• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable quotes.

Status
Not open for further replies.
# 183. வள்ளலிடம் கேள்.

எல்லாமாக இருக்கும் கடவுள் உடனே தம்மைத் தரக் காத்திருக்கிறார். அப்படி இருக்கச் சித்திகளுக்காக பேராசையோடு பிச்சை கேட்பது என்பது எல்லாவற்றையும் தரும் வள்ளலிடம் பயனற்ற கஞ்சியைப் பிச்சை கேட்பது போன்றது
 
Quotable quotes

Chanting Namakirtan and Bhajans of Ishta Devata or Kula Devata are the only method
by which one can seek liberation in this Kali Yuga, wherein we may be constrained to
notice lot of unforeseen problems.

Balasubramanian
Ambattur
 
# 184. தெய்வீக சக்தி.

"நாம் எல்லா அமானுஷ்ய சக்திகளையும் அடைவோம்"

என்பவரது நடத்தை, நொண்டி ஒருவன் ,"நான் மட்டும் நிற்க

முடிந்தால் பகைவர்கள் எனக்கு எம்மாத்திரம்?" என்று

கூறியதைப் போன்றது. தாங்கள் தெய்வீக சக்தியால்

இயக்கப்படுகிறோம் என்பதை அவர்கள் உணருவதில்லை
 
# 185. இறைவனின் கொடை.

சித்திகள் பல வகைப்படும். ஆத்மாவை உணர்ந்தால் அவை

இயல்பாகவே அமையும். ஆன்ம அறிவாம் சக்தியின்

வெளிப்பாடே அவை. அவை தாமாகவே வரும். அவை

இறைவனின் கொடை. உன்னை நீ உணரும்போது அச்சக்திகள்

என்ன என்பதை அறிவாய்.
 
# 186. ஆனந்தம்.

ஆத்மாவின் ஸ்வபாவம் ஆனந்தமே.

முழுமையான ஆனந்தமும் ஆத்மாவும் வேறல்ல.

அந்த உண்மையை அறிந்து ஆத்மாவாக இருந்து

நித்தியமாக ஆனந்தத்தை அனுபவி.
 
# 187. மகிழ்ச்சி.

மகிழ்ச்சி வெளிக் காரணங்களாலும், உடைமைகளாலும்

ஏற்படுகின்றது என்றால், அவை அதிகரிக்கும் போது மகிழ்ச்சியும்

அதிகரிக்க வேண்டும். அவை குறையும் போது அதுவும் குறைய

வேண்டும். எனவே உடைமையே இல்லாதபோது மகிழ்ச்சியே

இருக்கக் கூடாது. மனிதனுடைய உண்மையான அனுபவம் என்ன?

அது இந்த நோக்கை உறுதிப்படுத்துகிறதா என்ன?
 
# 188. அது வெளியில் இல்லை.

ஆழ்ந்த உறக்கத்தில் மனிதன் உடமையற்று இருக்கின்றான்.

உடலைப் பற்றிய எண்ணம் கூட இல்லை.

ஆனால் அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான்.

எனவே மகிழ்ச்சி என்பது மனதுக்குள் இருக்கிறதே தவிர

வெளிக் காரணங்களால் வருவது அன்று என்பதே முடிவு.

 
# 189. அறியாமை என்னும் திரை.

உண்மையான அறிவு புதிதாக ஒன்றையும் உண்டாக்கவில்லை.

அது நம் அறியாமையை நீக்குகிறது. அவ்வளவே.

நமது ஸ்வரூபத்திற்கு ஆனந்தம் புதிதாகச் சேர்க்கப் படுவது

இல்லை. நமது ஸ்வரூபமே நித்தியமானது, அழிவில்லாதது

என்பதையே அது வெளிப்படுத்துகிறது.

 
# 190. எப்போதும் உள்ளது.

ஆனந்தம் என்பது அனுபவிக்கப்பட்டாலும் சரி, அல்லாத

போதும் சரி, எப்போதும் இருக்கிறது. வந்து போவது அன்று

அது. வந்து போவது மனத்தின் படைப்பே. அதுபற்றி நாம்

கவலைப் படவேண்டாம்.
 
# 191. ஆத்மாவே ஆனந்தம்.

இங்கிருந்து புறப்படும் போது மகிழ்ச்சியாக இல்லை என்கிறீர்கள்.

ஆகவே இந்த நிம்மதி நித்தியம் அன்று.

இன்னோரிடத்தில் உணரும் மகிழ்ச்சி இன்மையோடு கலந்தது.

ஆகவே இடத்தாலும், காலத்தாலும் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாது.

பயன்தர வேண்டுமானால் அது நித்தியமாக இருக்க வேண்டும்.

நித்தியமாக இருப்பது நம் ஸ்வரூபமே.

ஆத்மாவாக இருப்பதே ஆனந்தம்.

நீ எப்போதும் அது தான்.
 
# 188. அது வெளியில் இல்லை.

ஆழ்ந்த உறக்கத்தில் மனிதன் உடமையற்று இருக்கின்றான்.

உடலைப் பற்றிய எண்ணம் கூட இல்லை.

ஆனால் அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான்.

எனவே மகிழ்ச்சி என்பது மனதுக்குள் இருக்கிறதே தவிர

வெளிக் காரணங்களால் வருவது அன்று என்பதே முடிவு.
 
#192. ஞானி.

ஞானி எப்போதும் விழித்திருக்கிறான்.

ஏனெனில் அவன் எப்போதும் நித்திய ஆத்மாவாகவே இருக்கிறான்.

உலகமே கனவாகத் தோன்றுவதால், அவன் எப்போதும்

கனவு நிலையிலேயே இருக்கிறான்.

உடல் பற்றிய எண்ணமும் அகந்தையும் இல்லாது இருப்பதால்,

அவன் எப்போதும் உறக்கத்திலேயே இருக்கிறான்.
 
Charity should not be based only on the cause alone but
need to be practiced based on the need and necessity. To
practice charity, one should not measure it as it has no
boundary.

Balasubramanian
Ambattur
 
# 193. சாக்ஷி மட்டுமே.

ஞானி கனவு காண்கிறான்.
ஆம் விழிப்பு நிலையைப் போலவே.
அவற்றைக் கனவு-1 , கனவு-2 என்று அழைக்கலாம்.
துரிய நிலையில் நிலைத்து இருப்பதால்
அவன் நனவு, கனவு, தூக்கம் ஆகிய மூன்று நிலைகளையும் துரிய நிலையில்
தோன்றும் சித்திரமாக
வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறான். அவ்வளவே.
அவன் சாக்ஷி மாத்திரமாகவே இருக்கிறான்.

 
Quotable quotes

Sometimes we say that if something goes wrong, God is the
witness. Everybody is a true believer but nobody in real life
ever takes things seriously unless and until one is affected.
If one wants to understand in life as to what is going on, he/she
has to have certain ideologies and identify themselves, where
they are and what are they. If one cannot control mind, he/she
cannot control the desires, etc. no doubt knowledge is powerful.

Balasubramanian
Ambattur
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top