்கம் என்ற
மூன்று அவஸ்தைகளில் மாறி மாறி உழல்கின்றோம்.
இம் மூன்றுக்கும் பொதுவாக இருப்பதும், இம்மூன்றில்
தோயாமல் இருப்பதும் துரிய நிலையாகும்.
 
[h=1]நான்கு நிலைகள்[/h]

“உறங்குவது போலும் சாக்காடு”, நாம் அறிவோம்.
உறங்கும் போது, நாம் ஆன்மாவில் ஒடுங்குவோம்.
இடம், பொருள், ஏவல், காலம் எல்லாமே,
இடமில்லாது அப்போது மறைந்து போகுமே!

கனவுலகு புகுந்ததும், நாம் கடவுள் ஆகின்றோம்!
நினைத்தைப் படைக்கும், திறன் அடைகின்றோம்!
“வானம்!”, என்றவுடன் நீல வானம் வந்திடும்!
“வனம்!” என்றவுடன் பச்சை வனம் உருவாகிடும்!

ஆதவன், சந்திரன், தாரகைகள் எல்லாம்,
பேதமில்லாமல் ஓடி வரும், அழைத்ததும்!
எந்தப் பொருளும், இடமும், காலமும்,
எந்த விலங்கும், மனிதனும், பறவையும்,

நினைத்த நொடியில் உருவாகிடுவர்;
நினைத்த போது மறைந்து செல்லுவர்!
நினைத்த படியே பேசிப் பழகுவர்;
நினைத்த செயல்களையே புரிவர்.

நம் சின்ன அறிவும், சிறிய அனுபவமும்,
நம் சின்னத் திறனும், சிறிய சக்தியும்,
சொன்னபடி உருவாகும் ஒரு பெரும்
மன்னுலகம்; ஒரு பெரும் மாய உலகம்!

கண்களை விழித்தால், காணவே காணோம்,
கற்பனையில் உருவான அந்த மாய உலகம்!
கனவைத் தாண்டினால், கனவு பொய் ஆகும்.
நனவு நிலையில், கனவுகள் பொய் ஆகும்.

நனவைத் தாண்டினால்… என்ன ஆகும்?
நனவைத் தாண்டினால், நனவும் பொய் ஆகும்!
நிறைந்த அறிவும், அளவில்லா அனுபவமும்,
குறைவில்லாத் திறனும், குவிந்த ஞானமும்,

செறிந்த அந்த உயரிய இறைவனின்,
சிறந்த கற்பனையே நம் நனவுலகம்!
கனவுலகு நம் கற்பனையின் படைப்பு,
நனவுலகு அவன் கற்பனையின் படைப்பு !

கனவைத் தாண்டினால், கனவு மறைவதுபோல்,
நனவைத் தாண்டினால், இவ்வுலகே மறையும்!
எங்கும் நிறைந்த இறைவனே இருப்பான்.
எல்லாப் பொருட்களும் அவனாக இருக்கும்!

நாம, ரூப, பேதம் இன்றி எல்லாம் அவனே.
நாம் காண்பதெல்லாம் எங்கும் பிரம்மமே.
இந்த அற்புத நிலையே துரியம் ஆகும்.
இந்த நிலை அடைந்தால் துயரம் போகும்!

உறக்கம், கனவு, நனவு, உறக்கம் என்றே,
கிறங்குகின்றோம் நாம் வாழ் நாளெல்லாம்;
உறக்கத்தையும், கனவையும் கடப்பது போல் ,
நனவையும் கடந்து, துரியத்தை அடைந்தால் ….

இல்லை பயங்கள் , இல்லை பாவங்கள் ,
இல்லை மொழிகள், இல்லை செயல்கள் ,
இல்லை பேதங்கள், இல்லை தொல்லைகள்
இன்பமே எங்குமே ! இன்பமே என்றுமே !

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
[h=5]"The best motivation is self-motivation. The guy says, ‘I wish someone would come by and turn me on.’ What if they don't show up? You've got to have a better plan for your life." -- Jim Rohn[/h]
 
[h=5]'Where there is an attitude of unselfishness, a spirit of service and sacrifice there would be power, strength in that person or organisation.' A. Parthasarathy, Governing Business & Relationships, Chapter 5[/h]
 
Can I put forward mahatma Gandhi as an example? :hail:

We know the power he had on the people of India.

To the British rulers a Dead Gandhi was

more dangerous than a living Gandhi... :fear:

the reason being no one else could control the masses as he did! :flock:
 
வேண்டா விருப்பும் வெறுப்பும் - அந்த

வில்லங்கத்தாலே விளையுஞ் ஜனனம்

ஆண்டான் உரைத்தபடியே - சற்றும்

அசையா திருந்து கொள் அறிவாகி நெஞ்சே.

தாயுமானவர்.


அசையாத நீர்ப் பரப்புத் தெளிவாகப பிரதிபலிக்கும்.

மனம் அடங்கி ஒடுங்கும் போது நமது
அறிவில் ஆத்மா நன்கு பிரதிபலிக்கும்.

நெஞ்சம் அறிவு வடிவமாகி, அசையாமல் இருந்தால்,
நாம் தூய ஆத்மதரிசனம் பெறலாம்.
 
[h=1]மாயக்கண்ணாடி[/h]
அழகிய வடிவுடைய ஒரு கண்ணாடி,
அழகினைக் காட்டும் மிகத் தெளிவாக;
தூசுகள் படிந்து அது மாசு அடைந்தால்,
துளியும் நமக்கு பயன் தராது அன்றோ?

ஆத்மா ஒரு அழகிய கண்ணாடி!
அற்புதமான, அதிசயமான, அரியதான,
ஜீவாத்மாவுக்கு அது தேடும் அந்த
பரமாத்மாவைக் காட்டும் கண்ணாடி!

கண்ணாடியை மறைப்பவை தூசுகள்.
ஆத்மாவை மறைப்பவை மன மாசுகள்!
விருப்பு, கோப, தாபங்கள், பேராசை,
வெறுப்பு, மயக்கம், மதம் போன்றவை.

அழகைக் கண்ணாடியில் காண்பதற்கு,
துடைக்கணும் அதிலுள்ள தூசுகளை;
அவனை ஆன்மாவில் காண விழைந்தால்,
துடைக்கணும் அதிலுள்ள மாசுகளை.

தூசினைத் துடைத்து அகற்றிட தேவை,
துணித் துண்டு சிறியது ஒன்று மட்டுமே.
மன மாசினைத் துடைத்து, அகற்றிட நாம்
மாயங்கள் என்ன என்ன செய்ய வேண்டும்?

தியானம், தவம், சுத்தம், நேர்மை,
தியாகம், பக்தி போன்றவைகளே;
மன மாசினைத் துடைக்கவல்ல,
மாயத் துணித் துண்டுகள் ஆகும்.

மாசினை அகற்றும் மாயம் அறிந்தோம்;
மாயம் அறிந்ததால், முனைந்து, முயன்று,
தூசினைத் துடைத்த கண்ணாடியைப் போல்
மாசில்லாத மனத்தினைப் பெற்றிடுவோம்!

மாசில்லாத மனமே அமைதி கொள்ளும்;
மாசில்லாத மனமே பூலோக வைகுந்தம்;
மாசில்லாத மனமே ஊழ் வினை ஒழிக்கும்;
மாசில்லாத மனமே பிறவிப்பிணி அறுக்கும்! !

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
[h=1]ஆத்ம தரிசனம்.[/h]
மரம் வெட்டி விற்று, அந்த
வருமானத்தில் வாழ்ந்தான்
சிரமம் நிறைந்த வாழ்க்கை,
சிறு விறகு வெட்டி ஒருவன்.

மகான் கூறினார் அவனிடம்,
“மகனே! நீ காட்டுக்குள் செல்;
செல்வம் கொழித்து, நல்லதோர்
செல்வந்தனாய் ஆகிவிடுவாய்!”

அடுத்த நாள், அந்த விறகுவெட்டி
அடர்ந்த காட்டுக்குள் சென்றபோது,
விலையுயர்ந்த மரக் கூட்டங்களைத்
தொலை தூரம் வரையில் கண்டான்.

தினமும் சிறிது வெட்டி விற்று,
மனம் மகிழ்ந்து வாழலானான்.
“இன்னும் உள்ளே சென்றால்,
என்னென்ன உள்ளதோ?” என்று

கண்டறியச் சென்றான், ஒரு முறை
பண்டு செல்லாத பகுதிகளுக்கு!
தாமிரச் சுரங்கத்தைக் கண்டான்;
கோரிய பொருளைப் பெற்றான்.

இன்னமும் உள்ளே சென்றால்,
இருந்தது வெள்ளிச் சுரங்கம்!
அள்ளிக் கொண்டு வந்தவனுக்கு,
கொள்ளை கொள்ளை மகிழ்ச்சி!

இன்னும் உள்ளே சென்றவன்,
பொன்னும், வைரக்கற்களும் கூடி
மின்னும் சுரங்கத்தைக் கண்டான்.
இன்னும் வேறு என்ன வேண்டும்?

சித்திகள் எட்டும் இவ்வகையே.
யத்தனம் நாம் செய்யச் செய்ய,
புத்தம் புதிதாகக் கிடைக்கும்;
மொத்தமாக அல்ல, என்றுமே!

சக்திகளில் மயங்கி நிற்காமல்,
யுக்தியுடன் தொடர்ந்து சென்றால்,
கிடைக்கும் ஆத்ம தரிசனமும்;
கிடைக்கும் இறையின் தரிசனமும்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

திருக்குறள்.


கயிற்றைப் பாம்பு என்று எண்ணி அஞ்சி நடுங்குகிறோம்.

கயிறு என்று தெரிந்தபின் அச்சம் விலகி விடுகிறது.

அஞ்ஞானம் மறைந்ததும் நம் அச்சமும் மறைகிறது.

காணும் பொருட்கள் யாவையும் இறைவனின் உருவே.

இதை அறியாமல் அதைப் பிரபஞ்சம் என்று எண்ணி

நானாவித அல்லல்கள் நித்தமும் நாம் படுகின்றோம் .

பரம்பொருளை உள்ளபடி அறிவது மெய்யறிவு.
 
The present difficulty is that the man thinks that he is the doer. But it is a mistake. It is the Higher Power which does everything and the man is only a tool. If he accepts that position, he is free from troubles. Take, for instance, the figure on a gopuram (temple tower), that is made to appear to bear the burden of the tower on its shoulders. Its posture and look is a picture of great strain, bearing the very heavy burden of the tower. But think, the tower is built on the earth and it rests on its foundations. The figure (like Atlas bearing the earth) is a part of the tower, but is made to look as if it bore the tower. Is it not funny? So is the man who takes on himself the sense of doing.

Bhagavan Sri Ramana Maharshi
 
27c. வைகுந்தம்

இருக்கும் இடத்திலேயே இருந்தனர்;
இருந்த வேலைகளைச் செய்தனர்.

இருந்தது மனம் இறை திருவடிகளில்;
இருந்து பக்தி மட்டும், இல்லை கர்வம்!

கோவில் கட்டவில்லை – வசதி இல்லை
உற்சவம் நடத்தவில்லை – வசதி இல்லை

மனத்தால் பூஜிக்கின்றனர் இடைவிடாது!
பணத்தால் பூஜித்ததை இடைவிடாமல்

நினைத்துக் கொண்டிருந்தது மடத்தனம்.
அனைத்தையும் செய்பவன் இறைவனே!

சர்வமும் செய்து கொள்பவன் அவனே!
சர்வமும் செய்விப்பவனும் இறைவனே!

கர்த்ருத்வம் தந்திருந்தது கர்வத்தை.
கர்வம் அகன்றது; கண்கள் திறந்தன!

மாயை விலகியது, அறிவு துலங்கியது
தூய பக்தரை விழுந்து வணங்கினான்.

“மண் மலர்களைக் கண்டேன் ஆலயத்தில்
மண மலர்களை விடப் பாதங்கள் அருகில்.”

“விருப்பம் உண்டு பகவானைத் தரிசிக்க;
வசதிகள் இல்லை பகவானைத் தரிசிக்க.

தரிசிப்போம் பகவானை மனத்திலேயே;
அர்ச்சிப்போம் மண் மலர்களைக் கொண்டு.

மண மலர்களால் அர்ச்சிக்க ஆசை உண்டு
மண் மலர்களே சாத்தியம் எமக்கு” என்றனர்.

ஸ்ரீனிவாசன் தோன்றினார் அப்போது!
“ஸ்ரீனிவாசா! வந்தீரா தரிசனம் தர?

ஏழையின் குடிசைக்கு வருவீர் தேவா!
எங்கள் உணவை உண்பீர் ஸ்ரீனிவாசா!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

Those who want to understand this better

may read the previous story / poem. :)
 
சட்டையொத்த இவ்வுடலைத்

தள்ளுமுன்னே நான் சகச

நிட்டையைப் பெற்று ஐயா

நிருவிகற்பங் காண்பேனோ ?

தாயுமானவர்.


அரசாங்க அதிகாரி தன் அலுவல்களைச் சொந்த வேலை போல செய்து வந்தாலும்,
அவன் அறிவன் அந்த அதிகாரம் அரசாங்கம் தந்தது என்றும்,
அந்த வேலைகளும் அரசாங்க வேலைகள் என்று.
அது போன்றே சகச நிஷ்ட்டையில் இருப்பவன்
எல்லா வேலைகளுக்கும் நடுவே விஸ்ராந்தியில் இருக்கிறான்.
 
உண்டோ நமைப் போல வஞ்சர் - மலம்

ஊறித் ததும்பும் உடலைமெய் யென்று

கொண்டோ பிழைப்பது இங்குஐயோ - அருட்

கோலத்தை மெய்யென்று கொள்ள வேண்டாவோ?

தாயுமானவர்.


இறைவனுக்கு அன்னியம் ஆனவை அனைத்திலிருந்தும்

நீங்கி இருந்தால் .நித்தியானந்தம் நமக்கு சொந்தம் ஆகும்.

நிலைகள் நீங்கலாக் மற்ற அனைத்திலிருந்தும் நீங்கி நிற்கின்றன மீன்கள்.

மற்றவற்றைச் சார்ந்து இருந்தால் அதற்குத் துன்பமே அன்றி இன்பம் இல்லை.

சச்தானந்ததைத்தவிர அனைத்திருந்தும் விலகி நின்றால் நமக்குக் கேடு வராது.
 

Latest ads

Back
Top