• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

Visalam Madam
Namaste

The next few days I will be very busy travelling and will not be able to update this thread . Will start updating from next Wednesday onwards . This is just for your info .
 
Visalam Madam
Namaste

The next few days I will be very busy travelling and will not be able to update this thread . Will start updating from next Wednesday onwards . This is just for your info .

Thank you dear Mr. M. Krishna.
You yourself can watch the increased traffic
when more people participate in any thread!
Have a nice time and travel safely sir! :pray2:
 
Anyone who has no interest to learn whether he is in adolescent
age or past sixty, he/she will be treated as old, while who keeps
learning stays very young, irrespective of the age.

Balasubramanian

If we remain as simple minded as the children are,
as curious as the children are and
as knowledge seeking as the children are,
the world will be so much a better place to live in! :peace:
 
புண்ணியபா வங்கள் பொருந்தா மெய் யன்பரெல்லாம்

நண்ணியபே ரின்பசுகம் நானணைவ தெந்நாளோ ?

தாயுமானவர்.

நிகழ்வது எல்லாம் உன் செயல் என்று அறிந்து கொண்டு விட்டால்
பின்னர் நலம் தருவது என்பது எது? தீமை புரிவது என்பது எது?

நம் மனதில் உள்ள தீமை புறத்தில் தீச் செயலாக வடிவெடுத்து நம்மிடமே வந்து சேருகின்றது.

தீங்கை காண்பதற்கான தீய மனம் உடையவனுக்கே புறவுலகு தீங்கு விளைவிக்கின்றது.

சான்றோன் தனக்கு வரும் தீங்கைத் தீங்காக எண்ணுவதில்லை; தீங்காக ஏற்பதும் இல்லை.
 
Do these quotes PROVE the above statement???

கெடுவான் கேடு நினைப்பான்.

தன் வினை தன்னைச் சுடும்.

நன்மையையும் தீமையும் பிறர் தர வாரா.

நாமே நமக்கு நண்பன். நாமே நமக்கு விரோதி.
 
வான்கெடுத்துத் தேடும் மதி கேடர் போல எமை

நான்கெடுத்துத் தேடாமல் நன்கறிவ தென்னாளோ?

தாயுமானவர்.

என்னை நான் முற்றிலுமாகத் தொலைத்தால் மட்டுமே
உன்னை நான் உண்மையாக உணரமுடியும் இறைவா!

நான் என்னும் என் அகந்தை தொலையும் அளவுக்கு
உன்னை நெருங்கி வர முடியும்.

உன்னை நாடும் பொழுது உன்மயம் ஆகித் தன்வயம் இழக்கின்றேன்
 
பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்தது பெண்ணைத்

தாய்போல் நினைத்துத் தவம்முடிப்பது எக்காலம்?

பத்திரகிரியார்.


பேய் போலத் திரிந்தால் எதிலும் பற்றுதல் உண்டாகாது.

பிணம் போல படுத்த இடத்ததில் உறங்க முடிந்தால்,

அவனுக்கு கோரிக்கைள் தேவைகள் எதுவும் இருக்க முடியாது.

பெண்கள் அனைவரையும் தாயாகவே எண்ணினால்

ஒரு மனிதனால் பெண்ணுக்குத் தீங்கு செய்ய முடியாது.

இத்தவம் எல்லோருக்கும் செய்வதற்கு எளிதாகுமா?
 
வேண்டத் தக்கது அறிவோய் நீ

வேண்ட முழுதும் தருவோய் நீ

வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ

வேண்டி என்னைப் பணி கொண்டாய்

வேண்டி நீயாது அருள் செய்தாய் யானும்

அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசொன்று உண்டென்னில்

அதுவும் உந்தன் விருப்பன்றே.

மாணிக்க வாசகர்.



நல்ல வேலைக்காரன் ஒருவன் தன் எஜமானனிடம்

தன்னையே முழுவதுமாக ஒப்படைத்துவிடுகிறான்.

சம்பளம் என்று எதுவும் கேட்பதில்லை.

எது கொடுத்தாலும் திருப்தியாகப் பெற்றுக் கொள்கிறான்.

எதுவும் கொடாவிட்டாலும் குறை ஒன்றும் கூறுவதில்லை

இத்தகைய வேலைக்கரனைப் பெற்ற எஜமானனின் பொறுப்பு மிகவும் பெரியது ஆகிறது.

நான் அத்தகைய வேலைக்காரன் ஆகவேண்டும் என் தலைவனாகிய உனக்கு இறைவா!
 
என் பெற்ற தாயாரும் என்னைப்
பிணமென்று இகழ்ந்துவிட்டார்

பொன்பெற்ற மாதரும் போவென்று
சொல்லிப் புலம்பிவிட்டார்

கொன்பெற்ற மைந்தரும் பின்வலம்
வந்து குடமுடைத்தார்

உன்பற் றொழிய வொருபற்றும்
இல்லை உடையவனே.

பட்டினத்தார்.


உற்றார் உறவினர் என்பவர்கள் எல்லோரும் இந்த உலகத்தில்

அவரவர் வினைப் பயனை அனுபவிக்க வந்து பிறந்துள்ளனர்.

உலகுக்கு வருவதும் தனியே. இங்கிருந்து போவதும் தனியே.

ஒருவருக்காக மற்றொருவர் போக்கை அல்லது வரவை மாற்ற முடியாது.

ஆதலால் இவர்கள் எவரும் நிலைத்த உறவினர் ஆக மாட்டார்.

இறைவன் ஒருவனே மாறாத நிலைத்த உறவு ஆவான் -

இந்தப் பிறவியில் மட்டுமன்றி எல்லாப் பிறவிகளிலும்!
 
பொல்லாத காமப் புலைத்தொழிலில் என்னறிவு
செல்லாமல் நன்னெறியிற் சேருநாள் எந்நாளோ?
தாயுமானவர்.



உண்ணுதல், உறங்குதல், இனப் பெருக்கம் செய்தல் இதை
அத்தனை ஜீவராசிகளும் செய்து வருகின்றன.

ஆறறிவுடன் மனிதனாகப் பிறந்தவனும் வாழ்க்கையில்
இதை மட்டுமே செய்தால் அவனுடைய ஆறாவது அறிவு வீண்.

காமத்திலிருந்து மனதைத் திருப்பி நன்னெறியில் சேர்க்க வேண்டும்.

நல்ல வழியில் நாம் நடக்கத் தொடங்கினால் அதுவே நம்மை நல்ல இடத்துக்கு,
நாம் உண்மையில் செல்ல வேண்டிய இடத்துக்குக் கொண்டு சேர்த்துவிடும்.
 
Visalam Madam
Just Back from an excellent trip to Punjab ( Golden Temple in Amritsar and other sacred Sikh shrines around Amritsar ) .Enjoyed great Punjabi food and had a taste of the Sikh Culture and way of life . Feeling very refreshed and energized after this trip . So sharing a quote from the first Sikh Guru Shri Guru Nanak .

Let no man in the world live in delusion. Without a Guru none can cross over to the other shore - Shri Guru Nanak
 
:welcome: back after a refreshing and rejuvenating trip to Punjab.
No wonder you feel energized... Punjab people are infectiously energetic
in their music, dance, food and life style. :)
 
தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!!


மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு ...தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்

இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்
 
வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத பெருமை நிறைய தஞ்சை கோவிலுக்கு உண்டு, அந்த சிறப்பம்சங்கள் ...


* கோவிலில் உள்ள நந்தி சிலையானது முழுவதும் ஒரே பாறையில் செதுக்கப்பட்டதாகும்...

* 1003 வருடங்கள் ஆனாலும் பழமை மாறாமல் இருப்பது இன்னொரு பெருமை....

* ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரூபாய் நோட்டு, நாணயம், மற்றும் அஞ்சல் துறை வெளியிட்ட அஞ்சல் தலை, ஆகியவற்றில் நம் பெரிய கோவில் உள்ளது, இவை மூன்றிலும் இடம் பெற்ற ஒரே கட்டிடம், தஞ்சை கோவில் மட்டுமே.

* இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

*** இக்கோவிலின் மிகப்பெரிய சிறப்பு, இக்கோவிலின் மேல் இடம்பெற்றுள்ள கோவில் கலசம், கீழே உள்ள சிவன் லிங்கத்திற்கு துல்லியமாக நேர்க்கோட்டில் அமைந்திருப்பது...

இன்னும் நமக்கு தெரியாமல் எத்தனை ரகசியங்களை மறைத்து வைத்திருக்கிறார் அந்த ராஜ ராஜ சோழன்...
 
அது என்ன குண்டலினி சக்தி..? அதை எழுப்புவது எப்படி?

அது என்ன குண்டலினி? யோக மார்கத்தில் இருக்கும் ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்தவொரு வார்த்தை யை உபயோகிக்காமல் இருக்க முடியாது. இந்து மதத்தில் மிக முக்கிய அங்கமாக “யோகம்” இருக்கி...றது. அடிப் படையான உயி ராற்றல் அல்லது உயிர் சக்தியை குண்டலினி என்பார்கள். யோகா மற்றும் தியானங்களில் திளைத் தவர்கள் அதன் சக்தியையும் மேன்மையையும் அறிவார்கள்.

இந்து மதத்தில் பாம்பு பெரும்பான்மையான இடங்களில் வணங்கப்படுகிறது. கடவுளர்களும் பாம்புடன் இருப்பதைப் பல இடங்க ளில் “சிலை”ப்படுத்தியிருக்கிறார் கள். உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன் படுத்தப்படுகிறது. ஏன் பாம்பு என்ற கேள்வி எழலாம். ஒரு பாம்பு அசை யாமல் இருக்கும் போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசர வென்று ஓடும் போது தான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். குண்டலினியும் இந்தப் பாம்பு போன்றதுதான். மனிதனின் முதுகுத்தண்டின் அடிப் பகுதியில் அமைதியாய் இருக்கும். அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும் போதுதான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்து வமும் நமக்குப் புரியும். குண்டலினியை எழுப்பினால் என்ன செய்ய முடியும் என்று சொல்வதற்கு முன் மனித உடலில் உள்ள ஆற்றல் மையங்களைப் பற்றிச் சொல்வது அவசியமாகிறது.

சாதாரணமாக மனிதன் உட்கொள்ளும் உணவு செரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது. அது என்ன உணவாக இருந்தாலும் அதிலுள்ள புரதம், கொழுப்பு எதுவாயுனும் இறுதியில் பிராண சக்தியாக மாற்றப்படுகிறது. இந்தப் பிராண சக்தியே வளர்ச்சியை ஊக்கு விக்கிறது.

இந்தப் பிராண சக்தி மனித உடலில் உள்ள சுமார் 70000 நாடிகள் வழியாகப் பாய்கிறது. இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு முக் கிய மைய நாடிகளில் இணைகிறது. இவற்றையே மனித உடலில் ஏழு சக்கரங்களாக சொல்லப்பட்டுள்ளது. இவையே ஆற்றல் மையங்கள். (ஆற்றல் மையம் என்றாலும் சக்கரம் என்றாலும் ஒரே பொருளாகக் கருத வேண்டுகிறேன்.) இந்த ஏழு சக்கரங்கள்தான் ஒவ்வொரு மனிதனின் செயல்கள், சாதனைகள், சாதகங்கள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருக்கின்றன. மனித உடலில் உள்ள இந்த ஏழு சக்கரங்க ளையும் ஒவ்வொன்றாகக் கீழிருந்து மேலாகக் காண்போம்.

முதலில் மூலாதாரம்: இது பிறப்புறுப்புக்கும் ஆசன வாய்க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தச்சக்கரத்தின் முக்கிய செயல்பாடு அனுபவம் மற்றும் தகவல் சேகரிப்பு ஆகும். இச் சக்கரம் நன்கு தூண்டப்பட்ட நிலையில் உள்ள ஒரு மனிதன், உணவு, உறக்கத்தில் அதிக விருப்பம் கொண்டவ னாக இருப்பான். இந்த மூலா தாரச் சக்கரம் தான் மனிதனின் வளர்ச்சிக்கு அடிப் படியான முக்கிய தூண்டு சக்தி ஆகும். இந்தச் சக்கரம் பஞ்ச பூதங் களில் நிலத்துக்கு நிகராகச் சொல்லப்படுகிறது.

இரண்டாவது சுவாதிஷ்டானம்: இது பிறப்புறுப்புக்கு சற்று மேலாக அமைந்துள்ளது. இச்சக்கரத்தின் முக்கிய செயல்பாடு இன்பம் ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன் உலக வாழ்க்கையில் இன் பங்களை அனுபவிக்க நாட்டம் கொள்வான். இந்தச் சக்கரம் நீர்த்தத்துவத்துக்கு உதாரண மாகச் சொல் லப்படுகிறது.

மூன்றாவது மணிப்பூரகம்: இது தொப்புளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு முயற்சி மற்றும் உழைப்பு ஆகும். மணிப்பூரகம் நன்கு தூண்டப்பட்ட மனிதன் கடும் உழைப்பாளியாக வாழ்வில் சிறந்து விளங்குவான். இந்தச் சக்கரம் நெருப்புத் தத்துவத்தை பிரதி பலிக்கிறது.

நான்காவது அனாகதம்: இது நெஞ்சுப் பகுதியில் அல்லது இருதயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய குணங்கள் அன்பு மற்றும் படை ப்பாற்றல் ஆகும். இது காற்று தத்துவத்தைக் குறிக்கிறது. (அன்பு என்றால் எல்லோரும் ஏன் நெஞ்சைத் தொடுகிறார்கள்? காதலைக் குறிக்க இதயம் ஏன் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது? சிந்திக்க நேர்கிறது.)

ஐந்தாவது விசுக்தி: இது தொண்டைக் குழியில் அமைந்துள்ளது. ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கும் இந்தச் சக்கரத்தின் முக்கிய ஆற்றல் தீமைகளை தடுத்து நிறுத்து வது ஆகும்.(ஆலகால விஷம் அருந்திய சிவன் தொண்டையில் விஷம் தடுத்து நிறுத்த ப்பட்டது விசுக்தி உச்ச நிலையில் தூண்டப் பட்டிருப்பதை குறிக்கவோ என்னவோ, யாருக்குத் தெரியும்?)

ஆறாவது ஆக்ஞை (அல்லது ஆக்கினை): இது மனிதனின் புருவ மத்தியில் அமைந்து ள்ளது. ஞானம், பேரறிவு ஆகிய வை வெளிப் படக் காரணமாக அமைவது இந்தச் சக்கரம்தான்.

இறுதியாக சஹஸ்ரஹாரம் (அல்லது துரியம்): இது உச்சந் தலையில் அமைந்துள்ளது. தன்னிலை கடந்து ஆன்ம விடுதலையைக் கொடுத்து பேரானந்தத்தை அள்ளித் தரு வது இந்தச் சக்கரம்தான். இந்தச் சக்கரம் தூண்டப்படுவது ஆயிரம் தாமரை ஒன்றாக மலர் வதைப் போல் சொல்லப்படுகிறது. (சிவபெருமானின் தலையில் பாம்பு இருப்பது தலையில் உள்ள சஹஸ்ரஹா ரம் தூண்டப் பட்ட நிலையைக் குறிக்கவே.)

சாதாரண மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங்களும் முழுமையாகத் தூண்டப்படுவது இல்லை. பெரும் பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அரைகுறையாய் தூண்டப் பட்டிருப்பதிலேயே வாழ்க்கையை முடி த்துக்கொள்கிறார்கள். வெகுசிலர்தான் நான்கு வரை வருகி றார்கள். ஏழு சக்க ரங்களும் தூண்டப்பட குருவின் துணையும் அருளும் முக்கியம்.

இந்தக் குண்டலினியின் முக்கிய செயல் பாடே இந்தச் சக்கரங்களை முழு அளவில் எழுச்சியூட்டுவது தான். அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில் பாய்ந்தோடுவதைப் போல குண்டலினியை எழுப்பி, சக்கரங்களைத் தூண்டும் போது மனிதனின் அளப் பறியா ஆற்றல் வெளிப்படுகிறது.
அது சரி, இந்தக் குண்டலினி சக்தியை எழுப்புவது எப்படி? அதை எழுப்ப மனிதனுக்குக் கிடைத்த அற்புதமான கருவிகள் தான் யோகாவும் தியானமும். பொதுவாக வே எல்லா யோகா மற்றும் தியானப் பயிற்சிகளும் கட்டுப்பாடற்ற ஐந்து புலன்கள், மனம் மற்றும் உணர்ச்சிகளை ஒரு நிலைக்குக் கொண்டு வர வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. இவ்வாறு கொண்டு வரும் போது புலன்கள் தாண்டிய ஓர் அனுபவத்தை உணர வாய்ப்பாக அது அமைகிறது. இந்தவொரு அனுபவத்தை அடை வதே மனித வாழ்வின் இலட்சியம் என்று விவேகானந்தர் பல இடங்களில் குறிப்பிட்டதுண்டு. ‘ஆமாம், இதெல்லாம் என்ன பேச்சு? சாதரண வாழ்வுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?’ என்கிறீர்களா?

நீங்கள் பிறந்து இத்தனை வருட வாழ்வில் எப்பொழுதாவது, “ நான் ஏன் பிறந்தேன்” என்று உங்களைக் கேட்டுக் கொண்டதுண்டா? கேட்டிருந் தால் பதில் கிடைத்ததா? கிடைத்த பதில் உண்மையில் முழுமையான தா? அப்பதில் முழுமை எனில் உங்கள் வாழ்வும் பரிபூரண சுகமாக முழுமையாக இருக்கும். ஆனால் பெரும் பான்மையோர்க்குக் கிடைக்கும் பதில் அறிவியலில் இருந்து கிடைத்த அரைகுறை பதிலாகத்தான் இருக்கும். அந்த பதில்கள் இம்மி அளவு கூட சுகத்தைத் தராது. ஏன் பிறந்தேன் என்பதே தெரியாமல் இருப்பதால்தான் ஏன் வாழ்கிறேன் என்று புரிவதில்லை. பெரும்பான்மை மக்கள் “பிறந்து விட்டேன்; அதனால் வாழ்கிறேன்” என்று தான் வாழ்கிறார்கள். அதனால் தான் அவர்கள் வாழ்வை பரி பூரணமாக உணர்வதோ வாழ்வதோ இல்லை. (நீங்களும் தான்!!?)

பிறந்ததே ஏன் என்று தெரியாமல் இருப்பதால்தான் வாழ்கையை பற்றி ஒன்றும் புரிவதில்லை. சரி, பிறந்தது ஏன் என்று தெரிவதில்லை. இறுதி நிலையாவது தெளிவாகத் தெரிந்தால்தானே அதற்காக முயற்சி செய்து அதை அடைந்து வாழ்வை பரிபூரண மாக்க முடியும். இறுதி நிலை என்ன என்றாவது தெரிந்து நீங்கள் அதை அடைய முயற்சி செய்ததுண்டா? ஆதியும் (பிறப்புக்கு முன்) புரியவில்லை, அந்தமும் (இறப்பு க்கு பின்) புரியவில்லை. அப்புறம் எப்படி இடைப்பட்ட வாழ்வைப் புரிந்துகொள்ள முடியும். பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் உள்ளதை அறிவதே ஆன்மிகம். இதைத் தவிர வேறு எதுவும் ஆன்மிகம் ஆகாது. நீங்கள் வேறு எதிலாவது ஈடு பட்டிருந்தால் அது ஆன்மீகப் பாதைக்கான முயற்சியாகவோ / அல்லது படி நிலைகளாகவோ இருக்கலாம். உங்களுடைய இந்தக் கேள்விக ளுக்கெல்லாம் யாரோ ஒருவர் பதில் சொல்லி உங்களுக்குப் புரியவைக்க முடியாது. அப்படி முயன்றால் நீங்கள் அதை வெறுமனே நம்ப முடியும் அல்லது கட்டுக்கதை என்று உதறித்தள்ளத் தான் முடியும். இந்தக் கேள்விகளுக்கு விடையுமாய் வாழ்வை பரி பூரணமாக்கும் அருமருந்தாய் மேற்சொன்ன புலன்கள் தாண்டிய அனுபவம் இருக்கும். சாதரண மனிதனுக்கும் இது சாத்தியமே. தேவை முயற்சி மட்டுமே. அதற்கான வழிமுறை குண்டலினியை எழுப்புவதே. கருவிகள் யோகாவும் தியானமும். சாதாரண வாழ்வுக்கு இது மிகத் தொலைவானது அல்ல. மிக நெருங்கியதே. அத்தகைய தொரு புலன்கள் தாண்டிய அனுபவம் உங்கள் மொத்த வாழ்வையும் வேறொரு பரிமாணத்தில், பரிபூரணமான ஒன்றை அடித்தளமாகக் கொண்டு நகர்த் திச் செல்லும். இந்த, புலன்கள் தாண்டிய நிலையே, “யோகம்”. இந்த யோக நிலையையே ஆன்ம விடுதலை, ஜீவன் முக்தி, இறையோடு கலத்தல், தன்னை உணர்தல் என்று பலரும் பல வாறாகச் சொல்கிறார்கள்.

சாதரண வாழ்வுக்கு இது நெருங்கியதே என்று சொல்லியாகி விட்டது. அது எப்படி என்றும் சொல்லி விடுகிறேன். நம் வாழ்வில் எதை அடைவ தாயினும் நம்மிடம் இருக்கும் ஏதோ ஒன்றை வைத்துத்தான் அடைய முடியும். இல்லாத ஒன்றை வைத்து எதையும் அடைய முடியாது. நம்மிடம் என்ன உள்ளது? உடல் உள்ளது, மனம் உள்ளது, உணர்ச்சி உள்ளது, எல்லா வற்றிற்கும் மேலாக உயிர் சக்தி உள்ளது. இந்த நான்கில் ஏதாவது ஒன்றின் மூலமாகத்தான் நாம் எந்தொ வொரு செயலும் (கர்மா) செய்ய முடியும்.

உங்கள் உடலைப் பயன்படுத்தி செயல் செய்து யோக நிலையை அடைவது கர்ம யோகம். உங்கள் மனதைப் பயன்படுத்தி அல்லது புத்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது ஞான யோகம். உங்கள் உணர்ச்சியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது பக்தி யோகம். உங்கள் உயிர்ச் சக்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது கிரியா யோகம்.

இந்த நான்கு யோக முறைகளில் ஏதாவது ஒரு முறையில் யோக நிலையை அடைவோர் சமூத்தோடு இணைத்து இருப்பதை விரும்புவதில்லை. ஆனால் இவை நான்கையும் சரியான அளவில் கலந்து பயிற்சி பெறுபவர் சமூகத்தில் இருந்தே யோக நிலையை அடையலாம். இந்த நான்கையும் கலந்து கொடுப்பது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசப்படும். அதற்குதான், “குரு” என்பவர் தேவை. ஆக, யோக நிலை என்பது சமூக வாழ்வைத் துறந்தால் தான் அடைய முடியும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாம்.



 
குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். முதலில் யார...ிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு. "சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம் சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி கஷ்த்பம்சுப்ஹி தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ் பர்தச்சடிதஸ்த்ஹா சன்யோகஜ்ய்தே தேஜோ மித்ரவருனசங்கியதம்"புரியலை நா விட்டுடுங்க..., நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம், "ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்"மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? சித்தர்கள் தவமிருந்து கிடைக்கிற சக்தியா?Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படைப்புகளில் தேடலைத் தொடங்கினார். அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்கமாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான Dr.M.C.Sahastrabuddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார். புத்தே அப்போது நாக்புர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறைத் தலைவர். அவர் இதைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு டேனியல் செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப் போன்று இருக்கிறது என்றார். சரி இதை மேலும் ஆராய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள புத்தே அதை நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் சொன்னார். இதைக் கேட்டதும் நமது கிருஷ்ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டு வர அவரும் களத்தில் குதித்தார். ஒவ்வொன்றாய் படித்து படித்து அதில் கூறப்பட்டதைப் போன்றே தனது மின்கலத்தை வடிவமைக்கும் போது அவர் வந்து முட்டி மோதி நின்ற இடம் சிகிக்ரிவம் என்ற சொல். நாமும் கூட அதை படிக்கையில் என்ன அது என்று சற்று யோசித்திருப்போம். அவர்களும் இது என்னவாய் இருக்கும் எனத் திணரும் போது ஒரு சமஸ்கிருத அகராதியில் "மயிலின் கழுத்துப் பகுதி" என்று இருந்ததைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில் சரணாலயத்தில் தலைமைப் பொருப்பாளராய் இருந்தவரிடம் போய் ஏதாவது இறந்த மயில்கள் உள்ளதா அல்லது இங்கிருக்கும் மயில்கள் எப்போது சாகும் என கேட்க அவருக்கு கோபமே வந்துவிட்டது. பிறகு இவ்விருவரும் நிலைமையை விளக்கிக் கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இருவரும் திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ் சொன்னார் "அது மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள்". இதைக் கேட்டதும் அவர்களுக்கு சிந்தனை முளைத்தது. ஆஹா! ஆம்! அது தான் அது!, மயிலின் கழுத்து நிறம்! அதே தான். காப்பர் சல்ஃபேட்! கண்டுபிடித்தாகிவிட்டது.அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்! வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர். என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா? தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் "தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்' தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.இருங்க இருங்க.., நம்ம பாட்டன் இதோட நிருத்திடல.. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்.. அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார். இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால "electroplating" என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.இப்போ போடுங்க ஒரு லைக்கையும், ஷரையும்.குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிடம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறலாம்
 
Posting the mile-long-posts which do not come under

the caption Quotable Quotes is OVER ENTHUSIASM.

I won't read looooong posts and NEVER the posts

without punctuation and pharagraphing! :dizzy:
 
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!
திருமந்திரம்


GOD is LOVE..... LOVE is GOD!
 

Latest ads

Back
Top