• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable quotes.

Status
Not open for further replies.
# 169. எது முக்கியம்?

துறவு என்பது எப்போதும் மனத்தில் இருக்கிறதே தவிர காட்டுக்கு அல்லது தனிமையை நாடிச் செல்வதிலோ கடமையைத் தவிர்ப்பதிலோ இல்லை. மனம் வெளியே
செல்லாமல் உட்புறம் திரும்புவதே முக்கியம்.
 
# 170. எது துறவு?

துறவு என்பது உடை, குடும்பம், உறவு, வீடு
போன்றவடைத் துறப்பது அன்று.
ஆனால் ஆசைகள், பற்று, பாசம் ஆகியவற்றைத் துறப்பதே.
ஆகவே வேலையை விட வேண்டாம்.
எல்லாவற்றையம் கடவுளிடம் விட்டுவிடுங்கள்.

 
Quotable quotes

We on the earth have certain duties that have to be fulfilled first before seeking
the stage of Sanyasa. We have the stages of Brahmacharya, Grihastha, Vanaprastha
and the last one is Sanyasa. Sanyasa is nothing but a stage, in which one seeks
to achieve moksha or salvation. Vanaprastha is an important stage prior to Sanyasa,
i.e. a preparation stage. One has to attain gradual detachment from the house hold duties
and prepare for spiritual and mental growth. Even Manusruthi does not say to seek
emancipation straightaway.

Balasubramanian
Ambattur
 
# 171. கனிந்த பழம்.

கடவுளிடத்து உண்மையான பக்தன் காட்டும் அன்பும் பாசமும், துறவை விடச் சிறந்தவை. அன்பை வெளிப்படுத்தும்போது வீட்டை விட்டு ஓடுகிறோம் என்ற நினைப்பில்லை. ஆனால் நன்கு பழுத்த பக்குவமான பழம் மரத்திலிருந்து விடுபடுவதைப் போன்று நாம் விடுபடுகிறோம்.
 
Every one prays to God according to their interests or desire, taught by
their elders. He who loves God never fails in life. Once, a person is
dedicated towards GOD, he/she can find the great secrets of the life
and become a perfect person in life.

Balasubramanian
Ambattur
 
# 172 . இரண்டும் ஒன்றே! (due on 3-4-12)

துறவும், தன்னை உணர்தலும் ஒன்றே!
அவை இரண்டும் ஒரு நிலையின் இரு அம்சங்கள். அநாத்மத்தை விடுவது துறவு.
ஆத்மாவில் நிலைத்து இருப்பது ஞானம்.
ஒன்று எதிர்மறை. ஒன்று நேரிடை.
இரண்டும் ஒரே உண்மையைத் தான் கூறுகின்றன.

 
# 173. சித்தி என்னும் அதிசயங்கள். (due on 4-4-12)

தன்னில் இருப்பதே சித்தியாம்.
மற்றவை நனவில் மட்டும் இருப்பதால்
கனவு போன்றவையே.
உண்மையில் ஊன்றி நிற்பவர்
மாயைக்குள் வருவாரோ?
 
# 174. அநித்தியமானவை.

அடையதவர்க்கு ஆச்சரியமாக இருப்பினும் சித்திகள்

அநித்தியமானவை. அவற்றை விரும்புவது அர்த்தம் அற்றது.

ஆவி எல்லாம் மாற்றம் இல்லாத ஆத்மாவில் அடங்குவன.

 
A woman's opinion generally formed by guessing is rather more
careful and exact than a man's confidence in winning over the situation.

Balasubramanian
Ambattur

In a way you are right..sometimes confidence can bring our down fall cos we underestimate the strength of the opponent.
That's why its better to do a careful study before we execute any plan.
There is no harm faltering a few steps but be careful that we do not fall.
 
# 175. பாதை விலகாதீர்!

சித்திகள், ஆச்சரியங்கள், தூர திருஷ்டி, தூரக் கேள்வி, இவை எல்லாம் என்ன? மிக உயர்ந்த சித்தி ஆத்ம சாக்ஷாத்காரமே! மற்றவை பாதையில் இருந்து விலகச் செய்பவை. தன்னை உணர்ந்தவன் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவன்.

 
# 176. பிறவிகள்.

தூரதிருஷ்டியால் 100 முந்தைய பிறவிகளை வர்ணிக்கின்றார் லீட்பீடர். என்ன பயன்?ஆத்மாவை அறிய அவை பயன்படுமா? பிறவிகள் எல்லாம் உடம்பின் தோற்றங்களே. உண்மையான பிறவி ஆத்மாவில் இருக்கிறது.
 
Normally we used to hear that our present life is purely based on the actions/karma
of the previous birth and no one can get away from it. Sometimes, even astrological
remedies too do not cure the obstacles in life.

Balasubramanian
Ambattur
 
# 177. சூக்ஷ்மம்.

சூக்ஷ்மமாக நீ இப்போது இங்கிலாந்தில் இருக்கலாம்.

ஆனால் அதனால் என்ன முன்னேற்றம்?

ஆத்ம சாக்ஷாத்காரத்துக்குச் சிறிது கூட அருகில் செல்ல மாட்டாய் நீ.
 
These days, in majority of the houses, where husbands and wives are working,
husbands do all the household chores, not because of the solidarity between them
but only owing to a Sigh from the Wives which is more powerful.

Balasubramanian
Ambattur
 
# 178. மனக் குறை.

சித்திகள் என்ன நன்மை செய்யும்? சித்திகளைப் பயன் படுத்தினால் நம் மனக்குறை தீரப் போகிறதா என்ன? ஆனந்தத்தை அடைவதே உனது லட்சியம் என்றால், சித்திகளில் இருந்து விலகி உன்னை அறிய முயற்சி செய்தல் வேண்டும். யார் மகிழ்ச்சி அடைய விரும்புகிறார் என்று விசாரிக்கவேண்டும்.
 
# 179. சந்து பொந்துகள்.

சித்திகளை அடைய விரும்புபவர்கள் தம்மை உணர்வதால் வரும் மிக உயர்ந்த மகிழ்ச்சியைப் புறக்கணிக்கிறார்கள்.

நேர்பாதையை விட்டுக் குறுக்குச் சந்துகளில் செல்கிறார்கள்.

அவர்களுக்கு வழிகாட்டி நேர்ப்பாதையில் அழைத்துச் செல்லவே ஆத்மாவை உணர்ந்தால் சித்திகள் தாமாகவே அமையும் என்று கூறப்படுகிறது.

முதலில் அவர்கள் தம்மை உணரட்டும்.

பின் விரும்பும் ஆற்றலைத் தேடி அடையட்டும்.
 
# 180. ஞானமும், சித்தியும்.

சித்திகளை வெளிப்படுத்தினால் அவற்றை அறிய மற்றவர்கள் தேவை.
அப்போது சித்திகள் செய்பவரிடத்து ஞானம் இல்லை என்பது பொருளாகிறது.
சித்திகள் நினைக்கக் கூடத் தகுதி அற்றவை.
ஞானம் என்பதே குறிகொண்டு அடையத் தக்கது.
 
# 181. அவர் யார்?

சக்திகள் உயர்ந்தவையோ, தாழ்ந்தவையோ, மனதைச் சார்ந்தவையோ, உயர் மனதைச் சார்ந்தவையோ அவை எல்லாம் சக்தி உடைய ஒருவனிடம் தான் இருக்கின்றன. அவர் யார் என்று கண்டுபிடி.

 
# 182. நிலையற்றவை.

அருகில் உள்ளவரோ, தூரத்தில் உள்ளவரோ,
அவர் குரலைக் கேட்பதில் என்ன வேறுபாடு இருக்கிறது?
கண்ணும், காதும் அப்போது பயன்படுகின்றன.
எனவே மனம் தேவை. ஏதாவது ஒன்றைச் சார்ந்தே இருக்கிறோம்.
அடைந்தது உரிய காலத்தில் இழக்கப்படும்.
இச் சக்திகள் ஒருபோதும் நிலையானவை அல்ல.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top