• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable quotes.

Status
Not open for further replies.
# 145. அர்த்தமற்ற பேச்சு.

"உலகில் எல்லா மனிதரும் தம்மைத் தாம் உணரட்டும்.
எனக்கு அது கிடைக்காதுபோனால் கவலை இல்லை.
அவர்கள் அதனைப் பெற நான் உதவி செய்தால் போதும்"
என்று ஒருவர் சொன்னால், அது "கனவில் உள்ள எல்லா மனிதரும் எனக்கு முன்பாக விழிக்கட்டும்" என்று கனவு காண்பவர் சொல்வதைபோன்றது.
அவரது பேச்சு அர்த்தமற்றது.
 
# 146. தூக்கம்.
ஆத்மாவில் வசிக்கத் தடையாக இருப்பவை
உலகப் பொருட்களால் கவனம் சிதறுதல்
(புலன்கள், ஆசைகள், வாசனைகள் ஆகியவற்றையும் சேர்த்து ) தூக்கம் ஆகியவை.
சமாதிக்குரிய முதல் தடை தூக்கம் என்று
சில நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
அதை வெற்றி கொள்ளப் பல வழிகளும்
பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
 
Success in life purely depends on one's own personal commitment, dedication
and motivation. We essentially need to look for the circumstances and if we
can't, we may have to go in for, in the creation of successful venture.

Balasubramanian
Ambattur
 
Sleeping is absolutely essential to refresh oneself. We find these days
some people suffer from insomnia in the middle age group level itself which
results in behavioral problems such as emotion, anxiety and high stress, etc.

Balasubramanian
Ambattur
 
# 147. பயம் ஏன்?

எண்ணங்கள் அற்ற நிலையைக் கண்டு மக்கன் ஏன் பயப்படவேண்டும் என்று

எனக்குத் தெரியவில்லை.

அதைத்தான் தினமும் தூக்கத்தில் அனுபவிக்கிறார்களே!

தூக்கத்தில் மனமோ எண்ணமோ இல்லை.

இருப்பினும் தூங்கி விழித்துடன், "நான் நன்றாகத் தூங்கினேன்" என்கிறோம்.
 
Quotable quotes



We notice sometimes people commenting about sleep disorders and sleeping
problems. This type of situation creates negative impact on one's energy,
emotional balance, productivity and health. Even less sleep also disturbs
the mood of a person and ability to handle the stress.

Balasubramanian
Ambattur
 
# 147. பயம் ஏன்?
............ தூக்கத்தில் மனமோ எண்ணமோ இல்லை..........
மனம் சிந்திக்காமல் எண்ணங்கள் உதிக்காதே!
தூக்கத்தில் மனம் செயல்படாது என்றால், தூக்கத்தில் கனவு வருவது எப்படி? :sleep:
 
Sleep is of two types.

The dreaming sleep and the deep sleep.

There will no dreams during the deep sleep.

THE THREE PLANES OF HUMAN LIFE are

JAGRATA, SWAPNA, SUSHUPTI meaning

WAKING, DREAMING, DREAMLESS SLEEP respectively.
 
.................. அதைத்தான் தினமும் தூக்கத்தில் அனுபவிக்கிறார்களே!

தூக்கத்தில் மனமோ எண்ணமோ இல்லை. ............
'ஆழ்நிலைத் தூக்கத்தில் மனமோ எண்ணமோ இல்லை' [FONT=Tahoma, Calibri, Verdana, Geneva, sans-serif][/FONT]என்று இருக்க வேண்டும் அல்லவா? :)
 
These are Ramana maharishi's quotes.

May be he assumed that the people who come and listen to him regularly, already knew about the two different kinds of sleep.

'ஆழ்நிலைத் தூக்கத்தில் மனமோ எண்ணமோ இல்லை' என்று இருக்க வேண்டும் அல்லவா? :)
 
The idea or aim is to achieve the same state of

THOUGHTLESSNESS while remaining completely awake.

It happens most naturally in deep sleep but achieving it in

the jagratha avastha (waking stage) poses to be the

lifelong challenge to the seekers.
 
நான்கு நிலைகள்!


“உறங்குவது போலும் சாக்காடு”, நாம் அறிவோம்.
உறங்கும் போது, நாம் ஆன்மாவில் ஒடுங்குவோம்.
இடம், பொருள், ஏவல், காலம் எல்லாமே,
இடமில்லாது அப்போது மறைந்து போகுமே!


கனவுலகு புகுந்ததும், நாம் கடவுள் ஆகின்றோம்!
நினைத்தைப் படைக்கும், திறன் அடைகின்றோம்!
“வானம்!”, என்றவுடன் நீல வானம் வந்திடும்!
“வனம்!” என்றவுடன் பச்சை வனம் உருவாகிடும்!

ஆதவன், சந்திரன், தாரகைகள் எல்லாம்,
பேதமில்லாமல் ஓடி வரும், அழைத்ததும்!
எந்தப் பொருளும், இடமும், காலமும்,
எந்த விலங்கும், மனிதனும், பறவையும்,

நினைத்த நொடியில் உருவாகிடுவர்;
நினைத்த போது மறைந்து செல்லுவர்!
நினைத்த படியே பேசிப் பழகுவர்;
நினைத்த செயல்களையே புரிவர்.

நம் சின்ன அறிவும், சிறிய அனுபவமும்,
நம் சின்னத் திறனும், சிறிய சக்தியும்,
சொன்னபடி உருவாகும் ஒரு பெரும்
மன்னுலகம்; ஒரு பெரும் மாய உலகம்!

கண்களை விழித்தால், காணவே காணோம்,
கற்பனையில் உருவான அந்த மாய உலகம்!
கனவைத் தாண்டினால், கனவு பொய் ஆகும்.
நனவு நிலையில், கனவுகள் பொய் ஆகும்.

நனவைத் தாண்டினால்… என்ன ஆகும்?
நனவைத் தாண்டினால், நனவும் பொய் ஆகும்!
நிறைந்த அறிவும், அளவில்லா அனுபவமும்,
குறைவில்லாத் திறனும், குவிந்த ஞானமும்,

செறிந்த அந்த உயரிய இறைவனின்,
சிறந்த கற்பனையே நம் நனவுலகம்!
கனவுலகு நம் கற்பனையின் படைப்பு,
நனவுலகு அவன் கற்பனையின் படைப்பு !

கனவைத் தாண்டினால், கனவு மறைவதுபோல்,
நனவைத் தாண்டினால், இவ்வுலகே மறையும்!
எங்கும் நிறைந்த இறைவனே இருப்பான்.
எல்லாப் பொருட்களும் அவனாக இருக்கும்!

நாம, ரூப, பேதம் இன்றி எல்லாம் அவனே.
நாம் காண்பதெல்லாம் எங்கும் பிரம்மமே.
இந்த அற்புத நிலையே துரியம் ஆகும்.
இந்த நிலை அடைந்தால் துயரம் போகும்!

உறக்கம், கனவு, நனவு, உறக்கம் என்றே,
கிறங்குகின்றோம் நாம் வாழ் நாளெல்லாம்;
உறக்கத்தையும், கனவையும் கடப்பது போல் ,
நனவையும் கடந்து, துரியத்தை அடைந்தால் …
.

இல்லை பயங்கள் , இல்லை பாவங்கள் ,
இல்லை மொழிகள், இல்லை செயல்கள் ,
இல்லை பேதங்கள், இல்லை தொல்லைகள்
இன்பமே எங்குமே ! இன்பமே என்றுமே !

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
Last edited:
He was in samaadhi most of the time. He was in the world but NOT really in it.
I have heard an incident in which he was operated on without the use of any anesthetic. He could dissociate himself completely from his physical body. So he felt no pain at all.



May be Maharishi will go to deep sleep immediately! :sleep: . . . :thumb:
 
# 148. குறை மனத்தில் மட்டுமே உள்ளது.

குறை என்பது மனத்தில் தான் இருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் அது நமக்குத் தெரிவதில்லையே. நனவுக்கும், தூக்கத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு மனத்தின் காரணமாகவே அமைகிறது. தூக்கத்தில் மனம் இல்லை. ஆனால் இப்பொழுது அது சுறுசுறுப்பாக இயங்குகிறது.
 
One of my friends told me that people who had sleeping problems normally used
to go a Sleep Clinic. Generally, hospitals have a facility to assess and diagnose
the problem. The affected person goes over there at night and gets a bed allotted.
The hospital authorities hook him/her up to a monitoring instrument to see what is
happening to the person as he/she trys to sleep. During the process, they can
at least inform the patient as to why the person is having a trouble of sleeping problem,
which is the foremost and primary concern to the family members.

Balasubramanian
Ambattur
 
# 149. நனவுறக்கம்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் விழிப்பில் ஆழ்ந்த உறக்கத்தைக் கொண்டு வருதலே. அதாவது நனவுறக்கத்தைக் கொண்டு வருதலே.

# 150. ஆத்மா சாட்சி.

நனவு, கனவு, தூக்கம் ஆகிய நிலைகள் தூக்கத்துக்கு உரியவை.
ஆத்மா இவற்றுக்குச் சாட்சி. அது எல்லாவற்றையும் கடக்கிறது.
அந்த உணர்வை அடைய வேண்டும்.
 
Your Tamil takes me to my school and college days. If I am not wrong, it is a chaste
Tamil and very pleasing to read. There is a moment to think about many words/deeds
in life and there is also a time for nap or sleep. To fetch the benefit of Sleep and the
effects of watching is God's blessing. As far as I am concerned, I have not taken any
other exercise except sleeping, resting or reading and now doing this computer exercise.

Balasubramanian
Ambattur
 
As far as I am concerned, I have not taken any
other exercise except sleeping, resting or reading and now doing this computer exercise.

Balasubramanian
Ambattur

Get some exercise sir..go for a walk or do some yoga or anything.
We need to take care of body too.
Make it a habit to exercise almost daily.
 
Get some exercise sir..go for a walk or do some yoga or anything.
We need to take care of body too.
Make it a habit to exercise almost daily.

Thank you very much Mam. My doctor too advised the same thing
recently when I went for a check up as you suggested. God Bless you
and your children for extending an affection on people like me.

Balasubramanian
Ambattur
 
# 151. மௌனம்.

அருளின் உயர்ந்த வடிவம் மௌனம்.

அதுவே மிக உயர்ந்த ஆன்மீக உபதேசம்.

மற்ற எல்லா உபதேசங்களும் மௌனத்திலிருந்தே பெறப்படுகின்றன.

எனவே அவை எல்லாம் இரண்டாம் பட்சமானவை.

மௌனமே மூல வடிவம். குரு மெளனமாக இருந்தால்

சாதகர் மனம் தானாகவே தூய்மை அடையும்.
 
Quotable quotes

People used to say that Silence is an element in which utmost
important things get fashioned themselves. Some say Speech
is of Time and Silence is of Time without an End. There used
to be a very old slang (proverb) "Silence is a Women's best
Garment", but this proverb is no longer in use. Silence do bring
some unexpected gains to some in the Society.

Balasubramanian
Ambattur
 
# 152. மனத்தின் மௌனம்.

மௌன விரதம் என்பது ஒரு விரதமே.

அது தியானத்துக்கு ஓரளவு உதவும்.

ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு

மனம் அலை பாய்வதால் என்ன பயன்?


# 153. எது மௌனம்?

எந்த நிலையில் "நான்" என்ற எண்ணம் சிறிதுகூட

எழவில்லையோ அது மௌனம் என்கின்றனர் முனிவர்கள்.

ஆன்மாவை மட்டும் கவனிக்கின்ற நமது

தூய்மையான நிலையே மௌனம்.

வேறு எதுவும் இல்லை.
 
# 154. பேச்சு எதற்கு?

குரு மௌனத்தை அருளுகிறார்.
அவரே ஆன்மா அறிவாம் ஒளியைத் தருகிறார்.
ஆன்மாவே மிஞ்சி நிற்கும் ஒளியாகும்.
குருவின் கண்ணும் சீடனின் கண்ணும் சந்தித்துவிட்டால்
அங்கே பேச்சுக்குப் பயன் எதுவும் இல்லை.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top